காரிகை - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

"காரிகை" என்கிற தலைப்போடு போட்டியில் இணைகிறார் தாரா கிருஷ் அவர்கள்.....
 
#2
அத்தியாயம் 1போற்றி போற்றி!ஓர் ஆயிரம் போற்றி! நின்
பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றிகாண்
சேற்றி லேபுதி தாக முளைத்த தோர்
செய்ய தாமரைத் தேமலர் போலோளி
தோற்றி நின்றனை பாரத நாடைலே;
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை,மாதரசே! எங்கள்
சாதி செய்த தவப்பயன் வாழி நீ!

- பாரதியார்..


இரவு சமையலில் மும்மரமாக ஈடுபட்டிருந்தாள்.. அவந்திகா.. அப்பொழுது அவள் இடையை பின்னிருந்து ஓர் கரம் அணைத்தது..“ இப்ச்… எத்தன தடவ சொல்லிருக்கேன் இந்த மாதிரி பண்ணாதிங்கனு.. திடிர்னு அத்தை வந்துட்டா.. என்ன பண்றது.. என கணவனின் கரங்களை எடுத்து விட்டாள்..“ அம்மா அவங்க ரூம்ல துணி மடிச்சுட்டு இருக்காங்க... அவங்கள பாத்துட்டுதான் வரேன்… என்றவன் விட்ட வேலையை தொடர்ந்தான்.. அருள்..அப்பொழுது சரியா… அவர்களின் இரண்டு வயது.. இரட்டை புதல்வர்கள் ரிது நந்தனும்.. யது நந்தனும் வந்தார்கள்..“ ப்பா.. அம்மாவ.. கத்துப் புதிக்காத.. என்று மழலையில்… கூறி தன் அம்மாவின் காலை கட்டிக்கொண்டார்கள்..அவந்திகா குறும்பு சிரிப்புடன்.. முக்கியமானவன்ங்க எங்க.. இருக்காங்கனு பார்க்கலையா.. என்று கணவனை கேலி செய்தாள்..அருளோ பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு “ அடேய்.. உங்கள ரூம்ல படம் வரைங்கன்னு எல்லாம் எடுத்து கொடுத்துட்டு தானடா வந்தேன்.. அப்புறம் எதுக்கு ரூம விட்டு வெளில வந்திங்க என இருவரையும் பார்த்துக் கேட்டான்…


“ அது பிதிக்கல.. கண்ணா மூச்சி விளாடுறோம்.. என்றார்கள்..மனைவி இதுதான் சாக்காய் “ அப்பாவையும் கூட சேர்த்துக்கோங்க.. அம்மா சமையல் முடிச்சுட்டு வரேன்… அருளை கோர்த்துவிட்டாள்..“ பிள்ளைகளும் அப்பாவின் கைகளை பிடித்துக் கொண்டு தொங்க.. மனைவியை முரைத்துக் கொண்டே.. வெளியேறினான்..“ அவந்திகா சிரிப்புடன்.. சப்பாத்தி மாவை பிசைய ஆரம்பித்தாள்..அவந்திகா 26 வயது யுவதி... கணவன் அருள்.. மதுரையில் முக்கியமான இடங்களில் பாத்திரக்கடை, மளிகை கடை, வைத்துள்ளான்.. சில்வர் பாத்திரங்கள், வெள்ளி பாத்திரங்கள், பித்தளை பாத்திரங்கள்… கொண்ட பெரிய கடை.. கிராமத்தில் நிலபுலன்கள் கொண்ட.. பணக்கார குடும்பம்..அருளுக்கு திருமணம் தள்ளி போய்க் கொண்டே…. இருந்தது.. ஒரு திருமணத்தில்.. அவந்திகாவை பார்த்ததும்.. பிடித்தம் கொண்டு.. பெற்றோருக்கு கை காட்டினான்… அவர்களும் திருமணம் தள்ளிப் போனதால்.. அவந்திகாவின் வீட்டு நிலையை பொருட்படுத்தாமல்.. தரகர் மூலமாக ஜாதகம்.. வாங்கி பார்த்தனர்.. அதில் பத்து பொருத்தமும் பொருந்திருக்க.. திருமணத்தை அவன் விருப்ப பட்டபடி முடித்து வைத்தனர்..
 
#3
அவந்திகாவும்.. அருளும் … மனமொத்த தம்பதிகள் என்று சொல்வதற்க்கு ஆசைதான்.. ஆனால் அப்படிஇல்லை..படிப்பு முடியும் தருவாயில்.. அருள் வீட்டில் பெண் கேட்க.. அவந்திகாவின் பெற்றோர்களும்.. நல்ல சம்பந்தம் என்பதால்.. உடனே கல்யாணம் செய்து வைத்தனர்…“ மிடில் கிளாஸ் குடும்பம் என்றாலும்..அவள் வீட்டில் ஒரு இளவரசி போலத்தான் அவளை வளர்த்தனர்.. அதுவும் அவள் ஒரே மகள் வேறு.. சொல்லவா வேண்டும்.. அவள் சூழ்நிலையில் அவந்திகா மிகவும் சந்தோஷமாகவே இருந்தாள்.. ஒரு வேலையும் செய்ய மாட்டாள்.. எந்நேரமும் படிப்பும்… போனுமாக இருப்பாள்.. அப்படி பட்டவளை திடிரென திருமண பந்தத்தில் தள்ளிவிட்டனர்..அதனால் கல்யாணமான புதிதில் மிகவும் சிரமப்பட்டாள்.. அவள் புகுந்த வீடு மாமனார், மாமியார், கொழுந்தன், நாத்தனார் கொண்ட பெரிய குடும்பம்…அங்கு மேல் வேலைக்கு மட்டும்தான் வேலைக்காரர்கள்.. சமையல் வீட்டு பெண்கள் தான் செய்ய வேண்டும்..அவளுக்கோ சமையல் தெரியாது.. வீட்டு வேலை தெரியாது.. மாமியாரிடம் திட்டு வாங்கிக் கொண்டு எல்லாம் கற்று பெரிய இடத்து மருமகளாய் மாறினாள்..மாமியார் திட்டும் போதெல்லாம் அமைதியாய் இருந்துவிட்டு இரவின் தனிமையில்.. ஒரு மணிநேரம் அந்த கோபத்தையெல்லாம் அவன் மேல் காட்டுவாள்.. அருளும் அவளின் சிறுபிள்ளை கோபத்தை சிரிப்புடன் தாங்கிக் கொள்வான்.. பிறகு புதுமணத்தம்பதிகளின் இரவாக அமையும்.. இதைதான் புருஷன் பொண்டாட்டி சண்டை விடிஞ்சா போச்சு.. மறுநாள் புதுசா சண்டை போட ஒரு காரணம் கிடைக்கும் என பெரியவங்க சொல்லுவாங்க..அருள் அவந்திகாவின் சிறு பிள்ளை தனங்களை தாங்கிக் கொண்டு.. இந்த வீட்டின் பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுத்தான்…அவந்திகா அவள் வீட்டில் வெள்ளி செவ்வாய் விரதம், பூஜை, புனஸ்காரம்.. எல்லாம் கட்டுக் கோப்பாக இருந்தது கிடையாது…. ஆனால் இங்கோ.. நாளுக்கு ஒரு விரதம்.. பூஜை என்று கோட்பாடு உள்ளவர்கள்.. இவள் காலை 8 மணிக்குள் எழுவதே அதிசியம்.. இங்கோ ஏழுமணிக்கெல்லாம் குளித்து தயாராகி இருக்க வேண்டும்.. இன்னும் பல சட்டதிட்டங்கள்..புது இடம்… புது மனிதர்கள்.. சொந்தங்கள்.. என பயத்தில் இருந்தவளுக்கு.. புகுந்த வீட்டு சட்ட திட்டங்கள் அவளுக்கு ஜெயிலை நியாபகபடுத்தி எரிச்சலை கொடுத்தன…அவள் உணர்ச்சிகளுக்கு எல்லாம்.. அருளே வடிகாலாக மாறினான்… அவனுக்கு அவந்திகாவிடம் பிடித்த விஷயம் அவன் அம்மாவோ இல்லை வேறு யாரோ எதுவும் பேசினால்.. பதிலுக்கு பேசி கோபத்தை மேலும் அதிகபடுத்தாமல்.. அமைதியாகி விடுவாள்.. அதனால் அவரும் சட்டென்று அந்த பேச்சை முடித்து விடுவார்..அதனாலயே அருள் அவள் கோபத்தை காட்டும் பொழுது அமைதியாக இருந்து விடுவான்… அவள் உணர்வுகளை தன்னிடம் மட்டுமே காண்பிப்பது.. அவனுக்கு மகிழ்ச்சி தான்…இவ்வாறு பழைய நியாபகங்களில் மூழ்கியிருந்தவளை.. குக்கரின் விசில் சத்தம் நினைவு திருப்பியது..அதற்கு பிறகு வேலைகள் அவளை இழுத்துக் கொண்டது.. குக்கரில் உள்ள உருளைக் கிழங்கை எடுத்து உரித்து மசித்துவிட்டாள்.. பிறகு குருமாக்கு தயார் படுத்தினாள்… உருளை.. பட்டாணி எல்லாம் போட்டு குருமாவை ஒரு அடுப்பிலும்.. மற்றொன்றில் தவாவை வைத்தாள்.. மாவை சிறு சிறு உருண்டையாக பிடித்து தேய்த்து தவாவில் வைத்தாள்…
 
#4
“ இன்னும் சமையல் முடியலையா.. என கேட்டபடி வந்தார்.. ரெங்கநாயகி.. அவந்திகாவின் மாமியார்…“ இதோ ஆச்சு அத்தை.. குருமா ரெடி ஆய்டுச்சு… நீங்க மாமாவையும்.. கொளுந்தனையும் அவரையும் சாப்பிட வர சொல்லுங்க.. என்றாள்… வாய் பேசினாலும்.. கை அது பாட்டுக்கு சப்பாத்தி போட்டது..“ ஹ்ம்ம்ம் என்றவர்.. அனைவரையும் சாப்பிட வர சொன்னவர்.. அவர்களுக்கு பரிமாறினார்.. ரெண்டு சுட்டிகளும் அங்கு இங்குவென ஓடி தொல்லை கொடுக்க.. “ டேய் வாலுங்களா அமைதியா இருங்கடா.. என சத்தம் போட்டார்…“ உடனே அவர்கள்.. பேத் ஆச்சி.. கொன்னு.. என கைகளை கொண்டு மிரட்டினர்…“ ரெங்கநாயகி காண்டாய்ட்டார்.. அவர்களை அடிக்க கை ஓங்க.. உடனே தாத்தாவிடம் தஞ்சம் புகுந்து.. அவரை சாப்பிட விடாமல் செய்தனர்…“ டேய் இங்க வாங்கடா… என அவர்களை இழுத்து.. “ அம்மா நீங்களும் அப்படியே சாப்பிடுங்க.. நான் இவங்கள பார்த்துக்குறேன்.. என அவரை அமர வைத்தான்…“ ஹுக்கும்.. பொண்டாட்டிய ஊட்டி விட சொல்லி சாப்பிட்றதுக்கு இது ஒரு சாக்கு… என நொடித்துக் கொண்டு.. அமர்ந்தார்…“ அம்மா புலம்புவது அவனுக்கு கேட்க தான் செய்தது.. இருந்தாலும்.. ஈஈஈ.. என இழுத்து வைத்தானே தவிர கண்டுகொள்ள வில்லை…“ அவந்திகா சூடான சப்பாத்தி கொண்டு வர… யது அம்மாவை தூக்க சொல்லி.. அடம்பிடித்தான்.. அவள் மறுத்துக் கொண்டிருக்க..ரெங்கநாயகி “ நாங்களே பரிமாரிக்குறோம்.. நீ அவங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு ஊட்டி விடு.… இப்ப சாப்பிட ஆரம்பிச்சாதான் ஒன்பது மணிக்குள்ள ரெண்டும் முடிக்கும்..சரி என்றவள்.. அவர்களுக்கு இட்லி கொண்டு வந்த உடனே.. ரெண்டும் ஓடி விட்டது.. போருக்கு செல்லும் வீரர்கள் போல கையில் உணவு தட்டு.. தண்ணீர் எல்லாம் எடுத்துக் கொண்டு அவர்களை பிடிக்க ஆரம்பித்தனர்.. கணவனும்.. மனைவியும்..யது “ எனக்கு தோசா வேணும்..
ரிது “ எனக்கு பூரி வேணும்..
அதெல்லாம் நாளைக்கு சாப்பிடலாம் இன்னைக்கு இத சாப்பிடுங்க..


இது ஆய்.. என முகத்தை சுளித்து அப்பாவின் இரு தோளிலும் முகத்தை மறைத்தார்கள்… இட்லி ஊட்ட முடியாது போக..“ அவந்தி காண்டாகி.. “ என்னங்க பண்றிங்க.. ஒரு புள்ளைய ஒழுங்கா புடிக்க தெரிதா… நீங்க எல்லாம் என்ன தொழில் பண்றிங்களோ…அருள் “ தொழில் பண்றதுக்கும் புள்ளைய புடிக்குறதுக்கும் என்னடி சம்பந்தம்.. என மனதிற்குள் கேட்டுக் கொண்டான்.. வெளில சொல்லி அதுக்கு வேற யாரு வாங்கி கட்டிக்குறது..“ ரிதுவை அவள் வாங்கி இடுப்பில் வைத்துக்கொண்டு இட்லியை எடுத்து வாயில் மல்லுக்கட்டி ஊட்டினாள்…அடுத்து அருள் தோளில் உள்ள யதுக்கும் ஊட்டினாள்.. இருவரும் துப்ப.. ரெண்டு பேர் முதுகிலும் பட்டாசு கொளுத்தினாள்…அருளுக்கு கோபம் வந்துவிட்டது.. ஏண்டி அடிக்கிற.. அடிக்காம ஊட்டு.. உனக்கு அப்படி ஊட்ட தெரியலனா.. என்கிட்ட கொடு..அவளும் கோபமாகி மகராசனா ஊட்டுங்க.. யாரு வேணாம்னு சொன்னா… என்றவள் இட்லி கிண்ணத்தை அவனிடம் கொடுத்துவிட்டு ஓரமாய் போய் உட்கார்ந்து கொண்டாள்…அருளும் வீராப்பாய் அழுத குழந்தைகளை சமாதானபடுத்தி.. இட்லி கொடுத்தான்.. அவர்களும் சாப்பிட்டார்கள்… அவந்திகாவை கெத்தாய் ஒரு பார்வை பார்த்தான்… அவளோ கேவலமாய் பார்த்து வைக்க… முகத்தை திருப்பினான்..அடித்த அன்னையை திட்டியதற்காக பாவம் பார்த்து ரெண்டு வாய் வாங்கிய அவன் ரெட்டை ஜூனியர்கள்.. மறுபடியும் தங்கள் வாலுதனத்தை காண்பிக்க.. ஐந்து நிமிடத்திலே நொந்து நூலாகிபோனான்…அருள் பாவமாய் அவந்திகாவை.. அவளோ அனுபவி என்று பார்த்து வைத்தாள்…
 
#5
“ டேய் கொஞ்சமாச்சும் சாப்பிடுங்கடா.. என்று கெஞ்சும் அளவிற்கு கொண்டு வந்தார்கள்.. அவன் குலக்கொழுந்துகள்அவர்களுக்கும் அவனைப் பார்க்க பாவமாய் இருந்ததோ என்னவோ… அந்த ரெண்டு வாண்டுகளும் தங்களுக்குள் என்னமோ பேசிக் கொண்டனர்.. பிறகு அருளை பார்த்து “ ப்பா.. போன் தா.. சாப்புதுதோம்.. என்றார்கள்.. கண்கள் மின்ன..அருள்.. இவர்களின் பிளாக் மெயிலை கண்டு திகைத்தான்... ரிது “ ஜின்ச்சேன்.. வச்சுத்தா சாப்போம்.. “அவந்திகா.. என்ன பன்றாங்க .. என புருஷனையும்.. பிள்ளைகளையும் பார்த்துக் கொண்டிருந்தாள்..“ அவந்திகாவுக்கு பிள்ளைகளிடம்.. போனை கொடுப்பது.. பிடிக்காது.. அதுனால் கொஞ்சம் யோசித்தவன்.. பிறகு சாப்பிட்டால் போதும் என… போனை கொடுத்தான்…அவர்களும் மகிழ்ச்சியுடன்.. வாங்கிக் கொண்டனர்…தூரத்திலிருந்து… இதை பார்த்த அவந்திகாவுக்கு வந்தது பாரு ஒரு கோபம்.. உடனே அவர்கள் அருகில் சென்றாள் “ என்ன பண்றிங்க.. அருளிடம் எரிந்து விழுந்தவள்.. குழந்தைகளிடம் உள்ள போனை வாங்கினாள்… அவர்கள் தர சொல்லி அடம் பிடித்தனர்.. அருளும் ஒரு நாளுதான அவந்தி கொடு..“ அப்படியெல்லாம் விட முடியாது.. இன்னைக்கு மட்டும்தான் சொல்லி ஆரம்பிக்கிறது.. தினமும் தொடரும்.. இத்தன நாள் போன பார்த்தா நான் சாப்பாடு கொடுத்தேன்.. என அருளிடம் எகிறினாள்..“ இப்பஎல்லாம் சின்ன வயசுலயே கண்ணாடி போடுறாங்க.. இதுக்கு ஆரம்பம் பெத்தவங்க இப்படி பழக்கபடுத்துறதுதான்..“ அடியே.. கொஞ்சம் உன் இறந்தகாலத்த யோசிச்சு பாரு.. நீ காலைல இருந்து நைட்டு தூங்குற வரை செல் போன்ல தான் குடிஇருந்த.. ஏன் இப்பயும் அப்படித்தான் இருக்க..“ அது எங்களுக்கும்.. தெரியும் அப்புறம் இன்னொன்னும் தெரிஞ்சுக்கோங்க மிஸ்டர் அருள்.. நான் காலேஜ் சேர்ந்த பிறகுதான் போன் யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்… இப்போ நீங்க என்ன பண்றிங்க இப்பயே உங்க பிள்ளைகளுக்கு போன பழக்க போறிங்களா.. என கிண்டலடித்தவள்.. அப்புறம் என்ன சொன்னிங்க.. நான் இப்பயும் போன் அதிகமா பார்க்குறேனு.. யோவ் உனக்கு கொஞ்சமாச்சும் உனக்கு மனசாட்சி இருக்கா.. காலையில உன் பிள்ளைங்க கூட மாரடிக்குறேன்.. நைட்டான உங்க தொல்லை.. நமக்கு கல்யாணம் ஆகி எத்தனை நாள் நான் சீக்கிரம் தூங்கிஇருக்கேனு விரல் விட்டு எண்ணிடலாம்…அருளுக்கு வெட்கமாய் போய்விட்டது.. அடியே குழந்தைங்க முன்னாடி என்ன பேசுற…நான் மெதுவாத்தான் சொன்னேன் என்றவள் “ இந்த போனும் ஒரு போதை மாதிரி தாங்க.. அது நம்ம பசங்களுக்கு இப்ப வேண்டாம்… ஏன் நான் இப்பன்னு சொல்றேன்… தெரியுமா இப்பபோ போன் இல்லாத யாரையும் பார்க்க முடியாது.. கண்டிப்பா உங்க பசங்க வளர்ந்த பிறகு போன் இல்லாம இருக்க மாட்டாங்க.. அதுனால தான்…. என்றவள்.. அப்போதுதான் பிள்ளைகளை பார்த்தாள்.. அந்த வாலுகள் மறுபடியும் விளையாட போய்விட்டனர்..“ மறுபடியும் அவர்களை பிடித்து இழுத்து வந்து… தங்கக்குட்டி.. செல்ல குட்டி.. பட்டுக்குட்டி.. புஜ்ஜுமா என விதவிதமாக கொஞ்சி தூக்கி கொண்டே.. போக்குக் காட்டி.. டிவியில் ஜின்ச்சேன்.. சோட்டா பீம்.. ஜாக்கி சான்.. என அனைத்தும் காட்டுவதாக.. சத்தியம் பண்ணி.. ஒருவழியாக ஆளுக்கு மூன்று இட்லிகளை ஊட்டி முடித்தாள்…“ பார்த்த அருளுக்கே மூச்சு வாங்கியது… தினமும் இவள் இப்படித்தான் இருவருக்கும் சாப்பாடு கொடுக்கிறாளா.. கனிவாய்.. பாவமாய் அவளை பார்த்தான்…“ இருவருக்கும் முகத்தை துடைத்து விட்டு.. உடை மாற்ற கூட்டி செல்ல.. நான் பார்த்துக்குறேன்.. அவந்தி நீ சாப்பாடு எடுத்து வை… என பிள்ளைகளை அழைத்துச் சென்றான்…“ அவர்களுக்கு விளையாட்டு பொருட்கள் கொடுத்துவிட்டு.. சாப்பிட அமர்ந்தான்.. அவளையும் அமர சொல்லி. இருவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டுக் கொண்டு சாப்பிட்டனர்…சாப்பிட்டு எல்லா வற்றையும் எடுத்து வைக்க உதவி செய்தான்.. “ நீ போய் பசங்கள தூங்க வை நான் கதவு எல்லாம் பூட்டி இருக்கானு பாத்துட்டு… லைட் ஆப் பண்ணிட்டு வரேன்…“ ரிதுவையும் யதுவையும் அவர்கள் பெட்டில் படுக்க வைத்தாள்…யது “ ம்மா.. கத…ரிது “ ஹ்ம்ம்ம் ம்ம்ம் கத…“ சரி இன்னைக்கு உங்களுக்கு ஒரு காரிகையின் கதை சொல்றேன்.. என்றாள்..
 
#7
அத்தியாயம் 2சரி இன்னைக்கு உங்களுக்கு ஒரு காரிகையின் கதை சொல்றேன்.. என்றாள்…நான் சொல்ல போற கதைல உள்ளவங்க ரொம்ப சாதாரணமாணவங்க அவங்க கதை ஒன்னும் வரலாற்று கதை கிடையாது.. ஆனாலும் அவங்க என்னை பொறுத்தவரை ஒரு சாதனை பெண்மணிதான்..கிராமமும் இல்லாம டவுனும் இல்லாம ஒரு ஊர்.. அங்க அழகான பெரிய குடும்பம்… அந்த குடும்பத்தில் தாத்தா, பாட்டி, மகன், மருமகள்.. நாலு பேத்தின்னு.... வாழ்ந்து வந்தாங்க..அவங்களோட கடைசி பேத்தி.. பார்வதி பற்றிய கதை இது.. என்று கூறியவள்.. தன் மகன்களை பார்த்தாள்.. மொச்சை கண்களை சுழட்டிக் கொண்டு கதை கேட்கும் அழகில் சொக்கி.. இருவரின் கன்னத்திலும் முத்தம் வைத்தவள்… கதையை தொடர்ந்தாள்… அவள் விழிகளில் அவை காட்சிகளாக வலம் வந்தன..பார்வதி பார்க்க ரொம்ப அழகா இருப்பாங்க… அவங்க நாசி பக்கத்துல உள்ள மச்சமும்.. பால் வெள்ளை சருமமும்ன்னு… பார்க்க கொள்ளை அழகு.. அதனாலயே அவளின் அம்மா கருப்பு நிற உடையை அணிய விட்டதில்லை…பார்வதி அப்பா… நாராயணன் அரசாங்க அலுவலகத்தில் கிளெர்க்காய் பணிபுரிகிறார்.. நான்கு பெண்பிள்ளைகளை பெற்றுள்ளதால்.. அந்த வருமானத்தை மட்டுமே நம்பி இருக்க வில்லை.. வீட்டின் வாசலில்.. சிறிதாக பெட்டிகடை ஒன்றை வைத்தார்… அதிரசம், முறுக்கு, வடை முதலியவற்றை வீட்டில் செய்து.. பிள்ளைகளிடம் கொடுத்து.. தெருவில் விற்க சொன்னார்… அவர்களும் செய்தார்கள்…..


மனைவியை.. வெளி வேலைக்கு கூட அனுப்ப மாட்டார்.. அனைத்தையும் அவரே செய்வார்.. நன்றாக சமைப்பார்.. வாரத்தில் ஒரு நாள் அவரே அனைவருக்கும்.. சமைத்துக் கொடுப்பார்…அவர்களின் மூத்த மகள் சரஸ்வதி.. பெயருக்கு ஏற்றவாறு மிகவும் படிப்பாளி… வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு சென்றே ஆக வேண்டும்.. என்ற குறிக்கோள் உடையவள்.. பன்னிரெண்டாம் வகுப்புவரை படிக்க வைத்தனர்… பிறகு விடவில்லை.. அதனால் தையல் வகுப்பு சென்று அதில் அடுத்தடுத்து கற்றுக்கொண்டாள்... வீட்டில் திருமணம் ஏற்பாடு நடக்கவும்.. தான் ஒருவனை காதலிப்பதாக கூறினாள்… அதுவும் அவர்களுக்கு கீழ் வகுப்பு சாதியினர்… பையனை…நாராயணன்.. ஒப்புக் கொள்ளவில்லை… வீட்டில் ஒரு போர்க்களமே நடந்தது.. அடித்து.. உதைத்து.. மிரட்டி பல வகையில் சொல்லியும்… காதலை விட்டுக் கொடுக்கவில்லை… அதனால் வேறு வழியின்றி திருமணம் செய்து வைத்தனர்.. வகுப்பு தான் அவர்களுக்கு கீழே மற்றபடி மாப்பிளையின் குணம்.. தங்கம்.. நகராட்சியில் அரசாங்க வேலை.. குணத்தில் கூட ஒன்றும் குறைகூறுவதற்கு… இல்லை.. அதனால் நாராயணன் அதிகம்.. ஆட்சேபிக்கவில்லை..இதில் அனைவரையும் விட அதிக மகிழ்ச்சி கொண்டது… பார்வதிதான்.. இவர்களுக்கு காதல் புறாவாக செயல் பட்டவள்… அவர்களின் திருமணத்தின் போது இவளுக்கு ஆறு வயதுதான்… தனக்கு இனிப்புகள் வாங்கித் தருபவர்.. அக்கா புருஷனாக வந்ததில் மிகவும்.. மகிழ்ச்சி.. மச்சான்.. மச்சான்.. என அவரிடமே சுற்றிக் கொண்டிருந்தாள்…இவளின் இரண்டாம் அக்கா கங்கா.. அடுத்தவள் யமுனா… மூன்று பென்குழந்தைகளுக்கு... பிறகு கடைசியாக பிறந்ததால்.. பார்வதிக்கு நிறைய உரிமைகள்.. மறுக்கப்பட்டு விட்டன.. அதை நினைத்து அவள் பெரிதாக வருந்தியது இல்லை..


பார்வதி மிகவும்.. தைரியசாலி.. மானமும்.. ரோஷமும்.. மிக்கவள்.. அதோடு குறும்புக்காரியும் கூட.. தன் மூன்றாம் அக்கா யமுனாவை மிரட்டிக் கொண்டும் ஏமாற்றிக் கொண்டும் இருப்பாள்… உதாரணத்துக்கு.. வீட்டில்.. இரவு நேரம் மின்சாரம் இல்லையென்றால்… விசிறி மட்டை கொண்டு ஆளுக்கு ஐம்பது வீச வேண்டும்… பார்வதி நேக்காய்.. யமுனாவை முதலில் வீச சொல்வாள்.. அப்பாவி யமுனாவும் வீசுவாள்..இவள் முறை வருவதற்குள் தூங்கி விடுவாள்… யமுனா எழுப்பினாலும் எழுந்திரிக்க மாட்டாள்… படிப்பிலும் படுசுட்டியாக திகழ்ந்தாள்..பார்வதியின் அம்மா.. பாக்கியதிற்கு… ஒன்றுவிட்ட அண்ணன்.. ஒருவர் இருந்தார்.. சிறு வயதிலே மலேசியா.. சென்று அங்குள்ள ஓரு பெண்ணை திருமணம்.. செய்து வாழ்ந்து வந்தார்… பிறகு அங்கு பஞ்சம் ஏற்பட தன் மனைவியுடனும்.. நான்கு குழந்தைகளுடனும்.. சொந்த ஊருக்கே வந்துவிட்டார்… இருகுடும்பங்களும் நன்றாக பழகினர்... பிள்ளைகளுக்கு பள்ளி விடுமுறை என்றால்.. தங்கையின் வீட்டில் விட்டுவிடுவார்…அவரின் இரண்டாவது பையன் சுந்தரத்துடன்.. கங்காவிற்கு காதல் ஏற்பட்டுவிட்டது.. வீட்டில் உள்ள பெரியவர்கள் இதை அறிந்து.. அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.. அப்ப எட்டு வயது… பார்வதி சந்தோசமாக தன் அக்கா.. சரஸ்வதியின் குழந்தையுடன்… ஓடியாடிக் கொண்டிருந்தாள்.. ஆனால் இத்திருமனத்தால் தன் வாழ்க்கையே பறிபோகும் நிலை வரும்.. என அறிந்திருந்தால்… என்ன செய்திருப்பாளோ..
பார்வதிக்கு பத்து வயது.. இருக்கும் பொழுது.. யமுனாவின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்தது.. அந்த பையன் தன் அப்பா அம்மாவுடன் வீட்டிற்க்கே பெண் கேட்டு வந்து விட்டான்.. நாராயணனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை…. அமைதியாக ஒப்புக்கொண்டார்… அவர்கள் கேட்ட அதிகப்படியான சீர்வரிசையயையும் கொடுத்தார்.. இருந்தும் திருமணத்தன்று பிரச்சனை புரிந்தார்கள்… பாண்டியன் மனதால் மிகவும் நொந்திருந்தார்….பார்வதி.. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது… பூப்பெய்தினாள்… பருவ வயதின் இளமையும் … செழுமையும் அவளில் மிளிர்ந்தது.. இடுப்பு வரை அடர்த்தியான கூந்தல் படர்ந்திருக்க.. ஏற்க்கனவே அழகாக இருக்கும்… பார்வதி.. இன்னும் மெருகேறி பேரழகாக… தோன்றினாள்… சராசரி பெண்களின் உயரத்தை விட… உயரமாய் ஒல்லியாய்.. முதல் தடவை பார்க்கும் யாவரையும்… திரும்பி பார்க்க வைக்கும் பேரழகு…காளையர்களுக்கு கனவுக்கன்னியாக.. திகழ்ந்தாள்… ஆனால் பார்வதி.. யாரையும் பார்க்காமல்.. திமிராக நடந்துக் கொள்வாள்.. வீட்டிலோ தினமும் அடிவாங்காமல்.. அவளுக்கு அந்த நாளே முடியாது.. அவ்வளவு சேட்டை…பார்வதி… பன்னிரெண்டாம் வகுப்புக்கு அடியெடுத்து வைத்தாள்.. அதனால் நாராயணன் அவளை டியூசன் சேர்த்து விட்டார்… ஆனால் ஏன் அங்கு சேர்த்து விட்டோம்.. என வருந்தும் காலம் வெகுவிரைவில் வரும் என்பது அவருக்கு தெரியவில்லை…பார்வதி ஆண்.. பெண் பேதம் பார்க்காமல்.. அனைவரிடமும்.. இனிமையாகவும் தோழமையுடனும்.. பழகுவாள்… அதுவே டியூசனில் அவளுக்கு நிறைய நண்பர்களையும்.. ரசிகர்களையும் தேடித்தந்தது… அதில் டியூசன் மாஸ்டரும் அடக்கம்..
பார்வதி மேல் அவர் கொண்ட ஈர்ப்பு.. காலப்போக்கில் காதலாக மாறியது.. அவளிடம் தனிக்கவனம் செலுத்தினான்.. டியூசனில் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..இதை மற்ற மாணவர்கள் கவனிக்க ஆரம்பித்தனர்.. “ நம்ம ராஜன் சார்.. பார்வதிய காதலிக்கிறார்டா.. என தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்… “ஆனால் பார்வதி.. இதை அறியவில்லை.. அவளுக்கு ராஜன் மேல் டியூசன் மாஸ்டர் என்ற மதிப்பு இருந்ததே தவிர.. வேறு உணர்வு ஏற்படவில்லை.. அதனால் அவள் அவனை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை…ராஜன் “ யாரவது இயற்பியல் புக் வச்சுருக்கீங்களா.. என பிள்ளைகளை பார்த்து கேட்டான்…அனைவரும் அமைதியாக இருக்கவும்.. “ பார்வதியை பார்த்து.. நீ நாளைக்கு அந்த புக் வாங்கிட்டு வா.. ஒருவாரத்தில் தந்திடுறேன்.. என கூறி சென்றான்..பார்வதியோ.. “என்ன.. என்பது போல் முழித்துக் கொண்டிருந்தாள்.. பின்னே அவள் படிப்பது வணிகவியல்.. அவள்கிட்ட போய் இயற்பியல் புக் கேட்டா.. என்ன செய்வா..“ என்னடி இந்த சார்… லூசா.. என்கிட்ட போய் இயற்பியல் புக் கேட்கிறார்.. பக்கத்தில் உள்ள தோழியிடம் பொருமித்தள்ளினாள்… “பரமேஸ்வரி “ அவர் லூசுன்னு உனக்கு இப்பதான் தெரியுமா.. என கிண்டல் செய்தாள..“ நான் புக்குக் எங்க போவேன்…”அமுதா “ பேசாம புதுசு வாங்கி கொடுத்துடு.. என ஆலோசனை கூறினாள்.. ““ சரி.. ஆளுக்கு கொஞ்சம் காசு கொடுங்கடி.. என்று அமுதாவிடமும்.. பரமுவிடமும்.. கேட்டாள்.. ““ ஆத்தி.. இது நல்ல கதையால இருக்கு.. அவர் எங்க கிட்டயா கேட்டாரு.. உன்கிட்டதான கேட்டாரு.. ““ அதானே போடி.. உன் கை காச போட்டு வாங்கு ““ ஹேய்.. கெஞ்சிக் கேக்குறேண்டி.. கொஞ்சூண்டு காசாவது கொடுங்கடி.. என கெஞ்சினாள்..“ அப்பொழுதும் இருவரும் அமைதியாய் இருக்க.. உருப்படவே மாட்டிங்கடி.. என சாபம் கொடுத்தவள்.. மறுநாள் ராஜனை உள்ளுக்குள் அர்ச்சித்துக் கொண்டு தன்னுடைய காசைக் போட்டு புத்தகம் வாங்கிக் கொடுத்தாள்…“ இரு நாட்கள் கழித்து ராஜன்… ஒரு வித ஆவலுடன்.. புத்தகத்தை அவளிடம் கொடுத்தான்..அவன் கண்களில் இருந்த மறைமுக செய்தியை கவனிக்காமல்… சாதாரணமாக அவன் கொடுத்த புக்கை வாங்கிக் கொண்டு சென்றாள்…மறுநாள்.. பள்ளியில் உம்மென்று அமர்ந்திருந்தாள் பார்வதி.. அதைக் கவனித்த தோழிகள் என்னாச்சுடி ஏன்.. இப்படி இருக்க..“ போங்கடி நானே அடிவாங்கிட்டு வந்த கடுப்புல இருக்கேன்..அமுதா “ இன்னைக்கு என்னடி சேட்டை பண்ண..“ ச்ச்சு.. நான் ஒன்னும் பண்ணலடி.. காலைல என் தலைய சீவிக்கிட்டு இருந்தப்ப.. யார் மேல உள்ள கோபத்தையோ என் தலைல காமிச்சாங்க.. ஏன்மா இப்படி பண்றனு கேட்டது.. ஒரு குத்தம்ன்னு தலைல கொட்டிட்டாங்க… என்றாள் சோகமாக…பரமு “ விட்ரி.. விட்ரி.. நாம அடிவாங்குறது புதுசா என்ன..அமுதா “ அதானே… அத விடு.. உன் பை கொடு.. நான் இன்னைக்கு கணக்குப்பதிவியல் புத்தகம் கொண்டு வரல.. உன்னோடது எடுத்துக்குறேன்.. என பார்வதியின் ஜோல்னா பையை எடுத்தாள்… ஆனால் அதில் இருந்த இயற்பியல் புத்தகத்தை பார்த்து.. “ டீ பார்வதி இந்த கருமத்த ஏண்டி இன்னும் உன் பையில வைச்சுருக்க… என்றவள் புத்தகத்தை எடுத்து பார்வதி மேல் வீசினாள்… அப்பொழுது அதிலிருந்து ஒரு காகிதம் விழுந்தது..அதை முதலில் கண்ட பரமு.. உடனே எடுத்து பார்த்தாள்…. டீ பார்வதி.. சார் உனக்கு காதல் கடிதம் கொடுத்துருக்காருடி.. என்று கத்தினாள்..
 
#8
#9
அத்தியாயம் 3அதை முதலில் கண்ட பரமு.. உடனே எடுத்து பார்த்தாள்…. டீ பார்வதி.. சார் உனக்கு காதல் கடிதம் கொடுத்துருக்காருடி.. என்று கத்தினாள்..“ வேகமாக.. அவள் வாயை பொத்தினர் இருவரும்.. பார்வதி “அமைதியா இருடி.. பக்கத்துல தான இருக்கோம்.. என்று கடிந்தாள்..ச்சு கம்முன்னு இருங்கடி.. என்ன எழுதிருக்கனு பார்ப்போம்.. என்றாள்..‘’ ஹேய் சார் உண்ண காதலிக்கிறதா எழுதி இருக்காருடி … செம்ம.. ‘’‘’ எனக்கு பயமா இருக்குடி..எதுக்கு பயம் உனக்கு புடிச்சுருந்தா சரி சொல்லு இல்லன்னா வேணாம்..பதில்ல இதுலையே எழுதி தர சொல்லிருக்காரு.. நீ உனக்கு தோன்றத எழுது..பார்வதிக்கு ராஜனின் முகம் மனதில் வந்து போக அவள் கைகள் அவள் அறியாமல் சரி என எழுதியது..அதைப்பார்த்த தோழிகள் ஓஹோ.. எனக் கத்த வெட்கத்தில் முகத்தை மூடினாள்..டியூஷனில் பார்வதி டென்க்ஷனாக உட்காந்திருக்க அவள் தோழிகள் இருவரும் நடக்க போவதை வேடிக்கை பார்க்க ஆவலாய் இருந்தனர் …ராஜன் வந்து அந்த புத்தகத்தை மறுபடியும் அந்த புத்தகத்தை கேட்க.. அவன் முகத்தை பார்க்காமல் கொடுத்து விட்டு வந்து விட்டாள்..ராஜன் புத்தகத்தை திறந்து பார்க்காமல் ஓரமாக வைத்தவர்.. பாடம் எடுக்க ஆரம்பித்தார்… பார்த்த மூவருக்கும் சப்பென்று ஆகியது..


மறுநாள்.. சந்தில் பார்வதி தனியாக வந்துக் கொண்டிருக்க … திடிரென்று அவள் கை இழுக்கபட்டது.. பயந்து போய் கத்த வந்தவளை தன் இதழ் கொண்டு மூடினான் ராஜன்..பார்வதியின் உடல் அச்சத்திலும் அதிர்ச்சியிலும் நடுங்கியது.. தன்னை விடுவிக்க போராடினாள்.. மெதுவாக அவளை விடுவித்தவன்.. அவளை வருடிக் கொடுத்து.. நடுக்கத்தை குறைத்தான்..ஹேய் சாரிடி… தெரியாம பண்ணிட்டேன்.அவளோ நடுக்கம் குறைந்து அவனை அடித்தாள்.. நான் எவ்வளோ பயந்துட்டேன்.. தெரியுமா என்றாள்..ஹேய் சாரி பாரு என சமாதானம் படுத்தியவன்.. தினமும் இந்த இடத்துக்கு வந்துடு நாம சந்திக்கலாம்.. என கூறிச்சென்றான்..இருவருக்கும் தினமும் மாலையில் சந்திக்கும் பொழுதுகள் இனிமையாக இருந்தது.. இது நிரந்தரமில்லை என அறியாமல்..நாராயணன் வீட்டிற்கு பல வருடங்கள் பிறகு கங்கா யமுனா இருவரும் ஒன்றாக வந்திருக்க வீட்டில் சந்தோஷ அலை அடித்தது .. யமுனா பார்வதியின் காதல் கடிதங்களை கொடுக்கும் வரை..சாமி படத்திற்கு பின்னால் பார்வதி மறைத்திருந்த கடிதங்களை யமுனா பார்த்து நாராயணனிடம் கொடுத்து விட்டாள்… உடனே கங்கா இதுதான் சந்தர்ப்பம் என கருதி பார்வதிக்கு உடனே கல்யாணம் செய்யுங்கள் என்றும் தன் கொழுந்தனை கேட்கலாம் என தூபம் போட்டாள்..நாராயணன் முகம் பெரும் யோசனையில் இருந்தது.. பிறகு ஒரு முடிவுடன் கங்கா புரம் திரும்பி நிச்சயத்திற்கு நாள் பார்க்க சொன்னார்..இதையறியாத பார்வதி ராஜன் இருவரும் காதல் அலையில் நீந்திக்கொண்டிருந்தனர்.. வீட்டில் ஏற்படும் மாற்றம் அவள் கண்ணுக்கு தெரியவில்லை.. பரீட்சை ஆரம்பிப்பதால் டியூசன் முடிந்து விட்டது… அதனால் ராஜனை தூரத்தில் இருந்து பார்ப்பதோடு சரி.. பக்கத்தில் பார்க்க முடியவில்லை..பரீட்சை முடிந்த மறுநாள் வெளியில் கிளம்பியவளை தடுத்த பாக்கியம் இன்னும் உனக்கு பத்து நாள்ல கல்யாணம்.. இந்த நேரத்தில் வெளியில போகக்கூடாது.. என்று கூறியதும்.. பார்வதியின் உடலில் மின்சாரம் பாய்ச்சுவது போல் துடித்தாள்…அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.. என்ன செய்வது என யோசிப்பதற்குள் திருமணநாள் வந்து விட்டது… அவள் கடைசியாய் ராஜனை பார்த்தது.. கழுத்தில் மாலையோடு மஞ்சள் ஈரம் காயாத புது மாங்கல்யம் அணிந்து வேற ஒருத்தன் மனைவியாய்.. கோவில் வாசலில் தன்னை கண்டதும் முகம் முழுக்க வலியை சுமந்து நின்ற ராஜனைத்தான்...
 
#10
அத்தியாயம் 4

திருமண கோலத்தில்.. கண்களில் கண்ணீர் குளம் கொண்டு.. வீற்றிருந்தாள்.. பார்வதி.. மனமோ இயலாமையில் தவித்தது..நாராயணன்.. மிக சாதுர்யமாக அனைத்தையும் கையாண்டார்.. மூன்று மகளும் காதல் திருமணம் செய்ததில் ஒரு வித மன அழுத்தத்தில் இருந்தார்.. அதுவும் மூன்றாம் மகள் புகுந்த வீட்டில் படும் கஷ்டங்களை கண்டவர் காதல் என்ற வார்த்தையையே வெறுத்தார்.. இந்நிலையில் தன் கடைசி மகளும் அந்த புதை குழியில் விழுவதை அவர் விரும்பவில்லை..பார்வதியின் காதல் விவகாரம் அவர் காதிற்கு வந்தவுடன்.. அவளே அறியாதவாறு அவளை கண்காணித்து.. தன் கண் பார்வையில் வைத்துக்கொண்டார்.. இருவேளையிலும் பள்ளிக்கு அழைத்துச் சென்று.. கூட்டி வந்தார்.. வீட்டை விட்டு வெளியில் அனுப்பவில்லை… அதை அவள் அறியாதவாறு பார்த்துக் கொண்டார்..அவள் கடைசி பரீட்சை முடிந்த மறுநாள்.. கங்காவின் கொழுந்தன் பரந்தாமனுடன் நிச்சயதார்த்தம் நடந்து.. அடுத்த பத்து நாளில் எளிமையாக கோவிலில் திருமணம்.. என அனைத்தையும் நடத்தி காட்டி விட்டார்..தன் மூன்றாம் மகளின் வாழ்க்கையை பார்த்தவர்.. அதே மனநிலையில் கடைசி மகளின் காதலை பார்த்தார்.. மூத்த மகளை மறந்துவிட்டார்..
 
#11
அதனால் உடனடியாக அனைத்தையும் திட்டமிட்டு நடத்திவிட்டார்.. ஆனால் அவருக்கு தெரியவில்லை.. தன் கடைசி மகளை தாமே பாழுங்கிணற்றில் தள்ளி விட்டோம் என்றும்.. இனி தன் மகளின் வாழ்வில் மகிழ்ச்சி என்ற ஒன்றே இல்லையென்பதும்...பார்வதிக்கு திருமணம் முடிந்து.. ஒருமாத காலம் ஓடிவிட்டது.. வெறும் பதினேழு வயது பாவைக்கு.. தாம்பத்திய வாழ்க்கை அவள் விருப்பமின்றி பல ரணங்களுடன் ஆரம்பித்தது.. இரவு வந்தாலே அவள் உடல் அவளறியாமலே நடுங்கியது.. கணவனின் முரட்டுத் தனத்திலும் மூர்க்கத்திலும் பாவையவள் தாம்பத்யத்தையே வெறுத்தாள்..அனைத்தும் பழகிவிட்டது.. மாமியாரின் குத்தல் பேச்சு…. கணவன் இருக்கும் போது ஒரு முகம்.. கணவன் இல்லாது போது ஒருமுகம்.. கணவனின் சுடு சொற்கள்..“ என்ன சோறு பொங்கிட்டியா.. என தன் வெண்கல தொண்டையை தொறந்தார்.. பட்டம்மாள்.. “பார்வதி “ இதோ ஆயிடுச்சு அத்தை “என்ன ஆச்சோ ஒரு வேலை உருப்படியா பார்க்க தெரிதா.. உன்னை போய் என் புள்ள தலைல கட்டி விட்டுட்டாங்க.. என அங்கலாய்ந்தார்…அவர் பேச்சை காதில் வாங்காமல் “ எல்லா வேலையும் முடிஞ்சுடுச்சு.. நான் அக்கா வீட்டுக்கு போறேன்.. என்றாள் அறிவிப்பாய்…இது தான் பார்வதி.. தன் தலைவிதி இதுதான் என்று அறிந்த பிறகு.. அதை அப்படியே ஏற்றுக் கொண்டாள்.. அவளின் காதல் நினைவுகளாக மனப்பெட்டகத்தில் அடைந்துக் கொண்டது.. ஆனால் அவள் தைரியம் மட்டும் குறையவில்லை..போகும் பார்வதியையே தன் கோப விழிகளால் பார்த்துக் கொண்டிருந்தாள் பட்டம்மாள்.. கங்காவை போல் பார்வதியை நினைத்தார்.. கங்கா மாமியார்க்கு அடங்கிய மருமகள்.. பட்டம்மாள் என்ன வேலை செய்தாலும் செய்வாள்.. எதிர்த்து பேசமாட்டாள்.. அதனால் பார்வதியையும் கங்கா போல் இருப்பாள் என நினைத்தாள்.. தன் கடைசி மகன் பரந்தாமனுக்கு பார்வதியை திருமணம் செய்ய நினைத்தாள்.. அதேபோல் அவளுக்கு மாப்பிள்ளை பார்ப்பது அறிந்து கங்கா மூலம் பார்வதியை பரந்தாமனுக்கு கல்யாணம் செய்து வைத்துவிட்டார்..
 
#12
ஆனால் அவர் எதிர்ப்பார்த்தது போல் பார்வதி இல்லை என்பதை திருமணம் ஆன பத்துநாளில்லையே காண்பித்து விட்டாள்..பரந்தாமன் பார்வதிக்கும் அம்மாவுக்கும்.. பரோட்டா வாங்கி வந்தார்.. அதுவும் ஆளுக்கு மூன்று என்று கணக்காய்.. பட்டம்மாள் சாப்பிட்டு விட்டதாள்.. வேண்டாம் என்று விட்டார் பார்வதியிடம்.. அவளும் மாமிக்கு வேண்டாம் என்றதால் நாலு சாப்பிட்டாள்.. மறுநாளும் பட்டு வேண்டாம் என்றதால் மீதம் உள்ளத்தையும் உண்டுவிட்டாள்..மதிய வேளை வந்த பரந்தாமன் பட்டுவிடம் “ என்னமா நேத்து சாப்பாடு வாங்கிட்டு வந்தேனே சாப்பிட்டியா…“ ம்ம்க்கும் நான் எங்க சாப்பிட்டேன்.. எல்லா உன் பொண்டாட்டி தான் சாப்பிட்டா.. என்று குற்றம் சுமத்தினார்.. “உடனே பரந்தாமன் கோப விழிகளால் பார்வதியை பார்த்தார்..அவளோ “ என்ன நடந்துச்சுனு தெரியாம முறைக்காதீங்க என்றவள் பட்டுவிடம் நீங்கதானே எனக்கு வேண்டாம் நீயே சாப்புடுனு சொன்னிங்க.. இப்ப உங்க மகன்கிட்ட இப்படி சொல்றிங்க என்றாள் நேரடியாய்..அத்தைக்காரி இந்த நேரடி கேள்வியை எதிர்ப்பார்க்க வில்லை.. அவர் எப்பொழுதும் இந்த மாதிதான் மகனுக்கும் மருமகளுக்கும் கலகம் மூட்டுவார்.. கங்கா எதுவும் பேச மாட்டாள்.. பார்வதியும் அமைதியாக இருப்பாள் என நினைத்தவர்.. இப்படி நேரடியாக கேள்வி கேட்ப்பாள் என நினைக்கவில்லை..ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தவர்… ஹ்ம்ம்ம் நான் வேணாம்னு சொன்னா நீ எல்லாத்தையும் திண்ணுடுவியா.. கொஞ்சமாச்சும் மாமியார்க்கு வைக்கணும்ன்னு நினைப்பு இருக்கா.. என்றார்..பரந்தாமன் “ அது சாப்புடுதோ இல்லையோ.. அதுக்கு வாங்குனத நீ எடுக்காத என்று கூறி சென்றான்..அதை நினைத்துப் பார்த்தவரை.. அங்கு வந்த கணேசனின் பதட்டக்குரல் கலைத்தது..
 
#13
“ என்னடா ஏன் இப்படி அவரசரமா ஓடி வர.. என்றார்..அடுத்து அவன் கூறியதைக் கேட்டதும் இவருக்கும் பதட்டம் குடி கொண்டது… டேய் என்னடா சொல்ற.. ஏன் தான் இந்த சின்னவன் இப்படி இருக்கிறானோ.. ஒரு கால் கட்டு போட்டா சரியாய்டுவானு கல்யாணம் பண்ணி வச்சா ஒரு மாசத்துக்குள்ள மறுபடியும் அவன் வேலைய ஆரம்பிச்சுட்டானா.. என்றார் சலிப்பாக..சரி சரி.. பார்வதி வந்துருவா.. அவளுக்கு இந்த விஷயம் தெரிய வேணாம்.. நான் அவன் அப்பாவும் சுந்தரமும் வரட்டும் அவுகள விட்டு என்னனு பார்க்க சொல்றேன்.. என்றார்.அவன் சென்றதும் யோசனையுடன் அமர்ந்திருந்தார்.. அப்பொழுது பார்வதி வர அவளிடம் “ உன் புருஷன் வெளியூர் வேலைக்கு போயிருக்கான் வரதுக்கு ஒரு பதினஞ்சு நாள் ஆகும்.. என்றார்“ என்கிட்ட சொல்லலையே.. உங்ககிட்ட எப்போ சொன்னாங்க..இப்பதான் கணேசன் வந்து சொன்னான்.. அவனுக்கு திடிர்னு வெளியூர் வேலை வரது சகஜம்தான்… என்றார்..இவளும் வேறு எதுவும் கேட்கவில்லை.. ஆனால் அது எவ்வளவு பெரிய தவறென்று பின்னாளில் உணர்ந்தாள்..இருபது நாள் கழித்து பரந்தாமன் வீட்டிற்கு வந்தார்.. “ எங்க போனீங்க.. என்ன வேலை என்று கேள்வி கேட்டவவளிடம்.. “ முதல்ல சாப்பாட போடு என எரிந்து விழுந்தான்.. “அதற்க்கு பிறகும் அவளுக்கு பதில் கிடைக்க வில்லை.. இருபது நாளின் தேவையை தீர்த்துக் கொள்ளுவதில் மும்மரமாக இருந்தான்..ஆனால் அடுத்த இரு நாளில் அவளுக்கு கிடைத்த பதில்.. அவள் வாழ்வின் அவல நிலையை எடுத்துரைத்தது…

…………

சல சலவென ஓடிக்கொண்டிருந்த ஆற்றில் தான் கொண்டு வந்த துணியை துவைத்துக் கொண்டிருந்தாள்.. பார்வதிதுவைத்து குளித்து போகும் தருவாயில் கணேசன் மனைவி சீதா வந்தாள்..“ என்ன பார்வதி இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட.. என்றாள்
 
#14
இன்னைக்கு சீக்கிரமே முழிப்பு வந்துட்டுக்கா.. அதுனாலதான்..“ உம் புருஷன் வந்துட்டானமே.. என் வீட்டுக்கார் சொன்னாரு.. அவனுக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை.. என்றாள்“ பார்வதி புரியாமல் பார்க்க..என்ன பாரு இப்படி பாக்குற.. அப்ப உனக்கு விஷயமே தெரியாத.. உன் புருஷன் கள்ள சாராயம் வித்து போலீஸ் புடிச்சுட்டு போய்ட்டாமே என்று பார்வதியின் தலையில் மின்னாமல் முழங்காமல் இடியை இறக்கினாள்..சாக்கு தைக்குற வேலைய ஒழுங்கா பார்க்காம அடிக்கடி இப்படி பண்ணிட்டு ஜெயிலுக்கு போறதே உன் புருஷனுக்கு வேலைய போச்சு.. இதோட மூணாவது தடவ போலீஸ்ல மாட்டிருக்கான்.. என்றாள்பார்த்து இருந்துக்க.. என்றவள் சரி நான் வாரேன் நேரம் ஆயிடுச்சு..பார்வதிக்கு… தனக்கு கிடைத்த வாழ்க்கையை எண்ணி.. கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது… மாமியாரின் மழுப்பல்கள் மாமனார் அக்காள் கணவரின் ரகசிய பேச்சுக்கள் கணவனின் தடுமாற்றம் அனைத்துக்கும் விடை தெரிந்தது…கண்களில் கோபம் குடிக்கொள்ள வீட்டைநோக்கி புறப்பட்டாள்..“ போனோமா வந்தோமான்னு இல்லை போனா போன இடம்.. வந்தா வந்த இடம் என்ற மாமியாரின் குத்தல் பேச்சைக் கண்டுக் கொள்ளாமல்.. “கணவனின் முன் நின்று இருபது நாளா எங்க போயிருந்தீங்க.. கள்ள சாராயம் விப்பீங்களா.. போலீஸ் ஸ்டேஷன்ல இருந்தீங்களாம் சொல்லுங்க அதெல்லாம் உண்மையா.. என்று கத்தினாள்..வீட்டில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சி… “ எந்த *** பத்த வச்சான்னு தெரிலயே என்று வசைபாடினார் பட்டம்மா..பரந்தாமன் முதலில் அதிர்ந்தாலும்.. அவள் கத்தலில் கோபம் கொண்டு ஆண் என்னும் திமிருடன் “ ஏய் என்ன கத்துற.. குரவளைய நெரிச்சுருவேன்.. ஆமாண்டி கள்ள சாராயம் வித்தேன்.. இந்த இருபது நாளா போலீஸ் ஸ்டேஷன்ல தான் இருந்தேன்.. அதுக்கு இப்ப என்னாங்குற… என்று எகிறினான்..“ இப்படி சொல்ல வெட்கமாயில்ல.. கள்ள சாராயம் மட்டும் தான் விப்பியா.. இல்லை மாமா வேலைகூட பாப்பியா.. என்று கோபத்தில் வார்த்தையை விட்டாள்.. ““ என்னடி வாய் நீளுது ***** என்று அறைந்தவன்.. பக்கத்தில் உள்ள விறகை எடுத்து அடிக்க ஆரம்பித்தான்…பார்வதி கத்தவில்லை கதறவில்லை ஏன்…. தடுக்க கூட வில்லை கல்லு மாதிரி அழுத்தமாக இருந்தாள்..அதில் மேலும் கோபம் கொண்டு மேற்கொண்டு அடிக்க ஆரம்பித்தான்.. டேய் விடுறா.. தப்ப உன் மேல வச்சுட்டு அந்த புள்ளய அடிக்குற.. என தடுத்தார்..“ இருந்தும் அவள் தலைமுடியை இழுத்து இங்க பாருடி நான் இப்படி தான் முடிஞ்சா இரு.. இல்ல உன்கொப்பன் வீட்டுக்கு போ.. அதுக்கும் முடிலயா செத்து போடி.. என்று கூறி சென்றான்…அனைவரும் சென்றனர்.. கங்கா மட்டும் பார்வதியை அவளின் அறையில் விட்டு.. இதெல்லாம் கண்டுக்காதடி என்றாள்..“ பார்வதி எதுவும் பேசவில்லை.. ஆனால் அவள் கண்கள் கங்காவை குற்றம்
 
#15
சாட்டியது.. கேள்வி கேட்டது.. அந்த பார்வைக்கு பதில் சொல்லும் தைரியம் கங்காவிற்கு இல்லை.. அவள் தலை குனிந்து வெளியேறினாள்..உள்ளம் குமுற மூலையில் உட்கார்ந்துக் கொண்டிருந்தாள்.. பார்வதி உடல் முழுதும் வலித்தது.. வரி வாரியாக விறகின் அச்சு தெரிந்தது.. இருந்தும் அவள் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை…. அப்பொழுது அங்கு இருந்த மண்ணெண்ணெய் பார்த்ததும் நொடியில் அதை எடுத்து குடித்திருந்தாள்…பார்வதிக்கு சாப்பாடு கொண்ட வந்த கங்கா.. அவள் மயக்க நிலையில் இருப்பதை பார்த்து பதறினாள்.. அவள் பக்கத்தில் இருந்த காலி மண்ணெண்ணெய் கேனை பார்த்ததும்.. கத்தி அனைவரையும் அழைத்தாள்…வேக வேகமாக பக்கத்தில் உள்ள மருத்துவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.. அவர் பரிசோதித்து மண்ணெண்ணெயை வாமிட் எடுக்க வைத்தார்.. மூணு நாலு நாள் சாப்பாடு கொடுக்காதீங்க.. வெறும் பிரெட் மட்டும் கொடுங்க என கூறியவர் பார்வதியிடம் குடும்பத்துல பிரச்சனை வரது சகஜம் தான்மா அதுக்கு சாகுறதுதான் முடிவுன்னா இந்த உலகத்துல யாருமே இருக்க முடியாது.. என அவளுக்கும் ஆலோசனை கூறி அனுப்பி வைத்தார்…வீட்டிற்கு வந்தவுடன் பரந்தாமன் அவளை அறையில் விட்டவன்… ஒரு ப்ரெட் பாக்கெட்டை அவள் பக்கத்தில் வீசிவிட்டு சென்றான்… பார்வதிக்கு அதை எடுத்து சாப்பிட மனம் இல்லை தான்.. ஆனால் வேறு வழி..அடுத்த இரு நாளில்.. பாக்கியமும் நாராயணனும் வந்திருந்தார்கள்.. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களுக்கு லெட்டர் மூலம் பார்வதியின் நிலையை தெரிவித்திருந்தனர்… பாக்கியம் மகளை கட்டிக் கொண்டு அழ.. நாராயணனால் பார்வதி முகத்தை பார்க்கும் தெம்புகூட இல்லாமல்.. மனிதர் மிகவும் நொந்திருந்தார்….குடும்ப பஞ்சாயத்து நடந்தது.. ஆளாளுக்கு ஒன்று பேசினார்கள்.. கடைசியில் பரந்தாமனையும் பார்வதியையும் மதுரையில் தனிக்குடுத்தனம் வைப்பதாக முடிவெடுக்க பட்டது… பரந்தாமன் அப்பா மதுரையில் தனக்கு தெரிந்தவர் மூலம் வேலை வாங்கிக் கொடுப்பதாக நாராயணனிடம் வாக்களித்தார்..அடுத்த மூன்று மாதத்தில் மதுரை செல்லூரில் தங்களின் தனிக்குடுத்தனத்தை ஆரம்பித்தனர் பரந்தாமனும்.. பார்வதியும்.. மதுரை பக்கம் சோழவந்தான் தான் பார்வதியின் பிறந்த ஊர்.. அங்குதான் அவள் பிறந்த வீட்டு ஜனங்கள் இருக்கிறார்கள்.. அதனால் எவ்வித கவலையின்றி தனிக்குடுத்தனம் வைத்தனர்..பரந்தாமன் ஒழுங்காக வேலைக்கு சென்று வந்தார்.. பார்வதியும் வீட்டில் சும்மா இருக்க விரும்பாமல் தையல் கம்பெனியில் சூப்பர் வைசிங் வேலைக்கு சென்றாள்.. வாழ்க்கை நான்றாக போய்க்கொண்டிருந்தது…அப்படியே மூன்று வருடங்கள் ஓடி விட்டது.. ஆனால் இன்னும் பார்வதிக்கு குழந்தை பாக்கியம் ஏற்படவில்லை.. மகனை தனிக்குடுத்தனம் வைத்த ஆத்திரத்தில் இதை சொல்லி பார்வதியை குத்திகாண்பித்தார் பட்டம்மாள்.. ஆனால் இதை அவள் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை.. சொல்ல போனால் அவளுக்கு குழந்தையை பற்றி பெரிதாக ஆர்வமும் இல்லை ஆசையும் வருத்தத்தமும் இல்லை… அதனால் பட்டம்மாவின் வார்த்தைகள் அவளை பாதிக்கவும் இல்லை…இந்நிலையில் பாக்கியத்தை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.. அவருக்கு கழுத்தில் தைராய்டு பிரச்சனை வந்தது.. அதற்காக சேர்த்திருந்தனர்.. பார்வதித்தான் பாக்கியத்திற்கு மதிய சாப்பாடு கொண்டு வருவாள்.. அதுவும் செல்லூரில் இருந்து கோரிப்பாளையத்திற்கு நடந்தே வருவாள்…பாக்கியம் “ என்னடி நீ இப்படி சோர்ந்து போய் இருக்குற.. வீட்டுக்கு தூரமா என விசாரித்தார்“ இல்லை அம்மா.. ரெண்டு மாசம் முன்னாடி குளிச்சது.. இன்னும் வரல இவ்வளோ தூரம் நடந்து வந்தேன்ல அதுனாலயா இருக்கும் என்றாள் சாதாரணமாக… “
 
#16
“ பாக்கியத்திற்கு இவள் கூறியதைக் கேட்டதும் சந்தேகம் வந்தது.. பக்கத்தில் உள்ள தன் மூத்த மகளிடம் தன் சந்தேகத்தை கூறி மருத்துவரிடம் போக சொன்னாள்…சரஸ்வதியும் பார்வதியும் மகப்பேறு மருத்துவர் முன்னால் அமர்ந்திருந்தனர்.. அவர்.. “ என்னமா இப்படி கேர்லெஸ்ஸாவா இருப்பிங்க.. உங்களுக்கு எந்த அறிகுறியும் தெரிலயா ‘’ என்றார்… ஆம் பார்வதி கர்ப்பமாக இருக்கிறாள்..அவள் மணி வயிற்றில் உள்ள கருவிற்கு வயது அறுபது நாட்கள்..பார்வதிக்கு எந்த மாறுபாடும் தெரியவில்லை.. அவள் அவளாக இருந்தாள்.. குழந்தை பற்றிய பெரிய கனவுகள் எதுவும் இல்லை… அப்படியே நாட்கள் செல்ல பார்வதி வேலையை விட்டு நின்று விட்டாள்.. ஏழாம் மாத தொடக்கத்தில் வளைகாப்பு நடத்தி சோழவந்தானுக்கு அழைத்துச் சென்று விட்டனர்…பார்வதிக்கு தேதி குறித்த நாளில் பிரசவ வலி ஏற்படவில்லை.. மருத்துவரிடம் கேட்ட பொழுது.. எந்த பிரச்னையும் இல்லை வலி வரும்போது வாருங்கள் என அனுப்பிவிட்டனர்…பார்வதி “ அப்பா நான் உங்ககிட்ட எத்தனை தடவை கேக்குறேன்.. கோளா உருண்டை பண்ணித்தாங்கனு.. இன்னும் செஞ்சுதரல… என குறைப்பட்டுக் கொண்டாள்..“ சரி சரி வேலை அதிகம்.. இன்னைக்கு கண்டிப்பா பண்ணித்தரேன்.. பாக்கியம் அந்த கூடைய கொண்டுவா ஆட்டுக்கறி வாங்கியாறேன்.. “ஆட்டுக்கறியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எண்ணெயில் போட்டு வறுத்து எடுத்தார்… தேங்காய் பூ, சோம்பு, சீரகம், மிளகு, கசகசா, பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சிறிது எண்ணெய் விட்டு வறுத்தார்… அடுத்து ஆட்டுக்கறியை பிழிந்து எடுத்துக்கொண்டு வறுத்த மசாலா பொருட்களுடன் மிக்சியில் ரெண்டு சுற்று சுற்றி.. அவைகளை உருண்டைகளாக உருட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்தார்…நாராயணன் செய்வதை எல்லாம் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தவள்.. அவர் தட்டை கொடுத்ததும்.. வேகமாக வாங்கி சாப்பிட்டாள்.. “ ஸ்ஸ்ஸ்.. உஉ என ஊதி ஊதி சாப்பிட்டாள்… “பாக்கியம் “ ஏய் சுட போகுது பொறுமையா சாப்புடு எல்லாம் உனக்குத்தான்.. “மறுநாள் நல்ல தண்ணீர் அடித்துக் கொண்டிருந்த போது.. அடிவயிற்றில் சுருக்கென்று ஒரு வலி வந்தது.. பிறகு சாதாரணமாக இருந்தது.. அவள் சில்வர் குடத்தை தூக்கிக் கொண்டு வீட்டினுள் செல்லும் போது.. இப்பொழுது அதிகமாய் வலி வந்தது…ஆஆ.. அம்மா என முனகினாள்..“ என்னடி என்னாச்சு.. “‘’ என்னனு தெரில அடிவயிறு வலிக்குது என்றாள் ‘’‘’ பிரசவ வலியா சூட்டு வலியானு தெரிலையே… எதுக்கும் நான் கஷாயம் வச்சு தரேன்.. சூட்டு வலியா இருந்தா நின்றும்.. என்று.. அடுப்படி உள்ளே சென்றார்.. ‘’‘’ கஷாயம் குடித்தும் வலி நிற்காமல் இருக்க.. மருத்துவமனை கிளம்பினர்.. ‘’‘’ நடந்தே போகலாம்… குழந்தை பொறக்க இன்னும் நேரம் இருக்கு.. அங்க போனாலும் நடக்க தான் சொல்லுவாங்க.. என்றார் நான்கு பிரசவங்களை பார்த்த பாக்கியம்.. ‘’“ குழந்தை பொறக்க சாயங்காலம் ஆகிடும்.. இங்கயே நடங்க என்று நர்ஸ் கூறி சென்றார்.. ‘’பார்வதிக்கு அவ்வளவாக வலி ஏற்படவில்லை.. தன் மன தைரியத்தில் அதை கடந்தாள்.. மாலை நான்கு மணிப்பொழுது பார்வதியின் பெண்ணரசி பிறந்தாள்..குழந்தையை வெளியில் எடுத்துச் சென்று குடும்பத்தாரிடம் காட்டிய பொழுது.. அவர்களுக்கு முதலில் ஏற்பட்டது அதிர்ச்சி தான்.. ஏனெனில் குழந்தை தமிழ்நாட்டின் பாரம்பரிய நிறத்தில் இருந்தது.. பார்வதியின் பால் வெள்ளை சருமம் கொண்டவள்.. பரந்தாமனும் ஓரளவு நிறம் கொண்டவர்… அவர்களுக்கு கருப்பாக பிள்ளை பிறந்தாள்.. அதுதான் அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது..பாக்கியம் ஒரு படி மேல் “ இது எங்க பிள்ளையா இருக்காது என்றார்.. ‘’அந்த அளவுக்கு அவர்களுக்கு ஏமாற்றம்.. பார்வதி போல் பிள்ளை பிறக்கும் என நினைத்திருந்தனர்…‘’ பார்வதியிடம் காண்பித்த பொழுது.. சந்தோஷம் தான் முதலில் தோன்றியது… நிறத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. ‘’மூன்றாம் நாளே வீட்டிற்கு அழைத்துச்சென்று விட்டனர்.. குழந்தை பிறந்த ஒரு மாதத்திலே மதுரைக்கு சென்று விட்டாள்..குழந்தையை கண்ணின் மணி போல் பார்த்து பார்த்து வளர்த்தாள்.. குட்டிக்கு இப்பொழுது ஆறு மாதம் ஆகியிருந்தது.. கருப்பு நிறத்தில் இருந்து மாநிறத்துக்கு மாறியிருந்தாள்..மஞ்சள் நிறம் என்று சொல்ல வேண்டுமோ.. காலையில் அவள் எழுந்தவுடன் பால் கொடுத்து விளையாட விடுவாள்.. பிறகு குளிக்க வைத்து மஞ்சள் கிழங்கை உரசி.. மஞ்ச மஞ்சலென்று ஆக்கிவிடுவாள்..அதை விட பெரிய கொடுமை ரெண்டு தொடைக்கும் நடுவில் அவளை இறுக்கி பிடித்து மூன்று இட்லிகளை ஊட்டி விடுவாள்.. அழுதாலும் விடமாட்டாள்.. துப்பினாலும் விடமாட்டாள்.. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூட கேலி செய்வார்கள்..
 
#17
அடுத்து 11 மணிபோல் பிஸ்கட்டை தண்ணீரில் நனைத்து ஊட்டுவாள்.. ஆனால் தூங்க வைக்க மாட்டாள்.. ஒருமணி டிவியில் செய்திகள் போடும் நேரம் பருப்பு சாதம் ஊட்டி தூங்க வைப்பாள்.. அடுத்து அம்மையார் சீரியலில் மூழ்கிவிடுவாள்.. குட்டிக்கு காலையில் இருந்து சாப்பிட்ட உணவு விளையாட்டு இதெல்லாம் சேர்த்துக் கொள்ள நன்கு தூங்குவாள்… ஒன்றைக்கு தூங்கும் குழந்தை மாலை 5 மணி போல் தான் கண்விழிக்கும்.. இடையில் எழுந்தால் அடிக்கொடுத்து தூங்கவைப்பாள்… குட்டியும் அழுதுக் கொண்டே தூங்கிவிடும்…இவள் முழித்தால் பார்வதியின் மதிய தூக்கம் தடைபடும்.. அதனால் இந்த ஏற்பாடு.. இப்படியெல்லாம் கவனித்து கொழுகொழு வென வைத்திருந்தாள்… பரந்தாமனுக்கு குழந்தையை எப்போயாவது தூக்கி கொஞ்சுவான்…எல்லாம் நன்றாகத்தான் சென்றுக் கொண்டிருந்தது… பரந்தாமன் திடிரென்று காணாமல் போகும் வரை…


****************************************************


குட்டிக்கு ஒரு வயது நிறைவடைந்தது.. கால் முளைத்த பிறகு அவள் செய்யும் அட்டகாசம்.. அப்பப்பபா.. பார்வதியை ஓட விட்டாள் சின்னவள்.. தன் வீட்டில் உள்ள பழைய வாலியை எடுத்துச்சென்று பக்கத்து வீட்டில் வைத்துவிட்டு.. அங்குள்ள புது வாலியை கொண்டுவருவாள்… கீழே விழுந்தாள் தலையில் அடிபட விடமாட்டாள்… மெதுவாக தலையை வைப்பாள்.. எப்படி விழுந்தாலும்… மாடியின் படிக்கட்டில் உட்கார்ந்திருப்பாள்.. ஆனால் கீழே இறங்க மாட்டாள்..கோபம் கொண்டு டிவி ஸ்டாண்டில் கயிறு வைத்து கட்டி போட்டால் ஸ்டாண்டோடு இழுத்து வாசலுக்கு வருவாள்..தினமும் புதுசு புதுசாக வேலை வைத்து அடிவாங்குவாள்…அனைத்தும் நன்றாக தான் சென்றது.. பரந்தாமன் வீட்டை விட்டு செல்லும் வரை..காலையில் போனவர் இரவாகியும் திரும்பி வராதலால் கவலையில் இருந்தாள்.. பார்வதி.. அப்பொழுது இரண்டு மூன்று ஆட்கள் வந்தனர்..பார்வதி பயந்து விட்டாள்.. பரந்தாமனுக்கு ஏதாவது ஆகி விட்டதோ என்று…. ஆனால் அவர்கள் கூறிய செய்தி… பார்வதியை நிலைக்கொள்ள செய்தது…“ உன் புருஷன் எங்க கிட்ட எல்லாம் கடன் வாங்கிருக்கான் மா.. இப்ப தரன் அப்ப தரேன்னு ஏமாத்திக்கிட்டே இருந்தான். ‘’‘’ இன்னைக்கு போய் பார்த்த ஆளக்கான.. வேலை செய்யுற இடத்துல அவன் வேலைய விட்டு நின்னுட்டதா சொல்றாங்க.. சொல்லுமா இப்ப எங்க பணத்துக்கு என்ன வழி… உன் புருஷன வர சொல்லு… அவன் இல்லாம நாங்க இங்க இருந்து போறதா இல்லை… ‘’‘’ பார்வதிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவள் கண்களில் கண்ணீர்.. வழிந்தது… அதை துடைத்து விட்டு ‘’ இங்க பாருங்க எனக்கு அவர் கடன் வாங்குனது தெரியாது… இப்ப அவர் அவங்க அம்மா வீட்டுல தான் இருப்பாரு.. நான் போன் போட்டு கேட்க்கிறேன்.. உங்க பணத்தை நான் கொடுக்குறேன் என்றாள்..பெரியவருக்கு அவள் முகத்தில் தெரிந்த நேர்மையில் எதுவும் பேசாமல் அனைவரையும் அழைத்துச் சென்றார்..பார்வதி பரந்தாமனிடம் கேட்ட பொழுது “ ஆமா நான் தான் வாங்குனேன்.. என ஒத்துக்கொண்டான்.. ‘’‘’ இவ்ளோ பணத்த வாங்கி என்ன செஞ்சீங்க… வீட்டுக்கு கூட நீங்க கம்மியாத்தானே பணம் கொடுத்தீங்க… ஆயிரக்கணக்கா வாங்கியிருக்கிங்க இத யாரு அடைக்குறது.. ஒழுங்கா இங்க வாங்க.. வேலை பார்த்து கொஞ்ச கொஞ்சமா பணத்தை கொடுங்க.. என மெல்லிய குரலில் அறிவுரை கூறினாள்.. ‘’‘’ கணவனோ… சீட்டு விளையாண்டேன் அதுல போய்டுச்சு.. என்னால மறுபடியும் அங்க வரமுடியாது.. நீதான் நகை செஞ்சு வச்சுருக்கில அத வித்து பணத்தை கொடு.. என போனை வைத்தான்.. ‘’‘’ பார்வதி போனையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.. கணவன் இவ்வளோ கடன் எந்த தைரியத்தில் வாங்கிருப்பான் என்பது புரிந்தது.. “‘’ அவளிடம் மூன்று பவுன் நகை இருந்தது.. அவள் வேலை செய்த காசில் வாங்கியது.. அதை மனதில் கொண்டு கணவன் செயல்பட்டிருக்கிறான் என்பது பார்வதிக்கு புரிந்தது.. ‘’
 
#18
அவளும் வேறு வழியில்லாமல் அந்த நகையை விற்று அவர்களுக்கு பணம் கொடுத்து கடன் முழுவதையும் அடைத்து விட்டாள்… மீதமுள்ள சொற்ப பணங்களை கொண்டு கையில் ஒரு வயது பிள்ளையுடன் வீட்டை காலி செய்து… அந்த பொருட்களை மூட்டையாக கற்றி கணவனின் ஊர் வந்து சேர்ந்தாள்… ‘’அன்று கார்த்திகை தீப திருநாள்.. அனைவரின் வீட்டிலும் வடை பாயசத்தோடு விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க.. இங்கு ஒரு தாயும் பிள்ளையும் பசியில் சுருண்டிருந்தனர்… பெரியவள் பசியின் பிடியில் வாடியிருக்க சின்னவளோ அழுகையின் மூலம் தன் பசியினை பெற்றவளுக்கு தெரிவித்துக் கொண்டிருந்தாள்….

*******************************************


பார்வதி தன் மாமியார் வீடு வந்து சேர்ந்தாள்… கணவன் எதுவும் பேசவில்லை.. அலட்சியமாக நடந்துக் கொண்டான்..மாமனார் மூலம் அங்கையே தனிக்குடுத்தனத்திற்கு வீடு பார்த்து மூன்று நாட்களில்லேயே வெளியேறி விட்டாள்…. பரந்தாமன்.. வருவான் போவான் விருப்ப பட்டால் காசு கொடுப்பான்..மேலநத்தத்திற்கு வந்து ஆறு மாதம் ஓடி விட்டது… அன்று கார்த்திகை திருநாள்.. அனைவரின் வீட்டிலும் வடை பாயசத்தோடு விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க.. இங்கு ஒரு தாயும் பிள்ளையும் பசியில் சுருண்டிருந்தனர்… பெரியவள் பசியின் பிடியில் வாடியிருக்க சின்னவளோ அழுகையின் மூலம் தன் பசியினை பெற்றவளுக்கு தெரிவித்துக் கொண்டிருந்தாள்….வீட்டில் அரிசி பருப்பு எதுவும் இல்லை.. சமையல் அறையே காலியாக இருந்தது..அரிசி மட்டுமாவது வாங்கி கேட்டதற்கு ஒரு சண்டை போட்டு பார்வதியை அடித்துவிட்டு வெளியேறிவிட்டான் பரந்தாமன்.. இருவயது பிள்ளை பசி தாங்காமல் அழுதது.. அதை பார்க்க பார்க்க பார்வதியின் நெஞ்சு வலித்தது… ஒருநாளுக்கு ஐந்து வேலை சாப்பிட்டு வளர்ந்த குழந்தை இப்பொழுது ஆகாரமே கிடைக்காமல் மெலிந்திருந்தது..தன் பசியை விட குழந்தையின் பசியை போக்கும் பொருட்டு… நெஞ்சு வலிக்க பக்கத்து வீட்டு படியில் நின்றாள் பார்வதி..“ மாமி மாமி… ‘’“ என்னடிம்மா இந்த நேரத்துல வந்துருக்க.. ‘’‘’ ஒன்னுல்ல மாமி நேத்து வடிச்ச சாதம் நிறைய இருந்ததால நான் இன்னைக்கு சமைக்கல… பழைய சோறுதான் இருக்கு.. அதான் குழந்தைக்கு மட்டும் கொஞ்சம் சுடு சோறு தரீங்களா… என்றாள்.. ‘’‘’ அச்சச்சோ.. இன்னும் பையன் வரலடி.. அவன் வந்து சாப்பிட்டு விரதம் முடிச்சாதான் நாங்க எல்லாம் சாப்பிட முடியும்… பழைய சோறுதான் இங்கயும் இருக்கு என்றார்.. ‘’‘’ ஒஹ்ஹ அப்படியா சரி மாமி.. எங்க வீட்ல பழையது இருக்கு… நான் வரேன்.. ‘’கண்களில் உற்பத்தியான கண்ணீர் பாதையை மறைக்க.. மெதுவாக அதை துடைத்துக் கொண்டாள்… அந்த பழையதையும் வெட்கம் விட்டு கேட்க வாய் வரவில்லை பார்வதிக்கு.. தனக்கு இப்படி பிச்சை எடுக்கும் நிலை வரும் என அவள் நினைத்துக்கூட பார்த்ததில்லை..அப்பொழுது வீட்டுக்காரம்மா பார்வதி என அவளை அழைத்தார்… அவர் கைகளில் சாப்பாட்டுக் கிண்ணங்கள்…“ இந்த.. ‘’‘’ இல்லக்கா.. வீட்டுல பழையது இருக்கு.. என்றாள் தொண்டை அடைக்க..‘’ உன்ன பத்தி எனக்கு தெரியும் முதல்ல.. இத வாங்கி பிள்ளைக்கு ஊட்டி.. நீயும் சாப்பிடு… நைட்டுக்கும் சேர்த்துதான் வச்சுருக்கேன்.. ஆம்பளைய மட்டும் நம்பி குடும்பம் நடுத்த முடியாது… அத மட்டும் நல்லா புரிஞ்சுக்க… ‘’ என கூறிச்சென்றார்…வீட்டுக்காரம்மா சொல்லி சென்ற வார்த்தைகளே அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.. ஒரு முடிவுடன் அன்றைய நாளை கத்தினாள்.. இரவு வந்த பரந்தாமன் எதுவும் பேசாமல் படுத்துக் கொண்டார்..பரந்தாமனை பார்த்து பார்வதிக்கு வெறுப்பு வந்தது… சாப்பிட்டியா இல்லையா என்ற கேள்விகூட அவர் வாயில் இருந்து வரவில்லை…‘’ மறுநாள் வீட்டுக்காரம்மாமாவை போய் பார்த்தாள் அவரிடம்.. அக்கா நான் வேலைக்கு போகலாம்னு இருக்கேன்.. உங்களுக்கு தெரிஞ்ச இடத்துல சொல்லி வைக்குறிங்களா என கேட்டாள்.. ‘’‘’ சரி அவர்ட்ட சொல்றேன் பார்வதி.. ஆனா அதுவரைக்கும் என்ன பண்ண போற… என கேட்டார்… ‘’‘’ எனக்கு கூடை பின்ன தெரியும் அக்கா.. எல்லார்க்கிட்டயும் சொல்லி வச்சேன்.. கொஞ்ச பேர் பின்றத்துக்கு சொல்லிருக்காங்க என்றாள்.. ‘’‘’ ஒஹ்ஹ ஒரு கூடைக்கு எவ்வளோ வாங்குவ.. ‘’‘’ அது ரோல்ல பொருத்தது அக்கா.. ஒரு ரோல்க்கு ஐந்து ரூபா.. பெரிய கூடைக்கு மூணு ரோல் வரும் என்றாள்.. ‘’‘’ ஒஹ்ஹ ஒரு நிமிஷம் இரு.. என வீட்டிற்குள் சென்றவர்.. சிறிது நேரத்தில் வந்தார்… இந்தா இதுல ஐம்பது ரூபா இருக்கு.. இன்னைக்கு ஒன்பது ரோல் வாங்கித்தாரேன்.. எனக்கு மூனு பெரிய கூடை பின்னித்தா.. என்றார்.. ‘’“ அவர் தனக்காக தான் கூறுகிறார்… என தெரிந்து அவரை நன்றியுடன் பார்த்துச் சென்றாள்.. ‘’‘’ இப்படியே ஒரு மாதம் சென்றது… பார்வதி பின்னிக் கொடுத்த கூடைக்கு பெரிய வரவேற்பு இருந்தது.. நிறைய பேர் கூடை பின்னக் கொடுத்தனர்… அதுமட்டுமில்லாமல் பார்வதி இப்பொழுது வேலைக்கும் செல்கிறாள்.. பட்டுக்கோட்டையில் ட்ராவல் ஏஜென்சியில் வேலைக்கு செல்கிறாள்.. மாதம் 600 ருபாய் சம்பளம்.. வீட்டில் காசு பழகியது.. ‘’‘’ தன் மகள் சுசியை தனியாக விட்டு செல்வதுதான் அவளுக்கு இருக்கும் இப்போதைய கவலை.. ‘’‘’ தாயின் மனதை புரிந்துக் கொண்டார் போல் சுசியும் சமர்த்தாக பக்கத்து வீட்டில் சமர்த்தாக இருப்பாள்.. அழுது ஆர்ப்பாட்டம் எல்லாம் பண்ண மாட்டாள்.. ‘’வீட்டின் பொருளாதார நிலை மாறியது.. காசை மிச்சம் பிடித்து வீட்டிற்கு தேவையானதை வாங்கினாள்.. சிறிது சிறிதாக நகை சேர்க்க ஆரம்பித்தாள்…சுசிக்கு மூன்று வயது ஆனவுடன் பால்வாடியில் சேர்த்து விட்டாள்.. மூன்றரை வயதிலே அரசு பள்ளியில் அவள் பிறந்த வருடத்தை மாற்றி சேர்த்து விட்டுவிட்டாள்.. காலையில் போனால் மாலையில் பக்கத்து வீட்டு பிள்ளைகளுடன் வருவாள்.. தனியாக இருக்க மாட்டாள் என்ற நிம்மதி…சனிக்கிழமை தான் கஷ்டம்.. சுசிக்குட்டி வீட்டில் சமர்த்தாகதான் இருப்பாள்.. ஆனால்அவள் விளையாட்டு ஜாமான் பார்வதியின் சமையலறை பொருட்கள்.. சமையல் விளையாட்டு என்ற பெயரில் அஞ்சறை பெட்டியில் உள்ள அனைத்தையும் கலந்து வைத்து விடுவாள்..ஒருநாள் விடுமுறையில் இவை எல்லாத்தையும் சரிபண்ணுவதுதான்..
 
#19
சீக்கிரம் கிளம்புன்னு சொன்னா கேட்குறீயா தினமும் உன்னால எனக்கும் லேட் ஆகுது.. என சலித்துக்கொண்டார்..அம்மா சும்மா சும்மா என்னையே திட்டாதீங்க.. இன்னைக்கு உங்க கடை லீவு தான.. என்று தலையை சிலுப்பினாள்.. அம்மு..தலைய திருப்பாத.. என கொட்டிவிட்டு பின்னலிடும் வேலையை தொடர்ந்தவர்.. எனக்கு என்னைக்காவது தான் லீவு கொடுக்குறாங்க அது உனக்கு பொருட்களையாடி… 11th படிக்குற இன்னும் ரெட்டை ஜடை போட தெரில்ல… இதுல வாயி மட்டும் எட்டூருக்கு போகுது.. என அழுத்துக் கொண்டார்…ஹ்ம்ம்ம் முடிஞ்சுடுச்சு கிளம்பு பஸ் வர மாறி இருக்கு… என்றார்..வேக வேகமாக தன் ஸ்கூல் பேக் மற்றும் லஞ்ச் பேக்கை எடுத்துக் கொண்டு புறப்பட்டவள்.. வேகமாக திரும்பி bye ம்மா என கன்னத்தில் முத்தம் வைத்து ஓடினாள்..தன் மகளையே பார்த்துக் கொண்டிருந்தாள் பார்வதி.. அவளை நினைக்கையிலே பாருவின் தாய்மை பெருமைக்கொள்ளும்..தன் தாயின் கஷ்டத்தை புரிந்து வளர்ந்தவள்.. இப்போது வரைக்கும் அவளாகவே இது வேண்டும் அது வேண்டும் என அழுது அடம் பிடித்ததில்லை..அப்பொழுது இங்க பரந்தாமன் யாரும்மா.. என கேட்டு வந்தவரை கண்டு பார்வதிக்குள் சலிப்பும் வெறுமையும் வந்தது…என் புருஷன் தான்.. என்றாள்அவர் என்கிட்ட 5000 கைமாத்தா வாங்கி இருந்தாரு.. இப்போ ஆளாக்காணோம்.. அதான் வீட்டுலையே பார்க்கலாம்னு வந்தேன்..


அவரு எங்கன்னு எனக்கும் தெரியாது.. உங்க போன் நம்பர் கொடுங்க அவர் வந்ததும் சொல்றேன்.. என்றாள்.இல்லங்க எனக்கு இப்ப அவசரமா பணம் தேவைப்படுது.. உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லித்தான் காசு வாங்குனாரு..பார்வதியின் பொறுமை பறக்க ஆரம்பித்தது.. என்கிட்டயா கொடுத்தீங்க நான் ஏன் உங்களுக்கு பணம் கொடுக்கணும்.. அவர் எப்போ வராரோ அப்ப சொல்றேன்.. இப்ப கிளம்புங்க.. என்றாள் காட்டமாக…காலங்கள் மாறினாலும் பரந்தாமனின் குணம் மாறவில்லை.. அம்முவிற்கு ஆறுவயது ஆகும்போது மறுபடியும் சூதாட்டத்தில் இறங்கினார்..பார்வதி தடுக்க.. தினமும் வீடு போர்க்களமாகியது… ஒரு கட்டத்திற்கு மேல் பொருக்க முடியாமல்.. சோழவந்தானிற்கு சென்று விட்டாள்.. ஒரு வருடம் அங்கேயே இருந்தாள்.. இரு வீட்டினர் பெரும் முயற்சி செய்து மறுபடியும் கீழக்குறிச்சிக்கு அனுப்பி வைத்தனர்.. அதுவும் நாராயணன் என்னால உனக்கு சோறு போட முடியாது எனவும் தான் ரோஷப்பட்டு கிளம்பினாள்…வேலைக்கு செல்ல வில்லை.. துணி தைக்க பழகினாள்.. வீட்டில் தையல் மிஷின் வாங்கிப்போட்டு அக்கம் பக்கத்தினர்க்கு துணி தைத்து கொடுத்தாள்..பரந்தாமனும் அமைதியானார்.. சம்பள பணத்தை முழுவதுமாக இல்லாவிட்டாலும் பாதியாவது கொடுத்தார்.. சமையல் வேலைக்கு சென்றார்..அடுத்த சில வருடங்களில் நாராயணன் இயற்கை எய்தினார்… பிறந்த வீட்டை விட்டு சென்ற பார்வதி.. அடுத்து அங்கு செல்ல வில்லை.. நாராயணனும் பாக்கியமும் எவ்வளோ வற்புறுத்தியும் அங்கு சென்று ஒரு வேலை உணவு உண்ணவில்லை..


சரஸ்வதியின் மகள் ராணிக்கு நிச்ச்சயதார்த்தம் வைத்திருந்தனர்.. அதற்க்கு அனைவரும் சென்றிருந்தனர்.. மறுநாள் நிச்சயம் என்ற நிலையில் வீட்டின் கூடத்தில் நடுவில் நாராயணன் படுத்திருக்க.. சுற்றிலும் பாக்கியம், சரஸ்வதி, கங்கா, யமுனா, பார்வதி அவர்களின் பிள்ளைகள் என அந்த இடமே நிறைந்திருந்தது.. அவர்கள் அனைவரிடமும் மிகவும் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்தார்.. அதுவும் பார்வதி அவருடன் பேசியதும்.. நிச்சயம் முடிந்து சோழவந்தான் வருவதாக கூறியது.. பெரும் நிம்மதியை தந்தது…“ எனக்கு தூக்கம் வருது.. நான் கொஞ்ச நேரம் தூங்குறேன்.. என கண்ணை மூடியவர்.. திறக்கவே இல்லை.. மீளாத்துயிலுக்கு சென்று விட்டார்… ‘’அவர் இறந்த வருடமே அம்மு பெரிய மனுஷி ஆகிவிட்டாள்.. நாளொரு சண்டை சமாதானமாக அவரகள் வாழ்க்கை சென்றது… பரந்தாமனுக்கு லாட்டரி சீட்டு ஆசை கண்ணை மறைக்கும் வரை…


**********************************************

ஒரு லட்சத்திற்கும் மேல் கடன் வாங்கி லாட்டரி சீட்டு, சீட்டாட்டம் என செலவு செய்தார்.. வட்டிக் கட்ட முடியாமல் ஒருநாள் யாருக்கும் தெரியாமல் தலைமறைவாகி விட்டார்…கடன் கொடுத்தவர்கள் பார்வதியை தொந்தரவு செய்ய.. அவள் அனைவரிடமும் ‘’ யார்க்கிட்ட கடன் கொடுத்தீங்களோ அவங்க கிட்டயே கேளுங்க.. என்றாள் தைரியமாய்.. ‘’குடும்ப செலவிற்கு மறுபடியும் வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள்.. இப்பொழுது பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு பெரிய ஜவுளிக்கடைக்கு வேலைக்கு சென்றாள்.. மாதம் ஐயாயிரம் ரூபாய் சம்பளம்…. அதில்தான் அணைத்து செலவுகளையும் பார்க்க வேண்டும்.. தையலும் தைத்து அதிலும் வருமானம் ஈட்டினாள்…அம்முவும் வீட்டின் நிலையை உணர்ந்து.. அதிகம் தொல்லை செய்ய மாட்டாள்.. தன் நண்பர்களிடம் துணி தைக்க வாங்கி வருவாள்.. அதை இரவு முழுக்க முழித்திருந்து பார்வதி தைத்து தருவார்..இவ்வாறு இவர்கள் நிலை சென்றுக் கொண்டிருந்த பொழுது.. ஆறுமாதம் கழித்து பரந்தாமன் போன் செய்து திருப்பூர் வந்துருப்பதாக தன் மகளிடம் கூறியவர்.. இன்னும் இருநாளில் வருவதாகவும்.. யாருக்கும் சொல்ல வேண்டாம் என கூறி போனை வைத்தார்…பார்வதி வந்தவுடன் ‘’ அம்மா அப்பா போன் பண்ணிருந்தாங்க.. இன்னும் ரெண்டு நாள்ல வரான்ங்களாம்.. யார்க்கிட்டயும் சொல்ல வேண்டாம்னு சொன்னாங்க.. ‘’ நம்ப கடன் கொடுத்தவர்களுக்கு போன் பண்ணி சொல்லிறலாம்.. என்றாள்..பார்வதி இமைக்காமல் தன் மகளை பார்த்தாள்.. மகளோ ‘’ இவர் கடன் வாங்கிட்டு எங்கயாவது போய்டுவாரு.. அப்புறம் நம்பள தான் எல்லாரும் தொந்தரவு பன்றாங்க.. அதுனால போன் பண்ணி சொல்லிருங்க… என கூறிச்சென்றாள்..சொன்னது போல் பரந்தாமன்… நடுச்சாமத்தில் வந்தார்.. பார்வதி அப்பொழுது எதுவும் பேசவில்லை.. ஆனால் விடிய காலையிலே கடன் கொடுத்தவர்களுக்கெல்லாம் போன் பண்ணிவிட்டாள்…அவர்களும் எட்டு மணி போல் வந்துவிட்டனர்..தூங்கிக்கொண்டிருந்த பரந்தாமனை எழுப்பினாள்.. அம்மு..அப்பா.. அப்பா.. எந்திரிங்க உங்கள பார்க்க யாரோ வந்துருக்காங்க என்றாள் எதுவும் தெரியாதது போல்..பரந்தாமன்.. யாரா இருக்கும்.. ஒருவேளை நான் வரத யாராவது பார்த்துட்டாய்ங்களா.. நல்லா இருட்டுனதுக்கப்புறம் தான வந்தோம் என யோசித்துக் கொண்டே வெளியில் வந்தவர்.. அவர்களை பார்த்ததும் பேய் முழி முழித்தார்..‘’ வா.. பரந்தாமா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் வா போலாம்.. என்றார் ஒரு முரட்டு ஆசாமி.. ‘’‘’ மகள் மனைவி முன் எதுவும் கூற முடியாமல் சட்டையை போட்டுக் கொண்டு சென்றார்.. ‘’பார்வதி ‘’ நான் சொன்ன வார்த்தையை நம்பி எங்கள தொந்தரவு பண்ணாம இருந்திங்க.. அதேமாதிரி நீங்க சொன்னதுக்காக அவர் வந்ததும் உங்ககிட்ட சொல்லிட்டேன்.. இவர எப்படி கூப்பிட்டு போறிங்களோ.. அப்படியே திருப்பி அனுப்பிரனும்.. என்ற எச்சரிக்கை செய்து அனுப்பினாள்… ‘’‘’ பரவாக்கோட்டைக்கு பரந்தாமனை அழைத்துச்சென்றனர்.. இங்க பாரு பரந்தாமா நீ எனக்கு அசல் வட்டியெல்லாம் சேர்த்து எழுபதாயிரம் தரணும்.. அதேமாதிரி இங்க உள்ள நிறைய பேர்க்கிட்ட நீ கடன் வாங்கியிருக்க… மொத்தம் அசல் வாட்டியெல்லாம் சேர்த்து மூன்றரை லட்சம் வருது.. இதையெல்லாம் எப்படி அடைக்க போற.. நீ கொஞ்ச கொஞ்சமா பணம் கொடு.. இனி வட்டி போட மாட்டேன் இதுவரைக்கும் உள்ள கணக்க பைசல் பண்ணு… இத உன் பொண்டாட்டி நேர்மைக்காக சொல்றேன்.. யோசி..பரந்தாமன் கொஞ்ச கொஞ்சமாக அடைப்பதாக சொன்னவுடன்.. திருப்பூரில் அவர் வேலை பார்க்கும் இடத்தை கேட்டறிந்து.. ‘’ பாருடா நீ வேலை பார்க்குறது என் பங்காளியோட ஹோட்டல் தான் இரு அவன் கிட்ட பேசுறேன்.. என அவன் கண் முன்னாடியே பேசினார்… ‘’இப்ப நீ இருக்கிற இடம்.. வேலைப்பார்க்குற இடம் எல்லாம் எங்களுக்கு தெரியும்.. மறுபடியும் எங்கயும் தப்பிக்க முடியாது.. என மிரட்டி அனுப்பினார்..பரந்தாமன் அவர் மிரட்டியதில் மிகவும் பயந்து விட்டார்.. அதனால் வீட்டிற்கு வந்த பிறகும் எதுவும் பேச வில்லை.. பார்வதி அவரை ஒருமுறை மேலிருந்து கீழ் வரை பார்த்தவள்.. பிறகு எதையும் கண்டுக்கொள்ளவில்லை.. மறுநாளே திருப்பூர் கிளம்பிவிட்டார்..மாதம் மாதம் பணம் அனுப்பி கடன் கொடுத்தவர்களிடம் கொடுக்க சொன்னார்.. பேச்சு எல்லாம் மகளிடம் தான் பார்வதியிடம் பேசுவதில்லை…பார்வதி அவர் அனுப்பிய பணத்தில் சில்லறை கடன்களை முதலில் ஓய்த்தார்.. பெரிய கடனை கொஞ்ச கொஞ்சமாக கொடுத்து கொண்டிருந்தார்…அம்முவிற்கு பன்னிரெண்டாம் தேர்வு முடிவடைந்தது.. பார்வதி சோழவந்தானிருக்கே போய் விடலாம் என முடிவெடுத்திருந்தாள்.. அம்முவின் ரிசல்ட்டும் வந்தது.. 965 மதிப்பெண் எடுத்திருந்தாள்.. பார்வதிக்கு சற்று சுணக்கம் ஆயிரத்துக்கு மேல் இல்லையென்று.. அதனால் முறைப்பை காட்டினார்..அம்மு தன் அம்மாவை கொஞ்சி முத்தம் கொடுத்து ஓரளவிற்கு சமாதானம் படுத்தினாள்…பார்வதி அம்முவிற்கு மதுரையில் உள்ள ஒரு கல்லூரிக்கு அப்பிளிகேஷன் போட்டு விட்டாள்..அவளுக்கு அங்கு சீட்டு கிடைத்தவுடன்தான் பரந்தாமனிடம் விஷயத்தை கூறினாள்.. அதற்க்கு ஒரு சண்டை நடந்து..என் அம்மா இருக்கிற வரை நான் வரமாட்டேன்.. நீ வேணா போய்க்க என்றார்..
 
#20
பார்வதி அசர வில்லை.. ஒரு முறை சோழவந்தான் சென்று அங்கு தங்க வீட்டை பார்த்து அட்வான்ஸ் கொடுத்து விட்டு வந்தாள்…ஒரு லாரி பிடித்து பொருட்களையெல்லாம் ஏற்றிக் கொண்டு பரந்தாமன் பார்வதி அம்மு மூவரும் சோழவந்தானுக்கு புறப்பட்டனர்..பார்வதி தன் நாலு பவுன் நகையை வித்து கீழக்குறிச்சியில் ஒரு இடத்தை வாங்கினாள்.. ஆனால் பத்தரம் பண்ண காசு இல்லாமல் அப்படியே கிடந்தது… அதை மறுபடியும் வாங்கிவரிடமே கொடுத்து விட்டாள்.. அவர் மேற்கொண்டு அம்பதாயிரம் போட்டு ஒன்ரறை லட்சமாக கொடுத்தார்..இது மட்டுமே பார்வதி கையில் உள்ள காசு… இதை நம்பியே சோழவந்தான் வந்தனர்..பரந்தாமன்.. அவர்களை ஊரில் விட்டு பொருட்கள் அனைத்தையும் சரி பண்ணி வைத்து விட்டு அடுத்த இருநாளில் கிழக்குறிச்சி சென்று விட்டார்..அம்முவையும் மதுரை கல்லூரியில்.. ஹாஸ்டலில் சேர்த்து விட்டாள்…. இப்பொழுது அவள் கையில் அம்மு காலேஜ் பீஸ்.. அவளின் இதர பொருட்க்கான செலவுகள் போக… வெறும் எழுபதாயிரம் மட்டும்மே இருந்தது…பார்வதிக்கு ஒரு யோசனை சரி வருமா இல்லையா என்று தெரியவில்லை… எதற்கும் ஒரு முயற்சியாக தெருவில் ஜவுளி விற்க ஆரம்பித்தார்.. மதுரையில் மொத்த விற்பனை கடைகளை கண்டு பிடித்து ஐம்பதாயிரத்துக்கு ஜவுளி எடுத்து வந்து.. சைக்கிளில் வைத்து தெருவில் தெரிந்தவர்கள்.. அக்கம் பக்கத்தினர்.. அனைவருக்கும் காண்பித்தார்..அவர் முயற்சி சொல்ல இயலா அளவிற்கு பலன் தந்தது.. ஒரே மாதத்தில் அவர் ஜவுளி அனைத்தும் வித்து விட்டது… அவர் பாதி பணமும் கைக்கு வந்து விட்டது..பார்வதிக்கு உற்சாகமும்.. உழைப்பிற்கான பலனும் கிடைத்தது..ஓடை போல் ஒரே இடத்தில் தேங்கியிருக்க பார்வதி விரும்பவில்லை.. அதனால் ஜவுளியை மட்டுமே அவர் நம்பவில்லை.. தீபாவளி சீட்டு பிடித்தார்.. மாத வட்டி கொடுத்தார்.. அதோடு துணியும் தைத்துக் கொடுத்தார்..இதன் மூலம் நல்லவர்களையும் கண்டார்.. ஏமாற்றுபவரையும் கண்டார்.. அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டார்… யாரிடம் பணிய வேண்டும்.. யாரிடம் பாய வேண்டும் என அனைத்தையும் அனுபவம் கற்றுக்கொடுத்தது…
அம்முவின் படிப்பு செலவு மொத்தத்தையும் பார்த்து.. வீட்டு செலவுகள்.. பார்த்து என அனைத்தையும் தனிப்பெண்ணாய் சாதித்தார்…***************************************************அம்மு ‘’ எனக்கு என்ன வயசாகுதுன்னு.. எனக்கு கல்யாணம் பண்ண பார்க்குறீங்க… ‘’ என்றாள் கோபத்துடன்..பார்வதி ‘’ நல்ல இடம் அம்மு.. நாம நினைச்சாலும் இந்த இடம் அமையாது.. என் செல்லம்ல ஓத்துக்கோடா.. என நாடி பிடித்து கொஞ்சினார்… ‘’‘’ ம்மா.. பெரிய இடம்னு சொல்றிங்க எதாவது பிரச்சனையா இருக்க போகுது.. என குழப்பிவிட பார்த்தாள்.. ‘’அம்மாவோ ‘’ அதெல்லாம் பார்க்காம இருப்பேனா உன்னவிட வயசு ஜாஸ்தி அவ்வளோ தான் மத்தபடி பையன் குணம் தங்கம்.. ‘’ எல்லாரும் நல்ல விதமாதான் சொல்றாங்க.. இதெல்லாம் விசாரிக்காமையா உன்கிட்ட சொல்லுவேன்.. ‘’இங்க பாரு அம்மு நான் பட்ட கஷ்டம் நீ படக்கூடாது.. நீ இந்த கல்யாணத்துக்கு ஓத்துக்கோடா.. என்றாள்.ஹ்ம்ம்ம் என பெருமூச்சு விட்டு.. உங்க விருப்பம்ம்மா என தாயின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்…அடுத்தடுத்து வேலைகள் விரைவாய் நடந்தன.. பெண் பார்க்கும் படலம்..மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் ‘’ பொண்ண வர சொல்லுங்க..பார்வதி ‘’ முதல்ல பேச வேண்டியதை பேசிக்குவோம்.. நீங்க உங்க எதிர்பார்ப்பை சொல்லுங்க.. என்றாள்மாப்பிள்ளையின் அப்பா ‘’ பொண்ணுக்கு அத போடுங்க இத போடுங்கனு சொல்ல மாட்டோம்.. உங்களுக்கு முடிஞ்சத செய்ங்க.. தனிக்குடுத்தனம் வைக்கமாட்டோம்.. என்றார் உறுதியாய்..பார்வதி நீ என்னமா சொல்ற என்றார் பொதுவானவர்..‘’ நான் என் பொண்ணுக்கு என்பது பவுன் நகை போடுறேன்.. மாப்பிள்ளைக்கு அஞ்சு பவுன்.. கட்டில் பீரோ மெத்தை.. பிரிட்ஜ் வாஷிங் மிஷின் மாப்பிள்ளைக்கு பைக்கு வாங்கித்தரேன்… கல்யாண செலவுக்கு மூனு லட்சம் தரேன்.. அப்புறம் நான் இங்க இடம் வாங்கி போட்ருக்கேன்.. எனக்கு பிறகு அது என் மகளுக்கு தான்.. கல்யாணத்துக்கு அப்புறம் மேற்கொண்டு செய்யுறேன்.. என அவள் சொல்ல சொல்ல சுற்றியுள்ள உறவுகளுக்கு ஆச்சரியம் ப்ளஸ் அதிர்ச்சி..பரந்தாமன் முகத்தில் ஈயாடவில்லை.. ஏற்கனவே சொந்த மகளின் நிச்சயதிற்கு மூன்றாம் நபர் போல் தகவல் கூறியதில் மனதிற்குள் குமுறி இருந்தவர்.. மனைவியின் பேச்சைக் கேட்டு தலை சுற்றி போனார்… இந்த நேரத்தில் அவர் மனசாட்சி நீ என்ன உன் மகளுக்கு வைத்திருக்கிறாய் என கேட்டு காரித் துப்பியது…. ‘’
மாப்பிளை வீட்டுக்காரர்களுக்கு திருப்தி.. அடுத்து அம்முவை வர சொல்லி சபையில் மாப்பிள்ளையின் அம்மா பூ வைத்து.. ஆரம் ஒன்றை கழுத்தில் போட்டு நிச்சயத்தை உறுதி செய்தார்…. இன்னும் ஒருமாதத்தில் திருமணம்.. திருமண முதல்நாள் இரவு நிச்சயதார்த்தம் என முடிவெடுத்தனர்..Nkr and Nsk திருமண மஹால் ஜொலித்துக் கொண்டிருந்தது.. அங்கு மிங்கு ஓடி வேலை பார்த்துக் கொண்டிருந்த பார்வதி.. மேடையில் புன்னகையுடன் தேவதை போல் திருமணக்கோலத்தில் இருந்த தன் மகளை பார்த்து பூரித்து போனாள்.. பெற்ற வயிறு குளிர்ந்து பரவசம் அடைந்தது.. தான் பட்ட கஷ்டமெல்லாம் மறைந்தது போல் எண்ணினாள்… ‘’