சமுத்திரா

#1
"சமுத்திரா"

ஆர்ப்பரிக்கும் அலைகள் வெளிப்புறமாக பார்க்கும்பொழுது ஒருவித பயத்தை ஏற்படுத்தினாலும், அதன் உட்புறம் பார்த்தால்தான் அதனது அமைதியும்,அழகும் தெரியும். அத்தகைய அழகிய கதையை வழங்கியிருக்கும் கீதாஞ்சலி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

இடி மின்னலுடன் பெய்யும் மழை அச்சத்தை ஏற்படுத்தியது போன்று இங்கு இரண்டு பூகம்பங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் பொழுதெல்லாம் நம்முடைய அச்சம் உச்சத்தைத் தொடுகிறது. குரு ,சமுத்திரா குதூகலமாக அடிதடியில் ஈடுபடும் இரண்டு வளர்ந்த குழந்தைகள்.

குருவின் அடாவடி அமைதியான அடக்கம் என்றால் சமுத்திராவின் அடாவடி ஆர்ப்பரிக்கும் அடக்கம். மோதலில் துவங்கி, திருமணத்தில் இணைந்து சண்டையிட்டுக் கொண்டாலும் அவர்களது சாப்பாட்டு விஷயம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அதுவும் எங்கள் தானைத் தலைவன் தங்கத் தலைவன் குரு சமுத்திரா வின் பசியறிந்து தன் பசியைத் துறந்து ஊட்டிவிடுவது அழகோ அழகு.

கதையில் காதலும், கோபமும் மட்டுமின்றி சமுதாயத்திற்கு மிகவும் தேவையான ஒரு நல்ல விஷயத்தைக் கூறிய கீதாஞ்சலி அவர்களுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள். கதை முடியப் போகிறது என்ற உடன் ஒரே மூச்சில் அமர்ந்து காலையிலிருந்து படித்தவுடன் இந்த விமர்சனத்தை எழுதுகிறேன்.குருவின் அப்பா மீதான அன்பு பிரமிக்க வைக்கின்றது.

கதையை பற்றி நிறைய கூற வேண்டும் என்றாலும் அதனை படிக்கும் பொழுது ஏற்படும் உணர்வ சாலச் சிறந்தது என்னும் காரணத்தினால் சில வரிகளிலேயே இதனை முடித்துக்கொள்கின்றேன். இறுதி பதிப்பினை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

மேலும் இது போன்ற நல்ல கதைகளை தரவிருக்கும் எழுத்தாளருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.