உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா

#1
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா

கண்டம் தாண்டி காதல் செய்தாலும் கடுகளவும் எதிர்பார்ப்பில்லா காதல் கை சேர்வது கடவுளின் வரமே!

அத்தகைய வரத்தை பெற்ற இருவரை நம் கண் முன் கதையாக, கற்பனையாக என்றாலும் கண்ணில் நீருடனும், கடைவாயில் கடிக்கப்பட்ட சிரிப்புடனும் படிக்குமாறு படைத்த யாழ் சத்யாவிற்கு பாராட்டுகள் .

இரு வேறுபட்ட சூழ்நிலையில் நாட்டில் இருந்து வந்த இருவரின் செல்ல சண்டைகளும், சீண்டி செல்லும் கோபங்களும் பிரான்ஸ் வரை சென்று நேரில் பார்த்த உணர்வை தருகின்றன.

பழைய வாழ்வின் கசப்புகள் கசடாக கரைந்து ஒப்பாவையும் ,அவனது மொன்னமோரையும் நல்லூர் கந்தனின் மாம்பழமாகவும், சீயோலின் ராமியோனாகவும் அவர்களது காதல் வாழ வைக்கின்றது.

ஷானுவின் தவறான புரிதலாக இருந்ததை கடைசி வரை கொண்டு வந்து ஒப்பாவை ஓட்டியமைக்கு எழுத்தாளருக்கு ஏழு ஒப்பா சீரியல் பார்சல். ஒப்பா ஷானுவிடம் தாயன்பை தேடினாலும், அவனே அவளுக்கு பல நேரங்களில் தாயாக இருப்பது அருமை.

நண்பனின் நலம் நாடினாலும் நங்கையின் வேதனைக்கு வழிவகுத்தவன் ஒப்பாவின் உயரிய வாழ்விற்கும் வழிவகுத்துவிட்டான் .பணம் பிணமாக்கி விடும் என்பதை ஒரே வரியில் உணர்த்தியுள்ளமைக்கு வாழ்த்துக்கள் சத்யா.

லீயின் மயக்கும் புன்னகையை மனதின் முன் கண்டது போல ஆதூரின் அளப்பறியா காதலை கண்டிட காத்திருக்கிறேன் !
 

sudharavi

Administrator
Staff member
#2
அருமையான விமர்சனம் படிக்கும் ஆவலை தூண்டி விட்டுடீங்க...என்னையும் சப்பை மூஞ்சி fan ஆக்கிடுவீங்க போல...படிச்சிட்டு வரேன்...வாழ்த்துக்கள் சத்யா!
 
#3
அருமையான விமர்சனம் படிக்கும் ஆவலை தூண்டி விட்டுடீங்க...என்னையும் சப்பை மூஞ்சி fan ஆக்கிடுவீங்க போல...படிச்சிட்டு வரேன்...வாழ்த்துக்கள் சத்யா!
ஏங்க எதுல இந்த நாவல் இருக்கு