கல்யாண ரசம் - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

"கல்யாண ரசம்" என்கிற தலைப்போடு அருணா கதிர் அவர்கள் போட்டியில் இணைகிறார்கள்...........
 
#2
Hi all....
Good to be a part of this competetion...

என் கதையின் தலைப்பு “ கல்யாண ரசம். இதென்னடா ரசம், குழம்புன்னு… மானே தேனேன்னு தலைப்பு வைக்காம இப்படி ஒரு தலைப்பானு கொந்தளிக்காதீங்க..
கதைக்கு இந்த தலைப்பு ஏன் ஏற்புடையதா இருக்கும்னு கதையோட முடிவுல உங்களுக்கு புரியும் (அப்படின்னு பரவலா நம்பப்படுகிறதாக்கும்).. சோ, ரசம் அப்படித்தான் வச்சிருக்கேன்.
ரொம்ப ரொம்ப சிம்பிளான, சாதாரண கதை. குறு நாவல்ங்கறதால பெரிய கதைக் கருன்னு இல்லைன்னாலும், சொல்ல வந்த விஷயத்தை முடிஞ்ச அளவு சுவாரசியமா, உங்களுக்கு பிடிச்ச மாதிரி சொல்ல முயற்சிக்கறேன்.
உங்களோட ஆதரவு கண்டிப்பா தேவை… தேவை…தேவை.. அதுலையும் இது ரசம்… சோ, கண்டிப்பா எனக்கு என் ரசத்தை வைக்க உப்பு, புளி, மிளகு குடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
ரசம் வைக்கத் தயாராகும் நான்,
உங்கள் அருணா கதிர்
கதையோட சின்ன டீசர் கீழ இருக்கு…..
கல்யாண ரசம் - 1
“அப்பறம், சிண்டரெல்லா அந்த இளவரசனோட ரொம்ப நாள் சந்தோஷமா வாழ்ந்தாளாம்” என்று பவித்ராவின் குரல், குளீரூட்டப்பட்ட அந்த அறையில் மெல்லமாக சுழன்று கொண்டிருந்த மின்விசிறியின் ஓசையில் ஒரே சீராகக் கேட்டது.
“அப்பறம் என்னாச்சும்மா…” என்று பவித்ராவின் இடுப்பின் மேல் ஒரு காலை போட்டுக் கொண்டு ஆர்வமாக கதை கேட்டுக் கொண்டிருந்த நான்கு வயது சம்ருதி வினவினாள்.
“அதான் சொன்னேனே சிண்டரெல்லாக்கு அந்த இளவரசனோட கல்யாணம் ஆகிடுச்சு, சந்தோஷமா வாழ்ந்தான்னு”
“ஓ, அப்போ கல்யாணம் முடிஞ்சா எல்லாருமே சந்தோஷமா வாழ்வாங்களா? அப்ப நீயும் டாடியும் ஏன் எப்பப்பாரு சண்டை போட்டுக்கறீங்க?” என்று படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து கொண்டு கன்னத்தில் கைவைத்தவண்ணம் வினவிய மகளை மீண்டும் படுக்கையில் சாய்த்தாள் பவித்ரா.
சொல்லும்மா, கல்யாணம் முடிஞ்சா எல்லாரும் சந்தோஷமா வாழ்வாங்களா? சிண்டரெல்லா மாதிரி?”