கல்யாணக் கனவுகள்

#1
கல்யாணக் கனவுகள்

மிகவும் அருமையான கதையை படைத்தமைக்கு வாழ்த்துக்கள் சத்யா!

பெண்ணாயினும்,ஆணாயினும் அவரவர் காணும் கனவினில் மிக முக்கியமானது கல்யாணம் பற்றிய கனவுகள்... ஒவ்வொருவரும் தன்னுடைய கல்யாண கனவுகளை வெளிப்படையாக கூறாவிடினும் மனதினுள் வைத்திருப்பர்.

வைஷாலியும், சஞ்சயனும் தங்களது கனவுகளை ஏற்படுத்திக் கொண்ட விதம் மிக அருமையாக கூறப்பட்டுள்ளது. வைசாலியின் பால்யத்தில் ஏற்படும் அறியாமையை காதல் என்று அவளது மனதில் தோன்ற செய்து, வாழ்வில் கனவிற்கும், நடப்பிற்கும் உள்ள வித்தியாசத்தை மிக அழகிய நடையில் ஆசிரியர் தந்துள்ளார்...

சஞ்சயனின் வாழ்வில் ஏற்படும் இழப்பு, அதன் பின்னர் அவனது வாழ்வில் ஏற்படுத்தும் திருப்பங்கள் என்று கதை மிக அழகிய நடையில் நகர்ந்து செல்கின்றது. எந்த சூழ்நிலையிலும் நட்பினை சற்றும் மாற்றாமல் இறுதிவரை அழகிய நட்பும், காதலும் கலந்த கதை இந்த கல்யாண கனவுகள்.

முரளி போன்றவர்கள் முகத்தோற்றத்தில் சிறந்து விளங்கி அகத் தோற்றத்தில் அழுக்கடைந்தவர்களாக இருப்பது இன்றைய நிலையிலும் உலகெங்கிலும் காணப்படுகின்றது.

வைஷாலியின் வாழ்வு மலர்ந்தது போன்று சஞ்சயனின் வாழ்வும் மலர்ந்திடுமா? வாழ்த்துக்கள் சத்யா...
கல்யாண
கனவுகள்
கலப்படமற்ற
நனவுகள்!