கீதா ரவிசந்திரன் - சமையல் பகுதி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

"கீதா அவர்கள் இணையத்தில் தான் அறிந்து கொண்ட சமையல் குறிப்புகளை இங்கே நம்மோடு பகிர்ந்து கொள்வார்கள்....
 
#8
Credit goes to E.Gomathy...
#ஆரோக்கியம் #தரும் #வாழைப்பூ #வடை

#தேவையான #பொருட்கள்:

பொடியாக நறுக்கிய வாழைப்பூ – 1 கப்
கடலைப்பருப்பு – 2 கப்
உளுத்தம் பருப்பு – ஒரு கைப்பிடி
சோம்பு – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 4
வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி – சிறிதளவு
புதினா – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
எண்ணெய் – 1/2 லிட்டர்

#தயார் #செய்து #கொள்ள #வேண்டியவை:

வாழைப்பூவில் உள்ள நரம்பு போன்ற பகுதியை அகற்றி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும்.கடலைப்பருப்பை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.ஊறிய பருப்பை மிக்ஸ்யில் போட்டு வடை பதத்தில்,கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

#செய்முறை:

அரைத்து வைத்துள்ள பருப்பு கலவையுடன் வாழைப்பூ,வெங்காயம்,சோம்பு,உப்பு,பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது),கொத்தமல்லி,புதினா சேர்த்து பிசைந்து வைத்து கொள்ளவும்.மாவு கலவையை சிறிது சிறிதாக எடுத்து வடையாகத் தட்டி,எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.சுவையான வாழைப்பூ வடை தேங்காய் சட்னியுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.
 
#10
Credit goes to Usha Ravikumar.

நீர்ச் சுருக்கு, நீர்க்கடுப்பு, உடல் உஷ்ண வியாதிகள் மற்றும் மூட்டு வீக்கத்தை போக்கும் ஆரோக்கியத் துவையல்!

முள்ளங்கித் துவையல்

தேவையான பொருட்கள்

முள்ளங்கி - கால் கிலோ
புளி - 25 கிராம்
மிளகு - 10 கிராம்
உளுந்தம் பருப்பு - 10 கிராம்
உப்பு, பெருங்காயம், எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை : முதலில் முள்ளங்கியை சுத்தம் செய்து சிறிதாக அரிந்து நீராவியில் வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பெருங்காயம் , மிளகு , உளுந்தம்பருப்பு ஆகியவற்றை போட்டு சிறிது எண்ணெய் சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளவும். வேக வைத்த முள்ளங்கியுடன் புளி மற்றும் வதக்கி வைத்துள்ளவற்றை சேர்த்து ஒன்றாக அரைத்து பின்னர் சிறிது எண்ணெய் சேர்த்து தாளித்து கொள்ளவும். முள்ளங்கி துவையல் தயார்.

பயன்கள் : இந்த துவையலை நீர்கடுப்பு, நீர்ச் சுருக்கு இருக்கும் பொழுது உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பிரச்னை தீரும். உடல் சூட்டினால் உண்டாகும் வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு. மூட்டு வீக்கம் உள்ளவர்கள் தினமும் உணவில் இந்தத் துவையலை அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வீக்கம் மறையும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.