காதலிக்க நேரமில்லையே - கதை திரி

#21
வெங்கட் தனது திருவிளையாடலை நடத்திக்கொண்டிருந்த அதேவேளை அதிதியும் அவள் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தாள்,,,, தங்கவேலு தாத்தாவின் வீட்டிற்குள் நுழைந்தவள் முதல்நாள் அமர்ந்திருந்த சோபாவில் அமர்ந்தபடியே வீட்டை நோட்டமிட்டாள்,,, இன்னும் குடும்பத்தில் உள்ள எவருமே டைனிங் டேபிளை நோக்கிவரவில்லை,,, வேலையாட்கள் சமைத்த பதார்த்தங்களை கொண்டுவந்து டைனில்டேபிளில் அடுக்க இவள் மற்றவர்களும் வரட்டுமென அமைதியாக அமர்ந்திருந்தாள்,,,, நேரம் ஆகிக்கொண்டே இருக்க முதலில் தெய்வானை வந்து இவளை பார்த்துவிட்டு திருதிருவென விழித்தபடியே சமையலறைக்குள் நுழைந்துகொள்ள அடுத்ததாக ஜோடி போட்டு வந்தமர்ந்தனர் தங்கவேலு விஜயலக்ஷ்மி தம்பதியினர்,,,, இவள் அவர்களே போதுமென போய் ஒரு சேரை இழுத்துபோட்டு அமர்ந்துகொண்டாள்,,,,

""""""குட்மார்னிங் பாட்டி,,, குட்மார்னிங் தாத்தா"""" இவள் சிரித்தமுகமாய் சொல்ல பாட்டியின் விழிகள் இவள் முகத்தில் எதையோ ஆவலோடு தேட தாத்தா இவள் முகம் பார்க்காமலேயே கேட்டார்,,,

"""""யாரும் இங்க வந்து உறவாடி கெடுக்க வேணாம்,,, வந்தமா இருந்தமா போனோமான்னு இருந்தா போதும்,,, எங்க அந்த கேடிப்பய???? """""

""""""ம்ம்ம்,,, யாரை வெங்கட்டை கேட்குறிங்களா??? அவன் அங்க போயிருக்கான்"""""

""""""அதுசரி,,, இந்த கேடிப்பய அந்ந கேடிப்பய கூட கூட்டு வச்சுக்க போயிருக்கானோ!!!! ஆமா நீ மட்டும் ஏன் இங்க வந்த????"""""" இவர் அவள் முகத்தை பார்த்தபடியே கேட்க அதுவரைக்கும் சிரித்தவள் முகத்தை கடினமாக வைத்துகொண்டு சொன்னாள்,,,,

""""""ம்ம்ம்,,, நீங்க சொன்னதை செய்யத்தான்,,, என்ன புரியலையா!!!!! உறவாடிக்கெடுக்க,,, புல்ஷிட்,, நீங்களாம் திருந்தவே மாட்டிங்களா??? இந்த வோல்ர்ட் எங்கேயோ போயிட்டு இருக்கு,,, இங்க யாரும் யாரையும் கெடுக்கணும்னு அவசியமே இல்ல,, அவன் அவன தனியா விட்டாளே போதும் கெட்டு குட்டிச்சுவரா தான் திரும்பி வருவான்,,, ஆமா தெரியாம தான் கேட்குறேன் இன்னும் எத்தனை வருசம் தான் பழசையே நினைச்சு எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டு இருப்பிங்க???? அட தப்பு தான்ப்பா,,, என் அம்மா அப்பா பண்ணது தப்பு தான்,,, அதுக்குன்னு அவங்க பெரிய கொலைக்குத்தமெல்லாம் பண்ணலையே,,, ஜஸ்ட் லவ் தான் பண்ணிருக்காங்க,,, நீங்க அந்த குடும்பத்தோட நட்பு மட்டும் வச்சுக்க பாத்திங்க,,, பட் என் அம்மாவும் அப்பாவும் அந்த நட்பை அடுத்த ஸ்டேஜுக்கு கொண்டு போயிருக்காங்க,,, அவங்க காதலை சாதி மதம்னு பார்த்து பிரிக்க நினைச்சது நீங்க,,, சொன்னா புரிஞ்சுக்குற கேரக்டர் உங்ககிட்ட இல்லாததால தான் அவங்க வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டதும்,,, அந்த இன்ஷிடெண்ட் முடிஞ்சு இத்தனை வருசத்துல என் அம்மா உங்களையெல்லாம் நெனச்சு எத்தனை முறை அழுதுருப்பாங்க தெரியுமா???? வந்தா வெட்டிக் கொன்னு போட்டுடுவிங்களோன்னு பயத்துல இந்த பக்கமே வரல.... எங்களையும் வரவிடல,,, இப்பவும் ரொம்பவே யோசிச்சு தான் அனுப்புனாங்க,,, நாங்க தான் அவங்களுக்கு நம்பிக்கை கொடுக்குற மாதிரி பேசிட்டு வந்துருக்கோம்"""""இவள் பேசிக்கொண்டே போக ரெங்கசாமி வந்து அவர்களுடன் அமர்ந்தபடி அவள் பேசிவதை கேட்டுவிட்டு சொன்னார்,,,,

""""""எல்லாம் சரி,,, அதையெல்லாம் இப்போ ஏன் சொல்லிட்டு இருக்க நீ???? முடிஞ்சு போனது முடிஞ்சதாவே இருக்கட்டும்,,, ஆமா எங்க உன் அண்ணன்??? அப்பன் வீட்டோட உறவு கொண்டாட போயிருக்கானா????"""""

""""""ம்ம்ம்,,, ஆமா,,, நான் என் அம்மா வீட்டோட உறவு கொண்டாடும் போது அவன் அங்க போறதுல தப்பில்லையே""""""

""""""பேச்செல்லாம் நல்லா தான் இருக்கு,,, ஆமா நீங்க எங்க இருக்கிங்க????"""""

""""""யாரு??? நானும் அண்ணனுமா????"""""

""""""இல்ல உன் அம்மாவும் அப்பாவும்"""""

"""""'அத தெரிஞ்சுட்டு நீங்க என்ன பண்ணப்போறிங்க மாம்ஸ்... ஆமா சாப்பிட வந்தவளை சாப்பிடுன்னு யாரும் சொல்ல மாட்டிங்களா!!!!! என் அண்ணன் சொன்னது சரிதான் போல,,,"""""

""""""ஏது ஏது என்ன சொன்னான் அவன்?????"""""" ஒரே குரலில் தங்கவேலுவும் ரெங்கசாமியும் கேட்க இவள் வயிற்றை பிடித்துகொண்டு கத்தினாள்,,,,

"""""""ஓ மை காட்,,, ஐயோ மாம்,, பசிக்குதுன்னு சொல்லுற பிள்ளைக்கு சாப்பாடு கொடுக்காம கேள்வி மேல கேள்வியா கேட்டு கொல்லுறாங்களேம்மா உன் வீட்டுல,, ஐயோ ஹேரிங்கா வருதே""""" என்றபடி டைனிங் டேபிளிலேயே அவள் தலையை சாய்த்து படுக்க விஜயலக்ஷ்மி பதறியவராய் எழுந்து வந்து அவளை நிமிர்த்தி குடிக்க தண்ணீரை கொடுக்க தெய்வானை அவசரமாக தட்டில் உணவை வைத்து மாமியாரிடம் கொடுத்தாள்,,, அவர் அதனை எடுத்து அதிதிக்கு ஊட்ட அந்தநேரத்தில் வந்து நின்றாள் வர்ணிகா,,,,
 
#22
""""""ஓஓஓஓஓ இவ தான் என் அத்த மகளா???? என்ன இது தலையெல்லாம் சிவப்பு மையை ஊத்தி வச்சுருக்கா!!!! பார்த்தா நல்லா மாடர்ன் பொண்ணா தெரியுதே,,,, வர்ணீஈஈஈஈ உன் உள்மனசு எதையோ நினைக்குதே என்ன என்ன???? ஆமா அதே தான் வேர் இஸ் தட் ஹீரோ... ஹீரோவா காமெடியனா தெரியலையே,,, இவளே காரக்குழம்பை தலையில ஊத்திட்டு வந்துருக்க அந்த பக்கி எந்த குழம்பை ஊத்திட்டு வந்துருக்கோ,,,"""""" மனதிற்குள்ளேயே நினைத்தவளாக சாப்பிட அமர அதிதி வர்ணிகாவை பார்த்தாள்,,, பார்த்தவளுக்கு என்ன தோன்றியதோ மென்மையாக புன்னகைக்க அவளும் பதிலுக்கு சிரிக்கலாமா வேண்டாமா என்றபடி ஒரு புன்னகையை படரவிட்டுவிட்டு வழக்கத்தை விடவும் அமைதியாக சாப்பிட்டு முடித்துவிட்டு நடையை கட்ட ரெங்கசாமியும் சென்றுவிட்டார்,,,,

முதல்நாள் சந்திப்பை வெற்றிகரமாக முடித்தவர்கள் மதிய உணவிற்கு வெளியே சாப்பிட்டுக் கொள்கிறோம்,, இரவு உணவை வெங்கட் தங்கவேலு தாத்தா வீட்டிலும் அதிதி அழகப்பன் தாத்தா வீட்டிலும் முடித்துக்கொள்கிறோம் என காலையிலேயே சொல்லிவிட்டு செல்ல கல்லூரியில் எப்பொழுதும் அமரும் மரத்தடியிலே தர்ஷனும் வர்ணிகாவும் மும்முரமாக பேசியபடி இருந்தனர்,,,, தர்ஷன் சொன்னதை கேட்டுவிட்டு வர்ணிகா ஏதோ பேயைப் பார்த்தவளைப் போல அரண்டு போய் இருக்க தர்ஷன் அவளை உலுக்கினான்,,,
 
#23
காதலிக்க நேரமில்லையே 8

""""""ஏய் எரும,,, ஏன்டி இவ்ளோ ஷாக் ஆகுற நீ??? இப்போ இதை விட்டா வேற வழியே இல்ல இரண்டு குடும்பத்தையும் ஒன்னு சேக்க"""""" அவன் சொல்ல சுயநினைவு வந்தவளாய் அவன் முதுகில் மொத்தினாள்,,,,

""""""அடேய் தடிமாட்டு தாண்டவராயா.... அதுக்குன்னு என் வாழ்க்கையிலயா விளையாடுவ???? ஏற்கனவே ஒரு காதல் நல்லா இருந்த இரண்டு குடும்பத்தை பிரிச்சு வச்சது,,, இப்போ மறுபடியுமா???? அவன் யாரு எப்படியிருப்பான் கேரக்டர் எப்படி எதுவுமே தெரியாது,,, போய் அவனை லவ் பண்ணுனு சொல்லுற!!!! என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது????"""""

""""""ஹேய் ஹேய் வர்ணி கூல் கூல்டி,,,,""""""

""""""செருப்பு பிஞ்சுடும்,,, உன்னப்போய் பெரிய பாசமலர் ரேஞ்சுக்கு என்னப்பெத்த ஆத்தா பேசிட்டு இருக்கு நீ என்னடான்னா தேவையில்லாத வேலையெல்லாம் பார்த்துட்டு திரியுற,,, வர்ற கோவத்துக்கு எட்டிக்கிட்டு மிதிச்சேன்னா வையி,,, மவனே அப்புறம் நீ அவ்வளவு தான்"""""

""""""ஓய்ய்ய்,,, இப்போ எதுக்கு நீ இவ்வளவு டென்சன் ஆகுற???? நீ கேட்டியேன்னு சொன்னேன்,,, லவ் பண்ணுன்னு உன்னைய கட்டாயப்படுத்தவெல்லாம் இல்ல,,, திடீர்னு என் சிறுமூளை பெருமூளையை பெராண்டவும் வந்த ஐடியா இது,,, கட்டாயமா செய்யணும்லா இல்ல,,, அதுவும் இல்லாம நீ வேற அந்த பொண்ணு என் ரேஞ்சுக்கு இல்லைன்னு சொல்லுற""""""

""""''தருதலை தருதலை,,, இருந்தா மட்டும் கட்டிக்கிவியா அவளை"""""

"""""""இரண்டு குடும்பமும் சேர அது ஒரு நல்லவாய்ப்பாக இருக்கும்னா கண்டிப்பா பண்ணுவேன்,,,, சரி முறைச்சுட்டே இருக்காம வா,,, க்ளாஷுக்கு
போலாம் டைம் ஆச்சு""""" அவன் சொல்லிவிட்டு செல்ல கொஞ்சம் சிந்தனைவயப்பட்டவளாய் அவன் பின்னேயே நடந்து சென்றாள்,,,,
போகும் பொழுதே அப்படி என்னதான் யோசித்துக்கொண்டு போனாளோ வகுப்பறையில் போய் அவரவர் இருக்கையில் அமர்ந்ததும் இவனை பார்த்து சொல்லிவிட்டாள்,,,,

"""""எனக்கு சம்மதம்டா,, நீ என்ன சொல்லுற????""""" என்று,,, அவள் சொன்னதை கேட்டதுமே கொஞ்சம் அதிர்ந்து பின் சிரித்து சந்தேகமாக கேட்டான்,,,

"""""ஹேய் என்ன விளையாடுறியா???? சட்டுன்னு ஓகே சொல்லிட்ட,,, உண்மையை சொல்லு நீ அந்த வெங்கட்டை பார்த்துட்டல்ல... ஆளு பார்க்க கெத்தா நல்லா இருந்ததும் ஓகேன்னு சொல்லிட்ட""""""

""""""சீய் பே,,,, நான் எங்கடா பார்த்தேன்,,, காலையில அந்த கலர் மண்டை தான் வீட்டுக்கு வந்தா,,, அப்புறம் தான் நான் காலேஜ்க்கு கிளம்பிட்டேன்ல"""""

""""""என்னமோ சொல்லுற,,, சரி நம்புறேன்,,, ஆமா உனக்கு நிஜமாவே ஓகேவா!!!!!"""""

""""""ஓகேன்னு தான் சொல்லுறேனே,,, ஆமா லவ் பண்ணா இரண்டு பேமிலியும் இணைஞ்சுருமா???? மேற்கொண்டு சண்டை வந்து பிரிஞ்சுட்டா என்ன பண்ணுறது??? எனக்கு பயமா இருக்குடா,,, அவங்க எப்படிபட்ட கேரக்டர்னு கூட தெரியலை"""""

""""""அவனை பார்த்தா எனக்கு தப்பானவனா தெரியல,,, நீ வேணும்னா ஒருமுறை பாரேன்,,, நம்புவ,,, அதுவும் இல்லாம அவன் நமக்கு உதவ வாய்ப்பிருக்குன்னு நினைக்குறேன்,,, நான் வேணும்னா ஒரு டைம் பேசிப்பார்க்குறேன்,,, யூ நோ வாட் அவன் கூட என் ஆளு ஃபேன்னு தான் நினைக்குறேன்,,,,"""""

"""""என்னது!!!!! அப்போ இந்த ஐடியாவுக்கு நான் ஒத்துக்கலைப்பா,,, இத்தனை வருசமா உன்கூடவே என்னால மல்லுக்கட்ட முடியல,, அவன லவ் பண்ணி வாழ்க்கை முழுக்க தலதளபதி ஃபேன் சண்டையை என்னால போட முடியாது""""" வர்ணிகா கடைசியில் முடியாது என்று மறுக்க தர்ஷனும் இது சரிவராதோ என விட்டுவிட்டான்,,, ஆனால் விதி வலியதே,,, அவளறியாமலேயே அவளுக்குள் அவன்பால் ஒரு ஈர்ப்பை ஏற்கனவே உண்டுபண்ணியிருந்தது,,,,

கல்லூரி முடிந்ததும் மறுநாள் கல்லூரியில் ஏதோ பாரம்பரிய திருவிழா என ஒரு விழா நடத்த இன்றைக்கே ஆடிட்டோரியத்தை தயார்ப்படுத்தும் வேலையில் இருந்தனர் சில மாணவ மாணவியர்,,, வாலன்டியர்ஸாக தர்ஷனும் வர்ணிகாவும் பெயர் கொடுத்திருந்தபடியால் அவர்களும் அவ்வேலையிலேயே முனைப்பாக இருக்க எப்போதைக்கும் விட சற்று தாமதமாக தான் வர்ணிகாவும் தர்ஷனும் வீட்டிற்கே சென்றனர்,,,, வர்ணிகா டயர்டாக இருப்பதாக சொல்லி தனது அறையிலேயே உணவை கொண்டுவர சொல்லி உறங்கிவிட்டாள்,,,, அதனால் அவளால் அன்றைக்கும் வெங்கட்டை பார்க்க முடியவில்லை,,, ஆனால் தர்ஷனோ வீட்டிற்குள் நுழையும் பொழுதே அதிதியை பார்த்துவிட்டான்,,,,
 
#24
டிவியை ஓடவிட்டபடி சோபாவில் அமர்ந்துகொண்டு போனில் விரல்களால் விளையாடிக்கொண்டிருந்தவள் இவன் உள்ளே நுழைந்ததுமே திரும்பிப் பார்த்து சிரிக்க தர்ஷனுக்கு அவனறியாமலேயே அவளை பிடித்துவிட்டது,,,, அவள் அப்படியொன்றும் மோசமில்லையே என உள்ளம் சொல்ல கலரிங் செய்திருந்த கூந்தல் மட்டும் கருங்கூந்தலாய் இருந்தால் இவளும் அழகி தான் என தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்,,, நன்றாக இருப்பவளை இந்த வர்ணி ஏன் அத்தனை கேவலமாக வர்ணித்தாள் என தோன்ற எந்த பெண் தான் அடுத்த பெண்ணை அழகென்று சொல்வாள் என அதற்கும் ஒரு காரணத்தை சொல்லிக்கொண்டு வீட்டையே பார்வையால் அளந்துவிட்டு அவளருகில் போய் நின்றான்,,,,

""""""ஹாய்,,, நீ தான் என் தமிழ் மாமா பொண்ணா???? நான் தர்ஷன்""""" என்று கைநீட்ட அவன் கையைப்பற்றி குழுக்கியவள் தன்னை அறிமுகம் செய்தாள்,,,,

""""""நான் அதிதி...."""""

""""""ம்ம்ம்,,, நைஸ் நேம்,,, ஆமா நீ மட்டும் என்ன தனியா உட்கார்ந்திருக்க??? உன் அண்ணன் வரலையா????"""""

"'"""''அவன் அந்த வீட்டுக்கு போயிருக்கான்,,, மார்னிங் அவன் இங்க வந்தான்ல,,, அதான் இப்போ அங்க போயிருக்கான் நான் இங்க வந்துருக்கேன்""""""

"""""அண்ணனுக்கு நல்ல மரியாதை கொடுக்குற போ,,,, சாப்பிட்டியா????""""" என கேட்க மெல்ல சிரித்தவள் பதில் சொன்னாள்,,,

""""""இல்ல இனி தான்,,, யாரையும் காணோம்,, அதான் """"""

""""""அம்மா உன்னை பார்த்தாங்களா???? சரி இங்கேயே வெயிட் பண்ணு நான் ப்ரஸ்அப் ஆகிட்டு எல்லோரையும் கூட்டிட்டு வந்துடுறேன்"""""" என்று சொல்லிவிட்டு தனது அறைக்கு சென்று குளித்து முடித்து வேறு உடைக்கு மாறி கீழே வர அவனுக்கு முன்பாவே மொத்த குடும்பமும் ஆஜராகி இருந்தது,,,, வேதவல்லி அதிதிக்கு எதையோ சிரித்தமுகமாய் பரிமாற இது கனவா இல்லை நனவா என்பது போல பார்த்தபடியே இவன் வந்து அமர்ந்தான்,,,
 
#25
"""""" இப்போதைக்கு எங்களுக்கு பிடிச்சதை சமைச்சிருக்கோம்,,, உனக்கு என்ன பிடிக்குதுன்னு சொல்லு இனி அதையே பண்ணுறோம்,,, ஆமா அவன் எங்க அங்க போயிருக்கானா????""""" பரிமாறியபடியே வேதா கேட்க அவள் ஆமாம் என்பது போல தலையசைத்தாள்,,,,

""""""ம்ம்ம்,,, ஆமா ஆன்ட்டி,,,""""

""""""என்னடா நீ அத்தையை போய் ஆன்ட்டி கீன்ட்டின்னு சொல்லிட்டு நல்லா வாய் நெறையா அத்தைன்னு கூப்பிடு,,, உன் அப்பனை புள்ளை மாதிரி தூக்கி வளத்தவ,,, அவனுக்கு தான் அக்கான்ற நினைப்பே இல்ல,, நீயாச்சும் எங்களை மறக்காம தேடி வந்தியே அதுவே போதும்""""" என்று மீனாட்சி பாசமழையை பொழிய எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிட்டவன் ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தி அவளைப்பார்த்து சிரித்தபடி சாப்பிட்டு முடிக்க அவளும் தன்வேலையை செவ்வனே செய்துவிட்டு கிளம்பினாள்,,,,

இப்படியே அன்றைய நாள் முடிய அடுத்தநாள் சிறப்பாகவே பாடலுடனே விடிந்தது,,,, யெஸ்... இன்றைக்கு தர்ஷன் எழுந்து பாடலை போடுவதற்கு முன்பாவே வெங்கட் கெஸ்ட் ஹவுசில் அவன் அறைக்குள் ஓரு பாடலை அலறவிட,,, அவனுக்கு பதில் பாடலை அதிதி தனதறைக்குள் அலறவிட்டாள்,,,, நன்றாக உறங்கிக்கொண்டிருந்த தர்ஷனும் வர்ணிகாவும் விழுந்தடித்து எழுந்து ஜன்னலை திறக்க சத்தம் வந்த திசையை பார்த்து சிரித்துவிட்டு அதே நிலையிலேயே வீட்டைவிட்டு வெளியேறி கெஸ்ட்ஹவுஸை நோக்கி ஓடி வாசலில் நின்றனர்,,,,

""""""டேய் என்னடா இவங்களும் விஜய் அஜித் ஃபேன்சா"""""

""""""எனக்கு தெரிஞ்சு வெங்கட் விஜய் ஃபேன்,, அப்போ அதிதி!!!!!""""" அவன் விழிக்கும் போதே அதிதி தனதறையை விட்டு வெளிவர வர்ணிகா புரிந்தவளாய் ஓடிச்சென்று அதிதியை கட்டிக்கொன்று சுற்றினாள்,,,,

""""""ஹேய் வாவ்,,, நீயும் தல ஃபேனா!!!! நானும் தல ஃபேன் தான்,,, நான் வர்ணி,,, வர்ணிகா"""""

'"""""நான் அதிதி,,,"""""

""""""ம்ம்ம்,,, தெரியும்,,, தர்ஷன் சொன்னான்"""""" வர்ணிகா சொல்லி சிரிக்க அதிதி இருவரையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்க வர்ணிகா தொடர்ந்து சொன்னாள்,,, தங்கள் இருவரின் நட்பை பற்றியும்,,,, இப்படி இருவரும் பேசிக்கொண்டே இருக்க மறுபுறம் ஓடிய விஜயின் பாடல் கேட்டு தர்ஷன் உள்ளே செல்ல வர்ணிகா பேசிமுடித்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டாள்,,,, இவர்களைப் போலவே தர்ஷனும் வெங்கட்டும் ஒருவழியாக நட்பு பாராட்டி சிரித்துவிட்டு சேர்ந்தபடியே வெளியேற வர்ணிகா கிளம்பியிருந்தாள்,,, வந்தவன் அதிதியை பார்க்க அவன் பார்வையின் அர்த்தம் உணர்ந்தவள் தானாகவே சொன்னாள்,,,,
 
#26
காதலிக்க நேரமில்லையே 9

""""""அவ கிளம்பிபோயிட்டா தர்ஷன்"""""

""""""ஓஓஓஓஓ போயிட்டாளா!!!! ச்ச கொஞ்சம் வெறுப்பேத்தலாம்னு வந்தேன் தப்பிச்சுட்டா,,, ஓகே வெங்கட்,,, ஈவ்னிங் மீட் பண்ணலாம் காலேஜுக்கு டைம் ஆகுது""""" என்றுவிட்டு அதிதியிடமும் சிறுதலையசைப்போடு விடைபெற்று செல்ல அடுத்ததாக அண்ணனும் தங்கையுமாக ஒரு திட்டத்தை தீட்ட ஆரம்பித்துவிட்டனர்,,, அவர்களின் திட்டம் அப்படியொன்றும் பெரிதானது இல்லை,,, தர்ஷன் தீட்டிய அதே திட்டம் தான்,,, தர்ஷனிடம் பேசியபிறகு தான் அந்த எண்ணமே வெங்கட்டிற்குள் வர தங்கையிடம் சொல்ல அவள் என்ன சொல்வதென்று தெரியாமல் கையைப்பிசைந்து கொண்டு அமர்ந்திருந்தாள்,,,,

""""""அண்ணா,,, இதெல்லா டூமச்ண்ணா,,, இந்த வயசுல எனக்கு எதுக்கு கல்யாணம்?????"""""

""""""ஏய் லூசு,,, உன்னை யாரு கல்யாணம் பண்ணிக்க சொன்னது,,, லவ் பண்ணு,,,,""""""

"""""வாட்!!!!! வாட் டிட் யூ சே... ஒரு அண்ணன் மாதிரி பேசு,,, அம்மாவுக்கு தெரிஞ்சா என் தோளை உறிச்சுடுவாங்க"""""

"""""அடடா,,, ரொம்ப தான்டி பயந்தவ நீ??? ஆமா நீ ஊருல இருக்கும் போது எனக்கு ஒருவேளை பார்த்தியே அதை விடவா நான் பண்ணிட்டேன்,,,"""""

"""""ஏய் ஏய்,,, பேச்ச மாத்தாத,,,""""

"""""""நான் சொன்னா கேட்பியா மாட்டியா!!!!! அம்மா அப்பாவுக்காக தானே,,,"""""

""""""கேப்பேன்,,, பட் எப்படி ஒருத்தரை டக்குன்னு லவ் பண்ணுறது??? தர்ஷன் கேரக்டர் எப்படின்னு கூட தெரியாதே,,,, அதுவுமில்லாம அவனுக்கும் பிடிக்கணுமே""""""

'"""""அதெல்லாம் பிடிக்கும்,,,, உனக்கு அவனை பிடிச்சிருக்குல்ல"""""

""""""பிடிச்சிருக்கு,, பட் அவன் கேரக்டர் தெரியாம எப்படி லவ் பண்ணுறது,, அதோட அதெல்லாம் தானா வரணும்,,, ஃபோர்ஸ் பண்ணக்கூடாது""""" அதிதி சொல்ல அவள் சொல்வதிலும் நியாயம் இருப்பது புரிந்தது,,, அதன்பிறகு அவன் தனது வேலைகளில் ஈடுபட காலை உணவை உண்பதற்காக இருவருமே தங்கவேலு தாத்தாவின் வீட்டிற்குள் நுழைய பாட்டியின் அறைக்குள் இருந்து புடவையில் தேவதைப் போல அலங்கரித்து வெளியே வந்தாள் வர்ணிகா,,,, வந்தவளின் விழிகள் அதிதியை பார்த்து சிரித்துவிட்டு வெங்கட்டிடம் செல்ல அவனைப் பார்த்ததும் கொஞ்சம் அசந்து தான் போனாள்,,, ஏற்கனவே அவனைப்பற்றி கேள்வியுற்றதால் அவளறியாமலேயே அவனை நினைத்தவள் அவனின் ஆண்மைக்கலந்த பார்வையில் விழியசையாது அப்படியே நிற்க வெங்கட்டின் நிலையோ அதையும் விட மோசமாக இருந்தது,,,,

அவனுக்கு பிடித்தமாதிரி குடும்பப்பாங்கான முக அமைப்போடும் புடவை கட்டியும் வந்தவளை மேலிருந்து கீழாக இவன் பார்க்க அவன் பார்வையை உணர்ந்தவளின் முகம் குங்குமமாய் மாறியது தடதடக்கும் இதயத்துடன் தட்டுத்தடுமாறி அவள் வர இவன் தன் மனதிற்குள்ளே ஒரு கோட்டையை கட்ட அதனை தகர்த்துவதற்கெனவே வந்து நின்றார் ரங்கசாமி,,,,

""""""அம்மா வர்ணிகா,,, சீக்கிரமே கிளம்பணும்னு சொன்னியே கிளம்பிட்டியா???? அடடே புடவை கட்டணுமா இன்னைக்கு????""""" சத்தமாக பேசியபடியே அவர்வர அதுவரை ஒருவரையொருவர் பார்த்தபடியே இருந்தவர்களின் கவனம் கலைந்தது,,,,

""""""ம்ம்ம்,,, ஆமாப்பா,,, சரி சீக்கிரமா சாப்பிட்டுட்டு வர்றியா இல்ல நானே ஆட்டோ பிடிச்சு போகட்டா????""""""அவள் பேச அதுவரைக்கும் தேவதையென பார்த்தவன் ஒருமாதிரி பார்த்தான்,,,

""""ஆட்டோவில தனியாவா!!!! இல்ல இல்ல வேணாம் வேணாம்,,, காலம் கெட்டு கெடக்கு,,, நானே வந்து அனுப்புறேன்,,, என்றபடி வந்தவர் கீழே விரித்திருந்த கார்பெட் தடுக்கி கீழே விழ பதறியபடியே இவள் ஓடமுடியாமல் ஓட அதற்குள் வெங்கட் அவரை தூக்கி நிறுத்திவிட்டு வலியோடு முகம் சுழித்து நின்றவரை அருகே இருந்த நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்த்த சத்தம் கேட்டு மொத்த குடும்பமும் கூடிவிட்டது,,,,

"""""""ப்பாஆஆ என்னப்பா என்னாச்சு,,, பார்த்து நடக்கமாட்டியா??? ரொம்ப வலிக்குதா???? ம்மாஆஆஆ,,,, எண்ணெய எடுத்துட்டு வாயேன்,,, அப்பா ரொம்ப வலிக்குதா????"""""என்று அவள் பதறியபடியே கேட்க வலியிலும் சிரித்தவர் அவள் தலையை வருடியபடியே சொன்னார்,,,

""""""வர்ணிம்மா,,, எனக்கு ஒன்னும் இல்லைடா,,, கொஞ்சமா கால் பிசைங்கிடுச்சு போல,,, எண்ணெய் போட்டு வழிச்சா சரியா போயிடும்,,, அத உன் அம்மா பார்த்துப்பா,, உனக்கு நேரமாகுதுல்ல ட்ரைவரை கூப்பிட்டுட்டு கிளம்பு""""""

""""""ப்பா உண்மையா தானே சொல்லுற??? ரொம்ப வலிச்சா சொல்லுப்பா ஹாஸ்பிடல் போலாம்"""""
 
#27
""""""எனக்கு ஒன்னுமில்லடா,,, நீ கிளம்பு,,, ஏதோ பங்சன் இருக்குன்னு சொன்னியே""""" என்று அவர் விடாப்பிடியாய் அவளை அனுப்பிவைக்க மனமே இல்லாமல் தான் கிளம்பினாள்,,, வெளியே வந்ததும் தர்ஷனுக்கு போனை போட்டு சொல்லிவிட்டு காரில் ஏற கார் காம்பௌண்டை கடந்து சென்றது,,, வாடிய முகத்தோடு அமர்ந்திருந்தவளை சட்டென்று அக்குரல் அழைக்க அப்பொழுது தான் கவனித்தாள்,,, அக்குரல் வெங்கட்டுடையது என்று,,, ட்ரைவர் சீட்டில் அமர்ந்திருந்தவனை புருவம் உயர்த்தி இவள் பார்க்க காரை ஓரமாக நிறுத்தியவன் அழைத்தான்,,,,

""""""என்ன இப்படி பார்த்துட்டு இருக்க,,, முன்னாடி வா,,, என்னால திரும்பித்திரும்பி பேசமுடியலை"""" என்று சொல்லவும் எதற்க்கெடுத்தாலும் கேள்வி கேட்பவள் இப்பொழுது மகுடிக்கு மயங்கிய பாம்பென எழுந்து முன்னே அமர கார் திரும்பவும் புறப்பட்டது,,,,

""""""ஆமா நீங்க எப்படி கார்ல????"""""

""""""என் மாமனார் அவர் மகளை எப்பவும் தனியாவிடமாட்டாராமே,,,, உண்மையா!!!!!""""""

""""""யாரை சொல்லுறிங்க என் அப்பாவையா????""""""

""""""அவரு தானே உன் அப்பா???""""""

""""""ஆமா பட் என் அப்பா உங்களுக்கு மாமா மட்டும் தானே அது என்ன மாமனார்???? மாமனார்ன்னா வேற மீனிங் வரும் தெரியும்ல""""""

"""""""அதெல்லாம் தெரிஞ்சு தான் சொல்லுறேன்,,, என்ன திருதிருன்னு முழிக்குற??? ஐ ஃபால் இன் லவ் வித் யூ,,,, டூ யூ மேரி மீ????""""" எங்கேயும் ஆரம்பிக்காமல் சட்டென்று அவன் கேட்க வர்ணிகா திடுக்கிட்டவளாய் அவனை விழித்து பார்க்க அவன் புன்னகைத்தபடி சொன்னான்,,,,

""""""யூ நோ வாட்???? என் ட்ரீம் கேர்ள்க்குன்னு சில கேட்டக்ரி இருக்கு,,, அதுல நீ ட்வெண்டி பர்சன்டேஜ் கூட மேட்ச் ஆகல,,, ஆனாலும் ஏன்னு தெரியல உன்ன எனக்கு பார்த்ததுமே பிடிச்சுடுச்சு,,, எப்படியும் உன் அப்பா உனக்கொரு மஞ்சமாக்கானை பிடிச்சு கல்யாணம் பண்ணி வீட்டோட வச்சுப்பாருல்ல,,, அந்த மஞ்சமாக்கானா நானே இருந்துடுறேனே,,, லவ் பண்ணுனு கட்டாயம் எல்லாம் படுத்தமாட்டேன்,,, என்னைப் பிடிச்சுருந்தா சொல்லு வீட்டுல பேசலாம்,,, கல்யாணம் பண்ணிப்போம்,,, அடுத்து கொஞ்சம் கொஞ்சமா காதலிப்போம்,,,, காதலிச்சு கல்யாணம் பண்ணுனா தான் ஊரவிட்டு தள்ளி வைப்பாங்களே நம்ம வீட்டுல,,, என்ன சொல்லுற நீ????"""""

அவன் கடகடவென்று பேசிமுடிக்க பேபே என்று விழித்தவள் கார் நிறுத்தும் சத்தம் கேட்டதுமே எதுவும் சொல்லாமல் விழுந்தடித்துக்கொண்டு கதவை திறந்து ஓட,,, திரும்பி திரும்பி போகும் அவளையே பார்த்தபடி இருந்துவிட்டு காரை எடுக்கப் போக காருக்கு முன்பாக தர்ஷன் முறைத்துக்கொண்டு நின்றான்,,, அவனை பார்த்ததுமே இவன் காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு அவன்புறம் சென்று தன்மனதை மறைக்காது சொல்ல அவனும் சொன்னான்,,, முதல்நாளே வர்ணிகாவும் தர்ஷனும் இரு குடும்பத்தையும் இணைக்க போட்ட ப்ளானை பற்றி சொல்ல அவனை கட்டிக்கொண்டு சிரித்தவன் இவன் காலையில் போட்ட திட்டத்தை சொல்ல தர்ஷனுக்கு கொஞ்சம் கூச்சமாக போய்விட்டது,,,,
அன்றைய நாள் இப்படி இருக்குமென வர்ணிகாவும் சரி தர்ஷனும் சரி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை,,,, வெங்கட் தன் காதலை இப்படி சட்டென்று டவெளிப்படுத்துவான் என வர்ணிகா எதிர்பார்க்கவே இல்லை,,, பார்த்து ஒரு மணி நேரம் கூட ஆகாத நிலையில் காதலை சொல்லி கல்யாணம் வரைக்கும் பேச்செடுப்பவனை என்னவென்று சொல்வது,,,, அவன் பேசிய வார்த்தைகளை நினைத்து இவள் இப்பொழுது வெட்கப்பட்டு கன்னம் சிவக்க தர்ஷன் அவளுடைய செய்கையை பார்த்துவிட்டு கேட்டேவிட்டான்,,,,

"""""ஸோ.... அப்போ உனக்கும் அவனை பிடிச்சுருக்கு""""""

"""""ஹான்,,, என்ன சொன்ன????"""""

""""""சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு சொன்னேன்""""""

""""""தர்ஷா"""""""

"""""தர்ஷன் தான்,,, ஏன்டி நேத்து என்னவோ அந்த பேச்சு பேசுன,,, இப்போ இப்படி உட்கார்ந்துட்டு சிரிச்சுட்டு இருக்க,,, விஜய் ஃபேன்னு சொன்னதுமே வேண்டாம்னு சொன்னல்ல"""""

""""""சொன்னேன் தான்,,, தர்ஷா இந்ந எதிரெதிர் துருவங்கள் தான் ஈர்க்கும்ன்னு சொல்லுவாங்கள்ள,,,, அது உண்மைதானோடா????""""""

""""""என்கிட்ட கேட்டா நான் என்ன சொல்லுவேன்,,, உனக்கு பிடிச்சிருக்கா வெங்கட்டை"""""

""""""உனக்கு அதிதி மேல விருப்பம் இருக்குதானே!!!!! அப்போ நானும் வெங்கட்டையே மேரேஜ் பண்ணிக்கிறேன்டா,,, லவ் எல்லாம் பண்ணல,, அவன் சொன்ன மாதிரி கல்யாணம் பண்ணிட்டு வேணா லவ் பண்ணிக்குறேன்""""""

""""""ஏன் இப்போ காதலிக்க நேரமில்லையோ!!!!!"""""

""""""அதெல்லாம் இருக்கு,,, ஆனால் கூடவே கொஞ்சம் பயமும் இருக்கு,,,, அதிதி நேத்து காலையில ஒன்னு சொன்னாடா,,, எவ்வளவு தெளிவா பேசுறா தெரியுமா???? காதலிக்குறது என்ன பெரிய தப்பான்னு கேள்வி கேட்குறாடா,,,, ஏதேதோ பேசி அவங்க மேல தப்பே இல்ல உங்கமேல தான் தப்புன்னு பழியை தூக்கி தாத்தா பாட்டி அப்பா மேல போட்டுட்டு அவங்கள யோசிக்க வச்சுட்டா""""""

""""""ம்ம்ம்,,, புத்திசாலி தான் போல""""""

""""""புத்திசாலியா இருந்து என்னபண்ண???? இப்படி ஒரு முட்டாப்பயலை கட்டிக்கிட்டு அழணும் போலயே""""" என்று சொல்லிவிட்டு புடவையை தூக்கிப்பிடித்தவாறு ஓட சிரித்தபடியே ஓடியவன் துரத்திபிடித்து மொத்த வழக்கம் போலவே மற்ற மாணவ மாணவிகள் அவர்களை வினோத ஜந்துவைப் போல பார்த்துவிட்டு அகன்றனர்,,,,
 
#28
காதலிக்க நேரமில்லையே 10

அடுத்துவந்த நாட்கள் யாவுமே இருவீட்டினருமே எதிர்பார்க்காதபடி தான் சென்றது,,, வெங்கட்டும் அதிதியும் இப்பொழுது வராமல் முன்பே வந்திருந்தால் இரண்டு குடும்பங்களும் தங்கள் சண்டையை மறந்து திரும்பவும் ஒன்றுகூடியிருப்பனரோ என்னவோ!!!!! முதலில் இருவீட்டினரும் வெங்கட் அதிதி மீது கோபத்தோடு இருந்தாலும் போகப்போக அதனை மறந்தேவிட்டனர்,,, வம்புசெய்து தானாக பேசவைக்கும் குணம்கொண்ட வெங்கட்டும் கேள்வி கேட்டே குழப்பிவிடும் அதிதியும் இருவீட்டினரையும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற போட்டிபோட்டுக் கொண்டு பாசத்தை காட்ட ஆரம்பித்தனர்,,,

திருட்டுத்தனமாக சிவகாமி தமிழரசனோடு கூட அனைவரும் பேசிவிட்டனர்,,, யாருக்கும் தெரியக்கூடாது என்று சொல்லி சொல்லியே வெங்கட் பேசவைத்துவிட்டான்,,,, தாத்தாக்களும் பாட்டிகளும் தங்கள் வீட்டை மறந்து கெஸ்ட் ஹவுசே கதியென இருக்க அத்தைமார்களும் அவ்வப்போது வந்துசென்று கொண்டு தான் இருந்தனர்,,, இதனாலேயே இருவீட்டில் உள்ளவர்களும் முதலில் ஜாடைமாடையாக பேச ஆரம்பித்து வெங்கட் அதிதி முன்னிலையில் நன்றாகவே பேசிக்கொள்ள காலம் கடந்து காதல் மட்டுமல்ல நட்பும் வெல்லத்தான் செய்யும்,,,,

தங்கவேலு விஜயலக்ஷ்மி தம்பதிக்கும் அழகப்பன் மீனாட்சி தம்பதிக்கும் இத்தனை வருட காலத்தில் மனம்விட்டு சிரித்துபேச எத்தனையோ சந்தோஷமான நினைவுகள் இருந்தது,,, பழைய நினைவுகளை அசைப்போடுவதில்
கூட ஆனந்தம் தானே!!!! அப்படி ஒருநாள் அசைப்போடுகையில் தான் எதார்த்தமாக சிவகாமி தமிழரசனுக்குள் வந்த காதலும் அப்படியொன்றும் தவறில்லையே என்று பேசிக்கொண்டனர்,, இத்தனை தலைமுறை நட்பை உறவாக மாற்றிய அவர்களை ஒதுக்கிவைப்பது தவறென்று சொல்ல அப்பொழுது தான் வெங்கட் தனது திருமணத்தை பற்றியே பேசினான்,,, வர்ணிகாவை அவனுக்கு பிடித்திருக்கிறது என்று சொல்ல தர்ஷனுக்கு அதிதியை முடித்துவிட்டால் பிரிந்த குடும்பமும் ஒன்று சேருமே என்ற ஐடியாவையும் கொடுக்க பெரியவர்களும் தங்களுக்குள் ஒருவழியாக பேசிமுடித்தனர்,,,, சிவகாமியும் தமிழரசனும் கூட பல வருடங்களுக்கு பிறகு பிறந்தவீட்டிற்கு வந்துவிட்டனர்,,,, பல வருடங்களுக்கு பிறகு பிள்ளைகளை குழந்தையென ஒவ்வொருவரும் தாங்க முதலில் கோபத்தில் முறுக்கிக்கொண்டு திரிந்த ரங்கசாமியும் வேதாவும் கூட கடைசியில் தம்பியையும் தங்கையையும் அன்போடு அரவணைத்துக்கொண்டனர்,,,,

வர்ணிகா எதிர்பார்க்காமலேயே அடுத்துவந்த ஒரு முகூர்த்தத்தில் வெங்கட்டிற்கும் வர்ணிகாவிற்கும் சிறியதாக குடும்ப உறவுகளின் முன்னிலையில் நிச்சயதார்த்தம் முடிய அடுத்தமாதத்திலேயே திருமணமும் நடந்து முடிந்தது,,,, இத்தனை வேகமாக அனைத்தும் முடிய அதன்பிறகு தான் கச்சேரியே ஆரம்பமானது,,,, ஹா... ஹா.... முதலில் குடும்பத்தை இணைக்கும் முயற்சியில் காதலிக்க நேரமின்றி திரிந்தவர்கள் திருமணத்திற்கு பிறகு விஜய் அஜித் ரசிக போரட்டத்திலேயே காதலிக்க மறந்து செல்ல சண்டையுடனே நாட்களை கடத்தினர்,,,, இவர்களின் சண்டைக்கு ஒருவருக்கொருவர் ஆதரவாக வர்ணிகாவிற்கு அதிதியும் வெங்கட்டிற்கு தர்ஷனும் இருந்தது தான் காமெடியின் உச்சகட்டமே,,,,

செல்ல சண்டைகளும் சீண்டல்களும் தானே வாழ்வின் ஆகச்சிறந்த கேலிக்கைகளே,,,, அந்த சந்தோஷம் தங்களுக்குள்ளும் கிடைக்கவேண்டும் என தர்ஷனும் அதிதியும் கூட நினைக்க காதலிக்க நேரம் கிடைத்தும் எதிர்பாரா எதிர்பார்ப்பிற்காகவும் திருமணத்திற்கு பிறகு காதலிப்போம் எனவும் அவர்களும் காத்திருந்தனர்,,,,

ஒரு காதலால் பிரிந்த குடும்பம் இரு காதல்களால் ஒன்றாகவே மாறியது,,, அடித்தாலும் பிடித்தாலும் நட்பெனும் பயணத்தில் தடைக்கற்கள் எல்லாம் படிக்கற்களே,,,,, ஜாதி மத பேதம் கடந்து காதல் வாழட்டும்,,, கூடவே கொஞ்சம் காதலர்களும் வாழட்டும்,,,

நட்பை சுவாசிப்போம்,,,
நண்பர்களை நேசிப்போம்,,,,,

நன்றி,,,
இவள்
கற்பனைகளின் இளவரசி
பிரியங்கா ராஜா