கல்யாண கலாட்டா - கதை திரி

Janu murugan

Moderator
Staff member
Jun 10, 2020
42
4
8
19
ஹாய் பிரெண்ட்ஸ்,

நமது தளத்திற்கு புது வரவான ஜானு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..அவர்களின் "கல்யாண கலாட்டா" கதையின் பதிவுகள் இங்கு பதிவிடப்படும்.

ஆகாஷ் தன் பாக்கெட்டில் கை விட்டு எதையோ அவசர அவசரமாக தேடினான். திவி, என்ன பங்கு அவசரமா எதையோ தேடிட்டு இருக்க என்றாள். ஆகாஷ், அது என் மொபைல் பங்கு என்றான்.....
மித்து அதோ அங்கே விழுந்து கிடக்கு பாரு என்றதும் வேகவேகமாய் மொபைலை எடுத்துப் யூடியூபுக்குள் போனான்....
மித்து, இப்ப எதுக்குடா யூடியூப் போற என்றான். ஆகாஷ் அது ஒண்ணும் இல்ல டா மச்சி என் வாழ்க்கையில் வசந்தம் வரும்னு சொன்ன அந்த மாமனிதருக்கு நன்றி சொல்ல போறேன் டா என்றான்....
சுபா ஆகாஷ் முதுகில் அடித்து, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அவரை சொட்டைத்தலையன்னு திட்டின. இப்ப பிகர பார்த்ததும் மாமனிதனா என்றாள். ஆகாஷ் ஈஈஈ.. என இளித்தான்....
திவி அதெப்படிடா உங்களுக்கு மட்டும் பார்த்தவுடனே காதல் வருது என்றாள். ஆகாஷ், அதுக்கெல்லாம் ஒரு லக்கு வேணும். அதலாம் உனக்கு இல்ல பங்கு என்றான். திவி ஏன் ஆளுக்கு என்ன குறைச்சல் என்று ஹரியை இழுத்து நிறுத்தினான்....
துருவ் ஷாக்காகி இது எப்பயிருந்து என்றான். மித்து ஷாக்க கொற! ஷாக்க கொற! அது எப்போ இருந்தோ ஓடுது. துருவ், நானும் உங்க கூட தான் டா இருக்கேன் என்றான். மித்து, ஆமா நீ எங்க கூட எங்க இருந்த. என்னமோ காதல் படத்துல வர்ற பரத் மாதிரி தாடி வளர்த்து விட்டு ஞ்ஞ்ஞன்னு.... திரிஞ்ச இதுல எப்படி உனக்கு தெரியும் என்றான். துருவ் டேய் பேசாத எல்லாம் உன்னால தாண்டா என அடிக்கவர டாக்ஸி வந்தது. எல்லோரும் ரெசார்ட்டுக்கு புறப்பட்டனர்.....

எல்லாரும் ரெசாட்டின் வெளியில் இறங்கி நடந்து கொண்டிருந்தனர். ஹரியும் திவியும் கையை கோர்த்து நடந்து சென்றனர். ஆகாஷ் தனக்குத் தானே சிரித்துக் கொண்டு வந்தான். சுபா எதையோ வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாள். சிவாவும் கார்த்தியும் தோள்மேல் கைபோட்டு தளபதி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்துட்டு வந்துட்டு இருந்தார்கள். துருவ் காதல் படத்துல வர்ற பரத் மாதிரி வந்து கொண்டிருந்தான்.....

மித்ரன் இதுங்களைப் பார்த்து, ரெண்டும் நடுரோட்ல ரொமான்ஸ் பண்ணிட்டு திரியுதுங்க. ஆகாஷைப் பார்த்து, ஒருத்தன் பைத்தியம் மாதிரி சிரிச்சிகிட்டே திரியுறான். இன்னொருத்தன் சொத்தை பறிகொடுத்த மாதிரி திரியுரான். இது இரண்டும் என்னமோ லவ்வர்ஸ் மாதிரி திரியுது. கடவுளே பாண்டுரங்கா ஏன்ப்பா இந்த பைத்தியங்கள் கிட்ட மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்கிற என்றான்....
நடந்து கொண்டிருந்த துருவ் திடீரென்று நின்றுவிட்டான். மித்ரன், இவன் ஏன் இப்படி மிலிட்டரி ஆள் மாதிரி விரைப்பா இருக்கிறான் என்று, அவன் பார்க்கும் திசையில் பாத்திட்டு, டேய் எல்லாரும் அங்க பாருங்க என்று கைகாட்டினான். யாழினியும் பிரபுவும் அருகருகே அமர்ந்து சிரித்து சிரித்து பேசிக் கொண்டு இருந்தனர்....

அதை பார்த்ததும் துருவிற்கு கோபம் தலைக்கேறியது. துருவ் மித்ரனை முறைத்தான். மித்ரன் அடிக்க போறான் என நினைத்து பம்மினான். துருவ், டேய் இதெல்லாம் உன்னாலதான்டா! நான் அப்போவே சொன்னேன் இந்த பிளான்லாம் வேணாம்னு நான் காலையில கெஞ்சி எப்படியாவது அவளை சமாதான படுத்தி இருப்பேன் என மிரட்டினான். மித்ரன் மச்சான், டூர் முடிந்து போறதுக்குள்ள அவளை சமாதானம் பண்ணிவிடுறேன் என்றான்....
துருவ் நம்பாமல் பார்க்க, மித்ரன் என்ன மச்சான் என்ன நம்பலையா? உன்னை எப்படி நான் நம்பவைக்கிறது என யோசித்தவன், ஆகாஷ் மேல சத்தியம் என அவன் தலை மேல் சத்தியம் செய்தான். ஆகாஷ், தேவை இல்லாம உங்க பிரச்சனைல ஏன்டா என் தலையை உருட்றீங்க என்றான்....

துருவ், வேகமாக யாழினியிடம் சென்று ஏன் இப்படி பண்ற யாழினி? நான் தான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டேன்ல என அவள் கையைப் பிடித்தான். யாழினி கையை உதறி, நீங்க பேசுறதெல்லாம் பேசிட்டு மன்னிப்பு கேட்டுருவீங்க. நாங்க மன்னிச்சிடனுமா? இங்கிருந்து போய்விடு பேசாம என்னை கடுப்பேத்தாத என்றாள்...
துருவ், என் மேல இருக்குற கோவத்தில் இவன் கூட எல்லாம் பேசி என்னை ஏன் வெறுப்பேத்துற என்றான். யாழினி, ஹலோ மிஸ்டர் மரியாதையா பேசுங்க. அவர் என்னோட பாய் ஃப்ரெண்ட் என்றாள். துருவ், என்ன உளர்ற யாழினி? என் மேல இருக்குற கோவத்துல் நீ என்ன பண்றதுன்னு தெரியாம பண்ணிட்டு இருக்க என்றான்....
பிரபு துருவ்விடம், அவதான் இவ்வளவு தூரம் சொல்றால, அப்புறம் ஏன் வம்பு பண்ற என்றான். துருவ் ஏதோ சொல்ல வர்ற, யாழினி பிரபுவிடம் இவன் விட்டா பேசிட்டே இருப்பான். நீங்க வாங்க போலாம் என் பிரபுவின் கையை பிடித்து இழுத்து சென்றுவிட்டாள்....
துருவ் கோபத்தில் அருகில் இருந்த டேபிளை கையால் ஓங்கி குத்தினான் ரத்தம் கொட்டியது. சுபா சென்று ஃபர்ஸ்ட் எய்ட் எடுத்து வந்த அவர் கையில் கட்டு போட்டு விட்டு, ஏன் அண்ணா இப்படி பண்றீங்க? கோபம் குறைஞ்சா அவளே சரியாயிடுவா, நீங்க கவலைப்படாதீங்க என்றாள். இவ்வளவு எல்லாம் சீன் இல்ல அவளுக்கு என்று கூறி அவனை சமாதானப்படுத்த முயன்றாள். மித்ரனும் தன் பங்குக்கு அவனை ஏதேதோ கூறி சமாதானப் படுத்தி ரூம்க்கு அழைத்துச் சென்றுவிட்டான்....
இங்கு சுபாவும் திவ்யாவும் யாழினியிடம் கெஞ்சி கூத்தாடி கொண்டிருந்தனர். யாழினி அவர்களை மன்னிப்பதாக இல்லை. யாழினி, அதெப்படி அவனுக்காக நீங்க என்கிட்ட பொய் சொல்லலாம் என்று திட்டினாள். திவ்யா நாங்கள் உன் லவ்வுக்கு உதவிபண்ணதான் அப்படி பொய் சொன்னோம். அவன் உன் கூட பேசாததனால நீ எவ்ளோ கஷ்டப்பட்ட. நேத்து நைட் கூட எவ்வளவு அழுத யோசிச்சு பாரு. அதை பார்த்து தான் நாங்க அப்படி பொய் சொன்னோம். துருவ்வையும் கொஞ்சம் யோசிச்சு பாரு. உன் கிட்ட பேசாம அவன் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பான். நீ ஒவ்வொரு தடவையும் அவன் கிட்ட பேசும் போது உன்ன அவாய்ட் பண்ணும் போது எவ்வளவு வேதனை பட்டு இருப்பான் என்று கூறினாள்....
யாழினி கோபத்தை விட்டு, சிறிது யோசித்தாள். யாழினி திவ்யாவிடம் நீ சொன்னது சரிதான் பங்கு. நான்தான் தேவையில்லாமல் கோபப்பட்டுடேன். ஆனால் அவனை மட்டும் மன்னிக்கவே மாட்டேன் என்றாள். திவ்யாவுக்கு அப்பாடா! ஒருவழியாக இவளை சமாதானம் பண்ணிவிட்டோம் என நிம்மதியாக இருந்தது...
மித்ரன் துருவ்விடம் அவளை சமாதானப்படுத்த கடைசியாக ஒரே வழிதான் இருக்கு என்றான். துருவ் ஆர்வமாக என்ன என்றான். மித்ரன் கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும். ஆனால் பண்ணி விடு வேற வழி இல்லை என்றான். துருவ் நீ ஐடியாவை சொல்லு. அது எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் தலைகீழ நிண்ணு தண்ணீர் குடிச்சாவது அவளை சமாதான படுத்திவிடுவேன் என்றான். மித்ரன், ஒன்னும் இல்ல மச்சி அவ கால்ல விழுந்துடு என்றான்...
துருவ் அதிர்ந்து, வாட் நான் போய் அவ கால்ல விழுகனுமா? நோ சான்ஸ். நான் ஏன் பேரன்ட்ஸ் கால்ல கூட விழுக அவ்ளோ யோசிப்பேன். வேற ஐடியா சொல்லு என்றான். மித்ரன் வேற ஐடியா இல்லை. இதை நீ செஞ்சுதான் ஆகணும் என்றான். துருவ் என்னலலாம் பண்ணவே முடியாது. நான் இப்போ எப்படி அவளை சமாதானப்படுத்துறேன்னு மட்டும் பாரு என்று வேகமாக ரூம்க்கு சென்றான்...
இவனைப் பார்த்ததும் நாகரீகம் கருதி சுபாவும் திவ்யாவும் வெளியே வந்துவிட்டனர். யாழினி துருவ்வை பார்த்து நீ எதுக்கு இங்க வந்த? வெளியிலே போ என்றாள். துருவ், யாழினி நான் சொல்றதை கொஞ்சம் கேளு என்றான். நான், நீயும் மித்ரனும் விரும்புறதா தப்பா நினைச்சிட்டேன். அதனால்தான் நீயே வந்து ப்ரொபோஸ் பண்ணும்போது கூட நான் மறுத்துவிட்டேன். நான் அப்படி சொல்லும்போது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா? உன் கண்ணில் கண்ணீரை பார்த்ததும் எனக்கு நெஞ்சில் இருந்து ரத்தம் வர்ற மாதிரி இருந்துச்சு. இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல? உன்ன சமாதானப்படுத்த உன் கால்ல விழுக கூட நான் ரெடியா இருக்கேன் என்றான்.....
வெளிய நாம வானரங்கள் துருவ் எப்படி சமாதானப்படுத்துறான்னு எட்டிப் பார்த்துட்டு இருந்துச்சுங்க. யாழினி துருவ் சொன்னத கேட்டு சமாதானம் ஆகிவிட்டாள். இருந்தாலும் அவனை விடுவதாக இல்லை. யாழினி, சரி என் கால்ல விழு என்றாள். துருவ், என்ன ஒரு பேச்சுக்கு சொன்னா உண்மைக்கே விழ சொல்றாள் என நினைத்துவிட்டு, சரி உனக்கு வேற வழி இல்லை துருவ் என்று நினைத்துவிட்டு, அவள் காலில் விழுந்து, என்னை மன்னிச்சிடு என்றான்...
யாழினி, என்ன நம்ம விளையாட்டுக்கு தான் சொன்னோம்,. உண்மைக்கே விழுந்துட்டான். யாழினிக்கு சிரிப்பு வந்துவிட்டது. அதை அடக்கிக் கொண்டு சரி சரி எழுந்திரு நான் உன்னை மன்னிச்சிட்டேன் என்றாள்......
துருவ் ஆவலாக எழுந்து, அவளை அணைக்க போக, அவனிடம் இருந்து இரண்டடி பின்னாடி நகர்ந்து, என்ன பண்ற நீ என்றாள். யாழினி, நான் உன்னை மன்னிச்சிட்டேன் தான் சொன்னேன். உன் லவ்வ அக்செப்ட் பண்ணல என்று சொன்னாள்....
துருவ் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு செல்லும்போது அவள் சிரித்துக் கொண்டிருப்பதை கண்ணாடியில் பார்த்துவிட்டான். அடிப்பாவி சமாதானமாகி விட்டு இவ்ளோ நேரம் என்ன பாடா படுத்துறியா?. உன்னை எப்படி கத்த விட்டேன் பாரு என்று நினைத்துக்கொண்டு, யாழினியிடம் நீ என்ன மன்னிச்சதே பெரிய விஷயம். சரி விடு நான் அந்த ஹேமாக்கே ஓகே சொல்லிவிட்றேன் என்று போனை எடுத்து காதில் வைக்க, யாழினி ஓடிவந்து, என் முன்னாடியே அந்த ஹேமாக்கு ஓகே சொல்லுவியா என அவனை அடித்தாள். துருவ் நீ மட்டும் சமாதானமாகி விட்டு என்ன இவ்ளோ நேரம் கத்தவிட்ட என்று அவளை அணைத்துக் கொண்டான். அவள் அவன் கையில் இருந்த கட்டைப் பார்த்துவிட்டு, ஐயோ பேபி கைல என்ன ஆச்சு என பதறினாள். துருவ், நீ பிரபு கிட்ட பேசும் போது , அந்த கோவத்துல டேபிளை ஓங்கி குத்தினேன். அப்போ அடிபட்டு விட்டது என்றான்.......

யாழினி வருத்தப்பட்டு, ஐயோ எல்லாம் என்னால தான் பேபி சாரி என்று வருந்தி அவன் கன்னத்தை கையில் ஏந்தினாள். அவன் வலிக்குது ஸ்ஆ...என கன்னத்தை பிடித்தான். யாழினி அவன் கன்னத்தை பார்த்தாள் சிவந்து இருந்தது. யாழினி யார் பேபி உன் கன்னத்துல அடிச்சது? என்ன ஆச்சு? யாரு உன்ன இப்படி பண்ணானு சொல்லு, ஸ்கெட்ச் போட்டு தூக்கிட்றேன் என்றாள். துருவ், அப்படி எல்லாம் அவசரப்பட்டு வாக்கு கொடுக்காத பேபி. இதை நீ தான் பண்ணினே என்றான். யாழினி அதிர்ச்சியாகி நானா இதை பண்ணேன் எனக் கேட்டாள்......
கலாட்டாக்கள் தொடரும்....
 

Janu murugan

Moderator
Staff member
Jun 10, 2020
42
4
8
19
ஹாய் பிரெண்ட்ஸ்,

நமது தளத்திற்கு புது வரவான ஜானு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..அவர்களின் "கல்யாண கலாட்டா" கதையின் பதிவுகள் இங்கு பதிவிடப்படும்.

யாழினி அதிர்ச்சியாகி நானா இதை பண்ணுனேன் என்று கேட்டாள். துருவ் ஆமா நீ குடிச்சிட்டு செம ரகளை பண்ணிட்டு, என்ன கன்னத்திலேயே பளார்னு ஒரு அறைவிட்டுட என்றான். பின் துருவ் சிரித்து விட்டு என்னை அடிச்சது கூட பரவாயில்லை. மித்ரனையும் ஹரியையும் செம கலாய் கலாய்த்து விட்டு, அது என்ன சொம்பு தலையன், அப்படித்தான் மித்ரனை கூப்பிட்ட . அப்புறம் ஹரியைப் பார்த்து செயின் அறுக்குறவன் மாதிரி இருக்கான்னு சொன்ன என்று சிரித்தான்.....
துருவ், உன்னை யாராலயும் கண்ட்ரோல் பண்ண முடியல என்றான். யாழினி அப்புறம் என்ன ஆச்சு என்றாள் ஆர்வமாக. துருவ், நான் என்ன கதையா சொல்றேன் டி அப்புறம் அப்புறம்னு கேட்கிற என்றான். யாழினி சிணுங்கிவிட்டு, சொல்லு பேபி என்றாள். துருவ், அப்புறம் என்ன நான் உன்னை அப்படியே அலேக்கா தூக்கிட்டு ரூம்க்கு போய் விட்டேன் என்றான். யாழினி நெஞ்சில் கை வைத்து ஷாக்காகி விட்டாள். துருவ், சிரித்து விட்டு பயப்படாத ரூம்க்கு கூட்டிட்டு போய் படுக்க வச்சு பெட்ஷிட்டை போர்த்தி விட்டு வந்துவிட்டேன் என்றான். யாழினி அப்பாடா என பெருமூச்சு விட்டாள். யாழினி, அவ்வளவுதான? நான் பயந்துட்டேன் என்றாள்.....
யாழினி, சாரி பேபி போதையில் தெரியாம அடிச்சிட்டேன் என அவன் கன்னங்களை வருடி அதில் தன் இதழ் பதித்தாள். துருவ், சிரித்துக்கொண்டே நீ இப்படி முத்தம் கொடுத்தால் நான் இன்னொரு கன்னத்திலேயே அடிவாங்க தயார் என்றான். யாழினி, சீ போடா ராஸ்கல் என சிணுங்கினாள்....
துருவ் அப்போதுதான் ஞாபகம் வந்தவனாக, பேபி வரும்போது நம்ம வானர படையையும் சேர்த்து கூட்டிட்டு வந்தேன். அதுங்க உள்ள வரதுக்கு முன்னாடி வா நம்ம வெளியே போய்விடலாம் என வெளியே வந்தனர். துருவ் எப்படி சமாதான படுத்திட்டேன் பாரு என்பது போல் கண்ணை காட்டினான். மித்ரன் யாழினியிடம் பங்கு என்ன ஞாபகம் இருக்கா?. நான் சொம்பு தலையன் இவன் செயின் அறுக்கிறவன் என்றான். யாழினி, ஹிஹிஹி..... என இளித்து சமாளித்து, சாரி பங்கு போதையில் தெரியாமல் திட்டிட்டேன்.
மித்ரன் பொய் சொல்லாத பங்கு, மனசுல இருக்கிறதுதான் வாயில வரும். எத்தனை நாளா பிளான் போட்ட என்ன இப்படி கலாய்க்க என்றான். யாழினி, ஐயோ சத்தியமா இல்ல பங்கு. என்னை நம்ப மாட்டியா? என்றாள் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு. மித்ரன்,சரி சரி ரொம்ப ஓவரா நடிக்காத என்றான். துருவ், வாங்க எல்லோரும் சாப்பிடலாம் என்று எல்லாரையும் கூட்டிச் சென்றான்....

மித்ரனும் ஹரியும் நகராமல் அதே இடத்தில் நின்றனர். துருவ், அதை பார்த்து ஏன் மச்சான் வரலையா? யாருக்கு வெயிட் பண்றீங்க என்றான். மித்ரன் என் ஃப்ரெண்ட் ரோசக்காரன் ரோசக்காரன்னு ஒருத்தன் இருந்தான், அவன் பேரு துருவ், உள்ள போனான். இன்னும் ஆள காணோம் என்றான்....
துருவ் மைண்ட் வாய்ஸில் ஐயோ பாத்துட்டாங்களா? பரவாயில்லை சமாளிப்போம் என நினைத்துக்கொண்டு ஹிஹிஹி.... என இளித்தான். மித்ரன், கேவலமா சிரிக்காதடா பாக்க முடியல, வாங்க போகலாம் என்றான். எல்லோரும் கிளம்பினர்....

எல்லோரும் சாப்பிட்டு கொண்டிருந்தனர் அப்போது அங்கு பிரபு வந்தான். பிரபுவை பார்த்து துருவ் யாழினியின் காதில் , பேபி இவனை எப்படி சமாளிக்கப் போற என்றான். யாழினி, பிரபுவை பார்த்து சிரித்துவிட்டு, வாங்க சீனியர் உட்காருங்க என அவள் அருகில் இடம் கொடுத்தாள். பிரபு , என்ன ரெண்டு பேரும் ஒருவழியாக சமாதானமாகி விட்டிங்க போல என்றான். யாழினி, சிரித்து ஆகிட்டோம் என்றாள். எல்லோரும் புரியாமல் பார்க்க யாழினி பேச ஆரம்பித்தாள்.
யாழினி, நான் உங்க கிட்ட சண்டை போட்டுட்டு வந்து நேரா போய் சீனியர தான் பார்த்தேன். சீனியர் என்கிட்ட எப்போ என் லவ்வுக்கு ஓகே சொல்ல போற என்று கேட்டார். இனியும் இவர்கிட்ட மறைக்ககூடாதுன்னு தோணுச்சு. அதான் நானும் துருவும் லவ் பண்றோம்னு எடுத்துச் சொன்னேன். சீனியர் புரிஞ்சுகிட்டாரு. அப்போதுதான் நீங்கள் தியேட்டரிலிருந்து வந்தீங்க. நேத்து என்ன அழவச்ச துருவ் கொஞ்சம் கத்த விடலாம்னு நினைச்சு தான் அப்படி நாங்க நடிச்சோம் என துருவ்விற்கு ஊட்டி விட்டுக்கொண்டே பேசினாள். துருவ் கையில நேத்து அடிபட்டிருச்சுல. அதனால் தான் ஊட்டி விட்டாள். மற்றபடி ஒன்னும் இல்ல, தப்பா நினைச்சுக்காதீங்க ரீடர்ஸ்.......

திவ்யா பிரபுவிடம், எப்படி சீனியர் இவ்வளவு பெருந்தன்மையாக ஏத்துக்கிட்டிங்க என்றாள். பிரபு சிரித்துவிட்டு, ரொம்ப ஈசி திவ்யா. நமக்கு புடிச்சவங்க சந்தோஷத்திலதான் நம்ம சந்தோஷம் இருக்கு. நான் யாழினியை கல்யாணம் பண்ணிக்கிட்டா நான் சந்தோஷப்படுவேன். ஆனா யாழினி துருவ்வை கல்யாணம் பண்ணிக்கிட்டா யாழினி சந்தோஷப்படுவாள். அதை பார்த்து நான் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவேன் என்றான். எல்லோரும் அவன் பதிலில் அசந்து தான் போய்விட்டனர். எல்லோருக்கும் பிரபு மீது ஒரு மரியாதையை வந்துவிட்டது. சுபா தான் பிரபுவை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். திவ்யா சுபாவை ஒரு இடி இடித்து என்ன என்றாள். சுபா ஒன்னும் இல்ல பிரபு சீனியர் ரொம்ப கிரேட்ல என்றாள் அவனைப் பார்த்தபடி. திவ்யா அவளை ஒரு மாதிரியாக பார்த்து ஆமா என்றாள்......


மறுநாள் எல்லோரையும் கோடை லேக் அண்ட் டெவில்ஸ் கிச்சனுக்கு கூட்டிசெல்வதாக ராஜ் சார் சொல்லியிருந்தாரு. மித்ரன் யப்பா கமிட்டட்ஸ், இன்னைக்காவது என்ன டூரை நல்லா என்ஜாய் பண்ண விடுங்க. இன்னைக்கும் சண்டை போட்டு எனக்கு வேலை கொடுத்துடாதீங்க என கையெடுத்துக் கும்பிட்டான்....
யாழினி அவன் தலையில் கொட்டி எரும மாடே சண்டைக்கு காரணமே நீதான். என்னமோ சேர்த்து வச்சேன் சேர்த்து வச்சேன் சொல்லிக்கிற என்று திட்டினாள். மித்ரன், என்ன நான் சண்டை காரணமா? உன் ஆளு ஒரு லூசு, எதையும் முழுசா கேட்காமல் 96ல வர விஜய் சேதுபதி மாதிரி தாடி வைத்து விட்டு சுத்திகிட்டு திரிஞ்சா நான் என்ன பண்றது என்றான். இவர்கள் இப்படி சண்டை போட்டுக் கொண்டிருக்க ராஜ் சார் வர அமைதியாகி விட்டனர்...
எல்லோரும் கோடை லேகிற்கு சென்று சுற்றிப் பார்த்தனர். துருவும் யாழினியும் ஒன்றாகவே கை கோர்த்துக் கொண்டு சுற்றினர். மித்ரன் இவர்களை பார்த்து, என்னமோ ஹனிமூன் வந்த மாதிரி ரெண்டு சுத்துதுங்க என்று புலம்பினான். பின் அனைவரும் டெவில்ஸ் கிச்சனுக்கு சென்று என்ஜாய் பண்ணினர். ஒருவழியா எல்லா இடத்தையும் சுத்தி பார்த்துட்டு ரெசார்ட்டுக்கு வந்துவிட்டனர். நாளை காலை 10 மணிக்கு எல்லோரும் கொடைக்கானலில் இருந்து கோயம்புத்தூர் கிளம்புவதாக பிளான்....

மறுநாள் காலையில் எல்லோரும் பரபரப்பாக தங்களது பொருட்களை தேடி எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். ராஜ் சார் டைமாயிடுச்சு எல்லோரும் கிளம்புங்கள் என்று விரட்டிக் கொண்டிருந்தார். ஒரு வழியாக உருட்டி மிரட்டி எல்லோரையும் பஸ்ஸில் ஏற்றி விட்டார்....
ஆகாஷ் எதையோ இழந்த மாதிரி முகத்தை சோகமாக வைத்துக் கொண்டிருந்தான். மித்ரன் அதை பார்த்து, பங்கு ஏன் இப்படி மூஞ்சியை சோகமா வைத்திருக்க. உன் காதல் உண்மையா இருந்தா கண்டிப்பா அவ உன்கிட்ட வருவாள் என்று அறிவுரை கூறிக் கொண்டிருந்தான்....
திவ்யா இதைக்கேட்டு, பங்கு எப்போது இருந்து இப்படி சீரியஸா பேச ஆரம்பிச்ச என்றாள். மித்ரன், அதெல்லாம் தானா வருது பங்கு என்றான். துருவ் யாழினி அருகில் உட்கார்ந்து அவளை சீண்டி கொண்டிருந்தான். யாழினி, துருவ் பேசாம வா. எல்லோரும் என்ன நினைப்பாங்க என்றாள். துருவ் என்ன நெனச்சா எனக்கு என்ன? ஏன் ஆளு கிட்ட நான் ரொமான்ஸ் பண்றேன் என்றான். யாழு, இவன் சொன்னா கேக்கமாட்டான் என நினைத்துக்கொண்டு ஜன்னல் பக்கம் திரும்பி கொண்டாள். துருவ், அவள் கன்னத்தில் ஊதினான். யாழினி அவனை முறைத்து, இப்ப நீ சும்மா வரல. நான் வேற சீட்டுல உட்கார்ந்து விடுவேன் என்றாள். துருவ் அமைதியாகி விட்டான்...
திவ்யா ஹரியை சீண்டிக்கொண்டிருந்தாள். ஹரி சும்மாயிரு திவ்யா என்றான். திவ்யா, நீ பண்ண வேண்டியது எல்லாம் நான் பண்ணீட்டு இருக்கேன். நீ எதுவும் பண்ணலனாலும் பரவாயில்லை, பேசாம வாடா என்றாள்....
ஆகாஷ், இவற்றை எல்லாம் பார்த்து வெறுப்பாகி, கடவுளே இவனுங்க எல்லாம் ஜாலியா அவுங்கவுங்க ஆள் கூட இருக்கானுங்க. ஆனால், என்ன மட்டும் இப்படி புலம்ப விட்ட ? என் ஆள கண்ணுல காட்டுபா என புலம்பினான். இவன் வேண்டுதல் கடவுளுக்கு கேட்டதோ? என்னவோ? இவன் ஆளு ஹாஸ்பிடல் முன்னாடி நின்னு போன் பேசிட்டு இருந்தாள். ஆகாஷ் அவளை பார்த்துவிட்டு, மித்துவிடம், பங்கு என் ஆளு அந்த ஹாஸ்பிட்டல் முன்னாடி நின்னு போன் பேசிட்டு இருக்காடா. எப்படியாவது பஸ்ஸை நிறுத்துடா பிளீஸ் என கெஞ்சினான்....
மித்ரன் வேகமாக சுபாவிடம் சென்று, பங்கு நீ உன் அண்ணனுக்காக என்ன வேணா செய்வியா? என்றான். சுபா நடக்கப்போகும் விபரீதத்தை அறியாமல், உணர்ச்சி வேகத்தில் ஆங்.... என் உயிரையே கூட குடுப்பேன் என்றாள். மித்ரன், பங்கு அப்போ கண்ண மூடி ஒன்னுல இருந்து ஐந்து வரைக்கும் எண்ணு என்றான். சுபா கண்ணை மூடிக்கொண்டு எண்ண ஆரம்பித்தாள். மித்ரன் சாரி சுபா என்றுவிட்டு, அவள் கையை எடுத்து ஜன்னலில் வைத்து நசுக்கி விட்டான். அவள் ஆ.... என கத்தி விட்டாள் அவள் கத்தலில் பஸ் நின்றுவிட்டது....
மித்ரன் ராஜ் சாரிடம், சார் சுபா தெரியாமல் ஜன்னலில் கைய நசுக்கிட்டாள், ரத்தம் வருது அங்க ஒரு ஹாஸ்பிடல் இருக்கு எனக் கூட்டிக் கொண்டு ஓடினான். நம்ம வானரங்க எல்லாரும் சேர்ந்து ஓடினாங்க. சுபா, மித்ரனை கேட்க முடியாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தாள். சுபாவை ஹாஸ்பிடல் உள்ளே கூட்டிச் சென்றனர்....
மித்து ஆகாஷை அந்த பெண்ணிடம் கூட்டி சென்றான். ஆகாஷ் அந்தப் பெண்ணிடம் பேச தயங்கினான். மித்ரன் பங்கு, நீ இப்போ பேசலனா எப்பவுமே எதுவும் பேச முடியாது. ஒழுங்கா போய் பேசு என்றான். ஆகாஷ், ஹாய் குல்பி என்றான். அவள் போனில் பேசுபவரிடம், ஐ வில் கால் யூ லேட்டர் எனக்கூறி காலை கட் செய்தாள். அவள் ஆகாஷிடம் யாரு நீங்க எனக் கேட்டாள். என் நேம் சந்திரிக்கா, எதுக்கு குல்ஃபினு கூப்பிடுறீங்க என்றாள். ஆகாஷ் அவளிடம் என்ன தெரியலயா என்றான். சந்திரிக்கா தெரியவில்லையே என உதட்டை பிதுக்கினாள்.....
ஆகாஷ் நேத்து, குல்ஃபி, கீழே விழுந்து ஒரு பையன் என்றான். மித்ரன் அவனிடம் என்னா அவளுக்கு தமிழ் கற்றுத்தரீயா ஒழுங்கா பேசுடா என்றான். சந்திரிக்கா தான் எதுவும் புரியாமல் முழித்தாள். மித்ரன், நேத்து குல்பிய குடுடா என கத்திகிட்டு, ஒரு பையனை துரத்தி வரும் போது என் மேல மோதுனீங்களே என்றான். சந்திரிக்கா எப்போ என்பதுபோல் தீவிரமாக யோசித்தாள்....
மித்ரன், ஆகாஷிடம் மச்சி அவ உனக்கு வேணாம்டா என்றான். ஆகாஷ் ஏன் என கேட்டான். மித்ரன் இல்ல மோதிட்டேன்னு சொன்னதற்கு இப்படி யோசிக்கிறாள். அப்படி இவ எத்தனை பேர் மேல மோதுனான்னு தெரியலையே என்றான். ஆகாஷ் அப்படி எல்லாம் இருக்காது. நீ பேசாமல் இரு என்றான். ..
சந்திரிக்கா ஆங்... ஞாபகம் வந்திருச்சு. அந்த தியேட்டர் முன்னாடி தானா என்றாள். அவன் ஆமா என்று விட்டு, ஐ அம் ஆகாஷ். கோயம்புத்தூர்ல இன்ஜினியரிங் படிக்கிறேன் நீங்க என்றான். அவள் கை குலுக்கிவிட்டு சந்திரிக்கா சைக்காலஜி படிக்கிறேன் என்றாள். ஆகாஷ் சைக்காலஜியா? அப்போ உங்க நம்பர் குடுங்க என்றான். அவள் எதுக்கு எனக் கேட்டாள். ஆகாஷ் என் கூட இருக்கிறதுல பாதி பைத்தியமாதான் சுத்துதுங்க, அதை சரிபண்ண என்றான். அவள் சிரித்துவிட்டு சந்திரிக்கா சண்முகம் இதுதான் என் எஃப். பி ஐ டி என்றாள். அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே, அக்கா வாக்கா போகலாம் என்றான் அவளுடைய தம்பி. சந்திரிக்கா,சாரி ஆகாஷ் எனக்கு டைம் ஆயிடுச்சு நான் கிளம்புறேன் என்று ஸ்கூட்டியில் பறந்துவிட்டாள்.....
ஆகாஷ் மித்ரனை கட்டிப்பிடித்து, மச்சான் ரொம்ப தேங்க்ஸ்டா மச்சான். எனக்கு ரொம்ப பெரிய ஹெல்ப் பண்ணி இருக்க. எப்படிடா உனக்கு அந்த டைம்ல இப்படி ஒரு ஐடியா தோனுச்சு, நீ கிரேட் டா என்றான். மித்ரன் விட்டுரா விட்டுரா இதெல்லாம் எனக்கு ஜுஜுபி மேட்டர். இதுக்கெல்லாம் போய் என்ன இவ்வளவு பாராட்டுற எனக் கூறிக் கொண்டு திரும்பும்போது சுபா இவர்களைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்....
சுபா கோவத்துடன் உனக்கு மனசாட்சி இருக்கா டா? ஏண்டா ஒரு பேச்சுக்கு உயிரைக்கூட கொடுப்பேன் என்று சொன்னால் , என் கையை இப்படி உடைச்சிட்டியே! பாவி பயலே என திட்டி விட்டு, ஆகாஷிடம் அடக்கொடுமைகாரா? நீ எல்லாம் ஒரு அண்ணனா. உன் லவ்வுக்கு நீ தான்டா ரத்தம் சிந்தனும். ஏன்டா என் கையை உடைச்சிட்ட என்றாள். ஆகாஷ், இவன் கிட்ட ஹெல்ப் தான் கேட்டேன். இவன் உன் கைய உடைப்பானு எனக்கு சத்தியமா தெரியாது என்றான். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே ராஜ் சார் வந்துவிட அனைவரும் பேசாமல் பஸ்சில் ஏறினர். கோயம்புத்தூர் வரும்வரை சுபா இவர்களை முறைத்துக் கொண்டே வந்தாள். டூர் பஸ் காலேஜ் வாசலில் வந்து நின்றது. எல்லோரும் அவரவர் வண்டியில் வீட்டிற்கு கிளம்பி விட்டனர்.....

சுபா வீட்டிற்குள் நுழைந்ததும், சுபாவின் அப்பா தியாகராஜன் அவள் கையில் இருக்கும் காயத்தைப் பார்த்து என்ன ஆச்சுடா என்று பதறிவிட்டார். சுபா எல்லாம் நீங்கப்பெத்து வச்சிருக்கீங்களே ஒரு குரங்கு அது பார்த்த வேலை தான் என்றாள். சுபாவின் அம்மா யசோதாவும்
தியாகராஜனும் ஆகாஷை பார்க்க, அவன் என்ன சொல்வதென்று தெரியாமல் திருதிருவென முழித்தான். சுபாவிற்கு அவனை பார்த்து சிரிப்பு வந்துவிட்டது. சிரிப்பை அடக்கிக்கொண்டு, இவன் வாய் ஓயாமல் பேசி கொண்டே வந்ததை கவனித்துக் கொண்டே நான் தெரியாமல் ஜன்னல் கம்பியில் கையை விட்டு விட்டேன் என்றாள். ஆகாஷ் அவளை நன்றியோடு பார்த்தான். சுபா போன போது பொழைச்சு போன்னு விட்டேன் என்று பார்த்தாள்.....

இங்கே துருவ் உள்ளே நுழைந்தவுடன் பார்வதி அவன் கை கட்டை பார்த்துவிட்டு பதறிவிட்டார். அம்மா டேபிளில் தெரியாமல் கையை இடித்துக் கொண்டேன் என்று சமாளித்து விட்டு வேகமாக ஓடி விட்டான். அவன் பின்னாலேயே சென்று சித்துவும் அபியும் அவன் முன் நின்று அவனை பார்த்தனர். ஐயோ கண்டுபிடிச்சிருச்சுங்களோ என நினைத்துக்கொண்டு, என்ன ரெண்டு பேரும் இப்படி பார்க்கறீங்க என்றான்....
சித்து, டேய் அண்ணா என்ன நடக்குது இங்க. போகும்போது காதல் படத்தில் வரும் பரத் மாதிரி போயிட்டு, வரும்போது வாரணம் ஆயிரம் சூர்யா மாதிரி வந்து இருக்க, என்ன ஆச்சு என்றான். துருவ், அதெல்லாம் ஒண்ணும் இல்லையே! நான் எப்போவும் போலதான் இருக்கேன் என்றான். அபி, அப்படியா! டேய் சித்து எப்பவும் போல இருக்கவங்க தான் போகும்போது ப்ளூ கலர் பிரீப்கேஸ் கொண்டு போயிட்டு வரும்போது கருப்பு கலர் ப்ரீப்கேஸ் கொண்டு வருவாங்களாம் என்றாள். அவள் அதை திறக்க போக, துருவ் மைண்ட் வாய்ஸில் ஐயோ இதுங்ககிட்ட இப்படி பச்சயா மாட்டிக்கிட்டேனே! எப்படி சமாளிக்க போறேன்னு தெரியலையே நினைத்து விட்டு அவளை பிடித்து பிரீப்கேஸை எடுக்கவிடாமல் தடுத்தான்....
சித்துவும் அபியும் துருவ்வை முறைத்து, இப்போ நீயா சொல்ல போறியா? இல்ல நாங்க போய் அம்மா கிட்ட சொல்ல வா? என்றனர். துருவ், வேண்டாம் வேண்டாம் நானே சொல்கிறேன் என அனைத்தையும் கூறி முடித்தான்....
சித்து டேய் அண்ணா, சரியான ட்யூப் லைட்டா இருந்து இருக்கியேடா. இப்படி போய் பல்பு வாங்கி இருக்க என்று இருவரும் அவனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர். துருவ் ஏதோ தீவிரமாக யோசித்ததான். சித்து, என்னடா ஏதோ சீரியஸா யோசிக்கிற மாதிரி இருக்கு என்றான். துருவ், ஒன்னும் இல்லடா. இதை எப்படி அவ வீட்டுக்கு கொண்டுபோய் கொடுக்கிறதுன்னு தெரியல. அவுங்க அப்பா அம்மா என்ன நினைப்பாங்கனு யோசிக்கிறேன் என்றான்....

சித்தார்த், அட லூசு பயலே நீ ஏன் அவங்களுக்கு தெரியிற மாதிரி கொடுக்கிற. யாருக்கும் தெரியாம பின்கேட்டு வழியாகப் போய்க் கொடுத்துட்டு கொஞ்சம் ரொமான்ஸ் பண்ணிட்டு வா டா என்றான். துருவ் சித்துவை கட்டிப்பிடிச்சு தேங்க்ஸ்டா, செம ஐடியா குடுத்திருக்க என்றான். சித்தார்த், அடச்சீ இதெல்லாம் உனக்கே தெரிஞ்சு இருக்கணும். நீ எல்லாம் லவ் பண்ணி, சரி சரி அண்ணி போட்டோவை காட்டு என்றான். அபி அந்த போட்டோவை பார்த்து விட்டு வாவ் அண்ணி சூப்பரா இருக்காங்க. ஆனா எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு என்றாள். சித்து, சரி சரி இன்னும் கொஞ்ச நேரத்தில் அம்மாவுக்கு தெரியாம பின்னாடி வழியா கிளம்பு என்றான். துருவ் சரி என்றான்.....


அங்கே யாழினி ட்ராவலிங் டயர்டில் வந்து சாப்பிட்டு தூங்கிவிட்டாள். மித்ரன் மதுவுடன் ரொமான்ஸ் பண்ணி கொண்டு இருந்தான். துருவ் யாழினியின் வீட்டு சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்துவிட்டு, அப்பாடா ஒரு வழியா உள்ள வந்துட்டேன். என் மாமனாருக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை. எவ்வளவு பெரிய சுவத்தை கட்டி வச்சு இருக்காரு. இதுல ஏறி குதிக்கிறதுகுள்ள என் பாதி உயிரே போயிடுச்சு என்று விட்டு வீட்டிற்குள் நுழைந்து விட்டு, ஐயோ இவ்வளவு ரூம் இருக்கு இதுல எது என் பேபி ரூம்னு தெரியலையே என்று புலம்பினான்....
பின் ஒருநாள் யாழினி பேச்சு வழக்கில் தன்னுடைய ரூம் மாடியில் உள்ளது என கூறியது ஞாபகம் வந்தது. உடனே மாடிக்குச் சென்றான் யாருக்கும் தெரியாமல். மாடியில் எந்த ரூம்க்கு போவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க, யாரோ வரும் அரவம் கேட்க அருகில் இருந்த ரூம்க்குள் நுழைந்துவிட்டான். யாராவது வெளியே இருக்கிறார்களா எட்டிப் பார்த்துவிட்டு வெளியே போக எத்தனிக்கையில் துருவ் என யாரோ தன்னை அழைப்பது போல தோன்ற பின்னாடி திரும்பி பார்த்தான். யாழினி தூங்கி கொண்டிருந்தாள். யாழினிதான் தூக்கத்திலும். துருவ் என புலம்பிக் கொண்டிருந்தாள்....
துருவ் அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். பின் அவள் அருகில் சென்று யாழினி யாழினி என மெதுவாக அழைத்தான். யாழினி, தினமும் நான் தானே எழுந்து காப்பி போடுறேன். இன்னைக்கு நீ காப்பி போடு என்றாள். துருவ் தூக்கத்தில் கூட என் பேபிக்கு எப்போதுமே என் நினைப்பு தான் என் மேல அவ்வளவு லவ்வா என் பேபிக்கு என நினைத்தான். பின், யாழினி எழுந்து போ பேபி, எப்ப பார்த்தாலும் கனவில் வந்து டிஸ்டர்ப் பண்ற என்றாள். துருவ் அவள் கன்னத்தைக் கிள்ளி பேபி இது கனவல்ல நிஜம் தான் என்றான். அவள் வேகமாக எழுந்து, அப்போ என் கல்யாணம் என் குழந்தைங்க எல்லாம் கனவா என்றாள். நீ எப்ப பேபி இங்க வந்தா என்றாள். துருவ் இப்ப தான் வந்தேன் என்று விட்டு, உன்னை பாக்கணும் போல இருந்துச்சு அதான் வந்தேன் என்று அவளருகில் அமர்ந்துகொண்டான் ..
மித்ரன் மதுவிடம், செல்லக்குட்டி உன் அக்கா இவ்வளவு நேரம் தூங்கிட்டு இருக்கா. நான் போய் எழுப்பிவிட்டு வரேன் என்றான். துருவும் யாழினியும் பேசிக் கொண்டிருக்க, மித்ரன் கதவை திறக்க அந்த சத்தம் கேட்டு யாழினி பெட்டில் போர்வை போர்த்திபடுத்து கொண்டு, துருவை பெட்ஷீட்டில் மறைய சொன்னாள். மித்ரன் உள்ளே வரும் போது யாழினி தூங்குவது போல நடித்தாள். மித்ரன் யாழினியை பார்த்து, எப்படி தூங்குறா பாரு சரியான கும்பகர்ணி விட்டு, பங்கு எழுந்திரு என்று எழுப்பினான்...
யாழினி கண்ணை இருக்க மூடிக்கொண்டாள். மித்ரன் விடுவதாயில்லை, பங்கு பங்கு என அஞ்சலி ஸ்டைலில் எழுப்பினான். அப்போது தான் எழுவது போல எழுந்து, ஏன் இப்ப என்னை எழுப்புன என்றாள். இவ்வளவு நேரம் தூங்கிட்டு இருக்க வா சாப்பிட போகலாம் என்று அழைத்தான். பெட்டுக்குள் இருந்த துருவின் கை யாழினியின் இடையில் ஊர்ந்தது. யாழினி பதில் சொல்ல முடியாமல் நெளிந்து கொண்டிருந்தாள். மித்ரன் யாழினியை பார்த்து, என் பங்கு ஒரு மாதிரி நெளியுற என்றான். யாழினி, அதெல்லாம் ஒன்னும் இல்ல. நான் நல்லாத்தான் இருக்கேன் நீ போ நான் கொஞ்ச நேரத்தில் வருகிறேன் என்றாள். மித்ரன், என்ன பங்கு நீ சொன்னா கேக்கமாட்ட ஃபர்ஸ்ட் நீ பெட்டில் இருந்து எழுந்து விடு என்று கூறி விட்டு, பெட்ஷிட்டை உருவிவிட்டான். மித்ரன் வந்திருப்பதை கவனிக்காமல், தான் செய்துகொண்டிருந்த வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தான் துருவ். மித்ரன் வாயில் கை வைத்து விட்டான். துருவ், என்ன பேபி கொஞ்சம் ரொமான்ஸ் பண்ணலாம் என அவளை நெருங்கினான்....

மித்ரன் டேய் டேய் நான் இங்க ஒருத்தன் இருக்கேன். என்னடா பண்றீங்க என்றான். யாழினி துருவை தள்ளி விட்டு பெட்டில் இருந்து எழுந்துவிட்டாள். மித்ரன் டேய் நீங்க ரொம்ப ஓவரா போறீங்க. இது கொஞ்சம் கூட நல்ல இல்லை என்றான். துருவும் இது கொஞ்சம் கூட நல்லா இல்லை. இப்படி எங்களை நீ டிஸ்டர்ப் பண்ணுவது என்றான். மித்ரன் நீ எப்படிடா இங்க வந்த. எவ்வளவு நேரமா இங்க கூத்து அடிக்கிறீங்க என்றான். துருவ், அது இப்பதான் ஜஸ்ட் ஹாஃப்னவர்தான் என்று கூறிக்கொண்டிருக்கும் போதே, யாழினி யாழினி எனக்கு குரல் கொடுத்து கொண்டே வந்தார் கங்கா. யாழினி, பீதியடைந்து பங்கு என்னை எப்படியாவது காப்பாத்து பங்கு. அத்தை வறாங்க என்றாள். மித்ரன் நான் கெளம்புறேன். அதான் உன் ஆளு சொல்லிவிட்டானே நான் உங்களுக்கு டிஸ்டர்பன்ஸா இருக்கேன் என்றான். துருவ்,
டேய் மச்சான் சமயம் பார்த்து கவுத்துவிடுறியே! காப்பாத்து டா என்றான்.......
கலாட்டாக்கள் தொடரும்.......


வாசக பெருமக்களே எதத்னை பேர் கதையை வாசிக்கிறீங்க. ஆனால் ஒருத்தர் கூட கமெண்ட் பண்ண மாட்றீங்க. உங்க அபிப்ராயத்தை கமெண்ட்ல சொல்லுங்க செல்லங்களா.....
 

Janu murugan

Moderator
Staff member
Jun 10, 2020
42
4
8
19
ஹாய் பிரெண்ட்ஸ்,

நமது தளத்திற்கு புது வரவான ஜானு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..அவர்களின் "கல்யாண கலாட்டா" கதையின் பதிவுகள் இங்கு பதிவிடப்படும்.மித்ரன் காப்பாத்த முடியாது என மறுக்க துருவ் டேய் மச்சான் சமயம் பார்த்து கவுத்துவிட்றியே! காப்பாத்து டா என்றான். மித்ரன் சரி இரண்டு பேரும் விட்டா காலில் விழுந்து விடுவீங்க போல, நான் ஹெல்ப் பண்றேன் என்று வேகமாக வெளியே சென்றான். கரெக்டா கங்கா ரூம் வாசலுக்கு வந்துவிட்டார். அவர் மகனை பார்த்து இங்கே என்ன பண்ற என்றார். மித்ரன் அத நான் கேட்கணும். நீங்க என்ன பண்றீங்க? என்றான். நான் யாழினிய சாப்பிடக் கூப்பிட வந்தேன் என்றார். மித்ரன், நானும் அதுக்கு தான் வந்தேன். நீங்க போங்க, நான் கூப்பிட்டுட்டு வர்றேன் என்றான். கங்கா, ஏன் நான் கூப்பிட கூடாதா என்றார். மித்ரன் நான் அவ கிட்ட கொஞ்சம் பர்சனலா பேசணும் என்றான்....
கங்கா ஏன்டா 24 மணி நேரமும் அதான பண்றீங்க என்றாள். மித்ரன் அது வேற இது வேற. நீங்க போங்க மா என்றான். கங்கா, வர வர உன் போக்கே சரியில்லை. படிச்சு முடிச்சதும் முதல் வேலையா அண்ணன் கிட்ட சொல்லி உனக்கும் யாழினிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும் என்றார். மித்ரன் இஞ்சி தின்ன குரங்கு போல் நின்றான். நான் எதையோ நெனச்சு சொல்றேன். ஆனா, இவங்க என்னன்னா என்னை இந்த ராட்சசி கிட்ட மாட்டிவிட பிளான் பண்றாங்களே என்றான்.....

மது, அவனை முறைத்துக் கொண்டிருந்தாள். மித்ரன் செல்லக்குட்டி என ஆரம்பிக்கும் போதும் நிறுத்து, மது மாமா அவ கிட்ட அப்படி என்ன சீக்ரட் பேச போற நீ ? . எனக்கு தெரியும், நீ சொல்ல மாட்டேன்னு. நான் அவகிட்டேயே கேட்கிறேன் என்று மித்ரன் சொல்ல சொல்ல கேட்காமல் கதவை திறந்து விட்டாள். கதவை திறந்தவள் அப்படியே நின்றுவிட்டாள்.....
மித்ரன் மதுவை இழுத்துச் சென்றவன், நான் சொன்னேனே கேட்டியா? பேய் அறஞ்ச மாதிரி நிக்குற என்றான். மது, மாமா என ஆரம்பிக்கும் போது, மித்ரன் செல்லக்குட்டி அப்புறம் பேசிக்கலாம். பர்ஸ்ட் நான் போய் துருவ்வை பேக் பண்ணிட்டு வரேன் என்று யாழினி ரூம்க்கு சென்றான்.....

அங்கு துருவ் யாழினியை அணைத்துக் கொண்டு நின்றிருந்தான். மித்ரன் போதும்டா உங்க ரொமான்ஸ். அடுத்து யாராவது வரதுக்குள்ள தயவுசெய்து கிளம்பிடுடா என்றான். துருவ் கிளம்ப தயாராக, யாழினி துருவ்வை அணைத்துக் கொண்டு போகனுமா பேபி என்றாள். துருவ் அதை பற்றிதான் யோசிக்கிறேன் பேபி. இவன் தான் கிளம்ப சொல்றான் என்றான். மித்ரன் நீங்க இப்படியே நிக்கிறது மிஸ்டர் கருணாகரன் பார்த்தா உங்கள வீட்டை விட்டு வெளியே துறத்தி விடுவார் என்றான். யாழினி தந்தையின் பெயரைக் கேட்டவுடன் ஷாக்காகி, துருவ்விடம் இருந்து விலகி, பேபி நாம நாளைக்கு மீட் பண்ணலாம் என்றாள். மித்ரன் அவன் கையை பிடித்து இழுத்து செல்ல, துருவ் ஒரு நிமிஷம் மட்டும் என்றான். மித்ரன் இப்ப என்னடா என்றான் கடுப்பாகி. துருவ் வந்த வேலையை மறந்துட்டேன் டா. என்னோட ப்ரீப்கேஸை மாற்றி எடுத்துட்டு போயிட்டேன் என்றான். யாழினி கப்போர்ட்ல தான் இருக்கு என்று எடுத்துக் கொடுத்தாள். மித்ரன் ஒரு வழியாக துருவ்வை சுவர் ஏற்றிவிட்டு அனுப்பிட்டான். அப்பாடா ஒரு வழியா பிரச்சினை முடிச்சிருச்சு என அனைவரையும் சாப்பிட அழைத்தான்.....

மறுநாள் வழக்கம்போல் எல்லோரும் கல்லூரி கேன்டீனில் உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருந்தனர். யாழினியும் துருவ்வும் அருகருகே உட்கார்ந்து ரொமான்ஸ் பண்ணிகொண்டு இருந்தனர். மித்ரன் நேற்று நடந்தவற்றை கூறி துருவ்வையும் யாழினியையும் கழுவிக் கழுவி ஊற்றிக் கொண்டிருந்தான்....
ஹரி, என்னடா மச்சான் கிளாஸ்க்கு போகாம இங்கே உட்கார்ந்திருக்க என்றான். மித்ரன், அது ஒன்னும் இல்ல மச்சான், ரெண்டு பேரை போட்டு தள்ள பிளான் பண்ணிட்டு இருக்கோம் என்றான். ஹரி அதிர்ச்சியாகி யாரு மச்சான் என்றான். மித்ரன், வேற யாரை இதுங்க ரெண்டையும்தான் என்றான். ஹரி, ஏன் என்று கேட்க, மித்ரன் முதலில் இருந்து மறுபடியும் கூறிக் கொண்டிருந்தான்....

அப்போது யாழினியும் துருவ்வும் ஏன் எல்லாரும் கிளாசுக்கு போகலையா? டைமாயிடுச்சு, உங்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை என்று விட்டு வா பேபி நாம போகலாம் என இருவரும் கைகோர்த்து நடந்தனர். மித்ரன் இதைப்பார்த்து தலையில் அடித்துக்கொண்டு, இதுங்க அலம்பல் தாங்க முடியலை. வாங்க க்ளாஸுக்கு போகலாம் என எல்லோரும் புறப்பட்டனர்.....
க்ளாஸுக்கு சென்ற யாழினியும் துருவ்வும் வாசலில் நின்றிருந்ததைப் பார்த்து, மித்ரன் ஏன் உள்ள போகாமல் இங்கேயே நிக்கிறீங்க என்று கேட்டான். யாழினி, பங்கு கதவு சாத்தியிருக்கு, கிளாஸ் ரூம் ஒரே இருட்டா இருக்கு என்றாள். மித்ரன் பங்கு கதவு சும்மாதான் சாத்தி இருக்கு. லாக் பண்ணல என்று விட்டு கதவை திறந்து உள்ளே போனான்....

மித்ரன், உள்ளே போனவுடன் ஹே.... என்ற சத்தத்துடன் லைட் ஆன் ஆனது. மேலே இருந்து பூக்கள் மித்ரன் மேலே விழுந்தது. கிளாஸ்ல உள்ள எல்லோரும் மித்ரனுக்கு மாலை அணிவித்து, தேங்ஸ்டா மச்சான் என்றனர். மணி வந்து நீ எங்க குலதெய்வம் டா என்றான். மற்றொருவன் நீ எனக்கு கண்கண்ட தெய்வம்டா என்றான். மித்ரன் இதெல்லாம் எதுக்கு எனப் புரியாமல் முழித்து எதுக்குடா இந்த மாலை மரியாதை எல்லாம் என்றான். மணி, எல்லாம் நீ பண்ண நல்ல காரியத்துக்கு தான் என்றான்...
மித்ரன், நான் ஒரு நாளைக்கு 1000 நல்ல காரியம் பண்றேன். அதுல எதுக்கு இந்த மரியாதைனு தெரிஞ்சுக்கலாமா டா என்றான். ஒருவன் வேகமாக முன்வந்து நான் சொல்றேன் என்று கூறத் தொடங்கினான். மித்து, நீதான ராதா மேமையும் ராஜ் சாரையும் கோர்த்துவிட்ட. அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்மாம் டா . நாளைக்கு என்கேஜ்மென்ட் அதனால ராஜ் சார் ஒரு மாசம் லீவு எடுத்திருக்காரு. உன்னால் தான் எங்களுக்கு விடுதலை கிடைச்சிருக்கு. ஒன் மந்த் அப்புறம் அவர் திரும்பி வருவதற்குள் இந்த செமஸ்டர் முடிஞ்சிடும் என உற்சாகமாக கூறினான்...

மித்ரனுக்கு மாமா வேலை பார்த்ததுக்கு இவ்வளவு மரியாதை என்றாகி விட்டது. யாழினி, டேய் மாமா வேலையை எப்படி பார்த்த என்றாள். மித்ரன் யாழினியை முறைத்தான். யாழினி, டேய் மாமா இந்த வேலை எப்ப பார்த்தனு கேட்க வந்தேன்.
பங்கு, டங்க் ஸ்லிப் ஆயிடுச்சு என்றாள்.....

மித்ரன் பல்லை கடித்துக்கொண்டு இந்த வேலையை நான் தான் பார்த்தேன்னு உங்ககிட்ட யார் சொன்னது என்றான். மணி என்ன மச்சான், இப்படி கேட்டுட்ட எல்லாத்தையும் எங்க கிட்ட சொன்னது நம்ம ஆகாஷ் தான் என்றான். மித்ரன் கொலை வெறியோடு அவனை தேடிக் கொண்டிருந்தான். ஆகாஷ் கம்பி நீட்டி விட்டான். இங்கே ராம் மித்ரனிடம் மச்சான் நான் பவி பின்னாடி ரெண்டு வருஷமா சுத்திட்டு இருக்கேன். ஆனால் அவ கண்டுக்கவே மாட்டுறாள். நீதான் எப்படியாவது எங்களை சேர்த்து வைக்கனும் என்றான் மித்ரன் டேய் நானே கொலை வெறியா இருக்கேன் போய்டு என்று விட்டு வேகமாக வெளியேறினான்....

மித்ரன் கோபமாக இருக்க, யாழினியும் திவ்யாவும் அவனை பார்த்து சிரிச்சுட்டு இருந்துச்சுங்க. யாழினி, பங்கு உன்கிட்ட லேண்ட் புரோக்கர் நம்பர் இருக்கா? என திவ்யாவிடம் கேட்டாள். திவ்யா இல்ல பங்கு, எதுக்கு கேக்குற என்றாள். யாழினி, அதுவா நாளைக்கு இடம் பார்த்து ஒரு கம்பெனி ஆரம்பிக்க வேணாமா? நல்லா கல்லா கட்டலாம் என ஹைபை அடித்துக்கொண்டனர். மித்ரன் அவர்களை கொலை வெறியோடு முறைத்துக் கொண்டிருந்தான்......


அப்போது பிரபு அங்கு வந்தான். பிரபு அங்கு வருவதை பார்த்த சுபா, பிரபு சீனியர் வராரு என்று உற்சாகமாக கூறினாள். திவ்யா அவர் வந்தா நீ ஏன் இவ்ளோ ஹைபர் ஆக்டிவ் ஆகுற ஒன்னும் சரியில்லையே என்றாள். சுபா நான் ஒன்னும் ஹைபர் ஆக்டிவா இல்லை. நான் சும்மா சொன்னேன் அவ்வளவுதான் என முகத்தை திருப்பிக் கொண்டாள். பிரபு அங்கு வர நடந்த சம்பவத்தை மறந்து எல்லோரும் சகஜமாக பேச தொடங்கினர். சுபா பிரபுவையே கவனித்துக் கொண்டிருப்பது திவ்யா கவனித்தாள். இருக்கட்டும் அப்புறம் கேட்டுக்கலாம் என்று விட்டுவிட்டாள். பிரபு சென்றவுடன் ஹரி எல்லோரிடமும் அதான் கிளாஸ் இல்லையே வாங்க வெளியே எங்காவது போகலாம் என்றான். எல்லோரும் சரி என்று விடவே கிளம்பினர்.....

அவர்கள் நடந்து கொண்டிருக்கும்போதே சுபா ஆகாஷ் ஒரு மரத்தடியில் அமர்ந்து யாரிடமோ போனில் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டாள். உடனே மித்ரனை கூப்பிட்டு, உன் எதிரி அங்கு உட்கார்ந்து கடலை போட்டுட்டு இருக்கான் பாரு. போ போய் போட்டுத் தள்ளு என்றாள்..

மித்ரன் தேங்க்ஸ் பங்கு என கூறிவிட்டு பின்னாடி வழியாகச் சென்று ஆகாஷ் கழுத்தை நெரிக்க, அவன் ஐயோ கொலை கொலை காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று கத்தினான். சுபா அதை பார்த்து சிரித்தாள். ஆகாஷ் அடியே நீ எல்லாம் ஒரு தங்கச்சியா? என்ன இவன் கொல்லப் பார்க்கிறான். நீ பார்த்து சிரிச்சுட்டு இருக்க என்று திட்டினான். சுபா, நீ மட்டும் என் கையை உடைத்து விட்டு சிரிச்சிட்டு தானே இருந்த. டிட் ஃபார் டேட் என மித்ரன் உடன் ஹைபை அடித்துக் கொண்டாள். சுபா, விடு பங்கு, செத்துற போறான். ஆயிரம் இருந்தாலும் அண்ணனா வேற போயிட்டான் என்றாள். மித்ரன் அவனை விட்டு விட்டான். சுபா, ஆகாஷ் யார்கிட்ட சிரிச்சு சிரிச்சு போன் பேசிட்டு இருந்த என்றாள். ஆகாஷ் சிரித்துக்கொண்டே, என் ஆள் கிட்ட என்றான். ஹரி , மச்சான் அதுக்குள்ள நம்பர் வாங்கி கடலை போட ஆரம்பிச்சிட்ட! தேறிட்டியா நீ என்றான்......
இப்படியே நாள் வேகமாக போயிட்டு இருந்துச்சு. நம்ம வானரங்களுக்கு செமஸ்டர் எக்ஸாம் வந்ததுனால எல்லோரும் எக்ஸாமுக்கு சின்சியரா படிச்சிட்டு இருந்தாங்க. எக்ஸாம் முடிஞ்சு நம்ம வானரங்க வழக்கம் போல கதை பேசிட்டு இருந்தாங்க. பிரபு இந்த செமஸ்டரோடு காலேஜ் முடித்து போறான். ஃபேர்வேல் ஸ்டார்ட் ஆயிடுச்சு. எல்லோரும் ஆளுக்கொரு வேலையாக சுத்திட்டு இருந்தாங்க. வேலை நேரம் போக எல்லாரும் உக்காந்து பேசிட்டு இருந்தாங்க. எல்லோரும் சுவாரஸ்யமா நிறைய பேசிட்டு இருந்தாங்க......


சுபா மட்டும் சோகமாகவே ஏதும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்து இருந்தாள். திவ்யா அதை பார்த்துவிட்டு ஏன் பங்கு இவ்வளவு சோகமாக இருக்க என்றாள். சுபா முகத்தை நார்மலாக வைத்துக் கொண்டு அதெல்லாம் ஒன்னும் இல்ல பங்கு. நான் நல்லாத்தான் இருக்கேன் என்றாள். மித்ரன் ஆகாஷை இடித்து, ஏய் எருமை 24 மணி நேரமும் அவ கூட தானே இருக்க. அவள் ஏன் இப்படி சோகமா இருக்கா சொல்லு என்றான். ஆகாஷ் இல்ல பங்கு ஃபேர்வெல் வேலைல கொஞ்ச நேரம் பிஸியா இருக்கேன். அதனால எனக்கு எதுவும் தெரியல என்றான். யாழினி சுபாவிடம், பங்கு இப்ப சொல்ல போறியா இல்லையா என்று மிரட்டினாள்....


சுபா வாயைத் திறந்து சரி சொல்றேன் என கூறும் போது அவள் போன் சினுங்கியது. அவள் அதை எடுக்கப் போகும் போது, மித்ரன் போனை புடுங்கி அவசரத்தில் ஆப் செய்வதற்கு பதிலாக ஆன் செய்து டேபிள் மேல் வைத்து விட்டு, அப்புறம் போன் பேசு, இப்ப சொல்லு என்றான். சுபா, அந்த ஐடி டிபார்ட்மெண்ட் பையன் கிருஷ்ணா என குட்டச்சி குட்டச்சினு எல்லார் முன்னாடியும் கலாய்ச்சிட்டான் என்றாள் சோகமாக. மித்ரன் ஆகாஷை தலையில் தட்டி, நீ எல்லாம் ஒரு அண்ணனாடா. வாடா அவன ஒரு கை பார்த்துவிட்டு வரலாம் என்று அனைவரும் கிளம்பினர். திவ்யா பங்கு அவனைச் சும்மா விடக்கூடாது அவனை மண்டையில் நாலு தட்டு தட்டி அபூர்வ சகோதரர்கள் அப்பு மாதிரி ஆக்கணும் என்றாள். நம்ம வானரங்க அவனை தேடி அவன் டிபார்ட்மென்ட் செல்லும்போது கிரவுண்டில் ஒரே கூட்டமாக இருந்தது. நம் வானரங்க நடந்தது என்னன்னு பார்த்துட்டு அப்படியே ஷாக்காகி, ஓரு நிமிடம் கழித்து திவ்யா, பங்கு உனக்கு ஞாபகம் இருக்கா? அன்னைக்கு கூட சுபாக்காக சண்டை போட போகும் போது துருவ் வந்து அடிச்சான். இப்ப பிரபு அடிச்சுட்டு இருக்கான். அதெப்படி பங்கு நாம இவளுக்காக சண்டை போட கிளம்பறப்ப எல்லாம், யாராவது இடையில் வந்து நம்மள ஆடியன்ஸை மாத்திட்டறாங்க என்று விட்டு சுபாவை பார்த்தாள்.....

சுபா மெய்மறந்து பிரபுவையே பார்த்துக் கொண்டிருந்தாள். யாழினி சுபாவிடம் , பங்கு அன்னைக்கு உனக்காக துருவ் சண்டை போட்டான்னா அவன் உனக்கு அண்ணன். அப்ப பிரபு உனக்கு என சொல்ல போகும் , முன் சுபா காதில் கையை வைத்து அண்ணானு மட்டும் சொல்லிடாத என்றாள். அங்கே அதேநேரம் பிரபு கிருஷ்ணாவை அடித்து என் சுபாவையே நீ கிண்டல் பண்றியா ? என்று அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான்....


அவன் அண்ணா இனிமேல் இப்படி பண்ணமாட்டேன் சாரி அண்ணா என்றுவிட்டு சுபாவிடம் சாரி சுபா என மன்னிப்பு கேட்டு விட்டு ஓடிவிட்டான். இதையெல்லாம் பார்த்த நம்ம வானர கூட்டம் ஓடி போய் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து சுபாவை முறைக்க சுபா பிரபு பின்னாடி ஒளிஞ்சிகிட்டாள். திவ்யா இந்த பூனையும் பால் குடிக்குமான்னு மாதிரி இருந்துட்டு எப்படி புல்மீல்ஸ்ஸே கட்டியிருக்க என்றாள். மித்ரன் ஆகாஷ் பார்த்து அட கூமுட்டை பயலே 24 மணி நேரமும் அவ கூட தானே இருக்க. உனக்கு தெரியாதா? இது என்றான். ஆகாஷ் இல்லை என உதட்டை பிதுக்கினான். மித்ரன், அவனைப் பார்த்து காறித் துப்பினான்....

யாழினி, பிரபுவிடம் சீனியர் நீங்க எப்படி இவ கூட கமிட் ஆனீங்க என்றாள். சுபா இடையில் வந்து நான் தான் அவர்கிட்ட போய் ப்ரொபோஸ் பண்ணேன். ரெசார்ட்டில் அவர் பேசினப்பவே நான் பிளாட் ஆகிட்டேன் என்றாள். மித்ரன் நடத்துங்க நடத்துங்க நீதான் நல்ல பிள்ளையா சிங்கிளா இருக்கேன்னு நெனச்சேன். நீ கெட்டு போயிட்டியா? என்றான். பின் சீனியர் சுபா எங்ககிட்ட தான சொன்னாள். உங்களுக்கு எப்படி தெரிந்தது என்றான். பிரபு சுபாவின் போனை புடுங்கி இங்க பாரு நீ என் கால் கட் பண்றதுக்கு பதிலா அட்டென்ட் பண்ணிடா என்றான்.


மித்ரன் சுபாவை பார்த்து, இப்ப நான் கால் அட்டென்ட் பண்ணலனா இப்ப கூட தெரிஞ்சு இருக்காது அப்படி தான பங்கு என்றான். சுபா, பங்கு நாங்கள் பேர்வெல் அன்னைக்கு உன்கிட்ட சொல்லலாம்னு நெனச்சேன் என்றாள். பிரபு என்ன எல்லாரும் என் மேகிய ஏன் திட்டுறீங்க என்றான். மித்ரன் என்னது மேகியா? இது எப்போதிலிருந்து என்றான். சுபா, பிரபு வாயை திறக்க வேண்டாம் சொல்லாதீங்க என்றாள். பிரபு நான் சொல்ல மாட்டேன் என் மேகி சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டாள். அவகிட்டே கேட்டுக்கோங்க என்றான். மித்ரன், அது குள்ள அவ கண்ட்ரோல்க்கு போய் விட்டீங்களா என்றான். பிரபு சிரித்துவிட்டு, எனக்கு வேலை இருக்கு நான் கிளம்புறேன் என்று கூறிவிட்டு சுபாவிடம் கண்களாலே விடைபெற்றுக் கிளம்பினான். எல்லோரும் சுபாவை கேள்வி கேட்டுக் துளைத்துக் கொண்டிருந்தனர். ஆகாஷ் எனக்கு என்ன என்பது போல இருந்தான். சுபா, அவர்களிடம் உங்க கேள்விக்கு அப்புறம் பதில் சொல்றேன். பர்ஸ்ட் என்னோட பாசமலர சரி பண்றேன் என்று ஆகாஷிடம் சென்றாள். ஆகாஷ் முகத்தை திருப்பிக் கொண்டான். சுபா அண்ணா சாரிடா நான் உன்கிட்ட சொல்லலாம்னு தான் இருந்தேன். ஆனா நீயே கண்டு பிடிச்சிட்ட என்றாள். சுபா, டேய் அண்ணா கோவிச்சுக்காதடா! நானே அப்பா அம்மா கிட்ட பேசி உனக்கும் சந்திரிக்கா அண்ணிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்றாள். ஆகாஷ் சந்தோஷமாக உண்மையாக சுபி என்றான். சுபா ம்ம் என தலையை ஆட்டினாள். ஆகாஷ் அவளை கட்டிக் கொண்டான். அப்புறம் என்ன அங்க ஒரு பாசமலர் படமே ஓடுச்சு......

ஃபேர்வெல் டே வந்தது. எல்லாரும் பிரபுவை ஓட்டிய கொன்னுட்டாங்க. யாழினியும் துருவ்வும் ஜோடி டான்ஸ் ஆடுனாங்க. எல்லோரும் அவங்க டான்ஸ் சூப்பரா இருந்துச்சுனு பாராட்டு மழை பொழிஞ்சாங்க.......

நம்ம வானரப் படைகள் பைனல் இயர் வந்துட்டாங்க. எல்லா ஃபர்ஸ்ட் இயர் ஸ்டுடன்ஸ கூப்பிட்டு ராகிங் பண்ணிட்டு இருந்தாங்க. ஆகாஷ் போன் பேசிக் கொண்டிருந்தவன் அப்படியா சூப்பர் என கத்திவிட்டு போனை வைத்தவன், மற்றவர்களிடம் இன்னைக்கு என்னோட ட்ரீட் வாங்க எல்லோரும் கேண்டீனுக்கு போகலாம் என்றான். திவ்யா வாங்க போலாம் என வேகமாக நடந்தாள். மித்ரன் அவள் தலையில் ஒரு கொட்டு கொட்டி, சோறு போட்டா போதும் சோழவந்தான் வரை போயிடுவியே. அதை பத்தி எதுக்குனு கேக்க மாட்டியா? என்றான். திவ்யா சாரி பங்கு மறந்துவிட்டேன் என்று விட்டு ஆகாஷிடம் சொல்லு பங்கு என்ன விஷயம் என்றாள்.......

ஆகாஷ் அது என் ஆளு பிஜி பண்ண நம்ம ஊர்ல ஒரு காலேஜ்ல ஜாயின் பண்ண போறாளாம் என்றான் குஷியாக. மித்ரன் நல்லா என்ஜாய் பண்ணு பங்கு என்றான். யாழினியும் மித்ரனும் காலேஜ் முடிஞ்சு வீட்டுக்கு வந்துட்டாங்க. யாழினி, ரூம்க்கு சென்று கொண்டிருந்தாள். ரூம்க்கு செல்லும்போது சந்துரு ரூம் திறந்து இருந்தது. அவன் கண்ணாடி முன்னாடி நின்று தானாக பேசி சிரித்துக் கொண்டு இருந்ததை பார்த்துவிட்டாள். யாழினி ஓடிச்சென்று மற்றவர்களையும் அழைத்து வந்து அவன் சிரித்துக் கொண்டிருப்பதை காட்டினாள். ஒவ்வொருவராக கதவின் இடுக்கில் வழியில் எட்டிப் பார்த்தனர். சூர்யா இதைப் பார்த்துவிட்டு ஐயோ என் அண்ணனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. தனியா பேசிட்டு இருக்கானே என புலம்பினான். மித்ரன் அவன் தலையில் கொட்டி அவனுக்கு பைத்தியம்லாம் பிடிக்கலை என்று விட்டு, அவன் கிட்டே கேட்கலாம் என்று ரூம்க்குள் நுழைந்து அனைவரும் வரிசையாக நின்று கைகளை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தனர்....
கலாட்டாக்கள் தொடரும்.....
 

Janu murugan

Moderator
Staff member
Jun 10, 2020
42
4
8
19
ஹாய் பிரெண்ட்ஸ்,

நமது தளத்திற்கு புது வரவான ஜானு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..அவர்களின் "கல்யாண கலாட்டா" கதையின் பதிவுகள் இங்கு பதிவிடப்படும்.

அனைவரும் ரூம்க்குள் சென்று வரிசையாக கைகளை கட்டிக்கொண்டு நின்று சந்துருவை வேடிக்கை பார்த்தனர். சந்துரு ஆள் வரும் அரவம் கேட்டு திரும்பிப் பார்த்தான். சந்துரு அவர்களைப் பார்த்து, ஏன்டா கோவில்ல சுண்டல் வாங்க நிக்கிற மாதிரி நிக்கிறீங்க என்றான். மித்ரன், அது ஒன்னும் இல்ல சந்துரு, என் பிரண்டு ஒருத்தனுக்கு சின்ன ப்ராப்ளம் அதான் உன்கிட்ட யோசனை கேக்கலாம்னு வந்தேன். அப்போ இதுங்களும் தொத்திக்கிட்டு வந்துருச்சுங்க என்றான் ....
சந்துரு சொல்லுடா என்ன பிரச்சனை என்றான். மித்ரன் அது ஒன்னும் இல்லடா. என் ஃப்ரண்டு சிவா தெரியும்ல, அவன் கண்ணாடி முன் நின்று தனக்குத்தானே பேசி சிரிச்சுக்கிட்டே இருக்கிறதா அவங்க அம்மா என்கிட்ட ரொம்ப பீல் பண்றாங்க என்றான். சந்துரு மைண்ட் வாய்ஸில், ஐயோ ஒருவேளை நம்ம சிரிக்கிறது பார்த்துட்டு தான் போட்டு வாங்குகிறார்களோ? என்ன ஆனாலும் இதுங்க கிட்ட சொல்லவே கூடாது என்று நினைத்துவிட்டு, அப்படியா? என்றான். சந்துரு, இது தான் பைத்தியம் ஆகுறதுக்கு பஸ்ட் ஸ்டேஜ். அவனை உடனடியாக ஹாஸ்பிட்டலில் சேர்க்க சொல்லுடா என்றான். மித்ரன் ஹாஸ்பிட்டல் சேர்க்கிறது தான் ஒரே வழியா? வேற வழியே இல்லையா? என்றான். சந்துரு வேகமாக தலையை இடவலமாக ஆட்டி இல்லடா என்றான். மித்ரன், உடனே வேற வழியே இல்லையாம்டா. இவனை உடனே ஹாஸ்பிட்டலில் சேர்க்கனும் என்று, தூங்குங்க டா என்று சொல்லி அவனை ஒரே குண்டுகட்டாக தூக்கினர். சந்துரு விடுங்கடா விடுங்கடா சொல்லிட்றேன் என்றான். உடனே எல்லோரும் அவனை இறக்கிவிட்டு அவனைச் சுற்றி நின்று சொல்லு என்றனர்....

மித்ரனும் யாழினியும் சொல்லு யார் அந்த பொண்ணு என்றனர் கோரசாக. சந்த்ரு எப்படி டா என்றான். மித்ரன் நீ அப்புறம் ஷாக்காகிகோ, முதல்ல மேட்டருக்கு வா என்றான். சந்துரு அதுவந்து அதுவந்து என்னை இழுக்க, மித்ரன் இன்னைக்கு சொல்ல மாட்டான் போல. எல்லோரும் போயிட்டு நாளைக்கு வரலாம் என்றான். சந்துரு இருங்க இருங்க நான் சொல்லிட்றேன்.....

சந்த்ரு, நான் காலையில ஹாஸ்பிடல்ல என் கேபின்ல உட்கார்ந்து இருந்தேன். அப்போ என்ன காப்பாத்துங்க காப்பாத்துங்க யாரோ கத்துற மாதிரி இருந்துச்சு. நான் என்னமோ ஏதோன்னு பயந்து ஓடிப் போய் பார்த்தா, ஒரு பெண்ணு பெட்ல ஏறி நின்னுகிட்டு காப்பாத்துங்க என்னை காப்பாத்துங்க என கலாட்டா பண்ணிட்டு இருந்துச்சு. நான் என்னன்னு விசாரிச்சப்போ, அந்த பொண்ணு ஃபிவருக்கு ட்ரீட்மென்ட் பார்க்க வந்து, இன்ஜெக்க்ஷன் போடுவதற்கு பயந்து இந்த அலப்பறை பண்ணிட்டு இருக்காள் என்றார்கள். சந்த்ருவிற்கு அவள் செய்கையை பார்த்து சிரிப்பு வந்தது. அவள் அவனுக்கு வளர்ந்த குழந்தையாக தெரிந்தாள். அவன் செய்கையை ரசித்து கொண்டிருந்தான்.....

அருகில் இருந்த நர்ஸ் டாக்டர் என அழைக்க நினைவு திரும்பினான். அவன் வேகமாக சென்று அந்த பெண்ணிடம் கடுமையாக, ஹாஸ்பிட்டல்ல சத்தம்போடக்கூடாது, கீழே இறங்கு என்றான். இவன் அதட்டலில் அவள் பெட்டில் இருந்து கீழே இறங்கினாள். சந்துரு பார்க்க மெச்சூர்டா இருக்கீங்க. ஆனால் இப்படி குழந்தைத்தனமாக பண்றீங்க. இந்த வயசுல இன்ஜெக்ஷன் போட இப்படி பயப்படுறீங்க. அந்த நர்சிடம் இன்ஜெக்க்ஷனை எடுங்க என வாங்கினான்....

அந்தப் பெண் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு, டாக்டர் கண்டிப்பா இண்ஜெக்க்ஷன் போட்டு தான் ஆகனுமா என்றாள். சந்துரு ஆமா போட்டுத்தான் ஆகணும் என்றான். அந்தப் பெண் அப்போ வலிக்காம போடுங்க டாக்டர் என கூறினாள். சந்துரு சிரித்துக்கொண்டே நீங்க அந்த பக்கம் திரும்பி, நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்க என்றான்
அவள் திரும்பி கொண்டு கையை நீட்டினாள். சந்துரு அவளிடம் , உங்க நேம் என்ன என்றான். அந்தப்பெண் என்னுடைய பெயர் வர்ஷினி என்றாள். சந்துரு, நீங்க என்ன பண்றீங்க என்றான். வர்ஷினி நான் இன்ஜினியரிங் படிக்ககிறேன் என்றாள். சந்துரு இன்ஜெக்ஷன் போட்டாச்சு திரும்புங்க என்றான். வர்ஷினி வேகமாக திரும்பி போட்டாச்சா எனக்கு வலிக்கவே இல்லை என்று குதூகலித்து, அருகில் இருந்தவனிடம் வருண் எனக்கு வலிக்கவே இல்லை என்றாள்....

சந்துரு அவளை பார்த்து சிரித்துவிட்டு சில மருந்துகளை எழுதிக் கொடுத்தான். அவள் செல்லும்போது சந்துருவிடம் டாக்டர் ஒரு சின்ன சஜ்ஜஷன். உங்க பேஸ்க்கு சீரியஸ் டயலாக் ஒத்து வரலை. நீங்க கோபமாக பேசும்போது எனக்கு சிரிப்புதான் வந்துச்சு எனக்கூறி ஓடிவிட்டாள், என்று கூறி முடித்தான்....


மித்ரன் சந்துருவிடம் அந்த பொண்ணு போட்டோ காட்டு டா என்றான். சந்துரு அது என்கிட்ட இல்ல என்றான். மித்ரன் என்கிட்டேயே நடிக்காதடா. நீ இந்நேரம் அவ போன் நம்பரையே கலெக்ட் பண்ணி இருப்ப என்றான். சந்துரு சிரித்துக்கொண்டே கொண்டே அந்த போட்டோவை காட்டினான். மித்ரனும் யாழினியும் அந்த போட்டோவை பார்த்து ஷாக் ஆகி நின்றனர். சந்துரு அவர்களைப் பார்த்து திரும்பி, ஏண்டா நல்லா இல்லையா என்றான். இருவரும் ஒன்று சேர்ந்து இல்லை இந்த பொண்ணு எங்க ஜூனியர் என்றனர். சந்த்ருவிற்கு மகிழ்ச்சி தாளவில்லை என்னது உங்க ஜூனியரா? அப்போ நாளைக்கு அவ டீடெயில்ஸ் வேணும் என்றான்....

மித்ரன் செய்ய முடியாது, என்ன பண்ணுவ? என்றான். சந்துரு என்ன மித்ரன் எனக்காக செய்ய மாட்டியா என்றான் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு. மித்ரன் சரி சரி, விட்டா அழுதுருவ போல. பின் மித்ரன் அந்த பொண்ணு உனக்கு செட் ஆகும்னு எனக்கு தோணல. ஏன்னா அவ கொஞ்சம் வாயாடி. நீ வேற சைலன்டா இருக்கே அதான் என்றான். சந்துரு அதெல்லாம் நான் பாத்துக்குறேன் இந்த உதவி மட்டும் பண்ணுடா என்றான்...மறுநாள் காலேஜில் நம்ம வானரப் படைகள் காலேஜ் கேட் கிட்ட நின்னு வர ஜூனியர கூப்பிட்டு ராகிங் பண்ணிட்டு இருந்தாங்க. திவ்யா யாழினியிடம் பங்கு உன் அண்ணி வர்றா என்றாள். மித்ரன் அவளைப் பார்த்து இங்க வா என அழைத்தான். வர்ஷினி அங்கு வந்து, சொல்லுங்க சீனியர், என்ன வேணும்? என்றாள். மித்ரன் ஒரு லட்சம் பணம் வேணும் என்றான். வர்ஷினி அச்சச்சோ அவ்ளோ பணம் எடுத்துட்டு வரலையே நான் போய் ஏடிஎம்-ல் இருந்து எடுத்துட்டு வரவா என்று கேட்டு விட்டு திரும்பி நடந்தாள். மித்ரன் ஏய் எனக் கூப்பிட்டு என்ன எங்களுக்கே லந்து கொடுக்கிறாயா? என்றான். வர்ஷினி இல்ல சீனியர் உங்களை போய் நான் கலாய்ப்பனா? நீங்க எவ்ளோ பெரிய ஆளு என்றாள். யாழினியிடம் திவ்யா, பங்கு சந்துரு அண்ணா பாவம் பங்கு. இவளை கட்டிக்கிட்டு என்ன பாடு பட போறாரோ என்றாள். மித்ரன் அவளிடம் உன் பெயர் என்ன எனக்கேட்டான். அவள் வாயைத் திறக்குமுன் வர்ஷினி என அருகிலிருந்த வருண் சொன்னான். மித்ரன் நான் உன்னைய கேட்கலை. அவளை தானே கேட்டேன். பேசாம இரு இல்லன்னா சட்டை இல்லாம கிரவுண்டை சுத்தி வர வைத்து விடுவேன் என்றான். வருண் வாயை மூடிக்கொண்டான்.....

மித்ரன் வர்ஷினியிடம், சொல்லு உன் பெயரென்ன என்றான். அவள் வர்ஷினி என்றாள். மித்ரன் உன் கூட பிறந்தவங்க என்றான். வர்ஷினி ஒரு தங்கச்சி, அவ பேரு தர்ஷினி ஸ்கூல் படிக்கிறாள் என்றாள். மித்ரன் வர்ஷினி தர்ஷினி உங்க அப்பா நல்லாத்தான் பேரு வச்சு இருக்காரு என்றான். பின் உன் அப்பா நேம் என்ன என கேட்டான். வர்ஷினி அப்பா நேம் கிருஷ்ணமூர்த்தி, ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்றாரு என்றாள். மித்ரன் ஏதோ கேட்க வாய் திறக்க போக, வர்ஷினி முந்திக்கொண்டு அம்மா பேரு கீதா, ஹவுஸ்வைஃப் . அப்புறம் எங்க வீட்ல ஒரு நாய் கூட இருக்கு, அது பேரு டாமி. அப்புறம் என் தாத்தா இருக்காரு அவரு பேரு ராமநாதன் போதுமா சீனியர் என்றாள். மித்ரன் பரவாயில்லை புத்திசாலியா தான் இருக்கா என நினைத்து விட்டு, போதும் என்றான். யாழினி வர்ஷினியிடம், ஆமா உனக்கு பீவர்னு சொன்னாங்க. இப்ப பரவால்லையா என்றாள். வர்ஷினி எனக்கு பீவர்ன்னு உங்களுக்கு யார் சொன்னது என்றாள். யாழினி அவளிடம் ஐயோ மாட்டிக் கொண்டோமே என நினைத்துக் கொண்டு, உடனே மித்ரனை பார்க்க, மித்ரன் யாழினியை முறைத்துவிட்டு அது நேத்து நீ லீவ் இல்ல அதான் ஏன் வரலைன்னு விசாரிச்சோம் என்றான். வர்ஷினி நான் வரலனு நீங்க ஏன் விசாரிச்சீங்க என்றாள். யாழினி ஐயோ விடமாட்ட போல என நினைத்தாள். திவ்யா வர்ஷினியிடம், நீ என்ன சீனியரவே கேள்வி மேல கேள்வி கேட்கிற என மிரட்ட வர்ஷினி அமைதியாகி விட்டாள். துருவ், நீ எங்க போனாலும் இவன் கூட தான் போவியா? இவன் உனக்கு அவ்ளோ க்ளோஸா என்றான். வர்ஷினி ஆமா சீனியர். இவன் என்னோட பெஸ்ட் பிரண்ட். சின்ன வயசுல இருந்தே நாங்க ஃப்ரண்ட்ஸ் என்றாள். திவ்யா மித்ரன் காதில், பங்கு அப்போ இவன தூக்கிட வேண்டியது தான் என்றாள்....

பின் வர்ஷினி, சீனியர் கிளாஸ்க்கு டைம் ஆயிடுச்சு, நாங்க போலாமா என்றாள். யாழினி, நாங்க இங்க பேசிட்டு இருக்கோம் . நீ எங்களை மதிக்காமல் கிளாஸ்க்கு போறேன்னு சொல்றே என்று மிரட்டினாள். திவ்யா. யாழினியிடம் பங்கு கொஞ்சம் அடக்கி வாசி. அப்புறம் இதெல்லாம் மனசுல வச்சிக்கிட்டு நாளைக்கு உன்னை நாத்தனார் கொடுமை பண்ணப் போறா என்றாள். யாழினி பங்கு 1 லாஸ்ட் கொஸ்டின் கேட்டுட்டு விட்றேன் என்று விட்டு, வர்ஷினி நீ யாரையாவது லவ் பண்றியா? என்றாள். வர்ஷினி இந்த எதிர்பாராத கேள்வியால் திகைத்து விட்டு பின் இல்லை என்றாள். யாழினி அப்போ ஓகே இரண்டு பேரும் கிளம்புங்க என்றாள்.....

எப்போதும் லேட்டாக ஹாஸ்பிடலில் இருந்து வரும் சந்துரு இன்னைக்கு சீக்கிரமாக வருவதை பார்த்து, சந்துருவின் தாய் பாக்கியலட்சுமி என்னப்பா இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட என்றார். சந்துரு அது வந்து வேலை சீக்கிரம் முடிஞ்சுருச்சு அதான் சீக்கிரம் வந்துட்டேன் என்றான். சந்துரு, பின் அம்மா மித்ரன் வந்து விட்டானா என கேட்டான். பாக்கியலட்சுமி, இல்லடா வர்ற நேரம்தான் இப்ப வந்துடுவான் கொஞ்ச நேரத்துல என்றார். சந்துரு சரி வரட்டும் என்று விட்டு, குட்டி போட்ட பூனை போல வாசலுக்கும் ஹாலுக்கும் நடந்துகொண்டிருந்தான். இதைப் பார்த்த சந்துருவின் அப்பா, அவன் இப்ப வந்துடுவான். ரொம்ப அவசரம்னா போன் பண்ணி பேசு டா என்றார்....

சந்துரு இவ்வளவு நேரம் இது தோணாம போச்சே. லவ் வந்ததிலிருந்து நான் லூசு ஆயிட்டேன் என்று விட்டு மித்ரனுக்கு கால் செய்தான்.....


ஸ்கூட்டியில் வந்துகொண்டிருந்த மித்ரன் யாழினியிடம் பங்கு போன் அடிக்குது, சந்துருவா தான் இருப்பான். எடுத்து கட் பண்ணி விடு என்றான். யாழினி போனை எடுத்து பார்த்துவிட்டு எப்படி பங்கு என்றாள். மித்ரன் எல்லாம் ஹுயுமன் சைக்காலஜி தான். உங்க அண்ணனை இந்த காதல் பாடா பாடு படுத்துது. அதான் பையன் வெயிட் பண்ண முடியாம கால் பண்றான். மே பி அவன் இந்த நேரம் வீட்டுக்கு வந்துட்டு நமக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பான் என்றான். உனக்கும் கால் பண்ணுவான் நீயும் எடுக்காத என்றான்....

மித்ரனும் யாழினியும் வீட்டிற்குள் நுழைந்ததும் சந்துரு இரண்டு பேரும் இவ்வளவு லேட்டு கால் பண்ணா எடுக்க மாட்டீங்களா என்று அதட்டினான். மித்து நான் சொன்னேன்ல என்பதை போல யாழினியிடம் கண்ணை காட்டினான். மித்ரன் சந்துருவை முறைதான். சந்துரு அவன் முறைப்பதை பார்த்து அமைதியாகி விட்டான் மித்ரன் யாழினியும் வேகமாக படியேறி ரூமிற்கு சென்று அமர்ந்து கொண்டார்கள். சந்துரு மித்துவிடம் கெஞ்சலாக டேய் சொல்லுடா என்றான். மித்ரன் சொல்லுவோம் சொல்லுவோம் பஸ்ட் அந்த பேனை போடு நீ என்றான் சந்துரு வேகமாக பேனை ஆன் பன்னிவிட்டு சொல்லுடா என்றான். மித்ரன் அவசரப்படாத எனக்கு தாகமா இருக்கு போய் ஜூஸ் எடுத்துட்டு வா என்றான். சந்துரு கோபமாகி ஏதோ பேச வர மித்து வர்ஷினி வர்ஷினி எனக்கூற சந்துரு அமைதியாகி விட்டான். சந்துரு சரி என்று ஜூஸ் எடுக்க சென்றான். யாழினி மித்துவிடம் பங்கு அவன் பாவம் பங்கு சொல்லிடு என்றாள். மித்ரன் நீ பேசாமல் இரு பங்கு அவனை கொஞ்சம் கதறவிட்டு அப்புறம் செல்லலாம் என்றான். சந்துரு ஜூஸை கொடுத்துவிட்டு இப்ப சொல்லு டா என்றான். மித்ரன் இருடா ஜூஸை குடிச்சிக்கிறேன் என்று விட்டு மெதுவாக குடித்தான். அவன் குடித்து முடிக்கும் வரை பொறுமை காத்த சந்துரு இப்பவாவது சொல்லுடா என்றான். மித்ரன் சொல்றதுக்கு முன்னாடி இந்த கால் வலிக்குது என்று கூறிக்கொண்டிருக்கும் போதே சந்துரு பொங்கி எழுந்து இப்ப என்னடா நான் உனக்கு கால் அமுக்கி விடவா சொல்லு என்றார் கோபமாக. மித்ரன் ஐயோ ரொம்ப பண்ணிட்டமோ பையன் இவ்வளவு கத்துறான் என நினைத்து விட்டு இல்லடா கால் வலிக்குது அந்த டேபிளை எடுத்து போட சொல்ல வந்தேன் என்றான். சந்துரு முறைப்பதை பார்த்து சரி நானே செய்கிறேன் என்று தூக்கிப் போட்டு காலை வைத்துக் கொண்டான். சந்துரு இன்னமும் மித்ரனை முறைத்துக் கொண்டிருக்க மித்ரன் சரி சொல்றேன் வாடா என்றான் சந்துரு ஆவலாக வந்தான். மித்து அனைத்து விவரங்களையும் கூறினான் அப்புறம் அவ வெள்ளிக்கிழமை வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு போவாலாம் நாளைக்கு நீ போடா அவ கிட்ட பேசு என்றான். சந்துரு வேகமாக தலையை ஆட்டினான்....

சந்துரு அவளுக்கு முன்னாடியே போய் அந்த கோவிலில் காத்திருந்தான். வர்ஷினி அங்கே வந்ததும் எதேச்சையாக பார்ப்பது போல அவளிடம் பேசினான். வர்ஷினி ஹாய் டாக்டர் எப்படி இருக்கீங்க? நீங்க அந்த ஆஸ்பிடல்ல பார்த்த டாக்டர் தானா என்றாள். சந்துரு, நல்ல வேலை நீ யாருன்னு கேட்காம ஞாபகம் வச்சு இருக்கா என நினைத்துக் கொண்டு, ஆமாம் ஐ ஆம் சந்துரு என்றான். பின் உங்களுக்கு பீவர் சரியாயிடுச்சா? என்றான். பின் சிறிது நேரம் பேசிவிட்டுக் கிளம்பிவிட்டாள்....

நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தன. சந்துரு நடுவில் உட்கார்ந்து இருக்க, மற்ற அனைவரும் அவனை சுற்றி உட்கார்ந்து அவனை திட்டிக் கொண்டிருந்தனர். சுஜி மாமா நீ வேஸ்ட் மாமா. இதோட 26 தடவை அவளை பார்த்துட்ட ஆனால் ஒரு தடவை கூட லவ்வ சொல்லல. அது எப்படி மாமா ஒன்னுமே இல்லாம சும்மா ரெண்டு மணி நேரம் என்னதான் பேசுறீங்க என்றாள். சந்துரு அது என இழுத்து, அவர் பிசிக்ஸ்ல டவுட் கேட்டாள். நான் சொல்லிக் கொடுத்தேன் என்றான். அனைவரும் சந்துருவை பார்த்து தூ என துப்பினர். பின், மித்ரன் நீ எல்லாம் கடைசி வரைக்கும் சிங்கிள் தான்டா என திட்டி விட்டு சென்று விட்டான்.....

மித்ரன் யாழினி என எல்லா வானரங்களும் உட்கார்ந்து கதை பேசிட்டிருந்தாங்க. திவ்யா பங்கு எனக்கு கொலை பசியா இருக்கு பங்கு என்றாள். ஆகாஷ், மாச கடைசி, எல்லோருக்கும் ரொம்ப டைட்டா இருக்கு. எல்லாரும் பாக்கெட் மணியும் தீர்ந்து விட்டது என்றான். மித்ரன் இப்ப என்ன பங்கு பசிக்குதா? உனக்கு பிரியாணியே வாங்கி தரேன் என்றான். யாழினி எப்படி பங்கு என்றாள். இருக்கவே இருக்கு ஒரு பலியாடு. அதற்கு கால் பண்றேன் என்று சந்துருவுக்கு போன் செய்தான். சந்துரு என்ன சொல்லு என்றான். மித்ரன் அது ஒன்னும் இல்ல சந்த்ரு. உன் லவ்வ எப்படி சேர்த்து வைக்கிறது என்று யோசித்துட்டு இருக்கோம் என்றான். சந்துரு யோசிச்சிட்டியாடா? என்றான். மித்ரன் இல்லடா அதுக்குள்ள எங்களுக்கு பசித்துவிட்டது. சாப்பிட்டா தான் எங்க பிரெய்ன் வொர்க் ஆகும். சோ நீ என்ன பண்ற எனக்கு ஒரு ஆயிரம் ரூபாவை டிரான்ஸ்பர் பண்ணி விடு என்றான்....

சந்துரு பல்லை கடித்துக்கொண்டு, டேய் நீ ரொம்ப பண்றடா. இதோட 12 தடவை இந்த மந்த் என்கிட்ட பணம் வாங்கிட்ட என்றான். மித்ரன் என்ன சந்துரு? நான் என்ன உன்னை ஏமாற்றி பணம் வாங்குற மாதிரி பேசுற நீ. பணத்தை மட்டும் ட்ரான்ஸ்பர் பண்ணிவிடு. இன்னைக்கு வரும்போது நான் ஒரு சூப்பர் ஐடியாவோட வரேன் என்றான். சந்துரு சரி அனுப்பி வைக்கிறேன் என்றான்....


மித்ரன் தனது ரூமில் அனைவரிடமும் தனது ஐடியாவை கூறிக் கொண்டிருந்தான். யாழினி, கேட்டாள் பங்கு இது சரியாக வருமா பங்கு என்றாள். மித்ரன் அதெல்லாம் கரெக்டா நடக்கும் என்றான். சந்துரு மித்து கையை பிடித்துக் கொண்டு ஆறு மாசமா ட்ரை பண்ணிட்டு இருக்கேன். நீ தாண்டா எப்படியாவது நாளைக்கு ஏன் லவ் ப்ரொபோஸ் பண்ண எனக்கு ஹெல்ப் பண்ணனும் என்றான். மித்ரன் சந்துருவிடம், ஏன் பயப்படுற. மித்ரன் இருக்க பயமேன் என்றான்.....

மித்ரன், திவி, ஹரி, என எல்லா வானரங்களும் ரெடியாக இருந்தனர். மித்ரன் சிவாவிடம் மச்சான் கரெக்டா எல்லாம் பண்ணிருவியாடா என்றான். சிவா திருதிருவென முழித்து, நீ என்னை யாரையாவது அடிக்க சொன்னா போய் இரண்டு அப்பு அப்பி இருப்பேன். நீ என்னடான்னா ப்ரொபோஸ் பண்ண சொல்ற என்று விட்டு சரி சரி செய்கிறேன் என்றான். திவ்யா ஓடிவந்து பங்கு வர்ஷினி வரா என்றாள். மித்ரன் சிவாவிடம் கைகாட்டி ஆல் தி பெஸ்ட் என்றான். வர்ஷினி வருவதை பார்த்து யாழினி இங்க வா என்றாள்....

வர்ஷினி ஐயோ இன்னைக்கு என்ன பண்ண போறாங்களோ? டெய்லி இவங்க தொல்ல தாங்க முடியல. முதல்ல என் சந்துரு கிட்ட சொல்லி மிரட்ட சொல்லணும் என்றாள். சிவா வர்ஷினியிடம் அலைபாயுதே ஸ்டைலில், நான் உன்ன விரும்பல. நீ அழகா இருக்கேன்னு நினைக்கல. உன் மேல ஆசைப்படலை. ஆனா இதெல்லாம் நடந்துருமோனு எனக்கு பயமா இருக்கு. என்ன சொல்ற என்றான் தன் கையிலிருந்த ரோஸை நீட்டி. மித்ரன், அடப்பாவி ப்ரொபோஸ் பண்ண தெரியாது தெரியாது என்றான்.ஆனா இப்போ இப்படி ப்ரொபோஸ் பண்றானே என்றான்......

வர்ஷினி, அவன் கூறியதில் அதிர்ச்சியாகி இரண்டடி பின்னே நகர்ந்தாள். சிவா என்ன சொல்ற என்றான். வர்ஷினி இல்ல சீனியர் எனக்கு லவ் செட் ஆகாது. நீங்க வேற நல்ல பொண்ணா பார்த்துக்கோங்க என்றாள். சிவா ,இல்ல வேற பொண்ண எல்லாம் பார்க்க முடியாது. எனக்கு நீதான் வேணும் என்று அவள் கையை பிடித்தான். அவள் அவன் கையை உதறிவிட்டாள். அந்த நேரம் பார்த்து சந்துரு போன் அடிக்க வர்ஷினி போனை ஆன் செய்து பேசினாள். சந்துரு, வர்ஷினி நான் ஒரு ஒர்க் விஷயமா உன் காலேஜ் பக்கமா வந்தேன். உன் காலேஜ் வெளியேதான் இருக்கிறேன். வரியா மீட் பண்ணலாமா? என்றான். இதைக் கேட்டதும் வர்ஷினி முகம் பிரகாசமாகி விட்டது. இதை எல்லோரும் கவனித்தனர். வர்ஷினி, அவனிடம் கொஞ்சம் உள்ள வரிங்களா? அந்த ஆலமரத்துக் கிட்ட தான் நான் நிற்கிறேன் என்று விட்டு போனை வைத்தாள்.....

சிவா யார வர சொல்ற முதலில் என் லவ்க்கு ஓகே சொல்லிட்டு, யார் கூட வேணா பேசு என்றான். வர்ஷினி, கொஞ்சம் பொறுங்க சீனியர் என்றாள். சந்துரு இதற்காகவே காத்திருந்தவன் போல வேகமாக வந்து விட்டான். வர்ஷினி சந்துருவிடம் நடந்ததைக் கூறினாள். வர்ஷினி சிவாவை கண்டிக்குமாறு சந்துருவிடம் கூறினாள். சந்துரு சிவாவை மிரட்டினான். சிவா சந்துருவிடம், டேய் நீ யாருடா? எனக்கும் என் ஆளுக்கும் நடுவில வர்ற. ஒழுங்கா போயிடு இல்லனா உன் முகறைய அடிச்சு பேத்துடுவேன் என்று கையை முறுக்கினான்.......
 

Janu murugan

Moderator
Staff member
Jun 10, 2020
42
4
8
19
ஹாய் பிரெண்ட்ஸ்,

நமது தளத்திற்கு புது வரவான ஜானு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..அவர்களின் "கல்யாண கலாட்டா" கதையின் பதிவுகள் இங்கு பதிவிடப்படும்.சிவாவும் சந்துருவும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். வர்ஷினி நடுவில் வந்து சிவாவிடம், சீனியர் அவர் நான் கல்யாணம் பண்ணிக்க போறவரு. அவருக்கு கேட்க எல்லா உரிமையும் இருக்கு என்றதுதான் தாமதம், சிவாவும் சந்துருவும் வர்ஷினியை விலக்கிவிட்டு கட்டிக்கொண்டனர். எல்லோரும் ஹைபை அடித்துக்கொண்டனர். வர்ஷினி என்ன நடக்கிறது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள். யாழினி சந்துருவிடம், டேய் அண்ணா! நான் சொன்னேன்ல அவ உன்ன லவ் பண்றானு. நீ தான் கேட்கல என்றாள்.....
வர்ஷினி என்னது அண்ணாவா என வாயை பிளந்துவிட்டாள். மித்ரன் சந்துருவிடம், டேய் மச்சான் உன் ஆளுக்கு அதிர்ச்சியில் அட்டாக் வந்துரும் போல போய் உண்மையை சொல்லு என்றான். சந்துரு வர்ஷினியிடம் வந்து, அனைத்தையும் கூறினான். வர்ஷினி இதைக்கேட்டு சந்துருவை அடித்தாள். ஏன் இப்படி பண்ண லூசு எருமை என வாய்க்கு வந்ததை திட்டி, ஒரு லவ்வ சொல்லக் கூட உனக்கு தைரியம் இல்லை. உன்ன லவ் பண்ணி என்ன பண்ணப் போறேன்னு தெரியலையே என்று புலம்பினாள். சந்துரு அவளை அணைத்து, என்னடி இப்படி சொல்ற என்றான். வர்ஷினி, பின்ன எப்படி சொல்லுவேன். லவ்வ சொல்ல பயந்த நீங்க எப்படி நம்ம கல்யாணத்த பத்தி உங்க வீட்ல தைரியமா பேசுவிங்க என்றாள்....
சந்துரு, அதைப் பத்தி நீ ஏன் கவலைப்படுறே. அதான் இதுங்க இருக்குதுங்களே இதுங்க பார்த்துக்கும் என்றான். மித்ரன், டேய் சேத்து வைக்கிற வரைக்கும் தான் மரியாதையா பேசின. இப்போ அதுங்க இதுங்கன்ற, நடத்து நடத்து என்றான். சந்துரு இதையெல்லாம் கவனிக்காதது போல, நானும் என் ஆளும் அவுட்டிங் போறோம் என்று விட்டு வா டார்லிங் என்றான்....


வர்ஷினி இருங்க சந்துரு, வருண்கிட்ட சொல்லி விட்டு வரேன்னு சொல்லி அப்போதுதான் வருணை தேடினாள். மித்ரன், ஏம்மா வர்ஷினி நீ எல்லாம் நல்லா வருவ. இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு தேடலாம்ல என்றான். அவனை ஆகாஷ் இழுத்துட்டு போயி ரொம்ப நேரம் ஆச்சு என்றான். வர்ஷினி பதறி ஐயோ வருணை என்ன பண்ணீங்க என்றாள். மித்ரன் பதறாதமா. ஆகாஷ் இந்தப் பக்கம்தான் இழுத்துட்டு போனான் என்று எட்டிப் பார்த்தான்....ஆகாஷ் எண்ணிக் கொண்டிருக்க, வருண் உக்கிப் போட்டுக் கொண்டிருந்தான். மித்ரன், அவன் தலையில் கொட்டி ஏண்டா எருமை உன்ன நம்பி ஒரு சின்ன பையனா அனுப்புனா நீ இப்படி கொடுமை படுத்திட்டு இருக்கியா என்றான். மித்ரனிடம் ஆகாஷ், சும்மாவே நிற்கவைக்க போர் அடிச்சதுடா. அதான் இவனை உக்கி போட வச்சேன் என்றான். வருண் இன்னமும் உக்கி போடுவதை பார்த்து ஆகாஷ், வராத கண்ணீரை துடைத்து விட்டு, என்னையும் ஒரு ஆளா மதிச்சு நான் சொல்றத செய்ற உன்ன நெனச்சா எனக்கு பெருமையா இருக்கு வருண் என்றான். வருண் என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தான். மித்ரன் வா டா லூசு என அவனை இழுத்துச் சென்றான்......ஒரு வழியா சந்துரு லவ்வ சேர்த்து வைத்து விட்டோம் என்ற சந்தோஷத்தோடு யாழினியும் மித்ரனும் வீடு வந்து சேர்ந்தனர். மித்ரன் தனது ரூமை திறக்க அவன் முகத்தில் ஒரு தக்காளி வந்து விழுந்து அவனை வரவேற்றது. அவன் உள்ளே எட்டிப்பார்க்க சுஜி ஒரு தட்டில் வெங்காயத்துடன் சூர்யா ஒரு தட்டில் தக்காளியுடன் போர் வீரர்கள் போல் நின்று கொண்டு சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். மித்ரன், லூசுங்களா ஏன் இப்படி சண்டை போடுறீங்க என்று நடுவில் போனான். இருவரும் எரிந்த தக்காளியும் வெங்காயமும் அவன் முகத்தில் மீண்டும் விழுந்தது. சுஜி, மித்ரனை டேய் சொம்பு தலையா தள்ளிப் போடா என்றாள். சூர்யா டேய் குரங்கு மூஞ்சி தள்ளிப்போட, இன்ட்ரஸ்டா சண்டை போட்டுட்டு இருக்கோம்ல என்றான். மித்ரன் சொல்ல சொல்ல கேட்காமல் இருவரும் வெங்காய சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.....
கீழிருந்து பாக்கியலட்சுமி, சாம்பாருக்கு வெட்டி வைத்திருந்த வெங்காயத்தையும் தக்காளியையும் எடுத்தது யார் என கத்தினார். சுஜியும் சூர்யாவும் ஆடாமல் நின்று திருதிருவென முழித்தனர். மித்ரன், அடப்பாவிங்களா சாம்பாருக்கு வைத்திருந்த வெங்காயம் தக்காளியை வச்சா நீங்க ஜேம்ஸ்பாண்ட் சண்டை போட்டுட்டு இருக்கீங்க. இதோ இப்பவே போய் போட்டு கொடுக்கிறேன் என்று திரும்பினான்....சுஜியும் சூர்யாவும் ஓடிச்சென்று மித்ரன் கையை பிடித்துக்கொண்டு, டேய் டேய் பிளீஸ்டா போட்டு கொடுத்துடாதடா என கெஞ்சினர். மித்ரன், குரங்கு குட்டிகளா இவ்ளோ நேரம் என்னன்னு கேட்டா சொன்னீங்களா. நான் போய் போட்டு கொடுக்காம விட மாட்டேன்டா என்றான்....சூர்யா இவன் சரிப்பட்டு வரமாட்டான் என நினைத்து, சுஜியிடம் சுஜி எனக் கூப்பிட்டு கண்ணை காட்டினான்.மித்ரன் என்ன இது ஏதோ ப்ளான் பண்ணுறேன்னு என்ற பெயரில் காமெடி பண்ணுதுங்க என நினைக்கையில், இருவரும் சேர்ந்து அவனை பெட்டில் தள்ளி வெளியே ஓடி சென்று கதவை பூட்டினர். மித்ரன் ஏய் அர லூசுங்களா ஏன் இப்படி காமெடி பண்றீங்க என்றான்.....


சுஜியும் சூர்யாவும் கோரஸாக, அம்மா மித்ரன் சாம்பாருக்கு வைத்திருந்த வெங்காயம் தக்காளியை எடுத்துட்டு ரூம்க்குள்ள போய் கதவை பூட்டிகிட்டான் என்றனர். மித்ரன் அட கிறுக்குங்களா! இதுங்கள அர லூசுனு நினைச்சா இப்படி என்ன கோர்த்து விட்டுச்சுங்களே என்றான். கங்காவும் பாக்கியலட்சுமியும் மேலே வந்துவிட்டனர். சுஜியும் சூர்யாவும் கையில் புக்கை வைத்துக் கொண்டு கதவை திறந்து விட்டு உள்ளே போய் பாருங்க, மித்ரன் வெங்காயத்தை வைத்து விளையாடிக்கொண்டு இருப்பான் என்றனர். மித்ரன், உள்ளே இரண்டும் எப்படி நாஸ்த்தி பண்ணீடுச்சுங்க எருமைங்க என திட்டிவிட்டு ஒவ்வொன்றாய் எடுத்து தட்டில் போட்டான். கங்காவும் பாக்கியமும் கதவை திறந்தவுடன் மித்ரன் கையிலிருந்த தட்டுடன் மாட்டிக்கொண்டான். கங்காவும் பாக்கியமும் மித்ரனை திட்டிக்கொண்டிருந்தனர். உன்ன விட சின்ன பசங்க எவ்வளவு பொறுப்பா உட்கார்ந்து படிச்சுட்டு இருக்குதுங்க என்று திட்டினார். அதுங்க ரெண்டும் நல்ல பிள்ளை மாதிரி புக்கை படிக்கற மாதிரி நடிச்சுட்டு இருக்குதுங்க என்று கூறினான் மித்ரன்....
மித்ரன் திட்டு வாங்கியதில் சோகமாக அமர்ந்து இருந்தான். அவன் சோகமாக இருப்பதை பார்த்த மது, ஏன் மாமா சோகமா இருக்க என்றாள். மித்ரன் அனைத்தையும் கூறினான். மது, மாமா இதுக்கு தான் சோகமாக இருக்கியா? பதிலுக்கு நாமும் அவர்களை கோர்த்து விடலாம் என்று இருவரும் பிளான் போட்டனர். மாமா நாம அவங்க மேல பெயிண்ட் ஊத்திவிடலாம். பெயிண்டை போக வைக்கிறதுக்கு அவுங்கபடுற கஷ்டத்தை பார்த்து நம்ம என்ஜாய் பண்ணுவோம் என்று, எல்லா பெயிண்ட்டையும் ஒன்றாகக் கலக்கினாள்......
இங்கு சுஜியும் சூர்யாவும் இன்னமும் சண்டை போட்டுக் கொண்டுதான் இருந்தனர். கை சண்டை வாய் சண்டையாகி சுஜி சூர்யாவை அடித்துவிட்டாள். சூர்யா அவளை அடிக்கும் முன் எழுந்து மாடிக்கு ஓடி விட்டாள். சூர்யாவும் பின்னே எழுந்து ஓடினான். யாழினி துருவ்வுடன் போன் பேசிக்கொண்டு படுத்துஇருந்தாள். மதுவும் மித்ரனும் கையில் பெயிண்டுடன் வெளியே நின்று ரூம் கதவை தட்டினர். எப்போதும் தனது ரூமில் இருக்கும் யாழினி, இன்று சிக்னல் கிடைக்கவில்லை என்று இவர்கள் ரூம்க்கு வந்து மாட்டிக்கொண்டாள்.....மித்ரன் ரூம் கதவு திறக்கப்படாததால் வேகமாக தட்டினான். யாழினி எந்த லூசு டிஸ்டர்ப் பண்ணுது என திட்டி கொண்டே கதவை திறக்க, இவர்கள் திறந்தவுடன் யார் என்று பார்க்காமல் பெயிண்ட்டை யாழினி மேல் ஊற்றிவிட்டனர். இந்த திடீர் தாக்குதலால் யாழினி அதிர்ச்சியாகிவிட்டாள். யாழினி கையிலிருந்த போன் நழுவி கீழே விழுந்து ஸ்விட்ச் ஆஃப் ஆகியது.யாழினி அதை கவனிக்காமல்.யாழினி எருமைகளா என் மேல ஏன் பெயிண்டை ஊத்துனீங்க என்று திட்டினாள். இருவரும் திருதிருவென முழித்தனர். யாழினி கோபத்தில் பெயிண்டை பிடுங்கி இருவர் மீதும் ஊற்றிவிட்டாள். சண்டை போட்டுக்கொண்டு ஓடி வந்த சுஜியும் சூர்யாவும் இவர்களைப் பார்த்து பேய் பேய் என அலறினர். இவர்கள் அலறலை கேட்டு வீட்டிலிருந்து அனைவரும் அங்கு கூடிவிட்டனர். மங்களம் , என்ன பண்ணி வச்சிருக்கீங்க? யார் வேலை இது? என கேட்க மூவரும் ஒருவர் மாற்றி ஒருவரை கையை காட்டினார். பெரியவர்கள் சேர்ந்து அவங்க மூன்று பேரையும் திட்டி தீர்த்தனர். சுஜியும் சூர்யாவும் இதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தனர்.....யாழினி தண்ணீரால் முகத்தை கழுவிக்கொண்டு மித்ரனையும் மதுவையும் திட்டிக்கொண்டே இருந்தாள். டேய் எருமை என்ன ஏன்டா கோர்த்து விட்டீர்கள் என கேட்டாள். இருவரும் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு, யாழினி நாங்க பிளான் பண்ணது அவுங்களுக்காகதான். ஆனா நீ வந்து மாட்டிக்கிட்ட என்றனர். யாழினி அவர்களுக்கு இருக்கு என கறுவினாள்......அங்கே துருவ் போன் பேசிக் கொண்டிருந்த யாழினி திடீரென்று போனை கட் பண்ணிவிட்டாள். திரும்பவும் போன் செய்தான் சுவிட்ச் ஆப்னு வருது என புலம்பினான். மித்ரனுக்கு போன் செய்ய அதன் அட்டென்ட் பண்ணவில்லை. எனவே துருவ் வேறுவழியில்லாமல் வேகமாக பைக்கில் யாழினி வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான். யாழினி பெயிண்ட் போகவில்லை என தேய்த்து குளித்துக்கொண்டிருந்தாள்.....சுஜியும் சூர்யாவும் புக்கில் போனை வைத்து மறைத்து மீம்ஸ் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்து மது ஓடிச்சென்று கங்காவிடம் பற்ற வைத்தாள். துருவ் வழக்கம்போல சுவர் ஏறி குதித்து மாடிக்கு யாருக்கும் தெரியாமல் வந்து விட்டான். ரூம்க்குள் நுழைந்ததும் அவனை பார்த்து சுஜியும் சூர்யாவும் என்னவென்று கேட்க, அவன் முழித்து யாழினியை பார்க்க வந்தேன் என்றான். சுஜியும் சூர்யாவும் நாகரீகம் கருதி தோட்டத்திற்கு சென்றுவிட்டனர்.....மித்ரன் அப்போதுதான் துருவ் கால் செய்து இருப்பதை பார்த்து திரும்பி கால் செய்தான். துருவ் போனை அட்டெண்ட் செய்து விவரத்தைக் கூறினான். தான் யாழினி ரூமில் இருப்பதாக கூறினான். மித்ரனுக்கு யாராவது பார்த்தால் என்னாவது என்று பகீரென்று இருந்தது. யாழினி அப்போதுதான் குளித்து வெளியே வந்தாள். வந்தவள் துருவ்வை அங்கே பார்த்தவள் பேபி நான் உன் ஞாபகமாவே இருக்கேன். அதனால நீ இருக்கிற மாதிரியே தோணுது என கூறி விட்டு தலையை துவட்டினாள். துருவ் அவளருகே வந்துவிட்டான். யாழினி என்ன கனவு இவ்வளவு தூரம் வருமா என்று நினைக்க அவனின் மூச்சுக்காற்று தன் அருகில் படுவதை உணர்ந்து, அப்போதுதான் அது நிஜம் என தெரிந்து, ஹே பேபி நீ எப்ப வந்த என கேட்க அவன் அவளை ரசித்துக் கொண்டிருந்தான். அவன் பார்வையை உணர்ந்து யாழினி ஹே பேபி என் அவன் கண்ணத்தை கிள்ளினாள். துருவ் வலிக்குதுடி, ஏண்டி கிள்ளுற. நான் என்னோட பேபியை ரசிக்கிறேன் என அவளை அணைத்தான்...இங்கே மது மித்ரனிடம் ஓடிவந்து மாமா நான் அதுங்களை மாட்டிவிட்டுடேன் என்றாள். மித்ரன் எப்படி என கேட்க, மது அதுவா அவங்க ரெண்டு பேரும் யாழு ரூம்ல உட்கார்ந்து புக்குல போனை மறைத்து வைத்து மீம்ஸ் பார்த்துட்டு இருந்தாங்க. நான் போய் அத்தை கிட்ட போட்டு கொடுத்துட்டேன் என்றாள். மித்ரனுக்கு இதைக் கேட்டதும், தன்னை எல்லோரும் வீட்டை விட்டுத் துரத்துவது போல காட்சி தோன்ற பதறி அடித்துக் கொண்டு எழுந்தான். மது மாமா எங்க போற என்றாள்....


மித்ரன் அட என் அத்தை பெத்த அறிவுக்கொழுந்து இரு உன்னை வந்து கவனிச்சிக்கிறேன் என ஓடினான். கரெக்டாக அவன் ஓடிச்சென்று கதவருகே நிற்க, கங்கா வந்துவிட்டார். மித்ரன் காங்காவை பார்த்து திருதிருவென முழிக்க, அவங்க அவனைப் பார்த்து டேய் என்னடா கேப்மாரி வேலை பார்த்த என்னை பார்த்ததும் இப்படி முழிக்கிற என்றார். மித்ரனுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் வேற வழியில்லை மயங்கி விழுந்துவிடுவோம் என கண்ணை மூடி விழுந்துவிட்டான். கங்கா அவன் விழுவதைப் பார்த்து, ஐயோ எல்லாரும் வாங்க மித்ரன் மயங்கி விழுந்துவிட்டான் என கத்த, துருவ் பதறி அடித்துக் கொண்டு கதவை திறக்க போக, யாழினி அவன் மண்டையில் தட்டி எங்க போற? இது என் வீடு. சுவர் ஏறி குதிச்சு வந்திருக்குறது ஞாபகம் இருக்கா? என்றதும், துருவ் சாரி பேபி நீயே போய் பாரு என்று வழிவிட்டான்....எல்லோரும் அங்கே கூடிவிட்டனர். மித்ரனை தூக்கிக் கொண்டு அவன் ரூமிற்கு செல்ல எத்தனிக்கையில் மது இங்கதான் யாழு ரூம் இருக்கு. நீங்க ஏன் அங்க கொண்டு போறீங்க என்றாள். யாழினிக்கு பகீர் என்று ஆகிவிட்டது. தடுக்கவும் முடியவில்லை அவளால். எல்லோரும் மித்ரனை தூக்கிக்கொண்டு ரூம்க்குள் சென்றனர். யாழினிக்கு பயத்தில் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தது. கங்கா, யாழினி சந்துருவுக்கு போன் பண்ணி வர சொல்லு அப்படியே நிக்கிற என்றார். யாழினி சந்துருவிற்கு போன் செய்து கொண்டே ரூமிற்குள் எட்டிப் பார்த்தாள். துருவ் இல்லை என்றதும் நிம்மதியாக இருந்தது அவளுக்கு. ஆனால் அவன் எங்கே சென்று இருப்பான் என யோசித்துக் கொண்டே சந்துருவுக்கு கால் செய்தாள். சந்துரு வந்து விட்டான். அவன் மித்ரனை பரிசோதித்துவிட்டு, எந்த பிரச்சனையும் இல்லை. இவன் ஏன் மயங்கி விழுந்தான் என யோசிக்க, மித்ரன் யாரும் பார்க்காத நேரம் சந்துருவை பார்த்து கண்ணடித்தான். சந்த்ரு அதைப் புரிந்து கொண்டு, எல்லோரும் வெளியே போங்க. நான் அவனை கொஞ்சம் செக் பண்ணணும் என்றான். கங்கா பயந்துகொண்டு மித்ரனுக்கு எதுவும் ஆகாதுல என்று கேட்டாள். சந்த்ரு அத்தை பயப்படாதீங்க ஒன்னும் இல்லை என்று கூறி அனுப்பினான்....


அவர்கள் சென்றதும் மித்ரன் எழுந்து உட்கார்ந்து அப்பாடா! இப்பதான் நிம்மதியா இருக்கு என்றான். சந்துரு டேய் எதுக்குடா இப்போ இந்த ட்ராமா என கேட்டான். மித்ரன் எல்லாம் உன் தொங்கச்சியும் அவளோட ஆளும் பார்த்த வேலை தான் என்று விட்டு, துருவ் வெளியே வாடா என்றான். கப்போர்டில் ஒளிந்து இருந்த துருவ் வெளியே வந்தான். மித்ரன் நடந்த அனைத்தையும் சந்துருவிடம் கூறினான். துருவ் சாரி மச்சி என்றான். மித்ரன் பேசாத டா எருமை. இனிமே இப்படி சுவரேறி குதிச்ச அவ்வளவுதான் என்றான். சந்துரு சரி நான் போய் எல்லோரும் அங்கே இருந்து பேக் பண்றேன். அப்புறம் நீ எஸ்கேப் ஆயிடு என்று விட்டு வெளியே சென்றான்....


சந்துரு வந்தவுடன் எல்லோரும் மித்ரனுக்கு என்ன ஆச்சு? என்ன ஆச்சு? என கேள்வி கேட்டனர். சந்துரு எல்லோரையும் அமைதியாய் இருங்கள். அவனுக்கு ஒன்னும் இல்ல. அவன் சாப்பிடாததுனால மயக்கமா இருக்கான். போய் அவனுக்கு சாப்பிட ஏதாவது கொண்டுவாங்க என்றான். எல்லோரும் யாழினியை பிடித்துக் கொண்டனர். கங்கா, ஏன் யாழினி 24 மணி நேரமும் அவன் கூட தானே இருக்க. அவன் சாப்பிடலைன்னா உனக்கு தெரியாதா? என்றார். மங்களம் , ஏன் யாழினி கட்டிக்கப் போறவன இப்படிதான் பார்த்துக்குவியா என்றார். யாழினி திரு திருவென முழித்துக் கொண்டிருந்தாள். எல்லோருமே அவளை திட்டுவதில் மும்முரமாக இருக்க, சந்துரு துருவ்விடம் சிக்னல் காட்ட, அவன் எஸ்கேப் ஆகிவிட்டான்.....


அப்புறம் எல்லோரும் ஒருவராக கிளம்பி சென்றனர். கங்கா ஜூஸ் எடுத்துவர சென்றார். சுஜியும் சூர்யாவும் மித்ரனிடம் வந்து சாரி, உனக்கே முடியல இதுல நாங்க வேற உன்னை மாட்டி விட்டுடோம் என வருத்தப்பட்டனர். மித்ரனுக்கு சிரிப்பு வந்தது. அதை அடக்கிக் கொண்டு சரி சரி விடுங்க உங்களை மன்னிச்சிட்டேன் என்றான் . மித்ரன் சரி எதுக்கு நீங்க ரெண்டு பேரும் இப்படி அடிச்சுகட்டிங்க என்றான்....


சுஜி நான் சொல்றேன் என்றாள். சூர்யா இல்ல நான் தான் சொல்லுவேன் என்றான். இப்படியே இருவரும் சண்டை போட, மித்ரன் கோபமாகி ரெண்டு பேரும் சொல்லவே வேணாம். முதல்ல கிளம்புங்க என்றான். சூர்யா, சரி சுஜி நீயே சொல்லு என்றான். சுஜி அண்ணா நாங்க ரெண்டு பேரும் ஐஸ்கிரீம் பார்லர் போய் இருந்தோம். ஆளுக்கு ஒரு கோன் ஐஸ் வாங்குனோம். அப்போ என் பிரெண்டை அங்க பார்த்தேன். போய் பேசிட்டு வரதுக்குள்ளயும் இவன் என் ஐஸ்கிரீமை சாப்பிட்டுவிட்டான் என்றாள். மித்ரன் சூர்யாவிடம் ஏன்டா அவளோட ஐஸ்ஸ திண்ண என்றான். சூர்யா , அவ வர டைம் ஆகிடுச்சு. ஐஸ் உருகிட்டே போயிடுச்சு. அதான் நான் சாப்பிட்டேன். அப்புறம் வேற வாங்கி தரேன்னு சொன்னேன். ஆனா அவ தான் கேட்கல என்றான். மித்ரனுக்கு இந்த சண்டையை பார்த்து சிரிப்புதான் வந்தது. மித்ரன், சரி சரி இரண்டு பேரும் சமாதானமாகி விடுங்கள். நான் நாளைக்கு ரெண்டு பேருக்கும் ஐஸ் வாங்கி தரேன் என்றான். இருவரும் சமாதானம் ஆகி சென்றுவிட்டனர்.....
மதுதான் சோகமாக மித்ரனை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். மித்ரன், ஓய் செல்லகுட்டி எனக்கு ஒன்னும் இல்லை. நீ கவலை படாதே, நான் மயக்கம் போடுற மாதிரி நடிக்க தான் செஞ்சேன் என்றான். மது, எதுக்கு மாமா நடிச்ச என்றாள். மித்ரன் நடந்த அனைத்தையும் மதுவிடம் கூறினான். இதைக் கேட்டதும் அப்படியா என்றுவிட்டு மறுபடியும் சோகமாகி, நான்தானே இதுக்கு காரணம். நான் அவங்களை மாட்டிவிட போய் யாழினியை மாட்டிவிட்டுடேன் என்றாள். மித்ரன் அதான் நான் சமாளிச்சுட்டேன் இல்ல. நீ கவலை படாதே என்றான். மது, சரி மாமா நீ ரெஸ்ட் எடு. நான் அப்புறம் வரேன் என்று சென்றுவிட்டாள்.....
மித்ரன், அப்பாடா! ஒருவழியாக எல்லாத்தையும் சமாளித்து விட்டோவோம் என்று எழுந்து வெளியே வந்தான். கங்கா, ஜூஸ் கொண்டு வந்து மித்ரனிடம், ஏன்டா உன்ன ரெஸ்ட் எடுக்க தானே சொன்னோம். நீ எதுக்கு வெளிய வந்த என்றார். மித்ரன் எனக்கு ஒன்னும் ஆகாது பயப்படாதீங்க என்றான். அந்த ஜூஸை வாங்கி அவன் குடித்தப்போதுதான் ரூம் வாசலில் இருந்த துருவ்வின் செருப்பை பார்த்தான். அவனுக்கு புரை ஏறியது. மித்ரன், அட கிரகம் புடிச்சவனே! என்னமோ மறுவீட்டு விருந்துக்கு வந்த மாதிரி செருப்பை வெளியே கழட்டி விட்டுட்டு போயிருக்கானே. இதுங்க நம்மள குழி தோண்டி புதைக்காமல் விடாதுங்க போல என நினைத்து விட்டு, கங்காவிடம் அம்மா அந்த ஜன்னலில் யாரோ எட்டிப் பார்க்கிற மாதிரி இருக்கு என்றான். கங்கா ஜன்னலை பார்த்துவிட்டு அங்க யாரும் இல்லை என்றார். மித்ரன் அம்மா இங்க இருந்து பார்த்தா எப்படி தெரியும். அங்க போய் பாரு மா என்று அவரை அனுப்பிவிட்டு, துருவ்வின் செருப்பை ரூமிற்குள் தள்ளி விட்டு கதவை சாத்தினான். கங்கா அங்க ஒன்னும் இல்ல மித்ரன் என்றார். மித்ரன் இல்லையா? சரி விடுங்க மா. நான் போறேன் , போய் ரெஸ்ட் எடுக்கிறேன் என்று ரூம்க்கு சென்று விட்டான்....


மறுநாள் காலையில் மித்ரன் காலேஜில் காலால் எதையோ அளந்து கொண்டிருந்தான். அப்போது வந்த துருவ், மச்சான் என்னடா காலால எதையோ அளந்து கொண்டிருக்க என்றான். மித்ரன் அவனை முறைத்து, உன்னை குழிதோண்டி புதைப்பதற்கு தான் அளவு பார்த்துட்டு இருக்கேன் என்றான். யாழு இதை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். துருவ், நான் என்னடா பண்ணினேன் என்றான். மித்ரன் நீங்க ரெண்டு பேரும் என்னடா பண்ணல. என்ன குழி தோண்டி புதைக்க விடமாட்டீங்க போல என்றான். அங்கு வந்து ஹரி, மித்ரனிடம், டேய் ஏன்டா என் மச்சான திட்டுற என்றான். மித்ரன், உன் மச்சான் என்ன பண்ணான் தெரியுமா என நடந்தவற்றை கூறினான். ஹரியும் இதைக்கேட்டு துருவ்வை முறைத்தான். மித்ரன் அவன் வந்தது கூட நான் மன்னிச்சுடு வேண்டா. ஆனால் என்னமோ விருந்துக்கு வந்த மாதிரி செருப்பை ரூம்க்கு வெளியே விட்டுட்டு போயிட்டான். யாராவது பார்த்தா என்ன ஆகுறது என்றான் மித்ரன். மித்ரனும் ஹரியும் துருவ்வை மொத்தி விட்டனர்.....இப்படியே நாட்கள் இனிமையாகவும் கலாட்டாவோடும் கடந்துகொண்டிருந்தது. வானரக் கூட்டம் காலேஜ் முடிச்சுட்டு என்ன பண்ணலாம்னு யோசிச்சி யோசிச்சி ஆறுமாதத்த ஓடிட்டாங்க. வீட்ல ஏச்சு பேச்சு தாங்காம கல்யாணம் பண்ணி வச்சுடுவாங்கன்ற பயத்தில் கம்பெனி என்ற பெயரில் ஒன்ன ஆரம்பிச்சு அங்கு உட்கார்ந்து கலாட்டா பண்ணிட்டு தின்னுட்டு நாளா ஓடிட்டு இருக்காங்க. இதுங்க கம்பெனி என்ற பெயரில் ஒரு காமெடி பண்ணிட்டு இருக்குதுங்க....


சுஜி மித்ரனை நச்சரித்துக் கொண்டிருந்தாள். டேய் அண்ணா நீ தான்டா வந்து என்னை காலேஜ் சேர்த்து விடனும் என்று. மித்ரன் என்னால வர முடியாதுபா, மார்னிங் அவரை பார்க்கணும், ஈவினிங் இவரைப் பார்க்க வேண்டும் என பிகு பண்ணிக்கொண்டு இருந்தான். சுஜி யாழினியிடம், யாழினி நீயாவது அவன வர சொல்லு என்றாள். மித்ரன், யார் சொன்னாலும் நான் வர மாட்டேன் என்றான்.....யாழினி, பங்கு நீ ஆபிஸ் வந்து என்னை கிழிப்பன்னு என்று எனக்கு தெரியும். மூடிட்டு போய் அவளை காலேஜ் அட்மிஷன் போட்டு விட்டுட்டு வா என்று ஆபீஸ் கிளம்பினாள்......இங்கே துருவ் தன் தங்கை அபியிடம், நான் வரேன் உனக்கு காலேஜ் அட்மிஷன் போட என்றான். அபி நீயா? நீ எல்லாம் வர வேணாம்பா . நீ வந்தா என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாதா? எவனாவது என்ன சும்மா பார்த்தால் கூட ஏதோ கொலை குத்தம் பண்ண மாதிரி முறைப்ப என்றுவிட்டு, ஏன்டா என்னையும் ஒரு பையன் சைட் அடிச்சா தான் எனக்கும் பொழுது போகும் என்றாள். துருவ் அபி சொல்வது எதையும் கேட்காமல் அவள் அட்மிஷனுக்கு சென்றான். துருவ் அபியிடம் ஏன் அபிமா பக்கத்தில் எவ்வளவு காலேஜ் இருக்கு. நீ ஏன் இந்த காலேஜ் தான் வேணும்னு அடம் பிடிக்கிற என்றான். அபி, அண்ணா என் க்ளோஸ் ஃப்ரண்டு சுஜி இங்குதான் படிக்கிறாள் என்று சுஜியை
பார்த்துவிட்டு, அண்ணா அதோ என் ஃப்ரெண்ட் நிற்கிறாள். அவளை உனக்கு இன்டர்டூயூஸ் பண்றேன் என்று கூட்டி சென்றாள். துருவ் மித்ரனை பார்த்து, என்னடா மச்சான் நீ எங்க இங்கே என்றான். மித்ரன் சுஜியை காலேஜ் சேர்த்துவிட வந்தேன் என்றான். துருவ் நானும் என் தங்கச்சிய காலேஜ் சேர்த்துவிட வந்தேன் என்றான். சுஜி ஷாக்காகி துருவ் அண்ணா அபி உங்க தங்கச்சியா ? என்றாள். நால்வருக்குமே அதிர்ச்சி தான். பின் துருவும் மித்ரனும் அட்மிஷன் போட்டுவிட்டு கிளம்பினர்.....


நாட்கள் வேகமாக சென்று கொண்டிருந்தது. சுஜி காலேஜ் சேர்ந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. சுஜி வகுப்பில் யாரோ ஒரு பையனுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள். அனைவரும் இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் அங்கு வந்த அபிக்கு இதைப் பார்த்து கோபம் வந்தது. அபிக்கு சுஜி என்றால் அவ்வளவு பிரியம் . அவளுக்காக தான் அக்ரி படிக்க வேண்டும் என்ற தனது ஆசையை துறந்து மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறாள்.....
வேகமாக சென்ற அபி, என்ன நடந்தது? ஏன் என கூட கேட்காமல் கௌதம் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை அறைந்தாள். அபி அவனை அறைந்த அறையில், அடி வாங்கியவனுக்கு தலையைச் சுற்றி பட்டாம்பூச்சி பறந்தது. சுஜி பதறிக்கொண்டு அபியிடம், ஏன்டி அவனை அடிச்ச என்றாள். அபி, என் முன்னாடியே அவன் உன் கூட சண்டை போட்டு உன்னை அடிக்க வர்றான் என்றாள். சுஜி தலையில் கைவைத்து ஐயோ! இப்படி புரியாமல் பண்ணிட்டியே. இங்கே என்ன நடந்தது தெரியுமா? இவன் என் அத்தை பையன் கௌதம். சின்ன வயசுல இருந்து நாங்க ஃப்ரண்ட்ஸ். மாமாவுக்கு டிரான்ஸ்பர் கிடைச்சு வேற ஊருக்கு போயிட்டாங்க. இவன் இப்போ நம்ம கூட கிளாஸ்ல படிக்கத்தான் இங்க வந்து இருக்கான். அவன் அத்தை மாமாவை பார்க்க கூப்பிட்டான். நான் இப்பவே கிளாஸ் கட் அடித்துவிட்டு போலாம்ன்னு சொன்னேன். ஆனால் அவன் சாயங்காலம் போகலாம் என்றான். அதான் எங்களுக்குள்ள சண்டை என்றாள். அபி, ஐயோ எதுவும் தெரியாம இப்படி கைநீட்டிவிட்டோமே என திரு திருவென முழித்துக் கொண்டு கௌதமை பார்த்தாள். அவன் இவளை முறைத்துக் கொண்டிருந்தான். அபி என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து சுஜியின் பின்னால் ஒழிந்தாள். கௌதம் அவளை இழுத்து முன்னாடி நிற்கவைத்து, உனக்கு அறிவே இல்லையா? இப்படிதான் அடிப்பியா? இங்க பாரு என் கண்ணத்த எப்படி சிவந்து இருக்கு என காட்டினான். அபிக்கு குழந்தை போன்ற அவன் செய்கையில் சிரிப்பு வந்தது. சிரிப்பை அடக்கிக் கொண்டு அவன் கன்னத்தை பார்த்தாள். அவளின் ஐந்து விரல்களும் பதிந்து இருந்தது. அவள் அவன் கன்னங்களை வருடி சாரி என்றாள். கௌதம் பரவாயில்லை விடு நீ வேணும்னா பண்ண என்றான். ஐ ஆம் கௌதம் என தன் கையை நீட்டினான். அபியும் கையை நீட்டி அறிமுகம் செய்தாள். இருவரும் இன்றிலிருந்து பிரண்ட்ஸ் என்றனர். சுஜி இதை பார்த்துவிட்டு, ஹலோ ஹலோ என்ன? என்னை ரெண்டு பேரும் டீல்ல விட்டுடிங்க என்றாள். சுஜி சரி வாங்க காபி சாப்பிட்டு விட்டு வரலாம் என கேண்டீனுக்கு கூட்டி சென்றாள்....கௌதம் தான் காபி வாங்கிக் கொண்டு வரேன் என்று எழுந்து சென்றான். அபி ஏதோ கூற வாயை எடுக்க, சுஜி, நீ என்ன கேட்க வரேன்னு எனக்கு தெரியும். அவன் இப்படி குழந்தை தனமா இருக்கான்னு தானே . அவன் சின்ன வயசிலே இருந்தே அப்படி தான். எதையும் மனசுல வச்சிக்க தெரியாது. சூது வாது தெரியாது. ஆனா ரொம்ப நல்லவன் என்றாள். இவன் ஒரு வளர்ந்த குழந்தையாகவே தெரிந்தான் அபிக்கு. கௌதம் கையில் காபியோடு வந்து கொண்டிருந்தான் . அபி இமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். கௌதம் காபியை நீட்ட, அப்போதுதான் நினைவு திரும்பினாள். காலேஜ் முடிந்ததும் சுஜியுடன் அபியையும் கொளதம் தன்னுடன் வீட்டிற்கு அழைத்து சென்றான். கௌதம் வீட்டிற்கு சென்றதும் அத்தை என ஓடி சென்று கட்டிக்கொண்டாள் சுஜி. கௌதம் அதைபார்த்து , சுஜியை தன் தாயிடமிருந்து பிரித்து, இது என் அம்மா நான் தான் ஃபர்ஸ்ட் என கட்டிக்கொண்டான். பின் சிறிது நேரம் பேசிவிட்டு கௌதம் அவர்கள் இருவரையும் வீட்டில் விட்டு வரச் சென்றான். முதல் அபியை வீட்டில் விட்டவன், அபி வீட்டில் உள்ளே வருமாறு அழைக்க இன்னொரு நாள் வரோம். நாங்க இப்ப கிளம்புறோம் டைம் ஆயிடுச்சு என்று விட்டு இருவரும் கிளம்பினர்.....யாழினி வீட்டில் கௌதமை பார்த்த அனைவருக்கும் மகிழ்ச்சி. கௌதம் மங்களத்தை பார்த்து பாட்டி என கட்டிக்கொண்டான். மங்களம் போடா நான் உன்கூட பேசமாட்டேன். இவ்வளவு நாள் எங்க போயிருந்த என்னை பார்க்க வராம என்று கோவித்துக் கொண்டார். கௌதம் அவரை கெஞ்சி கொஞ்சி சமாதானப் படுத்திக் கொண்டிருந்தான்.....
அப்போது மித்ரனும் யாழினியும் வர கௌதம் கதவின் பின்னே ஒளிந்து கொண்டான். யாழினி நுழைந்ததும் பின்னால் இருந்து அவளை தூக்கி யாழினி நான் வந்துட்டேன் என்று கத்தினான். யாழினிக்கு அவனைப் பார்த்ததில் ஆனந்த அதிர்ச்சி. மங்களம் இன்னமும் இவன் வளர்ந்த குழந்தை மாதிரியே இருக்கான் என நினைத்துக்கொண்டார். பின் சிறிது நேரம் கௌதம் பேசிவிட்டு வீட்டுக்கு கிளம்பினான்......
சுஜி, அபி கௌதம் மூவரும் மிகவும் நெருக்கமான நண்பர்கள் ஆகினர். நாட்களும் அதன் போக்கில் சென்றது. அபிக்கு கௌதமை மிகவும் பிடித்திருந்தது. அவனது குழந்தைத்தனமான செய்கைகளை மிகவும் ரசித்தாள். அபியும் அடிக்கடி யோசித்தாள். இவனை ஏன் நமக்கு இவ்வளவு பிடித்து இருக்கு, 6 அடி உயர ஆண்மகன் குழந்தை தனமாக நடந்து கொள்கிறான் என்று யோசித்தாள். ஆனால் அவளுக்கு எதுவுமே விடை கிடைக்கவில்லை. அவன் செய்கையால் அவனை இன்னும் ரசிக்க ஆரம்பித்தாள்....ஒருநாள் ப்ரொஃபஸர் டிஸ்கஷன் ரூம்க்கு அழைத்துச் சென்று மனித உடல் உறுப்புகளின் அனாடமியை விளக்கிக் கொண்டிருந்தார். கௌதம் அங்கிருந்த கெடாவரை பார்த்ததும் பயந்து பக்கத்திலிருந்த அபியை கட்டி பிடித்துவிட்டான். அபிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. எல்லோரும் தன்னை பார்ப்பதை உணர்ந்து என்ன செய்வதென்று தெரியாமல் அவன் முதுகை வருடி கௌதம்பயப்பட ஒன்றுமில்லை என்று அவனை விலக்கினாள். அந்த ப்ரொஃபஸருக்கு அவனை பற்றி நன்றாக தெரியும் என்பதால் அவர் ஒன்றும் சொல்லவில்லை. அபிக்குத்தான் அன்று முழுவதும் என்னவோ போலிருந்தது.....என்ன புது வித உணர்வாக இருக்கு என மண்டையைப் போட்டு குழப்பிக் கொண்டிருந்தாள் அபி. கடைசியில் தனக்கு அவன் மேல் இருப்பது காதல் என தெரிந்து கொண்டாள். அது புரிந்ததிலிருந்து அவனை பார்க்கும் போதெல்லாம் இன்ப அவஸ்தையை அனுபவித்து கொண்டிருந்தாள். அவன் அவளுக்காக செய்யும் சிறு சிறு உதவிகள் கூட அவளுக்கு பேரானந்தத்தை கொடுத்தது. சில சமயம் அவனது செய்கைகள் அவளுக்கு கவலையைத் தந்தது. இவனை திருமணம் செய்ய வீட்டில் சம்மதிப்பார்களா? என்று நினைத்து கவலையாக அமர்ந்திருந்தவள் துருவ் அழைப்பதை கூட அவள் கவனிக்கவில்லை. அவன் உளுக்கிய பின்புதான் சுயநினைவு பெற்றாள். துருவ் என்னவென்று விசாரிக்க, அவளுக்கு அழுகை வந்தது எப்படி சொல்வதென்று தெரியாமல். துருவ் அவளை சமாதானபடுத்தி என்ன நடந்தது என்று கேட்டான். அபி அவனை சந்தித்ததிலிருந்து இன்று நடந்தது வரை கூறினாள். இதை கேட்டதும் துருவ் அவளை அணைத்து ஆறுதல்படுத்தி நீ கவலைப்படாத. நீ படிச்சு முடிச்ச பிறகு நானே ரெண்டு பேர் வீட்லயும் பேசி உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என வாக்களித்தான். இப்போது படிப்பில் கவனத்தை செலுத்து என்று கூறினான். அபிக்கு தெளிவு பிறந்தது. மீண்டும் பழையபடி சந்தோசமாக அவனுடன் பழக தொடங்கியிருந்தாள்....
வழக்கம்போல் எப்பவும் செய்ற வேலையை நம்ம மித்ரன், திவி, சுபா, ஆகாஷ் செஞ்சிட்டு இருந்தாங்க. அதாங்க அவங்க கதை அடிச்சிட்டிருந்தாங்க. வேகமாக ஆபீஸில் நுழைந்த துருவ் யாழினியை தேடினான். மித்ரன் என்ன துருவ் உன் ஆபீஸ்ல இருக்க நேரத்தை விட இந்த தான் அதிக நேரம் இருக்க போல என்றான். துருவ் ஏன் பேச மாட்ட. உனக்கு உன் ஆளு வீட்டிலேயே இருக்கு. எனக்கு அப்படியா? என்றான். மித்ரன் உனக்கே அடுக்குமா இது? ஆளு கூட இல்லேன்னு பேசுற மூஞ்சிய பாரு. மாசத்துல 25 நாள் எங்க வீட்டிலதான் சாப்பிடுறது. இதுல வீட்டில் பண்ற தொல்லை பத்தலன்னு ஆபீஸ்க்கு வந்து தொல்லை பண்ற என்றான். துருவ் சிரித்து விட்டு மச்சி முன்னாடி சொன்னது கூட நான் ஒத்துக்குவேன்டா. ஆனால் இதை ஆபீஸ்னு மட்டும் சொல்லாதடா என கூறினான். மித்ரன் முறைத்துவிட்டு, ஏன்டா எங்க ஆபீஸ்க்கு என்ன குறைச்சல் என்றான். துருவ் இங்க எல்லாமே குறை தாண்டா. எந்த ஆபீஸ்ல யாவது இப்படி செல்ப் ஃபுல்லா ஸ்னாக்ஸ் சாப்பிட அண்ட் ரெஸ்ட் எடுக்கிறதுக்கு பெட்ரூம் இருக்குமா? என்று விட்டு யாழினி கேபினை நோக்கி நடந்தான். திவ்யா, உங்க கூட ஹரினு ஒரு லூசு ஒன்னு இருக்குமே அது எங்க என்றாள். துருவ், அவன் ஆபீஸ்ல இருக்கான் திவ்யா என்றான். திவ்யா அப்படியே அவனை ஆபீஸ்ல இருந்துக்க சொல்லிடுங்க. அவனுக்கு நைட் சாப்பாடு கிடையாது. காதலிக்கும் போது தான் இவன் இப்படி இருந்தான். ஆனா கல்யாணத்துக்கு பிறகும் லூசு மாதிரி தான் பண்றான். அவன் வீட்டுக்கு வந்து முழுசா ரெண்டு நாளாச்சு என்றாள். ஆமாங்க நம்ம திவ்யாவுக்கும் ஹரிக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. திவ்யா வீட்ல அவங்க அப்பா ஒத்துக்கவே இல்லை. திவ்யாவும் அவள் அம்மாவும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி, நம்ம வானரங்கள் நடுரோட்டில் போராட்டம் நடத்தி, திவ்யாவை தற்கொலை நாடகம் போட வச்சு ஒரு வழியா கல்யாணத்தை ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் முடிச்சாங்க. துருவ் சிரித்துக்கொண்டு, இந்த நல்ல விஷயத்தை மட்டும் அவன்கிட்ட சொன்னேன், பையன் துள்ளிகுதிப்பான் சந்தோசத்துல என்றான். திவ்யா துருவ்வை முறைத்தாள் . துருவ் பின்ன என்னமா? ரெண்டு நாளைக்கு முன்னாடி புலாவ்னு எதையோ செஞ்சியே, அதை சாப்பிட்டு விட்டு வந்தவன் அன்னைக்கு புல்லா ஆபீஸ்ல வாந்தி எடுத்துக் கொண்டுதானிருந்தான். இன்னைக்கு தான் கொஞ்சம் பரவாயில்லை. ஆனா ரொம்ப புலம்பறான் மா அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிட்டேனு ஃபீல் பண்றான். திவ்யா 'அப்படியா சொன்னான், அவனுக்கு இருக்கு வீட்டுக்கு வரட்டும் என்றாள். துருவ் சிரித்து கொண்டே யாழினி அறைக்குள் நுழைந்தான்......
கலாட்டாக்கள் தொடரும்.....