காதல் மெய்ப்பட - (It's all about Love) (கதை திரி)

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,


நாகராஜ் அவர்கள் காதல் மெய்ப்பட என்கிற தலைப்போடு போட்டியில் இணைகிறார்கள்.....
 
#2
காதல் மெய்ப்பட 01எல்லையில்லா கானகத்தின் நடுவே அமைத்திருந்த பரந்து விரிந்த சமவெளியில் ஆர்ப்பாட்டமின்றி அமைதியாய் ஓடும் அழகிய நதியின் அருகில் பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் அழகிய மலர் செடிகளின் நடுவே சுற்றியுள்ள மலர்கள் யாவும் பொறாமை கொள்ளும் அளவு பேரழகியாய் வீற்றிருந்தாள் மைத்ரா.

அவளது தோழிகள் அனைவரும் நதியில் இறங்கி விளையாட மைத்ரா மட்டும் தன்னை சுற்றியுள்ள மலர்களில் தேனருந்தும் வண்ணத்து பூச்சிகள் தங்களது இணையுடன் தங்களது வண்ண சிறகை அடித்து கொஞ்சி விளையாடும் அழகை ரசித்து கொண்டிருந்தாள்.

வண்ணத்து பூச்சிகளின் அழகை ரசித்து கொண்டிருக்கும் பெண்ணவளின் அழகை ரசித்தவாறு அவள் இருக்கும் திசை நோக்கி வந்தான் ஆடவனொருவன், பெண்ணவளின் இடைவரை தொங்கும் கருங்கூந்தல் காற்றிலாடி அவளின் முகத்தின் முன் விழ அதை தனது பொன்னிற விரல்களால் காதோரம் ஒதிக்கியவளின் விழிகள் மெதுவாக மூடி திறக்க அதில் தன்னை தொலைத்தவன், அவளது அழகிய இதழ்கள் சிந்திய ஒரு சிரிப்பில் மொத்தமாக கரைந்து போனான்.

தனது வலது புறம் கேட்ட காலடி சத்தத்தில் திரும்பி பார்த்த மைத்ரா தனக்கு நேராக ஆறடிக்கும் அதிகமான உயரத்தில் செவ்வண்ண நிறத்தில் நிறத்தில் தலையில் சிறிய இரு கொம்புகளுடன் முதுகில் நீண்ட சிறகுகளுடன் பின் புறம் நீளமான வாலுடனும் நடந்து வரும் மாயதீரனை பார்த்து மெதுவாக எழுந்து நின்ற மைத்ரா தனது முதுகில் மறைத்து வைத்திருந்த அண்ண பறவை போன்ற நீளமான போன்ற இறகுகளை விரித்தாள்.

தன் எதிரே சிறகுகளை விரித்து நிற்க்கும் மைத்ராவின் மைவிழிகளில் சாய்ந்த தன் மனதை மீட்க போராடிய மாயாதீரன் என்றும் போல் இன்றும் அவளை சீண்டி பார்க்க விரும்பினான். மைத்ராவை நோக்கி நடத்து வரும் மாயதீரனை பார்த்து நதியில் விளையாடிய மைத்ராவின் தோழிகள் வழக்கம் போல் இன்றும் இவர்களின் சண்டையை வேடிக்கை பார்க்கும் ஆவலில் மைத்ராவின் அருகில் வந்து நின்றனர்.

மாயதீரனை முறைத்து பார்த்து கொண்டே மைத்ரா அவனிடம் "மாயதீரரே வழி தவறி வந்துவிட்டிர்கள் போலும் இது தேவர்களின் ராஜ்ஜியம் தங்களது அரக்கலோகம் வெகு தூரத்தில் உள்ளது". மைத்ராவின் பேச்சை கேட்டு அவளை பார்த்து நக்கலாக சிரித்த மாயதீரன் "வழி தவறி வரவில்லை காதலின் தேவதையே பூலோகத்தில் இந்த கலியுகத்தில் அன்பு பாசம் யாவும் வற்றி போனதால் மானிடர்கள் செய்யும் தவறுகளுக்கு அவர்களின் கர்மாவை அள்ளி அளித்து எங்களது அசுரலோகம் செழிப்பாக உள்ளது, ஆனால் மனிதர்கள் செய்யும் தவறுகளால் உங்களது தேவலோகத்தில் வாழும் தேவதைகளின் சக்தி குறைகிறது என்று கேள்வி பட்டேன், அதுவும் காதலின் மெய் அழிந்து காதல் நாடகங்களே பூமியில் அதிகம் நிகழ்வதாய் கேள்விப்பட்டேன், அதனால் காதலின் தேவதையாகிய உமக்கு சக்திகளும் குறைகின்றது என்று கூறினார்கள் அதை தான் பார்த்து போகலாம் என்று வந்தேன், ஆனால் ஒரு துளி கூட குறையவில்லையே உந்தன் அழகு".

மாயாதீரன் கூறியதை கேட்டு சினம் கொண்ட மைத்ரா " யார் கூறியது உனக்கு பூமியில் காதல் அழிகிறது என்று அனைத்து வகையான உயிர்களிடத்திலும் உள்ள ஒரு உணர்வு காதல், பூமியில் உயிர்கள் படைக்கபடும் போதே காதலும் படைக்கபட்டுவிட்டது அன்றிலிருந்து இன்று வரை அது வளர்கிறதே தவிர ஒரு நாளும் குறையாது கண்டிப்பாக என்றுமே காதல் அழியாது தேவை இன்றி எதையும் பிதற்றாதே", என்று கூறிவிட்டு மாயதீரனை பார்க்க அவனோ அவள் கூறியதை காதில் வாங்காமல் அருகில் இருக்கும் மலர்களை பறித்து அதன் இதழ்களை பிய்த்து போட்டு கொண்டிருந்தான்.

மாயதீரன் செயலில் கோபம் தலைக்கேறிய மைத்ரா தனது விரலை அவன் புறம் நீட்டி மந்திரத்தை உச்சரிக்க சிறிய அளவில் பந்து போன்ற நெருப்பு பந்துகள் உருவாக்கி அவன் மீது தாக்கினாள், அவளது பேச்சு சத்தம் நின்ற உடன் திரும்பி பார்த்த மாயதீரன் நெருப்பு பந்துகளை பார்த்து விட்டு பந்துகளிடன் இருந்து தப்பிக்க ஓடியவன் "அடி பாவி உங்களை தேவதை என்று வந்தால் நீங்கள் எங்கள் அரக்கிகளை விட கொடூரமாக இருக்கிறீர்கலேயடி இந்த பந்தை நிறுத்துங்கலடி"என்று கூறி கொண்டே அங்கும் இங்கும் தலைதெறிக்க ஓடுபவனை பார்த்து மைத்ரா மற்றும் அவளின் தோழிகள் அனைவரும் சிரித்தனர்.

மைத்ரா உருவாக்கிய மந்திர பந்துகள் அவன் எங்கு சென்றாலும் அவனை பின் தொடர்ந்து சென்றன அதில் ஒரு பந்து அவனது வாலில்பட அவனது வால் பற்றி எரிய ஆரம்பித்தது, தனது வால் எரிவதை பார்த்த மாயதீரன் "அய்யோ என் அழகிய வால் பற்றி எரிகிறதே இதை பார்த்து தானே பல அரக்கிகள் என் மீது காதல் கொண்டனர், இப்போது நான் என்ன செய்வேன்" என்று கூறிவிட்டு வேகமாக அருகில் ஓடும் நதியில் குதித்தான் அவனை துரத்திய நெருப்பு பந்துகள் அனைத்தும் நீரில்பட்டு மறைய மெதுவாக தண்ணீரில் இருந்து வெளியே வந்தவன் தனது வாலை முன்னாள் கொண்டுவந்து கைகளில் ஏந்தி "நல்ல வேலை எனது ஆசை வால் தப்பித்து விட்டது அருகில் இந்த நதி இல்லை என்றால் என் வாலின் கதி அய்யகோ நினைத்து பார்க்கவே முடியவில்லை என் ஆசை வால் தப்பித்தது" என்று அதை மென்மையாக தடவிவிட்டு விட்டு மைத்ராவிடம் சென்று "பாவி நீ எல்லாம் தேவதையா இதற்கு எங்கள் அரக்க குல பெண்கள் எவ்வளவோ பரவாயில்லை போலும் இனிமேல் உன் திசை பக்கமும் வர மாட்டேன் உண்மையை கூறினால் கோபம் கொள்கிறாய்" என்று கூறிவிட்டு திரும்பி நடந்தான்

மைத்ராவோ " என்ன உண்மையை கூறினாயா நீ கூறியதில் எங்கு உள்ளது, நீதானே கூறினாய் எனது சக்தி குறைந்து விட்டது என்று பார்த்தாய் அல்லவா எனது சக்தியை அரக்கலோகத்தில் முக்கிய பதவியில் இருக்கும் உன்னையே ஓட வைத்து விட்டேன் அல்லவா இப்பொழுதும் எனது சக்தி குறைந்து விட்டது என்கிறாயா" என்று கூற கோபம் கொண்ட மாயதீரன் "நான் எதிர் பார்க்கா நேரத்தில் என்னை தாக்கிவிட்டு பெரிய வீராங்கனை போன்று பேசாதே வேண்டும் என்றால் நமக்குள் ஒரு போட்டி வைத்து கொள்வோம் நாம் இருவரும் பூலோகம் செல்வோம் அங்கு ஒரு பிரிந்த காதலர்களை தேர்ந்தெடுப்போம் அவர்களின் காதல் எந்த அளவு உண்மையானது என்று சோதிப்போம், நீ உன்னுடைய சக்தியால் அவர்களுக்கு உதவு ஆனால் அது அசாதாரண செயலாக இருக்க கூடாது சாதாரணமானதாக இருக்க வேண்டும் அதே போன்று நானும் அவர்களை பிரிக்க பார்க்கிறேன், காதலுக்கு இந்த யுகத்திலும் சக்தி இருந்தால் பிரிந்த அவர்களை அவர்கள் காதலே சேர்க்கும் அவ்வாறு அவர்கள் காதல் சேராமல் இருந்தால் நீ என்னிடம் தோற்றுவிட்டதாக ஒற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூற மைத்ராவும் "உன்னுடைய சவாலை நான் ஏற்று கொள்ள தயார் இப்பொழுது வேண்டும் என்றாலும் பூலோகம் செல்ல நான் தயார்" என்று கூறினாள்.

மைத்ரா கூறியதை கேட்ட மாயதீரன் தனது இறகுகளை விரித்து பறக்க தயாரானான், உடனே மைத்ராவும் தனது சிறகை விரிக்க இருவரும் தேவலோகத்தில் இருந்து பூலோகம் நோக்கி பறக்க ஆரம்பித்தனர், பூலோகம் நோக்கி சென்ற இருவரும் தனது மந்திர சக்தி மூலமாக இந்த நொடி பிரிய போகும் ஒரு காதல் ஜோடி இருக்கும் இடம் நோக்கி சென்றனர். அவர்கள் சென்னையின் மெரினா பீச்சில் கடலை ரசித்தவாறு அமர்ந்திருந்த ஒரு அழகிய மங்கையின் முன் தரை இறங்கினர்.

இளம் மஞ்சள்நிற சுடிதாரில் தனது கூந்தல் கடல்கரையின் காற்றிற்கு ஏற்ப பறக்க, அனைவரையும் கட்டி இழுக்கும் கட்டி இழுக்கும் மைவிழிகள் கோபத்தில் கடலையே எரித்து விடுவதை போன்று பார்க்க, எப்படி பட்ட ஆடவனையும் பித்து கொள்ள செய்யும் அழகிய முகம் கோபத்தில் சிவந்திருக்க தனது இடது கையில் கட்டி இருந்த மணிக்கட்டை திருப்பி நொடிக்கொரு முறை மணியை பார்த்து கொண்டிருந்தாள் மகிழ்நிலா.

மகிழ்நிலாவை கண்ட மாயதீரன் "என்ன ஒரு பேரழகு இவளை படைத்த பிரம்மதேவனுக்கு லட்சம் கோவில் கட்ட வேண்டும் இப்படி பட்ட ஒரு அழகி தேவலோகத்தில் கூட பிறந்தது இல்லை அப்சரஸ் அனைவரும் பொறாமை கொள்ளும் பேரழகியை பூலோகத்தில் முதல் முறை காண்கிறேன், வாழ்வில் முதல் முறை வருந்துகிறேன் அரக்கர்கள் மானிடர்களுடன் பேச கூடாது அவர்கள் கண்களுக்கு தெரியுமாறு நம்மை வெளிப்படுத்த கூடாது என்ற சட்டத்தை எண்ணி, பேசாமல் நானும் மானிடனாக பிறந்திருக்கலாம் போல இவளின் கரம் பற்ற போகும் பாக்கியசாலி எவனோ" என்று தன் போக்கில் புலம்புவனை கண்டு கோபம் கொண்ட மைத்ரா வழக்கம் போல் தனது நெருப்பு பந்துகளை அவனுக்கு பரிசளிக்க அதை கண்ட மாயதீரன் "அடிப்பாவி பூலோகத்தில் தான் ஒரு பெண்ணின் அழகாய் வர்ணித்தால் மற்றொரு பெண் பொறாமை படுவாள் என்று கேள்விபட்டேன் தேவதைகள் கூடவா பொறாமை கொள்வீர்கள்" என்று கூறி கொண்டே இந்த முறை முன்னெச்சரிக்கையாக தனது வாலை நெருப்பு பந்தில் சிக்காமல் கையில் பிடித்து கொண்டே அலறி அடித்து அருகில் இருந்த கடலில் தஞ்சம் அடைத்தான்.

இவருக்கு இருவரின் உருவத்தையும் பார்க்க முடியாததால் இவர்களின் இந்த சண்டைகளை அறியாமல் தன்னவன் மீது கொண்ட கோபத்தில் ஆர்ப்பரிக்கும் கடலையே எரித்து விடும் அளவு முறைத்து பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள் மகிழ்நிலா, தன்னவளின் பொறுமையை வழக்கம் போல சோதித்து அவளின் அர்ச்சனைகளை வாங்க தன்னை தயார்படுத்தி கொண்டு வந்தான் இனியன்.

ஆறடி உயரத்தில் காற்றிலாடும் தனது கேசத்தை தனது இரு சக்கர வாகனத்தின் கண்ணாடியை பார்த்து சரி செய்து கொண்டு கண்ணாடியில் தன்னை பார்த்து " டேய் இனியா உனக்கு இது தேவையடா சொல்லு குடிக்காத குடிக்காதன்னு சொன்ன கேக்க மாட்டேங்குற இப்ப அவளை எப்படி சமாளிக்க போற சொல்லுடா, இன்னைக்கு உனக்கு சங்கு கன்போர்ம் உடம்ப இரும்பாக்கிகோடா என்ன நடந்தாலும் கோவ படக்கூடாது வெக்கம், மானம், சூடு, சொரணை எல்லாம் இங்கவே பொதச்சுரு" என்று கூறிவிட்டு கண்ணாடியில் மெதுவாக தன்னை ஒரு குத்து குத்திவிட்டு வண்டியில் இருந்து இறங்கி அவளை நோக்கி வேகமாக ஓட ஆரம்பித்தான்.
 
#3
காதல் மெய்ப்பட 02மகிழ்நிலாவின் பால் வண்ண முகம் கோபத்தில் அக்கினி சுடரென சிவந்திருக்க தன்னவளின் முகத்தில் தெரிந்த கண்டு அஞ்சிய இனியன் தவறு செய்த குழந்தை தன் அன்னையை கண்டு சிரிப்பது போல் சிரித்து சமாளித்து மகிழ்நிலாவை இடித்து கொண்டே அருகில் அமர்ந்த இனியன் "மகி குட்டி என்னடா செல்லம் இன்னைக்கு என்னோட ஜிலேபி வழக்கத்தை விட ரொம்ப அழகா இருக்கீங்க, அதுவும் இந்த சுடி உனக்கு ரொம்ப அழகா இருக்கு பேபி" என்று சிரித்து சமாளிப்பவனை முறைத்து கொண்டே அமர்ந்திருந்தாள் மகிழ்நிலா.

தன்னவளின் முகம் மேலும் சிவந்து அவள் விழிகள் தன்னை எரித்து விடும் அளவு உஷ்ணத்தை கக்க இனியனோ மனதினுள் "டேய் இனியா அவளுக்கு போக போக முகம் கொடூரமாய்க்கிட்டே போகுது எப்படியாவது சமாளிடா" என்று நினைத்து கொண்டு அவளின் கரத்தோடு தன் கரத்தை கோர்க்க போக அதை உதறி விட்டு எழுந்தவள் இனியனை பார்த்து "உனக்கெல்லாம் அறிவுன்னு ஒன்னு இருக்க இல்லையாடா" என்று கத்த இனியனோ மெதுவாக "அது இருந்தா ஏன்டி உன் பின்னாடி சுத்திகிட்டு இருக்கேன்" என்று முனங்க அவன் கூறியது சரியாக காதில் கேட்காததால் மகிழ்நிலா "என்ன என்னடா சொன்ன எதையும் சத்தமா சொல்லுறது இல்லை எல்லாத்தையும் வாய்க்குள்ளேயே முனங்கிகிட்டு, உங்கிட்ட எத்தனை தடவை சொன்னேன் குடிக்காத குடிக்காதன்னு ஞாயித்து கிழமைன்னா குடிச்சேதா ஆகணுமா, உன்னால என்னோட அப்பா கிட்ட என்னோட மானமே போச்சுடா, என்னோட அப்பா மூஞ்ச பாக்கவே எனக்கு அசிங்கமா இருக்குடா" என்று கூறி மெதுவாக தனது கண்ணை கசக்கினாள்.

தன்னவளின் கண்ணீர் கண்ட இனியன் "பேபி அழாதடி நீ அழுதா எல்லாம் சரியா போயிருமா சொல்லு இதெல்லாம் உன்னோட தப்பு இல்லை பேபி எல்லாம் நமக்கு மேல இருக்க கடவுள் பண்ண தப்பு, பாரு பெத்த பொண்ணு உனக்கே இத்தன வருஷம் பாத்து பழகுனா உங்க அப்பா முகத்தை பாக்க முடியல அசிங்கமா இருக்குனு சொல்லுற என்னால மட்டும் எப்படி பேபி பாக்க முடியும் நீயே சொல்லு அதனாலதா அவ்வளவு போதைல இருந்தும் கூட உங்க அப்பா முகத்தை பாக்க முடியாம அவர் மேல வோமிட் பண்ணிட்டேன், புரிஞ்சுக்கோடா நா சரக்கடிச்சதால வோமிட் பண்ணல உன்னோட அப்பா முகத்தை பாக்க முடியாமதா வோமிட் பண்ணேன், இதனால உன்னோட மானம் போச்சுன்னா இனிமே நா சரக்கடிச்சுட்டு உன்னோட அப்பா முகத்தை பாக்க மாட்டேன் சரியா கோபம் போயிருச்சா எங்க சிரி பேபி" என்று கூறி அவளது முகம் பார்க்க மகிழ்நிலாவோ இனியன் கூறியதை கேட்டு கோபத்தின் உச்சியில் இருந்தவள் "ஏன்டா நா எவ்வளவு வருத்தப்பட்டு பேசிக்கிட்டு இருக்கேன் நீ என்னடானா காமெடி பண்ணிக்கிட்டு இருக்கியா, உனக்காக எங்க அப்பா காலு கைல விழுந்து உன்னை பாக்க கூட்டிட்டு வந்தா சரக்கடிச்சு எங்க அப்பா மேலேயே வோமிட் பண்ணுவ, ஏன்டா இப்படி பண்ணணு கேக்க வந்த எங்க அப்பாவையே அசிங்கமா இருக்காருன்னு நக்கல் பண்ணுவியா இனிமே நீ என்னோட அப்பா முகத்தை மட்டும் இல்லை என்னோட முகத்தையும் பாக்க வேணாம், உனக்கும் எனக்கும் இருந்த எல்லாம் முடிஞ்சு போச்சு இனிமே என்னோட முகத்துலேயே முழிக்காதடா இனிமே உனக்கும் எனக்கும் நடுவுல ஒன்னும் இல்லை என்று கூறிவிட்டு திரும்பி நடந்தாள்.

இனியனோ "டேய் இனியா இந்த வாய் இருக்க வரையும் உனக்கு கல்யாணம்ன்னு ஒன்னு நடக்கவே நடக்காதுடா நீ கட்டைல போற வரையும் கட்ட பிரம்மச்சரியதா சாகனும் போல விடாத அவளை எப்படியாவது சமாதானப்படுத்துடா" என்று எண்ணி கொண்டு விரைந்து சென்று மகிழ்நிலாவின் முன் நின்று "பேபி என்னடி செல்லம் நீதானா சொல்லுவா டார்லிங் நா கோவமா இருக்கும் போது உன்னை விட்டு போறேன்னு சொன்னா என்ன ஏதாவது காமெடி பண்ணி சமாதானம் பண்ணு என்னை உன்னை விட்டு மட்டும் போக விடாதடா, ஏதோ கோபத்துல நா உன்னை விட்டு போய்ட்டா கண்டிப்பா ஒரு நாள் உன்னை நெனச்சு அழுதே செத்துருவேன்டா இப்படிலாம் நீதானா பேபி சொன்ன அதாடா பேபி காமெடி பண்ணி சமாளிச்சு பாத்தேன் பேபி என்னோட செல்லம்ல கொஞ்சம் அமைதியா இரு நம்ம இதை பேசி சரி பண்ணிக்கலாம்" என்று கூற இனியனை பார்த்து முறைதவள் "என்னடா நா சொன்னதெல்லாம் நியாபகப்படுத்தி என்னை ஏமாத்த பாக்குறிய இப்ப சொல்லுறேண்டா எங்க அப்பா பாக்குற பையன கட்டிக்கிட்டு சந்தோசமா வாழ்வேன் உன்னை பத்தி நா நினைக்கவே மாட்டேன்டா" என்று கோபமாக கத்தினாள்.

இனியனோ தன்னவள் தன்னை விட்டு மற்றொருவனை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியதை கேட்டு கோபம் தலைக்கேற "என்னடி சொன்ன என்னை விட்டு இன்னொருத்தன கலயாணம் பண்ணிக்கிவியா" என்று கூறிகொண்டே தன்னவளின் செவ்விதழ்களை தன் இதழ்கள் கொண்டு சிறை செய்தவன் தன்னவள் சுவாசிக்க முடியாமல் தவிக்க அவளை விடுவித்து போடி போ உங்க அப்பன் பாக்குற பையன கல்யாணம் பண்ணிக்கோ சந்தோசமா இரு ஆனா ஒரு நாள் என்னை மிஸ் பண்ணிட்டோம்னு நெனச்சு கண்டிப்பா அழுவடி என்று சத்தமாக கத்த மகிழ்நிலாவோ கண்ணீரோடு அவ்விடம் விட்டு வேகமாக நடத்து சென்று விட்டாள்.

அவள் செல்வதையே வெறித்து பார்த்தவன் தன் தலையை அழுத்த கோதி கோபத்தை கட்டு படுத்தியவன் தனது பைக்கின் அருகே சென்று கண்ணாடியில் தனது முகத்தை பார்த்து "டேய் இனியா அவ சொன்ன மாதிரி உனக்கு அறிவே இல்லடா எத்தனை தடவை சொன்னேன் கோபபடக்கூடாது பொறுமையா இருக்கணும் வெக்கம் மானம் சூடு சொரணை எல்லாம் இங்கேயே குழிதோண்டி பொதச்சுட்டு போகனும்னு கேட்டியா, அவதா போறேன்னு சொன்ன எப்படியாவது பேசி சமளிக்கிறத விட்டுட்டு போன போடின்னு சொன்னது மட்டும் இல்லாம இதுல கிஸ் வேற சும்மாவே சாமி ஆடுவா இனிமே கேக்கவே வேணாம் எப்படி சமாளிக்க போறேனோ, த்தூ எல்லாம் உன்னாலதடா"என்று கண்ணாடியை பார்த்து மெதுவாக துப்பிவிட்டு தனது பைகை எடுத்து கொண்டு தனது நண்பன் விஷ்ணுவின் வீட்டிற்கு சென்றான்.

இவர்களின் கண்களுக்கு தெரியாமல் இவர்களின் அருகில் நின்று நடந்த சண்டையை பார்த்து கொண்டிருந்தனர் மைத்ராவும் மாயதீரனும், மகிழ்நிலாவும் இனியனும் பிரிந்து செல்வதை பார்த்து மகிழ்ச்சி அடைந்த மாயதீரன் மைத்ராவிடம் "பார்த்தாயா இதுதான் இந்த யுகத்தில் காதலின் நிலை சிறு பிரச்சனை என்றாலும் ஆளுக்கு ஒரு பக்கம் பிரிந்து சென்று விடுவார்கள், அழிந்து கொண்டிருக்கும் இந்த காதலுக்கு காதல் தேவதை வேறு" என்று நக்கலாக சிரிக்க மைத்ராவோ "உன்னை போன்ற அரக்கனிற்கு காதலின் ஆழம் ஒரு போதும் புரிய போவதில்லை, இவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள காதல் கண்டிப்பாக இவர்களை சேர்க்கும்" என்றுவிட்டு இனியனை பின்தொடர்ந்தாள், மாயதீரனும் மைத்ராவை பார்த்து சிரித்து கொண்டே அவளை பின்தொடர்ந்தான்.


விஷ்ணுவின் வீட்டிற்குள் வேகமாக நுழைந்த இனியன் இருந்த கோபத்தில் நன்றாக உறங்கி கொண்டிருந்த விஷ்ணுவின் இடுப்பில் ஓங்கி ஒரு உதை விட்டான், இனியன் மிதித்த மிதியில் விஷ்ணுவோ கட்டிலின் அந்த புறம் உருண்டு விழுந்தவன் "அய்யோ பள்ளத்துக்குள்ள விழுந்துட்டான் என்னை யாராவது காப்பாத்துங்க" என்று அலறி அடித்து எழுந்து அமர்ந்தவன் சுற்றிலும் பார்த்து விட்டு நா எப்படி கீழ விழுந்தேன் என்று கட்டிலை பார்க்க அதில் அமர்ந்திருந்த இனியனை பார்த்தவுடன் என்ன நடந்திருக்கும் என புரிந்து கொண்டு மெதுவாக எழுந்தவன் இடுப்பு வலிக்க "ஐயோ இடுப்பு போச்சே ஊர்ல இருக்க ப்ரண்ட் எல்லாம் நண்பனுக்கு ஒண்ணுன்னா உயிர கொடுக்குறானுங்க ஆனா எனக்கு வாய்கிறது எல்லாம் என்னை கொஞ்ச கொஞ்சமா கொல்லுறதுக்குனே இருக்கானுங்க" என்று கூறிக்கொண்டே இனியனின் அருகில் போய் அமைதியாக அமர்ந்தான்.

இனியனின் முகம் பார்த்த விஷ்ணு ஏதோ பிரச்னை என்பதை புரிந்து கொண்டு "என்ன ஆச்சு இனியா ஏன்டா இவ்வளவு கோபமா இருக்க" என்று கேட்க இனியனோ பதில் கூறாமல் தனது பாக்கெட்டில் இருந்த சிகிரெட்டை எடுத்து வாயில் வைத்தான் இனியனின் முகம் கண்டு மகிழ்நிலாவுடன்தான் ஏதோ பிரச்சனை என்று யூகித்த விஷ்ணு "என்னடா நிலா கூட சண்டையா" என்று கேட்க இனியனோ சிகிரெட்டை பற்ற வைத்து கொண்டே ஆம் என்று தலையை மட்டும் ஆட்ட விஷ்ணுவோ "ஏன்டா நாயே உனக்கும் நிலாகும் சண்டைனா என்னை ஏன்டா மிதிச்ச" என்று இடுப்பை தடவி கொண்டே கேட்க தன் வாயில் இருந்த சிகிரெட்டை தூக்கி எறிந்தவன் விஷ்ணுவை போட்டு அடித்து புரட்டி எடுக்க தொடங்கினான்.

விஷ்ணுவோ அடி தாங்க முடியாமல் "டேய் மச்சி என்னை விட்டுருடா நா என்னடா பண்ணே" என்று கதற இனியனோ "டேய் பஞ்ச பரதேசி நீ எல்லாம் பிறந்ததே வேஸ்ட் இதுல உனக்கு பிறந்தநாள் வேறையா எத்தனை தடவை சொன்னேன் எனக்கு சரக்கு வேணாம்டா நா மகியோட அப்பாவை பாக்க போகனும்ன்னு கேட்டிங்களாடா பீர் மட்டும் குடிடா மச்சின்னு சொல்லி பாட்டில கைல கொடுத்த, நீ குடுத்த பீர குடிச்சிட்டு மகி அப்பாவை பாக்க போய் அந்தாளு மேலயே வோமிட் பண்ணிட்டேன் இனிமே எப்படிடா அந்த ஆளு அவனோட பொண்ணை எனக்கு கட்டி தருவான் சொல்லுடா" என்று விஷ்ணுவின் சட்டையை பிடிக்க விஷ்ணுவோ "நான்தா குடுத்தேனா உனக்கு எங்கடா போச்சு அறிவு நீ யோசிச்சிருக்கணும் நம்மோட வருங்கால மாமனாரை பாக்க போறோம் சரக்கடிக்கலாமான்னு நீ என்னடானா கொடுத்த உடனே பீரை அடிச்சுட்டு இப்ப வந்து நண்பனுக்கு தவிக்குமேன்னு நல்ல எண்ணத்துல பீர் கொடுத்த என்னை மாதிரி குட் பாய அடிக்குற" என்று வலியுடனும் நக்கலாக கூறினான்.
 
#4
காதல் மெய்ப்பட 03

விஷ்ணுவின் உடம்பில் சரமாரியாக குத்திய இனியன் மூச்சுக்கு இளைக்கவும் குத்துவதை நிறுத்திவிட்டு "ஏன்டா பேச மாட்ட.. நா சரக்கு வேணாம்ன்னு சொன்னா.. 'பாதியில் வந்த பொண்ணை நம்பி ஆதியில் வளந்த நட்பை விட்டன்னு' பாட்டுலாம் பாடி என்னை குடிக்க வச்சுட்டு.. இப்ப வந்து பேசுவடா பேசுவ எனக்கு நீ பீர் கொடுத்தது கூட தப்பில்லடா எதுக்கு அதுல சரக்க கலந்து கொடுத்த" என்று கேட்டு விஷ்ணுவின் கையை வலுவாக அழுத்தினான்.

விஷ்ணுவோ அலறி கொண்டே "மச்சி சத்தியமா சொல்லுறேன் நா ஒன்னும் பண்ணலடா பீர் மட்டும்தா கொடுத்தேன்.. அதுல சரக்கு கலந்திருக்குன்னு எனக்கு தெரியாதுடா" என்று கெஞ்சினான்.

விஷ்ணுவின் கரத்தை விட்ட இனியன் விஷ்ணுவிடம் இன்று நடந்த அனைத்தையும் கூறி "உன்னாலதா என்னோட மகி செல்லம் என்மேல கோவமா இருக்கா ஒழுங்கா என்னோட பேபிய என்னோட சேத்து வச்சிரு.. இல்லை மகனே நீ சரக்கு அடிச்சதா உன்னோட ஆளுகிட்ட சொல்லி உன்னோட காதலுக்கு வெடி வச்சிருவேன் பாத்துக்கோ" என்று மிரட்ட விஷ்ணுவோ "தெய்வமே ஏன் உனக்கு இந்த கொலைவெறி உன்னோட காதல எப்படியாவது சேர்த்து வச்சிரேன் என்னோட வாழ்க்கையில கும்மி அடிச்சிறாதடா" என்று கை எடுத்து கும்பிடுவது போன்று பாவனை செய்தான்.

இவர்களின் சண்டையை பார்த்து கொண்டிருந்த மாயதீரன் விழுந்து விழுந்து சிரித்தான், ஆனால் மைத்ராவோ இனியனை கண்டு வருந்த.. அவளை கண்ட மாயதீரன் அவள் பார்வை இனியனின் வாடிய முகத்தில் இருப்பதை பார்த்தவன், மைத்ராவின் வருத்தத்தை போக்க அவளை சீண்ட தொடங்கினான் "காதல் தேவதையே தாங்கள் வருத்தமாக இருப்பது போன்று தெரிகிறதே ஏன் என்னிடம் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயமோ" என்று கேட்க.
மாயதீரனின் முகத்தை பார்த்த மைத்ராவிற்கு அவனது விழிகளில் தெரிந்த இனம் புரியா ஒன்று தன்னை தாக்க அவனது விழியை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற தனது தலையை சிலுப்பியவள் மாயதீரனின் முகத்தை பார்க்காமல்" சரி வா மகிழ்நிலாவை பார்க்கலாம்" என்று மந்திரத்தை உச்சரித்து ஒரு மந்திர பாதையை உருவாக்கி மதியின் இல்லத்திற்கு சென்றனர்.

தனது ஸ்கூட்டியை எடுத்து கொண்டு வீட்டிற்கு வந்த மகிழ்நிலா எதுவும் செய்ய தோன்றாமல் நேராக கட்டிலில் சென்று படுத்து தன்னால் முடிந்த அளவு அழுது தீர்த்தவள் அப்படியே உறங்கி போனாள், கன்னத்தில் வழிந்த கண்ணீர் கோடுகளுடன் உறங்கும் மகிழ்நிலாவை கண்ட மாயதீரன் "ஐயகோ என் தேவதை இப்படி அழுத்திருக்கிறாளே இனிமேல் அந்த இனியனை இவள் அருகில் கூட நெருங்க விட மாட்டேன்" என்று கூறுபவனை முறைத்த மைத்ரா "தேவையில்லாமல் பிதற்றாதே இனியனை விட வேறு யாராலும் இவளை உயிராக நேசிக்க முடியாது, இவர்கள் காதலை நான் கண்டிப்பாக சேர்த்து வைப்பேன்" என்று கூற மாயதீரனோ "அதையும் பார்ப்போம் நான் இருக்கும் வரை இவர்கள இருவரையும் நீ எப்படி சேர்த்து வைக்கிறாய் என்று" என கூறி விட்டு தனது விரலை சொடுக்கிட அடுத்த நொடி காற்றில் மறைந்து போனான்.

வெளியே கேட்ட விஷ்ணுவின் கார் சத்தத்தில் தூக்கத்திலிருந்து அரக்க பறக்க எழுந்த இனியன் தனது வீட்டின் கதவருகே வந்து "மச்சான் குளிச்சுகிட்டு இருக்கேன்டா ஒரு அஞ்சு நிமிஷம்தா வீட்டுக்குள்ள வந்து உட்காருடா" என்று கூறிவிட்டு குளியலறைக்குள் புகுந்தவன் விஷ்ணுவின் பிபியை வழக்கம்போல் ஏற்றிவிட்டு அரைமணி நேரம் கழித்து வெளியே வந்தான், பின் இருவரும் கிளம்பி தாங்கள் பணிபுரியும் சென்னையில் உள்ள மிக பெரிய மருத்துவமனையின் பார்க்கிங்கில் காரை நிறுத்த போக அவர்களுக்கு முன் தங்களது காரை பார்க்கிங்கில் நிறுத்தி கொண்டிருந்தனர் மகிழ்நிலாவும் அவளது தோழி சங்கவியையும்.

மகிழ்நிலாவை பார்த்த இனியன் விஷ்ணுவை உடனடியாக காரை நிறுத்த கூறிவிட்டு மகிழ்நிலாவின் அருகில் சென்று "குட் மார்னிங் மகி குட்டி சாப்டியாடா" எதுவும் நடக்காததை போன்று சிரித்து கொண்டே கேட்டான், ஆனால் மகிழ்நிலாவோ அவன் பேசியது எதையும் காதில் வாங்காமல் தன்யாவின் கையை பிடித்து அவளை இழுத்து கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

தன்னை கடந்து செல்பவளை இனியன் முகம் வாட பார்த்து கொண்டிருக்க அவனது தோளை தட்டிய விஷ்ணு விடு மச்சா பாத்துக்கலாம் எங்கடா போக போறா என்று ஆறுதல் கூற இனியனோ. "இல்லடா மச்சான் எப்படியாவது மதியத்துக்குள்ள அவளை சமாதானம் பண்ணியாகனும்டா" என்று சோகமாக கூறும் நண்பனை ஆரத்தழுவிய விஷ்ணு "விடு மச்சா நீ இப்படிலாம் வறுத்தபடுவன்னு நா நினைக்கவே இல்லடா எப்படியாவது அவளை சமாதானம் பன்னிரலாம்டா, அது சரி மச்சா அது என்னடா மதியத்துக்குள்ள சமாதானம் பன்னியாகனும்னு சொல்லுற என்று கேட்க
இனியனோ சோகமாக "ஆமா மச்சா மதியத்துக்குள்ள அவளை சமாதானம் பன்னலைனா லஞ்ச் தர மாட்டாடா இன்னைக்கு திங்கள் கிழமை அவுங்க அம்மா பிரியாணி வேற செஞ்சு கொடுத்திருப்பாங்க இன்னைக்கு அவளை சமாதானம் பன்னலைன்னா அப்பறம் பிரியாணி கிடைக்காது ..நம்ம மெஸ் சாப்பாடுதா" என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு கூறுபவனை கோபமாக பார்த்த விஷ்ணு "நீ எல்லாம் திருந்தவே மாட்டடா" என்று கூறி தலையில் அடித்து கொண்டு சென்று விட்டான்.

மகிழ்நிலாவும் இனியனும் சந்தித்தவுடன் அவர்களின் அருகில் தோன்றிய மாயதீரனும் மைத்ராவும் இனியன் கூறியதை கேட்டு ஒருவரை ஒருவர் பார்க்க மாயதீரனோ மைத்ராவை பார்த்து. "இவன் என் தேவதைக்கு ஜோடியா.. சத்தியமாக சொல்கிறேன் நீ என்னிடம் எப்படியும் தோற்கத்தான் போகின்றாய்" என்று கர்வமாக கூற மைத்ராவோ எதையும் காதில் வாங்காமல் இனியனை தொடர்ந்தாள்.

விஷ்ணுவின் பின்னால் அமைதியாக வந்த இனியன் தனது மொபைலில் மணியை பார்த்துவிட்டு விஷ்ணுவை இடித்து கொண்டு ஓடினான், இனியன் இடித்ததில் தடுமாறி விழுந்த விஷ்ணு மெதுவாக எழுந்து தரையில் அமர்ந்தவன் "ச்சை இவேன் கூடலாம் ப்ரண்டா இருக்குறதுக்கு கிங்காங் கூடவே ப்ரண்டா இருந்திராலம் போல இருக்கே" என்று புலம்பி கொண்டே மெதுவாக எழுந்து நடக்க ஆரம்பித்தான்.

வேகமாக தனது அறைக்குள் நுழைந்த இனியன் தான் செய்ய போகும் ஆபரேஷன்காக தன்னை தயார்படுத்தி கொண்டு தனது இருக்கையில் அமர்ந்து ஐந்து நிமிடம் அமைதியாக கண்களை மூடி தன் மனதை ஒருநிலைபடுத்தி கொண்டு தனது சக மருத்துவரிடம் சென்றான்.

ஆபரேஷன்க்கு தயாராகி இருந்த நர்ஸ்களும் சக மருத்துவரான சங்கவியும் மகிழ்நிலாவும் ஆபரேஷன் அறைக்குள் நுழைந்த இனியனின் கண்களில் தெரிந்த கடுமையை கண்டவுடன் அமைதியாக இருந்தனர், நேராக நர்ஸிடம் வந்தவன் "பேஷண்டோட மெடிக்கல் டீடெயில்ஸ் குடுங்க" என்று வாங்கி பார்த்தவன்,
பின் ஆபரேஷன் செய்ய போகும் பேஷண்ட் அரவிந்தின் அருகில் சென்றவன் விழிகள் கடுமையை விடுத்து கனிவும் நம்பிக்கையும் கலந்த பார்வையுடன் "அரவிந்த் சார் கவலை படாதீங்க ஒன்னுமில்லை சும்மா குட்டியா ஒரு தூக்கம் போடுங்க.. நீங்க தூங்கி எந்திரிச்சு பாக்கும் போது உங்களுக்கு இருபது வயசு கொறஞ்சிரும் அப்பறம் லக்ஷ்மி ஆண்ட்டிய விட அழகான பொண்ணை பாத்து உங்களுக்கு நா கட்டிவைக்குறேன்" என்று கூறி நோயாளியின் கரத்தினை பிடித்து நம்பிக்கை கலந்த ஒரு புன்னகையை சிந்த இனியனின் கண்களில் இருந்த நம்பிக்கை அரவிந்தையும் தொற்றி கொண்டது, அரவிந்தின் கண்களில் நம்பிக்கை தெரிந்தவுடன் இனியன் நர்ஸை பார்க்க அவர் வேகமாக ஊசியில் மருந்தை ஏற்றி அரவிந்திற்கு அனஸ்தீஸ்யா கொடுத்தார்.

அரவிந்த் மயக்க நிலைக்கு சென்றவுடன் அனஸ்தீஸ்யா கொடுத்த நர்ஸை கடுமையான பார்வையுடன் முறைத்த இனியன் "எத்தனை தடவ சொல்லுறது பேஷண்ட் கிட்ட நா பேச ஆரம்பிச்சதும் மருந்த இன்ஜக்ஷன்ல ஏத்தி வைங்கன்னு என்று கத்த நர்ஸோ அமைதியாக நின்றார்.

மூன்று மணி நேரம் நடந்த ஆபரேஷன் முடிவதற்குள் பலர் இந்த வேலையே வேண்டாம் என்று எண்ணுமளவு இனியனிடம் இருந்து பல திட்டுகளையும் பல உக்கிரமான முறைப்பையும் வாங்கினார்கள் அதில் மகிழ்நிலாவும் அடக்கம், ஆபரேஷன் முடியும் வரை உக்கிரமாக இருந்த இனியனின் பார்வை ஆபரேஷனை நல்ல படியாக முடித்து ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே வரும் போதுதான் இயல்பாக மாறியது.

ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே வந்தவன் கண்ணீருடன் தன்னை நோக்கி ஓடி வரும் லக்ஷ்மியை பார்த்து "ஆண்ட்டி என்ன நீங்க இப்படி அழுகுறீங்க என்மேல நம்பிக்கை இல்லையா, பாருங்க அரவிந்த் சார் பூரண நலமுடன் உள்ளார்.. இனிமேல் உங்களுடன் தினமும் டூயட் பாடுவார் என்று கூறி சிரிக்க" இனியனின் கையை பிடித்த லக்ஷ்மி முகமெல்லாம் சந்தோசத்துடன் ரொம்ப நன்றி தம்பி நீங்க எங்களுக்கு கடவுள் மாதிரி என்று கூற அவரை பார்த்து அழகாய் புன்னகைத்து "இது என்னோட கடமை ஆண்ட்டி நீங்க கொஞ்ச நேரம் கழிச்சு சார போய் பாருங்க மத்ததை நர்ஸ் சொல்லுவாங்க" என்று கூறி விட்டு நடந்து சென்ற இனியனின் விழிகள் வழக்கம் போல மௌனமாய் சிறுதுளி கண்ணீரை சிந்த, இனியனின் இந்த புன்னகையும் கண்ணீரையும் கண்ட மகிழ்நிலா உட்பட அனைவரும் வழக்கம் போல குழம்பித்தான் போகினர்.

மகிழ்நிலா இனியனை கல்லூரி படிக்கும் காலத்திலிருந்தே காதலித்தாள். இனியனுக்காகவே இந்த மருத்துவமனையில் மருத்துவராக சேர்ந்தாள், மகிழ்நிலா இனியன் மீது காதல் கொள்ள காரணம் இனியனுக்கு மருத்துவ துறையில் உள்ள காதலே.. ஒரு முறை நடந்த செமினாரில் இனியன் 'மருத்துவ துறையில் நடக்கும் தவறுகள் மற்றும் நாம் எவ்வாறு நடக்க வேண்டும்' என்று பல அனுபவமுள்ள முன்னணி மருத்துவர்கள் முன் தைரியமாக பேசியது மகிழ்நிலாவை பெரிதும் கவர்ந்தது.

அதோடு எப்போதும் புன்னகை தழுவும் அவனது முகமும் துரு துரு நடையும் கண்களில் தெரியும் குறும்பும் அவன்பால் அவளை சாய்த்தது, என்னதான் குறும்பு செய்தாலும் விளையாட்டுத்தனமாக இருந்தாலும் அவன்தான் அவர்கள் கல்லூரியில் டாப் ரேங்கர் இப்படி பல கோணங்களில் மகிழ்நிலாவை கவர்ந்த இனியன் ஆபரேஷன் சமயத்தில் மட்டும் இவ்வாறு கடுமையாக இருப்பது மகிழ்நிலாவிற்கே புரியாத புதிராக இருந்தது. அவள் இதற்கான காரணத்தை எத்தனை முறை கேட்டாலும் இனியனிடம் இருந்து வருவது என்னவோ ஒரு சிறு புன்னகை மட்டுமே, இனியனின் இத்தகைய மாற்றத்தை பார்த்த மாயதீரனால் இனியனின் குணத்தை கணிக்க முடியாமல் தடுமாறினான்.

ஆபரேஷன் முடித்து வந்த இனியன் சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் தனது வயிறு பசியால் சத்தமிட விஷ்ணுவிற்கு கால் செய்து கேன்டீன் வருமாறு கூறிவிட்டு கேன்டீன் சென்றான், நேராக மகிழ்நிலாவும் சங்கவியும் அமர்ந்திருந்த டேபிளை நோக்கி சென்றவன், "ஹாய் மகி குட்டி என்ன பேபி சமையல்" என்று அவளது டிபனின் மீது கைவைக்க அவனை முறைத்து பார்த்த மகிழ்நிலா டிபனை எடுத்துக்கொண்டு "கவி நா என்னோட கேபின்ல போய் சாப்பிட்டுக்குறேன்" என்று கூறி விட்டு சங்கவி கூப்பிடுவதை கூட காதில் வாங்காமல் சென்றுவிட்டாள்.
 
#5
காதல் மெய்ப்பட 4

இனியனின் முகம் வாடிப்போனதை பார்த்த சங்கவி இனியனிடம் "அண்ணா ப்ளீஸ் வருதபடாதீங்க" என்று சமாதானம் கூற அப்போது வந்த விஷ்ணு "ஹாய் கவி பேபி! என்னடி பன்ற செல்லம் பாரு மாமாவ விட்டு சாப்பிட மனசு இல்லாம டிபன ஓபன் பண்ணாமலே வச்சிருக்க ஐ லவ் யூடி செல்லம்" என்று கூறிவிட்டு.. அருகில் இருந்த இனியனின் முகத்தை பார்த்து சங்கவியிடம் "என்ன ஆச்சுடி எதுக்கு இவேன் இப்படி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி உட்காந்திருக்கான்" என்று கேட்கவும் சங்கவி சற்றுமுன் நடந்ததை கூற "என்ன மச்சி பிரியாணி போச்சா" என்று கூறி விழுந்து விழுந்து சிரித்த விஷ்ணுவை முறைத்த சங்கவி "டேய் அண்ணாவே நிலா பேசலைன்னு வருத்தத்துல இருகாங்க நீ என்னடானா பிரியாணி போச்சு அது இதுனு சொல்லி அண்ணாவ கிண்டல் பன்ற" என்று திட்டி அடக்கினாள்.

விஷ்ணு சிரிப்பதை பார்த்த இனியன் மகனே இன்னைக்கு இருக்குடா உனக்கு என்று மனதில் நினைத்துக்கொண்டு சோகமாக சங்கவியை பார்த்து "விடுமா அவனுக்கு எங்கம்மா தெரிய போகுது காதல் பிரிவோட வலி"என்று போலியாக வருந்துபவனை போல் நடிப்பவனை பார்த்த விஷ்ணு "ஆத்தி ஏதோ பெருசா பிளான் பண்ணிட்டா போலையே விஷ்ணு அலர்ட்டா இருடா" என்று மனதிற்குள் நினைத்து கொண்டு கவனமாக இருக்கலானான்.

சங்கவி இனியனிடம் "அண்ணா என்ன இருந்தாலும் உங்க மேலயும் தப்பு இருக்கு அவுங்க அப்பாவை பாக்க போகணும்னு தெரிச்சும் ஏன் குடிச்சீங்க" என்று கேட்பவள் கையில் தனது மொபைலில் ஒரு விடீயோவை ஓபன் செய்து கொடுத்தான் அதில் விஷ்ணு ஒரு கையில் சரக்கு பாட்டிலும் மறு கையில் பீர் பாட்டிலையும் வைத்து கொண்டு இனியனை பீரை குடிக்க சொல்லி வற்புறுத்தி கொண்டிருந்தான்.

அதை பார்த்த சங்கவிக்கு கோபம் தலைக்கேற தனது அருகில் இருந்த டம்ளரில் உள்ள நீரை விஷ்ணுவின் முகத்தில் ஊற்றியவள் "உன்னாலதான் இவ்வளவு பிரச்சனையுமா? எப்படியாவது அண்ணாவயும் மகியையும் நீதான் சேர்த்து வைக்கணும் இல்லை.. என்னை மறந்திரு" என்று கூறிவிட்டு வேகமாக எழுந்து சென்றாள்.

கோபமாக செல்பவளையே வெறித்து பார்த்த விஷ்ணு முகத்தில் வடியும் நீரை துடைத்து கொண்டு இனியனை திரும்பி பார்க்க இனியனோ விஷ்ணுவின் பாதி டிபனை காலி செய்திருந்தான்.

விஷ்ணுவோ கோபம் தலைக்கேற "டேய் உனக்கு நா என்னடா பாவம் பண்ணேன் நானே கஷ்டப்பட்டு குட்டிக்கரணம் எல்லாம் அடிச்சு கவிய கரெக்ட் பண்ணேன்.. நீ என்னடானா ஒரே வீடியோல என்னோட காதலுக்கு சமாதி கட்டிட்டியேடா ஏன்டா" என்று கோபமாக கத்த இனியனோ முழு சாப்பாட்டையும் சாப்பிட்டு முடித்துவிட்டு
"பின்ன என்னடா நானே பிரியாணி போச்சேன்னு வருத்தத்துல இருக்கே இதுல நீ என்னடானா என்னை நக்கல் பண்ணிக்கிட்டு இருக்க.. அதா உன்னோட லவ்க்கு ஆப்பு வச்சேன் மரியாதையா என்னோட செல்லகுட்டிய என்னோட சேர்த்து வச்சிரு இல்லை எப்பவும் நீயும் என்னை மாதிரி சிங்கள்தா பாத்துக்கோ" என்று கூறிவிட்டு எழுந்து சென்றான்.

இவர்களின் செயலை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மாயதீரன் மைத்ராவை பார்த்து "பார்த்தாயா மைத்ரா இவனது விளையாட்டு தனத்தை தனது நண்பனின் காதலையே விளையாட்டாக ஒரு நொடியில் பிரித்துவிட்டான், இவன் எப்படி மகிழ்நிலாவை சமாதானபடுத்தி தன் காதலில் வெற்றி கொள்வான் என்று நம்புகிறாய்" என்று கேட்க மைத்ராவோ "இனியனின் விளையாட்டுதனத்தையும் பார்த்தேன் சிறிது நேரத்திற்கு முன்பு அவன் அந்த நோயாளிக்கு செய்த சிகிச்சையையும் பார்த்தேன் எனக்கு முழு நம்பிக்கை வந்துவிட்டது அவர்களின் காதல் வெற்றிபெரும் என்று" என கூறிவிட்டு இனியனின் பின் சென்றாள்.
 
#6
காதல் மெய்ப்பட 5

இனியன் மகிழ்நிலாவுடன் பேச இரண்டு நாட்களாக எவ்வளவு முயன்றும் மகிழ்நிலா இனியனை திரும்பி கூட பார்க்கவில்லை. இனியன் பார்க்கில் தனியாக அமர்ந்து ஐஸ் சாப்பிட்டு கொண்டிருக்க அருகில் வந்த விஷ்ணு "டேய் என்னடா ஜாலியா உட்கந்து ஐஸ் சாப்பிட்டுக்கிட்டு இருக்க நிலாவ சமாதானம் பண்ண ஏதாவது யோசிச்சிய இல்லையாடா"என்று கோபமாக கேட்க இனியன் விஷ்ணுவின் முகத்தை பார்த்து "மச்சி என்னோட காதல் சேரணும்னு உனக்கு இவ்வளவு ஆசையாடா, உனக்கு என்மேல எப்ப இருந்து மச்சி இவ்வளவு பாசம்" என்று கேட்பவனை பார்த்து முறைத்த விஷ்ணு "கிழிச்ச பாசம் நீ அடிச்ச ஆப்புல என்னோட கவி என்கிட்ட பேசாம போய்ட்டா நீ நிலா கூட சேந்தாதா கவி என்னோட பேசுவா அதனாலதா சொல்லுறேன் வேகமா நிலாவ சமாதானம் பன்ற வழிய பாரு".

இனியன் "அதான பாத்தேன் என்னடா இந்த நாய்க்கு நம்மை மேல திடீருனு அக்கறை வந்துருச்சுனு, இங்க பாரு நானும் எவ்வளவோ கெஞ்சி பாத்துட்டேன் ஆனா அவ என்னை கொஞ்ச கூட மதிக்க மாட்டேங்குறா நா என்ன பண்ண" என்று கூறிவிட்டு மீண்டும் ஐஸ் சாப்பிடுவதில் மும்மரமாவனவனை பார்த்து தலையில் அடித்து கொண்ட விஷ்ணு இனியன் கையில் இருந்த ஐஸ்கிரீமை புடுங்கி தூக்கி எறிந்துவிட்டு "ஏதாவது யோசிச்சுதொலைடா எங்க அம்மா வேற கவிய வீட்டுக்கு கூட்டிட்டு வர சொல்லிருக்காங்க எனக்கு என்ன பன்றதுன்னு புரியல ஒழுங்கா ஏதாவது யோசிச்சு நிலாவ சமாதானம் பண்ணு.

தனது ஐஸ்கிரீம் பறிபோன கோவத்திலிருந்த இனியன் "டேய் உன்னை யாருடா எனக்கு சரக்கு ஊத்திவிட சொன்னது, நீயாதான சரக்க ஊத்திவிட்டு என்னோட காதலுக்கு ஆப்பு அடிச்ச நீயே எல்லாத்தையும் சரி பண்ணு" விஷ்ணுவோ "உனக்கு ஒரு பீரை குடிக்க கொடுத்துட்டு நா படுறபாடு இருக்கே சாத்தியமா இனிமே நா குடிக்கவே மாட்டேன்டா, சரி இப்போதைக்கு நிலாவோட பிரச்சனை நீ அவுங்க அப்பாகிட்ட அப்படி நடந்துக்கிட்டது அதனால நீ நிலாவ சமாதானம் பன்றதுக்கு முன்னாடி அவுங்க அப்பாவ சமாதானம் பண்ணிட்டா போதும் நிலா ஈஸியா சமாதானம் ஆகிருவா என்னடா சொல்லுற" இதை கேட்டு கொண்டிருந்த மாயதீரன் அதுக்கு நா விடணுமே தம்பி உங்களுக்கு வைக்கிறேன்டா பெரிய ஆப்பு என்று மனதிற்குள் நினைத்து கொண்டான்.

இனியன் "நீ சொல்லுறதெல்லாம் சரிதா ஆனா அது அவ்வளவு சாதாரண விஷயமில்ல நீ நிலாவோட அமைதியான முகத்தை பாத்துட்டு அவ அப்பனும் பொண்ணுங்க கைல வச்சிருக்க கரடி பொம்ம மாதிரி இருப்பான்னு நினைச்சியா, அவ அப்பேன் சரியான கருங்கரடி நல்லா ஆறடிக்கு மேல அண்டர்டேக்கர் அண்ணே மாதிரி இருப்பா ரிடைர் ஆர்மிமேன் வேற அன்னைக்கு ஏதோ நிலா பக்கத்துல இருந்ததால என்னை சும்மா விட்டான் இனியும் ஏதாவது தப்பா பண்ணி மாட்டுனா வடிவேலு சொல்லுற மாதிரி சும்மா நசுக்கு நசுக்குன்னு நசுக்கி தூக்கி எரிஞ்சிருவான் பாத்துக்கோ" இனியன் கூறியதை கேட்டு எச்சில் விழுங்கிய விஷ்ணு தன் முகத்தில் பயம் தெரிந்தாலும் அதை மறைத்து கொண்டு "என்னடா அவ அப்பேன் என்ன பெரிய ரவுடியா மச்சா நாங்களாம் ராவான ரவுடி சரியா அந்த கருங்கரடியா இல்லை நாமளான்னு பாத்துக்கலாம்".

இவர்கள் இருவரும் இங்கு பேசிக்கொண்டிருக்க மகிழ்நிலாவின் இல்லத்திற்கு சென்ற சங்கவி மகிழ்நிலாவை சமாதானம் செய்ய முயன்றாள், "நிலா நா சொல்லுறத கொஞ்சம் புரிஞ்சுக்கோடி எல்லா தப்புக்கும் அந்த விஷ்ணு தருதலைதான்டி காரணம் இனியன் அண்ணா மேல எந்த தப்புமில்லடி".. மகிழ்நிலா "ஆமாடி உங்க அண்ணாக்கு வாயில விரல் வச்சா கூட கடிக்க தெரியாது பாரு விஷ்ணு அண்ணாதா குடுத்தாங்கன்னா இந்த எருமைக்கு எங்கடி போச்சு அறிவு குடிச்சுட்டு என்னோட அப்பா மேலயே வோமிட் பண்ணிருக்கான்டி இந்த மாதிரி ஆளுக்கு யாருடி அவுங்க பொண்ணை கல்யாணம் பண்ணித்தருவாங்க சொல்லுடி" என்று கேட்கும் போதே மகிழ்நிலாவின் விழிகள் கலங்கிவிட்டன. இவர்கள் அருகிலிருந்து இதை கேட்டுக்கொண்டிருந்த மைத்ராவிற்கே இனியன் மீது சிறிது கோபம் வந்தது.

சங்கவி "நீ சொல்லுறதெல்லாம் சரிதா நிலா ஆனா அதுக்காக இனியன் அண்ணாவ மறந்துட்டு உங்க அப்பா பாக்குற பையன கல்யாணம் பண்ணிக்க போறியா".. மகிழ்நிலா "தெரியலடி எனக்கு என்ன பண்ணன்னு ஒண்ணுமே புரியல ஆனா கண்டிப்பா இனிமே அவனை எப்பவும் மன்னிக்க மாட்டேன்" என்று உறுதியாக கூறினாள்.

மகிழ்நிலா தனது முடிவில் உறுதியாக இருக்க விஷ்ணுவோ இவர்களை சேர்த்து வைக்க மொக்க ஐடியாக்களை கொடுத்து இனியனை கடுப்பேத்தி கொண்டிருந்தான், விஷ்ணு "என்ன மச்சி உனக்கு எவ்வளவு ஐடியா கொடுத்தாலும் நீ என்னடா குறை சொல்லிகிட்டே இருக்க ஓகே கடைசி ஐடியா நம்ம எல்லா படத்துலையும் பாக்குற மாதிரி ஒரு திருடன வச்சு உன்னோட மாமனார் கண்ணனுக்கு முன்னாடி ஒரு பொண்ணு பேக்க புடுங்கிட்டு ஓடுற மாதிரி செட்டப் பண்ணுவோம், கொஞ்ச தூரம் ஓடுனதும் அந்த திருடன்கிட்ட இருந்து நீ பேக்க புடுங்கிட்டு வந்து அந்த பொண்ணுகிட்ட கொடுத்துரு உன்னோட மாமா உன்னோட வீரத்தை பாத்து இம்ப்ரெஸ் ஆகிருவாரு எப்படி என்னோட ஐடியா" என்று கெத்தாக காலரை தூக்கிவிட்டு கூற அவனை பார்த்து துப்பிய இனியன் "டேய் இந்த சீன் சிவாஜி காலத்துல இருந்து இருக்குடா ஏதாவது உருப்புடியா சொல்லுடா".

விஷ்ணு "மச்சி இது சிவாஜி காலத்துல இல்லை ராஜராஜ சோழன் காலத்துல இருந்து வேணாலும் இருந்துட்டு போகட்டும் ஒர்கவுட் ஆகுதா இல்லையா அதை மட்டும் பாரு இதுதா பிளான் நாளைக்கு ஒரு திருடன கூட்டிட்டு வாரேன் பிளான் பண்ண மாதிரியே பன்றோம் உன்னோட மாமனார் உன்னோட வீரத்தை பாத்துட்டு உன்ன பாத்தாலே மிரள போறாரு பாரு" என்று கூறிவிட்டு எதையோ சாதித்தவனை போன்று நெஞ்சை நிமிர்த்தி கொண்டு நடந்தான், விஷ்ணு செல்வதை பார்த்து தலையில் அடித்து கொண்ட இனியன் "கடவுளே இவனால நாளைக்கு என்ன பஞ்சாயத்து வர போகுதோ" என்று புலம்பி கொண்டிருக்க மாயதீரனோ "மகனே உனக்கு நாளைக்கு இருக்குடா நாளையோட உன்னோட காதலுக்கு சங்கு ஊதுறேன்டா"என்று மனதில் எண்ணி கொண்டான், விஷ்ணு சென்றவுடன் தனது சக்தி மூலம் மாயதீரன் அருகில் தோன்றிய மைத்ராவோ மாயதீரா என்ன நடந்தது இங்கு என்று கேட்க மைத்ராவை பார்த்து வில்லத்தனமான சிரித்த மாயதீரன் "நாளையோட இனியன் காதலுக்கு சங்குதான்" என்று கூறிவிட்டு மறைந்து போனான், என்ன நடக்க போகிறது என்று தெரியாமல் மைத்ராவும் இனியனின் வாடிய முகத்தை பார்த்துவிட்டு அவளும் மறைந்து போனாள்.

மறுநாள் மாலையில் மகிழ்நிலாவின் அப்பா வழக்கமாக வாக்கிங் செல்லும் இடத்திற்கு இனியன் விஷ்ணு இருவரும் வந்தனர், இனியன் "டேய் விஷ்ணு நீ சொன்னமாதிரி எல்லாம் சரியா நடக்கும்ல அந்த திருடன் மாட்டிக்கிட்டாலும் நம்மள கோர்த்து விடமாட்டான்ல" என்று கேட்டு கொண்டிருக்க விஷ்ணுவோ "இனியா என்னடா நீ இதுக்கெலாம் பயந்துகிட்டு நம்மாளு பெரிய திருடன்டா யாருகிட்டயும் மாட்டிக்க மாட்டான் உசேன் போல்ட் கூட வேகமா ஓடுறது எப்படினு நம்மாளுகிட்டதா காத்துக்கிட்டாருனா பாரேன், அதனால நீ பயப்படாத நா பாத்துக்குறேன் உன்னோட காதல சேர்த்து வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு ஓகே" என்று கூறிவிட்டு தன் மொபைலில் திருடனை அழைத்தான்.

இனியன் விஷ்ணு அருகில் வந்த திருடன் விஷ்ணுவை பார்த்து "வணக்கம் தல யாரு பேக்க அடிக்கணும் வேகமா சொல்லு தல நமக்காக நிறைய கஸ்டமர் வைட்டிங் உங்களுக்கு பேக் அடிச்சு கொடுத்துட்டு இன்னும் ரெண்டு பேருக்கு பேக் அடிச்சு கொடுக்கணும்" திருடன் கூறியதை கேட்ட விஷ்ணு "பாத்தியா மச்சா நா ஏற்பாடு பண்ணிருக்க ஆள" என்று இனியனை பெருமையாக பார்த்தான்.

இனியனோ விஷ்ணுவை கண்டுகொள்ளாமல் திருடனிடம் "இங்க பாரு நீ திருடுறதை விட முக்கியமான விஷயம் யாருகிட்டயும் மாட்டிக்க கூடாது அப்படியே மாட்டுனாலும் எங்கள கோர்த்துவிட கூடாது சரியா, நீ பேக் அடிச்சுட்டு அந்த ஏரியா முனைய திரும்புனதும் எனக்காக வெயிட் பண்ணு நா வந்து உங்கிட்ட பேக் வாங்கிட்டு வந்துறேன் சரியா" இனியன் கூறியதை கேட்ட திருடன் "என்ன தல அசிங்க படுத்துற நாங்கலாம் ஓட ஆரம்பிச்சா எங்கள யாராலயும் பிடிக்க முடியாது நாங்கல்லாம் பிரச்சனைன்னு வந்தா தண்ணி மேலயே ஓடுவோம் நீ பயப்படாத ஆள மட்டும் காட்டு தல பேக் அடிச்சுட்டி உங்கிட்ட கொடுத்துட்டு அமௌன்ட்ட வாங்கிட்டு போய்கிட்டே இருக்கேன்"

இவர்களுக்கு அருகில் தோன்றிய மைத்ரா என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்க்க மாயதீரானோ மர்மமாக புன்னகைத்தான். மாயதீரனின் புன்னகையை பார்த்த மைத்ராவோ மனதிற்குள் "ஆஹா மாயதீரன் ஏதோ செய்ய போகிறான் கவனமாக இருக்க வேண்டும்" என்று எண்ணி கொண்டாள்.

மகிழ்நிலாவின் அப்பாவோடு மகிழ்நிலாவும் வருவதை பார்த்த இனியன் வேற பொண்ணுகிட்டதா பேக் அடிக்க சொல்லலாம்ன்னு பாத்தோம் என்னோட செல்ல குட்டியே கூட வாரா அவகிட்டயே பேக் அடிச்சு அதை அவ கிட்ட திருப்பி கொடுத்தா அவளையும் இம்ப்ரெஸ் பண்ணலாம் ஜாலி ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்று மனதில் எண்ணிக்கொண்டு திருடனிடம் "அங்க பாரு நா அவருகிட்ட போய் பேசிகிட்டு இருப்பேன் நீ அந்த சமயத்துல அவரு பக்கத்துல மஞ்ச கலர் சுடிதார் போட்டு அவருக்கு பக்கத்துல நடந்து போகுது பாரு பொண்ணு அவகிட்ட இருந்துதா பேக் அடிச்சுட்டு ஓடணும் சரியா நீ ஏரியாவ தாண்டி ஓடுனதும் நா உங்கிட்ட பேக் வாங்கிக்குறேன்" என்று கூறிவிட்டு மகிழ்நிலாவை நோக்கி நடக்க தொடங்கினான்.

மகிழ்நிலாவும் அவளின் தந்தையும் பேசிக்கொண்டு நடந்து செல்லும் போது அவர்கள் முன் போய் நின்ற இனியன் "அங்கிள் நா உங்ககிட்ட கொஞ்ச பேசணும்" என்று கூற மகிழ்நிலாவின் தந்தையோ "உங்கிட்ட பேச எனக்கு ஒண்ணுமில்ல என்னோட பொண்ணும் உன்ன பிடிக்கலைன்னு சொல்லிட்டா இனிமே தேவையில்லாம எங்கள டிஸ்டர்ப் பண்ணாத" என்று விட்டு முன்னேறி நடந்தார்.

அவருக்கு முன்பு மீண்டும் போய் நின்ற இனியன் "அங்கிள் உங்க கோபம் நியாயம்தா ஆனா என்னோட நிலைமையும் கொஞ்ச புரிஞ்சுக்கோங்க யாரோ எனக்கே தெரியாம நா குடிச்ச கலர்ல ட்ரிங்க்ஸ் மிஸ் பண்ணிட்டாங்க நா என்ன பண்ண முடியும் பர்த்டே பார்ட்டி வேற அதனால எனக்கு ஏதும் பண்ண முடியல புதுசா குடிச்சதாலதா வாமிட் பண்ணேன் நீங்களே யோசிங்க ரெகுலரா குடுக்குற யாராவது கொஞ்ச குடிச்சதுக்கே வோமிட் பண்ணுவாங்களா எனக்கு தெரியாம கொடுத்ததாலும் முதல் முதலா குடிச்சதாலும்தா நா வோமிட் பண்ணேன். என்று வாய்க்கு வந்தவாரு பொய்களை அடுக்கி கொண்டு சென்றான், நா மகிய உயிருக்கு உயிரா நேசிக்குறேன் என்னோட உலகமே மகிதா எனக்கு அம்மா அப்பா இல்ல மகிதா எனக்கு எல்லாம் அவ விசயத்துல நா எப்படி விளையாடுவேன், மகிக்கும் நான்தா உயிர் நீங்க என்ன தவிர வேற யாருக்காவது அவளை கல்யாணம் பண்ணி கொடுத்தா அவ வாழ்வா ஆனா சந்தோசமா வாழ மாட்டா இவ்வளவு பிரச்சனை நடந்தும் நா கொடுத்த மோதிரத்தை தூக்கி ஏறிய முடியாம கைல மாட்டிருக்கவ என்னை மட்டும் எப்படி மனசுல இருந்து தூக்கிபோட்டு நிம்மதியா வாழ்வா சொல்லுங்க" என்று கேட்டு விட்டு அவரின் முகத்தை பார்க்க அவரோ மகிழ்நிலாவின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தார் அவளோ நடப்பது எதுவும் புரியாமல் முழித்து கொண்டிருந்தாள்.

இவர்கள் பேசிக்கொண்டிருந்த நேரம் இவர்கள் அருகில் நடந்து வந்த திருடன் மகிழ்நிலாவின் பேக்கை புடுங்கி கொண்டு ஓட மகிழ்நிலா ஐயோ என்னோட பேக் என்று கத்த தொடங்கினாள், இனியனோ கவலைபடாத பேபி இப்ப பாரு அவனை எப்படி பிடிக்கிறேன்னு என்று கூறிவிட்டு திரும்பி பார்க்க அந்த திருடனின் அருகில் ஓடி கொண்டிருந்தார் மகிழ்நிலாவின் தந்தை இனியனோ மனதிற்குள் "யோவ் கருங்கரடி நீ எல்லாம் மனுஷனாயா இந்த வயசுல என்ன ஓட்டம் ஓடுற நா அந்த திருட்டு பயலுக்கு செலவு பண்ண பத்தாயிரம் ரூபாயும் வேஸ்ட்டா போயிரும் போலயே" என்று எண்ணி கொண்டு இனியனும் வேகமாக திருடனை நோக்கி ஓடினான்.
 
#7
காதல் மெய்ப்பட 6


திருடனோ தனக்கு பின்னால் ஐம்பதுக்கு மேற்பட்ட வயதிலும் இருபத்தைந்து வயது இளைஞனை போன்று பாய்ந்து ஓடி வருபவரை கண்டு உயிரை வெறுத்து ஓட தொடங்கினான், மாயதீரனோ புன்னகையுடன் தனது மந்திர சக்தி மூலமாக திருடனுக்கு முன் ஒரு சேற்றை உருவாக்க நேராக ஓடிக்கொண்டிருந்த திருடன் சேற்று நீரில் வழுக்கி கீழே விழுந்தான், கீழே விழுந்த திருடனை மகிழ்நிலாவின் தந்தை பிடித்து அடிநொறுக்க ஆரம்பித்தார்.

இனியனோ மனதினுள் "அட பாவி திருட்டுபயலே தண்ணி மேலயே ஓடுவேன்னு சொல்லிட்டு இப்படி தண்ணி வழுக்கி விழுந்துட்டியேடா போச்சே நம்மள பத்தி ஏதாவது ஒளறுனா இந்த கருங்கரடி நம்ம கடிச்சு குதறிருமே டேய் விஷ்ணு ஐடியாவா கொடுக்குற கைல மாட்டுன செத்தடா" என்று மனதில் எண்ணிகொண்டு திருடன் அருகில் சென்றான்.

இனியன் அருகில் செல்வதற்குள் மகிழ்நிலாவின் தந்தை திருடனை மொத்தி எடுத்திருந்தார், இனியன் என்ன செய்வது என்று குழம்பி கொண்டிருக்க அதற்குள் அவர்களை சுற்றி கூட்டம் கூட ஆரம்பித்தது அதற்குள் பலர் இவன எல்லாம் சும்மா விட கூடாது போலீஸ்கிட்ட பிடிச்சு கொடுக்கணும் என்று கூற இனியனோ என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போனான் அப்போது அவர்கள் அருகில் வந்த விஷ்ணு ஒன்றும் தெரியாததை போல "என்ன ஆச்சு இனியா என்ன இங்க கூட்டம்" என்று கேட்க இனியனோ "இந்த திருட்டு பய நம்மை மகிகிட்ட இருந்து பேக் திருடிட்டு ஓட பாத்த நல்ல வேல மாட்டிக்கிட்டாடா இந்த ஏரியா இன்ஸ்பெக்டர் உனக்கு தெரிஞ்சவருதான நீயே இவனை அவருகிட்ட பிடிச்சு கொடுத்துருடா".

இனியன் கண்ணை காட்டியவுடன் விஷ்ணுவோ "சரி மச்சி நீ நிலா கிட்டயும் உன்னோட மாமனார் கிட்டயும் பேசு நா இந்த திருடனா கூட்டிட்டு போய் ஸ்டேஷன்ல ஒப்படைக்கிறேன்" என்று அருகில் இருந்த ஆட்டோவில் அந்த திருடனை ஏற்றி கொண்டு தப்பித்தாள் போதும் என்று விஷ்ணு கிளம்பிவிட்டான். மாயதீரானோ நல்ல வாய்ப்பு போய் விட்டதே என்று வருந்தினான்.

விஷ்ணுவை அந்த இடத்தில் பார்த்த மகிழ்நிலா இது அனைத்தும் இவர்களின் திட்டம்தான் என்று புரிந்து இனியனை முறைத்தாள். இனியனோ இதற்க்கு மேலும் இங்கு இருப்பது நல்லதல்ல என்பதை உணர்ந்து "அங்கிள் நா கிளம்புறேன் நீங்க மகிய பாத்து கூட்டிட்டு போங்க" என்று கூறிவிட்டு அங்கிருந்து விட்டால் போதுமென்று தெறித்து ஓடிவிட்டான்.

அந்த சம்பவத்தின் பிறகு இனியன் மருத்துவமனையில் மகிழ்நிலாவை விளையாட்டாக கூட சீண்டுவதில்லை அவனது வேலையில் மட்டுமே கவனம் செலுத்தினான், ஒரு வாரம் கழித்து மகிழ்நிலாவின் தந்தை மகிழ்நிலாவிடம் நாளை உன்னை பெண் பார்க்க வருவதாக கூற அன்று இரவு முழுவதும் மகிழ்நிலாவிற்கு இனியனை நினைத்து தூங்கா இரவாகவே கடந்தது, இனியனை அழைக்க எத்தனை முறை மொபைலை எடுத்தாலும் வேண்டாம் என்று மீண்டும் வைத்து விட்டாள்.

ஆதவன் யாருக்கும் காத்திருக்காமல் தன் செவ்வண்ண கதிர்களை பாய்ச்சி மலர்களை வெட்கள் கொள்ள செய்து பூக்க வைக்க ஆரம்பித்தது. ஆதவனின் கதிர்பட்டு மலர்ந்த தன் தோட்டத்தின் பூக்களின் நடுவே அமர்ந்து கொண்டு தன் கவலையை அந்த மலர்களின் அழகை கண்டு ரசிப்பதில் மறக்க நினைத்து தோற்று கொண்டிருந்தாள் மங்கையவள், அவளின் பின்னால் வந்து நின்ற அவளின் தந்தை "நிலாமா என்னடா தங்கம் ஒரு மாதிரி இருக்க இன்னைக்கு உன்னை பொண்ணு பாக்க வாரங்கடா உனக்கு சம்மதம்தான செல்லம்" என்று ஆவலோடு கேட்க தன் தந்தையின் முகத்தில் தெரிந்த பரிதவிப்பை கண்டவள் "அப்பா இது வரை எல்லாமே எனக்கு பாத்து பாத்து செஞ்ச நீங்க என்னோட கல்யாண விசயத்துலயும் கண்டிப்பா எனக்கு நல்லது எதுவோ அதைதா செய்விங்க எனக்கு ஒரு வருத்தமும் இல்லப்பா" என்று தன் விரல் மோதிரத்தை பிடித்து கொண்டே கூறினாள்.

அவளின் மோதிரத்தை அவளது கரங்கள் பற்றி இருந்ததை பார்த்து மென்மையாக சிரித்த அவளின் தந்தை "சரிடா செல்லம் நீ வேகமா கெளம்புடா மாப்ள வீட்டுக்காரங்க வந்துகிட்டு இருக்காங்க" என்று அவளை தயாராக அனுப்பிவைத்தார்.

மாப்பிளை வீட்டிலிருந்து அனைவரும் வந்ததும் தங்கம் நிற புடவையில் மல்லிகைசரம் தலையில் தொடுத்து, தங்க ஆபரணங்கள் அணிந்து தங்க பதுமையாக வந்தவளை அங்கிருந்த அனைவரது விழிகளும் இமைக்க மறந்து பார்த்தன, எதிரில் இருக்கும் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு தன் அன்னையின் கையில் இருந்த காபியை வாங்கி அனைவருக்கும் கொடுக்க ஆரம்பிக்க ஒருவரின் முன் காபியை நீட்டும் போது மாப்பிளைய நல்லா பாத்துக்கோமா என்று பின்னால் இருந்து வந்த குரல் கேட்டு தனக்கு முன்பு அமர்த்திருந்தவனை நிமிர்ந்து பார்த்த மகிழ்நிலா தனக்கெதிரில் புன்னகையுடன் அமர்ந்திருந்த இனியனை பார்த்து அதிர்ச்சியில் கையில் இருந்த தட்டை இனியன் மீது சாய்க்க தட்டில் இருந்த அனைத்து டம்ளரில் இருந்த கொதிக்கின்ற காபியும் இனியன் மீது விழுந்தது.

கொதிக்கின்ற காபியானது மேலே கொட்டியதும் பதறி துடித்த இனியன் கத்த முடியாமல் எழுந்து வலியை பொறுத்துகொண்டு சமாளிக்க விஷ்ணுவும் மாயதீரனும் விழுந்து விழுந்து சிரித்தனர், மகிழ்நிலாவின் தந்தை நிலாமா பாத்து கொடுக்க கூடாத மாப்பிளைய மேல கூட்டிட்டு போய் வாஷ் பண்ண சொல்லுமா என்று கூறியவுடன் இனியனை மாடியில் தான் அமைத்த தோட்டத்திற்கு அழைத்து சென்று குழாயில் வாஷ் செய்ய கூறினால்.

இனியன் வாஷ் செய்துவிட்டு நிலாவை பார்க்க அவளோ "டேய் பிராடு என்னடா சொல்லி என்னோட அப்பாவ ஏமாத்துன" என்று கேட்க "பேபி சத்தியமா நா ஒன்னும் பண்ணல செல்லம் மாமாதா எனக்கு கால் பண்ணி என்னை பாக்கணும்னு சொன்னாரு அது உனக்கு தெரிய கூடாதுனு வேற சொன்னாரு நா கூட என்னை ஆளு வச்சு மட்டை பண்ணதா கூப்பிடுறாருனு நெனச்சேன், ஆனா நேருல போனதும் என்னை பார்த்து நீ உண்மையா என்னோட பொண்ணை காதலிக்கிறியான்னு கேட்டாரு நானும் உன்னை உயிருக்குயிரா காதலிக்கிறேன்னு வசனமெல்லாம் பேசினேன் அப்பொறம் கொஞ்ச நேரம் பேசுனோம் என்னோட நிலைமை அன்னைக்கு நடந்தது எல்லாம் சொல்லி மாமாவ சம்மதிக்க வச்சேன் அவரும் என்னோட உண்மையான காதல புரிஞ்சுகிட்டு முழு மனசோட உன்னை எனக்கு கல்யாணம் பண்ணித்தாரேன்னு சொல்லிட்டாரு" என்று சிரித்து கொண்டே கூறினான்.

இனியன் கூறியதை கேட்ட மகிழ்நிலா "டேய் உண்மைய சொல்லு எனக்கு வேற எங்கயோ இடிக்குது என்னோட அப்பா காரணமே இல்லாம உன்னை கூப்பிட்டிருக்க மாட்டாரு அதுவும் நீ அப்படி நடந்துகிட்ட அப்பறமும் உன்னை கூப்பிட்டு பேசிருக்காருன்னா வேற என்னமோ இருக்கு என்னடா அது உண்மைய சொல்லுடா" என்று சந்தேகமாக கேட்டாள்.

இனியனோ இளித்துக்கொண்டே "அதுவா பேபி அன்னைக்கு உங்கிட்ட இருந்து ஒரு திருடன் பேக்க புதுக்கிட்டு போனான்ல".. மகிழ்நிலா "இல்லை நீங்க புடுங்கிட்டு ஓட வச்சீங்க".. இனியன் "பேபி நீ ரொம்ப அறிவாளி பேபி சரியா கண்டுபிடிச்சுட்டா அன்னைக்குதா நா உங்க அப்பா கிட்ட பேசும் போதுகூட நீ என்னை இன்னும் நெனச்சுக்கிட்டு இருக்கத்தாலதா இன்னும் நா கொடுத்த மோதிரத்தை கழட்டாம இருக்கன்னு சொன்னேன்லா அதுலதா நீ இன்னும் என்னை லவ் பன்றன்னு நம்பி நீ ஹாப்பியா இருக்கணும்னு நம்ம கல்யாணத்துக்கு உன்னோட அப்பா சம்மதிச்சாரு" என்று கூறுபவனை நிலா பத்திரகாளியாக மாறி முறைத்து கொண்டிருந்தாள்.

அருகில் இருந்த கட்டையை எடுத்தவள் "ஏண்டா டேய் நா என்னோட முதல் மாச சம்பளத்துல வாங்குன என்னோட மோதிரத்தை நீ வாங்கி கொடுத்தாதுனு வாய்க்கூசாம போய் சொல்லுற நானும் நீ என்னடா சொல்லுறன்னு முழிச்சுகிட்டு இருக்கேன் அதுக்குள்ள உன்னோட ஆளு வந்து என்னோட பேக் புடுங்கிட்டு போய்ட்டான் நீ என்னடானா அத வச்சே என்னோட அப்பாவை ஏமாத்திருக்க பிராடு பிராடு மோதிரம் வாங்கித்தார மூஞ்சிய பாரு இது வரையும் எனக்கு ஒரு குச்சிமிட்டாய் கூட வாங்கி கொடுத்ததில்ல இதுல மோதிரம் வாங்கி கொடுத்தேன்னு எங்க அப்பாவை ஏமாத்திருக்க என்று கட்டையால் அடித்தாள்".

இனியனை பார்த்த மாயதீரன் "அடபாவி நான் கூட என்னுடைய நிலா செல்லம் உனக்காக வருந்துவதாக தவறாக நினைத்து விட்டேனே ஆனால் நீ அனைவரது காதிலும் பூவை சுற்றிவிட்டாயேடா பாவி" என்று புலம்பி கொண்டிருக்க மாயதீரனை பார்த்து சிரித்தாள் மைத்ரா, மைத்ராவின் முகத்தில் புன்னகையை கண்டவன் அவளின் புன்னகையில் முழுதாய் தன்னை தொலைத்தான், மைத்ராவோ மாயதீரனின் பார்வையில் மாற்றம் உணர்ந்து பாவையவள் தலைகுனிந்தாள், இவர்களின் இந்த அழகிய தருணத்தை கலைத்தது இனியன் நிலாவின் கையில் உள்ள கட்டையால் அடிவாங்கி அலறும் சத்தம்.

தன்னால் முடிந்த அளவு இனியனை அடித்தவள் "மரியாதையா ஓடிரு எனக்கு உன்மேல கொஞ்ச கூட நம்பிக்கையில்லை வாய திறந்தாலே பொய்தா ஆனா எனக்கு ஒண்ணுதா புரியல இவ்வளவு விளையாட்டுத்தனமா பிராடா இருக்க நீ எப்படி இவ்வளவு பெரிய சர்ஜன் ஆனான்னு அது மட்டுமில்லாம எப்படி சர்ஜரி பண்ணும்போது மட்டும் அவ்வளவு பொறுப்பா இருக்கன்னு" என்று கேட்டவுடன் இனியன் கண்கள் கலங்கின.

இனியன் கலங்கிய கண்களுடன் "நா டாக்டர் ஆகணும்கிறது என்னோட கனவுயில்லை என்னோட அம்மாவோட கனவு சின்ன வயசுல இருந்து என்னை டாக்டர் ஆகணும்ன்னு சொல்லி சொல்லி வளத்தாங்க என்னோட பனிரெண்டாவது எக்ஸாம் எல்லாம் முடிஞ்சு நா லீவ்ல இருந்தப்போ ஒரு நாள் அம்மா அப்பா போன கார் ஆக்சிடண்ட் ஆகி அப்பா அந்த இடத்துலயே இறந்துட்டாங்க அம்மா மட்டும் உயிர கைல பிடிச்சுக்கிட்டு முகமெல்லாம் ரெத்ததோட உடம்பெல்லாம் அடிபட்டு என்னையே பாத்துகிட்டு இருந்தாங்க அவுங்களுக்கு டாக்டர் டிரீட்மென்ட் கொடுத்துட்டு ஒரு சின்ன ஆபரேஷன் பண்ணா அம்மாவை காப்பாத்திரலாம்னு சொன்னாரு எங்க கிட்ட பணத்துக்கு குறையில்லை அதனால அம்மாக்கு உடனே ஆபரேஷன் பண்ண சொன்னேன், ஆனா ஆபரேஷன் நடக்கும் போது அந்த டாக்டர்க்கு வீட்ல ஏதோ ப்ரோப்லேம்ன்னு ஆபரேஷன்ல கவனமில்லாம தப்பா ஆபரேஷன் செஞ்சு என்னோட அம்மா இறந்துட்டாங்க அதுனாலதா, எந்த ஆபரேஷன் செஞ்சாலும் நா கவனமா பன்றேன் அந்த நேரத்துல மட்டும் எதை பத்தியும் யோசிக்காம சீரியஸா இருக்கேன்" என்று இனியன் தன் கன்னத்தில் வழியும் கண்ணீரை துடைத்து கொண்டு கூறினான்.

இனியன் கூறி முடித்ததும் அவனை கட்டியணைத்து இனியனின் நெஞ்சின் மீது தஞ்சம் கொண்ட மகிழ்நிலா "என்னை மன்னிச்சிரு பேபி இனிமே நா உன்னை விட்டு எங்கயும் போக மாட்டேன் நீ இனிமே அழக்கூடாது சரியா என்னோட இனி செல்லம் சிரிச்சு கிட்டே இருக்கனும்" என்று கூறி இனியனை குனிய வைத்து அவனது நெற்றியில் தன் முத்திரையை பதித்தாள்.
 
#8
காதல் மெய்ப்பட 7


இனியனின் கண்ணீரில் கரைந்த மாயதீரன் அவர்களின் காதலை எண்ணி மெல்லியதாக புன்னகைத்து கொண்டே மைத்ராவை பார்த்தான் அவளது விழிகளும் கண்ணீரில் நனைந்திருக்க மைத்ராவின் கரம் பற்றிய மாயதீரன் "நீ கூறியது உண்மையே காதல் இன்னும் பலரிடம் உயிர்ப்புடனே உள்ளது தன்னவனின் விழிகளில் நீரை கண்ட பெண்ணவளின் காதல் உள்ளம் அவனது தவறுகள் யாவும் மறந்து அவனுக்கே அன்னையாகும் அதிசியம் காதலில் மட்டுமே நிகழும்" மாயதீரனின் கரத்தை மேலும் அழுத்தி பிடித்த மைத்ரா "உயிர்கள் தோன்றிய நொடி உண்டானது காதல் உலகம் மொத்தமாக அழிந்தால் மட்டுமே காதல் அழியும், உயிர்கள் யாவும் அழிந்தாலும் நினைவு சின்னங்களாக காதல் என்றும் உயிர் வாழும்."

இனியனையும் அவனது நெஞ்சத்தில் தஞ்சம் கொண்டிருந்த மகிழ்நிலாவையும் பார்த்த மைத்ரா "நான் வென்றுவிட்டேன் அவர்கள் இணைந்து விட்டார்கள் மீண்டும் வாய்ப்பிருந்தால் சந்தீப்போம்" என்று கூறிவிட்டு மறைய போனவளின் கரம் பற்றிய மாயதீரன் "காதலின் தேவதையே போட்டியில் வென்ற தாங்கள் தோற்ற என்னிடமிருந்து எதுவும் பெறாமல் செல்கிறீர்கள்" மாயதீரனின் கரத்திலிருந்து தனது கரத்தை விடுவித்தவள் "காதல் என்னும் உணர்வை நீ முழுதாய் உணர்ந்து கொண்டதே போதும் அதை விட எனக்கு வேறு எதுவும் தேவையில்லை" என்று கூற மாயதீரனோ "காதலை முழுதாய் உணர்ந்ததால்தான் கூறுகிறேன் உன்னிடம் ஆயுள் முழுதும் அடிமையா வாழ வேண்டுமென்று உன் அடிமையாக ஆசையடி" என்று காதலோடு கூறுபவனை பார்த்து கொண்டே தன் விழியில் கோர்த்த கண்ணீரை துடைத்து கொண்டு "மற்றவரின் காதலுக்கு ஆதாரமாக இருக்க மட்டுமே எனக்கு உரிமையுள்ளது காதலிக்க எனக்கு உரிமையில்லை" என்று கூறிவிட்டு மறைந்து போனாள் மாயதீரணும் தன் உருவத்தை ஒரு முறை பார்த்து விட்டு வலி கலந்த புன்னகையை சிந்தியவாறு மறைந்து போனான்.

இனியன் மகிழ்நிலா ஜோடிகள் காதலில் திளைத்து மகிழ்ந்திருக்க விரைவாக அவர்களின் திருமண நாளும் வந்தது, திருமணத்தின் முதல் நாள் மகிழ்நிலைவை கல்யாண மண்டபத்தின் மாடியில் திருட்டுத்தனமாக பார்த்த இனியன் "மகி பேபி வழக்கத்தை விட இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்கடி செல்லம்" என்று அருகில் நெருங்க அவனது எண்ணம் புரிந்த மகிழ்நிலா கையில் இருந்த சிறிய அளவிலான பட்டன் கத்தியை அவன் முன்பு நீட்டி "டேய் நீ யாருன்னு எனக்கு நல்லா தெரியும் மகனே ஒழுங்கா பின்னாடி போடா என்று மிரட்ட இனியனோ "அடிபாவி கட்டிக்க போறவேன்கிட்டயே இப்படி கத்திய நீட்டுறியேடி" என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு கேட்க மகிழ்நிலா இனியனின் கன்னத்தை கிள்ளி "மாமா நீ என்னதா சீன் போட்டாலும் எல்லாம் கல்யாணத்துக்கு அப்பொறம்தா" என்று கூறி சிரித்தாள்.

இவர்களின் கல்யாணத்தை காண வந்திருந்த மாயதீரனும் மைத்ராவும் இவர்களின் செல்ல சீண்டல்களை ரசித்து கொண்டிருந்தனர், அப்போது இனியனின் மொபைல் ஒலியெழுப்ப இனியனின் பாக்கெட்டில் இருந்து அவனது மொபைலை எடுத்த மகிழ்நிலா அதில் விஷ்ணுவின் பெயரை பார்த்துவிட்டு மொபைலை ஸ்பீக்கரில் போட விஷ்ணு போதையில் உளற ஆரம்பித்தான் "டேய் இனியா பசங்க எல்லாம் சரக்கு பத்தலன்னு சொல்லுறாங்கடா நீ போய் இன்னும் ஒரு பத்து பாட்டில் வாங்கிட்டுவாடா" என்று கூற இனியன் முறைக்கும் மகிழ்நிலாவை பார்த்து சிரித்து சமாளித்தான்.

இனியன் "டேய் விஷ்ணு மாடே நா மகி கூட இருக்கேன்டா அவுங்களுக்கு வேணும்னா நீ போய் வாங்கி குடுடா" என்று கூற விஷ்ணுவோ "டேய் துரோகி என்னோட சங்கவி டார்லிங்க என்கிட்ட இருந்து பிரிச்சிட்டு நீ மட்டும் ஹாப்பியா இருக்க என்னோட சங்கவி டார்லிங் என்னடானா உங்க கல்யாணம் நடந்ததும்தா என்னோட பேசுவேன்னு சொல்லிட்டா நீ என்னடானா நிலாகிட்ட உன்னோட அம்மா செண்டிமெண்ட் அதுஇதுன்னு பொய்யா சொல்லி நிலாவ கரெக்ட் பண்ணிட்ட உண்மைய சொல்லுடா அம்மகாகவா நீ ஆபரேஷன் பண்ணும்போது அப்படி இருக்க ஒழுங்கு மரியாதையா என்னோட சங்கவி டார்லிங்க என்னோட சேர்த்து வச்சிருடா என்று போதையில் உளறி கொண்டிருக்க" இனியன் மகிழ்நிலாவின் கையிலிருந்த மொபைலை புடுங்கி அழைப்பை துண்டித்தான்.

மகிழ்நிலா இனியனை பார்த்து முறைத்து கொண்டிருக்க மாயதீரனும் மைத்ராவும் அன்று அவன் கூறியது உண்மையில்லையா என்ற அதிர்ச்சியில் இருந்தனர், மகிழ்நிலா இனியனை முறைத்து கொண்டே "உண்மைய சொல்லுடா அன்னைக்கு சொன்னது பொய்யா" என்று கேட்க தனக்கு முன்பு பத்திரகாளியை போன்று நின்று கொண்டிருப்பவளை கண்டு அஞ்சிய இனியன் "பேபி நா சொன்ன எல்லாம் பொய்யில்ல அப்பா அம்மாக்கு ஆக்சிடன்ட் ஆனது எல்லாம் உண்மைதா ஆனா அக்சிடன்ட்ல அப்பாவோட சேர்த்து அம்மாவும் அதே இடத்துலேயே இறந்துட்டாங்க" என்று கூறுபவனை பார்த்து பாவமாக இருந்தாலும் தன்னிடம் பொய் கூறியதால் அவனை முறைத்து கொண்டிருந்தாள்.

மகிழ்நிலா முறைத்து கொண்டே "நீ சொன்னது பொய் சரி அப்பொறம் ஏன்டா ஆபரேஷன் தியேட்டர்குள்ள வரும் போது மட்டும் மொறச்சுக்கிட்டு அவ்வளவு சீன் போடுற என்னை கூட நிறைய டைம் ஆபரேஷன் தியேட்டர்ல வச்சு திட்டிருக்க" என்று கேட்டவுடன் இனியன் "அதுவா எனக்கு உண்மையா டாக்டர் படிக்க விருப்பமில்லை என்னோட அம்மாதா என்னை டாக்டர் படிக்க வைக்க ஆசைப்பட்டு என்னை மெடிக்கல் காலேஜ்ல சேர்க்க எல்லாம் பண்ணாங்க அந்த டைம்லதா அவுங்களுக்கு ஆக்சிடென்ட் ஆச்சு வேற வழியில்லாம நா மெடிக்கல் படிக்க வேண்டியதா போச்சு ஆனா எனக்கும் பிளட்டுக்குமே சுத்தமா ஆகாது, எப்படியோ உருண்டு பெரண்டு டாக்டர் படிச்சு முடிச்சா என்னோட சித்தி வந்து உன்னோட அம்மா உன்னை பெரிய சர்ஜன் ஆக்க ஆசைபட்டான்னு சொல்லி MD படிக்க சொல்லி அவுங்களே அதுக்கான எல்லா ஏற்படும் பண்ணிட்டாங்க நானும் வேற வழியில்லாம MD படிச்சேன் ஆனா எனக்கு ரெத்தத்த பாத்தாலே அள்ளுவிடும் இதுல உடம்ப கிழிச்சு இதயத்தை ஆபரேஷன் பண்ண சொன்னா எப்படி இருக்கும் அதா ஆபரேஷன் பன்றதுக்கு முன்னாடி தியானம் செஞ்சு என்னை தயார்படுத்திகிட்டு அப்படியே பயத்த வெளிய காட்டாம கோபமா முகத்தை வச்சுக்கிட்டு சமாளிப்பேன்" என்று கூறுபவனை பார்த்து மகிழ்நிலாவிற்கு என்ன கூறுவதென்றே புரியவில்லை.

இனியனை பார்த்து பாவமாக இருந்தாலும் அன்று இவன் கூறியதற்காக தான் அழுதது நினைவு வர "டேய் உங்க அம்மாவை பத்தி பேசும்போது அழுகலாம் செஞ்சனேடா" என்று கூறுபவளை பார்த்து இனியன் சிரிக்க கடுப்பான மகிழ்நிலா "என்னை பாத்த உனக்கு நக்கலா இருக்க மகனே இருடா கல்யாணத்தை நிறுத்துறேன்" என்று செல்பவளை பின்தொடர்ந்தான்.

இனியனின் நிலையை பார்த்து மாயதீரன் சிரித்து கொண்டே மைத்ராவை பார்க்க அவள் மாயதீரனை பார்த்து முறைக்கவும், மைத்ரா முறைப்பதன் காரணம் தெரியாமல் மாயதீரன் மைத்ராவிடம் "காதல் தேவதையே ஏன் இப்படி முறைக்கிறீர்கள் நான் என்ன செய்தேன்" என்று குழப்பத்தோடு கேட்க மைத்ராவோ "ஒரு மானிடன் தனது காதலுக்காக எவ்வளவு போராடுகிறான் ஆனால் சில ஜென்மங்கள் இருக்கின்றன் தன் காதலை சொல்லவும் தைரியமின்றி" என்று கூறிவிட்டு விலகி நடக்க முற்பட மைத்ராவின் கரத்தினை பிடித்த இழுத்த மாயதீரன் அவளை தன் மார்போடு சேர்த்து இருக்கி அணைத்து அவளது இதழில் தன் இதழ் கொண்டு தன் காதலை கூற ஆரம்பித்தான்.

தன் காதலை தன்னவளுக்கு முழுதாக உணர்த்திவிட்டு அவளது இதழுக்கு விடுதலை கொடுக்க காதலின் தேவதையோ முதல் முறை காதலை முழுதாய் உணர்ந்தாள். இவர்கள் தன்னிலை அடைந்து திரும்பி பார்க்க இனியனும் தன்னவளின் இதழ்களில் தன் இதழ் கொண்டு தன் காதலை உணர்த்த தயாராகினான். அவ்விரு ஜோடிகளின் இந்த அழகிய நிலையை கலைக்க மனமின்றி நிலவும் மேகதின் பின் மறைந்து கொண்டது நாமும் அந்த நிலவோடு சேர்த்து இவ்விரு ஜோடிகளிடமிருந்து விடைபெறுவோம்...