அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

காதல் செய்வேன் கட்டளைப்படி - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

ஹரிணி மதுரவள்ளி "காதல் செய்வேன் கட்டளைப்படி" என்கிற புதிய கதையுடன் நம்மை சந்திக்க வருகிறார்........................
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#2
காதல் செய்வேன் கட்டளைப்படி..

காதல் 1

“எல்லாம் எடுத்துகிட்டியா? பிரஷ், பேஸ்ட், சோப்பு, டவல். எதையும் மறக்கலையே?” தாயின் குரலுக்கு பதில் அளிக்காமல் போனை நோண்டிக் கொண்டிருந்தாள் குகப்ரியா..

“குகா.. உன்னை தான் கேக்குறேன்.. பதில் சொல்லாம போனையே பார்த்துகிட்டு இருந்தா என்ன அர்த்தம்..”

“ஒரே கேள்விய எத்தனை தடவை கேட்பீங்க? நானும் பதில் சொல்லி சொல்லி டயர்ட் ஆகிட்டேன்.. அயம் ட்வென்டி த்ரீ.. டோன்ட் ட்ரீட் மீ லைக் அ சைல்ட்மா..” குரலில் எரிச்சல் அப்பட்டமாக தெரிந்தது..

“எதையும் மறந்திட போறேன்னு தான் திரும்ப திரும்ப கேக்குறேன்.. அது உனக்கு எரிச்சலா தான் வரும்.. அங்க போயிட்டு அதை வெச்சுட்டேன் இதை வெச்சுட்டேன்னு போன் பண்ணுவ இல்ல, அப்போ இருக்கு உனக்கு..” தாயின் கண்டிப்பில் மேலும் கடுப்பான குகா

“ஒரு தடவை மறந்ததை எத்தனை முறை சொல்லிக் காமிப்பீங்க?” என்றாள்

“ஒரு தடவைனாலும் மறந்த தானே..” அவரும் விடாது கூறினார்..

“ஆளை விடுங்க.. நான் கிளம்புறேன்..” என்றவள் தனது பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்..

“கிப்ட் எடுத்துகிட்ட தானே?” என்று மறுபடியும் குகாவின் தாய் ஆரம்பிக்கவும்..

“அம்மா உள்ள போங்க.. கடுப்பேத்தாம.. கிப்ட் அகல்யாகிட்ட இருக்குன்னு பத்து தடவை சொல்லிருப்பேன்..” கடுகடுத்தவாறே அடுத்த தெருவில் இருந்த அகல்யாவின் வீட்டிற்குச் சென்றாள் குகப்ரியா..
வீட்டிற்குள் நுழையும் போதே “அத்தை..” என்று கத்திக் கொண்டே சென்றாள்.. அவளை வரவேற்றார் அகல்யாவின் தாய்.

“வா குகா.. எப்படி இருக்க? இளைச்சு போயிட்ட..”

“வேலை அத்தை..” என்றாள் சோகமாக.

“என்ன வேலையோ.. உங்க ரெண்டு பேரையும் நாங்களா வேலைக்குப் போகச் சொன்னோம்.. உங்க சிநேகிதப் பிள்ளைங்க எல்லாம் இப்போ ஒரு குடும்பத்தை நடத்துறாங்க.. உங்களுக்கு எப்போ நாங்க கல்யாணம் செஞ்சு வைக்கிறது.. உங்களோடவே சுத்திக்கிட்டு இருந்த ரோகிணிக்கு நாளைக்கு கல்யாணம்.. உங்களுக்கும் பார்க்க ஆரம்பிச்சுடவா?” என்றார் ஆர்வமாக

“அத்தை.. கொஞ்ச நாள் நாங்க ஜாலியா என்ஜாய் செஞ்சுக்கிறோமே.. அப்பறம் மேரேஜப் பத்தி யோசிப்போம்..” என்று கூறியவள் அப்பொழுது தான் அகல்யாவின் தம்பி சற்று தள்ளி நின்றுக் கொண்டு தன்னை முறைப்பதை கவனித்தவள், அவன் அருகில் சென்று

“மச்சான்.. எப்படி இருக்க? எதுக்கு என்னை முறைக்கிற?” என

“போ போ.. போய் உன் அத்தையே கொஞ்சு.. நான் எல்லாம் உன் கண்ணுக்கு தெரியவே மாட்டேன்..” என்றான் கோபமாக

“இல்ல மச்சான். அத்தைய இப்போ கரெக்ட் செஞ்சா தானே, நாளைக்கு நான் இந்த வீட்டுக்கு மருமகளா வரும்போது என்னை நல்லா கவனிச்சுப்பாங்க.. அதுக்கு தான்..” கண்ணடித்து அவள் கூற, அகல்யாவின் தாய் தலையில் அடித்துக் கொண்டார்..

“பார் மச்சான்.. உங்க அம்மா தலையில் அடிச்சுக்கிறாங்க..”

“அது கிடக்குது.. விடு செல்லம்.. பின்னாடி பழி வாங்கிக்குவோம்..” என்றான் கூலாக

“அப்படிங்கிற..”

“ஆமாங்கிறேன்..”

“நீ இன்னைக்கு காலேஜுக்கு போகலையா?”

“என் செல்லம் ஊர்ல இருந்து வந்துருக்கு.. அதைப் பார்க்காம எனக்கு படிப்பா முக்கியம்..”

“கரெக்ட்டா என் கருத்த மச்சான்..” என்று அவனை கொஞ்சியவள் “உங்க கொக்கா எங்க? இன்னும் ரெடி ஆகலையா?” என்க.
அவன் பதில் அளிக்கும் முன்பு அகல்யாவின் தாயார் “குளிச்சிட்டு இருக்கா குகா..” என்றார்

“என்னத்தை.. இப்போ தான் அவ குளிக்கிராளா? இனி தலைய காய வெச்சு ஹேர் ஸ்டைல், கண்ணுக்கு காஜல், உதட்டுக்கு லிப் க்ளோஸ்ன்னு ஒரு மணி நேரம் ஆக்குவா ரெடி ஆக. சீக்கிரமா அவளை எழுப்பி விட்டுருக்கலாம்ல..” சோகமாக குகா கூற

“அஞ்சு மணிக்கு தானே ரெண்டு பேரும் வந்தீங்க.. ட்ரைன்லையும் தூங்கிருக்க மாட்டீங்க, இன்னைக்கு கல்யாணா வீட்டுலையும் ராத்திரி முழுக்க முழிச்சுட்டு ஆட்டம் தான் போடப் போறீங்க.. அதான் கொஞ்சம் தூங்கட்டும்ன்னு விட்டுட்டேன்.. இங்க இருக்க தூத்துக்குடி.. ரெண்டு மணி நேரத்துல போய்ரலாம்.. ஈவ்னிங் ரிசப்ஷனுக்கு இப்பவே போய் என்ன செய்யப் போறீங்க?”

“சரியா ரிசப்ஷனுக்கு போய் இறங்க அவ என்ன எங்களுக்கு வெறும் ப்ரெண்டா? பெஸ்ட் ப்ரெண்ட்.. நியாயமா ஒரு வாரத்துக்கு முன்னாடியே அவகூட நாங்க இருந்திருக்கணும்.. ஆபிஸ் வேலைல எங்களால போக முடியலை.. அட்லீஸ்ட் முதல் நாள் ஆச்சும் சீக்கிரமா போகலாம்ன்னு பார்த்தா உங்க பொண்ணு மேக் அப் போட்டே நேரத்தை ஓட்டிடுவா..” என்றவள்,

அகல்யாவின் தம்பியிடம் “டேய் மச்சான், போய் தண்ணி வால்வ அடைச்சு விடு.. தண்ணி நின்னா தான் அவ பாத்ரூம விட்டு வெளிய வருவா.. இல்ல குளிச்சிகிட்டே இருப்பா.. என்ன தான் உருண்டு பெரண்டு குளிச்சாலும் சட்டில இருந்தா தான் அகப்பைல வரும்ன்னு உங்க அக்காக்கு தெரிய மாட்டுது..”

“சரியா சொன்னா பட்டு.. ரொம்ப மேக் அப் போடுறா.. சென்னைல யாரையும் கரெக்ட் செஞ்சுட்டாளோன்னு எனக்கு டவுட்.”

“செஞ்சா செஞ்சுகிட்டு போகட்டும் மச்சான்... அவ போனா தான் நம்ம ரூட் கிளியர் ஆகும். முதல்ல அவளை இந்த வீட்ல இருந்து விரட்டுறதுக்கான வேலையைப் பார்ப்போம்..” குகா சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு கூற, அகல்யாவின் தாய் இருவரின் முதுகிலும் ஒன்று வைத்தார்..

“என் மகளைப் பார்த்த ரெண்டு பேருக்கும் எப்படி தெரியுது? வாய்லையே போடுறேன்..” என

“என் மேலையே கை வச்சுட்டீங்கள.. கல்யாணம் மட்டும் முடியட்டும் உங்களை முதியோர் இல்லத்துல விடல என் பேர் குகப்ரியா இல்ல..” சவால் விட..

“இந்த ஸ்கேல எங்க வெச்சேன்னு தெரியலை.” அகல்யாவின் தாய் இருவரையும் அடிப்பதற்காக ஸ்கேலை தேட, குகா வேகமாக அகல்யாவின் ரூமுக்குள் சென்று மறைந்தாள்.
அகல்யாவின் தம்பிக்கு இரண்டு அடிகள் தாயிடம் இருந்து கிடைத்தது..

“பட்டு என்னை அடி வாங்க விட்டுட்டு நீ மட்டும் எஸ்கேப் ஆகிட்ட..” அவன் கத்த

“அடுத்து தோசை கரண்டி பறக்கும்..” தாயின் வார்த்தையில் அவனும் தனது ரூமிற்குச் சென்று மறைந்தான்..

“எருமை இன்னும் நீ கிளம்பலையா? பத்து மணின்னு சொன்னா பதினொரு மணிக்காச்சும் ரெடியா இருப்பன்னு தான் பத்துன்னு சொன்னேன்.. இப்போ பதினொன்றை ஆகப் போகுது.. பன்சுவாலிட்டியே இல்லைடி உனக்கு..” தலையை உலரவைத்துக் கொண்டிருந்த அகல்யாவிடம் குகா கூற

“மூடிட்டு போய் பூஜை ரூம்ல இருந்து சந்தனத்தை எடுத்துட்டு வா..” என்றாள் அகல்யா..

“கிளம்புறதே லேட். இதுல சந்தனம் ஒரு கேடா உனக்கு?” என்று திட்டிக் கொண்டே அவள் கேட்டதை எடுத்துக் கொடுத்தாள்..
மேலும் அரைமணி நேரம் தனது அலங்காரத்தை முடித்துக் கொண்டு, இருவரும் தூத்துக்குடியை நோக்கிப் புறப்பட்டனர்..

“லஞ்ச் நம்ம போறதுகுள்ள தீரப் போகுது.. பசியோட என்னை இருக்கவிட்ட உன்னை கடிச்சுக் குதறிடுவேன்..” கையை அகல்யாவின் முகத்திற்கு நேரே காட்டிக் கூறினாள் குகா.

“தின்னிப் பண்டாரம்.. ஹோட்டல்ல வாங்கித் தரேன்..”

“நிஜமா?”

“நிஜமா தான்டி.. கொஞ்ச நேரம் வாய மூடிகிட்டு வரியா? தூக்கமா வருது.. நைட்டும் ட்ரைன்ல தூங்க விடாம தொணத்தொணன்னு பேசிகிட்டே வந்த..” என்றவள் கண்களை மூடிக் கொண்டாள்.

“தூங்கு மூஞ்சி..” என்று கூறியவள் ஹெட்போனில் பாட்டைக் கேட்க ஆரம்பித்தாள்..
இரண்டு மணி நேர பயணத்தில் இருவரும் தூத்துக்குடியை அடைந்தனர்.. அங்கிருந்து திருமண மண்டபத்திற்குச் சென்றனர்..

“வாங்க வாங்க.. என்னமா ரெண்டு பேரும் இவ்வளவு லேட்டாவா வரது..” ரோகிணியின் தாய் இருவரையும் கேட்டார்

“இல்ல ஆண்ட்டி ஆபிஸ்ல கொஞ்சம் வேலை..”

“சரி வாங்க சாப்பிடுங்க.. அப்பறம் பேசுவோம்..”

“ரோகிணியைப் பார்த்துட்டு வரோம் ஆன்ட்டி.” அகல்யா கூற

“மணி மூணாகப் போகுது.. வந்து சாப்பிடுங்க.. ரோகிணி எங்கயும் போக மாட்டா.. பத்து நிமிஷம் கழிச்சு அவளைப் பார்க்கலாம்..” என்றவர் கையோடு அவர்களை டைனிங் ஹாலிற்கு அழைத்துச் சென்றார்..

“ஆன்ட்டி சாப்பிடுங்கன்னு சொல்றாங்க.. நீ என் பசி தெரியாம ரோகிணியைப் பார்க்கணும்னு சொல்ற.. அவளைத் தானே ரெண்டு நாள் புல்லா பார்க்கப் போறோம்.. சாப்பாட்டை விட அவ முக்கியமாடி?” உணவை வாயில் வைத்துக் கொண்டே குகா கூற, அகல்யா தலையில் அடித்துக் கொண்டாள்..

“சரியான சாப்பாட்டு ராமி.. உன்னைக் கட்டிக்கப் போறவன் ரொம்ப பாவம்.. தீனி வாங்கிப் போட்டே அவன் சொத்து காலி ஆகிடும்..”

“என் ஆள் கூட பரவால.. உன் ஆள் உனக்கு மேக் அப் செட் வாங்கிக் கொடுக்கவே ஒரு லட்சம் சம்பாதிக்கணும்.”

“ச்சீ பே..”

“நீ பே..”
உணவை முடித்துக் கொண்டு இருவரும் ரோகிணி இருந்த அறைக்குச் சென்றனர்..

“வருங்கால மாமி..” என்று கூறிக் கொண்டே இருவரும் அவளைக் கட்டிக் கொண்டனர்..
“இது தான் வர நேரமாடி? சென்னைல இருந்து நேரா இங்கயே வர வேண்டியது தானே..” தன்னைக் கட்டிக் கொண்ட இருவரையும் விளக்கியவள், முறைத்துக் கொண்டே கேட்டாள்.
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#3
“புடவை வீட்ல தானே இருக்கு. அதை எடுக்க தான் வீட்டுக்குப் போயிட்டு அங்க இருந்து வந்தோம். இன்னும் பங்க்ஷன் ஆரம்பிக்கலைல அப்பறம் என்ன..” குகா கூற

“ஆரம்பிச்ச பிறகு வந்திருந்தீங்க இன்னும் டென்சன் ஆகிருப்பேன்..”

“கூல் கூல் மாமி..”
மெத்தையில் ரோகிணி அமர்ந்திருக்க அகல்யா அவள் மடியில் படுத்துக் கொண்டாள்..

“மாமி இனிமே இந்த மடியில எங்களுக்கு இடம் இல்லை.. உங்க அண்ணாக்கு மட்டும் தான் இடம்..” சோகமாக கூறுவைதைப் போல் அகல்யா கூற

“ஐயோ.. மாமி, அண்ணா இப்படி எல்லாம் சொல்லாதிங்கடி.. இந்த ஸ்லாங்கே எனக்குப் பிடிக்கலை..”

“அயர் பையனை உஷார் செஞ்சுட்டு இந்த ஸ்லாங் பிடிக்கலைன்னு சொன்னா என்னடி அர்த்தம்..” சொல்லிக் கொண்டே குகாவும் அவள் மடியில் படுத்துக் கொண்டாள்.


“அவரைப் பிடிச்சுருக்கு.. அவரோட பாமிலி பழக்க வழக்கம் எல்லாம் பிடிக்கலை..”

“மாப்பிள்ளைகிட்ட ஈவினிங் சொல்லிடுவோம்டி குகா.”

“சொல்லிக்கோங்க.. நானே அவர்கிட்ட நிறைய டைம் சொல்லிட்டேன்..”

“அவங்க எல்லாம் ரொம்ப ஆச்சாரமா இருப்பாங்க? நீ எப்படி அங்க குப்பைக் கொட்டப் போறன்னு தான் எனக்கு தெரியலைடி..” அகல்யா கூற

“உன்னை மாதிரி சாயங்காலம் குளிக்கிறவங்க தான் அதுக்கு கவலைப்படனும்.. ரோகிணி காலைல குளிச்சுட்டு தான் சாப்பிடுவா.. நீ பார்த்து நடந்துக்க உன் லவ்வர் வீட்ல குளிச்சா தான் சோறுன்னு சொல்லிடப் போறாங்க..”

“சோறுன்னு சொன்னா நீ தாண்டி பல்லைக் காட்டுவ நான் இல்லை..”

“கூழ் ஆனாலும் குளித்து குடி பாலிசிய நானும் ரோகிணியும் பாலோ பண்ணுவோம்.. ஆபீஸுக்கு போற நாள் மட்டும் தான் மார்னிங்கே குளிப்ப.. மீதி நாள் எல்லாம் குளியலுக்கு லீவ் விடுற கேஸ்.. நீ ஆச்சரத்தைப் பத்தி அவளுக்கு கிளாஸ் எடுக்குற பார்த்தியா? எல்லாம் நேரம்..”

“நீ மூடு..”

“நீ மூடு...”

“ச்சை.. ரெண்டு பேருமே மூடுங்கடி.. அவன் அவன் இங்க கல்யாணக் கவலைல இருக்கான்.. நீங்க வேற..” கடுப்புடன் கூறினாள் ரோகிணி..

“மூஞ்சியப் பார்த்தா கவலை மாதிரி இல்லையே.. கலையா தானே இருக்க..”

“போங்கடி.”
மூவரும் சிறிது நேரம் இப்படியே பேசிக் கொண்டிருந்தனர்.. நான்கு மணி ஆனா சமயம் ரோகிணியை அலங்கரிக்க அழகு நிலையத்தில் இருந்து பெண்கள் வரவும் மூவரும் அரட்டையை நிறுத்தினர்..

“அகல் நீயும் இப்பவே கிளம்ப ஆரம்பி.. அப்போ தான் ஆறு மணிக்கு முன்ன கிளம்புவ..” குகா சிரித்துக் கொண்டே கூற

“உனக்கு என்ன எப்பப்பார்த்தாலும் என்னையே வம்பிழுத்துட்டு இருக்க.. போ”
மாலை ஆறு மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு நடைப்பெற ஆரம்பித்தது.. ரோகிணி மேடையில் மணமகனுடன் இருக்க, தோழிகள் இருவரும் லெஹங்கா அணிந்து முதல் வரிசையில் அமர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர்..

“குகா..” அகல் அவளின் கையைச் சுரண்ட

“என்னடி..”

“என்னை சோலோ பிக் ஒன்னு எடுத்துக் கொடேன்..”

“எதுக்கு?” என்றாள் புருவங்கள் இடுங்க.

“டிபி வைக்கடி..”

“நம்ம மூணு பேரும் சேர்ந்து எடுத்த போட்டோவை டிபில வை..”

“அடியே ப்ளீஸ் ப்ளீஸ்..” என்று கெஞ்ச

“சென்னை போனதும் ஒரு நாள் லஞ்ச் நீ எனக்கு வாங்கிக் கொடுக்கணும்.. டீலா?”

“ஒரு போட்டோக்கு இருநூறு ருபாய் செலவு பண்ணனுமா? ஏன்டி இப்படி அநியாயம் பண்ற?” அகல்யா அலுத்துக் கொள்ள

“முடியாதுனா போ..”

“சரி வாங்கித் தரேன்.. இந்தா” போனை அவள் கையில் கொடுத்தாள்..
குகாவும் தோழியை வித விதமாக புகைப்படம் எடுத்துக் கொடுத்தாள்..
இரவு உணவை முடித்துக் கொண்டு தோழிகள் மூவரும் பன்னிரெண்டு மணி வரை பேசிக் கொண்டிருக்க, ரோகிணியின் தாய் தான் அதட்டல் போட்டு மூவரையும் உறங்க வைத்தார்..

மறுநாள் காலை புடவையில் குகாவும் அகல்யாவும் அங்கும் இங்கும் சுற்றியபடி வேலை செய்துக் கொண்டிருந்தனர்.. பெண் வீட்டின் சார்பாக ரிஷப்ஷனில் ரோகிணியின் சொந்தத்தில் ஒரு பெண் நிற்க, அவளிற்கு துணையாக குகாவை நிற்க சொல்லியிருந்தார் ரோகிணியின் தாய்..

அகல்யா ரோகிணியின் தாயுடன் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தாள்..
திருமணம் இனிதே முடிய, குகாவையே வந்ததில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த ரோகிணியின் தாயின் தோழிக்கு அவளை மிகவும் பிடித்துப் போயிருந்தது..

தன் தோழியிடம் குகாவைப் பற்றி அவர் விசாரிக்க
“நம்ம ரோகிணி கூட படிச்சப் பொண்ணு.. இப்போ சென்னைல வேலைப் பார்க்குறா..” என்றார்

“ரோகிணி வேலை பார்க்கிற ஆபிசா?” அவர் கேட்க

“இல்ல இவ வேற கம்பெனில இருக்கா..”

“நம்ம மாறனுக்கு பார்க்கலாம்ன்னு யோசிக்கிறேன்.. நீ என்ன சொல்ற?”

“தாராளமா கேக்கலாம்.. ரொம்ப நல்லப் பொண்ணு..”

“நீ ப்ரீ ஆனதும் அவங்க வீட்ல இதைப் பத்தி பேசிட்டு, என்ன சொன்னாங்கன்னு சொல்லு..”

“ஒரு வாரம் டைம் கொடு.. நான் அவங்க வீட்ல பேசுறேன்..”

“அந்த பொண்ணு லவ் எதுவும் பண்ணுதா?” ரோகிணி காதல் திருமணம் என்பதால் அவர் அவ்வாறு கேட்க

“அப்படி எதுவும் இல்லை.. எதுக்கும் ரோகிணி கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்லுறேன்..”

“சரி.. நல்லது நடந்த சந்தோஷம்..”

அகல்யா குகா இருவருக்கும் அன்று இரவு தூத்துக்குடியில் இருந்து ரயில் என்பதால் ஒன்பது மணிவரை மண்டபத்தில் தோழியுடன் இருந்தனர்..
மணமக்கள் இருவரையும் கலாய்த்துக் கொண்டே பொழுதைக் கழித்தனர்.. கிளம்பும் தருவாயில் குகா

“ஹேப்பி மேரீட் லைப்டி செல்லம்..” என்று ரோகிணியை அணைத்து வாழ்த்துக் கூறிவிட்டு அவள் கணவனிடம்
“சென்னை வந்ததும் ட்ரீட் வெச்சுடுங்க..” என்றாள்

“கண்டிப்பா.. உங்க ரெண்டு பேரை பத்தியும் நிறையா சொல்லிருக்கா.. ப்ரீயா இருக்கப்ப வீட்டுக்கு வாங்க..”

“கண்டிப்பா அண்ணா..” என்றவர்கள், விடைபெற்று ஸ்டேஷனிற்கு சென்றனர்.
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#6
காதல் செய்வேன் கட்டளைப்படி...

காதல் 2

ரோகிணியின் திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகியிருந்தது.. அகல்யாவும் குகாவும் அவர்கள் வேலையில் பிசியாக இருந்தனர்.. இருவரும் வேறு வேறு டீம்.. மதிய இடைவேளையின் போது ஒரு சில நாட்கள் அகல்யாவும் குகாவும் சந்தித்துக் கொள்வார்கள்.. அன்றும் அப்படி இருவரும் சந்திக்கவே ஒன்றாக அமர்ந்து உண்டு கொண்டிருந்தனர்..

“நீ இன்னும் எனக்கு லஞ்ச் ஸ்பான்சர் பண்ணலை.. அன்னைக்கு உன்னை எவ்வளவு அழகா போட்டோ எடுத்தேன்.. அதுக்கு பதில் நீ என்ன செஞ்ச?” குகா கேட்க

“தின்னி மாடு.. இப்போ நீ சாப்பிட்டதுக்கு நான் பே பண்றேன் போதுமா?”

“காசு கொடுத்து நான் வாங்கிட்டு வந்துட்டேன்.. சனிக்கிழமை மால் போகலாம்.. அங்க எனக்கு வாங்கிக் கொடு.”

“சனிக்கிழமை எங்க டீம் அவுட்டிங்..”

“உன் டி.யல் செம்மடி.. அடிக்கடி அவுட்டிங் வெச்சுடுறான். எனக்கும் இருக்கானே சொட்டத் தலையன். வேலைக்கு சேர்ந்த ஒரு வருசத்துல ஒரு தடவை தான் அவுட்டிங் போகிருக்கோம்.. அதுவும் காலேஜுக்கு லெக்சர் கொடுக்க..”

“வேணும்னா எங்களோட வா.. நான் கவின் கிட்ட சொல்லுறேன்.. அவர் ஒன்னும் சொல்ல மாட்டார்..”

“இல்ல நான் வரலை.. நீங்க என்ஜாய் பண்ணுங்க..”

“இரு..” என்றவள் போனை எடுத்து அவளின் டீம் லீடை அழைக்கப் போக, வேகமாக அவள் கையில் இருந்து போனைப் பிடிங்கினாள் குகா..

“லூசு.. நான் வரலைன்னு சொல்லுறேன்ல.. நீங்க டீமா போறீங்க.. நான் வந்தா சிலருக்கு பிடிக்கலாம் சிலருக்கு பிடிக்காம இருக்கலாம்.. நெக்ஸ்ட் வீக் நம்ம ரெண்டு பேரும் போகலாம்..”

“சரி ஓகே..” என்றவளும் அதற்கு மேல் குகாவை வற்புறுத்தவில்லை..
சனி மாலை தனது டீமுடன் சந்தோசமாக பொழுதைக் கழித்தாள் அகல்யா.. டின்னரை முடித்துக் கொண்டு அனைவரும் அமர்ந்து பாடல் பாடிக் கொண்டிருந்தனர்..

நோகாமல் என் தோளில் சாய்ந்தால் போதும்
உன் நுனி மூக்கைக் காதோடு நுழைத்தால் போதும்
கண்ணோடு கண் பார்க்கும் காதல் போதும்
இரு கண் கொண்ட தூரம் போல் தள்ளி இரு போதும்
என்று தன்னவளை விழிகளில் நிரப்பிக் கொண்டே பாடினான் கவின்..

“இந்த கவின் வர வர சரியில்லை.. லவ் சாங்கா கேக்குறார் பாடுறார்.. எதாச்சும் லவ்வா?” கவினின் டீமில் இருக்கும் ஒருவன் கேட்க

“லவ் சாங் பாடுனா லவ் பண்ணனுமா என்ன? இது என்னடா கொடுமையா இருக்கு..”

“சாங்க ரொம்ப பீல் செஞ்சு பாடுனீங்க.. எனக்கும் கொஞ்சம் உங்க மேல டவுட் தான்..” இன்னொருவர் கூற, அங்கிருந்த அவனின் டீம் மேட் அனைவருமே அதையே கூறி அவனை கலாய்த்து கொண்டிருந்தனர்..
கேபில் அவரவர் இருப்பிடத்தில் இறக்கிவிட்ட கவின், கடைசியாக அகல்யாவை அவளது விடுதியில் இறக்கி விட்டான்.. இறங்கியவளின் கையை பிடித்துக் கொண்டவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க

“ப்ச்.. கவின் என்ன பண்றீங்க? யாராச்சும் பார்க்க போறாங்க.. கையை விடுங்க..” அவனிடம் இருந்து கையை உருவிக் கொண்டாள்.

“உனக்காக தானே பாட்டு எல்லாம் பாடுனேன்.. நல்லா இருக்கு, நல்லா இல்லைன்னு ஒரு வார்த்தை சொன்னியா நீ?”

“நீங்க எனக்காகப் பாட்டுப் பாடுறது என்ன புதுசா? சும்மா சும்மா பாடீட்டு தான் இருப்பீங்க.. ஒவ்வொரு தடவையும் சூப்பர் சூப்பர்ன்னு சொல்ல வாய் வலிக்குது.” என்றாள் சிரிப்புடன்.

“வாய் கூடிப் போச்சு.. பார்த்துக்குறேன்..” என்றவன் அவளை தன் புறம் இழுக்க

“அடி வாங்குவீங்க.. கிளம்புங்க முதல்ல..” அவன் கையில் அடித்தாள்.

“ஒரு கிஸ் கூட கொடுக்கமாட்டியா?” என்றான் பாவமாக

“ஒரு மண்ணும் கிடையாது.. கல்யாணத்துக்கு அப்பறம் தான்..”

“அப்போ சீக்கிரம் உங்க வீட்ல நம்ம காதலை சொல்லிடு..”

“சொல்லலாம் சொல்லலாம்.. இப்போ கிளம்புங்க..”

“விரட்டுறதுலையே இரு.. பாய்..” என்றவன் அவளிடம் விடைபெற்று கிளம்பினான்..
உதட்டில் ஒட்டிய சிரிப்புடன் அறைக்குள் நுழைந்த அகல்யாவைப் பார்த்த குகா,

“என்ன மேடம் சிரிச்சுகிட்டே வரீங்க? ஒரே என்ஜாய்மென்டா?” என்றாள்

“ஹான்..” என்று தடுமாறியவள் “ம் ஆமாடி..” என்றவள் இரவு உடையை எடுத்துக் கொண்டு பாத்ரூமிற்கு சென்றாள்.. ரெப்ரெஷ் செய்துக் கொண்டு வந்தவள் குகாவிடம் “சாப்பிட்டியா?” என்றாள்

“ம்” என்றவளின் பார்வை அகல்யாவையே துளைத்தெடுத்தது.

“என்னடி.. ஒரு மாதிரி பார்க்கிற?”

“எப்பதான் வாயை திறப்பேன் பார்க்கிறேன்..”

“என்ன?” அவள் புரியாமல் கேட்க

“யாருக்கும் எதுவும் தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்க.. ஒரு நாள் பூனை வெளிய வந்து தானே ஆகனும்.. அன்னைக்கு இருக்கு..” என்றவள் அகல்யாவின் பதிலை எதிர்பார்க்காமல் லைட்டை அணைத்துவிட்டு படுத்தாள்.

குகாவின் இந்த பதிலில் சற்று ஆடித்தான் போனாள் அகல்யா..
‘எல்லாம் தெரிஞ்சுடுச்சா? போச்சு.. நானே சொல்லிருக்கணுமோ.. இவளுக்கு எப்படி தெரிஞ்சது? நிஜமா தூங்குறாளா? இல்ல என்னை அவாய்ட் செய்ய படுத்துட்டாளா? எழுப்பி உண்மையா எல்லாம் சொல்லிடுவோமா?’ பலவாறு யோசித்தாளே தவிர தோழியிடம் தன் காதல் விவகாரத்தை சொல்ல தைரியம் தான் வரவில்லை..
********************

“வக்கீல் சார், கொஞ்சம் எங்களோட பேச நேரம் ஒதுக்க முடியுமா?” சித்ராவின் கேள்வியில் சிரித்தவன்

“சொல்லுங்க மிசஸ் சித்ரா சுதாகரன்.. உங்களுக்கு என்ன பிரச்சனை.. உங்க ஹஸ்பண்ட் எதுவும் டார்ச்சர் பண்றாரா? விவாகரத்து வாங்கணுமா?” என்றான்

“அடேய்.. உன் வாய்ல வசம்ப வெச்சு தேய்க்க.. நானும் என் வீட்டுக்காரரும் நல்லா இருக்குறது உனக்குப் பிடிக்கலையா? எப்போடா எங்களைப் பிரிக்கலாம்ன்னு நினைப்பியா?” நிறுத்தாமல் சித்ரா திட்ட

“நீங்க தானே வக்கீல் சார்ன்னு சொன்னீங்க.. என்கிட்ட வரவங்க பாதி பேர் விவாகரத்துக்கு தான் வராங்க.. அதான் கேட்டேன்.. அப்போ உங்களுக்கு வேற என்ன பிரச்சனை மேடம்.. சொல்லுங்க தீர்த்து வெச்சுடுறேன்..”

“தவமா தவமிருந்து பத்து மாசம் சுமந்து பையன்னு ஒருத்தனை பெத்தேன்.. ஒரு வாரமா அவனை பிடிக்க முடியலை.. கொஞ்சம் அவனை பிடிச்சு கொடுக்குறீங்களா?”

“சாரி மேடம்.. நான் வக்கீல்.. போலீஸ் இல்லை.. போலீஸ் கிட்ட தான் மிஸ்ஸிங் கேஸ் எல்லாம் கம்பிளைன்ட் கொடுக்கணும்.. பாவம் படிக்காதவங்களா இருக்கீங்க.. அதான் ஒன்னும் தெரியலை.. நான் வேணும்னா உங்க ஊர் போலீஸ் நம்பர் தரவா.. அவர்கிட்ட சொன்னீங்கனா உடனே கண்டுப் பிடிச்சுக் கொடுத்துடுவார்..” அவனும் விடாமல் சித்ராவுடன் வம்பிழுத்தான்.

“என் புருஷன் கிட்ட கம்பிளைன்ட் கொடுக்க எனக்கு தெரியும்டா.. இப்போ நீ என்னோட பேசுவியா மாட்டியா?”

“நான் எப்போ பேச மாட்டேன்னு சொன்னேன்.. வேலைல இருக்கும் போது கால் பண்ணாதிங்கன்னு தானே சொன்னேன்..”

“உனக்கு எப்போ தான் வேலை இல்லை. ரெண்டு குடும்பத்தைப் பிரிச்சு விடுறதை வேலைன்னு சொல்லிக்கிட்டு திரியிறான்..”

“ஹலோ சித்து.. நானே ஒன்னும் அவங்க குடும்பத்துக்குள்ள போய் பிரிக்கலை.. என்கிட்ட வர கிளைன்ட்ஸ் கேக்குறதை நான் செஞ்சு கொடுக்குறேன்..”

“மேய்க்கிறது எருமை அதுல என்ன பெருமையோ..” என்றவர் “ஒழுங்கா சாப்பிடுரியாடா?” என்றார்..

“அதெல்லாம் கரெக்டா செஞ்சுடுவேன்.. இதை கேட்க தான் கூப்பிடீங்களா? எதுவும் முக்கியமான விஷயமா? இல்லைனா நான் ஈவ்னிங் வீட்டுக்கு போனதும் கூப்பிடவா?”

“இருடா.. கால்ல சுடுதண்ணிய கொட்டுனவன் மாதிரி பறக்காதே.. மாறா பொண்ணு போட்டோ வாட்சப்ல அனுப்பிருக்கேன்.. பார்த்துட்டு பிடிச்சுருக்கான்னு சொல்லு..”

“அம்மா கொஞ்சம் வேலை இருக்கு.. வீட்டுக்கு போயிட்டு பார்த்துட்டு சொல்லுறேன்..”

“போட்டோ பார்த்துட்டு பிடிச்சுருக்கு பிடிக்கல்லைன்னு சொல்ல எவ்வளவு நேரம்டா ஆக போகுது..”

“அம்மா இப்போ எனக்கு இருக்க டென்ஷன்ல பொண்ணு போட்டோவ பார்த்தேன்னா பிடிக்கலைன்னு தான் சொல்லுவேன்.. ஆபிஸ் டைம்ல டிஸ்டர்ப் செய்யாதிங்க..” என்றான் கடுப்பாக.

“என்னமோ பண்ணு.. நைட்டுக்குள்ள எனக்கு முடிவு தெரிஞ்சாகணும்” என்றவர் அழைப்பைத் துண்டித்தார்..

“இந்த சித்ராக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி ஆகிடுச்சு.. அப்பா எப்படி தான் சமாளிக்கிறாரோ..” வாய்விட்டே புலம்பிக் கொண்டு கேஸ் பைலை ஆராய்ந்தான்..
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#7
பரிதிமாறன் இருபத்தெட்டு வயது வாலிபன்.. சித்ரா சுதாகரனின் தவப்புதல்வன்.. சுதாகரன் மதுரையில் காவல்துறை அதிகாரியாக இருக்கிறார்.. சித்ரா இல்லத்தரசி.. இவனுக்கு ஒரு அக்கா சிந்து.. திருமணம் முடிந்து கணவனுடன் டெல்லியில் இருக்கிறாள்.. விஷ்வா கல்லூரி படிப்பிற்காக சென்னை வந்தவன், அங்கேயே வேலையிலும் சேர்ந்துவிட்டான்.. ஹை கோர்ட்டில் பிரபலமான வழக்கறிஞர் ஒருவரிடம் ஜூனியராக ஐந்து வருடமாக பணிபுரிந்துக் கொண்டிருந்தான்.. இப்பொழுது சென்னையிலேயே விரல் விட்டு எண்ணக் கூடிய பிரபலமான வக்கீலில் இவனும் ஒருவன்..

மாறனிடம் சென்றால் அந்த கேஸ் வெற்றியடையும் என்று கிளைன்ட்ஸ் மத்தியில் அவனிற்கு நல்ல பெயர் உண்டு.. தன்னிடம் வருபவர்களுக்கு அவன் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பான்..
சிறுவயதில் இருந்து வாய் கொஞ்சம் அதிகம்.. அதனாலேயே என்னவோ லா படிக்க வேண்டும் என்று அவன் பெற்றோரிடம் கேட்டதும் அவர்களும் அவன் வாய் மேல் இருந்த நம்பிக்கையில் சரி என்று ஒத்துக் கொண்டனர்.. இப்பொழுது எல்லாம் இவனை ஏன் தான் வக்கீலுக்கு படிக்க வைத்தோம் என்று தினமும் சித்ரா புலம்பும் அளவிற்கு அவர்களைப் படுத்தி வைக்கிறான்.. இவனைப் படுத்தவும் ஒருத்தி விரைவில் வருவாள் என்பதை அறியாமல் துரை கேஸ் பைலில் மூழ்கி இருந்தார்..

“ரெண்டு ஹியரிங் கண்டிப்பா வந்துடும் மாறா.. நிலம் ஆப்போனேன்ட் பார்ட்டி பேர்ல தான் இருக்கு.. நம்ம கிளைன்ட் தான் அவங்க இடத்தையும் சேர்த்து ஆக்கிரமிச்சு வீடு கட்டிருக்கார்.. எதிர்புற வக்கீலும் ரொம்ப தீவிரமா இருக்கார்.. கொஞ்சம் நம்ம கேர்புல்லா தான் இந்த விஷயத்தை டீல் பண்ணனும்..” மாறனுடன் பணிபுரியும் ஹரி பேப்பர்களை படித்துவிட்டு கூற

“இதை விட பெரிய கேஸ் எல்லாம் நம்ம அசால்ட்டா சமாளிச்சிருக்கோம்.. இதுக்கு ஏன் நீ இவ்வளவு டென்ஷன் ஆகுற?”

“அந்த பக்கம் வாதாடுறது யார்ன்னு தெரியும்ல.. ஜான் சார்.. நம்ம வயசு அவர் அனுபவம்.. அதான் கொஞ்சம் பயமா இருக்கு..” என்றவனின் குரலில் பயம் அப்பட்டமாக தெரிந்தது..

“அனுபவம், வயசு இதை எல்லாம் வெச்சு ஒன்னும் பண்ண முடியாது.. திறமை இருந்தா போதும்.. எனக்கு நம்ம திறமை மேல நம்பிக்கை இருக்கு.. நீ நெகட்டிவா திங் பண்ணாம கேஸ பத்தின டீடைல்ஸ் கலெக்ட் பண்ற வழிய பாரு..”

“என்னவோ நீ சொல்லுற. ஜான் சாரை எதிர்த்து மட்டும் நம்ம ஜெயிச்சுட்டா போதும்.. நம்ம பேமஸ் ஆகிடுவோம்..”

“அதெல்லாம் ஆகிடுவோம்... அதுக்கு முதல்ல நீ வேலையப் பார்க்கணும்..”
மதிய உணவைக் கூட உண்ணாமல் இருவரும் தீவிரமாக டிஸ்கஷனில் ஈடுபட்டிருந்தனர்.. நான்கு மணி ஆன சமயம் தான் இருவருக்குமே பசி எடுக்க ஆரம்பித்தது..

“சரி நீ கிளம்பு.. நாளைக்கு நிலத்தை நேர்ல இன்னொரு தடவை பார்த்துட்டு அடுத்து என்ன பண்ணலாம்ன்னு பார்ப்போம்..” மாறன் ஹரியிடம் கூற

“சரி மச்சான். நீயும் போய் சாப்டுட்டு மீதி வேலையை பாருடா..”

“ம் சரிடா.” என்றானே தவிர ஐந்தரை மணி ஆகியும் அங்கிருந்து அவன் நகர வில்லை.. சித்ரா மீண்டும் அவனை அழைக்க

“இந்த அம்மாக்கு ஒரு தடவை சொன்னப் புரியாது.. எரிச்சல் படுத்திகிட்டே இருப்பாங்க..” என்றவன் அவர் அழைப்பைத் துண்டித்துவிட்டு மணியை பார்த்துவிட்டு வீட்டிற்குப் புறப்பட்டான்.
வீட்டிற்கு வந்தவன் குளியலை போட்டுவிட்டு ப்ரெட் டோஸ்ட் செய்து அதை உண்டுவிட்டு காபியோடு பால்கனியில் சென்று அமர்ந்தான்.. எதிர் பிளாட்டில் கல்லூரி மாணவிகள் நான்கு பேர் வாடகைக்கு இருக்கின்றனர்.. அவர்களின் கத்தல் அவன் செவியை எட்டியது.

“இந்த பொண்ணுங்களோட தினமும் இதே தொல்லை தான்.. படிக்கவே படிக்காதுங்க போல.. எப்பப்பாரு ஆட்டம் பாட்டம்ன்னு கத்திக்கிட்டே இருக்காங்க..” அவர்களை வசைப்பாடிக் கொண்டிருந்தவனுக்கு அப்பொழுது தான் தாய் கூறிய பெண்ணின் புகைப்படம் நியாபகத்திற்கு வர காபியை ருசித்தவாறே வாட்சப்பில் உள்ள புகைப்படத்தைப் பார்த்தான்.. பார்த்தவுடன் அவனிற்கு திருப்தியாக இருந்தது. பெண்ணைப் பற்றிய விபரத்தைக் கேட்டுக் கொண்டு முடிவெடுப்போம் என்று எண்ணியவன் தாய்க்கு அழைத்தான்..

“சொல்லுடா நல்லவனே..”

“பொண்ணு போட்டோ பார்த்தேன்மா.. ஓகே.. பேர் என்ன? என்ன படிச்சுருக்காங்க? இப்போ என்ன பண்றாங்க? எந்த ஊர்? எல்லா டீடயில்சும் சொல்லுங்க..”

“பொண்ணு பேர் குகப்ரியா.. mba முடிச்சுட்டு சென்னைல தான் வேலை பாக்குறாள்... மதுரை சொந்த ஊர். அவங்க அப்பாக்கு அங்க சொந்தமா துணிக்கடை இருக்கு.. அம்மா ஹவுஸ் வைப்.. கூட பிறந்தது ஒரு தம்பி செகண்ட் இயர் படிக்கிறான்.. என் ப்ரெண்ட் பொண்ணு கல்யாணத்துக்கு போனேன்ல, அங்க தான் இந்தப் பொண்ணைப் பார்த்தேன்.. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.. என் தோழி மூலமாவே பொண்ணு வீட்லையும் பேசினோம்.. ஜாதகம் அனுப்புனாங்க.. காலைல தான் போய் பொருத்தம் பார்த்தோம்.. அமோகமா இருக்குன்னு ஜோசியர் சொல்லிருக்கார்.. அதான் மேற்கொண்டு உன்கிட்ட கேட்டுட்டு பேசுவோம்ன்னு இருக்கோம்..” விளக்கமாக கூறினார்..

“ஓகே மா.. பொண்ணு வீட்ல பிடிச்சுருக்கான்னு கேட்டுட்டு முடிவு பண்ணுங்க..”

“உனக்கு ஓகே தானேடா..”

“உனக்கு பிடிச்சுருக்குல அப்போ எனக்கு டபிள் ஓகே.. தாய் சொல்லைத் தட்டாதே.”

“நடிக்காதேடா டேய்..”

“என் அன்பை பார்த்து நடிக்கிறேன்னு சொல்லுறியே சித்து.. என் நெஞ்சு பொருக்குதில்லையே!!!”

“போதும் நிறுத்துடா.. நாங்க பொண்ணு வீட்ல பேசிட்டு சொல்லுறோம்..”

“இங்க சென்னைல தானே அந்த பொண்ணு இருக்கு.. நேர்ல பார்த்து பேச ஏற்பாடு பண்ணுங்க..”

“அவங்க வீட்ல ஒத்துப்பாங்களா என்னனு தெரியலை.. கேட்டு பாக்குறோம்..”

“சரிமா..” என்றவன் தந்தையுடன் சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்..
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#8
காதல் செய்வேன் கட்டளைப்படி..

காதல் 3

“எனக்கு என்னமோ இந்த இடம் ரொம்பப் பிடிச்சுருக்குங்க.. ஒரே பையன் வேற.. சென்னைல இருக்கார்.. குகாக்கும் கல்யாணத்துக்கு அப்பறம்
வேலைக்குப் போக வசதியா இருக்கும்.. அவரோட அக்கா டெல்லில டாக்டரா இருக்காங்களாம் ” சீதா ராஜனிடம் கூற, அவர் அமைதியாகவே இருந்தார்..

“என்னங்க உங்களுக்கு இதுல விருப்பம் இல்லையா? ரோகிணி அம்மா அவ்வளவு தூரம் சொல்றாங்க நல்ல இடமா தான் இருக்கும்.. ஜாதகம் வாங்குவோமே..” மீண்டும் சீதா வற்புறுத்த

“சரி வாங்குவோம்.. நானும் தெரிஞ்சவங்கக் கிட்ட மாப்பிள்ளையோட குடும்பத்தைப் பத்தி விசாரிக்கிறேன்..”

“உங்களுக்குச் சம்மதம் தானே.. ரொம்ப யோசிச்சிங்க.. அதான் கேக்குறேன்.” அவர் தயங்கிக் கொண்டே கேட்க

“ரோகிணியோட கல்யாணத்துலப் பார்த்துட்டு திடீர்னு கேக்குறாங்கன்னு சொன்னதும் யார் என்னன்னு தெரியாம எப்படி முடிவெடுக்கிறதுன்னு தான்யோசிச்சேன்.. வேற ஒண்ணுமில்லை..”
அதன்பின் பெண் மாப்பிள்ளை இருவர் வீட்டிலுமே தனித் தனியாக ஜோசியரிடம் சென்று பார்த்துவிட்டுப் பொருத்தம் இருந்த பின்பு இரு குடும்பத்தைப்பற்றியும் விசாரித்து, திருப்தியாக இருக்கவே
போட்டோவை இரு குடும்பங்களும் பரிமாறிக் கொண்டனர்.. இதற்கே ஒரு மாதம் சென்றது..

“பையன் பார்க்க நல்லா இருக்கார்.. குகாக்கு பொருத்தமா இருப்பார்..” மாறனின் புகைப்படத்தைப் பார்த்ததும் சீதாவின் பதில் இவ்வாறு இருந்தது..

“குகாக்கு அனுப்பிவிடு.. அவ பிடிச்சுருக்குன்னு சொன்னா தான் அடுத்த முடிவை எடுக்கணும்.. நீ அவளை வற்புறுத்தக் கூடாது..” ராஜன் மனைவியிடம் கூற,

“என்னமோ நான் சொல்லுறதை தான் உங்க பொண்ணு கேட்கிற மாதிரி பேசக் கூடாது.. அவ விருப்பம் தான் எப்பவுமே.. அதுக்கு நம்ம ரெண்டு பேரும்பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டிகிட்டு இருக்கோம்.. இருந்தும் உங்களுக்கு ரொம்பதான் ஏத்தம்..” முணுமுணுத்தவாறே மகனிடம் போட்டோவை கொடுத்து மகளிற்கு அனுப்பச் சொன்னார்..

“நீங்க அவகிட்ட பேசிடுங்க.. நான் சொன்னா எதாச்சும் சொல்லுவா..” கூறியவர் மகளிற்கு அழைத்து லவுட் ஸ்பீக்கரில் போட்டுவிட்டுக் கணவனிடம் போனைக் கொடுத்தார்.

“எப்படிமா இருக்க?”

“நல்லா இருக்கேன் ப்பா.. நீங்க எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன்டா.. சாப்டியா? வேலை எல்லாம் எப்படிப் போகுது?”

“ம் ஆச்சு ப்பா.. அது போகுது.. நீங்க எல்லாரும் என்ன பண்றீங்க?”

“ஹான் சும்மா தான்மா பேசிகிட்டு இருக்கோம்..” என்றவர் சற்று நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தார்.. பின்பு

“தம்பி உனக்கு ஒரு போட்டோ அனுப்பிருக்கான் பார்த்துட்டு பிடிச்சிருக்கான்னு சொல்லுமா..” என

“என்ன போட்டோபா?” என்றவள் ஹெட்போன் போட்டிருந்ததால் நெட்டை ஆன் செய்து கொண்டே கேட்டாள்..

“உனக்குப் பாத்திருக்க மாப்பிள்ளைமா..” என்றவர் பையனை பற்றிய விபரத்தைக் கூறினார்.. அவள் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க

“என்னமா உனக்கு விருப்பம் இல்லையா? பையனை பிடிக்கலையா?” இவர் கேட்க, சீதா வேகமாக “அவ பதில் சொல்லுறதுக்கு முன்ன நீங்களே எதுக்குப்பிடிக்கலையான்னு கேக்குறீங்க?” கணவனைத் திட்டியவர் குகாவிடம்

“நல்லா யோசிச்சுட்டு முடிவெடு.. மாப்பிள்ளை சென்னைல்ல தான் இருக்கார்.. நேர்ல பார்க்க முடியுமான்னு கேட்டாராம், உனக்கு அவரோட பேசிட்டு முடிவெடுக்கலாம்ன்னு தோணுச்சுனா நீ எப்போ ப்ரீயா இருப்பன்னு சொல்லு.. பையன் வீட்ல பேசிட்டு நாங்க சொல்லுறோம்..” குகா அப்பொழுதும்அமைதியாக இருக்க

“என்ன எதாச்சும் பதில் சொல்லு?” சீதா கேட்க

“யோசிச்சுட்டு சொல்லுறேன் மா..” என்றவள் அழைப்பைத் துண்டித்தாள்..
போனை வைத்தவள் யோசனையில் இருக்க அகல்யாவும்ரோகிணியும் என்னவென்று கேட்க அனைத்தையும் கூறினாள்.. ரோகிணியின் கணவர் வேலைவிஷயமாக ஒரு வாரம் வெளி ஊர் சென்றிருப்பதால் வீட்டில் தனியாக இருப்பதற்குப் பதில் தோழிகளுடன் முன்பு தான் தங்கி இருந்த ஹாஸ்டலில்இருந்து கொள்வதாகக் கணவனிடம் கூறிவிட்டு இங்கே வந்திருந்தாள்.

“ஹே செமடி.. நல்ல விஷயம் தானே.. நம்ம கேங்ல அடுத்தக் குடும்ப இஸ்திரி ரெடி ஆகப் போறாங்க..”அகல்யா கிண்டல் செய்தாள்.

“சந்தோசமான விஷயம் தானே.. இந்த விஷயம் எனக்கு முன்னமே தெரியும்.. எதுவும் முடிவாக முன்ன உன்கிட்ட சொல்ல வேண்டாம்ன்னு தான்விட்டுட்டேன்.. அம்மா என்கிட்ட கேட்டுட்டு தான் உங்க அம்மா கிட்ட பேசுனாங்க..சாரிடி..” –‘ரோகிணி’

“நீ என்னடி பண்ணுவ லூசு இதுக்கு ஏன் சாரி சொல்லுற..”

“அப்பறம் என்னடி ஏன் மூஞ்சியை இப்படி வெச்சிருக்க?” அகல்யா கேட்க “பயமா இருக்குடி..”

“மேரேஜ்ல இன்டிரெஸ்ட் இல்லாத மாதிரியே பில்டப் கொடுக்குற.. எப்படா கல்யாணம் செஞ்சு வைப்பாங்கன்னு தானே அடிக்கடி சொல்லுவ.. இப்போ என்னடி?” அகல்யா சிரிப்புடன் கூறினாள்.

“அது பேசும் போது நல்லா தான் இருக்கு.. நிஜமாவே கல்யாணம் குடும்பம்ன்னு சொன்னா ஒரு மாதிரி இருக்கு.. கொஞ்சம் பயமா, டென்ஷனா இப்படி என்னவோ போல..”முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு குகா கூற

“ஆஹான்.. குகாக்கு கூட வெட்கம் எல்லாம் வரும் போலையே.”

“நீ மூடு.. உன்கிட்ட போய்ச் சொன்னேன் பாரு என்னைச் சொல்லணும்.. உனக்கும்இப்படி ஒரு நாள் வரும்.. அன்னைக்கு என்கிட்ட தான்டிமவளே நீ வந்தாகணும்..”

“நாங்க எல்லாம் வேற லெவல்..” அகல்யா கூற

“தெரியும் தெரியும் உங்க லெவல்..”

“என்ன?” அகல்யா புரியாமல் விழிக்க

“ரொம்ப நடிக்க வேண்டாம்.. எனக்கு எல்லா விஷயமும் தெரியும்..”

“குகா..”

“நீயா சொல்லுவ சொல்லுவன்னு நானும் பார்க்கிறேன்.. நீ வாயவே திறக்க மாட்டுற.. ஒரு மாசமா என்கிட்ட இருந்து மறைக்கிற இல்லை.. இட்ஸ் ஓகே.. உன் பெர்சனல்..” என்றவள் அங்கிருந்து நகர

“என்னாச்சுடி?” ரோகிணி அகல்யாவிடம் கேட்டாள்..

“அது..” என்றவள் தயங்க, சரியாக அவளின் அலைப்பேசி அடித்தது.. கவின் தான் அழைத்தான்..

“போனை எடுடி..” ரோகிணி கூற

“இல்ல அப்பறம் பேசுறேன்..” என்றாள்.. மீண்டும் போன் அடிக்கவே ரோகிணி குழப்பமான முகத்துடனே அகல்யாவின் கையில் இருந்த அலைபேசியை வாங்கினாள்.. கை தெரியாமல் டச் ஆனதில் கால் கட்டாகி இருந்தது.. யார் அழைத்தார் என்று பார்ப்பதற்காக அவள் போனை ஓபன் செய்யப் பார்க்க அதில் புதிதாகப் பாஸ்வர்ட் போடப்பட்டிருந்தது..

“பாஸ்வார்ட் போட்டுருக்க.. என்ன புதுசா? இதுக்கு முன்ன நீ பாஸ்வர்ட் போட்டதில்லையே?”

“இதுக்கு முன்ன அவ சிங்கிள்.. இப்போ மிங்கிள் ஆகிட்டாளே சோ எல்லா ஆப்பும் லாக்ல தான் இருக்கும்..” குகா நக்கலாகக் கூற, ரோகிணிக்கு மேலும்மேலும் குழப்பமாக இருந்தது..

“என்ன குகா சொல்லுற? நம்ம அகல் மிங்கிள் ஆகிட்டாளா? யூ மீன் அவ லவ் பண்ணுறான்னு சொல்லுறியா?” என்றாள் அதிர்ச்சி விலகாமல்.

“நம்ம அகலா? யாரு அவங்களா? அது போன மாசம்.. இப்போ அவங்க வேற ஒருத்தரோட அகல்..” என்ற குகாவின் வார்த்தையில் குத்தல் அதிகமாகவே இருந்தது..

“என்னடி சொல்ற? எனக்கு ஒண்ணுமே புரியலை.. குழப்பமா இருக்கு.. எது சொல்றதா இருந்தாலும் தெளிவா சொல்லு..” நேரடியாக விஷயத்திற்கு வரமால் குகா சுற்றி வளைத்துப் பேசியதில் ரோகிணிக்குக் கடுப்பே வந்துவிட்டது.. அதை அவள் வார்த்தைகளிலும் காட்டினாள்.

“நான் சொல்ல என்ன இருக்கு? எதுவா இருந்தாலும் இனி அந்த மேடம் தான் சொல்லணும்.” என்று அகல்யாவைக் கைக்காட்டிவிட்டு மெத்தையில் தலையணையைச் சாய்வாக வைத்துக் கொண்டு கையில் புத்தகத்துடன் அமர்ந்துவிட்டாள்.

நடப்பது எதுவும் புரியாமல் இருவரையும் ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்த ரோகிணியும் அகல்யாவிடம் எதுவும் கேட்காது அவளின் மெத்தையில் சென்று அமர்ந்து கொண்டாள்.. அகல்யாவோ குனிந்த தலையை நிமிர்த்தாமல் வலது கையால் இடது கை விரலின் நகத்தைப் பிய்த்துக்கொண்டிருந்தாள்..

என்னவென்று அவர்களிடம் சொல்வது.. இவ்வளவு நாள் ஏன் மறைத்தாய் என்று கேட்டால் அப்பொழுது இந்த முகத்தை எங்கே வைத்துக் கொள்வது. ரோகிணியைச் சில வருடமாகத் தான் தெரியும்.. குகாவைப் பள்ளி முதலே தெரியும்.. இருவரும் கிட்டத்தட்ட பத்து வருடங்களாகத் தோழிகள். ug முடித்து pg entrance எழுதி ஒரே கல்லூரியை தேர்ந்தெடுத்து, விடுதியிலும் ஒரே அறை தான் வேண்டும் என்று ஹாஸ்டலிற்கு வந்த முதல் நாளே வார்டனுடன் வாக்குவாதம் செய்து ஒரே அறையை வாங்கினர்..மூன்று பேர் தங்கும் அறை இவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.. மூன்றாவது நபராக வந்தவள் தான் ரோகிணி..

அவளின் ug தோழிகள் வேறு கல்லூரிக்கு சென்றதால் இவள் தனியாக இங்கே வந்திருந்தாள்.. மூவர் இருக்கும் இடத்தில் ரோகிணியுடன் பேசாமல் எவ்வாறு இருப்பது? பொதுவான பேச்சுக்கள், கல்லூரிக்குச் செல்லும் போது அவளையும் உடன் அழைத்துச் செல்வது, உணவு உண்ண டைனிங் ஹாலிற்குச் செல்லும் போதும் தங்களுடனே அவளை வைத்துக் கொண்டனர்.. அப்படியே அவர்களின் நட்பு இறுகியது.. இப்பொழுது மூவரும் நெருங்கிய தோழிகள் ஆகினர்.. வேலையுமே இருவருக்கும் ஒரே கம்பெனியில் கிடைத்தது..

ரோகிணியின் மேல் இருவருக்கும் அன்பு அதிகமாக இருந்தாலும், அகல்யா குகாவிற்குமான பாண்டிங் மிகவும் இறுக்கமானது.. இருக்காதா பின்னே பத்து வருட நட்பு..
எத்தனை வருட நட்பாக இருந்தாலும் காதல் என்ற ஒன்று வந்தவுடன் நண்பர்களுக்குள் சற்று விரிசல் வந்துவிடுகிறது. அதே தான் இங்கும் நடந்தது..

பத்து நிமிடத்திற்கும் மேலாக அந்த அறையில் பேன் ஓடும் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. உள்ளே குற்ற உணர்வு இருந்த போதிலும், தோழிகளிடம் தனது நிலையைச் சொல்ல வேண்டும் என்று எண்ணியவள், மெதுவாக கட்டிலில் இருந்து இறங்கி குகாவின் அருகில் சென்றாள்..
அவள் தனது அருகில் வந்ததை உணர்ந்தாலும் புத்தகத்தில் இருந்து பார்வையை விளக்கவில்லை குகா..

“குகா” என்றாள் மெல்ல

“ம்” என்றவள் அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை..

“குகா..” என்றாள் மீண்டும்

“சொல்லு கேட்டுட்டு தான் இருக்கேன்..”
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#9
“சாரி..”

“எதுக்கு?” புத்தகத்தில் இருந்து கண்ணை எடுத்தவள் அகல்யாவிடம் கேட்க அவள் கலங்கிய கண்களில் இருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர் கன்னம் நனைத்தது..

“ப்ச் இப்போ எதுக்கு அழற?” அதட்டலாக வெளி வந்தன குகாவின் வார்த்தைகள்.. சற்று தள்ளி இருந்து இவர்களின் சம்பாஷணையைப் பார்த்துக்கொண்டிருந்த ரோகிணியும் அகல்யாவின் கண்ணீரை கண்டதும் அவர்கள் அருகில் வந்தாள்.

“இப்படிப் பண்ணாதே குகா.. கஷ்டமா இருக்கு..” பேச பேச கண்ணீர் வந்து கொண்டே இருந்தது..

“எதுக்கு அழுகுறன்னு கேட்டா? இன்னும் அழுகுற.. என்ன உன் பிரச்சனை?” குகாவின் வார்த்தையில் சூடு கூடிக் கொண்டே இருந்தது.. அது அகல்யாவின் கண்ணீரை மேலும் கூட்டியது.. அதைப் பார்க்க ரோகிணிக்கு கஷ்டமாக இருக்க

“குகா.. அவளே அழறா.. நீ ஏன் இன்னும் திட்டுற.. விடு..” என்றாள்

“நான் என்ன பண்ணேன்.. இப்போ எதுக்கு அவளுக்குச் சப்போர்ட்டா என்கிட்டப் பேசிக்கிட்டு இருக்க... நான் பாட்டுக்கு புக் தானே படிச்சுட்டு இருக்கேன்.. அவளா வந்து சாரி சொல்லுறா, அழுகுறா.. அதுக்கு நான் பொறுப்பாக முடியுமா?” என்றதும் அகல்யாவின் இடம் இருந்து பெரிய கேவல் ஒன்று வெளிப்பட்டது..

“உப்.. இவ அழுது முடிச்சதும் என்னைக் கூப்பிடு.. நான் வெளிய போறேன்..” என்று எழப்போனவளை தடுத்து நிறுத்தினாள் அகல்யா..

“என்னைக் கொஞ்சம் பேச விடு..” ஒரு கையால் குகாவை பிடித்தவள் மறுகையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தாள்.

“சரி பேசு.” என்றவள் தோழியின் கையை விலக்காமலே கட்டிலில் அமர்ந்தவள் அகல்யாவையும் அமர வைத்தாள்.

“நீயும் உட்காருடி உனக்கு வேற தனியா சொல்லனுமா?” ரோகிணியிடம் கூற

“என்னை எதுக்குத் திட்டுற எருமை.. இருக்கு உனக்கு..” திட்டிக் கொண்டே அவளும் அமர்ந்தாள்.. சிறிது நேரம் ஆகியும் அகல்யா வாயைத் திறக்கவில்லை என்றதும் குகா

“பேசணும்னு சொல்லிட்டு அமைதியா இருந்தா என்ன அர்த்தம்.. டின்னர் டைம் வேற நெருங்கிடுச்சு.. சீக்கிரம் சொல்லு..” என்க

“தின்னி மாடு.. அவ எவ்வளவு பீல் செஞ்சுகிட்டு இருக்கா.. உனக்குச் சாப்பாடு கேட்குதா...”–‘ரோகிணி’

“எனக்குச் சோறு தான் முக்கியம்..” என்றாள் அலட்டிக் கொள்ளாமல்.

“சாரி.. உங்க ரெண்டு பேர்கிட்டையும் சொல்லக் கூடாதுன்னு இல்லை.. என்னமோ ஒரு தயக்கம்..”

“என்னவாம்டி இவளுக்கு?” ஒன்றும் தெரியாதவள் போல் ரோகிணியிடம் கேட்க, ரோகிணிக்கும் அதே தான்.. என்ன பேசுகிறாள் அகல்யா என்றே புரியவில்லை...ஆரம்பம் முதலே ஏதோ சொல்கிறார்கள் இருவரும் ஒன்றும் விளங்க தான் இல்லை.. அவள் பாவமாக இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இப்படிப் பண்ணாதே குகா.. இட்ஸ் ஹர்ட்டிங்..” அகல்யாவிற்குக் குகாவின் இந்தச் செய்கையைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை..

“எதுவா இருந்தாலும் நேர பேசு.. இட்ஸ் ஹர்ட்டிங்.. சாரி.. இதெல்லாம் எனக்கு வேண்டாம்..”

“...”

“ஓகே பைன்... இப்படியே உட்கார்ந்திரு.. நான் புக் படிக்கிறேன்..” புத்தகத்தை எடுக்கக் கையை நீட்டினாள்.. அவள் கையைப் பட்டெனத் தட்டிவிட்டாள் ரோகிணி..

“கடுப்பேத்துறீங்கடி.. கொஞ்ச நேரம் முன்ன வரை நல்லா தானே இருந்தோம்.. இப்போ எதுக்கு இப்படிப் பண்றீங்க.. ஹேய் நீ கவின்ன லவ் பண்றியா?”அகல்யாவைப் பார்த்து நேரடியாகக் கேட்டாள். அவள் அமைதியாக இருக்க

“அகல்.. வாயை திறந்து சொல்லு குகா சொல்லுறது எல்லாம் உண்மையா?”

“ம்..” என்ற மெல்லிய முனங்கல் மட்டுமே அகல்யாவிடம் இருந்து வந்தது..

‘இப்பயாச்சும் நம்புறியா?’ என்கிற ரீதியில் ரோகிணியைப் பார்த்தாள் குகா.

“எங்ககிட்ட ஒரு வார்த்தைக் கூடச் சொல்லல.. எத்தனை நாளா நடக்குது இது?” தோழி தங்களிடம் இருந்து இதை மறைத்து விட்டாளே என்கிற ஆதங்கம் நிரம்பிய குரலில் ரோகிணி கேட்க

“உங்ககிட்ட மறைக்கணும்னு நான் நினைக்கல. ஒரு மாசமா தான் லவ் பண்றோம்.. சொல்லணும்னு நினைப்பேன்.. அப்பறம் எப்படிச் சொல்லுறதுன்னு ஒரு மாதிரி இருக்கும்.. ரெண்டு மூணு தடவை சொல்ல ட்ரை பண்ணேன். என்னால முடியலை.. அயம் சாரி..” என்றாள் உள்ளே சென்ற குரலில்..

“என்ன சொல்ல முடியலை.. லவ் தானே பண்ற.. அதை ப்ரெண்ட்ஸ் கிட்ட மறைக்க என்ன இருக்கு? நான் ஸ்ரீயை லவ் பண்றேன்னு உங்க கிட்ட அவருக்கு ஓகே சொல்லுறதுக்கு முன்னமே சொன்னேன் தானே.. நாங்க என்ன உங்க வீட்டுல போட்டுக் கொடுக்கப் போறோமா? நீ காதலிக்கிறவன் நல்லவனா இருந்தா நாங்களே உன் காதலுக்குச் சப்போர்ட் செய்வோம் தானே.. எங்களை நீ இவ்வளவு தான் புரிஞ்சு வெச்சுருக்கியா? என்னைவிடு, குகா உனக்கு பத்து வருஷமா ப்ரெண்ட் அட்லீஸ்ட் அவகிட்டயாச்சும் சொல்லிருக்கலாம்ல..”

“நீ வேற குகா வேற இல்லை எனக்கு.. ரெண்டு பேருமே என் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் தான்.. எனக்கு எது தடுத்துச்சுன்னு தெரியலை... சாரிய தவிர வேற என்ன சொல்லுறதுனும் எனக்குத் தெரியலை..” என்றவளின் கண்களில் மறுபடியும் கண்ணீர் வந்தது..

அங்கே அசாத்திய அமைதி நிறைந்திருந்தது.. ரோகிணிக்குக் கண்மண் தெரியாத அளவிற்குக் கோபம்.. குகா முதலில் கூறிய பொழுது கூட ஏதோ கவினையும் அகல்யாவையும் வைத்து விளையாடுகிறாள் என்று தான் நினைத்தாள்.. உண்மையாகவே காதலாக இருக்கும் என்று அவள் நினைக்கவில்லை.. இதற்கு மேல் பேசினால் இருக்கிற கோபத்தில் எதையாவது சொல்லி அகல்யாவை காயப்படுத்தி விடுவோமோ என்று அமைதியாக இருந்தாள்..

“ஓகே சாப்பிட போலாமா?” என்றவாறே மூவரின் ப்ளேட்டையும் எடுத்துக் கொண்டே கேட்டாள் குகா..

“குகா.. இங்க இவ்வளவு பிரச்சனை போயிட்டு இருக்கு.. கூலா சாப்பிடலாமான்னு கேக்குற?” –‘ரோகிணி’

“இதுல என்ன பிரச்சனை இருக்கு.. அகல் கவின் நல்ல பேர்.. காதலுக்கு எதிர்க்கிற பேமிலியும் இல்ல அகலோட வீட்டில.. இதுல எங்க இருந்து பிரச்சனை வருது..”

“அவ நம்மகிட்ட இருந்து இந்த விஷயத்தை மறைச்சிருக்காடி.. எனக்கு அவ்வளவு கோபம் வருது.. உனக்கு வரலையா?”

“கோபப்படுற அளவுக்கு ஒன்னும் இல்லை.. ஆயிரம் தான் குளோசா இருந்தாலும் எல்லாருக்கும் ஒரு பர்சனல் இருக்கும்.. அகல் க்கு இது பர்சனல்.. ஏன் சொல்லலைன்னு நம்ம கேள்வி கேட்க முடியாது..”

“அப்போ எதுக்குடி இவ்வளவு நேரமா அவளைக் குத்திக் குத்திப் பேசிக்கிட்டு இருந்த?”

“அவ வாய்ல இருந்து உண்மையை வர வைக்கத் தான்..”

“என்னமோ சொல்லுற? ஒன்னும் புரியலை. ஆமா உனக்கு எப்போ இந்த விஷயம் தெரிஞ்சது?”

“ரொம்ப முக்கியம்.. வாங்கடி சாப்பிட போகலாம்.. பசிக்குது.. வந்து மத்ததைப் பேசலாம்..”
இருவரையும் அடுத்துப் பேசவிடாமல் நகர்த்திக் கொண்டு டைனிங் ஹாலிற்குச் சென்றாள்.. மூன்று சப்பாத்திகளை நன்றாக அவள் உண்டு கொண்டிருக்க மற்ற இருவரும் கொறித்துக் கொண்டிருந்தனர்.. அவர்கள் உண்ணவில்லை என்பதைக் கண்டும் காணாமல் இருந்து கொண்டாள் குகா..
உணவை முடித்துக் கொண்டு மீண்டும் மூவரும் மாநாடு போட்டு அமர்ந்தனர்..

“குகா.. என்னைத் திட்டு, சண்டைப் போடு, ஏன் அடிக்கக் கூடச் செய்.. நீ என்னமோ பண்ணு நான் கண்டுக்க மாட்டேன் அப்படின்னு இருக்காதே.. ப்ளீஸ்..” அகல்யா மன்றாட

“அவளுக்குச் சொன்னது தான் அகல் உனக்கும்.. நாங்க ரெண்டு பேரும் உனக்குப் பெஸ்ட் ப்ரெண்ட்சா இருக்கலாம்.. அதுக்காக நீ எல்லாத்தையும் எங்ககிட்ட சொல்லனும்னு அவசியம் இல்லை.. இந்த விஷயம் எனக்குப் பத்து நாளைக்கு முன்னாடியே தெரியும்..

தெரிஞ்சதும் எனக்கு உன்மேல கோபம் வந்தது.. பேசக் கூடாதுன்னு எல்லாம் நினைச்சேன்.. கொஞ்சம் பொறுமையா யோசிச்சுப் பார்த்ததும் தான் புரிஞ்சது இது உன்னோட பெர்சனல்.. அதைச் சொல்லுறதும் சொல்லாமல் இருக்குறதும் உன் இஷ்டம்ன்னு..

இந்தப் பத்து நாளில உன்கிட்ட நான் வித்தியாசமா பேசிருக்கேனா? எப்பவும் போலத் தானே நடந்துகிட்டேன்.. ஸ்டில் நான் அப்படித் தான் இருக்கேன்..உனக்குக் கில்டி கான்சியஸ் அதான் நான் உன்னைக் கண்டுக்காத மாதிரி இருக்கேன்னு தோணுது.. ஜஸ்ட் ரிலாக்ஸ்... நீங்க ரெண்டு பேரும் சேர்ந்தா எனக்கு ரொம்பச் சந்தோஷம்..” என்றாள் புன்னகையுடன்..

“குகா.. நான்.. சாரி..”

“அடடா... இவ்வளவு சொல்லுறேன் திரும்ப ஆரம்பிக்காதே.. ஓடிடு.. அங்க பாரு அவ தான் கோபமா இருக்கா... அவளைப் போய்ச் சமாதானப் படுத்து..” ரோகிணியைக் காட்டி அவள் கூற

“நிஜமா?”

“பத்து வருஷமா என்னோட இருக்க.. என்னை நீ என்ன புரிஞ்சு வெச்சுருக்க? கோபம் எல்லாம் இல்லைடி.. ஆரம்பத்துல கஷ்டமா இருந்தது தான். எல்லாவிஷயத்தையும் எல்லார் கிட்டையும் சொல்லனும்னு அவசியம் இல்ல.. அது யாரா இருந்தாலும்.. உனக்குத் தெரியாம எனக்கும் futureல பெர்சனல்வரலாம்.. எல்லா ரிலேஷன்ஷிப்லையும் அப்படித் தான்.. ஓபன் புக்கா யாராலையும் இருக்க முடியாது..” என்று நீண்ட விளக்கம் கொடுத்த குகா அறியவில்லை, பின் நாளில் இதே விஷயத்திற்காகத் தன்னுடைய சந்தோசத்தையே இழக்கப் போகிறாள் என்று..

“சரி எங்க லவ் ஸ்டோரிய சொல்லுறேன்..” அகல்யா ஆரம்பிக்க

“வேண்டாம்.. எங்கக் கிட்ட இருந்து மறைக்கணும்னு நீ முடிவு பண்ணதை தெரிஞ்சுக்கணும்னு எனக்குத் தோணலை..” ரோகிணி பட்டென்று சொல்லிவிட, அகல்யாவிற்கு ஆயாசமாக இருந்தது..

“ரோகி... அடுத்து நீயா? ப்ளீஸ்டி..”

“எனக்குக் கோபம் தான் அகல்.. அதுக்காக உன்னோட பேசாம எல்லாம் இருக்க மாட்டேன்.. இந்த விஷயத்தை மறந்துடுவோம்.. வா சீரியலை கண்டினியூ பண்ணுவோம்.” என்றவள் மடிக்கணினியை இயக்க ஆரம்பித்தாள்.

ஒருத்தி கோபம் இல்லை என்கிறாள் ஆனால் கோபமாக உள்ளது போலவே உள்ளது அவளின் செய்கைகள்,
இன்னொருத்தி கோபம் தான் என்று வெளிப்படையாகக் கூறிவிட்டாள், இருந்தும் அவளைச் சமாதானப்படுத்தும் வழி தெரியாது விழி பிதுங்கி நின்றாள் அகல்யா. ‘லவ் பண்றவங்க எல்லாம் சந்தோசமா இருக்காங்க.. எனக்கு மட்டும் ஏன்டா இப்படி..’ என்று எண்ண மட்டுமே முடிந்தது அகல்யாவால்...
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#10
காதல் செய்வேன் கட்டளைப்படி...

காதல் 4

முதல் நாள் தோழியுடன் நடந்த சண்டையில் மாறனின் புகைப்படத்தை அவள் பார்க்கவில்லை.. தாய் கூறும்போது நெட்டை ஆன் செய்தவள், மாப்பிள்ளை என்று சொன்னதும் போட்டோவை டவுன்லோட் செய்யாமல் வைத்திருந்தாள்.. பேசி முடித்துவிட்டு அதைப் பார்ப்போம் என்று அவள் நினைக்க அதன் பின் அகல்யாவுடனான பேச்சு வார்த்தையில் மாறனை அவள் மறந்திருந்தாள்..

அடுத்த நாள் மாலை தான் அவளால் மாறனின் புகைப்படத்தைப் பார்க்க முடிந்தது.. பார்ப்பதற்கு அழகாக இருந்தான்.. அவளிற்குப் பிடித்திருந்தது.. நேரில் பார்த்து பேசிவிட்டு ஒரு முடிவெடுப்போம் என்று நினைத்தவள் தந்தைக்கு அழைத்து விபரத்தைக் கூறினாள்.. அவரும் மாறனின் வீட்டில் கேட்டுவிட்டு மறுநாள் இருவரையும் அருகே இருந்த மாலில் சந்திக்குமாறு கூறினார்..

“இந்த டிரஸ் போடு.. அது ரொம்பச் சிம்பிளா இருக்கு..” குகா கையில் வைத்திருந்த உடையை வாங்கிவிட்டு வேறு உடையை அவள் கையில் கொடுத்தாள் அகல்யா..

“அகல்.. இது கிராண்டா இருக்கு. functionக்கு வியர் பண்ற மாதிரி. ஜஸ்ட் அவரைப் பார்த்து பேசப் போறேன்.. அதுக்கு ஏன் பொண்ணு பார்க்க போற மாதிரி நீ என்னை ரெடி பண்ற..”

“கொஞ்சம் அழகா போனா தானே அவருக்கும் உன்னைப் பிடிக்கும்..”

“அப்போ மேக் அப் போட்டா தான் நான் அழகா இருப்பேன்னு சொல்லவரியா?” என்றவள் தோழியை முறைத்தாள்.

“உனக்கு எல்லாம் ட்ரெஸ் செலெக்ட் செஞ்சு கொடுத்தேன் பாரு.. என்னைச் சொல்லணும்.. என்னத்தையோ போட்டுக்கிட்டுப் போ” அவள் கழுத்தை நொடித்துக் கொண்டு போக, குகா சிரிப்புடனே டாப் லெகின் ஒன்றை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குச் சென்றாள்.

குளித்து விட்டு தலையைத் துவட்டியவள் முக அலங்காரத்தை முடித்துவிட்டு தலையை ப்ரீ ஹேர் விட்டுச் சென்டரில் கிளிப்பை போட்டாள்.
“குகா.. முதல் முறையா கல்யாணத்துக்குன்னு ஒருத்தரை பார்க்கப் போற.. இப்படித் தலைவிரி கோலமா போகாதடி..” ரோகிணி கூற

“ஓய் மாமி.. ஒரு காலத்துல நீயும் லூஸ் ஹேர் தான் அதிகமா விடுவ.. இன்னைக்கு ஐயர் வீட்டு மருமகள் ஆனதும் ஓவரா ஆச்சாரம் பேசுறியா?” அகல்யா, ரோகிணியைக் கிண்டல் செய்ய, குகா சிரித்துக் கொண்டே

“இந்த ட்ரேசுக்கு ப்ரீ ஹேர் தான் ரோகிணி சூட் ஆகும்.. உனக்கே தெரியும் நான் இந்த மாதிரி சென்டிமெண்ட் எதுவும்
பார்க்க மாட்டேன்.. சாரி நீ சொல்றத என்னால செய்ய முடியாது..” என்றவள் கைப்பையை எடுத்துக் கொண்டு தோழிகளிடம்

“மூணு மணி ஷோக்கு டிக்கெட் வாங்கி வெச்சுடுறேன்.. ரெண்டரைக்கு அங்க இருக்க மாதிரி வந்துடுங்கடி.. லேட் ஆக்காதிங்க..” என

“முதல்ல போய் அந்தப் பையனைப் பார்க்குற வேலையைப் பார்.. அதைப் பத்தின டென்ஷனே இல்லை.. படத்துக்குப் போற நினைப்பு தான் அதிகமா இருக்கு..” அகல்யா திட்டினாள்.

“இன்டர்வியூக்கு போற மாதிரி பில்டப் கொடுக்குறாள்.” என்றவள் இருவரிடமும் விடைப்பெற்றுக் கொண்டு மாலிற்குச் சென்றாள்.
புட்கோர்ட்டில் இவளிர்காக மாறன் காத்திருந்தான்.. இவள் உள்ளே நுழைந்ததும் தெரியும்படியான இடத்தில் தான் அவன் அமர்ந்திருந்தான்.. அவனைக் கண்டவள் அவன் அருகில் சென்று

“ஹாய்..” என்று புன்னகைத்தாள்.. அவனும் பதிலிற்கு “ஹலோ..” என்க

“சாரி.. ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா?” என்றாள்.

“இல்ல ஜஸ்ட் இப்போ தான் வந்தேன்.. நீங்க என்னை ஈசியா கண்டுபிடிக்கணும்னு தான் பிரன்ட்ல உட்கார்ந்தேன்.. வாங்க அந்த சைட் உட்காரலாம்..” என்று நடுவிருக்கை ஒன்றை அவன் காட்ட, அவன் பின்னோடு சென்று மாறனின் எதிரில் அமர்ந்தாள்.

குடிப்பதற்கு ஜூசை ஆர்டர் செய்துவிட்டு இருவரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தனர்.. மாறனே அந்த அமைதியைக் கலைத்தான்.

“என்னைப் பத்தி உங்ககிட்ட என்ன சொன்னாங்கன்னு தெரியலை.. சோ நான் ஒரு இன்ட்ரோ கொடுத்துடுறேன்..” என்றவன் அவனைப் பற்றி மேலோட்டமாகச் சொன்னான்.. அதைக் கேட்டவளிற்குச் சிரிப்பை அடக்கச் சற்று சிரமமாகவே இருந்தது. அவள் சிரிப்பைப் பார்த்தவன்

“என்னடா இன்டர்வியூல பேசுற மாதிரி ஸெல்ப் இன்ட்ரோ கொடுக்குறானேன்னு தானே சிரிக்கிறீங்க..” என, இப்பொழுது இவள் வாய்விட்டே சிரித்தாள்..

“சாரி சாரி..” என்றவள் சிரிப்பை அடக்கிக் கொண்டு “நான் கிளம்பும் போது என் ப்ரெண்ட்ஸ் இந்த ட்ரெஸ் போடு, இப்படிப் பேசு, அப்படிப் பேசுன்னு இன்டர்வியூக்கு போற முன்ன சொல்லிக் கொடுக்கிற மாதிரியே பேசுனாங்க.. இங்க வந்தா நீங்களும் இன்டர்வியூல உட்காந்திருக்கப் பீல் கொடுத்தீங்களா அதான் சிரிச்சுட்டேன்.. சாரி..” என்றாள்.

“ஹாஹா.. இட்ஸ் ஓகே. உங்களைப் பத்தி அப்போ நீங்க சொல்ல மாட்டீங்க அப்படித் தானே..”

“என் போட்டோ காட்டி என்னைப் பத்தின டீடைல்ஸ் சொல்லிருப்பாங்க தானே..”

“சொன்னாங்க தான்..”

“தென்..”

“சென்னைல எத்தனை வருஷமா இருக்கீங்க.. காலேஜ் இங்க தான் படிச்சீங்களா?” என்றான்

“த்ரீ இயர்சா இருக்கேன்.. ug மதுரைல, pg சென்னைல பண்ணினேன்..”
வேற என்ன கேட்பது என்று அவன் யோசிக்க,

“லாயர் தானே நீங்க?” என்றாள் அவள் சந்தேகமாக

“ஏங்க உங்களுக்கு இப்படி ஒரு டவுட்? நான் லாயர் தான்.. வேணும்னா என் ஐடி கார்ட் காட்டட்டுமா?” என

“லாயர் எல்லாம் ரொம்பப் பேசுவாங்க. நீயும் ரொம்பப் பேசுவ உங்க ரெண்டு பேருக்கும் மேட்ச் ஆகும்ன்னு என் ப்ரெண்ட் சொன்னா.. நீங்க என்னடானா சைலென்ட் கேரக்டரா இருக்கீங்களே?”

“ஆப்போசீட் தான் அட்ராக்ட் பண்ணும்.. அண்ட் நான் வெளிய தான் லாயர்.. வீட்ல வெறும் மாறன் தான்..”

“உங்க நேம் நல்லா இருக்கு.. பரிதி மாறன்.. தமிழ் பேர் எனக்கு ரொம்பப் பிடிக்கும்..”

“தேங்க்ஸ்..” என்றான் சிரிப்புடன்..
அவர்கள் ஆர்டர் செய்திருந்த ஜூஸ் வரவே இருவரும் அதை அருந்திக் கொண்டே பேசிக் கொண்டிருந்தனர்..

“ஓகே.. எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு.. உங்க பதில் பாசிடிவா இருந்தாலும் சரி நெகடிவா இருந்தாலும் சரி என்கிட்டையே சொல்லுங்க..” மாறன் பட்டென்று கூறினான்..
அவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்த குகாவிற்கு இப்பொழுது பதில் சொல்ல நா வரவில்லை..

“என்னாச்சு?”

“...”

“உங்க மவுனத்தை நான் சம்மதம்னு எடுத்துக்கணுமா? இல்லை?” என்று அவன் இழுக்க, அவள் சிரித்துக்கொண்டே தலை ஆட்ட அவனது உதட்டிலும் புன்னகை அரும்பியது..

இருவரும் சிறிது நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் புட்கோர்ட்டில் இருந்து வெளியே வந்தனர்..

“எதுல வந்த? நான் உன்னை டிராப் பண்ணவா?” அவன்கேட்ட பின்பே தோழிகளிடம் படத்திற்குச் செல்வோம் என்று கூறியது அவளிற்கு நியாபகம் வந்தது.. அவனுடன் பேசிக் கொண்டிருந்ததில் அவள் டிக்கெட் எடுக்க மறந்திருந்தாள். ‘ஈவ்னிங் ஷோவுக்குப் போனா ஹாஸ்டல் போக லேட் ஆகிடுமே?’ மேலும் மாறனுடன் செல்லும் இந்த நேரத்தை இழக்கவும் அவள் விரும்பவில்லை..

“ஸ்கூட்டில வந்தா டிராபிக்ல லேட் ஆகும்ன்னு ட்ரைன்ல வந்தேன்..”

“சரி என்னோட வா..” என்றவன் அவளை அவனின் பைக்கில் ஹாஸ்டலில் விட்டான்.. அவன் பைக்கை பார்க்கிங்கிலிருந்து எடுத்து வர சென்ற சமயம் தோழிகளுக்குப் போன் செய்து டிக்கெட் எடுக்கவில்லை.. இருவரும் கிளம்பி வர வேண்டாம் என்று கூறினாள்.

முகம் கொள்ளா புன்னகையுடன் அறைக்குள் நுழைந்த குகாவைப் பார்த்த தோழிகள் இருவருக்கும் அவளின் மகிழ்ச்சியின் காரணம் புரிந்தது..

“என்ன மேடம் முகம் ஒரே பிரகாசமா இருக்கு..” அகல்யா கிண்டலாகக் கூற

“ப்ச் போடி..” என்றவள் வெட்கத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“பார்டா வெட்கத்தை.. என்ன எல்லாம் ஓகே ஆகிடுச்சா?”

“ம்” என்றவள் தோழிகளை நிமிர்ந்து பார்க்கவில்லை..

“ரோகிணி நீ கூட இவ்வளவு வெட்கப்படலையேடி. கத்துக்கோ என் செல்லத்துகிட்ட இருந்து..”

“சும்மா இருடி..” அகல்யாவிடம் கூறிய ரோகிணி “அம்மா அப்பா கிட்ட சொல்லிட்டியாடி?” என

“ஸ்.. அதை மறந்துட்டேன்..” என்றவள் வேகமாகப் போனை எடுத்தாள்..

“பாருடி.. முதல் தடவை அவரைப் பார்த்துட்டு வந்ததுக்கே அம்மா அப்பா ப்ரெண்ட்ஸ் எல்லாரையும் மறந்துட்டாங்க..
மேரேஜ் அப்பறம் நம்ம ரெண்டு பேரையும் யாருன்னு கேட்பா போலையே..” அகல்யா கூற

“உண்மைடி. இவ செஞ்சாலும் செய்வா..” ரோகிணியும் ஒத்து ஊதினாள்.

“போங்கடி..” என்றவள் போனை எடுத்துக் கொன்டு சற்றுத் தள்ளி நின்று தாயுடன் பேசினாள்.
இருவீட்டு பெரியவர்களுக்கும் அவ்வளவு மகிழ்ச்சி.. அந்த மாதத்திலே ஒரு நல்ல நாளில் பெண்ணை நேரில் பார்த்துவிட்டுத் திருமணத்திற்கான நாளை குறிப்போம் என்று முடிவு செய்தனர்..
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#11
மாறனின் வீட்டில் இருந்து அன்று குகாவைப் பார்க்க வந்திருந்தனர்.. இரண்டு நாட்கள் லீவில் குகாவும் மதுரைக்கு வந்திருந்தாள்..

“குகா இந்தப் புடவைல அழகா இருக்கடா” புடவையும் மல்லிகைப்பூவும் வைத்து பார்ப்பதற்கு அம்சமாக இருந்த மகளைப் புகழ்ந்த சீதா,

“நைட் சுத்திப் போடணும்..” என்று திருஷ்டி கழித்தார்..
மாறன் அன்று வரவில்லை.. சித்ரா சுதாகரன், மாறனின் அக்கா மாமா மற்றும் சுதாகரனின் சகோதரரின் குடும்பம் வந்திருந்தது.. வந்தவர்களுக்குக் காபி கொடுத்து பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி வாங்கினாள் குகா..
மாறனின் அக்கா சிந்து குகாவின் தலையில் மல்லிகையை வைத்துச் சம்மந்தத்தை உறுதி செய்துக் கொண்டனர்..

அவர்கள் வழக்கத்தில் பூ வைப்பது மட்டுமே, நிச்சயம் திருமணத்திற்கு முதல் நாள் மாப்பிள்ளை அழைப்புடன் சேர்த்துச் செய்வார்கள் என்பதால் பூவை மட்டும் வைத்தனர்.. சித்ரா குகாவுடன் நன்றாகப் பேசினார்..
குகாவும் அவருடன் நன்றாகப் பேச, அவருக்கு மிகுந்த சந்தோஷம்..

“சீக்கிரம் உன்னை நம்ப வீட்டுக்குக் கூட்டிட்டு போகணும்” என்று அவள் கன்னம் கிள்ளிக் கொஞ்சினார்..
திருமணத் தேதியை மாறனுடன் கலந்தாலோசித்துச் சொல்வதாகக் கூறிவிட்டு அவர்கள் புறப்பட்டனர்.. அவர்கள்சென்றவுடன் புடவை மாற்றிவிட்டுக் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தாள்.. இந்த நிமிடம் அவளிற்கு மாறனுடன் பேச வேண்டும் போல் இருந்தது.

மாலில் சந்தித்தப் பின்பு இருவருமே போனில் பேசிக் கொள்ளவில்லை. இருவருமே நம்பரை முதலில் மாற்றிக் கொள்ளவில்லை. “அவரே கூப்பிடட்டும்” என்று குகாவும் வேலைகளை முடித்தப் பின் பேசிக் கொள்ளலாம் என்று மாறனும் நினைத்திருந்தனர்..

இப்பொழுது குகாவிற்கு நம்பர் இல்லாததால் போன் செய்ய முடியாமல் கவலையாக இருந்தது.
‘இப்போ அப்பா கிட்ட போய்க் கேட்டா என்ன நினைப்பார்.. ஒரு மாதிரி இருக்கே.. தம்பி கிட்டசொல்லி அப்பா மொபைல இருந்து நம்பர் எடுத்து தர சொல்லுவோமா? ஐயோ வினையே வேண்டாம்.. உடனே போட்டுக் கொடுத்துடுவான்.. வேற என்ன பண்ணலாம்? நான் தான் பொண்ணு வெட்கபட்டுகிட்டு போன் நம்பர் வாங்கமா வந்தேன். அவனுக்கு என்ன? பூ வைக்கிற function நல்ல படியா முடிஞ்சதான்னு அட்லீஸ்ட் கேட்கலாம் இல்ல.பெரிய வக்கீல்.. பொண்ணுகிட்டப் பேச கூடத் தெரியலை.. இவன் எப்படிக் கோர்ட்ல வாதாடுரானோ?’ என்று யோசித்துக் கொண்டே இருந்தாள்.

அவள் மதுரையில் இருந்த ரெண்டு நாட்களுமே நம்பரை எப்படிக் கேட்பது என்று யோசனையிலேயே கழிந்தது.. பின்பு‘அவனுக்கா தோணும் போது உன்னோட பேசட்டும்.. அவன் ஜாலியா வேலையைப் பார்த்துகிட்டு இருக்கான்.. உனக்கு மட்டும் என்ன அவனோட நினைப்பு.. சும்மா இரு’ என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டாள்.
ஒரு வாரக் காத்திருப்புக்கு பின்பு அவளை அழைத்தான் பரிதிமாறன்..
புது எண்ணில் இருந்து வந்த நம்பரைப் பார்த்துவிட்டு அவன் தானே என்று எதிர்பார்ப்புடனே எடுத்த குகாவிற்கு அவன் தான் என்றதும் சந்தோசமாக இருந்தது. அவன் “ஹலோ” என்றதும்

“சொல்லுங்க சார். ஒரு வழியா சாருக்குத் தைரியம் வந்துடுச்சா?” என்றாள் நக்கலாக

“தைரியமா? என்னது புரியலை..”

“என்னோட பேசுறதுக்குத் தான்.. இருபது நாளா ஒரு போனைக் காணோம்.. இப்போ தானே கூப்டீங்க அதான் கேட்டேன்..”

“அப்போ மேடம் என்னைத் தேடிருக்கீங்க?” என்றவன் முகத்தில் சந்தோஷம் தாண்டவம் ஆடியது..

“நான் ஒன்னும் உங்களைத் தேடலை.” அவள் வீம்புடன் கூற

“தேடலை?”

“ஆமா தேடலை.”

“அப்போ போனை வெச்சுடவா?”

“பார்டா என்ன மிரட்டுறீங்களா? எங்க போனை கட் பண்ணிப் பாருங்க.. அவ்வளவு தைரியமா?” இவள் மிரட்ட

“வக்கீலையே மிரட்டுரியா?”

“நீங்க தானே சொன்னீங்க.. நான் வெளியே தான் வக்கீல்.. வீட்ல வெறும் மாறன் தான்னு..” என்றது அவன் வாய்விட்டு சிரித்தவன்

“கேஸ் விஷயமா கொஞ்சம் பிசியா இருந்தேன்.. அதான் போன் பண்ண முடியலை.. உன் நம்பரும் அன்னைக்கு உன்கிட்ட வாங்காமா விட்டுட்டேன்.. இப்போ தான் அம்மாகிட்ட கேட்டு வாங்குனேன்..”

“அத்தை என்னோட ரெண்டு தடவை பேசிட்டாங்க.. அவங்க பையன் சுத்த வேஸ்ட்”

“ஹாஹா.”

“போதும் போதும் சிரிச்சது.. சொல்லுங்க என்ன விஷயம்?”

“மேரேஜ் டேட் ரெண்டு குறிச்சுட்டு வந்துருக்காங்க.. மாமாக்கு இந்நேரம் அப்பா சொல்லிருப்பார். உனக்கு எது வசதின்னு பார்த்துட்டு சொல்லு..”

“ம் சரி..” என்றவளுக்கு இதுக்குத் தான் போன் செஞ்சியாடா என்றிருந்தது..

“தென்?” அவன் கேட்க

“தென்? நீங்க தான் சொல்லணும்?”

“நிஜமா உனக்கு இருபத்தி மூணு வயசாகிடுச்சா?” அவன் குழப்பமாகக் கேட்டான்..

“ஏன் என்னைப் பார்த்தா அப்படித் தெரியலையா என்ன?”

“பார்த்தா தெரியாது.. பேசினால் தெரியும்..” என்றான்

“என்ன சொல்லுறீங்க?” அவளிற்குச் சுத்தமாக அவன் கூறவருவது புரியவில்லை..

“பியான்சி கிட்ட என்ன பேசுறதுன்னு தெரியாமா முழிக்கிறியே, அதைச் சொன்னேன்..”

“அய்யடா சார் மட்டும் அப்படியே வண்டி வண்டியா பேசிக் கிழிக்கிறீங்க.. எங்களைச் சொல்ல வந்துட்டாங்க..”

“கால் எடுத்ததுல இருந்து சண்டை தான் போடுற.. தெரியாம உன்கிட்ட மாட்டிகிட்டேனோ?” சிரிப்புடன் கூற, குகாவும் சிரித்துக் கொண்டே

“மாட்டுனது மாட்டுனது தான்.. தப்பிக்க முடியாது..”

“குகா.. என்னால தினமும் கால் பண்ண முடியாது.. நேரம் கிடைக்கும் போது நானே கூப்பிடுறேன்..”
இருவரும் பத்து நிமிடம் பேசிக் கொண்டிருந்தனர்.. அவன் கேஸ் விஷயமாகப் பிசியாக இருந்ததால் அடிக்கடி அவனால் குகாவுடன் பேச முடியவில்லை.. அவன் ப்ரீயாக இருக்கும் சமயங்களில் அவளிடம் சிறிது நேரம் உரையாடுவான்..
தோழிகளின் கிண்டலுடன் கல்யாண ஷாப்பிங், ட்ரீட் என்று நாட்கள் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தது..

சீதா மகளை ஒரு மாதம் விடுமுறை எடுத்துக் கொண்டு வருமாறு கூறினார்..
“அம்மா ஒரு மாசம் எல்லாம் ஆபிஸ்ல லீவ் தர மாட்டாங்க.. மேரேஜூக்கு முன்னாடி ஒரு மாசம். பின்னாடி பத்து நாள் எல்லாம் கண்டிப்பா லீவ் கிடைக்காது.. பத்து நாள் முன்னாடி வரப் பாக்குறேன்..”

“பத்து நாள் முன்னாடி வரதுக்கு இது ஒன்னும் பக்கத்து வீட்டுக் கல்யாணம் இல்ல.. உன்னோட கல்யாணம்..”

“அம்மா.. படுத்தாதிங்க..”

“ஒரு மாசத்துக்கு முன்னாடி வந்தா தான், நல்லா சாப்பிட்டு உடம்பைத் தேத்திக்க முடியும்..”

“சரிமா.. நான் பார்க்கிறேன்..” என்று தாயை அப்பொழுது சமாதானம் செய்தவள் திருமணத்திற்குப் பத்து நாட்கள் முன்பே ஊருக்குச் சென்றாள்..
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#12
காதல் செய்வேன் கட்டளைப்படி..

காதல் 5

குறித்த நேரத்தில் உறவினர்கள் நண்பர்கள் சூழ, செல்வி குகாவாக இருந்தவளை திருமதி குகாவாக மாற்றினான் பரிதிமாறன்..

திருமணம் முடிந்து உறவினர்கள் நண்பர்கள் என்று ஒவ்வொருவராக பரிசுகளைக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.. குகாவின் சொந்தங்களை மாறனுக்கு அவள் அறிமுகப்படுத்த, அவனின் சொந்தங்களை அவன் குகாவுக்கு அறிமுகம் செய்தான்..
வெகு நேரம் நின்றுக் கொண்டே இருக்க குகாவிற்கு கால் வலித்தது.. அவள் முகத்திலேயே அதை புரிந்து கொண்டவன்,

“கால் ரொம்ப வலிக்குதா?” என்றான்

“இல்லை.. நின்னுட்டே இருக்கிறதுனால ஒரு மாதிரி இருக்கு..”

“இன்னும் கொஞ்ச நேரம் தான்.. அப்புறம் சாப்பிட போயிடுவோம்.”

“ம்”

பின் அகல்யா, ரோகிணி மற்றும் அவர்களின் கல்லூரி தோழிகள் சிலர் சேர்ந்து கேக் வாங்கி வந்திருந்தனர்.. இருவரையும் அதை கட் செய்ய சொல்லி, ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டுக் கொள்ள செய்தனர்.. பரிசுப் பொருட்களைக் கொடுத்துவிட்டு அவர்கள் சென்றனர்..

எல்லா சடங்குகளும் முடிந்ததும் குகாவின் வீட்டிற்கு மணமக்களை அழைத்துச் சென்றனர்.. அங்கே அவர்களுக்கு பாலும் பழமும் கொடுத்து முடித்ததும் சிறியவர்கள் பட்டாளம் இருவரையும் கலாய்த்துக் கொண்டிருந்தனர்..

“பொண்ணுப் பார்க்கும் போது என் தம்பி வரலை.. அதனால நீ பாடாம எஸ்கேப் ஆகிட்ட.. இப்போ ஒரு பாட்டு பாடு குகா..” மாறனின் அக்கா சிந்து கேட்க, குகா “ம்ஹூம்” என்று தலைய ஆட்டினாள். அனைவரும் சேர்ந்து அவளை பாடியே ஆக வேண்டும் என்று சொன்னதும்

யாரோ நீ புன்னகை சிந்தியே என்னை நான்
உன்னிடம் தேடவே செய்ததென்ன
யாரோ நீ காற்றுக்கு சொந்தமாய் தென்றல் போல்
வந்தென்னை வேறோடு சாய்பதென்ன
அந்தி நேரம் மஞ்சள் வானம்
கொஞ்சி பேசும் உந்தன் கோபம்
எந்தன் நெஞ்சில் காதல் செய்தி சொல்லலாமே
சின்னச் சின்னக் கோபம் கொண்டு
சின்னச் சின்னச் சண்டைப் போட்டு
மெல்ல மெல்ல பேசிப் பேசிப் பார்க்கலாமே..

மாறனையும் தரையையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே பாடினாள் குகா..
“சண்டை தானே டேய் நோட் செஞ்சுக்கோ. டெய்லி சண்டை தான் இனிமே..” என்றதும் அனைவரும் சிரித்தனர்..
ரோகிணி அவள் கணவனுடன் வந்திருந்தாள்.. அவள் நேரம் ஆவதை உணர்ந்து குகாவிடம் விடைபெற வந்தாள்.

“நான் கிளம்புறேன் குகா..”

“அதுக்குள்ள கிளம்புறியா?”

“மணி இப்பவே ஆறாகப் போகுது.. அவரும் ரொம்ப நேரமா கம்பெனிக்கு ஆள் இல்லாமல் தனியாவே உட்கார்ந்திருக்கார்.. சென்னைல தானே இருக்கப் போறோம்.. அங்கே பார்ப்போம்” என்றவள் புறப்பட்டாள்.
மாலை குலதெய்வ கோவிலுக்கு சென்றுவிட்டு வந்தனர்..

“குளிச்சுட்டு இந்த புடவையைக் கட்டிக்கோ குகா..” சீதா ஒரு சேலையை மகளிடம் கொடுக்க

“என்னமா திரும்ப பட்டுப் புடவையை கட்ட சொல்லுறீங்க.. தூங்க போற நேரத்துல ஏன்மா படுத்துறீங்க..”
மகளை முறைத்துக் கொண்டே “சொல்லுறதை கேளு.. திட்டு வாங்காதே.” என்றவர் அகல்யாவிடம் “உன் அறிவுகெட்ட ப்ரெண்டுக்கு சொல்லுமா..” என்றவர் அங்கிருந்து சென்றார்..

சீதா சென்றதும், அகல்யா வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தாள்.
“எதுக்குடி சிரிக்கிற?”

“நெஜமா தூங்க போறியா என்ன?” அவள் வினவ

“அடியே.. உன்னை கொல்லப் போறேன்.”

“ஒரு வேலை ட்ரெஸ் எதுக்குன்னு யோசிக்கிறியோ?” என்றதும் தோழியை இரண்டடி அடித்தாள்.

“அப்போ அதான் உண்மை.”

“அகல்.. சும்மா இருக்க மாட்டியா? போன்ல கூட நாங்க இன்னும் சரியா பேசலை.. முதல்ல நாங்க பேசி பழக வேண்டாமா?”

“தாண்டவம் படத்துல அனுஷ்கா சொல்லுவாளே, முதல்ல மீட் பண்ணனும், தென் ப்ரெண்ட் ஆகணும், லவ் பண்ணனும், அப்பறம் தான் எல்லாம்னு அப்படியா?”

“நீ அடிவாங்காம போக மாட்டடி..”

“சரி சரி புடவையை மாத்து, தலைவாரி விட்டுட்டு நான் வீட்டுக்கு கிளம்புறேன்..” என்றதும் குளித்துவிட்டு புடவையைக் கட்டிக் கொண்டாள்.

“ஹே கிளிப் எல்லாம் குத்தாதே..” என்றதும் மீண்டும் அகல்யா சிரிக்க ஆரம்பித்தாள்.

“உன் டர்ட்டி மைன்ட தூக்கி குப்பைல போடு.”

“இன்னும் ரெடி ஆகலையா நீ?” என்று கேட்டவாறே சீதா உள்ளே வந்தார்..

“இதோ முடிஞ்சுது அத்தை..” என்றவள் அவளின் தலையில் பூவை வைத்துவிட்டாள்.. அந்நேரம் அகல்யாவின் தாயும் அங்கே வந்தார்..

“மணி ஒன்பது ஆகப் போகுது.. இன்னும் நீ வீட்டுக்கு வரலை..”

“அவளை ரெடி பண்றேன்மா..”

“ஆமா இவ பத்து புள்ள பெத்த நூத்துக் கிழவி.. இவ புதுப்பொண்ணை ரெடி பண்றா?” என்றவர் சீதாவிடம் “மூத்தவங்க யாராயாச்சும் இதை எல்லாம் செய்ய சொல்லாம்ல அண்ணி..” என

“ரூமுக்கு அனுப்புறதுக்கு பெரியவங்கள போக சொல்லிருக்கேன் அண்ணி.. இப்போ சும்மா புடவை மாத்தி பூ வைக்கிறது தானே.. அவ வயசு பிள்ளைங்க கூட இருந்தா அதுங்க சும்மா பேசிகிட்டே கிளம்பிடுங்க.. பெரியவங்க யாராச்சும் இருந்தா கொஞ்சம் சங்கடமா பீல் பண்ணுங்கன்னு தான் விட்டுட்டேன்..”

“நீங்க சொல்லுறதும் சரி தான்..” என்றார்..

“அகல் நீ வந்து சாப்பிடு. நான் இவ சித்திய வர சொல்லுறேன். அவங்க துணைக்கு இருப்பாங்க..” என்ற சீதா அங்கிருந்து அகல்யாவின் தாயுடன் நகர்ந்தார்..

“ஓகே மேடம்.. ஆல் தி பெஸ்ட்.. ஹேப்பி மேரீட் லைப்..” என்றவள் தோழியை அணைத்துக் கொண்டாள்.

“தேங்க்யூ செல்லம்..”

“சீக்கிரம் என்னை அத்தை ஆக்கிடு..”

“நீ அடங்க மாட்ட.. சீக்கிரம் உன்னோட லவ் மேட்டரை அத்தைகிட்ட போட்டுக் கொடுக்குறேன் இரு..”

“அதை செய்டி முதல்ல.. அம்மா அல்ரெடி நீங்க ரெண்டு பேரும் மிங்கிள் ஆகிட்டீங்க நான் மட்டும் சிங்கிளாவே இருக்கேன்னு என்னை கேள்வி கேக்குறாங்க.. நீ போய் என் காதலை சொன்னா சீக்கிரமே ஒரு நல்ல முடிவு எடுப்பாங்க”

“எடுப்பாங்க எடுப்பாங்க.. உன் காலை தான் எடுப்பாங்க..”
குகாவின் சித்தி வந்ததும் அகல்யா புறப்பட்டாள். குகாவின் கையில் பால் சொம்பைக் கொடுத்த சித்தி,

“பாத்து நடந்துக்கோ.. காலைல குளிச்சுட்டு நிச்சய புடவையை தான் கட்டனும்.. ரூம்ல அக்கா வெச்சுட்டாங்க..”

“அவர் வீட்டுக்கு போகும் போது தான் அதை கட்டணும்னு அம்மா சொன்னாங்க.. விருந்து எல்லாம் முடிஞ்ச பின்னாடி தானே சித்தி தூத்துக்குடி போறோம்..”

“எத்தனை சேலை மாத்துவ.. ஒழுங்கா சொல்லுறதை செய்..”

“அக்காவும் தங்கச்சியும் அதட்டுறதுல ஒன்னுக்கு ஒன்னு சலச்சவங்களே இல்லை..” என்று முனங்கிக்கொண்டே பால் சொம்புடன் அறைக்குச் சென்றாள். பதட்டம் வெட்கம் எல்லாம் கலந்து பெண்மைக்கே உரிய வெட்கத்துடன் அறைக்குள் நுழைந்தாள் குகப்ரியா.

மாறன் அங்கே அமர்ந்திருக்க அவன் அருகே சென்றவள் பாலை அவனிடம் கொடுக்க
“எனக்கு மில்க் சுத்தமா பிடிக்காது குகா..” என்றான்..

“கொஞ்சமா குடிங்க.. ஒரு வாய் மட்டும்..” என்றதும் ஒரு சொட்டு வாயில் ஊற்றிக் கொண்டான்.

“டெய்லி நைட் மில்க் குடிச்சா தான் எனக்கு தூக்கம் வரும்..” என்றவள் மீதி இருந்த பாலை குடித்து முடித்தாள்.

“நம்ம ரெண்டு பேரோட டேஸ்ட் மொத்தமா வேற இல்ல..” என்றான் சிரிப்புடன்.. அவளும் “ம்” என்றதும்

“ட்ரெஸ் சேன்ஞ் பண்ணனும். நீ முதல்ல மாத்திட்டு வந்துடுறியா? அப்பறம் நான் போறேன்.”

“இல்ல நீங்க ரெஸ்ட்ரூம்ல மாத்திக்கோங்க.. சில்க் சாரீ பாத்ரூம் ஈரத்துல நனைஞ்சிடும்”

“சரி நீ இங்க மாத்திக்கோ.. நான் உள்ள போறேன்.” என்றவன் ஷார்ட்ஸ் டீ ஷர்டை எடுத்துக் கொண்டு ரெஸ்ட்ரூமுக்குள் சென்றான்..

இரண்டு நிமிடம் கழித்து அவன் உள்ளிருந்து

“குகா வரவா?” என்று கேட்க

“ம் வாங்க..” என்றவள் கட்டிலில் அமர்ந்திருந்தாள்.

“என் மேல கொலைவெறில இருப்பேன்னு நினைக்கிறேன்..”

“நானா? இல்லையே.. ஏன் அப்படி கேக்குறீங்க?” என்றாள் ஒன்றும் புரியாமல்..

“போன்ல அடிக்கடி உன்னோட பேசவே இல்லைல.. அதான்..”

“ஆரம்பத்துல கொஞ்சம் வருத்தமா இருந்தது.. என் ஆபிஸ் கொலிக்ஸ் எல்லாம் என்கேஜ்மெண்ட் முடிஞ்சதும் அவங்க பியான்சி கிட்ட மணிக்கணக்கா பேசுவாங்க.. நீங்க போன் செஞ்சாலும் ரொம்ப பேச மாட்டீங்க.. முக்கியமா அத்தை எதாச்சும் கேட்க சொல்லிருந்தா அதைக் கேட்க தான் கால் பண்ணுவீங்க.. அப்போ எல்லாம் என்னடா இவர் பேசவே இல்லைன்னு இருந்தது. கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தேன், இப்பவே எல்லாம் பேசிகிட்டா ஆப்டர் மேரேஜ் என்ன பேசுறது.. இதுவே பெட்டர்ன்னு தோனுச்சு..”

“எக்ஸ்சாக்ட்லி.. என்னோட பாய்ன்டும் இது தான்.. இப்பவே எல்லாமே தெரிஞ்சுகிட்டா ஆப்டர் மேரேஜ் எனக்கு உன்னைப் பத்தி தெரிஞ்சுக்க எதுவுமே இல்லாம போகிடும்..” என்றதும் அவள் மெலிதாக புன்னகைத்தாள்.

“உன் சிரிப்பே சரியில்லையே.. உன்கூட கொஞ்சம் பேசின வரை எனக்கு தெரிஞ்சது.. எனக்கு டோட்டல் ஆப்போசீட் நீன்னு.. பட் ஆபோசீட் தானே அட்ராக்ட் பண்ணும்..” என்றதற்கும் அவள் சிரித்து மட்டும் வைத்தாள்.

“ரொம்ப மொக்கை போடுறேனோ..”

“லைட்டா..”

“அடிப்பாவி.”

“நம்ம ப்ர்ஸ்ட் மீட்ல நான் தான் அதிகமா பேசுனேன்.. இப்போ நீங்க பேசுங்க தப்பில்ல..”

“ஹாஹா.. சரி நீ மார்னிங்கே கால் வலிக்குதுன்னு சொன்ன.. தூங்கு. மீதி கதைய நாளைக்கு பேசுவோம்.. குட் நைட்..” என்றான்

மறுநாள் காலையில் குளித்து வெளியே வந்தவள் ஹாலில் தந்தை அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு அவர் அருகில் சென்றாள்.

“குட் மார்னிங் பா..”

“குட் மார்னிங்டா.. மாப்பிள்ளை எங்க?” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே மாறனும் அவர் அருகில் வந்து அமர்ந்தான்..
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#13
“போய் உங்க ரெண்டு பேருக்கும் காபி எடுத்துட்டு வா..” என்றதும் சமையல் அறைக்கு சென்று தாயிடம் காபியை வாங்கிக் கொண்டு கணவனிடம் கொடுத்தாள்.

“அப்பா உங்களுக்கு?”

“நான் குடிச்சுட்டேன் மா..” என்றவர் மருமகனிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்..

“அத்தை காபி சூப்பர்” அங்கே வந்த சீதாவிடம் மாறன் கூறியதும் அவர் சிரித்துக் கொண்டே கப்புகளை எடுத்துச் சென்றார்.

“குகா மாதிரி என்ன சொன்னாலும் அத்தையும் அதே லைட் ஸ்மைல் பண்றாங்க.. அத்தைக் கிட்ட இருந்து தான் உனக்கு இந்த பழக்கம் வந்துச்சோ.”

“இதை எல்லாம் வெச்சு குகாவை அமைதின்னு நினைச்சுடாதிங்க மாப்பிள்ளை.. கோபம் வந்தா மேடம் காளி அவதாரம் எடுத்துடுவாங்க.. காபில உப்பை போட்டுடுவா..”

“என்னது உப்பையா?” என்றவன் அலற

“ரொம்ப இல்லை மாப்பிள்ளை.. இப்போ நீங்க ஒன்றரை ஸ்பூன் சர்க்கரைப் போட்டுபீங்கன்னா, அதுல ஒரு ஸ்பூன் சர்க்கரை போடுவா, அரை ஸ்பூன் உப்பை போட்டுடுவா..
நான் கடைல இருந்து எதாச்சும் பில்லை செக் செய்ய எடுத்துட்டு வந்தா, அதுல கிறுக்கி வெச்சுடுவா.. மாடில காயப் போட்டுருந்த துணியை எடுத்து பக்கத்து வீட்டுல தூக்கிப் போட்டுடுவா..” என்று அவர் அடுக்கிக் கொண்டே போக

“அப்பா போதும் சும்மா இருங்க..” என்று குகா அடக்கினாள்.
மாறன் சிரித்துக் கொண்டே குகாவின் தம்பியிடம் “உன்னை என்ன பண்ணுவா?” என்று கேட்க

“என்கிட்ட எல்லாம் வால் ஆட்ட மாட்டா மாமா.. அவ எனக்கு ஒன்னு செஞ்சா பதிலுக்கு ரெண்டு செஞ்சுடுவேன். மேடம் அதுனால என்கிட்ட அடக்கி தான் வாசிப்பாங்க..”

“பாத்து இருந்துக்கோங்க மாப்பிள்ளை.. கேஸ் பைல் எல்லாம் ஜாக்கிரதையா வெச்சுக்கோங்க..” ராஜன் கூறியதும்

“இதை எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லிருக்கணும் மாமா.. இப்ப வந்து அலெர்ட் பண்றீங்களே? நியாயமா..” அவன் அழும் குரலில் கூற

“இப்போ சும்மா இருக்கீங்களா எல்லாரும்.” என்றவள் தாயிடம்

“அம்மா இந்த அப்பாவை பாருமா. என் இமேஜை ரொம்ப டேமேஜ் செய்றார்.”

“சும்மா இருங்க..” என்று கணவரிடம் கூறிய சீதா மகளை தன்னோடு ரூமிற்கு அழைத்துச் சென்றார்.

“அப்பா என் இமேஜை ரொம்ப டேமேஜ் செஞ்சுட்டார்..”

“நீயும் இனிமே பார்த்து நடந்துக்கணும் குகா.. இங்க நம்ம வீட்ல செய்ற சேட்டை எல்லாம் மாப்பிள்ளை கிட்டயும் செய்யாதே.. அவர் மேல கோபம் வந்தாலும் பேசி தீர்த்துக்கோ.. அவர் ஆபிஸ் பேப்பர் எதுலையும் கிறுக்கிடாதே..”

“அம்மா இதெல்லாம் நான் ஸ்கூல் படிக்கும் போது செய்தது.. ஸ்டில் சொல்லிக் காமிச்சிகிட்டே இருக்கீங்க.. அதெல்லாம் நான் இப்போ அப்படி செய்ய மாட்டேன்..”

“செய்யாம இருந்தா சந்தோஷம் தான்..” என்றவர் மகளின் நெற்றியைப் பார்த்து

“வகிட்டில கும்குமம் வை..” என்றதும் அவள் எடுத்து வைத்துக் கொண்டாள்.

“தினமும் மறக்காம வெச்சுக்கோ.. எல்லாத்தையும் பொறுப்பா கவனிச்சுக்கோ.. விளையாட்டுத்தனமா இருந்தாலும் பொறுப்புன்னு வந்துட்டா நீ சரியா தான் செய்வ.. இருந்தாலும் அம்மாவா எனக்கு கொஞ்சம் பயம்.. பார்த்து இருந்துக்கோடா.. பொறுப்பான மருமகளா மாமியாரை அனுசரிச்சு நடந்துக்கோ.. அவங்க தூத்துக்குடில இருக்காங்க நம்ம சென்னைல தானே இருக்கோம்ன்னு பொறுப்பில்லாம இருந்துடாதே..” என்று அவர் கூறிக் கொண்டே போக, குகாவின் கண்ணில் கண்ணீர் வந்தது.. மகளின் கண்ணீரைப் பார்த்த சீதா, அவளை அணைத்துக் கொண்டு

“இது எல்லா பொண்ணுங்களுக்கும் நடக்கிறது தான்.. அழுகாதே.. மூணு வருஷமா நீ தனியா தான் இருக்க.. இப்ப ஹாஸ்டலுக்கு பதில் மாப்பிள்ளை கூட வீட்டுல இருக்கப் போற.. அவ்வளவு தான்டா வித்தியாசம்.. அடிக்கடி நாங்க வரோம் நீயும் இங்க வந்து எங்களைப் பாரு..” அவர் ஆறுதல் கூற கூற மேலும் குகாவின் அழுகை அதிகமானது..
நெடுநேரம் சமாதனம் செய்த பின்பே அவள் அழுகை மட்டுப்பட்டது.. மதிய விருந்து முடிந்து, தூத்துக்குடிக்கு புறப்படும் ஏற்பாடு நடந்துக் கொண்டிருந்தது..

அவளை வழியனுப்ப அகல்யா அவள் அம்மாவுடனும் தம்பியுடனும் வந்திருந்தாள்.. அகல்யாவின் தம்பி, குகாவை முறைத்துக் கொண்டே நிற்க, குகா அவன் அருகில் சென்று

“என்னடா எதுக்கு இப்படி முறைக்கிற?” என்றதும், அவன் அவளை மீண்டும் முறைத்துவிட்டு வேறு புறம் திரும்பினான்..

“என்னடி ஆச்சு இவனுக்கு.. எதுக்கு என் மேல கோபமா இருக்கான்..” குகா, அகல்யாவிடம் கேட்க

“நீயே கேட்டுக்கோ. நீயாச்சு அவனாச்சு.. உங்களுக்கு இடைல வந்தேன், என்னை முட்டாள் ஆக்கிடுவீங்க..” என்றாள்

“ச்சீ பே..” என்று அகல்யாவிடம் கூறியவள், அகல்யாவின் தம்பியிடம்

“மச்சான் டேய் எதுக்குடா இப்படி முறைக்கிற? உன் டார்லிங் நான் பாவம் இல்ல..”

“இப்படி சொல்லி சொல்லி என்னை ஏமாத்திட்ட இல்ல..” என்றான் சோகமாக

“என்னடா சொல்ற? புரியுற மாதிரி தான் பேசேன்..”

“என்னைக் கட்டிக்கிறேன் கட்டிக்கிறேன்னு சொல்லிட்டு இப்போ அவரை கட்டிகிட்ட இல்ல..” மாறனைக் கைக்காட்டி அவன் கூற, குகா வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தாள்.

அவன் தன்னை காட்டியதையும், குகாவின் சிரிப்பையும் பார்த்த மாறன் அவர்கள் அருகில் வந்து என்னவென்று கேட்க, அகல்யா அனைத்தையும் சொன்னாள்.

“எனக்கு இது முன்னாடியே தெரியாதேடா. தெரிஞ்சதுனா உன் லவ்வர உன்கிட்ட இருந்து பிரிச்சிருக்க மாட்டேன்.. சரி விடு.. இப்பவும் ஒன்னும் பிரச்சனை இல்லை.. உன் டார்லிங்க நீயே வெச்சுக்கோ..” குகாவின் கையைப் பிடித்து அகல்யாவின் தம்பியின் கையில் கொடுக்க, குகா மாறனின் கையில் ஒரு அடி அடித்தாள்..

“நினைப்பு தான்.. அன்னிக்கே சொன்னேன் தானே.. மாட்டுனது மாட்டுனது தான்.. எஸ்கேப் எல்லாம் ஆக முடியாது..” என்றாள்.

“விடுடா தம்பி.. குகாவோட பொண்ணை உனக்கு மேரேஜ் செஞ்சு வெச்சுடலாம்..” அகல்யா கூறியதும், அவளைப் பார்த்து கை எடுத்துக் கும்பிட்டவன்

“ஒரு ஆணியும் நீங்க ...” என்றதும் அங்கே ஒரு சிரிப்பலை உருவானது..
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#14
காதல் செய்வேன் கட்டளைப்படி...

காதல் 6

“ஹனிமூன் எங்க போகலாம்ன்னு முடிவு செஞ்சுடீங்களா? டிக்கெட் போட்டுடுறேன்..” சுதாகரன் மகனிடம் கேட்டார்..

“இன்னும் முடிவு பண்ணலைப்பா.. போகலாம் மெதுவா..”

“டேய் கல்யாணம் ஆன புதுசுல போறதுக்கு பேர் தான் ஹனிமூன்.. மெதுவா போறது சனிமூன்டா.. நானெல்லாம் தாலி கட்டுன கையோட உங்கம்மாவை இழுத்துக்கிட்டு ஊட்டிக்கு போயிட்டேன்.. நீ என்னடா ஒரு வாரம் ஆகியும் எங்க போகலாம்ன்னு முடிவு பண்ணலைன்னு சொல்ற..” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே கையில் காபி கப்புடன் குகாவும், ஸ்னாக்ஸ் தட்டுடன் சித்ராவும் வந்தனர்..

“போலீஸ் ஆபிசர்ன்னு தான் பேரு.. பிள்ளைகிட்ட என்ன பேசணும்னு தெரியலை..” திட்டிக் கொண்டே முறுக்கை கணவனிடம் கொடுத்தார் சித்ரா..
குகாவும் சிரித்துக் கொண்டே காபியை அனைவருக்கும் கொடுத்தாள்.
நால்வரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அறைக்குச் சென்றனர்.. துணிகளை மடித்துக் கொண்டிருந்த குகாவிடம், மாறன்

“உனக்கு எந்த ஊருக்கு போகணும்னு எதாச்சும் ஆசை இருக்கா?” என்றான்.. அவள் புரியாமல் அவன் முகம் பார்க்க

“ஹனிமூனுக்கு எந்த பிளேஸ் யோசிச்சு வெச்சுருக்கேன்னு கேட்டேன்..” அவன் விலாவரியாக கூறவும் சிரித்துவிட்ட குகா

“அகல்யாவும், ரோஹிணியும் ஹனிமூன் பேக்கேஜ் தான் கிப்ட் பண்றதா சொன்னாங்க.. உங்க ரெண்டு பேருக்கும் கம்பர்டபிளா இருக்க ஊர் சொல்லுங்க டிக்கெட் போடுறோம்னு..” என்றாள்

“இதுல சிரிக்க என்ன இருக்கு? அவங்ககிட்ட நீ எந்த பிளேஸ் சொல்லிருக்க?” என்றதும் மேலும் சிரித்தவள்

“என் வீட்டுக்காரரைப் பார்த்தா ஹனிமூனுக்கு கூட்டிட்டு போற ஆள் மாதிரி தெரியலை.. சோ வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்..” என்றவளின் சிரிப்பு விரிந்தது..

“என்னைப் பார்த்தா அவ்வளவு அன்ரொமாண்டிக்காவா இருக்கு?” முறைத்துக் கொண்டே கேட்டான்..

“ஹாஹா..”

“போதும் சிரிச்சது.. சொல்லு.. ஹனிமூன் கூட கூட்டிட்டு போக மாட்டேன்னு நினைக்கிற அளவுக்கு நான் என்ன செஞ்சேன்?”

“அதானே என்ன செஞ்சீங்க?”

“மேடம் நான் தான் கேள்வி கேட்டேன்.. அப்படியே என் பக்கம் திருப்பி விடுறீங்க?”

“நான் பதில் தான் சொன்னேன்.. வக்கீலுக்கு மூளை கொஞ்சம் கம்மி தான்..” என்றவள் துணிகளை எடுத்து வைத்துவிட்டு மாறனை பார்த்து நமட்டு சிரிப்பு ஒன்றை உதிர்த்து விட்டு வெளியே சென்றாள்.
அவள் கூறியதன் அர்த்தம் இரண்டு நிமிடத்துக்கு பிறகே அவனிற்கு புரிந்தது..

‘அடிங்க.. இன்னைக்கு இருக்குடி உனக்கு..’ என்று மனதில் எண்ணிக் கொண்டவன் லேப்பில் வேலைகளை செய்து கொண்டிருந்தான்.

இரவு உணவு முடிந்து குகா அறைக்குள் வந்ததும், அவளை கைகளில் அள்ளிக் கொண்டான் மாறன்..
“எ.என்.. என்ன பண்றீங்க? வி.. விடு..விடுங்க..” என்றவளிற்கு வார்த்தை தந்தி அடித்தது..

“வக்கீலுக்கு மூளை கம்மின்னு யாரோ சொன்னாங்க.. அவங்களை சும்மா விட முடியாது..” என்றவன் அவளை கட்டிலில் கிடத்தினான்..

“என்ன?” என்றவளின் கண்கள் பயத்தில் விரிந்தன.

“சாப்ட்வேர் அம்மாக்கு தான் மூளை கம்மி போல..” என்றவனின் புருவம் ஏறி இறங்கின..

“நான் சொன்னது புரிஞ்சுடுச்சா? அது சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்..” என்றவள் கட்டிலின் பின்னே நகர்ந்தாள்.

“விளையாடிடுவோம்..” என்றவன் அவளை நெருங்க.. கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள். சிரித்துக் கொண்டே

“நினைப்பு எல்லாம் எங்கையோ இருக்கு.. ஆசை தான் போடி..” என்றவன் அவளை இடித்துக் கொண்டு படுத்தான்.. அவனின் வார்த்தைகளில் கண்ணைத் திறந்தவள்

“போடியா?”

“ஆமாடி பொண்டாட்டி..” என்றவனின் கை அவள் இடையில் பதிந்தது..

“யோவ் வக்கீலு கையை எடு..”

“ஒரு வாரத்துலையே யோவ் வக்கீலுன்னு கூப்பிட ஆரம்பிச்சுட்ட.. இன்னும் கொஞ்ச நாள் போனா கெட்ட கெட்ட வார்த்தை வரும் போலவே..”

“ஆமாயா வரும்.. நீ முதல்ல கையை எடு..” என்றவள் அவன் கையை எடுக்கப் போக, அவனின் மற்றொரு கையால் குகாவின் இரண்டு கைகளையும் பிடித்தவன் அவள் இதழ்களில் யுத்தத்தை ஆரம்பித்தான்.. அவர்கள் வாழ்க்கையின் அழகானதொரு தருணம் அங்கே நடந்தேறியது..

அடுத்த நாள் மாறனின் பெற்றோருடன் புதுமண தம்பதிகள் இருவரும் சென்னை வந்து சேர்ந்தனர்.. இரண்டு நாட்கள் மருமகளுடன் இருந்து வீட்டை ஓரளவுக்கு பழக்கப் படுத்திவிட்டே இருவரும் தூத்துக்குடிக்கு திரும்பி சென்றனர்..
அவர்கள் சென்ற அடுத்த நாள் வீட்டில் இருவர் மட்டுமே இருப்பது போர் அடிக்க, இருவரும் கிளம்பி மாலிற்கு வந்திருந்தனர்.. வீட்டிற்கு தேவையான சில பொருட்கள் வாங்குவதற்காக ஒரு கடைக்குள் நுழைந்தனர்..

“ஸ்.. கையை விடுங்களேன்.. வலிக்குது.. எவ்வளவு நேரம் தான் பிடிச்சுட்டே சுத்துவீங்க..” பொருட்களை பார்வையிட்டவாறே கேட்டாள் குகா..

“அக்னி சாட்சியா வாக்குக் கொடுத்திருக்கேன்.. பிடிச்ச கையை விட மாட்டேன்னு..” என்றவனின் பிடி இன்னும் இறுகியது.

“ப்பா.. முடியலை.. நடுவுல ஒரு வாரம் இந்த அக்கறை காணாம போச்சே..” என்றதும் அவளை இடையோடு சேர்த்து தன் அருகில் இழுத்து அணைத்தவன்

“பாவம் பச்ச பிள்ளைன்னு நினைச்சு விட்டேன். இப்போ தானே தெரியுது நீ பச்சை பச்சையா பேசுற பிள்ளைன்னு..”

“ப்ச்.. மாறன்.. பப்ளிக் பிளேஸ்ல என்ன பண்றீங்க.. கையை எடுங்க..”

“யாருமே இல்ல இங்க.. அப்பறம் என்ன உனக்கு?”

“ஆள் இருக்காங்க இல்லை.. எதை எதை எந்த இடத்துல செய்யணுமோ அங்க தான் செய்யணும்..”

“ஐடில தானே வொர்க் பண்ற? டீச்சர் அம்மா மாதிரி பேசுற..”

“இது எல்லாம் காமன் சென்ஸ்.. டீச்சர் தான் இப்படி பேசணும்னு இல்லை..”

“அப்போ வா சீக்கிரம் ரூமுக்கு போவோம்..” என்றவன் வேகமாக நடக்க

“அடி வாங்குவீங்க.. ஷாப்பிங் பண்ணனும்.. ஹனிமூன் தான் கூட்டிட்டு போகலை.. ஷாப்பிங் செய்யவாச்சும் விடலாம்ல..”

“நீ தானே வேண்டாம்னு சொன்ன.. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க தான் அங்க போவாங்க.. நம்ம வீட்லையே இருந்து பேசி புரிஞ்சுப்போம்ன்னு சொல்லிட்டு, இப்போ மாத்தி பேசுறியா?”

“ஒரு பேச்சுக்கு சொல்றது தான்.. நீங்க கம்பல் செஞ்சிருக்கணும்..”

“செஞ்சுடுவோம்.. செஞ்சுடுவோம்..” என்றவன் அவளை பார்த்து கண் அடிக்க

“உதை படுவீங்க..”
இருவரும் ஷாப்பிங் முடித்து, இரவு உணவையும் அங்கேயே முடித்துக் கொண்டு வீட்டிற்கு வரும் போது பத்து மணி ஆகியிருந்தது..

இன்னும் இரண்டு நாட்களில் குகா வேலைக்குச் செல்ல இருப்பதால் மாறனும் அவளுடன் நேரத்தை செலவு செய்யவேண்டி, அவனின் கேஸ் வேலைகளை வீட்டில் இருந்தபடியே செய்தான்..
இருவருமே சேர்ந்து தான் சமையலை கவனித்துக் கொண்டனர்.. மாறன் பேச்சிலர் லைப்பில் ஓரளவிற்கு சமைக்க கற்றுக் கொண்டிருந்தான்.. அவனை விட சுமாராக குகா சமைப்பாள்.. அவன் சாம்பார் செய்தால் இவள் பொரியல் செய்வாள்.. இப்படி வேலைகளை தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர்..

அன்று காலை மாறன் தாமதாமாக எழுந்துக் கொள்ள, குகாவே காலை உணவை செய்து கொண்டிருந்தாள். ப்ரெட் ஆம்லேட்டை செய்தவள் இருவருக்கும் ப்ளேட்டில் எடுத்துக் கொண்டு வந்தாள். கணவனுக்கான ப்ளேட்டை அவன் கையில் கொடுத்தவள், அவன் அருகில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தாள்..

“இன்னைக்கு மாவு அரைக்கணும்.. ரெண்டு நாளா மாவு இல்லாம ப்ரெட் ரோஸ்ட், ஆம்லேட்ன்னு செஞ்சு சாப்பிட்டாச்சு.. நாளைல இருந்து ஆபிசுக்கு வேற ரெண்டு பேரும் போகணும்.. இட்லி தோசை தான் மார்னிங் ஈசியா செய்ய முடியும்.. அரிசியையும், உளுந்தையும் மறந்துடாம ஊறப் போட்டுடு..” ஆம்லேட்டை உண்டு கொண்டே மாறன் குகாவிடம் கூற, குகா வேகமாக

“இன்னைக்கு கடைக்கு போயிட்டு வரலாமா?” என்றாள்

“ஏன் எதாச்சும் வாங்கனுமா? காய், மளிகை சாமான் எல்லாம் இருக்கே..”

“தோசை மாவு வாங்க தான்..”

“கடைல வாங்க போறியா?” என்றான் கேள்வியாக

“ஆமா..”

“கடைல வாங்குற மாவு எனக்கு சுத்தமா பிடிக்காது.. லீவ்ல வீட்டுல இருக்கப்ப நானே தான் அரைச்சு வெச்சுக்குவேன்..”

“அப்போ நான் அரிசியையும், உளுந்தையும் ஊறப் போட்டு வைக்கிறேன்.. நீங்களே அரைச்சுடுரீங்களா?”

“நானா?”

“ஆமா நீங்க தானே சொன்னீங்க இதுக்கு முன்ன நானே தான் அரைச்சுப்பேன்னு.. இப்போ மட்டும் என்ன?”

“அடியே சமையல்ல தான் அரைக்குறைன்னா, மாவு கூட ஆட்ட தெரியாதா உனக்கு?” என்றான் அலுப்பாக..

“எனக்கு கிரைண்டர் சவுண்ட் பிடிக்காது.. ஒரு மாதிரி இரிட்டேடிங்கா இருக்கும்.. சம்டைம்ஸ் அழுகைக் கூட வரும்.” என்றாள் பாவமாக

“என்னது கிரைண்டர் சவுண்ட் கேட்டா அழுகை வருமா?” அதிர்ச்சியாக அவன் கேட்க

“ஆமா.. சின்னதுல இருந்தே இப்படி தான்..” என்றாள் சோகமாக

“குழந்தைங்க மிக்சி, கிரைண்டர் சவுண்ட் கேட்டா அழுவாங்க, ஏழு கழுதை வயசாகுது உனக்கு.. நீ எதுக்குடி அழுகுற?”

“ப்ச்.. எனக்காக இது கூட செய்ய மாட்டீங்களா?” முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு அவள் கேட்க

“வேற வழி.. செஞ்சுத் தொலையிறேன்..” என்றவன் சாப்பிட்ட பிளேட்டை எடுத்துக் கொண்டு கை கழுவ சென்றான்..

இருவரும் தங்களின் வேலைக்கு திரும்பி சென்ற பின்பும் இது தான் தொடர்ந்தது.. முடிந்த அளவிற்கு மனைவிக்கு சமையலில் உதவி செய்வான் மாறன்.. அன்றும் அப்படி தான் மாறனிற்கு பிடிக்குமென்று ஆசையாக வத்தக்குழம்பு வைத்திருந்தாள்.

“வத்தக்குழம்பா? இதுவா? நான் ரசம்னு இல்ல நினைச்சேன்.” பாத்திரத்தை திறந்து பார்த்தவன் இவ்வாறு கூறவும், கடுப்பானவள்

“ரொம்ப பண்றீங்க.. ரசம் லைட் கலர்ல தண்ணி மாதிரி இருக்கும்.. இது இவ்வளவு திக்கா டார்க்கா இருக்கு. சும்மா கலாய்க்கணும்னு சொல்லக் கூடாது..” என்றாள்
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#15
“காரக்குழம்பு, வத்தக்குழம்பு எல்லாம் என்னோட பேவரட். இனிமே வத்தக்குழம்பு செய்ய போறேன்னு முன்னமே சொல்லிடு.. நானே செஞ்சு கொடுத்துடுறேன்.. நான் செஞ்சதை சாப்பிட்டுப் பாரு அப்புறம் நீயே சொல்லுவ உன்னோட இந்த குழம்பை ரசம்னு.. வெஜ்ஜே இந்த கொடுமைல சமைக்குற.. நான் வெஜ் எல்லாம் எவ்வளவு கொடுமையா இருக்குமோ?” வேதனையுடன் அவன் கூறினான்..

“சரியான பெருமை பீத்த கலைஞன்.. நீங்க நல்லா தான் குக் பண்ணுவீங்க.. அதை அடிக்கடி ரிஜிஸ்டர் பண்ணனுமா?”

“உனக்கு இன்பீரியாரிட்டி காம்பிளக்ஸ்..”

“ஆமா ஆமா காம்பிளக்ஸ்..” என்றவள் இருவருக்குமான உணவை தட்டில் பரிமாறிவிட்டு வாயில் வைத்ததும் சுவையே ஒரு மாதிரி இருக்கவும்

“புளி சரியில்லைன்னு நினைக்கிறேன். டேஸ்ட் என்னவோ போல இருக்கு..” என்றாள்.

“ஆஹான்.. ஆடத் தெரியாத சிலுக்கு, என் காலுல சுலுக்குனாலாம். அந்த கதையாவுல இருக்கு.. நானும் இதே புளில தான் போன வாரம் புளிக்குழம்பு செஞ்சேன்.. சூப்பரா இருக்குன்னு சப்புக் கொட்டி சாப்பிட்ட..” என்றதும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“பழமொழி சொன்னா அனுபவிக்கனும்.. இப்படி முகத்தைத் தூக்கி வெச்சுக்கக் கூடாது..”

“பனமரத்துக்கு அடியிலே பரிதிமாறன் மடியிலே..” என்று கூறியவள் கணவனின் மடியில் அமர்ந்துக் கொண்டாள்
“நாங்களும் பழமொழி சொல்லுவோம்.”

“செத்த ஜோக் தங்கதுரை fan ஆ நீ? இது தெரியாம போச்சே..” அவன் கேலி செய்ய, சாதத்தை எடுத்து அவன் வாயில் திணித்தாள்..

“ஹே..” என்றவன், அவனும் அவளின் வாயில் சாதத்தை ஊட்டினான்..
இருவரும் மாற்றி மாற்றி ஊட்டிக் கொண்டே அன்றைய உணவை முடித்தனர்..
சின்ன சின்ன சீண்டலும், சண்டையும், செல்ல முத்தங்களுமாய் அவர்களின் வாழ்க்கை ரம்யமாக இருந்தது..
******************

கேபிடேரியாவில் அகல்யாவுடன் காபியைக் பருகியவாறே பேசிக் கொண்டிருந்தாள் குகா.. தோழியின் கேள்விக்கு பதில் சொன்னாலும் அகல்யாவின் மனம் முழுவதும் வேறு எங்கேயோ இருந்தது..

“என்ன மேடம் வாய் மட்டும் ஆன்சர் பண்ணுது? மைன்ட் எங்கயோ இருக்குப் போல? முப்பொழுதும் கவினின் கற்பனை தானா?” என்று கேலி செய்தாள் குகா..

“ப்ச் நீ வேற ஏன்டி.. கடுப்பேத்துற..” அகல்யா அலுத்துக் கொள்ள

“ஏன் என்னாச்சு? ரெண்டு பேருக்கும் எதுவும் சண்டையா?”

“எல்லாம் உன்னால தான்..” என்றாள் கோபமாக

“என்னாலையா? நான் என்னடி பண்ணேன்?” புரியாமல் குகா கேட்க

“உன்னை யாரு சீக்கிரம் குடும்ப இஸ்திரி ஆக சொன்னா?” பொரிந்தாள் அகல்யா.

“லூசு.. என்ன உளறுற.. என்னப் பிரச்சனைன்னு சொல்லாம.. நான் ஏன் மேரேஜ் செஞ்சுகிட்டேன்னு கேட்டா என்ன பதில் சொல்றது..”

“எங்க அம்மா என்னையும் கல்யாணம் செஞ்சுக்க சொல்லுறாங்க.. குகா, ரோகிணி ரெண்டு பேரும் மேரேஜ் செஞ்சு செட்டில் ஆகிட்டாங்க.. நீ இன்னும் இப்படியே சுத்திகிட்டு இருக்கன்னு திட்டுறாங்க..”

“இதுக்கு ஏன் எங்க மேல கோபப்படுற.. அத்தைகிட்ட கவினை லவ் பண்றேன்னு சொல்ல வேண்டியது தானே..”

“கவினுக்கு தங்கச்சி இருக்கு தெரியும் தானே.. அவளுக்கு முன்ன கவினுக்கு அவங்க வீட்ல மேரேஜ் செஞ்சு வைப்பாங்களா?”

“சரி வீட்ல விஷயத்தை மட்டுமாச்சும் சொல்லிவைங்க.. அவங்க சிஸ்டருக்கு முடிஞ்சதும் உங்களுக்கு செய்ய சொல்வோம்..”

“ப்ச்.. இதெல்லாம் நான் யோசிக்கலன்னு நீ நினைக்கிறியா?”

“பின்ன என்னடி?”

“கவின் ஒத்துக்கணும்ல.. வீட்ல சொல்வோம்ன்னு சொன்னா கேட்க மாட்ரார்.. கொஞ்சம் சமாளி.. ஆறு மாசம் டைம் கொடுன்னு கேக்குறார்..”

“நீ அத்தை கிட்ட சொல்லேன்.. ஆறு மாசம் வெயிட் பண்ணுங்கன்னு.”

“சொல்லிட்டேன்.. மாப்பிள்ளையை பார்த்து வைக்கவா, ஆறு மாசம் கழிச்சு மேரேஜ் வெச்சுப்போமான்னு கேக்குறாங்க.. நான் என்ன தான் சொல்றது.. வீட்லையும் டார்ச்சர், கவினும் டார்ச்சர் பண்றான்.. ஏன்டா காதலிச்சோம்ன்னு இருக்கு..” என்றவளுக்கு கண்கள் கலங்கியது..

“சரி அழுகாதே.. யாராச்சும் பார்க்கப் போறாங்க..”

“...”

“நான் வேணும்னா கவினோட பேசவா?”

“...”

“அகல்..” என்றவளின் தோளைத் தொட்டதும், தன்னை நிலைபடுத்திக் கொண்ட அகல்யா

“அயம் ஓகே. வா ப்ரேக் டைம் முடியப் போகுது.. கேபினுக்கு போவோம்..”

“எவிரிதிங் வில் பீ ஆல்ரைட்” குகா கூற அவளைப் பார்த்து சோபையாக புன்னகைத்தாள் அகல்யா..
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#16
காதல் செய்வேன் கட்டளைப்படி

காதல் 7

ஒரு நாள் ப்ரேக் டைமின் போது கவின் குகாவை தேடி அவளின் கேபினுக்கு வந்தான்..
“குகா..” என்று அவன் அழைக்க, அவனை நிமிர்ந்து பார்த்தவள்

“ஹாய் கவின்..” என்றாள்

“ஹாய் குகா..” என்றவன் சற்று தயங்க

“சொல்லுங்க கவின்.. என்ன அதிசயம் என்னைத் தேடி வந்துருக்கீங்க?”

“அகல்.. அகல்யா இன்னைக்கு ஆபிசுக்கு வரலை..” என்றதும், குகா

“வரலையா?” என்றாள்

“ தெரியலை போன் போட்டாலும் எடுக்க மாட்றா.. உங்களுக்கு எதாச்சும் தெரியுமான்னு கேட்க தான் வந்தேன்..”

“இல்ல நாங்க பேசியே ரெண்டு நாள் ஆகிடுச்சு..” என்றவள் “இருங்க நானும் கால் பண்ணி பாக்குறேன்.” என்றவள் அகல்யாவின் எண்ணுக்கு அழைக்க, அவள் அதை எடுக்கவே இல்லை..

“எடுக்க மாட்றா.. என்னன்னு தெரியலையே..”

“நானும் மார்னிங்ல இருந்து ட்ரை பண்றேன்.. எடுக்கவே இல்ல.. சரி ஓகே.. உங்ககிட்ட பேசுனா சொல்லுங்க..” என்றவன் அங்கிருந்து சென்றான்.
மதிய இடைவேளையின் போதும் குகா அவளிற்கு இரண்டு முறை அழைத்துப் பார்த்தாள்.. மூன்றாவது முறை அழைக்கும் போது அவளது அழைப்பை அகல்யா எடுத்தாள்..

“ஹே என்ன பண்ற? என்னாச்சு ஏன் ஆபிஸ் வரலை.. எவ்வளவு கால் பண்றேன். எடுக்கவே மாட்ற..” அகல்யாவை பேசவே விடாமல் குகா இங்கே பொரிய, எதிர்முனையில் இருமும் சத்தம் கேட்டதும் தான் குகா

“அகல் உடம்பு சரியில்லையா?” என்றாள்

“ம் ஆமா.. லைட்டா பீவர்..” என்றவளின் குரலே ஒரு மாதிரி இருந்தது.

“ஹாஸ்பிடல் போனியா?”

“இல்ல டேப்லட் போட்டுருக்கேன்.. சரி ஆகாட்டி ஹாஸ்பிடல் போகணும்..”

“திடீர்னு எப்படி பீவர்.. என்னத்த தின்ன எருமை?”

“ப்ச்.. ஒன்னும் சாப்பிடல.. தெரியல என்னன்னு..” என்றாள் அலுப்பாக

“ரொம்ப அலுத்துக்குற.. என்னவாம்?” குகா கேட்க

“ஒண்ணுமில்லடி.. தூங்க விடேன்..”

“உனக்கு போய் போன் செஞ்சேன் பாரேன்..” என்றவள் பேசிக் கொண்டே திரும்ப கவின் சற்றுத் தள்ளி அமர்ந்திருப்பது தெரிந்தது..

“ஹே இரு கவின் அப்பவே என்கிட்ட உன்னைப் பத்தி கேட்டார்.. பக்கத்துல தான் இருக்கார் கொடுக்குறேன்.. பேசு..” என்று கூறிக் கொண்டே கவினின் அருகில் சென்றாள்..

“குகா.. நான் அப்பறம் அவரோட பேசிக்கிறேன்..” என்று அகல்யா கூறியதை அவள் காதிலே வாங்கவில்லை..

“கவின்.. இந்தாங்க அகல்யா தான் பேசுறா..” என்று கவினின் கையில் போனைக் கொடுத்தவள் “பேசிட்டு தாங்க.. நான் அங்க இருக்கேன்” என்றவள் முதலில் அவள் அமர்ந்திருந்த டேபிளிற்கு சென்று உணவை உண்டாள்.

“ஹலோ..” என்று கவின் கூற, அகல்யா பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்..

“அகல்யா..”

“ம்..” என்று மட்டும் அவள் சொல்ல

“ஏன் இன்னைக்கு வரல?”

“சும்மா தான்..”

“வாய்ஸ் ஏன் ஒரு மாதிரி இருக்கு..”

“ஒன்னுமில்ல..”

“அகல்..”

“அப்புறம் பேசுறேன்..” என்றவள் அழைப்பை துண்டித்தாள்..

போனை குகாவிடம் கொடுக்க வந்தான் கவின்.. அவனின் முகம் ஒரு மாதிரி இருக்க, அதை பார்த்த குகா
“உங்க ஆளுக்கு சாதாரண பீவர் தான்.. அதுக்கு ஏன் நீங்க மூஞ்சியை இப்படி தூக்கி வெச்சுருக்கீங்க.. ரெண்டு நாள்ல சரி ஆகிடும்..” என்றாள் சிரித்துக் கொண்டே..

அவள் சொன்னப் பிறகே கவினிற்கு அகல்யாவின் உடல் நிலையைப் பற்றி தெரிந்தது.. குகாவிடம் ஒன்றும் கூறாமல் லேசாக சிரித்துவிட்டு போனை கொடுத்துவிட்டு சென்றான்..
அவனால் உணவை உண்ணவே முடியவில்லை.. முதல் நாள் அவன் அகல்யாவுடன் செய்த வாக்குவாதம் தான் அவன் நினைவில் வந்தது..

வழக்கமாக இருவரும் இரவு போனில் உரையாடுவது போல் நேற்றும் பேசிக் கொண்டிருந்தனர்..
“கவின்.. அம்மா இன்னைக்கும் ஒரு வரன் வந்துருக்குன்னு சொன்னாங்க.. நானும் ஒவ்வொரு தடவையும் எதையாச்சும் சொல்லி சமாளிச்சுட்டு இருக்கேன்.. நீங்க உங்க வீட்டுல பேசுங்களேன்..” என்றாள் தயங்கி தயங்கி..

“...”

“கவின்..”

“ம்.. கேட்டுட்டு தான் இருக்கேன்..”

“எதாச்சும் சொல்லுங்க.. கேட்டுட்டு தான் இருக்கேன்னா என்ன அர்த்தம்..”

“நானும் உனக்கு எத்தனை தடவை சொல்றது அகல்.. கொஞ்ச நாள் வெயிட் பண்ண மாட்டியா?”

“நான் எவ்வளவு நாளானாலும் வெயிட் பண்ண ரெடி தான்.. எங்க வீட்லையும் இப்படி எனக்காக காத்துட்டு இருப்பாங்களா? அதை புரிஞ்சுக்கோங்க.. நான் என்ன நாளைக்கே நம்ம கல்யாணம் நடக்கனும்னு சொல்றேனா..
நம்ம காதலை உங்க அம்மா கிட்ட சொல்லுங்க.. ரெண்டு பேர் வீட்டுலையும் சொல்லிட்டா பிரச்சனை இல்ல.. உங்க தங்கச்சி கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம கல்யாணத்தை வெச்சுக்கலாம்.. நீங்களும் சொல்லாம என்னையும் சொல்ல விட மாட்றீங்க.. அம்மா கேட்டு நான் ஒழுங்கா பதில் சொல்லலை.. அடுத்து அப்பா என்கிட்ட கேட்டார்னா என்னால அவர்கிட்ட உண்மையை மறைக்க முடியாது கவின்.. ப்ளீஸ்.. புரிஞ்சுக்கோங்க..”

“என் தங்கச்சிக்கு இப்போ பார்த்துட்டு தான் இருக்காங்க.. அது கொஞ்சம் செட் ஆகிக்கட்டும்.. இந்த நேரத்துல நம்ம விஷயத்தை சொன்னா, என் தங்கச்சி வாழ்க்கை பாதிக்கப்படும்.. அதை நீயும் கொஞ்சம் புரிஞ்சுக்கோ..”

“உங்க அம்மா, உங்க தங்கச்சின்னு தான் பாக்குறீங்க.. என்னைப் பத்தி நினைக்கவே மாட்டீங்களா கவின்?” என்றவளின் குரல் கரகரத்தது..

“உன்னை என்ன நினைக்காம இருக்கேன்.. தினமும் ஆபிஸ்ல வீட்லன்னு உன்னோட தானே பேசிக்கிட்டு இருக்கேன்.. இதுக்கு மேல வேற என்ன எதிர்ப்பார்க்குற? ஏதோ உன்னை கழட்டிவிட பிளான் பண்ண மாதிரி பேசுற..” என்றான் கோபமாக.

“..”

“இப்போ எதுக்கு அழுதுட்டு இருக்க.. ஒரு வேலை அதான் உண்மையா? இல்ல இப்படி கேட்டு கேட்டு என்னை கடுப்பேத்தி என் வாயாலையே ப்ரேக் அப் செஞ்சுக்கலாம்ன்னு சொல்ல வைக்க பிளான் பண்றியா அகல்யா?” என்றதும் அகல்யாவிற்கும் கோபம் வந்தது..

“கழட்டி விடணும்னு நினைச்சிருந்தா, எங்க அம்மா சொன்ன ஏதோ ஒரு பையனுக்கு ஓகே சொல்லிட்டு போயிருப்பேன்.. இப்படி தினமும் உங்ககிட்ட கெஞ்சிட்டு இருக்க மாட்டேன்.. அவ்வளவு தான் உங்களுக்கு என் மேல இருக்க நம்பிக்கை இல்ல..”

“நான் சொல்லணும் இதை.. நீ தான் என் மேல நம்பிக்கை இல்லாம பேசிட்டு இருக்க.. அப்பா இல்லாத வீட்ல நான் தானே எல்லாம் செஞ்சாகணும்.. இப்போ போய் நான் உன்னை காதலிக்கிறேன்னு சொன்னா, எங்க அம்மாவும் தங்கச்சியும் என்ன நினைப்பாங்க.. வீட்டை பார்த்துப்பன்னு நினைச்சா இப்படி செஞ்சுட்டனு என்னைப் பார்த்து கேட்க மாட்டாங்களா?

என்னோட கடமையை எல்லாம் முடிச்சுட்டு, நம்ம விஷயத்தை சொன்னா, பொறுப்பா தங்கச்சிக்கு செய்ய வேண்டியதை எல்லாம் செஞ்சுட்டான்.. அவன் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழட்டும்ன்னு ஓகே சொல்லிடுவாங்க.. அதுக்கு தான் சொல்றேன் கொஞ்ச நாள் பொறுன்னு..”

“உங்க கடமை தான் முக்கியம்ன்னா, என்னை எதுக்கு லவ் பண்றேன்னு சொன்னீங்க.. அப்போ உங்க அம்மா தங்கச்சி எல்லாம் உங்க நியாபகத்துல வரலையா? குடும்பம் தான் முக்கியம்ன்னு நினைச்சவர் காதலிச்சுருக்கவே கூடாது..”

“ஆமா உன்னை மாதிரி ஒரு செல்பிஷை காதலிச்சிருக்கவே கூடாது.. எவ்வளவு சொன்னாலும் புரிஞ்சுக்காம இருக்க உன்னை லவ் பண்ணேன் பாரு.. என் தப்பு தான் எல்லாம்..”

“ஓ.. ஆமா நான் செல்பிஷ் தான்.. அறிவுகெட்டவ தான்.. உங்களுக்கு ஏத்த அறிவாளி பொண்ணைப் பார்த்து கல்யாணம் செஞ்சுக்கோங்க..” என்றவள் அழைப்பை துண்டித்தாள்.. கட்டிலில் படுத்துக் கொண்டு அழுதாள்..

இரவு முழுவதும் அழுது கொண்டே இருந்ததில் அவளிற்கு காலை காய்ச்சல் வந்திருந்தது.. அலுவலகத்திற்கு விடுமுறை சொல்ல வேண்டும் என்று மூளையில் உரைத்தாலும், அவளால் அதை செய்ய முடியவில்லை.. அவளின் tl கவின் தானே.. அவனிற்கு தான் அவள் மெயில் செய்ய வேண்டும்.. அவன் மேல் இருந்த கோபத்தில் அவள் எதுவுமே செய்யாமல் படுத்து கண்ணீர் விட்டுக் கொண்டே இருந்தாள்.

கவினுக்கும் அகல்யாவிடம் இப்படி பேசியது மனதிற்கு கஷ்டமாக இருந்தது.. அலுவலகத்தில் நேரில் பார்த்து பேசிக் கொள்வோம் என்று அவன் நினைத்திருக்க, அவள் வரவில்லை என்றதும் பல முறை அவன் அவளுக்கு அழைத்தான்.. அவள் அவனின் அழைப்பை எதையும் ஏற்கவில்லை..

குகா அழைத்தப் போது, எப்படியும் கவின் அவளிடம் நான் லீவ் என்று கூறி அழைக்க சொல்லியிருப்பான் என்று நினைத்தே அவளின் அழைப்பையும் அவள் ஏற்கவில்லை.. மதியமும் அவள் திரும்ப திரும்ப கூப்பிடவும் தான் அவளுடன் பேசினாள். குகா, திடீரென்று கவினிடம் போனைக் கொடுத்ததும், அவன் மேல் இருந்த கோபத்தில் பேசாமல் போனை வைத்துவிட்டாள்..

இங்கே கவினிற்கு மிகவும் குற்ற உணர்ச்சியாக இருந்தது.. தன்னிடம் போனில் அவள் எப்படியும் பேச மாட்டாள் என்பதை அறிந்தவன், மதியம் விடுமுறை சொல்லிவிட்டு, அகல்யாவின் ஹாஸ்டலை நோக்கிச் சென்றான்..
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#17
விசிட்டர் வந்திருப்பதாக ஹாஸ்டலில் வேலை செய்யும் ஒருவர் வந்து கூற, யாராக இருக்கும் என்று எண்ணிக் கொண்டே வெளியே வந்தாள் அகல்யா..

கவினை அங்கே அவள் சுத்தமாக எதிர் பார்க்கவில்லை.. அமைதியாக அவன் முன்னால் சென்று நின்றாள்.. அழுது வீங்கிய கண்களுடன், காய்ச்சலும் சேர்த்து அவளை மிகவும் பொலிவிழந்து காட்டியது.. அவளின் முகத்தை பார்த்த கவினிற்கு என்னவோ போல் இருந்தது..
அருகில் இருந்த பெஞ்சில் அமர்ந்தவன் அவளை அமருமாறு கூற, சற்று தள்ளி அமர்ந்துக் கொண்டாள்.

“இப்போ எப்படி இருக்கு? டெம்பரேச்சர் குரைஞ்சிடுச்சா?” என, அவளிடமிருந்து வெறும் “ம்” மட்டுமே பதிலாக வந்தது..

“அயம் சாரி அகல்.. நான் நேத்து ஏதோ ஒரு கோபத்துல அப்படி பேசிட்டேன்..”

“...”

“அகல்யா..” என்றவன் அவளின் கை மீது தனது கையை வைக்க, அதில் சூடு அப்பட்டமாக தெரிந்தது..

“ஹே என்ன இவ்வளவு சுடுது..” என்றவன் அவள் கழுத்தில் கை வைக்கப் போக, அவள் வேகமாக முகத்தைப் பின்னால் இழுத்துக் கொண்டாள்..
அவள் செய்கையில் அதிர்ந்தவன், அதிர்ச்சி விலகாமலே “அகல்” என

“எதுக்கு வந்தீங்க? அதை சொல்லிட்டு கிளம்புங்க..” என்றாள்

“சாரிமா.. நிஜமா நான் மனசுல இருந்து அப்படி சொல்லல.. நான் சொல்றதை நீ புரிஞ்சுக்கமாட்றன்னு கோபத்துல பேசிட்டேன்..”

“ம் சரி.. அவ்வளவு தானே.. நான் போறேன்..” என்றவள் எழுந்துக் கொள்ள, அவள் கையைப் பிடித்து நிறுத்தினான்..

“ப்ளீஸ்.. டோன்ட் பிஹேவ் லைக் திஸ்.. இட்ஸ் ஹர்ட்டிங் ..” என்றான்..

“ரொம்ப சந்தோஷம்.. ஹர்ட் ஆகட்டும்..” என்றவள் அவன் கையை எடுத்துவிட்டு “இனிமே ஹாஸ்டலுக்கு வராதிங்க.. போனும் பண்ணாதிங்க.. “ என்றுவிட்டு, அவன் பதிலை எதிர்பார்க்காமல் அறைக்குச் சென்றாள்..
செல்லும் தன்னவளையே வேதனை சுமந்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் கவின்..

****************
மாலை வேலை முடிந்ததும் வீட்டிற்கு புறப்பட்டுக் கொண்டிருந்த குகா, ஹாஸ்டல் சென்று அகல்யாவைப் பார்த்துவிட்டு வீட்டுக்குப் போவோம் என்று எண்ணினாள்.. மாறனுக்கு அகல்யாவைப் பார்த்துவிட்டு வருவதாக மெசேஜை அனுப்பியவள் ஹாஸ்டலை நோக்கிச் சென்றாள்..
குகா இதற்கு முன் அதே ஹாஸ்டலில் இருந்ததால் அவளை அகல்யாவின் ரூமிற்குள் அனுமதித்தனர்.. இவள் செல்லும் போதும் அகல்யா படுக்கையில் படுத்திருந்தாள்..

“என்ன மேடம் எப்படி இருக்கீங்க?” என்று கேட்டவாறே அவள் அருகில் சென்று அமர்ந்தாள் குகா.. தோழியின் குரலில் கண்ணைத் திறந்தவள், “வாடி..” என்றவாறே எழுந்து அமர்ந்தாள்..

“உடம்பு நல்லா சுடுது.. ஹாஸ்பிடல் போகாம டேப்லட் மட்டும் போட்டுட்டு படுத்துட்டு இருக்கியா?” அகல்யாவின் கழுத்தில் கையை வைத்துப் பார்த்துவிட்டு குகா கூற,

“ப்ச்.. பீவர் தானே.. தானா சரி ஆகிடும்..”

“என்ன ரொம்ப தான் அலுத்துக்குற.. காதல் வந்ததும், என்னைப் பார்த்தா உனக்கு அலுப்பா இருக்கா?” என்று முறைக்க

“நீயும் ஏன் குகா, இப்படி பேசுற.. எல்லாருக்கும் என்னைப் பார்த்தா எப்படி தெரியுது..” என்றவளின் கண்களில் கண்ணீர் நிறைந்தது..

“ஹே அகல்.. நான் சும்மா தான் கிண்டல் பண்ணேன்.. சாரி..”

“...”

“என்னாச்சு.. ஏன் இப்படி அழுகுற? யார் என்ன சொன்னா? கவினோட சண்டையா?”

“...”

“சொல்லு அகல்..” என்று அவள் அழுத்திக் கேட்கவும், முதல் நாள் கவினுடன் நடந்த வாக்குவாதத்தை முழுவதையும்
அழுகையுடனே சொன்னாள் அகல்யா..

“அவனை கழட்டி விட பிளான் பண்ணுறேன்னு சொல்லுறான்.. அப்படி நினைச்சிருந்தா அம்மா சொன்னா எதாச்சும் ஒரு பையனுக்கு ஓகே சொல்லிருப்பேன்ல.. தினமும் இவன்கிட்ட எதுக்கு கெஞ்சிட்டு இருக்கேன்.. அவ்வளவு தான் நம்பிக்கையா அவனுக்கு என் மேல?
அம்மாவும் ஏன் இப்போ கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்றன்னு கேட்டு டார்ச்சர் பண்ணுறாங்க.. என்ன தான் பண்ணுறதுன்னு எனக்கு தெரியலை.. செத்துரலாம் போல இருக்கு..”

“ஹே என்ன லூசு.. இதெல்லாம் ஒரு விஷயம்ன்னு செத்துருவேன் கித்துருவேன்னு பேசுற.. அடி வாங்கப் போற.. அத்தை கிட்ட சொல்லுவோம்..”

“என்ன சொல்றது.. சென்னைக்கே என்னை விட மாட்டேன்னு சொன்னாங்க.. நீயும் ரோஹிணியும் பேசுனதுனால தான் விட்டாங்க.. எல்லாரும் ஒரே ஹாஸ்டல்ல இருக்கோம்ன்னு தான் ஓகே சொன்னாங்க.. இப்போ நான் தனியா இருக்கேன்னு அவங்க ரொம்ப பயப்படுறாங்க.. எனக்கே கில்டியா இருக்கு..
ஒவ்வொரு தடவையும் அவங்க மாப்பிள்ளைப் பத்தி சொல்றப்ப எதாச்சும் ஒரு பொய் சொல்லி வேண்டாம்ன்னு சொல்றதுக்கு.. கவினுக்கு அதெல்லாம் பெருசாவே தெரியலை.. அவன் அம்மா, தங்கச்சி மட்டும் தான் கண்ணுக்கு தெரியுறாங்க.. என்னைப் பத்தி நினைக்கவே மாட்றான்..

இப்போ வந்து நான் தெரியாம சொல்லிட்டேன் சாரின்னு சொல்றான்.. என்ன தெரியாம சொல்லிட்டான்.. என் லவ்வ அசிங்கப் படுத்திட்டு சாரின்னு சொன்னா சரி ஆகிடுமா?” என்றவள் குகாவின் மடியில் படுத்துக் கொண்டு அழுதாள்..
வெகு நேரம் அவளை சமாதனம் செய்து, உணவையும் மாத்திரையும் கொடுத்துவிட்டு “எதையும் நினைச்சு பீல் பண்ணாதே.. கவின் ஏதோ கோபத்துல அப்படி சொல்லிருப்பார்.. அவரே வந்து சாரி கேட்டார் தானே.. கொஞ்சம் பொறுமையா இரு.. எல்லாம் சீக்கிரம் சரி ஆகிடும்.. ஒழுங்கா ரெஸ்ட் எடு.. இதையே நினைச்சு உடம்பை கெடுத்து வைக்காதே..” என்று கூறிவிட்டு அவளிடம் விடைபெற்றாள்..

குகா வீட்டிற்கு வரும் போது, மாறன் இரவு உணவை செய்து டைனிங் டேபிளில் வைத்துக் கொண்டிருந்தான்..
“சாரி.. ரொம்ப லேட் ஆகிடுச்சு.. நீங்களே செஞ்சுட்டீங்களா?” என்றவள் வேகமாக அறைக்குச் சென்று ரெப்ரெஷ் ஆகி வந்தாள்..

“மேடம்.. ப்ரெண்டை பார்க்க போனதும், புருஷனை மறந்துட்டீங்க..” என்று கேலி செய்து கொண்டே இருவருக்கும் இரவு உணவை தட்டில் வைத்தான்.

“இப்படி பொண்டாட்டிக்காக சமைச்சது மட்டுமில்லாம ஊட்டியே விடுற புருஷனை எப்படி நான் மறப்பேன்..” என்றவள் தன்னுடைய ப்ளேட்டை அவன் கையில் கொடுத்து வாயை திறந்து காட்டினாள்..

“கேடி தான்டி நீ..” என்றவனும் அவளிற்கு ஊட்டி விட்டான்..

“சூப்பர் சட்னி.. நல்லா காரமா, எனக்குப் பிடிச்ச மாதிரியே இருக்கு..” என்றவள் சப்புக் கொட்டிக் கொண்டு உண்டாள்..

“நீங்க சாப்பிடலை?” என

“நீங்க மிச்சம் வெச்சா தாங்க நான் சாப்பிட முடியும்.” என்றான் பாவம் போல்..

“ச்சீ.. கண்ணு வைக்காதே.. அதான் எனக்கு உடம்பு தேறவே மாட்டுது..”

“இதுக்கு மேல தேறனுமா? போதும் என்னால இந்த பாரத்தையே தாங்க முடியலை..” என்று கண் அடித்தான்..

“எப்பப்பாரு இதே பேச்சு தான் உங்களுக்கு..”

“சரி அகல்யா எப்படி இருக்காங்க?”

“பரவால்ல.. டெம்பரேச்சர் இருக்கு.. நாளைக்கு சரி ஆகாட்டி ஹாஸ்பிடல் போகணும்..”

“திடீர்ன்னு என்னாச்சு.. கிளைமேட் சேன்ஞ்னாலையோ?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல.. எல்லாம் காதல் படுத்தும் பாடு..”

“காதலா? அகல்யாவா?” என்றான் ஆச்சரியமாக

“என்ன காந்தி செத்துட்டாரா? ரேன்ஞ்ல கேக்குறீங்க.. நம்ம மேரேஜுக்கு முன்ன இருந்தே அவ லவ் பண்றா.”

“நீ என்கிட்ட சொல்லவே இல்ல.. அப்போ ஷாக் ஆகாம எப்படி?”

“வக்கீல் சார், நீங்க என்னோட பேசவே பல நாள் ஆச்சு.. இதுல அகலைப் பத்தி உங்ககிட்ட நான் எப்படி சொல்லுறது..” என்றாள் நக்கலாக..

“பாரேன்.. உன் ப்ரெண்ட்ஸ் ரெண்டு பேருமே லவ் செஞ்சுருக்காங்க.. அவங்களோடவே இருந்த நீ மட்டும் ஏன் இப்படி அரேன்ஜ் மேரேஜ் செஞ்ச?”

“எதுக்கு அதுங்க ரெண்டு பேர் அழறது பத்தாதா? நானும் கூட சேர்ந்து அழனுமா?”

“ஏன்?”

“ஒருத்தி லவ் மேரேஜ் செஞ்சுட்டு தினமும் புலம்பிட்டு இருக்கா. இன்னொருத்தி ஏன்டா லவ் பண்ணோம்ன்னு புலம்பிட்டு இருக்கா..” என்றவள் அகல்யா கவினின் பிரச்சனையை மேலோட்டமாக சொன்னாள்.

“பாவம் அகல்.. அழுதுட்டே இருக்கா..” என்று தோழிக்காக வருத்தப்பட்டாள்.

“எல்லாம் சீக்கிரம் சரி ஆகிடும்..” என்று மனைவிக்கு ஆறுதல் கூறியவன், வேறு பேச்சை மாற்றும் விதமாக

“ரோஹிணிக்கு என்ன பிரச்சனை? என்ன பண்றார் அவ புருஷன்.. எங்க ஊர் பொண்ணை அழுக வைக்கிறாரா? ரோகிணியை ஒரு கேஸ் கொடுக்க சொல்லு.. பார்த்துக்கலாம்..”

“யோவ் வக்கீலு.. உனக்கு கேஸ் எதுவும் கிடைக்கலையா? என் ப்ரெண்ட் வாழ்கையில விளையாடலாம்ன்னு பாக்குறியா? கொன்னுடுவேன்..” மிரட்டலாக கூறினாள்..

“ஜஸ்ட் கவுன்சிலிங் தான்மா கொடுக்க போறோம். டைவர்ஸ் எல்லாம் இல்ல..” மாறான் கூறியதும்,

“நீங்க ஒரு ஆணியும் ... வேண்டாம்.. அவங்களே பேசி கூட சரி ஆகிடுவாங்க.. உங்ககிட்ட கவுன்சிலிங் வந்து எக்ஸ்ட்ரா நாலு பிட்டைப் போட்டு பிரிச்சு விட பாக்குறீங்களா?” என்றாள் குகா..

“இதான்டா மாறா.. நல்லதுக்கே காலமில்ல.. என் பொண்டாட்டியோட தோழி.. எங்க அம்மாவோட தோழியோட பொண்ணு.. எங்க ஊர் வேற.. அது கண் கலங்குதுன்னு பரிதாபப்பட்டு சொன்னா, என்னை தப்பா
 

Harini Madhuravalli

Moderator
Staff member
#18
நினைக்கிறாங்க..” என்று புலம்பினான்.

“உங்க பரிதாபம் ஒன்னும் எங்களுக்கு வேண்டாம்.. பேசாம சாப்பிடுங்க..” என்றவள் அவளின் ப்ளேட்டை கழுவ சென்றாள்..

“ஆமா என்னை லவ் பண்ணலையான்னு கேள்வி கேட்டீங்க? நீங்க ஏன் சார் லவ் பண்ணல?” கிட்சனில் இருந்துக் கொண்டே அவள் கேட்க

“நான் லவ் பண்ணலைன்னு உன்கிட்ட எப்போ சொன்னேன்.. மூணு பொண்ணுங்கள லவ் பண்ணிருக்கேன்..” மாறனும் சத்தமாக பதில் சொன்னான்.

“அடப்பாவி.. இப்போ நான் கொடுக்குறேன் கேஸ்.. என் புருஷன் ஏற்கனவே மூணு பேரை காதலிச்சு ஏமாத்திட்டு, இப்போ என்னை கல்யாணம் செஞ்சுருக்கார்னு.. டிவோர்ஸ் வாங்கிக் கொடுங்க..”

“நான் ரெடி..” என்றான் சிரித்துக் கொண்டே.. அவன் பதிலில் கிட்சனில் இருந்து வேகமாக வெளியே வந்த குகா, அவன் தலையில் நங்கென்று கொட்டினாள்..

“ஸ்.. இருடி.. இதையும் பாய்ன்ட்டா சேத்துக்குறேன்.. புருஷனை அடிச்சு கொடுமை படுத்துறாங்க.. சீக்கிரம் விவாகரத்து கொடுங்கன்னு ஜட்ஜ் அய்யா கிட்ட சொல்லுறேன்.”

“போடா..” என்றவள் “உங்க ஸ்டோரிய சொல்லுங்க.. யார் அந்த மூணு பொண்ணுங்க.” என்றாள்.

“நான் ப்ர்ஸ்ட் இயர் படிக்கிறப்ப பைனல் இயர் படிச்ச அக்காவை தான் முதல்ல லவ் பண்ணேன்.. நான் ப்ரொபோஸ் பண்ணுறதுக்குள்ள அவங்க காலேஜ் விட்டுப் போயிட்டாங்க.. அப்புறம் நான் தேர்ட் இயர் படிக்கிறப்ப, கெஸ்ட் லெக்சரர் ஒருத்தங்க வந்தாங்க.. ஒரு நாள் தான் வந்தாங்க.. அவங்க அழகுல அப்படியே மயங்கிட்டேன்.. அப்புறம் அவங்கள தேடாத இடம் இல்லை. எங்கயும் கிடைக்கலை.. மனச தேத்திகிட்டு சூப் சாங் பாடிட்டு போயிட்டேன்..” என்றான் சோகமாக

“அட ஆன்ட்டி ஹீரோவா நீங்க? உங்கள விட பெரிய பொண்ணுங்களையா சைட் அடிச்சிருக்கீங்க.. சின்னப் பொண்ணுங்க யாரும் உங்க கண்ணுக்குத் தெரியவே இல்லையா?” கிண்டலாக குகா கேட்க

“தெரிஞ்சாளே.. நான் பைனல் இயர் படிக்கிறப்ப, ப்ர்ஸ்ட் இயர்ல ஜாயின்ட் பண்ணா.. கிரீட்டிங் கார்ட் கொடுத்துப் ப்ரொபோஸ் பண்ணலாம்ன்னு நினைச்சு கடைக்குப் போனேன்.. ஒரு கார்ட் நூறு ரூபாய் சொன்னான்.. ரொம்ப காஸ்ட்லியா இருந்துச்சு.. வேண்டாம் ரோஸ் வாங்கிக் கொடுத்தே ப்ரொபோஸ் பண்ணுவோம்ன்னு பூக்கடைக்குப் போனேன்.

ஒரு ரோஸ் கொடுக்குறதுக்கு பதில், ரோஸ் பொக்கே கொடுத்தா நல்லா இருக்கும்ன்னு தோணுச்சு.. அதோட விலை இருநூறு ரூபாய்ன்னு சொல்லிட்டாங்க. இதுக்கு கார்டே பரவாலைன்னு அதை வாங்கிட்டு லவ் சொல்லலாம்ன்னு போறேன்.. எனக்கு முன்ன ஒருத்தன் கார்ட் ரோஸ் ரெண்டையும் கொடுத்து அவகிட்ட ப்ரொபோஸ் செஞ்சுட்டு இருக்கான்..

ரொம்ப கவலையா போச்சு.. சரி இனி நமக்கு லவ் செட்டாகாது.. வீட்டுலையே ஒரு லூச நமக்கு கட்டி வைப்பாங்கன்னு லவ் பண்ணுற ஐடியாவை டிராப் பண்ணிட்டேன்..” என்றதும் குகா

“அட சீதா...” என்றாள்.

“பொதுவா எல்லாரும்.. அட ராமான்னு தானே சொல்லுவாங்க.. நீ என்ன சீதான்னு சொல்லுற..”

“நான் கடவுளை கூப்பிடலை.. உங்களை என் தலையில கட்டி வெச்ச என் தாய் சீதாவை தான் கூப்பிட்டேன்..” மாறனிடம் கூறியவள் “போயும் போயும் இருநூறு ரூபாய்க்கு கணக்கு பார்த்த இவன் தானாமா உனக்கு மாப்பிள்ளையா கிடைச்சான்.. கொடுமை..” என்றாள் போனில் இருந்த தாயின் புகைப்படத்தை பார்த்து..

“உனக்கு ஆயிரம் ரூபாய்க்கு பொக்கே வாங்கித் தரேன் செல்லம்..”

“நீங்க தானே வாங்குவீங்க வாங்குவீங்க..”

“ஒரு கிஸ் கொடு.. லட்ச ரூபாய்க்கு கூட வாங்கித் தரேன்..”

“உங்க பொக்கேவே எனக்கு வேண்டாம்.. ஆளை விடுங்க..” என்றவள் தங்களது அறை நோக்கிச் சென்றாள்.

“ஹே.. இருடி..” என்றவனும் வேகமாக அறைக்குச் சென்று கதவை அடைத்தான்..