என்னை விட்டு ஓடிப் போக முடியுமா? - கதை திரி

Status
Not open for further replies.

sudharavi

Administrator
Staff member
#21
“என்ன வார்த்தை பத்மா?”


சற்றே சத்தமாக “ஜலபுல ஜன்க்ஸ்னா என்ன ரமா?” என்று விட, வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஒரு நிமிடம் அதிர்ந்து சிரித்துவிட, அவரின் கைகளைப் பற்றி கப்டேரியாவிற்கு இழுத்துச் சென்ற ரமா “என்ன பத்மா இது? அந்த வார்த்தையை ஏன் கேட்டே? அதுவும் இப்படி சத்தமா?” என்றார் தலையில் அடித்துக் கொண்டபடி.


“என்ன ரமா நீயும் சொல்ல மாட்டேன்ற..அவனுங்களும் சொல்ல மாட்டேன்றாங்க” என்றார்.


“ஐயோ! பிள்ளைங்க கிட்ட கேட்டு வச்சியா” என்றவர் அவர் காதில் விவரத்தை சொல்ல அதைக் கேட்டதும் பத்மாவின் முகம் போன போக்கை பார்த்து சிரிக்க ஆரம்பித்தார் ரமா.


“இதையா அவனுங்க சொன்னானுங்க...ஐயோ ராகவ் கிட்ட வேற நீ சொல்லுன்னு படுத்துனேன்” என்று தலையில் அடித்துக் கொண்டார்.


“ஹாஹா..அவனுங்க விழுந்து பிரண்டு சிரிச்சிருப்பானுங்க....விடு விடு ரிஷி பத்தினிக்கு இதெல்லாம் தெரியலேன்னா பரவாயில்லை” என்றார் சிரிப்புடன்.ஜெயந்திக்கு எப்போதும் போல வாழ்க்கை பயத்துடனும், டெண்ஷனுடனும் சென்று கொண்டிருந்தது. தங்கை சொன்னவற்றை முயற்சி செய்து பார்க்க நினையாமல் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டாள். சுமார் ஒரு மாதம் ஓடி இருந்தது. அன்று வீடே பரபரப்பாக இருந்தது. லதா காலையில் இருந்தே வீட்டைத் துடைப்பதும், கூட்டுவதும், வருபவர்களுக்கு ஸ்நாக்ஸ் செய்ய வேண்டும் என்று மும்மரமாக இயங்கிக் கொண்டிருந்தார்.


சந்தானமும் மனைவிக்கு உதவிக் கொண்டே மதியிடம் ஜெயந்தியை மனதை அமைதியாக வைத்துக் கொள்ளும்படி கூறி இருந்தார். வீட்டில் நடப்பவற்றை பார்த்துக் கொண்டிருந்த ஜெயந்திக்கு உள்ளுக்குள் படபடப்பாக இருந்தது. ஆனால் தன்னறையில் மதியுடன் பேசிக் கொண்டிருந்ததால் அந்த அழுத்தம் சற்று குறைவாகத் தெரிந்தது.


மாலை நேரம் அவளுக்கு சிம்பிள் ஆக அலங்காரம் செய்து அமர வைத்துவிட்டு, அன்னைக்கு உதவிகள் செய்து கொண்டிருந்த மதி வாசலில் கேட்ட கார் சத்தத்தில் அவசரமாக சென்று ஜெயந்தியுடன் அமர்ந்து கொண்டாள்.


மாப்பிள்ளை வீட்டினர் வந்திறங்கி ஹாலில் அமர வைக்கப்பட, பெரியவர்கள் எல்லாம் பேசி முடித்துவிட்டு ஜெயந்தியை அழைத்து வர கூறினர். லதாவின் தங்கை வந்து அவளை அழைத்துச் செல்ல, பயத்துடனே மெல்ல நடந்தாள். யாரையும் நிமிர்ந்து பார்க்காது சற்று நேரம் நின்று விட்டு அறைக்குள் கொண்டு விடப்பட்டாள். மாப்பிள்ளை பெண்ணுடன் தனியாகப் பேச வேண்டும் என்று சொல்ல, இப்போது சந்தானத்திற்கு பதட்டமானது. இருந்தும் சமாளித்துக் கொண்டு பெண்ணையும், மாப்பிளையும் தனி அறையில் விட்டனர்.


மாப்பிள்ளை அவளை பார்த்துக் கொண்டே என்ன பேசுவது என்று தயங்கிக் கொண்டிருக்க, அவளுக்கு உடலெல்லாம் வியர்க்க ஆரம்பித்தது. அப்போது மதி சொன்னது நினைவிற்கு வர, அவனைப் பார்க்காமல் விழிகளை எதிரே இருந்த படத்தில் வைத்து நன்றாக கண்களை உருட்டி, நான் மயங்க மாட்டேன்...நான் மயங்க மாட்டேன் என்று உடலை லேசாக உலுக்கியபடி கூற ஆரம்பிக்க, அதை பார்த்தவனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.


பின்னர் நேரம் ஆக ஆக சேரின் கைப் பிடியை அழுந்தப் பற்றிக் கொண்டு மேலும் கண்களை உருட்டி மந்திர உச்சாடனம் போன்று நான் மயங்க மாட்டேன் என்று ஆடிக் கொண்டே சொல்லவும் மாப்பிள்ளை பயந்தே போனான்.


மெல்ல நாற்காலியை விட்டு எழுந்து மெதுவாக பின்னுக்கு நகர்ந்து விழுந்தடித்து ஹாலிற்கு வந்தவன் “அப்பா! அம்மா! வாங்க ஓடிடலாம். பொண்ணுக்கு பேய் பிடிச்சிருக்கு” என்று திரும்பி பார்த்துக் கொண்டே அன்னை , தந்தையின் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு காரை நோக்கி ஓடி விட்டான்.


என்ன நடக்கிறது என்று புரியாமல் சந்தானம் விழித்துக் கொண்டு நிற்க, அவசரமாக ஜெயந்தியைப் பார்க்க ஓடினாள் மதி. அங்கு நாற்காலியில் ஆடியபடியே நான் மயங்க மாட்டேன் என்று சொல்லிக் கொண்டு அமர்ந்திருந்தவளைக் கண்டு ஓய்ந்து போய் அமர்ந்து விட்டாள்.
 

sudharavi

Administrator
Staff member
#22
அத்தியாயம் – 5


மாப்பிள்ளை எழுந்து ஓடவும், மெல்ல சுதாரித்துக் கொண்ட ஜெயந்தி மூச்சிரைக்க ஓடி வந்து தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த மதியைப் பார்த்து சிரித்தாள்.


மதியோ ஓய்ந்து போய் கீழே அமர்ந்து விட, நாற்காலியில் இருந்து எழுந்து வந்த ஜெயந்தி “இன்னைக்கு நான் மயங்கவே இல்ல மதி. நீ சொன்ன மாதிரி ட்ரை பண்ணிட்டேன்” என்றாள் உற்ச்சாகமாக.


“நீ மயங்கல ஆனா மாப்பிள்ளை ஓடிட்டார்” என்றாள் சோர்வாக.


“ஏண்டி ஓடினார்? நான் அவ்வளவு மோசமாவா இருக்கேன்?” என்றாள் அழுகுரலில்.


“அப்படி இல்லல. நீ செஞ்சு வச்ச வேலையில் அவர் உனக்கு பேய் பிடிச்சிருக்குன்னு ஓடிட்டார்” என்றாள் கடுப்பாக.


கீழே அமர்ந்து “அவனுக்கு என்ன லூசா? பேய் பிடிச்சவங்க இப்படித்தான் இருப்பாங்களா என்ன?” என்றாள் கோபமாக.


அந்நேரம் லதாவின் தங்கை வந்து “என்ன ஜெயந்தி உனக்கு? எவ்வளவு நாளா இந்தமாதிரி இருக்கு?” என்று கேட்கவும் சுதாரித்துக் கொண்ட மதி “அவளுக்கு எதுவுமில்லை சித்தி” என்று கூறி அவளை இழுத்துக் கொண்டு அறையில் சென்று கதவடைத்துக் கொண்டாள்.


லதாவோ தங்கையிடம் “அவளுக்கு ஒண்ணுமில்ல ஷாந்தி. டென்ஷன்ல தான் இப்படி இருப்பா” என்று விளக்கம் கொடுக்க முயன்றார்.


அவரை முறைத்த சந்தானம் “கொஞ்சம் பேசாம இருக்கியா?” என்றவர் ஷாந்தியிடம் திரும்பி “இங்கே நடந்ததை வெளில சொல்லாதம்மா. அவ பயந்துட்டா போல, அதை பார்த்து அந்தப் பையனும் பயந்திருக்கான்” என்று சமாளித்தார்.


“நான் சொல்றனேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க அத்தான். அவளை நல்ல டாக்டர் கிட்ட காண்பிங்க இல்லேன்னா பூசாரியை கூட்டிட்டு வந்து இருக்கிற பேயை ஓட்டுங்க” என்றார்.


அதைக் கேட்டதும் பல்லைக் கடித்தவர் “உன் யோசனைக்கு நன்றி மா. நான் பார்த்துக்கிறேன்” என்று அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டார்.


அதைப் பற்றிக் கண்டு கொள்ளாமல் லதாவை அழைத்து அவர் காதில் குசுகுசுவென்று சிலவற்றை கூறி விட்டு தனது வீட்டிற்கு கிளம்பிச் சென்றார்.


அன்று இரவு ஒரு கனமான இரவாக அமைந்தது மற்ற மூவருக்கும். ஜெயந்திக்கு எப்பொழுதும் போல எதைப் பற்றியும் கவலை இல்லாமல் சென்றது. அவளைப் பொறுத்தவரை தான் அன்று மயங்கி விழாமல் இமாலய சாதனை செய்திருப்பதாக எண்ணிக் கொண்டு மகிழ்ச்சியுடன் உறங்கினாள்.


மறுநாள் காலை எழுந்ததிலிருந்து லதாவிடம் பேசாமல் தனது வேலைகளை செய்து கொண்டிருந்தவரை லதாவும் கண்டு கொள்ளவில்லை. ஏதோ சிந்தனையிலேயே லதா உழன்று கொண்டிருந்தார். சந்தானம் ஆபிஸ் கிளம்பி விட, மெல்ல மதியிடம் சென்றவர் “லைப்ரரி போயிட்டு வரியா மதி?” என்றார்.


அன்னை திடீரென்று கேட்கவும் “இப்போ தானேம்மா ரெண்டு நாள் முன்னாடி போயிட்டு வந்தேன். இன்னும் ரெண்டு நாள் போகட்டும்” என்றாள். அதைக் கேட்டதும் எதுவும் சொல்லாமல் தலையாட்டிவிட்டு அங்கிருந்து வெளியே வரும் நேரம் மதியின் போன் அடித்தது.


கதவோரம் நின்று அவள் பேசுவதை கவனித்தவரின் முகத்தில் அத்தனை சந்தோஷம். மதியின் தோழிகள் அவளை மாலுக்கு செல்ல அழைக்க தான் போன் செய்திருந்தார்கள். அவளுக்கு அக்காவை விட்டுச் செல்வதில் விருப்பமில்லை. போகாமல் விட்டு விடலாமா என்கிற சந்தேகத்துடன் வெளியே வர, கதவோரம் புன்னகை விரிய நின்று கொண்டிருந்த அன்னையைக் கண்டாள்.


“அம்மா! என் பிரெண்ட்ஸ் என்னை மாலுக்குப் போக கூப்பிடுறாங்க” என்று அவள் முடிக்கும் முன்னே “போயிட்டு வா..போயிட்டு வா” என்றார் அவசரமாக.

அன்னையின் உற்ச்சாகத்தை சந்தேகமாக பார்த்து “அக்காவையும் கூட்டிட்டு போகட்டுமா?” என்று அவள் கேட்டதும் உள்ளுக்குள் பதறி போனவர் “அதெல்லாம் வேண்டாம். அவ எதுக்கு?” என்றார்.


“ம்ம்..” என்று தலையாட்டி விட்டு அவள் கிளம்ப சென்றதும், அவசரமாக தனது போனை எடுத்துக் கொண்டு அடுப்படிக்கு ஓடினார். மெல்லிய குரலில் யாரிடமோ பேசி விட்டு அமைதியாக வந்து அமர்ந்து கொண்டார்.


அவள் கிளம்பிச் சென்று ஒரு அரை மணி நேரத்திற்குள்ளாகவே அவர்கள் வீட்டின் முன்பு கார் வந்து நிற்க, அதிலிருந்து லதாவின் அன்னையும், தங்கையும் இறங்கினார்கள். அவர்கள் உள்ளே சென்றமர்ந்ததும், வேறு யாருக்கோ போன் செய்து விட்டு மூவருமாக ஹாலிலில் இருந்த நாற்காலிகளை ஒதுக்கி வைத்து சில பல ஏற்பாடுகளை செய்தனர்.


சித்தியையும், பாட்டியையும் பார்த்த ஜெயந்தி “ஹை! சித்தி என்ன அதிசயம் இன்னைக்கு காலையிலேயே வந்திருக்கீங்க” என்றவள் பாட்டியிடம் “பாட்டி!” என்று கத்திக் கொண்டு அவரைக் கட்டிக் கொண்டாள்.


பட்டென்று அவளை விலக்கி நிறுத்தியவர் “லதா இவளை தலைக்கு குளிக்க வச்சு புது சேலையை கட்டி உட்கார வை” என்றார்.


அவர்களின் இறுக்கமான முகத்தையும், பேச்சையும் கவனித்தவள் “என்ன நடக்குது” என்றாள் யோசனையாக.


அவளுக்கு பதில் தராமலே இழுத்துச் சென்று ஆடையுடன் அவள் தலையில் தண்ணியை ஊற்றி குளிக்க வைத்தவர், புதிய சேலை ஒன்றை கொடுத்து அணிந்து கொள்ள சொல்லி விட்டு வெளியே வந்தார். அவளோ என்ன நடக்குது இங்கே? பாட்டியும், சித்தியும் சேர்ந்து எதுக்கு வந்திருக்காங்க? என்று யோசித்துக் கொண்டே தலையை துவட்டி, புதிய சேலையை அணிந்து கொண்டு ஹாலிற்கு வரவும், அங்கிருந்து நிலையைக் கண்டு அதிர்ந்து நின்றாள்.


நடு கூடத்தில் பெரிய கோலம் போடப்பட்டு செங்கற்கள் அடுக்கப்பட்டு ஹோமம் வளர்ப்பதற்கு தயாராக எல்லாம் வைக்கப்பட்டிருந்தது. தலையை சொரிந்து கொண்டே லதாவிடம் சென்றவள் “என்னம்மா இது?” என்றாள்.


லதாவின் தங்கை அவசரமாக “ஜெயந்தி! நாங்க சொல்கிற வரை அறையை விட்டு வெளியே வராதே!” என்று இழுத்துச் சென்று அவளை அறையில் அமர வைத்தார்.


“என்னடா இது!” என்று யோசனையுடன் அவள் அறைக்குள் அமர்ந்து கொண்டாள்.


சற்று நேரத்தில் ஹாலினுள் புதிய ஆட்களின் குரல் கேட்க, மெல்ல எழுந்து சென்று பார்க்க, அங்கே உயரம் உயரமாக மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். ஒருவன் ஹோம குண்டத்தின் எதிரே அமர்ந்து மெல்ல ஹோமத்தை வளர்க்க ஆரம்பித்தான். மற்றொருவன் தாங்கள் கொண்டு வந்திருந்த பொருட்களை எல்லாம் எடுத்து வைக்க ஆரம்பித்தான். அவர்களின் குரு போன்றிருந்தவன் நன்றாக நிமிர்ந்து அமர்ந்து ஏதோ மந்திரங்களை கூறி ஹோமத்தில் பொருட்களை போட்டு பூஜையை தொடங்கினான்.


அவர்களைப் பார்த்ததும் ஏனோ மனசுக்கு சரியாகப்படவில்லை ஜெயந்திக்கு. வீடெல்லாம் புகை மூட்டமாகவும், வழக்கமாக அவளுக்கு வரும் பதட்டம் அடியெடுத்து வைத்தது. நகத்தை கடித்தபடியே அமர்ந்திருந்தவளின் மனம் மயங்கக் கூடாது என்று உரு போட்டது.பாட்டியும், சித்தியும் தனக்கு பேய் பிடித்திருப்பதாக எண்ணி ஏதோ செய்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டவள் அவசரமாக எழுந்து சென்று கல்லூரிக்கு எடுத்துச் செல்லும் பையிலிருந்து பொருள் ஒன்றை எடுத்து புடவை மடிப்பில் வைத்துக் கொண்டு அமர்ந்து கொண்டாள்.


சற்று நேரத்தில் சித்தி வந்து அவளை ஹாலிற்கு அழைத்துச் செல்ல, புகை மூட்டத்தின் நடுவே, உடல் வெடுவெடுக்க அவருடன் சென்றாள்.குரு போன்றிருந்தவன் உறுமலுடன் “ம்ம்..உட்கார வைங்க” என்றான்.
 

sudharavi

Administrator
Staff member
#23
அவன் எதிரே அமர்ந்து அவனைப் பார்த்ததுமே கண்கள் இருளை காண்பிக்க, தனது கைகளை இறுக்கமாக தொடையில் அழுத்திக் கொண்டு உதடுகளை அழுத்தமாக கடித்துக் கொண்டும் அவனைப் பார்த்தாள்.


நேரமாக ஆக அவனது மந்திர உச்சாடனம் அவள் உடம்பில் ஒரு முறுக்கை கொடுக்க, மயக்கத்தை மீறி லேசான உறுமலுடன் நெளிய ஆரம்பித்தாள்.


மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே தன் பக்கத்திலிருந்த கமண்டலத்தில் இருந்து சிறிது தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் ஓங்கி அடித்தான். எந்த நேரமும் மயங்கி விழலாம் என்று போராடிக் கொண்டிருந்தவளுக்கு அது மயக்கத்தை போக்கியது. அது தான் அவன் செய்த தவறு. தண்ணீர் முகத்தில் பட்டதுமே தெளிந்து போனவள், அந்த பூசாரியின் நோக்கம் சரியானதல்ல என்பதை உணர்ந்து கொண்டாள்.


அவளுக்கு பதட்டத்தில் மயக்கம் வருமே தவிர, மற்றபடி தைரியமான பெண் தான். அந்த பூசாரி கூட்டத்தை என்ன செய்வது என்று முடிவு செய்து கொண்டாள்.

அவன் மந்திரத்தை நிறுத்திவிட்டு அவள் முகத்தில் விபூதியை அடித்து “மரியாதையா இந்த பொண்ணு உடம்பிலிருந்து ஓடிப் போயிடு” என்றான்.


உடலை நன்றாக வளைத்து நெளித்து “மாட்டேன்! நீ மரியாதையா ஓடிப் போயிடு” என்றாள் கண்களை உருட்டி.


அவனோ பாட்டியின் பக்கம் திரும்பி “குட்டிச் சாத்தான் குடி ஏறி இருக்கு. விரட்டுறது சிரமம். நீங்க மேற்கொண்டு ஐயாயிரம் கொடுத்தா தான் செய்யலாம்” என்றான்.


அவரோ இரு கைகளையும் கூப்பி “எங்க பெண்ணை மீட்டு கொடுப்பா நிச்சயம் தரேன்” என்றார்.


அவர் சொன்னதும் தன் ஆட்களிடம் கண்ணை காண்பித்து விட்டு “மகரா! எடுடா அந்த மசாலா மல்லிகா பத்தியை! அதை ஏத்தி வை...குட்டிச் சாத்தான் எட்டு குட்டிக் கரணம் அடிச்சு ஓடிப் போயிடும்” என்றான்.


அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே மெல்ல, தன் மடியில் மறைத்து வைத்திருந்ததை எடுத்து கையில் வைத்துக் கொண்டவள் ‘குட்டிச் சாத்தனாடா? அது குட்டி கரணம் அடிக்குதா? நீ அடிக்கிறியான்னு பார்ப்போம்’ என்று சொல்லிக் கொண்டாள்.


அவன் மீண்டும் உக்கிரமாக மந்திரத்தை சொல்ல, அவனின் உக்கிரம் ஏற ஏற ஜெயந்தியும் தன் ஆட்டத்தை அதிகப்படுத்தினாள். அவளுக்கு மீண்டும் மயக்கம் வரும் போல இருந்தது. அவளுக்கு மயக்கம் வரும் நேரம் அப்படியே விட்டிருந்தால் மயங்கி விழுந்திருப்பாள். காசை வாங்கிக் கொண்டு சென்றிருக்கலாம். அவனது கெட்ட நேரம் மீண்டும் கமண்டலத்தில் இருந்து தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் அடித்தான். அவளது மயக்கம் நன்றாக தெளிந்து போனது.


தண்ணீர் அடிப்பதை நிறுத்தி விட்டு விபூதியை எடுத்து அவள் முகத்தில் அடித்து “ஓடி போறியா?” என்றான் மிரட்டலாக.


கண்களை நன்றாக விரித்து உருட்டியவள் மடியிலிருந்த பொட்டலத்தில் இருந்ததை எடுத்து அவன் முகத்தில் அடித்து “ஓடி போயிடுரியா?” என்றாள்.


தன் முகத்தில் விழுந்த மிளகாய் பொடியில் கண்கள் எரிய, “ஆ...ஆஅ....” என்று அலறிக் கொண்டே உருண்டான்.


வேகமாக எழுந்தவள் முந்தானையை எடுத்து முகத்தில் கட்டிக் கொண்டு கையில் மீதமிருந்த மிளகாய் பொடியை ஹோம குண்டத்தில் போட்டிருந்தாள். அவ்வளவு தான் ஏற்கனவே புகை மூட்டத்தில் இருந்த வீடெங்கும் மிளகாய் பொடியின் நெடி ஏற, பூசாரியுடன் வந்தவர்களும், ஜெயந்தியின் பாட்டி, சித்தி, அம்மா எல்லோரும் பலமாக இரும ஆரம்பித்தார்கள். அந்த சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக் கொண்ட ஜெயந்தி அவசரமாக சமயலறைக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த கழியை எடுத்து வந்தவள் மூவரையும் நைய்யப் புடைக்க ஆரம்பித்தாள்.


ஏற்கனவே மிளகாயின் நெடி தாங்காமல் இருந்தவர்கள் அவளின் அடியில் “ஐயோ! அம்மா!” என்று கத்திக் கொண்டு வாசலை நோக்கி ஓடினார்கள். கையிலிருந்த கழியுடன் அவர்களை துரத்திக் கொண்டு வாசலுக்கு ஓடினாள்.


அந்நேரம் வெளியூரிலிருந்து வந்திருந்த தன் நெடுங்கால நண்பரையும், அவரது மகனையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்த சந்தானம், வீட்டிலிருந்து ஓடி வரும் பூசாரிகளையும், அவர்களின் பின்னே துரத்திக் கொண்டு வரும் மகளையும் பார்த்து அதிர்ந்து நின்றார்.


சந்தானத்தின் நண்பரும் அவர் மகனும் காளி போல வந்து நின்றவளை பார்த்து மிரண்டனர். சந்தானமோ என்ன நடக்கிறதென்று புரியாமல் திகைத்துப் போய் நின்றார்.


அவர்கள் ஓடியதும் சற்று நிதானத்துக்கு வந்தவள் தந்தை நிற்பதை பார்த்ததும் வேகமாக அவர் அருகில் செல்ல, நண்பரின் மகன் அவசரமாக பயத்துடன் பின்னே நகர்ந்தான். அவளோ எதை பற்றியும் கவலைப்படாமல் கையிலிருந்த கழியுடன் தந்தையின் அருகில் சென்று “அப்பா! எனக்கு பேயோட்ட பார்த்தானுங்க..அவனுங்களை அடிச்சு விரட்டிடுடேன்” என்றாள் கண்கள் விரிய.


சந்தானத்தின் நண்பரோ “என்னது பேயா?” என்றார் பயத்துடன்.


மீண்டும் கண்களை உருட்டி பெரிதாக்கி “ஆமாம் அங்கிள்! எனக்கு குட்டிச் சாத்தான் பிடிச்சிருக்காம்” என்றதும் அவசரமாக தந்தை மகன் இருவரும் ஓரடி பின்னே நகர்ந்தார்கள்.


அதற்குள் சந்தானம் சுதாரித்துக் கொண்டு அவளது கையைப் பற்றி “ஜெயந்தி! அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்” என்றார்.


அவரது கையை உதறியவள் “இருங்கப்பா!” என்றவள் அவரின் நண்பரின் அருகே சென்று “என்னைப் பார்த்தா குட்டிச்சாத்தான் மாதிரியா இருக்கு” என்றாள் கண்களை உருட்டி.


அவரது மகனோ “அப்பா! வாங்கப்பா போயிடலாம்” என்றான் பயத்துடன்.
 

sudharavi

Administrator
Staff member
#24
அவளோ நடந்தவற்றை சொல்லும் ஆர்வத்தில் இருக்க, அவன் போகலாம் என்றதும் கடுப்பாகி “டேய்! நான் பேசிட்டு இருக்கும் போது என்ன குறுக்க பேசுற” என்று கட்டையை எடுத்து உருட்டி மிரட்டினாள்.


அதில் பயந்து போன தந்தை, மகன் இருவரும் “சந்தானம் நாங்க இன்னொரு தடவை வரோம்” என்று வேக நடையுடன், கிட்டத்தட்ட ஓட்டமாக ஓடி விட்டனர்.

ஓடுபவர்களை பார்த்த வண்ணம் சோர்வாக வாசலிலேயே அமர்ந்து விட்டார். மகளைப் பார்த்து “உன்னை பெத்ததுக்கு என்னை எந்த நேரமும் ரோட்டிலேயே உட்கார வச்சிருக்க” என்றார் வருத்தமாக.


அவரின் அருகே அமர்ந்தவள் வருத்தமான முகத்தோடு “ஏன் பா? நானென்ன செஞ்சேன்?” என்றாள்.


அவளை நிமிர்ந்து பார்த்தவர் “அவன் தன் பையனுக்கு உன்னை கேட்கலாம்னு தான் வந்தான். இப்போ துண்டை காணும் துணியை காணும்னு ஓடுறான்” என்றார்.


அவளோ கன்னத்தில் கை வைத்து யோசித்தவள் “ஏன் பா என்னை பார்க்க வர மாப்பிள்ளை எல்லாம் ஓடுறானுங்க?” என்றாள் சீரியசாக.


மகளின் அந்தக் கேள்வியில் சற்றே உடைந்து போனவர் “போனா போகட்டும்மா...உனக்குன்னு ஒரு வைரம் காத்திருக்கும்” என்றார்.


“அவனும் என்னைக் கண்டு ஓடிட்டா?” என்றாள்.


( அவன் ரத்தத்திலேயே இருக்குடியம்மா...எங்கே போனாலும் ரெண்டு மாசத்துக்கொரு முறை ஓடியாந்துடுவான்)


“அதெல்லாம் ஓட மாட்டான்” என்று மகளின் தலையை தடவிக் கொடுத்தார்.


“ம்ம்...சரி அப்பா உள்ளே வாங்க. அம்மா, சித்தி பாட்டி எல்லாம் எனக்கு பதிலா மயங்கி கிடக்குறாங்க” என்றாள்.


உள்ளே நுழைந்தவர் அவசரமாக மூக்கை மூடிக் கொண்டு “இதென்னம்மா இந்த புகையை மீறி ஒரு நாத்தம் வருது” என்றார் உமட்டிக் கொண்டு.


“அதுவாப்பா! குட்டிச்சாத்தான் ஓடிப் போகணும்னு ஏதோ மசாலா மல்லிகா பத்தின்னு ஒன்னு ஏத்தி வச்சாங்க. அது தான் எல்லா குட்டிச்சாத்தானும் ஓடி போயிடுச்சு” என்றாள் கண்களை சிமிட்டி.


அவர் மீண்டும் உமட்டிக் கொண்டே “முதல்ல அதை தலையை சுத்தி எரிஞ்சிட்டு வா..நாமலே போயிடுவோம் போல இருக்கு” என்றார்.


மூக்கை மூடிக் கொண்டு அதை எடுத்துச் சென்றவள் அடுத்த வீட்டு வாசலில் போட்டுவிட்டு வந்துவிட, சற்று நேரத்தில் அவர்கள் வீட்டு நாய் ஊளையிட்டு அழ ஆரம்பித்தது. அதை என்னவென்று பார்க்க வந்த நாகராஜன், வாசலில் எழுந்த நாற்றத்தைக் கண்டு நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சாய்ந்து விட்டார்.


அவர் மனைவி போட்ட கூச்சலில் சந்தானம் அடித்துப் பிடித்துக் கொண்டு போய் பார்க்க, அங்கு வாசலில் கிடந்த ஊதுபத்தியை பார்த்ததுமே புரிந்து கொண்டவர் யாருக்கும் தெரியாமல் அதை அப்புறபடுத்திவிட்டு நண்பனை கவனிக்கச் சென்றார்.


அவரது மனமோ, ‘இந்த பொண்ணை வச்சு கிட்டு தினம் தினம் பெரிய தலைவலியா இருக்கு. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஒருத்தன் தலையில் கட்டிடணும்’ என்றெண்ணிக் கொண்டார்.


அதே நேரம் பத்மாவின் வீட்டில் அவரின் ஒன்று விட்ட அண்ணன் சகாதேவன் வந்திறங்கி இருந்தார். பத்மாவின் அழைப்பின் பேரில் தான் அவர் வந்திருந்தார். ராகவிற்கு பெண் பார்க்க உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டதில் சகாதேவன் அங்கு இடம் பெயர்ந்தார்.


கிருஷ்ணாவிற்கும், ராகவிற்கும் அவர் வருவது தெரியாது. மாலை நேரம் ஆபிசிலிருந்து முதலில் வந்தவன் ஹாலில் அமர்ந்திருந்தவரைக் கண்டதும் ஜெர்கானான். தன்னை சமாளித்துக் கொண்டு “எப்போ மாமா வந்தீங்க?” என்றான் அன்னையை கேள்வியாக பார்த்துக் கொண்டே.


முப்பத்திரண்டு பற்களையும் காண்பித்து “கொஞ்ச நேரம் முன்ன தான் கிருஷ்ணா மாப்பிள்ளை” என்றார்.


அவரின் முன்னே வைக்கப்பட்டிருந்த தட்டுகளை பார்த்தவன் அன்னையை முறைத்தான். அதை கண்டு கொள்ளாமல் “டிபன் சாப்பிடுறியா கிருஷ்ணா?” என்றார்.


பல்லைக் கடித்துக் கொண்டு அன்னையின் அருகே சென்றவன் “இவரை ஏன் மா வரவழைச்சீங்க?” என்றான்.


“ராகவனுக்கு பொண்ணு பார்க்க தாண்டா. அண்ணனுக்கு நிறைய இடம் பழக்கம். அதனால தான் வர சொன்னேன்” என்றவரை முறைத்தவன்.


“யார் இவருக்கு எல்லா இடமும் தெரியுமா? சரக்கடிக்கிற இடமெல்லாம் வேணா நல்லா தெரியும்” என்றான் கடுப்பாக.


“டேய்! எங்கண்ணனை தப்பா பேசாதே” என்று நொடித்துக் கொண்டார்.


அவர்கள் இருவரையும் கவனிக்காது எதிரே இருந்த பலகாரங்களை நொறுக்கி கொண்டிருந்தவரை பார்த்த கிருஷ்ணா “ஏன் மாமா உங்களுக்கு பொண்ணு வீட்டுகாரங்களை எல்லாம் நல்லா தெரியுமா?’ என்றான்.


வாயில் வைத்திருந்த போண்டாவுடன் “ஆமாம் மாப்பிள்ளை...ஜலஜா, கனகா, ஐஸ்வர்யாவோட மாமனை எல்லாம் நல்லாவே தெரியும்” என்றவரை கொலைவெறியுடன் பார்த்து விட்டு அன்னையிடம் திரும்பியவன் “மா! இவர் சொல்ற பெண்ணெல்லாமா பார்க்க போறீங்க?” என்றான் கிண்டலாக.
 

sudharavi

Administrator
Staff member
#25
அத்தியாயம் – 6


ராகவ் வந்த பின் சகாதேவனை கண்டதும் அவனுக்கும் பயங்கர கடுப்பாக இருந்தது. அன்னையிடம் கேட்டு அவர் கொடுத்த பதிலைக் கேட்டு நொந்து போனான். சகாதேவன் எப்படிபட்டவர் என்பதை அறிந்தவனுக்கு அவர் எப்படிப்பட்ட பெண்ணை பார்ப்பார் என்று பயந்து போனான்.


அன்றிரவு உணவை முடித்துக் கொண்டு அவரவர் அறைக்குச் செல்ல, ராகவின் பின்னோடு சென்ற சகாதேவன் “மாப்பிள்ளை! நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. உங்களுக்கு பிடிச்ச மாதிரி பெண்ணை பார்த்திடலாம்” என்றார்.


அவரின் பேச்சும், சிரிப்பும் எரிச்சலைத் தர “ம்ம்..சரி” என்று விட்டு அறைக்குள் நுழைய இருந்தவனை தடுத்தது அவர் குரல்.


தலையை சொரிந்து கொண்டே “வெளிநாட்டு சரக்கு எதுவும் வச்சிருக்கியா மாப்பிள்ளை?” என்றார் பல்லிளித்து.


சற்றே நகர்ந்து அவர் முகத்துக்கு நேரே குனிந்தவன் “சரக்கெல்லாம் கேட்டா அம்மா வீட்டை விட்டு அனுப்பிடுவாங்க பரவாயில்லையா மாமா?” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.


அந்நேரம் இவர்களின் கிசுகிசுப்பில் அறைக்குள்ளிருந்து வெளியே வந்த கிருஷ்ணா மாமாவைப் பார்த்து கண்ணடித்து “என்ன மாமா சரக்கை அவன் கிட்ட கேட்குறீங்க? இங்கே வாங்க” என்றான் கண்ணடித்து.


ராகவனை கிண்டலாகப் பார்த்துவிட்டு “உன்னைப் பத்தி தெரியல மாப்பிள்ளை. இதோ வந்துட்டேன்” என்று அவன் பின்னே போனார்.


தனக்குள் சிரித்துக் கொண்ட ராகவ் எதுவும் பேசாமல் கதவை அடைத்துக் கொண்டான். தனது அறைக்குள் சகாதேவனை விட்டு கதவை சாத்தியவன் ஓரமாக போடப்பட்டிருந்த நாற்காலியில் அமருமாறு கூறிவிட்டு தனது கப்போர்டை திறந்தான். அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாட்டில்களை கண்டதும் வாயைப் பிளந்தார் சகாதேவன்.


“வா மாமா வந்து எதை வேணா எடுத்துக்கோ” என்றான் தாராளப் பிரபுவாக.


ஆர்வம் பொங்க புது மணப் பெண் போல் அடியெடுத்து வைத்து நடந்து சென்று ஒரு பாட்டிலை கட்டித் தழுவி எடுத்துக் கொண்டார். ஒரு க்ளாசை எடுத்துக் கொடுத்து “ம்ம்..என்ஜாய் மாமா” என்றான் சிரிப்புடன்.


அவனை நெகிழ்ச்சியாக பார்த்து “நீ தான்யா என் மாப்பிள்ளை” என்றார் கண்கள் கலங்க.


அவர் முன்னே சென்றமர்ந்து கொண்டு அவருக்காக பாட்டிலை திறந்து கோப்பையில் திரவத்தை ஊற்றி அவர் கையில் கொடுக்க, “உனக்கு மாப்பிள்ளை” என்றார் நன்றியுடன்.


“இன்னைக்கு வேணாம். நீங்க குடிங்க” என்றான்.


மெல்ல அந்த திரவத்தை ரசித்து ருசித்து குடிக்க ஆரம்பிக்க, சுமார் அரை பாட்டில் காலியாகும் வரை பொறுமையாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன் “டேஸ்ட் எப்படி இருக்கு மாமா?” என்று ஆரம்பித்தான்.


“நான் எவ்வளவோ வெளிநாட்டு சரக்கு குடிச்சிருக்கேன் மாப்பிள்ளை. இது தனி ருசியா இருக்கு. கிக்கும் செமையா ஏறுது” என்றார் நாக்கை சப்பு கொட்டி.


நெஞ்சில் கை வைத்துக் கொண்டவன் “ஹப்பா! இது என் பிரெண்டோட கம்பனி மாமா. அவன் புதுவிதமா இந்த சரக்கை தயரிச்சான். ஆனா அதை வெளில மார்கெட்டில் விடும் முன்பு எனக்கு அனுப்பி வச்சு யாருக்காவது கொடுத்து டெஸ்ட் பண்ணுனான். பரவாயில்லை நீங்க நல்லா இருக்குன்னு சொல்லிட்டீங்க” என்றான் உற்சாகமாக.


“பிரமாதம் மாப்பிள்ளை. இப்படியொரு சரக்கை என் வாழ்நாளில் குடிச்சதில்லை” என்றார் கண்கள் மயங்க.


“இருக்காதா பின்னே! இந்த சரக்கை அவன் அப்படியில்ல தயாரிச்சிருக்கான்” என்றான் மெல்லிய சிரிப்புடன்.


“அப்படி என்ன போட்டு இதை தயாரிச்சார்? இத்தனை சுவையா இருக்கு?”


“ம்ம்...மிருகங்களில் எல்லாவற்றின் கழிவும், மனுஷ கழிவை கூட சேர்த்திருக்கான்னு நினைக்கிறேன்” என்று அவன் சொல்லி முடிக்கவும் “என்னது!” என்றார் சரியாக காதில் வாங்காதவராக.


“அது தான் மாமா..எல்லா அனிமல்சோட டாய்லெட், மனுஷநோடதையும் சேர்த்திருப்பான்னு நினைக்கிறன். நீங்க இப்படி சிலாகிக்கிறத்தை பார்த்தா” என்று அவன் சொல்லி முடிக்கவும் அவர் ஓங்கரிப்புடன் பாத்ரூமை நோக்கி ஓடினார்.


அவனோ விடாது “மாமா! இன்னும் அரை பாட்டில் இருக்கு” என்று கத்தினான்.


அது அவர் காதில் விழுந்தால் தானே...வயிற்றில் இருந்ததை எல்லாம் வெளியில் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருந்தார். அவன் சொன்னதை நினைத்து நினைத்து ஓங்கரிப்பு அதிகமாகியது. மனமோ இந்தப் பயலை நம்பி கண்டதையும் குடிச்சு தொலைச்சிட்டோமே என்று தன்னையே திட்டிக் கொண்டிருந்தார்.


சுமார் அரைமணி நேரம் போராடி உடலெல்லாம் தளர்ந்து போக வெளியில் வந்தவரைப் பார்த்து “என்ன மாமா! பாதி பாட்டிலை வச்சிட்டீங்க?” என்றான் சிரிப்பை அடக்கியபடி.


இருகைகளையும் எடுத்து கும்பிட்டவர் “நான் வெளிலையே படுத்துகிறேன். நீ இருக்கிற திசைக்கே ஒரு கும்பிடு” என்று அவசரமாக அவன் அறையை விட்டு வெளியேறினார்.


அவர் சென்றதும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு உருண்டு பிறண்டு சிரித்தவன் “யோவ் மாமா உனக்கு வெளிநாட்டு சரக்கா வேணும்?” என்று கிண்டலடித்து விட்டு அங்கிருந்த பாட்டிலை எடுத்து டாய்லெட்டில் ஊற்றி விட்டு வந்தவன் “அடுத்த வாரம் வர பார்ட்டிக்கு ரெடி பண்ணி வச்சிருந்த ஐட்டத்தில் ஒன்றை காலி பண்ணிட்டியே மாமா” என்று சிரித்தான்.
 
Status
Not open for further replies.