கல்யாண கலாட்டா - கதை திரி

lakshmi

Active member
Staff member
#36
யாழினி கோபமாக கிளாஸ்க்கு சென்றுவிட்டாள். திவி மித்ரனிடம் பங்கு என்ன பங்கு, இவ காலையிலே இப்படி அபசகுனமா பேசுறா. மித்ரன், விடு பங்கு கொஞ்ச நேரத்தில அவளுக்கு பசிக்கும் அவளே இங்க வந்துடுவா. இல்லனா ரெண்டு சமோசாவும் பஜ்ஜியும் வாங்கி கொடுத்தா சமாதானம் ஆயிடுவா என்றான்.


கோவமாக யாழினி கிளாஸ்க்கு சென்று கொண்டிருந்தாள். பிரபு என்கிற பிரபாகரன் யாழி யாழி என்று கத்திக் கொண்டு ஓடி வந்து கொண்டிருந்தான்.... திரும்பிப் பார்த்து யாழினி மைண்ட் வாய்ஸில்,"ஐயோ இவன் வேற காலையிலேயே வந்து சாகடிப்பானே, இவன் மட்டும் ஏதாவது காதல் கல்யாணம் டயலாக் விடட்டும் செத்தடா மவனே". அவன் அருகில் வந்து யாழினியிடம் நீ இந்த யெல்லோ சுடில ரொம்ப அழகா இருக்க என்றான். அப்புறம் நான் உன் பின்னாடி ஒரு வருஷம் சுத்திட்டு இருக்கேன். நீ இன்னும் எந்த பதிலும் சொல்லல என்று பினாத்தினான். யாழினி கடுப்பாகி, உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா சீனியர். கோவத்துல எதாவது திட்டிட போறேன். போங்க இங்கிருந்து என திட்டி விட்டு சென்று விட்டாள். பிரபு வாடிய முகத்துடன் நகர்ந்து விட்டான். வகுப்பறையில் நுழைந்தவுடன், அங்கு யாழினியின் எதிரி கேங்க் அமர்ந்து இருந்தனர். யாழினி கேங்கிற்கும் அந்தக் கேங்கிற்கும் எப்போதும் ஆகாது. சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள். அந்த கேங்கில் நாலு பேர் உள்ளனர். சிவா, ஹரி, கார்த்திக், நம்ம ஹீரோ துருவ். யாழினி உள்ளே நுழைந்தவுடன் ஹரி, மச்சி என்னடா மஞ்ச காட்டு மைனா தனியா வருது. வாங்கடா கலாய்க்கலாம் என்றான். உடனே எல்லோரும் கோரஸாக பாட்டு பாடினார்கள்"மஞ்ச காட்டு மைனா
என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போறா"...
யாழினி கடுப்பாகி மைண்ட் வாய்ஸில், "ஐயோ கடவுளே யார் முகத்தில முழிச்சேனோ தெரியலையே இப்படி காலையிலிருந்து என்ன வச்சு செஞ்சுட்டு இருக்காங்க". என்று நினைத்துவிட்டு அடச்சீ வாயை மூடுங்க எனக்கு உங்ககூட சண்டை போட மூடு இல்ல. மூடிட்டு போய் உட்காரு என்று ஹரியை திட்டிவிட்டாள்.


உடனே துருவ்விற்கு கோபம் வந்து எழுந்து யாழினியை நோக்கி, "ஓய் உன்கிட்ட சொல்லியே ஆகணும், நீ அவ்ளோ அழகு, வில் யூ மேரி மீ", என்று கூறிக் கொண்டே முன்னேறினான். யாழினியின் கால்கள் தன்னிச்சையாக பின்னே சென்றது. அவளிடம் சொல்வது போல சென்று பின் விலகி பின்னாடி வரும் பெண்ணிடம், என்ன சொல்றே என்று கேட்டான். அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். மச்சி செம கலாய் செம கலாய் என்றனர் மற்ற மூவர்...........


யாழினி துருவ்வை முறைத்தாள். துருவ், என்ன முறைக்கிற உனக்கு எல்லாம் அவ்வளவு சீன் இல்ல. தள்ளிப் போ அந்த பக்கம். நானே பதிலுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். யாழினி கோபமாக தன் இடத்திற்கு சென்று அமர்ந்துவிட்டாள். இன்னும் அவர்கள் இவளைப் பார்த்து சிரித்துக் கொண்டுதான் இருந்தனர். யாழினி முறைத்துவிட்டு திரும்பி உட்கார்ந்துவிட்டாள். பின் சிறிது நேரத்தில் ப்ரொஃபஸர் வந்து லெசன் எடுக்க தொடங்கிவிட்டார்.


மித்ரன் ஆகாஷிடம் பங்கு என்ன பங்கு இன்னும் யாழினிய ஆள காணோம். ஒருவேளை கிளாஸ்க்கு போயி இருப்பாளோ. இல்லையே சுட்டு போட்டாலும் அவ அத செய்யமாட்டாளே. திவி, சும்மா கதையளக்காம வாங்க போய் பார்ப்போம் என்று ரைட் சைடில் சென்றாள் .


மித்ரன்அவ தலையில ரெண்டு தட்டு தட்டி, நம்ம கிளாஸ் இந்த பக்கம் இருக்கு. திவ்யா ஹிஹி என இளித்து, கிளாஸ்க்கு போய் ரொம்ப நாளாச்சு இல்ல, அதான் மறந்துட்டேன் பங்கு என்றாள். பின் அனைவரும் கிளாஸ் ரூம் உள்ள கட்டடத்திற்கு வந்து சேர்ந்தனர். யாழினி கிளாஸில் உட்கார்ந்து கொண்டிருப்பது ஜன்னல் வழியாக தெரிந்தது. ஆகாஷ் அத பார்த்து விட்டு திவ்யாவை கூப்பிட்டுக் காட்டினான். திவ்யா மித்திரனை அழைத்து நெற்றியில் கை வைத்துக்கொண்டு மொத்தமா ஸ்டூடன்டா மாறிட்ட உங்க அத்தை பொண்ணு யாழினிய பாருங்க மிஸ்டர் மித்ரன் என்று ரஜினி போல கூறினாள்.

மித்ரன் அதை பார்த்து அதிர்ச்சியாகி, இது கொஞ்சம் கூட சரியில்ல பங்கு. நம்மள விட்டு யாழினி மட்டும் கிளாஸ் அட்டென்ட் பண்ணி நல்ல பிள்ளையாக பாக்குறா. வாங்க கெடுத்துவிட்றலாம் என்று கிளாஸ்க்கு சென்றனர்.


ப்ரொஃபஸர் அவர்களை பார்த்து யார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்? என்றார். யாழினிக்கு சிரிப்பு வந்து விட்டது, வாய்மூடி சிரித்துக்கொண்டிருந்தாள். மித்ரன் சார் நாங்க இந்த டிபார்ட்மென்ட் தான், இங்க கிளாஸ்க்கு தான் வந்திருக்கோம் என்றார். அவர் உங்களை இந்த கிளாஸில் நான் பார்த்ததே இல்லையே என்றார். ஆகாஷ் எங்களுக்கும் அதே டவுட்டுதான், நாங்க இந்த கிளாஸ்தானான்னு என்று முணுமுணுத்தான்.ப்ரொஃபஸர் மித்திரனிடம், உண்மையைச் சொல்லுங்க. இன்னைக்கு தானே நீங்க பர்ஸ்ட் டைம் என் கிளாஸ்க்கு வர்றீங்க. மித்ரன் திருதிருவென முழித்து, இல்ல சார் நாங்க கிளாஸ் கட் பண்ணவே மாட்டோம் சார் என்றான். ப்ரொஃபஸர் சரி ஏன் இப்ப லேட்டா வர்றீங்க என்றார். மித்ரன் உடனே வேறு யாரும் வாயைத் திறக்கும் முன் முந்திக் கொண்டு, அது ஒன்னும் இல்ல சார். நாங்க கிளாஸ்க்கு லேட் ஆயிடுச்சு என்று வேக வேகமாக நடந்து வந்தோம். வர வழியில சுபா கால் தவறி விழுந்துட்டா சார். அதனால அவ கையில சுளுக்கு விழுந்திருச்சு சார். அதான் அவளுக்கு எண்ணெய் தேச்சு விட்டுட்டு வர இவ்வளவு நேரம் ஆயிடுச்சு சார் என்று சரளமாக பொய் சொன்னான்.

அந்த ப்ரொஃபஸர் கீழே தவறி விழுந்தா காலுல தான சுளுக்கு விழும். எப்டி கையில சுளுக்கு விழுந்துச்சு என்று கேட்டார். மித்ரன் மைண்ட் வாய்ஸில் , "டேய் முட்டாள் உனக்கு பொய் கூட ஒழுங்கா சொல்ல தெரியல ஐயோ எப்படி சமாளிக்க போறோமோ கடவுளே காப்பாத்துப்பா", என நினைத்துக்கொண்டு, சார் அது வந்து அவ கீழே விழும்போது கையை கீழே ஊண்டிட்டா சார். அதான் சார் கைல சுளுக்கு என்றான். சுபா எனக்கா என்று கேட்டுவிட, மித்ரன் அவ காலுல ஓங்கி மிதித்தவுடன் ஆ.. ஆமா சார் எனக்குதான் எனக்குதான் சார் என்றாள்..............


ப்ரொஃபஸர், " சரி சரி உள்ள போங்க, இனிமே லேட்டா வரக்கூடாது" என்றார்.


ஆகாஷ் உடனே, "கிளாஸ்கே இனி வர மாட்டோம்" என்றான்.

ப்ரொஃபஸர் திரும்பி, "என்னது என்றார்". சுபாஷ், இனிமேல் கிளாசுக்கு லேட்டா வரமாட்டேன் சொன்னேன் சார் என்றான். எல்லோரும் உள்ளே சென்று, யாழினி பக்கத்துல உட்கார்ந்து விட்டார்கள். யாழினி மித்ரன் கூறிய பொய்யை ஆவென வாயைத் திறந்து பார்த்துக் கொண்டிருந்தாள். மித்ரன் அவள் வாயை கையால் மூடி விட்டு, போதும் பங்கு உள்ள ஈ போகப்போது என்றான். யாழினி வாயை மூடி விட்டாள். ப்ரொஃபஸர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். யாழினியால் கவனிக்க முடியவில்லை. வயிற்றுக்குள் பானையை உருட்டுவது போல சத்தம், பசி தாங்க முடியவில்லை. திரும்பி அவர்களை பார்த்தாள். அவர்கள் ஆர்வமாக லெஸன் கவனித்துக் கொண்டிருந்தார்கள், இல்லை இல்லை நடிச்சிட்டு இருந்தாங்க....


யாழினி யோசித்தாள் சோறா? ரோஷமா?. நமக்கு சோறு தான் முக்கியம் என்று முடிவு பண்ணிட்டு கேட்கலாம்னு வாய்திறக்க போகும்போது, மித்ரன் டிபன் பாக்சை திறந்து அவளிடம் நீட்டினான். அவள் வாங்கி சாப்பிட ஆரம்பித்தாள்.

அதை பார்த்த திவ்யா மித்ரனிடம், பங்கு நீ சொன்னது கரெக்ட் தான் பங்கு என்றாள். யாழினி சாப்பிட்டுக்கொண்டே, என்ன என்று கேட்டு மித்ரனை பார்த்தாள். மித்ரன் திருதிருவென, என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தான். யாழினி அதைப் பார்த்து, டேய் என்ன பத்தி கேவலமா என்னடா சொன்ன சொல்லு டா என்றாள். மித்ரன், ஒன்னும் இல்ல பங்கு. அவ ஏதோ ஒரு கனவு கண்டு உளர்றா. திவி, பங்கு நான் சொல்றேன் பங்கு அவன் கிட்ட ஏன் கேக்குற என்கிட்ட கேளு பங்கு. அது ஒன்னும் இல்ல பங்கு, என ஆரம்பித்து மித்ரன் வேண்டாம் என சைகை செய்தும் கேட்காமல், நீ ஒரு சரியான சாப்பாட்டு ராமியாம். எவ்வளவு கலாய்ச்சாளும் ரெண்டு பஜ்ஜியும் போண்டாவும் வாங்கி கொடுத்தா வெட்கமே இல்லாம சாப்பிடுவியாம் நீ என்றாள்.....

யாழினி மித்ரனை முறைத்துவிட்டு, அந்த டிபனை அவனிடமே கொடுத்து விட்டு, அப்படியா சொன்னே என்றாள்..... மித்ரன் என்ன சொல்வதென்று தெரியாமல் நாலாபக்கமும் தலையை ஆட்டினான். உங்க சாப்பாடு எனக்கு வேண்டாம் போங்கடா என முறைத்துவிட்டு, கிளாஸ் கவனிக்க தொடங்கினாள்.....


திவ்யா அந்த டிபனை சாப்பிட தொடங்கினாள். சுபாவும் ஆகாஷும் சேர்ந்து சாப்பிடத் தொடங்கினார்கள்.... மித்ரன் அந்த டிபனில் கைவைக்க போக, யாழினி அந்த டிபனை பிடுங்கிவிட்டாள்.... அவர்கள் செய்த அலப்பறையை ப்ரொஃபஸர் பார்த்துவிட்டு, யாழினி என கத்தினார்.....


யாழினி கையிலிருந்த டிபன் பாக்சோடும் சாப்பிட்ட கையோடும் எழுந்து நின்றாள்....கிளாசே அவளைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்கினர். ப்ரொஃபஸர் கோபத்தில் கத்த ஆரம்பித்தார். உனக்கு அறிவே இல்லையா? நீ காலேஜ் படிக்கிற பொண்ணு, எல்கேஜி ஸ்டூடண்ட் மாதிரி பிகேவ் பண்ணிட்டு இருக்க என்று காச்சு மூச்சு என்று கத்திக் கொண்டிருந்தார்.... யாழினி கடுப்பில், சார் நிறுத்துங்க. என்னமோ நான் மட்டும்தான் சாப்பிட்டு இருக்க மாதிரி திட்டுறீங்க, என் பக்கத்துல இருக்குதுங்களே இதுங்களும் தான் சேர்த்து சாப்பிட்டுச்சுங்க என்று அவர்களையும் சேர்த்து போட்டு விட்டாள். மவனே என்னை பார்த்து சிரிச்சிங்க இல்ல நல்லா சேர்ந்து திட்டு வாங்குங்க என்று சிரித்தாள்..... ப்ரொஃபஸர் அவர்களை எழுப்பி விட்டார்.

அனைவரும் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு எழுந்து நின்றனர்.... இதென்ன கிளாஸா இல்ல கேண்டீனா என்று மீண்டும் கத்த ஆரம்பித்துவிட்டார் ப்ரொஃபஸர். அவர் திட்டிக் கொண்டிருக்கும் போதே, சுபாவின் கையை பார்த்துவிட்டு, உனக்கு கையில் சுளுக்குன்னு சொன்ன என்று கேட்டார். சுபா என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தாள். அதில் ப்ரொஃபஸர் மீண்டும் கடுப்பாகி, கெட் அவுட் யு ஆல் என்று கத்தினார்....


அனைவரும் வெளியே சென்று நின்றனர். வெளியே வந்தவுடன், மித்ரன், சுபா, ஆகாஷ் மற்றும் திவி என அனைவரும் யாழினியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தனர். சிரித்துக் கொண்டே இருக்கும் போது மித்ரன் மாடியில் இருந்து விழுந்துவிட்டான். மற்ற அனைவரும் அவனை தூக்க போக, விழுந்தவன் எழுந்து கூட நிற்காமல், இன்னும் சிரித்துக் கொண்டுதான் இருந்தான்..... தன் கையில் இருந்த பேக்கை வைத்து மித்ரனை அடித்தாள். அவள் உச்சபட்ச கோபத்துக்கு சென்றுவிட்டாள் என்று அறிந்து அமைதியாகி விட்டனர் அனைவரும்..... அவர்கள் அனைவரும் வரிசையாக அமைதியாக நின்று கொண்டிருந்தனர். அப்போது மித்ரன் மொபைலுக்கு ஏதோ நோட்டிபிகேஷன் வந்தது. அவன் மொபைலை ஆன் செய்து பார்த்துவிட்டு, மொபைலை கீழே வைத்துவிட்டு வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தான். எல்லோரும் என்ன என்று தெரியாமல் ஏன் இப்படி பைத்தியம் மாதிரி சிரிக்கிறான் என்று பார்த்தனர்......

தொடரும்
 

Janu murugan

Moderator
Staff member
#38
ஹாய் பிரெண்ட்ஸ்,

நமது தளத்திற்கு புது வரவான ஜானு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..அவர்களின் "கல்யாண கலாட்டா" கதையின் பதிவுகள் இங்கு பதிவிடப்படும்.


மித்ரன் யப்பா! இன்னும் பாதி வேலை கூட முடியலை. அதுக்குள்ள என் பாதி உயிரை எடுத்துட்டாங்க. இப்பவாச்சும் கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம் என உட்கார போக, அந்த சாத்விக் வேகமாக ஓடி வந்து மித்ரனை மோதி விட்டு ஓடினான். மித்ரன் இந்த லூசு எதுக்கு இப்படி அவசரமா ஓடுது, யாரு துரத்துவது என பார்த்தா சூர்யா வந்து கொண்டிருந்தான். மித்ரன் சூர்யாவை பிடித்து நிறுத்தி, ஏன்டா லூசு இப்ப தான உன்னை திட்டுனேன். இப்ப இவன் கூட ஓடிப்பிடித்து விளையாடிட்டு இருக்க? உனக்கு புத்தி வராதா என்று திட்டினான்....
சூர்யா ஏதோ சொல்ல வர, மித்ரன் ஏன்டா நம்ம வீட்டு ஆளுங்களோட தான் சண்டை போட்டுட்டு இருந்தேனு பார்த்தா அவன் கூட விளையாடிட்டு இருக்க. இப்ப எதுக்குடா அவனை துரத்துற என்றான். சூர்யா அது என் ஃப்ரண்ட் கிட்ட பேசிட்டு இருக்கும் போது யாழினி துருவ் நேம்ல பிளக்ஸ் அடிக்க சொன்னேன். இதை அவன் கேட்டான். அவன் யார் கிட்டயோ சொல்ல ஓடுறான் என்றான்....
மித்ரன் அட எடுபட்ட பயலே! இதை ஏன்டா இவ்வளவு லேட்டா சொல்ற என்றான். சூர்யா , நீ எங்கடா என்னை சொல்ல விட்ட என்றான். மித்ரன், உன்னை எல்லாம் வச்சு பிளான் பண்ணேன் பாரு என்னை சொல்லனும் என்று, முதல்ல போய் அவனை பிடி என துரத்தினான். மித்ரன் ஓடிக் கொண்டே போனை எடுத்து ஹரிக்கு கால் செய்து, மச்சி அந்த சாத்விக் நீ இருக்க பக்கம்தான் ஓடிவரான். அவனை பிடித்து ரூம்குள்ள அடைச்சு வைடா என்றான்....

ஹரியும் அவனைத் துரத்திக் கொண்டு ஓடினான் . இதைப் பார்த்த சிவா ஏன்டா மச்சான் அவனை துரத்துற என அவன் பின்னே ஓடினான். ஹரி, மச்சான் வாடா சீக்கிரம் என்றான். சிவாவும் கார்த்தியும் அவனைத் துரத்திக்கொண்டு ஓடினார்கள். துருவ் இவர்களைப் பார்த்து, என்ன இதுங்க இந்த கல்யாணத்தை நிறுத்த சொன்னால் இப்படி ஓடிப்பிடித்து விளையாடதுங்க என அவன் பின்னே ஓடினான்....

பெரியவர்கள் இவர்களைப் பார்த்து, என்ன இதுங்க வீட்டில விளையாடுவது பத்தாம இங்கு வந்து விளையாடி இப்படி கலவரம் பண்ணுதுங்கப்பா என பார்க்க, மித்ரன் ஆகாஷ் பெரியவர்களிடம் பேசிக்கொண்டு இருப்பதைப் பார்த்து அவனுக்கு போன் பண்ணி, மச்சி சாத்விக் ஓடி வரான் பாரு, அவன ரூம்குள்ள தள்ளி பூட்டுடா என்றான். மித்ரன், இந்த கேனை பையன் கிட்ட சொல்லி இருக்கேன் என்ன பண்ண காத்திருக்கானோ என புலம்பினான். மித்ரன் ஆகாஷ் எதற்கு இதை செய்ய சொன்னான் என தெரியாமல் சாத்விக்கை பிடித்து ரூம்க்குள் அடைத்து விட்டான். ஓடி வந்த அனைவரும் ஒரு வழியாக அவனை ரூம்க்குள் அடைத்து விட்டோம் என ஆனந்தப்பட்டனர். மித்ரன் ஆகாஷிடம் நீ நல்ல வேலை பார்த்த டா என்றான்....

அவர்கள் சந்தோஷமாக ஹைபை அடித்துக் கொண்டு திரும்ப, பெரியவர்கள் அனைவரும் அவர்களை முறைத்துக் கொண்டு இருந்தனர். சிறுவர்கள் என்ன சொல்வதென்று தெரியாமல் அனைவரும் முழித்தனர். கருணாகரன் என்ன பண்ணீட்டு இருக்கீங்க? என்றார் கோபமாக. அனைவரும் மற்றவரை கை காட்டினார். கருணாகரன் சின்னப்புள்ளைங்க மாதிரி பண்ணீட்டு இருக்கீங்க என்றவர், துருவ்விடம் நீயுமாபா துருவ். நீ தான் கொஞ்சம் பொறுப்பா நடந்துகிட்ட என்றார். துருவ், இரண்டு வேலை செஞ்சு வாங்கின நல்ல பேர ரெண்டே நிமிஷத்துல கெடுத்துட்டானுங்க என்று முணுமுணுத்தான். மித்ரன் மாமா அவனை திட்டாதீங்க. எல்லாத்துக்கும் காரணம் இந்த ஆகாஷ் தான் என்றான். ஆகாஷ் கொடும் பாவிப்பயலே! மத்த இடத்துல தான் என்னை கோர்த்துவிட்டேன் என்று பார்த்தா இப்ப வீட்டிலயும் என்ன கோர்த்துவிட்டுடியே டா என நினைத்துக்கொண்டு என்ன சொல்வதென்று தெரியாமல் வழக்கம்போல பேவன முழித்தான்...
கருணா என்னடா பண்ண என்ற பார்வையில் பார்க்க, மித்ரன் மாமா இவன்தான் ஓடிப் பிடித்து விளையாண்டு ரொம்ப நாள் ஆச்சு வாங்க விளையாடலாம் என்று கூப்பிட்டான். நான் கல்யாண வேலை எல்லாம் இருக்கு பொறுப்பாக நடந்துகோட என்று சொன்னேன். அதுக்கு அவன் நீயே இப்ப என்னை பிடிக்க ஓடி வருவ என்று சொல்லி என் மொபைலை புடிங்கிட்டு வந்துட்டான் . அதுக்குத்தான் நான் இவனை துரத்துனேன். இவங்க எல்லாம் எனக்கு உதவி பண்ண வந்தாங்க என்றான். கருணாகரன் ஆகாஷை முறைத்து என்ன ஆகாஷ் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் நடந்துக்கிற. கல்யாணம் முடியட்டும் உன்னை பார்த்துக்குறேன் என்றார்.....
இவர் திட்டிக் கொண்டிருக்கும் போதே சந்துரு ஓடிவந்து , மித்ரன் என்ன ஆச்சு? ஏன் அந்த பையன துரத்திட்டு வந்தீங்க ஆமா சா..... என அவன் ஆரம்பிக்கும் போது மித்ரன் காலில் ஒரு மிதி மிதித்து ஆமா அது ஆகாஷ் தான். அவன் என் போன் புடுங்கிட்டு வந்துட்டான் என்றான். சந்துரு புரிந்துகொண்டு ஆகாஷிடம் ஏன்டா இப்படி பண்ண எனக் கோபப்படுவது போல நடித்தான் . கருணா என்னமோ பண்ணுங்க என திட்டி விட்டு திரும்ப போக, அந்த தாத்தா வந்து கருணாகரனிடம் ஏன்டா மாப்பிள்ளைய இப்படி நிக்க வச்சு திட்டிட்டு இருக்க என்றார் . மித்ரன் என்ன எப்பயும் கேப் விட்டு தான் அட்டாக் பண்ணுவானுங்க. இப்ப அடுத்தடுத்து அட்டாக் பண்றாங்க கடவுளே இந்த பாவப்பட்ட ஜென்மத்தை நீதான் காப்பாத்தணும்பா என்று வேண்டினான்.....

கருணாகரன் அந்த தாத்தாவிடம் பெரியப்பா இவரு மாப்பிள்ளை இல்லை. மாப்பிள்ள ரூம்லே இருக்காரு என்றார். அந்தத் தாத்தா மித்ரனை கைகாட்டி இவன் தான் இவரை மாப்பிள்ளை என்று சொன்னா என மித்ரனை போட்டுக் கொடுத்தார். மித்ரன் ஐயோ கிழம் காட்டிக்கொடுத்துருச்சே என நினைத்து கொண்டு, மாமா நா ஸ்ரீதரை தான் மாப்பிள்ளைனு காட்டுனேன். இவருக்குத்தான் கண்ணு சரியா தெரியலை என்றான். அந்த தாத்தா யாருக்கு கண்ணு தெரியல என எகிறினார். கருணாகரன் பெரியப்பா உளராமல் போய் உட்காருங்க என அந்த தாத்தாவை விரட்டினார்....
கருணாகரன் கிளம்ப எத்தனிக்க அந்த ரூமில் அடைத்து வைத்திருந்த சாத்விக் கதவை திறங்க டா என கதவை தட்டினான். மித்ரன் ஐயோ அவனை மறந்து விட்டோமே என நினைக்க கருணாகரன் என்ன சத்தம் கேக்குது என்றார். சூர்யா அது எலி பெரியப்பா. நான் பார்த்துக்குறேன் நீங்க போங்க என அனுப்பினான்.....
மித்து சூர்யாவை கட்டிப் பிடித்து இப்பவாவது என்னை காப்பாத்த உனக்கு மனசு வந்து சமாளிச்சியே என்றுவிட்டு, சரி வா உள்ளே இருக்க அந்தக் குட்டயனை ஏதாவது பண்ணுவோம் என உள்ளே போனான். சந்துரு, மித்து நான் குளோரோஃபார்ம் வச்சிருக்கேன். அதை வச்சு அவனை மயக்கம் போட வைத்து விடுவோம் என கர்ச்சீப்பில் வைத்து அவனை மயக்கம் அடையச்செய்தான்....
மித்ரன் நல்லவேளை சந்துரு, குளோரோஃபார்ம் எடுத்து வந்தது நல்லதா போச்சு என்றான். பின் அனைவரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்ய சென்றனர். அபி நகத்தை கடித்துக் கொண்டு சோகமாக அமைந்திருந்தாள். மித்ரன் அபி குட்டி ஏன் இவ்வளவு பதட்டமாய் இருக்க . பிளான் ஏதாவது கொலாப்ஸ் ஆகிடுச்சா என்றான். அபி, அதெல்லாம் இல்ல அண்ணா அங்க பாருங்க இங்க இருக்குற பொண்ணுங்க எல்லாம் கௌதமயே பாக்குறாங்க கொல்லிகண்ணுங்க என்று திட்டினாள். மித்ரன், இதைக் கேட்டு சிரித்து விட்டு இவ்வளவுதானா ? இதுக்கு போய் இப்படி பயந்துட்டு இருக்க என்றான். அபி என் நிலைமை பார்த்தா உனக்கு சிரிப்பா இருக்கா? ஐயோ அண்ணா அங்க பாரு ஒருத்தி என் ஆளு கிட்ட பேச போறா பாரு என்று பதறியவளை, மித்ரன் அபி குட்டி கூல் உன் ஆளு கிட்ட பேசின இரண்டாவது நிமிஷம் அவளே தலை தெறிக்க ஓடி விடுவாள் என்றான். அவன் சொன்னது போலவே நடக்க அபி, எப்படி அண்ணா கரெக்டா சொல்ற என்றாள். மித்ரன் சிரித்துவிட்டு எல்லாம் தெரிந்த என்னாலேயே அவன்கிட்ட பேச முடியாது. புதுசா பேசுற பொண்ணு அவன் சொன்ன இரண்டாவது வார்த்தையிலேயே அவனை பத்தி தெரிஞ்சு இருக்கும் என கூறி விழுந்து விழுந்து சிரித்தான். அபி பத்ரகாளியாய் மாறி அவன் தலையில் கொட்டினாள். மித்ரன் ஏம்மா என்றான் . அபி ஆங் என் ஆளை பத்தி என்கிட்டயே கிண்டல் பண்றீங்களா கொன்றுவேன் என மிரட்டி விட்டுச் சென்றாள். மித்ரன் என்ன உண்மையை சொன்ன அடிக்கிறீங்க என்று புலம்பி விட்டு சென்றான்...
திருமண நேரம் நெருங்கியது. மித்ரன் ஸ்ரீதர் ரூம்க்கு சென்று ஸ்ரீதர் இப்ப நீ கிளம்புனா தான் கரெக்டா இருக்கும் என அவனை கிளம்ப சொன்னான். ஸ்ரீதர் யாருக்கும் தெரியாமல் பின் வாசல் வழியே வெளியேறினான். வர்ஷினி வர சந்துரு முகமெல்லாம் பல்லாக அவளை வரவேற்று அவளுடனே சுற்றிக் கொண்டிருந்தான். சந்துரு தலையில் தட்டி டேய் உன்னை என்ன வேலை பார்க்க சொன்னா? என்ன பண்ணிட்டு இருக்க இப்படியே பண்ணிட்டு இருந்தா உனக்கு கல்யாணம் ஆகாம டிவோஸ் வாங்கி கொடுத்து விடுவேன் என்றான். சந்த்ருவிற்கு தூக்கிவாரிபோட்டது. டேய் அப்படி எல்லாம் பண்ணிடாதடா நான் போய் வேலைய கரெக்டா பார்க்கிறேன் என்று சென்றுவிட்டான்....
வர்ஷினி யாழினியை பார்க்க அவ ரூம்க்கு சென்று விட்டாள். மித்ரன் ஆகாஷ் சந்திரிக்கா உடன் போனில் கடலை போடுவதை பார்த்த அவன் என்ன செய்வது என்று யோசித்து அருகிலிருந்த இளைஞனிடம் ஒரு சிகரெட்டை வாங்கி பற்ற வைத்துக் கொண்டு, போனை எடுத்து சுபாவை அங்கு வரச் சொன்னவன் ஆகாஷிடம் போன் பேசுவது போல நடித்து மச்சான் இது வச்சுரு வந்து வாங்கிக்கிறேன் என்று சிகரெட்டைக் கொடுத்து விட்டு ஒளிந்து கொண்டான். ஆகாஷ் அந்த சிகரெட்டை பார்த்து இவன் எப்ப இதை ஆரம்பிச்சான் என யோசித்துக் கொண்டிருந்தான் . அங்கு வந்து சுபா அவன் தலையில் வலிக்கும்படி ஒரு கொட்டு கொட்டினாள். ஆகாஷ் எதுக்கு சுபா கொட்டுன என்றான். சுபா இதுக்கு என கையில் இருந்த சிகரெட்டை காட்டினாள். சுபா நீ என்னை சந்தேகப்படுறீயா?. மித்ரன் தான் இதை கொடுத்துவிட்டு இப்ப வாங்கிகிறேன்னு சொன்னான் என்று மித்ரனை தேடினான். சுபா, எங்க மித்துவ? ஒரு பொய் கூட ஒழுங்கா சொல்ல தெரியலை. அங்க பாரு அவன் பொறுப்பா வேலை செஞ்சுட்டு இருக்கான் என காட்டினாள். மித்ரன் தனக்கு எதுவும் தெரியாதது போல வேலை செய்து கொண்டிருந்தான். சுபா உன்னை அப்பா கிட்ட போட்டு தரேன் என திட்டி விட்டு சென்றுவிட்டாள். ஆகாஷ், எந்த தப்பும் செய்யாமல் நாம் மட்டும் எல்லா பழியையும் வாங்கிக்கிறோம் என புலம்பினான்.....

மித்ரன் என்னடா இங்க எல்லாம் கூறுகெட்ட பயலுகளா இருக்காங்க. மாப்பிளை ஓடிப் போய் அரை மணி நேரம் ஆச்சு. ஒருத்தனும் கண்டுபிடிக்கலை என்று விட்டு ஐயரிடம் சென்று, ஐயரே எப்படி சாயந்திரம் வரைக்கும் மந்திரம் சொல்லுவீங்களா என்றான். ஐயர் அவனை முறைத்து விட்டு மாப்பிள்ளையை கூட்டிட்டு வாங்கோ என்றார். சந்துரு இதுக்குதான காத்திருந்தேன் என கூறிவிட்டு மணமகன் அறையை நோக்கி சென்றான். சந்துரு ஸ்ரீதர் ரூமில் எட்டி பார்த்துவிட்டு கருணாகரனிடம் பெரியப்பா மாப்பிள்ளை காணோம் என்றான்....
கருணாகரன் டேய் வேற எங்கேயாவது தேடி பாரு மாப்ளை ஃபிரண்ட்ஸ் கூட பேசிட்டு இருக்க போகிறார் என்றார். மித்ரன் ஓடி வந்து மாமா மண்டபம் புல்லா தேடிட்டேன் மாப்பிள்ளையை காணும் என்றான். மித்ரன் செட் பண்ணியிருந்த ஆள் மாப்பிள்ளையே காணோமா என கத்தினான். இந்த செய்தி காட்டுத் தீ போல மண்டபத்தில் பரவியது. அனைவருக்கும் இடையே சலசலப்பு உருவானது. யாழினி அப்போதுதான் விஷயம் தெரிந்தது போல மேடைக்கு வந்து முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு நின்றாள். ஸ்டேஜில் ஒரு புறத்தில் சூர்யா நின்றிருந்தான். சுஜி மித்ரன் காதில் அண்ணா மண்டபத்தில் யாழினிக்கு முறை பையன்க 10 பேர் இருக்காங்க என்றான். மித்ரன், 10 பேரா? எப்படி அவனுங்கள பேக் பண்றதுன்னு தெரியலையே என்றான். ஸ்ரீதரோட அப்பா என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு நின்றார்....
யாழினி வீட்டில் உள்ள தாய்மார்கள் இப்படி ஆகிவிட்டதே என்ன செய்வதென்று தெரியாமல் சோகமே உருவாக நின்றிருந்தனர். ஸ்ரீதர் ஓடிப் போய் விட்டான் என கன்ஃபார்ம் ஆனது. ஸ்ரீதரின் அப்பா கருணாகரனிடம் என்னை மன்னிச்சுடு கருணா. அம்மா இல்லாத பையன்னு செல்லம் கொடுத்து வளர்த்தேன். அவன் கல்யாணம் வேணாம் வேணாம்னு சொன்னான். நான் அவன் கல்யாணம் பண்ண பயப்படுறான் என்று நினைச்சு நான் தான் கல்யாணம் ஆனா சரியாயிடும்னு இதை ஏற்பாடு பண்ணிட்டேன் என வருந்தினார்...
மித்ரன் யாழினியிடம், பங்கு அழுது சீன் போடு சிம்பதியை கிரியேட் பண்ணு என்றான். யாழினியும் கருணாவிடம் ஓடிச்சென்று அப்பா என அவரை கட்டிப்பிடித்து அழுதாள். மித்ரன் பரவாயில்லையே! நாம பங்கு நல்லாதான் நடிக்கிறா என மெச்சினான். மங்களமும் சௌந்தர்ராஜனும் கருணாகரனிடம் என்னப்பா இப்படி ஆயிடுச்சு என்றனர். துருவ், அங்கிள் மனச தளர விடாதீங்க. ஸ்ரீதரை தேடச் சொல்லி ஆள் அனுப்பி இருக்கேன் என்றான்.....

மங்களம் கருணாகரன் காதில் ஏதோ சொல்ல அனைவரும் ஒரு ஓரமாக சென்று ஏதோ டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தனர். கூட்டத்தில் ஒருவன் டிப்டாப்பாக இருந்தான். வேகமாக ஸ்டேஜ் நோக்கி வந்தான். மித்ரன் ஓடி வந்து அவனிடம் எங்க போறீங்க என்றான். அவன் இல்ல அந்த பொண்ணு பாக்க பாவமா இருக்கு . அதான் அவளுக்கு வாழ்க்கை கொடுக்கலாம்னு என்றான். மித்ரன் அவனிடம் அந்த மாப்பிள்ளை ஏன் ஓடிப்போனார் தெரியுமா?. அந்த பொண்ணு கொஞ்சம் லூசு. அதான் அத்தை பையன் நானே அவளைகட்டிக்க மாட்டேன் என்று சொல்லிட்டேன் என்றான். அவன் நல்ல வேலை பாஸ் சொன்னிங்க . இல்லனா அந்த பைத்தியத்தை கல்யாணம் பண்ணி கஷ்டப்பட்டு இருப்பேன் என வந்த வழியே திரும்பினான் ....
யாழினி மித்ரனிடம், என்ன பங்கு அவளுக்கு என்னவாம் என்றாள். மித்ரன் அதுவா பையனுக்கு உன் மேல சிம்பத்தியாம். அதான் உனக்கு வாழ்க்கை கொடுக்கலாம் என்று வந்தான் என்றான். யாழினி, ஐயோ அப்புறம் என்ன ஆச்சு என்றாள். மித்ரன், அது வா நீ ஒரு லூசுன்னு சொன்னேன். அவன் வந்த வழியே பார்த்து ஓடிட்டான் என்றான். யாழினி அவனை முறைத்தாள்....
மித்ரன் பங்கு அங்க பாரு. நம்ம வீட்டு கோர்ட் ஜட்ஜஸ் எல்லாம் வராங்க. ஏதோ உனக்கு பெரிய ஆப்பா ரெடி பண்ணிட்டாங்க போல என்றான் . வந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மித்ரனை பார்க்க, மித்ரன் மைண்ட் வாய்ஸில் ஐயோ நமக்கு தான் பெரிய ஆப்பா ரெடி பண்ணிட்டாங்க போல என நினைத்து அனைவரையும் பார்த்து திருதிருவென முழித்தான்....
நடந்தது எதுவும் தெரியாமல் நம்ம ஸ்ரீதரோட அத்தை பொண்ணு காவ்யா ரவுடிங்க கிட்ட யாழினி போட்டோவை காட்டி இவளதான் நீங்க தூக்கனும் . அப்றோம் உங்க போன் எல்லாம் சுவிட்ச் ஆப் பண்ணிடுங்க. நானே பண்ணா கூட யாரும் அட்டென்ட் பண்ண கூடாது. யாருக்காவது என் மேல சந்தேகம் வந்து விட்டால் அவ்வளவுதான் என்னை கொன்றுவாங்க. வந்த வேலைய கரெக்டா முடிச்சா பேசினதுக்கு மேலேயே பணம் தரேன் என்றாள். அந்தக் கூட்டத்தின் தலைவன் மேடம் எல்லாம் பக்காவா செஞ்சுடுறோம் கவலைப்படாதீங்க என்றான்.
இங்கே கருணாகரன் மித்ரனிடம், மித்ரன் நீதான் என் பொண்ணு வாழ்க்கையை காப்பாத்தணும் என்று கெஞ்சினார். இதைக்கேட்ட துருவ், யாழினி, திவ்யா, சுபா, மது, ஆகாஷ், ஹரி, சிவா, அபி,சித்து, கார்த்திக் என அனைவர் முகத்திலும் அப்பட்டமான அதிர்ச்சி. திவ்யா மித்ரனிடம், பங்கு ஊர்ல இருக்க தென்னை மரத்தை எல்லாம் பார்த்தோம். ஆனால் வீட்டில் இருக்க பனைமரத்தை மறந்துட்டோமே என்றாள்....

கங்கா கருணாகரனிடம், என்ன அண்ணே நீ போய் அவன்கிட்ட கெஞ்சீட்டு இருக்கீங்க என்றார். சிதம்பரம், இதை செய்டானா செய்யப்போறான் மச்சான் அவன் என்றான். மித்ரன் ஐயோ எல்லா பயலுகளையும் பார்த்த நான்,நானும் அதே லிஸ்ட்லதான் இருக்கேன்றது மறந்துட்டேனே என நினைத்துவிட்டு, என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தான்....

யாழினி, அப்பா என்னப்பா நீங்க மித்ரனை கல்யாணம் பண்ணிக்கச் சொல்றீங்க. உங்களுக்கு ஞாபகம் இருக்கா நான் நைன்த் ஸ்டாண்டர்ட் படிக்கும்போது ஸ்கூல்ல டிசி கொடுத்து அனுப்பினாங்க. அது எதுக்குன்னு உங்களுக்கு தெரியுமா? எங்க கிளாஸ்ல ஒரு பையன் எங்க ரெண்டு பேரையும் சேத்து வச்சு பேசினான். அதுக்குத்தான் மித்ரன் அவனை அடிச்சான். அவன் அடிக்கும் போது மித்ரன் என்ன சொன்னான் தெரியுமா? யாழினி எனக்கு கூட பிறந்த தங்கச்சி மாதிரி என்று சொல்லி அடிச்சான். அப்போதில் இருந்து இப்ப வரைக்கும் இவன் எனக்கு ஒரு அண்ணனா தான் தெரிகிறான் எனக்கூறி கண்ணீரைத் துடைத்தவள், திரும்பிப் மித்ரனை பார்த்து கண்ணடித்தாள்.....
மித்ரன் வரே வா என் பங்குக்கு இவ்வளவு மூளையா? என்னை காப்பாத்திட்டாள் என மனதிற்குள் மெச்சினான். மதுவிற்கு இப்போதுதான் போன உயிர் திரும்பி வந்தது. துருவ்விற்கும் அதே நிலைமைதான். துருவ், கவலைப்படாதீங்க அங்கிள் ஸ்ரீதரை கண்டிப்பா நான் அனுப்புன ஆளுங்க சீக்கிரமா கூட்டிட்டு வந்து விடுவார்கள் என்றான் சிவாவும் சேர்ந்து ஆமா அங்கிள் கவலைப்படாதீங்க என்றான்....

கருணாகரன் சிவாவிடம், சிவா நான் ஒன்னு கேட்டா செய்வியா என்றார். சிவா, அவர் கேட்கும் கேள்வியில் ஆட்டம் காணப் போவது தெரியாமல் அசால்டாக கேளுங்க அங்கிள் என்றான். கருணாகரன் யாழினிய நீ கல்யாணம் பண்ணிக்கிறீயா? என்றார். சிவா அதிர்ந்து விட்டான். என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தான்.....
கலாட்டாக்கள் தொடரும்.....
 

Janu murugan

Moderator
Staff member
#39
சிவா என்ன சொல்வது என்று தெரியாமல் ஐயோ அங்கிள் நான் ஏற்கனவே ஒரு பொண்ண லவ் பண்றேன். எங்க வீட்ல கூட அவளை எனக்கு நிச்சயம் பண்ண போறாங்க அதோ அதுதான் அந்த பொண்ணு என அவசரத்துக்கு வர்ஷினி அருகில் இருந்த பெண்ணை கை காட்டினான். மித்ரன் என்னடா இது சிவாவுக்கு வந்த சோதனை என நினைத்தான். யாழினி அப்பா எனக்காக நீங்க யார் கிட்டயும் கெஞ்ச வேண்டாம் என்றாள். துருவ் சிவாவை கூட இருந்தே இப்படி குழி பறிச்சிட்டியடா துரோகி என நினைத்து முறைத்தான். கருணாவை பார்த்து யோவ் மாமா இங்க குத்து கல்லு மாதிரி ஒருத்தன் நிக்கிறேன் என்ன விட்டுட்டு அவன கேட்கிற இது கொஞ்சம் கூட சரி பட்டு வராது என நினைத்தவன், கருணாகரனிடம் அங்கிள் உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லேனா நானே யாழினியை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றான். கருணாகரன் துருவ் கையை பிடித்து உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல என்றார். துருவ் அங்கிள் அப்பா அம்மா வந்ததும் நான் தாலி கட்டுறேன் இப்ப தான் பேசினேன் பக்கத்துல வந்துட்டாங்களாம் என்றான்.கருணாகரன் சரிப்பா அவங்க வரட்டும் மேடையில உட்காருங்க என துருவ்வையும் யாழினியையும் உட்கார வைத்தார். துருவ்வின் அப்பா அம்மா காரை மண்டபத்தின் வெளியே நிற்க வைத்துவிட்டு உள்ளே வந்து கொண்டிருந்தனர். மித்ரன் கடவுளே இனி நடக்கப் போற போராட்டத்தை பாசப்போராட்டாம நீ தான் நல்லபடியா முடிச்சு வைக்க வேண்டும் என வேண்டினான். ஐயர் மந்திரம் சொல்லிக் கொண்டிருக்க துருவ்வும் யாழினியும் மனதுக்குள் இந்த கல்யாணம் நல்லபடியா நடக்க வேண்டுமென வேண்டிக் கொண்டிருந்தனர். பார்வதியையும் மகேந்திரனையும் பார்த்த கருணாகரன்அதிர்ச்சியாகி நீ எதுக்கு இங்க வந்த உன்னை யாரு கூப்பிட்டது எனக் கத்தினார்.

அவர் கண்கள் ரத்த சிவப்பில் இருந்தது. கோபத்தை வானரங்கள் எதிர்பார்த்தார்கள் தான் ஆனால் இவ்வளவு கோபத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. துருவ் எழுந்து சென்று கருணாகரனிடம் அவங்க என் அப்பா அம்மா என்றான். கருணாகரன் இரண்டடி பின்னால் நகர்ந்து அதிர்ச்சியாகி என்னது நீ இவளோட பையனா என்ன எல்லாரும் சேர்ந்து எங்களை ஏமாற்ற பார்க்கிறீர்களா என்று அவர் பார்வதியிடம் திரும்பி நீ எனக்கு பண்ண துரோகமே இன்னும் என் மனசுல ஆறாத வடுவாய் இருக்கு அதுக்குள்ள உன் பிள்ளையை வைத்து என் பொண்ணு வாழ்க்கையை வீணடிக்க பார்க்கிறாயா என கத்தினார்.
துருவ் மாமா என ஏதோ சொல்ல வர கருணாகரன் உன் வாயால என்ன அப்படி கூப்பிடாத நீ வாழ்க்கை கொடுத்து தான் என் பொண்ணுக்கு வாழ்க்கைனா அவளுக்கு அந்த வாழ்க்கையே வேண்டாம் என கூறி அவளின் கையை பிடித்து இழுத்தார். யாழினி அவர் கையை உதறி எனக்கு கல்யாணமே வேண்டாம் எனக் கூறி அழுது கொண்டே ரூம்க்குள் ஓடி விட்டாள். கருணாகரன் தன் மகள் எத்தனை முறை ஏமாற்றத்தை தாங்குவார் என்று நினைத்து மனம் வருந்தினார். அவர் இருந்த கோபத்தில் மங்களமும் சௌந்தரராஜன் சொல்வதை காதில் வாங்காமல் துருவ்வை அடித்தார். பார்வதி கருணாகரன் காலில் விழுந்து அண்ணா நான் பண்ண தப்புக்கு அவனை எதுக்கு அடிக்கிறீங்க என்ன தண்டனை நாளும் எனக்கு குடுங்க அண்ணா என்றார். கருணாகரன் காலை உதறி அண்ணாவா யாருக்கு யார் அண்ணா இன்னொரு தடவா அப்படி கூப்பிட உன்ன அவ்வளவுதான் என்று உறுமினார்.

அவர்கள் அங்கிருந்து நகர்வதாக தெரியவில்லை. கருணாகரன் கோபத்தில் ஒரு ரூம்க்கு சென்று விட்டார். அபியும் சித்துவும் பார்வதியை கட்டிக்கொண்டு அம்மா என கண் கலங்கினர். பார்வதி ஏன் கண்கலங்குறீங்க என் அண்ணன் என்ன திட்டுகிறார். ஏன் என்ன அடிக்க கூட அவருக்கு உரிமை இருக்கு என்றார். கருணாகரன் தவிர மற்றவர்களுக்கு பார்வதி மேல் கோபம் போயிருந்தது ருத்ரமூர்த்தி கங்கா வசந்தி அண்ட் ஃபேமிலி மெம்பர்ஸ்க்கு பார்வதியை ஏற்றுக் கொள்ளலாம் என்றே தோன்றியது. ஆனால் கருணாகரன் சொன்னால் கேட்க மாட்டார் என அவர்கள் பேசவில்லை.


எல்லோரும் சிலை போல் நிற்க மித்ரன் வானரங்களிடம் போய் பேசுங்க என்று சைகை காட்டினான். மது மாமா யாரு முதல்ல போறதுன்னு தெரியாம நிற்கிறோம் என்றாள். மித்ரன் தலையில் அடித்துக்கொண்டு இதுங்கல வச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது கல்யாணத்தை நாளைக்கு தான் நடத்துங்க இதுங்க என்று புலம்பினான். பின் இது சரிப்பட்டு வராது வேறு என்ன பண்ணலாம் என யோசித்தான். பார்வதி அம்மா என்ன மன்னிச்சிடுங்க நான் பண்ணது மன்னிக்க முடியாத தப்பு தான் அதுக்கு இவ்ளோ நாள் உங்களைப் பிரிந்து வாழ்ந்ததே போதும்மா இதுக்கு மேலயும் என்னால உங்கள பிரிஞ்சு இருக்க முடியாதுமா என மங்களம் கால்களில் விழுந்து கதறினார். மகேந்திரனும் என்னை மன்னிச்சிடுங்க அத்தை எனக்கு காலில் விழுந்தார்.

மங்களமும் சௌந்தர்ராஜனும் என்ன மாப்பிள்ளை நீங்க போய் எங்க காலுல விழுகிறீங்க கேட்டு என இருவரையும் தூக்கினர்.பார்வதி மங்களத்தை அணைத்துக் கொண்டார். மங்களம் பரிவாக பார்வதி தலையை கோதி பாரும்மா எனக்கு உன் மேல கோவம் எல்லாம் இல்ல வருத்தம் தான் என்றார். மித்ரனுக்கு திடீரென ஐடியா தோன்றியது.மித்ரன் மங்களத்திடம் பாட்டி உன் மகள் உன் கூடவே இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கா இல்லையா என்றான். மங்களம் இல்லாமல் எப்படி டா என்றார். மித்ரன் அப்போ உன் புள்ளைய நீதான் சமாதானப்படுத்தனும் என்றான். மங்களம் நான் எப்படி டா என்றார்.

மித்ரன் நீதான் பேசனும் உனக்கு அவர் கிட்ட பேச தகுதியும் அனுபவம் இருக்கு அதுக்கு மேல நீ சொன்னாதான் அவர் கேட்பார் என மங்களத்தை தள்ளாத குறையாக அவர் இருக்கும் அறைக்குள் கூட்டிச் சென்று ஆல் தி பெஸ்ட் எனக் கூறிவிட்டு வந்தான். இங்கே பார்வதி வசந்தியிடமும் பாக்கியத்திடமும் என்னை மன்னிச்சுடுங்க அண்ணி என மன்னிப்பு வேண்டினார். நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க நாங்க பொண்ணு வீட்டுக்காரங்க நாங்க எப்படி உங்களை மன்னிக்கிறது என்றார்.பார்வதி முதலில் புரியாமல் முழித்தார் பின் சந்தோசத்தில் இருவரையும் கட்டி கொண்டார். பார்வதி பின் கங்காவின் பக்கம் செல்ல கங்கா முகத்தை திருப்பிக்கொண்டார். பார்வதி கங்கா என்னை மன்னிக்க மாட்டியா என்றார். கங்கா என்கிட்ட பேசாத டி போடி என்கிட்ட சொல்லாம எதையுமே செய்ய மாட்டேன் நீ தான் என் பிரெண்ட்ன்னு சொல்லிட்டு என்கிட்ட சொல்லாம எவ்வளவு பெரிய காரியம் பண்ணிட்டேன் என்றார். பார்வதி கண்கலங்கி விட்டு சாரி கங்கா அப்போ எனக்கு வேற வழி தெரியல நான் வேணா நீ எப்பவும் கொடுப்பியே பனிஷ்மென்ட் அதை ஏத்துக்கிறேன் என உக்கி போட ஆரம்பித்தார். கங்காவிற்கு அவர் செய்கையில் தன் இளம் வயது ஞாபகம் வந்துவிட்டது. கங்கா ஓடிச்சென்று பார்வதியை அணைத்துக் கொண்டார்.


மங்களம் அங்கே கருணாகரன் இருந்த ரூம் கதவை தட்டிக் கொண்டிருந்தார் மண்டபத்துக்குள் நுழைந்த காவ்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை என்ன என்று தன் தாய் தந்தையிடம் விசாரிக்க விஷயத்தை கேள்விப்பட்ட அவளுக்கு பேரதிர்ச்சி. அய்யோ அவளை கடத்த சொல்லிட்டேனே என சொல்லிக்கொண்டு ஓடினாள். ஆனால் அந்த ரவுடிகளை காணவில்லை மண்டபத்தை சுற்றி சுற்றி தேடிக் கொண்டிருந்தாள். அங்கே யாழினி அழுது கொண்டிருந்தாள். யாழினி தனக்கும் துருவ்வுக்கும் கல்யாணம் நடக்குமா ? அப்பா அத்தையை மன்னித்து ஏற்றுக் கொள்வாரா என பல குழப்பங்கள் மனதுக்குள் ஓட தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். யாரோ கட்சிப்பை வைத்து மூக்கில் அமுக்குவது போல் தோன்ற தடுப்பதற்காக திமிறினால் ஆனால் அப்படியே மயங்கி விட்டாள். வந்தவர்கள் அவளை பின் வாசல் வழியே தூக்கிச் சென்றுவிட்டனர்.

மங்களம் வெகுநேரம் கதவை தட்டிய பிறகே கதவைத் திறந்தார் கருணாகரன். அவர் மங்களத்தை கட்டிக் கொண்டு அழத் தொடங்கிவிட்டார். மங்களம் அவர் முதுகை தடவிக் கொடுத்தார். கருணாகரன் அம்மா ஏன் அம்மா என் முன்னாடி அவ வந்தா அவளை போக சொல்லுங்க என்றார். மங்களம் எனக்கு தெரியும்பா உனக்கு அவள எவ்வளவு பிடிக்கும்னு. உன்னால அவ மேல கோப பட முடியாது என்று தெரியும். அதனால் தான் இப்ப இங்க வந்து உட்கார்ந்து இருக்க கருணா என்றார். கருணாகரன் எதுவும் பேசாமல் உட்கார்ந்து இருக்க மங்களம் பேச ஆரம்பித்தார் . ஏம்பா வாழ்க்கையில யார் தான் தப்பு பண்ணலை. தப்பே பண்ணாமல் இருக்க அவ கடவுள் கிடையாது. நான் ஒத்துக்குறேன், அவன் செஞ்சது தப்புதான். அவ ஏன் அதை செஞ்சான்னு யோசிச்சியா? எங்களை விட நீதான் அவ மேல பாசமா இருந்த! ஆனால் பாசத்தை கூட நீ அவ பயப்படுற மாதிரி தான காட்டுன. அவ உன் கிட்ட சொல்ல பயந்து இப்படி செய்யலை. அவ உன் மேல இருந்த மரியாதை அதனாலதான் இப்படி பண்ணிருக்கா.
கல்யாண ஏற்பாடு பண்ண நீ அவ கிட்ட ஒரு வார்த்தை கேட்டியா? அவ அப்பா அம்மா இல்லாத அனாதை. அவளுக்கு கல்யாணம் பண்றதே பெருசுனு நினைச்சியா என்றார். கருணாகரன் அம்மா நான் போய் அப்படி நினைப்பேனா? என உணர்ச்சி வசப்பட்டு பேசினார். மங்களம் அப்படி நினைக்கவில்லைனால் ஏன் நீ அவகிட்ட கேட்கலை. நீ அப்படி நினைத்துதான் பண்ணியிருக்க என்றார். கருணாகரன் இல்லை மா என் தங்கச்சியை நான் அப்படி நினைக்கலை என கத்தினார்.....
மங்களம் அப்படி இல்லன்னா? நீ அவளுக்கும் ஒரு மனசு இருக்கும்னு யோசிச்சு அவ கிட்ட ஒரு வார்த்தை கேட்டியா? என்றார். பின் அவ செஞ்சது தப்பா இருந்தாலும் அவளை மன்னிச்சிடுபா. இவ்ளோ நாளா அவ எங்க இருக்கான்னு தெரியாம எத்தனை நாள் நான் அழுதுருக்கேன் தெரியுமா என கண்ணீரைத் துடைத்தார். தன் தாயின் கண்ணீர் கருணாவின் மனதைக் கரைத்தது. தன் கண்ணீரை துடைத்து கொண்டே மங்களம் தொடர்ந்தார். எனக்கும் உங்க அப்பாவுக்கும் வயசாயிடுச்சு. எப்போ வந்த எமதர்மன் எங்களை கூட்டிட்டு போவார் என்று தெரியலை. நாங்க சாகுறதுக்குள்ள என் நாளு பிள்ளைகளும் ஒண்ணா ஒரே வீட்டில் சந்தோசமாக இருக்குறதை பார்க்கணும் என்று ஆசையாக இருக்கு டா. இது என்னோட கடைசி ஆசையை நினைத்து நிறைவேற்று என்றார். கருணாகரன் அம்மா என அவர் வாயை கையால் மூடினார். மங்களம் நீ இதை ஏற்றுக்கலைனாலும் இதுதான் உண்மை . நீ இதை பண்ணலைன்னா நான் செத்த பிறகு என் ஆத்மா சாந்தி அடையாது. இதுக்கு மேலயும் நீ கோபமாக இருந்தா எனக்கு என்ன சொல்றதுனே தெரியலை என்றார்.......
மங்களம் அறையை விட்டு வெளியேறியதும் கருணாகரன் யோசிக்க ஆரம்பித்தார். அங்கே பார்வதி மகேந்திரனின் குடும்பம் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தனர். சிறியவர்கள் ஒரு ஓரமாக அமர்ந்து யோசித்து கொண்டிருந்தனர். பெரியவர்கள் பேசி கொண்டிருப்பதை பார்த்த மங்களம் கண்கொள்ளா காட்சியாக இருக்கு என்றார். மித்ரன் இருக்கும் இருக்கும் கண்கொள்ளா காட்சியாக இருக்கும் . இதை உன் பெரிய புள்ள பாத்தா கொலை காட்சியாக இருக்கும் என்றான். மங்களம் அவனை முறைத்து உன் வாயை கழுவுடா என்றார். மித்ரன் அப்புறம் கழுவிக்கிறேன். போன வேலை என்ன ஆச்சு என்றான் . மங்களம் ஒரு வழியா அழுது பேசி அவனை யோசிக்க வைத்து இருக்கேன். நீங்க யாராவது போய் அவரை பேசிப்பேசி கரைங்க என்றார்....

கூட்டத்தில் இருக்கும் ஒருவர் எழுந்து ஏன்பா கல்யாணம் நடக்குமா? நடக்காதா? ரொம்ப நேரமா காத்திருக்கோம். சொன்னீங்கன்னா கிளம்புவோம் என்றார். மித்ரன் ஓடிவந்து ஐயோ அவசரப்பட்டு அப்படி முடிவு எல்லாம் எடுத்துக்காதீங்க. கல்யாணம் கண்டிப்பா நடக்கும் கொஞ்ச நேரம் காத்திருங்க மணமக்களை மனசார வாழ்த்தி மணமார சாப்பிட்டு போங்க என்றான். மற்றொருவர் எழுந்து தம்பி தான் இவ்வளவு தூரம் சொல்தே, கொஞ்சம் வெயிட் பண்ணுவோம் என்றார் . மித்ரன் நல்ல அங்கிள் அவர் சொல்ற பேச்சை கேளுங்க என்று விட்டு, வானரங்களிடம் சென்று டேய் இப்பவாவது யாராவது பேசுங்க டா என்றான் .

எல்லோரும் திருதிருவென முழித்தனர். மித்ரன் என்னங்கடா இப்படி முழிக்கிறீங்க என்றான். மது மாமா எங்களுக்கு டயலாக் மறந்து போச்சு என்றாள். மித்ரன் கோபமாகி உங்கள வச்சுக்கிட்டு சோறு கூட ஆக்கி திங்க முடியாது. நானே களத்துல இறங்குறேன் என்று சென்றான். துருவ் நானும் உங்க கூட வர்றேன் என்றான். பெரியவர்களும் நாங்களும் வருகிறோம் என்றனர். மித்ரன் யாரும் வர வேண்டாம் நானே சோலோவா பர்பார்மன்ஸ் பண்ண போறேன். எப்படி இருக்குனு மட்டும் ஆடியன்ஸா இருந்து வேடிக்கை பாருங்க என கெத்தா நடந்து சென்றான்....

ரூம்க்கு அருகில் சென்றவன் ஐயோ ரொம்ப பீகு பண்ணிட்டு வந்து விட்டோமோ? என்று நினைத்துவிட்டு எவ்வளவோ பார்த்துவிட்டோம் இத பாக்க மாட்டோமா என தனக்குதானே தைரியம் சொல்லிக்கொண்டே உள்ளே போனான். பெட்டில் அமர்ந்து இருந்த கருணாகரன் ஏதோ சொல்ல வர மித்ரன் அவரை தடுத்து மாமா நான் சொல்றதை மட்டும் கொஞ்சம் கேளுங்க .அப்புறம் நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன் என பேச ஆரம்பித்தான். மாமா இப்ப அவங்களை ஏத்துக்க சொல்ல நான் வரலை. இது நான் பிறக்குறதுக்கு முன்னாடி நடந்த விஷயம் அதனால் யாரு மேல தப்புன்னு எனக்கு தெரியாது . அது பத்தி உங்களுக்கு அறிவுரை சொல்ல எனக்கு வயசும் இல்லை. இப்போ உங்ககிட்ட வேற ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி சொல்ல போறேன். யாழினியும் துருவும் 5 வருஷமா காதலிக்கிறாங்க என்றான்.
கருணாகரன் அதிர்ச்சியாக, மித்ரன் மாமா நான் சொல்ல வந்தத முழுசா சொல்லிக்கிறேன் அப்புறம் கேளுங்க எதுவானாலும் என தொடர்ந்தான். யாழினிக்கு துருவ்னா உயிர். அவன் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்கமாட்டாள். அப்புறம் ஏன் நீங்க பார்த்த மாப்பிள்ளையை கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டாள் என யோசிக்கிறீர்களா?. இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் எங்களுக்கு பார்வதி பெரியம்மா பற்றி உண்மை தெரிந்தது. தெரிஞ்சதும் யாழினி என்ன பண்ணானு உங்களுக்கு தெரியுமா? என நடந்தவற்றை கூறினான்.....

அவ உங்க மேல வச்சிருக்கற மரியாதைனாலையும் பாசத்தினாலையும் தான் அவனை தூக்கி போட்டுட்டு வந்தாள். அவ துருவ் கிட்ட என்ன சொல்லி பிரேக்கப் பண்ணானா உங்க அம்மா பண்ண துரோகத்தால் எங்க அப்பா ரொம்ப காயப்பட்டுடாரு. நானும் அவரை ஏமாற்ற விரும்பலை. எங்க அப்பா எனக்கு ரொம்ப முக்கியம். என் குடும்பம் என்னால அவமான படக்கூடாது. எனக்கு நீ முக்கியம்தான் ஆனால் உன்னை விட என் குடும்பம் முக்கியம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டாள். ஏற்கனவே கஷ்டத்திலிருந்தவ நீங்க பார்த்த மாப்பிள்ளை ஓடி போனதும் ரொம்ப உடைந்து போயிட்டா. நீங்க பார்த்த மாப்பிள்ளை தான் சரி இல்லை. அவ மேல நம்பிக்கை வைத்து அவளுக்கு ஒரு சான்ஸ் குடுங்க என்றான். பின் மாமா இது தான் நான் சொல்ல வந்தேன். இதுக்கு மேல யோசிச்சு நீங்கதான் முடிவு எடுக்கனும் என்று இரண்டடி வெளியே சென்று மாமா கூப்பிட்டீங்களா? என்றான்......கருணாகரன் இல்லையென்றார். மித்ரன் மைண்ட் வாய்ஸில் யோவ் மாமா கூப்பிட்டு தொலையா போகுறதுக்குள்ள என நினைத்து விட்டு நடக்க கருணாகரன் மித்ரன் என அழைத்தார். மித்ரன் இதுவும் நம்ம இமேஜனேஷன் ஆக இருக்குமோ? வேணா திரும்பவும் போய் பல்பு வாங்க வேண்டாம் என நடக்க, கருணாகரன் மீண்டும் மித்ரன் என அழைக்க அட உண்மைதான் போல என நினைத்து திரும்பினன்.....
கருணாகரன் மித்ரன் நான் கொஞ்சம் யோசிச்சு சொல்றேன் என்றார். மித்ரன் சரிங்க மாமா நல்லா யோசிச்சு சீக்கிரமா ஒரு நல்ல முடிவா சொல்லுங்க என்று வெளியே வந்தவன், எல்லோரும் அவனை பார்க்க உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் அதை வெளியே காட்டாமல் தன் கையை உயர்த்தி சக்சஸ் என காட்டினான்......

எல்லோரும் மித்துனா மித்துதான் . நீ எப்படியும் முடித்துவிடுவன்னு எங்களுக்கு தெரியும் என்றனர். துருவ் மித்ரனை கட்டிப்பிடித்து மச்சான் நீ பண்ண ஹெல்ப நான் மறக்கவே மாட்டேன் என்றான். மித்ரன் மைண்ட் வாய்ஸில் ஐயோ ரொம்ப புகழ்றாங்களே! யோவ் மாமா நல்ல முடிவா சொல்லு. இல்லன்னா இவனுங்க கல்லைவச்சு அடிப்பாங்க. கடவுளே காப்பாத்து பா என வேண்டினான்.....


அப்போது மது அவசரமாக எங்கேயோ ஓட அவன் அவளைப் பிடித்து செல்ல குட்டி எங்க போற என்றான். மது அதுவா மாமா அந்த காவ்யாவோட தம்பி சாத்விக் இருக்கான்ல அவனை யாரோ ரூம்க்குள்ள அடைச்சு வச்சுட்டாங்க போல. அவன் கதவை தட்டிட்டு இருந்தான். ஏதோ சத்தம் கேட்குது என்று போய் பார்த்து கதவு திறந்து விட்டேன். அந்த பையன் மூச்சு விட சிரமப்படுறான். அதான் அவனுக்கு ஜூஸ் எடுத்துட்டு வர போறேன் என்றாள். மித்து, அவனுக்கு ஜூஸ் எடுத்துட்டு வா. அப்படியே எனக்கு ஒரு டம்ளர் விஷத்தை எடுத்துட்டு வா குடிச்சுட்டு சாகுறேன் என்றான். மது சரி மாமா என்றவள், பின் அவன் சொன்னது புரிந்து ஐயோ என்ன மாமா இப்படி சொல்ற என்றாள்.....

மித்ரன் என்ன நொன்ன மாமா? என்றான். பின்ன என்னடி அவனுக்கு நம்ம பிளான் தெரிஞ்சிருச்சுன்னு நாங்களே மண்டபத்தை ஓடிப்பிடித்து விளையாடுற மாதிரி ஓடி அவன புடிச்சு அடைச்சு வச்சு, கேள்வி கேட்க்குறவங்கள எல்லாம் சமாளித்து வைச்சிருக்கோம். நீ என்னமோ அசால்டாக திறந்துவிட்டு ஜூஸ் குடுக்க போற என்றான். மது முகத்தை பாவமா வச்சுக்கிட்டு முழித்தாள். மித்ரன் உன்னை வந்து கவனிச்சிக்கிறேன். முதல்ல போய் அவனை பார்க்கிறேன் என ஓடினான்.....

கலாட்டாக்கள் தொடரும்......
 

Janu murugan

Moderator
Staff member
#40
ஹாய் பிரெண்ட்ஸ்,

நமது தளத்திற்கு புது வரவான ஜானு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..அவர்களின் "கல்யாண கலாட்டா" கதையின் பதிவுகள் இங்கு பதிவிடப்படும்.
கல்யாண கலாட்டா ( இறுதி அத்தியாயம்)மித்ரன் சாத்விக்கை பார்க்க ஓடினான். நல்ல வேளை அவன் எங்கேயும் போகல உள்ள தான் பாதி மயக்கத்தில் தான் உட்கார்ந்து இருந்தான். மித்ரன் அதைப்பார்த்து அப்பாடா இவன் எங்கேயும் ஓடலை என நினைத்து விட்டு அவனுக்கு தண்ணீர் கொடுத்து விட்டு, மீண்டும் ரூம்க்குள் அடைத்து விட்டான்.....

கருணாகரன் ரூமிலிருந்து வெளியே வந்தவுடன், பார்வதி அவர் காலில் விழுந்து அண்ணா என்னை மன்னிச்சி ஏத்துக்கோங்க என கண்ணீர் விட்டார். கருணாகரன் பாரும்மா என அழைத்தார். அவர் பாரும்மா என்று அழைத்த அழைப்பில் அவர் பார்வதியை மன்னித்து விட்டார் என அறிந்து பார்வதி எழுந்து அவரை கட்டிக் கொண்டார்....

மித்ரன் நீங்கள் உங்க பாசமலர் படத்தை அப்புறம் ஓட்டுங்க . இன்னும் கொஞ்ச நேரம் விட்டா யாழினியும் துருவ்வும் ஓடிப்போய்விடுவாங்க என்றான். துருவ் நான் போய் யாழினியை கூட்டிட்டு வரேன் என துள்ளினான். மித்ரன் பாத்தீங்களா? நான் சொன்னேன்ல என்றான். கருணாகரன் சிரித்துவிட்டு மாப்பிள்ளை நீங்க போய் மேடையில் உட்காருங்க. மது போய் அக்காவை கூட்டிட்டு வா என்றார். பெண்கள் எல்லோரும் சந்தோசத்தில் துள்ளிக் குதிக்காத குறையாக யாழினியை அழைக்க ஓடினார்கள்.....


மண்டபத்தில் அமர்ந்திருந்த பெரியவர்கள் அனைவரும் அர்ச்சதை எடுத்து தூவ ரெடியாக இருந்தனர். மது ஓடிவந்து யாழினியை காணோம் என கத்தினாள். மித்ரன் நல்லா தேடினீங்களா? என்றான். மது, எல்லா இடத்திலேயும் தேடிட்டோம். அவளை காணோம் என்றாள். மித்ரனின் அப்பா சிதம்பரம் மண்டபத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு இருக்கு. யாழு எங்க போயிருப்பா என்றார். துருவ் இல்லை என் யாழினி எங்கேயும் போயிருக்க மாட்டான் என்றான். மது அப்ப யாழினிய கடத்திடடாங்களா? என்றாள்......

திவ்யா வந்து எனக்கு தெரியும் அவளை யாரும் கடத்தி இருப்பாங்க என கூறி காவ்யாவை பிடித்து முன்னாடி நிறுத்தி. சொல்லுடி நீதான யாழினிய கடத்த சொன்ன என்றாள். திவ்யா, நீ இப்ப சொல்லல உன்னை என்ன பண்ணுவேன்னு தெரியாது என கோபமாக திட்டினாள். காவ்யா நான் சொல்றது உண்மைதான். நான் அவளை கடத்த பிளான் பண்ணது உண்மைதான். ஆனால் ஸ்ரீதர் மாமா ஓடிப்போனது தெரிஞ்ச உடனே நான் கடத்த சொன்ன ஆளுங்களை கடத்த வேணாம்னு சொல்லிட்டேன். சத்தியமா இது தான் உண்மை என்றாள்.....

துருவ், பெரியவர்களிடம் யாரும் கவலைப்படாதீங்க. நாங்க யாழினியை கண்டு பிடிச்சு கூட்டிட்டு வரோம் என்றான். சிதம்பரம் அதெல்லாம் சரிப்பட்டு வராது. நான் ஏன் டிபார்ட்மெண்ட் ஆளுங்களோட போறேன் என்றார். துருவ் கருணாகரனிடம் மாமா உங்களுக்கு என் மேல நம்பிக்கை இருந்தா எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. நான் போய் எப்படியாவது யாழினிய கண்டு பிடிச்சு கூட்டிட்டு வரேன் என்றான். கருணாகரன் யோசிக்காமல் எனக்கு உன் மேல நிறைய நம்பிக்கை இருக்கு போயிட்டு வாப்பா என்றார். துருவ், மித்து, ஹரி, சந்துரு கிளம்பினார்கள்......

சிவாவும் கார்த்தியும் அன்ட் ஆகாஷையும் மண்டபத்திலே மற்றவர்கள் பாதுகாப்பு கருதி இங்கே இருக்க சொன்னான் துருவ். வெளியே வந்தவுடன் மித்ரன் துருவிடம் மச்சான் நீ ஓவர் கான்ஃபிடன்ஸ்ல பேசுறத பாத்தா நீ தான் அவளை கடத்த சொல்லிட்டு அப்புறம் காப்பாத்துற மாதிரி ஆக்க்ஷன் பண்ணி மாமா மனசுல இடம் பிடிக்கலாம் என்று பிளான் பண்ணிட்டியா? என்றான். துருவ் நீ வேற ஏன்டா மச்சான். எனக்கு உன்னை மாதிரி எல்லாம் யோசிக்க தெரியாது என்றான். மித்ரன் அப்போ எப்படிடா மச்சான் யாழினிய கண்டுபிடிக்க போகிறோம் என்றான். துருவ் இப்படி எல்லாம் ஏதாவது நடந்துவிடுமோ என்று யோசித்துதான் ஏற்கனவே அவ கைல ஜிபிஎஸ் வெச்ச மோதிரத்த மாட்டிவிட்டு இருக்கேன். என் பேபி இங்க பக்கத்துலதான் இருக்கா. சிக்னல் அப்படித்தான் காட்டுது என்று கிளம்பினர் அனைவரும்......

அங்கே மயக்கம் தெளிந்த யாழினி, டேய் யாருடா நீங்க எல்லாம்? எதுக்கு டா என்ன கடத்துனீங்க என கத்தினாள். அந்தக் கூட்டத்தின் தலைவன், ஏய் அட்டு பிகரு நீ மட்டும் சும்மா இல்லன்னா? உன் மூஞ்சியில பூரான் விட்றுவேன் என்றான். யாழினி, யாரைப் பார்த்துடா அட்டு ஃபிகர்னு சொன்ன? நான் யாழினி, கமிஷ்னர் வீட்டு பொண்ணுடா, என்னயவே தூங்குவீங்களா? என்றாள்......

தலைவன் குமார் ஏம்மா கழனி தண்ணி என்க, யாழினி, என் நேம் யாழினி என்றாள். குமாரு ஏதோ ஒரு புளிச்ச தண்ணி, இப்ப பேசாம இருக்க போறியா? இல்லையா?. உன்ன கடத்தினால் தான் இந்தக் கல்யாணம் நிற்கும் என்றான். யாழினி டேய் கிறுக்குங்குகளா! ஏற்கனவே கல்யாணம் நின்னு போச்சு டா என்றாள். குமாரு அடச்சி அமைதியா இரு. என் பாஸ் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு. அவர்கிட்டயே கேட்டுக்கோ என்றான். யார் நீ டேய் உங்க பாஸ் யாருடா என்றாள்.....
குமாரு உனக்கு இன்னா வேணும்? என்றான். யாழினி, டேய் பசிக்குதுடா! ஒழுங்கா ஏதாவது வாங்கி கொடுங்க. இல்லேன்னா என் ஆளு வந்து உங்களை தும்சம் பண்ணிவிடுவான் என்றாள். எல்லோரும் சிரித்தார்கள். யாழினி, ஏன்டா என்ன பாத்து சிரிக்கிறீங்க? நான் என்ன லூசா என்றாள்....
குமாரு கடுப்பாகி, கத்தியை நீட்டி இப்ப நீ பேசாம இல்ல சொருகிடுவேன் என்றான். யாழினி அமைதியாகி விட்டாள். துருவ் கேங்க் யாழினியை அடைத்து வைத்திருக்கும் இடத்தை நெருங்கினார்கள். துருவ் இங்கதான் சிக்னல் காட்டுது. எக்ஸாக்ட் எந்த இடம்னு தெரியலை என்றான் துருவ். மித்ரன் நான் கண்டுபிடிச்சிட்டேன் அந்த கட்டி முடிக்காத கட்டிடம் தான் என்றான். சந்துரு எப்படிடா கண்டுபிடிச்ச என்றான். மித்ரன் எத்தனை படம் பார்த்து இருப்பேன் அந்த அனுபவத்தில் தான் சொல்றேன். எனக்கு தெரியும் கன்ஃபார்ம் அது இந்த இடம்தான் வாங்க போவோம் என நடந்தான். மற்றவர்கள் அவன் பின்னாடி நடந்தனர்..


அவர்கள் அனைத்து தளங்களிலும் தேடி விட்டனர். சந்துரு எல்லா ப்ளோர்லயும் தேடிட்டோம். இங்க மட்டும் இருக்கவா போறாள்? என்றான். மித்ரன் அவ இங்க தான் இருப்பா என்று என் உள் மனசு சொல்லுது . என் மேல நம்பிக்கை இருந்தா என் பின்னாடி வாங்க என்று இரண்டு அடி நடந்து திரும்பி பார்க்க, அவர்கள் அதே இடத்தில் நின்றிருந்தனர். மித்ரன், ஏன்டா எருமை மாட்டு பயலுகளா என் மேல உங்களுக்கு ஒரு சதவீதம் கூட நம்பிக்கை இல்லையா என்றான். அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து உதட்டைப் பிதுக்கி சத்தியமா இல்லை என்றனர். மித்ரன் அடச்சீ வாங்க என இழுத்துச் சென்றான்....

இவர்களைப் பார்த்ததும் யாழினி அந்த குமாரிடம், டேய் பன்னி மூஞ்சி வாயா என் ஆளு வந்துட்டான். இப்போ உங்களை என்ன பண்ண போறான்னு பாரு என்றாள். மித்ரன் உள்ளே நுழைந்ததும், அந்த குமார் ஏண்டா அந்த அட்டு ஃபிகரோட ஆளு நீதானா என்றான். மித்ரன் நோ நோ என் ஆளு செம்மையா இருப்பாள். இதோ இவன்தான் அந்த அட்டு ஃபிகரோட ஆளு என்றான் துருவ்வை கைகாட்டி. துருவ் யாரப்பாத்து அட்டு ஃபிகர்னு சொல்ற அவ என் பேபிமாடா என குமாரை அடித்தான்....
குமார் அடி வாங்குவதை பார்த்து மற்றவர்கள் கத்தியை எடுத்து தாக்க வந்தனர். ஹரி, சந்துரு , துருவ் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். மித்ரன் ஓரமாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். யாழினி மித்ரனிடம், பங்கு கட்ட அவிழ்த்து விடு என்றாள். மித்ரன் அவளுடைய கை கட்டையும் கால் கட்டை அவிழ்த்து விட்டான். யாழினி,மித்ரன் தலையில் நங்கென்று கொட்டினாள். மித்ரன் ஷாக்காகி ஏன் பங்கு என்றான்.....
யாழினி என்னை அட்டு பிகர்னு சொன்ன இல்ல அதுக்கு தான் என்றாள். பின் அவள் மித்ரனிம் ஏன்டா அவனுங்க சண்டை போட்டுட்டு இருக்காங்க. நீ மட்டும் வேடிக்கை பார்க்கிற என்றாள். மித்ரன் அவன் ஹீரோ . அதனால அவன் சண்டை போடுகிறான் . நான் சைடு கேரக்டர், சோ நான் ஆடியன்ஸா தான் இருப்பேன் என்றான்.....
....துருவ் அங்கே அவர்களை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தான். துருவ் இரண்டு பேரை சமாளிக்க முடியாமல் கஷ்டப்பட்டு அவர்களை வீழ்த்தி விட்டு ஓடி வந்தவன், மித்ரன் தலையில் நங்கென்று கொட்டி என்னடா சொன்ன நான் ஹீரோவா? ஃபர்ஸ்ட் எபிசோடுல இருந்து எனக்கு டயலாக்கே கொடுக்காமல் நீயே எல்லாத்தையும் பண்ணிட்டு, கடைசியில் கிளைமாக்ஸில் சண்டை போட மட்டும் நான் ஹீரோவாடா என அவனையும் சண்டையில் இழுத்து விட்டான்.....
துருவ் கேங்க் அடித்து ஓய்ந்துவிட்டது. அடி வாங்கியவர்கள் தரையில் கிடந்தார்கள். துருவ் இதுங்கள யாரு ஏவி விட்ருப்பா? என்றான். யாழினி, பேபி அவனுங்க பாஸ் ஆன் தி வே என்று இந்த பன்னி மூஞ்சி வாயன் சொன்னான் என்றாள். கார் வரும் சவுண்ட் கேட்க துருவ் வாங்க எல்லோரும் மறஞ்சுக்கலாம் என்றான்....

ஒருவன் கோட் சூட்டுடன் டிப்டாப்பாக உள்ளே நுழைந்தான். துருவ் பின்னால் இருந்த அவன் கையை பிடித்து கட்டி யாழினி இருந்த அதே சேரில் அமர வைத்து கட்டினான் . மித்ரன் பங்கு இவன் நம்ம லிஸ்டிலேயே இல்லையே பங்கு என்றான். துருவ், யாழினி, மித்து, சந்துரு ஹரி என அனைவரும் அவன் முன் சென்று முறைத்துக் கொண்டிருந்தனர். துருவ், டேய் எதுக்குடா என் பேபியா கடத்த சொன்ன சொல்லுடா என்றான். அவன் வாயை திறக்கவில்லை.....
துருவ் யாழியிடம், பேபி இவனை எங்கேயாவது பாத்திருக்கியா? என்றான். யாழினி யோசித்தாள். மித்ரன், மச்சான் உன் ஆளு ஒருத்தர் ரெண்டு பேரு கிட்ட சண்டை போட்டா பரவாயில்ல. அவதான் போற இடத்துல எல்லாம் பொங்கல் சாப்பிடற மாதிரி வம்பு இழுத்து வச்சு இருக்காளே என்றான்.....
யாழினி ஞாபகம் வந்துடுச்சு, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஐஸ்கிரீம் பார்லரில் பட்டர்ஸ்காட்ச்க்கு சண்டை போட்டவன் தான என்றாள். மித்ரன் ஷாக்காகி டேய் போயும் போயும் ஒரு ஐஸ்கிரீம்காக என் அத்தை மகளே நீ கடத்துனியா? என்றான். துருவ், இல்ல மச்சான் அவன் ஐஸ்கிரீம்க்காக கடத்தி இருக்க மாட்டான். உண்மையை சொல்லுடா என்றான். அந்த கோட் சூட் காரன் ஆமா பாஸ் அவங்க சொன்னது உண்மைதான் என்றான். மித்ரன் அட கருமம் புடிச்சவனே! என் கிட்ட கேட்டு இருந்தா ஒரு ஐஸ்கிரீம் பார்லரையே வச்சு கொடுத்திருப்பேன். ஏன்டா இந்த இத்துப்போன மேட்டர்க்கா என் மச்சான் கல்யாணத்தை நிறுத்த பிளான் பண்ணியாடா? லூசு பயலே இந்த கல்யாணத்தை நடத்த நான் எப்படி தலைகீழா நின்னு தண்ணி குடிச்சேன்னு எனக்கு மட்டும் தான்டா தெரியும் என்றான்.....

அந்த கோர்ட் சூட்டுக்காரன் முழுசா கேளுங்க பாஸ், அன்னைக்கு நானும் என் ஆளும் ஐஸ்கிரீம் சாப்பிட வந்தோம். நான் அவகிட்ட உனக்காக என்ன வேணா செய்வேன் என்று சொன்னேன். அவர் ஒரு பட்டர் ஸ்காட்ச் வாங்கித் தரச் சொன்னாள். ஆனால் அங்கு ஒரு பட்டர் ஸ்காட்ச் தான் இருந்துச்சு. நானும் அவுங்ளும் ஒரே நேரத்தில் கேட்டோம். ஆனால் அவங்க சண்டை போட்டு அந்த ஐஸ்கிரீமை வாங்கி விட்டு போயிட்டாங்க . என் ஆளு எனக்காக என்ன வேணா செய்வேன் என்று சொன்ன? ஒரு ஐஸ்கிரீம் கூட வாங்கித்தர முடியலைன்னு திட்டிட்டு பிரேக்கப் பண்ணிட்டு போய்விட்டாள். நான் ரெண்டு வருஷமா அவ பின்னாடி சுத்தி ஓகே பண்ண வச்சேன். ஆனா இவங்க ரெண்டு நிமிசத்துல என் லவ்வ பிரேக் அப் பண்ணி வச்சுட்டாங்க என்றான். இதைக் கேட்டு அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். அவன் என்னடா நான் இவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன் இதுங்க இப்படிச் இருக்குதுங்க பைத்தியம் மாதிரி என்று நினைத்தான்...
மித்ரன் பங்கு நீ தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு லவ்வ பிரிச்சுட்ட. அதனால் நீ உன் லவ்வ அடையறதுக்கு இவ்வளவு கஷ்டப்படுற என்றான். யாழினி அவன் சொல்வதை காதில் வாங்காமல், ஏய் கோட்சூட் உன் பெயரென்ன என்றாள். அவன் என் நேம் அரவிந்த் என்றான். துருவ், நீ அந்த ஏவிஎஸ் கம்பெனியோட எம்.டி நீ தானே என்றான். அரவிந்த் ஆமாம் என்று தலையாட்டினான். யாழினி, பேபி நீ உன் இன்வெஸ்டிகேஷனை அப்புறம் வச்சுக்கோ என்று விட்டு, இதோ பாரு அரவிந்த் நீ ஒன்னும் கவலைப்படாதே! நாங்க இந்த லவ்வ சேர்த்து வைக்கிறதுக்குன்னே ஒரு வெட்டிப் பையனை வளர்க்குறோம் என்றாள். மித்ரன் யாரு பங்கு அந்தக் கேனைப் பையன் என்றான். யாழினி, என்ன பங்கு இப்படி கேட்டுட்ட? நீ தான் அது என்றாள். மித்ரன் அவளை முறைத்தான். யாழினி அதைப்பார்த்து பொருட்படுத்தாமல் அரவிந்திடம் உன்னையும் உன் ஆளையும் சேர்த்து வைக்க வேண்டியது என் பொறுப்பு என்றாள். அரவிந்த் நிஜமாவா? என்றான். யாழினி அட என்ன நீ நம்பமாட்டியா? என்றவள் மித்துவை இழுத்து என் பங்கு மேல சத்தியம் போதுமா? என்றாள். அவன் சந்தோசமாக தலையாட்டினான். யாழினி அவன் கட்டை அவிழ்த்து விட்டு எங்கள் கல்யாணத்துக்கு வந்து வாழ்த்திட்டு சாப்பிட்டு போ என்றாள்....

எல்லோரும் கிளம்பினர். யாழினி மட்டும் திரும்பி அந்த குமாரிடம் டேய் எதுக்குடா என்ன அட்டு பிகர் என்று சொன்ன என்றாள். அவன் நீங்க என்ன அடைச்சு வெச்சு அடிச்சாலும் இந்த அட்டு ஃபிகரை அழகு என்று நான் சொல்ல மாட்டேன் என்றான். இதை கேட்டு அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். யாழினி அவனின் தலையில் நங்கென்று கொட்டிவிட்டு, வா பங்கு போலாம் என்றாள்....
காரில் போகும்போது யாழினி துருவ்விடம் பேபி நம்ம பிளான் என்ன ஆச்சு? என்றாள். துருவ் வாயைத் திறக்குமுன் மித்ரன் முந்திக் கொண்டு, அதை ஏன் கேக்குற பங்கு மாமா கோபம்போகவே இல்லை. அவர் ஒரே முடிவா இருக்காரு. நீதான் முடிவு பண்ணனும். உனக்கு இவன் வேணுமா? இல்ல மாமா வேணுமான்னு?. இதைக் கேட்டு யாழினி சோகமாகி விட்டாள். துருவ் ஏதோ சொல்ல வர, மித்து சொல்ல வேண்டாம் என சைகை செய்தான். துருவ் அமைதியாகிவிட்டான்.....
மண்டபத்திற்கு வந்ததும் யாழினி ஓடிச்சென்று கருணாகரனை கட்டிக்கொண்டு அப்பா எனக்கு நீங்க தான் முக்கியம். அவன் எனக்கு வேணாம்பா என்றாள். அவள் சொல்வதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். அவள் ஏன் எல்லோரும் சிரிக்கிறார்கள் என்று பேவென முழித்தாள். அப்போதுதான் பார்வதியும் கருணாகரனும் அருகருகே நின்று இருப்பதை கவனித்தாள். மது வந்து, அக்கா அப்பா அத்தை எல்லாம் சமாதானம் ஆகிட்டாங்க என்றாள். அவள் திரும்பி மித்ரனை முறைத்தாள். மித்ரன் டிட் பார் டேட், என் மண்டையில கொட்டினேள அதான் என்றான். கருணாகரன் அவர்கள் இருவரையும் மண மேடையில் உட்காரசொன்னார்.....
மித்ரன் எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள். திவ்யா என்ன பங்கு ஏதோ தீவிரமாக யோசிக்கிற என்றாள். மித்ரன் அது ஒண்ணும் இல்ல பங்கு, எப்படி கூட்டம் கலையாமல் இருக்கு என்றான். திவ்யா அதுவா, எல்லோருக்கும் ஜூஸ் கொடுத்து உட்கார வைத்து இருக்கோம். அப்புறம் வயசு பசங்க எல்லாம் உங்க லவ்வ சேர்த்து வைக்க நாங்க ஒரு ஜீனியஸை வைச்சிருக்கோம், வெயிட் பண்ணா இன்ரோ பண்றேன்னு சொன்னேன் பங்கு என்றாள்.........

மித்ரன் திவ்யாவை முறைக்க, திவ்யா வாங்க துருவ் தாலி கட்ட போறான். போய் ஆசிர்வாதம் பண்ணுவோம் என்று மித்ரனை இழுத்துச் சென்றாள். எல்லோரும் அவங்கவங்க ஜோடியுடன் இருந்துச்சுங்க.
சிவாவும் கார்த்தியும் மட்டும் சிங்கிளா நின்னுட்டு இருந்தாங்க. ஒரு பெண் வந்து சிவாவை இடித்துகொண்டு நின்றாள். சிவா ஏய் தள்ளி நில்லு என்றான். அவள் என்ன சீனியர்? இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நாம லவ் பண்றோம் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்ன்னு சொன்னீங்க என்றாள். சிவா, அது நான் தப்பிப்பதற்காக பொய் சொன்னேன் என்றான். அவள் ஆனால் நான் உண்மையைத்தான் சொல்றேன் ஐ லவ் யூ என்றாள். சிவா அவள் சொல்வதை கேட்டு வாயடைத்து நின்றுவிட்டான். வர்ஷினி வந்து, சீனியர் இவ தீபிகா, என்னோட கிளாஸ் மேட் தான். காலேஜ்ல பார்த்திருப்பீங்க , அப்புறம் அன்னைக்கு என்னையும் சந்துருவை சேர்த்து வைக்க என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணீங்கல்ல அன்னைக்கே இவ பிளாட் ஆகிட்டாள். உங்க மேல பைத்தியமா சுத்திட்டு இருந்தாள். இன்னைக்கு நீங்களே உங்க லவ்வர்னு சொல்லிட்டீங்களா? அதான் உங்க கிட்ட ப்ரொபோஸ் பண்ணிட்டா என்றாள். சிவா அவளை பார்த்து அப்படியா என கேட்டான் தீபிகா கண்ணடித்து ஆமாம் என்றாள். சிவா என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்க, மித்ரன் வந்து தீபிகா கையை எடுத்து சிவா கையில் வைத்து சிவாவிடம் என் கண்ணையே உன்ன நம்பி உன்கிட்ட ஒப்படைக்கிறேன். அதுல ஆனந்த கண்ணீர மட்டும்தான் பாக்கனும் என்றான் சிவாஜி பாணியில்....
திவ்யா பங்கு உன் வேலைய கரெக்டா செஞ்சுட்ட என்றாள். மித்ரன் அதை காதில் வாங்காமல் சிவாவிடம், மச்சி என் தங்கச்சி நாலு வருஷமா உன் பின்னாடி சுத்துறாள். எங்க தேடினாலும் இப்படி பட்ட பொண்ணு கிடைக்கமாட்டாள். ஓகே சொல்லிடு என்றான் சிவா டேய் தாலி கட்டப் போறாங்க, நான் என் ஆளோட சேர்ந்து அச்சத போட போறேன். நீ உன் ஆளோட போயி அட்சதை தூவி வாழ்த்து என்று தீபிகாவின் கையை பிடித்தான். மித்ரன் வாழ்த்துக்கள் மச்சி எனக்கூறிச் சென்றான்......
துருவ் யாழினியின் கழுத்தில் தாலி கட்டப்போகும் சமயத்தில் நிறுத்துங்கள்! என ஒரு பெண்குரல் கேட்டது. மித்ரன் என்னால முடியலப்பா! ஒரு கல்யாணத்தை நடத்துறதுக்குள்ள நான் போய் சேர்ந்திடுவேன் போல, யாருப்பா என எட்டி பார்த்தான். ஒரு பெண் ஓடிவந்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்து துருவ் தாரா என்றான். தாரா வந்து, இவன் என்னை காதலித்து ஏமாற்றி விட்டு, இப்ப இந்த பெண்ணை கல்யாணம் பண்ண பாக்குறான் என்றாள். அதிர்ச்சியில் துருவ்வும் யாழினியும் எழுந்து நின்றனர். அவள் யாழினியிடம் இவனை கல்யாணம் பண்ணாத என்றாள். காலையிலிருந்து சாப்பிடாததாலும் அளைச்சலாலும் யாழினி மயங்கி விழப்போனாள். துருவ் அவளை தாங்கிப் பிடித்தான். தாரா பதறிப்போய் பக்கத்தில் இருந்த தண்ணீரை தெளித்து அவளை எழுப்பி, யம்மா பாப்பா நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன். உன் துருவ நீயே வச்சுக்க என அவன் கையைப் பிடித்துக் யாழினியிடம் கொடுத்தாள். யாழினி புரியாமல் பார்க்க, துருவ் இது தாரா. என் ஸ்கூல் ஃப்ரெண்ட் சும்மா விளையாட்டுக்கு அப்படி பண்ணிட்டாள் என்றான். தாரா எழுந்திருக்க எல்லோரும் அவளை தீயாய் முறைக்க, அவள் ஹிஹிஹி என இழுத்து சரி சரி நல்ல நேரம் முடியறதுக்குள்ள மாப்பிள்ளை தாலி கட்டட்டும் எல்லோரும் ஆசிர்வாதம் பண்ணுங்க என்றாள்....
மித்ரன் வாவ் இவ என்னைய மாதிரியே சமாளிக்கத் தெரிந்த ஒரு பொண்ணு. இவ போன ஜென்மத்தில எனக்கு தங்கச்சி இருந்து இருப்பானோ என நினைத்தான்.......

துருவ் யாழினியின் கழுத்தில் தாலிகட்ட போக, ஐயோ! என்று சத்தம் கேட்டது. மித்ரன், அடுத்து யாருடா? என்றான் சோர்வான குரலில். எல்லோரும் சத்தம் வந்த திசையை பார்க்க காவ்யா நின்றிருந்தாள். துருவ் எனக்கு கல்யாணமே வேணாம். வா பேபி நம்ம ஓடி போய் விடலாம் என்றான். மித்ரன் மச்சான் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காத. அவரளை நான் கவனிச்சிக்கிறேன். நீ தாலியை கட்டு என்றான். துருவ் யாழினி கழுத்தில் தாலிகட்ட எல்லோரும் அட்சதை தூவி வாழ்த்தினர்🌹🌹🌹.....

மித்ரன் காவ்யாவிடம் என்ன பிரச்சினை உனக்கு என்றான். காவ்யா என் தம்பியை காணோம் என்றாள். மித்ரன் அவன் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன் என அந்த ரூம்க்கு கூட்டிச்சென்றான். காவ்யா சாத்விக்கை பார்த்து, என்னடா இங்க பண்ற? யாரும் உன்னை அடைச்சு வைத்தது என்றாள். அவன் மித்ரனை காட்டி இவங்க தான் ப்ளான் பண்ணி ஸ்ரீதர் மாமாவை ஓட வச்சாங்க. இவுங்க ஃபிரண்ட்க்கு யாழினியை கட்டி வைக்க. அது எனக்கு தெரிந்ததும் என்ன இவங்க அடைச்சு வச்சுட்டாங்க , வாக்கா போய் எல்லார்கிட்டயும் சொல்லலாம் என இழுத்தான். காவ்யா வேணாம் டா என்றாள். சாத்விக், வா அக்கா நாம போய் இத சொல்லியே ஆகணும் என்றான். காவ்யா வேண்டாம் என்று சொல்லச்சொல்ல, சாத்விக் சொல்லுவேன் என அடம்பிடிக்க அவள் சாத்வித் கன்னத்தில் அறைந்துவிட்டாள். சாத்வித் கன்னத்தில் கைவைத்து அக்கா என்றான். மித்ரன் இதை கவனிக்காமல் சென்றுவிட்டான். காவ்யா எல்லாம் தெரிஞ்சு கல்யாணம் முடிஞ்சு போச்சு. இப்போ வந்து குதிக்கிற என்றாள்....
அங்கே ஸ்ரீதர் வந்துவிட்டான். ஸ்ரீதர் வீட்டில் அவனை திட்டி கொண்டிருக்க, துருவ் சென்று இருங்க அவர் எதோ சொல்ல வராரு. அப்புறம் அவர் வந்திருக்க கோலத்தை பார்த்தீர்களா? எங்கேயோ விழுந்து எந்திரிச்சு வந்த மாதிரி இருக்குது என்றான். ஸ்ரீதர் அவன் தந்தையிடம் அப்பா நான் உங்களை ஏமாற்றி விட்டு ஓடிப் போய் இருப்பேன் நீங்க நினைக்கிறீங்களா அப்பா? . என்னை யாரோ கடத்தி விட்டு போயிட்டாங்க. அவங்ககிட்ட இருந்து சண்டை போட்டு தப்பித்து வந்து இருக்கேன் என்றான்....
இதைக் கேட்ட ஸ்ரீதரின் தந்தை நான் சொன்னேன்ல, என் பிள்ளை தப்பு செஞ்சிருக்க மாட்டான்னு. என் வளர்ப்பு வீண்போகவில்லை என்று சந்தோஷப்பட, பின் கல்யாண மேடை வரைக்கும் வந்து என் புள்ள கல்யாணம் நின்னு போச்சே என வருத்தப்பட்டார். துருவ் அங்கிள் கவலைப்படாதீங்க. அவருக்கு பிடிச்ச பொண்ணோட அவருக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுங்கள் என மீராவை அழைத்து ஸ்ரீதருடன் நிற்க வைத்தான். ஸ்ரீதரும் மீராவும் ஸ்ரீதரின் தந்தையின் காலில் விழுந்தனர். அவர் யோசித்துவிட்டு பின் ஆசிர்வாதம் செய்தார் அவர்கள் இருவரையும். ஸ்ரீதர் அப்பாவிடம், அப்பா நான் சொன்னேன்ல இவ தான் என் மீரா என்றான். அவர் ஒரு நல்ல நாள் பார்த்து இந்த பொண்ணு வீட்டுக்கு போய் பேசுவோம் என்றார்......
பின் அனைவரும் சாப்பிட்டு கிளம்பினார்கள். பொண்ணு மாப்பிள்ளைக்கு செய்ய வேண்டிய சம்ரதாயத்தையும் முடிச்சுட்டு மண்டபத்தை விட்டு அனைவரும் கிளம்பினர். வெளியே வந்ததும் கருணாகரன் யாழினியையும் துருவ்வையும் முறைத்தார் . அவர்கள் என்னவென்று புரியாமல் அவரை பார்க்க, அவர் துருவ் யாழினியின் பேனரை பார்த்து முறைத்தார்....

கருணாகரன் முறைப்தை பார்த்த மித்ரன் ஆகாஷை பார்த்து ஏதோ யோசித்தான். இதை பார்த்து ஆகாஷ் ஐயோ மறுபடியுமா? என அலறி அடித்துக் கொண்டு ஓடினான். அவனை பார்த்து அனைவரும் சிரித்தனர்.......
துருவ், பேனரை வைத்து கண்டுபிடித்திட்டாரே என நினைத்து யாழினியிடம் பேபி இவங்க இன்னொரு சண்டையை ஆரம்பித்துவிடுவாங்க போல. வா அதுக்குள்ள நாம ஓடிப் போய்விடலாம் என யாழினியை இழுத்துக்கொண்டு ஓடினான். மித்ரன் டேய் எல்லாரும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணுவாங்க நீ கல்யாணம் பண்ணிட்டு ஓடி போறீங்களா? என்றான். துருவ் எங்களை ஒரு மாசத்துக்கு யாரும் தேடாதீங்க. நாங்க ஹனிமூன் போறோம் என்றான் ஓடிக்கொண்டே. இதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். வாங்க நம்மளும் துருவ் யாழினி இன்னைக்கு மாதிரியே என்றைக்கும் சந்தோஷமாக இருக்க வாழ்த்துவோம்......

சுபம்.......

முதல்ல என் வாசகர்களுக்கு நன்றி. என் கதையும் மதிச்சு வாசித்த வாசகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். என்னுடைய கதைக்கு கமெண்ட் பண்ண எல்லோருக்கும் தேங்க்ஸ். இன்னும் நிறைய பேர் சைலன்டாவே என் கதைய படிச்சிட்டு இன்னும் ஒரு கமெண்ட் கூட பண்ணல..... இப்பவாவது ஒரு கமெண்ட் பண்ணீட்டு போங்க பா...மீ பாவம்ல. யாரெல்லாம் என் கதையை வாசிச்சிங்கன்னு தெரியுனும் கேட்டேன்...... 😍😍😍😍😍..... எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி மக்களே......😍😍😍😍