உயிர் மெய் நீயே! - கதை திரி

#6
அத்தியாயம் 5


மறுநாள் வழக்கம் போல தனது காலை உடற்பயிற்சியை முடித்து விட்டு திரு வீட்டிற்குள் வந்து சோபாவில் அமர,பழச்சாறு கொண்டு வந்து கொடுத்தாள் தேன்மொழி.
வழக்கமான முகபாவனையுடனே அவள் இருக்க, ‘ஒன்னுமே நடக்காத மாதிரி இருக்கா பாரேன்..நாம பேசுன பேச்சுக்கு இன்னைக்கு கண்டிப்பா ஷூட்டிங்க்கு வரமாட்டா' என்று எண்ணி மகிழ,அவனது எண்ணத்தைக் கலைத்தது தந்தையின் குரல்.

“தம்பி குமரா..உன்கிட்ட கொஞ்சம் பேசனும்” என்றிட,”சொல்லுங்கப்பா” என்றான்.

“நீ அடுத்த வாரம் சுவிட்சர்லாந்துக்கு ஷூட்டிங்க்கு போகனும்னு சொன்னல்ல…அதனால நானும் ஒரு முடிவு பண்ணியிருக்கேன்ப்பா” என்றவுடன்,”என்ன முடிவுப்பா” என்றான் சற்று குழப்பத்துடன்.

“அது ஒன்னுமில்லப்பா..இன்னைக்கு சாயங்காலம் நானும்,மாமாவும் நம்ம ஊருக்குப் போறோம்.அங்க நம்ம ஊருக்கு பக்கத்து டவுன்ல டிராவல்ஸ் கம்பெனி நடத்துற நம்ம முருகன் இல்ல..அவங்க வடநாட்டு கோயிலுக்கெல்லாம் ஒரு மாசம் சுற்றுலா போட்டு இருக்காங்களாம்…நானும் வயசான காலத்துல எத்தனை நாளு தான் வீட்டுல இருக்குறது.. அதான் நானும்,மாமாவும் அந்த சுற்றுலாவுக்கு பொயிட்டு வரலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்” என்றதும், தந்தைக்கு அருகே சென்று அமர்ந்து அவர் கைகளை பற்றிக்கொண்டான்.

“அப்பா ஒரு மாசமா..அதுவரைக்கும் நா எப்புடிப்பா உங்கள பார்க்காம இருப்பேன்” என்று வருத்தமுற்றான். கிராமத்திலிருந்து சென்னைக்கு படிக்க வந்த போது கூட மாதம் இரண்டு முறை இவன் ஊருக்கு சென்று விடுவான். அப்படியி ல்லையெனில் ரெங்கா சென்னை வந்து மகனைப் பார்த்துச் செல்வார்.ஷூட்டிங் செல்லும் போதும் முடிந்த அளவு பத்து,பதினைந்து நாட்களில் திரும்பிவிடுவான்.
ஒரு முறை மட்டும் இரண்டு மாதம் ஆகிவிட்டது.அதற்கே திரு தந்தையை மிகவும் தேடினான்.

தற்போது மகன் அப்படிக் கலங்க, “எங்க போறேன் குமரா.. கோயில்,குளம்னு தானே..எல்லாம் நீ நல்லா கல்யாணம் பண்ணி,புள்ள குட்டியோட இருக்கனும்னு தானேப்பா”..என்றதும், மௌனமாக அமர்ந்திருந்தான்.

“சரி மாமாவும்,நானும் தேவையான எல்லாப் பொருளையும் எடுத்து வைக்குறோம்” என்றதும்,திருவுக்கு தலையில் பல்ப்பு எறிய, “அப்பா அப்போ தேன்மொழியையும் எல்லாத்தையும் பேக் பண்ண சொல்றேன்..அவளையும் கூட்டிட்டு ஊருக்கு போங்க” என்றான் உற்சாகமாக.


“அவ எதுக்கு தம்பி..அவ உன் கூட ஷூட்டிங் வரட்டும்” என்றார் ரெங்கா. “அப்பா நா சுவிஸ் போகும் போது இவள ஊருல போயி விட நேரமிருக்காது” என்று நம்ம திரு சாக்கு போக்கு சொல்ல, அவங்க அப்பா போட்ட குண்டுல புள்ள அம்பாசமுத்திரம் தாண்டி போய் விழுகாத குறை தான்.


“தேனு உன் கூட வெளிநாடு வருவா தம்பி..நா இல்லாத குறை தெரியாம தேனு உன்பக்கத்துலே இருப்பாய்யா.. உன் கிட்ட வேலைக்கு வந்தா வெளிநாடு போகனும்னு நா தான் முன்னமே அவள பாஸ்போர்ட் எடுக்க சொல்லிட்டேன்” என்றாரே பார்க்கலாம்.


‘அப்பாஆஆஆ…எனக்கு வச்சிட்டிங்களே பெரிய ஆப்பா…” வெளியே சொல்ல முடியாமல் உள்ளே அலறியவன் மௌனமாக தந்தைக்கு தலையை ஆட்டிவிட்டு தனதறைக்குச் சென்றான்.

அறைக்கதவை சாத்தியவன் அறையை அளந்த படி நடந்தவாறே, “இந்த தேனு எம்மேல ஒட்டுன பிசின் மாதிரி என்னைய விட்டு போகவே மாட்டேங்குறாளே.. இவள இங்க ஷூட்டிங் கூட்டிட்டு பொயிட்டு ஒரு நாள்லயே நா நொந்துட்டேன்.. இதுல சுவிஸக்கு வேற…பேச்சி உன் புருசனோட அராஜகம் எல்லை மீறி போகுது பார்த்துக்க”..என்று தாயிடம் தந்தையை திட்டிக் கொட்டியவன் ஒரு வழியாக குளித்து கிளம்பி கீழே வர,தேன்மொழி தயாராக நின்றிருந்தாள்.


‘இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல' என முனங்கிக் கொண்டே சாப்பிட்டு விட்டு, அவளையும் அழைத்துக் கொண்டு படப்பிடிப்பிற்குச் சென்றான்.

மாலை தங்கள் தந்தைகள் கிளம்பும் நேரத்திற்கு இருவரும் வீட்டிற்கு வந்து, அவர்களை காரில் ஏற்றிக் கொண்டு இரயில் நிலையத்தில் வழியனுப்ப வந்திருந்தனர்.திரு சோர்ந்த முகத்துடனே இருக்க,”தம்பி அப்பா பத்திரமா போயிட்டு வந்துருவேன்டா பயப்புடாத” என்றவர்,


“தேனு தம்பி கூடவே இருக்கனும் நீயும் பத்திரமா இரு..அவனையும் பத்திரமா பார்த்துக்கோ” என்றார்.
‘இவ தானே என்னோட முக்கிய தொல்லையே' என்று எண்ணியவன்,

“அப்பா இந்தாங்க இந்த ஃபோனை உங்க கையில பத்திரமா வச்சிக்கோங்க..நா உங்களுக்கு அடிக்கடி வீடியோ கால் பண்ணுவேன்..இந்த பெட்டியில சார்ஜர் இருக்கு.மூனு மாசத்துக்கு நெட் பேலன்ஸ் போட்டிருக்கேன்” என்று அடுக்கிக் கொண்டே போக,

“மாப்புள! மச்சான நா பத்திரமா பாத்துக்குறேன் நீங்க பயப்புடாதீக.. ரயிலுக்கு நேரமாச்சு நாங்க பொறப்படுறோம்” என்று குமரகுரு கூற, தந்தை கட்டியணைத்து வழி அனுப்பி வைத்தான்.


“அப்பா! மாமாவ பத்திரமா பாத்துக்கோங்க..நீங்களும் கவனமா இருங்க.. ஊருக்கு பொயிட்டு போன் பண்ணுங்க ..அம்மா கிட்ட பேசுறேன்” என தேனுவும் விடை கொடுத்தாள்.
காரில் நிசப்தம் நிலவியது.இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.திரு ஒரு இறுக்கமான மனநிலையுடனே வாகனத்தை செலுத்திக் கொண்டிருக்க, அவனது தோள் மீது கை வைக்க அவள் புறம் திரும்பியவனின் பார்வையில் வெறுமையே இருந்தது.


“இங்க பாரு மாமா..உங்க அப்பாவ எங்க அப்பா நல்லா பாத்துக்குவாரு பயப்புடாத” என்றதும், அதுவரை கவலையாக இருந்தவன்,
”அதான்டி என் பயமே எங்கப்பாவோட போறது உங்கப்பாவாச்சே..நீயே அரை மென்டல்.. அந்த மனுசனும் அப்புடித் தானே” என்று சிரிக்காமல் கூறினான்.(டேய்…நீ சந்திரமுகிய சீண்டிட்ட..செத்தடா மவனே!..)


“என்ன சொன்ன எங்கப்பா மெண்டலா? நீ சோககீதம் வாசிக்கிறியேனு ஆறுதல் சொன்னேன் பாரு என்ன சொல்லனும்…இப்ப சொல்றேன்யா நீ வீட்டோட மாப்புளயா தான் போவ போ” என்று அவள் சாபம் விட,

“ஹா..ஹா..சரிதான் போடி..அப்படி ஒரு வாய்ப்பே அமையாது..எனக்கு வர பொண்டாட்டி அப்புடி இருக்க மாட்டா” என்றான் நமுபிக்கையுடன்…”ஹூம் அதையும் பார்ப்போம்” என பழித்த படி தேனு திரும்பிக் கொண்டாள்.
மறுநாள் வழக்கம் போல இருவரும் படப்பிடிப்பிற்கு கிளம்பி வர, ரெங்கசாமி இல்லாத வெறுமையான வீடு இருவருக்கும் ஒரு மாதிரி தான் இருந்தது. மனதை வேலை விசயத்தில் திருப்பிய படி இருவரும் காரில் கிளம்பி வந்தனர்.


ஷூட்டிங் தொடங்கி சிறிது நேரத்தில், தேனு தனது நாற்காலியில் அமர்ந்திருக்க, அவளை நோக்கி ஒருவன் வந்தான். “ஹாய் பியூட்டி” என்றதும், முதல் நாள் வம்புசெய்த இருவரும் அவளுக்கு நினைவில் வர,

‘மாமா எங்கையும் போய் தானே வம்ப இழுத்துட்டு வரக்கூடாதுனு சொன்னாங்க.. ஆனா இந்த ஆடு தன்னால வந்து சிக்குதே' என அவள் யோசித்த வண்ணம் அவனைப் பார்க்க, அவளுடைய யோசனையை கண்டு கொண்டவன்,

”ஹாய் பியூட்டி ஐஆம் விக்ரம்” என்றது தான் தாமதம், “நீ யாரா இருந்தா எனக்கென்ன..ஒரு பொண்ணு தனியா இருக்கக்கூடாதே! ஹாய்,பேய்னு வந்துற வேண்டியது..ஏன்டா உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா?” என்று கன்னாபின்னாவென திட்ட, சுற்றும் முற்றும் பார்த்த விக்ரம் காதுகளை மூடிக்கொண்டவன் அவளை பாவமாக பார்த்தபடி நின்றான்.

அந்த நேரமாக ஷூட்டிங்கிற்கு பிரேக் விட, ஓய்வு எடுக்க செல்ல திரும்பிய திரு, விக்ரமையும்,தேனுவையும் பார்த்தவன்.. விக்ரமின் நிலையை ஊகித்து விட்டு அருகே விரைந்து சென்றான்.

“டேய் மச்சீ..என்னடா பண்ற?” என அவன் காதுகளிலிருந்த கையை தட்டிவிட, “வந்துட்டியாடா மச்சீ..ஒரு பொண்ண பிஏ வா போட்டு இருக்கனு நேத்து போன்ல சொன்னியே..அவங்க இவங்களா தான் இருக்கும்னு கெஸ்ஸிங்ல ஹாய்னு சொல்லிட்டேன்…ஆனா இந்த மங்கம்மா…ஐயோ சாரி…இந்தக்கா தப்பா புரிஞ்சிகிட்டு என்னைய வாங்கு வாங்குனு வாங்குது மாப்புள” என்று அழாத குறையாக ஒப்பிக்க…


“ஏய் லூசு..அவன் என் பிரெண்டுடி” என்று திரு தேனுவிடம் கூற, “நா என்னத்த கண்டேன்” என்று அசால்ட்டாக கூறியவள், “சாரி விக்ரம் அண்ணா..ஐ ஆம் தேன்மொழி…பிஏ ஆப் திருகுமரன்” என்று கையை நீட்ட, “ஆத்தி வேணாக்கா” என்று கையெடுத்து அவன் கும்பிட.. திருவும்,தேனுவும் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தனர்.

“சரி வா” என்று தனது கேரவனுக்கு விக்ரமை அழைத்துச் சென்றவன், நின்று திரும்பி,”தேன்மொழி! ராம வர சொல்லி இருக்கேன்..கொஞ்ச ஒர்க் அவர்கிட்ட கொடுத்துருக்கேன் சேர்ந்து பாரு” என கூறிவிட்டு விக்ரமுடன் சென்றான்.

கேரவனுக்குள் நுழைந்த திரு ஏசியை ஆன் பண்ண, சேரில் அமர்ந்த விக்ரம், ”ஆனா மாப்புள..உனக்கு ஏத்த பிஏடா” என்று கேலி பேச, “நீ வேறடா” என்று கடந்த இரண்டு நாட்கள் மட்டுமின்றி இரண்டு வருடங்களையும் கூறி அவன் பெருமூச்சு விட, விழுந்து விழுந்து சிரித்தான் விக்ரம்.

“எம்பொழப்பு உனக்கு சிரிப்பா இருக்கு” என்று திரு அவனை முறைக்க, “அவ தான் இவனு தெரியாம போச்சே மாப்புள..உன் வாழ்க்கை அமோகமா போகுது போ..உனக்கு பிஏவா எதிரியா இருந்தாலும் ஒரு பொண்ணு கிடைச்சிருச்சு… ஆனா எனக்கு? இந்த 90ஸ் கிட்க்கு ஒரு டச் அப் கேர்ள் கூட கிடைக்க மாட்டாளா?” என்று போலியாக வருத்தப்பட, அவன் முதுகில் ஒன்று போட்ட திரு, நேற்று நடந்த விசயத்தைக் கூற,விளையாட்டு தனத்தை கைவிட்ட விக்ரம்,


”இந்த நாய்ங்கள திருத்தவே முடியாதா மச்சீ..ச்ச நம்ம நடிக்க வந்தது நம்ம தப்பாடா..போற இடமெல்லாம் இன்சல்ட் பண்றானுங்க” என்று கோபத்துடன் கூறினாலும் அவனது குரலில் வேதனையே மிகுந்திருந்தது.

“விடு மச்சான்…தைரியமா இருக்கனும்” என்று அவன் தோள்களை தட்டிக் கொடுத்தவன்,”அப்புறம் பாம்பே ஷூட்டிங் எப்படி போனுச்சு?” என்று கேட்டபடி இருவரும் பேசிக் கொண்டிருக்க, “சார் ஷாட் ரெடி” என்று தேனு கூறவும் இருவரும் வெளியே வந்தனர்.

“ஓகே பாய் மச்சீ..ஈவ்னிங் வீட்டுக்கு வரேன்”..என்றபடி விக்ரம் கிளம்பிவிட்டான்.


மாலை 4 மணியளவில் ஷூட்டிங் முடிவடைய இருவரும் வீடு வந்து சேர ஆறு மணிக்கு மேல் ஆனது. புத்துணர்வு பெற்று உடை மாற்றி தேனு காபி கலந்து எடுத்து வர, சற்று ஓய்வாக வரவேற்பறை சோபாவில் அமர்ந்து அவள் கொடுத்த காபியை பருகினான் திரு. இன்னும் நான்கு நாட்களில் சுவிட்சர்லாந்து கிளம்ப உள்ளதால் இன்றுடன் ஷூட்டிங் முடிவடைந்தது.


இனி சுவிஸ்ல் தான் ஷூட்டிங். நான்கு தினங்கள் வீட்டில் ஓய்வு. ஆகையால் பாலுவிற்கு விடுமுறை கொடுத்து அனுப்பி விட்டான். காபியை பருகியவாறே “தேனு உன்னோட பாஸ்போர்ட எடுத்திட்டு வா..எனக்கு 10 நாளைக்கு முன்னாடியே டிக்கெட் ரிசர்வ் பண்ணிட்டாங்க..உனக்கு இப்போ தட்கல் ல தான் வாங்கனும்” என்றான்.


“தேனு தனதறைக்குச் சென்று பாஸ்போர்ட் எடுத்து வர, விக்ரம் திருவுடன் பேசிக்கொண்டிருந்தான். “வாங்கண்ணா காபி குடிங்க” என்று தேனு உபசரிக்க,

“அம்மாடியோவ்..மதியம் நீ குடுத்த உபசரிப்புல இருந்தே நா இன்னும் மீளல” என்று விக்ரம் கேலியாக கூற,
“போங்கண்ணா..நேத்து இதேபோல ஒரு சம்பவம் நடந்துருச்சு”…என்று திருவைப் பார்த்து தயங்கிய படியே கூற,

“திரு சொன்னான்டா…அந்த பணத்திமிர் பிடிச்ச நாயிங்க அப்படித்தான்..இந்த மாதிரி ஆளுங்களலால சினி இன்டஸ்ட்ரீல இருக்குற எல்லாமே கெட்டவங்கனு மக்கள் மனசுல பதிஞ்சிடுது. நீ திருவோட ஷூட்டிங் போகும் போது அவன் கூடவே இருந்தன்னா இந்த மாதிரி பிராப்ளம் எல்லாம் சால்வ் பண்ணிடலாம்” என்றான்.

“ஓகே அண்ணா” என்று விக்ரமிடம் கூறினாலும் பார்வை திருவிடம் இருக்க, அவன் விக்ரமை பார்த்துக் கொண்டிருந்தான். “அதான் இப்போ சமாதானமாகிட்டோம்ல..ப்ரண்ட்ஸ்” என்று விக்ரமிடம் கை கொடுக்க, “நோ பிரண்ட்ஸ்” என்றான் விக்ரம்.
விக்ரமின் ஆட்சேபனையில் தேனு முகம் சுருக்க, “ப்ரெண்ட்ஸ் இல்ல லூசு..அண்ணா ஓகேவா” என்று அவளை இழுத்து தனதருகே அமரவைத்து தலையை கலைக்க,


“முடியல..ஏற்கனவே இந்த வீடு டிராமா ஸ்டேஜ் மாதிரி ஆகிருச்சு..இந்த பாசமலர் நாடகம் வேறயா” என்று திரு அலுத்துக் கொள்ள,தேனு முகம் வாடி விட்டது. அவள் முகம் வாடுவதைக் கண்டவன்,


“அவன் கெடக்குறான் விடு தங்கச்சி..பொறாமை பிடிச்ச ஃபெல்லோ” என்று விக்ரம் மெலிதான குரலில் கூற, “என்ன சொன்ன?” என்று திரு சத்தமாக கேட்க, “ஒன்னுமில்ல மச்சி..இங்க என் தங்கச்சி கூட பேசிட்டு இருந்தேன்”.. என்றவன்,


“தேனு நீ நல்லபடியா சுவிஸ்க்கு பொயிட்டு வா..நாம பேச வேண்டியது நிறைய இருக்கு” என்றவன், “திரு நீ வா நா காரை ஸ்டார்ட் பண்றேன்..” என்று விக்ரம் வாசலை நோக்கிச் சென்றான்.


‘எங்க போறாங்க?’ என்பதாய் கேள்வியாய் திருவை பார்க்க, “தேனு ஒரு முக்கியமான டிஸ்கசன்னு டைரக்டர் சார் வர சொன்னாங்க..அப்படியே உன்னோட பாஸ்போர்ட்டையும் நா டிராவல்ஸ்ல குடுத்துட்டு வந்துடறேன்” என்று திரு கூற,

“மாமா காலையில போக கூடாதா? இப்பவே மணி ஏழாகப்போகுது” என்று தேனு கவலைப்பட, “ ஏ ரொம்ப அர்ஜென்ட் டி சீக்கிரம் வந்துருவேன்.. உனக்கு பயமா இருக்கா என்ன? என்று அவன் கேலிசெய்யவும்,,”எனக்கு பயமெல்லாம் பயமெல்லாம் ஒன்னுமில்ல நீ பொயிட்டு சீக்கிரம் வா” என்றாள்.

“அதானே பாத்தேன் உன்னைய பார்த்து இந்த சென்னை மாநகரம் தான் பயப்படனும்” என்றவன்,
“டின்னர் ரெடி பண்ணி வைடி வந்துடுவேன் ..ஒன்னா சாப்பிடலாம்..பை” என்று கையசைத்துவிட்டுச் சென்றான்.
தேன்மொழிக்கு அவனது இந்த இணக்கமான பேச்சு மனதுக்கு இதமாக இருக்க, வெளியே கார் வரை வந்து வழியனுப்பி விட்டு உள்ளே வந்தவள் இரவு உணவை தயாரிக்கலானாள்.
 
#7
அத்தியாயம் 7

மதிய உணவை தயாரித்துக் கொண்டிருந்த தேன்மொழியின் கைகள் பரபரப்பாக செயல்பட்டாலும், மூளை மட்டும் திரு காலையில் கூறிய காரணத்தையே சுற்றி வந்தது.
“மாமா…'அவள்'னு நினைச்சு உன்னைய அடிச்சிட்டேனு சொன்னாரே…யாரு அந்த அவ…ஒருவேளை மாமாவோட கேர்ள் ஃப்ரெண்டா இருப்பாளோ! அவளோட சண்டை போட்டு டென்சன்ல குடிச்சிட்டு அவனு தெரியாம நம்மள அடிச்சிட்டாறோ” என்று எதை எதையோ யோசித்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் அவனது கேர்ள் ஃப்ரெண்ட் என்று எண்ணும் போதே நெஞ்சம் ஏனோ ஒரு மூலையில் வலியால் துடிப்பதை அவளால் உணர முடிந்தது. எண்ணங்களின் சுழலில் அவள் சிக்கியிருக்க,


காதருகே கேட்ட “பே” என்ற சத்தத்தில் “அம்மாஆஆ” என்று அலறித் துள்ளித் திரும்ப “சரியான பயந்தாங்கொல்லிடி நீ” என்று சிரித்தவாறே அவளுக்கெதிரே நின்றான் திருகுமரன்.


“சொல்லுவ..சொல்லுவ..எவ்வளவு தைரியசாலியா இருந்தாலும் திடீர்னு இப்படி நடக்குறப்போ பயந்து தான் போவாங்க”..என்று அவனைப் பார்த்து முறைக்க,


"ஓகே..ஓகே முழி பிதுங்குற அளவுக்கு முழிக்காம சாப்பாட எடுத்துட்டு வா! நாம சாப்பிட்டுட்டு ஷாப்பிங் போகலாம்” என்று சொல்ல..”எதுக்கு மாமா ஷாப்பிங்க்கு?” என்று அவள் புரியாமல் கேட்க,”ம்ம்..வீட்ல மிளகா,மல்லி இல்லை அதனால அதெல்லாம் வாங்கப்போறோம்”.. என்று கேலியாக கூறியவன், அவள் முழிப்பதைப் பார்த்து சிரித்து விட்டு,


“சுவிஸ் போக கொஞ்சம் ஸ்வெட்டர்ஸ், டிரெஸ்ஸெல்லாம் வாங்கனும்ல.. அங்க பனி ரொம்ப அதிகம்..அப்புறம் அங்க இந்த சுடிதாரெல்லாம் குளிர் தாங்காது அதனால ஜீன்ஸ் தான் நீ போடுற மாதிரி இருக்கும் உனக்கு ஓகேவா?” என்று அவன் கேட்க..சரி என்பதாய் தலையையாட்டினாள் தேன்மொழி.


மதிய உணவை முடித்து கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு இருவரும் காரில் திநகர் சென்றனர். காரை ஒரு இடத்தில் பார்க் செய்தவன் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவளது கையை கெட்டியாக பிடித்து அழைத்துச் செல்ல, அவனை வியப்பாக ஏறிட்டுப் பார்த்தாள்.
அவளது பார்வையின் பொருளை அறிந்து கொண்டவன், “கூட்டம் அதிகமா இருக்கு. நா காணாமல் போனா உன்னால தேட முடியாது. அதான் உன் கைய கெட்டியா பிடிச்சுக்கிட்டேன்..அப்புறம் இன்னொரு விசயம் என்னைய பத்திரமா பார்த்துக்கோ கூட்டத்துல காணாம போயிராம”..என்று கண் சிமிட்டி சிரிக்க, “ஹூம் ரொம்பத்தான்” என்று சிலுப்பிக் கொண்டாள் தேன்மொழி.


இருவரும் பிரபலமான ஒரு துணிக்கடையில் உள்ளே நுழைய அக்கடையின் விளம்பர படத்தில் அவன் நடித்திருந்ததால் அங்கே அவர்களுக்கு பலத்த வரவேற்பு நடந்தது. கடை முதலாளி விற்பனைப் பெண்ணை அழைத்து ரகங்களை காட்டச் சொல்ல, திரு கூறிய பிரிவுக்கு அவர்களை அழைத்துச் சென்றாள் அப்பெண்.


அவர்கள் சென்றது பெண்கள் அணியும் ஜூன்ஸ் பிரிவு. சேல்ஸ்கேர்ள் அவளது அளவை கேட்க, தேன்மொழியும் தனது அளவைக் கூறினாள். மெல்ல அவள் காதருகே குனிந்தவன் “ஏ ஜீன்ஸ் சைஸ் டிரையல் பார்த்துக்கோ. ஏதாவது குத்து மதிப்பா ஒரு அளவ சொல்லாத நாளைக்கு பேக்கிங் வேலை இருக்கு..சோ சேஞ்ச் பண்ண திரும்ப வரமுடியாது” என்றிட,


“எனக்கு நல்லா அளவு தெரியும் ஏற்கனவே ஊர்ல ஒரு தடவை போட்டுருக்கேன். டிரையல்லாம் வேணாம்..டிரையல் ரூமெல்லாம் நம்ப முடியாது” என்றாள் தேனு. அவள் சொல்வதும் சரி தான் என்று எண்ணியவன் அறைகுறையாக தலையாட்டினான்.

நான்கு ஜீன்ஸ் பேண்ட்களை தேர்வு செய்து கொடுத்து பில்லிற்காக அவர்கள் காத்திருக்க தேன்மொழியின் மொபைல் ஒலித்தது. அவனிடம் கூறிவிட்டு சற்று நகர்ந்து வந்து அவள் கைபேசியை எடுக்க அவள் தங்கை கனிமொழி அழைத்திருந்தாள்.

உற்சாகமாக அழைப்பை ஏற்றவள் “ஹே கனி எப்படிடி இருக்க..தம்பி எப்படி இருக்கான்? அம்மா நல்லா இருக்கா? அப்பாவும், மாமாவும் வந்துட்டாங்களா?” என்று வரிசையாக கேட்க,

“கொஞ்சம் மூச்ச விடுடி ஏ முள்ளங்கி!” என்று தமக்கையை கேலி செய்தவள், தேனு கேட்ட கேள்விகளுக்கு மறக்காமல் பதில் கூறிவிட்டு, தேன்மொழியின் நலத்தை விசாரிக்க, அவளும் தனது நலம் மற்றும் இங்கு நடப்பதைக் கூற,


“ஹே அக்கா சுவிஸ் போறியா? செம்ம ஜாலி போ..அதுவும் மாமாவோட..என் பிரெண்ட்ஸ் எல்லாம் நீ திரு மாமாகிட்ட பிஏவா இருக்கனு சொன்னா நம்ப மாட்டேங்கு றாளுங்கக்கா..நீ மாமாவோட ஒரு போட்டோ எடுத்து அனுப்பேன் நா என் பிரெண்ட்ஸ்கிட்ட கெத்தா காட்டிக்கிறேன்” என்று கூறியவள், திருவைப் பற்றி அவள் தோழிகள் கூறிய புகழுரையை வேறு சொல்ல..தேன்மொழியின் காதில் பற்றிய தீயை அணைக்க தீயணைப்பு நிலையம் வந்தால் கூட போதி இருக்காது அந்த நேரத்தில், “வெறுப்பேத்துறா மை லாட்” என்று தனக்குத் தானே கூறிக் கொண்டவள்,

“ஆமா அப்புடியே உங்க மாமன் மகன் அஜித்குமார்…இல்லாத பில்டப்பெல்லாம் குடுக்காத” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளது போன் பின்புறமிருந்து பறிக்கப்பட்டது.தேனு அதிர்ந்து திரும்பிப் பார்க்க, அவளது அலைபேசியை காதில் வைத்தவன்

“ஹலோ” என்றதும், எதிர்முனையில் கனிமொழிக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை.
அவளிடம் சிரித்து சிரித்து பேசியவன்,

“உங்க அக்காவுக்கு பொறாமை கனி அதான் நான் அழகுனு ஒத்துக்க மாட்டேங்குறா” என்றவன்,பிறகு ஊரைப் பற்றியும் தனது தந்தையைப் பற்றியும் விசாரித்து விட்டு அலைபேசியை அணைத்தவன் அதனை தேனுவின் கையில் கொடுக்க, அவள் வாங்க முற்படுகையில் வெடுக்கென பறித்து அவளை ஒரு கையால் இழுத்து கேமராவை ஆன் பண்ணி சில பல செல்பிக்களை எடுக்க, தேன்மொழியின் முகபாவனைகள் அப்படியே விழுந்து பதிந்தது அலைபேசியில்.

“ஃபோன குடு மாமா” என்று அவள் அவன் கையை பிடிக்க எத்தனிக்க தனது பேன்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டவன் அவளை டாப்ஸ் செக்சனுக்கு அழைத்துச் சென்று அவளை தேர்ந்தெடுக்க சொல்லி விட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவன் தேன்மொழியின் அலைபேசியில் எடுத்த புகைப்படங்களை கனிமொழியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பியவன், தேனுவை ஓரக்கண்ணால் பார்த்து விட்டு அவளது கேலரியை ஆராய, ஊரில் குடும்பத்துடன் எடுத்த படங்கள், இங்கு படப்பிடிப்பு தளத்தில் அவள் எடுத்திருந்த சில படங்கள் என சுவாரசியமாக பார்த்துக் கொண்டே வந்தவன் ஒரு புகைப்படத்தைப் பார்த்து அப்படியே அதிர்ந்து விட்டான். அவன் விரல்கள் வேக வேகமாக மற்ற படங்களை ஆராய்ந்தது.

அதில் சில படங்களை தனது எண்ணிற்கு அனுப்பி விட்டு, ஆதாரத்தை டெலிட் செய்தவன் தேனு அழைக்கவும், அவளிடம் அலைபேசியைக் கொடுத்தவாறு அவளின் உடைகளுக்கு பணம் செலுத்தி விட்டு, மேலும் அவனுக்கு ஆடைகளும் இருவருக்கும் ஸ்வெட்டர்கள் என எடுத்துக் கொண்டு வீடு வந்தனர்.

இரவு உணவை முடித்து விட்டு தனதறைக்கு வந்து அலைபேசியை எடுத்தவளுக்கு அப்போது தான் நினைவு வந்தது. ‘ஒரு வேள பாத்துருப்பரோ' என்று எண்ணியபடி போனை ஆராய்ச்சி செய்ய எல்லாம் அப்படியே இருந்தது. உடனே கேலரிக்கு ஒரு லாக் போட்டு அலைபேசியை வைத்துவிட்டுப் படுத்தாள். ( அட கிறுக்கி இனிமே நீ லாக் போட்டா என்ன? போடாட்டி என்ன? அவன் தான் எடுக்க வேண்டியத எடுத்துக்கிட்டானே!)


மறுநாள் எழுந்தவர்களுக்கு பேக்கிங் செய்யவே நேரம் சரியாக இருந்தது. திருவுடைய உடைமைகளை அவனுக்கு பேக் செய்து கொடுத்தவள் தனது உடைகளையும் அடுக்கிக் கொண்டிருந்தாள்.

தனது அறையில் விக்ரமிடம் அலைபேசியில் பேசிவிட்டு வந்து கட்டிலில் அமர்ந்தவன், பேக் செய்து வைத்திருந்த சூட்கேஸை பார்த்த படி அமர்ந்திருந்தான். இது நாள்வரை அவன் வெளியூரோ, வெளிநாடோ ஷூட்டிங் கிளம்புகையில் தன்னுடைய உடைமைகளை தானே சரிபார்த்து வைப்பது தான் அவன் வழக்கம். சில சமயங்களில் முக்கியமான ஒரு சில பொருட்களைக் கூட மறந்து விடுவான். ஆனால் இன்று.


“மெடிசன்ஸ் எடுத்து வச்சிங்களா? சோப் எடுத்து வச்சிட்டிங்களா?” என்று லேப்டாப்,சார்ஜர் முதல் அவனது உள்ளாடைகள் வரை அவனுக்கு நினைவுபடுத்தி தேனு எடுத்து வைக்க மனம் நிறைவாக இருந்தது திருகுமரனுக்கு.


மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு பிளைட் ஆகவே இரவு சீக்கிரமே சாப்பிட்டு விட்டு இருவரும் உறங்கி விட்டனர். அலாரம் வைத்து நள்ளிரவு ஒரு மணிக்கே எழுந்த குமரன் தேனுவின் அறையில் வெளிச்சம் இல்லாமல் இருக்க “எழுந்துட்டாளானு தெரியலையே பிளைட்டுக்கு நேரம் ஆகுதே மூனு மணிக்கெல்லாம் ஏர்போர்ட் போகனுமே” என்று எண்ணிவாறு தனது அலைபேசியை எடுத்து அவளுக்கு அழைக்க, ரிங் போய்க் கொண்டே இருந்தது. மூன்று முறையும் இதே போல் நடக்க, பொறுத்துப் பார்த்தவன் அவளது அறைக்கதவை தட்டினான். கதவு திறக்கப்படவில்லை.


“உள்ளே போகலாமா?” என்று சற்று தயங்கியவன் நேரம் செல்வதை உணர்ந்து கதவைத்திறந்து மின்விளக்கை போட்டவனுக்கு கட்டிலில் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் அவளைக் கண்டவுடன் கோபம் வந்துவிட்டது. “ஏ தேனு எந்திரிடி” என்று அவன் எழுப்ப, ‘விலுக்’என எழுந்தவள் அவனைப் பார்த்து ஒரு முறை முறைத்தவள், அவன் கையைப் பற்றி முறுக்கி “நங்..நங்” என்று முதுகில் குத்தியபடி

“யாருகிட்ட இந்த தேன்மொழி கிட்டயேவா” என்று கூறியபடி மீண்டும் சாய்ந்து படுத்து விட, ஒன்றும் புரியாமல் முழித்தவன் “அடிப்பாவி இந்த அடி அடிக்கிறாளே” என்று முதுகை தேய்த்துக் கொண்டே “இவ சரியா வர மாட்டா திரு பிளைட்டுக்கு நேரமாகுது” என்று குளியலறையில் ஒரு வாளி தண்ணீர் பிடித்து வந்து அவள் மீது ஊற்றிவிட்டு கதவை சாற்றி விட்டு வெளியே ஓடிவிட்டான்.


“அம்மாஆஆ” என்று அலறிக்கொண்டு எழுந்தவள் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, கடிகாரத்தில் மணியைப் பார்த்தவள் வெளியே வந்து பார்த்து விட்டு, “பக்கி நீ தான தண்ணிய ஊத்துன உன்னைய பாத்துக்கிறேன்” என்று பல்லைக் கடித்தவள், “ஐயோ ப்ளைட்டுக்கு நேரமாகிடுச்சே” என்று விறுவிறுவென கிளம்பி கீழே வர, ஏற்கனவே அங்கு அமர்ந்திருந்த திரு “வா போகலாம்” என்று பத்தடி தள்ளியே நடந்தான்.


விமானநிலையத்திற்கு வந்து இறங்கியவன் பெட்டிகளை எடுத்துக் கொண்டு, ஓட்டுநரிடம் திரும்பி வரும்போது அழைப்பதாக கூறியவன் தேனுவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான். இம்மிக்ரேசனை முடித்து விட்டு இருவரும் உள்ளே செல்ல, அங்கே அவர்களது படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் இருவரையும் வரவேற்றனர். ப்ளைட்டுக்கான அறிவிப்பு வரவும் தேன்மொழி குமரனின் கைகளை பற்றிக் கொண்டாள். அவளை திரும்பிப்பார்த்தவன்,


“ஏன்டி கையப் பிடிக்கிற” என்று கடிந்து கொள்ள, “மாமா எனக்கு பயமா இருக்கு. இது தான் எனக்கு ப்ளைட்ல முதல்தடவை” என்று கூறியவளின் கை நடுக்கத்தை உணர்ந்தவன்,
‘வாடி வா..தூக்கத்துல சொர்ணாக்கா மாதிரி போட்டு கும்முறது..இப்போ பாத்தா குடிகாரி மாதிரி நடுங்குறியா?’ என்று எண்ணிக்கொண்டு, “அதெல்லாம் ஒன்னும் ஆகாது நா இருக்கேன் பயப்புடாத!” என்று ஆறுதல் படுத்தி அழைத்துச் சென்றான். ( நீ இருக்குறது தானடா பயமே)

படிகள் ஏறி விமான வாயிலை அடைய விமானப் பணிப்பெண்கள் அவர்களை இன்முகத்துடன் வரவேற்றனர். தங்களது இருக்கை எண்ணை சரிபார்த்தவன் அவளை அமரவைத்து விட்டு தானும் அருகில் அமர, சீட்பெல்ட்டை பணிப்பெண் அவளுக்கு அணிவிக்க, “கடவுளே..கடவுளே” என்று கைகளைக் கூப்பி கண்களை மூடி அவள் அமர்ந்திருக்க, திருவுக்கு சிரிப்பாக வந்தது.


மூவர் அமரும் இருக்கை அது. சட்டென மூளையில் ஒரு மின்னல் வெட்ட..அருகில் இருந்தவனிடம் “எஸ்க்யூஸ்மீ குட் யூ சேஞ்ச் த சீட்” என்று கேட்க, அவன் ஒரு மாதிரிப் பார்க்க, “ ஜஸ்ட் ஃப்யூ ஹவர்ஸ் ஒன்லி” என்று திரு கூறவும், இருவரும் மாறி அமர்ந்து கொண்டனர்.

ப்ளைட் புறப்படுவதற்கான அறிவிப்பு வரவும், மேலும் கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள் தேனு. ஃப்ளைட் டேக்ஆஃப் ஆனதுமே அவளது வயிற்றில் பயபந்துகள் உருள அடிவயிற்றில் பட்டாஈம்பூச்சி பறப்பது போல இருக்கவும் கண்களைத் திறவாமலே அருகிலிருந்தவனின் கையை இறுக்கி பிடித்துக் கொண்டாள்.


அவளை வித்தியாசமாக பார்த்தவன், அவளது பிடி இறுதிக் கொண்டே செல்ல, “ஆஆஆ”.. என்று அலறிவிட..கண்களைத் திறந்தவள் அருகிலிருந்த அந்நியனைக் கண்டு திருதிருவென விழிக்க.. பணிப்பெண் ஓடி வந்து “வாட் ஹாப்பென்ட் சார்?” என்று கேட்க, அவன் தேன்மொழியைப் பார்த்தான். பாவமாக அவள் முகத்தை வைத்துக் கொள்ளவும் “நத்திங்” என்று கூறினான்.பணிப்பெண் சென்று விட, “சாரி” என்றவள் அப்பொழுது தான் முதல் இருக்கையில் அமர்ந்து வாயை மூடிக்கொண்டு சிரிக்கும் திருவை கொலைவெறியோடு பார்த்தாள்.
 

lakshmi

Active member
Staff member
#8
ஹாய் பிரண்ட்ஸ்! நா உங்க ப்ரீத்தி பவி. என் உயிர்மெய் நீயே! முதல் அத்தியாயம் போட்டாச்சு.படிச்சிட்டு உங்க கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.. கதைத்திரி அமைத்துக் கொடுத்த சுதா மேம்க்கு மிக்க நன்றி..😍😍

1. என் உயிர்மெய் நீயே!

வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் தலைநகர் சென்னை. காலைப் பொழுதிலும் கூட.. சாரை சாரையாக எறும்புக் கூட்டம் போல மக்கள் கூட்டம் தங்கள் பணிகளை கவனித்தபடி அலைபாய்ந்து கொண்டிருக்க…

சென்னையின் முக்கிய பகுதியிலுள்ள அந்த பெரிய பங்களா வெண்மையின் அடையாளமாக உஜாலா போட்டு வெளுத்தது போல கம்பீரமாக நின்று கொண்டிருந்தது.

பங்களாவின் ஆடம்பரத்திற்கு எந்த விதத்திலும் நான் சம்மந்தமல்ல என்பது போல அமைதியின் உருவமாக..எளிமையின் வடிவமாக..குளித்து முடித்து வெள்ளை வேட்டி,சட்டை..தோளில் துண்டு.. நெற்றியில் விபூதிப் பட்டை.. கழுத்தில் ருத்திராட்ச கொட்டை சகிதமாக எம்பெருமான் ஈசனை வணங்கிக் கொண்டிருந்தார் ரங்கசாமி.

“தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!போற்றி!!”

என்று சிவநாமத்தைக் கூறிய படி வரவேற்பறையிலுள்ள சோபாவில் வந்தமர, பணியாள் கொண்டு வந்த காபி தம்ளரை வாங்கிக் கொண்டவர், ”பாலு நீ காபி குடிச்சிட்டியா?” என்று இன்முகத்துடன் கேட்க,

எத்தனை பேருக்கு இது போன்ற முதலாளி வாய்க்கும் என்ற மகிழ்வுடன் “ இன்னும் இல்லிங்க ஐயா..நீங்க குடிங்க..நா பெறகு குடிச்சிக்கிறேன்” என்று பணிவுடன் நிற்க,

“பாலு ! தம்பி எழுந்தவுடனே ஜூஸ் குடுக்கனுமே ரெடி பண்ணிட்டியா? இன்னைக்கி என் தங்கச்சி புருசனும்,தங்கச்சி மகளும் ஊர்ல இருந்து வர்ராங்க..அவங்களுக்கும் சேர்த்தே காலை டிபனை ரெடி பண்ணிடு” என்றார் ரெங்கசாமி.

“சரிங்கய்யா..இப்போ போய் தம்பிக்கு ஜூஸ் போடுறேன்ங்கய்யா” என்று கூறிவிட்டு அடுக்களைக்குச் சென்றான் பணியாள் பாலு.

தமிழகத்திலுள்ள ஒரு சிற்றூரை தனது பிறப்பிடமாகக் கொண்டவர் ரங்கசாமி.இரண்டு அண்ணன்கள்…ஒரு தங்கை என பெரிய குடும்பத்தில் பிறந்து கஷ்டங்களையே சுமந்து வளர்ந்தவர். தனது 29வது வயதில், தங்கைக்கு நல்லதொரு இடத்தில் உள்ளூரிலே அண்ணன்களுடன் சேர்ந்து திருமணம் முடித்துக் கொடுத்து,தனது மச்சினனின் தங்கை பேச்சியையே திருமணம் செய்து கொண்டார்.

விவசாயமே தொழிலாகக் கொண்ட குடும்பம்.ஒரு ஆண் வாரிசை பெற்றெடுத்து சொற்ப வருடங்கள் மட்டுமே வாழ்ந்து விட்டு பேச்சி மேலுலகம் சென்றுவிட, ஒற்றையாளாக தன் மகனை வளர்த்து வந்தவர் மகனின் பிடிவாதத்தால் அவனை சென்னைக்கு படிக்க அனுப்பினார்.

மகனோ படிப்புடன் சேர்த்து நடிப்பிலும் திறமையாக இருந்தவன்,சினிமாத் துறையில் கால்பதிக்க எண்ணினான். ரங்கசாமி மறுக்கவே அவர் மறுப்பையும் மீறி நடிப்புலகிற்குள் நுழைந்தவன் இன்று வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் பட்டியலில் முண்ணனியில் இருக்கிறான்.
மகனின் விருப்பதிற்கிணங்கவும், அவனை தனியே விடக்கூடாது என்ற தந்தைக்கே உரிய அக்கறையிலும் அவனுடனே சென்னையில் வசித்து வருகிறார்.வாழ்வில் பல கஷ்டங்களை கண்டதாலோ என்னவோ இந்த ஆடம்பரமும்,பணமும் நிரந்தரமற்றது என்பதை உணர்ந்து எளிமையாகவே இருப்பார் ரெங்கசாமி.

காலை இளவெயில் சன்னல் திரைச்சீலைகளைத் தாண்டி முகத்தைத் தீண்ட மெல்ல, விழிகளை சுருக்கியபடியே எழுந்தமர்ந்தான் திருகுமரன். ரெங்கசாமியின் அருந்தவப்புதல்வன். நல்ல உயரம், மாநிறத்திற்கு மேலான சிக்ஸ் பேக் கொண்ட உடலமைப்பு, ஸ்டைலான தலைமுடி என திரைப்பட கதாநாயகன் போல இருப்பான் என்று சொல்லக்கூடாது. ஏனெனில் அவன் திரைப்பட கதாநாயகன் தான்.
காண்போரை ஈர்க்கும் பார்வை கொண்ட காந்தக் கண்ணழகன். இருபத்து ஒன்பது வயதுக்குடைய துள்ளலும்,துடிப்பும் நிறைந்தவன். திரைத்துறையில் தனது அயராத உழைப்பால் பல படவாய்ப்புகளை கைவசம் வைத்திருப்பவன்.

தாயில்லா பிள்ளை எனவே தன்போக்கில் திரிகிறான். இப்படி தன் போக்கில் திரியும் காளையைக் கட்டிப் போட ஒரு கன்னி வரப்போவது தெரியாமல் தனது காலைக் கடன்களை முடித்து விட்டு,ஒரு டி சர்ட், ட்ராக் பேண்ட்டுடன் கீழிறங்கி வந்தவன் தனது தந்தைக்கு காலை வணக்கத்தைக் கூறினான்.

“குட்மார்னிங்ப்பா”என்று புன்னகையுடன் சோபாவில் அமர,”குட்மார்னிங் தம்பி” என்று மகனைப் பார்த்து பதில் முறுவல் பூத்தவர் வழக்கமான சில விசயங்களை பேசிவிட்டு செய்தித்தாளில் மூழ்கி விட,
பணியாளிடம் ஆரஞ்சு பழச்சாறினை பெற்றுக் கொண்டு வீட்டுத் தோட்டத்திற்கு அருகே இருந்த தனது உடற்பயிற்சி கூடத்தை நோக்கிச் சென்றான் திரு.

“பேம்..பேம்”…என்று வாசலில் ஒலித்த ஹாரன் சத்தத்தில் வேகமாக நிமிர்ந்து பார்த்த ரெங்கசாமி..ஆட்டோவையும், அதில் வந்த நபர்களையும் பார்த்து விட்டு முகம் கொள்ளா புன்னகையுடன் வாசலை நோக்கி விரைந்தார்.

அங்கே கரும்பச்சை வண்ண பாவாடை..அதே நிறத்தில் ரவிக்கை..சந்தனநிற தாவணி அணிந்து,பெண்களுக்குரிய சராசரி உயரம்,மாநிற தேகம்,இடைக்கு சற்று மேலே நின்ற ஒற்றைப்பின்னல் என அழகாக வந்திறங்கினாள் தேன்மொழி.பெயரைப்போலவே தித்திப்பானவள்.உடன் அவளது தந்தை குமரகுருவும் வேட்டி, சட்டை,தோளில் துண்டு சகிதமாக ஆட்டோ ஓட்டுனரிடம் பணம் செலுத்திக் கொண்டிருக்க,

“மாப்புள...வாங்க..வாங்க..ஆத்தா தேனு வாடா..” என்று ரெங்கசாமி மகிழ்ச்சியுடன் வரவேற்க,அதற்கு சற்றும் குறையாத மகிழ்வுடன் “மாமா...நா வந்துட்டேன்” என்று துள்ளலுடன் ஓடி வந்து அவர் கையைப் பற்றிக் கொண்ட தேன்மொழி,

”என்ன மாமா…இப்புடி இளைச்சு பொயிட்டீங்க..பார்க்க சோர்ந்து போயி தெரியிறீங்க” என்று கவலைப்பட,

"அதான் நாம வந்துட்டோம்ல தேனு..இனிமே மச்சான் சரியாகிடுவாரு..என்ன மச்சான்?” என்று குமரகுரு கேட்கவும்,”கண்டிப்பா மாப்புள” என்று அவரை தோளோடு அணைத்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் ரெங்கசாமி.

நடந்த படியே வீட்டை சுற்றும் முற்றும் பார்த்து ரசித்த படி சென்ற தேனு… ”மாமா வீடா இது? சந்திரமுகி படத்துல வர அரண்மனை மாதிரியே அவ்வளோ அழகு “ என்று விழிவிரிக்க,

“அதே மாதிரி பங்களா தான்மா..ஆனா அந்த மாதிரி பேய் இங்க இல்ல”..என்று சொல்லி சிரிக்க…

“அதான் எம்மக அதுக்கு பதிலா வந்துட்டாளே மச்சான்” என்று கூறி குமரகுரு கிளுக்கிச் சிரிக்க…”அப்பா உனக்கு வைக்கிறேன் பெரிய ஆப்பா”…என்று தேனு இடையில் கைவைத்தபடி மிரட்ட,

“மாப்பு…உனக்கு வைக்கப்போறாடா ஆப்பு” ..என்று தேனுவை பின்பற்றி ரெங்காவும் கூறிவிட்டு சிரிக்க..

”மாமனாரும்,மருமகளும் ஒன்னு கூடிட்டிங்களா?அப்ப சரி” என்று குமரகுரு வாய்மீது கையை வைத்துக் கொள்ள.. மற்ற இருவரும் கொல்லென சிரித்தனர்.

“மாப்புள என் மருமக வந்த உடனே என் வீடே புதுசா இருக்குற மாதிரி இருக்கு மாப்புள” என்று ரெங்கா உணர்ந்து சிலாகித்தார்.பணியாளிடம் தேநீரை எடுத்து வர பணித்தவர், இருவரையும் சோபாவில் அமர வைத்தார்.

“ஏன் மாமா என் சூப்பர் ஹீரோ எப்புடி இருக்கார்னு நீங்க சொல்லவே இல்ல”..என்று தேனு ஆர்வமாக கேட்க,அந்நேரமாக உடற்பயிற்சியை முடித்து விட்டு வீட்டிற்குள் நுழைந்த திரு.. உள்ளே கேட்ட பேச்சொலியில் ‘யாரு வந்துருக்கா?’ என்ற யோசனையில் வர.. வந்திருந்தவர்களின் முதுகுப்பக்கம் மட்டுமே அவனுக்குத் தெரிந்தது.

“இதோ வந்துட்டானே உன் சூப்பர் ஹீரோ” என்று ரெங்கா கூற,திரும்பி பார்த்தாள் தேனு.

‘ஐயோ இவளா? இம்சை என்னைய டார்ச்சர் பண்ண வந்துட்டாளா?’ என்று அதிர்ந்து நிற்க,

“ஐயோ மாமா உங்க மகன யாரு கேட்டா? தினமும் காலையில நீங்க வாக்கிங் போறப்போ என்னோட ஃபேவரைட் ஹீரோவோட வீட தாண்டிப்போகையில அவர பாப்பேனு சொன்னிங்களே!அவரத் தான் நான் கேட்டேன்” என்றவுடன்,

’டாடிஈஈஈஈ’….என்று கத்தத் துடித்த வாயை அடக்கி விட்டு, “இவள…..” என்று திரு தன் பற்களை கடிக்க…”அப்போ எம்மகன் சூப்பர் ஹீரோ இல்லனு சொல்லவர்றியா?” என்று மகனை ஓரக்கண்ணால் பார்த்து விட்டு..உதட்டில் துடிக்கவிருந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு மருமகளிடம் விடம் ரெங்கா கேட்க,

“ஐயோ நீங்க வேற மாமா…உங்க மகன் சூப்பர் ஹீரோ இல்ல..மர்டர் ஹீரோ”…என்றதும், தந்தையும்,மகனும் புரியாமல் அவளைப் பார்க்க…

“அட கொஞ்ச நாளைக்கு முன்னாடி நம்ம ஊரு மாடெல்லாம் திடீர் திடீர்னு மர்மக்காய்ச்சல் வந்த மாதிரி மயங்கி மயங்கி விழுக ஆரம்பிச்சிருச்சுங்க… என்னாச்சு? ஏதாச்சுனு தெரியாம ஊரே சாமி குத்தமா இருக்குமோ? பில்லி சூனியமா இருக்குமோனு பார்த்தா…” அவள் சொல்ல சொல்ல ஆர்வத்தில் ரங்கா ‘ஆஆவென்று’ அவள் வாயை பார்த்துக் கொண்டிருக்க…'என்ன சொல்ல போறாளோனு' திருவும் பார்த்துக் கொண்டிருக்க,

“கடைசியில ஒரு நாள் ஒன்னு ரெண்டு மாட ஃபாலோ பண்ணி பார்த்ததுல தான் தெரிஞ்சது உங்க மகனோட பட போஸ்டர தின்னுட்டு தான் மயங்கி விழுந்துருக்குதுங்க…அதுல இருந்து உங்க மகனோட பட போஸ்டரே எங்க ஊரு பக்க சுவத்துல ஒட்டுறது இல்லைனா பாத்துக்கோங்களேன்!” என மோவாயில் கைவைத்து அவள் கூறிய விதத்தில் ரெங்கசாமி வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க,

“அடிங்….உன்ன…இந்தா வரேன்டி…என்னையே கலாய்க்குறியா வில்லேஜ் கழுத”..என்று திரு அவளைத் துரத்த…”நா வில்லேஜ் கழுதன்னா…நீ சிட்டி எரும…” என்று தன் மாமனுக்கு பின்னால் வந்து ஒளிந்து கொண்டாள் தேன்மொழி.

“அப்பா இவ வர்ரானு நீங்க ஏன் என் கிட்ட சொல்லவே இல்ல…இவள எதுக்கு இப்ப இங்க வரவச்சிங்க” என்று தன் தந்தையிடம் குதிக்க…

“இப்புடி நீ குதிக்கிறத பார்க்குறதுக்கு தான்டா மகனே!” என்று சிரித்த படி சொல்ல..”இருங்க உங்கள அப்புறம் பார்த்துக்குறேன்” என்றவன், தன் தந்தைக்கு பின்னே நின்றவளின் கையைப் பற்றி முன்னே இழுத்தவன்…

”இங்க மாடு மேய்க்கிற வேலையெல்லாம் இல்ல..அதனால் ஊரப்பக்கம் கிளம்பு”.. என்று கேலி செய்ய..

“மாடு இல்லனா என்ன மாமா நா எங்க மாமா பெத்த அருமை மகன் எருமைய மேய்க்கத்தானே வந்தேன்”..என தேனு கேலியாக சிரிக்க..” என்னடி சொன்ன?”…என்று அவளை கொட்டு வைக்கப் போக..

”அவள விடு தம்பி… உனக்கு உதவியா இருக்க நான் தான் அவள இங்க வரவச்சிருக்கேன்” என்று ரெங்கா கூற..

“யாரு இவ எனக்கு உதவியா? என்று இழுத்தவன்,”அதுவும் சரி தான் என் துணிமணியெல்லாம் துவைச்சி, அயன் பண்ணி, எனக்கு சமைச்சு வைக்கட்டும்”…என்றதும் பொங்கி எழுந்து விட்டாள் தேனு.

“என்ன சொன்ன? துணி துவைக்கவா? போயா லூசு..இனிமே இந்த தேன்மொழி தான் உன்னோட பி.ஏ. புரிஞ்சதா?” என்றதும்,

“எனக்கு நீ பி.ஏ.வா? அத நா முடிவு பண்ணனும்டி பட்டிக்காடு.எனக்கு டச் அப் கேர்ளா இருக்க கூட உனக்கு தகுதியில்ல” என்றதும் தனது சுயமரியாதை தீண்டப்பட்ட ஆத்திரத்தில்,

“மாமா நா இப்பவே ஊருக்குப் போறேன்..அப்பா வா போகலாம்” என தனது பயணப்பையை எடுத்துக் கொண்டு அவள் வாசலை நோக்கிச் செல்ல,

“நில்லு தேனு” என்ற ரெங்கா, மகன் பக்கம் திருப்பி ஒரு கண்டன பார்வையை செலுத்தியவர், “இங்க பாரு தம்பி..உன்னோட விருப்பத் துக்காகவும், பிடிவாதத்துனாலயும் சென்னையில உன்ன படிக்க வச்சேன்..எனக்கு விருப்பம் இல்லைனாலும் உன்னோட ஆசைக்காக நீ சினிமாவுல நடிக்க போனப்பவும் அமைதியா உன்னோட தான் இருக்கேன்..ஆனா கொஞ்ச நாளா உன்னோட போக்கே சரியில்ல”..தந்தையின் கண்டிப்பில் தலைகுனிந்தான் திரு.

“அப்பா..அதுக்காக இவ எனக்கு பி.ஏ.வா? இவளுக்கு என்னப்பா தெரியும்?” என்று தயக்கத்தில் ஆரம்பித்து கோபத்தில் முடித்தான்.

“உனக்கு என்ன தெரிஞ்சது ஆரம்பத்துல..நீயும் ஒரு பட்டிக்காட்டுல இருந்து இங்க வந்து தான் நாகரிகத்தை கத்துக்கிட்டு கை நிறைய சம்பாத்திக்க ஆரம்பிச்ச…அது போல என் மருமகளும் எல்லாத்தையும் கத்துக்குவா. பேரும்,புகழும் கிடைச்ச மயக்கத்துல நீ பழசையெல்லாம் மறக்க ஆரம்பிச்சிட்ட.. ஆனா என் மருமக அப்படி இருக்க மாட்டா” என்றவர்,

“ஆம்பள புள்ளையா இருந்தாலும் ஒழுக்கம் முக்கியம்னு நினைக்குறவன் நானு..கொஞ்ச நாளா உன்னோட போக்கப் பார்த்து எனக்கு சந்தேகமாக இருக்கு..என் வளர்ப்பு பொய்யா போச்சோனு” என்றதும், தந்தை தனது எதிரிக்கு முன்னால் தன்னை அவமானப்படுத்துவதை தாங்க முடியாதவன்,

“அப்பா…போதும் இப்படியெல்லாம் பேசாதிங்க..நா அப்படியெல்லாம் இல்ல”..என்று தன்னை உணர்த்திடும் வேகத்தில் வாயெடுக்க..

“அப்படி இல்லைனா கொஞ்ச நேரத்துக்கு முன்ன நீ இவள மட்டமா பேசியிருக்க மாட்ட..நீ என் மருமகள அவமானப்படுத்துறதும், என்ன அவமானப்படுத்துறதும் ஒன்னு தான்” என்றவர், “நீ என் வளர்ப்புனா அவ கிட்ட மன்னிப்பு கேளு” என்றார்.

“என்னால அவகிட்ட மன்னிப்பு கேட்க முடியாது” என்று சுவற்றை வெறித்தவாறு திரு சொல்ல, “அப்போ வா தேனு நாம போகலாம்” என அவளுடன் நடந்தார் ரெங்கா.

“அப்பா..ஏன் இப்புடி என்னைய டார்ச்சர் பண்றிங்க?” என்று அடிக்குரலில் கத்தியவன், “சாரி போதுமா” என்று தேனுவிடம் பட்டும் படாமல் கூறிவிட்டு மாடிப்படி ஏறிச்செல்ல, அவனைப் பார்த்து வெற்றிப்புன்னகை சிந்தினாள் தேன்மோழி.

தனது அறைக்கு வந்த திரு, பால்கனி கைப்பிடிச் சுவரை இறுகப் பற்றியவாறு நின்றவன், “என்னையவே சாரி கேட்க வச்சிட்டல இருடி..உன்ன வச்சு செய்யுறேன்” என சூளுரைத்தான்.
Nice start 👍
 
#10
அத்தியாயம் 8

தேன்மொழி கொலைவெறியோடு அவனைப் பார்க்க, தனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல இலகுவாக அமர்ந்திருந்தான் திரு. கோபத்தையும், அழுகையையும் அடக்க ஜன்னல் புறமாக திரும்பிக் கொண்டாள் தேன்மொழி. விமானம் நிலைபெற்று செல்லத் தொடங்கியதும் சீட்பெல்ட்டை விடுவிப்பதற்கான அறிவிப்பை பைலட் கொடுக்கவும், திரு சீட் பெல்ட்டை கழட்டிவிட்டு அருகே இருந்தவனிடம் நன்றி கூறி தேனுவின் அருகில் வந்து அமர்ந்தான்.
அவள் சீட்பெல்ட்டை கழட்டாமல் அப்படியே தலை சாய்த்து அமர்ந்திருக்கவும்,அவளது சீட் பெல்ட்டை விடுவிக்க கையை கொண்டு சென்றான்.அவனது தீண்டலில் உயிர் பெற்றவள் அவன் கையை வெடுக்கென விலக்கிவிட்டு தானாகவே பெல்ட்டை தளர்த்தினான். ஒரு தோள் குலுக்கலுடன் எதிரே இருந்த திரையில் படம் போட்டுப் பார்க்க ஆரம்பித்தான் திரு.

தேனுவிற்கோ இப்போது மட்டும் தாங்கள் இருக்கும் இடம் வீடாக இருந்திருந்தால் அவனை அடித்து நொறுக்கியிருக்கலாமே என்ற ஆவேசத்தில் இருந்தாள். பயத்தில் ஒரு அந்நிய ஆடவனின் கையை இறுக்கப் பிடித்தது மட்டுமின்றி, அவன் கத்தியதில் விமானப் பணிப்பெண் தன்னை ஒரு மாதிரி பார்த்தது என எண்ணிப் பார்த்தவளுக்கு அவமானமாக இருந்தது.


இதற்கெல்லாம் காரணம் திரு தானே என்று அவனை நினைக்கும் போது மீண்டும் மீண்டும் மனம் எரிமலையாய் குமுறியது. ‘மாமா பேச்சக் கேட்டு இவனுக்கு பிஏவா வந்ததுக்கு நாம ஊர்லயே சந்தோசமா, சுதந்திரமா இருந்துருக்கலாம்' என்று மனம் கூற அப்படியே சிந்தனையிலும், உள்ளக்குமுறலிலும் உறங்கிப்போனாள்.

ஒரு மணி நேரம் கடந்திருக்க, விமானப் பணிப்பெண் உணவுகளை கொண்டு வந்து கொடுக்க, தேனுவை திரும்பிப் பார்த்தான்..அவள் உறங்கிக் கொண்டிருக்க அவளுக்கான உணவையும் எடுத்துக் கொண்டு அவளை எழுப்பினான்.


“தேனு..தேனு எந்திரி..சாப்பிடு” என்று மெதுவாக அழைக்க அவள் எழும்பவேயில்லை..அவள் தோளில் இரண்டு தட்டு தட்ட மெல்ல கண்விழித்தவள், அவனை உறுத்துப் பார்க்க, “இந்தா தேனு சாப்பிடு” என்று அவன் நீட்டிய உணவை வெறித்துப் பார்த்தவள், எனக்கு வேண்டாம் என்பதாக தலையசைக்க..”ஹே 16 மணிநேர டிராவல்டி சாப்பிடாம இருக்காத.. இந்த சாப்பாடே கொஞ்சம் தான் இருக்கும்” என்று அவள் கைகளில் திணிக்க, வேண்டாம் என வலுவாக தனது கரங்களை மூடியவாறு திரும்பிக் கொண்டாள்.


‘ஏன் இப்புடி பண்றா.. விளையாட்டுக்குத் தானே செஞ்சேன்..இதுக்குப் போய் சாப்பாட வேண்டாங்குறா..பசிச்சா சாப்பிட்டு தானே ஆகணும்..எங்க போக போறா'..என்றபடி தனது உணவை சாப்பிட்டவன் அவளது உணவை பணிப்பெண்ணிடம் திரும்பக் கொடுத்து விட்டான்.
சிறிது நேரத்தில் திரு உறங்கி விட, பணிப்பெண்ணை அழைத்தவள் ரெஸ்ட்ரூம் செல்ல கேட்க, அவளும் தேனுவை அழைத்துச் சென்றாள். திரும்பி வந்து அமர்ந்தவள் ஒரு கிளாஸ் நீர் மட்டும் அருந்தி விட்டு கால்களைத் தூக்கி சீட்டின் நுனியில் வைத்து கால்களைக் கட்டியவாறு அமர, தூங்குவது போல் இருந்தவன் ஒரு கண்ணைத் திறந்து அவ்வப்போது அவளது செய்கைகளை கவனித்துக் கொண்டிருந்தான்.


அடுத்த உணவுவேளை வந்தபோதும் அவள் உண்ணவே இல்லை. அவனும் அவளிடம் போராடிப் பார்க்க வாயைத் திறக்காமலே மறுத்துவிட்டாள். தொடர்ந்த அவளது இந்த செய்கையால் திருவிற்கு குற்றவுணர்ச்சி ஆனது. அவன் செய்த தவறு என்னவென்பது அவனுக்கு புரிய ஆரம்பித்தது. ஆரம்பத்தில் அவள் உணவை மறுத்த போது,


“சின்ன விசயத்துக்கெல்லாம் சீன் போடுறா” என்று நினைத்தவன், எப்போதும் ஓயாமல் பேசும் அவள் வாயும், புன்னகையை மறந்த அவளின் வதனமும்..உண்ணாவிரதம் கிடந்த அவளது வயிறுமே அவனது தவறை உணர வைத்து விட்டது.


‘அச்சோ..விளையாட்டுக்குனு தானே செஞ்சேன்..அது இவ்வளவு சீரியஸான விசயமாகும்னு நா நினைக்கலையே.. என்னையத் தானே நம்பி வந்தா..அவள வச்சு அவளுக்கு துணையா இருக்க வேண்டிய நேரத்துல நாமலே அவள் கேலி பண்ணியிருக்கக்கூடாது' என்று அவன் மனசாட்சி சுட அவளை சமாதானப்படுத்த என்ன செய்வது என சிந்தித்து கொண்டிருக்கும் போதே.. விமானம் தரை யிறங்குவதற்கான அறிவிப்பு வரவும் திரு அவளுக்கு சீட் பெல்டை அணிவிக்க முற்பட, அவளோ பணிப்பெண்ணை அழைத்து அணிவிக்கக் கூறினாள்.
விமானம் தரையிறங்க, இறங்க தேன்மொழிக்கு மயக்கம் கிறுகிறுவென வந்தது. கடந்த 16 மணிநேரமாக சாப்பிடாமல் இருந்ததன் விளைவு அவனை தற்போது பயங்கரமாக வாட்டியது. அவளின் முகமாற்றத்தை கவனித்த திரு அவள் கையை ஆதரவாக பிடிக்க அதை உதறிவிட்டாள்.


விமானம் சுவிட்சர்லாந்து நாட்டின் பிரபலமான நகரும், உலக வர்த்தக மாநாடு கூடும் நகருமான ஜெனிவாவில் தரையிறங்கியது. தேன்மொழிக்கு சுத்தமாக எழ முடியவில்லை. அவளது நிலையை உணர்ந்தவன் பணிப்பெண்ணை பழச்சாறு எடுத்து வருமாறு கேட்க, அவளும் எடுத்து வந்தாள்.
பயணிகள் ஒவ்வொருவராக வெளியேற அவர்களின் படக்குழுவினர் மட்டும் தேன்மொழியை பதட்டமாக பார்த்த படி நிற்க, “நீங்க போங்க சார்..நா தேன்மொழிய கூட்டிட்டு வரேன்” என்றவன், பழச்சாறை அவளுக்கு கொடுக்க தேனுவோ குடிக்க மறுக்க, வலுக்கட்டாயமாக அவளுக்கு புகட்டி விட்டவன் மெதுவாக தோளில் சாய்த்த படி அவளை அழைத்து வந்தான். மருத்துவ உதவி வேண்டுமா? என்று கேட்க விமானப் பணிப்பெண்ணிடம் வேண்டாம் என மறுத்து விட்டான்.அவளால் நடக்கவே முடியவில்லை. வெறும் வயிறாதலால் வயிறு வலிக்க வேறு செய்தது. “ஏன்டி இப்புடில்லாம் பண்ற?” என்று அவள் காதோரம் கடிந்து கொண்டவன், செக்கிங் முடித்து அவளை வெளியே அழைத்து வர, படக்குழுவில் இருந்தவர்கள் அவர்கள் இருவரது பயணப்பொதிகளை வாங்கிக் கொண்டனர்.


டைரக்டர் ஹீரோ,ஹீரோயின் செல்ல பிடித்திருந்த உயர் ரக காரில் திருவையும், ஹீரோயினையும் ஹோட்டலுக்கு செல்லுமாறு கூற,அவன் தேனுவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவளையும் உடன் அழைத்துச் செல்ல கேட்டான். டைரக்டரும் ஒரு வித தயக்கத்திற்குப் பின் சம்மதித்தார்.
மற்ற அனைவரும் டாக்ஸி பிடித்து ஹோட்டல் அறைக்கு வந்தனர். காரை விட்டு இறங்கி ஹோட்டலுக்குள் நுழையும் போதே தேனு மயங்கி விட, அவளை வரவேற்பறையில் அமர வைத்து விட்டு அங்கு வரவேற்பிலுள்ள பெண்ணை அணுக, அவள் மருத்துவருக்கு அழைத்தாள்.

தனது அறை எண்ணை கேட்டு சாவியை பெற்றுக் கொண்டவன் அவளையும் உடன் அழைத்துச் செல்ல எத்தனிக்க, “தேன்மொழிக்கு உங்க ரூம்க்கு பக்கத்து ரூம் போட்டு இருக்கேன் திரு” என்றார் டைரக்டர் சரத். “இல்ல சார் ஃபர்ஸ்ட் டைம் ப்ளைட் ஜர்னிங்கறதால அவளுக்கு கொஞ்சம் ஹெல்த் இஸ்யூவா இருக்கு. என்னோடது டபுள் பெட்ரூம் தானே.. இன்னைக்கு அவள நான் பார்த்துக்குறேன்.. நாளைக்கு அவ ரூம்க்கு போகட்டும்” என்று திரு கூறவும்,

“இங்க ஹோட்டல்ல மெடிக்கல் ஹெல்ப் கேட்டா உடனே செய்வாங்க திரு..ஜஸ்ட் உங்க பிஏ தானே.. அவளுக்கு ஏன் இவ்வளோ ரிஸ்க் எடுக்குறீங்க” என்று சரத் கேட்க,


“என்னோட பிஏங்குறதால தான் சார் நான் இவ்வளோ கேர் எடுத்துக்குறேன். ஏனா அவ என்ன நம்பி தானே வந்துருக்கா” என்று கூறியவன் அடுத்து கேள்வி கேட்காதே என்பது போல சரத்தை பார்த்து விட்டு, அவளை தனது கைகளில் தூக்கிய படி அறைக்குச் சென்றான்.


திருவின் அறை தரைதளத்திலே இருந்தது. ஒரு பணிப்பெண் அவனுக்கு உதவி செய்ய, மெதுவாக தேன்மொழியை மெத்தையில் கிடத்தினான். மருத்துவர் வந்து சோதித்து பார்த்து விட்டு, சாப்பிடாமல் இருந்ததால் வந்த மயக்கம் என கூறியவர், இரண்டு ட்ரிப்ஸ் பாட்டில்களை அவளுக்கு செலுத்தி விட்டுச் செல்ல நல்ல உறக்கத்திலே இருந்தாள் தேன்மொழி.


மறுநாள் காலை தூக்கம் கலைந்து படுக்கையில் புரண்ட படி தேனு கண்விழிக்க, அவளது அசைவில் தரையில் அமர்ந்து அவள் தலைமாட்டில் தலை சாய்த்து உறங்கிக் கொண்டிருந்த திரு எழுந்து நிற்க, மெல்ல கண்களை திறந்தவளுக்கு தான் இருக்கும் இடம் புரிபடவில்லை. நேற்று நடந்த விசயங்களை விழிகளை மூடி சற்று யோசித்தவள் பட்டென விழிக்க, எதிரே நின்றிருந்தவனை பார்த்து தனது பார்வையில் தீயைக் கக்கினாள்.
அவளது பார்வையை உணர்ந்து கொண்டவனும், தலைமாட்டில் மெல்ல அமர்ந்து,அவள் கைகளைப் பற்ற, தேனு கைகளை உதறினாள் ஆனால் அவளால் உதறமுடியவில்லை. உடல் பலகீனமாக இருந்தது.
பலமாக கைகளை பிடித்துக் கொண்டவன்,

“தேனு என்னை மன்னிச்சிரு.. ரெண்டாவது தடவையா உன்ன ஹர்ட் பண்ணிட்டேன். நேத்து நா விளையாட்டுக்குத் தான் அப்படி செஞ்சேன். ஆனா அதோட விளைவு உன்ன இந்த அளவு வேதனைப்படுத்தும்னு நா நினைக்கல தேனு. என்னை மன்னிச்சிரு..ப்ளீஸ்” என்று அவன் கெஞ்ச,

மெல்ல தன் கைகளை உருவிக் கொண்டவள், கைகளை மெத்தையில் ஊன்றி தன் பலத்தையெல்லாம் திரட்டி எழுந்து சாய்ந்து அமர்ந்து கொண்டாள். மீண்டும் அவன் ஏதோ கூற எத்தனிக்க..’நிறுத்து’ என்பது போல கையை உயர்த்தியவள் கண்களை மூடி சாய்ந்து கொண்டாள். நீண்ட மூச்சொன்றை எடுத்துத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன், வெளியே செல்ல சற்று நேரத்தில் தேன்மொழிக்கு உதவி செய்ய ஒரு பெண் அவளறைக்கு வந்தாள்.


அப்பெண்ணின் உதவியுடன் எழுந்தவள் தன்னை புத்துணர்வு செய்து கொண்டு கட்டிலில் அமர்ந்தாள். அந்தப் பெண் தேநீர் கொடுக்க ‘வேண்டாம்’ என மறுத்தாள். ஆனால், தேனுவின் உடல்நிலையை அப்பெண் எடுத்துக் கூறவும், தேனுவிற்கு அப்பொழுது வயிறு பசியை உணர்ந்ததாலும் தேநீரைப் பருகினாள்.

காலை உணவு அறைக்கு வர, அவள் அதை தொடவேயில்லை.
ஹோட்டலிலுள்ள ரெஸ்டாரன்டில் உணவினை முடித்துக் கொண்டு அறைக்கு வந்தவன் அவள் சாப்பிடாமல் இருப்பதை பார்த்து விட்டு, ”ஏன்டி என்னைய படுத்துற.. சாப்பிடவும் மாட்டேங்குற.. வாயத்திறந்து பேசவும் மாட்டேங்குற.. உன்னைய என்கிட்ட கொண்டு வந்து விட்டாரே எங்கப்பா அவர சொல்லணும் எல்லாம்.. விளையாட்டுக்குத் தான் செஞ்சேனு சொல்றேன்ல”..என்று மீண்டும் அவன் சொல்ல, இம்முறை பொங்கி விட்டாள்.


“எதுடா விளையாட்டு..உன்ன நம்பி வந்த பொண்ண அந்தரத்துல வச்சு அசிங்கப்படுத்துரதா? நீனு நினைச்சு எவனோ ஒருத்தன் கைய பிடிச்சிட்டேன்.. அவன் என்னைய பார்த்த பார்வை இருக்கே…அவன் கத்துன கத்துல ஓடி வந்த ஏர்ஹோஸ்டஸ் அவனோட சேர்ந்து என்னைய அற்ப பிறவிய போல பாத்தளே! இதுக்கெல்லாம் யாருடா காரணம்? விளையாட்டுக்கு செஞ்சானாம்.எது என் மானம் போறது உனக்கு விளையாட்டா? என் மாமா கேட்டாறேங்குற ஒரே காரணத்துக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாம உன்கிட்ட வேலைக்கு சேர்ந்து, உன்னோட வந்தேனே அதுக்கு நீ குடுத்த பரிசு அபாரம்” என்று ஏகவசனத்தில் பேசி கை தட்டியவள் அப்படியே தலையை பிடித்துக் கொண்டு அமர, பித்து பிடித்தவன் போல அப்படியே நின்றான் திரு.


அவன் கேலி செய்யும் போதெல்லாம் எதிர்த்து கேலி செய்து அவனை ஓடவிடும் தேன்மொழி இப்பொழுது உடைந்து அழுவது அவனுக்கு நெஞ்சோரம் முள் குத்துவது போல் இருந்தது. பால்கனி கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவன் கைப்பிடி கம்பியை பற்றிய படி நின்றான். சாரல் மழையைப் போல லேசாக தூவிக் கொண்டிருந்தது பனி. அவ்வளவு குளிர்ந்த தேசத்திலும் அவன் மனம் மட்டும் இதமாக இல்லை.
பத்து நிமிடங்களுக்குப் பிறகு உள்ளே வந்தவன் தட்டில் இரண்டு பிரட்டும், ஒரு கிளாஸ் பாலையும் எடுத்துக் கொண்டு அவள் அருகே அமர, ‘இன்னும் உனக்கு புரியலையா?’ என்பது போல அவனைப் பார்த்தாள்.


“இந்தா தேனு இந்த பிரட் அ சாப்பிடு. நீ சாப்பிடலைனா நானும் சாப்பிட மாட்டேன். நாளையில இருந்து ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகுது..நா சாப்பிடாம இருந்து மயங்கி விழுந்தா ஷூட்டிங் நடக்காது.. டைரக்டருக்கு கை நட்டமாகும். அது பரவாயில்லையா?”


“இல்லன்னா உங்க மாமா அதாவது எங்கப்பாவுக்கு போன் பண்ணி நீ சாப்பிடாம இருக்கிறதையும் நா பண்ணின தப்பையும் சொல்றேன்.. எங்கப்பா என்னை என்ன திட்டினாலும், என்ன தண்டனை குடுத்தாலும் வாங்கிக்கிறேன். அப்பா என் மேல கோபப்படுவாரு..அதே நேரத்துல நம்மனால தானே மருமக இவ்வளவு கஷ்டப்படுறா..அவ கஷ்டத்துக்கு நாம காரணமா கிட்டோமேனு போற இடத்துல நிம்மதியா அவரால சாமி கும்பிட கூட முடியாது..சொல்லு நீ சாப்பிடனும்னா இந்த ரெண்டுல நா எதை செய்யட்டும்” என்று நான் சொன்னதை செய்வேற் என மிரட்டல் போலவே அவன் சொன்னாலும் அவளை சாப்பிட வைக்க அவனுக்கு வேறு வழி தெரியவில்லை.


ஒருபுறம் நேரவிரயம், பணநஷ்டம்.. மறுபுறம் மாமாவின் மனம் நோகுமே என்று சிந்தித்தவள் வேறு வழியின்றி அவன் கொடுத்த பிரட்டை சாப்பிட்டு பாலைக் குடித்தாள்.


முற்பகல் அவனது அறைக்கு வந்த ஒரு பணிப்பெண் அவளது அறை..இதற்கு அடுத்த அறை எனவும், இரவு உடல்நிலை சரியில்லாததால் திருவின் விருப்பப்படி இங்கே தங்க வைத்ததாகவும், இனி அவளுக்கு விருப்பமானால் அவளது அறையில் தங்கிக் கொள்ளலாம் என்று சொல்லவும் ‘கடவுளே மிக்க நன்றி' எனக் கூறியபடி தனதறைக்குச் சென்றாள்.

அன்று மாலை அறையில் உள்ள குளியலறையில் ஹீட்டர் போட்டு குளித்து விட்டு வந்தாள். அறையில் ஹீட்டர் இருந்ததால் குளிர் அவ்வளவாக தெரியவில்லை. உடை மாற்றியவள் மெதுவாக பால்கனிக்கு வந்து நிற்க, அப்போது தான் குளிர் உடலை வாட்டுவதை உணர்ந்தவள் கம்பளியை எடுத்து போர்த்திக் கொண்டாள்.குளிர் அடங்கவில்லை என்றதும் தனது பெட்டியிலுள்ள ஸ்வெட்டரை எடுத்து அணிந்து கொண்டாள். சென்னையில் திரு அவளுக்கு பார்த்துப் பார்த்து வாங்கிக் கொடுத்த ஸ்வெட்டர் அது. அதை உணரும் மனநிலையில் அவள் இல்லை. ஒரு மோன நிலையில் நின்றாள்.


அதே நேரம் திருவும் தனது பால்கனி கம்பியில் சாய்ந்த படி சிந்தனையில் இருந்தான். இதற்கு முன்பு சென்ற வெளிநாட்டு படப்பிடிப்புகள் எத்தனையோ மறக்க முடியாததாக இருந்திருக்கிறது. ஆனால், இந்த முறை எப்பொழுதும் அவன் மறக்க முடியாதபடி செய்து விட்டாள் தேன்மொழி.

மோனநிலையில் இருந்த இரு உள்ளமும் அவரவர் சிந்தனையிலிருந்து மீண்டு அவள் சாப்பிட்டிருப்பாளா? என்று அவனும், அவன் சாப்பிட்டிருப்பானா? என்று அவளும் எண்ணிய படி உண்டது தெரியாமல் உண்டு உறங்கியது.