காதலர் தினம்

sudharavi

Administrator
Staff member
#1
“என்னங்க! நான் சொல்றதை கேளுங்க!”


“என்னன்னு சொல்லு லஷ்மி”.


“எனக்கு ஒரு ஆசைங்க...நீங்க அதை நிறைவேற்றி கொடுக்குறீங்க”.


மனைவியை திரும்பி பார்த்த கருப்பு “இதோ பார் லஷ்மி. உனக்கு பெரிய பெரிய ஆசையெல்லாம் இருக்கும். என்னால அதை எல்லாம் நிறைவேத்த முடியுமா?”


“ஹையோ! என்னங்க நீங்க? அப்படியெல்லாம் ஆசைப்படக் கூடியவளா நான்” என்றார் வருத்தமாக.


“அப்போ உன் ஆசை என்னன்னு சொல்லு?” என்றார் ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே.’


“காதை கொடுங்க” என்றார் வெட்கமாக.


மனைவியின் முகத்தில் தெரிந்த வெட்கத்தைப் பார்த்து “என்றா இது ரொம்ப நாளைக்குப் பிறகு என் பொண்டாட்டி வெட்கப்படுறா” என்றார் கிண்டலாக.


“ம்ம்..போங்க!” என்று வெட்கப்பட்டுக் கொண்டே கணவரின் காதில் தன் விருப்பத்தைக் கூறினார்.


மனைவி சொன்னதைக் கேட்டதும் சிரிப்பை அடக்க முடியாமல் உடலை குலுக்கி குலுக்கி சிரிக்க ஆரம்பித்தார் கருப்பு.


அவரை ஒரு இடி இடித்து “என்னங்க நீங்க” என்று சிணுங்கினார் லஷ்மி.


“நான் என்னமோ கேட்கப் போறன்னு பயந்துட்டேன் லக்ஷ்மி. உனக்காக இதைக் கூட செய்ய மாட்டேன்னா?”


கணவரின் சம்மதத்தை அறிந்தவுடன் அத்தனை உற்சாகமாக உணர்ந்தவர் “நீங்க ஒத்துக்குவீங்கன்னு நினைக்கவே இல்லைங்க” என்றார்.


“சரி எப்போன்னு சொல்லு”


“இன்னும் ரெண்டு நாளில் காதலர் தினம் வருதுங்க. அன்னைக்கு தான் சரியா இருக்கும்” என்றார்.


“உன்னை மாதிரியே எனக்கும் ஒரு ஆசை இருக்கு லக்ஷ்மி. நீ எனக்கு அதை நிறைவேற்றி வைக்கணும்” என்றார்.


“இங்கே பாருங்க! நீங்க உங்க ஆசை என்னன்னு சொல்லக் கூட வேண்டாம். நீங்க என்ன சொன்னாலும் ஒத்துக்கிறேன்” என்றார் கண்களில் காதலுடன்.


கணவன், மனைவி இருவரும் தங்களின் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள அந்த நாளிற்காக காத்திருக்க ஆரம்பித்தனர்.


அவர்கள் எதிர்பார்த்த நாளும் வந்தது. இருவரும் தாங்கள் வழக்கமாக செல்லும் இடத்திற்கு சற்று முன்னமே கிளம்பி சென்றனர். ஆனால் போகும் வழி எல்லாம் அன்று பயங்கர டிராபிக். அவர்களால் அந்த போக்குவரத்தை மீறி போக இயலவில்லை.


எங்கும் நெருக்கடியாக இருந்தது. அப்போது ஒரு கார் கதவு திறந்திருக்க, அதிலமர்ந்திருந்த குழந்தை ஒன்று கையிலிருந்த மொபைலில் இருந்து பாடலை ஒலிக்க விட்டது. அதைக் கேட்டதும் லக்ஷ்மி “என்னங்க!” என்று கணவரை ஆசையாகப் பார்த்தார்.


கருப்போ பயந்து போய் “வேண்டாம்டி! எவ்வளோ கூட்டம் பாரு! இங்கே போய்...” என்றார் கண்களில் பயத்துடன்.


“என்னங்க என் ஆசையை நிறைவேற்றுறேன்னு சொல்லி இருக்கீங்க. இப்போ இப்படி சொன்னா என்ன அர்த்தம் என்று கண்களை சிமிட்டினார்”.


அதில் பயந்து போன கருப்பு மனைவியை அழைத்துக் கொண்டு அவசரமாக சிக்னலின் நடுவே சென்றார்.


அந்தப் பாடல் சத்தமாக ஒலிக்க, இருவரும் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு கால் மாற்றி ஸ்டேப் போட்டு ஆட ஆரம்பித்தனர்.


மை டியர் மச்சான்

நீ மனசு வச்சா

நாம உரசிக்கலாம்

நெஞ்சு ஜிகுஜிகுன்னு


என்று இருவரும் மெய்மறந்து ஆடிக் கொண்டிருந்தனர். போக்குவரத்து ஸ்தம்பித்து போனது. ஆளாளுக்கு மொபைலை எடுத்துக் கொண்டு அவர்களை படம் பிடிக்க ஆரம்பித்திருந்தனர். சோஷியல் மீடியாக்களில் அவர்களின் படம் வைரலானது.


அவர்களின் நடனத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் அத்தனை சிரிப்பு. அவர்களின் உற்சாகம் கருப்பையும், லக்ஷ்மியையும் தொற்றிக் கொண்டது.


ஆடி முடித்தவுடன் இருவரும் மெல்ல அங்கிருந்து குறுக்கு சந்தொன்றில் புகுந்து ஏரி இருக்கும் இடத்திற்கு வந்தனர்.


“லச்சு! உன்னோட ஆசையை நிறைவேற்றிட்டேன். நீ என்னோட ஆசையை நிறைவேத்துவியா?” என்றார் ஏக்கமான குரலில்.


தன்னுடைய ஆசைக்காக அத்தனை பேர் முன்பு ஆடியதில் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்த லக்ஷ்மி “சொல்லுங்க மாமா நானென்ன செய்யணும்?” என்றார்.


மனைவியின் முகத்தை ஆசையோடு பார்த்தவர் “எனக்கு ரொம்ப நாளா உன்னோட ஜலக்கிரீடை பண்ணனும்னு ஆசை” என்றார்.


அவரின் ஆசையைக் கேட்டதும் அவர் முகத்தில் அத்தனை வெட்கம் “போங்க மாமா. உங்கள என்னவோ நினைச்சேன்” என்று கூறியவர் கணவரை இழுத்துக் கொண்டு அவரின் ஆசையை நிறைவேற்ற சென்றார்.


காதலர் தினத்தை நடுரோட்டில் நடனம் ஆடியும் சேற்றில் விழுந்து பிரண்டும் ஜலக்கிரீடை செய்து கொண்டாடியது இரு எருமைகளும்.
 
Last edited:

Vethagowri

Well-known member
Staff member
#2
ஐயோ... அக்கா என்னால சிரிச்சு முடியலை.. என் இல்லை ஏன் இப்படி.. என்ன என்னவோ நினைக்க வைச்சு அட எருமைங்களான்னு திட்டினேன்.. ஆன அது எருமை ன்னு கடைசி லதான் தெரியுது.. அட ஆண்டவா...
 
#3
சுதாக்கா நல்ல முயற்சி. ஆனா, இதை நான் எதிர்பார்க்கல. அட எருமைக்கு வந்த வாழ்வே! ஏன் இதுங்க நடு ரோட்ல தான் டான்ஸ் ஆடுமா? கொட்டகைலயே ஆட வேண்டியதுதானே எப்பவும் ஜலக்கிரீடைல தானே இருக்கும். தனியா வேற ஆட்டம் போடணுமா? ஆக மொத்தம் உங்க ஹீரோ, ஹீரோயினுக்கு ரொம்பான்ஸ் எழுத மாட்டீங்க. இப்படி எருமை, பஸ்ஸுன்னு அக்றிணைக்கெல்லாம் லவ்ஸும் ரொமான்ஸுமா ஜமாய்க்கறீங்க. நடத்துங்க நடத்துங்க.
 
#5
ஏம்மா சூப்பர் சுஜி... இவ்வளவு நேரமும் கதையில வந்த புருஷன் பொஞ்சாதி ரெண்டு எருமையா?? காதலர் தினத்தை எருமைங்களும் விட்டு வைக்கலியா?? அதுவும் மை டியர் மச்சான் பாட்டோட?? இதுல ஜலக்கிரீடை வேற?? உங்க அறிவை கண்டு வியக்கேன்.. மீ புல்லரிச்சி போயிங்..