அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

காதல் செய்வேன் கட்டளைப்படி - கதை திரி

Harini Madhuravalli

Moderator
Staff member
#21
காதல் 8
வழக்கம் போல் இரவு உணவை மாறன் குகா, இருவரும் சேர்ந்து தயாரித்து உண்டுவிட்டு, பால்கனியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்..
“நம்ம மேரேஜுக்கு முன்னாடி எடுத்த கேஸ்.. இன்னும் இழுக்குது..” மாறன் கூற,
“என்ன கேஸ்? அடிக்கடி லேண்ட் பார்க்க போறேன்னு சொல்வீங்களே அதுவா?” என்றாள் குகா..
“யஸ் அதே தான்.. நார்மல் கேஸ் தான்.. ஆப்போசிட் சைட் ரொம்ப இழுத்தடிக்கிறாங்க..”
“நேர்மை இருக்க இடம் கண்டிப்பா ஜெயிக்கும்.. நீங்க கவலைப் படாதிங்க.. சீக்கிரம் எல்லாம் சரி ஆகிடும்..” அவள் ஆறுதலாக கூற
“ஹே ஹே.. நீ என்ன ஆபோசிட் சைட் ஜெயிப்பாங்கன்னு சொல்ற?” என்று முறைத்தான் மாறன்.. குகா புரியாமல் அவனை பார்த்தாள்.
“என்ன முழிக்கிற?”
“நீங்க கேஸ்ல வின் பண்ணுவீங்கன்னு தானே நான் சொன்னேன்.. நீங்க ஏன் வேற மாதிரி சொல்றீங்க?”
“உண்மை இருக்கப் பக்கம் தான் ஜெயிக்கும்ன்னு சொன்ன தானே..”
“ஆமா..”
“ஆபோசிட் சைட் தான் அப்போ வின் பண்ணுவாங்க..”
“என்ன சொல்றீங்க? அப்போ நீங்க தப்பானவங்களுக்காக வாதாடுறீங்களா?” என்றாள் அதிர்ச்சியாக
“தப்பானவங்க இல்ல.. ஆப்போசிட் பார்ட்டியோட நிலத்துல கொஞ்சத்தை என் கிளைன்ட் அபகரிச்சிருக்கார்.” என்றான் சாதாரணமாக.
“என்ன சாதாரணமா சொல்றீங்க.. தப்பு உங்க கிளைன்ட் மேல தானே.. அப்போ அவருக்காக நீங்க ஏன் வாதாடுறீங்க?” அதிர்ச்சி விலகாமலே அவள் கேட்க, இப்பொழுது மாறன் அவளை புரியாத பார்வை பார்த்தான்..
“அந்த பார்ட்டி ஆல்ரெடி என் பார்ட்டி கிட்ட இருந்து நிறைய பணம், நகைன்னு அடிச்சிருக்கான்.”
“அதுக்கும் இதுக்கும் காம்பன்சேட் ஆகுதுன்னு சொல்ல வரீங்களா?”
“என்ன குகா பேசுற? அவன் மேலையும் தப்பு இருக்கு.. இவன் மேலையும் தப்பு இருக்கு.. என்கிட்ட வந்திருக்க கிளைன்ட்டுக்கு ஆதரவா தானே நான் பேச முடியும்..”
“தப்பு செய்யுரவனுக்காக ஏன் சப்போர்ட் பண்றீங்க?” சற்று கோபமாக அவள் கேட்க
“என்னை நம்பி வந்திருக்காங்க.. அவனுக்கு சப்போர்ட் பண்ணாம வேற என்ன பண்ண சொல்ற?”
“எதுக்கு இந்த மாதிரி கேஸ் எடுக்குறீங்க? உண்மையா அவங்க மேல தப்பில்லாம வர கிளைன்ட்சுக்கு மட்டும் வாதாடலாம்ல..”
“அப்படி பார்த்தா நான் கோர்ட் பக்கமே இனி போக முடியாது.. இங்க எவன் தப்பே பண்ணாம இருக்கான்? எல்லாரும் ஏதோ ஒரு விதத்துல தப்பு செஞ்சவங்க தான்.. என் மேல நம்பிக்கை வெச்சு என்கிட்ட வரவங்களுக்கு நான் நேர்மையா இருக்கணும்னு நினைக்கிறேன்..”
“அப்போ பொய் சொல்லி தான் எல்லா கேசுலையும் வின் பண்றீங்க? சென்னைல பேமஸ் லாயர்னு பேரை இப்படி பொய் பித்தலாட்டம் செஞ்சு தான் வாங்கிருக்கீங்க.. அப்படி தானே..” என்றாள் கோபமாக
“குகா..” என்று கத்தியவன் பின் நிதானமாக “எந்த லாயருமே பொய் சொல்லாம கேசை ஜெயிக்க மாட்டாங்க புரிஞ்சிக்கோ.. பொய்மையும் வாய்மை இடத்தில்-ன்னு வள்ளுவரே சொல்லிருக்கார்..” என்றான்
“உண்மை ஜெயிக்க பொய் சொல்லலாம்.. நீங்க தப்பானவங்களை ஜெயிக்க வைக்க பொய் சொல்லிட்டு வள்ளுவர் சொன்னார் வாஞ்சிநாதன் சொன்னார்ன்னு வசனம் பேசாதிங்க..”
“சரி விடு.. நமக்குள்ள எதுக்கு ஆர்க்யூமேண்ட்.. இந்த பேச்சை விட்டுட்டு வேற பேசலாம்..” என்று அவன் பேச்சை மாற்ற
“மாறன் நீங்க இப்படின்னு என்னால நம்ப முடியலை..”
“ஹே என்ன நான் ஏதோ கொலை செஞ்சவனுக்கு விடுதலை வாங்கி கொடுக்குற மாதிரியே பேசுற.. நான் பாக்குறது புல்லா நார்மல் கேசஸ் தான்.. கிரிமினல் கேசுல பொய் சொல்லி குற்றவாளியை தப்பிக்க விட்ட ரேன்ஜூல நீ பேசுற..”
“எதுவா இருந்தாலும் தப்பு தப்பு தான்.. என் புருஷன் நேர்மையா வாதாடுறவர்ன்னு என்னால நாலு பேர்கிட்ட உங்களை பெருமையா பேச முடியுமா சொல்லுங்க?”
“குகா என்னை ரொம்ப கோபப்படுத்துற.. திரும்ப திரும்ப சொல்றேன்.. என்னை நம்பி வரவங்களுக்கு தான் நான் உண்மையா இருக்கணும்.. நம்ம நாட்டுக்கு விரோதமா நான் எந்த தப்பும் செய்யல.. இது ஜஸ்ட் அ லேன்ட் ராபரி கேஸ்.. இதுக்கு நீ இவ்வளவு சீரியஸ் ஆக தேவையே இல்லை..”
“ஜஸ்ட் அ லேன்ட் ராபரி..” என்று எகத்தாளமாக சொன்னவள்
“எனக்கு இது சுத்தமா பிடிக்கலை.. அதுக்கு அப்புறம் உங்க இஷ்டம்..” என்றவள் எழுந்து அறைக்குச் சென்று விளக்கை அணைத்து விட்டு படுத்துக் கொண்டாள்.
“ப்ச்..” என்று அலுத்துக் கொண்டவன் சிறிது நேரம் பால்கனியிலேயே அமர்ந்திருந்தான்.. நடுநிசி வேளையில் தான் உறங்கச் சென்றான்..
காலையில் முதலில் எழுந்த குகா, கிச்சனில் வேலையை செய்து கொண்டிருந்தாள்.. தினமும் அவள் எழும்போதே மாறனும் எழுந்து அவளிற்கு சமையலில் உதவி செய்வான்.. இரவு தாமதமாக தூங்கியதால் அவன் எழுந்து கொள்ளாமல் இருக்க, இவளோ
“நைட் சண்டை போட்டேன்னு பழி வாங்குறானா? தனியா எப்படி பிரேக் பாஸ்ட், லஞ்ச் ரெண்டையும் செய்யுறது..” என்று புலம்பியவாரே சாதத்தை வைத்தவள் காய்கறியை நறுக்கிக் கொண்டிருந்தாள்..
நேற்றே மாறன், அவனே இன்று சாம்பார் வைப்பதாக கூறியிருந்தான்.. இவள் வைக்கும் சாம்பார் தான் ரசமா(?) என்று சந்தேகப்படும் வகையில் இருக்குமே..
“வாய்கிழிய சாம்பார் செய்றேன்னு சொல்லிட்டு நல்லா குறைட்டை விட்டுட்டு தூங்குறதை பாரு..” என்று கருவிக் கொண்டே அவனை எழுப்ப அறைக்குச் சென்றாள்.
“என்னங்க..” என்று இருமுறை அழைத்தவள் அவன் அசையாமல் இருக்கவும், போர்வையை விலக்கி, “மாறன் எழுந்திருங்க.. டைம் ஆகிடுச்சு..” என
புரண்டு படுத்தவன், மெல்ல கண்ணை திறந்தான்.
“குட் மார்னிங்.. எழுந்திரிங்க..” என்றவள் ஜன்னல்களை திறந்து கொண்டிருந்தாள். பதிலுக்கு காலை வணக்கத்தை சொன்னவன் எழுந்து ரெப்ரெஷ் ஆக செல்ல, குகாவும் சமையல் அறைக்குச் சென்றாள்..
அவனுக்கு காபியை அவள் கலக்கிக் கொண்டிருக்கும் பொழுது சமையல் அறையின் உள்ளே மாறன் வர, அவன் கையில் கோப்பையை கொடுத்தவள், காயை வதக்கிக் கொண்டிருந்தாள்.
காபியை ஒரு மிடறு விழுங்கியவாறே, “சாம்பார் இன்னும் செய்யல போல..” குறும்பாக அவன் கேட்க
“நீங்க எதுக்கு இருக்கீங்க.. செய்ங்க..” என்றாள்
“நைட் போட்ட சண்டையை மறந்துட்டு மாறன் எழுந்திரிங்கன்னு நீ பாசமா என்னை எழுப்பும் போதே நான் உஷார் ஆகிருக்கணும்.. சாம்பார் செய்ய தான் எழுப்புனியாடி?” என்றவன் அவள் தலையில் வைத்திருந்த கிளிப்பை எடுக்க,
“அது எதுக்கு எடுக்குறீங்க.. கையை வெச்சுக்கிட்டு சும்மாவே இருக்க மாட்டீங்களா?”
“நீ சொல்லு குக்கிங் செய்ய தானே என்னை எழுப்புன?” அவன் விடாது அதையே கேட்க
“ஆமாடா.. அதுக்கு தான் எழுப்புனேன்.. என்னன்ற? போ, காய் எல்லாம் வெட்டி வெச்சுட்டேன்.. ஒழுங்க சாம்பாரும், இட்லியும் செஞ்சு வெச்சுடு.. நான் குளிக்கப் போறேன்..” என்று நகர்ந்தவளை, ஒரு கையால் பிடித்து இழுத்தான்.
“விடுடா லூசு பயலே..” அவன் கைகளில் இருந்து அவள் திமிர,
“முடியாதுடி செல்லக்குட்டி.. நைட் என்னை விட்டுட்டு தனியா நீ மட்டும் நல்லா தூங்குன, எனக்கு நீ இல்லாம தூக்கமே வரலடி.” என்றவன் விரிந்திருந்த அவள் கூந்தலில் ஒரு கையையும், அவள் இடையில் ஒரு கையையும் வைத்து அழுத்தினான்..
“இந்த ரெண்டு மாசமா தானே நம்ம ஒரே ரூம்ல இருக்கோம்.. இதுக்கு முன்ன எப்படி தூங்குனீங்கலாம்?” பேசிக் கொண்டே அவன் கையை இடையில் இருந்து எடுக்க அவள் முயற்சி செய்துக் கொண்டிருந்தாள்.
“இல்லாமலே வாழ்வது இன்பம்..
இருந்தும் இல்லை என்பது துன்பம்..
அஹிம்சை முறையில் நீயே கொல்லாதே..” அவள் காதில் இவன் பாட
“மாறன் உதை வாங்கப் போறீங்க.. ஆபீஸ்க்கு லேட் ஆகிடுச்சு.. காலங்காத்தால பாட்டு கச்சேரி நடத்திட்டு இருக்கீங்க.. விடுங்க..” என்றவள் அவனிடம் இருந்து விலகி குளிக்க சென்றாள்..
“இப்போன்னா டிமிலியோட போயிடும்.. நைட் வந்தேன் பிட்டு படம் தான்டி உனக்கு..” அவன் சத்தமாக கத்த
“போடாங்க.” என்ற அவளின் குரல் குளியல் அறையில் இருந்து வந்தது.
குகா தன்னுடன் எப்பொழுதும் போல் பேசுவதால் இனி தன்னுடைய வேலை சம்மந்தப்பட்ட விஷயங்களில் தலையிட மாட்டாள் என்று மாறன் நினைத்தான்.. அது அப்படி அல்ல என்று அவள் கூடிய விரைவில் அவனிடம் காட்டப் போகிறாள்.
***************
மாலை மாறன் வேலையை விட்டு வரும் பொழுது மணி எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.. மதியம் உண்டவன், அதற்கு பிறகு தேநீர் கூட அருந்தவில்லை.. கேஸ் விஷயமாக சுத்திக் கொண்டே இருந்தான்.. வீட்டிற்கு வந்தவன் அவனுடைய சாவியை தேட அது பையில் இல்லை.
‘எங்க வெச்சேன்.. எடுத்துட்டு போனேனா இல்லையா?’ என்று ஒரு நொடி யோசித்தவன், பின் காலிங் பெல்லை அழுத்தினான்..
இரண்டு நிமிடங்கள் ஆகியும் கதவு திறக்கப் படவே இல்லை.. அவனுக்கு இருந்த அலைச்சலில் குகா கதவைத் திறக்காதது கோபத்தை வர வைத்தது..
அவனும் விடாது ஒரு கையால் பெல்லை அழுத்திக் கொண்டே, மற்றொரு கையால் போனில் குகாவின் நம்பருக்கு கால் செய்து கொண்டிருந்தான்.. ஐந்து நிமிட காத்திருப்புக்கு பிறகு, குகா கதவை திறக்க
“எவ்வளவு நேரமா கதவை தட்டுறது.. அப்படி என்ன செஞ்சிட்டு இருக்க? ஆபிஸ்ல இருந்து வந்ததும் எரிச்சல் படுத்திகிட்டு.. ச்ச..” என்று கத்தியவன், குகா பதில் சொல்லுமுன் அவனின் அலுவலக அறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டான்..
அவன் கத்தியதில் சற்று பயந்த குகா, ‘ரொம்ப நேரமா பெல் அடிச்சிட்டு இருந்திருப்பார் போல.. அதான் இவ்வளவு கோபம்.’ என்று நினைத்துக் கொண்டாள்.
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#22
நேரம் ஆகியிருந்ததால், இரவு உணவை உண்கிறானா அல்லது டீ குடிக்கிறானா? என்று கணவனிடம் கேட்டுவிட்டு அதை தயாரிக்கலாம் என்று சோபாவில் அமர்ந்து அவன் வரவிற்காக காத்திருந்தாள்..
பத்து நிமிடங்கள் ஆகியும் அவன் வரவில்லை என்றதும், கதவை அவள் தட்ட,
“எதுக்கு இப்போ நொய் நொய்ன்னு கதவை தட்டிகிட்டு இருக்க?” என்றான் அதே எரிச்சலுடன்.
“இல்ல, டீ வேணுமா?” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள்
“எரிச்சல் பண்ணாம போ குகா.. அலைஞ்சு திரிஞ்சு வந்திருக்கேன்.. டீ வேணுமான்னு கேள்வி கேட்குற? ஏன் நான் என்ன சாப்பிடுவேன்னு உனக்கு தெரியாதா?”
“இல்லங்க.. லேட் ஆகிடுச்சு.. அதான் டின்னர் சாப்பிடுறீங்களா இல்ல டீ வேணுமான்னு கேட்க வந்தேன்..”
“எதாச்சும் சொல்லிட போறேன்.. போயிடு..” என்றதும், குகாவிற்கும் கோபம் வந்தது..
“இப்போ எதுக்கு கத்துறீங்க? ரெஸ்ட் ரூம்ல இருந்தேன்.. பெல் அடிச்சது கேட்கலை.. அஞ்சு நிமிஷம் தானே வெளியே நின்னீங்க.. ஏதோ மணிக்கணக்கா காக்க வெச்ச மாதிரி கத்துறீங்க.. உங்களோட கீ என்னாச்சு? அதை வெச்சு திறக்க வேண்டியது தானே?”
“கீயை மறந்து வீட்டுலையே வெச்சுட்டேன்..”
“மறந்து வெச்சுட்டு போனது உங்க மிஸ்டேக்.. உங்க ஆபிஸ் கோபத்தை எல்லாம் என் மேல காட்டாதிங்க.. எனக்கும் தான் ஆயிரம் டென்ஷன் இருக்கு.. நீங்க வீட்டுக்கு வரப்போ உங்களுக்கு காபி போட்டுக் கொடுக்க நானாச்சும் இருக்கேன்.. எனக்கு யார் இருக்கா? நானும் டயர்டா வந்து எல்லா வேலையும் செஞ்சிட்டு தானே இருக்கேன்.. வீட்டுல வெட்டியா இருக்க மாதிரியே பேசுறீங்க?”
“வார்த்தைக்கு வார்த்தை பதில் பேசு.. சாப்பாடும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்.. உன் மூஞ்சியைப் பார்க்கவே எரிச்சலா வருது.. நிம்மதியாவே வீட்டுல இருக்க விடுறது இல்லை..” மீண்டும் கத்திவிட்டு அவன் செல்ல,
குகாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.. கண்ணைத் துடைத்துக் கொண்டே தங்கள் படுக்கை அறைக்குச் சென்றவள் அழுதுக் கொண்டே படுத்திருந்தாள்..
வயிற்று வலி வேறு அவளைப் படுத்தி எடுத்தது.. மாதவிலக்கின் போது எப்பொழுதுமே குகாவிற்கு வயிற்று வலியும் அதோடு சேர்ந்து வாமிட்டிங், டயேரியாவும் இருக்கும்.. முதல் நாளோ இரண்டாவது நாளோ, ஏதோவொரு நாள் பாத்ரூமிற்கும் வாஷ்பேஷினிற்கும் நடந்துக் கொண்டே இருப்பாள்.. ஒரு நாள் மட்டும் இந்த தொல்லை அவளிற்கு..
மாறன் பெல் அடித்த சமையம், அவள் ரெஸ்ட் ரூமில் இருந்ததால் தான் உடனே வர முடியவில்லை.. இவளின் இந்த பிரச்சனை மாறனிற்கும் நன்றாகவே தெரியும்..
போன முறை அவள் இவ்வாறு வாந்தி எடுத்துக் கொண்டே இருக்கவும் அவனே சற்று பயந்து தான் போனான்..
“என்ன ஆச்சு? ஏன் இப்படி ரெஸ்ட்ரூம் போயிட்டே இருக்க.. சாப்பிட்டது எதுவும் ஒத்துக்கலையா?” என
“இல்ல.. எனக்கு பீரியட்ஸ் டைம்ல இப்படி டயேரியா, வாமிட் எல்லாம் இருக்கும்..” என்றாள் சோர்வாக..
“என்ன சொல்ற? இப்படி எல்லாமா இருக்கும்..” அவன் அதிரிச்சியாக வினவினான்..
அவனின் வீட்டிலும் இரண்டு பெண்கள் இருந்தனரே.. அவனுக்கும் இந்த நேரத்தில் வரும் வலிகளைப் பற்றி நன்றாக தெரியும்.. வயிற்று வலி என்று சிந்து அம்மாவிடம் கூறும் போது கேட்டிருக்கிறான்.. குகா வேறு மாதிரி சொல்லவும் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது..
“சிலருக்கு இப்படி ஆகும்..”
“டாக்டர் கிட்ட ட்ரீட்மெண்ட் எடுத்தியா?”
“இதுகெல்லாமா ட்ரீட்மெண்ட் எடுப்பாங்க.. இது எல்லா பொண்ணுங்களுக்கும் நடக்குற நார்மலான விஷயம்..” குகா கூறவும்,
“எது இப்படி வாந்தி எடுக்குறதா?” என்று முறைத்தான் மாறன்..
“நான் தான் சொல்லுறேன்ல.. சில பொண்ணுங்களுக்கு இந்த மாதிரி இருக்கும்.. எனக்கு ஒரு நாள் தான் இப்படி இருக்கும்.. நாளைக்கு சரி ஆகிடும்.. கேள்வியா கேட்காம என்னை ரெஸ்ட் எடுக்க விடுங்க..” என்றவள் படுத்துக் கொண்டாள்.
இந்த முறை உடல் வலியுடன், கணவனுடன் போட்ட சண்டை மனவலியையும் கொடுக்க, சோர்வுடனே உறங்கினாள்.
மறுநாள் சனிக்கிழமை அவளுக்கு விடுமுறை.. அவள் நல்ல உறக்கத்தில் இருக்க, கிச்சனில் ஏதோ உருட்டும் சத்தத்தில் கண் திறந்தவள் மணியைப் பார்க்க எட்டு என்று காட்டியது.. அவள் ரெப்ரெஷ் ஆகி வருவதற்குள் மாறன் வீட்டில் இருந்து கிளம்பியிருந்தான்..
“சொல்லிட்டு போகணும்னு கூட தோணலை.. நைட் வரட்டும் இருக்கு..” என்று வாய்விட்டு அவனை திட்டிக் கொண்டே சமையல் வேலைகளை செய்தாள்.
மாலை அவன் வரும்பொழுது, குகா முகத்தை துப்பட்டாவால் மூடிக் கொண்டு கண்கள் மட்டும் தெரிவது போல் கட்டியிருந்தாள்.. வெயிலில் செல்லும் பெண்கள் பொல்யூஷனுக்காக முகத்தை மறைப்பது போல் செய்திருந்தாள்..
வீட்டிற்கு வந்த மாறன், மனைவியைப் பார்த்து, ‘இந்த நேரத்துல எங்க கிளம்புறா?’ என்று யோசித்தவாறே, ரெப்ரெஷ் செய்துவிட்டு வர, டீபாயில் காபியை வைத்திருந்தாள் குகா.
“ஏன் கைல கொடுக்க மாட்டீங்களோ?” என்று அவளை முறைத்துக் கொண்டே அவன் அதை எடுத்துப் பருகினான்..
“வெளியே எங்கேயாச்சும் போறியா? லேட் ஆகிடுச்சு.. ரொம்ப அவசரமா?” என்றான் கடிகாரத்தில் மணியைப் பார்த்துக் கொண்டே..
“...”
“உன்னை தான் கேட்குறேன்.. எங்க கிளம்புற? எதாச்சும் வாங்கணும்னா இருட்டுறதுக்கு முன்ன போயிருக்க வேண்டியது தானே.. இல்லை எனக்காச்சும் போன் செஞ்சு சொல்லியிருக்கலாம்ல..” அவன் குரலை உயர்த்த,
“சும்மா உங்களுக்கு மட்டும் தான் கத்த தெரியும்-ன்னு கத்தாதிங்க.. அப்புறம் நானும் கத்துவேன்..” கையை நீட்டி அவள் மிரட்டினாள்.
“கேட்ட கேள்விக்கு பதில் சொன்னா, நான் ஏன் கத்தப் போறேன்..”
“எங்கேயும் போகல..” என்றாள் சுவற்றை பார்த்துக் கொண்டே
“அப்புறம் எதுக்கு இப்படி முகமூடி கொள்ளைக்காரி மாதிரி மூஞ்சியை மறைச்சிட்டு இருக்க..”
“நீங்க தானே என் மூஞ்சியைப் பார்க்க எரிச்சலா வருதுன்னு சொன்னிங்க.. உங்க மூடுக்கேத்த மாதிரி எல்லாம் என்னால மூஞ்சியை வெச்சுக்க முடியாது.. அதுதான் இப்படி மூடி இருக்கேன்.. இனி உங்களுக்கு அந்த எரிச்சல் வராது.. என் மூஞ்சியை இனிமே இப்படி மறைச்சுக்குறேன்.. கஷ்டப்பட்டு என்னை ஒன்னும் நீங்கப் பார்க்க வேண்டாம்..” என்றாள் கோபமாக..
முதலில் அவள் சொன்னதை புரியாமல் பார்த்தவன், பின்பு புரிந்ததும் விழுந்து விழுந்து சிரித்தான்..
“இங்க என்ன காமெடி ஷோவா நடக்குது.. இப்போ எதுக்கு இப்படி சிரிக்கிறீங்க?” மாறனை அவள் முறைத்துக் கொண்டே கேட்க, சிரிப்புடனே மனைவியை இழுத்து தன் மடி மீது அமர வைத்துக் கொண்டான்.
“ப்ச்.. விடுங்க என்னை.. என் மூஞ்சியைப் பார்க்க எரிச்சலா இருக்கும்.. ஆனா மடியில உட்கார வெச்சுக்க மட்டும் இனிக்குதோ..”
அவள் கூறுவதை கண்டுக் கொள்ளாமல் அவள் துப்பட்டாவை எடுத்துவிட்டு, அவள் உதடுகளை அவன் நெருங்க
“டேய் ப்ராடு.. விடுடா என்னை.. கோபம் வந்தா நல்லா திட்ட வேண்டியது இப்போ வந்து என்ன பண்ற? விடு”
“நேத்தே என்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகிட்ட.. நேத்து கொடுக்க வேண்டிய டிமிலியை இப்போ கொடுடி..”
“முடியாது டா..”
“சரி நான் கொடுக்குறேன்..” என்றவன் அவள் இதழ்களை நெருங்க, அவன் வாயிலேயே தன் கையால் அடித்தாள் குகா..
“ஸ்.. எப்பப்பாரு என் வாயிலேயே அடிக்கிறடி..” உதட்டை தேய்த்து விட்டுக் கொண்டே கூறினான்.
“இன்னும் நாளு போடுறேன்.. நேத்து என்ன கத்து கத்துன.. காலைல சொல்லாம கூட வேலைக்கு கிளம்பி போயிட்ட.. உன்னை எல்லாம் உரிச்சு உப்புக்கண்டம் போட்டாக் கூட தப்பில்லை..”
“ஹிஹி.. நேத்து செம பசி, கேஸ் டென்ஷன் வேற.. நீயும் லேட்டா கதவைத் திறந்தியா அதான் எல்லாம் சேர்ந்து உன்னை திட்டிட்டேன்.. சாரி..”
“ஏன் லேட்டா திறந்தேன்னு நான் சொல்லுறதுக்குள்ள கத்திட்டு உங்க ரூமுக்கு போயிட்டீங்க.. என்னை பேசவே விடலை.. பாவமே பசிக்கும்னு என்ன சாப்பிடுறீங்கன்னு கேட்டா அதுக்கும் கத்துறீங்க.. ரெண்டு மாசம் தான் ஆகுது நமக்கு கல்யாணம் ஆகி.. அதுக்குள்ள என் மூஞ்சியைப் பார்க்க பிடிக்கலை உங்களுக்கு..” என்றவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள,
“சாரிடா.. வெளியே இருக்க டென்ஷனை உன் மேல காட்டிட்டேன்.. இனி இப்படி நடக்காது.. ப்ளீஸ் மன்னிச்சுடு..” என்றான் பாவமாக..
“ஓகே.. இனிமே இப்படி பண்ணாதிங்க..” என்று உடனே அவனை மன்னித்தாள்.
“சரி எங்கேயாச்சும் வெளியே போகலாமா? நைட் ஷோ..” அவன் ஆர்வமாக வினவ
“ஐயோ என்னால முடியாது.. பீரியட்சோட நைட் ஷோக்கா.. சான்சே இல்ல..” என்றாள் வேகமாக.. அவனுக்கு அப்பொழுது தான் முதல் நாள் அவள் ரெஸ்ட் ரூமில் இருந்தேன் என்று கூறியதன் காரணம் புரிந்தது..
“நேத்து அதான் ரெஸ்ட் ரூம்ல இருந்தியா?”
“ம் ஆமா..” என்றவள் கணவனின் தோளில் சாய்ந்துக் கொண்டாள்..
“சாரிடா.. ஆல்ரெடி நீயே பெயின்ல இருந்திருப்ப, நானும் உன்னைக் கஷ்டப்படுத்திட்டேன்..” தோளில் சாய்ந்திருந்தவளை அணைத்துக் கொண்டே கூறினான்..
“விடுங்க.. நீங்க தெரிஞ்சேவா செஞ்சீங்க..” என்றவளும் அவன் அணைப்பில் நன்றாக ஒண்டிக் கொண்டாள்.
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#23
காதல் செய்வேன் கட்டளைப்படி...
காதல் 9
அகல்யாவின் கை விரலில் கவின் மோதிரத்தை போட வெட்கத்துடனும் சந்தோஷத்துடனும் கையை நீட்டிக் கொண்டிருந்தாள் அகல்யா..
ஆம்.. இன்று இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம்.. அன்று அகல்யாவை ஹாஸ்டலில் சந்தித்தப் பின்பு, கவினுடைய எந்த அழைப்பையும் அவள் ஏற்கவில்லை.. காய்ச்சலும் விடாது அடித்துக் கொண்டிருக்க, அகல்யாவின் தாய் மதுரையில் இருந்து வந்து மகளை தன்னுடன் ஊருக்கு அழைத்துச் சென்றார்..
ஒரு வாரம் சென்ற பின்பே அவளிற்கு காய்ச்சல் விட்டது.. பத்து நாட்கள் விடுமுறைக்குப் பின் அன்று அவள் அலுவலகம் சென்ற போதும் சரி அதற்கு பிறகு கவின் அவளிடம் பலமுறை பேச வந்த போதும் சரி, அவனின் முகத்தைக் கூட அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை..
குகாவின் மூலம் தூது விட்டுப் பார்த்தான். அதற்கும் பயனில்லாமல் போகவே, வீட்டில் தங்கள் காதலைப் பற்றி மெதுவாக தாயிடம் கூறினான்.. மகனின் காதல் கவினின் தாய்க்கு அதிர்ச்சியாக இருந்தது.. அவன் நினைத்தது போல் அவர் அவனை கேள்வி எதுவும் கேட்கவில்லை..
யோசித்துவிட்டு சொல்வதாக கூறியவர், இரண்டு தினங்கள் சென்ற பின்,
“தங்கச்சிக்கு முடிச்சிட்டு, அந்த பொண்ணு வீட்ல பேசுவோமா?” என
கவின், அகல்யாவின் வீட்டு சூழ்நிலையை சொன்னான்..
“சும்மா ரெண்டு பேர் வீட்டுலையும் சொல்லி மட்டும் வெச்சிப்போம் மா.. தங்கச்சிக்கு முடிக்காம நான் செய்ய மாட்டேன்..” அவன் உறுதியான பதிலில், அவருக்கும் மறுப்பு சொல்ல முடியவில்லை..
எங்கே முடியாது என்று கூறினால், காதலித்த பெண்ணோடு தனியாக சென்றுவிடுவானோ, அவன் அப்படி சென்றுவிட்டால் பெண்ணை எப்படி கரை சேர்ப்பது என்கிற பயமும் அவரை சரி என்று சொல்ல வைத்தது..
இந்த விஷயத்தை அகல்யாவிடம் கூறியவன் அவள் பதிலை எதிர்பார்த்து காத்திருக்க, அவள் ஒன்றும் கூறாமல் சென்று விட்டாள்..
மறுபடியும் அவன் குகாவின் மூலம் தூது போக வேண்டியதாக இருந்தது..
“எங்க வீட்டுல பேசி இப்போ நான் ஓகே வாங்கிட்டேன்.. உங்க ப்ரெண்ட் இப்படி பண்றா? நீங்களாச்சும் அவகிட்ட சொல்லக் கூடாதா?”என
குகா பேசி பேசி அகல்யாவை சமாதானம் செய்து, அவள் வீட்டில் விஷயத்தை சொல்ல வைத்தாள்.. அகல்யாவின் தாய்க்கு தான் பெருத்த அதிர்ச்சி, தன் மகள் காதலிக்கிறாளா? அதை அவரால் நம்பவே முடியவில்லை..
போனில் அகல்யா விவரம் கூறியதும் திட்ட ஆரம்பித்தவர் நிச்சயம் முடியும் வரையிலுமே அடிக்கடி குத்தி காட்டிக் கொண்டே இருந்தார்..
கவின் அவன் தாயுடனும், பெரியவர்கள் இருவருடனும் வந்து அகல்யாவை பெண் கேட்டான்.. தங்கையின் திருமணம் முடிந்த உடனே தங்களின் திருமணத்தை முடிக்கலாம் என்று அவன் கூற, அகல்யாவின் அம்மா, முன்னமே கணவரிடம் இதைப் பற்றி பேசியிருந்தார்..
அகல்யாவும், கவினின் வீட்டுச் சூழ்நிலையைப் பற்றி முன்பே கூறியிருந்ததால், “நிச்சயம் மட்டுமாச்சும் இப்போ வெச்சுக்கலாம்ன்னு கேட்டுப் பார்ப்போம்”
அதன் படியே அகல்யாவின் தந்தைக் கேட்க, பெரிதாக இல்லாமல் இருவீட்டினர் மட்டுமே சூழ நிச்சயம் வைத்திருந்தனர்..
தலை தீபாவளிக்கு என்று மாறனும் குகாவும் மதுரைக்கு வந்திருந்தனர்.. தீபாவளி முடிந்த இரண்டு நாளில் நிச்சயம்.. நிச்சயத்தை சிம்பிளாக வைத்திருந்ததால் குகாவின் வீட்டினருக்கு அழைப்பில்லை.. திருமணத்திற்கு முன்தினம் பெரிதாக நிச்சயம் செய்து கொள்ளலாம் என்றுவிட்டனர்.. அன்று மாலை தோழியை சந்திக்க அவள் வீட்டிற்கு சென்றாள் குகா..
“ஹாய் அத்தை.. ஹாய் மச்சான்..” என்று குரல் கொடுத்துக் கொண்டே அவர்கள் அருகில் சென்று அமர்ந்தாள் குகா..
“வாடிமா வா.. இப்போ தான் புது பொண்ணுக்கு நாங்களெல்லாம் கண்ணுக்கு தெரியுறோமா? வந்து இரண்டு நாள் ஆச்சு.. இன்னைக்கு தான் இங்க வர்ற?” என்று அகல்யாவின் தாய் குகாவுடன் சண்டைக்கு வர,
“மகளுக்கு நிச்சயம் வெச்சவுங்க, எங்களை கூப்பிட்டீங்களா? நியாயப்படி இந்த வீட்டு வாசலை நான் மிதிக்கக் கூடாது.. ஏதோ என் மச்சானோட அம்மாவா போயிட்டீங்கன்னு பார்க்க வந்தா ரொம்ப பேசுறீங்களே?”
“சும்மாவே வாய் எட்டூருக்கு நீளும்.. இப்போ கல்யாணம் ஆனதும் ரொம்ப பேசுற நீ..” என்றவர் அவளிற்கு குடிக்க கொடுக்க சமையல் அறைக்குச் சென்றார்..
“எங்க உங்க வீட்டு புதுப் பொண்ணு.. கண்ணுலையே காணோம்..” அகல்யாவின் தம்பியிடம் கேட்க
“கழுத கெட்டா குட்டிச் சுவர்.. போன் பேசிக்கிட்டு இருக்கா..” என்றான்..
“பாருடா.. அவ ரூம்ல தான் இருக்காளா?” என்று கேட்டுவிட்டு, அகல்யாவின் அறைக்குச் சென்றாள்..
பல நாட்களுக்குப் பின்பு இன்று தான் அவள் கவினுடன் பேசுகிறாள்.. இருவருக்கும் பேச நிறையவே விஷயங்கள் இருந்தது.. கோபத்தில் இருந்தவளை மலை இறக்குவதற்குள் கவினிற்கு போதும் போதும் என்றானது..
இரு வீட்டிலும் பேசி சம்மதம் வாங்கிய பின்பு இவளிடம் பேசினால்
“எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை.. நிறுத்துங்க..” என்றாள்
“அகல்.. விளையாடாத.. நம்ம வீட்டுல பேசி ஓகே வாங்குறதுகுள்ள போதும் போதும்னு ஆகிடுச்சி.. இப்போ இப்படி பேசுற?”
“நான் உங்களை பேச சொல்லலை..” முகத்தை தூக்கிக்கொண்டு அவள் கூற
“ரிவன்ஜா.. ப்ளீஸ் மா.. விட்டு்டு..”
“செல்பிஷ், ஜெல்லிபிஷ்ன்னு என்னலாம் பேசுனீங்க.. இப்போ எந்த முகத்தை வெச்சிக்கிட்டு பேசுறீங்க.. போங்க..” என்றவளின் கண்களில் கண்ணீர்..
“சாரிமா.. எல்லாமே கோபத்துல சொன்னது.. மனசுல இருந்து எதுவும் சொல்லலை..” காலில் விழாத குறையாக கெஞ்சிய பின்பே, போனால் போகிறதென்று அவனை மன்னித்தாள்.
அறைக்குள் நுழைந்த குகா,
“ஹே போதும் போதும்.. அப்புறமா உன் ஆள்கிட்ட பேசிக்க.. வெளியே வா..” என
“அஞ்சு நிமிஷம் டி.. வந்துடுறேன்..ப்ளீஸ்” என்று கெஞ்சினாள் அகல்யா..
“அஞ்சு நிமிஷத்துல வரலை.. போனை தூக்கிப் போட்டு உடைச்சிடுவேன்..” என்று மிரட்டி விட்டு, ஹாலில் சென்று அமர்ந்தாள்..
மூவரும் பேசிக் கொண்டே நொறுக்கு தீனிகளை தின்று கொண்டிருந்தனர்..
“நான் அன்னைக்கே சொன்னேன் நியாபகம் இருக்கா டார்லிங்.. இவ ரொம்ப மேக் அப் போடுறா, யாரையாச்சும் சென்னைல கரெக்ட் செஞ்சிருப்பான்னு.. பார்த்தியா அது உண்மை ஆகிடுச்சி..” அகல்யாவின் தம்பி கூற
“நீ யாருடா cid ஷங்கர் ஆச்சே..” குகாவும் அவனிற்கு ஒத்து ஊத, அந்த நேரம் சரியாக அகல்யாவும் அவர்கள் அருகில் வந்தாள்.
“மேக் அப் போட்டா, லவ் பண்றாங்கன்னு அர்த்தமா? நீ தான் லூசு மாதிரி பேசுற, இவளும் உன்னோடு சேர்ந்துகிட்டு பேசுறா..” என்று இருவரின் முதுகிலும் லேசாக அடித்தாள்.
“உண்மையை தான் சொல்லுறேன்.. நீயும் சரி, ரோஹிணி அக்காவும் சரி மேக் அப் ரொம்ப தானே போடுவீங்க.. கரெக்டா ரெண்டு பேருக்குமே லவ் மேரேஜ்.. என் பட்டுவைப் பாரு மேக் அப்பே போட மாட்டா, அதான் அவ அரேன்ஜ்ட் மேரேஜ் செஞ்சிருக்கா..” என்று அவன் புது விளக்கம் கொடுக்க, அகல்யா
“போடாங்க.. எதாச்சும் சொல்லிட போறேன். சென்னை வந்து பாரு எல்லாம் எப்படி மேக் அப் போடுதுங்கன்னு, நான் பவுடர் லிப் க்லாஸ் போடுறதை மேக் அப்புன்னு சொல்றியா? நானும் பார்க்க தானே போறேன்.. உனக்கு வரவ எப்படி பேய் மாதிரி மூஞ்சில எல்லாத்தையும் அள்ளி அப்புறான்னு..” என்றாள்..
“ஆமா.. அவ எந்த ஊர்ல இருக்காளோ..” என்று புலம்பியவன் “ஏன்டி, லவ் பண்ணது தான் பண்ண, என் வயசுக்கு ஏத்த பொண்ணு இருக்கிற வீட்டுப் பையனை லவ் பண்ணிருக்கலாம்ல.. ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிச்சிருக்கலாம்.. எல்லாம் போச்சு..” அவன் வருத்தப்பட
“அமுக்குனி மாதிரி இருந்துட்டு உங்க அக்காவே இம்புட்டு வேலை செய்யும் போது, நீ இதுக்கும் மேலையே செய்வ..” மகளுக்கும் மகனிற்கும் சேர்த்தே அவர் கொட்டு வைக்க..
“ப்ச் விடுங்கத்தை.. இன்னும் அவளை திட்டிகிட்டே இருக்கீங்க.. அதான் எல்லாம் நல்ல படியா முடிஞ்சிதுல.. கவினும் நல்ல பையனா தானே இருக்கார்..” குகா சப்போர்ட்டுக்கு வர
“உன்னைத் தான்டி முதல வெளுக்கணும்.. உன்னை நம்பி தானே அவளை உன்னோட சென்னைக்கு அனுப்பினேன்.. அவ காதலிக்கிற வரை நீ வேடிக்கை பார்த்துட்டு இருந்தியாக்கும்..”
“ஆத்தா என்னை விடுங்க.. உங்க மகளை எனக்கு யாருன்னே தெரியாது..” அவள் அலற,
“ஆமா ஆமா உனக்கு தெரியாது..” என்றவர்
“நாளைக்கு மதியம் மறந்திடாம மாப்பிள்ளையை கூட்டிட்டு இங்க விருந்துக்கு வந்துரு.” என்றார்..
“சாப்பாடுன்னு சொன்னாலே இவ வந்துடுவா மா..” அகல்யா கூற, குகாவும் அவளும் சண்டைப் போட்டு கொண்டிருந்தனர்..
இருவரும் இப்படியே பேசிக் கொண்டிருக்க,
“அழுது ஆர்பாட்டம் செஞ்சு, கவினோட சண்டை போட்டு, காரியத்தை சாதிச்சிட்ட.. கேடி டி நீ..”
“இந்த ஆம்பிளைங்களே இப்படி தான்.. நம்ம கெஞ்சுனா காதுலையே வாங்க மாட்டாங்க.. சரி தான் போங்கடான்னு நம்ம விலகி போயிட்டோம்.. நம்ம பின்னாடி கெஞ்சிட்டு திரிவாங்க.. இதெல்லாம் ட்ரிக் கத்துக்க பின்னாடி யூஸ் ஆகும்..” அகல்யா கூற,
“ச்சீ.. இதெல்லாம் தப்பு.. நம்ம சொல்றது சரியா இருந்தா அவங்களே அக்சப்ட் செஞ்சுப்பாங்க.. அதுக்காக இந்த மாதிரி ட்ரிக்ஸ் எல்லாம் யூஸ் பண்ணக் கூடாது..” என்று அறிவுரை பொழிய
“நீ உன் சொற்பொழிவை நிறுத்துரியா? நானும் தான் கவின் கிட்ட என்னோட பாயின்ட்ட சொன்னேன்.. அவர் அப்போ எல்லாம் என்கூட எப்படி சண்டை போட்டார்.. நான் திரும்ப சண்டை போட்டதும் தான், என்னோட நிலைமையை அவர் புரிஞ்சிக்கிட்டார்.. நானும் சண்டை போடாம அவர் சொல்லுறதுக்கெல்லாம் மண்டையை ஆட்டிக் கிட்டு இருந்தா இன்னைக்கு எங்க என்கேஜ்மெண்ட் நடந்தே இருக்காது..” என்றதும் குகாவும் அதை ஒத்துக் கொண்டாள்..
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#24
சிறிது நேரம் தோழியுடன் பேசிவிட்டு அவள் வீட்டிற்கு வர, சீதா மட்டும் சமையலறையில் இருந்தார்.. மற்றவர்களை வீட்டில் காணவில்லை.. தாயின் அருகே சென்றவள்
“எங்கமா எல்லாரும்.. ஆளையே காணோம்.. நீங்க மட்டும் தான் இருக்கீங்க..” என
“நீ உன் ப்ரெண்டைப் பார்க்க போறேன்னு மாப்பிள்ளையை தனியா விட்டுட்டு போயிட்ட.. பாவம் உங்க அப்பாவோட ரம்பத்துல மாட்டிகிட்டு முழிச்சிட்டு இருந்தார்.. அப்புறம் தம்பி வந்ததும் அவனோட வெளியே கிளம்பிட்டார்..”
“நான் அவரை அகல்யா வீட்டுக்கு கூப்பிட்டேன் மா.. அவர் தான் மாமா கூட பேசவே இல்லை.. பேசிட்டு இருக்கேன்.. நீ போன்னு சொன்னார்.. அதனால் தான் போனேன்.. அதுவுமில்லாம, நம்ம அப்பாவை விட உங்க மாப்பிள்ளை பெரிய ரம்பம்.. அப்பா தான் இவர் போட்ட மொக்கைல பயந்து ஓடிருப்பார்..” என்றாள் சிரித்துக் கொண்டே.
“வாய் தான் உனக்கு..” என்றவர் “இந்தா இதையெல்லாம் நறுக்கு.. சப்பாத்தி மாவை பெசஞ்சிட்டு வரேன்” என்று அவளிடம் கத்தியையும் காயையும் அவர் கொடுக்க
“வீட்டுக்கு வந்த பொண்ணுகிட்ட இப்படி வேலை வாங்குறீங்களே..” என்று புலம்பியவாறே காயை நறுக்கினாள்..
“அங்க எல்லா வேலையும் ஒழுங்கா பாக்குறியா? நாங்க இன்னும் சென்னை வந்து நீ குடும்பம் நடத்துற லட்சணத்தைப் பார்க்கலை.. பார்த்தா தான் தெரியும்”
“ஏன் பேச மாட்டீங்க.. எல்லா வேலையும் செஞ்சிட்டு நான் ஆபிசுக்கும் போயிட்டு வரேன்.. என்னைப் பார்த்தா உங்களுக்கு எப்படி தான் இருக்குமோ..”
பேசிக் கொண்டே சப்பாத்தி குருமா இரண்டையும் செய்து முடித்திருந்தனர்..
“எங்கமா போனாங்க.. இன்னும் வரலை..” மணியை பார்த்துவிட்டு குகா கேட்க
“தெரியலை.. தம்பி வந்ததும் வெளியே போவோமான்னு மாப்பிள்ளையை கேட்டான்.. அவரும் கூட போனார்.. எங்கன்னு சொல்லலை.. சரி அவங்க வரட்டும்.. உனக்கு நம்ம கடைல இருந்து சுடிதார், ஸ்கர்ட் எல்லாம் எடுத்து வெச்சேன்.. பேக்ல இருக்கு.. அதெல்லாம் வந்து பாரு.. பிடிக்காட்டி வேற எடுக்கணும்..” என்றவர் மகளை அறைக்கு அழைத்துச் சென்று காட்டினார்..
“ஏன்மா இவ்வளவு ட்ரெஸ்ஸை எடுத்து வெச்சிருக்கீங்க.. அப்பா தீபாவளிக்கு வாங்குன சரக்குல பாதியை எனக்கு எடுத்து வெச்சிட்டீங்களா?”
“அப்போ பாதியை எடுத்துடவா?” சீதா கேட்க
“அதெல்லாம் முடியாது.. கொடுத்தது கொடுத்தது தான்.. திருப்பித் தரப் பட மாட்டாது..” என்றாள் சிரித்துக் கொண்டே
“மாப்பிள்ளையோடதையும் இதுலையே வெச்சிடுரியா? இடம் இருக்கு தானே..” என
“அவருக்கு எதுக்குமா சட்டை எடுத்து வெச்சிருக்கீங்க.. நான் இந்த வீட்டுப் பொண்ணு, எனக்கு கொடுக்கலாம்.. அவருக்கு எதுக்கு கொடுக்குறீங்க.. அப்புறம் அவர் இனிமே துணி கடைப் பக்கமே போகாம மாமனார் கடைலயே ஓசியா எடுத்துக்கலாம்னு நினைச்சிப்பார்..”
“நீ இந்த வீட்டுப் பொண்ணுனா, உன் புருஷன் இந்த வீட்டு மாப்பிள்ளைடி.. உன்னை விட இனிமே அவர் தான் எங்களுக்கு ரொம்ப முக்கியம்..”
“என்னை விட அவர் முக்கியமா போயிட்டாரா? பார்த்துக்குறேன் உங்களை..” என்றவள் கணவனிற்கு கொடுத்த உடைகளையும் அதே பெட்டியில் அடுக்கினாள்..
சிறிது நேரத்தில் ஆண்கள் மூவரும் வந்ததும், உணவை முடித்துக் கொண்டு தங்கள் அறைக்குச் சென்றனர்..
மறுநாள் இரவு ட்ரைனில் மாறன் குகா இருவரும் புறப்பட, புதிதாக இன்னொரு பெட்டியை மனைவி தூக்கிக்கொண்டு வருவதைப் பார்த்த மாறன்
“நம்ம ஒரு ட்ராலி தானே கொண்டு வந்தோம்.. இப்போ என்ன புதுசா இன்னொண்ண தூக்கிட்டு வர..” என
அவள் விவரம் கூறவும், மாமனாரிடம் “எதுக்கு மாமா இதெல்லாம்..” என்றான்
“இருக்கட்டும் மாப்பிள்ளை.. உங்க ரெண்டு பேருக்கும் செய்யாம நாங்க யாருக்கு செய்யப் போறோம்..” சீதாவை போலே ராஜனும் கூற, மாறன் எதுவும் கூறாமல் லேசாக சிரித்தான்..
பின் இருவரும் சென்னை வந்ததும் அவர்கள் இயல்பு வாழ்க்கை திரும்பியது.. அவரவர் வேலைகளில் இருவரும் பிசியாக இருந்தனர்.. அன்று காலை இருவரும் பரபரப்பாக வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்..
“குகா.. என் பைலை எடுத்தியா?” தனது அலுவலக அறையில் வைத்திருந்த பைலைக் காணாமல் மாறன் உள்ளிருந்து குரல் கொடுக்க
“எந்த பைல்.. உங்க ரூம் புல்லா பைல் தான் இருக்கு..” என்றவாறே சமையல் அறையில் இருந்து மாறனின் அலுவலக அறைக்குள் வந்தாள் குகா..
“நீ எந்த கேசை டிராப் பண்ண சொன்னியோ அந்த கேஸ் பைல்.” அவளை முறைத்துக் கொண்டே கூறினான்..
“நான் உங்க ரூம் பக்கம் கூட வரலை.. நல்லா தேடுங்க..” என்றவள் “என்ன கலர்ன்னு சொல்லுங்க நானும் தேடுறேன்..” என
“உன்னை எல்லாம் நம்பி கலரை சொல்ல முடியாது.. கண்டுபிடிக்கிற மாதிரி அந்த பைலை எடுத்துட்டு அதுல இருக்க முக்கியமான பேப்பர்ஸ தூக்கிப் போட்டுடுவ”
“உன் புத்தி உன்னை மாதிரியே தான் இருக்கும்.. நீயே தேடிக்கோ..” என்றவள் உணவை தயார் செய்யச் சென்றாள்.
பத்து நிமிடமாக தேடி ஒரு வழியாக அந்த கோப்பை கண்டுப்பிடித்து எடுத்திருந்தான் மாறன்.. இவன் குளிக்க பாத்ரூமிற்கு செல்ல அங்கே குகா குளித்துக் கொண்டிருந்தாள்.
“ஹே யாரைக் கேட்டு நீ உள்ள போன? இப்போ உனக்கு என்ன அவசரம்? எனக்கு லேட் ஆகுதுடி.. நான் கோர்ட்டுக்கு கிளம்பின பிறகு நீ போக வேண்டியது தானே..” இவன் கத்த
“வந்துட்டேன்.. கத்தாதிங்க ..” என்று கணவனை முறைத்தவள்
“உங்க ரூம் ப்ரீயா தானே இருக்கு.. அங்க குளிக்க வேண்டியது தானே.. எனக்கும் தானே ஆபிசுக்கு லேட் ஆகுது.. சும்மா சும்மா இப்போ எல்லாம் நீ சண்டை போடுற..” திட்டிக் கொண்டே கண்ணாடி முன் அமர்ந்து தலை வாரினாள்.
“ஆமா எனக்கு வேண்டுதல் உன்னை திட்டணும்னு. போடி..” என்றவன் பாத்ரூமினுள் சென்றான்.
“வர வர இவன் ரொம்ப பண்றான்.. இடியட்..”
அவன் ரெடி ஆகி வந்ததும் தோசையை அவனின் தட்டில் வைத்தாள்..
“உனக்கு?” அவன் அவளை கேள்வியாக ஏறிட
“பசிக்கலை.. ஆபிஸ்ல பார்த்துக்கிறேன்..”
“அதெப்படி பசிக்காம போகும். காலைல இருந்து வேலை செஞ்சிட்டு இருக்க.. ஒரு தோசை ஆச்சும் சாப்பிடு..” என்றவன் அவன் தட்டில் இருந்து அவளிற்கு ஊட்டி விட்டான்.. இரண்டு வாய் வாங்கியவள்
“போதும்.. எனக்கு ஸ்டொமக் அப்சட்டா இருக்கு.. வாமிடிங் சென்சேஷன் வேற..” எனவும்
“பீரியட்ஸ் டேட்டா?” என்றான்
“ஆமா.. பட் இன்னும் வரலை.. நீங்க சாப்பிடுங்க..” என்றவள் இருவருக்கும் லஞ்ச் பேக் செய்தாள்.
ப்ரேக்பாஸ்ட்டை முடித்தவன் குட்டி பாட்டிலில் தயிர் வெந்தயம் போட்டு மனைவியின் கையில் கொடுத்தான்..
“மறக்காம குடி.. ரொம்ப முடியலைனா கால் பண்ணு.. லாஸ்ட் டைம் மாதிரி மயங்கிடாதே..”
போன முறை மாதவிலக்கின் பொழுது ஆபிசிலேயே உடம்பு முடியாமல் மயங்கி விழுந்திருந்தாள்.. பின்பு அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மாறனுக்கு தகவல் கொடுத்து என்று அனைவரையும் பயத்தில் ஆழ்த்தியிருந்தாள்.. அதை தான் இப்பொழுது மாறன் குறிப்பிட்டான்.
“அக்கறைக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல..” அவள் முணுமுணுக்க
“வேற எதுல குறைஞ்சிட்டாங்களாம்?” குகாவை தன் புறம் இழுத்து கேட்க
“எல்லாமே குறைஞ்சிடுச்சு..”என்றாள் அவன் முகத்தைப் பார்க்காமல்
“என் முகத்தைப் பார்த்து சொல்லு..” என்றவன் அவள் முகத்தை தன் புறம் திருப்ப
“போயா..” என்றவள் அவன் மீது சாய்ந்து கொண்டாள். அவளை அணைத்தவாறே
“என் பொண்டாட்டிய தனியா விட்டுட்டு எங்கயும் போக மாட்டேன்..” என்றான்.
“போதும் போதும். கிளம்புங்க.. அப்புறம் என்னால தான் லேட் ஆச்சுன்னு சொல்லுவீங்க.” என்றவள் அவனை விட்டு விலகினாள்.
“ஆமாடி பேசி பேசியே என் டைம வேஸ்ட் செஞ்சிட்ட..” என்றதும் அவனை அடித்தவள்
“இனிமே பொண்டாட்டி, போண்டா டீன்னு வா.. அப்போ இருக்குடா உனக்கு..” என்றாள்.
“நான் எல்லாம் வர மாட்டேன்பா..” என்றவன் மனைவியிடம் விடைபெற்று கிளம்பினான்..
******************
“குகா.. ஒரு வேலை கொடுத்தா ஒழுங்கா செய்யுங்க.. முடியலையா வீட்ல உட்கார்ந்து புருஷனை கவனிச்சிக்கோங்க.. சும்மா வந்து எங்க உயிரை வாங்க வேண்டியது.. இதோட ரெண்டு தடவை திருத்த சொல்லிட்டேன்.. கெட் அவுட்..” மேலதிகாரியிடம் நன்றாக திட்டு வாங்கிவிட்டு கண்களின் ஓரம் துளிர்த்த நீருடன் தனது இடத்திற்கு வந்த குகாவிற்கு வேலை ஓடவே இல்லை..
எந்த இடத்தில் தவறு செய்தோம் என்று அவளால் கண்டுப் பிடிக்கவே முடியவில்லை.. இரண்டு முறை முயற்சி செய்தும் எரர் காட்டிக் கொண்டே இருந்தது.. தலைவலி மண்டையைப் பிளக்க, காலையில் உண்ணாதது வேறு வயிற்றில் வலியைக் கொடுத்தது..
இன்னும் சிறிது நேரத்தில் இதை செய்து கொடுக்காமல் விட்டால் tl லிடம் அதிகம் பேச்சு வாங்க வேண்டி இருக்கும்.. அதற்காகவே முயன்று சிஸ்டமை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“மார்னிங்கே அந்த லூசு சொன்னான்.. மயங்கிடாதேன்னு.. தலைவேற ரொம்ப சுத்துது.. இப்போ நான் faint ஆனேன்.. மாசம் மாசம் இந்த பொண்ணுக்கு இதே வேலைன்னு ஆபிசே நினைச்சிடும்.. குகா கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணு..” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டவளிற்கு வாந்தி வரும் போல் இருந்தது.. ரெஸ்ட்ரூமில் மயங்கி விடுவோமோ என்கிற பயத்தில் அகல்யாவிற்கு அழைத்தாள்.
“அகல் ரெஸ்ட்ரூமுக்கு வாயேன்.” என்று சொல்லிவிட்டு வேகமாக ரெஸ்ட்ரூமிற்கு சென்றவள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு வாந்தி எடுத்தாள்..
நிற்க முடியாமல் கால்கள் தள்ளாட, தரையில் அமர்ந்துவிட்டாள்.. ஐந்து நிமிடத்திற்கு பிறகே அகல்யா அங்கே வர குகா தரையில் அமர்ந்து சுவற்றில் சாய்ந்திருப்பதை பார்த்துவிட்டு பதறிக் கொண்டு
“குகா.. என்னாச்சு.. பிரியட்ஸா?” அவளின் தலையை நிமிர்த்திக் கேட்க “இல்லை” என்று தலையை ஆட்டியவள் மீண்டும் சுவற்றில் சாய்ந்து கொண்டாள்
“அப்புறம் என்னாச்சு? உடம்பு சரியில்லையா? எழுந்திரி..” என்றவள் அவளைத் தூக்கிப் பிடித்தாள்.
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#25
“பீவர் கூட இல்லையேடி.. உடம்புக்கு என்ன?” அகல்யாவின் கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை.. நிற்க முடியாமல் நின்றவளை அகல்யாவாலும் தாங்க முடியவில்லை..
“இருடி. என்னால உன்னைப் பிடிக்க முடியலை.. யாரையாச்சும் கூப்பிட்டு வரேன்..” என்று அவள் செல்லப் போக, அவள் கையைப் பிடித்தவள்
“நான் கன்சீவா இருக்கேன்னு நினைக்கிறேன்..” என்றாள்.
“என்ன?” என்று ஒரு நிமிடம் அதிர்ந்தவள், பின் சந்தோசமாக தோழியை அணைத்துக் கொண்டாள்.
“கங்க்ராட்ஸ்டி செல்லம்..” என்று வாழ்த்த
“கன்பார்மா தெரியலை.. பிரியட்ஸ் டைம்லயும் எனக்கு இப்படி தான் ஆகும்.. பட் பத்து நாள் தள்ளிப் போயிருக்கு.. டவுட்டா இருக்கு..” மெல்ல மெல்ல அவள் கூற
“அப்போ வா.. ஹாஸ்பிடல் போய் செக் செஞ்சிட்டு வருவோம்..”
“கோடிங் முடிக்கணும்.. என் tl கிட்ட இப்போ தான் திட்டு வாங்கிட்டு வந்தேன்.”
“சீக்கிரம் முடிச்சிட்டு பெர்மிசன் போடு..”
“ம்” என்றவளை, அழைத்துக் கொண்டு ஜூசை குடிக்க வைத்து அவள் இருக்கைக்கு அனுப்பி வைத்தாள்.
அந்த எரரை கிளியர் செய்யவே குகாவிற்கு மாலை வரை நேரம் சரியாக இருந்தது.. தலைவலியோடு எப்படியோ அதை சரி செய்தவள், மீண்டும் ஜூசை மட்டும் குடித்துவிட்டு அகல்யாவுடன் வெளியே வந்தாள்.
“எந்த ஹாஸ்பிடல் போகலாம்?” அகல்யா கேட்க
“இல்லை வேண்டாம்.. இன்னும் ரெண்டு நாள் பார்க்கலாம்.. ஒருவேளை நெகட்டிவா எதாச்சும் சொல்லிட்டாங்கன்னா என்னால தாங்க முடியாது..”
“போகுறதுக்கு முன்னாடியே நெகட்டிவா பேசாதே..” என்று அவளைக் கடிந்தவள்
“அட்லீஸ்ட் பிரெக்னன்சி கிட் வாங்கி செக் பண்ணு.” என்றதும் அதை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றாள்..
****************
அடுத்த இரண்டு நாள் அவளிற்கு விடுமுறை.. மாறன் கேஸ் விஷயமாக அலைந்து கொண்டிருந்ததால் மனைவியின் உடல்நிலை அவனிற்கு சரியாக தெரியவில்லை.
ஞாயிறு அன்று வெளியே சென்றவன் மாலை ஆகியும் வரவில்லை.. அன்று காலையில் இருந்தே குகாவிற்கு உமட்டல் அதிகமாக இருந்தது.. துணைக்கு ஆள் இல்லாமல் வாந்தி எடுப்பதும் தலை சுற்றிக் கீழேயே அமர்ந்து கொள்வதுமாக இருந்தாள்.. இரண்டு நாள் சென்றதும் பரிசோதிப்போம் என்று கிட்டை வைத்திருந்தாள். அதை வைத்து பரிசோதிக்க அவள் கர்ப்பமாக இருப்பது உறுதியானது.. கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய கணவனுக்காக காத்திருந்தாள்.
மாறன் வந்து கதவைத் தட்ட, சோர்ந்து போய் மெதுவாக நடந்து வந்தவள் கதவைத் திறந்துவிட்டு அவன் மேலேயே மயங்கினாள்..
“ஹே குகா..” என்று அவளைத் தாங்கிப் பிடித்தவன் அவள் கன்னம் தட்டி எழுப்ப, அவளிடம் லேசாக அசைவிருந்தது. கைத்தாங்கலாக கொண்டு வந்து சோபாவில் அமரவைத்தவன் தண்ணீரைக் கொண்டு வந்து அவள் முகத்தில் தெளித்தான்.
“தண்ணி குடி..”
“முடியலைன்னா கால் பண்ணுன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்.. அறிவே இருக்காது உனக்கு.. மாசம் மாசம் இப்படி மயங்கி விழற..”
“நான் நல்லா தான் இருக்கேன்..”
“கிழிச்ச.. இதுக்கு ட்ரீட்மெண்ட் எடுப்போம்ன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிற..”
“அதெல்லாம் ஒரு வருஷத்துக்கு பின்னாடி எடுத்துக்கலாம்..”
“அதுவரைக்கும் இப்படியே கஷ்டப்படப் போறியா?” அவன் முறைக்க,
“ரொம்ப திட்டுற.. என் பையன் வந்து உன்னை மொத்துனா தான் சரிபடுவ.” என்றவள், அவன் கையை எடுத்து தனது வயிற்றில் வைத்து “நம்ம அம்மா அப்பா ஆகப் போறோம்” என்றாள்..
“ஹே..” என்றவன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்..
“எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு குகா.. எப்போ கன்பார்ம் பண்ண?” என்றதும் இரண்டு நாட்கள் முன்பு நடந்தது அனைத்தையும் சொன்னாள்..
“உனக்கு முன்னமே டவுட் இருந்ததா? என்கிட்ட நீ சொல்லவே இல்ல..” ஒற்றை புருவத்தை உயர்த்தி அவன் முறைத்த வண்ணம் கேட்டான்..
“சும்மா முறைச்சிகிட்டே இருக்காதே.. ஒருவேளை பேபி இல்லாம இருந்தா உன்கிட்ட சொல்லி உன்னோட ஆசையும் தூண்டி விட்ட மாதிரி ஆகிடும்னு தான் சொல்லலை..”
அவன் அமைதியாக அவளை பார்த்தவாறே இருக்க “யோவ் வக்கீலு நீ ரொம்ப பண்ற.. அப்பா ஆகப்போறேன்னு சொல்லுறேன்.. ஒரு கிஸ் இல்ல ஒரு ஹக் இல்ல.. எத்தனை தமிழ் படம் பார்த்திருக்க, பொண்டாட்டி கர்ப்பமா இருக்கான்னு சொன்னதும் புருஷன் அவளைத் தூக்கி சுத்துவான்.. நீ சுத்த தான் செய்யலை அட்லீஸ்ட் கிஸ் ஆச்சும் கொடுக்கலாம்ல.”
“ரெண்டு நாளா என்கிட்ட இருந்து மறைச்சதுக்கு இது தான் தண்டனை.. நோ கிஸ் நோ ஹக்..” என்றவன் சோபாவில் இருந்து எழ
“யோவ்.. உன்னைப் போய் கல்யாணம் செஞ்சிகிட்டேன் பாரு.. எனக்கு இது தேவை தான்..” என்றவள் “ரூமுக்காச்சும் தூக்கிட்டு போ.” என்று கைகளை விரித்து அவனை அழைக்க
“உன்னை எல்லாம் தூக்க முடியாது.. என் பேபியை மட்டும் தான் இனி தூக்குவேன்..” என்றவன் உள்ளே சென்று உடை மாற்றிவிட்டு வந்தான்.. அவன் வரும்வரையும் அதே இடத்தில் அமர்ந்திருந்தாள் குகா..
“என்ன உட்கார்ந்திருக்க.. காபி போடு போ.”
“பத்து நிமிஷம் முன்னாடி மயங்கி விழுந்தவளை வேலை வாங்குற.. கொடுமைக்காரா.. நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன்.. இங்க தனியா கிடந்து சாவு..” கூறிக் கொண்டே எழுந்தவளை கைகளில் ஏந்திக் கொண்டான்.
“இப்போ எதுக்குடா தூக்குன? உன் பேபியை மட்டும் தானே தூக்குவேன் சொன்ன..”
“என் பேபியைத் தான் தூக்கிருக்கேன்.” அவன் தன்னைத் தான் சொல்கிறான் என்கிற நினைப்பில்
“சோ ஸ்வீட்டா புருஷா.” என்று அவன் கழுத்தில் தன் கைகளை கட்டிக் கொண்டாள்.
“உன்னை சொல்லலை.. உள்ள இருக்க என் பேபியை சொன்னேன்..” அவள் வயிற்றில் கைவைத்து சொல்ல, கழுத்தைக் கட்டியிருந்த கையினால் அவனை நெறித்தாள்.
“கொலைகாரி.. கொலைகாரி..” என்றவன் தங்கள் அறைக்கு அழைத்துச் சென்று அவள் கேட்ட முத்தத்தை மட்டும் அல்லாமல் தன்னையே கொடுத்தான்..
இருவீட்டிற்கும் விஷயத்தை சொல்ல பெரியவர்களுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.. சித்ரா இரண்டு நாளில் மருமகளைப் பார்க்க வருவதாக கூறினார்..
மறுநாள் காலை தூக்கத்தில் இருந்து எழுந்து கொள்ள மனமில்லாமல் படுத்திருந்தாள் குகா.. ப்ரஷ் செய்ததும் காபி குடிக்க வேண்டும் என்று தோன்றும்.. குடித்து சில நிமிடத்தில் அது வெளியே வந்துவிடும் என்பதால் எழுந்துகொள்ளவே அவளிற்கு பிடிக்கவில்லை.. எப்பொழுதுமே சமையலில் மாறன் குகாவிற்கு உதவி செய்வான் என்பதால் காய்களை வெட்டி வைத்தவன் மனைவியை எழுப்பினான்..
“டயர்டா இருக்குங்க..” என்றவள் அப்படியே படுத்திருக்க
“நான் சமைச்சிடுறேன்.. ஆபிஸ் போறியா இல்ல லீவ் போடுறியா?”
“ஐயோ வேலை இருக்கு.. கண்டிப்பா போகணும்..”
“சரி நீ கொஞ்ச நேரம் தூங்கு.. நான் குக் பண்ணிட்டு உன்னை எழுப்புறேன்..” என்றவன் காலை மதியம் இருவேளைக்குமான உணவினை செய்ய ஆரம்பித்தான்..
தினமும் ஒன்பது மணிக்கு வீட்டில் இருந்து குகா கிளம்புவாள்.. எட்டு மணி போல் மனைவியை எழுப்பியவன், அவள் புறப்பட்டு வந்ததும் இட்லியை அவளுக்கு கொடுத்தான்..
“ஈவ்னிங் கேப்ல வா.. ஸ்கூட்டி வேண்டாம். இப்போ நான் ட்ராப் பண்றேன்.” என்றவன் அவளை அலுவலகத்தில் இறக்கி விட்டான்.
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#26
காதல் செய்வேன் கட்டளைப்படி..
காதல் 10
அகல்யாவுடன் காபிடேரியாவில் அமர்ந்து கொண்டு ரோகிணியை போனில் அழைத்து ஸ்பீக்கரில் போட்டாள் குகப்ரியா.
“அகல், ரோகிணி” என்றாள் வெட்கத்துடன்
“என்னடி.. வெட்கம் எல்லாம் படுற?” ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டே அகல்யா கேட்க
“வெட்கப்படுறாளா? நல்ல வேலை அந்த கன்றாவியைப் பார்க்க நான் அங்க இல்லை.” என்று ரோகிணி கூறிக் கொண்டிருக்கும் போதே
“நான் செக் செஞ்சிட்டேன்.. பாசிடிவ்” என்றவளின் குரலில் அவ்வளவு வெட்கம் இருந்தது..
“ஹே” இருவரும் ஒருசேர கத்தினர்..
“எருமை ஹார்ட்டி கங்கிராட்ஸ்டி.. சொல்லவே இல்லை நீ..” தோழியின் கையில் மெதுவாக அடித்தாள் அகல்யா..
“நேத்து தான் செக் பண்ணேன்.. நீ கவினோட வெளிய போறதா சொன்னியா.. அதான் கால் பண்ணலை.. உங்க ரெண்டுபேருக்கும் ஒரே டைம்ல சொல்லனும்னு தான் அவளுக்கும் கால் பண்ணலை..”
“கங்கிராட்ஸ்டி குகா.. எனக்கு இப்பவே உன்னைப் பார்க்கணும் போல இருக்கு..” ரோகிணியும் சந்தோசமாக வாழ்த்திவிட்டு கூற
“வீகென்ட மீட் பண்ணலாம்.. வீட்டுக்கு வாங்க..”
“உன் வீட்டுக்காரர் இருப்பார்.. வேற ப்ளேஸ் சொல்லு..” ரோகிணி வேகமாக மறுத்தாள்.
“அவர் உங்களை என்னடி செஞ்சார்.. இப்படி பயப்படுறீங்க? அவர் கேஸ் விஷயமா பயங்கர பிசி.. சண்டே கூட வீட்ல இருக்கிறது இல்ல.. நீங்க வாங்க..”
“சரி..” என்றவள் சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
மதியம் கணவன் செய்த உணவினை நன்றாக உண்டாள் குகா..
“பாரேன் உனக்கு அவரே குக் செஞ்சிக் கொடுக்கிறார்.. கவினுக்கு காபி கூட போட தெரியாது.” அகல்யா கூற
“கவின் பாமிலியோட இருக்கார்.. இவர் பாச்சிலர் லைப் புள்ளா தனியா இருந்திருக்கார்.. செல்ப் குக்கிங் தான்.. என் மாமியார் இவரோட இருந்திருந்தா இவருக்கும் சுடு தண்ணி கூட வைக்கத் தெரிஞ்சிருக்காது..”
“புளிக்குழம்பு சூப்பர்.. நான் சொன்னேன்னு சொல்லிடு..”
“சும்மாவே மனுஷனை கையில பிடிக்க முடியாது.. இதுல இதை நான் சொன்னேன்.. என் சமையலை ரொம்ப ஓட்டுவார்..”
“நீ வைக்கிற சாம்பார், புளிக்குழம்பு, வத்தக்குழம்பு எல்லாமே ஒரே மாதிரி தான் இருக்கும்.” அகல்யா சிரிப்புடன் கூற
“போடி.. அது ஆரம்பத்துல.. இப்போ எல்லாம் நல்லா தான் இருக்கு.. ரோகிணியோட ட்ரிக்க பாலோ செஞ்சதுல இருந்து டேஸ்டா தான் இருக்கு..”
திருமணம் ஆனப் புதிதில் குகா வைக்கும் சாம்பார், குழம்பு எல்லாம் ஒரே போல் இருக்கும்.. பார்க்க கலர்புல்லாக இருந்தாலும் வாயில் வைத்தால் உடனே துப்பிவிடலாம் அந்த அளவிற்கு கொடூரம் தான்.. தோழிகளிடம் அவள் சொல்லி வருத்தப்பட, ரோகிணி
“என் மாமியார் சொல்லுவாங்க, சாமி பாட்டு இல்ல ஸ்லோகம் சொல்லிகிட்டோ இல்லை காதுல கேட்டுகிட்டோ சமையல் செஞ்சா, சாப்பாடு டேஸ்ட்டா இருக்குமாம்.. காலைல சுப்ரபாதத்தைப் போட்டுகிட்டு தான் நான் குக் பண்றேன்.. நீயும் இதை ட்ரை பண்ணேன்..” என்றாள்
ஆரம்பத்தில் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்தவள், கணவன் அடிக்கடி அவள் சமையலை உண்டுவிட்டு கிண்டல் செய்யும் போது ரோகிணி கூறியதை முயற்சி செய்துப் பார்ப்போம் என்று ஒரு நாள் கந்த சஷ்டியைப் போட்டுக்கொண்டே சாம்பார் செய்தாள்.. அது நன்றாக வரவே தினமும் இதையே தொடர ஆரம்பித்தாள்.. அதை தான் ரோகிணியின் ட்ரிக் என்று இப்பொழுது அகல்யாவிடம் கூறினாள்.
“அவரை மீட் பண்ணப் போகும் போது ரோகிணி உன்னை லூஸ் ஹேர்ல போகாதேன்னு சொன்னா.. அதை எல்லாம் கேட்டியா? அப்போ என்ன சொன்ன இதுல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லைன்னு. இப்போ மட்டும் என்னவாம்?”
“அப்போ நம்பிக்கை இல்லை. இப்போ வந்துடுச்சி.. நிஜமா கந்த சஷ்டியை சொல்லிகிட்டே கிட்சன்ல வேலை செய்யும் போது அலுப்பாவே இல்லை தெரியுமா? மனசுக்கும் இதமா இருக்கு.. கடவுள் நம்பிக்கை இப்போ எல்லாம் கொஞ்சம் வந்துடுச்சி..”
“குடும்ப இஸ்திரி ஆனாலே இப்படி தான் போல.. நாத்தீகம் பேசுனவ எல்லாம் ஆத்திகவாதி ஆகிட்டாள்.”
இருவரும் மாலை வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்..
“கேப் புக் பண்ணனும்.. மார்னிங் அவர் தான் கூடிட்டு வந்தார்.. நீயும் வா ஒரே கேப்ல போகிடலாம்..” குகா அகல்யாவிடம் கூற
“த்ரெட்டிங் பண்ணணும்டி. ரொம்ப நாள் ஆச்சு..”
“நானும் பண்ணனும்..”
“லூசு.. கன்சீவா இருக்கும் போது த்ரெட்டிங் பண்ணக் கூடாது..” முறைப்புடன் கூறினாள் அகல்யா..
“அப்படியா? ஏன்?”
“ஐ ப்ரோஸ் கிட்ட இருக்க நரம்பு ஒன்னு யூடிரசோட கனெக்ட் ஆகுது.. அண்ட் இந்த மாதிரி டைம்ல ஸ்கின் ரொம்ப சாப்டா இருக்குமாம்.. த்ரெட்டிங் செய்யும் போது ஈசியா தோல் கிழிய வாய்ப்பு இருக்கு.. புது ட்ரெஸ் போடக் கூடாது.. இப்படி நிறைய இருக்கு.. நார்மலாவே கேர்ள்ஸ் த்ரெட் பண்ணக் கூடாது. அது கர்ப்பபையை affect செய்யும்னு fbல படிச்சேன்..”
“ஹே பயமுறுத்தாதேடி..” என்றவளின் குரலில் பயம் அப்பட்டமாக தெரிந்தது.
“உனக்கு பயம் காட்டணும்னு சொல்லலை லூசு.. தெரிஞ்சிக்கோ..”
“நான் வீட்டுக்கு போறேன்.. நீ பியூட்டி பார்லர் போ..” என்றவள் கேபில் வீட்டிற்கு சென்றாள்.
அன்றும் வெகு நேரம் ஆன பின்பே வீட்டிற்கு வந்த மாறன் தன்னிடம் இருந்த சாவிக் கொண்டு கதவைத் திறந்து உள்ளே நுழைய, சோபாவில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்துவிட்டு
“இன்னும் தூங்கலையா நீ? மணி ஆச்சு..”
“முதல்ல சாப்பிடுங்க.. அப்புறம் பேசலாம்..” என்றவள் அவனை உண்ண வைத்த பின்பே விட்டாள்.
“சரி சொல்லு ஏன் தூங்கலை?”
“சும்மா உங்களோட பேசணும்னு தான்..”
“அதுக்காக இவ்வளவு நேரம் முழிச்சிருப்பியா?”
“இன்னைக்கு இப்படி பண்ணா தான், இனிமே பொண்டாட்டி தூங்காம நமக்காக வெயிட் பண்ணுவான்னு சீக்கிரம் வருவ.”
“சான்சே இல்ல.. வெளியே இருக்கும் போது எனக்கு என் கேஸ், லா பாய்ண்ட்ஸ் மட்டும் தான் நியாபகம் இருக்கும்.. வேற எதுவும் என் மைண்ட்ல ஓடாது..”
“நான் கூடாவா?” பாவமாக அவள் கேட்க
“ஆமா நீ பெரிய லங்கோடு.. போடி..”
“ச்சீ பே..”
***************
“ஐயோ.. உன்னை வெச்சிக்கிட்டு என்ன தான்டி செய்யுறது.. வர கோபத்துக்கு..” அருகில் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு நின்றிருந்த குகாவை முறைத்தவண்ணம் மாறன் திட்டிக் கொண்டிருந்தான்..
“நீங்க சொன்ன டப்பால இருந்து தான் அரிசியை ஊறப் போட்டேன்.. சும்மா என்னை திட்டுறீங்க. ஒரே கலர்ல ரெண்டு பாக்ஸ் இருந்தா, அதுக்கு நான் என்ன பண்ணுவேன்..”
“இந்த வீட்டுல நாலு மாசமா குப்பை கொட்டுற, எந்த டப்பால என்ன இருக்குன்னு உனக்கு தெரியாதா?”
“தப்பை உங்க மேல வெச்சிட்டு என்னை திட்டாதிங்க.. நானும் கிளம்புற அவசரத்துல கவனிக்கல..”
“பாஸ்மதி அரிசிக்கும் இட்லி அரிசிக்கும் வித்தியாசம் தெரியல.. இதுல வாய் மட்டும் கிழியுது.. உன்னை என் தலையில கட்டி வெச்ச சித்ராவை சொல்லணும்.. நாளைக்கு வரட்டும் இருக்கு அவங்களுக்கு..” என்று புலம்பிக் கொண்டே மனைவி இட்லி அரிசிக்கு பதிலாக ஊற வைத்திருந்த பாஸ்மதி அரிசியில் இருவருக்கும் தக்காளி சாதத்தை செய்துக் கொண்டிருந்தான்.
காலையில் மாறன் வெளியே செல்லும்முன் மனைவியிடம் இட்லிக்கு அரிசியை ஊறப் போடும்படி கூறியிருந்தான்.. குகாவிற்கு எப்பொழுதுமே இட்லி அரிசியை கண்டுபிடிப்பது சிரமமான விஷயம்.. அடிக்கடி ஒவ்வொரு டப்பாவாக எடுத்து வந்து கணவனிடம் கேட்டுக் கொண்டே இருப்பாள்..
இந்த முறையும் அவள், அவன் வெளியே கிளம்பும் அவசரத்தில்
“இருங்க எந்த அரிசின்னு சொல்லிட்டு போங்க” என்று அடுப்படியை நோக்கி நகர
“பச்சை டப்பால இருக்க அரிசி தான் குகா.. எத்தனை தடவை இதையே கேட்பியோ.. எனக்கு நேரம் ஆச்சு, கிளம்புறேன்..” என்றவன் வேகமாக வீட்டில் இருந்து புறப்பட்டான்..
அங்கே பச்சை கலரில் இரண்டு டப்பாக்கள் இருந்ததை கவனிக்காமல், அவள் கண்ணுக்கு முதலில் தெரிந்த டப்பாவில் இருந்த பாஸ்மதி அரிசியை வெளியே கிளம்பும் அவசரத்தில் ஊற வைத்துவிட்டாள்..
மாலை வேலை முடித்து வந்தவன், க்ரைண்டரை போடும் போது தான் இதைப் பார்த்து கத்திக் கொண்டிருந்தான்..
“வேடிக்கை பார்க்காம, இட்லி அரிசியை இப்பயாச்சும் கரெக்ட்டா எடுத்து ஊற போடு..”
“சரி” என்றவள் கணவனை திட்டிக் கொண்டே அவன் சொன்னதை செய்தாள்.
“ஐயோ என்னங்க சாதம் என்னவோ போல இருக்கு..” ஒரு வாய் உணவை வாயில் வைத்த குகா, கணவனிடம் கூற
“பின்ன, எட்டு மணி நேரம் தண்ணில இருந்த பாஸ்மதி அரிசில செஞ்சா உனக்கு வேற எப்படி இருக்கும்.. அதை அப்படியே தூக்கியா போட முடியும்.. பேசாம சாப்பிடு இல்லை கொன்னுடுவேன்..” என்று மிரட்டியவன் அவள் முழுவதையும் உண்ட பின்பே விட்டான்..
“நாளைக்கு காலைல தான் இனி மாவாட்டணும்.. அம்மா வரதுக்குள்ள செய்யணும்.. சீக்கிரம் எழுந்துக்கணும். அலாரம் வெச்சிடு..” டின்னரை முடித்துவிட்டு மனைவியிடம் கூறினான் மாறன்.
காலையில் அவன் கிரைண்டரில் வேலையாக இருக்க, குகா ப்ரேக் பாஸ்ட் செய்துக் கொண்டிருந்தாள்..
“ஸ்டேஷன் போய் ரெண்டு பேரையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல..”
“அவங்களுக்கு என்ன சென்னை புதுசா? அதுவும் இல்லாம, எங்கப்பா ஒரு போலிஸ் ஆபிசர்.. அவருக்கு தனியா வர தெரியாதா?”
“நான் என்ன சொன்னாலும் அதுக்கு மறுத்து எதாச்சும் உங்களுக்கு சொல்லணும்..”
இருவரும் வார்த்தைக்கு வார்த்தை பேசிக் கொண்டே வேலையை முடிக்கவும், சித்ராவும் சுதாகரனும் வீட்டிற்குள் வரவும் சரியாக இருந்தது..
“வாங்க அத்தை.. வாங்க மாமா..” முகம் மலர இருவரையும் குகா வரவேற்றாள்..
“எப்படிமா இருக்க?”
“நல்லா இருக்கேன் அத்தை.. காபி போடுறேன் இருங்க..” என்று அவள் கிச்சனிற்குள் செல்லப் போக,
“ட்ரைன்லயே குடிச்சிட்டோம்.. நீ உட்கார்..” என்று அவர் மருமகளை அமர சொல்ல
“அம்மா குளிச்சிட்டு சாப்பிட்டுட்டு நிதானமா உட்கார்ந்து பேசுங்க..” மாறன் பெற்றோரை விரட்டி, காலை உணவை உண்ட பின்பே பேச விட்டான்.. பின்பு மாமியாரும் மருமகளும் கிச்சனை கிளீன் செய்து கொண்டிருந்தனர்..
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#27
சிங்கில் மாறன் போட்டிருந்த கிரைண்டர் கல்லை குகா கழுவிக் கொண்டிருக்க, இதை பார்த்த சித்ரா
“என்னமா இதையெல்லாம் நீ ஏன் செய்யுற? இந்த மாதிரி நேரத்தில் வெயிட் தூக்கக் கூடாதுன்னு உனக்கு தெரியாதா? என்ன பண்றான் அவன்.. மாறா..” மருமகளிடம் ஆரம்பித்தவர் மகனை அழைத்துக் கொண்டே ஹாலிற்கு வந்தார்..
“என்னமா?” தந்தையுடன் பேசிக் கொண்டிருந்த மாறன் தாயின் அழைப்பில் அவரை நிமிர்ந்து பார்த்துக் கேட்க
“புள்ளத்தாச்சி பொண்ண, கிரைண்டர் கல்லை கழுவ விட்டுட்டு இருக்க.. உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா? எருமை மாதிரி வளர்ந்திருக்க அவளுக்கு இதுல எல்லாம் உதவி செய்யலாம்ல.. வெட்டியா தானே இருக்க..” அவர் மகனை கடிய
“இல்லமா நீங்க கிச்சன் உள்ள போனீங்கன்னு தான் நான் இங்க இருந்தேன்..”
“இப்போ நான் இருக்கேன் செய்யுறேன். இதுக்கு முன்னாடி குகா தானே இதெல்லாம் செஞ்சிருப்பா..”
“இல்லத்தை.. அவர் ஹெல்ப்” என்று குகா கூறுவதை காதிலே வாங்காமல்
“நீ சும்மா உன் புருஷனுக்கு சப்போர்ட் பண்ணாதே..” மருமகளை கடிந்தவர், மகனிடம்
“இனி அவளை மாவாட்டவோ கிரைண்டர் கல்லை கழுவவோ சொன்ன, கொன்னுடுவேன் ராஸ்கல்.. கல்யாணத்துக்கு முன்ன நீ தான இதெல்லாம் செஞ்ச, இனிமேலும் நீயே செய்.. பொண்ணுங்க கல்யாணம் ஆகி வந்ததும் உங்களுக்கு வீட்டு வேலை செய்யணுமா?” என்றார்..
மாமியார் கூறியதைக் கேட்ட குகா, சிரிப்பை அடக்கப் பெரும்பாடு பட்டாள். இதைப் பார்த்த மாறன் மனைவியை முறைக்க
“என்னடா முறைக்கிற? ஆம்பளை திமிரா உனக்கு.. வீட்டு வேலை செஞ்சா குறைஞ்சிடுவியா?”
“ஐயோ அத்தை.. அவர் அப்படி எல்லாம் இல்லை.. எனக்கு ஹெல்ப் பண்ணுவார் தினமும்..”
“உன்னை அவனுக்கு சப்போர்ட்டுக்கு வராதேன்னு சொன்னேன்.. போ போய் ரெஸ்ட் எடு..”
“இல்ல..”
“போ ரூமுக்கு..” என்று மருமகளை அறைக்கு அனுப்பியவர், மறுபடியும் மகனிற்கு அறிவுரை வழங்கிய பின்னரே விட்டார்..
அவன் அறைக்குள் நுழைந்ததும், குகா அவனைப் பார்த்து சிரிக்க
“சிரிக்காதடி..” என்று அவன் பல்லை கடித்துக் கொண்டு கூறினான்..
“என்னால முடியலை மாறன்.. ஹாஹா” என்று சத்தமாக சிரிக்க, அவள் அருகில் வந்தவன், அவள் கையைக் கிள்ளி விட்டான்..
“ஆ.. எருமை வலிக்குது..”
“வலிக்கட்டும்.. அங்கே அம்மா என்னை அவ்வளவு திட்டுறாங்க. நீ இங்க சிரிச்சிட்டு உக்காந்திருக்க.. உனக்கு நான் ஹெல்பே பண்றதில்லையாம்.. இதெல்லாம் எவ்வளவு அநியாயம்.. நீ தான்டி எனக்கு ஹெல்ப் பண்றதில்லை.. மூணு வேலையும் நானே உனக்கு சமைச்சி கொடுக்குறேன்.. ஆனா எனக்கு வந்த அவப் பெயரை பாரேன்.. ஆம்பளை திமிர்.. மேல் சாவனிஸ்ட்..” அவன் கூற கூற குகா மேலும் சிரித்துக் கொண்டே இருந்தாள்..
“அடியே..”
“நான் என்ன பண்ண. சிரிப்பு வருதே.. நானும் அத்தைகிட்ட சொல்ல தான் பார்த்தேன்.. அவங்க தான் நம்பவே மாட்டுறாங்க.. அவ்வளவு நம்பிக்கை பிள்ளை மேல..”
“எல்லாம் என் நேரம்.. எல்லாம் செஞ்சும் இந்த பேர்.. கொடுமை..”
அவன் அருகில் சென்று அமர்ந்து அவன் தோளில் சாய்ந்த குகா,
“நேத்து நீங்க செஞ்ச லஞ்சை சாப்டுட்டு அகல் எப்படி பாராட்டுனா தெரியுமா? எனக்கு சந்தோசமா இருந்தது..”
“உனக்கு ஏன்மா சந்தோசமா இருக்காது.. எல்லாம் இருக்கும்..”
“போடாங்க.. உன்கிட்ட போய் சொன்னேன் பாரு..”
இப்படியே ஒரு வாரம் மாமியாரின் சமையலிலும், மாமியார் கணவனைத் திட்டுவதைப் பார்த்து சிரிப்பதுமாய் குகாவிற்கு நன்றாகவே பொழுது போனது.. சித்ரா ஊருக்கு சென்றப் பின்பு மறுமடியும் மாறனின் சமையலை நன்றாக மூக்குப் பிடிக்க சாப்பிட்டு கொண்டிருந்தாள்..
சீதாவிற்கும் மகளை சென்று பார்க்க வேண்டும் என்கிற ஆவல் இருக்க, பண்டிகை காலம் என்பதால் ராஜனால் கடையை விட்டு வர முடியாமல் போனது.. பதினைந்து நாட்கள் கழித்து மகளை பார்க்க வருவதாக கூறியிருந்தார்.. சித்ரா மகளை நன்றாகப் பார்த்துக் கொண்டதாக குகா கூறியதும் சீதாவிற்கு சற்று ஆறுதலாக இருந்தது..
நன்றாக சென்ற அவர்களின் வாழ்க்கையில் புயல் வீசுவதை போல் அந்த சம்பவம் நடந்தது..
அன்று தோழிகளுடன் வெளியே சென்றிருந்தாள் குகா. முதல் வாரம் மாமியார் ஊரில் இருந்து வந்ததால் தோழிகள் இருவரும் குகாவின் வீட்டிற்கு வரவில்லை.. இந்த வாரம் ட்ரீட் தரும்படி கேட்டுக் கொண்டே இருந்தனர்.. மாறனும் வீட்டில் அதிக நேரம் இல்லாததால் வீட்டில் இருக்க போர் அடிக்க தோழிகளுடன் வெளியே வந்திருந்தாள்.. சிறு ஷாப்பிங் முடித்துவிட்டு ஹோட்டலிற்கு சென்றனர்.. அங்கே அவர்களது கல்லூரியில் உடன் பயின்ற ஒருவனை சந்தித்தனர்.. மூவரும் அவனை பார்த்ததும் ஒரு சில வார்த்தைகள் அவனுடன் பேசிக் கொண்டிருந்தனர்..
“குகா நானே உன்கிட்ட பேசணும்னு நினைச்சேன்.. fbல மெசேஜ் செய்வோம்னு இருந்தேன்.. நேர்ல பார்த்துட்டேன்..”
“சொல்லு என்ன விஷயம்?”
“வினோத் தெரியும்ல நம்மளோட படிச்சானே?” அவர்களுடன் படித்த ஒருவனின் பெயரைச் சொல்லி கேட்க
“ம் தெரியும்..” குகாவும் பதில் கூறினாள்
“அவங்க அண்ணாவோட கேசை உன் ஹஸ்பண்ட் தான் ஹேன்டில் பண்றார்..”
“என்ன?” அவள் புரியாமல் விழித்தாள்.
“கொஞ்சம் தனியா பேசுவோமா குகா?” அகல்யா ரோகிணி இருவரையும் பார்த்துக் கொண்டே தயக்கத்துடன் அவன் கூற, குகாவும் சரி என்று வேறு ஒரு மேஜையில் அவனுடன் அமர்ந்துக் கொண்டாள்.
“நம்ம காலேஜ் படிக்கும் போது வினோத்தோட அண்ணா கதிருக்கு மேரேஜ் ஆச்சு நியாபகம் இருக்கா? அவன் கூட நம்ம எல்லாரையும் இன்வைட் பண்ணானே?”
“ம் நியாபகம் இருக்கு.. இப்போ என்ன ப்ராப்ளம்?”
“கதிர் அண்ணாவோட வைப் டிவோர்ஸ் கேட்டு உன் ஹஸ்பண்ட் மூலமா நோட்டிஸ் அனுப்பிருக்காங்க..”
“என்னாச்சி? அவங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனை?”
“அஸ்யூசுவல் எல்லா பொண்ணுங்க மாதிரியும் அவங்களும், உங்க அம்மா தம்பியை விட்டுட்டு தனிக் குடித்தனம் போகலாம்னு சொல்லிருக்காங்க.. முதல்ல அதுல ஆரம்பிச்ச பிரச்சனை.. அப்புறம் பேசி பேசி பெருசாகிடுச்சி. . கோவத்துல அவர் மனைவியை அடிச்சிட்டார்.. அவங்களும் கோச்சிக்கிட்டு அம்மா வீட்டுக்கு போயிட்டாங்க.. அவங்க அம்மா வீட்லையாச்சும் பொண்ணுக்கு புத்திமதி சொல்லி அனுப்பிருக்கலாம்.. அவங்க இன்னும் கொஞ்சம் பேசி வினோத் அண்ணியோட கோபத்தை ஏத்தி விட்டுட்டாங்க. இப்போ டிவோர்ஸ் வரைக்கும் வந்துடுச்சி.”
“இதுல நான் என்ன பண்ண முடியும்?”
“உன் ஹஸ்பண்ட் டிவோர்ஸ் வாங்கிக் கொடுத்தா கூட பரவாயில்லை.. அந்த அண்ணாவை gayனும், இதை மறச்சு கல்யாணம் செஞ்சுட்டார்ன்னும் சொல்லி கேஸ் பைல் செஞ்சிருக்காங்க.. அவன் என்கிட்ட சொல்லி பீல் பண்ணான்.. அப்போ தான் யார் லாயர்ன்னு பேசும்போது உன் ஹஸ்பண்ட் நேம் சொன்னான்.. உன் கல்யாண போட்டோஸ் fbல பார்த்திருக்கேன். அதான் அவன் சொன்னதும் உன் வீட்டுகாரர் தான் அதுன்னு எனக்கு புரிஞ்சிது..
வக்கீல் எல்லாரும் இப்படி பொய் சொன்னா எப்படி குகா? கொடுமை செய்றார், அடிச்சார் இப்படி சொல்லி விவாகரத்து கேட்டிருந்தா கூட ஒத்துக்கலாம்.. இப்படி சொன்னதுல வெளிய அவங்க பேமிலியால தலைக் காட்ட முடியலை.. வினோத்தோட அம்மாக்கு பையனோட வாழ்க்கை போச்சேன்னு கவலைல்ல ஸ்ட்ரோக் வந்துடுச்சி.. இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் உன் புருஷன் தான்..”
குகாவிற்கு இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.. பலமுறை கணவனிடம் சொல்லியிருக்கிறாள்.. அவன் நியாயமாக வாதாட வேண்டும் என்று.. அப்பொழுது எல்லாம் அவன் கேட்டதே இல்லை.. அவனால் தான் பாதிக்க பட்டதாக இதுவரை அவளிடம் யாரும் கூறியதில்லை.. இப்பொழுது கணவன் கூறிய பொய்யினால் ஒருவருக்கு பக்கவாதம் வந்துவிட்டதாக அறிந்ததும், அவளிற்கு உள்ளே என்னவோ செய்தது..
இதுபோல் எத்தனை குடும்பம் அவமானப் பட்டிருக்குமோ. அனைத்துக்கும் தன் கணவன் தானே காரணம்.. எத்தனை பேர் இவன் நன்றாக இருக்கக் கூடாது என்று சாபம் விட்டிருப்பார்களோ.. என்று நினைக்க நினைக்க அவளிற்கு கண்களை இருட்டிக் கொண்டு வந்தது.. மேஜையில் இருந்த தண்ணீரைக் குடித்து தன்னை சமன் செய்தாள்.
“வினோத் சைட் லாயர் இன்னொரு ஹியரிங் கேட்டிருக்கார்.. நீ கொஞ்சம் உன் ஹஸ்பண்ட் கிட்ட பேசி வேற எதாச்சும் ரீசன் சொல்லி விவாகரத்து வாங்கிக் கொடுக்க சொல்லேன்.”
“ம் நான் பேசுறேன்..” என்றவள் அங்கிருந்து தோழிகள் இருக்குமிடத்திற்கு சென்றாள்.
அவள் முகம் சரியில்லாமல் இருப்பதைக் கண்ட அகல்யா
“என்ன குகா? பேஸ் என்னவோ போல இருக்கு?” என்று கேட்க
“கொஞ்சம் டயர்டா இருக்கு.. வீட்டுக்கு போகலாமா?” என்றாள்
அவர்களும் சரி என்று கூறி அவளை வீட்டில் விட்டார்கள்..
வீட்டிற்கு வந்தவளுக்கு கணவனிடம் இதைப் பற்றி பேசி புரிய வைக்க முடியுமா? என்ற கேள்வியே பூதாகரமாக இருந்தது..
பல முறை சொல்லியும் அவன் கேட்டதில்லை.. இந்த முறை மட்டும் அவன் கேட்பானா?
‘எந்த வக்கீல் பொய் சொல்லாம இருக்கான்?’ என்பான்..
ஒரு குடும்பத்தைக் குலைத்துவிட்டு அதில் வரும் காசில் தன்னுடைய குடும்பத்தை நடத்துகிறோமே என்கிற குற்றவுணர்வு சிறிதும் இன்றி அவன் இருக்கிறான்..
இந்த முறை அவனை அவள் விடுவதாக இல்லை.. வேறு ஒரு காரணம் சொல்லி விவாகரத்து வாங்கிக் கொடுத்திருக்கலாமே.. வினோத்தின் அண்ணனின் பேரையே அசிங்கப் படுத்திவிட்டானே.. ஓர் இன சேர்க்கையாளன் என்று கூறியப்பின், அவனை வேலை செய்யும் இடத்தில் எவ்வளவு கேவலமாக பார்த்திருப்பார்கள்.
அந்த பெண் எவ்வளவு கொடூரமானவளாக இருந்தால் தாலி கட்டி குடும்பம் நடத்திய கணவனை அனைவர் முன்பும் இப்படி அசிங்கப்படுத்தியிருப்பாள்.
அந்த பெண்ணிற்காக வக்காலத்து வாங்கும் கணவனை என்ன செய்வது?
பேசி புரிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவள் இருக்க, அதன் விளைவு என்ன ஆகப் போகிறதோ?
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#29
காதல் செய்வேன் கட்டளைப்படி
காதல் 11
நெடுநேரம் தனியாக வீட்டில் இருந்தவளிற்கு மனது என்னவோ போல் இருக்க அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்றாள்.. அவள் வரும்பொழுது ஹாலில் மாறன் காபி குடித்துக் கொண்டே டிவி பார்த்துக் கொண்டிருந்தான்.. மனைவி இப்பொழுது தான் தோழிகளுடன் வெளியே சென்று விட்டு வருகிறாள் என்று நினைத்தான்..
“வாங்க மேடம்.. காபி வேணுமா?” என்றான் கையில் வைத்திருந்த கப்பை முன்னால் நீட்டி.. அவனை ஒரு பார்வை பார்த்தவள் ஒன்றும் கூறாமல் அறைக்குள் செல்ல,
“நான் சிப் கூட பண்ணல.. இப்பயும் வேண்டாமா? சரி போ.. நீயே ரெப்ரஷ் ஆகிட்டு வந்து காபி போட்டுக்கோ..” என்றவன் டிவியில் கவனம் செலுத்தினான்..
கால் மணி நேரம் ஆகியும் அவள் வெளியே வராமல் இருக்கவும்,
“என்ன பண்ற குகா?” என்று கேட்டுக் கொண்டே அறைக்குள் சென்றான்..
உடையை மாற்றாமல் கண்களை மூடி கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவளைப் பார்த்தவன்
“என்னமா டயர்டா இருக்கா? எதாச்சும் சாப்பிடுறியா? ஜூஸ் குடிக்கிறியா?” என கேட்க , கண்ணை திறந்து அவனை பார்த்தவள்
“ரொம்ப ஹேப்பி மூட்ல இருக்கீங்க போல..” என்றாள்
“அடிப்பாவி, என் பொண்டாட்டி டயர்டா உக்காந்திருக்காளேன்னு கவலைல இருக்கேன்.. என்னை பார்த்தா உனக்கு ஹேப்பி மூட்ல இருக்க மாதிரி தெரியுதா?”
“நான் வரும் போது, ஜாலியா தான் டிவி பார்த்துட்டு இருந்தீங்க..”
“ஓ அதுவா.. இன்னையோடு அந்த லேண்ட் கேசுக்கு ஒரு கும்பிடு போட்டாச்சு.. பேமென்டும் செட்டில் பண்டாங்க.. டாகுமெண்ட்ஸ் ப்ரோசீஜர் எல்லாமே ஓவர்.. அதான்..”
“ம்..”
“ஆனாலும் இன்னொரு கேஸ் அதுல கொஞ்சம் பிசியா இருக்கேன்.. அதுவும் சீக்கிரம் முடிஞ்சிடும்னு நினைக்கிறேன்.. அப்புறம் கொஞ்ச நாள் உன்னோட டைம் ஸ்பென்ட் பண்ணனும்.. நம்ம ரெண்டு பேரும் நல்லா பேசி ரொம்ப நாள் ஆச்சு..” என்றவன் அவள் அருகில் அமரவர, குகா வேகமாக கட்டிலில் இருந்து எழுந்தாள்..
“ஓய் என்ன எழுந்துட்ட.. உட்காரு..” என்றவன் அவள் கையைப் பிடிக்க, வேகமாக அதை தட்டி விட்டாள்..
“என்னடி வந்ததுல இருந்து ஒரு மாதிரியாவே இருக்க.. என்னாச்சு?”
“உங்களால இவ்வளவு கீழ்த்தரமா நடந்துக்க முடியுமா மாறன்?” என்றவளின் குரல் அவ்வளவு அமைதியாக ஒலித்தது.. கோபாமாக அவள் கேட்கவில்லை.. அமைதியாக அதே நேரம் அழுத்தமாக கேட்டாள்..
“என்ன சொல்ற நீ?” அவளின் வார்த்தைகளில் குழம்பியவாறே அவன் கேட்க,
“ஹான்.. என்ன சொல்லணும்? உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதுல்ல..”
“ஹேய் தெளிவா தான் பேசேன்.. நான் என்ன கீழ்த்தரமா நடந்துக்கிட்டேன்” அவன் குரல் இப்பொழுது சற்று உயர்ந்து இருந்தது..
“எதுக்கு இப்போ கத்துறீங்க? தப்பை உங்க மேல வெச்சிக்கிட்டு..”
“குகா.. எதுவா இருந்தாலும் நேரடியா பேசு.. எதுக்கு சுத்தி வளைக்கிற?”
“சரி நேரடியாவே கேக்குறேன்.. இப்போ நீங்க ஒரு டிவோர்ஸ் கேஸ் எடுத்திருக்கீங்களே? அதுல உங்க கிளைன்டை ஜெயிக்க வைக்கிறதுக்காக, அவங்க ஹஸ்பண்டுக்கு நல்ல பட்டம் வாங்கிக் கொடுத்திருக்கீங்களே.. ஒரு பையனா இருந்துட்டு, இன்னொரு பையனை இப்படி எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்தி வெச்சிருக்கீங்க.. உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?” என்றாள் கோபமாக..
“என்ன?” என்று ஒரு நிமிடம் அதிர்ந்தவன் பின் “இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?” என்றான்..
“எப்படியோ தெரிஞ்சது? எதுக்கு இப்படி செஞ்சீங்க? அதை சொல்லுங்க..”
“குகா.. உனக்கு எத்தனை தடவை சொல்லுவேன்.. அது என் profession..’
“ஓ.. பொய் சொல்லுறது ஒரு profession இல்ல.. நீங்க சொன்ன அந்த பொய்யால ஒரு குடும்பமே அங்க செதஞ்சு போச்சு.. ஆனா உங்களுக்கு அதை பத்தின கவலையே இல்லை.. கேட்டா அது என் தொழில்னு சொல்றீங்க?”
“நான் என்ன பண்ணேன்? முதல்ல நீ தெளிவா பேசு..”
“இதுக்கு மேல என்ன தெளிவா பேச? உங்க கிளைன்ட ஜெயிக்க வைக்க அந்த பையனை gayன்னு சொல்லிருக்கீங்க.. உங்களுக்கு வேற பொய்யே கிடைக்கலையா?”
“இங்கப்பாரு நான் இதை சொல்லலை.. அந்தப் பொண்ணு கொடுத்த ஸ்டேட்மெண்ட் தான் அது.. உண்மையாவே அவன் அந்த மாதிரி தான்.. இதை மறைச்சு தான் அந்த பொண்ணை கல்யாணம் செஞ்சிருக்கான்.. இந்த விஷயம் அவங்க வீட்டுக்கு தெரிஞ்சப்ப, மாமியார் இது வெளியே தெரிஞ்சா எங்க குடும்ப மானம் போகிடும்.. சொல்லாதைன்னு மிரட்டிருக்காங்க.. குடும்பமே சேர்ந்து அவ்வளவு டார்ச்சர் செஞ்சிருக்காங்க.. அந்தப் பொண்ணு அவங்க வீட்டுல இருந்து தப்பிச்சு வெளிய வந்திருக்கு..”
“ஓ இது அடுத்த பொய்.. அப்படி தானே..” என்றாள் நக்கலாக
“குகா... லூசு மாதிரி பேசாதே.. இதான் உண்மை.. நீ நம்புனா நம்பு இல்லாட்டி போ..” என்றவன் ஹாலிற்கு செல்ல, அவன் பின்னாலே வேகமாக வந்தவள்
“இந்த கேசை விட்டுடுங்க..” என்றாள்
“ஹே உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? அந்த வீட்டுல இருந்து அந்த பொண்ணு கஷ்டப்படணுமா?”
“அவ ஒரு பொண்ணா? ச்ச.. மாமியார் கூட இருக்க முடியாம இப்படி பொய் பொய்யா சொல்லிட்டு இருக்கா.. இதெல்லாம் ஒரு காரணமா டிவோர்ஸ் வாங்க.. அவளுக்கு வக்காலத்து வாங்குறீங்க நீங்க..”
“உன்கிட்ட யார் அப்படி சொன்னா?” அவன் புரியாமல் கேட்க
“என்ன அப்பயிருந்து யார் சொன்னா யார் சொன்னான்னு கேக்குறீங்க? நீங்க பண்ணுற தப்பு தான் ஊருக்கே தெரியுதே..” அவள் எகத்தாலாமாக கூற
“குகா, என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற.. நான் என்னமோ ஒரு தேர்ட் ரேட் பொறுக்கி மாதிரி நீ பேசுற?”
“இப்படி பொய் சொல்றது கூட தப்பு தான் மாறன்.. இதுல வர காசுல நம்ம சந்தோசமா வாழ்ந்திட முடியுமா? நீங்க டிவோர்ஸ் வாங்கி கொடுத்த எத்தனை பேர் உங்களை நல்லா இருக்கக் கூடாதுன்னு சபிச்சிருப்பாங்க.. நம்மக் குழந்தை இந்த பணத்துல தான் வளரணுமா?”
“உனக்கு எப்படி புரிய வைக்கன்னு எனக்கு தெரியலை குகா.. அன்னைக்கு சொன்னதை தான் இப்பவும் சொல்றேன்.. நான் கிரிமினல் கேஸ் எதுவும் எடுக்குறதில்லை.. நீ சொல்ற மாதிரி தான் எனக்கும் மனசாட்சி இருக்கு.. கொலைகாரன், ரேப் பண்றவன் இவனுக்காக நான் வாதாடுனா நீ இவ்வளவு சொல்றது சரி.. பாதிக்கப்பட்ட ஒரு பொண்ணுக்கு நான் விடுதலை தான் வாங்கிக் கொடுக்கிறேன். உன்கிட்ட யாரோ தப்பா சொல்லிருக்காங்க.. வேணும்னா அந்த பொண்ணுகிட்டையே உன்னை பேச வைக்கிறேன்.. நம்பு.. இதுல தப்பு அந்த பையன் பேமிலில தான்..” பொறுமையாக அவன் கூற, குகா
“யாரும் என்கிட்ட தப்பா சொல்லலை.. அந்த பொண்ணு, என்னோட படிச்ச பையனோட அண்ணி தான்.. காலேஜ்ல அவன் எவ்வளவு சைலண்ட்டா இருப்பான் தெரியுமா? நீங்க என்னடான்னா அவன் பேமிலியே சேர்ந்து டார்ச்சர் பன்றாங்கண்ணு சொல்றீங்க..” என்றாள்
“போடி.. உனக்கெல்லாம் என்னால புரிய வைக்க முடியாது.. நானும் பொறுமையா சொல்லிட்டு இருக்கேன்.. காதுலையே வாங்காம பேசிட்டு இருக்க..”
“நீங்க செய்யுற தப்பை ஒத்துக்காம என்கிட்ட ஏன் கத்துறீங்க?”
“இதுக்கு முந்தின கேஸ்ல நான் பொய் சொன்னேன்னு உன்கிட்ட நானா தானே சொன்னேன்.. அப்படி இருக்கப்போ, இப்ப மட்டும் ஏன் ஒத்துக்காம இருக்கப் போறேன்.. நான் எதுவும் பொய் சொல்லல..” என்றவன் பின் மெதுவாக “மேரேஜ் ஆகி ஒன்றரை வருஷம் ஆகிடுச்சி.. அவங்க ரெண்டு பேருக்குள்ள இதுவரை எதுவுமே நடக்கலை.. ஜட்ஜே அவங்களுக்கு மெடிகல் டெஸ்ட் எடுக்க சொல்லிருக்கார்.. அந்த ரிப்போர்ட்ஸ் வந்த பின்னாடியாச்சும் நம்புவியா?”
“பணம் கொடுத்தா அந்த டாக்டர் பொய் சொல்லவே மாட்டானா?”
“என்னடி உன் பிரச்சனை? சும்மா பொய் பொய்ன்னு சொல்லிட்டு இருக்க? நீ என்ன ஹரிச்சந்திரன் பேமிலியா? பொய்யே உன் வாழ்க்கைல்ல நீ சொன்னதில்ல?” கோபத்துடன் அவன் கேட்க
“வாழ்க்கைல் பொய் சொல்லலாம்.. அடுத்தவங்க வாழ்க்கையை கெடுக்க பொய் சொல்லக் கூடாது..” தத்துவமாக பதில் அளித்தாள் குகா..
“உப்ப்.. இதுக்கு மேல உன்கிட்ட பேசுறதே வேஸ்ட்..” என்றவன் நகரப் போக
“நீங்க, இப்படி பணத்துக்காக எவ்வளவு பொய் வேணாலும் சொல்லுவீங்கன்னு எனக்கு தெரியாம போகிடுச்சி.. தெரிஞ்சிருந்தா கல்யாணமே செஞ்சிருக்க மாட்டேன்..” அமைதியாக போனவனை கடுப்பேற்றுவது போல் இவள் பேச, அதில் கடுப்பானவன்
“உங்கப்பா உனக்கு லாயர் மாப்பிள்ளை பார்த்திருக்கேன்னு சொன்னாரே, அப்பவே லாயர் எல்லாம் பொய் சொல்வாங்க.. எனக்கு இந்த பையன் வேண்டாம்னு சொல்லிருக்க வேண்டியது தானே? ஏன் உனக்கு அப்ப தெரியாதா? வக்கீல் பொய் சொல்வாங்கன்னு?” அவனும் கடுப்புடன் பதில் சொன்னான்..
“தெரியாம கல்யாணம் பண்ணிட்டேன்.. பேசாம, உங்களுக்கு தெரிஞ்ச, உங்களை மாதிரியே பொய் சொல்லுற வக்கீல் கிட்ட சொல்லி நம்ம ரெண்டு பேருக்கும் விவாகரத்து வாங்கி கொடுத்திடுங்க.. ரீசன் நீங்க இப்போ அந்த பையனுக்கு என்ன காரணம் சொல்லி டிவோர்ஸ் வாங்கிக் கொடுக்கிறீங்களோ, அதே ரீசனை நமக்கும் சொல்லிடுங்க..” அவள் விவாகரத்து என்று சொன்னதுமே, மாறனின் கோபம் எல்லையை கடக்க ஆரம்பித்தது, இறுதியில் அவள் இவ்வாறு கூறவும், குகாவை அடிக்கவே கையை ஓங்கி விட்டான் மாறன்.
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#30
“அடிங்க சார்.. எதுக்கு நிறுத்திட்டீங்க? உங்களுக்கு வந்தா இரத்தம்.. அடுத்தவனுக்குன்னா தக்காளி சட்டினியா? அந்த வார்த்தையைக் கூட, உங்களைப் பார்த்து நான் சொல்லலை.. அதுக்கே உங்களுக்கு அடிக்கிற அளவுக்கு கோபம் வருது.. அவங்களுக்கும் அவங்க பேமிலிக்கும், எல்லார் முன்னாடியும் எவ்வளவு அவமானமா இருந்திருக்கும்.. வாய் கூசாம இப்படி ஒரு பொய்யை சொல்லிருக்கீங்க..” அவள் பேசிக் கொண்டே போக,
“ஹே.. நிறுத்துடி.. இனி ஒரு வார்த்தை பேசாதே.. என்ன இப்போ நான் பொய் சொல்றேன்.. பிராடு.. குடும்பத்தை குலைக்கிறேன்.. அதானே. ஆமாடி.. நான் இப்படி தான்.. பிடிச்சா என்னோட இரு... இல்லை நீ சொன்ன மாதிரி எனக்கு தெரிஞ்ச பொய்யே (?) சொல்ல தெரியாத வக்கீல்கிட்ட சொல்லி டிவோர்ஸ் வாங்கித் தரேன்..” என்றவன் அலுவலக அறைக்குச் சென்று கதவை அறைந்து சாற்றினான்..
அவனை கேசை வாபஸ் வாங்க வைப்பதற்காக குகா வார்த்தையை விட, அது மாறனின் கோபத்தை ரொம்பவே கிளறி விட்டிருந்தது.. என்ன ஆனாலும் இந்த கேசை இனி ஜெயித்தே ஆக வேண்டும் என்ற வெறியை அவனிடம் கொண்டு வந்திருந்தது...
குகாவிற்குமே சிறிது நேரம் சென்றதும், தான் பேசியது அதிகப்படியோ என்று புரிய ஆரம்பித்தது..
‘அவர்கிட்ட சண்டை போடாம பொறுமையா எடுத்து சொல்லணும்னு தானே நினைச்சேன்.. ச்ச.. தேவை இல்லாம வார்த்தையை விட்டுட்டேனே.. டிவோர்ஸ் அது இதுன்னு.. எப்பவும் விளையாட்டுக்கு ரெண்டு பேரும் சொல்றது தான்.. அதே மாதிரி இந்த டைமும் சொல்லி அவர் மனசை மாத்தலாம்னு நினைச்சேன்.. நடுவுல தேவையில்லாம அந்த ரீசனே உங்களுக்கும் சொல்லுங்கன்னு சொல்லிட்டேன்.. எவ்வளவு கஷ்டம்மா இருந்திருக்கும்..’ என்று முதலில் நினைத்தவள் பின் ‘கஷ்டப்படட்டும், இதே மாதிரி தானே மத்தவங்களும் கஷ்டப்பட்டிருப்பாங்க.. எல்லாரோட சாபத்தோட, எங்க வாழ்க்கை நல்லாவா இருக்கும்.. நீயா போய் பேசாதே குகா.. அவனுக்கு புரியட்டும்.. அவன் செய்யுறது தப்புன்னு.’ என்று தனக்குள்ளேயே எண்ணிக் கொண்டாள்.
இதற்கு முன் இருவருக்கும் பல சண்டைகள் வந்திருக்கிறது.. முதலில் சமாதானம் ஆவது குகாவாக தான் இருக்கும்.. அவளால் எப்பொழுதுமே சிறிது நேரத்திற்கு மேல் சண்டையை இழுத்துப் பிடித்து வைக்க முடியாது.. மாறனும் அவ்வாறு தான்..
இருவருக்கும் தனிப்பட்ட முறையில் இதுவரை எந்த பிரச்சனையும் வரவில்லை.. அவன் வேலையின் காரணமாகவே கருத்து வேறுபாடுகள் இருவருக்கும் ஏற்படும்.. பின் குகாவே, அது அவன் வேலை அவன் பெர்சனல், இதில் தேவையில்லாமல் தலையிட்டு தங்களுக்குள் பிரச்சனையை உண்டு பண்ணக் கூடாது என்று சமாதனம் ஆகிவிடுவாள்..
ஆனால் இந்த கேசில் அவன் கூறிய பொய்யை அவளால் ஏனோ ஜீரணிக்கவே முடியவில்லை.. இதற்கு முன்பு அவன் பொய் சொன்னாலும், “ஆமாம் சொன்னேன்” என்று ஒத்துக் கொண்டிருக்கிறான்.. இந்த முறை அதைக் கூட செய்யவில்லை.. என்று குகா நினைக்க,
மாறனோ ‘எவனோ ஒருத்தன் சொன்னான்னு, என்னை சந்தேகப்படுறா? நான் எப்படிப்பட்டவன்னு அவளுக்கு தெரியாதா? இத்தனை மாசம் என்னோட அவ குடும்பம் நடத்துனதுக்கு என்ன அர்த்தம்.. நான் சொல்றதை நம்பவே மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறா.. கடைசில டிவோர்ஸ் வரைக்கும் போயிட்டா.. எவ்வளவு நம்பிக்கை என்மேல..’ விரக்தியாக சிரிக்க மட்டுமே அவனால் முடிந்தது..
இருவருமே இந்த முறை ‘நீயா அவன் (ள்) கிட்ட சண்டையை மறந்து பேசாதே.. அவன்(ள்) செஞ்ச தப்பை உணரட்டும்.. அதுவரை பேசவே கூடாது..’ என்று முடிவெடுத்தனர்..
அவர்கள் இருவராலும் அதை செயல் படுத்த முடியுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்..
அடுத்த நாள் சீதாவும், ராஜனும் மகளைப் பார்க்க வந்திருந்தனர்.. அவர்கள் வருவது முன்பே இருவருக்கும் தெரிந்தும், முதல் நாள் ஏற்பட்ட சண்டையின் காரணமாக அதை இருவருமே மறந்திருந்தனர்..
காலையில் வேகமாக அலுவலுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த இருவரும் வாசலில் காலிங் பெல்லின் சத்தத்தில் அறையில் இருந்து வெளியே வந்தனர்..
மாறன் அலுவலக அறையில் இருந்து வெளியே வர, குகா அவர்களது அறையில் இருந்து வந்தாள்.. ஒருவரை ஒருவர் சில நொடிகள் பார்த்தவர்கள் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டனர்..
‘அவன் இருக்கான்ல. அவனே கதவைத் திறக்கட்டும்’ என்று குகாவும்..
‘ஒரு வேலையும் செய்யுறதில்ல, இதையாச்சும் செய்யட்டும்.’ என்று மாறனும் மீண்டும் தங்கள் அறைகளுக்குள் சென்றனர்..
வெளியே காலிங் பெல்லை அழுத்திக் கொண்டிருந்த ராஜனிடம், சீதா
“எவ்வளவு நேரமா கதவைத் தட்டுறோம்.. என்ன பண்றா இவ.. போன் பண்ணுங்க..” என்றார்..
ராஜனும் மகளின் எண்ணிற்கு அழைக்க,
“ப்ச்.. யார் இது?” என்று எரிச்சலுடன் போனைப் பார்த்தவளிற்கு தந்தையின் எண்ணிலிருந்து அழைப்பு என்றதும்
“இந்த நேரத்தில எதுக்கு கூப்பிடுறார்?” என்று வேகமாக போனை எடுத்தாள்..
“என்னப்பா.. இந்த நேரத்தில கூப்பிட்டிருக்கீங்க.. எல்லாரும் நல்லா இருக்கீங்க தானே?” பதட்டத்துடன் அவள் கேட்க
“என்னமா சொல்ற.. நாங்க உன் வீட்டு வாசல்ல நிக்கிறோம்.. பெல் அடிச்சோம்.. கதவை திறக்கவே இல்லை.. அதான் போன் பண்ணேன்.” என்று அவர் சொல்ல
“அச்சோ. இதோ வந்துட்டேன் ப்பா..” என்றவள் வேகமாக சென்று கதவைத் திறந்தாள்.
“வாங்க ப்பா.. வாங்க ம்மா..” என்றவள் சீதாவின் கையைப் பிடித்துக் கொண்டாள்..
“என்ன பண்ண இவ்வளவு நேரமா?”
“அ... அது..” என்று அவள் திணறிக் கொண்டிருந்த நேரம், மாறன் ஹாலில் பேசும் சத்தம் கேட்டு வெளியே வந்தான்..
“வாங்க மாமா.. வாங்க அத்தை..” என்றவனிற்கும், அப்பொழுது தான் அவர்கள் இன்று வருவார்கள் என்ற நியாபகம் வந்தது..
“எப்படி இருக்கீங்க மாப்பிள்ளை?”
“நல்லா இருக்கேன் மாமா.. நீங்க எப்படி இருக்கீங்க. சாரி மாமா.. உங்களைக் கூப்பிட ஸ்டேஷன் வரணும்னு இருந்தேன்.. நேத்து லேட் நைட் தான் வந்தேன்.. சுத்தமா மறந்துட்டேன்.. உங்க பொண்ணும் காலைல எழுப்பாம விட்டுட்டா..” என்று மனைவியையும் கோர்த்து விட்டான்.. அதில் கணவனை திரும்பி முறைத்தாள் குகா..
“அச்சோ.. இதுல என்ன இருக்கு மாப்பிள்ளை.. பரவால்ல..”
“உக்காருங்க மாமா.. காபி கொண்டு வரேன்..” என்றவன் அடுக்களைக்குள் நுழையப் போக
“என்ன மாப்பிள்ளை நீங்க போய்..” என்று மருமகனைத் தடுத்த சீதா, மகளிடம் “குகா.. என்ன இது.. அவர் போறார்.. நீ வேடிக்கைப் பார்த்துட்டு இருக்க..” என்று கடிந்தார்..
“இல்லத்தை.. அவளுக்கு பால் ஸ்மெல் உமட்டுது.. அதான்..” என்றவன் கிச்சனுக்குள் சென்றான்..
“ஐயோ மாப்பிள்ளை இருங்க நான் போடுறேன்..” சீதா அவன் பின்னோடு செல்ல
“இருங்க.. இன்னைக்கு நான் போடுறதை டேஸ்ட் செஞ்சி பாருங்க.. நாளைக்கு நீங்க போடுங்க..” என்றவன் அவரை ஹாலில் உட்காருமாறு கூறிவிட்டு காபியை போட சென்றான்..
“இதோ வரேன் மா..” என்ற குகாவும், கிச்சனுக்குள் சென்று
“எதுக்கு இப்படி சீன் போடுறீங்க? மாப்பிள்ளை ரொம்ப நல்லவர் வல்லவர்ன்னு இப்போ எங்க அம்மா உங்களை புகழனுமா?” என்றாள் பல்லை கடித்துக் கொண்டு.. அவளை கூர்ந்து பார்த்தவன்
“நான் நல்லவன் தான்.. அது உனக்கும் தெரியும்..” என்றவன் பாலைக் காய்ச்சி கப்புகளில் ஊற்றினான்..
“நானும் அப்படி தான் நினைச்சிட்டு இருந்தேன்.. இப்போ தானே தெரியுது..” என்றவளின் முகத்தில் நேற்று விட்ட சண்டையின் தாக்கம் இருந்தது..
“உனக்கு சொன்னாலும் புரியாது.. நம்பவும் மாட்ட.. என்னவோ பண்ணு குகா.. அத்தை மாமா முன்னாடியாச்சும், கொஞ்சம் இந்த சண்டையை மூட்டை கட்டி வைக்கப் பாரு..”
“எனக்கு தெரியும்.. நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்..”
“ஸ்.. சப்பா... விடுமா.. தெரியாம உன்னோட பேசிட்டேன்..” என்றவன் அங்கிருந்து சென்றான்.
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#31
காதல் 12
நான்கு நாட்களாக இருவரும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தனர்.. இருவருக்குமே ஒருவருடன் ஒருவர் பேச வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும், பேசி மேலும் சண்டையை இழுத்து வைக்க வேண்டாம் என்று அமைதிக் காத்தனர்..
பேசினால் தீராதப் பிரச்சனைகளும் உண்டோ? இவர்கள் என்னவென்றால் பேசினால் தான் பிரச்சனை பெரிதாக என்று வாயை மூடிக் கொண்டிருந்தனர்..
சீதாவும் ராஜனும் ஊரில் இருந்து வந்த அன்று குகாவிற்கு ஆபிஸ் செல்ல வேண்டிய கட்டாயம்.. முன்பே தாயிடம் கூறியிருந்தாள்..
“நீங்க வர அன்னைக்கு, என்னால லீவ் போட முடியாது மா.. ஆபிஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு.. ஈவ்னிங் சீக்கிரம் வந்துடுவேன்..” என்று..
கூறியது போலே அன்று மாலை ஐந்து மணிக்கு வந்தவள் தாயுடனும் தந்தையுடனும் பேசிக் கொண்டிருந்தாள்..
“மாப்பிள்ளை எத்தன மணிக்கு மா வருவார்?” ராஜனின் கேள்விக்கு
“தெரியலை ப்பா.. எப்பவும் எட்டு மணிக்குள்ள வந்திடுவார்.. வேலை இருந்தா லேட் ஆகும்..”
“ஓ அப்போ நான் கிளம்புரதுகுள்ள வந்துட்டா பரவாயில்ல..”
“ஏன் ப்பா, இன்னைக்கே கிளம்பணுமா? ரெண்டு நாள் இருக்க மாதிரி வரலாம்ல..”
“தம்பி மட்டும் அங்க தனியா இருக்கான்.. செமெஸ்டர் வேற நடக்குதுல.. அதான் அம்மாவ ஒரு வாரம் இருக்க சொல்லிருக்கேன்.. தம்பிக்கு எக்ஸாம் முடிஞ்சதும் அவனைக் கூட்டிட்டு வருவேன்ல அப்போ ரெண்டு நாள் இருக்கேன்.”
மாறனும் அன்று மாமனார் மாமியார் வந்திருப்பதால், வீட்டிற்கு நேரமே வந்துவிட்டான்.. வந்தவனும் மனைவியைப் போலவே ராஜனை இரண்டு நாட்கள் தங்கி விட்டு செல்லச் சொல்ல, அடுத்த வாரம் வருவதாக கூறிச் சென்றார்..
மாறன் அவரை ஸ்டேஷனில் சென்று ரயில் ஏற்றிவிட்டு வந்தான்.. அவன் வருமுன்னே குகா, தாயுடன் பேசிக் கொண்டே உறங்கியிருந்தாள்.. மகளுடன் இருந்த சீதா, மருமகன் வந்ததும் அறையினிலிருந்து வெளியே செல்ல போக
“நீங்க இருங்கத்தை.. ட்ரெஸ் எடுக்க வந்தேன்.. நான் அந்த ரூம்ல படுத்துக்குறேன்..”
“இல்ல மாப்பிள்ளை நான் அங்க போறேன்..”
“இருக்கட்டும் அத்தை..” என்றவன் மாற்றுடையை எடுத்துக் கொண்டு சென்றான்..
காலையில் சீதாவே எழுந்து உணவை தயாரித்துக் கொண்டிருந்தார்..
“என்னத்தை நீங்க.. நான் வருவேன்ல.. அதுக்குள்ள சமைக்க ஆரம்பிச்சுட்டிங்க” அப்பொழுது தான் தூங்கி எழுந்து வந்த மாறன் கூற
“நேத்தே நீங்க தான் செஞ்சீங்க.. அவ நல்லா தூங்கிட்டு இருக்கா.. நான் இல்லாட்டி நீங்க தானே செஞ்சிருப்பிங்க.. ஒரு வாரம் நானே செய்யுறேன் மாப்பிள்ளை..”
“சரி” என்றவன் அவர் என்ன மறுத்தும் கேளாமல் சின்ன சின்ன உதவிகளை செய்துக் கொண்டிருந்தான்.. திடீரென்று கேட்ட சிரிப்பொலியில் இருவரும் பின் திரும்பி பார்க்க, குகா சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தாள்.
“எதுக்குடி சிரிக்கிற?” சீதா புரியாமல் மகளிடம் கேட்க,
“ஹாஹா” என்று இப்பொழுது இன்னும் சத்தமாக சிரித்தாள்..
“ப்ச்.. குகா.. எதுக்கு சிரிக்கிறன்னு சொல்லிடு சிரி..” என்றதும் கணவனை ஒரு முறை பார்த்து நன்றாக சிரித்துவிட்டு
“நீங்க ரெண்டு பேரும் சமைக்கிறதைப் பார்த்ததும்..” என்றவள் நிறுத்தி மீண்டும் சிரிக்க
“குகா..” என்று மாறன் சத்தமாக அழைக்க
“ப்ச் இருங்க.. சொல்லி முடிச்சுக்குறேன்..” என்றவள் சிரிப்பை அடக்கிக் கொண்டு “vip படத்துல தனுஷும், அமலா பால் அம்மாவும் சேர்ந்து பாத்திரம் எல்லாம் கழுவுவாங்களே, அந்த நியாபகம் வந்துடுச்சு.. ரெண்டு பேரும் சேர்ந்து உட்கார்ந்து சீரியல் பார்க்காதது மட்டும் தான் பாக்கி..”
“குகா..” என்று சீதா மகளை முறைக்க
“முறைக்காதிங்க ம்மா.. நிஜமா நான் கிச்சன் உள்ள எண்ட்டர் ஆகும் போது எனக்கு அதான் நியாபகம் வந்தது..”
“எழுந்து சமைக்காம தூங்கீட்டு நக்கல் பண்றியா நீ? போ போய் சீக்கிரம் குளிச்சுட்டு வா..” என்று மகளை விரட்டியவர் மருமகனிடம்
“தப்பா எடுத்துக்காதிங்க மாப்பிள்ளை.. அவ ஏதோ விளையாட்டுத்தனமா பேசுறா..” என்றார்..
“அச்சோ அத்தை அவளைப் பத்தி எனக்கு தெரியாதா? இதை விட கேவலாமவே நாங்க ரெண்டு பேரும் கலாய்ச்சு பேசிருக்கோம்.. இதுக்கு போய் நீங்க இவ்வளவு விளக்கம் கொடுக்குறீங்க.. குகாக்கு என் மேல இல்லாத உரிமையா?”
மருமகனின் வார்த்தை சீதாவிற்கு சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருந்தது.. மாறன் தங்கள் அறைக்குள் நுழையும் பொழுது குகா குளியல் அறையில் வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டது..
“குகா..” என்று அவன் இருமுறை அழைக்க
“ப்ச்.. அந்த ரூம்ல போய் குளிக்க வேண்டியது தானே.. சும்மா கதவைத் தட்டிகிட்டு..” என்று முனங்கிக் கொண்டே கதவைத் திறந்தவள் கணவனை முறைத்தாள்..
“எத்தன தடவை சொல்லுறேன்.. வாமிட் வந்தா டோர் க்ளோஸ் பண்ணாதே, மயங்கி விழுந்தா கூட எனக்கு தெரியாதுன்னு.. அறிவே இல்லையா உனக்கு?”
“..”
“என்ன முறைக்கிற? சொல்லுறதை எதையும் காதுல வாங்காதே.. உன் இஷ்டத்துக்கு எல்லாம் பண்ணு..” என்றவன் குளிக்க சென்றான்..
அவன் குளித்து முடித்து ஹாலிற்கு வந்த சமயம் குகாவிடம் சீதா சாப்பிடும்படி கெஞ்சிக் கொண்டிருந்தார்..
“அம்மா உமட்டுதுன்னு சொல்லுறேன்ல.. எதுவும் வேண்டாம்.. மதியம் சாப்பிட்டுக்குறேன்..”
“அப்படி தான் குகா இருக்கும். அதுக்காக சாப்பிடாம போவியா? காலைல எழுந்து பால், காபி கூட குடிக்கலை.. வெறும் வயித்தோட இருக்கக் கூடாது..”
“இப்போலாம் பால் காபின்னு சொன்னாலே எனக்கு உமட்டுது..”
“காலைல என்ன குடிக்கிற அப்போ?”
“அத்தை இருந்தப்ப ஏதோ ஒரு கஷாயம் செஞ்சு கொடுத்தாங்க.. அதை குடிச்சப் பின்னாடி வாமிடிங் இல்ல..”
“எப்படி செய்வாங்கன்னு சொல்லு? நான் போட்டுக் கொடுக்குறேன்..”
“தெரியாதே..” என்றாள் முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டே..
“அண்ணி ஊருக்கு போன பின்னாடி, அந்த கஷாயம் நீ குடிக்கலையா?”
“குடிச்சேன்.. ஆனா நான் செய்யல.. அவர் தான் போட்டுக் கொடுப்பார்..” என்றதும், மகளை நன்றாக முறைத்தார் சீதா..
“நீ இந்த வீட்டுல என்ன வேலை தான்டி செய்வ? எல்லாமே மாப்பிள்ளை தான் செய்யுறார்? நீ குடும்பம் நடத்துற லச்சனத்தை பாரு.. இதைப் பார்க்கவா நான் மதுரைல இருந்து கிளம்பி வந்தேன்..”
“என்ன சும்மா நேத்துல இருந்து உங்க மருமகன் புராணம் பாடுறீங்க? சமையலுக்கு ஹெல்ப் மட்டும் தான் அவர் செய்றார்.. துணி துவைக்கிறது, அதை காயப் போடுறது, காஞ்ச துணிய அயர்ன் பண்ணுறது, வீடு பெருக்கிறது, பாத்திரம் தேய்க்கிறது.. இவ்வளவு வேலை நான் தான் செய்யுறேன்.. ஒரு கஷாயம் அவர் போட்டுக் கொடுத்தா, எல்லா வேலையும் அவரே செய்றதா அர்த்தமா?” அவளும் தாயை முறைத்துக் கொண்டே கூறினாள்..
சீதா மகளிற்கு பதில் சொல்லுமுன், மாறன் கஷாயத்தைப் போட்டு மனைவியின் கையில் கொடுத்தான்..
“என்ன மாப்பிள்ளை, இப்படி அவளுக்கு ஒவ்வொன்னும் நீங்களே செஞ்சுட்டு இருந்தா, இவ ஒரு வேலையும் செய்ய மாட்டா.. நாலு அரை விட்டு வேலை செய்டின்னு சொல்லாம, கஷாயம் போட்டு ஆத்தி கொடுக்குறீங்க.. ஊட்டிவிடாது மட்டும் தான் பாக்கி.”
‘நீங்க இருக்கீங்கன்னு தான் ஊட்டி விடலை..’ என்று மாறனும்
‘கரெக்டா அம்மா திட்டும்போது கைல டம்ளரை கொடுத்து அவங்க கோபத்தை ஏத்தியா விடுற’ என்று குகாவும் மனதினுல் நினைத்துக் கொண்டனர்..
“பராக்கு பாக்காம குடிச்சுட்டு ஆபிசுக்கு கிளம்பு..” சீதா மீண்டும் அதட்டல் போடவே, வேகமாக அதைக் குடித்தவள்
“நீங்க வராமலே இருந்திருக்கலாம்.. வந்ததுல இருந்து திட்டு..” என்று முனங்கிக் கொண்டே குகா புறப்பட்டாள்..
இரண்டு நாட்கள் இப்படியே சென்றது.. புது ப்ராஜக்ட் ஒன்றில் குகா பிசியாக இருந்தாள்.. எப்பொழுதும் மாறன் தான் வீட்டிற்கு லேட்டாக வருவான், குகாவின் நேரமோ என்னவோ அவளிற்கு அந்த வாரம் முழுவதும் வேலை ஜாஸ்தியாக இருந்தது.. இரவு அவள் தாமதமாக வந்து தினமும் சீதாவிடம் திட்டுக் கொண்டிருந்தாள்.. இன்று சீக்கிரமாக வருவதாக தாயிடம் கூறியிருந்தாள்..
அன்று மதிய இடைவேளையின் பொழுது, மாறனுடன் போட்ட சண்டையைப் பற்றியே குகா நினைத்துக் கொண்டிருந்தாள்..
‘தேவையில்லாம அவரோட சண்டைப் போட்டுடேனோ.. அதுவும் அவசரப்பட்டு ரொம்ப பேசிட்டேன்..’ அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே உணவினை அளந்துக் கொண்டிருந்தாள்..
“ஹோய்..” என்றவாறே அகல்யாவும் அவள் பின்னோடு கவினும் அவளருகில் அமர்ந்தனர்..
“ஹாய்” என்று இருவரையும் பார்த்து புன்னகைத்தாள் குகா..
“எருமை அத்தை ஊர்ல இருந்து வந்திருக்காங்களாம்.. அம்மா போன் பேசும் போது சொன்னாங்க.. நீ சொல்லவே இல்லை..” என்று முறைத்தாள் அகல்யா..
“நம்ம பேசியே ரொம்ப நாளாச்சே.. மறந்துட்டேன்டி சொல்ல..”
“மறந்ததுக்கு தண்டனையா உன் லஞ்ச் எனக்கு..” என்றவள் அவளின் டப்பாவை பிடிங்கிக் கொண்டவள் கவனின் புறம் திரும்பி
“உங்களுக்கு லஞ்ச் வாங்கும்போது அவளுக்கும் சேர்த்து வாங்கிடுங்க..” என்றவாறே உணவை வாயில் போட்டுக்கொண்டாள்..
“என்ன வேணும் குகா?” என்ற கவனின் கேள்விக்கு,
“எனக்கு சாப்பிடுற மூடே இல்ல கவின்.. ஜூஸ் போதும்..” என்றாள்..
மூவரும் பொதுவாக பேசிக் கொண்டிருந்தனர்..
“இப்பொல்லாம் அகல் ரொம்ப நல்லப் பொண்ணா மாறீட்டு வர குகா.. அதுக்கு காரணம் நீங்க தான்..”
“நானா?” குகா புரியாமல் முழித்தாள்..
“ஆமா.. முன்னெல்லாம் என்ன பேசுனாலும் அதைப் பிடிச்சுட்டு சண்டைப்போட்டுட்டு இருப்பா.. இப்போ எல்லாத்தையும் பொறுமையா ஹேண்டில் பண்ணுற.. ஒரு விஷயம் சொன்னா அதுல உள்ள பாசிட்டிவ் நெகட்டிவ் எல்லாம் அலசி ஆராய்ஞ்சு தான் முடிவெடுக்குறா.. எப்படி இந்த திடீர் மாற்றம்ன்னு கேட்டப்ப தான் குகா இப்படி தான் எல்லாத்தையும் பொறுமையா ஹேண்டில் பண்ணுவான்னு சொன்னா.. எங்க லவ் மேட்டர் கூட அவ உங்ககிட்ட சொல்லலைன்னு கோபப்படாம புரிஞ்சுக்கிட்டீங்கன்னு சொன்னா..”
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#32
“குகா.. ஒருவேளை நீ மட்டும் என்னை மாதிரி லவ் பண்ணிட்டு என்கிட்ட சொல்லாம மறச்சிருந்தா நான் உன்னோட பேசிருக்கவே மாட்டேன்.. பட் நீ அந்த இடத்துல ரொம்ப பொறுமையா பேசுன.. இத்தன வருஷமா இவளோட இருந்திருக்கோம் இந்த பொறுமைய இவகிட்ட இருந்து கத்துக்கலையேன்னு பீல் ஆகிடுச்சு..”
கவின் அகல்யா இருவரும் பேச பேச குகாவிற்கு ஒரு மாதிரியாக இருந்தது.. நான்கு நாட்களுக்கு முன் பொறுமை என்றால் என்ன என்பது போல் கணவனுடன் வார்த்தைக்கு வார்த்தை சண்டைப் போட்டவளைப் பார்த்து பொருமைசாலி என்று கூறுகிறார்களே என்றிருந்தது.. வெறும் சிரிப்பை மட்டுமே அவர்களிடம் உதிர்த்தவள் வேறு எதுவும் பேசவில்லை..
**************
தாயுடன் பேசிக் கொண்டிருந்த குகாவின் பார்வை முழுவதும் மாறன் இருந்த அறையினிலேயே இருந்தது.. முதலில் இதை கவனிக்காத சீதா, கவனித்தப் பின்
“தூக்கம் வருதுமா.. நான் போய் படுக்குறேன்..” என்று எழுந்து சென்றார்..
எப்பொழுதுடா அவர் எழுந்து செல்வார் என்று காத்திருந்தது போல், குகா வேகமாக கணவன் இருந்த அறைக்குச் சென்றாள்.. திடீரென்று தன் முன்னால் வேகமாக வந்து நின்ற மனைவியை மாறன் என்னவென்பது போல் பார்த்தான்..
நான்கு நாட்களாக பேசாதவள் திடீரென்று வந்து நின்றதும் அவனிற்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.. ஒரு சில நொடிகள் இருவரும் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்..
“என்ன குகா?” மாரனே முதலில் பேச்சை தொடர்ந்தான்..
“நான்..” என்று ஆரம்பித்த குகாவிற்கு நா வரவில்லை.. எச்சிலை விழுங்கிக் கொண்டு மெதுவாக “சாரிங்க.. நான் அப்படி பேசிருக்க கூடாது..” என்றாள் குனிந்துக் கொண்டே..
அவன் பதிலேதும் சொல்லமால் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, கணவன் தான் கூறியதற்கு ஒன்றும் சொல்லவில்லையே என்று நிமிர்ந்து பார்த்த குகா மீண்டும் “சாரி.. எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு.. யாரோ ஒருத்தர் சொன்னாங்கன்னு உங்களை அப்படி பேசிருக்கக் கூடாது..” என்றவள் அன்று அவள் கல்லூரி நண்பனை சந்தித்ததை முழுவதும் கூறினாள்..
“என்னவோ ஒரு கோபம் வந்துடுச்சு.. என் புருஷனை யாரோ ஒருத்தன் வந்து அவரால தான் ஒரு குடும்பம் பிரிஞ்சிடுச்சுன்னு சொன்னதும், எதைப் பத்தியும் யோசிக்காம உங்களோட சண்டைப் போட்டுட்டேன்.. பொறுமையா பேசணும்னு தான் நினைச்சேன்.. என்னை அறியாமலே ஏதேதோ பேசிட்டேன்.. என்னை மன்னிச்சிடுங்க..” என்றவளின் கண்களில் கண்ணீர் வந்தது..
“ஹே லூசு.. எதுக்கு அழுகுற?” என்றவாறே மாறன் மனைவியின் அருகில் வந்து அவளை அனைத்துக் கொண்டான்..
“நீங்க பொய் சொன்னாலும், ஆமா நான் சொன்னேன்னு என்கிட்ட சொல்லிருக்கீங்க.. அதை யோசிக்காம லூசு மாதிரி பேசிட்டேன்.. அதுவும் டிவோர்ஸ் அது இதுன்னு எப்படி பேசுனேன்னு எனக்கே தெரியல..” அவனது அணைப்பில் இருந்துக் கொண்டே கூறினாள் குகா..
“சரி அழுகாதே..”
“உங்க பெர்சனல்ல தலையிட கூடாதுன்னு நான் முன்னமே நினைச்சிருந்தேன்.. அந்த வினோத் வந்து பேசுனதும், எல்லாம் மறந்துடுச்சு.. ஆயிரம் இருந்தாலும் நான் அப்படி சொல்லிருக்கக் கூடாது.. யாரோ ஒருத்தரை நீங்க அப்படி சொன்னதுக்கே உங்களோட சண்டைப்போட்ட நானே உங்களை அப்படி சொல்லிட்டேன்.. சாரி மாறன்..” என்றாள் அழுது கொண்டே..
“ஹே லூசு விடு.. எதுக்கு இப்போ இப்படி அழுகுற?”
“உங்களுக்கு என் மேல கோபம் இல்லையா?” அவனை நிமிர்ந்து பார்த்து அவள் கேட்க,
“அதெல்லாம் நிறையாவே இருந்தது.. அப்புறம் உன் நிலைமையும் புரிஞ்சது..
“என்ன நிலைமை?”
“எப்பவுமே நம்ம சண்டைப் போட்டா, தப்பு என்மேலேயே இருந்தாலும் நீ தான் முதல்ல வந்து சமாதானம் ஆவ.. இந்த டைம் நீ அப்படி பண்ணல.. திடீர்னு சிரிப்ப, திடீர்னு முறைப்ப.. இதெல்லாம் பிரெக்னன்சி டைம்ல வர மூட் ஸ்விங்ஸ் தான்.. நீ நார்மலா இருந்திருந்தா, பொறுமையா தான் சண்டைப் போட்டிருப்ப..”
“நெஜமா மூட் ஸ்விங்ஸ்னால தான் இப்படி நடந்துக்குறேனா?” பாவமாக அவள் கேட்க..
“ஒரு பேச்சுக்கு சொன்னேன்..”
“போடா..” என்றவள் “சாரி அந்த வார்த்தை..” என்று அவள் மறுபடியும் ஆரம்பிக்க
“அடியே விடு.. எனக்கும் புரியுது.. என்னை ஒருத்தன் உன்கிட்ட வந்து தப்பா சொன்னா, உனக்கும் கோபம் வர தானே செய்யும்.. அதுல ஏதோ பேசிட்ட.. எத்தனை தடவை சாரி கேட்ப?”
“ம்..”
“நீ ஒன்னை புரிஞ்சுக்கோ குகா.. இந்த உலகத்துல யாருமே உண்மை மட்டுமே சொல்லுறது இல்லை.. அதுவும் அவங்க அவங்க வேலைன்னு வரப்ப ஏகப்பட்ட பொய் சொல்லதான் செய்வாங்க.. வக்கீல், போலீஸ், போலிடீசியன் பொய் சொல்லுவாங்கன்னு ஊருக்கே தெரியும்.. மத்த professionல இருக்கவங்களும் அப்படி தான்.. அது வெளியே தெரியிறது இல்ல..
ஏன் உங்க சாப்ட்வேர்ல நீங்க பொய்யே சொல்ல மாட்டீங்களா? பத்து கேஸ் எடுத்தா அதுல எட்டு கேஸ்ல நான் தப்பானவங்களுக்காக தான் வாதாட வேண்டியதா இருக்கு.. ஆப்போசிட் சைட்டும் நல்லவங்க கிடையாது தான்.. அந்த மாதிரி நான் வாதாடி ஜெயிச்ச கேஸ்ல ஆப்போசிட் சைட் உள்ளவங்களுக்கு பெரிய பிரச்சனைன்னு இது வரை வந்ததில்லை.. இனிமேலும் வராது..
அந்தப் பொண்ணு எந்த நிலைமைல புருஷன் வீட்டுல இருந்து தப்பிச்சு வந்தா தெரியுமா? அவ்வளவு அடி அடிச்சிருக்காங்க.. கண்ணு கால் கைன்னு நிறைய அடி.. உன் கிளாஸ்மேட் ரொம்ப அமைதின்னு சொன்னியே அவனும் கூட சேர்ந்து தான் அடிச்சிருக்கான்..
நமக்கு அரேன்ஜ்ட் மேரேஜ் நம்ம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுப்போம் அப்புறமா மத்ததெல்லாம்ன்னு சொல்லிருக்கான்.. அவளும் அதை எல்லாம் நம்பிருக்கா.. எல்லாரும் ஏதோ ஒரு functionக்கு ஊருக்கு போகலாம்னு முடிவு பண்ணிருக்காங்க.. இவன் மட்டும் வேலை இருக்குன்னு வரலைன்னு சொல்லிருக்கான்..
மீதி மூணு பேரும் கிளம்புறதா தான் பிளான்.. கடைசி நேரத்துல அவங்க மாமியார் நீ அவனோடையே இருன்னு சொல்லிட்டு போயிட்டாங்க.. இவளும் சரின்னு சொல்லிருக்கா.. வேலை இருக்கனால அவன் லேட்டா தானே வருவான்னு வீட்டைப் போடிட்டு இவ கோவிலுக்கு போயிட்டு வந்துப் பார்த்த அவங்க ரூம்ல, அவனும் இன்னொரு பையனும்.. பாவம் அந்தப் பொண்ணு.. இதையெல்லாம் அவங்க மாமியார்கிட்ட முதல்ல சொன்னப்ப அவளை நம்பல.. அப்பறம் அவனே ஆமா நான் அப்படி தான்னு சொல்லிருக்கான்..
அப்புறம் அங்கிருந்து தப்பிச்சு அவங்க அம்மா வீட்டுக்கு வந்து, டிவோர்ஸ் வாங்கலாம்ன்னு முடிவு செஞ்சு என்கிட்ட வந்தாங்க.. அந்த வினோத்துக்கு இதைப் பத்தி எதுவும் தெரியலைப் போல.. அவங்க செஞ்ச தப்பை மறைக்க இந்த பொண்ணு மேல பழியைப் போட்டுட்டாங்க.. வினோத் கிட்டையும் இதையே தான் சொல்லிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.. அதான் அவனும் உன்கிட்ட வந்து அப்படி சொல்லிட்டான் போல..
இந்த கேஸ்ல நான் வின் பண்ணா மட்டும் பத்தாது.. அந்த பையன் பேமிலி எல்லாருக்கும் தண்டனை வாங்கிக் கொடுக்கணும்னு நினைக்கிறேன்.. இந்த மாதிரி வர கேசஸ்ல என்னோட பாய்ன்ட் ஆப் வியூ இப்படி தான் இருக்கும்.. எனக்கும் எதிக்ஸ் தெரியும்.. கண்மூடித்தனமா நான் எதுவம் பண்ணுறதில்லை.. மத்தவங்க சொல்லுறதை வெச்சு நீ பீல் பண்ணாதே..
நமக்குள்ள இதுவரை பெரிய பிரச்சனைன்னு எதுவும் வந்ததில்லை.. இனியும் வராம இருக்கணும்னா அது உன் கைல தான் குகா இருக்கு.. திரும்பவும் சொல்லுறேன் என்னால யாரோட வாழ்க்கையும் கெட்டுப் போகாது.. இதை நான் உறுதியா சொல்லுறேன்.. இந்த கேஸ்ல நான் நேர்மையா தான் வாதாடுறேன்..” அவன் நீண்ட விளக்கம் கொடுத்தான்..
“ம்” அவளின் குற்ற உணர்ச்சி கூடிக் கொண்டே போனது.. அவளால் வேறு எதுவும் பேச முடியவில்லை.
“பக்கம் பக்கமா நான் பேசிருக்கேன்.. ஓகேன்னு ஒரே வார்த்தைல பதில் சொல்லுற?”
“எனக்கு தெரியலை, என்ன சொல்லன்னு.. எதுவும் முழுசா தெரியாம உங்களோட சண்டைப்போட்டுட்டேன்..”
“இனிமே இப்படி பண்ணாதே.. விடு..”
“நீங்க சொல்லுறது எல்லாம் மூளைக்கு புரியுது.. ஆனா மறுபடியும் வினோத் மாதிரி யாராச்சும் என்கிட்ட உங்களைப் பத்தி எதாச்சும் சொன்னா, நான் எப்படி ரியாக்ட் பண்ணுவேன்னு பயமா இருக்கு.. உங்களோட மறுபடியும் சண்டைப் போட்டா, எனக்காக பொறுத்துக்கோங்க...”
“அடப்பாவி விடிய விடிய கதைக் கேட்டு மண்டோதரிக்கு ராவணன் சித்தப்பான்னு சொல்லுற மாதிரில இருக்கு..”
“உங்களுக்கு பழமொழி கூட ஒழுங்கா சொல்லத் தெரியாதா? நீங்க எப்படி தான் கோர்ட்ல வாதாடுரீங்களோ..” என்றவள் பின் “நெஜமா என் மேல கோபம் இல்லைல?” என்றாள்
“கோபம் கான்.. லவ் இஸ் ஆன்..” கண்ணடித்துக் கொண்டே கூறியவன் அவள் உதட்டை நெருங்க,
“நீங்க கோபமாவே இருங்க.. நான் போறேன்..” அவன் பிடியில் இருந்து விலகி ஓடினாள் குகா..
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#33
காதல் செய்வேன் கட்டளைப்படி..
காதல் 13
“எங்க கிட்ட ஒரு வார்த்தை கூட நீ சொல்லல.. அகல்யா அம்மா கடைல என்னைப் பார்த்துட்டு விஷயம் சொல்றாங்க.. என்ன நினைச்சுட்டு இருக்க நீ.. உன் மாமியாருக்கு கூட சொல்லாம இருந்திருக்க.. அவங்களும் எனக்கு தெரியாதேன்னு சொல்றாங்க.. பெரியவங்கன்னு ஒரு மட்டு மரியாதை இல்லை உனக்கு. காலைல நான் பேசும்போது கூட நீ மூச்சு விடலைல.. அங்க வந்தேன் நல்லா நாளு சாத்து சாத்திடுவேன்..” விடாமல் மகளை சீதா பொரிந்து தள்ளிக் கொண்டிருக்க, என்னமோ திட்டிக் கொள் என்பது போல் காதில் போனை வைத்துக் கொண்டு தாய் திட்டுவதை ஒன்றுமே சொல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தாள்..
“வாயை திறந்து இப்பவாச்சும் பேசுறியா நீ? அவ்வளவு திமிர் ஆகிடுச்சா குகா உனக்கு?” சீதா மீண்டும் கத்த, ராஜன் தான் மனைவியின் கத்தலில் மகளிற்கு ஆதரவாக வந்தார்..
“விடு சீதா.. முடியாம இருக்கப் பிள்ளைகிட்ட எதுக்கு இப்படி சத்தம் போடுற.. நமக்கு தெரிஞ்சா வருத்தப்படுவோம்னு சொல்லாம விட்டுருக்கா..”
“அதுக்காக மறைப்பாளா? வந்து இருக்கு உனக்கு..” என்று அவர் திட்டிக் கொண்டே இருக்க, பொறுமை இழந்த குகா,
“ட்ரிப்ஸ் போட்டதுக்கு ஏன் மா இப்படி அலம்பல் பண்றீங்க.. நான் நல்லா தான் இருக்கேன்..” என்றாள்
“ஓ நான் இங்க கவலைப் படுறது உனக்கு அலம்பலா தெரியுதா?” அதற்கும் அவர் திட்ட,
“அம்மா ப்ளீஸ். முடியலை. உங்களோட.. விடுங்க. இனி இப்படி நடக்காம பாத்துக்குறேன்..”
“போதும் வேலைக்கு போனது.. லீவ் போட்டுட்டு ரெஸ்ட் எடுன்னு சொல்றோம்ல கேக்கவே மாட்ற..”
“அடுத்த மாசத்துல இருந்து லீவ் எடுத்துக்குறேன் மா.. இன்னும் ஒரு மாசம் தானே..”
“என்னவோ போ. உடம்பை பார்த்துக்கோ.. இப்பவே கிளம்பணும்னு தான் எனக்கு மனசு கிடந்து தவிக்குது.. அப்பாக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்கு.. முடிஞ்சதும் ரெண்டு மூணு நாள்ல நாங்க வரோம்..”
“வீணா ஏன் அலையுறீங்க.. இருக்கட்டும் மா.. நான் தான் நல்லா இருக்கேன்னு சொல்றேன்ல..”
“சம்மந்தி நாளைக்கு வரேன்னு சொல்லிருக்காங்க..”
“ஐயோ அம்மா.. சின்ன விஷயத்தை ஏன் இப்படி பெருசு பண்றீங்க எல்லாரும்.. அத்தையை எதுக்கு இப்போ வர சொன்னீங்க.. உங்கள வெச்சுக்கிட்டு..”
“நான் ஒன்னும் சொல்லல.. மருமகளுக்கு முடியலைன்னு சொன்னதும் அவங்க கிளம்பி வராங்க.. என்கிட்ட எதுக்கு நீ காயுற..”
“முதல்ல இந்த அகல்யாவை கொல்லனும்.. ஹாஸ்பிடலுக்கு தனியா போகணுமேன்னு அவளை துணைக்குக் கூட்டிட்டு போனா, சகுனி வேலை செஞ்சு வெச்சுருக்கா..” என்று முணுமுணுத்தவள்,
“சரி நான் அப்புறம் கூப்பிடுறேன்..” என்று போனை வைத்தவள் சற்று தள்ளி நின்று கொண்டு தன் தாயிடம் போனில் கெஞ்சிக் கொண்டிருந்த மாறனை பார்த்ததும் சிரிப்பும் விரக்தியும் ஒருசேர வந்தது..
“இல்லமா.. கொஞ்சம் வேலை அதான் என்னால கூட போக முடியலை.. ட்ரிப்ஸ் போடுற அளவுக்கு இருக்கும்னு நானும் நினைக்கலை.. நார்மல் செக் அப் தான்னு நினைச்சுட்டேன்..”
“..”
“ஆமா என்னோட தப்பு தான்.. நான் இல்லைன்னு சொல்லலையே.. இனி இப்படி நடக்காம பாத்துக்குறேன்..” குகாவைப் போலவே இவனும் தாயிடம் சொல்லிக் கொண்டிருந்தான்..
“..”
“சரி வாங்க.. நேர்ல பேசிக்கலாம்..” போனை அணைத்துவிட்டு மனைவியின் அருகில் வந்து அமர்ந்த மாறன், குகாவை தயக்கமாக ஏறிட்டான்..
அவளிடம் என்ன பேசுவது என்று அவனிற்கு தெரியவில்லை.. நேற்றிலிருந்து மாறனும் அவளிடம் சமாதானக் கொடியை பறக்க விட்டுக் கொண்டு தான் இருக்கிறான்.. குகாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.. முதல் நாள் அவனை திட்டியவள் அதன் பின் வாயை திறந்து அவனுடன் பேசவும் இல்லை..
இப்படியே பார்த்துக் கொண்டே இருந்தால் வேலைக்கு ஆகாது என்று எண்ணியவன்,
“அம்மா நாளைக்கு வரேன்னு சொல்லிருக்காங்க.. உன்னோட பேசணும்னு சொன்னாங்க.. நீ அத்தை கிட்ட பேசிட்டு இருக்கேன்னு சொன்னேன்.. சரி நேர்ல பேசிக்கிறேன்னு சொல்லிட்டாங்க..” என அவளிடம் இருந்து “ம்” மட்டுமே பதிலாக வந்தது..
“குகா..” அவள் இழுக்க, என்ன என்பது போல் அவனை பார்த்தவளின் கைகளை பிடித்துக் கொண்டவன்
“நேத்து நான்.” என்று ஆரம்பித்தவன் பின் “சாரி” என்றான்..
“இதோட எத்தனை தடவை சாரி கேப்பீங்க.. விடுங்க.. உங்களுக்கே தெரியும் என்னால சண்டை போட்டா பேசாம இருக்க முடியாது.. அதுவும் உங்களோட..” என்று நிறுத்தியவள் “நானே கொஞ்ச நேரத்துல சரி ஆகிடுவேன்.. அப்புறம் பேசலாம்..” என்றவள் படுத்துக் கொண்டாள்..
இருவருக்குமே தூக்கம் வருவேனா என்று சண்டித்தனம் செய்தது.. முதல் நாள் நடந்த நிகழ்வுகளே கண்முன்னே வந்தது..
“இன்னைக்கு செக் அப் போகணும்.. ஈவ்னிங் மறக்காம வந்துடுங்க.” ஐந்து மாதம் ஆகியிருந்ததால் லேசாக மேடிட்ட வயிற்றில் பார்வையை பதித்துக் கொண்டே கூறினாள் குகா..
“வந்துடுறேன்..” பைலை பார்த்துக் கொண்டே பதில் கூறினான் மாறன்..
“சரி சாப்பிட வாங்க.. டைம் ஆகிடுச்சு..”
“இல்லமா லேட் ஆகிடுச்சு.. நான் வெளிய பாத்துக்குறேன்.. நீ சாப்டு ரெஸ்ட் எடு.. பாய்..” மனைவியின் கன்னத்தில் தட்டி விட்டு ஷூவை அணிந்து கொண்டு அவன் வேகமாக புறப்பட்டான்..
அன்று குகாவிற்கு விடுமுறை என்பதால், கணவன் சென்றதும் வீட்டு வேலைகளை மெதுவாக செய்து கொண்டிருந்தாள்..
பத்து மணிக்கே எல்லாவற்றையும் முடித்தவள், ரோஹிணியுடனும் அகல்யாவுடனும் கான்பரன்ஸ் காலில் பேசிக் கொண்டிருந்தாள்.
“அகல் ஹாஸ்டல்ல தானே இருக்க.. இங்க வாயேன்.. நான் மட்டும் தனியா இருக்க போர் அடிக்குது..” பேசிக் கொண்டே குகா கூற,
“சரி லஞ்ச் முடிச்சுட்டு வரேன்..”
“இங்க வா. நான் சமைச்சுட்டேன் சேர்ந்து சாப்பிட்டுக்கலாம்..”
“சரி அப்போ நான் போய் குளிச்சுட்டு கிளம்புறேன்.. நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க..” என்றவள் தயாராக சென்றாள்..
“நினைச்ச நேரத்துக்கு நினைச்ச இடத்துக்கு போறதுக்கு எல்லாம் கொடுத்து வெச்சுருக்கணும்.” ரோகிணி பெருமூச்சு விட,
“அவளும் உன்னை மாதிரி மாமியார் வீட்டுக்கு போயிட்டா வர முடியாது.. இப்பவே என்ஜாய் செஞ்சுக்கடும் விடு..” – “குகா”
“உனக்கென்ன மாமியார் மாமனார் ஊர்ல இருக்காங்க.. தொல்லை இல்லாம ஜாலியா இருக்க.. என்னை மாதிரியா?”
“என் மாமியார் இங்க இருந்தாலும் என்னை தொல்லை பண்ண மாட்டாங்க.. வெறி நைஸ் மதர் இன் லா. யூ நோ..”
“ப்ச் போடி வயிதரிச்சலைக் கிளப்பாம..”
“எல்லாம் காதல் படுத்தும் பாடு.. உன்னை யாரு லவ் மேரேஜ் செஞ்சுக்க சொன்னா?” தோழியை குகா கிண்டல் செய்ய
“என் நேரம் தான்.. எலி பொரில வாலண்டியரா சிக்கிட்டேன்.. என்ன செய்ய..”
“ஹாஹா..”
மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தனர்.. அகல்யா ஒரு மணி நேரத்தில் குகாவின் வீட்டிற்கு வந்துவிட, அடுத்து இவர்களின் அரட்டை கச்சேரி ஆரம்பமானது..
“வெயிட் குறைஞ்சுட்டே போற மாதிரி இருக்க குகா.. ஒழுங்கா சாப்பிடுறியா இல்லையா?”
“மாறன் இப்பல்லாம் அடிக்கடி குக் பண்றதில்ல.. என் சமையல் தானே.. அதான் இப்படி ஆகிட்டேன்..”
“நல்லா மூணு வேளையும் அவரே செஞ்சு போட்டு உன்னை கெடுத்து வெச்சுட்டார்டி..” என்று தோழியிடம் குறைப்பட்டாலும், மாறனை நினைத்துப் பெருமையாக தான் இருந்தது..
“நீங்க எல்லாரும் இப்படி கண்ணு வெச்சு வெச்சு தான், அவர் இப்போ கிட்சன் பக்கமே வரதில்லை.. உன் கொள்ளிக் கண்ணை கொளுத்தணும்..”
பேசிக் கொண்டே உணவை முடித்துவிட்டு, ஒரு குட்டி தூக்கத்தையும் போட்டனர்.. ஐந்து மணிபோல் எழுந்த அகல்யா,
“நான் கிளம்பட்டா டி.. ஹாஸ்பிடல் போகணும்னு சொன்ன.. அண்ணா இப்போ வந்துடுவாங்க தானே..” என்க
“அச்சோ நல்லா தூங்கிட்டோம்.. ஆறரைக்கு அபாய்ன்மென்ட்.. அஞ்சரைக்கு கிளம்புனா தான் சரியா இருக்கும்..” என்றவள் கணவனின் எண்ணுக்கு அழைக்க, அவனிடம் இருந்து பதிலே இல்லை..
இரண்டு மூன்று முறை முயன்றவளிற்கு எரிச்சல் தான் வந்தது..
“ப்ச்..” என்று போனை சோபாவில் தூக்கிப் போட்டவளைப் பார்த்த அகல்யா,
“என்னாச்சு.. போன் எடுக்கலையா.. எதாச்சும் பிசியா இருப்பாங்க.. நீ ரெடி ஆகு.. அதுக்குள்ள திரும்ப கூப்பிடுவாங்க..” என்றதும், அவளும் உடையை மாற்றி முகம் கழுவி வந்தாள்..
“காபி போடவா?” அகல்யா கேட்க
“இல்ல வேண்டாம்.. குடிக்கிற மூட் இல்ல.. வாமிட் வேற அப்பப்ப வருது..” என்றவள் மீண்டும் மாறனிற்கு அழைத்துப் பார்த்து ஏமாற்றத்துடன் சோபாவில் அமர்ந்தாள்.
“ஹே.. ஏன் இப்படி உக்காந்திருக்க.. கேஸ் விஷயமா அலையுறாங்கன்னு நீயே சொன்ன தானே.. டென்ஷன் ஆகாத..” என்றாள்.. ஐந்து நிமிடம் அமைதியாக இருந்த குகா,
“என்னோட ஹாஸ்பிடலுக்கு வரியா? நேத்தே போக வேண்டிய செக் அப்.. அவரால நேத்து வர முடியலைன்னு தான் இன்னைக்கு மாத்துனேன்.. இப்போ திரும்ப மாத்துனா, டாக்டர் எதாச்சும் சொல்வாங்களோன்னு இருக்கு..”
“சரிடி.. போலாம்..” என்ற அகல்யாவும், குகாவுடன் மருத்துவமனைக்குச் சென்றாள்..
அவளை பரிசோதித்த மருத்துவர், ஸ்கேன் செய்துவிட்டு வருமாறு கூறினார்..
“உமட்டல் இன்னும் இருக்கா?” என்று கேட்டவாறே, ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்துக் கொண்டிருந்தார்..
“ஆமா டாக்டர்.. சில சமயம் இருக்கு.. எப்ப வருமோன்னு பயந்துட்டே எல்லாத்தையும் சாப்பிடுறேன்..”
“தண்ணி சத்து ரொம்ப கம்மியா இருக்கு.. வாமிடிங் உங்களுக்கு இன்னும் இருக்கதுனால, தண்ணி உள்ள ரொம்ப கம்மியா இருக்கு.. நீங்க சாப்பிடுறது புல்லா வெளிய வந்துடுது..” மேலும் சிறிது நேரம் ரிபோர்ட்டைப் பார்த்தவர்
“ட்ரிப்ஸ் போட்டுடலாம் குகா.. இப்படியே போச்சுனா ரொம்ப கஷ்டம்..” என
குகாவிற்கு சற்று பயமாகவே இருந்தது.. அகல்யாவிற்கும் அதே தான்.. பெரியவர்கள் யாரும் இல்லாமல் இவர்கள் இருவர் மட்டும் இருக்கும் இந்த நேரத்தில் ட்ரிப்ஸ் என்றதும் இருவருக்கும் கொஞ்சம் பயமாக தான் இருந்தது.. இவர்களின் முகத்தைப் பார்த்த மருத்துவர்,
“பயப்படுற அளவுக்கு ஒண்ணுமே இல்ல.. இப்போ முக்காவாசி பொண்ணுங்களுக்கு இந்த பிரச்சனை இருக்க தான் செய்யுது.. ட்ரிப்ஸ் போட்டு கொஞ்ச நேரத்துல கிளம்பிடலாம்..” என்றவர் நர்சை அழைத்து சொல்ல..
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#34
குகாவும் அகல்யாவும் அவருடன் சென்று ட்ரிப்சை போட்டுவிட்டு, மருத்துவரை மீண்டும் சந்தித்துவிட்டு மாத்திரைகளை வாங்கினர்..
“ஒழுங்கா தான் திண்ணு தொலையேன்டி.. எனக்கு ரொம்ப பயம் ஆகிடுச்சு..” வீட்டிற்கு வரும் வழியில் எல்லாம் அகல்யா, குகாவை அட்வைஸ் என்கிற பெயரில் கொன்று கொண்டிருந்தாள்..
வீட்டிற்கு வந்தபின்பும் “நைட் டின்னர் செஞ்சுவெச்சுட்டு ஹாஸ்டல் போறேன்” என்று கூறியவள் இட்லியும் சட்டினியும் செய்து விட்டு, குகாவை வலுக்கட்டாயமாக உண்ணவைத்தப் பின்பே புறப்பட்டாள்.
அது வரையிலுமே மாறனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.. அவனின் மேல் உள்ள கோபம் குகாவிற்கு கூடிக் கொண்டே சென்றது..
மாத்திரையின் விளைவில் தூக்கம் கண்ணை சுழற்றினாலும், மாறன் வந்ததும் அவனுடன் சண்டைப் போட வேண்டும் என்கிற நோக்கத்துடன், சோபாவிலேயே அமர்ந்திருந்தாள்..
கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த மாறன், மனைவியை பார்த்துவிட்டு
“போச்சு.. செம கோபமா இருக்காப் போல. செத்தடா மாறா..” என்று புலம்பிக் கொண்டே அவள் அருகில் சென்றான்..
“சாரி குகா.. உன் கால்ஸ் எல்லாத்தையும் இப்போ தான் லிப்ட்ல வரும் போது பார்த்தேன்.. ஜட்ஜ் போன் பண்ணி வர சொல்லிருந்தார்.. அங்க போனதும் சைலன்ட்ல போட்டுட்டேன்.. அதான்.. சாரி..” என்றவன், மனைவி தன்னை முறைத்துக் கொண்டிருப்பதை பார்த்து, அவள் கையை பிடிக்க,
“ஸ்... ஆ” என்றவள் கணவனின் கையில் இருந்து தனது கையை உருவிக் கொண்டாள்.. முகத்தை பார்த்துக் கொண்டே கையை பிடித்தவன், அவளின் சத்தத்தில் கையைப் பார்க்க, வென்ப்ளான் இருந்த இடத்தை, தான் சற்று பலமாக பிடித்தது அவனிற்கு அப்பொழுது தான் உணர்ந்தது..
“ஹே.. குகா.. என்னாச்சு.. ட்ரிப்ஸ் போடுற அளவுக்கு?” என்று அவன் பதற, அவனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு ஒன்றும் கூறாமல் அமர்ந்துக் கொண்டாள் குகா..
“உன்னை தான் கேக்குறேன்.. இந்த அளவுக்கு வீக்கா இருந்திருக்கியா?”
“..”
“எதாச்சும் சொல்லுறியா நீ? என்ன நினைச்சுட்டு இருக்க? தனியாவா போன? ரொம்ப முடியலையா?”
“இன்னைக்கு செக் அப் இருக்குன்னு, உங்ககிட்ட நான் சொல்லவே இல்லைல..” நக்கலாக அவள் கேட்க
“குகா.. எனக்கு..” என்று அவன் பதில் சொல்ல வருவதற்குள்
“உங்க கேஸ் விஷயமா அலைஞ்சிட்டு இருந்தீங்க அதானே.. லாஸ்ட் டைமும் இதே தான் சொன்னீங்க.. நேத்து போக வேண்டிய செக் அப்பை நீங்க வர முடியாதுன்னு தானே இன்னைக்கு மாத்துனேன்.. இன்னைக்கும் வர முடியாதுன்னு, ஒரு வார்த்தை கூட சொல்லாம உங்க வேலையை பார்க்க போயிட்டிங்க.. நான் லூசு மாதிரி நீங்க வருவீங்க வருவீங்கன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..” என்றவளின் குரல் உள்ளே சென்றது..
“குகா.. இல்லமா நான் உன்னை ஸ்ட்ரைட்டா ஹாஸ்பிடலுக்கு வர சொல்லிடலாம்னு போன் பண்ணனும் நினைச்சுட்டே தான் இருந்தேன்.. அதுக்கு நடுல ஜடத் கூப்பிடதும் சொல்ல மறந்துட்டேன்.. சைலன்ட்ல இருந்ததுனால நீ கால் பண்ணதையும் நான் கவனிக்கல..”
“ஹெல் வித் யூர் கேஸ்..” என்றவள் உள்ளே செல்ல போக
“நான் வேணும்னு பண்ணல குகா.. அந்த கேஸ் தான்.. உனக்கும் உண்மையை ப்ரூப் பண்ணனும்ல..”
“நான் உங்ககிட்ட கேட்டேனா ப்ரூப் பண்ணுங்கன்னு? அன்னைக்கு சண்டைப் போட்டேன்.. நீங்க விவரம் சொன்னப் பின்னாடி புரிஞ்சுகிட்டேன் தானே.. உங்க கேஸ் ஜெயிக்கணும்னு அலையுறேன்னு சொல்லுங்க ஒத்துக்குறேன்.. சும்மா நான் சொன்னதுனால தான் இப்படி ப்ரூப் பண்றேன் சொல்லாதிங்க..
இப்போ ப்ரூப் செஞ்சு என்ன என்கிட்ட காட்ட நினைக்கிறீங்க? அதை எல்லாம் நான் எப்பவோ மறந்துட்டேன்.. நீங்க தான் இப்போ தேவையில்லாம இதை வெச்சு நமக்குள்ள சண்டையை உருவாக்குறீங்க.. என்ன சண்டை போட்டாலும் கொஞ்ச நேரத்துல நான் வந்து பேசிடுவேன்.. அந்த தைரியம் தானே உங்களுக்கு..
பத்து நிமிஷம் கோபமா கத்துவா, போய் கட்டிபிடிச்சு சமாதனம் செஞ்சுடலாம்ன்னு தானே நினைச்சிருப்பீங்க.. போன தடவையும் செக் அப்க்கு நீங்க வரலை. அத்தை இருந்ததுனால அவங்களோட போயிட்டேன்.. இப்போ தனியா இருக்காளே, என்ன பண்ணுவான்னு உங்களுக்கு தோணவே இல்லைல..
அவ்வளவு போன் பண்றேன்.. எதுக்கும் ரெஸ்பான்ஸ் இல்ல.. கேட்ட ஜட்ஜோட மீடிங்க்ன்னு சொல்றீங்க.. ஒரு வேல எனக்கு முடியாம, ஏன் சாகுற நிலைமைல நான் போன் செஞ்சுருந்தா என்ன செஞ்சுருப்பீங்க.. தொல்லை ஒழிஞ்சதுன்னு சந்தோசமா இருந்திருப்பீங்க அப்படி தானே..”
அவள் கூறியதை எல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த மாறன், அவள் கடைசியாக கூறியதை கேட்டதும்
“அரை வாங்கப் போற குகா நீ..” என்று கத்தினான்..
“சும்மா கத்த மட்டும் செய்ங்க.. உங்க அருகாமை வேணும்னு நினைக்கிறப்ப எல்லாம் என்னோட இருக்காதிங்க.. என்னோட பலவீனத்தை நீங்க நல்லா யூஸ் பண்ணுறீங்க..”
“ஹே என்ன குகா.. என்னை புரிஞ்சுக்கோ..” மாறன் எதுவோ சொல்லவர
“நான் உங்களைப் புரிஞ்சுக்கலையா மாறன்.. மனசை தொட்டு சொல்லுங்க.. ஒவ்வொரு நாளும் நீங்க லேட்டா வரும் போதும், எனக்கு கஷ்டமா இருந்தாலும் உங்களோட சண்டை போட்டுருக்கேனா? இருக்கிற நேரத்துல சந்தோசமா இருப்போம், சும்மா ஆர்கியூ செஞ்சா டைம் தான் வேஸ்ட் ஆகும்ன்னு நான் அமைதியா விட்டுடுறேன்.. அப்படி விட்டு விட்டு தான் என்னோட ஸ்பென்ட் பண்ற டைம் குறைஞ்சிடுச்சு.. கேஸ் கேஸ்ன்னு அதையே கட்டிக்கிட்டு அழுங்க..” என்றவள் அறைக்குச் சென்று படுத்துக் கொண்டாள்..
குகா கூறியதில் இருந்தே, தன்னுடைய அருகாமையை அவள் அதிகம் தேடியிருக்கிறாள் என்று உணர்ந்த மாறன், இனி இவ்வாறு இருக்கக் கூடாது என்று முடிவு செய்து மனைவியை நாடிச் சென்றான்..
குகாவோ அதற்குள் மருந்தின் வீரியத்தில் தூங்கியிருந்தாள்.. அடுத்த நாள் அவனிற்கு வேலை இருந்த போதும், மனைவியை சமாதானம் செய்வது தான் முக்கிய கடமை என்று எண்ணியவன், அவனுடன் நண்பன் ஹரிஷை அழைத்து சில வேலைகளை செய்ய சொல்லிவிட்டு, வீட்டிலேயே இருந்தான்..
பல முறை குகாவுடன் அவன் பேச முயற்சிக்க, பலன் என்னமோ பூஜ்யம் தான்.. இரு வீட்டுப் பெரியவர்களுக்கும் அகல்யாவின் மூலம் குகாவின் உடல் நிலை தெரிந்திருக்க, நாளை மருமகளை பார்த்துக்கொள்ள சித்ரா வருவதாக கூறியிருந்தார்.. அவரிடமும் மாறனிற்கு நன்றாக வசவு கிடைத்தது..
‘போன்லையே அந்த திட்டு திட்டுனாங்க.. நேர்ல என்ன சொல்லப் போறாங்களோ..’ என்று எண்ணியவாறே மாறன் நித்திரைக்குச் சென்றான்..
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#35
காதல் செய்வேன் கட்டளைப்படி
காதல் 14
காலையில் வழக்கம் போல் எழுந்த மாறன், மனைவி தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, சத்தம் செய்யாமல் குளியல் அறைக்குச் சென்றான்..
காபியை குடித்துக் கொண்டு இருக்கும் போதே சித்ரா அழைத்து ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவோம் என்று கூறினார்.. அவர்கள் வருவதற்குள் வீட்டை கொஞ்சம் ஒதுங்குப் படுத்தியவன், மனைவியை எழுப்புவோமா என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே குகா எழுந்து குளியல் அறைக்குள் சென்றாள்.
குளித்து முடித்து வந்தவளிடம் “காபி போடவா?” என்று மாறன் கேட்க
“இல்ல வேண்டாம்.. ஒரு மாதிரி இருக்கு..” என்று சோபாவில் அமர்ந்துக் கொண்டாள்..
“என்னாச்சு?” மாறன் சற்று பதட்டமாக அவள் அருகில் சென்று கேட்க
“ஒண்ணுமில்ல.. மார்னிங் சிக்னெஸ் தான்.. நீங்க பயப்படாதிங்க..” என்றவள் சோபாவில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்..
“ரூம்ல போய் படு குகா..”
“இல்ல.. அத்தை வரட்டும் அப்புறம் படுத்துக்குறேன்..”
“சரி இரு கஷாயம் போட்டுக் கொடுக்குறேன்..” என்றவன் கிச்சனுள் செல்லப் போக
“எனக்கு எதுவும் குடிக்கணும் போல இல்ல.. வேண்டாம்.. ப்ளீஸ்”
“ப்ரேக் பாஸ்ட் செய்யட்டா?”
“மாறன் ப்ளீஸ் என்னை விட்டுடுங்க.. என்னால பேசவே முடியல..” சலிப்பாக கூறிவிட்டு மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள்..
அதற்கு மேல் அவனால், அவளிடம் எதுவும் பேச முடியவில்லை.. ஹாஸ்பிடல் செல்வோமா என்று கேட்கலாம் என்று நினைத்தவன், பின் சிறிது நேரம் சென்றதும் கேட்போம் என்று அமைதியாக இருந்தான்..
அதற்குள் சித்ராவும், சுதாகரனும் வந்துவிட்டனர்..
“வாங்கத்தை.. வாங்கமாமா..” சோர்வாக இருந்தாலும், சிரித்த முகமாகவே குகா அவர்களை வரவேற்றாள்.. மருமகளின் சோர்ந்த முகத்தைப் பார்த்த சித்ரா,
“என்னமா முகமே சரியில்ல.. என்ன பண்ணுது?” என
“டயர்டா இருக்கு.. வேற ஒண்ணுமில்ல அத்தை..” என்றாள்..
“ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே.. எதுக்கு எழுந்த..” என்று மருமகளிடம் ஆரம்பித்தவர் மகனிடம் “உனக்கு எத்தன தடவை சொன்னாலும் அறிவே இருக்காதாடா.. முடியாம இருக்கா, அவளை ரெஸ்ட் எடுக்க சொல்லாம என்ன செஞ்சுட்டு இருந்த நீ?” என்று கடிந்தார்..
“அத்தை.. அவர் என்னை படுக்க தான் சொன்னார்.. நான் தான் கொஞ்ச நேரம் உங்களோட பேசிட்டு இருக்கலாம்னு எழுந்தேன்..”
“எல்லாம் பொறுமையா பேசிக்கலாம்.. இப்போ போ” என்று அவளை அனுப்பிய பின்னே, அவர் ரெப்ரெஷ் ஆகி காபியைக் குடித்தார்..
“என்னடா ஆச்சு.. அவ முகமே வாடிப் போய் இருக்கு.. போன தடவை பார்த்ததை விட வெயிட் கூட குறைஞ்சுட்டா.. டாக்டர் என்ன சொன்னார்?”
“டயர்டா தான்மா இருக்கா.. நீர் சத்து கம்மியா இருக்குன்னு சொன்னாங்க.. ரெண்டு நாளா சரியா சாப்பிடுறதே இல்ல..”
“சரி நான் குளிச்சுட்டு எதாச்சும் பண்ணுறேன்.. கொஞ்ச நேரம் கழிச்சு அவளை எழுப்பு..” என்றவர் மடமடவென வேளைகளை செய்தார்..
சீதாவிற்கு உதவிகளை செய்து விட்டு தங்கள் அறைக்கு வந்த மாறன், மனைவியின் அருகில் அமர்ந்தவன் அவள் தலையை கோதிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.. அதில் தூக்கம் லேசாக கலைய கண்ணைத் திறந்தாள் குகா..
“அச்சோ சாரி..” என்று கையை வேகமாக எடுத்தான்..
“ரொம்ப நேரம் ஆகிடுச்சா?” கேட்டுக் கொண்டே எழுந்து அமர்ந்தவளை
“இல்ல இல்ல தூங்கு..” என்றான் மாறன்..
“இப்போ நல்லா தான் இருக்கேன்..” என்றவள் ரெப்ரெஷ் ஆகிவரும் வரை அவன் அங்கேயே இருந்தான்.
“என்ன இன்னைக்கும் வீட்டுலையே இருக்கீங்க?” முகத்தைத் தொடைத்துக் கொண்டே அவள் கேட்க, அவன் பதிலேதும் சொல்லவில்லை..
“என்ன வக்கீல் சார் அமைதியா இருக்கீங்க?” அவள் அவனை சீண்ட, அப்பொழுதும் அவன் பதில் சொல்லாமல் அவளை பார்த்துக் கொண்டே இருந்தான்..
“ரொம்ப நடிக்க வேண்டாம்.. கூப்பிடும் போது வரதில்ல.. இப்போ ரெண்டு நாளா வீட்டுலையே குட்டி போட்ட பூனை மாதிரி சுத்துனா, நீங்க ரொம்ப நல்லவருன்னு நாங்க நம்பிடுவோமாக்கும்..”
“...”
“சாப்டுட்டு கிளம்புங்க.. அத்தை தான் இருக்காங்கள..”
“...”
“அட பதில் பேச மாட்டீங்களா? இப்படி அமைதியா இருந்தா எப்படி வக்கீல் சார் கேஸ்ல ஜெயிக்க முடியும்..” என்றதும்
“போடி..” என்றவன் அறையை விட்டு வெளியே சென்றான்..
“பார்டா கோபத்தை.. நாங்க கோபப்படனும்..” என்று முனுமுனுத்துக் கொண்டே குகாவும் அவன் பின்னோடு சென்றாள்.
“குகா எழுந்துட்டாளா?” என்று சித்ரா கேட்டுக் கொண்டிருக்கும் போதே குகாவும் வெளியே வந்திருந்தாள்.
“வாமா சாப்பிடலாம்..” என்றவர், அனைவருக்கும் காலை உணவை எடுத்து வைத்தார்..
“சாரி அத்தை.. ஊர்ல இருந்து வந்த உங்களை வேலை செய்ய வெச்சுட்டு நான் படுத்துட்டேன்..” குகா வருந்த
“உடம்பு சரியில்லாத உன்னைப் பார்க்க நாங்க வந்திருக்கோம்.. சும்மா சாரி பூரின்னு சொல்லாம சாப்பிடு..” என்று அதட்டியவர் மருமகளிற்கு பார்த்து பார்த்து பரிமாறினார்..
“இப்போ பரவாயில்லை தானே?” சித்ரா கேட்க
“உங்களோட சண்டைப் போடுற அளவுக்கு ஸ்ட்டிரெண்த் வந்துடுச்சு அத்தை..” என்றாள் குகா சிரித்துக் கொண்டே
“உன்னை நான் திட்டுறதுக்கு முன்னாடி, நீ முந்திக்கலாம்ன்னு பாக்குறியா?”
“ஹீ.. ஆமா..”
“வந்ததும் நல்லா உன்னை நாலு அடி வைக்கனும்னு தான் வந்தேன்.. உன் முகத்தைப் பார்த்ததும் பாவமா இருந்ததா விட்டுட்டேன்..”
“எனக்கு பதில என் பெட்டர் ஹாப் இருக்காரே அத்தை.. அவருக்கு கொடுங்க.. நான் வேற அவர் வேறையா?”
“ஆமா.. ஆமா.. அவனுக்கு கொடுக்க வேண்டியதையும் சேர்த்துவேனா உனக்கு கொடுக்குறேன்..”
“உங்க மருமக ரொம்ப அமைதின்னு நினைச்சுட்டு இருந்திருப்பீங்க தானே.. பார்த்துகோங்க இப்படி ஒருத்திகிட்ட என்னை மாட்டிவிட்டுட்டு நீங்க ஜாலியா ஊர்ல இருக்கீங்க..” மாறன் வருத்தமாக தாயிடம் கூற
“அனுபவிடா.. சின்னதுல என்னை எவ்வளவு கொடுமை பண்ணுவ.. அப்போல்லாம் நினைப்பேன், இதுக்கெல்லாம் உன் பொண்டாட்டிக்கிட்ட அனுபவிப்படான்னு.. நடந்திடுச்சு.. கடவுள் இருக்கார்டா மாறா..”
“வாட் அ பேமிலி..” என்று தலையில் அடித்துக் கொண்டவன் அங்கிருந்து சென்றான்..
மாமியார் மாமனாருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு குகா அறைக்குச் செல்லும் போது மாறன் யாரிடமோ கோபமாக பேசிக் கொண்டிருந்தான்..
“என்னடா சொல்லுற? எப்போ?”
“...”
“ப்ச்.. இந்த நாடு எதை நோக்கிதான் போகுதோ..”
“...”
“நம்ம நேரமாடா? கரெக்டா இந்த நேரத்துல இப்படி தீர்ப்பு கொடுத்திருக்காங்க. சரி இனி அவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முடியாது.. நாளைக்கு பேசலாம் அடுத்து என்ன பண்ணுறதுன்னு”
“..”
“ஹான்.. நல்லா இருக்கா.. அம்மா வந்துட்டாங்க.. ஒன்னும் பிரச்சனையில்லை... ஓகே வெச்சுடுறேன்..” என்றவன் போனை அணைத்துவிட்டு திரும்ப, அப்பொழுது தான் குகா ரூமினுள் இருப்பதை அவன் பார்த்தான்..
“என்னாச்சு? எதாச்சும் ப்ராப்ளமா?” போனில் பேசியதை வைத்து குகா, மாறனிடம் கேட்க
“இல்ல.. கேஸ் விஷயம் தான்.. நீ டேப்லெட் போட்டு ரெஸ்ட் எடு..” என்றவன் வேறு எதுவும் கூறவில்லை..
அன்று முழுவதுமே அவன் மற்றவர்களிடம் நன்றாக பேசினாலும், அவன் முகம் என்னவோ போலே இருந்தது.. இதை கவனித்த குகா இரவு மாறனிடம்
“இங்க உக்காருங்க.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..” மெத்தையில் தலையணையை வைத்து, அதில் சாய்ந்து கொண்டவ, அருகில் கணவனை அமரும்படி கூறினாள்.. அவனும் அவள் அருகில் சென்று அமர்ந்து
“சொல்லுமா..” என்றான்..
“நீங்க தான் சொல்லணும்?”
“என்னது? சாரியா? சொன்னேன்ல.. திரும்ப சொல்லனுமா?”
“ப்ச்.. அதில்ல.. உங்க முகமே சரியில்ல.. காலைல போன்ல பேசுனதுல இருந்து ஒரு மாதிரி தான் இருக்கீங்க..”
“கேஸ் விஷயம் தான் வேற ஒண்ணுமில்ல..”
“அதெல்லாம் இந்த கேஸ்லையும் ஜெயிச்சுடுவீங்க.. வொரி பண்ணாதிங்க..” எனவும், அவள் மடியில் சென்று படுத்துக் கொண்டவன்..
“இதுல ஜெயிச்சாலும் எனக்கு இனி முழு சந்தோஷம் இருக்காது..” என்றான்..
“ஏன்?”
“இனிமே ஒரே பாலினத்துல உறவு வெச்சுகிறது தப்பில்லைன்னு சுப்ரீம் கோர்ட்ல தீர்ப்பு சொல்லிட்டாங்க..”
“வாட்?”
“ப்ச்.. இதுக்கு மேல உனக்கு எப்படிடி புரிய வைக்க?”
“நான் புரியலைன்னு சொன்னேனா.. ஷாக்ல வாட்ன்னு சொல்லிட்டேன்..” என்றவள் “நாட்டுல ஆயிரத்தெட்டு பிரச்சனை இருக்கு.. அதெல்லாம் உங்கள மாதிரி வக்கீலுங்க கண்ணுக்கு தெரியாதா? நாசமா போற கேசா எடுப்பீங்களா?” என்றாள் கோபமாக
“என்னமோ நான் தான் கேஸ் பைல் பண்ண மாதிரி என்னோட சண்டை போடுற.. நானே அந்த நாதிரிக்கு இனி தண்டனை வாங்கிக் கொடுக்க முடியாதேன்னு கடுப்புல இருக்கேன்.. இதைவிட பெரிய கொடுமை, இனி ஹஸ்பெண்ட் அண்ட் வைப் எவ்வளவு ஆபேர்ஸ் வேணும்னாலும் வெச்சுக்கலாம்.. அது தப்பேயில்லையாம்..”
“என்னது?” இம்முறை குகா அதிர்ச்சியில் மாறனின் தலையில் அடித்தே விட்டாள்..
“எருமை வலிக்குது..” தலையை தேய்த்து விட்டுக் கொண்டே மாறன் கூற
“கருமம்.. இந்த நாட்டை நாசமாக்காம விட மாட்டாங்களா? இதெல்லாம் பாரின் கண்டிறியப் பார்த்து நல்ல விஷயத்தை எதவும் கத்துகலை.. நாராசமா என்ன என்ன இருக்கோ எல்லாத்தையும் அப்படியே பாலோ பண்றாங்க..”
“எனக்கும் கோபமா வருது.. ஒன்னும் பண்ண முடியலை..”
இருவரும் சிறிது நேரம் நாட்டு நடப்பை நாராசமாக கழுவி கழுவி ஒற்றினார்கள்..
“ஹே என்ன மடில படுத்துட்டு இருக்க எழுந்திரி மேன்..” தன் மடியில் இருந்து அவனை உருட்டி மெத்தையில் தள்ளி விட்டாள் குகா..
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#36
“இப்போ தான் உனக்கு அது தெரியுதா?” என்றவன் அவள் கையை நறுக்கென்று கிள்ளி விட்டான்..
“ஆ.. எருமை கட்டுன பொண்டாட்டியை அதுவும் வாயும் வயிறுமா இருக்கும் போது அடிச்சு கொடுமைபடுத்துற..” கையை தேய்த்து விட்டுக் கொண்டே கூறியவளை முறைத்தவன்
“அடிக்கு கொடுமைப்படுத்துறேனா? லைட்டா கிள்ளுனதுக்கு எப்படி பொய் சொல்லுற நீ?” என்றான்..
“இது மட்டும் தான் கொடுமையா? என்னை தனியா தனியா விட்டுட்டு போற, அது கூட ஒரு வித கொடுமை தான்..” என்றாள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு..
“அயம் ரியலி சாரிடா.. நான் வேணும்னு பண்ணல.. ஆனா அது என் தப்பு தான்..”
“தப்பு பண்ணிருக்கீங்கள அப்போ அதுக்கு தண்டனை கொடுக்கணும்ல..”
“சரி என்ன பண்ணனும் சொல்லு?” என்றதற்கு குகா பதில் கூறுமுன், ஹாலில் இருந்து பாடல் சத்தம் கேட்டது..
தவறு செய்தால் முத்தம் தந்தென்னை திருத்திக்கணும் தண்டனை சரியா?
இதைக் கேட்டதும் மாறன் சிரித்துக் கொண்டே “எனக்கு ஓகே..” என்று அவன் கன்னத்தைக் காட்ட,
“நினைப்பு தான்.. ஒடுங்க..” என்றவள் அங்கிருந்து நகரப் போக
“தண்டனையை கொடுத்துட்டு போ..” என்றதும் அவனை முறைத்தவளைப் பார்த்து “ஹே.. கிஸ் கேட்கல.. நீ பனிஷ்மெண்ட் இருக்குன்னு சொன்னல்ல அதை தான் கேட்டேன்..”
“அப்பா... ரொம்ப நல்லவர் தான்..” என்றவள் பின் “இனிமே இப்படி பண்ணாதிங்க மாறன்.. போன் பண்ணா, பிசியா இருந்தாலும், அப்புறம் பேசுறேன்னு சொல்லீடாச்சும் கட் பண்ணுங்க..” என்றாள்..
“இனி எப்பவும் அப்படி நடக்காதுமா.. ப்ராமிஸ்..” என்றவன் அவளின் கையில் தனது கையை வைத்தான்.. குகா அவன் கன்னத்தைத் தன் புறம் திருப்பி, அவன் கேட்ட தண்டனையைக் கொடுத்தாள்..
*********************
குகாவிற்கு ஏழாவது மாதமே வளைகாப்பு போட பெரியவர்கள் முடிவு செய்திருந்தனர்..
“ஏன்மா இவ்வளவு சீக்கிரம்?” தாயிடம் குகா கேட்க
“அப்புறம் இன்னும் உன்னை இங்க தனியா விட்டு, நீ வேற எதையாச்சும் இழுத்து விட்டுக்கவா?” சீதா மகளைத் திட்ட, சித்ராவிடம் பேசிப் பார்ப்போம் என்று அவரிடம் சென்றாள்
“இங்க உன்னை தனியா விட மனசே இல்ல.. உன் புருஷனை நம்பி எல்லாம் உன்னை விட முடியாது..” கறாராக கூற, இறுதியாக மாறனிடம்
“நீங்க எதுவும் சொல்ல மாட்டிங்களா? இப்பவே போனா, நான் வர ஆறு மாசம் ஆகும்.. உங்களுக்கு கஷ்டமா இல்லையா?”
“இல்ல குகா.. அவங்க சொல்லுறதும் சரி தானே.. நீயும் குழந்தையும் நல்லா இருக்கணும்னு தானே சொல்லுறாங்க.. நான் உன்னை சரியா பாத்துக்காட்டி என்ன பண்ணுறது?”
“யோவ். சரியா பாத்துப்பேன்னு உன் வாயில இருந்து வார்த்தை வருதா? போ போய் அந்த கருப்பு கோர்ட், வெள்ளை பேண்ட்டோடையே குடும்பம் நடத்து..” என்று கோபப்பட
“நானும் உன்னை ரொம்பவே மிஸ் பண்ணுவேன் குகா.. இருந்தாலும் அதை எல்லாம் தான்டி, அத்தை உன்னை நல்லா பாத்துபாங்கன்னு நிம்மதியா இருப்பேன்ல.. கொஞ்ச நாள் தானேடா அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.. நானும் அடிக்கடி வந்து உன்னைப் பாக்குறேன்..” மாறன் அவளை சமாதானப்படுத்த
“நீ தானே வந்துட்டாலும்.. போயிரு எதுனா சொல்லிட போறேன்..”
வளைகாப்பு முடிந்து ஊருக்கு செல்லும் வரையிலுமே, அனைவரிடமும் “இங்கையே கொஞ்ச நாள் இருக்கேனே..” என்று பலவாறு கேட்டுப் பார்த்தும், யாரும் குகாவின் பேச்சை காதிலே வாங்கவில்லை.. மாறனைத் திட்டிக் கொண்டே தாய் வீட்டிற்கு சென்றாள் குகா..
மாறனும் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை என்று இரு முறை வந்திருந்தான்.. அன்று ஸ்கேன் எடுக்க, சீதாவும் குகாவும் மருத்துவமனை சென்றிருந்தனர்.. ஸ்கேன் செய்யும் மருத்துவர்
“எட்டு மாசம் முடியப் போகுதுல.. இன்னும் குழந்தை தலை திரும்பல..” என்று குகாவிடம் கூற, குகாவிற்கு சற்று பயமாக இருந்தது..
“ஒன்னும் பிரச்சனையில்லை.. நீங்க பயப்படாம டாக்டரை போய் பாருங்க..” எனவும் குகா வெளியே வந்தாள்.. சீதா ஸ்கேன் ரூமிற்கு வெளியே நின்றுக் கொண்டிருந்தார்..
“என்ன சொன்னாங்க?” என்று அவர் கேட்கவும், குகாவும் அந்த மருத்துவர் கூறியதை சொன்னாள்..
“எல்லாருக்கும் இப்பவே தலை திரும்பாது.. நீ பயப்படாம வா.. நம்ம டாக்டர் கிட்ட கேட்டுப்போம்..” சீதா மகளை அழைத்துக் கொண்டு மகப்பேறு மருத்துவரிடம் சென்று ஸ்கேன் ரிபோர்ட்டை பற்றிக் கேட்க
“இது ஒன்னும் பெரிய பிரச்சனையில்லை.. சிலருக்கு முப்பதாவது வாரத்துலையே தலை திரும்பிடும்.. சிலருக்கு டெலிவெரிக்கு ரெண்டு மூணு நாள் முன்னக் கூட தலை திரும்பும்..
குழந்தை வெயிட் இப்பவே 2.7kg இருக்கு.. இன்னும் சாலிடா ஒன் மந்த்துக்கு மேலையே இருக்கு டெலவரிக்கு, அதுக்குள்ள இன்னும் கொஞ்சம் வெயிட் ஏறலாம்.. அப்படி கூடிடுச்சுனா நார்மல் டெலிவரி கொஞ்சம் கஷ்டம்..” என்றவர், குகாவின் முகம் பார்த்து
“இதுக்கெல்லாம் பயப்படக் கூடாது குகா.. இதெல்லாம் இப்போ சகஜம் ஆகிடுச்சு.. ரெண்டு வாரம் கழிச்சு வாங்க.. இன்னொரு டைம் ஸ்கேன் செஞ்சு பார்த்துடுவோம்..” என்றவர் மாத்திரைகளை எழுதிக் கொடுக்க அதை வாங்கியப் பின், இருவரும் வீட்டிற்கு வந்தனர்..
குகா மாறனிற்கு போன் செய்து, மருத்துவர் கூறியதை சொல்லி கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள்..
“ஹே லூசு அதான் சொல்லுராங்கள்ள டெலிவரிக்கு ரெண்டு மூணு நாளைக்கு முன்னக் கூட தலை திரும்பும்ன்னு அப்புறம் ஏன் டென்ஷன் ஆகுற.. ரிலாக்சா இரு.. நெக்ஸ்ட் செக் அப் போறதுக்குள்ள தலை திரும்பிடும்..” என்றான்..
இரு வாரங்கள் கழித்து ஹாஸ்பிடல் சென்று ஸ்கேன் செய்த போதும், குழந்தை இன்னும் திரும்பவில்லை.. குகாவிற்கு கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டது.. அன்று மாறனும் ஊரிலிருந்து வந்திருந்ததால் அவளுடன் மருத்துவமனை வந்திருந்தான்..
“ஐயோ.. என்ன குகா இது குழந்தை மாதிரி அழுதுட்டு இருக்கீங்க.. நான் தான் சொன்னேன்ல இது இப்போ ரொம்ப நார்மல்ன்னு.. தினமும் ஒரு மணி நேரம் நடங்க.. நான் சொல்லுற எக்ஸ்சசையை செய்ங்க..” என்றார்
அன்று வீட்டிற்கு வந்தும் அவள் அழுதுக் கொண்டே இருந்தாள்.
“எனக்கு ரொம்ப பயமா இருக்கு மாறன்..”
வந்தவனைக் கட்டிக் கொண்டு மீண்டும் குகா அழ,
“ப்ச்.. என்னமா இது? இதுக்கே இப்படி பயப்படுற? சிசேரியன் எல்லாம் இப்போ ஒண்ணுமேயில்லை.. ரொம்ப எல்லாம் வழிக்காது” ஆறுதல் கூறுகிறேன் என்று அவன் பேச பேச, குகா மேலும் அழுதாள்..
வெகு நேரமாக இருவரும் வெளியே வராததால், கதவைத் தட்டி விட்டு உள்ளே வந்த சீதா, மகள் அழுவதைப் பார்த்துவிட்டு
“குகா.. பொம்பளைங்கன்னா இதெல்லாம் தாங்கி தான் ஆகனும்.. சும்மா நீ பயந்து அவரையும் பயப்பட வைக்காதே..” என்று அதட்டியவர், மருமகனிடம்
“காபியை குடிங்க மாப்பிள்ளை.. இவ சும்மா, சின்ன விஷயத்துக்கு எல்லாம் பயப்படுறா.. நானும் தினமும் சொல்லிட்டு தான் இருக்கேன்.. மண்டைல ஏத்திக்கவே மாட்டுறா..” என்றார்..
“இல்லத்தை.. முதல் குழந்தைல, இதெல்லாம் புதுசு.. அதான் கொஞ்சம் பயப்படுறா..” மாறன், மனைவிக்கு ஆறுதலாக பேச,
“ம்க்கும்.. அப்படி பயம் இருக்கவ, குழந்தை நல்லப்படியா பிறக்கணும்னு, குனிஞ்சு நிமிர்ந்து வேலைப் பார்க்கணும்.. அதை விட்டுட்டு தினமும், உங்களையே வேலை வாங்கிட்டு இருந்தா, இப்படி தான் உடம்பைப் போட்டுப் படுத்தும்.. ஒழுங்கா வீட்டை சுத்தி நட போ..” என்று விரட்டினார்..
அங்கிருந்த இரண்டு நாளும் மாறன் ஓரளவிற்கு குகாவிற்கு தைரியம் சொல்லினான்..
சித்ரா பிரவசத்திற்கு பத்து நாட்கள் முன்பே வந்திருந்தார்.. மாறனும் ஒரு வாரத்தில் வருவதாக கூறியிருந்தான்.. நடுவில் ஒரு முறை ஸ்கேன் செய்ய சென்றபோது, குழந்தையின் தலை திரும்பியிருந்தது.. அப்பொழுது தான் குகாவிற்கு சற்று நிம்மதியாக இருந்தது..
அன்று காலையிலிருந்து குகாவிற்கு அடிவயிர் வலிப்பதுப் போலலிருந்தது.. சீதாவிடமும் சித்ராவிடமும் இதை அவள் கூறியபோது
“அப்படி தான்மா இருக்கும்.. இனி எப்ப வேணும்னாலும் உனக்கு வலி வரும்..” என்று கூறினர். இவள் உடனே மாறனை போனில் அழைத்துவிட்டாள்.. அவன் ‘ஹலோ’ என்று சொன்னதும், அவனிடமும் அனைத்தையும் கூறியவள்
“உங்களைப் பார்க்கணும் மாறன்.. ஒருவேளை இன்னைக்கே பெயின் வந்தா என்ன பண்ணுறது? உங்களைப் பார்க்காம நான் ஹாஸ்பிடல் போக மாட்டேன்..”
“குகா அப்படி எல்லாம் பண்ணாதே.. வலி வந்தா அத்தை அம்மா கிட்ட சொல்லிடு.. நான் இன்னைக்கு நைட் கிளம்பி வரேன்..”
“வந்துடுவீங்க தானே?”
“வந்துடுவேன்மா.. இப்போ கொஞ்சம் வேலை இருக்கு.. முடிச்சுட்டு கிளம்பிடுறேன்.. நீ எதுவும் லூசு மாதிரி பண்ணக்கூடாது.. புரியுதா?”
“ம் சரி..” என்றவள், வெளியே சென்று பெண்கள் இருவரிடமும் மாறன் நாளை வந்துவிடுவான் என்பதைக் கூறினாள்..
“குகா, உனக்கு அறிவேயில்லாயா? சும்மா சும்மா அவரை அழைய வெச்சுகிட்டே இருக்க.. உனக்கு வலி வந்தப் பின்னாடி போன் பண்ணாக் கூட, குழந்தைப் பிறக்க முன்ன மாப்பிள்ளை பிளைட்ல வந்திடுவார்.. நீ சும்மா போனை செஞ்சு செஞ்சு அவரையும் பயப்பட வெச்சு, ரெண்டு மாசத்துல அஞ்சு தடவை வந்துட்டார்..” சீதா வழக்கம் போல் மகளைத் திட்டினார்..
“விடுங்க அண்ணி.. எத்தனைப் பேர் கூட இருந்தாலும் புருஷன் இருக்க மாதிரி வருமா? அவனை எல்லாம் இப்படி அழைய விட்டா தப்பேயில்லை.. ஒழுங்காவே இவளைப் பாத்துக்கலதானே அவன்.. இப்போ அனுபவிக்கட்டும்..” என்றார் சித்ரா..
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#37
காதல் செய்வேன் கட்டளைப்படி
காதல் 15
மறுநாள் மாறன் ஊரிலிருந்து வந்தப் பொழுது, குகாவின் முகமே ஒரு மாதிரி இருந்தது..
“என்னமா? ஏன் ஒரு மாதிரி இருக்க? வலிக்குதா?” என்று அவன் அக்கறையாக கேட்க ‘இல்லை’ என்று தலையை ஆட்டியவள் “குளிச்சிட்டு சாப்பிட வாங்க..” என்றாள்..
அன்று முழுவதும் அவன், குகாவின் அருகிலேயே இருந்தான்.. அடிக்கடி அவளின் முகம் மாறுவதை அவன் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்..
“அம்மா, இவளை என்னன்னு கேளுங்க.. காலைல இருந்து அப்பப்ப ஒரு மாதிரி ஆகுறா? என்னன்னு கேட்டா ஒண்ணுமில்லை ஒண்ணுமில்லைன்னு சொல்லுறா?” மாறன், சித்ராவிடம் சொல்ல
“என்ன குகா? என்ன பண்ணுது? எங்ககிட்ட ஒண்ணுமே நீ சொல்லல..”
“இல்லத்தை நல்லா தான் இருக்கேன்.. நேத்து சொன்னேன்ல அப்பப்ப அடிவயிறு வலிக்குதுன்னு அது தான்..” என்றவளின் முகம் அப்பொழுதும் ஒரு மாதிரி ஆகியது..
“ஹே என்னப் பண்ணுது உனக்கு? வலிக்குதா?” மாறன் பதட்டத்துடன் கேட்க
“இல்லங்க இது டெலிவரி பெயின் இல்ல.. நார்மலா..” என்று சொல்ல வந்தவள் “ஆ..” என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டாள்..
“குகா..”பெண்கள் இருவரும் அவள் அருகில் விரைந்து வந்தனர்.
“அம்மா...”
“குகா.. ரொம்ப வலிக்குதா? ஹாஸ்பிடல் போவோமா?” மாறன் கேட்க
“இல்ல மாப்பிள்ளை கொஞ்ச நேரம் இருப்போம்.. பிரசவ வலி தானான்னு தெரியலை.. ஒருவேளை பிரசவ வலின்னா கொஞ்ச நேரத்துல வலி இன்னும் ஜாஸ்தி ஆகும் அப்போ ஹாஸ்பிடல் போவோம்” என்றார் சீதா..
“அவ அழுகுற மாதிரி இருக்கா.. நீங்க கொஞ்ச நேரம் கழிச்சுப் போவோம்ன்னு சொல்லுறீங்க..”
“டேய், அண்ணி சொல்லுறது சரி தான்.. இப்போ ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனாலும் உடனே குழந்தைப் பிறக்காது, நல்லா வலி வர வரைக்கும் அங்கையும் காத்துகிட்டு தான் இருக்கணும்.. கொஞ்ச நேரம் பார்த்துட்டு போவோம்..” என்றவர் அவளிற்கு குடிக்க கொண்டு வந்துக் கொடுத்தார்..
ஐந்து நிமிடங்கள் தான் வலியிருந்தது.. அதன்பிறகு சாதரணமாக தான் இருந்தாள்.. அரைமணி நேரத்திற்கு பிறகு அதே போல் வலி வந்து ஐந்து நிமிடங்கள் இருந்தது..
“காலைல இருந்து இப்படி தான் இருக்கா உனக்கு?” மாறன் கேட்க
“இல்ல.. காலைல இவ்வளவு பெயின் இல்ல.. இப்போ தான் கொஞ்சம் அதிகமா இருக்கு..”
“அம்மா இதுக்கு மேல வெயிட் பண்ணனுமா? வாங்க போகலாம்..” என்றவன், வேகமாக ராஜனின் கார் சாவியை எடுத்து காரை ஷெட்டில் இருந்து எடுத்தான்..
மருத்துவமனை சென்று அவளைப் பரிசோதித்த மருத்துவர், “இன்னும் நாலு மணி நேரம் ஆகும், டெலிவரிக்கு.. பெயின் ரொம்ப எல்லாம் இல்ல.. கொஞ்ச நேரம் நடங்க.. நடக்க நடக்க பெயின் கூடும்.” என்றார்..
“அம்மா இதுவே என்னால தாங்க முடியலை.. இன்னும் பெயின் வருமா?” குகா அழுகையுடன் கேட்க
“கொஞ்ச நேரம் தான் பொறுத்துக்கோ..” என்று பெண்கள் இருவரும் அவளிற்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தனர்..
“சரி வா நட..” மாறன், அவளை அழைத்துக் கொண்டு காரிடாரில் நடந்தான்.. நடந்துக் கொண்டிருக்கும் போதே குகா,
“மாறன்..” என்று அழைக்க
“சொல்லுமா..”
“நீங்க எதுக்கு இப்போ சென்னைல இருந்து இங்க வந்தீங்க?” என்றாள் மொட்டையாக
“என்ன கேக்குற?” அவன் புரியாமல் அவளிடமே திரும்பி கேட்டான்..
நேற்று சீதா இவளை திட்டியதையும், அதற்கு சித்ரா கூறிய பதிலையும் கணவனிடம் சொன்னவள்
“சென்னைல இருக்கப்ப என்னை சரியா பாத்துக்கலைன்னு கில்ட்டி கான்ஷியஸ்ல தான் இப்போ நான் போன் பண்ணா, உடனே கிளம்பி வரீங்களா?” என்றாள்
“லூசா நீ?” என்று முறைத்தவன் “நட..” என்றான்
“ப்ச்..சொல்லுங்க மாறன்.. அத்தை சொன்னதுல இருந்து எனக்கு இது தோணிட்டே இருக்கு.. என்மேல உள்ள அக்கறைல தானே வரீங்க..”
“உனக்கே இதுக்கு பதில் தெரியும் தானே.. ஏற்கனவே வலில இருக்கன்னு பாக்குறேன்.. இல்லாட்டி அடி தான் வாங்குவ..”
“எனக்கு தெரியும்.. நீங்க என்னை எவ்வளவு லவ் பண்றீங்கன்னு.. இருந்தாலும்..” என்று அவள் இழுக்க..
“இதை நினைச்சு தான் காலைல என்னைப் பார்த்ததுல இருந்து ஒரு மாதிரி இருக்கியா? கில்ட்டியும் இல்ல.. ஒரு மண்ணும் இல்ல.. நீ இங்க கஷ்டப்படும் போது என்னால அங்க எப்படி நிம்மதியா இருக்க முடியும்..” என்றதும், அவன் கையைப் பிடித்து முத்தம் வைத்தவள் “லவ் யூ..” என்றாள்
“லூசு.. ஒழுங்கா நட..”
ஒரு மணி நேரம் அவளை மெதுவாக நடக்க வைத்தான்.. நடக்க நடக்க அவளிற்கு வலி அதிகரித்துக் கொண்டேயிருந்தது..
“என்னங்க பயமா இருக்கு..” இதையே தான் அவள் திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருந்தாள். லேபர் வார்டின் உள்ளே சென்றப் பின்பு “அம்மா... மாறன்..” என்று மாற்றி மாற்றி இருவரின் பெயரையே சொல்லிக் கொண்டிருந்தாள்..
“இன்னும் கொஞ்ச நேரம் தான் குகா.. புஷ் பண்ணுங்க..” மருத்துவர் கூற
“நான் என் ஹஸ்பண்டை பார்க்கணும்.. அவரை வர சொல்லுங்க.. பிளீஸ்..”
“குழந்தைப் பிறந்ததும் அவரைப் பார்க்கலாம்.. இப்போ புஷ் பண்ணுங்க..” என்று மருத்துவர் கூறியதை அவள் காதில் வாங்கவே இல்லை. “மாறன்..” என்று அவள் கத்த, மருத்துவர் செவிலியரை அழைத்து மாறனை உள்ளே வர சொன்னார்.. அவனுடன் சீதாவும் உள்ளே வந்தார்..
“பயமா இருக்கு மாறன்.. என்னால முடியலை.. என்னை விட்டு போயிடாதிங்க..” என்று அவன் கையைப் பிடித்துக் கொண்டவள்
“இவ்வளவு வலிக்கும்ன்னு நீ எனக்கு சொல்லவே இல்லை.. ஏன் சொல்லல.. இருங்க வீட்டுக்கு வந்து உங்களை வெச்சுக்கிறேன்.. உங்க ட்ரெஸ்சை எடுத்து சாக்கடைல போடுறேன்.. என்று தாயை மிரட்டினாள்..” அவள் சொன்னதை கேட்டு மருத்துவரே சிரித்து விட்டார்.. மாறனுக்கு ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும், மனைவி வலியில் துடிப்பது மற்றொரு பக்கம் மிகவும் வருத்தமாக இருந்தது..
“இன்னும் கொஞ்ச நேரத்துல பேபி வந்திடும்டா.. டாக்டர் சொல்லுறதை கேளு.. நான் எங்கயும் போகல.. வெளியே தான் இருக்கேன்.. உனக்கும் பேபிக்கும் ஒன்னும் ஆகாது..” அவள் கையை அழுத்திவிட்டு மாறன் வெளியே செல்ல, சீதாவும் “பயப்படாம இரு..” என்றுவிட்டு வெளியே வந்தார்..
“ம்மா..” என்று குகா கத்தினாள்..
“குகா.. இப்படியே கத்திகிட்டு இருந்தா உங்க ஸ்ட்ரெந்த் எல்லாம் அதுலையே போகிடும்.. குழந்தையை புஷ் பண்ணுங்க.. அரை மணி நேரத்துல உங்க குழந்தையை பார்த்துடுவீங்க.. இதை மனசுல வெச்சிட்டே புஷ் பண்ணுங்க..” மருத்துவர் அவளிற்கு மெதுவாக ஒவ்வொன்றையும் சொல்லி, ஒருவழியாக அவளை குழந்தையை புஷ் செய்ய வைத்தார்.. பல மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு அவர்களின் மகன் பூமியில் அவதரித்தான்..
குழந்தையை பார்த்ததும் தான் எல்லோருக்கும் நிம்மதியாக இருந்தது.. குகா மயக்கத்தில் இருந்து விழித்ததும், மாறனையும் குழந்தையும் பார்தவளிற்கு மிகவும் சந்தோசமாக இருந்தது..
“இவன் வெளிய வரதுக்குள்ள ரொம்ப படுத்திட்டான்ல” மகனை கையில் வைத்துக் கொண்டே மனைவியிடம் அவன் கூற, அவளும் சிரித்துக் கொண்டே ஆமாம் என்று தலையை ஆட்டினாள்..
மூன்று நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தனர்.. சீதா மகளிடம் லேபர் வார்டில் அவள் தன்னை மிரட்டியதை சொல்லி சிரிக்க
“நான் அப்படி சொன்னேனா மா..” என்றாள் குகா அப்பாவியாக
“ஆமா சொல்லவே இல்ல..”
“ஏதோ வலில சொல்லிட்டேன்.. ஹீ.. சாரி மா..”
“பொழைச்சுப் போ..” என்றவர் பேரனை கொஞ்ச ஆரம்பித்தார்.
*****************
“ப்ரஜூ இதை மட்டும் எழுதிடுடா.. அவ்வளவு தான்..” கையில் நோட்டுடன் மகனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் குகா..
“அப்பா எப்போ வருவாங்க?” தாய் கூறியதை காதிலே வாங்காமல், அவன் வேறு கேள்வியை கேட்க,
“நீ இதை எழுதி முடி அப்பா வந்திடுவாங்க..”
“டோன்ட் லை.. இப்படி தான் ரொம்ப நேரமா சொல்லுறீங்க.. அப்பா வரவே இல்லை..” முகத்தை அவன் தூக்கி வைத்துக் கொள்ள
“என் செல்லம்ல.. நிஜமா இப்போ நீ எழுதி முடிச்சதும் அப்பா வந்திடுவார்..”
“நிஜமா?” கையை தாய் முன்னே நீட்டி அவன் கேட்க,
“நிஜம் தான்..” என்று அவன் கையில் தட்டினாள் குகா.
“சரி கொடுங்க மா எழுதுறேன்..” என்று சமத்தாக உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தான்.. நடுநடுவே “பினிஷ் பண்ணதும் அப்பா வந்திடுவார் தானே” என்று கேட்கவும் அவன் மறக்கவில்லை..
போன வருடம் தான் மாறனின் தந்தை சுதாகரன் ரிடையர் ஆகியிருந்தார்.. அவர் ரிடையர் ஆனதும், இருவரையும் மாறன் இங்கே அழைத்து வந்துவிட்டான்..
“இன்னும் அவன் வரலையாமா?” என்று கேட்டுக் கொண்டே சித்ரா அவரது அறையிலிருந்து வந்தார்.. அவரைப் பார்த்து குகா பேசாதிங்க என்று சைகை செய்ததை அவர் கவனிக்கவில்லை.. பாட்டியின் பேச்சை கேட்டவன் மீண்டும் “அப்பா எப்போ வருவார்?” என்று ஆரம்பித்தான்..
“அத்தை..” என்று சினுங்கியவள், அவன் அதற்கு முன்பு செய்த அலம்பலை சொல்லி “அவனை எவ்வளவு கஷ்டப்பட்டு எழுத உட்கார வெச்சேன் தெரியுமா? போங்கத்தை.. இப்போ மறுபடியும் ஆரம்பிச்சுட்டான்..”என்றாள் சோகமாக..
“அச்சோ சாரி மா.. நான் எதார்த்தமா கேட்டேன்..” என்றவர் பேரனை சமாதானப்படுத்தி எழுத வைத்தார்..
பின் மெதுவாக மருமகளிடம் “எப்போ வருவான்னு போன் பண்ணிக் கேளேன்..” என்றார்
“அரைமணி நேரத்துல வந்துடுவேன்னு சொன்னார் அப்போவே.. இன்னும் ஆளைக் காணோம்..” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே
“ப்ரஜூ குட்டி..” என்று அழைத்துக் கொண்டே மாறன் உள்ளே நுழைந்தான்..
“அப்பா..” என்று பிரஜினும் வேகமாக தந்தையிடம் தாவினான்..
“ஹோம் வொர்க் செய்றீங்களா?”
“ஆமாபா.. இன்னும் ஒன்னு தான் இருக்கு..” என்றான் விரலை நீட்டி..
“சரி நீங்க எழுதுங்க.. அப்பா ட்ரெஸ் மாத்திட்டு வரேன்..” என்றவன், சித்ராவிடம் திரும்பி “அம்மா காபி சூட வேணும்..” என்றுவிட்டு அறைக்குச் சென்றான்..
‘நான் இங்க ஒருத்தி குத்துக் கல்லாட்டாம் உட்கார்ந்திருக்கேன்.. ஐயாவுக்கு நானெல்லாம் கண்ணுக்கே தெரிய மாட்டேன்.. அம்மாவும் பையனும் தான் தெரிவாங்க..’ குகா மனதினுள் கணவனைத் திட்டிக் கொண்டிருக்க, அறையிலிருந்து மாறன்
“குகா..” என்று அழைத்தான்..
‘என்னவாம் இப்போ.’ என்று நினைத்தவள் வெளியே “ஹான் வரேன்..” என்றவள் உள்ளே சென்றாள்..
“என்ன?”
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#38
“ஹீட்டர் வொர்க் ஆகலையா?”
“தெரியலையே.. நான் ஹீட்டர் யூஸ் பண்ணவே இல்ல ஒரு வாரமா..”
“குளிருது.. எப்படி குளிக்கிறது..” என்று அவன் மனைவியை முறைக்க
“என்னை எதுக்கு முறைக்கிறீங்க? அது வொர்க் ஆகாட்டி நான் என்ன பண்ண? அத்தை ரூம்ல போய் குளிக்க வேண்டியது தானே..” அவளும் முறைத்துக் கொண்டே சொன்னாள்..
“இருடி குளிச்சிட்டு வந்து உன்னை வெச்சுக்கிறேன்..” என்றவன் மாற்றுடைகளை எடுத்துக் கொண்டு தாயின் அறைக்கு சென்று குளித்துவிட்டு வந்தான்..
இரவு உணவை உண்டுவிட்டு, மகனுடன் சிறிது நேரம் விளையாடியவன், ப்ரஜின் தூங்கியதும் அவனையும் தூக்கிக் கொண்டு “எனக்கு டயர்டா இருக்கு.. நானும் தூங்கப் போறேன்..” என்று படுக்க சென்றான்..
வேலைகளை முடித்து விட்டு குகா அறைக்குள் வந்த போது, மாறன் உறங்காமல் கேஸ் பைலைப் பார்த்துக் கொண்டிருந்தான்.. அதைப் பார்த்த குகா
“இது தான் நீங்க தூங்குற லட்சனமா? இன்னைக்கு தானே வந்தீங்க.. ரெண்டு நாளா அலைஞ்சிருப்பிங்க, ரெஸ்ட் எடுக்காம பைலைத் தூக்கிட்டு உட்காந்தாச்சு..” என்று கடிய,
“உனக்காக தான்டி செல்லம் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. நீ வரவரை போர் அடிக்கும்ல அதான் இதைப் பார்த்துட்டு இருந்தேன்..” என்றவன் அவளைப் பிடித்து இழுத்தான்..
“ப்ச்.. மாறன்.. ப்ரஜூ தூங்குறான்.. சும்மா இருங்க..”
“அதெல்லாம் அவன் எழுந்துக்க மாட்டான்..” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றான்.. மகன் படுத்திருந்த அறையின் கதவை சாத்தியவன் அவள் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டு இரண்டு நாள் பேசாத கதைகளை எல்லாம் பேசிக் கொண்டிருந்தான்.. வெளியே இருந்துப் பார்பவர்களுக்கு பால்கனியில் ஆள் இருப்பது தெரியாது..
“குகா..” என்று அவன் ஒரு மாதிரி அழைக்க
“என்ன.. ஒரு மார்கமா கூப்பிடுறீங்க?”
“ப்ரஜூக்கும் நாலு வயசாகிடுச்சு..” அவன் இழுக்க
“சரி அதுக்கு என்ன?”
“அவனுக்கு ஒரு தங்கச்சிப் பாப்பா வேண்டாமா?”
“அதானே பார்த்தேன்.. அங்க சுத்தி இங்க சுத்தி, நீங்க இதை தான் கேட்பீங்கன்னு எனக்கு தெரியும்..”
“அதான் தெரியுதுல? அப்புறம் என்னடி..” என்றவன் அவளை இழுத்து முத்தமிட வர
“ப்ச்.. கொன்னுடுவேன் உங்களை..” என்று அவனைத் தள்ளிவிட்டாள் குகா..
“இப்பலாம் டிமிலிக்கு கூட பஞ்சம் ஆகிடுச்சி..”
“டிமிலி சொல்லாதிங்கன்னு அன்னைக்கே சொன்னேன்ல.. ப்ரஜூ முன்னாடி சொல்லிட்டு அவன் டிமிலினா என்னமா என்னமான்னு கேக்குறான்..”
“சொல்ல வேண்டியது தானே.. இது தான் டிமிலின்னு” என்றவன் அவள் இதழ்களை சிறைசெய்தான்.. அவனிடமிருந்து திமிறி விலகியவள்,அவனை இரண்டு அடிகள் அடித்து
“பையன்கிட்ட சொல்லுற விஷயமா இது..” என்றாள்..
“அப்போ என்கிட்ட சொல்லு..” என்றவன் மீண்டும் அவளின் இதழை நெருங்க..
“இவன் ஒருத்தனையே சமாளிக்க முடியலை. இவன் அப்படியே உங்களை மாதிரி என்னைப் படுத்தி வைக்கிறான்.. இதுல இன்னொன்னு வேறையா ஆளை விடுங்க..” என்றவள் எழுந்துக் கொள்ளப் போக, அவளை நகர விடாமல்
“நீ தானே மாசமா இருக்கும்போது எல்லாம், உங்களை மாதிரியே பையன் வேணும் வேணும்ன்னு சொன்ன. இப்போ என்னை மாதிரி இருக்கான்னு குறைப் பட்டுக்குற?” அவன் முறைத்துக் கொண்டே கேட்க
“அதெல்லாம் எல்லா பொண்ணுங்களும் மாசமா இருக்கும்போது நினைக்கிறது தான்.. பின்னாடி தான் அதோட விளைவுகள் புரியுது..”
“என்னை மாதிரி அவன் இருக்கான், உன்னை மாதிரி ஒரு பொண்ணு வேணும்ல..”
“ஒன்னும் வேண்டாம்.. என்னை மாதிரி நான் மட்டுமே இருந்துக்கிறேன்..”
“பிரஜின் சேட்டை செய்யுறான்னு சொல்லுற இல்ல.. இப்போ ரெண்டாவது பேபி அவனை விட சேட்டை செஞ்சா, அவன் சேட்டை கம்மி ஆகிடும்ல.. அதுக்கு தான் கேக்குறேன்..”
“என்ன பெரிய கோட்டை சின்னதா ஆக்க, அதை விட பெரிய கோடு போடுறதா நினைப்பா.. ஓடிடுங்க..”
“ஹே என்னடி.. நீ தானே போன வருஷம் ரெண்டாவது பேபி வேணும்னு கேட்ட இப்போ வேண்டாம்ன்னு சொல்லுற..”
“அகல்யா பொண்ணைப் பார்த்ததுல இருந்து, ஆசையா இருந்தது.. அப்போ நீங்க நோ தானே சொன்னீங்க..” போன முறை அகல்யாவின் குழந்தையின் முதல் பிறந்தநாளிற்கு சென்றப் போது அழகாக பிராக் அணிந்து, தலையில் குட்டிக் கிளிப்பு குத்தி, பார்க்க குட்டி தேவதை போல் இருந்தவளை குகா தூக்கிக் கொண்டே சுற்றினாள்..
“உன் பொன்னை எனக்கு கொடுத்துடுடி.. நீ வேற பெத்துக்கோ..” அகல்யாவிடம் இப்படி தான் அடிக்கடி அவள் கூறுவாள். மாறனிடம் இரண்டாவது குழந்தையைப் பற்றி கேட்டப் பொழுது, ”அம்மா தாயே.. ப்ரஜின் பிறக்கிற அப்போ நீ என்னை படுத்தின பாடே போதும்..” என்றான்.. இப்பொழுது அவனே இரண்டாவது பெண் வேண்டும் என்று கேட்டதும், குகா விருப்பம் இல்லாதது போல் கணவனை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள்.
“அடிப்பாவி அதுக்காக இப்போ பழி வாங்குறியா? ப்ரஜூ பிறக்குறப்ப நீ செஞ்ச ஆர்ப்பாட்டத்துல தான் செகண்ட் பேபி வேணாம்னு அப்போ சொன்னேன்.. இப்போ ஆசையா இருக்கே..” என்றான் சோகமாக..
தீவிரமாக யோசிப்பது போல் பாவனை செய்தவள் “அப்போ நான் போடுற கண்டிஷனுக்கு எல்லாம் ஓகே சொல்லணும்..” என்றாள்
“நீ என்ன கண்டிஷன்னு சொல்லு.. அப்புறம் ஓகே சொல்லுவோமா வேண்டாமானு நான் யோசிக்கிறேன்..”
“அப்போ பொண்ணு கிடையாது..” குகா முறிக்கிக் கொள்ள
“டார்ச்சர் டி நீ..” என்றவன்.. “சரி ஓகே.. சொல்லு..”
“ம்.” என்று யோசித்தவள் “இப்போதைக்கு ஒன்னும் நியாபகம் வரலை.. தோனும் போது எல்லாம் சொல்லுறேன்.. அதுக்கு நீ ஓகே சொல்லணும்..”
“நேரம்.. சரி..”
“சரி இப்போ என்னைப் பத்தி ஒரு கவிதை சொல்லுங்க பார்ப்போம்..”
“நான் என்ன கவிஞனா கவிதை சொல்ல?”
“சொன்னா தான் பொண்ணு.. இல்லாட்டி உனக்கு பண்ணு..”
“அம்மா தாயே.. மொக்கைப் போடாதே? இதுக்கு நானே மொக்கையா ஒரு கவிதை சொல்லிடுறேன்.” என்றவன் ஐந்து நிமிடம் யோசித்து விட்டு
“என்னவளாய் உனையேற்ற கனத்தில்
ஜனித்த நம் காதல்
காதலை கடந்த என் கடமை
அதையும் கடந்த உன் மாசற்ற அன்பு
அதற்கு ஈடாய் நானும் என் காதலும்
உன் காதலுக்கான மன்னனாய்
நிச்சயம் உனை காதல் செய்வேன் உன் கட்டளைப்படி கண்மணியே!”
என்றான்..
அவன் கூறியதைக் கேட்டு குகாவிற்கு, ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது..
“இவ்வளவு அழகா கவிதை சொல்லுவீங்களா நீங்க? சூப்பார இருந்தது மாறன்.. அஞ்சு நிமிஷத்துல எப்படி இவ்வளவு அழகா யோசிச்சீங்க?”
“உன்னைப் பார்த்தாலே கவிதை அருவி மாதிரி கொட்டுதுடா பேபிமா..” அவன் கண் அடித்துக் கூற,
“போடா..” என்றவள் அவனை அணைத்துக் கொண்டு
“அவ்வளவு பிடிக்குமா மாறன் என்னை?” என்றாள்..
“நீ சம்திங் ஸ்பெஷல்.. பல பொண்ணுங்க தங்களோட தப்பை ஒத்துக்காமா, சும்மா புருஷன் கூட சண்டைப் போட்டுகிட்டே இருப்பாங்க.. ஆனா நீ உன் மேல தப்பே இல்லாட்டியும், நம்ம சண்டைப் போட்ட நீயாவே வந்து என்னோட பேசிடுவ.. சாரி சொன்னாப் போதும் உன் கோபம் காணாமல் போகிடும்.. எவ்வளவு ஆபிஸ் டென்ஷன் இருந்தாலும், இந்த கிறுக்கி கிட்ட பேசினா அது காணாம போகிடும்..” என்று அவள் மூக்கைப் பிடித்து இழுத்தான்
“நீங்க கூட தான் சம்திங் ஸ்பெஷல்.. எத்தனை பேர் வைப்பும் வேலைக்குப் போறா, வீட்டு வேலையும் பாத்துகிறான்னு அவளுக்கு ஹெல்ப் பண்ணுறாங்க.. சிலர் கல்யாணம் ஆனக் கொஞ்ச நாள் மட்டும் ஹெல்ப் பண்ற மாதிரி சீன் போட்டுட்டு அப்புறம் எதுவும் பண்ண மாட்டாங்க.. ஆனா நீங்க இந்த அஞ்சு வருஷத்துல, ஊர்ல இல்லாத நாளைத் தவிர தினமும் எனக்கு ஹெல்ப் பண்றீங்க வக்கீல் வண்டுமுருகன்..”
“நான் உன்னைப் பத்தி எவ்வளவு உயர்வா சொல்லுறேன்.. நீ என்னை எப்பவும் சமையல்காரனாவே தான் பார்ப்பியா?”
“ஹாஹா.. ஆமா.. லைப்லாங் ப்ரீயா குக் பண்ண ஒருத்தர் கிடைச்சா விடுவோமா? அகல்யா சொல்லுவா, நீ சாப்பிடுறதுக்கெல்லாம் ஒரு சமையல்காரரைப் பார்த்து கல்யாணம் பண்ணு.. அப்போ தான் உனக்கு செட் ஆகும்ன்னு.. சமையல்காரர் கிடைக்காட்டியும்.. கிடைச்சவரை சமையல் காரரா மாத்திடுறேன்னு ஒரு பேச்சுக்கு சொன்னேன்.. ஹீ அதே மாதிரி நடந்திடுச்சுல..”
“எல்லாம் நேரம்..”
“இப்படியே பேசிட்டே இருந்தா, என்னை மாதிரி பொண்ணு எப்படி கிடைக்கும்..” குகா முனுமுனுக்க, மாறன் அவளின் இதழை சிறை செய்தான்..
அவர்கள் வாழும் காலம் யாவும், மாறன் குகாவிற்கு சமைத்துப் போட்டே இழைத்துப் போவான்.. அதில் மாற்றம் இல்லை.. கணவன் மனைவிக்குள் சண்டைகள் வருவது சகஜமே.. அதில் ஈகோ பார்க்காமல் குகா, மாறனைப் போல் உடனே பிரச்சனையை சரி செய்துக் கொள்பவர்கள் மிகவும் சிலரே..
கொஞ்சம் நீங்கள் விட்டுத்
தந்தால் சொர்க்கம் உங்கள்
வீட்டைத் தட்டும்...
கணவன் மனைவியே ஆனாலும், அவரவருக்கு என்று பெர்சனல் ஸ்பேஸ் கண்டிப்பாக இருக்கும்.. அதில் மற்றவர் நுழையாமல் இருந்தாலே பாதிக்கு மேல் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும்..
அவரவர் எண்ணம் அவரவர்குண்டு
ஆதிக்கம் வேண்டாமே- ஒரு
தனிப்பட்ட சுதந்திரம்
இருவருக்கிடையில் அவசியம் இருக்கட்டுமே..
நன்றி..