என் சண்டைக்காரி நீதான்!!!- கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

"என் சண்டைக்காரி நீ தான்!!" என்கிற தலைப்போடு போட்டியில் இணைகிறார் சுபாஷினி....
 
Last edited:
#2
என் சண்டைக்காரி நீதான்! - 1

View attachment Textonphoto20200206_145311.png

நகரத்தின் மையத்தில் அமைந்திருந்த அந்த நீதிமன்றம் மிக மிக பரபரப்பாக காணப்பட்டது. தேனீக்களாக கருப்பு கோட் அணிந்திருந்த வக்கீல்கள் , தங்கள் பணியில் மூழ்கியிருக்க .


ரேஸில் செல்வது போல் ஒரு கார் வந்து அங்கிருந்த 28 வயது மிக்க வக்கீலின் முன் நின்றது. முகத்தில் எந்த வித சலனமும் இன்றி அக்காரில் இருந்து இறங்குபவனை பார்த்து கொண்டிருந்தான் அகிலன்.


வந்தவன் வக்கீலிடம், ஹாய் அகிலன் இன்னிக்காவது உங்க மேடம் கோர்ட்டுக்கு வருவாங்களா என்று நக்கலாய் கேட்டான்.


கட்டாயமாக வருவாங்க மிஸ்டர் தேவேந்திரன் என்று அந்த மிஸ்டரில் அழுத்தமாக உச்சரித்தான் அகிலன்.


ஏன் கேட்டேனா இன்னிக்கே எல்லாம் முடிஞ்சிருச்சுனா பரவாயில்லை, இப்படி அடிக்கடி கோர்ட்டுக்கு வர முடியாது இல்ல என்றான் தேவ் .


நீங்க முடிவா சொன்னிங்கனா மட்டும் போதும். மேடம் நிச்சயமா வருவதாக சொன்னாங்க என்றான் அகிலன்.


ஐயம் வெய்டிங் என்று கூறி நகர்ந்து தேவ் . கருப்பு நிற பேண்ட் , வெளீர் நீல நிற முழுக்கை சட்டை, அடங்காத கேசத்தை கைகளால் கோதியபடி சென்றனர். அந்த ஆறடி ஆண்மகனின் கடைக்கண் பார்வைக்கு ஏங்கினர் அங்கிருந்த கன்னியர்கள் பல.


இருபத்தியேழு வயது நிறைந்த தேவ்விற்கு, பெண்களை மதிக்க மட்டும் தான் தெரியும், அதை மீறி இத்தனை ஆண்டுகளில் எவரையும் நிமிர்ந்து பார்க்காதவன் சில நாட்களாக பெண்ணவள் பின் இப்படி அலைபாயுவது தான் விதியோ.


சரியாக நீதிமன்றம் ஆரம்பிக்கும் முன் வெள்ளை நிற மகிழுந்து காற்றை கிழித்து கொண்டு நீதிமன்ற வாயிலில் நின்றது. அதில் இருந்து பெண்ணவள் ஒருத்தி,
கண்ணில் திமிர்,
முகத்தில் வெறுமை,
நடையில் நிமிர்வு,
என்று நடந்து வந்தாள்.

அவள் உள்ளே நுழையும் போது அதிதி தேவேந்திரன் என்று அவளை அழைக்கவும் சரியாக இருந்தது.


நேராக நீதிபதி முன் நின்று , தேவ்வை பார்க்காது அகிலனை பார்த்தாள்.
எல்லாம் சரியாக போகிறது என்று கண்களால் செய்கை செய்தான் அகிலன்.


இவர்கள் சம்பாசனை கண்ட தேவ், என்ன தான் பண்ணுறீங்கனு நானும் பார்கிறேன் என்று மனதில் எண்ணி கொண்டான்.


நீதிபதி வழக்கை படித்துவிட்டு, அதிதியிடம் எதற்காக நீங்கள் மிஸ்டர் தேவேந்திரனை விவாகரத்து செய்ய முடிவு செய்தீர்கள் என்ன காரணம் என்று கேட்டார்.


அவள் ஒருமுறை தேவ்வை நிமர்ந்து பார்த்து, நீதிபதியிடம் எங்கள் இருவருக்கும் திருமணமாகி ஆறு மாதம் ஆகிறது. இதுவரை சாதாரணமாக கூட இருவரும் பேசி கொண்டதில்லை. அப்படியே பேசினாலும் அது சண்டையில் தான் போய் முடியும்.

எங்களது மண வாழ்க்கையில் இனிமையான தருணம் என்று எதுவும் இல்லை. இப்படி இருவரும் உயிர்பில்லாமல் வெறுமையாக வாழ்வதில் எனக்கு உடன்பாடில்லை என்று பேசி முடித்தாள் அதிதி


அதிதி கூறியதை கவனமாக கேட்டு கொண்ட நீதிபதி, தேவ்விடம் இதற்கு உங்கள் கருத்து என்ன தேவ்வேந்திரன் என்று கேட்டார்.


சார் நான் பிசினஸ்மேன் அதேபோல் என் துணைவியும் ஒரு பிசினஸ்உமேன். எங்களுக்குள் முரண்பாடான கருத்து வருவது தவறில்லையே. இருவரும் வீட்டில் ஒற்றை குழந்தையாக வளர்ந்தவர்கள், விட்டு கொடுத்து வாழ்வது என்பதை இத்தனை காலம் அறியாது வளர்ந்து விட்டோம்.

முன்பு எப்படி இருந்தேனோ தெரியாது, இனி என் மனைவிக்காக நேரம் ஒதுக்கி, அவளுடன் மட்டும் செலவழிக்க விரும்புகிறேன். அவள் எதிர்பார்பினை பூர்த்தி செய்ய கட்டாயமாக முயல்வேன் இந்த காரணத்திற்காக தான் விவாகரத்து கேட்டால் நான் தர தயாராக இல்லை, அவளுடன் இணைந்து வாழ தான் என் விருப்பம் என்றான்.

இவன் பேச்சை கேட்ட அதிதிக்கு கோபம் கண்மூடி தனமாக வந்தது. நேற்று என்ன கூறினான் இங்கு என்ன உளறுகிறான் என்று அகிலனை பார்க்க, அவனோ தேவ்வின் பேச்சில் உறைந்து போய் விட்டான்.

தேவ்வின் வக்கீல் , என் கட்சிகாரர் அவரது மனைவியுடன் வாழ விருப்பம் என்ற கருத்தை முன் வைத்திருக்கிறார் , மேலும் இவர்களுக்கு திருமணம் ஆகி சில மாதங்களே ஆகுவதால். அவர்கள் வாழ்க்கையை சீர் அமைத்து கொள்ள ஒரு வாய்ப்பளிக்கும் படி வேண்டிக்கொண்டார்.

இருவர் புறமும் விசாரித்த நீதிபதி, ஆறு மாதம் இருவரும் இணைந்து இருக்குமாறு தங்கள் வாழ்க்கையை சரி செய்து கொள்ள இந்த காலத்தை உபயோகப் படுத்தி கொள்ளுமாறும் கூறி அந்த கேஷை ஆறு மாதம் ஒத்தி வைத்தார்.

அவரது முடிவில் அதிதியின் கோபம் தேவ்விடம் இருந்து அகிலனிடம் திரும்பியது. தன் கனல் பார்வையில் அகிலனை எறித்துவிடுவதை போல் பார்த்து காரை உயிர்பித்து அதன்மேலும் காட்டினாள் அதிதி.

அதுவரை இறுக்கி பிடித்து வைத்திருந்த மூச்சை அப்போது தான் வெளியிட்டான் அகிலன். நேராக தேவ்விடம் வந்தவன், அடேய் கொலைகார பாவி எதுக்குடா அந்த காளியாத்தாவோட என்ன கோர்த்துவிட்ட.

ஒரு எண்டர்டைன்மெண்ட்க்கு மச்சி, சரி சரி உன் தங்கச்சி போற வேகத்தில் வீட்டுல இருக்க எல்லாத்தையும் உடைச்சிருவா.

போன வாரம் தான் செட் பண்னேன் என்று தன்னவளை காண சென்றான் தேவ்.
இது தான் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுறதா, நீ நடத்து மச்சி என்றான் அகிலன்.

அகிலன் அதிதியின் பெரியப்பா மகன், அண்ணனாக மட்டுமில்லாது தோழனாக தந்தையாக உடனிருக்கும் காப்பாளன்.

அந்த சண்டிகுதிரைக்கும்
இந்த இதயராஜாக்கும்
நடக்கும் போரில்
யார் வெல்லுவார்????
 
Last edited by a moderator:
#3
என் சண்டைக்காரி நீதான்! !!! 2


நீதிமன்றத்தில் நடந்த நிகழ்வை யோசித்தவாறு காரை ஓட்டி சென்றாள் அதிதி. இவன் மனசில் என்ன நினைச்சிட்டு இருக்கான் என்ன பார்த்தா அவனுக்கு எப்படி தெரியுதாம்.


நேத்து கிளிபிள்ளைக்கு சொல்லுற மாறி சொன்னப்போ தலைய தலைய ஆட்டிட்டு இப்படி அந்தர் பல்டி அடிச்சிட்டானே என்று அவனை மனதில் வறுத்தெடுத்தாள் அதிதி.


அதிவேகமாக அரண்மனை போன்ற அமைப்புடைய பங்களாவின் முன் நிறுத்தி உள்ளே சென்றவளை அங்குள்ளவர்களின் வணக்கம் நிதானமடைய செய்தது. புன்னகையை முகத்தில் பூசி அனைவருக்கும் தலையசைப்பை பதிலாக அளித்து சென்றாள்.


திருமணத்திற்கு பின் இருவருக்கும் தனிமை கொடுக்க நினைத்த தேவ் பெற்றோர் , சின்னதாக டூர் செல்ல, அதன் விளைவென்னவோ இவர்களது பிரிவு தான்.


வீட்டின் உள்ளே வந்தவளை வெறுமை தான் வரவேற்றது. நேராக தனதறைக்கு சென்று கபோர்டில் ஒளித்து வைத்திருந்த புகைபடத்தை எடுத்து அதனுடன் பேச ஆரம்பித்தாள்.


எல்லாம் உனக்காக தான் செய்யுறேன், இதுக்கு மேல இந்த வாழ்க்கையை வாழ முடியும் என்று எனக்கு தோணவில்லை. காதலுக்காக காதலை தியாகம் பண்னேன் இன்னும் என்ன தான் பண்ணுறது போதும் என்று தீர்க்கமாக முடிவெடுத்தாள் அதிதி.


அதே நேரம் , தேவ் வாசலில் வரும் போது கத்திக் கொண்டு வந்தான். ஏய் ஜில்லு எங்க இருக்க அவன் அழைப்பில் கடுப்பானவள் ரூமில் இருந்த பூ ஜாடியை உடைத்து அவள் இருக்கும் இடத்தை காட்டி கொடுத்தாள்.


செல்லக்குட்டி மாமா வந்துட்டேன் என்று கதவை திறக்கும் போது அவசரமாக கையில் இருந்த படத்தை கபோர்ட்டில் வைத்து அவனிடம் திரும்பினாள்.


ஜில்லு என்று உள்ளே வந்தவன் கழுத்தில் உடைந்த ஜாடியின் பாகத்தை வைத்து டேய் நேத்து என்னடா சொன்னேன்.


என்ன சொன்ன என்று யோசித்தவன் தலையில் கொட்டினாள்.


எதுக்குடி அடிக்கிற .


டேய் கொலைவெறியில் இருக்கேன் ஒழுங்கா ஒடிரு .


என்ன பண்னேன்னு இப்படி திட்டுற என்று பச்சைபுள்ள போல முகத்தை வைத்து கேட்டான் தேவ் .

அவனை முறைத்தவாறே,

ரெண்டு பேரும் ம்யூச்சல்லா டிவோர்ஸ் பண்ணிக்கலாம்னு நேத்து சொன்னப்ப தலையை தலையை ஆட்டிட்டு எதுக்கு டா ஜர்ஜ்கிட்ட அப்படி பிலேட்ட மாத்துன.


என்ன சொல்லி சமாளிக்கிறது என்று யோசித்தவனின் முன்பு சொடக்கிட்டு உன்னை தான் கேட்டேன் என்றாள்.


இங்க பாரு என்னால உன் கூட என்று பேச ஆரம்பித்தவள் கன்னத்தில் முத்தம் வைத்து சிட்டாக பறந்து விட்டான் தேவ்.


இந்தர் என்று அவள் கத்திய கத்து எல்லாம் வீணாக தான் போனது.


சிறிது நேரம் அவன் சென்ற திசையை வெறித்தவள் கவனத்தை திசை திருப்பியது அலைபேசியின் ஒலி. அதை உயிர்பித்தவள் எதிர்புறம் சொன்ன செய்திகளை கேட்டு கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாள்.


உடனடியாக அகிலனை அழைத்து தகவல் உடனே தான் வருவதாக கூறி தேவ்விடம் சென்றாள்.


இந்தர் என்று கதவை தட்ட, கதவு பட்டென்று திறந்தது. எதிரே இருந்த புகைப்படத்தை கண்டவளுக்கு அந்த நாள் நினைவிற்கு வந்தது.அவர்களது நிச்சயத்தின் போது இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்தவாறு எடுத்த படம்.


என்ன ஜில்லு இன்னொன்று வேணுமா .


என்னது என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்டவளிடம்.


என்ன வேணும்னு கேட்டேன் என்றான்.


இன்னும் பத்து நிமிடத்தில் பிரெஸ் மீட் நீ தான் பேச போற எனக்கு இப்போ மீட்டிங் இருக்கு என்று அவன் கூறும் பதிலை கூட கேட்காது சென்றுவிட்டாள்.


இவளை எப்படி கரெட் பண்ணுறதுனே தெரியலையே என்று பிஸ்னெஸ்க்கு மட்டும் உபயோக படுத்திய மூளையை கசக்கினான் தேவ் .


அவள் கூறியது போல் பார்மலாக கிளம்பி வர மொத்த மீடியாவும் அங்கு தான் குடியிருந்தது.


கிராதகி எப்படி மாட்டிவிட்டு போய்ட்டா.


இவனுங்க கேட்கிற கேள்வியில் அவ டிவோர்ஸ்லாம் பண்ண மாட்டா , டைரக்டா மர்டர் தான். ஆண்டவா என்னை மட்டும் எப்படியாச்சு காப்பாத்திரு என்று மனதில் நினைக்க அவனது பி.ஏ அழைக்க, அவரிடம் ஆபிஸ் செல்ல சொல்லி கீழே வந்தான்.


இவன் வரவும் அனைவரும் எழுந்து மரியாதை கொடுத்தனர்.


கேஷுவலாக ஷோபாவில் அமர்ந்து அவர்களை அமர சொன்னான் கையசைவில் .


சார் ஸ்டார்ட் பண்ணலாம என்று கேட்ட .


ம்ம் என்று ஒன்றை சொல் உதிர்த்து தொழிலதிபர் தேவேந்திரனான மிடுக்குடன் அமர்ந்திருந்தான்.


போன வருஷம் உங்களுக்கு லிவிங் ரிலெஷன்க்கு ஆபர் கொடுத்த நடிகை அனுக்காக தான், நீங்க உங்க மனைவிய விவாகரத்து பண்ணுறிங்களாம், அப்படியா சார்?


அவன் பதில் கூறும் முன், ஆமாம் என்று தேன் குரல் ஒன்று ஒலித்தது வாசலில்.


தனது பாதுகாவலருடன் அங்கு நின்றிருந்தாள் இளைஞர்களின் கனவு கன்னியான நடிகை அனு.


உடலை ஒட்டிய கச்சிதமான உடை தன் செப்பு மேனியை அளவிட்டு காட்டியது.


அளவாக திருத்திய முடியை ஆங்காங்கே சுருள் செய்து முன்னே போட்டிருந்தாள்.


தேவ்விற்கோ ஐய்யோ என்றிருந்தது அதை வெளிக்காட்டாது நிதானமாக அமர்ந்திருந்தான்.
உள்ளே வந்தவள் ஊடகத்தினரை கண்டுகொள்ளாது தேவ்விடம் பேச வேண்டும் என்று அவனை கிட்டதிட்ட இழுத்து சென்றாள்.
இது போதுமல்லவா மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது அவங்களுக்கு புதிதா என்ன?
அன்னிக்கான ஹாட் டாப்பிக்கே அதுதான்.
மீட்டிங் முடித்து வந்த அதிதி காதுக்கு எட்டியது நடிகை அனு மற்றும் தொழிலதிபர் தேவேந்திரனின் உறவு புதுபித்தல் என்று தான்.கண்பார்ம் மர்டர் தான் டா என்று அனுவின் செயலில் முடிவுக்கு வந்தான் தேவ்
 
Last edited by a moderator:
#5
என் சண்டைக்காரி நீதான்! - 3

காதில் விழுந்த செய்தியை எப்படி எடுத்து கொள்வது என்று புரியாது அவளது அலுவலக அறைக்குள் நுழைந்தாள் அதிதி. அவளது காரியதரிசி பிரியா உள்ளே வந்து, மேம் அகிலன் சாரும் விக்னேஷ்வரன் சாரும் உங்கள மீட் பண்ணுறதுக்காக வைட்டிங் ரூமில் இருக்காங்க அனுப்பட்டுமா என்றாள் பவ்யமாய்.

அப்பா எப்படி இங்க என்று யோசித்தவள், ஐந்து நிமிடம் கழித்து அனுப்பு என்றாள் அதிகாரமாக . அவளது மனநிலையை அறிந்த பிரியா , அவள் தோளில் ஆதரவாக அழுத்தினாள். அதில் சற்று தெளிவு பெற்று எப்போது வந்தார் டாட், அகி வருகிறாதா கூட சொல்லவில்லையே.

நீ மீட்டிங் போனதும் அங்கிள் வந்துடாங்க, என்கிட்ட ஒரே என்கொயரி. யாரு கேட்டு நீ டிவோர்ஸ்க்கு அப்பிளை பண்னேனு அகிக்கும் நல்ல திட்டு. ஏன் டி இப்படி பண்ணுற .

தேவ் மேல ஆசை பட்டு தான கல்யாணம் பண்ண அப்பறம் எதுக்காக இந்த முடிவு என்று தன் ஆருயிர் தோழியின் வாழ்க்கை எண்ணி கவலைக் கொண்டாள் பிரியா.

ஒரு கை தட்டுனால் ஒசை வராது.
ரெண்டு கை தட்டனும் பிரியா இதுக்கு மேல ஏதுவும் கேட்காத பிளீஸ் என்றாள் அதில் துளி அளவும் கெஞ்சலில்லை. நீ கேட்டாலும் உனக்கு பதிலில்லை என்ற அழுத்தம் மட்டுமே தெரிந்தது.

அதிதியின் குணம் தெரிந்ததால் அதற்கு மேல் அவளிடம் பேசாது சென்றாள் பிரியா.
சாரி டி எனக்கு இதுக்கு மேல வழி தெரியலை, உனக்கே ஒரு நாள் புரியும் என்று மனதில் பேசினாள் அதிதி.

அதிதியின் கட்டளையின் படி ஐந்து நிமிடம் கழித்து இருவர் அவ்வறையுள் நுழைந்தனர்.

அதிதியிடம் இருக்கும் ஆளுமை திறனுக்கும் அதிகார தோரணைக்கும் காரணமானவர் திரு.விக்னேஷ்வரன் தான். அவள் கல்லூரி படிப்பில் சேர்ந்த நாளில் இருந்தே பகுதி நேரமாக தொழிலை கவனிக்க வைத்து இன்று இளம் தொழிலாளர் பட்டியலில் முதலாம் இடத்தை அவள் பிடித்திருப்பதுக்கும் இவரே காரணம்.

அதிதி விக்னேஷ்வரன் ஜானகியின் ஒரே மகள். ஆளுமை அதிகாரத்திற்கு விக்னேஷ்வரன் என்றால் அன்பிற்கும் அமைதிக்கும் ஜானகி.

இப்போ அவர் இங்கு வந்ததற்கு முக்கிய காரணமும் ஜானகி அவர்கள் தான். தன் ஒரே மகளின் வாழ்வை அவளே அழித்து கொள்ள பார்க்கிறதை அவரால் எப்படி வேடிக்கை பார்க்க முடியும்.

தொழில் முக்கியமா அதிதி வாழ்க்கை முக்கியமானு அவர் போட்ட போடில், மீட்டிங்காக டோக்யோ சென்றிருந்தவர் அடுத்த விமானத்தில் பறந்து இப்போது அதிதியின் முன்னே நிற்கிறார்.

உள்ளே வந்தவரை நேராக பார்க்க முடியாது தவித்தாள்.
அதிம்மா எதுக்கு தலைகுனிந்திருக்கிற, நான் என் பொண்ணுக்கு எப்பவும் யார் முன்னாடியும் தலை குனிய கூடாது என்று சொல்லி தானே வளர்த்தேன்.
ஒரு வேளை இங்க இருக்கிறது அதிதி தேவேந்திரனோ ?

அப்பா ஏன் இப்படி பேசுறிங்க என்றாள் ஆதங்கத்துடன் .
அதி நீ என்ன பண்ணி வைச்சிருக்கனு புரியுதா என்றார் சற்று உயர்ந்த குரலில்.

தெரியும்ப்பா எனக்கு நீங்க எப்படி ஒரு பிரச்சனையை சால்வ் பண்ணனும் என்று சொல்லி கொடுத்திருக்கீங்க. பிளீஸ் அப்பா நான் பார்த்துக்கிறேன்.

எவ்வளவு நாள் என் கையை பிடிச்சு நீங்க கூட்டிட்டு போவிங்க , இனி என் டர்ன் நான் பேஸ் பண்ணுறேன் என்று விக்னேஷ்வரனை பேச விடாது பேசினாள்.

எல்லாதிற்கும் நீயும் உடந்தையா இருந்திருக்க என்று கேள்வி அம்பினை அகிலனிடம் தொடுக்க , அவன் பதில் கூறும் முன் பதில் கூறினாள் அதிதி. அகி இந்த கேஸ்ஸ ஹேண்டில் பண்ணவில்லை என்றால் வேற வக்கீலிடம் போவேன் என்று நான் உறுதியா சொன்னதால் தான் அகி பைல் பண்ணான் என்று தமையனின் செயலுக்கு விளக்கமளித்தாள் அதிதி.

இங்க பாரு அதிம்மா உன் அம்மா உன்னை நினைத்து ரொம்ப பீல் பண்ணுறா.
சரிப்பா , நான் ஈவ்னிங் வீட்டுக் போய் அம்மாவ பார்த்துகிறேன் நீங்க இந்த விஷயத்தை இன்னையோட விட்டிருங்கப்பா பிளீஸ் என்றாள்.

சரிடா பார்த்துக்கோ, நான் நாளைக்கு டோக்யோ போறேன் டா, இம்பார்டன்ட் மீட்டிங் இருக்கு. உங்கம்மா தான் நீயும் தேவ்வும் டிவோர்ஸ் பண்ண போறிங்கனு நியூஸ் பார்த்து எனக்கு போன் செய்து ஒரே அழுகை. எல்லாத்தையும் யோசித்து என்கிட்ட கேட்டு செய்யுற என் செல்ல மகள் இவ்வளவு பெரிய விஷயத்தை மறைச்சது எனக்கு அதிர்ச்சி தான்.

ஆனால் எதையோ மனசில் வைச்சுகிட்டு தான் இதை பண்ணுற அது மட்டும் புரியுது. உன் விருப்பத்தால் தான் இந்த கல்யாணம் நடந்தது. இப்போ எதுக்கு தேவ்வ பிரிய நினைக்கிற .

தேவ் கிட்ட நான் பேசுறேன் , உங்களுக்கு நடுவில் இருக்க மிஸ் அன்டர்ஸ்டேண்டிங்க பேசினால் தான் சரியாகும். இப்படி பிரிய நினைகிறது முட்டாள் தனம் . உனக்கு நான் எதுவும் சொல்ல தேவையில்லை. உனக்கும் அவனுக்கும் என்ன பிரச்சனை.

அப்பா இப்போ நீங்க கேட்கிற கேள்விக்கு என்கிட்ட பதில் இல்லை , கூடிய சீக்கரம் சொல்லுறேன். இனி இத பத்தி பேச வேண்டாம்.

இங்க பாரு அதிமா தேவ் ரொம்ப நல்லவன் இப்ப நீ மட்டும் தான் அவன் மனசில் இருக்க என்றான் அகிலன்.
வெற்று புன்னகை ஒன்றை உதிர்த்தாள் அதிதி.

அப்போது அவசரமாக உள்ளே நுழைந்த பிரியா, நடிகை அனுவின் ரசிகர்கள் ஒருபுறமும் ஊடகம் ஒருபுறமும் அலுவலகத்தின் முன் கூடியிருப்பதாக பதற்றத்துடன் கூறினாள் .

விக்னேஷ்வரன் தானும் வருவதாக கூற, அவரை மேலே இருக்க சொல்லி பிரியா அகிலனை அழைத்துக்கொண்டு கீழே வந்தாள் அதிதி.

ஊடகங்கள் தங்கள் பணியை செவ்வென செய்ய ஆரம்பித்தது, நடிகையின் ரசிகர்கள் ஒருபுறம் அதிதி ஒழிக என்றும் அனு வாழ்க என்ற கோஷத்தை ஒலித்தனர்.

மிடுக்கான நடையில் வெளியே வந்தவள், ஊடகத்தின் கேள்வி கணைகளை ஏற்க தயார் ஆனாள்.

ரிப்போர்டர் - 1
நீங்கள் விருப்பம் இல்லாமல் கட்டாயத்தில் தான் மிஸ்டர் தேவேந்திரனை திருமணம் செய்தீர்களா?

ரிப்போர்டர் - 2
நடிகை அனுவிற்கும் தேவேந்திரனிற்கும் நடுவில் இருக்கும் தொடர்பு தான் நீங்கள் அவரை விவாகரத்து செய்ய காரணமா?

ரிப்போர்டர் - 3
உங்களது உறவினர் ஒருவரை திருமணம் செய்ய தான் இந்த விவாகரத்து நாடகம் என்று கூறுகிறார்களே அது உண்மையா?

இவர்களது கேள்வியை கேட்ட அகிலனுக்கு கோபம் வர அவனை அமைதியாக கூறி, பேச ஆரம்பித்தாள்.
எனக்கும் என் கணவருக்கும் நடுவில் இருப்பதை கண்டவர்களுக்கு தெரிவிக்க எனக்கு விருப்பம் இல்லை.
மேலும் அவரை நான் விவாகரத்து செய்ய நினைத்தது இருவருக்கும் இடையே இருக்கும் தனிப்பட்ட விஷயம் அதை பூதாகரமாக்கும் உங்களிடம் தெரிவிக்க எனக்கு துளியளவும் எண்ணமில்லை. நீங்கள் செல்லலாம் என்று வாசலை காட்டினாள்.

ரிப்போர்டர் - 2
இப்படி புத்திசாலி தனமாக பேசினால் நாங்க விட்டு விடுவோமா மேடம். நல்லவர் தான் உங்க கணவர், அப்பறம் எதற்கு நடிகை அனுவுடன் எங்கள் அத்தனை பேரின் முன் அவர் தனியறை செல்ல வேண்டும்.

அவர்கள் கூறியதை கேட்டவள் முகம் கூம்பி, தன் கைப்பேசியை உயிர்பித்து சில நொடி பார்த்து அதை மற்றவர்களிடமும் காட்டினாள் அங்கிருந்த அனைவருக்கும் ஏன் அதிதிக்கும் அதிர்ச்சியே தேவ் அனு இருந்த நிலை அப்படி.
அப்படி எப்படி தான் இருந்தாங்க🙄🙄
 
Last edited by a moderator:
#6
என் சண்டைக்காரி நீதான்!!! - 4

ரிப்போர்டர்களின் கேள்வியில் கோபமுற்ற அதிதி, தங்கள் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்ட சிசிடிவி பதிவை எடுத்தாள். படுக்கறைகளை தவிற மற்ற அனைத்து அறைகளிலும் கேமரா பொருத்தப்பட்டிருந்தது அவர்கள் வீட்டில் .

தேவ்வின் மீது இருந்த நம்பிக்கையில், அதை ஆராய, அவன் அதை வீணாக்காது, ஸ்டடி ரூமில் தான் நடிகை அனுவுடன் இருந்தான். அவள் அவனை நெருங்கி அணைத்தாள். தீப்பற்றது போல அவளிடம் இருந்து விலகி, அவள் நினைப்பது ஒரு போதும் நடக்காது என்று பொறுமையாக கூற அனுவோ அவனை எப்படியாவது அடைந்தே தீர வேண்டும் என்ற முனைப்போடு மீண்டும் அவனை நெருங்கினாள்.

இந்த முறை பொறுத்துக்கொள்ளாது அவளை அவனிடம் இருந்து பிரித்து அவனிட்ட அறையில் கன்றி போய்விட்டது அவளது கன்னம். தேவ்விடம் இருந்து இப்படி ஒரு எதிர்ப்பை அனு சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இப்போ எதாவது செய்தால், காரியம் கெட்டு போய்விடும் என்று அமைதி காத்தாள் .

இதை பார்த்த அதிதிக்கு மட்டுமில்லை அங்கிருக்கும் அனைவருக்குமே அதிர்ச்சியே. அகிலன் மட்டும், அடியே அனு என் மச்சான் ரொம்ப சாதுனு நீ போட்ட கணக்கு ரொம்ப தப்பு டி . அவன் ஒரு ஆட்டாம் பாம் மாறி . இது தெரியாம அவன் லைப்பில் நீ ரொம்ப விளையாடிட்ட. என்ன செய்ய காத்திருக்கானோ தெரியலை. ஆனா ஒன்னு மட்டும் தெரியுது உன்னை நல்லா வைச்சு செய்ய போறானு.

அனுவின் ரசிகர்களின் கோபம் அதிகமாக அந்த இடம் சற்று நேரத்தில் போர்களமானது.
அகிலன் உடனே காவல்துறைக்கு தெரிவிக்க, கூட்டத்தை களைக்க வந்தனர் அவர்களும்.

அதிதியின் ஒரு குறும்படமே ரிப்போர்டர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் தந்து விட்டது. அதன் பிறகு அவர்களை ஒரு பொருட்டாக மதிக்காது தன் வேலையை பார்க்க சென்று விட்டாள்.

அதே சமயம் வீட்டில் தேவ்விடம் அனு பேசிக் கொண்டிருந்தாள். தேவ் நான் உன்னை ரொம்ப காதலிக்கிறேன், உனக்கும் என்னை பிடிக்கும் நீ அந்த அதிதியை டிவோர்ஸ் பண்ணிரு. உனக்கு அவள் செட்டே ஆக மாட்டா என்றாள்.
அதை நான் பார்த்திக்கிறேன் உன் நடிப்ப கேமராக்கு முன்னாடி மட்டும் வைச்சுக்கோ இந்த தேவ்கிட்ட வேண்டாம் என்று விரல் நீட்டி எச்சரித்தான் தேவ்.

ஒருவித குரோத பார்வையுடன் வெளியேறினாள் அனு.
இதற்கு நீ பதில் சொல்லியே ஆகனும் தேவ் என்று நினைத்தவாறு சென்றாள் அனு.

அடிபட்ட பாம்பு சும்மா இருக்காது என்று தேவ்விற்கு தெரியும் ஆனால் அது எப்படி தாக்கும் என்பது மட்டும் அறியாது போனது தான் அவன் தவறோ ?

அடுத்த இரண்டு நாளைக்கு இதுதான் பிரேக்கிங் நியூஸானது.

தேவ்வின் சின்ன சீண்டல் , அதிதியின் தீராக் கோபம், ஒருபுறமும் அவர்களது தொழில் ஒருபுறமும் என இரண்டு நாட்களை போக்கினர்.

விடியலுக்கு முன் ஒன்றல்ல இரண்டு பூகம்பம் வந்து இறங்கியது அவர்கள் வீட்டிற்கு. இதையறியா இருவரும் தங்களறையில் நித்திராதேவியின் பிடியில் சிக்கியிருந்தனர்.

காலை ஆறு மணிக்கு எழுந்துவர்கள், காலை கடனை முடித்து அரை மணி நேரம் ஜிம்மில் பயிற்சி முடித்து கீழே வர.
நடு ஹாலில் கால் மீது கால் போட்டு தெய்வீக களையுடன் நாற்பதின் முடிவிலிருந்த பெண் ஒருத்தர் தன் நெற்றி கண் திறந்து அமர்ந்திருந்தார். அவரது அருகே கிட்ட வராதீர் என்ற எச்சரிக்கையுடைய முகத்துடன் ஐம்பது மதிக்கதக்க ஒருவர் அமர்ந்திருந்தார்.

அதிதியும் தேவ்வும் பிஸ்கட் திருடி தின்று மாட்டி கொண்ட குழந்தைகளை போல் முகத்தை வைத்து கொண்டு அவர்கள் முன் வந்தனர்.

எப்ப வந்திங்கப்பா என்று தேவ் முடித்தது தான் தாமதம் , அவர் விட்ட அறையில் நான்கடி தள்ளி விழுந்தான் தேவ்.
அவரது செய்கையில் அதிதி கூட சற்று பயந்து விட்டாள்.

தேவ் விழுந்த இடத்திலேயே சிலையாக அமர்ந்திருந்தான். காரணம் அவன் பிறந்ததில் இருந்து அடிக்காத தன் அன்பு தந்தையா தன்னை அடித்தது என்று அவன் மூளை அதை ஏற்க மறுத்தது.

தேவ்வின் அம்மாவிற்கு உள்ளே வலித்தாலும் அவன் செய்த காரியத்திற்கு இந்த கண்டிப்பு தேவையென அமைதி காத்தார்.

அவன் விழுந்த இடத்திற்கு வந்த அதிதி அவனை தூக்கி விட்டு, தன் மாமனாரிடம் பேச வந்தாள். அவரோ , அதிம்மா உன்கிட்ட அப்பறம் பேசிக்கிறேன். இப்போ நான் தேவ் கூட பேசணும் என்றார்.

இப்படி கோர்ட்டுக்கு போகவா உனக்கு அதியை கல்யாணம் செய்து வைச்சேன் என்று தன் குரலை உயர்த்தி பேசினார் ஆதிசேஷன், தி கிரேட் பிஸ்னஸ் டைகான்.

அவர் அருகே வந்த வாசுகி, கொஞ்சம் பொறுமையா பேசுங்க . எதுக்கு இப்படி குற்றவாளி மாறி கேள்வி கேட்கிறிங்க. தேவ் மட்டும் இதற்கு காரணம் இல்லை உங்க மருமகளும் தான் காரணம் என்று அதிதியை பாராது கூறினார்.

ஏனோ அவரது பாராமுகம் அவளை மிகவும் பாதித்தது. வசும்மா நான் சொல்லுறதை கேளுங்க என்று அதிதி கூற அதை கேட்காது சமையறை சென்றார் வாசுகி .
அவர் பின்னாடியே அவளும் சென்றாள்.

அவர்கள் சென்றவுடன் தன் தந்தையிடம் வந்த தேவ், அவர் காலடியில் அமர்ந்து அவர் மடியில் படுத்து அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் அனு செய்த தில்லுமுல்லால் , அவர்கள் இருவருக்கு நடுவில் உண்டான விரிசல் அதனால் அதிதியின் அதிரடி தான் இந்த விவாகரத்து என்று அனைத்தையும் கூறினான்.

அவன் கூறியதை பொறுமையாக கேட்ட ஆதிசேஷன் . சாரி தேவ் அவசரபட்டு அடிச்சுட்டேன் என்று அவன் தலையை கோதினார்.

அப்பா உங்களுக்கு இல்லாத உரிமையா, விடுங்கப்பா என்று அவர் வயிற்றை கட்டிக் கொண்டான்.

பிரச்சனை பிரஸ் வர போய்டுச்சே தேவ் எப்படி சமாளிக்க போற என்று அவர் கேட்க. வாசுகியிடம் கெஞ்சி கொண்டிருந்த அதிதியை காட்டி. எல்லாம் உங்க செல்ல மருமகளை வெச்சு தான் என்று கூறி அவளிடம் வம்பு வளர்க்க சென்றான் தேவ் .
 
Last edited by a moderator:
#7
என் சண்டைக்காரி நீ தான்💞 - 5


இது தான் சரியான நேரம் என்று அதிதியை சீண்ட சமையறையுள் நுழைந்தான் தேவ். வந்தவனை கண்ட வாசுகி, ஒரு முறை அவனை ஆழ்ந்து பார்த்தார். கண்களில் கள்ளம் இல்லாது குறும்புகளால் நிறைந்திருந்து. அவன் செய்ய போகும் சேட்டை கூர்ந்து பார்க்க ஆரம்பித்தார்.

அதிதியை உரசியவாறு நின்று காபி கேட்டான்.வாசுகி செல்லும் முன் அதிதி அடுப்பிடம் செய்ய போய்விட்டாள்.

மகனே! அவளிடம் போய் உன் சேட்டையை செய்ய நினைச்சியே, இவக்கிட்ட இருந்து உன்னை எப்படி காப்பாற்றுவது என்று தீவிர யோசனையில் இருந்தார் வாசுகி.

தேவ்வோ அதிதி கையால் விஷத்தை கொடுத்தால் கூட சாப்பிட தயாராக இருந்தான். காபி தானே என்று அசால்டாக இருந்தான்.

தனக்கு தெரிந்த முறையில் காபி போட்டு கொண்டிருந்தாள். அவளை சீண்டிக் கொண்டிருந்த தேவ்வை காதை திருகி வெளியே அழைத்து வந்தார் வாசுகி .

பாவம் அதிதி, காபி தூளுக்கும் டீ தூளுக்கும் வித்தியாசம் தெரியாது இரண்டையும் போட்டு ஒரு கலவையை செய்து தேவ்விடம் கொடுத்தாள்.

மனதில் மரண பீதி இருந்தாலும் அதை வெளிக்காட்டாது வாங்கி குடித்தான். என்ன கண்றாவி இது என்று அஷ்ட கோணத்தில் அவன் முகம் போன போக்கில் ஆதிசேஷனும் வாசுகியும் சிரித்தே விட்டனர்.

அவ்வளவு கேவலமா இருக்கு என்று அவனிடம் பிடுங்கி ஒரு மிடர் அருந்தியவளுக்கு குடல் வாய் வழி வந்து விடும் போல் இருந்தது.
முழுங்கவும் முடியாது துப்பவும் முடியாது ஒரு நிலையில் இருந்தாள்.

அவளை கைப்பிடித்து வாஷ் பேஷனிடம் அழைத்து சென்று துப்ப சொன்னான்.
துப்பிய பிறகே மூச்சு விட்டாள். அசட்டையாக அவனிடம் ஒரு சிரிப்பை சிந்தி ஓடிவிட்டாள் அதிதி.
அவளோடு அவனும் சென்றான் அலுவலகத்திற்கு செல்ல .

இவர்கள் சேட்டையின் போதே தேவ் கூறியதை வாசுகிடம் கூறியிருந்தார் ஆதிசேஷன்.
ஏங்க எல்லாம் சரி ஆகிடும் இல்ல, ஜானகி பயந்து போயிருப்பா. நீங்க ஒரு தடவை விக்னேஷ்வரன் அண்ணன்கிட்ட பேசுங்க என்றார் வாசுகி .

நேற்றே பேசிட்டேன் வாசு, தங்கச்சி கொடுத்த பிரஸரில் நேத்து வந்திருக்கான்.
அதிதி அவளே பார்த்து கொள்கிறேன் என்று அவனிடம் சொல்லவும் மீட்டீங்யிற்காக திரும்பி போயிருக்கான். ரெண்டு நாளில் வந்திருவான், நேரில் போய் பேசி கொள்ளலாம் .இப்ப நீ போய் ரெஸ்ட் எடு, நான் வாக்கிங் போயிட்டு வரேன் என கிளம்பினார் ஆதிசேஷன்.

ஆதிசேஷனும் விக்னேஷ்வரனும் பால்ய வயதில் இருந்தே தோழர்கள்

அறைக்கு வந்த அதிதி, ஜானகி அம்மாவிற்கு அழைத்து காலை உணவிற்கு அங்கு வருவதாக கூறி , மற்றதை அங்கு பேசுகிறேன் என்று வைத்து விட்டு குளிக்க சென்றாள்.

குளித்து வந்தவள் நேர்த்தியாக காட்டன் புடவையை கட்டி , தன் அடர் கேசத்தை அள்ளி கொண்டையிட்டு , நெற்றியில் சிறு பொட்டிட்டு ஆளுமைக்குரிய தோரணையுடன் இறங்கி வந்தாள்.

அவளை காண தன் இரு கண்கள் போதவில்லை, ஏன் இரு கண்களுடன் நிறுத்திவிட்டாய் என இறைவனிடம் சண்டைக்கு சென்றான் தேவ் .

அவன் பார்வையை கண்ட அதிதி இதற்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என முணுமுணுத்தவாறு, இந்தர் சாப்பிடுறியா என்று அவள் கேட்க.
தனக்கு சரியாக காது கேட்கிறதா என்று சந்தேகம் வந்துவிட்டது தேவேந்திரனுக்கு .

அவன் செய்கையின் பொருள் உணர்ந்தவளாய், உன் காது நல்லா தான் கேட்குது சாப்பாடு போ ஆபிஸ்க்கு என்றவளை வினோதமாக பார்த்தான் தேவ் .

அவன் பதிலை எதிர் பார்க்காத அதிதி அவனை இழுத்து சென்று சேரில் அமர வைத்து , இட்லி மஸ்ரும் கிரேவி தட்டில் வைத்து அவனிடம் கொடுத்தாள்.

தன்னவள் என்ன உணவை கொடுத்தாள் என்று கூட அறியாது அவனை பார்த்து கொண்டே சாப்பிட்டான். அவசரமாக ஓடி வந்த வாசுகி அவனிடம் இருந்து தட்டை பறித்து கோபமாக தேவ்வை முறைத்து அவனை வாஷ் பேஷனுக்கு அழைத்து சென்று வாமிட் பண்ணு தேவ் என்றதும். வசும்மா என்று தவிப்பாக கூப்பிட்டாள் அதிதி.

ஒரு நிமிஷம் அதிம்மா என்று தங்கள் குடும்ப மருத்துவருக்கு அழைப்பு விடுத்து உடனடியாக வருமாறு பணிந்து, சமையல் செய்பவரை அழைத்து சுடுதண்ணியில் ஒரு கை கல்லுப்பு சேர்த்து வருமாறு கூறி இருவரையும் அழைத்து கொண்டு தேவ்வின் அறைக்கு சென்றார்.

இருவரும் அவரது செய்கையில் குழம்பி, அவரையே பார்க்க, அவரோ தேவ்வை மட்டுமே பார்த்து கொண்டிருந்தார்.
அதிதி முதல் முறையாக தாழ்வு மனபான்மையை உணர்ந்தாள் அதுவும் சில நொடிகளே.

வாசுகி, அவள் கையை பற்றி . அதிம்மா மஸ்ரும் என்றால் அவனுக்கு அலர்ஜி , புட் பாய்ஸன் ஆகிரும் என்றார் அவ்வளவு தான். அவன் அருகே சென்றவள் அவன் தலையில் கொட்டி ஏன்டா அறிவில்ல எனக்கு தான் இதெல்லாம் தெரியாது. சாப்பிட்ட உனக்குமா என்று கோபத்தில் ஆரம்பித்து குற்றவுணர்வில் முடித்தாள் அதிதி.

எனக்கு எப்படி தெரியும் உன்னை பார்த்தாலே என் மூளையும் உணர்வும் வேலை செய்ய மாட்டேங்குது இதில்லை நான் என்ன சாப்பிட்டேன்னு மட்டும் எனக்கு தெரியவா போகுது என்று மனதில் நினைத்து கொண்டு வெளியே திருதிருவென முழித்தான் தேவ். அவனை முறைத்து வேலையாள் கொடுத்த உப்பு நீரை அவனை குடிக்க வைப்பதற்குள் அதிதி ஒரு வழியாகி விட்டாள். குழந்தைக்கு புகட்டுவது போல் கையை பிடித்து வாயில் ஊற்றினாள்.
இதற்கு மேல் அதிதி பார்த்து கொள்வாள் என்று வாசகி சென்று விட்டார்.

உள்ளே சென்ற வேகத்தில் அனைத்தையும் வாந்தி எடுத்து சோர்ந்து போய்விட்டான். அவனை அழைத்து சென்று உடல் கழுவி உடை மாற்ற செல்ல தேவ் அவளை தடுக்க, என்ன என்று பார்வையால் அவள் கேட்க இல்ல நானே என்று கூற வந்தவனை முறைத்து உடை மாற்றி படுக்க வைத்தவள்.
வேலை செய்பவரை அழைத்து தேவ் ரூமை கிளீன் செய்ய சொல்லி அவள் அறைக்கு சென்றாள்.

உள்ளே வந்தவள் கபோர்டில் மறைத்து வைத்திருந்த தேவ் போட்டோவை எடுத்து பார்த்து ஒரு மூச்சு அழுதாள். பின் யாரும் அறிய கூடாது என்று முகம் கழுவி, சேலையை கலைத்து டாப் லெகின் அணிந்து மீண்டும் தேவ் அறைக்கு வந்த போது நன்றாக உறங்கி கொண்டிருந்தான்.

வீட்டிற்கு வருவதாக சொன்ன மகள் இன்னும் வரவில்லை என்று ஜானகி போன் செய்ய , அப்போது தான் தன் அன்னையிடம் காலை உணவிற்கு வருவதாக கூறியது ஞாபகம் வந்தது.

அவர் அழைப்பை ஏற்று தேவ்விற்கு உடம்பு சரியில்லாத காரணத்தால் இப்ப வர முடியவில்லை இரவுணவிற்கு வருவதாக கூறினாள்.
பதறிய ஜானகி அங்கு வரவா என்று கேட்க, இல்ல வேண்டாம்மா நைட் அவனையும் கூட்டிட்டு வரேன் நல்லா தான் இருக்கான் பயபடாதே என்று கூறி போனை வைத்தாள் அதிதி.

உறங்கும் அவன் அருகே சென்று அவனுடன் படுத்து அவளும் உறங்கி விட்டாள். அறை கதவு தட்டு சத்தம் கேட்டு முழித்த தேவ்விற்கு மிகவும் சோர்வாக தெரிந்தது, தன் மார்பில் எதோ அழுத்துவது போல் தெரிய நன்றாக கண்ணை திறந்து பார்த்த போது விரிந்த முடிகள் அவன் கழுத்து வரை பரப்பி முகத்தை அவன் நெஞ்சில் பதித்து தூங்கி கொண்டிருந்தாள் அதிதி, ரசனையாக அவளை பார்த்து கொண்டிருந்தான் தேவ் .

மீண்டும் பலமாக கதவை தட்டும் சத்தம் கேட்க அதிதி விழித்து விட்டாள். அவள் அசைவை உணர்ந்த தேவ் டக்கென்று கண்னை மூடிக்கொண்டான். எழுந்திரிக்க முயலும் போது சிங்கத்திடம் சிக்கிய இறை போல உறுத்தியது அதிதியிற்கு , அப்போது தான் தெரிந்தது . அதிதி தேவ்வின் மேல் தலை வைத்து உறங்கியது போல் அவன் அவளை அணைத்திருந்தான் என்று.

அவனிடம் இருந்து பிரிந்தவள், இப்படி தான் நீ பண்ணுவ என்று அந்த அனு கூறியது போல செய்திருக்கியே டா என்று கதறினாள். அவள் வார்த்தை தீச்சுட்டது போல் தோன்றியது தேவ்விற்கு. அவள் அழுகை அவன் இதயத்தை கசக்கியது. இவை எதையும் முகத்தில் காட்டாது படுத்திருந்தான் தேவ் .

உன்மேல நம்பிக்கை இருக்கு, ஆனால் அது மட்டும் எனக்கு வேண்டாம். உன் காதல் முழுவதும் எனக்கு மட்டும் தான் வேண்டும். இல்லை என்றால் நீயாவது சந்தோஷமா இரு என்று தான் உன்னை விட்டு செல்ல துணிந்தேன்.

இம்முறை கதவு தட்டும் சத்தம் கேட்கும் போது தேவ் அசைய கண்ணை துடைத்து உடையை சரி செய்து கதவை திறக்க டாக்டருடன் வாசுகி நின்றிருந்தார்.

அவர்களை உள்ளே விட்டுவிட்டு , ஒரு போன் கால் பேசனும் என்று சென்றாள் அதிதி.
பிரியாவிற்கு போன் செய்து இன்று இருக்கும் மீட்டிங் அனைத்தையும் வரும் நாட்களுக்கு மாற்றி வைக்குமாறு கூறி, மேலும் சில பல கட்டளைகளை பிறப்பித்து இன்று தான் வரவில்லை என்று கூறினாள் அதிதி.

தன் தோழியை பற்றி அறிந்த பிரியா காரணத்தை கேட்க காலையில் நடந்ததை பகிர்ந்தாள் அதிதி.
தெரியாமா நடந்த விஷயம் இது, நீ தேவ் அண்ணாவ பார்த்துக்கோ நான் ஈவினிங் கால் பண்ணுறேன் என்று வைத்தாள் பிரியா.

பின்பு தன் மாமனார் ஆதிசேஷனிடம் சென்று இன்று ஒரு நாள் தேவ் அட்டன் செய்ய வேண்டிய முக்கியமான மீட்டிங்களுக்கு செல்லுமாறு கூறினாள் பிஸ்னஸ்உமன் அதிதி தேவேந்திரன்.

சரியாக அவள் தேவ் அறைக்கு வரும்போது டாக்டரும் வெளியே வந்தார், என்னாச்சு என்று அவரிடம் அதிதி கேட்க .
அவர் சிறிது பதற்றமாக, அலர்ஜிக் சிம்டம் எதுவும் இல்லை, ஹி ஈஸ் பர்ஃபெக்லி ஆல்ரைட் நெள என்று கூறி இருந்தாலும், டேப்லட் போட்டு இன்று ஒரு நாள் பெட் ரெஸ்ட் எடுக்கறது பெட்டர் என்றார்.
தேங்கியூ டாக்டர் என்று கூறினாலும் டாக்டரின் செய்கையில் குழம்பினாள் அதிதி .
அப்போ நான் கிளம்புறேன் என்று கிளம்பினார் டாக்டர் .
ஒ.கே டாக்டர் என்று வாசுகியிடம் சென்றாள் அதிதி.

அவள் வருவதை கண்ட வாசுகி, அதிம்மா இதில் உன் தப்பு எதுவும் இல்லை. உன்கிட்ட நான் சொல்லி இருக்கணும் நான் மறந்துட்டேன் என்று கூறி நான் போய் தேவ்க்கும் உனக்கும் பாலும் பிரட்டும் எடுத்திட்டு வரேன் என்று சென்றுவிட்டார் வாசுகி .

அவனை பார்ப்பதை தவிர்க்க போனில் கேண்டி கிரஸ் விளையாடினாள். அவளது தவிப்பு அவனை வெகுவாக தாக்கியது. தான் செய்ய வேண்டியதை விரைவில் செய்ய வேண்டும் என்று உறுதிக் கொண்டான் தேவ் .
 
#8
என் சண்டைக்காரி நீதான்💞 - 6

வாசுகி இருவருக்கும் பாலும் பிரட்டும் கொடுத்து சென்றார். அவரிடம் இருந்து வாங்கியவள் அவனை ஏற்யெடுத்து பார்க்காது பாலையும் இரண்டு பிரட் துண்டுகளை அவனிடம் நீட்ட, அவனோ அதை வாங்காது அவளையே பார்த்தான்.

எரிச்சலுடன் என்ன தான்டா உன் பிரச்சனை என்று சிடுசிடுக்க கைகளை காட்டினான் அது நடுங்கியது. பார்க்க பாவமாக இருந்தாலும் முகத்தில் கோபத்தை பூட்டி கொண்டு வாயில என்ன வைச்சிருக்க, வாய தொறந்து சொன்னா தான் என்ன என்று கடிந்தவாறு பிரட் துண்டை பாலில் நினைத்து அவன் வாயருகே கொண்டு போக மறுக்காமல் வாங்கி கொண்டான் தேவ் .
பின் பாலை அவனுக்கு புகட்டி, அவளும் குடித்து அந்த இடத்தை சுத்தம் செய்து , மாத்திரை கொடுக்க வெந்நீர் எடுத்து வந்தாள்.

மாத்திரை விழுங்காது சிறு குழந்தை போல் அடம் செய்தவனை, இப்ப மட்டும் நீ ஒழுங்கா சாப்பிலைனால், குழந்தைகளுக்கு கொடுக்கிற மாதிரி சங்கில் தருவேன் என்றவளின் கூற்றில் இருந்த உறுதி, நீ சாப்பிடவில்லை என்றால் கட்டாயம் செய்வேன் என்ற செய்தி ஒளிந்திருந்தது.

இவள் செய்தாலும் செய்து விடுவாள் என்று முகத்தை தூக்கி வைத்து கொண்டு மாத்திரையை விழுங்கினான். அவன் மாத்திரை விழுங்கும் வரை அருகில் இருந்தவள் , மீண்டும் அவனுக்கு முதுகுப்புறம் காட்டி கேம்மில் மூழ்கினாள்.

அவள் செய்க்கை தேவ்விற்கு விசித்ரமாக இருந்தது. காரணம் இது அதிதியின் குணம் அல்ல. அவள் அசைப்பட்ட பொருளை பாதுகாப்பதில் எவ்வளவு மெனக்கெடுவாளோ அதே அளவிற்கு அதை பெற போராடுவாள். ஆனால் தேவ்வின் விசயத்தில் மட்டும் ஏன் இந்த மாற்றம் என்று ஒரு வருடத்திற்கு முன் நடந்தவற்றை நினைத்து பார்த்தான் தேவ் .

அதிதி குருப் ஆப் கம்பெனிஸ் மற்றும் தேவ் குருப் ஆப் கம்பெனிஸ் இணைத்து வழங்கிய கேன்சர் மறுவாழ்வு மையத்திற்கான கேம்பில் தான் ஐந்து வருடம் கழித்து அதிதியை பார்த்தான் தேவ் .

இளமஞ்சள் நிற சேலையில் தூக்கி சொருகிய பூஞ்சோலையாக, அலை புரண்ட கூந்தலுடன் சண்டை பயிலும் காற்றுடன் போராடி அள்ளி கொண்டை போட்டு, அங்கிருந்த சிறுவர்களுடன் ஒடி பிடித்து விளையாடி கொண்டிருந்தாள் அதிதி.
அவளை நோக்கி அவன் வர, சிறுவர்களிடம் தனக்கு வேலை வந்துவிட்டது என்று கூறி தேவ்விடம் வந்தாள்.

ஹாய் இந்தர் எப்படி இருக்க, யூ.எஸ்யையே செட்டில் ஆகிருவனு நினைத்தேன் எப்படியோ வந்துட்ட போல என்று கிண்டலாக கேட்டாள் அதிதி.
இங்க ஒரு தேவதை இருக்கிறதா கேள்வி பட்டேன் அது தான் பார்க்க வந்தேன் என்றான் கிண்டலாக .

கொஞ்சம் கூட நீ மாறவே இல்லை இந்தர் என்றவளை கூர்ந்து பார்த்து , ஆனால் நீ ரொம்ப மாறிட்ட அதி.
ம்ம் யாரு நானா ? என்ன மாறிட்டேன் இந்தர் என்றாள் அதிதி.

அதுவா முன்னாடி அழகா இருந்த இப்ப ரொம்ப அழகா இருக்க என்றான் தேவ் .
அவன் சொன்ன விதத்தில் கன்னங்குழி தெரிய சிரித்தாள் அதிதி.

கேம்ப் எப்படி போது அதி என்றான் தேவ்.
அல்மோஸ்ட் ஓவர் , இன்னும் ஓவர்ஆல் ரிப்போர்ட் மட்டும் கொடுக்கலை என்றாள் அதிதி.

ஒ.கே அதி அப்பா உன்னை பார்க்கனும் என்று சொன்னாங்க , போகலாமா என்று கேட்க .
ஓ.கே இரு ட்ரைவர் அண்ணாவ வீட்டுக்கு போக சொல்லிட்டு வந்தறேன் என்று கூறி அவரை கிளம்ப சொல்லிவிட்டு தேவ்வுடன் செல்ல ஆயுத்தமானாள்.

அதிதியை அழைத்து கொண்டு பார்க்கிங் ஏரியா சென்றான் தேவ் . அங்கு பார்த்தாள் காருக்கு பதிலாக எண்பில்ட் நின்று கொண்டிருந்தது. இந்தர் கார் கொண்டு வரலையா என்றாள் அதிதி.
இல்லை என்று உதட்டை பிதிக்கி, பைக்கில் ஏறி அமர்ந்து அவளை ஏறுமாறு கண்ணசைத்தான்.

தேவ் எனக்கு சேரி போட்டு பைக்கில் உட்கார தெரியாது, நீ முன்னாடி போ நான் டிரைவர வர சொல்லி வரேன் என்றாள்.
சில் அதி, இஃப் யூ டோன்ட் மைண்ட் உன் கிரிப்பிற்காக என்னை பிடிச்சக்கோ, டெட்ஸ் கோ என்றான்.
இன்னிக்கு என்று பார்த்து தான் சேரி போடனுமா என மனதில் நினைத்து வண்டியில் ஏறினாள் அதிதி.

இந்தர் மெதுவாவே போ என்றவள் கூற்று காற்றில் தான் பறந்தது, அவன் எடுத்த வேகத்தில் எங்கே கீழே விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் ஒரு கையில் வண்டியின் பிடிப்பையும் மறு கையில் அவன் இடுப்பையும் இறுக்கி பிடித்தாள் அதிதி.

அவள் தொடுகை அவனை ஏதோ செய்தது, பெண் தோழிகள் அதிகம் இருந்தாலும் அவர்களை எப்பவும் சற்று தள்ளி தான் நிறுத்துவான் தேவ். அது அதிதியின் விஷயத்தில் மட்டும் எப்போதும் பொய்த்து தான் போகும்.

தேவ் குருப் ஆஃப் இன்டஸ்டிரிஸ் என்ற பலகையின் முன் வந்து நின்றது அந்த எண்பில்ட் வண்டி.
வண்டி நின்றது கூட அறியாது , கண்களை இறுக்கி மூடி அவனை அணைத்து அமர்ந்திருந்தவளை சீண்டும் பொருட்டு வண்டியை லைட்டா அவன் சாய்க்க பிடிமாத்திற்காக அவனை நன்கு கட்டிக் கொண்டாள் கண்ணை திறக்காது.

அவள் காதருகே, ஒய் ஜில்லு வண்டி நின்னு அரை மணிநேரம் ஆச்சி இறங்குடி என்றவனை மூக்கு முட்ட முறைத்து இறங்கினாள் அதிதி.
இரு டி நானும் வரேன் என்று கிட்டதட்ட அவள் பின்னால் ஓடினான் தேவ் .

விளம்பர தொகுப்பில் நடிப்பதற்காக அங்கு வந்த நடிகை அனு அவர்களை கண்டு மனதில் புகைந்தாள். பின் முகத்தை சரி செய்து கொண்டு தேவ்விடம் சென்றாள்.
அவள் தேவ் அறைக்குள் நுழையும் போது அங்கிருந்தவர்களின் நிலையை கண்டு கொதி நிலைக்கு சென்றுவிட்டாள் அனு. காரணம் அங்கு தேவ்வோ அதிதியின் முருங்கை கைகளால் அடி வாங்கி கொண்டிருந்தான்.

முதலில் அனுவை கண்ட அதிதி, தேவ்விடம் கண்களால் கூற.அப்போது தான் அனுவை கண்டான் தேவ் . பின்பு அவளை அமர சொல்ல, அதிதி நாகரீகம் கருதி வெளியே செல்ல எத்தினித்தாள். அவளை தடுத்த தேவ் அதி ஜஸ்ட் டூ மினிட்ஸ் பிளீஸ் இரு என்று வாயசைக்க. சரி என்று கெஸ்ட்காக போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்து கேம் விளையாட ஆரம்பித்தாள் அதிதி.அவளை பார்வையாளையே அளவெடுத்தாள் அனு தேவ்வின் பேச்சில் அவன் புறம் திரும்பினாள்.

எப்படி இருக்க அனு என்ற தேவ்விடம் .
நான் நல்லா இருக்கேன் தேவ், அப்பறம் நான் சொன்னதை பத்தி என்ன முடிவு பண்ணி இருக்க என்றாள் அனு.

யூ.எஸ்ஸில் இருக்கும் போதே சொல்லிட்டேனே எனக்கு இன்ரெஸ்ட் இல்லைனு என்றான் தேவ் .
ஐ லவ் யூ தேவ் , ட்ரை டூ அண்டர்ஸ்டேன்ட் என்று அனு பேசும் போது , அதிதியின் கால்கள் தானாக வெளியே சென்றது..

போகும் அவளை பார்த்த தேவ் கோபமாக அனுவிடம் பேசினான்.ஷட் அப் அனு, உன் மேல எனக்கு அப்படி ஒரு பீல் இல்லை, இனி வரவும் வராது . இப்போ நீ போகலாம் என்று கதவை காட்டினான் தேவ்.
இதற்கெல்லாம் அசருபவளா நான் என்ற ரீதியில் அவனை அணைத்து அவன் இதழில் அவள் இதழ் பொருத்தும் சமயம் மறந்து விட்டு சென்ற கைப்பையை எடுக்க வந்த அதிதி அதை பார்த்து விட, அவள் முன்னே அனுவை தள்ளி அறைந்தான் தேவ் .

தேவ்வை சந்தேகிக்கவில்லை என்றாலும் அதை அதிதியால் ஏற்று கொள்ள முடியவில்லை, அதற்குமேல் அங்கு நிற்க பிடிக்காமல் கைப்பையை எடுத்து வெளியே செல்ல. அனுவை கண்டு கொள்ளாது அதிதியின் பின்னால் சென்றான் தேவ் . அவர்கள் இருவர் மீதும் வன்மத்தை வளர்க்க ஆரம்பித்தாள் அனு.

அதற்கு பிறகு இரண்டு மாதம் அதிதி தேவ்விடம் கண்ணாமூச்சி விளையாட , அதை விரும்பியே ரசித்தான் தேவ் .
அந்த பிரச்சனைக்கு பிறகு ஒரு முறை தேவ்வை சந்தித்த அனு, தான் செய்தது தவறு என்றும் இனி நல்ல நண்பர்களாக இருக்கலாம் என்றாள் அனு.
அவளிடம் சரி என்றானே தவிற , அதன் பிறகு அவளை எட்டவே நிற்க வைத்தான் தேவ்.

முதல் விளையாட்டா நினைத்த அதிதியின் விலகல் நாட்கள் செல்ல செல்ல அவனை பாதிக்க ஆரம்பித்தது. வேலையில் கவனமின்றி தவறு செய்ய, அதனால் இவர்கள் கம்பெனியுடன் பங்கு வைத்திருந்த அதிதி குருப் ஆஃப் கம்பெனிக்கு நஷ்டம் ஏற்பட இருக்க கடைசி நேரத்தில் சரி செய்தாள் அதிதி.

அதை சரி செய்யும் பொருட்டு அவள் அவனை காண வந்தாள். இரவு முழுவதும் தூங்காது, சிவந்த கண்களுடன் கலைந்த கேஷத்துடன் கண்களை மூடி சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தான். பிஸ்னஸில் எதாவது தவறு ஏற்பட்டால் அதை சுலபமாக விட மாட்டாள் அதிதி.
ஆதிசேஷனிடம் இதை பற்றி கலந்து பேசிய பிறகே அவனை காண வந்தாள்.

அவனது தோற்றம் அதிதியை கவலையடைய செய்தது. இருந்தும் உணர்ச்சி துடைத்த முகத்தில் அவனை அழைக்க, அதுவும் கற்பனை என்று எண்ணி விழிக்காது அமர்ந்திருந்தான்.

மிஸ்டர். தேவேந்திரன் உங்களோட பேசணும் என்று அழுத்து உச்சரிக்க, அவளது குரல் யாழிசையாக ஒலித்தது அந்த அறையில் . அவசரமாக கண்ணை திறந்து பார்க்க அங்கு ருத்ரதேவியாக நின்றிருந்தாள்.

எதுக்கு இப்படி முறைக்கிறாள், ஒரு வேளை இன்னும் கோபம் போகலையா என்று திருதிருவென முழித்தான் தேவ் .
அப்போது தான் கவனித்தான். சேலை அணியாது வீட்டில் இருக்கும் போது உடுத்தும் ஸ்கர்ட் அண்ட் டாப் அணிந்திருப்பதை. பின் புரிந்தது அவள் ஏதோ மூட் அவுட்டில் இருப்பது.

அதி என்று அவன் அரம்பிக்க .
என்ன நினைப்பில் நேற்று நீ கான்ட்ராக்ட் ஸைன் பண்ண என்று அவன் சட்டை காலரை பிடிக்க, அந்த வேகத்தில் அவன் எழ. இதை எதிர்பார அதிதி தடுமாறி கீழ விழந்தாள், அவள் பிடியில் இருந்தவனும் அவள் மீது விழுந்தான்.

விழுந்தவன் எழாமல் , அவளை சிறை செய்தான் அவன் இருக்கைகளால் . இந்தர் என்ன பண்ணுற இது ஆபிஸ் எந்திரி என்று அவள் கடிய, அப்போ வீடுனால் ஒகே வா என கண்ணடித்து கேட்டான் தேவ் .

அவனது பார்வையின் வேறுபாட்டை உணர்ந்த அதிதி, வேகமாக எழ . அதிதியின் பாவாடை தடுக்கி மீண்டும் அவன் மேலே விழுந்தாள்.
இம்முறை கன்னங்கள் செவ்வானமாக சிவக்க ஆரம்பித்தது அதிதியிற்கு.
அதில் விரும்பியே தன்னை தொலைத்தான் தேவ் .

அவனது ரசனையாக பார்வை அவளை மேலும் குறுகுறுக்க , அவள் இடையில் கைகோர்த்து நெற்றியுடன் நெற்றியை முட்டி, ஐ யம் மேட் ஆன் யூ என்று அவள் மூக்கோடு மூக்கை உரசி காது மடலில் தன் கைகளால் கோலம் போட ஆரம்பித்தான் தேவ்.

இந்தர் என்று அவள் அழைத்தது அவளுக்கே கேட்டிருக்காது அவ்வளவு மென்மையாக இருந்தது.
அதுவரை எங்கோ சென்றிருந்த அவளது கோபம் நினைவிற்கு வர ஒரு கையால் அவன் காதை திருகி , மறு கையால் அவள் காதை கோலமிட்ட கையை திறுகி முதுகு புறத்தில் அழுத்தி , உன்னை அந்த அனு கிஸ் பண்ணுறா ஏதோ அவார்ட் கொடுத்த மாறி போஸ் கொடுத்து நிக்கிற என்று கையை முறுக்க.

ஏய் ஜில்லு வலிக்குது டி, அதுக்கு தான் ஒரு அறை விட்டேனே அவளை. இப்பயெல்லாம் அவ கூட பேசுறதே இல்லடி என்றான் குழந்தை போல் .
அது தான் உனக்கு நல்லது என்றாள் |
விரல் நீட்டி எச்சரித்தாள் அதிதி.

இன்னொரு தடவை அவளோட உன்னை பார்த்தேன், கொன்றுவேன் உன்னை இல்லை அவளை என்று மிரட்டி .
ஆமாம் எனக்கு தெரியாமல் இது எப்படி நடந்தது என்று ஆராய்ச்சியாக கேட்டாள் அதிதி.
எது ஜில்லு என்று அவள் கை வளைவில் இருந்தபடி கேட்டான் தேவ்.

அது தான் என்றாள் அதிதி.
எது தான் என்று அவள் என்ன கேட்கிறாள் என்று புரிந்தும் அவளை வம்பிழுக்க அப்படி கேட்டான் தேவ்.
இந்தர் என்று அவளது அழைப்பில், கள்ளப் பார்வை பார்த்து, எப்போ தேவ் இந்தர் ஆனானோ அப்ப இருந்து என்றான் தேவ் .
தன்னை கண்டு கொண்டான் என்பதை உணர்ந்த அதிதி அவனை தள்ளி கதவருகில் சென்று ஹலோ பாஸ் நான் இன்னும் என் விருப்பத்தை சொல்லவில்லை வீணாக கற்பனை செய்யாதே . அப்பறம் வேலையில் கவனமாக இருங்க மிஸ்டர் தேவேந்திரன் என்று உதட்டை சுழித்து சென்றாள் அதிதி.
 
#9
என் சண்டைக்காரி நீதான்💞 - 7

அவள் சென்ற பிறகு அதே துள்ளலுடன் வேலையை செய்ய ஆரம்பித்தான். அப்போது தான் ஒன்றை கவனித்தான் நேற்று தான் கோட் செய்திருந்த பைல் டேபிளில் இருக்க, எந்த பைலை அதிதி குருப் அஃப் கம்பெனிக்கு அனுப்பப்பட்டது என்று குழம்பினான்.

தொலை பேசி மூலம் அந்த பிராஜக்ட் கோ-ஆர்டினேட்டரை தொடர்பு கொள்ள அதுவோ தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது என சேமிக்கப்பட்ட கணிணியில் குரல் திரும்ப திரும்ப கேட்டது. பின் அந்த பிராஜக்ட்டின் மேனேஜரை அழைக்க, பயமும் பதற்றும் கலந்தவாறு வந்தான்.

அவன் முன் பைலை தூக்கி போட்டு, இந்த பைல் இங்க இருக்கு. அப்போ எந்த பைலை அதிதி குருப்பிற்கு அனுப்பப்பட்டது என்று அவன் கேட்க .

தேவ்வின் கழுகு பார்வையில் பயந்தே விட்டார் அந்த மேனேஜர். சார் எனக்கு ஒன்றும் தெரியாது ரமேஷ் சார் தான் எல்லாத்தையும் ரெடி செய்தார் என்று அவர் பதற. அதை தன் மனதில் குறித்து அவரை அனுப்பிவிட்டான்.

தன்னை சுற்றி ஏதோ நடக்கிறது என்று தேவ்விற்கு புரிய , அந்த நொடி முதல் மிக எச்சரிக்கையுடன் தனது வேலையை பார்க்க ஆரம்பித்தான். நடந்ததை பற்றி தேவ் அதிதியுடன் பகிர, அதிதியோ இனி சற்று விழிப்பாக இரு தொழில் கவனம் சற்று அதிகம் தேவை என்றும் எதிரி முதுகில் குத்த கூட தயங்க மாட்டான் என்று தனக்கு தெரிந்த யுத்திகளை அவனுடன் பகிர்ந்து போனை அணைத்தாள்.

தொழில் ஒருபுறம் இருந்தாலும் வாரம் ஒரு முறை அதிதியுடன் நேரத்தை செலவளிக்க விரும்பினான் . இரண்டு மாதம் எல்லாம் சரியாக தான் சென்றது .எல்லாம் அந்த அனுவின் தலையிட்டு இல்லாத வரை. மேலும் தொழில் தொடர்பாக லண்டன் சென்றாள் அதிதி அது அனுவிற்கு தகுந்த சமயமாக போய்விட்டது.

தனது பிறந்த நாள் விழாவிற்கு அவசியம் வருமாறு அவனை அழைக்க நட்பு என்ற ரீதியில் சென்றான் தேவ். அதிதிக்கு இது பிடிக்கவில்லை என்றாலும் தொழிலதிபராக இருந்துவிட்டு இது போன்ற விழாக்களை தவிர்ப்பது சரி இல்லை என விட்டுவிட்டாள்.

சரியாக கேக் கட் செய்யும் நேரம் அவன் உள்ளே வர, கேக் கட் பண்ணுவதை நிறுத்தி வாசலிற்கு சென்று அவனை வரவேற்றாள் அனு. அனைவரும் தங்களுக்குள் பேசி சலசலத்தனர் இதை எதையும் கண்டுக்கொள்ளாது அவனை அருகில் நிறுத்தி கட் செய்து முதல் துண்டை அவனுக்கே ஊட்டி விட்டாள். வேறு வழியின்றி வாங்கி அவளுக்கு ஊட்டி அந்த இடத்தை விட்டு அகன்றான் தேவ் .

பணியாளை அழைத்து அனைவருக்கும் கேக்கை கொடுக்குமாறு பணிந்து அவன் பின்னே செல்ல . அனைவரது பார்வையும் இருவர் மேலே படிந்தது. எல்லார் முன்னிலையிலும் அவளை அவமானபடுத்த விரும்பாமல் அமைதி காத்தான் தேவ் .

அதை அவளுக்கு சாதகமாக மாற்றி கொண்டாள் அனு. திரைதுறையினர் முன்னிலையில் அவனுடம் நெருங்கி உறவாட , அனைவரது பேச்சும் இவர்களை சுற்றியே இருக்குமாறு பார்த்து கொண்டாள்.

ஊடகங்கள் அதை படம் பிடித்து காசாக்க முயல அது அவளுக்கு இன்னும் வசதியாக இருந்தது. நடப்பது எதிலும் மனம் ஒட்டவில்லை தேவ்விற்கு. அனுவிடம் கூறி கிளம்ப தயாராக, எதாவது சாப்பிட்டு தான் செல்ல வேண்டும் பிடிவாதம் செய்தாள். கூல்டிரிங் மட்டும் போதும் அனு என்றான் தேவ் .

சரி என்று வைட்டரிடம் கண்காட்ட, ஒரு கிளாஸில் ஆரெஞ் நிற டிரிங்கை தேவ்விடம் கொடுத்தான். ஒரே கல்பாக அவன் அதை குடிக்க, குடித்து முடிக்கும் போது ஒரு மாதிரியாக இருந்தது தேவ்விற்கு.

சரியாக நிற்க முடியாது தள்ளாடினான். ஜூஸ் கொடுத்த வைட்டரிடமே தேவ்வை மேலிருந்த ஒரு அறையை காட்டி அதில் படுக்க வைக்க கூறினாள் அனு. அவனும் அதை கச்சிதமாக செய்தான் .

பார்ட்டி முடிந்ததும் அவனிடம் சென்றாள் அனு, அரை மயக்கத்தில் ஏதோ உளறி கொண்டிருந்தான். என்னவென்று கவனிக்க உன்னை ரொம்ப மிஸ் பண்ணுறேன் டி ஜில்லு என்று உளறினான். அவன் அருகே நெருக்கமாக இருப்பது போலவும் போதையில் அதிதியை நினைத்து பேசுவதை தன் மேல் கொண்ட விருப்பத்தை அவன் கூறுவது போலவும் தனது மொபைல் மூலம் படம் பிடித்தாள் அனு.

அரை போதையில் இருந்தாலும் அவன் அருகே இருந்தது அதிதியல்ல என்றுணர்ந்து தள்ளாடியப் படி வெளியேறினான் தேவ்.

தான் போட்ட திட்டம் பாதி நிறைவேறி விட்டது என்ற மெத்தனத்தில் இருந்தாள் அனு. அவள் நினைத்தது போல் அடுத்த நாள் அனைத்து ஊடகங்களிலும் நடிகை அனுவுடன் தொழிலதிபர் தேவேந்திரன் காதலா? என்று ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை பிரேக்கிங் நியூஸில் ஓடியது.

அது எல்லாம் ஒரு மணி நேரம் மட்டுமே, அதன் பிறகு தொழிலதிபர் தேவேந்திரனுடன் தொழிலதிபர் அதிதி விக்னேஷ்வரனுக்கு திருமணமா? என்று பிரேக்கிங் நியூஸ் ஓடியது.

எல்லாம் நம் அதிதியின் வேலை தான். இரவு நடந்த கூத்தை அங்கு சென்றிருந்த பிரியா அவளிடம் பகிர. இதற்குமேல் விட்டால் இன்னும் என்ன வேண்டுமானாலும் செய்வாள் என்பதால். இம்முடிவை எடுத்து தேவ் மட்டும் இரு குடும்பதினரிடமும் சம்மதம் வாங்கி, இதோ ஊடகங்களிடம் அறிவித்தும் விட்டாள் அதிதி.
 
#10
என் சண்டைக்காரி நீதான்💞 - 8

அடுத்து வந்த பத்து நாளும் இருவருக்கும் வசந்த காலமே, தங்களை பார்க்க நினைத்த அனுவிற்கு எந்த இடமும் அளிக்காது தங்களது வருங்காலத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர்.

வாசுகி, ஜானகி இருவருக்கும் அத்தனை மகிழ்ச்சி தங்கள் கணவர்மார்களை போலவே பிஸ்னஸ் என்று திரியும் தங்களது பிள்ளைகள் திருமணத்தின் நாட்டமில்லாது போய்விடுவார்களோ என்று பயந்தனர். இவர்களது திருமண அறிவிக்கை அவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சியை கொடுத்தது.

அதிதியும் தேவ்வும் தங்கள் மணவாழ்க்கை நினைத்து பல கனவுகள் கண்டனர். அப்படி இப்படி என்று பத்து நாள் எப்படி நிறைவேறியது என்று தெரியவில்லை இதோ முகூர்த்த நேரம் வந்துவிட்டது.

அரக்கு வண்ண பட்டில் பொன் நகை பூட்டி பெண்ணோவியமாக நடந்து வந்தவளை கண்ட கண்களை திசை திருப்ப வழித் தெரியாது விழி பிதிங்கினான் தேவ். காதல் கொண்ட கள்வனை கரம் பிடிக்க போகும் தருணத்தை ரசித்து அனுபவித்தாள் அதிதி.

மந்திரங்கள் ஓத வாத்தியங்கள் முழங்க தேவர்கள் சாட்சியாக பெரியர்வர்கள் ஆசிர்வதிக்க அதிதியின் சங்கு கழுத்தில் மங்கள நாணை பூட்டினான். இந்த உலகத்தையே வென்ற களிப்பு இருவர் முகத்திலும் பெற்றவர்கள் முகத்தில் நிறைவான சந்தோஷமும் தெரிந்தது.
எல்லா சடங்குகளையும் சந்தோஷமாகவும் சீண்டலுடனும் நிறைவேற்றினர்.

பரிசு மற்றும் வாழ்த்து சொல்ல தொழிலதிபர்கள், திரைதுறையினர் என பல துறைகளை சார்ந்தவர்கள் வந்திருந்தனர். அப்போது அனுவும் வர அதிதி திரும்பி தேவ்வை முறைத்தாள்.

சத்தியமா நான் வர சொல்லலை ஜில்லு என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.
அதற்குள் அவளை நெருங்கிய அனு, அவர்களது திருமண பரிசு என்று ஒரு பெட்டியை கொடுத்து , அதிதி காதில் ஏதோ கூறி சென்றாள் அனு.

அவள் சென்றும் தன்னிலை பெறவில்லை அதிதி. தேவ்வின் தொடுகையில் தான் நிகழ்விற்கு வந்தாள்.
என்னாச்சு என்று அவன் கேட்க .
ஒன்றுமில்லை என்ற ஒத்த சொல்லில் முடித்துக் கொண்டாள்.

திருமண வைபோகம் விமர்ச்சியாக நடைபெற்று முடிந்தது. மணமக்களை வீட்டிற்கு அழைத்து வர, தேவ்விடமும் அதிதியிடமும் சொல்லி கொண்டு தங்கள் சுற்றுலாவிற்கு புறப்பட்டனர் அதிசேஷனும் வாசுகியும்.

தன் மகளுக்கு சில அறிவுரை கூறி ஜானகி கிளம்ப, தன் மகளிடம் தனக்கு முழு உரிமை இல்லை என்பதை ஏற்க மறுத்து முகத்தில் சிரிப்பை பூசி கிளம்புறேன் அதிம்மா பத்திரமா இரு என்று கிளம்பினார் விக்னேஷ்வரன்.

அனைவரும் கிளம்பும் வரை அமைதியாக இருந்தவள் கோபம் ஏமாற்றம் என்று ஒரு சேர தேவ்வை ஏற்யெடுத்து பார்க்காது ஒரு அறையில் தஞ்சமடைந்தாள் அதிதி. அந்த அறையை தட்டி தட்டி தேவ்விற்கு கைகள் வலித்ததே தவிர அவள் திறக்கவில்லை. அன்று முதல் இன்று வரை தேவ்விடம் மட்டுமின்றி எல்லாரிடமும் பாராமுகம் காட்டுகிறாள்.

அதிதியை பற்றி நினைத்து கொண்டிருந்தவனுக்கு திடீரென்று உடல் ஏதோ செய்ய ஆரம்பித்தது. என்னவென்று யூகிப்பதற்குள் மூச்சுவிட சிரமப்பட்டு அதிதியை அழைக்க முடியாது அருகில் இருந்த கண்ணாடி குடுவையை தட்டி விட்டான். அது விழுந்த சத்தத்தில் திரும்பிய அதிதிக்கு அதிர்ச்சியே அவசரமாக டாக்டருக்கு அழைத்து தகவல் கூறி தேவகியை அழைத்து வந்தாள்.

உடனே ஆம்புலன்ஸ் வர, தேவ்வுடன் இரு பெண்களும் சென்றனர் , தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தேவ்விற்கு கொடுக்க பட்ட மாத்திரையால் தான் இந்த மூச்சு திணறல் என்றும் சற்று தாமதமாகிருந்தாலும் தேவ்யை காப்பாற்றியிருக்க முடியாது என்றார் டாக்டர் .
தேவ்வை பார்க்கலாமா என்ற அதிதியின் கேள்விக்கு , தொடாமல் டிஸ்டர்ப் பண்ணாமல் பார்த்துவிட்டு வாங்க என்று அனுப்பி வைத்தார்.

என்ன செய்தாலும் கோபப்படாமல், வாய் ஓயாமல் ஜில்லு ஜில்லு என்று தன் பின்னாலே வருபவன் இப்படி படுத்திருப்பதை காண சகிக்கவில்லை அதிதியால் .
அவன் தலைக்கோதி நீயில்லாமல் என்னால் இருக்க முடியாது, அட்லீஸ்ட் தூரமா இருந்தாச்சு எனக்கு உன்னை பார்க்கனும் இந்தர் என்று நெற்றியில் முத்தமிட்டு வெளியே வந்து அகிலனுக்கு போன் செய்து அந்த டாக்டர் மீது கேஸ் பைல் பண்ண சொல்லி கொண்டிருக்கும் போது. அங்கு வந்த இன்ஸ்பெக்டர், உங்க மேலை கம்பளைன்ட் வந்திருக்கு மேம், மிஸ்டர் தேவேந்திரனை கொலை முயற்சி செய்ததாக என்றதும் அதிதிக்கும் தேவகிக்கும் ஒன்றும் புரியவில்லை. என்ன உளறிங்க இன்ஸ்பெக்டர் . யாருகிட்ட என்ன பேசுறிங்க என்று கோபகனலை கக்கினாள் அதிதி.

டாக்டர் வசந்த் உங்க மேலை கேஸ் கொடுத்திருக்கார், என்றதும் வாட் அவர் என் மேலை கேஸ் கொடுத்திருக்காரா? நியாமா பார்த்த நான் தான் அவர் மேலை கேஸ் கொடுக்கணும்.

சாரி மேம் எதுவாக இருந்தாலும் ஸ்டேஷன்லை வந்து சொல்லுங்க என்று அழைக்க. இதற்கு மேல் பேசி எந்த பலனும் இல்லை என தெரிந்தது அதிதிற்கு . ஒரு நிமிடம் என்று அகிலனின் அழைப்பை துண்டித்து தனது தாய்க்கும் மாமனாருக்கும் தகவல் தெரிவித்து, வாசுகியிடம் திரும்பி, வசும்மா நான் வர வரைக்கும் இந்தரை பார்த்துகோங்க என்று கூற. அதிம்மா என்ன இதெல்லாம் நீ போகாதை என்று அவர் கெஞ்சுவதை காதில் வாங்காது இன்ஸ்பெக்டருடன் சென்றாள் அதிதி.

அதிசேஷன் அவர்கள் வருவதற்குள் அகிலனுடன் அங்கு இருந்தார். அவரை பார்த்து சிறு சிரிப்பை உதிர்த்து உள்ளே சென்றாள். அங்கு அவளுக்கு எதிராக டாக்டர் வாக்குமூலம் கொடுக்க அவள் மீது எப்.ஐ.ஆர் போடும் சமயம் உள்ளே வந்தாள் அனு.

வந்தவள் தன்னை காதலித்த தேவ்வை மிரட்டி அதிதி திருமணம் செய்தது மட்டுமில்லாது தேவ் கொலை செய்ய முயற்சிப்பதாக கம்பிளைண்ட் செய்தாள். அங்கிருந்த அனைவரும் அதிதியை பார்க்க முகத்தில் எந்த உணர்ச்சியும் பூட்டாது அமைதியாக நின்றாள்.

அகிலன் அதிதியை நெருங்கி , அதி அவள் என்ன என்னமோ பேசிட்டு இருக்கா. நீ இப்படி அமைதியாக நின்னா என்ன அர்த்தம் என்று அவளை கேட்க. அதற்கும் அவள் பதில் மெளனம் மட்டுமே. இவளிடம் போராடி நேரத்தை வீணாக்குவதை விட்டு அவளை ஜாமீன் எடுப்பதற்கான வேலையை ஆரம்பித்தான் அகிலன்.
 
#11
என் சண்டைக்காரி நீதான்💞 - 9


அனு அதிதியின் மேல் கொடுத்த கேஸ் பைல் செய்யப்பட்டு, அதிதியிடம் இன்வெஸ்டிகேஷன் செய்ய ஆரம்பித்தார் அந்த இன்ஸ்பெக்டர் .

கையில் ஒரு பேப்பருடன் வந்த அந்த இன்ஸ்பெக்டர் அவளிடம் இங்க பாருங்க மேடம் உங்க மேலை ஸ்ட்ராங்கா கம்பிளைன்ட் பைல் ஆகிருக்கு. உங்க தரப்ப நீங்க சொல்லனும் என்றவுடன் . அவரை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்து . உங்க பார்மாலிட்டியை நீங்க செய்யுங்கள் என்றதும் தான் தாமதம்.

வெளியே இருந்த அத்தனை கேமராக்களும் மைக்குகளும் உள்ளே வர, அதிசேஷன் தான் கலங்கிவிட்டார். இதில் இருந்து அதிதியை எப்படி வெளியே கொண்டு வருவது என்று.

இதை எதையும் கருத்தில் கொள்ளாது அவளை நோக்கி கேள்வி கணைகளை எறிய தயாராக இருந்த பேனாக்களை கண்டு மனதில் சிரித்தால் அதிதி.
கண்களால் நான் ரெடி என்று அவள் கூற இதோ கேள்விகள் தொடுக்கபட்டது.

ரிப்போர்டர் : எதற்காக உங்கள் கணவனை கொல்ல முயற்சி செய்தீர்கள் ?

அதிதி: நல்ல கேள்வி, நீங்க கேட்க வேண்டிய எல்லா கேள்விகளையும் கேளுங்க, தனியா தனியா கேட்டு உங்கள் பொன்னான நேரம் வீணாக வேண்டாம் பாருங்க என்றவுடன் .

அங்கிருந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் பார்த்து கொண்டு, தலைமை பொறுப்பில் இருந்தவர் கேள்வி கேட்க ஆரம்பித்தார்.

ரிப்போர்டர் ஹெட் : உங்கள் கணவனை கொலை செய்ய முயன்றது எதற்காக?
தேவ்வும் நடிகை அனுவும் கல்யாணம் செய்து கொண்டதாக கூறுவது உண்மையா? தொழில் முறையில் போட்டி வர கூடாது என்று தான் அவரை கல்யாணம் செஞ்சிங்களா? நடிகை அனு கூறுவது உண்மையில் தேவ்வை மிரட்டி தான் திருமணத்திற்கு ஒற்றுகொள்ள வைத்தீர்களா? டாக்டரை மிரட்டி காரியம் சாதித்தால் காவல்துறையிடம் இருந்து தப்பித்து விடலாம் என்று எப்படி நினைத்தீர்கள்? உங்களிடம் விவாகரத்து தேவ் தான் கேட்டாரா? எதற்காக இவ்வளவு செய்கிறீர்கள்? உங்கள் நோக்கம் தான் என்ன?

அதிதி : உங்கள் எந்த கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை . தேவ்வை ஒரு முறையல்ல பலமுறையல்ல தினம் தினம் கொலை செய்துள்ளேன் என்று கூறி அவ்விடத்தை விட்டு அகன்றாள் .

அதற்குள் அவளை வெளியே எடுக்க வேண்டிய அனைத்து பார்மாலிட்டியும் முடித்து நிபந்தனை பெயரில் ஜாமீன் எடுத்திருந்தான் அகிலன்.

அப்போதும் எதுவும் பேசாது கையப்பமிட்டு அவர்களுக்கு மூன் காரில் இருந்தாள் அதிதி. இது புயலுக்கு முன் ஏற்படும் அமைதி என்று மட்டும் புரிந்தது அவளை சார்ந்தவர்களுக்கு. ஆனால் அது என்னவென்று மட்டும் அவர்களால் அறிய முடியவில்லை.
வெற்றி கிட்டிய சந்தோஷத்தில் அங்கிருந்து கிளம்பினாள் அனு. அந்த டாக்டரும் அவரது மருத்துவமனைக்கு கிளம்பினார்.

வீட்டிற்கு வந்து குளித்து தேவ் இருக்கும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சில ஆணைகளை அகிலனுக்கு பிறப்பித்து சென்றாள் அதிதி. அதை செயலாக்க ஆரம்பித்தான் அகிலன்.

மருத்துவமனையை அடைந்து தேவ் காண செல்ல, அழுது அழுது முகம் வீங்கி அமர்ந்திருந்த ஜானகியை தான். அவர் அருகே சென்று, அம்மா என்று அவர் தோளை தொட்டு . இப்போ எதுக்கும்மா இப்படி அழுதுட்டு இருக்க, நீ வீட்டுக்கு போ நான் எல்லா பிரச்சனையும் முடிச்சுட்டு வரேன் என்றாள் அதிதி. இப்போ வர முடிக்காமையா இருந்திருப்ப , என்ன பண்ணி வைச்சிருக்க.

சிரித்து கொண்டே அங்குள்ள டி.வியை காட்டினாள் அனைவரும் அதிர்ச்சியாக பார்த்தனர். பிரபல மருத்துவர் வசந்த், மருத்துவமனையில் முறையற்ற மருந்துகளை உபயோகிப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் நடந்த சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. விசாரனையின் முடிவில் அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்படும் என்று காவல்துறை ஆய்வாளர் பத்திரிக்கையாளரிடம் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார்.

என்ன அதி இது, இவர் எப்படி என்று அவர்கள் கேட்ட போது இதுக்கே இப்படி என்றால் எப்படி. இது வெறும் டீசர் தான் மெயின் பிச்சர் இன்னும் வரலை வைட் பண்ணுங்க என்றாள்.

சிறு நிமிடங்களில் பிரேக்கிங் நியூஸ் என்று இரண்டு காணொளி வெளியானது.
அதில் தேவ்விடம் நெருங்கி புகைப்படம் எடுக்க முயலுவது போல் அனு இருக்க, அவளிடம் இருந்து அரைமயக்கத்திலும் விலக முயற்சிக்கும் தேவ்வும் இருப்பது போல இருந்தது.
அடுத்த காணொளியில் தேவ் அனுவிடம் பேசுவது போல் இருந்தது. அதில் அனு தேவ்வை மிரட்டுவதை போலவும் தேவ் அவளை ஏளனமாக பார்ப்பது போலவும் கடைசியில் தேவ்வை கட்டிப்பிடித்து அதற்கு ஒரு அறை வாங்குவது போல் அந்த காணொளி இருந்தது.

மேலும் இதுவரை புக் செய்யப்பட்டிருந்த அனைத்து படத்தில் இருந்தும் அனுவை விலக்கியதாகவும் செய்தியாளர் அத்தொகுப்பை முடித்தார். அனு என்ற அத்தியாயத்தை முடித்த திருப்தியில் இருந்தாள் அதிதி.

அனைவரும் அவளை பார்க்க அதை கண்டுக்கொள்ளாது தேவ்வை காணச் சென்றாள் அதிதி. மயக்கத்தில் இருந்து அப்போ தான் விழித்தான் தேவ். நீ நினைச்ச எல்லாத்தையும் சாதிச்சுட்டியா. நம்ம வீட்டில் நடக்கிற எல்லாத்தையும் லைவ்வா சொல்லுறத்துக்காக அந்த பைத்தியம் அனு தான் அனுப்பி வைச்சிருக்கா. எதையும் தெரியாம சேர்த்திக்கிட்ட, சரி அதுக்கூட பரவாயில்லை. பிரஸ் மீட்டில் அவள் கூப்பிட்டானு பின்னாடியே போற. அந்த டாக்டர் கொடுத்த மாத்திரை பத்தி எனக்கு தெரியாது. எப்பவும் சாப்பிடுற உனக்குமா தெரியாது, இல்லை என்ன டெஸ்ட் பண்ணி பார்க்கிறியா. சத்தியமா நான் உனக்கு செட்டே ஆகமாட்டேன். அனு அம்புஜம்ன்னு எவளாச்சு வருவா போய் அவளை தேடி தேடி லவ் பண்ணு என்று அவள் சொல்லி செல்ல.

ஹலோ என்றவுடன் திரும்பி பார்த்தாள் அதிதி, எனக்கு என் பொண்டாட்டினால் தாங்க பயம், மத்தப்படி ஐ லவ் யூங்க என்றான் குறும்பாய்.
போடா என்று சென்று விட்டாள் அதிதி.

வெளியே வந்து டாக்டரிடம் தேவ்வ எப்போ டிஸ்சார்ஜ் செய்யலாம் என்று அவள் கேட்க . இப்பவே டிஸ்சார்ஜ் பண்ணிறலாம் என்றவுடம் வாசுகியிடம் சென்று வசும்மா நீங்களும் ஜானும்மாவும் இந்தரை வீட்டிற்கு கூட்டிட்டு போங்க எனக்கு ஒரு வேலை இருக்கு என்று அகிலனை காணச் சென்றாள்.

அவளை எதிர்பார்த்து வெளியையே காத்திருந்தான் அகிலன். அதிதியும் வர இருவரும் உள்ளே அமர்ந்திருந்த அனுவிடம் வந்தனர். அனுவிற்கு இந்த எதிர்ப்பாரா தாக்குதலை எப்படி எதிர்க்கொள்வது என்று தெரியாது விழிப்பிதுங்கி அமர்ந்திருந்தாள்.

அவள் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தாள் அதிதி. தனக்கு முன்னே ஆரவாரம் உணர்ந்தும் தலைத்தாழ்த்தியே அமர்ந்திருந்தாள் அனு.

சிறிது நேரம் மெளனம் காத்த அதிதி, அனுவிற்கு முன் சொடக்கிட்டு. உன் பிளான் எப்படி இப்படி பிளாப் ஆச்சுன்னு மண்டையை பிச்சிக்கிறியா . இல்லாத உன் மூளையை எதுக்கு டிஸ்டர்ப் பண்ணுற. நானே சொல்லுறேன் பேபி என்று அவள் செய்த தில்லு முல்லையும் அதை எப்படி முறியடித்தாள் என்பதையும் கூற ஆரம்பித்தாள் அதிதி.

உனக்கு மூளையே இல்லைன்னு நான் சொன்னேன்ல அது ஏன் தெரியுமா, உன் பர்த்தே பார்டியில் தேவ்க்கு ட்ரக் கொடுத்து போட்டோ வீடியோ என்று எடுத்த சரி, அதோட விட்டியா அதுவும் இல்லை. தைரியமா எங்க ரிஷப்ஷனுக்கு வந்து கிப்ட் பாக்ஸில் போட்டோஷூம் பென்டிரைவ்வில் அந்த விடியோ காப்பி பண்ணி வைச்சிருக்க. அதோட விட்டியா அதுமில்லை என்ன காண்டாக்க தேவ்வை எச்சில் பொருள் என்று சொல்லிட்டு போயிட்ட . உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா, அந்த விடியோ காபியில் இருக்க ஐ.பி அட்ரஸ்ஸ வைச்சு, ஈஸியா டிராக் பண்ணி நீ காப்பி பண்ணி வைச்சுயிருந்த எல்லா காப்பியையும் டெலிட் பண்ணிட்டேன் ஷோ சிம்பிள் என்று தோளை குளுக்கினாள் அதிதி.

தென் வேவுப் பார்க்க ஒரு லூச அனுப்புன , அதுவாச்சும் சரியா செஞ்சியா அதுவும் இல்லை, கரெக்டா நான் கிச்சனுக்கு வரும் போது எங்க வீட்டில் நடந்ததை விம் பார் போட்டு விளக்குது உனக்கு. சரியென்று அதையும் மன்னிச்சேன். கடைசியா ஒன்னு பண்ண பாரு என்று விழுந்து விழுந்து சிரித்தாள் அதிதி.

எதுக்கு சிரிக்கிறேன் என்று கேக்கமாட்டியா? அனு அமைதியாக இருக்க, சரி கேட்க வேணாம் நானே சொல்லிடுறேன். எங்க உண்மை தெரிஞ்சு நான் எதாவது செஞ்சிடுவேனோ என்று அந்த பிராடு டாக்டரை என் பேரில் கம்பிளைண்ட் செய்ய வைச்ச பாரு அது தான் அல்டிமேட் . அப்பறம் என்ன உன்னை அடக்க என்கிட்ட இருந்த எல்லா எவிடென்ஸையும் மீடியாவில் கொடுக்க வேண்டியாதாக போச்சு என்று உச்சு கொட்டினாள் அதிதி.

சரி இவ்வளவும் தெரிந்தும் உன்னை ஏன் ஒன்னும் செய்யலை என்று உனக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கனும். அதுக்கு ஒரே ஒரு ரீசன் தான் அது என் அகி தான் என்று அவனை காட்ட . தனது ஒட்டு மொத்த காதலையும் கண்ணில் தேக்கி வைத்து ஏன் டி இப்படி பண்ண என்ற கேள்வியை முகத்தில் தேக்கினான் அகிலன்.

இதுவரை எதுவும் பேசாது இருந்தவள் இம்முறை வாயை திறந்து சாரி அகிலன், உன் காதலை பெற எனக்கு எந்த தகுதியும் இல்லை என்று கீழே விழுந்தாள்.

இருவரும் பதறி எழுந்து அவள் அருகே வர, அவள் வாயில் இருந்து ரத்தம் வழிந்தது அவளை மடியில் வைத்து கதற ஆரம்பித்தான் அகிலன்.

அகி அவளை தூக்கு என்று அவனுக்கு முன்னே சென்று காரை உயிர்பித்து , மருத்துவமனைக்கு போன் செய்து அனைத்து ஏற்பாட்டையும் செய்ய சொல்லி மின்னல் வேகத்தில் காரை செலுத்தினாள் அதிதி.
 
#12
என் சண்டைக்காரி நீதான்💞 - 10

அகிலன் பார்வை முழுவதும் அனுவின் மேல் மட்டுமே பதிந்திருந்தது. இன்று நேற்று காதல் இல்லை கிட்ட திட்ட பத்து வருட காதல். காதலை வெளிபடுத்திய போது அவனுடைய சொத்து மதிப்பை கணக்கிட்டு அவன் காதலை ஏற்ற மறுத்தாள். ஒரு முறை தேவ் அவளை பற்றி தவறாக கூறிய போது மனதில் இருப்பதை உளறி விட்டான் அகிலன்.

அன்று முதல் அனுவை தன்னிடம் இருந்து எவ்வளவு தள்ளி வைக்க முடியுமோ, அவ்வளவு தள்ளி வைத்தான். ஆனால் தேவ்வுடன் பழகினால் தன் பெயர் பிரபலமாகும் என்ற எண்ணத்தில் அவனை சுற்ற அதன் பலனால பல படங்களில் அவளை ஒப்பந்தம் செய்தனர். அவள் அறியாத ஒன்று அந்த படங்களை தயாரித்தது அகிலன் என்று. அவள் அறியாத மற்றொன்று அதிதி தேவ்விற்கு இணையாக சொத்துடையவன் அகிலன் என்பது. எளிமையாக இருப்பது பிடித்து போக அதை பள்ளிப் பருவத்தில் இருந்தே அத பின்பற்ற ஆரம்பித்தான் அகிலன். அவனது தந்தை லீடிங் அட்வோகேட் என்பதையும் அறிந்திருக்கவில்லை அனு.

ஏன்டி கடைசி வரை என்னை புரிஞ்சுக்கவே இல்லை என்று மனதில் அனுவுடன் பேசினான் அகிலன். எனக்காக வந்திரு டி, நீ செஞ்ச எல்லாத்தையும் இவங்க பொறுத்தது எனக்காக தான். நான் கஷ்டப்பட கூடாது என்று தான். இப்படி மொத்தமா என்ன கொல்ல தான் இவ்வளவு நான் என்ன தள்ளி இருந்தியா. அப்படி எல்லாம் உன்னை ஈஸியா சாக விடமாட்டேன் என்கிட்ட நீ அனுபவிக்க வேண்டியது நிறையா இருக்கு ஒழுங்க வந்திரு என்கிட்ட என்று மனதில் அவளிடம் மன்றாடினான் அவளிடம்.

மருத்துவமனை வந்துவிட , அனுவை ஸ்டச்சரில் படுக்க வைத்து அவளுடன் சென்றான் அகிலன். காரை பார்க் செய்து விட்டு வந்தவள் கண்டது அனுவிற்கு சிகிச்சை அளிக்கும் அறையை வெறித்து பார்த்து கொண்டிருந்த அகிலனை தான்.

என்ன சொல்லி அவனை தேற்றுவது என்று தெரியாது உள்ளுக்குள் மருகினாள் அதிதி.
அனுவிற்கு சிகிச்சை அளித்த டாக்டர் வெளியே வந்து, மிக ஆபத்தான கட்டத்தில் அனு இருப்பதாகவும் உயிர் பிழைப்பது மிக கடினம் என்று கூறு நாலு மணி நேரத்தில் அவள் விழித்தாள் தான் அடுத்த கட்ட மருத்துவத்தை துவங்க முடியும் என்று கூறி சென்றார். அவ்வளவு தான் மனதில் தேக்கி வைத்த அத்தனை வலியையும் அந்த மருத்துவமனையே அதிரும் படி கத்தி அழுதான் அகிலன். எவ்வளவு சொல்லியும் அவனை கட்டுபடுத்த முடியவில்லை. அனுவை காண வேண்டும் என்று துடித்தவனை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை அங்குள்ளவர்களால்.

கடைசியில் டாக்டரிம் போராடி அனுமதி பெற்று அகிலனை உள்ளே அனுப்பினாள் அதிதி. எதையும் உணராது கட்டை போல் படுத்திருந்தவளை காண நெஞ்சம் பிசைந்தது அகிலனுக்கு. அனாதையாக ஹோமில் வளர்த்து அவனோடு கல்லூரி பயின்று பகுதி நேரத்தில் மாடலிங் துறையில் தன்னை அற்பணித்து வெற்றியை அடைந்து தவறாக நெருங்குபவர்களிடம் நெருப்பாக தகித்தவள். வளமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டது தவறில்லை அதற்கு அவள் கையாண்ட விதம் தான் தவறு.

தான் செய்வது சரி தவறு என்று சுட்டி காட்ட யாரும் இல்லாத ஒரு காரணமே அவளை இன்னிலையில் ஆழ்த்தியதாக உறுதியாக நம்பினான். அவள் மீண்டு வரும் போது அவள் ஆசைப்பட்ட வாழ்க்கையை தரவும் நினைத்தான். அவள் அவனுக்காக வருவாள் என்பதை மனதில் சொல்லி கொண்டே இருக்க, அவனை அறியாது கண்ணில் இருந்த நீர் அவளது கையை தீண்ட, அவள் உடலில் சில அசைவு தெரிந்தது. வேகமாக வெளியே வந்து மருத்துவரை கூப்பிட்டு செக் செய்ய சொல்ல, இரண்டாவது கட்ட மருந்துவ சிகிச்சைக்கு அவளது உடல் தயாராக இருப்பதை கூறி சென்றார்.
 
#13
என் சண்டைக்காரி நீதான்💞 - 11

அதிதி அகிலனிடம் வந்து, அகி அவள் திரும்பி வருவா உனக்கா. நான் போய் அம்மாவை அனுப்புறேன் என்று திரும்ப . தேவ், ஜானகி, வாசுகி, ஆதிசேஷன், பிரியா என்று அனைவரும் அவர்களை நோக்கி வந்தனர்.

அகிலனுக்கு துணையாக அனைவரும் இருக்க, வாசுகியிடம் வந்து தேவ்வை வீட்டிற்கு அழைத்து போக சொன்னாள் அதிதி. அதை மறுத்து அதிதியுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார் ஜானகி. நன்றியுடன் தேவ் ஜானகியை பார்க்க, அதிதியோ தேவ்வை கொலை வெறியுடன் பார்த்தாள்.

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமார என்று அவனிடம் கிசுகிசுத்தார் ஆதிசேஷன். அப்பா மெதுவா பேசுங்க உங்க மருமகள் காதில் மட்டும் விழுந்துச்சு அவ்வளவு தான் என்ன தூக்கி போட்டு மிதிப்பா.

அவளை பத்தி தெரிஞ்சும் இத்தனை பண்ணி வைத்திருக்க . அனுபவி ராஜா என்று அனுப்பி வைத்தார் இருவரையும் .
இதற்கே பயந்தா எப்படி வாழ்க்கையில் நான் பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கு என்று மனதில் நினைத்தவாறு அவளுடன் சென்றான் தேவ் .

டிரைவர் சீட்டில் அதிதி அமர, ஒரு வித மரண பீதியில் அவள் அருகே அமர்ந்தான் தேவ் . அரைமணி நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு பத்தி நிமிடத்தில் வந்து சேர்ந்தனர்.

எதுவும் பேசாது அவள் பின்னாடியே சென்றான் தேவ். வாசலில் கால் வைக்கும் போது அவள் பாததிற்கு ஒரு நூல் இடைவேளியில் ஒரு கண்ணாடி ஜாடி விழுந்தது. ஜஸ்ட் மிஸ் என்று பெருமூச்சுடன் அடுத்த அடி எடுத்து வைக்க . தலையை நோக்கி இன்னொரு ஜாடி வந்தது அதை லாவகமாக பிடித்தான் தேவ் .

அவளை நெருங்க நெருங்க ஒவ்வொரு பொருளாக அவனை நோக்கி எறிந்தாள் அதிதி. கடைசியாக காற்று பூகாத அளவிற்கு அவளை நெருங்கியிருந்தான் தேவ்.

கையில் கத்தியுடன் நின்றிருந்தாள் அதிதி, அவளை பிடித்த வேகத்தில் அதை இருக்கி தன்னையே காயப்படுத்தி கொண்டாள்.
ஏய் லூசு, என்று அதை வாங்க முயற்சிக்க இன்னும் இறுக்கி பிடித்தாள் கத்தியை .
அதை தாங்க முடியாது கதற ஆரம்பித்தான் தேவ்.

ஜில்லு பிளீஸ் டி என்னை என்ன வேணாலும் பண்ணு பைத்தியகாரி மாறி இப்படி செய்யாதே என்று துடித்தான். அவன் அழுவதை தாங்க முடியாது கத்தியை கீழே போட்டு அவனிடம் பேச ஆரம்பித்தாள்.

அவள் பேசுவதை கவனிக்கும் நிலையில் தேவ் இல்லை. அவள் கையில் சொட்டும் ரத்ததில் தான் அவன் கவனம் முழுவதும் .
அவளை பற்றி அறிந்தவன் கையிற்கு மருந்திட்டால் மட்டுமே அவள் பேசுவதை கேட்ப்பேன் என்றான் உறுதியாக .

சரி என்று கையிற்கெட்டும் தூரத்தில் அவள் வைத்திருந்த ஃப்ஸ்ட் எய்டு பாக்ஸை நீட்டினாள் அதிதி.
எல்லாம் பிளான் தானா? நான் தான் வாலண்டரியா மாட்டிக்கிட்டேனா? என்று நொந்தவாறு கட்டு போட ஆரம்பித்தான் தேவ் .

அதுவரை அமைதியாக இருந்த அதிதி , தேவ்விடம் பேசினாள்.
அனுவை பற்றி எப்போ தெரியும் என்றாள் அதிதிர்
இப்போ கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் தெரியும் ஜில்லு, அனு விஷயத்தில் என் மேலை கோவமா இருக்கேன்னு தான் நினைத்தேன்.
நம்ம ரிசப்ஷன் அப்பறம் நீ ரொம்ப பிஸியா இருப்ப எப்ப வர எப்ப போறனு தெரியாம இருந்தேன், அப்படி ஒரு நாள் உன் ரூம் தொறந்து இருந்துச்சு. சரி நீதான் இருக்க போலன்னு உள்ள வந்தா ஒரு பைல் டிபரெண்டா இருக்கே என்று ஓபன் பண்ணி பார்த்தா நானும் அனுவும் இருக்கும் போட்டோ அப்பறம் ஒரு பென்டிரைவ். உன் லாப்டாப் அங்க இருந்துச்சா போட்டு பார்த்தேன் சில கிராப்டு வீடியோ. வந்த கோபத்தில் அந்த அனுவை கொல்லும் அளவிற்கு இருந்துச்சு.

நீ டிவோர்ஸ் பைல் பண்ணியிருக்க என்று அந்த டைம்மில் அகி போன் செய்யவும் . அனு பண்ணி வைச்ச வேலையை சொல்லி பொரிந்து தள்ளிட்டேன். அதுவரை பொறுமையா கேட்டு இருந்தவன் அவளை பத்தி தப்பா பேசினதும். என் அனுவை அப்படி சொல்லாதே என்ற பிறகு தான் தெரிந்தது. இருவரும் பி.ஏ ஒன்றாக படித்தது, அகி காதல் என்று சொன்ன போது அவள் அதை நிராகரித்து என் புறம் திரும்பியது அவளை பற்றி என்று அனைத்தையும் அகி கூறினான் , என்றான் தேவ் .

டேய் நான் எதுக்கு டிவோர்ஸ் அப்பிளை பண்ணேன்னு தெரியுமா?
எவிடன்ஸ் கிடைக்கும் முன் உனக்கும் ஒரு டவுட் வந்திருச்சு, அதை என்கிட்ட கேட்கவும் மனசு வரவில்லை. அதன் விளைவு தான் என்னை பார்க்கும் போதெல்லாம் சண்டை, உன் கோபம் எல்லாம். இப்போ கூட இந்த காயம் உனக்கு நீயே கொடுத்துகிட்ட தண்டனை என்ன சரியா என்று அவன் கேட்க .
தன்னை இவ்வளவு அறிந்துள்ளவன் மேலா இப்படி சந்தேகப் பட்டேன் என்று அவள் நினைக்கையில் விழியில் இருந்து வழிந்து ஓடியது நீர்.

நான் உன்னை தப்பா நினைக்கலை இந்தர் பட் உன்கிட்ட கேட்க முடியலை எதையும் அது ஏன்னென்றால் நான் நானாவே இல்லை இந்த உண்மையை கண்டு பிடிச்சதும் ஒரு வித குற்றவுணர்ச்சி எனக்குள்ள அது தான் உன்னை விட்டு பிரிய முடிவு செய்தேன் என்றவளை உற்று பார்த்தவன்.

இதற்கு தண்டனை தந்தே ஆக வேண்டும் என்று அவளை இழுத்து சென்றான் தேவ் .
இந்தர் மெதுவா போ கால் வலிக்குது என்றவுடன் தூக்கி சென்று மெத்தையில் போட்டு . உனக்கு என்ன தண்டனை தெரியுமா பத்து மாசத்தில் எனக்கு ஒரு பாப்பாவை கொடு போதும் என்று அவள் மேல் படர்ந்து அவர்களது வாழ்க்கையை தொடங்கினான்.

வெகு நேரமாக போன் அடிக்கு ஊடலின் முடிவை கூடலில் ஆரம்பித்து தனி உலகில் சஞ்சரித்திருந்தனர் இருவரும் . மீண்டும் மீண்டும் போன் அடிக்கும் ஒலி கேட்க தேவ்வை தள்ளி விட அவனோ விடாது அவளை ஆட்கொண்ட பிறகே விடுவித்தான்.

அகிலன் தான் போன் செய்திருந்தான். அனு கண் விழித்த செய்தியை கூற. அவனுடன் பேசி வைத்தவளை. பூப்போல் அள்ளி மீண்டும் ஆழ்கடலில் முத்தெடுக்க சென்றான் அதிதியின் தேவேந்திரன்.
 
#14
என் சண்டைக்காரி நீதான்💞 - 12

மூன்று வருடத்திற்கு பிறகு,

பிஸ்னஸ் டைகான் ஆப் தி இயர் கோஸ் டூ மிஸஸ் அதிதி தேவேந்திரன் என்று தொகுப்பாளினி அழைக்க, தன் இரண்டு வயது மகனுடன் கம்பீரமாக மேடையேறி விருதை பெற்றாள் அதிதி.

விருதை பெற்ற அதிதியிடம் மைக்கை கொடுத்து, மேம் எங்களுக்கு உங்கள் கிட்ட கேட்ட ஒரு கேள்வி இருக்கு கேட்கலாமா? என்று அனுமதி கேட்டார் அந்த தொகுப்பாளினி.
யா கோ ஆஹெட் என்றாள் அதிதி.

நீங்க ஒரு பிரஸ் மீட்டில் யங் பிஸ்னஸ்மேன் ஆப் தி இயர் பெற்ற மிஸ்டர் தேவேந்திரன் அவர்களை ஒரு முறை அல்ல பலமுறை அல்ல தினம் தினம் கொலை முயற்சி செய்துள்ளதாக சொல்லியிருக்கிங்க அது எதனால் என்றதும்.
அழையா விருந்தாளியாக மேடையேறினான் தேவேந்திரன் தன் இரண்டு வயது மகளை தூக்கியவாறு.

இந்த கேள்விக்கு நான் தான் பதில் சொல்லுவேன் என்று பிடிவாதமாக மைக்கை அவளிடம் இருந்து வாங்கி பேச ஆரம்பித்தான் தேவ் .

இவ ஒரு அழகான ராட்சசி, காதலில் ஒரு அரக்கி, என் கோவக்கார கிளி , என் கொலை காதலி. இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். இவள் என் மேல் கோபம் கொண்டு பேசாது கொலை முயற்சி செய்திருக்கிறாள் என்று தன் மனைவியை காதலாய் பார்த்தான்.
வாவ் வாட் ஏ லவ்வபிள் ஆன்ஸர் என்று அந்த தொகுப்பாளினி தேவ்வை ஒரு முறை அணைத்து விடுவித்தாள்.
அவ்வளவு தான் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டது.

கீழே தன் மகனுடன் இறங்கி வாசுகியிடம் அவனை கொடுத்தாள். மாம் டாட் கூட பேசாதிங்க என்றான் ரித்திஸ்.
அடேய் ஏற்கனவே அவளுக்கு எதுவும் தெரியாது இதில் நீ வேற ஏன்டா என்று மகனை முறைத்தான் தேவ் .
டாட் இந்த மாம் எப்ப பாரு சண்டை போட்டுக்கிட்டே இருக்காங்க, நம்ம புது மாம் வாங்கிகலாம் என்றாள் அவனது குட்டி தேவதை ரிதன்யா.

வாங்கலாம் தன்யா குட்டி என்ன பண்ணுறது இந்த சண்டைக்காரிய தான் என் மனசுக்கு பிடிச்சிருக்கு என்று இதயத்தை சுட்டினான் தேவ்.

அதி பேபி நான் உன்னை பார்த்துக்கிறேன் என்று தளிர் கைகளால் அவள் விரலை வருடி கூறினான் அந்த இரண்டரை வயது ஆதர்ஷ் .

ஆது பேபி நானும் உன் கூடவே வந்தறேன் என்று அவனுடன் சென்றாள் அதிதி.
டேய் எங்க இருந்து டா எனக்குனு வரிங்க எல்லாம் வெஷம் வெஷம் என்று திட்டினான் தேவ் .

இந்தர் நீ ரித்துவையும் தன்யாவையும் வீட்டில் விட்டுட்டு என்னை வந்து கூட்டிட்டு போ நான் என் ஆது பேபி கூட அகி வீட்டிற்கு போறேன் என்று சென்றவளை காண இரு கண்கள் போதவில்லை.

அதிதி சொன்னது போல் தன் மக்களை வீட்டில் விட்டு அதிதியை அழைத்து வந்தான் தேவ் . அதிதியை சமாதானம் செய்யும் வேகத்தில் அகிலன் அனுவிடம் சரியாக பேசாது ஓடியவனை கண்டு கேலியாக சிரித்தனர் இருவரும் .
வண்டியில் ஏறியதில் இருந்து அவனிடம் பேசாது வேடிக்கை பார்த்து கொண்டு வந்தவளை பார்க்கும் போது . தன் குழந்தைகளுக்கும் அவளுக்கு வித்தியாசம் தெரியவில்லை.
அனைத்திலையும் தெளிவாக இருக்கும் தன்னவள் தன்னிடம் மட்டும் குழந்தையாவது ஏன் என்ற கேள்விக்கு இன்றும் பதில் தெரியவில்லை அவனுக்கு .

சரியாக மணி பண்ணிரெண்டை தொட வண்டியை நிறுத்தி கீழே இறங்கினான் ஏதோ காரில் பிரச்சனை என்று அவளும் இறங்க .
ஒரு குழு கையில் கேக் பூச்செண்டு என்று ஒரு புறம் வர,
மெல்லிசை ஒலிக்க பாடிக் கொண்டே ஆடினான் தேவ் .

என் சண்டகாரி நீதான்
என் சண்டகோழி நீதான்
சத்தியமா இனிமேல்
என் சொந்தமெல்லாம் நீதான்

எஹ் என்னை தாண்டி போறவளே
ஓரக்கண்ணால் ஒரு பார்வை
பார்த்து என்ன கொன்ன
சரியா நடந்தாலும்
தானாவே சறுக்குறேன்

என்னடி என்ன பண்ண
ஏதோ மாறுதே
போதை ஏறுதே
உன்ன பார்கையில
ஏதோ ஆகுதே
எல்லாம் சேருதே
கொஞ்சம் சிரிக்கையில

என்ன தாண்டி போன
கண்ண காட்டி போனா
என்ன தாண்டி போனா
கண்ண காட்டி போகும்
போதே என்ன
அவ கொண்டு போனா

சண்டகாரி நீதான்
என் சண்டகோழி நீதான்
சத்தியமா இனிமேல்
என் சொந்தமெல்லாம் நீதான்
சண்டகாரி நீதான்

என் சண்டகோழி நீதான்
அட சத்தியமா இனிமேல்
என் சொந்தமெல்லாம் நீதான்
மழைத்துளி நீ
மழலையும் நான்
நீ என்னை சேர காத்திருப்பேனே💞


என்று அவன் முன் மண்டியிட்டு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ஜில்லு என்று தன்னவள் கையில் மோதிரம் போட்டு கட்டிக்கொண்டான்.

பின் இருவரும் இணைந்து கேக் கட் செய்து ஆர்கனைஷ் செய்த அனைவரிடமும் நன்றி கூறி கிளம்பினர்.

இந்தர் இந்த கேள்வியை கேட்டு கேட்டு சலிச்சு போய்டுச்சு அந்த மேனேஜர் ரமேஷ்யை என்ன செஞ்ச .
உன்னோட பாலிசியை ஃபாலோ பண்னேன் என்றான் தேவ்.
வாட் என்று சாக்கானாள் அதிதி.
யஸ் ஜஸ்ட் பினிஸ்ட்டு ஹிஸ் கெரியர் என்றான் கூலாக .இந்த நேரத்தில் எதுக்கு அவனை பத்தி பேசுறா என்றவனின் குரல் குழைய .
இந்தர் வீட்டுக்கு போ என்றவள் பதிலை காதில் வாங்காது இதழை சிறைச் செய்தான் தேவ் .
மூச்சுவிட இருவரும் சிரம பட விடுவித்தான் அவளை.

லைப் , கெரியர், அம்மாவா, பொண்ணா, மருமகளா உன் ஜில்லா இப்படியே சந்தோஷமா போகனும் கடைசி வரை என்று அவன் விட்ட இடத்தில் இதழில் கவிதை தொடுக்க ஆரம்பித்தாள் தேவ்வின் சண்டைக்காரி.
 
#15
நான் சுபாஷினி, பல வருட வாசகராக மட்டும் இருந்த எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், கட்டுரை போட்டி என்றால் அங்கு நான் இல்லாமல் இருக்காது , பரிச்சையில் சொல்லவே வேண்டாம் , நாம் அனைவரும் ஒரு கதாசிரியர் ஆகிவிடுவோம்.

நானும் சில மாதங்களாக எழுத்து பணியை தொடங்கி அதில் நீச்சல் கத்து கொண்டிருக்கும் தத்துக்குட்டி. ஒரு நாவலை வெற்றியுடன் முடித்துள்ளேன் மேலும் மூன்று நாவல்கள் எழுதி கொண்டிருக்கேன். யாருக்கும் என்னை தெரியாது அல்லவா அதுதான் என்னை அறிமுக படுத்தி கொண்டேன்.