என்னை சாய்த்தானே(ளே)- கதை திரி

#16
எனை சாய்த்தானே(ளே) - 15​"முயலு கோவமா டி", என்றான் அகரம். "இல்லை அப்படியே குளு குளுனு இருக்கு மனசு", என்று கண்கள் கலங்கியது பிரியாவிற்கு.
ஏய் எதுக்கு டி இப்போ அழுகிற, சத்தியமா டென்ஷன்ல இருந்தேன் டி அதனால தான் போன் எடுக்கல என்று தவிப்பாய் கூறினான் அகரன்.

பயத்தில் ஒன்னும் உனக்கு போன் பண்ணல, நிச்சயம் பண்ண நேரத்தில் இப்படி நடந்துருச்சு அம்மா பயந்துச்சு சரி நீ பேசுனா நார்மல் ஆகும்னு தான் பண்ணேன். அதுக்குள்ள அத்தை மாமா போன் பண்ண அவங்களே அம்மாவை சமாதானம் செஞ்சுட்டாங்க என்று நிறுத்தியவள் மீண்டும் பேசினாள்.

அப்பா தனியாக படுற கஷ்டத்தை பார்த்து ராஜேஷ் அண்ணா கூட இருந்தாங்க. உனக்கு நான் அனாவசியமா போன் பண்ண மாட்டேன் அகரா தேவையான நேரத்துல தான் கூப்பிடுவேன். இந்த தப்பை இனி செய்யாதே என்று பாதி மறைத்து மீதி கூறினாள்.

உண்மையில் அவளுக்கு தான் அவனை பார்க்க வேண்டும் என்று இருந்தது அதை அழகாய் தவிர்த்து அவள் கூறியது அவனுக்கும் புரியாமல் இல்லை. இந்த பிடிவாதக்காரியிடம் வாதம் செய்ய வேண்டாம் என்று தான் அவள் கூறியதை சரி சரி என்று மண்டையை ஆட்டிவிட்டு வண்டியை அவள் வீட்டிற்கு விட்டான்.

போகும் தூரம் எல்லாம் இருவரும் எதுவும் பேசவில்லை அந்த நிமிடத்தை மனதில் சேமித்தனர். இருபது நிமிட பயணம் நொடியில் கரைய அவர்கள் பயணமும் முடிந்தது. சரியாக வீட்டிற்கு அவர்கள் வரும் நேரம் ராஜேஷும் அங்கு வந்தான்.

அதே சமயம் சௌந்தரநாயகியும் ராஜலிங்கமும் பதற்றமாக வெளியே வந்தனர். நாயகி அழுது வடிந்தும் லிங்கம் கலங்கியும் காணப்பட்டார்.
கொஞ்ச நேரத்தில் எங்க உயிரே போய்டுச்சு, நீ இல்லாத வாழ்க்கையே நினைச்சுக்கூட பார்க்க முடியல என்று அவளை பேச நாயகி பேச அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான் அகரன்.

பிரியாவிற்கு தான் தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை, நாயகி நிதானத்தில் இல்லை என உணர்ந்தவள் அவர் பேசி முடிக்கும் வரை அமைதி காத்தாள் .
ராஜேஷ் அகரனை தனியாக அழைக்க அவன் பின் சென்றான் அகரன்.

அகரன், "ஏய் எதுக்கு டா தனியா கூப்பிடுற? " என்றான் .
மச்சி பிரியாவை சுத்தி பிஸ்ஸியா ஏதோ நடக்குது. எனக்கு ஒரு பிரைவேட் நம்பரில் இருந்து கால் வந்துச்சு. அதுவும் பிரியாவை கொலை பண்ணிடுவேன்னு ஒரு கொலை மிரட்டல். அதோட ட்ரைலரா அவள் அம்மா அப்பாவை கொல்ல போறேன் முடிஞ்சா காப்பாத்துன்னு இளக்காரமா பேசினான் அந்த நாய்.
இவர்கள் பேசியதை கேட்டு ஏளன சிரிப்புடன் கடந்து சென்றான் அவர்கள் தேடும் வில்லாதி வில்லன்.

அகரன்," டேய் என்ன சொல்லுற எவன்னு உன்னால லொக்கேஷனை டிரேஸ் பண்ண முடியலையா?".
ராஜேஷ், " இல்ல டா அவன் ஹாக்கிங் தெரிந்தவன் போல முப்பது செகண்ட்க்கு ஒரு தடவை இருக்க இடத்தை மாத்திட்டே இருக்கான் என்னால் டிரேஸ் பண்ண முடியலை ".

சரிடா நான் வரேன் ஆபிஸ்க்கு இப்போ மாரியப்பன் அங்கிள் கூட இரு. ஆமா அவர்கிட்ட என்ன சொல்லிட்டு வந்த என்றான் கேள்வியாய் .
போன் எடுத்ததே அவர் தான் அவரை சமாதானம் படுத்தி விட்டுட்டு வர தான் லேட் நான் அவர்கிட்ட போறேன் நீ இதை பிராங்க்கா நினைக்காமல் சீரியஸ்ஸா என்னவென்று பாரு என்று இலவச எச்சரிக்கையை விடுத்து சென்றான் ராஜேஷ்.

ராஜேஷ் சென்றதும் பிரியாவிடம் வர, நாயகி இன்னும் தன் புலம்பலை நிறுத்தாது அழுதுக் கொண்டிருந்தார்.
அத்தைம்மாக்கு என்னை பயம் அதுவும் என் பொண்டாட்டி என் கூட இருக்கும் போது என்று அகரன் கேட்கவும் சேலை தலைப்பில் முகத்தை அழுத்து துடைத்து சிரிக்க முயன்றார் நாயகி.

மாமா என்னாச்சி என்ற அகரனின் பேச்சில் சிந்தனையில் இருந்து வெளியே வந்தவர். சற்று முன் வந்த அழைப்பை பற்றி அவனிடம் கூறினார்.
மாப்பிள்ளை நீங்க போனு வைத்த அடுத்த ஐஞ்சாவது நிமிஷத்துல நாயகிக்கு போனு வந்துச்சு. நம்ப தோட்டத்துக்கிட்ட உங்க வண்டி கவுந்து ஆக்ஸிடண்ட் ஆகி பிரியா சீரியஸா இருக்கானு சொன்னதும் எங்களுக்கு ஒண்ணும் புரியல.

உங்களை பர்த்ததும் தான் போன உசுரு திரும்புச்சு என்று கலங்கிய கண்ணை சரி செய்தார் லிங்கம். தான் பார்த்த அந்த அஞ்சாநெஞ்சரை, அவர் தோரணையும் நினைவிற்கு வந்தது.
பிரியாவை பற்றி ராஜேஷ் மூலம் தெரிந்து கொண்ட அகரன் நேராக வந்து இறங்கியது ராஜலிங்கத்தின் தோட்டத்துக்கு தான். காக்கி உடை கண்டு தானும் உனக்கு சளைத்தவன் இல்லை என்ற தோணியில் அகரனை வரவேற்றார்.

சொல்லுங்க சார் என்ன வேணும் என்ற கேள்வியில் அதிகாரமும் அழுத்தமும் மாத்தி மாத்தி விளையாட, புன்முறுவல் ஒன்றை உதிர்த்து உங்க பொண்ணு தான் வேணும் மாமா என்று பட்டென்று வந்த நோக்கத்தை உடைத்தான் அகரன்.

சாரில் இருந்து தம்பிக்கு மாறிய லிங்கம், யாருப்பா நீ என்று பொறுமையை கையாள கண்களால் அவர் செய்கையை மனதில் பதிவு செய்தான்.
அவர் கேள்வியில் நிலை பெற்றவன் அவனை பற்றியும் அவன் குடும்பத்தை பற்றியும் கூறி அவன் அப்பாவை லிங்கத்திடம் பேச வைத்தான்.

அவனது வேகம் லிங்கத்தை யோசிக்க வைக்க, சற்று நிதானத்தை பூசிக் கொண்டான் அகரன். நீங்க யோசிக்கிறது சரி தான் வீட்டுக்கு போய் பேசலாமா என்றான். ஏனோ அவன் பேச்சில் கட்டுண்ட லிங்கம் வீட்டிற்கு அழைத்து சென்றார்.

லிங்கத்தோடு வந்தவனை கேள்வியாக பார்த்த நாயகி, இன்முகத்தோடு வரவேற்றார். இம்முறை தெளிவாகவும் அதே சமயம் அழுத்தம் திருத்தமாகவும் அகரன் கூற சரி பார்க்கலாம் என்று லிங்கமும் தன் பெண்ணிற்கு நல்லது நடந்தால் போதும் என்று நாயகியும் பார்த்தார்.

லிங்கத்துடன் தனியாக பேசவேண்டும் என்று அவரை அழைக்க அப்படி என்ன சொல்ல போகிறாய் என்ற வீராப்போடு அவரும் போனார். அவன் என்ன பேசினானோ வெளியே வரும் போது, மாப்பிள்ளை அப்பா அம்மா கூட வாங்க என்றார். நாயகிக்கே ஆச்சரியம் தன் பெண்ணுக்கு தான் தான் மாப்பிள்ளை பார்ப்பேன் என்றும், ஒரு மாப்பிள்ளை பார்க்க குறைந்தது பத்து நாள் எடுத்து அவனை பற்றி அலசி ஆராயும் தன்னவரா இது என்று பார்த்தார் சௌந்தரநாயகி.

பழைய நினைவில் இருந்து மீண்டவன் கர்வமாக அவர் கையை அழுத்தி பிரியாவுக்கு எதாவது நடக்கணும்னா அது நான் செத்ததுக்கு அப்பறம் தான் என்று நிறுத்தி அவளை பார்த்தான் அகரன்.

அவள் முகத்தில் என்ன புரிந்ததோ அங்கிருந்து சிரித்தவாறு விடைப்பெற்று சென்றான். அவனை வழியனுப்பி விட்டு உள்ளே வந்த பிரியாவிற்கு உள்ளம் குறுகுறுக்க செய்தது.

அடியே, ஒருவேளை நீ இந்த தடிமாட்ட லவ் பண்ண ஆரம்பிச்சிட்டியோ என்று அவள் அழைக்காமல் ஆஜரானது அவளது மனசாட்சி.
எங்கடா இன்னும் காணா? என்று நினைச்சேன் கரெக்டா வந்துட்ட என்று அதற்கு பதில் வழங்கியவள், கையில் இருந்த அந்த கைச்சங்கிலியை உருட்டுப்போட ஆரம்பித்தாள்.

இது அந்த கொலைகாரனோடது, இது வைச்சு தான் அவனை நெருங்க முடியும் அகரன்கிட்ட சொன்ன கண்டுபிடிப்பான் தான். இருந்தாலும் ஒரு கிக்கு இருக்காது நம்மளே கண்டுபிடிக்கலாம் முடியலைன்னா அவன்கிட்ட சொல்லலாம் இப்போ நம்ப மனசு ஏன் அவனை தேடுதுனு கண்டுபிடிப்போம் அப்பறம் இவனை கண்டுபிடிப்போம்என்று மீண்டும் அகரனிடம் மனதை அலைபாய விட்டாள் பிரியா.

ஷிட் ப்ரஸ்லேட் எங்கயோ மிஸ் பண்ணிட்டேன் என்று தன்னை தானே திட்டி கொண்டு அடுத்து செய்யவேண்டியதை திட்டமிட்டான் துகிலன். எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று தான் ஆராய்ச்சி கூடத்திற்கு விரைந்தான்.

அவனுக்கு முன் அங்கு தனது வேலையை செய்து கொண்டிருந்த சுந்தரிடம் இன்றைய வேலைகளை கூறி தன் அறைக்கு சென்றவனுக்கு தன் உடலோடு ஒட்டி பிறந்தவனிடம் இருந்து அழைப்பு வர என்னவாக இருக்கும் என்ற யோசனையோடு ஏற்றான்.

"சொல்லு முகிலா என்ன விசயம்? " என்றான் துகிலன்.
எதிர்புறம் என்ன சொல்லப்பட்டதோ கோவமாக சரி நீ வீட்டுக்கு போ நைட் வந்து பேசறேன் என்று கூறி போனை வைத்து கண்ணை மூடி தன்னை சமன் படுத்தி அன்றைய வேலையில் மூழ்கினான் துகிலன்.


தொடரும்........