காதலிக்க நேரமில்லையே - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

பிரியங்கா ராஜா அவர்கள் "காதலிக்க நேரமில்லையே" என்கிற தலைப்போடு போட்டியில் இணைகிறார்கள்......
 
#2
காதலிக்க நேரமில்லையே

பதிவு 1

குளுமையான இளங்காலைப் பொழுதினிலே அடைமழையானது வெளுத்து வாங்கியது,,, ஏசியின் குளிர் வேறு சேர்ந்து அந்த அறையையே இன்னும் இன்னும் குளுமைப்படுத்த குளிருக்கு இதமாக போர்வையை இழுத்துப் போர்த்தி முகம் மட்டும் தெரியும்படி உறங்கிக்கொண்டிருந்தாள்
வர்ணிகா,,, திடுமென்று ஒழித்த சப்தத்தில் விழித்தவளின் புருவங்கள் வளைந்தது,,, கண்கள் சுருக்கி சட்டென்று அவள் திரும்பிப் பார்க்க மூடப்பட்ட சன்னலையும் தாண்டி அந்த சத்தம் கேட்டுக் கொண்டிருப்பது புரிந்தது,,,,

"""""சனியன் சனியன்,, காலையில இவன் தொல்ல பெருந்தொல்லையா போச்சு,,, மவனே இருடி உனக்கு"""" அவசரமாக எழுந்தவள் எழுந்து சென்று சன்னலைத் திறக்க சத்தம் பெரிதாகவே கேட்டது,,,,

"""" சில்லுன்னு சூடாகுறியே
நில்லுன்னு நீ ஓடுறியே
தள்ளுன்னு தள்ளாடுறியே ஓ....
குச்சுபிடி குச்சுப்புடியே உன் கண்ணு குச்சுப்புடியே நீயில்லையே நம்பும்படியே ஓ.. ஓ.. ஓ....""""" தளபதியின் பாடல் தான் பக்கத்து வீட்டிலே பெரிதாக ஒலித்தது,,, இவளுக்கு எதையாவது எடுத்து அந்த வீட்டின் சன்னலை நோக்கி வீசலாம் போல இருந்தது,,,, காரணம் வர்ணிகா தல ஃபேன்,,,, வந்த ஆத்திரத்தை அடக்க முடியாதவளாக வழக்கம் போலவே டீவியை ஆன் செய்து தல படப்பாடலை பாடவிட்டு சத்தத்தை அதிகமாக வைத்து ஒரு ஸ்பீக்கரை தூக்க முடியாமல் தூக்கி சென்று சன்னல் அருகினில் வைத்துவிட்டு கட்டில் மீது ஏறி நின்று ஆட்டம் போட்டாள்,,,,


ஏய்,,,அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு
அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு
அங்காளி பங்காளி வா
இனி ஆட்டம்தான் எப்போதும்
அடி அடி
மங்காத்தா கட்ட போல
இந்த வட்டாரம் நம் கையில்
புடி புடி
தடபுடலா வரும் தன்மான படை படை
அரபிக்கடல் நம்மை கொண்டாடுது,,,
கெடைக்குமடா பல கேள்விக்கு
விடை விடை
உற்சாகம் வந்து கூத்தாடுது....
டானே டர்ராவான்
தவுளது கிர்ராவான்
வந்தான்டா மதுரைக்காரன்....
அலேக்கா விளையாடு
அடிச்சா கேக்க யாரு
ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு
அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு

டங்கு டங்கென்று இவள் குதித்த குதியிலும் போட்ட சப்தத்திலும் கதவை திறந்து கொண்டு அவசரமாக வந்து நின்ற அவளுடைய தாய் தெய்வானை அவள் போட்ட ஆட்டத்தை பார்த்துவிட்டு தலையில் அடித்துக் கொண்டு கதைப்பொத்தியபடியே போய் டிவியை ஆப் செய்ய இவள் ஆடுவதை நிறுத்திவிட்டு குதித்தோடி வந்து நின்றாள்,,,,

""""""ம்ம்மாஆஆஆ,,, எதுக்கும்மா இப்போ அமத்துன,,, அய்யோ அய்யோ,, அந்த பக்கம் இன்னும் பாட்டு சத்தம் கேக்குது,, ரிமோட்டை குடும்மா தல பாட்டை வைக்கணும்"""" ரிமோட்டை அவள் பிடுங்க வர வேகமாக சென்று சன்னலை சாத்திவிட்டு கத்தினார்,,,,

"""""ஏன்டி ஏன்டி,,, காலையிலே ஆரம்பிச்சுட்டியா,,, அவன் எந்த பாட்டை போட்டா உனக்கு என்னடி??? அப்பனுக்கு தப்பாம அப்படியே பொறந்திருக்கு,,, முதல்ல குதிக்குறதை நிறுத்துடி தடிமாடு""""

"""""ம்மாஆஆஆ,,, அப்பாவை இந்த விசயத்துல இழுக்காத,,, அவன் வேணும்னே தான் என்னை வெறுப்பேத்தணும்னு இவன் பாட்டா வைக்குறான்,,, துக்கத்துல இருந்து எழுப்பி விட்டுட்டான் பாரு"""""

"""""வாயிலயே போடப்போறேன் பாரு,, அவன் இவன்னு சொன்ன அப்புறம் அவ்வளவு தான்,, என்ன தான் இருந்தாலும் உனக்கு அவன் அண்ணன் முறை வேணும்"""""

""""'ம்மமாஆஆஆ,, தினம் தினம் ஒரே பாட்டை பாடாத,, அவன் என் எனிமி,,, எனக்கு மட்டும் இல்ல நம்ம வீட்டுக்கே எனிமி,,, """""

"""""உதவாங்கப்போற வர்ணி,,, சத்தம் போட்டு பேசாத,,, தாத்தா காதுல விழுந்தா அப்புறம் அவ்வளவு தான்,,, ஒருநாளாவது எங்களை நிம்மதியா இருக்க விடேன்டி,,, அவங்க தான் ஆகாதவங்கன்னு தெரியுதுல்ல அப்புறம் எதுக்கு காலங்கார்த்தால இப்படி சிலுத்துக்குனு நிக்குற,,, இந்த வீட்டுல பெருசுல இருந்து சிறுசு வரைக்கும் எல்லோர் கூடவும் இதே தொல்லையா போச்சு,,, வீட்டு ஆளுக தான் இப்படின்னா வேலக்காரங்களும் அந்த வீட்டு வேலக்காரங்க கூடவே சண்டையை இழுத்துட்டு வருதுங்க,,, அடியேய் வேலையத்தவளே,,, முதல்ல போய் பல்ல தேய்ச்சு குளிச்சுட்டு கீழ வா,,,, காலேஜுக்கு நேரமாகுதுல்ல,,,""""" வர்ணிகாவின் தலையில் தட்டி சொல்லிவிட்டு அவர் செல்ல வர்ணிகா ஒருவித உதட்டுச்சுழிப்போடு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்,,,,

ஒருவழியாக குளித்துமுடித்து அடர்நீல நிற சுடிதாரை அணிந்து கொண்டு கீழே சென்றவளை மொத்த குடும்பமும் உணவு மேசையில் இருந்தபடியே வரவேற்றது,,, அளவான சிறிய குடும்பம் தான் அவளுடையது,,, தாத்தா தங்கவேலு பாட்டி விஜயலெட்சுமி,,, அப்பா ரங்கசாமி அம்மா தெய்வானை,,, ஒரேயொரு தம்பி அஷ்வந்த்,,,, இவ்வளவு பேரும் சாப்பிடாமல் அவளுக்காக காத்திருக்க அவளோ ஆடி அசைந்து துள்ளித் துள்ளி கீழே வந்து அமர வேலையாட்கள் பரிமாற ஆரம்பித்துவிட்டார்கள்,,,, அப்பா ரங்கசாமி தட்டில் வைத்த இட்லியை முறைத்து முறைத்து பார்த்தபடியே சாப்பிடாமல் இருக்க தங்கவேலுவோ ஒரு வாய் எடுத்து வைத்துவிட்டு ரங்கசாமியை பார்த்தார்,,,

"""""கோபத்தை சாப்பாட்டுல காட்டுறதால என்ன ஆகப்போகுது??? நான் அப்பவே சொன்னேன்,, அந்தப்பய சரியான கேடின்னு,,,"""""

"""""கேடியா இருந்தா இருந்துட்டு போகட்டும்ப்பா,,, நான் அவனை விட கேடிக்கெல்லாம் கேடி,,,, """"" இப்படி இவர் சொல்ல வர்ணிகாவிற்கு புறையேறிவிட்டது,,,, இவரோ பதறியபடி தண்ணீரை எடுத்துக்கொடுக்க பாட்டி அவளுடைய தலையை தட்டினார்,,,

"""""பார்த்தியாடா,,, அவனுங்கள பத்தி பேசுனாலே இப்படி தான்,, பாரு புள்ளைக்கு புறையேறிடுச்சு,,, யம்மா மருமகளே புள்ளைகளுக்கு தெனமும் சுத்திப் போடுன்னு சொன்னேனே செய்யுறியா????""""" தாத்தா கேட்க மனதிற்குள் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே சமத்து மறுமகளாக பதில் சொன்னாள்,,,

"""""அதெல்லாம் பண்ணுறேன் தான் மாமா"""""

"""""என்னத்த பண்ணுற போ,,, அந்த வீட்டு திருட்டுப்பய காலடி மண்ணை எடுத்து என் பேத்திக்கு சுத்திப்போடு,,, அவன் பேத்தி தொடுக்கான் தொடுக்கான்னு இருக்கு,,, அதுக்குன்னே கண்ணு வைப்பான்,,, அப்புறம் நம்ம வர்ணி கூட தானே அந்த வால்முளைக்காத குரங்கு பையன் படிக்கிறான்"""" தாத்தா சொல்ல வர்ணிகா வேகமாக சொன்னாள்,,,

"""""ஆமா தாத்தா,, அவன் கண்ணு தான் கொள்ளிக்கண்ணே,,, நான் வேணா இன்னைக்கு அவன் காலடி மண்ணை எடுத்துட்டு வாறேன்,,, நல்லா செய்வினையாவே செஞ்சுப்போடுவோம்,,, காலையிலேயே பாட்டை போட்டு எழுப்பி விட்டுட்டான்"""" அவள் அவள் பங்கிற்கு ஆதங்கத்தை கொட்ட அவள் பேச்சை கேட்டுவிட்டு உர்ரென்று இருந்த ரங்கசாமியே சிரித்துவிட்டார்,,,
 
#3
இவர்கள் இப்படி பேசியபடியே சாப்பிட்டு விட்டு அவரவர் வேலைக்கு புறப்பட ஆரம்பிக்க அங்கே,, அதுதாங்க வர்ணிகாவின் பக்கத்து வீட்டில் ஒரே உற்சாகமாக இருந்தனர்,,,, ஒரு நிமிசம் இந்த பக்கத்து வீடு யாரு??? இவங்களை ஏன் மொத்த குடும்பமும் வறுத்தெடுக்குதுன்னு சொல்லவே இல்லையே,,, அதை இப்பவே சொல்லிடவா??? இல்லை,,, வேணாம் வேணாம் இப்போதே இரண்டு வீட்டையும் அவங்க அவங்க உறவுகளையும் புளி போட்டு விளக்கிடுறேன்,,,,

அதாகப்பட்டது என்னவென்றால் நம்ம தல அஜித்குமாரின் அதி தீவிர விசிறியான வர்ணிகாவின் தாத்தா தங்கவேலுவும் பக்கத்து வீட்டு பெரியமனுசன் அழகப்பனும் நெருங்கிய நண்பர்கள்,,, நெருக்கம்னா எந்த அளவுக்கு நெருக்கம்னா மீசைக்கார நண்பா உனக்கு ரோசம் அதிகம்டான்னு பாட்டு பாடுற அளவுக்குன்னு வச்சுக்கோங்க,,, இவங்களுடைய நட்பு சிறுவயதில் இருந்தே ஆரம்பிச்சது,,, அதாவது அவர்களுக்கு முந்தைய இரண்டு தலைமுறைகளுக்கு முன்பிருந்தே ஆரம்பமானது,,,, தங்கவேலுவின் தாத்தாவுடைய அப்பாவும் அழகப்பனின் தாத்தாவுடைய அப்பாவும் அவரவர் சொந்த மண்ணை விட்டுட்டு அந்த ஊருக்கு பிழைக்க வந்து எப்படியோ நண்பர்கள் ஆக அவர்களுடைய மனைவிமார்களின் நகைகளை விற்று சிறிய அளவில் ஒரு ஹோட்டல் ஆரம்பிச்சுருக்காங்க,,,

இவர்களுடைய மனைவிமார்களின் சமையல் அங்கிருந்த சுற்றுவட்டாரங்களுக்கு பிடித்துப்போக ஹோட்டல் பெரிய அளவில் மாறியது,,, இருவரின் பிள்ளைகளும் வளர வளர தொழிலால் இலாபமும் ஹோட்டல்களும் அதிகமானது,,, அப்பொழுது தான் இருவரும் சேர்ந்து அருகருகே இடத்தை வாங்கி ஒரே மாதிரி பெரிய அளவில் வீட்டைக் கட்டி குடியேறினர்,,, நட்புப்பயணம் எந்த பிரச்சனையும் இன்றி அடுத்தடுத்த தலைமுறைகளாக தொடர்ந்தது ஒற்றை வாரிசோடு இருந்தது வரைக்கும்,,,, தங்கவேலுவின் அப்பாவிற்கு அவர் மட்டும் தான் வாரிசு,,, அழகப்பனின் தந்தைக்கும் அவர் மட்டுமே வாரிசு,,, ஆனால் இவர்கள் இருவருக்குமோ இரண்டு இரண்டு பிள்ளைகள்,,, ஒரு பெண்ணும் ஒரு ஆணுமாக பிறந்தது,,, தங்கவேலுவுக்கு ரங்கசாமியோடு சேர்த்து சிவகாமி என்ற பெண்ணும்,, அழகப்பனுக்கு தமிழரசன் என்ற மகனோடு வேதவல்லி என்ற மகளும் பிறந்தனர்,,, ரங்கசாமி தான் தங்கவேலுவுக்கு மூத்தவன்,, அடுத்தது தான் சிவகாமி,,, ஆனால் அழகப்பனுக்கோ வேதவல்லி தான் மூத்தவள்,,,

நாட்கள் எல்லாம் அழகாக தான் போய்க்கொண்டு இருந்தது,,, வேதவல்லிக்கு மட்டும் திருமணமாகி இருக்க வீட்டோடு வந்து சேர்ந்தார் ஆதவன்,,,, இருவரின் தொழிலிலும் குடும்பத்திலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கும் போது தான் ஒருநாள் தங்கவேலுக்கும் அழகப்பனுக்கும் அந்த செய்தி தெரியவந்தது,,, உறவாக பழகிய குடும்பத்திலே நெருப்பு மூண்டதும் அப்போது தான்,,, சிவகாமியும் தமிழரசனும் படிக்கப் போகிறேன் என்று ஒன்றாக எங்கெங்கோ சுற்றுவதாக அவர்களுக்கு செய்தி வர என்ன ஏதென்று இருவர் குடும்பமும் விசாரித்தது,,, நட்பால் இணைந்த குடும்பத்திற்குள்ளேயே காதல் என்ற விதை விழுந்துவிட்டது,,, முதலில் உள்ளுக்குள்ளே சந்தோசித்த தங்கவேலுவும் அழகப்பனும் சாதி என்ற ஒற்றை வார்த்தையில் அவர்கள் காதலை ஒதுக்கிவைக்க தங்கள் காதல் விரைவிலேயே இறந்துவிடுமோ என்று அவசர அவசரமாக யாருக்கும் தெரியாமல் ஓடிப்போய் விட்டனர்,, அவர்கள் காதல் என்னமோ வாழ்ந்தது தான்,, ஆனால் இவர்களின் நட்பு தான் அன்றோடு இறந்தே போனது,,, ஆதவனும் ரங்கசாமியும் ஒருவரையொருவர் எதிர்த்துக்கொண்டு நிற்க மகனுக்காக என்று தங்கவேலுவும் மருமகனுக்காக அழகப்பனும் ஒருவரையொருவர் முறைக்க அத்தோடு இழுத்துமூடப்பட்டது தொழிலும்,,, சொத்துக்கள் பாதி பாதியாக பிரிக்கப்பட்டு அதன்போக்கில் நடத்தப்பட்டது,,, பொதுவாக இருந்த வீட்டின் வழி இரண்டாக பிரிக்கப்பட்டு தனித்தனி வழியானது,,, உறவாக பழகியவர்கள் விரோதிகளாக முறைத்துக்கொண்டு திரிய அவர்கள் தலைமுறையும் அதனையே தொடர்ந்தது,,,
யப்பாஆஆ ஒருவழியாக இருவீட்டினருக்கும் இருக்கும் பிரச்சனையை விவரித்து விட்டாச்சு,,, ஒரு குடும்பத்தையும் அறிமுகப்படுத்தியாச்சு,,, இனி அடுத்த குடும்பத்தை பார்க்கப் போகலாம்,,, அழகப்பன் ஐயாவின் வீடு நாம் நுழையும் போதே அனைவரையும் இனிப்போடு வரவேற்றது,,, அழகப்பனும் அவர் மருமகனான ஆதவனும் உற்சாகமாக பேசிக்கொண்டிருக்க அழகப்பனின் மனைவி மீனாட்சியும் அவர் மகள் வேதவல்லியும் மிதமான புன்னகையோடு நின்றனர்,,, ஆதவன் தான் அனைவருக்கும் இனிப்பு கொடுத்தார்,,,,

"""""என்ன மாமா ஒன்னே ஒன்னு எடுத்துக்குறிங்க??? இன்னும் ரெண்டு எடுத்துக்கோங்க""""" சொன்னபடியே ஒரு லட்டை எடுத்து அவர் வாயில் திணிக்க வீடெங்கும் ஒரே புன்னகை மயம் தான்,,,,

"""""மாப்பிள்ளை,,, போதும் போதும்,,,, ஏற்கனவே உடம்புல இருக்க சர்க்கரைக்கே மாத்திரை போடணும்"""""

"""""சேர்த்து போட்டுக்கலாம் மாமா,,,
அத்தை நீங்களும் எடுத்துக்கோங்க,,, வேதா நீ ஏன் அங்கேயே நிற்குற எடுத்துக்கோ,, தர்ஷன் எங்க... இந்த டென்டர் கிடைக்க காரணமே அவன் தானே,,, தர்ஷா... தர்ஷா""""" இவர் சப்தம் போட அடர்நீல கலர் சட்டையும் அதற்கு மேட்சாக பேன்டும் போட்டபடி படிகட்டுகளின் கைப்பிடியில் அமர்ந்தபடி வழுக்கிகொண்டு வந்து நின்றான் அவன்,,, தர்ஷன்,,,

"""""என்ன டாடி,,, ஒரே கும்மாளமும் கொண்டாட்டமுமா இருக்கு,,, என்ன பேபி என்ன மேட்டராம்"""" வந்ததுமே பாட்டி மீனாட்சியின் தோளில் கைபோட்டபடி நின்று அவருடைய கன்னத்தை கிள்ளி முத்தமிட்டவனை வாஞ்சையோடு அணைத்துக்கொண்டார் அவருடைய பாட்டி,,,

"""""பாட்டியும் பேரனும் அப்புறமா கொஞ்சிக்கலாம்,,, டேய் படவா இங்க வாடா,,, கடைசி நிமிசத்துல டென்டர் அமௌண்டை மாத்திவிட சொன்னியே என்ன விசயம்,, இப்போதாவது சொல்லுறியா???"""""

"""""அதெல்லாம் காரணமா தான் தாத்தா,,, அந்த வீட்டு பெருசும் அவர் மகனும் சேர்ந்து நம்ம டென்டர் அமௌண்டை யார் மூலமோ தெரிஞ்சுட்டு நம்ம அமௌண்டை விட ஒரு ரூபா குறைச்சு சொல்லிருக்காங்கன்னு
எனக்கு என் சீபிஐக்கிட்ட இருந்து ரிப்போர்ட் வந்தது,,, அது தான் ஒரு நூறு ரூபாயை குறைச்சு அனுப்புங்கன்னு சொன்னேன்,, டென்டர் நமக்கு கிடைச்சுருச்சு"""" கூலாக சொல்லுவிட்டு அவன் செல்ல வேதவல்லி அவனை விரட்டிப் போய் இரண்டு இட்லிகளை தட்டில் வைத்து ஊட்டிக்கொண்டு இருக்க இங்கே மாமனும் மருமகனும் தங்கள் எதிரிகளை வென்ற சந்தோசத்தில் உற்சாகத்தோடு இருந்தனர்,,,

இறைவன் போடும் இந்த நாடகத்தில் வரப்போகும் திருப்பங்களை எவரால் மாற்ற முடியும்???? பொறுத்திருந்து பார்க்கலாம்,,,
 
#4
காதலிக்க நேரமில்லையே - 2

அந்த பெரிய தெருவையே முழுவதுமாக அடைத்துக் கட்டப்பட்டிருந்த அந்த இரண்டு வீடுகளும் ஒட்டிப் பிறந்த இரட்டையரைப் போல காட்சியளிக்க இரண்டு வீடுகளின் முகப்பில் இருந்த கேட்டுகள் கடகடவென இரு வீட்டு வேலையாட்களின் உதவியோடு திறக்கப்படும் ஓசைக் கேட்க உள்ளே இருந்து இரண்டு கார்கள் மின்னல் வேகத்தில் சறுக்கியபடி தார் சாலையில் இறங்க இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறியது,,,, அந்த சிறிய தார்சாலையில் முன்னும் பின்னுமாக மருகியபடி சென்ற இரண்டும் கொஞ்சம் பெரிதாக இருந்த சாலைகளில் இறங்கியதும் நீயா நானா என போட்டி போட்டுக் கொண்டு சென்றது,,,,

இரண்டு கார்களின் டிரைவர் இருக்கைகளில் மீசை முறுக்கி முறைத்தபடியே ஆதவனும் ரெங்கசாமியும் ஆக்ஸிலேட்டரில் காலை வைத்து மிதித்துக் கொண்டிருக்க,, அப்பன்களின் அருகில் அமர்ந்து உற்சாகப்படுத்தியபடியே தர்ஷனும் வர்ணிகாவும்,,,,

"""""ப்பா,,, ப்பாஆஆஆ வேகமா போப்பா""""வர்ணிகா கீச்சுட்டு கத்த அவள் குரல் கேட்ட தர்ஷன் அவளை முறைத்தபடியே சொன்னான்,,,

""""""ப்பாஆஆஆஆ சீக்கிரம் போங்கப்பா,,, ரெங்கசாமி மூக்காலேயே மொறைக்குறார் பாருங்க,, அந்த மொறைக்குற மூக்கை உடைச்சு வுடணும்"""""

"""""அதுக்கு மூக்குன்னு ஒன்னு இருக்கணுமேடா மவனே,,, அந்தாளுக்கு காலையிலேயே ஒடஞ்சுடுச்சேடா""""" கெக்கலிப்போடு சிரித்தபடி ஆதவன் சொல்ல இவர்கள் பேச்சுவார்த்தையில் ஆதவன் ஒரு நிமிடம் கவனம் சிதறியதிலே ரெங்கசாமி மின்னல் வேகத்தில் விருட்டென்று சென்று அந்த பெரிய பொறியியல் கல்லூரியின் வாசலில் நிறுத்த வர்ணிகா துள்ளிக்குதித்தபடி இறங்கி நின்று அப்பனை கட்டிக் கொண்டு கும்மாளம் போட்டாள்,,,,

"""""அடி தூள்ப்பா,,, ரேஸ்ல உன்ன மிஞ்ச இந்த சுத்துவட்டாரத்துல வேற யாருமே இல்ல போ""""" என்றபடி கன்னத்தில் முத்தமிட ரெங்கசாமியின் முகத்தில் அத்தனை அத்தனை சந்தோசம்,,,, அந்த நேரம் பார்த்து வந்து நின்ற காரில் இருந்து இறங்கிய தர்ஷன் அவர்கள் இருவரையும் எகத்தாளமாய் பார்த்து சிரித்தபடியே ஆதவனை பார்க்க அவர் பார்வையும் இப்போது தர்ஷனிடம்
தான் இருந்தது,,,,

""""""பார்த்தியாடா மவனே,,, கோடிக் கணக்குல லாபம் பார்க்கப் போற டென்டருல தோத்ததை பத்தி இந்த போக்கெத்தவனுக்கு கவலை இல்ல,, ஏதோ பெரிய ஒலிம்பிக்ல தங்கப்பதக்கம் வாங்குவன் மாதிரி மகளோட சேந்து ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கான்,,,,"""""

"""""அட விடுங்கப்பா இப்படியாவது சந்தோசப்பட்டுட்டு போகட்டும்,,, சரி நான் வரட்டுமா???""""" அவன் கேட்க தலையசைத்தபடியே ஆதவன் விடைபெற அவர் போவதை பார்த்ததும் ரெங்கசாமியும் புறப்பட்டு சென்றார்,,,,

கல்லூரியின் முகப்பில் இருந்த விநாகரை வணங்குவதற்காக தர்ஷன் செருப்பை கழட்டிவிட்டு போய் கோவிலின் முன்னே நிற்க பொருமையாக பார்த்துக்கொண்டு இருந்த வர்ணிகாவிற்கு உணவு மேசையில் நடந்த அந்த பேச்சவார்த்தை நியாபகம் வர,,, அவன் சாமி கும்பிட்டு விட்டு திரும்ப வரவும் ஓடிச்சென்று அவன் காலடி மண்ணை எடுத்து கையில் வைத்துக் கொள்ள அதனை பார்த்தவன் வேகமாக வர அவளோ ஓட ஆரம்பித்துவிட்டாள்,,,,
 
#5
வர்ணிகா புள்ளிமானாய் சிரித்தபடியே துள்ளியோட அவளை துரத்தியபடியே ஓடியவன் மரத்தை சுற்றிக் கொண்டு வந்து முன்னே நின்று அவளை வழிமறிக்க அவள் திரும்பி அவனுக்கு போக்கு காட்டிவிட்டு ஓட அவர்களின் அந்த நடவடிக்கையை பார்த்துவிட்டு சிரித்துக்கொண்டே கடந்தனர் மற்ற மாணவர்களும் மாணவிகளும்,,,

ஒருவழியாக தர்ஷன் வர்ணிகாவை எட்டிப் பிடிக்க இவள் ஓட முடியாமல் மூச்சு வாங்கி நின்று அவனை பொறிய ஆரம்பித்துவிட்டாள்,,,,

"""""டேய்,,,, இரு,,, இருடா,,, ப்பா,,, ஹ...ஹ...ஹ.... """"அவள் நின்ற நிலையிலேயே விரல்களை மடக்கி வைத்தபடியே மூச்சுவாங்கிக் கொண்டிருக்க அவன் அவசரமாக அவள் விரல்களைப் பிரித்து பார்த்துவிட்டு கலகலவென சிரிக்க ஆரம்பித்துவிட்டான்,,,, சிரிக்காமல் என்ன செய்ய முடியும் காலடி மண்ணை எடுத்துக் கொண்டு அவள் ஓடிய ஓட்டத்தில் விரல்களின் இடைவெளி வழியாக அத்தனையும் கொட்டி இருக்க அவனால் சிரிக்க மட்டும் தான் முடிந்தது,,,, அவள் அதிகமாக மூச்சு வாங்குவதை பார்த்தவன் அவளுடைய பேக்கை திறந்தே தண்ணீர் பாட்டிலை எடுத்து மூடியை திறந்து நீட்ட மறுபேச்சு பேசாமல் வாங்கி குடித்தவள் நடந்தபடியே ஒரு மரத்தடியை பார்த்து அமர அவளருகே அமர்ந்தவன் தலைகுனிந்து வாய்க்குள் சிரித்தபடியே இருக்க அவனை முறைத்தபடியே இருந்தவள் முதுகில் மொத்த ஆரம்பித்துவிட்டாள்,,,,

""""""எரும எரும,,, எதுக்குடா இப்படி சிரிக்கிற,, அப்படியே எட்டி உதச்சேன்னா வையே,,, எட்டு ஊரு போய் தள்ளி விழுவ,,, சனியே சிரிக்காதடா,,, """"" விடமால் கைவலி வந்து மூச்சு வாங்கி அமர்ந்தவள் முன்னே அவன் பேக்கை திறந்து பெரிதாக ஒரு சாக்லேட்டை எடுத்து நீட்ட வெடுக்கென்று பிடுங்கியவள் அதை பிரித்து சாப்பிட ஹலோ ஒரு நிமிசம் ஒரு நிமிசம் எல்லாத்தையும் சொன்னவ இந்த விசயத்தை சொல்ல மறந்துட்டேன்ல,,, தர்ஷனும் வர்ணிகாவும் அவங்க முன்னோர்களைப் போலவே ரொம்ப ரொம்ப திக் ஃப்ரண்ட்ஸ்... அதுக்குன்னு பிறந்ததில் இருந்தே ப்ரண்ட்ஸான்னு கேட்டா இல்லைன்னு தான் சொல்லுவேன்,,,

சின்ன வயசுல வீட்டுல உள்ள பெரியவங்களோட பேச்சை கேட்டுட்டு வெட்டிக்கவா குத்திக்கவான்னு திரிஞ்சவங்க தான் இவங்களும்,,, பட் ஒரு இக்கட்டான தருணத்தில் இரண்டு பேருமே எப்படியோ திக் ஃப்ரண்ட்ஸ் ஆகிட்டாங்க,,,, அந்த நிகழ்வு இவங்க இரண்டு பேரும் ஸ்கூல் படிக்கும் போது நடந்தது,,, இரண்டு பேருமே டென்த் படிச்சுட்டு இருந்தாங்க,,, வர்ணிகாவுக்கு தர்ஷனை பார்த்தாலே ஆகாது,, தர்ஷனுக்கும் தான்,,, இருவரும் ஒழுவரையொருவர் பார்க்கும் தருணங்கள் யாவும் சண்டை இல்லாமல் இருந்ததே இல்லை,,, வேண்டுமென்றே அவளுடைய ரெக்கார்ட் நோட்டை எடுத்து ஒழித்து வைப்பான்,,, அவள் அமரும் இடத்தில் பபிள்கம்மை மென்றுவிட்டு ஒட்டி வைப்பான்,,, அவளுடைய சைக்கிளில் காற்றை இறக்கிவிடுவான்,,, அவள் விசயத்தில் அவனுடைய குறும்புகளுக்கு அளவே இல்லை,,, அவன் தான் அப்படியென்றால் இவளோ அவனை விடவும் அதிகமாக அவனிடம் வம்பு செய்வாள்,,, க்ளாஸ் லீடர் என்ற முறையில் டீச்சர் அவளை க்ளாஸை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு சென்றால் தர்ஷன் தான் பாவம்,,, அவன் பேசாமல் அமைதியாகவே இருந்தாலும் அவனை தான் மாட்டிவிட்டு தொடை வலிக்க தோப்புக்கரணம் போடவைப்பாள்,,,,

இப்படியே குடும்பத்தின் சண்டையை தங்கள் தோளில் சுமந்து கொண்டு திரிந்தவர்கள் ஒருநாள் எதேச்சையாக தான் தங்களுக்குள் இருந்த அன்பையே உணர்ந்தனர்,,, பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு நடந்து கொண்டிருந்தது,,, எப்பொழுதும் அல்பபெட் ஆர்டரில் தான் எக்ஸாம் ஹால் பிரிக்கப்படும் அதனால் இருவருமே தனித்தனி வகுப்புகளுக்கு தான் செல்வர்,,, ஆனால் அன்றோ பள்ளியின் ஆடிட்டோரியத்திலேயே மேசைகள் போட்டு அமர்த்தப்பட்டிருக்க முதலில் இருக்கும் இவன் பெஞ்சில் கடைசியாக பெயர் வரும் இவளுடைய நம்பர் வர இருவருமே ஒரே இருக்கையில் அமரும் சூழ்நிலை வந்தது,, அன்றைக்கு வர்ணிக்காவிற்கு நேரமே சரியில்லை போல ஹால் சூப்ரவைசராக அவளுக்கு பிடிக்கவே பிடிக்காத ஆசிரியை வந்திருக்க அவள் எப்படி அமர்ந்தாலும் திட்டிக்கொண்டே இருந்தார்,,,

எதையும் கண்டுகொள்ளாதவளாக இவள் பரிட்சை எழுதிக் கொண்டிருக்க திடுமென அவளுடைய பேனா மக்கர் செய்ய ஆரம்பித்துவிட்டது,,, இவளும் உதறி உதறி பேனாவில் இருந்த இங்க் காலியானதே ஒழிய பேனா எழுதியபாடாகவே இல்லை,,, வேறு பேனாவை எடுக்கலாம் என்று பார்த்தால் அன்று பார்த்து அந்த இன்னுமொரு பேனா அவளுடைய பேக்கிலேயே விழுந்துவிட்டது போல,,, இவள் அதை கவனிக்கவே இல்லை,,, என்ன செய்வது என்று யோசித்தவள் அந்த ஆசிரியையிடம் சொல்லிவிட்டு போய் எடுத்துவரலாம் என்று பார்த்தால் இவளுக்கோ பயம்,,, திட்டிவிடுவாரோ என்று,,, வேறு யாரிடமாவது கேட்கலாமா என்று திரும்பினால் அதற்கே அந்த ஆசிரியை அவளை எரித்துவிடுவது போல பார்த்து வைத்தார்,,,

அவளுக்கு பயத்தில் வியர்த்துக் கொட்ட ஆரம்பிக்க எல்லாமே போச்சு என்று தலையில் கைவைத்து அழுவது போல அமர்ந்த நேரம் தான் அவளுடைய பெஞ்சில் அவன் அவனுடைய ஒரு பேனாவை எடுத்து அவள்புறமாக நகர்த்தி வைத்தான்,,,, இவள் ஆச்சர்யத்தோடு கனவா நனவா என தனது கையை கிள்ளிப் பார்க்க நாக்கை துருத்தி
ஒழுங்காக எழுது என்று சைகை காட்டிவிட்டு அவன் எழ அப்பொழுதே அவன் மீது இருந்த மொத்த கோபமும் இவளுக்கு பறந்தோடிவிட்டது,,,,
 
#6
பரிட்சை முடிந்த கையோடு பேனாவை கொடுக்க அவள் அவனை தேட அவனோ அவளை பார்த்துவிட்டு வேகமாக வந்து உரிமையோடு திட்டினான்,,,,

"""""ஏய்ய்ய்,,, உனக்கு அறிவே இல்லையா எக்ஸாமுக்கு போகும் போது எக்ஸ்ரா பென் வச்சுக்க மாட்ட... சரி அது தான் இல்ல பக்கத்துல இருக்க ப்ரண்ட்ஸ்டயாவது கேட்கலாம்ல,,, உட்கார்ந்துட்டு அழுதுட்டு இருந்தா எல்லாம் சரியா போச்சா???? """"" அவன் இப்படி பேச ஆரம்பிக்க இவளும் தங்கள் குடும்ப சண்டையை மறந்து இயல்பாக பேச ஆரம்பித்து இதோ இதோ இன்று பிட்டாலும் பிரிக்கமுடியாத நண்பர்கள் இவர்கள்,,,,

வீட்டில் இருக்கயிலே ஒருவரை ஒருவர் அப்படி திட்டிக்கொள்வர்,,, வெளியே பள்ளி கல்லூரி என வந்துவிட்டாலோ ஒட்டிப் பிறந்த இரட்டையரைப் போல ஒன்றாகவே சுற்றுவர்,,, அவனை யாராவது ஏதாவது சொன்னால் இவளுக்கு பிடிக்காது,,, இவளை யாராவது தொந்தரவு செய்தால் அவனுக்கு பிடிக்காது,,, பள்ளியிலும் கல்லூரியிலும் வர்ணிகாவின் பின்னே காதல் என்று சுற்றி மூன்று பேரின் கையை உடைத்து விரட்டிவிட்டான் இவன்,, அவள் மட்டும் என்னவாம் யாராவது தர்ஷனை பிடிக்கும் என்று சொல்லி வந்தாலே அவ்வளவு தான்,,, பிடித்து வைத்துக் கொண்டு அட்வைஸ் என்ற பெயரில் இவனின் வீர சாகசங்களை பற்றி சொல்லி ஓட ஓட விரட்டிவிடுவாள்,,, அனைத்திலும் ஒற்றுமை தான் ஆனாலும் ஒன்றைத் தவிர,,, ஆரம்பத்தில் சொன்னது போல அவள் தல ரசிகை அவனோ தளபதி ரசிகை,,, அந்த ஒரு டாபிக் மட்டும் வராத பட்சத்தில் உண்மைக்கும் இவர்கள் இரட்டையர்களே,,, ஆனால் வீட்டில் அவளுக்கு இவன் எனிமி,,, இவளுக்கு அவன் எனிமி,,,, இவர்களுடைய இந்த கோக்குமாக்கு வேலை இவர்கள் வீட்டை சேர்ந்த எவருக்குமே தெரியாது,,, தெரியும் படியாக நடந்து கொண்டால் தானே,,,,

தெய்வானைக்கு தர்ஷன் மீது அலாதி பிரியம்,,, வேதவல்லிக்கும் வர்ணிகாவை மிகவும் பிடிக்கும்,,, பார்க்கும் தருணங்களில் எல்லாம் முத்தமழை தான் இருவருக்கும்,,, ஆனால் வேதவல்லியும் தெய்வானையும் பேசிக்கொள்ளமாட்டார்கள்,,, பேசினால் வீட்டில் அடுத்த பிரச்சனை ஆரம்பித்து விடுமே,,, இருக்கும் பிரச்சனையையே இருவராலும் சமாளிக்க முடியவில்லை இதில் இது எதற்கு புதிதாக என்று பிரிந்திருக்க வர்ணிகாவும் தர்ஷனும் தான் கூட்டுக் களவானித்தனம் செய்து கொண்டிருந்தனர்,,,, அவர்களின் கள்ளத்தனம் என்னவென்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்,,,,

தொடரும்....
 
#7
காதலிக்க நேரமில்லையே 3

வர்ணிகாவும் தர்ஷனும் அவர்கள் குடும்பத்தினர் அறியாமலேயை நட்பு பாராட்டிக் கொண்டிருந்தாலும் இருவருமே தங்களுக்குள் ஒரு திட்டத்தையும் வகுத்து அதற்கான தருணத்தை எதிர்நோக்கி காத்திருந்தனர்,,, அது என்னடா அப்படிப்பட்ட பெரிய திட்டம்னு யோசிக்க எல்லாம் வேண்டாம்,,, எல்லாம் அவங்க இரண்டு குடும்பமும் பழையபடி ஒன்று சேரணும்குறது தான்,,, விளையாட்டாக அடுத்தவர் குடும்பத்தில் உள்ளவர்களைப் பற்றி பேசினாலே முறைக்கும் குணாதிசயம் கொண்டவர்களை எப்படி ஒன்று சேர்ப்பது என்று இருவரும் காத்திருக்க இவர்களை ஒன்று சேர்க்கவென்றே இறைவனும் காத்திருந்தார் போல,,,,

கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தேன் உலகத்துல,,,,
இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல,,,,,
யாகு யாகு பண்ணிப் பார்த்தும்
இவனப் போல,,,,
எந்தக் கிரகத்திலும்
இன்னொருத்தன் கிடைக்கவில்ல,,,
நான் டேடிங்க் கேட்டா வாட்ச பார்த்து ஓகேசொன்னானே!!!!!
ஷாப்பிங்க் கேட்டா
இபே.காம் கூட்டிப் போனானே!!!!!
மூவி கேட்டேன் யூ டியுப் போட்டுப்
பாப் கார்ன் தந்தானே!!!!!
பாவமா நிக்குறான்
ஊரையே விக்குறான்!,,,,
மீட் மை மீட் மை பாய் ஃப்ரண்ட்,,,
மை ஸ்மார்ட் அண்ட்
செக்ஸி பாய் ஃப்ரண்ட்
மீட் மை மீட் மை பாய் ஃப்ரண்ட்
மை ஸ்மார்ட் அண்ட்
செக்ஸி பாய் ஃப்ரண்ட்,,,,,

நியூயார்க் நகரின் பளிங்குச்சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த நவீனவகைக் காரில் இருந்து தான் அந்த பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது,,, பாடலுக்கு ஏற்பவே காரை ஓட்டிக் கொண்டிருந்தவனின் இதழ்கள் முணுமுணுக்க அவனுக்கு அருகே இருந்தவளின் முகம் கோபமாக இரத்தச்சிவப்பை காட்ட அதே கோபத்துடன் டேப்பில் ஓடிய பாடலை அணைத்தாள்,,, காற்றில், ஆடிய அவள் கலர் பூசிய கேசம் ஒதுக்கியவளை அவனோ நக்கல் பார்வை பார்த்துவிட்டு சிரிக்க அவளோ கடுப்பானாள்,,,

""""" ஜஸ்ட் ஸ்டாப் இட்ண்ணா,,, நான் ஏற்கனவே செம மூட்அவட்ல இருக்கேன்,, இதுல நீ வேற"""" இப்படி சொல்லிவிட்டு அதன்பிறகு ஆங்கிலத்தில் டஸ்புஸ் என்று பேசி அங்கலாய்த்தவளை பார்த்து கூலாக சொன்னான்,,,,

"""""எதுக்கு அதிதி நீ இவ்வளவு டென்சன் ஆகுற??? இதெல்லாம் புதுசாவா கேட்டுட்டு இருக்க,,, விடு,,, வீட்டுல இருந்தா டென்சன் ஆவன்னு தான் வெளியில கூட்டிட்டு வந்தேன்,,""""" என்று சொன்ன வெங்கட்டை ஏற இறங்க பார்த்தவள் காரை ஒரு இடத்தில் நிறுத்த சொல்லிவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்,,, வெகுநேரம் வரைக்கும் இப்படியே அமர்ந்திருந்தவள் என்ன நினைத்தாளோ!!!! திடுமென திரும்பி கேட்டாள்,,,

"""""ஹேய்,,, ஹேய்.... வெங்கட்ண்ணா,,, ஐ ஹேவ் அன் ஒன் ஐடியா.."""""

"""""என்ன!!!!"""""

"""""நாம ஏன் இந்தியா போகக்கூடாது???"""""

""""" ஆர் யூ க்ரேசி????""""

"""""நோ,,, நோ,,, நோ,, அண்ணா,,, ஐம் பீ சீரியஸ்... லிசன் என்னப்பாரேன்,,, நம்மள தான் அவங்க யாரும் இன்வைட் பண்ண மாட்டாங்க,,, பட் நாம அங்க போய் நின்னா வீட்ட விட்டு போங்கன்னு விரட்டவா முடியும்??? தென் அப்பா அம்மா மேல தான் இரண்டு வீட்டுல உள்ளவங்களுக்கும் கோபமே,,, இதுல நாம என்ன தப்பு பண்ணினோம், ???? அதுவும் இல்லாம அவங்க விரட்டுனா தான் என்ன தப்பு??? கோபம் இருக்க தானே செய்யும்""""""
அவள் அடுக்கிக்கொண்டே போக வெங்கட்டிடம் சிறு அமைதியின் சாயல் தென்பட்டது,,,,

"""""ஏன் அதிதீ,,, இதுக்கு அம்மாவும் அப்பாவும் சம்மதிப்பாங்களா????"""""

"""""ஏன்ணா நீ இப்டி இருக்க??? வாய் கிழிய எத்தனை பேரை பேசிப்பேசியே சாவடிக்குற,,, ஒருத்தனாவது உன் பேச்சுக்கு மறுபேச்சு பேசுறாங்களா!!! யெஸ் பாஸ்... யெஸ் பாஸ்ன்னு உன் பின்னாடியே வரலை,,,"""""

""""" அவங்களும் அம்மாவும் ஒன்னா??? ஆத்தா சிவகாமி ஒரு பார்வை பார்த்தாலே எனக்கு மூச்சா வந்துடும்,,, இந்த விசயம் மட்டும் தெரிஞ்சது!!!! அப்புறம் அவ்ளோ தான்"""""

"""""காமெடி பீசாண்ணா நீ??? நான் வேற காலேஜ்ல உன்ன வச்சு எவ்ளோ கெத்து காட்றேன் தெரியுமா??? இந்த எமியும் ஆன்ட்ரியும் வேற உன்ன என்னென்னமோ நெனச்சு எனக்கு நிறைய வாங்கிக் கொடுக்குறாங்க,,, ஆமா கேட்கணும்னே இருந்தேன்... நீ எமி கூட டேட் போனியா????""""" என்று கேட்டவளை தலையில் தட்டியவன் அவள் வலிப்பது போல முகம் சுருக்கவும் தட்டிய இடத்தை தடவிக் கொடுத்துவிட்டு அவள் உச்சந் தலையில் முத்தமிட்டான்,,,

""""""ஒரு அண்ணன்கிட்ட கேட்குற கேள்வியவா கேட்குற நீ????"""""

"""""நீ மொதல்ல கேட்டதுக்கு பதில் சொல்லு..."""""

"""""" இட் இஸ் இம்பாசிபிள் டூ டெல் எவ்ரிதிங்க் தட் இட் இஸ் அப் டூ டேட் """"

"""""ஆஹான்!!!!! பின்ன வேற எப்படி சொல்லுவாங்க??? அப்படியே வாயிலேயே போடுவேன் பாரு,,, அவ எல்லார்கிட்டேயும் ஓவரா சொல்லிட்டு திரியுறா,,, என்னாலயெல்லாம் ஒரு வெள்ளக்காரிய அண்ணியா ஏத்துக்க முடியாது""""" சொன்னவளை ஏற இறங்க பார்த்தவன் வாய்விட்டு சிரித்தான்,,,
 
#8
"""""ஏய்ய்ய் லூசு,,, என்னப்பார்த்தால் உனக்கு எப்படி தெரியுது??? போயும் போயும் உன் ப்ரண்ட் எமியை கல்யாணம் பண்ணிப்பேன்னு நினைச்சியா???""""

"""""அப்போ அவ கூட எதுக்கு டேட் போன நீ???"""""

"""""அடிப்பாவி டேட் டேட்னு சொல்லாத,,, அம்மாவுக்கு தெரிஞ்சா அப்புறம் என் கதி அதோ கதி தான்,,,""""

"""""அப்போ நீ அவள கூட்டிட்டு போகலையா???"""""

"""""ஜஸ்ட் அவ வீட்டுல இருந்து பிக்அப் பண்ணி ஒரு ரெஸ்டாரண்ட்ல ட்ராப் பண்ணேன்,,, டின்னர்க்கு கூப்பிட்டா சரின்னு ஒரு கர்டசிக்காக போனேன்,,, அவ்வளவு தான்,,, இதுக்கு போய் தான் அவ உன்கிட்ட அப்படி சொல்லிருக்கா"""" என்றவனை சந்தேகமாக பார்த்தவள் நம்பியதற்கு அறிகுறியாக தலையை அசைக்க அவன் தொடர்ந்து சொன்னான்,,,

"""""அதிதி செல்லம் அண்ணனுக்குன்னு என் லைப் பார்ட்னரை பத்தி ஒரு கனவு இருக்குடி,,, அதுல உன் ப்ரண்ட்ஸோ... இல்ல வேற எந்த ப்ளா ப்ளாவோ இன்னும் அந்த கேட்டக்ரிக்குள்ள
வரவே இல்லை"""""

"""""ஓஹோ!!!! சார் அப்படி என்ன கனவோட வலம் வர்றிங்கன்னு தெரிஞ்சுக்கலாமா!!! ஏன் கேட்குறேன்னா!!! மே பி அப்படி ஒரு பொண்ணை பார்த்தா நானும் உனக்கு காட்டுவேன்ல""""

"""""அதெல்லாம் யார்க்கிட்டேயும் சொல்லுறதுக்கு இல்ல,,, சீக்ரட்""""" என்று சொன்னபடியே காரை ஸ்டார்ட் செய்து ஒரு ஸ்டார் ஹோட்டலின் முன்பு நிறுத்தினான்,,,
இருவரும் இறங்கி லாபினை கடந்து நடக்க ஒருவன் ஓடிவந்து வெங்கட்டிடம் பணிவான வணக்கத்தை வைத்துவிட்டு அவனுடைய கார் கீயை வாங்கிக்கொண்டு செல்ல இருவரும் நடந்தனர்,,, வருவோர் போவோர் முகங்கள் எல்லாம் இந்திய மனிதர்களின் சாயல் தான்,,, இந்திய மொழிகளின் கலவையான குரலோடு ஆங்காங்கே ஆங்கிலமும் சேர்ந்து ஒலிக்க அங்கிருந்த ரெஸ்டாரெண்டில் நுழைந்து அவர்கள் எப்பொழுதும் அமரும் இடத்தில் அமர்ந்தனர்,,,

"""""ண்ணாஆஆ,,, நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லலையே""""

"""""என்ன கேட்ட??? இந்தியா போறதை பத்தியா!!!!! யோசிக்கலாம்டா,,, எனக்கும் ஒரு ஐடியா இருக்கு,,, த்ரீ இயர்ஸ் முன்ன ஹோட்டலோட ஓபனிங் பங்சனுக்கு போனது,,, அதுக்கப்புறம் போக வாய்ப்பும் இல்ல,, நம்ம வீட்டுலயும் விடல,,, இப்போ அங்க எப்படி போய்ட்டு இருக்குன்னு பார்க்கவாவது போகணும்னு இருக்கேன்... அப்படியே அவங்களயும் பார்த்துட்டு என்ன முடிவுல இருக்காங்கன்னு தெரிஞ்சுட்டு வந்துடுறேன்""""""

"""""வாட்???? போறேன் வாரேன்னா!!!! ஹல்லோ ப்ரதர்,,, மீ ஆல்சோ ஜாய்ன் வித் யூ,,, என்ன விட்டுட்டு போற வேலையெல்லாம் கனவுல கூட காணாத"""""

""""விளையாடாத அதிதி... அம்மா அலவ் பண்ண மாட்டாங்க""""

"""""ஐயோ,,, நீ ரொம்ப தான் பயந்தவன் பாரு,,, ஒழுங்கா என்னையும் கூட்டிட்டு போற,,, போகணும்,,,""""" அவள் சொல்லிவிட்டு அமைதியாக அவனும் சரி என்பது போல தலையசைத்தான்,,,

"""""சரி,,, சொன்னா நீ கேட்கவா போற... விசாவுக்கு அப்ளை பண்ணிட்டு சொல்லுறேன்,,, ஆமா அம்மாகிட்ட நீ என்ன சொல்லப்போற???""""

"""""உனக்கு ஏன் இந்த தேவையில்லாத கவலை???? வெயிட் அண்ட் ஷீ... ஹேய்,,, அண்ணா,,, உன் லைப்பார்ட்னர் பத்தி கனவு இருக்குன்னு சொன்னியே,,, அதை சொல்லேன்,,, எனக்கு ஆர்வமா இருக்கு"""""

"""""அது தான் சீக்ரட்னு சொன்னேனே"""""

"""""அத தான் நான் காதுலயே வாங்கலையே,,, ரொம்ப சீன் போடாம சொல்லுண்ணா..."""" அவள் ஆர்வத்துடன் கேட்க சொன்னான்,,,,

"""""நல்லா கேட்டுக்கோ,,, நம்பர் ஒன்,,, என் லைப் பார்ட்னர் ஒரு ட்ரெடிசனலான தமிழ் பொண்ணா இருக்கணும்"""""

""""லைக் புடவை கட்டி, பூ வச்சு... !!!!"""""

"""""ம்ம்ம்ம்,,, அப்படி இருந்தாலும் ஓகே தான்,,, பட் ஹோம்லி லுக் இருக்கணும்,,,""""

""""""ஓஹோ!!!!! நெக்ஸ்ட்????"""""

""""""அளவா தான் பேசணும்,,,"""""

""""""ரொம்ப செரமம் டா அண்ணா,,, இந்த நீயூயார்க் சிட்டில நீ கேட்ட மாதிரி பொட்டு வச்சு பூ முடிச்சு புடவை கட்டி அளவா பேசின்னு யாராவது கிடைப்பாங்கன்னா நினைக்குற???? வாய்ப்பில்லை ராஜா... வேணும்னா ஒரு பொம்மையை அது போல பண்ணி உன் பக்கத்துல உட்கார வச்சுக்கலாம்"""""

"""""போடி தடிமாடு,,, இதுக்கு தான் உன்கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன்னு சொன்னேன்"""""

"""""சரி சரி,,, கோவிச்சுக்காம நெக்ஸ்ட் கேட்டக்கிரியை சொல்லு"""""

"""""சொல்லமாட்டேன் போ"""""

""""""சரிண்ணா,,, என் செல்ல அண்ணால,,, சொல்லு சொல்லு"""""

""""""நடிக்காத,,, எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணு"""""

"""""எதுக்கு"!!!!!"""""

"""""நான் சொல்லுறத கேட்டு சிரிக்கமாட்டேன்னு """"""

"""""அய்யய்யே,,, அவ்வளவு காமெடியாவா சொல்லப்போற??? உலகத்தின் மூளை முடுக்குல எல்லாம் அதிதி க்ரூப் ஆஃப் ரெஸ்டாரெண்ட் அண்ட் ஸ்டார் ஹோட்டல்ஸை நடத்திட்டு இருக்குற தி க்ரேட் வெங்கட் ஜீ சரியான காமெடி பீசா!!!!! நம்ப முடியவில்லை,,, இல்லை,,, இல்லை,,,,"""""

"""""ஓவரா பண்ணாத,,, இதுக்கு தான் நான் சொல்லமாட்டேன்னு சொன்னேன்""""

"""""வாய் வரைக்கும் வந்துருச்சுல்ல,,, சும்மா சொல்லிடுண்ணா,,, மொத்தமா சேர்த்து சிரிச்சு கலாய்ச்சுக்குறேன்""""

"""""நீ ஒன்னும் ஆணியே புடுங்க வேணாம்,,, பேசாமல் வா,,, வீட்டுக்கே கிளம்பிப் போகலாம்,,,"""""

"""""அய்யய்யோ,,, வேண்டவே வேண்டாம்ப்பா!!!! அங்க நம்ம ராஜமாதா சிவகாமி அம்மையார் இன்னும் அதே போஸ்ல உட்கார்ந்துட்டு கண்ணீர் வடிச்சுட்டு இருப்பாங்க,,, அதை பார்க்குற சக்தி எனக்கும் இல்ல என் கண்ணுக்கும் இல்ல,,,""""

"""""அப்போ உன் வாலை சுருட்டிட்டு கொஞ்சம் அடங்கி இரு,,, வந்துடுறேன்"""" அவன் எழுந்து நடக்க ஆரம்பிக்க கையைப் பிடித்தபடியே அவசரமாக கேட்டாள்,,,

"""""அண்ணா... அந்த கடைசி மேட்டரை மட்டும் சொல்லிட்டு போவே,,, இல்லைன்னா என் தலை இரண்டா பிளந்துடும்"""" என்றவளிடம் கையை நீட்டி சத்தியம் வாங்கியவன் மெல்ல சொன்னான்,,,

"""""அது ஒன்னுமில்ல,,, அவ என்னைப்போலவே விஜய் அண்ணாவோட டைஹார்ட் ஃபேனா, இருக்கணும்""""" என்று விட்டு செல்ல இவளோ விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்,,,,

"""""டேய் பாவிங்களா!!!! என்னடா இப்போ இப்படியெல்லாம் கிளம்பி வந்துட்டிங்க???? உங்களோட வெறித்தனத்துக்கு அழிவே இல்லையா??? மவனே உனக்கு மட்டும் நீ எதிர்பார்க்குற மாதிரி இல்லாம என்னைப் போல அஜித் ஃபேனா சிக்கட்டும்!!!! ஹா.. ஹா... அந்த கண்கொள்ளா காட்சியை நான் என்னவென்று சொல்லுவேன்""""" மனதிற்குள்ளேயே நினைத்தவளாக அவள் அமர்ந்திருக்க,,, இதோ நானோ எப்படி எப்படி இருக்கும் என்று கற்பனையில் மிதந்துவிட்டேன்,,, யம்மாஆஆ அதிதி,, அண்ணனை நினைச்சு குதூகலிச்சியே,, உன்னோட நிலையை கொஞ்சம் எண்ணிப்பார்க்காமல் விட்டுட்டியே,,, சரி,,, நடப்பதெல்லாம் நன்மைக்கே,,,,

தொடரும்,,,,,
 
#9
காதலிக்க நேரமில்லையே 4

வெங்கட்டின் கார் சீறிப்பாய்ந்து வந்தது வீட்டை நோக்கி,,, அவனருகிலேயே அதிதியும் அமர்ந்திருந்தாள்,,, கைவிரல்களில் இருந்த நகங்களை யாவும் கடித்துக் குதறியபடி இருந்தவளை தலையில் தட்டியவன் வேகமாக கேட்டான்,,, இத்தோடு அவன் இப்படி கேட்பது எட்டாவது முறை,,, அவளோ அவன் கேள்விக்கு அதே பதிலை தான் சொன்னாள்,,,,

""""""உன்ன யாருடி இப்போ அம்மாகிட்ட இத சொல்ல சொன்னது???? நான் தான் சரியான நேரம் பார்த்து சொல்லுறேன்னு சொன்னேன்ல"""""

""""" ண்ணாஆஆ,,, தலையில அடிக்குற வேலையெல்லாம் வச்சுக்காத,,, நானும் பார்த்துட்டே இருக்கேன் நாளைக்கு மார்னிங் ப்ளைட்ட வச்சுட்டு இன்னும் சொல்லாம திரியுற,,, அதான் நானே போனை போட்டு சொன்னேன்"""""

"""""நல்லா சொன்ன போ,,, அங்க அவங்களுக்கு பீபி ஏறிடுச்சாம்,,, மவளே அம்மாவுக்கு மட்டும் எதாவது ஆகட்டும்"""""

"""""சீய்,,, வாயைக் கழுவுண்ணா,,,""""" இரண்டு பேரும் முடிந்த அளவிற்கு காரிலேயே சண்டை போட்டுவிட்டு வீட்டிற்குள் நுழைய வீட்டு தோட்டக்காரனான ராபின்சன் ஓடிவந்து அவன் மொழியில் வெங்கட்டின் காதில் எதையோ சொல்லிவிட்டு செல்ல பதற்றமாக வந்தவன் இதழில் புன்னகையை கூட்டிக்கொண்டு அதிதியின் கையைப் பற்றி குழுக்கினான்,,,,

""""""அடியே என் தங்கச்சி தங்கம்,,,, ராஜமாதா நாம இந்தியா போக பர்மிசன் கொடுத்துட்டாங்களாம்டி"""""

"""""ஹேய்,,, நிஜமாவா!!!! என்னண்ணா சொல்லுற????"""""

""""""மம்மிக்கும் டாடிக்கும் பேச்சுவார்த்தை போயிருக்கும் போல,,, அதைவேற அவங்க சீக்ரட்டா இருக்கட்டும்னு தமிழ்ல பேசிருக்காங்க,,, அதை ராபின்சன் கேட்டுட்டு வந்து என்கிட்ட ஒப்பிச்சுட்டான்""""" என்று சொன்னவனை
சந்தேகமாக பார்த்தவள் மனதில் தோன்றியதை கேட்டே விட்டாள்,,,,

"""""ஏது ஏது???? நம்ம அம்மாவும் அப்பாவும் தமிழ்ல பேசினதை இந்த வெல்வட் மூச்சி கேட்டுட்டு வந்து ஒப்பிச்சுச்சாக்கும்??? யாருக்கிட்ட காது குத்துற??? பார்த்தியா ஏற்கனவே குத்தி போடவேண்டியது எல்லாம் போட்டு தான் இருக்கேன்""""""

"""""ஹா.. ஹா... ஹவ் ஃபன்னி,,,, இதோ பாரு செல்லம்,,,, ராபின்சன் நான் வேலைக்கு வச்ச ஸ்பை,,, அன்ட் தென் நீ சொன்னது போல அந்த வெல்வட் மூஞ்சியோட டாடி சாட்சாத் சுத்த தமிழன்,,, மதுரைப்பக்கம் தான்,,, வேலைக்கு வந்த இடத்துல வெள்ளக்காரியோட லவ்வாகி பெறந்தது இப்படி ப்யூர் பிங்கா நிக்குது,,, அறைகுறைத் தமிழ்ல அழகாகவே பேசுவான்,,,"""""

"""""பாரேன்,,, ப்ராடு ப்ராடு,,, வீட்டுக்குள்ளேயே ஸ்பை வச்சுட்டு திரியுற????""""" சொன்னபடியே இருவரும் லிஃப்டிற்குள் புகுந்து பர்ஸ்ட் ப்ளோரில் வெளியே வந்தனர்,,, ஹாலில் அமர்ந்திருந்த அப்பா தமிழரசை பார்த்துவிட்டு கூப்பிட்டபடியே சென்று அவருக்கு அருகினில் அமர்ந்தனர்,,,,

""""ஹாய் டாட்,,,, ஹவ் ஆர் யூ"""""

""""""ஹாய் பாப்ஸ்""""" இருவருமே அவரவர் அழைக்கும் முறையில் அழைத்துவிட்டு அமர தமிழரசனோ இயல்பாக புன்னகைத்துவிட்டு சொன்னார்,,,,

"""""சோ,,, நான் பெத்த தங்க ரதம் இரண்டும் வீட்டை தேடி வரணும்னா ஒன்னு அம்மாவுக்கோ இல்லை அப்பாவுக்கோ உடம்பு சரியில்லாம இருக்கணும் அப்படி தானே????"""""

"""""அய்யோ பாப்ஸ்... ஏன் இப்படியெல்லாம் பேசுறிங்க???? எனி திங் எல்ஸ்!!! மாம் ஏதும் சொன்னாங்களா!!!! ஆமா வேர் இஸ் மாம்??? ரூம்லயா????""""" அதிதி கேட்க தமிழரசன் சொல்வதற்கு முன்பாகவே வெங்கட்டிடம் இருந்து பதில் வந்தது,,,,

""""""ஹுஹும்ம்,,, கிட்சன்ல"""""" அவன் அப்படி சொன்னது தான் தாமதம்,,,, லிப்ட் ஓபன் ஆக அதனுள்ளே இருந்து ஒரு ட்ராலி வடிவிலான டேபிளை தள்ளிக்கொண்டு வந்தார் சிவகாமி,,,

"""""ஓய்ய்ய்,,, மாம்!!!! என்ன உன் பையன் வாரான்னு சொன்னதும் ஓடி ஓடி சமைச்சியாக்கும்????"""""

"""""அதுதான் நாளைக்கே அவனை இங்க இருந்து தள்ளிக்கிட்டு போகப்போறியேடி தடிமாடு""""" மூவருக்கும் காபியை கலந்து கொடுத்தபடியே அவர் சொல்ல அதிதி சிரித்தாள்,,,,

""""""எல்லாம் உனக்காக தானே மாம்,,, சொல்லுங்க பாப்ஸ்... நீங்களும் இத்தன வருசமா சொல்லிட்டே தான் இருக்கிங்க,,, கேட்குறாங்களா??? ஒரு மந்த்ல ட்வெண்டி எயிட் டேஸ் அவங்க பேமிலி போட்டோவை வச்சு அழுதுட்டே இருக்கல,,,மத்த மந்தாவது டூ ஆர் த்ரீ டேஸ் ரெஸ்ட் கிடைக்கும்,,, இதுல பிப்ரவரி எல்லாம் அவ்வளவு தான்,,, இதுக்கு பயந்தே தான் அண்ணனும் நானும் வீட்டுப்பக்கம் வர்றதே இல்ல"""""

""""""ஊரு சுத்துறதுக்கு காரணம் சொல்லுறா பாருங்க உங்க பொண்ணு"""""
 
#10
"""""டேய் அண்ணா,,, இப்போ மட்டும் வாயை மூடிட்டு சும்மா இருப்பியே,,, தங்கச்சிக்கு சப்போர்ட் பண்ணுடா""""

""""ஹான்!!!! எக்ஸ்க்யூஸ் மீ,,, எதாவது சொன்னிங்களா????"""""

""""""நடிப்பு நடிப்பு,,, ஆளப் பாரு,, பாப்ஸ் நீங்களாவது எனக்கு சப்போர்ட் பண்ண கூடாதா????"""""

""""""அப்பாவோட ஃபுல் சப்போர்ட் எப்போவுமே உனக்கு தான்டா கண்ணம்மா....""""" என்று தமிழரசன் சொல்ல ஏகத்தாளமாய் புன்னகைத்தவள் அண்ணனின் பார்வை உணர்ந்து சிரித்தபடியே தாயை கட்டிக்கொண்டாள்,,,,

"""""பாப்ஸ்... போங்க பாப்ஸ் எப்போ பாரு அம்மாவை வம்பு பண்ணிட்டு""""

"""""டாடிக்கு இன்னும் பதினெட்டு வயசுன்னே நினைப்பு,, இல்ல அதிதி"""""

""""""பாப்ஸ்க்கு பதினெட்டுன்னா அப்போ நம்ம மாம்க்கு பதினாறா???? பதினாறு வயசு வந்து மயிலே மயிலே எங்கப்பாவ பாடாய்படுத்துதடி மயிலே மயிலே""""" அதிதி பாட சிவகாமியோ வெட்கம் வந்தவராக அவளை செல்லமாக அடித்துவிட்டு முகம்மூடி சிரிக்க தமிழரசனும் மகளின் குறும்புப்பேச்சை தடுக்க என்னாதவராய் அவள் தலையை வருடிக்கொடுத்துவிட்டு போனை எடுத்தபடியே அவருடைய அறையை நோக்கி செல்ல அதன்பின்னர் தாயும் பிள்ளைகளுமாய் பேசிக்கொண்டு இருந்தனர்,,,,

முதலில் சிவகாமிக்கு தன் பிள்ளைகளை தான் பிறந்த மண்ணுக்கு அனுப்ப விருப்பமில்லை தான்,, ஆனால் எத்தனை நாளைக்கு தான் அவர்களை போகவிடாமல் தடுக்க முடியும்,,, அவர்களின் உயிருக்கு தங்கள் இருவரின் குடும்பத்தினர்களால் ஏதேனும் ஆகிவிடுமோ என்று பயந்தவர் எத்தனை நாளைக்கு தான் இப்படி மறைந்தே திரிய வேண்டும் என்று தைரியமாக அனுப்பிவைக்க சம்மதித்தார்,,, கூடவே சிறு நப்பாசையும் தான் ஒருவேளை பேரக்குழந்தைகளை பார்த்தபிறகாவது தங்கள் மீதுள்ள அவர்கள் கோபம் தனிந்து தங்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்களா என்று,,, எது எப்படியோ இருவரும் நியூயார்க்கை விட்டு புறப்பட தயாராகிவிட்டனர்,,,,

""""" ரத்தத்தின் ரத்தமே,, என் இனிய உடன் பிறப்பே,,, சொந்தத்தின் சொந்தமே நான் துடிக்கும் உயிர் துடிப்பே,,, அம்மாவும் அப்பாவும் எல்லாமே நீ தானே அன்பான உறவல்லவா??? செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்,,,"""""" என்று பாடிக்கொண்டே இடித்து இடித்து நடந்தவனை எட்டிக்கொண்டு ஒரு மிதி மிதித்துவிட்டு சொன்னாள்,,,

""""""இடிக்காம வாடா தர்ஷா... ஏற்கனவே செம்ம கோவத்துல இருக்கேன்,,, என்கிட்ட நல்லா வாங்கி கட்டிக்காத,,, உன்னையெல்லாம் ப்ரண்டா வச்சுட்டு சுத்துறேன் பாரு,,, உன்னை யாருடா அந்த ஆளுக்கிட்ட அப்படி பேச சொன்னது,,, அவர் என்ன தானே திட்டுறார்,,, நீ மூடிக்கிட்டு உட்கார வேண்டியது தானே உன்னை யாரு பேச சொன்னது,,, இப்போ பாரு இரண்டு பேரையும் வெளியில தள்ளிட்டான் சொட்டமண்டை"""""

"""""விடுடி விடுடி,,, ஏற்கனவே க்ளாஸ் போரிங்கா தானே போச்சு"""""

"""""அதுக்கு!!!!! நல்லா வாயில வந்துடும் ஒழுங்கா வா"""""" என்று முணங்கியபடியே வந்தவள் திடுமென நின்று வேகமாக சொன்னாள்,,,,

"""""டேய் டேய்,,, அங்க பாரேன்,,, என்ன பெத்த ஆத்தா மாதிரியே இல்ல,,,""""

"""""மாதிரியெல்லாம் இல்ல அவங்களே தான்"""""

"""""ஆமா,, இப்போ எதுக்கு தெய்வானை காலேஜ் பக்கமா வந்துருக்கு!!!! வீட்டுக்கு தெரியாம படிக்க ஏதும் போகுதோ!!!!""""" சொன்னவளை கேவலமாக பார்த்தவன்,,

"""""இந்த இந்த வாயிக்கு தான் நாம க்ளாஸை விட்டு வெளிய இருக்கோம்""""""அவன் சொல்ல இவள் பெரிதாக கத்தினாள்,,,,

"""""அய்யய்யோ,,,, டேய் நாம ரெண்டு பேரும் ஒன்னா சுத்துறதை பாத்தா தெய்வானை வீட்டுல போட்டுக்குடுத்துடுமேடா"""""

"""""ச்ச ச்ச,,, அம்மா அப்படியெல்லாம் கெடையாதுடி,,,, சரி நீ இங்கனயே இரு,,, நான் போய் ஒரு ஆக்ட் குடுத்துட்டு உன்னை கூப்பிட வாரேன்""""" என்று சொல்லிவிட்டு அவன் தெய்வானை வந்த திசையை நோக்கி செல்ல இவள் ஒரு மரத்தின் பின்னே ஒழிந்து நின்றபடி எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருந்தாள்,,,,
 
#11
தயங்கித் தயங்கி கையில் ஏதோ ஒரு பையை வைத்துக் கொண்டு நடந்துவந்த தெய்வானை எதார்த்தமாக திரும்ப தர்ஷன் ஓடிச்சென்று அவர் முன்னே நின்றான்,,,,

"""""ம்மாஆஆ,,,""""

"""""ஹேய் தர்ஷா"""""

"""""என்னம்மா திடீர்னு காலேஜ் பக்கம் எல்லாம் வந்துருக்கிங்க,,, ஏதும் முக்கியமான விசயமா????"""""

"""""அட அதெல்லாம் இல்ல தங்கம்,,, நான் பெத்து வச்சுருக்கேனே ஒரு தறுதலை,,,, அது காலையில என்கூட சண்டை போட்டுட்டு மத்தியான சாப்பாடையும் எடுக்காம வந்துருச்சு,,, அவ அப்பனுக்கு தெரிஞ்சா பேயாட்டாம் ஆடிருவாரு,,, அது தான் கோயிலுக்கு போறேன்னு சோத்தை கட்டி எடுத்துட்டு வந்தேன்,,, ஆமா அவ க்ளாஷ் எங்கனு ஒனக்கு தெரியுமா????"""""

"""""ம்மா,,, மறந்துட்டிங்களா!!!! நானும் அவளோடு தான் படிக்குறேன்"""""

"""""அட ஆமால்ல,,, சரிய்யா,,, நீ இதை அவகிட்ட குடுத்துடுறியா????""""

"""""என்னது நானா!!!!"""""

"""""அய்யோ,,, நீ குடுத்தா தான் எருமை எதாவது சொல்லி உன்கிட்ட சண்டைக்கு வருமோ,,, சரி நீ அவ எங்க இருக்கான்னு சொல்லு நான் போய் குடுத்துடுறேன்"""""

"""""ஒங்களுக்கு ஏன்மா சிரமம்,,, இங்கேயே வெயிட் பண்ணுங்க நான் உடனே போய் அவளை கூட்டிட்டு வாரேன்""""" தெய்வானையை பத்திரமாக ஒரு இடத்தில் அமர்த்திவிட்டு அவர் வர்ணிகாவை பேசியதையெல்லாம் மனதில் தேக்கி புன்னகைத்தபடியே வந்து அவள் முன் நின்றான் அவன்,,, அவள் திருட்டுதனமாக எட்டி எட்டி பார்க்க சிரித்தபடியே கேட்டான்,,,,

"""""வீட்டுல அநியாயத்துக்கு அராஜகம் பண்ணுவியோடி குட்டிப்பிசாசு""""""

"""""என்னடா வார்த்தை ரொம்ப நீளுது,,, என்னவாம் தெய்வானைக்கு??? உன்கிட்ட எதுவும் போட்டுக்குடுத்துடுச்சா!!!!!"""""

"""""அதெல்லாம் இருக்கட்டும்,,, காலையில நீ சாப்பிடலையா!!! ஏன் பக்கி கோவத்தை சாப்பாட்டுல காட்டுற??? பாவம் அம்மா நீ சாப்பிடலைன்னு லன்ச் பேக் பண்ணி கொண்டு வந்துருக்காங்க"""""

"""""எல்லாம் உன்னால தான்டா,,, வழக்கம் போல உன்னை வம்பு பண்ணுறேன்னு பாட்டு சத்தத்தை அதிகமா வச்சேனா!!!!! வழக்கம் போலவே அம்மா வந்து திட்டிங்,,, என்னன்னு தெரியல இன்னைக்கு சுருக்குன்னு கொஞ்சம் கோவம் வந்துருச்சு,,, எல்லாம் நைட் சாப்ட காரச்சட்னியோட வேலை போல,,, பாரேன் ஒரு நாள் சாப்பிடுற நமக்கே இப்படி வருதே இந்த ஆந்திரா காரனுங்க எல்லாம் ஏகத்துக்கும் அள்ளிப்போட்டு திம்பாய்களாமே அப்போ அவங்களுக்கு எப்படி கோவம் வரும்???? அதான் டப்பிங் படத்துல எல்லாம் ஏய் ஓய்ன்னு ஓவரா சவுண்ட் விடுறானுவ போல"""""

""""""சனியனே,,, உன் எகத்தாளத்துக்கு அளவு இல்லையா!!!! சரி வா,,, அம்மா கூப்பிடுறாங்க,,, வந்து வழக்கம் போல ஆக்டிங்க போடு""""" என்றுவிட்டு அவன் விரைப்பாக நடந்து செல்ல இவளோ அவனையும் முந்தி சென்றவளாக ஒற்றை புருவத்தை மட்டும் உயர்த்தி வைத்தபடி அம்மாவின் முன் நின்றாள்,,,,
 
#12
காதலிக்க நேரமில்லையே 5

""""என்ன தெய்வான... காலேஜ் பக்கமெல்லாம் வந்துக்கிட்டு,,, ன்ன அப்பாவுக்கு தெரியாம இங்க சேர்ந்து படிக்கப் போறியா????""""" திமிராக அவனை ஒரு பார்வை பார்த்தபடியே கேட்க அமைதியாக நின்ற தெய்வானை கோபமாக வந்தார்,,,

"""""எடு செருப்ப நாயே,,, பார்த்தியா தர்ஷா... இவளுக்கு இருக்க கொழுப்ப,,, பேசாம சாப்பிட்டா சாப்பிடு இல்லாட்டி போன்னு விட்டுட்டு போயிட்டே இருக்கணும்,,, பாவம்னு தேடி வந்தேன் பாரு என்ன சொல்லணும்,,,, இந்தா புடி தின்னா தின்னு இல்லன்னா அப்படியே கொட்டி வீசிட்டு வந்து சேரு""""" சொல்லிவிட்டு அவர் கொண்டு வந்த பையை வர்ணிகாவின் கையில் திணிக்க அவளோ சமாளித்தாள்,,,,

""""""ம்மாஆஆஆ,,, ம்மாஆஆஆ,,, என்னம்மா நீ,,,, சும்மா வெளாட்டுக்கு தானே,,,, என் செல்ல அம்மால்ல""""""

""""""இல்லவே இல்ல,,, போடி,,, உனக்கு போய் அவசர அவசரமா சமச்சு கொண்டு வந்தேனே"""""

""""""ம்மாஆஆஆஆ,,,, என் தாயெனும் கோயிலை காக்க மறந்துட்ட பாவியடிக்கிளியே,,,, ம்மாஆஆ,, சிரிச்சுடும்மா,,, அய்,, அய்,,, சிரிக்குற,,, சிரிக்குற,,, இதோ இன்னும் இன்னும்""""" வர்ணிகா ஏதேதோ சொல்லி கொஞ்ச மெல்லமாக சிரித்தவர் அவள் கையில் செல்லமாக அடித்துவிட்டு சொன்னார்,,,,

""""""வாலு வாலு,,,,, சரியான வாலுடி நீ,,,, உனக்கு எதுக்கு இத்தனை கோபம்???? சாப்பிடாம வர்ற""""

""""""எல்லாம் உன்கிட்ட இருந்து வந்தது தானே,,, ஆமா எனக்கு கொண்டு வந்து கொடுத்தியே நீ சாப்பிட்டியா????"""""

"""""ம்ம்க்கும்,,, ரொம்ப தான்டி அக்கறை,,, அதெல்லாம் சாப்பிட்டாச்சு,,, நீ சாப்பிடு"""""

""""""ம்மாஆஆ உன்ன பத்தி எனக்கு தெரியாதா????"""""" என்றவள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஒரு மரத்தடி நிழலில் இருந்த ஸ்டோன் பென்சை நோக்கி தாயின் கையை இழுத்தபடியே செல்ல தர்ஷனும் அவர்களுடனே சென்றான்,,,,

""""""என்னடி பண்ணப்போற நீ??? இப்பவே சாப்பிடப்போறியா????"""""

""""""அட பேசாம இங்க உட்காரும்மா""""" என்றவள் தாய் கொண்டு வந்து கொடுத்த பையில் இருந்த அந்த பெரிய டிபன் கேரியரை எடுத்து பிரித்து வைத்து அதில் இருந்த உணவை எடுத்து தெய்வானையை நோக்கி கொண்டு செல்ல கலங்கிய விழிகளோடு மெல்ல சிரித்தார்,,,,

"""""" நான் வீட்டுல போய் சாப்பிட்டுக்குறேன் டி,,, நீ சாப்பிடு,,, பசி தாங்க மாட்ட,,, தர்ஷா நீயும் கொஞ்சம் சாப்பிடேன்"""""

""""""இல்லம்மா,,, அவளே சாப்பிடட்டும்,,,""""""

"""""ம்மாஆஆஆ,,, அவனுக்கெல்லாம் எப்படிம்மா நீ சமைச்ச சாப்பாட்டோட அருமை தெரியும்??? அதுவுமில்லாம நாம ஏதும் மருந்து கிருந்து போட்டுருப்போமோன்னு நினைப்பான்,,, அந்த வீட்டு ஆளுங்க புத்தி அப்படி""""" வர்ணிகா வேண்டுமென்றே சொல்ல வர்ணிகாவை ஒரு பார்வை பார்த்தவன் முறைத்தபடியே அவள் கையில் இருந்த டிபன் பாக்ஸை வாங்கி வேகமாக சாப்பிட ஆரம்பிக்க தெய்வானைக்கு தான் கொஞ்சம் பதற்றமாக இருந்தது,,,,

"""""ஏன்டி தடிமாடே,,, வாய வச்சுட்டு சும்மா இருக்கவே மாட்டியா??? அவனை எதுக்கு வம்புக்கு இழுக்குற????"""""

""""""ம்ம்ம்,,, அப்படி இழுத்ததால தான் ஒரு சட்டி சோத்தையும் மூச்சுவுடாம மொக்கிக்கிட்டு இருக்கான்,,, டேய் டேய் கொழம்பை ஊத்தி தின்னுடா தடிமாட்டுப் பயலே"""""" அவள் கீச்சுக்குரலில் கத்த தலையில் அடித்துக் கொண்ட தெய்வானை அவனுக்கு குழம்பை ஊற்றப் போக நிஜமாகவே அவன் வெறும் சோற்றை முக்கால்வாசிக்கு மேல் உள்ளே தள்ளியிருந்தான்,,,,

""""""தர்ஷா தர்ஷா என்னடா நீ கொழம்பு போட்டுக்காமலே சாப்பிட்டுட்ட,,,, இரண்டு பேரையும் நான் என்னன்னு சொல்லுவேன்""""" என்று சொல்லும் போதே
தெய்வானையின் செல்போன் ரிங்காக செல்போனை எடுத்து பார்த்தவர் பதறியவராக ஆன் செய்து பேசினார்,,,,

"""""அலோ,,, சொல்லுங்க அத்த,,, ம்ம்ம்ம்ம்,,, கோயிலுக்கு வந்திருக்கேன்,,, என்னது!!!!! நிசமாவா??? அய்யோ உங்க புள்ள இருக்காரா??? இதோ இப்பவே வாரேங்கத்த,,, அந்த மாத்தரை டப்பாவுல தான் இருக்கு,,, பச்சக்கலருல இருக்கும் பாருங்க அத போட்டுவிட்டுட்டு கொஞ்ச நேரத்திக்கு படுக்க வையுங்கத்த,,,, சரி இப்பவே வாரேன்""""" என்றவர் வேகமாக போனை வைத்துவிட்டு தர்ஷனையும் வர்ணிகாவையும் மாறி மாறி பார்க்க அவர்களோ புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு ஒரே குரலில் கேட்டனர்,,,,
""""""என்னம்மா ஆச்சு""""" என்று,,,,

"""""ஆத்தி!!!! நான் என்னத்த சொல்லுவேன்,,, போன வாரந்தேன் ஏதோ டென்டர் விசயம்னு இரண்டு வீட்டு ஆளுங்களும் அடிச்சுக்குட்டு நாறுனாங்க,,, இப்போ அடுத்த பிரச்சனை ப்ளைட் புடுச்சு கிளம்பி வந்துருச்சே"""""அவர் புலம்ப தர்ஷன் கேட்டான்,,,,

"""""என்னம்மா!!!! என்ன பிரச்சனை???? நம்ம வீட்டு பிரச்சனையா!!!! யாரு வேலக்காரவங்க ஏதும் அடிச்சுக்கிட்டாங்களா????"""""

"""""அதெல்லாம் தெனந்தெனம் நடக்குற பிரச்சனை தானே தர்ஷா... இது வேற"""""

"""""வேறன்னா!!!!! என்ன????"""""

"""""" யாரோ வெளிநாட்டுல இருந்து இரண்டு பேரு வந்துருக்காங்களாம்,,,, வயசுப்புள்ளைங்களா வேற இருக்குங்களாம்""""" என்றுவிட்டு பீதி கலந்த முகத்துடனே இருவரையும் பார்க்க வர்ணிகா தான் தெனாவெட்டாய் கேட்டாள்,,,,

""""""ம்மாஆஆஆ,,, என்ன இன்ஸ்டால்மென்டுல தான் பேசுவியா!!!! டக்குன்னு சொல்லும்மா,,,, யாரு வந்துருக்கதாம்,,, அதுவும் நீ இவ்வளவு டெரர் காட்டுற அளவுக்கு""""""

""""""உன் அத்த புள்ளங்களாம்""""" தெய்வானை சொல்ல வாயில் திணித்த சோற்றை புறையேறி துப்பியவளாய் அவள் நிற்க தர்ஷனோ பதறியவனாக அவள் தலையில் தட்டி தண்ணீரைக் கொடுக்க இருவரையும் பார்த்தவருக்கு ஒருபுறம் சந்தோசமாக இருந்தாலும் மறுபுறம் கவலையாக இருந்தது,,,,
 
#13
சிவகாமியும் தமிழரசனும் ஆயிரம் அறிவுரைகளைக் கூறி கொஞ்சம் திருப்தியுற்றவர்களாய் தான் வெங்கட்டையும் அதிதியையும் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர்,,, அவர்களுக்கு தெரிந்தவரையில் இவர்கள் இருவரும் பிசினஸ் விசயமாக இந்தியா செல்கின்றனர்,,, வெங்கட் இந்தமுறை கண்டிப்பாக அங்கு சென்று அனைத்தையும் மேற்பார்வை பார்க்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தான்,,, அதிதி அடம் பிடித்ததால் அவளையும் அழைத்து செல்கிறான்,,, இருவரும் அதிதி பெயரில் வாங்கியிருக்கும் வீட்டில் தங்கிவிட்டு ஊரையும் கொஞ்சம் சுற்றிப்பார்த்துவிட்டு ஒருவாரத்தில் திரும்பி வந்துவிடுவர்,,, இதில் ஏதேனும் ஒருநாள் வாய்ப்பு கிடைத்தால் மட்டும் சிவகாமி தமிழரசன் பிறந்தவீடுகளுக்கு சென்று அவர்களிடம் பேசி பார்த்துவிட்டு வருவர்,,, இப்படி தான் அதிதியும் வெங்கட்டும் சொல்லிவிட்டு கிளம்பினார்,,, ஆனால் இருவரின் தகிடுதத்தமும் வேறுமாதிரி இருந்தது,,,,

அவர்கள் சொன்னதில் கொஞ்சம் உண்மை இருந்தாலும் முக்கால்வாசிக்கும் மேல் பொய் தான் இருந்தது,,,, அவர்கள் நேராக சென்னை வந்ததும் அவர்களை வரவேற்க ஒரு கார் காத்திருக்க அதில் ஏறியவர்கள் நேராக அந்த இரண்டு பெரிய வீடுகளை இணைத்து நடுவே போடப்பட்டிருந்த பெரிய கேட்டின் முன்னே வந்து தான் இறங்கினர்,,, கிட்டதட்ட எட்டு மணி நேர கார் பயணம் ஆதலால் அதிதி அறைகுறைத் தூக்கத்தோடு கண்களை கசக்கியபடி நிற்க வெங்கட்டோ படு ஸ்டைலாக கூலிங்க்ளாஸை மாட்டிக்கொண்டு பேன்ட் பாக்கெட்டிற்குள் கைவிட்டபடியே அந்த பெரிய கேட்டில் தொங்கிய துறு ஏறிய பூட்டை பார்க்க கார் கதவை திறந்து கொண்டு ட்ரைவர் இருக்கையில் இருந்து ஒருவன் இறங்கி வந்தான்,,,, கிட்டத்தட்ட அவன் வயதும் வெங்கட்டை ஒட்டியதாகவே இருந்தது,,,, வந்தவன் இருவருக்கும் அருகில் நின்றபடியே சொன்னான்,,,,

"""""" இந்த கேட்டை அவங்க திறந்தே ரொம்ப வருசம் ஆகியிருக்கும் வெங்கட்,,,, அம்மா அப்பாவோட லவ் மேட்டர் தெரிஞ்சு இரண்டு குடும்பத்துக்கும் சண்டையானதுமே இரண்டு வீட்டுக்கும் பொதுவா இருந்த கேட்டை பூட்டி இரண்டு வீட்டுக்கு நடுவிலேயும் பெருசா காம்பௌண்ட் வால் கட்டிட்டாங்க,,, அதோ அங்கே கொஞ்சம் தள்ளி இந்த வீட்டுக்கு வழி இருக்கு அந்த வீட்டுக்கு அங்க இருக்கு,,, பெருசா இரண்டு குடும்பத்துக்கும் இப்போ டச் இல்ல,,, பொதுவான சண்டையை தவிர... அப்புறம் பின்னாடி இருக்க கெஸ்ட் ஹவுஸ் மட்டும் அப்படியே இருக்குன்னு கேள்விபட்டேன்"""""" என்று அந்த மூன்றாமவன் சொல்லி முடிக்க அவனை பார்த்த வெங்கட் கைகுழுக்கினான்,,,,

""""""தாங்க்ஸ் டா ஜீவா,,, எனக்காக நீ இவ்வளவு விசயம் ஹேதர் பண்ணுனதுக்கு...."""""

""""""என்னது??? தேங்க்ஸா... அதிதி,, உன் அண்ணன் சொல்லுறதை கேட்டியா????""""" அந்த ஜீவா கேட்க இவள் தூங்கி விழாத குறையாய் வெங்கட்டின் தோள் சாய்ந்தவாறே முனங்கினாள்,,,,

"""""" ட்யூட்,,, ஏன் ட்யூட் என் உயிரை வாங்குற??? ஏற்கனவே எனக்கு செம்ம டயர்டா இருக்கு,,, எப்போடா படுத்து எந்திரிப்போம்ன்னு இருந்தா வாசல்லயே நிக்க வச்சு கத பேசிட்டு இருக்கிங்க,,, வாங்க உள்ள போகலாம்"""" என்று அவள் சொல்ல வெங்கட் ஜீவாவை பார்த்து புருவம் உயர்த்த அவன் தொடர்ந்தான்,,,,

""""""கடைசியா கேட்குறேன் நீயே முடிவு பண்ணு,,,,""""""

""""""" இதுல முடிவு பண்ண என்ன இருக்கு??? முதல்ல ராஜமாதா பிறந்த வீட்டுக்கு போகலாம்""""" என்று சொன்னவனாக காரில் ஏற கார் அந்த வீட்டின் கேட் முன்னே நின்றது,,,
 
#14
காரின் ஹாரன் சப்தம் கேட்டதுமே உச்சிவெயிலுக்கு பயந்து மரத்தடியில் ஒரு நாற்காலியை போட்டு அமர்ந்து விசிறியை வைத்து காற்று வாங்கிக் கொண்டிருத்த வாட்ச்மேன் அவசரமாக எழுந்தோடி வந்து கார் போகும் பெரிய கேட்டின் உள்ளே இருந்த குட்டி கதவை திறந்து பார்த்தான்,,, கருப்பு நிறத்தில் பளபளவென ஜொலித்த விலையுயர்ந்த காரே அவனை யோசிக்கவிடாது செய்ய அவசரமாக திறந்தவன் ஒரு பெரிய சல்யூட்டை போட்டு நிற்க கார் பெரிய அளவில் பூக்கற்கள் போட்டு பதித்திருந்த பாதையில் வழுக்கிக் கொண்டு போய் போர்ட்டிக்கோவில் நின்றது,,,,

ஜீவா காரிலேயே இருந்து கொள்ள மற்ற இருவரும் தான் இறங்கி உள்ளே சென்றனர்,,, போர்ட்டிக்கோவை கடந்து முதல் வராண்டாவில் கால் வைத்து காலிங் பெல்லை அடிக்கும் போதே ஒரு வேலையாள் ஓடிவந்து இவர்களை பார்த்துவிட்டு திரும்பவும் உள்ளே ஓட வாடாமல்லி நிற நூல் புடவையில் அங்காங்கே தலையில் கொஞ்சம் கறுப்பு நிறம் தெரிய கொண்டை போட்ட முடியில் கனகாம்பரம் சுற்றியிருக்க வந்து நின்றார் அவர்,,, விஜயலெட்சுமி,,,, சிவகாமியின் தாயார்,,,, வந்தவரை பார்த்ததுமே இவர்களுக்கு அது யாரென்று புரிந்துவிட்டது,,, பாவம் கிழவிக்கு தான் இவர்களை அடையாளம் தெரியவில்லை,,,, வேகமாக வந்தவர் வெங்கட்டை பார்த்ததும் புடவை தலைப்பை எடுத்து போர்த்திக் கொண்டு நிற்க அதிதி குதூகலித்தபடியே அண்ணனின் கையை போட்டு பிசைந்தாள்,,,

""""""தம்பி யாருன்னு எனக்கு மட்டுப்படலையே,,,, அவுகளுக்கு வேண்டியவங்களா!!!!!""""" பாட்டி சொல்ல இவன் கறாராக சொன்னான்,,,,

"""""எல்லாருக்கும் வேண்டியவங்க தான்,,, ஆமா எங்க உன் புருசன் தங்கவேலு????""""" இவன் கேட்க அதுவரை அமைதியாக நின்ற அந்த அம்மாள் இப்பொழுது வேறுமுகம் காட்டினார்,,,,

""""""ஏது ஏது,,, அடிக்கழுதைகளா,,, என் புருசன் எப்பேற்பட்டவர்,, அவரை ஒருத்தன் இந்த ஊருல நிமிந்து பார்க்கவே யோசிப்பான்,,, அவர் பேரையே நீ சொல்லுவியா???? எவண்டா நீ????"""""

""""""அதெல்லாம் உன்கிட்ட மட்டும் தனியா சொல்ல முடியாது,,, உன் புருசனை கூப்புடு சொல்லுறேன்,,, ஆமா வந்தவங்கள வாங்கன்னு சொல்ல மாட்டிங்களா!!!!! என்ன பண்பாடோ கலாச்சாரமோ ஒன்னுமே தெரியலை,,, அதிதி இப்படி வாடா,,, உட்கார்ந்துட்டே பேசலாம்,,,, ஓய் கிழவி என்ன என் வாயையே பார்த்துட்டு நிக்குற???? போ போய் தங்கவேலுவை வர சொல்லு,,, அப்படியே உன் புள்ளை அவரோட பத்தினி,,, அவங்க இரண்டுபேரோட மேனுபேக்சரிங் டிபெக்ட்ஸ் எல்லாரையும் வர சொல்லு"""""" இவன் சொல்லிக்கொண்டே போய் சோபாவில் ஹாயாக சாய்ந்துகொண்டு அமர விஜயலக்ஷ்மி அவசரமாக சென்று கணவரோடு வந்தார்,,,,
 
#15
கைத்தடியை டக் டக்கென்று ஊன்றியபடி கொஞ்சம் கூட மிடுக்கு குறையாமல் வந்து நின்ற தங்கவேலு சோபாவில் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்த வெங்கட்டையும் அவன் மடியில் தலைவைத்து படுத்தபடி இருந்த அதிதியையும் பார்த்துவிட்டு புருவம் சுருக்க இவன் அதே தோரணையிலேயே
வரவேற்றான்,,,,

"""""அடடே,,, தங்கவேலு வந்தாச்சா,,, ஏய் தங்கச்சி தங்கம்,,, எழுந்தரி,,, யாரு வந்துருக்காங்கன்னு பாரேன்,,, மிஸ்டர் தங்கவேலு தாத்தா""""" அவன் சொல்ல மடியில் படுத்திருந்தவள் எழுந்து புன்னகை முகமாய் நிற்க தங்கவேலு கர்ஜித்தார்,,,,

""""""யாரு யாருக்குடா தாத்தா???? படவா என் சம்சாரத்துக்கிட்ட வேற வாய்க்கு வந்தபடி பேசியிருக்க,,, யாருடா நீ????"""""" அவர் கத்த வெங்கட் அதிதியை பார்த்து புன்னகைத்தபடியே சொன்னான்,,,,

""""""ம்ம்ம்,,, எல்லாம் உனக்கு வேண்டப்பட்டவன் தான்,,, சாரி சாரி வேண்டாதபட்டவன்,,, என்ன அதிதி"""""

""""""நீ பேசுண்ணா,,, நமக்கு இங்க பேச அத்தனை உரிமையும் இருக்கு,,, ஓய் கிழவி வீட்டுக்கு வந்தவங்களுக்கு ஆஃப்டர்ஆல் ஒரு காஃபி கொடுக்கணும்ன்ற கர்ட்டசி கூட இல்லையா???? எனிபடி த்தேர்,,, யாராவது எனக்கு ஒரு காஃபி கொண்டு வந்து தர்றிங்களா????""""" இவள் கத்த அவள் தலையை வருடியவன் அவளை நன்கு சாய்ந்து அமர சொல்லிவிட்டு இவனாகவே கிச்சனை தேடிப்போய் காபி போட்டு கொண்டு வந்து கொடுக்க தங்கவேலுவும் விஜயலக்ஷ்மியும் கத்திக்கொண்டே இருந்தனர்,,, ஆனால் இவர்களோ எதையும் காதில் வாங்காதவர்களாய் காபியை நன்கு ரசித்து குடித்துவிட்டு தெம்பாக அமர்ந்திருக்க தங்கவேலுவுக்கு தான் ப்ரசர் ஏறியது,,,,

""""""விஜி நீ ரெங்கசாமிக்கு போனைப் போடு,,, யாரு எவருன்னு தெரியாம இரண்டு பேர் இங்கன வந்து உட்கார்ந்து கூத்தடிக்குதுங்கனு,,,, தெய்வானை எங்க எனக்கு பிபி மாத்திரைய கொண்டுவர சொல்லு"""""

"""""தெய்வானை இல்லையேங்க கோயில் வரைக்குமுல்ல போயிருக்கா,,, ஏம்பா தம்பி ஏம்பா இப்படி பண்ணுறிங்க,,, இந்த கத்து கத்துறோமே யாரு எவருன்னு சொன்னா தான் என்ன????""""" பாட்டி கொஞ்சம் குரலை தாழ்த்தியவாறு கேட்க வெங்கட் அமைதியாக சொன்னான்,,,

"""""" ம்ம்ம்,,,என் பெயர் வெங்கட்,,, இது அதிதி,,, நாங்க இரண்டு பேரும் நியூயார்க்ல இருந்து என் அம்மா அப்பாவோட சொந்தங்களை பார்க்க வந்திருக்கோம்"""""

""""""அதுக்கு ஏய்யா இங்க வந்துருக்கிங்க??? விலாசம் எதுவும் மாறி வந்துட்டிங்களா????""""""

""""""அதெல்லா சரியா தான் வந்துருக்கோம்,,, என்ன புரியலையா??? நாங்க சிவகாமியுடைய பிள்ளைங்க,,,""""" அவன் சொல்ல தங்கவேலுவுக்கு மொத்தமாக பிபி ஏற கைகால்கள் வெடவெடத்தது,,,
 
#16
காதலிக்க நேரமில்லையே 6

""""" ம்மாஆஆஆ,,,, அத்த புள்ளைங்கன்னா!!!!! எந்த அத்தை புள்ளைங்க,,, எனக்கு ஏதும்மா அத்தை????"""" வர்ணிகா கேட்க தெய்வானை பயந்த குரலிலேயே சொன்னார்,,,,

"""""எந்த அத்த புள்ளைங்களா!!!! அடியே ஒத்துமையா இருந்த இரண்டு குடும்பத்தையும் இரண்டா பிரிச்சு விட்டுட்டு போனாளே அந்த அத்த தான்,,, சிவகாமி"""""

"""""ஏம்மா நீ இவ்வளவு வெறுப்பா சொல்லுற??? அவங்கள நீ பார்த்துருக்கியா??? ரொம்ப சீனோ!!!!"""""

""""""நான் எங்க பார்த்தேன்,,, போட்டோவுல பாத்ததோட சரி,,,, எனக்கு கல்யாணம் ஆகுறதுக்கு முந்தியே தான் அவ கல்யாணம் பண்ணிக்கிட்டாளே,,, என் கல்யாணத்துக்கு இரண்டு வருசத்துக்கு முன்ன இருந்தே இரண்டு குடும்பமும் சண்ட போட்டுக்குட்டு தான் இருக்கு,,, பொழுது விடிஞ்சு பொழுது போனா ஒரு சண்ட,,, இதுக்கெல்லாம் எப்ப விடிவுகாலம் வருமோனு பாத்தா இந்தா இப்போ புது பிரச்சனை வந்து நிக்குதுல்ல,,, சரி நா கெளம்புறேன்,,, தர்ஷா... எனக்கு தெரியும் என்ன தான் நீங்க இரண்டு பேரும் எங்கமுன்ன அடிச்சுக்குட்டு நாறுனாலும் ஒருத்தர ஒருத்தர் எங்கயும் விட்டுக்குடுக்க மாட்டிங்கன்னு,,, காதலால பிரிஞ்ச குடும்பம் உங்க நட்பால பழயபடி சேராதான்னு ஒரு நப்பாசை இருந்தது,,, இப்போ அதுவும் சந்தேகம் தான்,,, என்ன ஆனாலும் வர்ணிய விட்டுடாதடா,,, அஷ்வந்த் சின்ன பையன்,,, ஒரு நண்பனா அண்ணனா பொறுப்பா உன்னால தான் இருக்க முடியும்,,, பிரச்சனைய பெருசாக விடாம பார்த்துக்கோய்யா""""" என்று அவன் கன்னம் தடவி சொல்லிவிட்டு சென்றவரை இருவரும் அசையாது பார்த்தபடியே நின்றனர்,,,

""""""இப்போ என்னடா பண்ணுறது???? உண்மையாவே சிவகாமி அத்தையோட பசங்க தான் வந்துருக்காங்களா???? எதுக்கு வந்துருப்பாங்க????"""""

"""""என்கிட்ட கேட்டா நான் என்னடி சொல்லுவேன்,,, பேசாம நாமளும் கிளம்பி போயிடுவோமா!!! வந்தவங்க யாருன்னு போய் பார்த்தா தான் தெரியும்,,, உண்மையாவே அவங்க அத்தை மாமா பசங்களா!!!! இல்லை இரண்டு வீட்டோட பேக்ரௌண்ட் பார்த்துட்டு ஏதும் லம்ப்பா சுருட்டிக்கிட்டு போகலாம்னு வந்தவங்களா!!! அத்தை மாமா பசங்களா இருந்தா கூட சமாளிச்சுடலாம்னு வை,,,பட்
அப்படி இருந்தா அது ரொம்ப டேஞ்ஜர் வர்ணி,,,"""""

""""""என்னடா இப்படி கிளப்பிவிடுற????"""""

""""""கிளப்பியெல்லாம் விடல,,, அப்படியும் இருக்குமோன்னு ஒரு சந்தேகம் தான்,,,, சரி வா,,, எப்படியும் நம்மள அந்த சொட்டை மண்ட இன்னைக்கு க்ளாஸ்குள்ள விடப்போறது இல்ல,,, பேசாம வீட்டுக்காவது கிளம்புவோம்"""""

""""""வீட்டுக்கா,,, ????"""""

""""""அப்புறம் இங்க இருந்துட்டே குழம்பிக்கிட்டு இருக்க சொல்லுறியா!!!! அநேகமா இந்நேரத்துக்கு அந்த இரண்டு பேரும் வீட்டை அதகளம் பண்ணிட்டு இருப்பாங்க,,, எங்க வீட்டுக்கு போனாங்களான்னு வேற தெரியல,,, எதுனாலும் நேர்ல போய் பார்த்தா தான் திருப்தியா இருக்கும்,,, ஒருவேளை அவங்க நம்ம மாமன் புள்ளைங்களா இருந்தா இந்த பிரச்சனைக்கு தீர்வை அவங்க மூலமாக கூட கண்டு பிடிக்கலாம்,,,,""""" என்று சொல்ல இவளும் தலையை அசைத்தபடி கிளம்பிவிட்டாள்,,, கல்லூரி வாசலிலேயே ஒரு ஆட்டோவை பிடித்து இருவரும் இவர்களின் வீடு இருந்த தெரு முனையில் இறங்கி முன்னும் பின்னுமாக இருபது அடி இடைவேளையில் நடந்து அவரவர் வீட்டை அடைந்தனர்,,,,
 
#17
வர்ணிகா அவளுடைய வீட்டிற்குள் நுழையும் போது ஒரே அமைதியாக எப்பொழுதும் போல இருந்தது,,, ஹால் வெறிச்சோடி கிடக்க மெல்ல சென்று தாத்தா பாட்டியின் அறையை எட்டிப்பார்க்க தாத்தா நல்ல உறக்கத்தில் இருந்தார்,,, பாட்டியோ அறையின் மூலையில் இருந்த விநாயகர் படத்தின் முன்னே அமர்ந்து இருக்க சத்தம் போடாமல் தன் தாயை தேடி சமயலறைக்குள் நுழைந்தாள்,,, தெய்வானை அங்கேயும் இல்லை என்பதை வேலையாட்கள் மூலம் அறிந்து கொண்டவள் தாயின் அறைக்குள் நுழையும் போது ரெங்கசாமி தான் குறுக்கும் நெடுக்குமாக நடந்து தெய்வானையிடம் கத்திக்கொண்டிருந்தார்,, அவர் மனதின் ஆதங்கத்தை அவர் அப்படி வெளிப்படுத்த தெய்வானை கணவனே கண்கண்ட தெய்வமென அவரை சமாதானம் செய்யும் வேலையில் இருக்க இவளோ அறை வாயிலில் நின்றபடியே ரெங்கசாமி சொல்வதை ஒட்டுகேட்டாள்,,,,

""""""எவ்வளவு தைரியம் இருந்தா அவ பிள்ளைகளை இங்க அனுப்பி உறவு கொண்டாட பார்த்துருப்பா,,, அவள வெறும் தங்கச்சியாவா நெனச்சேன்,,, இந்த வீட்டோட தேவதைடி,,,, நல்லா இருந்தவ மனச கெடுத்து கூட்டிட்டு போயிட்டான்,,, நல்லா பாத்தியா அந்த பய அப்படியே அவனை மாதிரியே இல்ல,,, சரியான திமிர்,,, யார்க்கிட்ட கேட்டாலும் அவனை என் தோஸ்த்துன்னு சொல்லுவேன்,,, அப்படி சொன்னதுக்கு வச்சான் பாரு ஆப்பு,,,, ஆமா அவன் பேரு என்ன சொன்னான்????""""""

"""""யாருங்க????""""""

""""""ம்ம்ம்,,, உன் ஆசை மருமகன் தான்,,, அத்தை அத்தைன்னு உருகுனானே"""""நறநறவென பற்களை கடித்தபடி கேட்க தெய்வானையோ முணங்கினார்,,,

""""""ஏன் உங்களையும் தான் மாமா மாமான்னு உருகுனாப்படி"""""

""""""உருகி,,,, யாருக்கு வேணும் இதெல்லாம்,,, புள்ளைகள அனுப்பி மெல்ல ஒட்டிக்கிடலாம்னு பார்த்துருக்கா அந்த ஓடுகாலி,,, அம்மா தப்பு பண்ணிட்டுல இந்த வீட்ட விட்டு போயிருக்காங்கன்னு ஒரு பயம் வேணாம் இந்த கழுதைகளுக்கு,,, என்னைப் பார்த்து நக்கலா கேக்குறான்டி என்ன மாமா சௌக்கியமான்னு"""""" அவர் புலம்ப யாருக்கும் தெரியாமல் கேட்டுக்கொண்டே இருந்தவளுக்கு சிரிப்பு வந்தது,,, அமைதியாக அடக்கியவள் அந்த இடத்தை விட்டு கடந்து எங்கே அந்த இருவரும் என தேட அந்தநேரம் பார்த்து அவளுடைய போன் ரிங்கானது,,, எடுத்து பார்த்தவள் திரையில் ஒளிர்ந்த பெயரை பார்த்துவிட்டு சத்தம் போடாமல் அறைக்குள் சென்று தாழிட்டு விட்டு சன்னல் திரையை விளக்கியபடி போனை அட்டண்ட் செய்ய அந்த வீட்டில் தர்ஷன் அவன் அறை சன்னல் வழியே இவளை பார்த்தபடி நின்றான்,,,
 
#18
""""""வர்ணி வர்ணி வர்ணி"""""

""""""என்னடா ஏன் கத்துற????"""""

""""""ஏய் ஒரு செம்ம காமெடிடி,,, வந்த இரண்டு பேரும் நிஜமாவே தமிழ் மாமா பிள்ளைங்க தானாம்,,,, அந்த பையன் அப்படியே பார்க்குறதுக்கு மாமா மாதிரியே இருந்தானாம்,,,"""""

""""""ம்ம்ம்,,, ம்ம்ம்,,, இப்போ தான் அப்பா புலம்புனதை ஒட்டு கேட்டேன்,,, ஆமா அவங்க இரண்டு பேரும் இங்கே இல்லையே,, அங்க இருக்காங்களா????"""""

"""""இங்கேயும் இல்ல,,, நா வீட்டுக்குள்ள நுழைய ஒரு அஞ்சு நிமிசத்துக்கு முன்ன தான் கிளம்பியிருக்குங்க,,,,"""""

""""""இரண்டு வீட்டுலயும் இல்லைன்னா வேற எங்கடா போயிருப்பாங்க??? இங்க ஏதும் வீடு இருக்குமோ!!!!!"""""

""""""லூசு லூசு,,, இரண்டு வீட்டுக்குள்ளேயும் தான் அவங்க இல்லன்னு சொன்னேன்,,, வெளியில போயிட்டாங்கன்னு சொன்னேனா???""""""

""""""பின்ன!!!!!""""""

""""""கொஞ்சம் முன்னாடி வந்து தலையை வெளியே நீட்டி உனக்கு லெஃப்ட் சைடுல எட்டிப்பாரு உன் நொல்லக்கண்ணுக்கு அப்போதாவது தெரியுதான்னு பார்ப்போம்""""" தர்ஷன் சொல்ல இவள் அவன் சொன்னதைப் போலவே செய்ய இருவரது வீட்டிற்கும் இடையிலே இரண்டு வீட்டையும் இணைக்கும் பாலமாக இருந்த ஹெஸ்ட் ஹவுசில் ஒரு கார் நின்று கொண்டு இருக்க வீட்டின் முகப்பு கதவு திறந்த நிலையில் இருந்தது....

"""""டேய் என்னடா இது,,, அங்கயா தங்கப்போறாங்க""""""

""""""வந்தவன் பயங்கரமான ஆளு போல,,, வீட்டை விட்டெல்லாம் என்னால போக முடியாதுன்னு சொல்லி பயங்கரமா ரூல்ஸ் பேசிருக்கான்,,,, இது என் நீங்களோ உங்க அப்பாவோ சம்பாதிச்ச சொத்து இல்ல என் பாட்டன் பூட்டன் சம்பாதிச்சது,,, உங்களுக்கு எந்த அளவுக்கு இங்கே இருக்குறதுல ரைட்ஸ் இருக்கோ அதைப் போலவே எனக்கும் இருக்கு,, நீங்க உங்க பிள்ளையை சேர்த்துக்கோங்க இல்ல சேர்த்துக்காம போங்க நாங்க இங்க தான் இருப்போம்னு பெட்டியை தூக்கிட்டு வந்துட்டானாம்,,, தாத்தா பேசுனது எதையும் காதுல வாங்குன மாதிரி தெரியல,,,, அந்த வீட்டுல இருந்தா உங்களுக்கு பிரச்சனை,,,, இங்கே இருந்தா அவங்களுக்கு பிரச்சனை ஸோ நாங்க பொதுவான இடமா பார்த்து தங்கிக்கிறோம்,,, எங்களுக்கு சாப்பாடு தினம் ஒரு வீட்டுல இருந்து வரட்டும்,,, வருமான்னு கேட்கலை வரணுமுன்னு சொல்லுறேன்,, இல்லைன்னா நாங்களே வந்து சாப்பிட்டுப்போம்னு பாட்டி கன்னத்தை பிடிச்சு கொஞ்சிட்டு போயிட்டானாம்,,,,""""""

'"""""டேய்,,, யார்டா அவன்,,, சும்மா கெத்து காட்டுறான்டா,,, இங்க அப்பாவை வச்சு செம்மயா செஞ்சுருப்பான் போல,,, அவர் பேசுனத கேட்டா சிரிப்பு தான் வந்தது,,, ஆமாம் வேதா அம்மா ரியாக்சன் எப்படி????""""""

""""""நீ வேற,,,, நான் கூட மம்மி தாறுமாறு தக்காளி சோறுன்னு பேசிருக்கும்னு பார்த்தா நான் வந்ததுல இருந்தே ரூம் கதவை சாத்திட்டு அழுதுட்டு இருக்கு,,, நானும் கன்னுக்குட்டி கணக்கா ம்மாஆஆ ம்மாஆஆன்னு கத்தி தொண்டை காய்ஞ்சு வந்துட்டேன்"""""
 
#19
காதலிக்க நேரமில்லையே 7

தர்ஷன் சொன்னதை கேட்டுவிட்டு சிரித்தவள்,,, சிரித்தபடியே போனை வைக்க எப்படியோ அன்றைய நாள் ஓடியது,,,, இரண்டு வீடுகளுமே ஒரே அதகளமாக காட்சியளிக்கும் என்று நினைத்தால் கப்சிப்பென்று அமைதியாக இருந்தனர்,,,, ஒரேவேளை சிவகாமியும் தமிழரசனும் வந்திருந்தால் எதிர்பார்த்தது போலவே நடந்திருக்குமோ என்னவோ!!! ஆனால் அவர்களின் பிள்ளைகள் இருவரும் வந்து நின்றதால் என்ன தான் கோபத்தை காட்ட வேண்டும் என்று நினைத்தாலும் உள்மனம் ஒத்துழைக்கவில்லை,,, அதுவும் இல்லாமல் இந்த வெங்கட் வேறு மாமன்மார்களை நன்றாக கலாய்த்துவிட்டு அத்தைமார்கள் இருவரையும் கொஞ்சி கொஞ்சி பேசி வைக்க தெய்வானைக்கோ கூச்சமாக இருந்தது,,, வேதவல்லியோ தம்பி பிள்ளைகளை அருகில் பார்த்தும் அரவணைக்க முடியாதவராய் அழுகையோடு அறைக்குள் நுழைய அந்ந நாளும் முடிந்தது,,,, அன்று உணவை இருவருமே வெளியில் அவர்களது ரெஸ்டாரண்டில் சென்று முடித்துகொள்ள வர்ணிகாவும் தர்ஷனும் வந்தவர்கள் இருவரையும் பார்க்கவே இல்லை,,,,

மறுநாள் விடிகாலையிலேயே எப்பொழுதும் போல தர்ஷனுக்கும் வர்ணிகாவிற்கும் தலதளபதி ரசிகர் பட்டாள சண்டையோடு தான் விடிந்தது,,,, தர்ஷன் விஜய் பட பாடலை பாட விட்டு ஆடிக்கொண்டிருக்க வர்ணிகா அஜித்குமாரின் பாடலை போட்டு குத்தாட்டம் போட அதிர அதிர கேட்ட ஒலியில் தான் வெங்கட்டும் அதிதியும் எழுந்து அமர்ந்தனர்,,, முதல்நாள் ஏற்பட்ட பயணக்களைப்பில் உறங்கியவர்கள் பாட்டு சத்தத்தில் திடுக்கிட்டு விழித்து அவரவலர் அறைகளை வெளியே ஓடிவந்தனர்,,,, வாசலில் நின்று கவனிக்கயில் தான் கெஸ்ட்ஹவுஸ் வாசலுக்கு நேர் எதிரே கொஞ்சம் தள்ளி ஆரம்பமான மதில் சுவரின் அருகே இரண்டு வீடுகளில் இருந்தும் பேரிரைச்சலாக சத்தம் கேட்டது,,, ஒருபுறம் விஜயின் பாடல் மற்றொரு புறம் அஜித்தின் பாடல்,, இருவரது பாடலை கேட்டவர்களின் இதழ்கள் மெல்ல விரிந்தது,,,

"""""ஏன்ணா,,, வந்தவேளை சட்டுன்னு முடிஞ்சுடும் போலயே,,,""""

""""""ம்ம்ம்,,, அப்படி தான் எனக்கும் தோணுது,,, இங்கே யாரு அஜித் ஃபேன்,,, யாரு விஜய் ஃபேன்னு தெரியலையே"""""

""""""தெரிஞ்சா என்ன பண்ணலாம்னு ப்ளான்????""""""

""""""இருக்கவே இருக்கு,,, காதலால பிரிஞ்ச குடும்பத்தை நட்பால மறுபடியும் சேர்த்துவிடுவோம்,,, இரண்டு குடும்பமும் சேர்ந்துட்டா அப்புறம் ராஜமாதாவும் டாடியும் இங்கே வர்றதுல ப்ராப்ளம் இருக்காது,,, அப்புறம் எங்கள் வீட்டில் எல்லாநாளும் கார்த்திகைன்னு பாட்டு பாடிட்டு ஜாலியா இருக்கலாம்""""""

""""""நட்பா!!!!"""""

""""""ம்ம்ம்ம்,,, இரண்டு வீட்டுல இருந்துமே பாட்டு சத்தம் கேட்குதுல்ல,,, அதுவும் விஜய் அஜித் பாட்டு வேற,,, ஐ திங்க் இங்க பயங்கரமான ஃபேன்ஸ் இருக்காங்க,, அதுவும் அடிச்சுட்டு நாறுற மாதிரி,,, நான் அழகப்பன் தாத்தா வீட்டுக்கு சாப்பிடுற மாதிரி போய் யாரு விஜய் ஃபேன்னு கேட்டு அப்படியே ஒட்டிக்குறேன்,,, நீ தங்கவேலு தாத்தா வீட்டுக்கு போய் உன் ஆளு ஃபேன் யாருன்னு பார்த்து ப்ரண்ட் ஆகிடு,,, நம்ம ஆளுங்க எதுல ஒத்து வர்றோமோ இல்லையோ இந்த பாசப்பிணைப்புல கண்டிப்பா மாட்டிப்போம்,,, நான் சொல்லுறது புரியுதா????"""""

""""""எல்லாம் புரியுது,,, பட் அந்த பேர்சன் பையனா இருந்தா என்ன பண்ணுறது??? ஒருவேளை மாமா அத்தைன்னு,,, என்ன இப்படி கேவலமா பாக்குற!!!!! அப்படியெல்லாம் இருக்காதோ.... சரி ஓகே ஜஸ்ட் லீவ் இட்,,, ஜமாய்ச்சுடுவோம்""""" ஹைபை அடித்து சிரித்துவிட்டு இருவரும் அவரவர் அறைக்குள் நுழைந்து தயாராகி ஆளுக்கொரு வீட்டிற்குள் நுழைந்தனர்,,,,
 
#20
கெஸ்ட்ஹவுசில் இருந்து இருவீட்டிற்கும் தனித்தனியாக உள்ளே இருந்தபடி வழி இருந்தது,,,, வெங்கட் தர்ஷன் வீட்டிற்குள் நுழைந்த நேரம் தர்ஷன் கல்லூரிக்கு தயாராகி கீழே வந்தான்,,, வழக்கம் போல மாடிப்படி கைப்பிடியில் சறுக்கிக்கொண்டு அவன் வந்திறங்க டைனிங் டேபிளில் அனைவரும் சாப்பிடுவதற்காக காத்திருந்தனர்,,, மீனாட்சி பாட்டி யாரையோ எதிர்பார்த்தவறாக வாசலையே பார்த்தபடி இருக்க வேதவல்லி முதல்நாளில் இருந்தே அறையை விட்டு வெளியே வரவில்லை,,, ஆதவனும் அழகப்பனும் பெயருக்கு உண்பது போல வேலையாள் தட்டில் வைத்த உணவை கொறிக்க தர்ஷனின் தங்கை அந்த வீட்டில் இருப்பதையே உணராதவளாக கையில் ஒரு புத்தகத்தை வைத்து எதையோ மனப்பாடம் செய்தபடியே சாப்பிட இதோ இதோ வெங்கட் அனைத்தையும் ஹால் நுழைவிலேயே நின்று கவனித்தபடி இருந்தான்,,,,

வேகமாக வந்த தர்ஷன் மீனாட்சியிடம் ஏதோ பேசி வம்பிழுக்க அவர் கவனம் முழுவதும் வாசலை நோக்கியே இருந்தது,,, வெங்கட்டால் ஓரளவு யூகிக்க முடிந்தாலும் எதையும் கண்டுகொள்ளாதவனாக போனில் ஒரு தளபதி பாடலை சத்தமாக பாடவிட்டபடி செல்ல அனைவருமே சத்தம் வந்த திசையை பார்க்க அழகப்பன் வெங்கட்டை பார்த்துவிட்டு எழுந்துகொள்ளப் போனார்,, ஆதவனோ முகம் சுழித்தபடி இட்லிகளை வேண்டா வெறுப்பாக அள்ளி திணிக்க மீனாட்சி பாட்டியின் முகம் பூவாய் மலர்ந்தது கூடவே தர்ஷனின் முகமும் தான்,,, பிறகு மலராமல் என்ன செய்யும் அவனுக்கு பிடித்த நடிகரின் பாடல் அள்ளவா!!!! அட என் இனமடா நீ என்று இவனை அவன் பார்க்க,,, இவனோ கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என மனதிற்குள்ளேயே ஒருபாடலை பாடி டைனிங் டேபிளில் போய் அமர்ந்தபடியே பேசினான்,,,,

""""""என்ன எல்லாரும் சாப்பிட வந்தாச்சு போல,, ஏன் பாட்டி சாப்பிடக் கூப்பிடணும்னு தோணவே இல்லையா!!!! யாராவது வருவிங்கன்னு வெயிட் பண்ணிட்டே இருந்துட்டு நானே கிளம்பி வந்துட்டேன்,,, அடடே இட்லியா,,, பரவாயில்லை நல்லா சாஃப்டா தான் இருக்கு,,, மல்லிப்பூ மாதிரியே,, ஏன் மாம்ஸ் உங்க தட்டுல இரண்டு முழம் போட சொல்லவா???""""" குறும்போடு கேட்க தர்ஷன் வாய்க்குள்ளேயே சிரிக்க வெங்கட் அவனை பார்த்தபடி யாருக்கோ போன் செய்தான்,,,,

""""""ஹல்லோ,,, ம்ம்ம்,,, யா யா,,, குட்மார்னிங்,, நெக்ஸ்ட் வீக் நம்ம ரெசார்ட்ல ஏதோ மூவி ஷூட்டிங் எடுக்க கேட்டு வந்தாங்கன்னு சொன்னிங்களே யாரோட மூவின்னு சொன்னாங்க!!!!!! ஓஓஓஓஓ,,, அவர் படமா அப்போ கண்டிப்பா ஹீரோ விஜய் சாரா தானே இருக்கும்,,, அவர் தானா.... ஒஓஓஓ,, நைஸ்... அப்போ ஒன்னு பண்ணுங்க ரெசார்ட்ல சின்னதா ஒரு பார்ட்டி அரேஞ்ச் பண்ணி அவங்களை இன்வைட் பண்ணிடுங்க,,, ம்ம்ம்ம்,,, குட்,,, நான் அப்போவே விசிட் வச்சுக்குறேன்... தேங்க் யூ"""""" என்று பேசிவிட்டு அவன் போனை வைக்க அவன் பேசியதை எல்லாம் கேட்டுக்கொண்டே இருந்தவனுக்கு மின்னல் வந்து போனது,,, இந்த இடத்தில் கேட்டு வைத்தால் அனைவரின் கண்டனப்பார்வைக்கும் ஆளாக வருமோ என தர்ஷன் அமைதியாக சாப்பிட்டு விட்டு கிளம்ப வெங்கட் சிரித்தபடியே தாத்தாபாட்டியை பார்த்தபடியே சாப்பிட்டுவிட்டு சென்றான்,,,,