சித்திரை கொண்டாட்டம் - 1

sudharavi

Administrator
Staff member
#1
வணக்கம் நட்புக்களே!


சித்திரை பிறந்ததை கொண்டாடி கலைத்திருப்பீர்கள்! நம் உற்சாகம் குறைந்திடலாமா? இதோ உங்களுக்கான கொண்டாட்டம். நமது தளத்தில் என் மனம் கவர்ந்த கதாப்பாத்திரங்கள் என்று ஒரு திரி இருக்கிறது.


அங்கு உங்களின் மனம் கவர்ந்த கதாபாத்திரத்தை பற்றி ஒவ்வொருவரும் கூறலாம். ஏன் உங்களுக்கு அந்த கதாபாத்திரம் பிடித்தது? யாருடைய கதை அது. கதையின் தலைப்பு என்று அனைத்தையும் கூறலாம். ஒருவர் எத்தனை பதிவுகளை வேண்டுமானாலும் போடலாம்.உண்மையை கூறினால் அதிகம் பதிவு போடுபவருக்கே இங்கு பரிசு பொருள் காத்திருக்கிறது. பரிசு என்ன கொடுத்தால் நாம் திருப்தியடைவோம். புத்தகங்கள்! ஆம்! அனைத்தும் புத்தகங்கள்.


ஜூன் மாதம் வரை உங்களுக்கான நேரமிருக்கிறது. வாருங்கள் உங்களுக்குப் பிடித்த கதாபாத்திரத்தை பற்றி பேசுங்கள் புத்தகங்களை அள்ளிச் செல்லுங்கள்.