என் காதல் என் சாபம் - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

என் காதல் என் சாபம் என்கிற தலைப்போடு போட்டியில் இணைகிறார்கள் வைஷ்ணவி நந்தினி......
 
#2
என் காதல், என் சாபமே !எழில் கொழிக்கும் அழகிய கிராமம் பைங்குளம், இயற்கை கொஞ்சம் அதிகமாக கருணை கொண்டதால் மழை வளம் முதல் மண் வளம் வரை குறைவில்லாமல் இருந்தது, மலை முகடுகள் ஊருக்கு அழகு சேர்க்க, அந்த மலைகளுக்கு நடுவே ஒரு சிறு தோப்பு வீடு ஊரின் தெற்கு பக்கம் ஆறு ஓடும் நதிக்கரை அருகே இருந்தது, நம் கதையின் நாயகி சரயு வீடு, நதியாக வளம் கொண்டு அனைவரையும் வாழ வைக்க, அந்த பேரை வைத்ததாக அவள் அப்பா சொல்வது உண்டு,
இன்னைக்கு ஏதோ விசேஷம் போல, வீட்டுக்கு முன்னால பந்தக்கால் போட்டுருக்கு, வாடகைக்கு எடுத்த நாற்காலிகளும் அடுக்கி வச்சுருக்கு, நாலஞ்சு பெருசுக வெளிய உக்காந்துருக்கு, உள்ள என்ன நடக்குனு எட்டி பாப்போம்,....... வாசல் கதவுல பூமாலை போட்டிருக்கு, அப்டியே உள்ள வந்தா கூடத்துல நாற்காலி போட்டு, நல்லா முழு மேக்கப் போட்டு நல்லா ஒய்யாரமா நாலஞ்சு பெண்கள் இருக்காங்க, எப்டியும் 50 வயதை நெருங்கும் பெண்கள், எல்லாரு கைளையும் பலகார தட்டு இருக்கு, அப்படியே உள்ளாடி போனா,.... ஹ்ம்ம் ... இந்தா இந்தா உக்காந்துருகாங்க நெறய பெண்கள், எல்லாம் கொஞ்சம் சொந்த பந்தம்னு நினைக்கேன்.......... என்னவோ பேசுறாங்க, என்னனு பாப்போம் . ....
பொண்ண கூப்பிடுங்க, எவ்ளோ நேரமா காத்துகிட்டு இருக்கோம்? அப்டி எங்க பைய எந்த அழகுல மயங்கி திரியான்னு நாங்களும் பாக்கட்டும்......... இந்தா மதனி உன் மருமவள வர சொல்லுங்க.........
இரு மல்லி, நீ கத்துற சத்தம் கேட்டா என் மகன் முகத்தை தூக்கிருவான்.. வரும் போதே பேசாம அமைதியா இருன்னு சொல்லி கூட்டி வந்துருக்கான்......
இது என்ன மதனி இவன் இப்போவே இப்படி இருக்கியான் ......
என்னத்த பண்ண? கட்டுனா இவள தான் கட்டுவேன்னு நிக்கான்... என்னலாமோ சொல்லி பாத்தாச்சு, நம்ம வசதிக்கு நல்ல வசதியா பாப்போம்னு சொன்னாலும் கேக்க மாட்டீங்கிறான்........ஆனா ஒன்னு அந்த பொண்ணு சொக்க தங்கம்னு விசாரிச்சதுல தெரிஞ்சுது, சேரி இதான் அவன் விதின்னு நாங்களும் சம்மதிச்சிட்டோம்......
சேரி இம்புட்டு அடாவடி பன்னுரானே எத்தனை நாளா பழக்கமாம்?
நீ வேற நாள் கணக்கெல்லாம் இல்ல, வருஷ கணக்கு, 10 வருஷமும் 4 மாசமும் னு கணக்கு சொல்லுகான்....
என்னது 10 வருசமா?... அந்தம்மா வாய துறந்து அது வழியா ஈ போறதுகூட தெரியாம இருந்த நேரம், கூட்டத்துல ஒரு சின்ன வண்டு,
ஐ ஐ ஐ..... மாமா அந்தா பாரு நீ கட்டிக்க போர அத்தை அவங்க தான....????? ஐ ஐ.....பொண்ணு வருது பொண்ணு வருது ........
பரந்த நெற்றி அதில் அழகிய குங்கும பொட்டு, கூர் நாசி அதில் ஒற்றை கல் மூக்குத்தி, சிறிய காதுகள் ஜிமிக்கி உடன் ஊஞ்சல் ஆட, சாயம் பூசாமல் சிவந்து போன உதடுகள், அதில் வெக்க புன்னகை, எலுமிச்சை நிற கன்னங்கள் வெக்கத்தில் கொஞ்சம் இளம் சிகப்பு நிறத்தில் இருந்தது, அவள் கண்களில் மீன் பிடிக்க புருவங்கள் தூண்டிலாக மாறி இருந்தது, நீல நிற பட்டு புடவையில் மங்கை அவள் நளினமாக நடக்க, அவள் மனம் கவர்ந்த அவனோ அவளை அங்கேயே அள்ளி பருக துடித்த ஆசைகளை அடக்கவே சிரமப்பட்டு, வைத்த கண் வாங்காமல் நின்றான்..................
எல்லாருக்கும் வணக்கம் சொல்லுமா... .
வணக்கம்.......
உன் பேரு என்னமா?
சரயு.......
நல்லபேரு,....... ஏண்டா பொண்ணு நல்லா அம்சமா தான் இருக்கா... அதான் பாத்த உடனே விழுந்துடியோ? .. இது அவனின் அத்தான் ஒருவர்...
டேய்ய் உன்ன தான்.... டேய்ய்........ மச்சான்..... உன்ன தான்.........
அவன் எங்க மத்தவங்க பேச்சை கேக்குற நிலைமைலயா இருக்கான்... அவன் எப்பவோ அவளுக்குள்ள அவன தேட தொடங்கிட்டான்.............
அவனை அழைத்து அழைத்து பார்க்கவும் பதில் இல்லாமல் போக, சரயூ தலை நிமிர்ந்து அவன் முகம் பார்க்க, அவனோ எப்போ அவ பாப்பானு காத்துகிட்டு இருந்துருப்பான் போல.... உடனே....
செல்ல குட்டி.... சூப்பரா இருக்கடி........ லவ் யூ பேபி ...... அப்டின்னுட்டான்.....
கூட்டமே களுக்குனு சிரிக்க, சரயு வெக்கத்தில் உள்ளே ஓட, அவன் அவளை பிடிக்க எழும்ப, அருகில் அவன் அம்மா, நங்குன்னு ஒரு கொட்டு வைக்க, அப்போ தான் பயலுக்கு சுய நினைவு வந்து... எல்லாரையும் பாத்துட்டு ஈஈஈஈஈஈ னு அசடு வலிய நின்னான்...
யப்பா மாப்ள.... பொண்ணு பிடிச்சு தான காதல சொல்லி இப்போ கல்யாண வர வந்துருக்கு, மறுக்கா முதல இருந்து காதல சொல்லுரியப்பா.... கூட்டத்துல ஒரு பெருசு கேக்க...
என் சரயூ கிட்ட வாழ் நாள் முழுக்க கூட சொல்லுவேன்னு அவன் சொல்ல, அவங்க அம்மா முறைக்க..... அவன் எங்கயோ பாத்துட்டு இருந்துட்டான்......
பொண்ணு கொஞ்சம் குண்டு தானோ?
அதெல்லாம் இல்லை, அவ சரியாதான் இருக்கா.....
டேய்ய் கொஞ்சம் சும்மா இரு, நாங்க பேசுறோம்....
அம்மா அத்த, சித்தி, அப்புறம் இங்க இருக்க அத்தனை சொந்தமும் கேட்டுக்கோங்க, இங்க உங்கள குறை சொல்ல கூட்டி வரல, பேசி முடிக்க வந்துருக்கோம்... அதுனால இங்க இருக்க உயர்ந்த உள்ளங்கள் எல்லாம் அமைதியா காபி டீ பலகாரம் மட்டும் சாப்டுட்டு அமைதியா இருங்க...........
என்ன மதனி இப்படி பேசுறான்....
ப்ச் சும்மா இரு, எல்லாம் பொறவு பேசுவோம்.....
சேரி சேரி மாப்பிளைக்கு தாய்மாமன் பொண்டாட்டி போய் பொண்ணுக்கு பூ வைங்கப்பா ...............
குலவை போடுங்க... பொண்ணுகு பூ வச்சு உறுதி பண்ணுதோம்....... இந்த பொண்ணு எங்க பையனுக்குனு பரிசம் கட்டுறோம்......
பொண்ணோட அம்மா அப்பா வாங்க, பையனுக்கு மாலையை போடுங்க......
அப்டியே பையனோட அம்மா அப்பா வாங்க பொண்ணுக்கு மாலையை போடுங்க .......
சேரி பரிச ஓலையை வாசிக்கேன் கேளுங்க ...
பிப்ரவரி மாதம் 10 ம் நாளான இன்று செல்வி சரயு என்ற கன்னிகைக்கும், செல்வன் விஷ்ணு என்ற குமாரனுக்கும் இரு வீட்டினரால் பரிசம் போட்டு, நிச்சயதார்த்தம் வரும் நவம்பர் மாதம் 7 ம் நாளும், திருமணம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 9 ம் தேதியும் செய்ய முடிவு உறுதி செய்கிறோம்.............
எல்லாரும் பூ போட்டு ஆசிர்வாதம் பண்ணி, அங்க விசேஷம் முடிஞ்சு, எல்லாரும் சாப்பிட போயாச்சு...... ஆனா இன்னும் பொண்ணு மாப்பிள தனியா பாக்க கூட முடில, அவ்ளோ பிஸி.....
சரிங்க, எல்லாம் நல்லா முடிஞ்சு, அப்போ நாங்க கிளம்புறோம்.........
மாப்பிள வீட்டுல எல்லாம் கிளம்ப, மாப்பிள்ளை திணறிக்கிட்டு நிக்க, அவன் அம்மா அவன வாடான்னு கூப்பிட,
இருமா, அவகிட்ட சொல்ல வேணாமா? சொல்லிட்டுவாரேனு யாரு பதில்லையும் கேக்காம அவன் உள்ள போக, அங்க அவ ரூம் திறந்து இருக்க,உள்ள போனவன் அங்க அழகு பதுமையை போல நின்னுகிட்டு இருந்த தன்னவளை பார்த்து சொக்கி, போய்ட்டு வரேன்னு சொல்ல போனவன் அவ கன்னத்தில் இதழ் பதிக்க, அவள் வெக்கத்தில் அவன அடிச்சு துரத்த, அவன் சிரித்துக்கொண்டே வெளியே வர, அங்கே நின்னவங்க எல்லாம் இவன ஒரு மார்க்கமா பாக்க, அவன் அம்மா அவன கொலை வெறில பாக்க, வராத போன் அடிக்க அத பேசிட்டே கார் கு போய்ட்டான்................
அப்போ நாங்க கிளம்புறோம்...
சரிங்க சம்மந்தி.........
தொடரும்...
 
#3
என் காதல், என் சாபமே !


பாகம் 2


பரிசம் போட்டு ஆறு மாத காலம் முடிந்த நிலையில் ஒருநாள்,


விஷ்ணு அவன் அறையில் இருந்த கண்ணாடியில் தன்னை பார்த்து கொண்டிருந்தான்,


சராசரியை விட சற்று அதிகமான உயரம், மெல்லிய உடல் வாகு, மாநிறம் என்றாலும் கலையான முகம், ஆண்மையின் அழகு வதனத்தில் மிளிர்ந்தது, உடன் கல்யாண கலையும் சேர்ந்து அந்த நேவி ப்ளூ ஷர்ட் மற்றும் டல் பிளாக் ஜீன்ஸ் அவனுக்கு அழகாக இருந்தது, தன்னை ரசித்தவன் மனதில்,


அதிஷ்டக்கார பயடா நீ, பாரு உனக்கு என்ன இல்ல? எல்லாமே கடவுள் உனக்கு குடுத்துறாரு, நல்ல வேலை, சம்பாத்தியம், வசதி வாய்ப்பு எல்லாமே இருக்கு... ஆனா அழகு தான் நம்ம ஆள விட கம்மி.... ஆனாலும் அவ நம்மள அம்புட்டு லவ் பண்ணுறா.. அவ அழகுக்கு அவளுக்கு எப்பேர்ப்பட்ட மாப்பிள எல்லாம் அமையும்.. ஆனா அவ நாம தான் வேணும்னு இருக்கா... ஹ்ம்ம்... எத்தனை பிரச்சனை? அத்தனையும் தாண்டி நமக்காக இருக்கா....... இன்னும் கொஞ்ச நாளுல நம்ம வாழ்கை சேர்ந்து அமைஞ்சுரும்.................


டேய்ய்.. என்னடா ரொம்ப நேரமா கண்ணாடி முன்னாடி புலம்புற?....... ஐயே இதுல வெக்கம் வேறயா? கருமம்........ என்ன கொண்டாட்டமோ, கல்யாணம் நிச்சயம் ஆனாலும் ஆச்சு மந்திரிச்சு விட்டாப்ல சுத்துற.......... இது அவன் நண்பன் சோளத்தட்டை.. ( பெயர் காரணம் பின் வரும் பகுதிகளில் சொல்றேன்)


போடா சும்மா என்ன வம்பிழுத்து பாக்காத....


செரிடா செரிடா ரொம்ப பண்ணாத, கிளம்பு நேரம் ஆகுது......


டேய்ய் இருடா அவளுக்கு போன் பன்னிட்டு இருக்கேன் லைன் போகல, கொஞ்சம் இருவேன், டெய்லி பேசிட்டு தான் வேலைக்கு போவா, இன்னைக்கு என்னனு தெரில.......


டேய்ய் டைம் ஆச்சு பிறகு அந்த மேனேஜர் கொலையா கொல்லுவான்.......


செரி கிளம்பு, போகும் போது ட்ரை பண்றேன்....


விஷ்ணு என்ஜினீயர் படிப்பு முடித்தவன், தற்போது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் டீம் லீடராக சென்னையில் வேலை பார்க்கிறான்,


சரயு, அவளும் என்ஜினீயர் படிப்பு முடித்தவள், சொந்த ஊரிலேயே தனியார் வங்கியில் கேஷியர்,


தினமும் வேலைக்கு போகும் முன் இருவரும் அவர்களுக்கான ஸ்வீட் நத்திங்ஸ் பேசிய பின்பே கிளம்புவார்கள், இன்னைக்கு இன்னும் போன் வரல, அதான் டென்ஷனா இருக்கான்...


டேய்ய் சும்மா நொய் நொய்ன்னு அவளுக்கு அடிச்சுட்டே இருக்காத, தங்கச்சி வேலையா இருக்கும் போல, அதான் எடுக்கலயா இருக்கும்....


இல்லடா அவ என்ன நடந்தாலும் பேசாம போக மாட்டா...... எனக்கு என் டென்ஷன்.... நீ கவனமா டிரைவ் பண்ணு...................... ஏன்டா வண்டிய நிறுத்திட்ட?


போன் அடிக்கு, இரு........... டேய்ய்..... உங்க அப்பாடா......


அவரு எதுக்கு உனக்கு கூப்டுறாரு?
உனக்கு கூப்பிட்டு பாத்துருப்பாங்க... நீதான் சரயு ஜெபம் பாடிட்டு வாரிய, அதான் லைன் கிடைக்காம எனக்கு வருது போன்.....
செரி செரி அழுக்காம போன குடு...................
ஹெலோ.... அப்பா.... நா விஷ்ணு.... சொல்லுப்பா...................
அந்த பக்கம் வந்த செய்தியில் அவன் முகம் வெளிறி நின்றது......
அப்பா என்ன சொல்ற.... இல்ல அப்டி நடக்க வாய்ப்பில்லை........ நா..... நா...... நா... நம்பமாட்டேன்......
டேய்ய் என்னாச்சு ஏன் அழுற? போன குடு.....
அப்பா என்னாச்சு................ என்னப்பா சொல்றேங்க........... சரிப்பா உடனே வரோம்.......
அடுத்த 5 நிமிடத்தில் மேனேஜர் கு இன்போர்ம் பண்ணிட்டு அடுத்த அரை மணி நேரத்தில் உணர்வு இல்லாமல் ஜடமாக நின்றவனை இழுத்து கார்ல ஏத்தி ஊருக்கு கிளம்பி போறாங்க......
டேய்ய் மாப்ள..........இங்க பாருடா........... டேய்ய்........... அப்பா வேற போன் அடிச்சுட்டே இருக்காங்க ............... இங்க பாரு மாப்ள.............. டேய்ய்............... சோள தட்ட ஓங்கி அவனை ஒரு அரை விடவும் விஷ்ணு சுயம் பெற்று, இருக்கும் இடம் மறந்து கதறவே தொடங்கி விட்டான்.........
மச்சான்.... என் சரயு........ சரயு...... அவ அப்டி பண்ண வாய்ப்பு இல்ல மச்சான்.......... உனக்கு அவளை தெரியும்ல.... அவ அப்டி பண்ற ஆளே இல்லடா ...... பயந்தவ மச்சான்..... இவ்ளோ துணிச்சல் கிடையாது........ இத.......நம்ப.........
டேய்ய் அழாத...... ஒன்னும் இல்ல மாப்ள..... போய் பாத்தா......
பாத்தா என்ன.... என்ன..... என்ன நடக்க போது?
அதான் எல்லாமே போச்சே......... என் உசுரு மச்சான் அவ.............. என் உசுரு......
அவனை சமாதான படுத்த சோள தட்டையால் முடியவில்லை..... அவனுக்கும் இப்படி நடந்தது மனதை வாட்டி கொண்டிருந்தது......இருவரின் இத்தனை வருட காதலுக்கும் கூடவே இருந்த சாட்சி... அவனாலும் இதை ஏற்க முடியவில்லைதான்....... ஆனாலும் நண்பனை அரவணைக்க தவறவில்லை....
10 மணிநேர பயணம் விஷ்ணுவிற்கு 10 யுகமாக அமைந்தது.....
தொடரும்....
 
#4
என் காதல், என் சாபமே !

பாகம் 3

10 மணி நேர பயணம் நீண்டு செல்ல, அழுது கரைந்தவன் ஏறத்தாழ துவண்டு போயிருந்தான்.. அவன் மனமோ அவர்களின் காதலை சுமந்துவந்த நாட்களை எண்ணி வெடித்து கொண்டிருந்தது.........
----------/
ஏலேய் சோளத்தட்டு...
என்ன மாப்ள,
இன்னைக்கு என்ன மச்சான் விசேஷம்?
என்ன விசேஷம்? அப்படியொண்ணும் பெருசா இல்ல டா...
அப்போ இந்தா இந்த வீட்ல என்ன கலரு கலரா கோலமெலாம் போட்டுருக்கு?
அதா, இந்த கிழவி இருக்குல்ல அதுக்கு இன்னைக்கு 80 வயசு புறந்தநாளாம், அதேன்.....
ஓஹோ... அப்போ விசேஷம் இருக்கு.... சரி வா மச்சான் அப்டியே உள்ள போய் ஒரு கட்டு கட்டிட்டு வருவோம்.....
டேய்ய் இன்னைக்கு ஸ்பெஷல் கிளாஸ் மச்சான்......... போணும்ல..... அதுவும் இல்லாம நாளைக்கு வேற மாடல் எக்ஸாம் இருக்கு மாப்ள .......
நாளைக்கு பரிச்சைக்கு இன்னைக்கு சாப்பிடாம இருக்க போறியா? அப்டிலாம் இல்லைல.....அதுனால மூடிட்டு வந்து சாப்டு வா......
அடேய் கிழவி வீட்ல நம்மள இன்வைட் பண்ணலயே?

ஆமா ஆமா ஊருல எல்லா பயலுகளும் நம்மள கூப்டா அவங்க வீட்டுக்கு போய் சாப்டுகிட்டு இருக்கோம்? மூடிட்டு வாடா......

.......................

மாப்ள என்னடே இலைல இம்புட்டு பதார்த்தம்.......

அதான் சாப்டுவோன்னு சொன்னேன்... சாப்டு அப்புறம் பேசிக்கலாம்... சாப்பிடு.........

டேய்ய்.... சாம்பாரு போட்டு முடிச்சு உட்டுருவாங்க போல?............ யோவ் யோவ்..... யாருயா உள்ளார....... யோவ்............. யோவ் வாயா.........

மாப்ள விஷ்ணு.... சும்மா இருயா...... யாராவது சண்டைக்கு வர போறாங்க...........

டேய்ய் சும்மா இரு....... யோவ் யாரு அங்க........

யாருங்க........... அண்ணா நீங்களா கூப்பிட்டீங்க... என்று கேட்டபடி உள்ளிருந்து ஒரு ஆழாக்கு வந்தாள்............. பாவாடை தாவணியில் குண்டு முழிகளை உருட்டி கொண்டு, வெண் பற்களை சிரித்தபடி 16 வயது இளம் பருவ மங்கை சரயு வந்தாள்...

வாயில வச்ச வடைய கூட எடுக்காம அப்டியே அவள் வருகையை பார்த்து இருந்தான் விஷ்ணு........

அண்ணே..... அண்ணே..........

டேய்ய் சோள தட்டை உண்ணியத்தான் உன் தங்கச்சி கூப்டுது.........

வாயில வடையோடு ஆ னு அவளை பாத்துட்டே இருக்கும் அவனை சரயு மற்றும் சோளத்தட்டை இருவரும்... இவன் என்ன லூசா னு பாத்தாங்க.......

அண்ணே..........

ஒன்னுமில்ல, கறிசோறு.......

என்ன அண்ணே?

அடுத்து பேச வாய் துறந்த சோளத்தட்டை காலை கிள்ளி விட்ட விஷுனு, சரயு முகத்தை பார்த்து,

ஐ லவ் யூ.....

என்ன?

ஐ லவ் யூ ன்னுசொன்னேன்........

அம்மா........ அப்பா........

ஐயோ ஐயோ டேய்ய் சாப்பிட கூப்டவந்துட்டு ஆப்பு வைச்சுட்டானே........ வாடா..... அவன்கையை இழுத்து கொண்டு ஓடினான்...........

..............

புறக்கல யாராச்சும் வாரங்கலா? ....... அப்பாடி வரல....... அடேய்.... ஏன்டா இம்புட்டு பெரிய ஜோலிய பாத்துட்ட......உனக்கு விளையாட நேரம் காலமே இல்லையா?

என்னது விளையாட்டா? நா உண்மையா சொல்லிற்கேன்....

என்னாது உண்மையா?

ஆமா, அவ தான் என்பொண்டாட்டி....

டேய்ய் இப்போ தான் 12 வது படிக்கோம்....

அதுக்கென்ன? நா நாளைக்கா கல்யாணம் பண்ண போறேன்? அது இன்னும் ஒரு 10 வருஷம் போகும்...

அதுக்குள்ள அந்த பிள்ளைக்கு கல்யாணம் ஆகிரும்.....

அடிங்க........ கொன்னுருவேன்... அவ என் பொண்டாட்டி.... அவள பாத்த உடனே முடிவு பண்ணிட்டேன்.....

அவளை பத்தி என்னத்த தெரியும்.....

இனி தெரிஞ்சுப்போம்...........

அவ காலுல கைல விழுந்து அவ பின்னாடியே அலைஞ்சு ஒரு வழியா சம்மதிக்க வச்சு... 10 வருஷமா ஒன்னுக்குள்ள ஒன்னா காதலிச்சு கல்யாணம் வரைக்கும் வந்த காதல் இப்போ இவனோட கண்ணீராக மாறி உள்ளது.....

தொடரும்...
 
#5
பாகம் 4,

என் காதல், என் சாபமே !

அலையாய் அடிக்கும் நினைவுகள் கடலின் ஓசையில் அடங்கி முடியும் நேரம் அவர்கள் ஊர் வந்து சேர்ந்தனர்,

அப்பா...................

வாப்பா......... அழாதடா........... என் உசுரே நீதான்... நீ ஆசையா இருந்தா வாழ்க்கையா அமைச்சுக்கொடுக்க முடியாம பாவியா போய்ட்டேன்..................

மாமா எங்கபா.........

அந்தா அன்னாங்க இருக்காங்க..... போய் பாரு.........

அவனது தகப்பன் காட்டிய திசையை நோக்கி ஓடினான்... அங்கே கேட்டா ஒப்பாரி சத்தம் அவன் கேட்ட நிகழுவு உண்மை என்பதை உண்மை என்று உரைத்தது........


விஷ்ணு .... தம்பி விஷ்ணு............... எங்கள மன்னிச்சுருயா............ இந்த புள்ள இப்படி பண்ணும்னு நாங்க கனவில்கூட நினைக்கலயா..........மன்னிச்சுரு தம்பி...............

மா..... மா.......... என்னமாமா சொல்லுறீங்க..... அப்டிலாம் இல்ல.... அவ அப்டி பன்னிருக்க மாட்டா.........நீங்கலாம் பொய்ச்சொல்லுறேங்க.............

ஐயோ இந்த பாவி மவ இப்படியா பண்ணுவா... இப்படி ஒரு புள்ளயஏமாத்திடு போய்ட்டாளே...........

அவள் தாய் அழுதபடி உள்ளிருந்துஒரு லெட்டர் கொண்டுவந்து அவனிடம் கொடுக்கிறாள்....

அன்புள்ள அம்மா அப்பா...... மற்றும் விஷ்ணு,

முத எல்லாரும் என்னை மன்னிச்சுருங்க, எனக்காக யாரும் கவலை படவோ கண்ணீர்விடவோ தேவை இல்ல... எனக்கு ஒரு மனசு இருக்கு, அதுல என்ன இருக்குனு யாருமே யோசிக்கல, கேக்க கூட இல்ல, என் வாழ்க்கையை நா தான் முடிவு பண்ணுவேன், பண்ணனும், அதுனால நா இங்க இருந்து கிளம்புறேன், என்னோட ஆசைப்படி என் வாழ்க்கையை நா யாரு கூட அமைச்சுக்கணுமோ அப்டி அமைச்சுக்குவேன்........ என்ன யாரும் தேட வேணாம்..........

இதான் அந்த லெட்டர்... அத படிச்சவன் உயிரோட செத்துட்டு இருந்தான்....

இல்ல நா இத நம்பமாட்டேன்... அவ என் சரயு, என்ன ஏமாத்த மாட்டா........

தம்பி அவ கூட படிச்ச ஒரு பையன் கூட பஸ் ஏறி போனதா நம்ம மேல் வீட்டு பையன் சொன்னான்.......

யாரு என்ன சொன்னாலும் இத நா நம்ப மாட்டேன்..... அவ அப்டி இல்ல... எனக்காக இத்தன வருஷம் இருந்த பொண்ணு, அவ.......... அப்டிலாம்..... அதற்குமேல் பேச முடியாமல் வெடித்து அழவும்............அவன் தாய் பேச தொடங்கினார்.....

அவ கூட்டிட்டு போன பையன் பக்கத்து ஊரு மச்சு வீட்டு பையன், நம்மள விட வசதியான குடும்பம், அதான் பாத்துருப்பா... அவன கூட்டிட்டு ஓடி போய்ட்டா.....

அவர் பேசி முடிக்கும்முன்.....

அம்ம்ம்ம்மாஆஆ....... அவள பேச இங்க யாருக்கும் உரிமை இல்ல.... அவ என் சரயு...........

இப்படி பேசியவன் அவளை தவறாக பேசும் நாளும் தூரத்தில் இல்லை என்பதை அப்போது உணரவில்லை....

தொடரும்
 
#6
பாகம் 5

என் காதல், என் சாபமே !

சரயு வீட்டை விட்டு போய் 3 மாதங்கள் கடந்து இருந்தது, அவளை கண்டுபிடிக்க என்னலாம் முடிமோ அத்தனையும் முயற்சி செய்து பார்த்து தோல்வி தானே கிடைத்து, போலீஸ் ஸ்டேஷன் ல அவ விருப்பப்பட்டு போயிருக்கா, மேஜர் வேற நாங்க ஒன்னும் பண்ணதுக்குஇல்லைனு சொல்லிட்டாங்க....

யாரோ ஒருவர் மூலம் சென்னையில் இருக்கானு தெரிஞ்சு விஷ்ணு சென்னை மூல முடுக்கெல்லாம் அலசி ஆராஞ்சி கடைசில ஒருநாள் ஒரு ட்ராபிக் சிக்னல் நடுவுல அவளை பாத்தான்...... யாரோ ஒருவன் தனது FZ ரக பைக்கை அந்த சிக்கனலிலும் கீர் டூர்னு முறுக்க திரும்பியவன் அந்த வண்டி பின்னால் தன்னவளாக நினைத்தவளை பார்க்கிறான்..... முகத்தில் எந்த கவலையும் இல்லை, ஏதோ பேசிட்டு சிரிப்பு வேற, கொஞ்சம் மெலிந்து இருக்கிறாள்.. டயர்ட் போல, ஆனாலும் அழகு........... அவளை பிடிக்க நினைத்து பின் தொடர அந்த ட்ராபிக்ல எங்க பிடிக்க? அவள் போய்விட்டாள்......

அறையில் கண்ணாடி முன் நின்றவன் தன்னை பார்க்கிறான்........ கலை இழந்த முகம், பல நாளாக ஷவே செய்யாத தாடி, ஏதோ நீரற்ற கொடி போல் இருந்தான்...... சே என்ன இவ..... எல்லாரும் சொல்றது உண்மையா? அவ எனக்கு துரோகி ஆகிட்டாளா? இவ்ளோ நாள் அவளுக்காக நா அலைஞ்சுருக்கேன்... ஆனா அவ எவன் கூடவோ...... சே..........

அன்று வெறுப்பின் உச்சம் போனவன், நாட்கள் மாதங்கள் போனது கூட அறியாமல் ஏதோ இயந்திரமாக வந்தான்..... குடி மட்டுமே அவனுக்கு ஆறுதல், யார் மேலும் நம்பிக்கை இன்மை வேறு.... அவனை மொத்தமாக மாற்றி வேறு விஷுனு அங்கிருந்தான்......

ஒரு வருடம் கழிந்த நிலையில் ஒருநாள்...

எதேஷையாக சோளத்தட்டை சரயுவை பார்க்க நேரிட்டது, கையில் குழந்தையோடு நின்றவளை கண்டு எரிச்சலோடு அருகில் சென்றான்....

ஹெலோ என்ன தெரிமா? பேச்சில் நக்கல்...

என்னவேணும்?

என்னவேணுமா? என் பிரண்ட் வாழ்க்கையை கெடுத்தது போதலயா உனக்கு? இன்னும் யாரு வாழ்க்கையை கெடுக்க நிக்க இங்க?

வார்த்தையை அளந்து பேசுங்க, இல்லனா நல்லா இருக்காது,

என்னடி நல்லா இருக்காது? உன்னால அவன் அங்க கஷ்டப்டுறான் இங்க நீ வெட்கமே இல்லாம...... சி..... சொல்லவே......

ஸ்டாப் இட்... இதுக்கு மேல உனக்கு மரியாதை இல்ல....... அங்கிருந்து வேகமா கிளம்பி அருகில் இருந்த ஆட்டோ ஸ்டாண்ட் ஆட்டோ ஒன்றில் கிளம்பி இருந்தால்...... இதை அறிந்த விஷ்ணு துடித்து தான் போனான்... மனதில் ஏதோ மூலையில் இருந்த நம்பிக்கையும் உடைந்து போனது...... குடி அதன் பங்கிற்கு அதன் வேலையை காட்ட அவன் அவளை வசைமாரி பொழிந்து கொண்டிருக்கும் நேரம் அவன் வீட்டில் போன் வர, அவன் கல்யாணம் பற்றி பேச, அவன் இருந்த நிலையில் சரி என்று பதில் சொல்லி போன் வைத்தான்...........

அடுத்த 6 மாதத்தில் அவன் கல்யாணம் சிறப்பாக முடிந்தது.....

அவன் எதிர்பாக்காத பலவும் அதன் பின்பே அறிய நேரிட்டது....

தொடரும்
 
#7
பாகம் 6

என் காதல், என் சாபமே !

விஷ்ணு சரயு இருவரும் பிரிந்து ஏறத்தாழ 2 வருடங்கள் ஆகி முடிந்திருந்தது, விஷ்ணு திருமணம் முடிந்து 5 மாதங்கள் கடந்து போயிருந்தது, ஆனால் அவன் சரயு மேல் கோவம் கொண்டிருந்தாலும் அவளை வெறுக்க இயலவில்லை, அதனால் மனைவி உடன் இல்லறம் தொடங்கவும் இல்லை,

விஷ்ணு........

சொல்லு வினோ,....வினோதா இதுதான் அவன் மனைவி பெயர்,

வி....... விஷ்ணு ....

என்னாச்சு இப்போ எதுக்கு அழுற?

நா என்னங்க தப்பு பண்ணுனேன்?

நீ என்ன பண்ணுன?

அப்புறம் எதுக்கு ஒதுக்கி வச்சிருக்கீங்க? எல்லாரும் விசேஷம் இல்லையானு கேக்குறாங்க, அம்மா வீட்ல கேள்வி கேட்டு கொல்லுறாங்க, அத்தை என் மேலதான் குறைனே சொல்லிட்டாங்க..... நா........ என்ன...... அதற்கு மேல் அவளால் பேச முடியாமல் கேவல் அழுகையா மாரி அது கதறலாகி அந்த கதறலில் அவனும் கரைந்து அங்கே இல்லறம் நல்லறமாக தொடங்கியது....

நாட்கள் யாருக்காகவும் காத்து இருப்பதில்லை, அவன் மனைவி அவன் குழந்தையை 4 மாத கருவாக வயிற்றில் சுமந்து நின்றாள், அவனும் பழைய அணைத்து விஷயங்களும் மறந்து சகஜமாக மனைவி உடன் வாழ்க்கையை நகர்த்தினான்..... அப்போது ஒருநாள் .......

என்னங்க........ இன்னைக்கி செக் அப் போகணும்....

ஹ்ம்ம் நினைவு இருக்கு, கிளம்புறேன்... நீயும் கிளம்பு......

அவர்கள் மருத்துவ மனைக்கு சென்று சோதனைகள் தொடங்கியது, அவன் அவளுக்காக ரெசிபிஷன்ல் காத்து இருந்தான்.... அப்போது .....

சிஸ்டர், அந்த 105 ரூம் பேஷண்ட் கொஞ்சம் மூச்சு விட சிரம படுறாங்க, கொஞ்சம் போறீங்களா?

யாரு அந்த பொண்ணு சரயுவா?

ஆமாம் சிஸ்டர்,

உடனே போறேன்...

இந்தஉரையாடல் அங்கிருந்தவன் சிந்தையை கலைக்க, தன்னையறியாமல் அந்த சிஸ்டர் பின்னால் போனவன், அந்த அறைக்குள் அவனது சரயு மூச்சு விடவே சிரமப்பட்டு திணறி கொண்டிருப்பதையும், மருத்துவர்கள் ஏதோ ஏதோ கருவிகளை பொருத்துவதையும் பார்த்து ஒரு கணம் அதிர்ந்தே நின்றான்........ வெளியே வந்த சிஸ்டர் ஒருவரிடம்,

சிஸ்டர் என்னாச்சு இவங்களுக்கு?

அவங்களுக்கு ஒரு சின்ன ஆக்சிடென்ட்,

யாருமே கூட இல்லாம தனியா எப்படி?

இல்ல சார் அவங்க வீட்டுக்காரங்க கூட இருந்தாங்க......

ஓஹோ.. சரிங்க........ நல்லபடியா பாத்துக்கோங்க... ஏதாவது உதவி வேணும்னா என்ன கான்டாக்ட் பண்ணுங்க... என்றபடி அவனது போன் நம்பர் கொடுத்துவிட்டு மனைவியின் அழைப்புக்கு சென்றவன் மனது முழுதும் வலி ஆட்க்கொண்டது..

வெளியே வந்தவன், அங்கே சரயு மற்றும் அவனுக்கு இருவருக்கும் பொதுவான தோழி ஒருத்தி நிற்பதை பார்க்கிறான்... அவளும் இவனை கண்டு வந்தாலும் பேச தயங்கி நின்றாள்...

விஷ்ணு.... இவங்க.....

என் வைப்.....

ஓஹோ... உள்ள.....

ஹ்ம்ம் பாத்தேன்......

என்னடா சாதாரணமா சொல்லுற?

வேற எப்பிடி சொல்ல? அதான் உள்ள அவ புருஷன் நிக்கான்ல.. அப்புறம் என்ன? நா கிளம்புறேன்...

அவன் போவதையே பார்த்தவள், முதலில்குழம்பினாலும்ஒ, பின் ஒரு பெருமூச்சு ஒன்றை விடுத்து உள் சென்றாள்...........

6 மாதங்கள் முடிந்த நிலையில், அவன் மனைவி அழகான பெண் குழந்தையை பெற்று இருந்தாள் அதே மருத்துவமனைஇல், சரயு அங்கே இருப்பதை கண்டவன் அதன் பின் அங்கு வருவதில்லை, அவன் மனம் போக சொன்னாலும் மூளை அதை ஏற்கவில்லை, இப்பொது வேறு வழி இல்லை........... 3 நாட்கள் சென்ற பின் ஒரு நாள் முன் ஒருமுறை பேசிய சிஸ்டர் டூட்டி முடிந்து வரும் போது கண்டவன், அவரிடம் சென்று தன்னை அறிமுகம்செய்து பின் சரயு பற்றி கேட்டான்... முதலில் யோசித்தாலும் பின் நினைவு வந்தவராக,

ஓ எஸ், ஆமா நினைவு இருக்கு, அந்த பொண்ணுக்கு நீங்க உதவி பண்ணுறதா கூட சொன்னிங்க.....

ஆமா சிஸ்டர் அவங்க நல்லா இருக்காங்களா?

எனக்கு தெரில சார், அப்போ போகும் போதே பாவம் யாருமே இல்லாம ரொம்ப பாவம் சார்....

என்ன சிஸ்டர் சொல்றேங்க? அதான் அவரோட புருசன் இருந்தாங்களே....

புருஷனா? அந்த பொண்ணுக்கு யாருமே இல்லங்க... கூட ஒரு பொண்ணு தான இருந்துச்சு....

வாட்...... நீங்க வீட்டுக்காரங்கனு சொன்னேங்க.......

ஓ மை ஜீசஸ்.... நா சொன்னது வீட்டு owner...... அந்த பொண்ணோட வீட்டு owner பொண்ணு தானே கூட இருந்துச்சு.........


ஐயோ நா நா........

தப்பா புரிஞ்சுக்கிட்டேங்க............. ஹ்ம்ம் சரி எனக்கு நேரம் ஆச்சு கிளம்புறேன்...

இப்போ அவ எங்க இருக்கானு தெரியுமா?

அதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்..... மன்னிச்சுருங்க.... நா கிளம்புறேன்..........

அவர்கள் கிளம்பி சென்ற பின்னர்,

ஐயோ என்னாச்சு சரயுகு? அவ புருஷன் கூட வரலைனா அப்போ புருஷன் எங்க போனான்? அவளுக்கு ஒரு குழந்தை வேற உண்டுமே? என்ன நடக்கு இங்க? ....... அவன் குழப்பத்தின் உச்சம் மயங்கி சரிந்தான்....

தொடரும்...
 
#8
பாகம் 7

என் காதல்,என் சாபமே !

திடீர்ன்னு மூர்ச்சையாகி விழுந்தவன் கண் முழிக்கும் போது வார்டு ஒன்றில் இருந்தான்..

சார் இப்போ ஓகே ஆ?

சிஸ்டர் என்னாச்சு?

ஒண்ணுமில்ல, கொஞ்சம் பிபி ஏறி போச்சு...

சரிங்க நான் கிளம்பலாமா?

தாராளமா....

வெளியேறியவன், முதலில் செய்தது அவன் தோழிக்கு போன் செய்தது,

ஹெலோ, ஹெலோ..... நா விஷ்ணு...

சொல்லு,

நீ எங்க இருக்க? உடனே உன்ன பாக்கணும்,

எதுக்கு?

எனக்கு, எனக்கு,...

உனக்கென்ன சொல்லு,

எனக்கு சரயு பத்தி தெரியணும்..

ஓ, அவ பேரெல்லாம் உனக்குநினைப்பு இருக்கா?

ஏய் என்ன இப்படி பேசுற?

வேற எப்படி பேசணும்? உன்னால வாழ்க்கையை தொலைச்சுட்டு யாருமே இல்லாம அனாதையா நின்றவளை நீ வாழ்க முழுக்க தூக்கி வச்சி பேசவேணாம், அடலீஸ்ட் அவ கஷ்ட படும் போது கூட இருந்துருக்கலாம்ல? நீயெல்லாம் என்னடா மனுஷன்....

போதும் நிறுத்து, என்னால அவ வாழ்கை போச்சா? அவ தான என்னவிட்டுட்டு போனா? இப்போ என்னால எல்லாம்னு சொல்ற....

ஆமா அவ போனா, ஆனா ஏன்னு யாராச்சும் கொஞ்சம் யோசிச்சேங்களா?

அதான் சொன்னாலே அவளுக்கு புடிச்ச வாழ்கை வாழ போறேன்னு,

ஓ, அப்போ அப்டியே நம்பிர்வ.... எத்தனை வருஷ காதல், இவ்ளோ தான் உன் புரிதலா? உன்ன குத்தம் சொல்லி ஒன்னும் ஆக போறது இல்ல.. அவ பைத்தியக்காரி... அப்போவே சொன்னே, என் பேச்சை கேக்காம போய்ட்டாளே....

என்ன சொல்ற நீ?

என்ன இப்போ உனக்கு? எதுக்கு போன் போட்டு உசுர வாங்குற?

எனக்கு சரயு பாக்கணும்......

எதுக்கு?

நீ என்னலாமோ சொல்ற, எனக்கு பயமா அழுகையா வருது,

ஹ்ம்ம் யோசிக்க வேண்டிய நேரத்துல யோசிக்கல, இப்போ கேக்குற?

ப்ளீஸ்.. எனக்கு......... புரிஞ்சுக்க....

சரி நாளைக்கு காலையில 10 மணிக்கு எங்க தெரு காபி ஷாப் கு வா, பேசலாம் .

சரி....
அவனுக்கு தெரியாத ஒன்று இந்த சந்திப்பில் அவன் வாழ்வு சூறாவளிக்குள் சுழல போகுது என்பதை....

தொடரும்
 
#9
பாகம் 8

என் காதலே, என் சாபம்!

காபி ஷாப்பில் தோழியின் வருகையை எதிர்நோக்கி இருந்தான் விஷ்ணு...
 
#10
பாகம் 8

என் காதலே, என் சாபம்!

காபி ஷாப்பில் தோழியின் வருகையை எதிர்நோக்கி இருந்தான் விஷ்ணு...,

வந்துரொம்ப நேரம் ஆகுதா விஷ்ணு?

ஹேய் ஹாய் வா வா... ஜஸ்ட் இப்போ தான் வந்தேன்...

உன் wife ப்ரெகனடா இருந்தாங்க தான?

ஆமா பையன்.... ஹாஸ்பிடல் போயிருந்தபோ தான் சரயு பத்தி தெரிஞ்சேன்,

ஓஹோ...... சரி சொல்லு எதுக்கு இப்போ அவளை தெரிஞ்சுக்க நினைக்கிற?

ப்ளீஸ்..... எனக்கு தெரியணும்...நாந்தான் தப்பா புரிஞ்சுக்கிட்டானா சொல்லு...... அவ புருசன் பிள்ளைங்க எல்லாம் என்ன ஆனாங்க?

வெயிட் வெயிட், குழந்தையா? அது சரி இப்படி யாரு சொன்னா?

சோளத்தட்டு சொன்னான்... எங்கயோ பார்த்து பேசிருக்கான்.. அவ ரொம்ப ஓவரா பன்னிட்டு போனதா சொன்னான்...

யாரு அந்த சோள கொல்ல பொம்மைக்கு போட்ட ட்ரெஸ் ஆட்டைய போட்டு அதுல சட்டையை தச்சு போட்டானே, அந்த பக்கியா?

ஹ்ம்ம் அவன் தான்..

அவனெல்லாம் ஒரு ஆளு.. இல்ல நா தெரியாம கேக்கேன், யாரு என்ன சொன்னாலும் நம்பிருவியா நீ?

என்ன சொல்ற?

இன்னும் என்ன சொல்ல சொல்ற? அவளுக்கு குழந்தையும் இல்லை ஒன்னும் இல்ல..

அப்போ அந்த குழந்தை?

அவ என் வீட்ல தங்கி இருந்தா, எங்காவது வெளிய போகும் போது என் குழந்தையை அவ சிலநேரம் வச்சிருப்பா, அப்டி எதாவது சூழ்நிலைல அவளை பாத்துருப்பானு நினைக்கேன்....

அவளுக்கு குழந்தை இல்லையா?

நாசமா போச்சு... அவளுக்கு கல்யாணம் ஆகிருந்தா தான குழந்தை இருக்கும்?

என்னது............. அப்போ அந்த பையன் அவளை கட்டிக்கலயா?

எந்த பையன்?

நா ஒருநாள் பழவந்தாங்கல் சிக்னல் பக்கத்துல அவளை ஒரு பையன் கூட பாத்தேன்... பைக்ல போனா.... அவன் கூட சிரிச்சு சிரிச்சு போனாலே... அத பாத்த அந்த நிமிஷமே நா செத்துட்டேன்...

அப்போ இன்னும் எதுக்கு உசுரோட இருக்க? செத்து தொலைய வேண்டி தான?

என்னரொம்ப ஓவரா பேசுற?

யாரு நானு? ஹ்ம்ம்... உங்க மாதிரி ஆளுங்க ஒரு பொண்ணு யாரோடையா பேசுனா உடனே புருஷன், பாய் பிரண்ட் னு முடிவே பன்னிருவேங்க... ஏன் அது அண்ணனான நண்பனா இல்லா வேற உறவுகளோ இருக்கலாம்னு நினைப்பு வரவே செய்யாது அப்டி தான?

இப்போ என்ன சொல்ற? அவ அந்த பையன் கூட போனது நடக்கல னு சொல்ல போறியா?

கடவுளே...... unகூட பேச எனக்கு டென்ஷன் ஆகுது......... ஹ்ம்ம் இரு...... இங்க பாரு.. நீ இந்த பையன் கூடவா அவளை பார்த்த?

ஆமா இவன் தான்.. இவனே தான்...... உனக்கு எப்படி?....... ஓஹோ.. உன் வீட்ல தான இருந்தா.....

அவ என் வீட்ல தான் இருந்தா, ஆனா போட்டோ அவ தரல, ஏனா என் தம்பி போட்டோவை எனக்கு யாரும்தர வேணாம்...

அப்போ உன்தம்பி அவ காதலனா?

அடிச்சு பல்ல கழட்டிருவேன், எனக்கு தம்பினா அவளுக்கும் தம்பின்னு உனக்குத்தெரியதா? லூசா நீ? அவ என் வீட்ல தங்குன வரைக்கும் அவளை ஆபீஸ் கூட்டிட்டு போனது அவன் தான், அப்டி தான் பாத்துருப்ப....... ஒருத்தங்களை ஈஸியா தப்பு சொல்லிடறோம் இல்ல?
இப்போ நானும் நீயும் பேசுறோம் அத தப்பா தானா பாப்பாங்க? ஆனா உண்மை நமக்கு தான தெரியும்?

கடவுளே.... எனக்கு தலையே சுத்துது.... அவ யாரைத்தான் காதலிச்சா அப்போ?

அதே உனக்கு புரிலயா?... இடியட்.... உன்னதான் அவ உசுரா நினச்சு வாழ்ந்தா.....

என்ன சொல்ற அப்போ அவ யாரோடயோ ஓடுனது?... அந்த மச்சு வீட்டு பையன்னு சொன்னார்களே.....

அறிவுகெட்ட முட்டாள் நீ...... கொஞ்சமாச்சும் யோசிக்கிற திறன் இருந்தா இப்படி இருப்பியா
 
#11
பாகம் 9,

என் காதலே, என் சாபம் !

முட்டாள் முட்டாள் முழு முட்டாள்... அவ நீங்கலாம் சொல்ற மாதிரி பணத்துக்கு ஆசையா இருந்தா இந்த பத்துவருஷமும் உன்கூட சேர்ந்து அவளும் கஷ்டப்டுருக்க மாட்டா.அவ படிப்புக்கும் அழகுக்கும் எத்தனை பேரு லைன் கட்டி நின்னானுங்கனு உனக்கே தெரியும், அப்டி தப்பான பொண்ணா இருந்தா படிச்ச இடத்துலயே, இல்ல வேல பாத்தப்பவோ உன்ன விட்டு போயிருக்கணும்.. இவ்ளோ ஏன் அவ வீட்லயே எத்தனை பேரு பொண்ணு கேட்டாங்க? எல்லாரும் பெரிய ஆளுங்க.. ஆனா அவ எதையும் எதிர்பாக்காம உன்னைய காதலிச்சா... அந்த பாவத்துக்கு எல்லாரும் நல்லாவே செய்துட்டேங்க..

எனக்கு தலையே சுத்துது... நீ சொல்ற எல்லாமே உண்மை தான்.... இதெல்லாம் நானும் யோசிச்சுருக்கேன்... ஆனா அவ ஏன் போனா? அப்புறம் அந்த லெட்டர்?
நானும் அவ போன உடனே விடல... தேடுனேன்.. அவளுக்காக அலைஞ்சேன்... ஆனா கண்டு பிடிக்க முடில......... என்ன ஏமாத்திட்டா அவ முன்னாடி வாழணும்னு நினைச்சுட்டு தான் கல்யாணமே பண்ணுனேன்.... இப்போ நீ சொல்வது கேக்கும் போதே என்னால முடில..... என்றபடி கதறவே செய்தான்...

இப்பொது அவனை பார்த்தவளுக்கு இன்னும் உண்மைகள் தெரிந்தால் இவன் என்ன அவனோ என்ற பயம் வந்தது.. அவ்வளவு நேரம் அவன் மேல் இருந்த கோவம் போய் பரிதாபமே வந்தது.... அவனும் என்ன செய்வான்.. பாவம் அவளை எந்த அளவு காதலித்தான் என்பதும் தெரியும், அவளை பிரிந்த வலி அவனை எப்பிடி மாற்றியது என்பதும் தெரியும்.... இப்படி கதறும் போது அவள் கலங்கி தான் போனால்...

விஷ்ணு... ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ப்... ப்ளீஸ்.... எல்லாரும் நமையே பாக்குறாங்க....

அவளை பாக்கணும் எனக்கு... சொல்லு என்னாச்சு அவளுக்கு........

அவளை பாத்து என்ன பண்ண போர?

அவளை ஓங்கி ஒரு அரை விடணும்...

எதுக்கு?

என்ன நடந்தாலும் என்கிட்ட சொல்லிருந்தா நான் செரி பன்னிருப்பேன்.... இப்படி முட்டாள் தனம் பண்ணிட்டாலே...

என்ன நடந்ததுன்னு உனக்கு தெரியுமா முதல?

அப்போ உனக்கு தெரியும்ல... என்னாச்சு சொல்லு....

வேண்டான்னு நினைக்கிறேன்.... அவ உனக்கு துரோகம் பண்ணல, உனக்கு மட்டும் தான் உசுரா வாழ்ந்தா அத மட்டும் புரிஞ்சா போதும்... நா கிளம்புறேன்....

ப்ளீஸ் ப்ளீஸ் போகாத.... என்னாச்சுன்னு சொல்லு... அவ எங்க இப்போ சொல்லு.. தயவு செய்து சொல்லு... உங்காலுல விழுறேன் சொல்லு என்றவன் அவள் கால் பணிய, அவள் உடனே அவனை தடுத்து, அவன் முன் அமர்ந்தவள்...

என்னடா நீ? இப்படி பண்ணற....

என்னாச்சு சொல்லு.....

சொல்றேன்...

தொடரும்
 
#12
பாகம் 10,

என் காதல், என் சாபமே !

சொல்லுடி ப்ளீஸ்.. தயவு செய்து சொல்லு ....

என்னத்த சொல்ல சொல்லுற? என்னனு தெரிஞ்சா....

சொல்லு என்னவா இருந்தாலும் சொல்லு.

அன்னைக்கு அவ வீட்டை விட்டு கிளம்ப முன்னாடி காலைல தான் அவளுக்கு போன் வந்துச்சு..

.......

ஹெலோ........ ஹாம் சொல்லுங்க.......... சரி வரேன்............. ஹ்ம்ம் சொல்ல மாட்டேன்....

அம்மா நா கொஞ்சம் வெளிய போறேன், அப்டியே ஆபீஸ் போய்டுவேன்.....

சரி சாப்டு போடி,

ஆபீஸ் போய் பாத்துக்குறேன்.....

என்ன பொண்ணோ போ,...... பாத்து போடி.....

ஹ்ம்ம் ஹ்ம்ம் சரிம்மா.........

.................

வா வா சரியா வந்துட்டியே...

என்ன எதுக்கு இங்க வர சொன்னேங்க? வீட்டுக்கு........

இந்தாரு உங்கிட்ட உக்காந்து குசலம் விசாரிக்க நான் வரல, வந்த விஷயத்தை சொல்லிட்டு போறேன்.....

என்னாச்சு....ஏன்......

ப்ச்.... நீ விஷ்ணு விட்டு போகணும்....

தன் காதுகளை நம்பாமல் மீண்டும் ஒருமுறை...என்...... ன... என்ன சொன்னேங்க?

அவன விட்டு போனும் நீ, எங்க வீட்டு புள்ளைக்கு நாங்க வேற பொண்ணா பாத்துருக்கோம்.. வசதி பணம்னு நல்லா வசதி ... நீ ஒருத்தி இடைல குழப்புற....

இல்ல நா போமாட்டேன்... அவன் என் உசுரு... என்னைக்கும் போக மாட்டேன்...

நீ அவன விடலைனா உன் குடும்பம் தப்பாது... ஒருத்தன கூட விட்டு வைக்க மாட்டோம்....

ஏன் எங்க காதலை ஏத்துக்கிட்டு தான கல்யாணம் வரைக்கும் வந்துருக்கு.... அப்புறம் எதுக்கு பிரிக்க நினைக்கீங்க?

ஏய் மரியாதையா போ... இல்ல....

நா போ மாட்டேன்... அப்டினா உங்க விஷ்ணு கிட்ட பேசி என்ன விட சொல்லுங்க . நா போறேன்..

அந்த லூசு பய தான் உன்னிய பைத்தியமா சுத்துறானே, அப்புறம் எப்படி விடுவான்...

அப்போ நா மட்டும் எப்படி?.. அவளை அவர்கள் ஓங்கி அடித்து மிதித்தனர்.. அவள் அப்போதும் மசியவில்லை... இறுதியாக அவள் குடும்பத்தை வைத்தும் விஷ்ணுவையும் வேறு வழி இல்லையென்றால் கொன்னுருவோம்னு சொல்லி மிரட்டவும்..... கண்களில் கண்ணீரும் உடலில் ரத்தக்காயங்களும் அவன் நினைவுகளும் சேர்ந்து அழுதவாறு....

நா நீங்க சொல்றத செய்றேன்... குடும்பத்தை விட்டுருங்க., என்ன காதலிச்சானு அவனை ஒன்னும் பண்ணிராதீங்க... என் கூட இல்லனாலும் அவன் நல்லா இருக்கட்டும் ......

நாங்க சொல்றத புரிஞ்சுக்கோ.. நீ செத்து போனா அவனும் சாக நிப்பான்.. அதுனால அவன் உன்ன வெறுக்கணும் அதுக்கு நீ யாரையாவது கூப்டு ஓடி போர..

சி....... நீங்களா மனுஷங்களா?

ஏய் ஏய்... நீ அப்டி நடின்னு தான் சொல்றோம்... புரிதா கிளம்பு...... அவன் கண்ணுல ஒருநாளும் வரக்கூடாது....

வரமாட்டேன் என்று கண்ணீரோடு கிளம்பியவள், நேராக வந்து சேர்ந்தது சென்னை பஸ் நிலையம், எங்கு போவது என அறியாமல் நின்றவளை தோழியின் சகோதரன் பார்த்து அவளிடம் சொல்ல, அவள் வந்து பார்த்து வர மறுத்தவளையோ விடாம இழுத்து போய், உண்மைகள் அறிந்தவள், நீ செய்றது தப்பு ஒழுங்கா வீட்டுக்கு போனு சொல்லியும் கேக்காம வேற வழி இல்லாம அவளும் அவளது பிடிவாதத்திற்கு அடிபணிந்தால்..

........

என்னடி சொல்லற...... இவ்ளோ நடந்தா... எனக்காக ....... மீண்டும் அவன் கதறவே.. அவளால் அவனை சமாதானம் செய்ய முடியாமல் தவித்தாள்...

ப்ளீஸ் விஷு அழாத.... எல்லாரும் ஒருமாதிரி பாக்குறாங்க.....

நீயாது ஒருவார்த்தை சொல்லிர்கலாமே?

அவ பிடிவாதமா இருந்தா எவ்ளோ சொல்லியும் கேக்கல, உங்கிட்ட சொல்லணும்னு எவ்ளோ முயற்சி பண்ணுனேன், ஒருமுறை நா உன்ன கான்டாக்ட் பண்ண நினைச்சதை தெரிஞ்சுட்டு தற்கொலை முயற்ச்சி பண்ணிட்டா.. அதுக்கப்புறம் நா அமைதியாகிட்டேன்.......... நீ கல்யாணம் பண்ணுனது எல்லாம் அவளுக்கு தெரியும்.... உனக்கு தெரியாது விஷ்ணு உன் கல்யாணத்துக்கு கண்டிப்பா போனும்னு கிளம்பி வந்தா.. அன்னைக்கு நீ தாலி கட்டும் போது............... பாவம் டா அவ எவ்ளோ அழுதா தெரியுமா?

என்னடி சொல்ற? கல்யாணத்துக்கு வந்தாளா? .. ஐயோ அவ எப்டி துடிச்சுருப்பா?

ஆமாடா... பாவம்........ அப்புறம் ஒரு ஆக்சிடென்ட், அதுக்கு ட்ரீட்மென்ட் வந்தப்போ தான் உன்ன பாத்தேன்.. சரி பேசலாம்னு நினச்சேன்.... நீ பேசுனது கடுப்பா ஆகிருச்சு.. அதான் கிளம்பிட்டேன்......

ஐயோ....... தப்பு பண்ணிட்டேன்........ கடவுளே...... இன்னைக்கு என்ன தெரிஞ்சு என்ன பண்ண? என்னால அவ...........

அழாத விஷ்ணு ப்ளீஸ்.......

அவ எங்க..... சொல்லு ப்ளீஸ்........

அது அது ......

ஒரு நிமிஷம் எங்க வீட்டு ஆளுங்கன்னு சொன்ன... ஆனா யாருனு சொல்லல்ல.... யாரு அது அவளை மிரட்டுனது... கொல்லாம விட மாட்டேன்...

என் குழந்தை மேல சத்தியமா சொல்றே அவ யாருனு சொல்லல....

உண்மையா சொல்றியா?

சாத்தியமா.. என் பிள்ள சத்தியமா....

சரி அவளை எங்க? நா பாக்கணும்....

பாத்து பாத்து என்ன பண்ண போர?

அவகிட்ட மன்னிப்பு கேக்கணும்...... அவளுக்கு நா இருக்கேன் எப்பவும் இருப்பேன்.....

அப்போ உன் குடும்பம்?

அது அது...... அவன் அப்போது தான் தனக்கு ஒரு குடும்பம் இருப்பதை நினைத்து பார்த்தான்...

மௌனமாக அழுதான்.......... எனக்கு என்ன பண்ண தெரில.... ஆனா அவளை பாக்கணும்..... இல்லனா செத்துருவேன் நா....

இங்க பாரு அவ இப்போ அமெரிக்கா போய்ட்டா... இன்னும் சொல்லப்போனா இங்கிருந்து போனவ நம்பர் எதுவும் தரல, அவ அங்க எங்க இருக்கா என்ன பண்ணுறா ஒன்னும் தெரியல.... தெரிஞ்சா கண்டிப்பா சொல்றேன்...

அவ அங்க?

வேல கிடைச்சு போனா... ஆனா எந்த கம்பெனி னு சொல்லல, எவ்ளோ கேட்டும் சொல்லல....

எப்போ போனா?

ஒரு 10 நாள் இருக்கும்.....

அவ கூப்டா எனக்கு சொல்லு ப்ளீஸ்...

எனக்கு நேரம் ஆகுது கிளம்புறேன்............ விடை பெற்று சென்றவலை அழுதபடி பார்த்து நின்றான் விஷ்ணு....

........

ஹெலோ.... சொல்லுங்க ......

என்னமா எங்க இருக்க? பூஜைக்கு நேரம் ஆச்சு ..

விஷ்ணு கிட்ட பேசிட்டு இருந்தேன்... நேர ஆகிருச்சு...

சீக்ரம் வா ..

வந்துட்டேன், வாசலுக்கு இருக்கேன், கதவை திறங்க....

அவள் கணவன் கதவை திறக்க அங்கே நடு கூடத்தில் மாலை போட்ட புகைப்படத்தில் சிரித்தபடி இருந்தாள் சரயு......

சாரி லேட்டா ஆகிருச்சு அய்யரே... நீங்க ஆரம்பிங்க...

பொண்ணு பேரு சொல்லுங்க..

சரயு...........

அங்கே சாந்தி பூஜை நடக்க அவள் புகை படம் முன் நின்றவள் மனதில்,

ஏன் டி... ஏன் இப்படி பண்ணுன? நீ என்ன தப்பு பண்ணுனானு உனக்கு இப்படி ஒரு நிலைமை...? உன் விஷ்ணு நீ உசுரோட இருக்கன்னு நம்பி போயிருக்கான்... அவன் கிட்ட உண்மையை சொல்லி உயிரோட கொல்ல எனக்கு மனசு வரல... அதுனால தான் பொய் சொன்னேன்......மன்னிச்சுருடி.....


10 நாட்களுக்கு முன் சரயூ உடன் இவளுக்கு வாக்குவாதம்.. அதாவது உண்மையா என்னாச்சுன்னு எல்லாருக்கும் சொல்ல போறேன்னு அவளும் சொன்னா செத்துருவேன்னு இவளும் சண்டை போட கடைசில இவ சொல்லுவேன்னு கிளம்பி போக, அவளை புடிக்க சரயு வர எதிர்ல வந்த கார்ல அடி பட்டு ஐந்து நாள் சிகிச்சை பலன் அளிக்காமல் அவள் இன்னுயிர் பிரிந்து போனது.... அவளுடன் அவளின் நிலைக்கு யார் காரணம் என்பதும் மறைந்தே போனது...............

என்னமா என்ன யோசனை?

பாவம் சரயு அவளை நினச்சா.....

இந்த பிறவில அவ காதல் அவளுக்கே சாபமா போய்டுச்சு, அடுத்த ஜென்மத்துலயாது அவ சந்தோசமா வாழட்டும்.....


அவ ரொம்ப நல்லவங்க.... யாருக்கும் கேடு நினைக்காதவ.. அவ இனி வரக்கூடிய பிறவில சந்தோசமா இருக்கணும்னு மனசார நினைக்கேன்....


சரி வா அவளோட சாம்பலை புண்ணிய ஆத்துல கரைச்சுருவோம்......

அவள் சாம்பல் கரைக்கப்பட்டு அவள் வாழ்வும் அத்தோடு கரைந்தது...

விஷ்ணு இன்னும் அவள் உயிரோட இருப்பதாக நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறான்.. என்னைக்காவது அவளை பார்த்து அவளிடம் பேச என்னலாமோ நினச்சு வச்சுட்டு இருக்கான்....... அவன் என்றும் உண்மை அறியாமல் இருக்கட்டும் என்று கடவுளை வேண்டுவோம்...

முற்றும்