எஎன்னைத் துரத்தும் உன் நினைவுகள் - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

யுவனிகா அவர்கள் தனது புதுக்கதையுடன் நம்மை சந்திக்க வருகிறார். இக்கதையும் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.................
 
#2
நினைவுகள்--- டீசஸர


வேனில் உட்கார்ந்தவள்
“நந்து குட்டி! இங்க வாடா..” என்று அழைக்க

எப்போதும் அந்தக் குட்டியில் உருகுகிறவனோ இப்போதும் உருக வண்டியில் ஏறி அவள் பக்கத்தில் அமர்ந்து

“என்ன அக்கா?” என்று கேட்க
தன்னை விட இரண்டு வயதே சிறியவனான தன் தம்பி தன்னை அக்கா அம்மா என்று அழைத்துப் பாசத்தில் உருகுவதைப் பார்த்தவள் வாஞ்சையுடன் அவன் முகம் வருடி தலையைக் கோதி விட
அவள் செயலைப் பக்கத்திலிருந்து பார்த்த சந்தியாவோ

“என்ன ஈஸ்வரி.. கல்யாணத்துக்குக் கிளம்பி நிற்கிற மாப்பிளையோட தலைய இப்படிக் கலைத்து விடுற?” என்று தன் நாத்தனாரைப் பொய்யாகக் கடிந்தவள் தன் ஹேண்ட் பேகிலிருந்து சீப்பை எடுத்துக் குழந்தை என தன் கொழுந்தனின் தாடையைப் பிடித்து அவள் தலை சீவி விட
“நான் அப்படி தான் செய்வேன்!” என்று ஈஸ்வரி மறுபடியும் மறுபடியும் தலை கலைக்க

“நீ கலைக்க கலைக்க நான் தலை சீவி விடுவேன்” என்று சந்தியா சீவி விட

“போதும் போதும்.. உங்க பிள்ளைய நீங்க ரெண்டு பேரும் கொஞ்சினது. இன்னைக்கு அவனுக்குக் கல்யாணம் ஆகப் போகுது. அதற்குப் பிறகு இந்த தலை கலைத்து சீவி விடற வேலை எல்லாம் அந்த யாழினி பொண்ணு பார்த்துப்பா. அதனால நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் வழி விட்டு விலகி இருங்க” என்று வரப் போகிற பொண்ணுக்காக கிருஷ்ணா பேச நந்தனின் முகமோ இறுகி உள்ளுக்குள் கோபம் கொப்பளித்தாலும் தன் மனக்குமுறலைச் சட்டென்று அடக்கினான்.

அதே நேரம்
“என்ன குப்பா! உன் ரெண்டாவது மகன் நந்தனுக்குக் கல்யாணமா? கல்யாணம் ஆகவே ஆகாது என்றவனுக்கு கல்யாணம் பண்ணுறீங்க! சந்தோஷம் தான்.. இவன் விஷயம் தெரிந்து தானே அந்தப் பொண்ணு இவனைக் கட்டிக்குது? ஏன்னா இப்போ மறைத்து நாளைக்கு உண்மை தெரிய வந்தா பிரச்சினை பாரு!” என்று அந்த காம்பவுண்டிலே இருந்த ஒருவர் குப்புசாமியிடம் சொன்னவர்

“ஏன் டா நந்தா! மாத்திரை எல்லாம் ஒழுங்கா சாப்பிடற தானே?” என்று நந்தாவிடமும் அவர் கேட்க
நந்தாவோ கை முஷ்டி இறுக ருத்திரன் போன்ற தோற்றத்தோட நின்றிருந்தான்.
 
#3
ஹாய் பிரெண்ட்ஸ்,

யுவனிகா அவர்கள் தனது புதுக்கதையுடன் நம்மை சந்திக்க வருகிறார். இக்கதையும் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.................
நன்றி மா