என் கிறுக்கல்கள்

sudharavi

Administrator
Staff member
#1
கவிதை என்கிற பெயரில் எனது கிறுக்கல்கள் இங்கு இடம் பேரும்.............
 

sudharavi

Administrator
Staff member
#2
எம் மறவர் கூட்டம்
காவலிருக்க உயர்வான
பதவியோன்றில் அமர்ந்திருந்த
அவன் வீரமாக போர் போர்
என்று முழங்கினான்
வீரம் என்றும் அவனுக்கு உரித்தானதல்ல
பதவி மட்டுமே அவனது வீரத்தை
பறைசாற்றிடும் !
அடிமைகளாய் உறக்கம் துறந்து
உணவின்றி தாய் நாடு முக்கியமென்று
எம் மறவர்களுக்கு மட்டுமே போதிக்கப்பட்ட
தாரக மந்திரத்தை உறுதியான குரலில்
உக்கிரமாக கத்தியபடி எதிரிகளை
அழித்து தானும் அழிந்து போயினர்!
போர் முடிந்தது நம் வீரத்தை
நிருபித்து விட்டோம் என்று
அவன் மார்தட்டிக் கொண்டான்
உயரமான மேடையில் நின்று!
அதிகார வர்கத்தின் பகடைக்காயாக
போனது எம் மறவனின் உயிர்!