கல்யாண கலாட்டா - கதை திரி

#16
ஹாய் பிரெண்ட்ஸ்,

நமது தளத்திற்கு புது வரவான ஜானு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..அவர்களின் "கல்யாண கலாட்டா" கதையின் பதிவுகள் இங்கு பதிவிடப்படும்.ஹரியும் திவ்யாவும் திவ்யா வீட்டுக்கு கிளம்பினர். மித்ரன் ஹரியிடம், ஒன் மினிட் என்றான். ஹரி என்னடா மச்சான் என்றான். மித்ரன் பதில் சொல்லாமல், ஹரியைத் திருப்பித் திருப்பி மேலும் கீழுமாக பார்த்தான். ஹரி என்னடா மச்சான் ஏன் என்னை இப்படி மேலேயும் கீழேயும் பாக்கிற என்றான். மித்ரன் ஒன்னும் இல்ல மச்சான், நீ அவ வீட்டுக்கு பேச போறே. நாளைக்கு எப்படி வருவன்னு தெரியலை. அதான் உன்னை ஒரு தடவை முழுசா பார்க்கலாமே என்றான். ஹரி பீதி அடைந்து, என்னடா மச்சான் இப்படி என்ன பயமுறுத்துற என்றான். யாழினி ஹரியிடம் ஆல் த பெஸ்ட் அண்ணா என்றாள். ஹரி எது வந்தாலும் நான் பாத்துக்கிறேன் என்று திவியுடன் கிளம்பிவிட்டான்.....

மறு நாள் வழக்கம் போல எல்லோரும் கேண்டீனில் உட்கார்ந்து கதையளந்துட்டு இருந்தாங்க. எல்லோரும் வந்துவிட்டனர் ஹரியை தவிர. மித்ரன் திவியிடம் கேட்டான், பங்கு ஹரிய எங்க. நேத்து உங்க வீட்டில என்ன நடந்துச்சு . அப்பாவும் மகளும் சேர்ந்து என் ஃப்ரண்ட என்னடி பண்ணிங்க என்றான். திவ்யா நாங்க எதுவும் பண்ணல. அவன் வந்தான், பேசினான் பர்மிஷன் வாங்கி குடுத்துட்டு போயிட்டான் என்றாள் அசால்டாக தோளைக் குலுக்கிக் கொண்டு.....

ஹரி வந்து கொண்டிருந்தான் அவர்களை நோக்கி. சிவா அவன் வருவதை பார்த்துவிட்டு, ஹரி வந்து விட்டான் பாருங்க என்றான். ஹரி அங்கு வந்து திவ்யா பக்கத்தில் இடம் இருந்தும், அந்த சேரை எடுத்து சிவாவின் அருகில் போட்டு அமர்ந்தான். மித்ரன் அவனைப்பார்த்து, என்ன மச்சி நேத்து திவ்யா வீட்டுக்கு போனதோடு ரிப்லக்க்ஷன்தானா இது என்றான். ஹரி திவ்யாவை முறைத்துக் கொண்டிருந்தான். திவ்யா அவனை பார்க்காதது போல நடித்துக் கொண்டிருந்தாள்......
சிவா ஹரியிடம், மச்சி என்னடா நடந்துச்சு என்றான். ஹரி திவ்யாவை பார்த்து, குடும்பமா இது கொலைகாரக் குடும்பம் டா என்றான். சிவா அப்படி என்னடா பண்ணாங்க என்றான். ஹரி, மச்சி அவங்க அப்பா சரியான தேய்ஞ்சுபோன டேப்ரிகார்டுடா. அவ அப்பா என்ன கேள்வி கேட்டே கொன்னுட்டாருடா மனுஷன். அவர் பேசப்பேச என்னை யாரும் தேட வேண்டாம் என்று எழுதிவைத்து விட்டு அங்கிருந்து ஓடிடலாம் போல இருந்துச்சுடா. அவர் பேசின பேச்சை கூட நான் விட்டுடுவேண்டா. கடைசியில் நான் கிளம்பும்போது, வீட்டுக்கு வந்துட்டு தம்பி எதுவும் சாப்பிடாமல் போறீங்க. இருங்க தம்பி திவ்யாவை காப்பி போட சொல்றேன்னு சொன்னார். நானும் சரி பேசின பேச்சுக்கு காபிய கொடுக்கிறாரே, சரி குடிச்சிட்டு வீட்டுக்கு தெம்பாக போகலாம்னு நினைச்சேன். அவ காபின்னு ஒன்னு குடுத்தா பாரு, அத குடிச்சிட்டு முழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் நான் பட்ட பாடு இருக்கே. அதை குடிச்சுட்டு, நான் இப்போ உயிரோட இருக்கேன்னா போன ஜென்மத்துல நான் செஞ்ச புண்ணியம் தான் காரணம் என்றான்.....
அவள் ஃபர்ஸ்ட் டைம் அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகும்போதே, தெரு முனையில் இறக்கி விட சொன்னாலே அப்பவே நான் யோசிச்சிருக்கனும் என்றான். அவன் சொல்வதை கேட்டு அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். திவ்யா ஹரியை முறைத்து, ஏன் என் காபிக்கு என்ன குறை என்றாள். ஹரி அவளை கொலை வெறியோடு முறைத்து, அதை காபி என்று சொன்ன அந்த கடவுளுக்கே அடுக்காது. அதை கலனிதண்ணீண்ணு என்று சொல்லி ஊத்துனா மாடு கூட அதை குடிக்காது. இன்னொரு தடவை காப்பின்னு சொன்ன குமட்டில் குத்தி விடுவேன் என்றான்.......
யாழினி திவ்யாவிடம், பங்கு அப்படி என்னத்த பங்கு நீ காப்பில போட்ட என்றாள். திவ்யா நான் ஒன்னும் பண்ணல பங்கு. வீட்ல பால் இல்ல பங்கு. பால் காய்ச்சின சட்டி அடுப்பில இருந்துச்சு. பால் வாங்க டைம் ஆகிடுமே. அத வாங்கப் போனால், அந்த டைம்ல எங்க அப்பா அவனை பேசியே அறுப்பாருனு சொல்லி, பால் சட்டியில் கொஞ்சம் தண்ணி ஊத்தி கழுவி, அதுல அவனுக்கு காபி போட்டேன். அப்புறம் சக்கரைய கானோம் தேடினேன். கொஞ்சம் கல்கண்டு இருந்துச்சு. அதை தான் அவனக்கு காபி போட்டு கொடுத்தேன் என்றாள்......
ஹரி பொங்கி எழுந்து, அடிப்பாவி எனக்கு கழுவுன தண்ணீலயா காபி போட்டு கொடுத்த என்றான். இதைக் கேட்டு அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்..........

திவ்யா என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தாள். ஹரி இதெல்லாத்தையும் கூட மன்னித்து விட்டுடுவேன்னு வச்சுக்கோ. நான் வாசலுக்கு வெளியே போனபோது ஓடிவந்து என்னை கூப்பிட்டாள். நான் கூட பர்மிஷன் வாங்கி கொடுத்ததற்கு தேங்க்ஸ் சொல்ல கூப்பிட்டாலோன்னு நினைச்சு நின்னேன். ஆனால், அவ என்ன கேட்டா தெரியுமா? என்றான். எல்லோரும் ஆவலாக அப்படி என்ன கேட்டாள் என்றனர். அது அவளையே கேளுங்க என்றான் ஹரி.
திவ்யா முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு, காபி நல்லா இருந்ததா என கேட்டேன் என்றாள். மித்ரன் ஹரியிடம், மச்சி நான் நேத்து சொன்னேனே கேட்டியா? அனுபவசாலி சொன்னா கேட்கணும். அவள் அப்படி அழுது நாடகம் போட்டப்ப, இத்தனை பேர் இங்க அமைதியாக வேடிக்கை பார்த்தோம். நீதான் பெரிய வள்ளலார் மாதிரி வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற நினைச்சுக்கிட்டு, அவளுக்கு உடனே ஹெல்ப் பண்ண போய்ட்ட என்றான். ஹரி முகத்தை சோகமாக வைத்து, இனிமே இவ வீடு இருக்கிற தெரு பக்கமே எட்டிப் பார்க்க மாட்டேன் என்றான்.......

இப்படியே பேசி பேசி டைம் ஆகி விட, யாழினி தான், ஹே கய்ஸ் டைம் ஆயிடுச்சு. கிளாஸ்க்கு லேட்டா போனால், அந்த தகரடப்பா தலையன் ரம்பமே இல்லாம அறுத்து, சவப்பெட்டியே இல்லாம புதைச்சுடுவான். வா பேசாம கிளாஸ்க்கு போகலாம் என்றாள்......
அவர்கள் கிளாஸ்க்கு சென்று முதலில் நுழைந்தவுடன், மித்ரன் பங்குகளா வாங்க போகலாம். நம்ம மாத்தி வேற கிளாசுக்கு வந்து விட்டோம் என்று நினைக்கிறேன் என்றான். யாழினி, பங்கு இங்க பாரு. நம்ம கிளாஸ்தான், இங்க பாரு நேம் போர்டு கூட இருக்கு என்றாள். மித்ரன் இல்ல பங்கு, இங்க பாரு நம்ம கிளாஸா இது. எல்லோரும் என்னமோ ஓசில ஏசி காத்து வாங்குற மாதிரி ஜாலியா இருக்காங்க. அங்க பாரேன் பசங்க முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரியுது என்றான்.....
திவ்யா அட வா பங்கு, நாமளும் போய் என்ன விஷயம் என்று தெரிஞ்சிட்டு, மகிழ்ச்சியை குளிர்ச்சியா கொண்டாடலாம் என்று உள்ளே நுழைந்தாள். எல்லோரிடமும் என்ன விஷயம் என்று கேட்டதற்கு, டூர்க்கு இன்சார்ஜ் ராத மேம் வராங்களாம் என்றனர். இதைக் கேட்டதும் மித்ரன் துள்ளி குதிக்க ஆரம்பித்து விட்டான். மித்ரன், அந்த தகரடப்பா தலையன் டூர்ல நம்மள என்ன பண்ண போறாருன்னு பயந்துட்டே இருந்தேன். இப்ப ராதா மேமும் கூட வராங்களாம். அந்த தகரடப்பா தலையன் ராதா மேம் பின்னாடி சுத்துவான். நாம ஜாலியா ஊர் சுத்தலாம் என்றான். கிளாஸ் முடிஞ்சு எல்லாரும் வீட்டுக்குப் போய்ட்டாங்க........

யாழினி சந்துருவை, அண்ணா என அழைத்தாள். சந்துரு அவளை சந்தேகமாக பார்த்து, என்ன யாழினி குட்டி, என்னால உனக்கு என்ன காரியம் ஆக வேண்டுமென்றான். யாழினி, எப்படி அண்ணா என்றாள். சந்துரு இதென்ன பெரிய விஷயம் யாழினி. சின்ன வயசுல இருந்து உன்னை பார்க்கிறேன். நீ எப்போ எப்படி நடந்து கொள்வேன்னு எனக்கு தெரியாதா என்றான்........

யாழினி, அண்ணா எங்க டிபார்ட்மெண்ட்ல டூர் கூட்டிட்டு போறாங்க. நீ தான் எனக்கு அப்பா கிட்ட பர்மிஷன் வாங்கி தரனும் என்றாள். சந்துரு, என்னால முடியாதுப்பா. ஏற்கனவே ஸ்கூல் படிக்கும்போது ஒரு தடவை டூர்க்குப் போய் பிரச்சனை இழுத்துவிட்டு, அதுல என் தலைதான் உருண்டுச்சு. நான் பர்மிஷன் வாங்கி தர மாட்டேன் என்று சொல்லிவிட்டான்.........மித்ரன் சந்துருவிடம், சந்துரு என்னடா? இப்படி சமயம் பார்த்து காலை வாரிவிட்றயே. மித்ரன் சந்துருவிடம், சந்துரு உனக்கு ஞாபகம் இருக்கா?. நீ சின்ன வயசுல தூங்கும்போது பெட்ல உச்சா போயிட்டு அம்மா திட்டுவாங்கன்னு பயந்து, என் மேல பழிய போட்ட. நான் கூட நம்ம சந்துரு தான் என்று சொல்லி உனக்காக அடி வாங்கினேன் ஞாபகம் இருக்கா. அந்த மித்ரனுக்காக நீ பர்மிஷன் வாங்கி தர மாட்டியா? என்றான். அதுக்கப்புறம் என மித்ரன் ஆரம்பிக்க, சந்துரு டேய் போதும்டா நிறுத்துடா. உனக்கு பர்மிஷன் தானே நான் வாங்கி தரேன் . என் இமேஜை டேமேஜ் பண்ணாத என்றான் சந்துரு.....
சந்த்ரு வீட்டில் பேசி டூர்க்கு பர்மிஷன் வாங்கி கொடுத்து விட்டான். டூர்க்கு கிளம்பும் நாளும் வந்தது. காலை ஐந்து மணிக்கு அலாரம் அடித்தவுடன் எழுந்து அதை அணைத்து விட்டு குளித்து கிளம்பி யாழினியை எழுப்ப போனான் மித்ரன். ....
யாழினி, நல்லா இழுத்து போத்திட்டு தூங்கிட்டு இருந்தாள். மித்ரன் யாழினி ரூமுக்கு சென்று , யாழினியை பங்கு ஏய் பங்கு என எழுப்பினான். யாழினி தூக்கத்தில், பேசாம இரு துருவ் எனக்கு தூக்கம் வருது. நாளைக்கு பேசிக்கலாம் என்றாள். மித்ரன் என்னது துருவ்வா? அடிப்பாவி அவன் உன்கிட்ட மூஞ்சி கொடுத்து பேசாதப்பவே, தூக்கத்துல அவன் பேர உளர்ர. இதுங்க ரெண்டையும் சேர்த்து வச்ச பிறகு நான் என்ன பாடு பட போறேன்னு தெரியலயே என்று புலம்பினான்....

மித்ரன் யாழினி காதருகில் சென்று, யாழினி துருவ் உன்னை விட்டுட்டு ஊருக்கு போய்விட்டான் என்று சத்தமில்லாமல் கூறினான். யாழினி பதறிக் கொண்டு எழுந்து, துருவ் என்னை விட்டுட்டு ஊருக்கு போயிட்டானா? என்றாள்......
மித்ரன் சிரித்துக்கொண்டு, உன்னை எழுப்பதான் அப்படி சொன்னேன் என்றான். யாழினி மித்ரனை முறைத்தாள். மித்ரன், பங்கு இப்படியே என்னை முறைச்சுட்டு இருந்த நான் சொன்னது உண்மையாகிடும். சீக்கிரம் கிளம்பு என்றான். இருவரும் கிளம்பி கீழே செல்ல எத்தனிக்கையில், மாமா என்ற குரல் கேட்டது. மித்ரன் திரும்பிப் பார்த்தான். மது நின்று கொண்டிருந்தாள். யாழினி தலையில் கை வைத்துவிட்டாள். இன்னைக்கு நாம போன மாதிரி தான் என்று நினைத்துக் கொண்டாள்........
மது மித்ரனிடம் மாமா, பத்திரமா போயிட்டு வா மாமா என்று சோகமாக கூறினாள். மித்ரன் மதுவிடம் செல்லகுட்டி நாலு நாள் தான, சீக்கிரமா போய் விடும். நான் போயிட்டு உடனே வந்த மாதிரி இருக்கும். நீ இப்படி சோகமா இருந்தா மாமாக்கு எப்படி போக மனசு வரும். சிரிச்சுகிட்டே மாமா போயிட்டு வான்னு சொல்லு என்றான். மது சிரித்துக் கொண்டே, அவனை அணைத்து விட்டு, பார்த்து போயிட்டு வா மாமா என்றாள்......
யாழினி, உடனே அடியே நான் ஒருத்தி இங்க நிக்கிறேன் என்றாள். மது உன்னை யார் இங்க நிக்க சொன்னா. இண்டீசண்டா பிகேவ் பண்ணாம கீழ போடி மாமா வருவாரு என்றாள். யாழினி மதுவிடம், நான் உன் அக்காடி என்றாள். மது, அத நான் சொல்லணும், தங்கச்சியை பார்த்து இப்படி பொறாமைப்படுறியே, கடைசி வரைக்கும் நீ சிங்கிள் தாண்டி என்றாள். யாழினி அவளை முறைத்துவிட்டு, இதற்காகவே நான் வரும்போது கமிட் ஆகிட்டு வரேன் பாரு என்று கீழே சென்றுவிட்டாள். தாய்மார்களின் அறிவுரையை ஒரு காதில் வாங்கி அதை மறு காதில் விட்டு விட்டு இருவரும் ஸ்கூட்டியில் கிளம்பினர்..........

தொடரும்......
 
#17
ஹாய் பிரெண்ட்ஸ்,

நமது தளத்திற்கு புது வரவான ஜானு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..அவர்களின் "கல்யாண கலாட்டா" கதையின் பதிவுகள் இங்கு பதிவிடப்படும்.

மித்ரன் ஹரி தலையை சிலுப்பியதை பார்த்துவிட்டு, மச்சி இப்ப எதுக்கு இப்படி தலையை சிலுப்பினன்னு எனக்கு தெரியுமே என்றான். ஹரி, என்ன தெரியும் உனக்கு என்றான். மித்ரன், இப்பவே கழுவின காபிய கொடுக்கிறா, கல்யாணத்துக்கு அப்புறம் சட்டிய கழுவி குழம்பு ஊத்துவான்னு தானே நெனச்ச என்றான். ஹரி அதிர்ச்சியாகி எப்படி டா? என்றான். மித்ரன் தோளைக் குலுக்கிக்கொண்டு, நாம் எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைடா என்றான்.......

துருவ் தோளில் தூங்கிக் கொண்டிருந்த யாழினி அவன் மடியில் படுத்து உறங்க ஆரம்பித்துவிட்டாள். மித்ரன் தான் வந்த வேலை முடிந்தது என கண்ணை மூடி அமர்ந்து கொண்டான். துருவ் அவளை தூக்கி அமர வைக்க எண்ணிக் கையைக் கொண்டு போக யாழினி அவன் கையை பிடித்துக்கொண்டு இடையை கட்டிக்கொண்டு உறங்கி விட்டாள்.துருவ் என்ன செய்வது என்று தெரியாமல் யாழினி முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
துருவ் கையை எடுக்க முயற்சிக்க, யாழினி டிஸ்டர்ப் பண்ணாம பேசாம இரு துருவ். உனக்கு எப்ப பார்த்தாலும் இதே வேலையா போச்சு என உளறினாள். துருவ் அடிப்பாவி! என வாயில் கை வைத்து விட்டான். நான் என்னமோ இவளை தினமும் டிஸ்டர்ப் பண்ற மாதிரி பேசுறாள். இதை யாராவது கேட்டா என்னை பத்தி என்ன நினைப்பாங்க. தூக்கத்தில் கூட என் பேரை கரெக்டா சொல்றாள். ஒருவேளை இவ என்ன லவ் பண்றாலோ என நினைத்து விட்டு, பின் இருக்காது. மித்ரன் தான் அன்னைக்கு சொன்னானே இவளுக்கும் அவனை பிடிக்கும்னு என அவனே பதிலும் சொல்லிக்கொண்டான். துருவிற்கு சீக்கிரமாக எழுந்ததால் தூக்கம் வர அவள் மீதே படுத்து தூங்கிவிட்டான்......

மணி பத்தாகிவிட சாப்பிடுவதற்காக பஸ்ஸை ஒரு ஓட்டல் முன் நிறுத்தினர். தகர டப்பா தலையன், சாரி ப்ரொஃபஸர் வந்து எல்லாரையும் சாப்பிட வருமாறு வெளியிலிருந்து அழைத்தார். மித்ரன் கண் முழித்துவிட்டான். யாழினி துருவைப் பார்த்து கண்ணை கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தான். நாம ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்கும்னு பயந்தோம். ஆனால் வந்த வேலை சீக்கிரம் முடிஞ்சுருச்சு என நினைத்துக் கொண்டு அவர்களை போட்டோ எடுத்து கொண்டான். பின்னாடி உக்காந்திருந்த ஹரியையும் திவ்யாவையும் பார்த்துவிட்டு இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே, இருந்தாலும் ஒரு போட்டோ எடுத்துக்குவோம். என்னைக்காவது யூஸ் ஆகும். அப்புறம் அவுங்களை எழுப்பிவிட்டு சாப்பிட அழைத்து சென்றான்.....
ஹோட்டலில் நுழைந்தவுடன் துருவிற்கு பக்கத்தில் சிவா அமர்ந்து கொண்டான். மித்ரன் சிவாவை முறைத்தான். சிவா எழுந்து ஆப்போசிட் சேரில் அமர்ந்துகொண்டான். துருவ் என்னவென்று பார்த்தான். சிவா, காத்து வரல டா மச்சி என்றான். துருவ் பக்கத்தில் இருந்த டேபிள் பேனை பார்த்துவிட்டு உனக்கு காத்து வரலையா? என்றான். சிவா நான் அப்படியா சொன்னேன் காத்து வருதுன்னு சொன்னேன் டா என்றான். மித்ரன், ஆமாடா மச்சான் காத்து வருதுன்னுதான் சொன்னான் டா என்றான். துருவ், பைத்தியம் மாதிரி பேசுறீங்க என்றான். யாழினி வந்து துருவ் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். திவ்யா ஹரி பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். மித்ரன் ஹரியிடம் என்ஜாய் மச்சி என்றான். திவ்யா புரியாமல் பார்க்க, ஹரி ஒன்னும் இல்ல அவனுக்கு நட்டு கழண்டுறுச்சு. அதான் அப்படி பேசுறான் என்றான். மித்ரன் எல்லோரிடமும் என்ன சாப்பிட வேண்டும் என்று கேட்டு, கடைசில யாழினியிடமும் கேட்க, அவள் நீ என்ன சாப்பிட போறியோ அதே எனக்கும் சொல்லு மாமா என்றாள். மித்ரன் அவளை முறைத்துவிட்டு பேரரிடம் ஆர்டரை சொன்னான். பின் யாழினி தலையில் ஒரு கொட்டு கொட்டி, இனிமே என்னை மாமானு கூப்ட அவ்வளவு தான் உனக்கு என்றான். யாழினி முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு ஏன் மாமா என்றாள். மித்ரன் யாழினி காதருகில் சென்று, பங்கு அந்த ஜூனியர் பொண்ணு ஹேமா உன் ஆளு பின்னாடி சுத்துறா தெரியும் இல்ல. அவளை துருவோட கேர்த்துவிட்றுவேன் என்றான். யாழினி பதறிக்கொண்டு, பங்கு என் தலையில் மண்ணை அள்ளி போட்றாத பங்கு. நான் சாப்பிடுறதுக்கு கூட வாய் திறக்க மாட்டேன் போதுமா என்றாள். சாப்பாடு வந்துவிட அனைவரும் சாப்பிட தொடங்கினர்........

சாப்பிட்டுக்கொண்டிருந்த மித்ரன் சிவாவிடம் கண்ணை காட்ட, சிவா துருவிடம் மச்சி, அந்த டேபிள் பேனை இப்படி கொஞ்சம் திருப்பி வைடா, காத்து வரலை என்றான். துருவ் அவனை முறைத்துவிட்டு, இப்போ தானடா காத்து வருதுன்னு சொல்லி அந்தப் பக்கம் போய் உட்கார்ந்த என்றான். சிவா சிரித்துவிட்டு, மச்சி அது அப்போடா, இப்ப நிறைய ஆள் இருக்காங்க. அதனால எனக்கு மூச்சு முட்டுது, ப்ளீஸ்டா பேனை திருப்பி வைடா என்றான்.....
துருவ் சரி வச்சு தொலைகிறேன் என ஃபேனை திருப்புவதற்கு திரும்ப, மித்ரன் யாழினியிடம் கண்ணை காட்ட, அவள் என்னவென்று தெரியாமல் பேவென முழிக்க, மித்ரன் உன்னலாம் வச்சுக்கிட்டு என தலையில் அடித்து விட்டு துருவ் தட்டையும் யாழினி தட்டையும் இடம் மாற்றிவிட்டான். கார்த்தி ஆவென்று பார்க்க, அவன் வாயில் இட்லியை அமுக்கவிட்டான் மித்ரன். துருவ் பேனை திருப்பி விட்டு, திரும்ப போக எல்லோரும் தட்டைப் பார்த்து சாப்பிட தொடங்கினர்....
துருவ் தட்டை பார்த்துவிட்டு, மச்சான் என்னடா தட்டு மாறிடுச்சு என்றான். சிவா என்ன தட்டு மாறிடுச்சு என்றான். துருவ், இல்லடா நான் சாப்பிட்ட தட்டை காணோம், இது வேற தட்டு என்றான். யாழினி இது எதையும் கவனிக்காமல், இல்லை இல்லை கவனிக்காத மாதிரி நடிச்சுட்டு சாப்பிட்டு இருந்தாள். சிவா டேய் லூசு இது நீ சாப்பிட்ட தட்டுதான் உளராதடா என்றான்....
துருவ், இல்லடா மச்சான் நான் முதல்ல இட்லி சாப்பிட்டுட்டு இருந்தேன். இப்ப தோசை இருக்கு என்றான். மித்ரன் மைண்ட் வாய்ஸில் இவ்வளவு செஞ்சு மண்டை மேல இருக்க கொண்டைய மறந்துட்டேனே என நினைத்து விட்டு, துருவிடம் இல்லடா மச்சான் நீ தோசைதான் சாப்பிட்டுட்டு இருந்த, தோசை சின்னதா இருக்கிறதால நீ இட்லினு நெனச்சுட்டா என்றான். துருவ், இல்லடா நான் பார்த்தேனே அது இட்லி தான்டா என்றான். மித்ரனுடன் சேர்ந்து எல்லோரும், மச்சி நீ தோசைதான் வாங்கின என்றனர். துருவ், குழம்பி ஒருவேளை நாம தோசை தான் வாங்குனமோ என நினைத்து விட்டு, யாழினி தட்டை பார்க்க அவ எல்லாத்தையும் காலி பண்ணி இருந்தாள். துருவ் புலம்பி விட்டு சாப்பிட தொடங்கினான். இது எதையும் கவனிக்காமல் சுபாவும் ஆகாஷும் கருமமே கண்ணாக இருந்தனர். அதாங்க சாப்பிட்டு இருந்தாங்க......

சிவா, மித்ரனிடம் நீ இப்ப என்ன காரியம் பண்ணிட்டு இருக்கன்னு தெரியுமா? என்றான். மித்ரன் நல்லா தெரியுது பங்கு என்றான். சிவா காரித்துப்பிவிட்டு எழுந்து சென்றுவிட்டான். திவ்யா இதையெல்லாம் காதில் வாங்காதது போல் அமுக்கிக்கொண்டு இருந்தாள். மித்ரன் திவ்யாவிடம், பங்கு என்ன அள்ளி அமுக்குற என்றான். திவ்யா அவனை முறைத்துவிட்டு, தன் வேலையைத் தொடர்ந்தாள்.
திடீரென்று அங்கு வந்த ப்ரொஃபஸர் யாழினியிடம், யாழினி இப்பவே என்ன வேணுமோ சாப்பிட்டுகோ. அப்புறம் அன்னைக்கு கிளாஸ்ல பண்ண மாதிரிலாம் பண்ணிடாதீங்க என்றார்.
இதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். துருவிற்கும் சிரிப்பு வந்துவிட்டது, வாயை மூடி சிரித்தான். யாழினி அவர்களை முறைத்தாள். எல்லோரும் அமைதியாகிவிட்டனர்.....
கை கழுவும் இடத்தில் திவ்யா யாழினியிடம், பங்கு போறதுக்குள்ள உன் ஆளை பைத்தியமாக்காம விடமாட்டாங்க போல என்றாள். யாழினி பரவாயில்லை பங்கு. பைத்தியம் ஆனாலும் என் பின்னாடியே சுத்தட்டும் என்றாள். எல்லோரும் சாப்பிட்டு பஸ்ஸில் ஏறிவிட்டனர், பஸ் புறப்பட்டது......

பஸ்ஸில் பாட்டை போட்டு எல்லோரும் டான்ஸ் ஆடினர். திவ்யாவும் மித்ரனும் செமையா என்ஜாய் பண்ணிட்டு இருந்தாங்க. மற்றவர்கள் கைதட்டி என்கரேஜ் பண்ணிட்டு இருந்தனர். திவ்யா ஆடுவதை பார்த்து ஹரிக்கு ஏனோ கோபம் வந்தது. எல்லா கேர்ள்ஸும் அமைதியா உட்கார்ந்து இருக்காங்க. இவ மட்டும் பையன் மாதிரி ஆடிட்டு இருக்கானு ஹரி தனக்கு தானே கேட்டுக்கொண்டான். அவ எப்படி போனால் எனக்கென்ன நான் ஏன் கோவப்படனும். ஆனாலும் அவன் மனம் சமாதானம் ஆகவில்லை. அவளை முறைத்துக் கொண்டு தான் அமர்ந்திருந்தான். மித்ரன். இதை கவனித்துவிட்டான். ஆடிக்கொண்டே திவியிடம், மச்சி உன் டியூப்லைட்டு எரிய ஆரம்பிச்சிருச்சு என்றாள். திவ்யா புரியாமல் விழித்தாள். மித்ரன், அட லூசு அங்க பாரு ஹரி உன்னை முறைச்சிட்டு இருக்கான் என்றான்.திவ்யா ஆடுவது போல அவனைப் பார்த்துவிட்டு, மித்துவிடம் மச்சி இப்பதான் இவனுக்கு பல்பு எரியுது. கொஞ்ச நேரம் கத்தவிடலாம் பங்கு. ஒரு ரொமான்டிக் சாங் போட சொல்லு பங்கு என்றாள்......
" வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும்
சுவாசிப்பதும்
உன் தயவால் தானே
ஏங்குகிறேன்
தேங்குகிறேன்
உன் நினைவால் நானே நான்.....
அடை மழை வரும் அதில் நனைவோமே

குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி
என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்பார்க்கும்......

என்று பாட்டை போட்டு திவ்யாவும் மித்ரனும் ரொமான்டிக்காக ஆடிக்கொண்டிருந்தனர். பஸ்ஸே ஓவென கத்தியது. இதைப் பார்த்ததும் துருவ் யாழினியை பார்த்தான். யாழினி கைதட்டி என்ஜாய் பண்ணிட்டு இருந்தாள். அதை பார்த்து துருவ்விற்கு குழப்பமாக இருந்தது. துருவ் தலையை பிடித்துகொண்டான். என்னடா இது கோபப்பட வேண்டியவ இப்படி என்ஜாய் பண்ணிட்டு இருக்காள் என தனக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தான். இங்கே ஹரி கோபத்தில் ஜன்னல் கம்பியை பிடித்துக் கொண்டிருந்தான். மித்ரன் திவியிடம், பங்கு உன் ஆளு ஜன்னல் கம்பியை கையோடு எடுத்து விடுவான் போல போய் உட்கார்ந்திரு என்றான். திவ்யா அவன் முகத்தை பார்த்து சிரித்து விட்டுபோய் அமர்ந்து கொண்டாள். யாழினி துருவ்வை பார்த்து என்ன ஆச்சு இந்த லூசுக்கு என நினைத்தாள். ஒரு வழியாக கொடைக்கானலில் இருக்க அந்த ரெசார்ட்டுக்கு வந்து சேர்ந்துட்டாங்க. எல்லோரும் ஒவ்வொருவராக இறங்கிச் சென்றனர்.....

நம்ம வானரப் படைகளும் இறங்கி நடந்து போயிட்டு இருந்தாங்க. அந்த. ரெசார்ட் மிக அழகாக இருந்தது. அந்த ரெசார்ட்டின் முன்புறம் வண்ண பூக்கள் குலுங்கிக் கொண்டிருந்தது. மித்ரன் வேகமாக நடங்க, ஏன் இப்படி அன்னநடை போட்டு இருக்கீங்க என்று வேகமாக சென்று, யாழினி காலைத் தட்டிவிட்டான். யாழினி பக்கத்தில் இருந்த துருவ் மேல விழப்போனாள். துருவ் அவளை தாங்கி பிடித்து மித்ரனை முறைத்தான்......
தொடரும்..........
 
#18
மித்ரன் ஹரி தலையை சிலுப்பியதை பார்த்துவிட்டு, மச்சி இப்ப எதுக்கு இப்படி தலையை சிலுப்பினன்னு எனக்கு தெரியுமே என்றான். ஹரி, என்ன தெரியும் உனக்கு என்றான். மித்ரன், இப்பவே கழுவின காபிய கொடுக்கிறா, கல்யாணத்துக்கு அப்புறம் சட்டிய கழுவி குழம்பு ஊத்துவான்னு தானே நெனச்ச என்றான். ஹரி அதிர்ச்சியாகி எப்படி டா? என்றான். மித்ரன் தோளைக் குலுக்கிக்கொண்டு, நாம் எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைடா என்றான்.......

துருவ் தோளில் தூங்கிக் கொண்டிருந்த யாழினி அவன் மடியில் படுத்து உறங்க ஆரம்பித்துவிட்டாள். மித்ரன் தான் வந்த வேலை முடிந்தது என கண்ணை மூடி அமர்ந்து கொண்டான். துருவ் அவளை தூக்கி அமர வைக்க எண்ணிக் கையைக் கொண்டு போக யாழினி அவன் கையை பிடித்துக்கொண்டு இடையை கட்டிக்கொண்டு உறங்கி uவிட்டாள்.துருவ் என்ன செய்வது என்று தெரியாமல் யாழினி முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
துருவ் கையை எடுக்க முயற்சிக்க, யாழினி டிஸ்டர்ப் பண்ணாம பேசாம இரு துருவ். உனக்கு எப்ப பார்த்தாலும் இதே வேலையா போச்சு என உளறினாள். துருவ் அடிப்பாவி! என வாயில் கை வைத்து விட்டான். நான் என்னமோ இவளை தினமும் டிஸ்டர்ப் பண்ற மாதிரி பேசுறாள். இதை யாராவது கேட்டா என்னை பத்தி என்ன நினைப்பாங்க. தூக்கத்தில் கூட என் பேரை கரெக்டா சொல்றாள். ஒருவேளை இவ என்ன லவ் பண்றாலோ என நினைத்து விட்டு, பின் இருக்காது. மித்ரன் தான் அன்னைக்கு சொன்னானே இவளுக்கும் அவனை பிடிக்கும்னு என அவனே பதிலும் சொல்லிக்கொண்டான். துருவிற்கு சீக்கிரமாக எழுந்ததால் தூக்கம் வர அவள் மீதே படுத்து தூங்கிவிட்டான்......

மணி பத்தாகிவிட சாப்பிடுவதற்காக பஸ்ஸை ஒரு ஓட்டல் முன் நிறுத்தினர். தகர டப்பா தலையன், சாரி ப்ரொஃபஸர் வந்து எல்லாரையும் சாப்பிட வருமாறு வெளியிலிருந்து அழைத்தார். மித்ரன் கண் முழித்துவிட்டான். யாழினி துருவைப் பார்த்து கண்ணை கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தான். நாம ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்கும்னு பயந்தோம். ஆனால் வந்த வேலை சீக்கிரம் முடிஞ்சுருச்சு என நினைத்துக் கொண்டு அவர்களை போட்டோ எடுத்து கொண்டான். பின்னாடி உக்காந்திருந்த ஹரியையும் திவ்யாவையும் பார்த்துவிட்டு இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே, இருந்தாலும் ஒரு போட்டோ எடுத்துக்குவோம். என்னைக்காவது யூஸ் ஆகும். அப்புறம் அவுங்களை எழுப்பிவிட்டு சாப்பிட அழைத்து சென்றான்.....
ஹோட்டலில் நுழைந்தவுடன் துருவிற்கு பக்கத்தில் சிவா அமர்ந்து கொண்டான். மித்ரன் சிவாவை முறைத்தான். சிவா எழுந்து ஆப்போசிட் சேரில் அமர்ந்துகொண்டான். துருவ் என்னவென்று பார்த்தான். சிவா, காத்து வரல டா மச்சி என்றான். துருவ் பக்கத்தில் இருந்த டேபிள் பேனை பார்த்துவிட்டு உனக்கு காத்து வரலையா? என்றான். சிவா நான் அப்படியா சொன்னேன் காத்து வருதுன்னு சொன்னேன் டா என்றான். மித்ரன், ஆமாடா மச்சான் காத்து வருதுன்னுதான் சொன்னான் டா என்றான். துருவ், பைத்தியம் மாதிரி பேசுறீங்க என்றான். யாழினி வந்து துருவ் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். திவ்யா ஹரி பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். மித்ரன் ஹரியிடம் என்ஜாய் மச்சி என்றான். திவ்யா புரியாமல் பார்க்க, ஹரி ஒன்னும் இல்ல அவனுக்கு நட்டு கழண்டுறுச்சு. அதான் அப்படி பேசுறான் என்றான். மித்ரன் எல்லோரிடமும் என்ன சாப்பிட வேண்டும் என்று கேட்டு, கடைசில யாழினியிடமும் கேட்க, அவள் நீ என்ன சாப்பிட போறியோ அதே எனக்கும் சொல்லு மாமா என்றாள். மித்ரன் அவளை முறைத்துவிட்டு பேரரிடம் ஆர்டரை சொன்னான். பின் யாழினி தலையில் ஒரு கொட்டு கொட்டி, இனிமே என்னை மாமானு கூப்ட அவ்வளவு தான் உனக்கு என்றான். யாழினி முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு ஏன் மாமா என்றாள். மித்ரன் யாழினி காதருகில் சென்று, பங்கு அந்த ஜூனியர் பொண்ணு ஹேமா உன் ஆளு பின்னாடி சுத்துறா தெரியும் இல்ல. அவளை துருவோட கேர்த்துவிட்றுவேன் என்றான். யாழினி பதறிக்கொண்டு, பங்கு என் தலையில் மண்ணை அள்ளி போட்றாத பங்கு. நான் சாப்பிடுறதுக்கு கூட வாய் திறக்க மாட்டேன் போதுமா என்றாள். சாப்பாடு வந்துவிட அனைவரும் சாப்பிட தொடங்கினர்........

சாப்பிட்டுக்கொண்டிருந்த மித்ரன் சிவாவிடம் கண்ணை காட்ட, சிவா துருவிடம் மச்சி, அந்த டேபிள் பேனை இப்படி கொஞ்சம் திருப்பி வைடா, காத்து வரலை என்றான். துருவ் அவனை முறைத்துவிட்டு, இப்போ தானடா காத்து வருதுன்னு சொல்லி அந்தப் பக்கம் போய் உட்கார்ந்த என்றான். சிவா சிரித்துவிட்டு, மச்சி அது அப்போடா, இப்ப நிறைய ஆள் இருக்காங்க. அதனால எனக்கு மூச்சு முட்டுது, ப்ளீஸ்டா பேனை திருப்பி வைடா என்றான்.....
துருவ் சரி வச்சு தொலைகிறேன் என ஃபேனை திருப்புவதற்கு திரும்ப, மித்ரன் யாழினியிடம் கண்ணை காட்ட, அவள் என்னவென்று தெரியாமல் பேவென முழிக்க, மித்ரன் உன்னலாம் வச்சுக்கிட்டு என தலையில் அடித்து விட்டு துருவ் தட்டையும் யாழினி தட்டையும் இடம் மாற்றிவிட்டான். கார்த்தி ஆவென்று பார்க்க, அவன் வாயில் இட்லியை அமுக்கவிட்டான் மித்ரன். துருவ் பேனை திருப்பி விட்டு, திரும்ப போக எல்லோரும் தட்டைப் பார்த்து சாப்பிட தொடங்கினர்....
துருவ் தட்டை பார்த்துவிட்டு, மச்சான் என்னடா தட்டு மாறிடுச்சு என்றான். சிவா என்ன தட்டு மாறிடுச்சு என்றான். துருவ், இல்லடா நான் சாப்பிட்ட தட்டை காணோம், இது வேற தட்டு என்றான். யாழினி இது எதையும் கவனிக்காமல், இல்லை இல்லை கவனிக்காத மாதிரி நடிச்சுட்டு சாப்பிட்டு இருந்தாள். சிவா டேய் லூசு இது நீ சாப்பிட்ட தட்டுதான் உளராதடா என்றான்....
துருவ், இல்லடா மச்சான் நான் முதல்ல இட்லி சாப்பிட்டுட்டு இருந்தேன். இப்ப தோசை இருக்கு என்றான். மித்ரன் மைண்ட் வாய்ஸில் இவ்வளவு செஞ்சு மண்டை மேல இருக்க கொண்டைய மறந்துட்டேனே என நினைத்து விட்டு, துருவிடம் இல்லடா மச்சான் நீ தோசைதான் சாப்பிட்டுட்டு இருந்த, தோசை சின்னதா இருக்கிறதால நீ இட்லினு நெனச்சுட்டா என்றான். துருவ், இல்லடா நான் பார்த்தேனே அது இட்லி தான்டா என்றான். மித்ரனுடன் சேர்ந்து எல்லோரும், மச்சி நீ தோசைதான் வாங்கின என்றனர். துருவ், குழம்பி ஒருவேளை நாம தோசை தான் வாங்குனமோ என நினைத்து விட்டு, யாழினி தட்டை பார்க்க அவ எல்லாத்தையும் காலி பண்ணி இருந்தாள். துருவ் புலம்பி விட்டு சாப்பிட தொடங்கினான். இது எதையும் கவனிக்காமல் சுபாவும் ஆகாஷும் கருமமே கண்ணாக இருந்தனர். அதாங்க சாப்பிட்டு இருந்தாங்க......

சிவா, மித்ரனிடம் நீ இப்ப என்ன காரியம் பண்ணிட்டு இருக்கன்னு தெரியுமா? என்றான். மித்ரன் நல்லா தெரியுது பங்கு என்றான். சிவா காரித்துப்பிவிட்டு எழுந்து சென்றுவிட்டான். திவ்யா இதையெல்லாம் காதில் வாங்காதது போல் அமுக்கிக்கொண்டு இருந்தாள். மித்ரன் திவ்யாவிடம், பங்கு என்ன அள்ளி அமுக்குற என்றான். திவ்யா அவனை முறைத்துவிட்டு, தன் வேலையைத் தொடர்ந்தாள்.
திடீரென்று அங்கு வந்த ப்ரொஃபஸர் யாழினியிடம், யாழினி இப்பவே என்ன வேணுமோ சாப்பிட்டுகோ. அப்புறம் அன்னைக்கு கிளாஸ்ல பண்ண மாதிரிலாம் பண்ணிடாதீங்க என்றார்.
இதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். துருவிற்கும் சிரிப்பு வந்துவிட்டது, வாயை மூடி சிரித்தான். யாழினி அவர்களை முறைத்தாள். எல்லோரும் அமைதியாகிவிட்டனர்.....
கை கழுவும் இடத்தில் திவ்யா யாழினியிடம், பங்கு போறதுக்குள்ள உன் ஆளை பைத்தியமாக்காம விடமாட்டாங்க போல என்றாள். யாழினி பரவாயில்லை பங்கு. பைத்தியம் ஆனாலும் என் பின்னாடியே சுத்தட்டும் என்றாள். எல்லோரும் சாப்பிட்டு பஸ்ஸில் ஏறிவிட்டனர், பஸ் புறப்பட்டது......

பஸ்ஸில் பாட்டை போட்டு எல்லோரும் டான்ஸ் ஆடினர். திவ்யாவும் மித்ரனும் செமையா என்ஜாய் பண்ணிட்டு இருந்தாங்க. மற்றவர்கள் கைதட்டி என்கரேஜ் பண்ணிட்டு இருந்தனர். திவ்யா ஆடுவதை பார்த்து ஹரிக்கு ஏனோ கோபம் வந்தது. எல்லா கேர்ள்ஸும் அமைதியா உட்கார்ந்து இருக்காங்க. இவ மட்டும் பையன் மாதிரி ஆடிட்டு இருக்கானு ஹரி தனக்கு தானே கேட்டுக்கொண்டான். அவ எப்படி போனால் எனக்கென்ன நான் ஏன் கோவப்படனும். ஆனாலும் அவன் மனம் சமாதானம் ஆகவில்லை. அவளை முறைத்துக் கொண்டு தான் அமர்ந்திருந்தான். மித்ரன். இதை கவனித்துவிட்டான். ஆடிக்கொண்டே திவியிடம், மச்சி உன் டியூப்லைட்டு எரிய ஆரம்பிச்சிருச்சு என்றாள். திவ்யா புரியாமல் விழித்தாள். மித்ரன், அட லூசு அங்க பாரு ஹரி உன்னை முறைச்சிட்டு இருக்கான் என்றான்.திவ்யா ஆடுவது போல அவனைப் பார்த்துவிட்டு, மித்துவிடம் மச்சி இப்பதான் இவனுக்கு பல்பு எரியுது. கொஞ்ச நேரம் கத்தவிடலாம் பங்கு. ஒரு ரொமான்டிக் சாங் போட சொல்லு பங்கு என்றாள்......
" வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும்
சுவாசிப்பதும்
உன் தயவால் தானே
ஏங்குகிறேன்
தேங்குகிறேன்
உன் நினைவால் நானே நான்.....
அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி
என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்பார்க்கும்......என்று பாட்டை போட்டு திவ்யாவும் மித்ரனும் ரொமான்டிக்காக ஆடிக்கொண்டிருந்தனர். பஸ்ஸே ஓவென கத்தியது. இதைப் பார்த்ததும் துருவ் யாழினியை பார்த்தான். யாழினி கைதட்டி என்ஜாய் பண்ணிட்டு இருந்தாள். அதை பார்த்து துருவ்விற்கு குழப்பமாக இருந்தது. துருவ் தலையை பிடித்துகொண்டான். என்னடா இது கோபப்பட வேண்டியவ இப்படி என்ஜாய் பண்ணிட்டு இருக்காள் என தனக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தான். இங்கே ஹரி கோபத்தில் ஜன்னல் கம்பியை பிடித்துக் கொண்டிருந்தான். மித்ரன் திவியிடம், பங்கு உன் ஆளு ஜன்னல் கம்பியை கையோடு எடுத்து விடுவான் போல போய் உட்கார்ந்திரு என்றான். திவ்யா அவன் முகத்தை பார்த்து சிரித்து விட்டுபோய் அமர்ந்து கொண்டாள். யாழினி துருவ்வை பார்த்து என்ன ஆச்சு இந்த லூசுக்கு என நினைத்தாள். ஒரு வழியாக கொடைக்கானலில் இருக்க அந்த ரெசார்ட்டுக்கு வந்து சேர்ந்துட்டாங்க. எல்லோரும் ஒவ்வொருவராக இறங்கிச் சென்றனர்.....

நம்ம வானரப் படைகளும் இறங்கி நடந்து போயிட்டு இருந்தாங்க. அந்த. ரெசார்ட் மிக அழகாக இருந்தது. அந்த ரெசார்ட்டின் முன்புறம் வண்ண பூக்கள் குலுங்கிக் கொண்டிருந்தது. மித்ரன் வேகமாக நடங்க, ஏன் இப்படி அன்னநடை போட்டு இருக்கீங்க என்று வேகமாக சென்று, யாழினி காலைத் தட்டிவிட்டான். யாழினி பக்கத்தில் இருந்த துருவ் மேல விழப்போனாள். துருவ் அவளை தாங்கி பிடித்து மித்ரனை முறைத்தான்......
தொடரும்..........
ஹாய் பிரெண்ட்ஸ்,

நமது தளத்திற்கு புது வரவான ஜானு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..அவர்களின் "கல்யாண கலாட்டா" கதையின் பதிவுகள் இங்கு பதிவிடப்படும்.
 
#19
ஹாய் பிரெண்ட்ஸ்,

நமது தளத்திற்கு புது வரவான ஜானு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..அவர்களின் "கல்யாண கலாட்டா" கதையின் பதிவுகள் இங்கு பதிவிடப்படும்.யாழினியும் மித்ரனும் ஸ்கூட்டியில் கிளம்பினர். ஒரு பைக் இவர்களையே ஃபாலோ செய்து கொண்டு வந்தது. அதை பார்த்த யாழினி, மித்ரனிடம் பங்கு வேகமாக போ. பின்னாடி ஒரு பைக் நம்மள பாலோ பண்ணுது என்றாள். ஃபாலோ செய்து கொண்டிருந்த வண்டி, அவர்களுக்கு முன்னே வந்தது. அதில் இருந்த இருவரும் யாழினியை பார்த்தனர். அதில் ஒருவன் நான் சொன்னதுதான் கரெக்ட்டு, நான்தான் ஜெயித்தேன் நான்தான் ஜெயித்தேன் என்றான். யாழினிக்கு ஒரே குழப்பமாக இருந்தது. யாழினி, பங்கு அவனுங்க என்ன பத்தி தான் ஏதோ பேசிட்டு போறானுங்க. அது என்னன்னு தெரியலைனா என் தலையே வெடிச்சிடும் என்றாள். வேகமாக ஃபாலோ பண்ணி அவங்க முன்னாடி போய் ஸ்கூட்டியை நிறுத்தி பங்கு என்றாள்.....
மித்ரன், பங்கு ஏற்கனவே டைம் ஆயிடுச்சு என்றான். யாழினி, டூரும் வேணாம் ஒரு மண்ணும் வேண்டாம், போய் அவங்க முன்னாடி வண்டியை நிறுத்து என்றாள். மித்ரன் வேகமாக போய் அவுங்க முன்னாடி வண்டியை நிறுத்தி விட்டான். யாழினி ஸ்கூட்டியில் இருந்து இறங்கி, என்னை பற்றி என்ன சொன்ன என்று கேட்டாள். அந்த வண்டியில் இருந்தவர்கள், உங்களை பற்றி நாங்க எதுக்கு பேச போறோம் என்று சமாளித்தனர்....
யாழினி, நீங்க இப்ப சொல்லல ஈவ்டீசிங்னு போலீஸ்கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன் என்றாள். பின்னாடி இருந்தவன் பயந்துகொண்டு, சொல்லிவிடுறேன் என்று கூறத் தொடங்கினான்.......
" நீங்க எங்களுக்கு முன்னாடி போயிட்டு இருந்தீங்களா, அப்போ இவன் சொன்னான் வேகமாக போடா அந்த பொண்ணு பின்னாடி இருந்து பார்க்க சூப்பரா இருக்கு. முன்னாடி போய் முகத்தை பார்க்கலாம்னு சொன்னான். நான் சொன்னேன், கண்டிப்பா அந்த பொண்ணு சப்ப ஃபிகரா இருக்கும்னு, எங்க ரெண்டு பேருக்குள்ள பெட். நான் சொன்னது கரெக்ட்டா இல்லை இவன் சொன்னது கரெக்ட்டானு. அப்புறம் முன்னாடி வந்து பார்த்துட்டு, இது அட்டு ஃபிகர் தான்னு நான் சொன்னது கரெக்ட்னு" சொன்னேன் என்று சொன்னான். யாழினிக்கு கோபம் தலைக்கேறிவிட்டது......
யாழினி அவர்களை பார்த்து, யாரை பார்த்து அட்டு ஃபிகர் என்று சொன்ன டபரா செட் தலையா? என்று திட்டினாள். யாழினி காதில் கேட்க முடியாத வார்த்தைகளால் அவர்களை திட்டினாள். பின் யாழினி மித்ரனிடம், பங்கு இவனுங்கள வந்து அடிடா என்று திரும்ப, அவன் இவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். யாழினி அவனை முறைத்தாள். மித்ரன் அவள் முறைப்பதை பார்த்து விட்டு, அமைதியாகி விட்டான். யாழினி அவர்களை மறுபடியும் கேட்கவே முடியாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தாள்.....
மித்ரன் வாட்ச்சை பார்த்துவிட்டு, பங்கு டைமாயிடுச்சு பங்கு . டூர் போயிட்டு வந்து கூட கண்டுபிடிச்சு இந்த கோணமண்டையன அடிச்சுக்கலாம் வா பங்குனு இழுத்து சென்று விட்டான்.....

மித்ரன் புலம்பிக் கொண்டே வந்தான். ஐயோ டைம் ஆயிடுச்சு. அந்த தகர டப்பா தலையன் விட்டுட்டு போய் இருப்பானா என்று புலம்பிக்கொண்டே வந்தான். ஒருவழியாக காலேஜ் வந்து சேர்ந்துவிட்டனர் இருவரும். டூர் பஸ் இன்னும் கிளம்பவில்லை. எல்லோரும் வெளியே நின்று கொண்டிருந்தனர். அதை ஆச்சரியமாக பார்த்து, மித்ரன் யாழினியிடம் பங்கு நமக்காக வெயிட் பண்ணுதுங்க நம்பவே முடியலை என்று சொல்லிக் கொண்டு, அவர்கள் அருகில் சென்றனர். மித்ரன் ஹரியிடம், மச்சி எங்களுக்காகவா வெயிட் பண்றீங்க? என்றான். திவ்யா இடையில் புகுந்து, ஆமா பங்கு உங்களுக்காகத்தான் வெயிட் பண்றோம் என்றாள்........
மித்ரன் சந்தேகமாக பார்த்து, இல்லையே நீங்க எங்களுக்காக வெயிட் பண்ற அளவுக்கு அவ்வளவு நல்லவங்க இல்லையே என்றான். அவள் பேச வாயைத் திறக்குமுன், டிரைவர் வந்து பஞ்சரான டயரை மாத்தியாச்சு எல்லோரும் ஏறுங்கள் என்றார்.......
மித்ரன். திவ்யாவை முறைத்து, ஏன் பங்கு பொய் சொன்ன என அவள் தலையில் கொட்டினான். உடனே ஹரி அவனை தடுத்து, மச்சி உங்களுக்காக திவ்யா எவ்வளவு கோல்மால் பண்ணி இருக்கா தெரியுமா? என்று கூறத் தொடங்கினான். நீங்க வர லேட் ஆனதால் இந்த தகரடப்பா தலையன் உங்களுக்கு வெயிட் பண்ணாம கிளம்பலாம் என்று சொன்னார். திவ்யா தான் நீங்க இல்லாம எப்படி போறதுன்னு யோசிச்சு, ஹேர் பின்ன வச்சு டயர பஞ்சர் ஆக்கிட்டா என்றான். மித்ரன் திவ்யாவை பார்க்க, அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.........

மித்ரன்அவள் முன்னாடி சென்று, ஏன் பங்கு உனக்கு எங்க மேல அவ்வளவு பாசமா? என்று வராத கண்ணீரை துடைத்துக் கொண்டே கேட்டான். திவ்யா சமாதானமாகுற மாதிரி தெரியலை. மித்து, ஏய் பங்கு நாங்க ஏன் லேட்னு உனக்கு தெரியாது இல்லை. வரப்ப நம்ம யாழினி ஒரு சம்பவமே பண்ணிட்டாள் என்றான். திவ்யா கோபத்தை மறந்து, என்ன பண்ணா பங்கு என்றாள். யாழினி திவி தலையில் கொட்டி, ஏண்டி இவ்ளோ நேரம் கோபமாய் இருந்தவ, அடுத்தவங்கள அவமானப்படுத்துறத கேக்க இவ்வளவு ஆர்வமா வர என்றாள். திவ்யா யாழினியிடம், பங்கு இந்த தகர டப்பா தலையன் நாம போற பஸ்ல வர்றாரு. இவர் வந்தா உங்களை சேர்த்து வைக்கலாம் முடியாது. சோத்த தின்னுட்டு தூங்க தான் முடியும் என்றாள்......
மித்ரன் இரு பங்கு நான் போய் அவரை பேக்கப் பண்ணிட்டு வரேன் என்றான். மித்ரன் ப்ரொஃபஸரிடம், சார் ராத மேம் அந்த பஸ்ல வர்றாங்க சார். பசங்க எல்லாம் அவுங்களை கிண்டல் பண்ண போறாங்க, உங்கள மாதிரி ஒரு டெர்ரர் ஆன ஆளு கூட இருந்தா பாதுகாப்பாக இருக்கும் சார் என்றான்.....
ப்ரொஃபஸர் முகம் பிரகாசமாகி, நீ சொல்றது கரெக்ட் தான். உன்னை மாதிரி டேலண்ட் ஸ்டூடண்ட்ஸ் தான் நான் எதிர்பார்க்கிறேன். ப்ரோஃபஸர், நான் ராதா மேம் கூட அந்த பஸ்ல போறேன். நீ இந்த பஸ்ல இருக்கவங்களை பார்த்துக்கோ என்று அந்த பஸ்ஸில் ஏறி விட்டார். இந்த பஸ்ஸில் நம்ம வானரக் கூட்டம் ஏறிடுச்சுங்க. பஸ் ஒருவழியாய் கிளம்பிடுச்சு......

சிவாவும் கார்த்திக்கும் ஒரு சீட்டில் உட்கார்ந்து கொண்டனர். துருவும் ஹரியும் ஒரு சீட்டில் உட்கார்ந்து கொண்டனர். அவர்களுக்கு முன்னே திவ்யாவும் யாழினியும் அமர்ந்து கொண்டனர். சுபாவும் ஆகாஷும் ஒரு சீட்டிலும், மித்ரன் தனி சீட்டில் அமர்ந்து கொண்டான். சற்று நேரம் சென்றதும் மித்ரன் ஹரியிடம் கண்னை காட்டினான்......
ஹரி உடனே துருவிடம், மச்சி காத்தே வர மாட்டேங்குதுடா. எனக்கு கொஞ்சம் ஜன்னல் சீட்டு கொடுடா என்றான். துருவுக்கு ஜன்னல் சீட் என்றால் ரொம்ப பிடிக்கும். அதனால அவன் சீட்டை கொடுக்கவில்லை. ஹரி அவனை நச்சரிக்க, துருவ் மறுத்துவிட்டான்....
ஹரி பின்னாடி திரும்பி, ஏய் கழுவுன காபி என்றான். திவ்யா அவனை முறைத்து, கால் மீ திவ்யா என்றாள்.....
ஹரி, ஓகே திவி, கொஞ்சம் பெரிய மனசு பண்ணி உங்க ஜன்னல் சீட் கொடுக்க முடியுமா என்றான். திவ்யா, சாரி நான் ஜன்னல் சீட்டில் உட்காரல. உங்க சிஸ்டர் தான் உட்கார்ந்து இருக்காங்க என்றாள். ஹரி யாழினியிடம் கேட்கும் முன், அண்ணா உங்களுக்கு இல்லாததா என்று சொல்ல வந்தாள். அதற்குள் திவ்யா யாழினி தொடையில் கிள்ளி, ரொம்ப அலையாத பங்கு. கொஞ்சமாவது சீன் போட்டுட்டு கொடு என்றாள். யாழினி ஹிஹிஹி என இழித்து சரி பங்கு என்றாள்.....

ஹரி யாழியிடம், சிஸ்டர் ஜன்னல் சீட் எனக்கு தரீங்களா? என்றான். யாழினி, அண்ணா எனக்கு ஜன்னல் சீட்னா ரொம்ப பிடிக்கும். அதனால தான் திவ்யாக்கு கூட தராமல் உட்கார்ந்து இருக்கேன். சரி நீங்க கேட்கிறதுனால தரேன்னு சொன்னாள்.......

துருவ் ஹரியிடம், மச்சான் வேற எங்கயுமே உனக்கு ஜன்னல் சீட் கிடைக்கலையா?. மித்ரன் உட்கார்ந்து இருக்கான் பாரு, அவன் கிட்ட கேளு என்றான்.......
ஹரி, மச்சான் அது டிரைவர் சீட்டுக்கு பக்கத்துல இருக்கு. அங்க ஒரே ஹீட்டா இருக்கும் டா என்றான்......
துருவ் அப்போ , ஆகாஷ் சுபா இருக்காங்கள அவுங்க கிட்ட கேளு என்றான். ஹரி, மச்சி அவுங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பிரிய மாட்டாங்களாம் என்றான்.......
துருவ் அப்போ சிவாவும் கார்த்தியுமீ இருக்காங்களே, அவங்க கிட்ட கேளு என்றான். ஹரி அவங்க அப்பவே தூங்கிட்டாங்க. தூங்குறவங்கள எழுப்பினா பாவம் டா மச்சி என்றான்....
துருவ், சரி நானே உனக்கு சீட்டு தரேன் என்றேன். ஹரி, ஒன்னும் வேணாம். என் சிஸ்டர் எனக்கு சீட்டு தராங்க, வேணாம்னு சொன்னா நல்லா இருக்காது என எழுந்து சென்று திவ்யாவின் அருகில் அமர்ந்து கொண்டான். யாழினி துருவ் அருகில் அமர்ந்து கொண்டாள். துருவோ சன்னலை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்....
மித்ரன் யாழினியிடம் கண்ணை காட்ட, யாழினிக்கு ஒன்றும் புரியவில்லை. திவ்யா யாழினியிடம், பங்கு பொன்னான சந்தர்ப்பத்தை அமைத்துக் கொடுத்திருக்கோம். பயன்படுத்திக்கோ பங்கு என்றாள். யாழினி என்ன பண்றதுன்னு தெரியலையே பங்கு என்றாள்.......

திவ்யா கடுப்பாகி, சரியான மக்கு பங்கு என்று விட்டு, இதோ இப்படி தோள் மேல கை போட்டு தூங்குற மாதிரி அப்படியே மடியில் படுத்து தூங்கிடு எனக்கூறி ஒவ்வொன்றையும் ஹரியிடம் செய்து காண்பித்தாள்.....

மித்ரன் ஹரியிடம் மச்சான் எனக்கு ஒரு டவுட்டு என்றான். ஹரி என்னடா என்றான். மித்து , நம்ம துருவையும் யாழினியையும் சேர்த்து வைக்க இங்கே வந்த மாதிரி இல்ல உன்னையும் திவ்யாவை சேர்த்து வைக்க வந்த மாதிரி இருக்கு. அவளை என்ஜாய் பண்ணு என்ஜாய் பண்ணுன்னு சொல்லிட்டு, நீங்க நல்லா என்ஜாய் பண்றீங்க என்றான். ஹரி,பேசாம இருடா திவிக்கு தெரிஞ்சா ரொம்ப ஃபீல் பண்ணுவாடா என்றான். மித்ரன், போடா டேய் இதுவே நானா இருந்தா இந்நேரம் அவள கரெக்ட் பண்ணி இருப்பேன். நீ இன்னும் பச்சை பிள்ளையாக இருக்க என்றான்.....

திவ்யா சொல்லிக் கொடுத்ததை யாழினி அப்படியே செய்தாள். துருவிற்கு தான் ஐயேவென்று இருந்தது. துருவ் மைண்ட் வாய்ஸில்," கடவுளே நான் வேண்டும் போது எல்லாம் அவள என் பக்கத்தில் கொண்டுவராமல், இப்போ விலகிப்போகனும்னு நினைக்கிறப்போ இப்படி என்னைபடுத்துறியே" என்றான்.....

யாழினிகண்ணை மூடி, அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். துருவ் மனசில், ஏண்டி என்னை இப்படி சோதிக்கிற. கடவுளே காப்பாத்துப்பா என வேண்டிக் கொண்டான். யாழினி தூங்குவது போல நடித்துக் கொண்டிருந்து அப்படியே தூங்கிவிட்டாள்.....
இங்கே யாழினிக்கு ஐடியா கொடுத்த திவ்யா, ஹரியின் மடியில்படுத்து தூங்கிவிட்டாள். ஹரி அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். ஹரி, ஒருவேளை இவ மேல நமக்கு லவ் இருக்குமோ? என் நினைத்தான். ஹரி, முகத்தைப் பாரு எப்படி அப்பாவியாக வச்சுருக்கா. ஆனால் செய்றதெல்லாம் கொடும்பாவி வேலை. அப்போது அவள் கொடுத்த கழுவுன காபி ஞாபகம் வந்தது. ஹரி, உடனே தலையை சிலுப்பிக்கொண்டு நமக்கு வேண்டவே வேண்டாம். இவளை கல்யாணம் பண்ணா, நமக்கு நாளைக்கு சட்டியை கழுவிக் குழம்பு ஊத்துவா என நினைத்துக்கொண்டான்......

தொடரும்......
 
#20
ஹாய் பிரெண்ட்ஸ்,

நமது தளத்திற்கு புது வரவான ஜானு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..அவர்களின் "கல்யாண கலாட்டா" கதையின் பதிவுகள் இங்கு பதிவிடப்படும்.

மித்ரன் ஹரி தலையை சிலுப்பியதை பார்த்துவிட்டு, மச்சி இப்ப எதுக்கு இப்படி தலையை சிலுப்பினன்னு எனக்கு தெரியுமே என்றான். ஹரி, என்ன தெரியும் உனக்கு என்றான். மித்ரன் இப்பவே கழுவின காபிய கொடுக்கிறா கல்யாணத்துக்கு அப்புறம் சட்டிய கழுவி குழம்பு ஊத்துவான்னு தானே நெனச்ச என்றான். ஹரி அதிர்ச்சியாகி எப்படி டா? என்றான்.மித்ரன் தோளைக் குலுக்கிக்கொண்டு, நாம் எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைடா என்றான்.......
துருவ் தோளில் தூங்கிக் கொண்டிருந்த யாழினி அவன் மடியில் படுத்து உறங்க ஆரம்பித்துவிட்டாள்.மித்ரன் தான் வந்த வேலை முடிந்தது என கண்ணை மூடி அமர்ந்து கொண்டான். துருவ் அவளை தூக்கி அமர வைக்க எண்ணிக் கையைக் கொண்டு போக யாழினி அவன் கையை பிடித்துக்கொண்டு இடையை கட்டிக்கொண்டு உறங்கி விட்டாள். துருவ் என்ன செய்வது என்று தெரியாமல் யாழினி முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
துருவ் கையை எடுக்க முயற்சிக்க, யாழினி டிஸ்டர்ப் பண்ணாம பேசாம இரு துருவ். உனக்கு எப்ப பார்த்தாலும் இதே வேலையா போச்சு என உளறினாள். துருவ் அடிப்பாவி! என வாயில் கை வைத்து விட்டான். நான் என்னமோ இவளை தினமும் டிஸ்டர்ப் பண்ற மாதிரி பேசுறாள். இதை யாராவது கேட்டா என்னை பத்தி என்ன நினைப்பாங்க. தூக்கத்தில் கூட என் பேரை கரெக்டா சொல்றாள். ஒருவேளை இவ என்ன லவ் பண்றாலோ என நினைத்து விட்டு, பின் இருக்காது. மித்ரன் தான் அன்னைக்கு சொன்னானே இவளுக்கும் அவனை பிடிக்கும்னு என அவனே பதிலும் சொல்லிக்கொண்டான். துருவிற்கு சீக்கிரமாக எழுந்ததால் தூக்கம் வர அவள் மீதே படுத்து தூங்கிவிட்டான்......
மணி பத்தாகிவிட சாப்பிடுவதற்காக பஸ்ஸை ஒரு ஓட்டல் முன் நிறுத்தினர். தகர டப்பா தலையன், சாரி ப்ரொஃபஸர் வந்து எல்லாரையும் சாப்பிட வருமாறு வெளியிலிருந்து அழைத்தார். மித்ரன் கண் முழித்துவிட்டான். யாழினி துருவைப் பார்த்து கண்ணை கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தான் நாம ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்கும்னு பயந்தோம். ஆனால் வந்த வேலை சீக்கிரம் முடிஞ்சுருச்சு என நினைத்துக் கொண்டு அவர்களை போட்டோ எடுத்து கொண்டான். பின்னாடி உக்காந்திருந்த ஹரியையும் திவ்யாவையும் பார்த்துவிட்டு இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே இருந்தாலும் ஒரு போட்டோ எடுத்துக்குவோம். என்னைக்காவது யூஸ் ஆகும். அப்புறம் அவுங்களை எழுப்பிவிட்டு சாப்பிட அழைத்து சென்றான்.....
ஹோட்டலில் நுழைந்தவுடன் துருவிற்கு பக்கத்தில் சிவா அமர்ந்து கொண்டான் மித்ரன் சிவாவை முறைத்தான். சிவா எழுந்து ஆப்போசிட் சேரில் அமர்ந்துகொண்டான். துருவ் என்னவென்று பார்த்தான் சிவா, காத்து வரல டா மச்சி என்றான். துருவ் பக்கத்தில் இருந்த டேபிள் பேனை பார்த்துவிட்டு உனக்கு காத்து வரலையா? என்றான். சிவா நான் அப்படியா சொன்னேன் காத்து வருதுன்னு சொன்னேன் டா என்றான். மித்ரன், ஆமாடா மச்சான் காத்து வருதுன்னுதான் சொன்னான் டா என்றான். துருவ், பைத்தியம் மாதிரி பேசுறீங்க என்றான். யாழினி வந்து துருவ் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். திவ்யா ஹரி பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். மித்ரன் ஹரியிடம் என்ஜாய் மச்சி என்றான். திவ்யா புரியாமல் பார்க்க, ஹரி ஒன்னும் இல்ல அவனுக்கு நட்டு கழண்டுறுச்சு. அதான் அப்படி பேசுறான் என்றான். மித்ரன் எல்லோரிடமும் என்ன சாப்பிட வேண்டும் என்று கேட்டு, கடைசில யாழினியிடமும் கேட்க, அவள் நீ என்ன சாப்பிட போறியோ அதே எனக்கும் சொல்லு மாமா என்றாள். மித்ரன் அவளை முறைத்துவிட்டு பேரரிடம் ஆர்டரை சொன்னான். பின் யாழினி தலையில் ஒரு கொட்டு கொட்டி, இனிமே என்னை மாமானு கூப்ட அவ்வளவு தான் உனக்கு என்றான். யாழினி முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு ஏன் மாமா என்றாள். மித்ரன் யாழினி காதருகில் சென்று, பங்கு அந்த ஜூனியர் பொண்ணு ஹேமா உன் ஆளு பின்னாடி சுத்துறா தெரியும் இல்ல. அவளை துருவோட கேர்த்துவிட்றுவேன் என்றான். யாழினி பதறிக்கொண்டு, பங்கு என் தலையில் மண்ணை அள்ளி போட்றாத பங்கு. நான் சாப்பிடுறதுக்கு கூட வாய் திறக்க மாட்டேன் போதுமா என்றாள். சாப்பாடு வந்துவிட அனைவரும் சாப்பிட தொடங்கினர்........

சாப்பிட்டுக்கொண்டிருந்த மித்ரன் சிவாவிடம் கண்ணை காட்ட, சிவா துருவிடம் மச்சி, அந்த டேபிள் பேனை இப்படி கொஞ்சம் திருப்பி வைடா காத்து வரலை என்றான். துருவ் அவனை முறைத்துவிட்டு இப்போ தானடா காத்து வருதுன்னு சொல்லி அந்தப் பக்கம் போய் உட்கார்ந்த என்றான். சிவா சிரித்துவிட்டு, மச்சி அது அப்போடா. இப்ப நிறைய ஆள் இருக்காங்க. அதனால எனக்கு மூச்சு முட்டுது ப்ளீஸ்டா பேனை திருப்பி வைடா என்றான்.....

துருவ் சரி வச்சு தொலைகிறேன் என ஃபேனை திருப்புவதற்கு திரும்ப மித்ரன் யாழினியிடம் கண்ணை காட்ட, அவள் என்னவென்று தெரியாமல் பேவென முழிக்க, மித்ரன் உன்னலாம் வச்சுக்கிட்டு என தலையில் அடித்து விட்டு துருவ் தட்டையும் யாழினி தட்டையும் இடம் மாற்றிவிட்டான். கார்த்தி ஆவென்று பார்க்க, அவன் வாயில் இட்லியை அமுக்கிவிட்டான் மித்ரன். துருவ் பேனை திருப்பி விட்டு, திரும்ப போக எல்லோரும் தட்டைப் பார்த்து சாப்பிட தொடங்கினர்....துருவ் தட்டை பார்த்துவிட்டு மச்சான் என்னடா தட்டு மாறிடுச்சு என்றான். சிவா என்ன தட்டு மாறிடுச்சு என்றான். துருவ், இல்லடா நான் சாப்பிட்ட தட்டை காணோம், இது வேற தட்டு என்றான். யாழினி இது எதையும் கவனிக்காமல், இல்லை இல்லை கவனிக்காத மாதிரி நடிச்சுட்டு சாப்பிட்டு இருந்தாள். சிவா டேய் லூசு இது நீ சாப்பிட்ட தட்டுதான் உளராதடா என்றான்....
துருவ், இல்லடா மச்சான் நான் முதல்ல இட்லி சாப்பிட்டுட்டு இருந்தேன். இப்ப தோசை இருக்கு என்றான். மித்ரன் மைண்ட் வாய்ஸில் இவ்வளவு செஞ்சு மண்டை மேல இருக்க கொண்டைய மறந்துட்டேனே என நினைத்து விட்டு, துருவிடம் இல்லடா மச்சான் நீ தோசைதான் சாப்பிட்டுட்டு இருந்த, தோசை சின்னதா இருக்கிறதால நீ இட்லினு நெனச்சுட்டா என்றான். துருவ், இல்லடா நான் பார்த்தேனே அது இட்லி தான்டா என்றான். மித்ரனுடன் சேர்ந்து எல்லோரும், மச்சி நீ தோசைதான் வாங்கின என்றனர். துருவ், குழம்பி ஒருவேளை நாம தோசை தான் வாங்குனமோ என நினைத்து விட்டு, யாழினி தட்டை பார்க்க அவ எல்லாத்தையும் காலி பண்ணி இருந்தாள். துருவ் புலம்பி விட்டு சாப்பிட தொடங்கினான். இது எதையும் கவனிக்காமல் சுபாவும் ஆகாஷும் கருமமே கண்ணாக இருந்தனர். அதாங்க சாப்பிட்டு இருந்தாங்க......

சிவா, மித்ரனிடம் நீ இப்ப என்ன காரியம் பண்ணிட்டு இருக்கன்னு தெரியுமா? என்றான். மித்ரன் நல்லா தெரியுது பங்கு என்றான். சிவா காரித்துப்பிவிட்டு எழுந்து சென்றுவிட்டான். திவ்யா இதையெல்லாம் காதில் வாங்காதது போல் அமுக்கிக்கொண்டு இருந்தாள். மித்ரன் திவ்யாவிடம், பங்கு என்ன அள்ளி அமுக்குற என்றான். திவ்யா அவனை முறைத்துவிட்டு, தன் வேலையைத் தொடர்ந்தாள்......திடீரென்று அங்கு வந்த ப்ரொஃபஸர் யாழினியிடம், யாழினி இப்பவே என்ன வேணுமோ சாப்பிட்டுகோ. அப்புறம் அன்னைக்கு கிளாஸ்ல பண்ண மாதிரிலாம் பண்ணிடாதீங்க என்றார்.
இதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். துருவிற்கும் சிரிப்பு வந்துவிட்டது, வாயை மூடி சிரித்தான். யாழினி அவர்களை முறைத்தாள். எல்லோரும் அமைதியாகிவிட்டனர்........

கை கழுவும் இடத்தில் திவ்யா யாழினியிடம், பங்கு போறதுக்குள்ள உன் ஆளை பைத்தியமாக்காம விடமாட்டாங்க போல என்றாள். யாழினி பரவாயில்லை பங்கு. பைத்தியம் ஆனாலும் என் பின்னாடியே சுத்தட்டும் என்றாள். எல்லோரும் சாப்பிட்டு பஸ்ஸில் ஏறிவிட்டனர், பஸ் புறப்பட்டது........

பஸ்ஸில் பாட்டை போட்டு எல்லோரும் டான்ஸ் ஆடினர். திவ்யாவும் மித்ரனும் செமையா என்ஜாய் பண்ணிட்டு இருந்தாங்க. மற்றவர்கள் கைதட்டி என்கரேஜ் பண்ணிட்டு இருந்தனர். திவ்யா ஆடுவதை பார்த்து ஹரிக்கு ஏனோ கோபம் வந்தது. எல்லா கேர்ள்ஸும் அமைதியா உட்கார்ந்து இருக்காங்க. இவ மட்டும் பையன் மாதிரி ஆடிட்டு இருக்கானு ஹரி தனக்கு தானே கேட்டுக்கொண்டான். அவ எப்படி போனால் எனக்கென்ன நான் ஏன் கோவப்படனும். ஆனாலும் அவன் மனம் சமாதானம் ஆகவில்லை. அவளை முறைத்துக் கொண்டு தான் அமர்ந்திருந்தான். மித்ரன். இதை கவனித்துவிட்டான். ஆடிக்கொண்டே திவியிடம், மச்சி உன் டியூப்லைட்டு எரிய ஆரம்பிச்சிருச்சு என்றாள். திவ்யா புரியாமல் விழித்தாள். மித்ரன், அட லூசு அங்க பாரு ஹரி உன்னை முறைச்சிட்டு இருக்கான் என்றான்.திவ்யா ஆடுவது போல அவனைப் பார்த்துவிட்டு, மித்துவிடம் மச்சி இப்பதான் இவனுக்கு பல்பு எரியுது.கொஞ்ச நேரம் கத்தவிடலாம் பங்கு. ஒரு ரொமான்டிக் சாங் போட சொல்லு பங்கு என்றாள்......வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும்
சுவாசிப்பதும்
உன் தயவால் தானே
ஏங்குகிறேன்
தேங்குகிறேன்
உன் நினைவால் நானே நான்.....
அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி
என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்பார்க்கும்......

என்று பாட்டை போட்டு திவ்யாவும் மித்ரனும் ரொமான்டிக்காக ஆடிக்கொண்டிருந்தனர். பஸ்ஸே ஓவென கத்தியது. இதைப் பார்த்ததும் துருவ் யாழினியை பார்த்தான். யாழினி கைதட்டி என்ஜாய் பண்ணிட்டு இருந்தாள். அதை பார்த்து துருவ்விற்கு குழப்பமாக இருந்தது. துருவ் தலையை பிடித்துகொண்டான். என்னடா இது கோபப்பட வேண்டியவ இப்படி என்ஜாய் பண்ணிட்டு இருக்காள் என தனக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தான். இங்கே ஹரி கோபத்தில் ஜன்னல் கம்பியை பிடித்துக் கொண்டிருந்தான். மித்ரன் திவியிடம், பங்கு உன் ஆளு ஜன்னல் கம்பியை கையோடு எடுத்து விடுவான் போல போய் உட்கார்ந்திரு என்றான். திவ்யா அவன் முகத்தை பார்த்து சிரித்து விட்டுபோய் அமர்ந்து கொண்டாள். யாழினி துருவ்வை பார்த்து என்ன ஆச்சு இந்த லூசுக்கு என நினைத்தாள். ஒரு வழியாக கொடைக்கானலில் இருக்க அந்த ரெசார்ட்டுக்கு வந்து சேர்ந்துட்டாங்க. எல்லோரும் ஒவ்வொருவராக இறங்கிச் சென்றனர்.....

நம்ம வானரப் படைகளும் இறங்கி நடந்து போயிட்டு இருந்தாங்க. அந்த. ரெசார்ட் மிக அழகாக இருந்தது. அந்த ரெசார்ட்டின் முன்புறம் வண்ண பூக்கள் குலுங்கிக் கொண்டிருந்தது. மித்ரன் வேகமாக நடங்க, ஏன் இப்படி அன்னநடை போட்டு இருக்கீங்க என்று வேகமாக சென்று, யாழினி காலைத் தட்டிவிட்டான். யாழினி பக்கத்தில் இருந்த துருவ் மேல விழப்போனாள். துருவ் அவளை தாங்கி பிடித்து மித்ரனை முறைத்தான்......

கலாட்டாக்கள் தொடரும்...