உன்னில் தொலைத்தேன் - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

சுகீ அவர்கள் "உன்னில் தொலைத்தேன்" என்கிற தலைப்போடு போட்டியில் இணைகிறார்கள்.
 
#2
வணக்கம் தோழமைகளே.... நான் சுகீ... உன்னில் தொலைந்தேன் ! எனது மற்றுமொரு முயற்சி... சாதாரண குடும்ப பின்னணி கொண்ட பெண்... தனது திறமையால் சமூக நிலை உயர்கிறது. ஆனால் அவளது குடும்ப வாழ்வு பல சிக்கல்கள்... அவளது சவால்கள்... அவள் வெற்றி பெறுவாளா.... என்பதை அடிப்படையாக கொண்டு எழுத படும் குறுந்தொடர்.. எனது பாணியில்....
நாயகி... சாஹித்யா...
நாயகன் ரஞ்சன்..
மற்றும் குடும்ப உறுப்பினர்கள்
மீண்டும் தொடரின் முதல் அத்யாயத்துடன் சந்திக்கிறேன்
 
#3
இன்றைய முதல் அத்யாயத்தை பதிகிறேன்..உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

உன்னில் தொலைந்தேன்!


மீண்டும் எனது அடுத்த முயற்சி...உன்னில் தொலைந்தேன்! நாயகி சஹானா சிறு வயதிலிருந்து பாடுபட்டு மேல்நிலைக்கு எவ்வாறு வருகிறாள்? அதில் அவளது இழப்புக்கள்,வலிகள்...தோள் சாயவும் வழியின்றி தன்னுள்ளே தன்னை புதைக்கும் தருணங்கள்...அவளை சுற்றியுள்ளோருக்கு அவள் மீதான எதிர்பார்ப்புகள் (?!)
நாயகன் ரஞ்சன்....குடும்ப பாரம் மட்டுமே தாங்கி பொதி சுமக்கும் கழுதை...தனக்கான உணர்வுகள் பற்றி யோசிக்கவும் இயலாத நிலையில்...தன்னை நிமிர்த்துக்கொள்ளவும் ,வாழ்க்கை பாதை அவனுக்கு விட்டு கொடுக்கா நிலையில்.....அவனது பாரங்களை பகிர அவனுக்கு மடி தேவை....அதை வாய்விட்டு சொல்லும் நிலையிலோ உணரும் நிலையிலோ அவனில்லை. அவனது உணர்வுகளை உணர, மடி தாங்க ஒப்புக்கொள்வாளா சஹானா?
விதியின் இயக்கத்தில் ,இணையும் இவர்கள் தங்கள் இணக்கத்தை எப்படி வளர்த்துக்கொள்ள போகிறார்கள்? உங்களுக்கு புரிந்திருக்கும்...அவர்கள் வாழ்க்கை அவ்வளவு சுலபமில்லை என்று.ஆனாலும்,அவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள எனக்கு மிக ஆர்வமாக இருக்கிறது. நீங்களும் என்னுடன் வாருங்கள்!!பயணம் ஆரம்பம்!...1


காலை என்றும் போல இன்றும் சஹானாவுக்கு தலைவலியுடனே ஆரம்பித்தது.! பத்தாம் வகுப்பிற்க்காக அவள் இரவு பகல் பாராமல் படிக்கும் சமயம்,அப்பா – அம்மாவின் விடிய விடிய ஏற்படும் சண்டையும், முடிவில் அம்மாவின் முனகல்களும்...அவளால் படிப்பில் தன் முழு ஈடுபாட்டை காட்ட முடியாமல் தடுத்தன!
ஏறக்குறைய இரண்டு வருஷங்களாகவே வீட்டு நிலை..சரியாக சொல்லனும்னா ...சஹானாவின் அப்பா சதாசிவம் வேலை இழந்து, சொந்த தொழில் ஆசையில் அம்மா உமாவின் நகைகளை விற்ற பொழுது ஆரம்பித்த பிரச்சனைகள்! ஏறக்குறைய ஐம்பது சவரன் நகைகள்!மிச்சமிருந்த நகைகள் இருபத்தைந்து சவரனை தன் அண்ணன் கீர்த்தி வாசனிடம் கொடுத்துவைத்தார் உமா!
இரண்டு பெண்குழந்தைகளை பெற்றிருந்த உமாவினுள் பயப்பந்து ... ஆனால்,விஷயம் அறிந்த சதாசிவமோ,மனைவி தன்மீது நம்பிக்கை கொள்ளவில்லை என்று ,அப்பொழுது ஆரம்பித்த பிரச்சனைகள்....போதாக்குறைக்கு,குழந்தைகளுக்கு,விபரம் தெரியும் சமயம் என சதாசிவமது அழைப்புகளை உமா நிராகரிக்க,நாற்பது வயதே ஆன சதாவிர்க்கு தனியே தூங்க முடியவில்லை! மனைவியின் போக்கு இப்படியாக,தனது தோல்விகளே காரணம் என அவரது மனம் முரண்டியது... அவர்கள் திருமணம் நடந்த சமயம் அவருக்கு இருபத்தைந்து வயது...உமா இருபது வயதில் கால் எடுத்து வைத்திருந்தாள்...இருவருக்குமே இளமை இருக்க மனைவி சொல்லும் காரணம் தன்னை நிராகரிக்க என்று முடிவெடுத்தவர்..இதற்குமேல் சண்டை போடுதல் சரி வராது ..என நினைத்துக்கொள்வார்.
இரவுகளில் ,சின்னவள் சாந்தினி தூங்கிவிட, படித்துக்கொண்டிருக்கும் சஹானா மனதுள்ளே விடை தெரியா ஆயிரம் கேள்விகள்!!


உமாவின் அண்ணன் சண்முகம்....அவர் கூறும் ஆறுதல் ஒன்றுதான்...கடவுளை நம்பு...படிக்கிறதுல கவனம் வை..அதுதான் உன்னையும் உன் தங்கச்சியையும் காப்பாத்தி கரை சேர்க்கும்.

முடிந்த வரை தன் மனைவி மக்களுடன் வந்து இவர்களுடன் உறவாடுவார். அவர் மனைவி ஆனந்திக்கு இந்த இரு பெண்குழந்தைகளை நினைத்து வருத்தமாக இருக்கும்.... அவரால் ஒன்றும் செய்ய முடியாதே! வரும் வருமானத்தில் தன் பிள்ளைகளின் எதிர்காலமும் கவனிக்க வேண்டுமே!ஷண்முகத்தின் மகன் ரஞ்சன்...சஹானா ரஞ்சன் இருவருக்கும் இரண்டு வருட வித்யாசம்..ரஞ்சன் தங்கை காயத்ரி ..காயத்ரியும் சாந்தினியும் ஆறுமாத இடைவெளியில் பிறந்தவர்கள்.

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ரஞ்சனுக்குள் ,சஹானா மீதான உணர்வு, அத்தை மகள் எனும் உரிமை உணர்வு...அவளை அவன் தன் சொத்தாகவே நினைக்க ஆரம்பித்திருந்தான். வெளியில் சொல்ல இது நேரமல்ல என யோசித்து அந்த உணர்வை தனக்குள்ளேயே அடக்கிவிட்டான்..

அவன் தேர்வுகள் முடிந்து வெளியூரில் பொறியியல் படிக்க கிளம்ப, சஹானாவின் அப்பா சதாசிவம் பெங்களூருவில் வேலை கிடைத்து சென்றார்..குடும்பம் சென்னையில்....சண்முகம் பார்த்துக்கொள்வதாக சொல்லி அனுப்பினார்...அங்கு சென்று ஆறு மாதங்களில்,தனிமை தாங்காத சதாசிவம் உடன் பணிபுரியும் சரஸ்வதியை மணந்து கொண்டார்..சரஸ்வதி இளம் விதவை...ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் குழந்தை உண்டு.. திருமணம் முடிந்து ஒரு வருடத்திலேயே கணவனை இழந்த அந்த பெண்ணின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு ,தன் உணர்ச்சிகளுக்கு வடிகாலாக்கிக்கொண்டார் சதாசிவம்.

ஏறக்குறைய இரண்டாண்டுகள் இரட்டை மாட்டு வண்டி சவாரி செய்தவர் அலுத்துபோய், சம்பாதிக்கும் ,அதே சமயம் தன்னையும் அனுசரிக்கும் மனைவி போதுமென முடிவெடுத்து,அதை உமா மற்றும் வீட்டினரிடமும் சொல்லி விட்டார்....
சிறு வயதில் திருமணம் செய்து,கணவனை மட்டுமே நேசித்த உமாவிர்க்கு இது அதிர்ச்சியே! விவாகரத்து செய்ய பிடிக்காமல்,கணவனின் இரண்டாம் திருமணத்தில் தனக்கு சம்மதம் என எழுதிக்கொடுத்துவிட்டார்.


பொறியியல் சேர நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்த சஹானா அரசு இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் சேர, தமயனிடமிருந்து , தனது நகைகளை கொஞ்சம்கொஞ்சமாக வாங்கி குடும்பத்தை நடத்தினார் உமா.

ரஞ்சன் படிப்பு முடிய இன்னும் இருமாதங்களே எனும் நிலையில்,கேம்பஸில் தேர்வாகி பரீட்சைக்கு படித்துக்கொண்டிருந்தான் ரஞ்சன்.....அவனுள்ளே, சீக்கிரம் சஹானாவை திருமணம் செய்துக்கொள்ளவேண்டும்.அதற்கு முன்னர் காயத்ரி திருமணத்திற்க்கு தன்னால் முடிந்தவரை சேர்த்து அப்பாவிடம் கொடுக்கணும் என்று ஆயிரம் யோசனைகள்! நிஜத்தில் சஹானாவை விட்டு அணுவளவும் நகர்ந்திருக்க அவனால் முடியவில்லை! அவளின் பிரச்சனைகள் தெரிந்தும் தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற எண்ணம் அவனுள்ளிருந்த காதலனை உரிமைக்காக ஏங்க வைத்தது!

நீ எவ்வளவு வேண்டுமானாலும் ஏங்கி கொள்.....உனக்காக நான் வைத்திருப்பது வேறு என்றது விதி. சஹானா எந்த உணர்வுகளும் அற்ற பற்றில்லா நிலையில் தவம் போல படித்தாள்..குடும்ப நிலை, அவளுள்ளே, நெருப்பாய்....
உன்னையும்,உன் உணர்வுகளையும் முன்னிறுத்தி யோசித்தாயே,உங்கள் இருவரின் சேர்க்கையில் பிறந்த எங்களை ஒருக்ஷணமாவது நினைத்தாயா? என்று தன் அப்பாவிடம் மனதில் கேட்கும் கேள்விகள் அவளை வேற்று உணர்ச்சிகளுக்கு அனுமதிக்கவில்லை, ரஞ்சனின் பாக்கியம்,அவன் காதலிக்கும் பெண் காதல் எனும் வார்த்தையே அறியாதவளாக !


ரஞ்சன் கல்லூரி முடித்து வேலைக்கு சேர்ந்த சமயம்,என் கடமை முடிந்தது என உலகிலிருந்து விடை பெற்றார் சண்முகம். மாசிவ் அட்டாக் என்றனர் மருத்துவர்கள்.
ஆனத்தி புற்றுநோயால் அவதியுர ,அவரது சிகிச்சைக்காக வீட்டை வைத்து பல லட்சங்கள் செலவு செய்திருந்தார் சண்முகம். போறாத குறைக்கு மகனின் கல்லூரி படிப்பு செலவு வேறு. மனைவியை காப்பாற்றியவர், தங்கை குடும்பத்தை அடைக்காத்தவர் ,பாரம் தாங்காமல், அதனை ரஞ்சன் எனும் இளைஞனிடம் ,இனி நீ பொறுப்பு என்றுவிட்டு சென்றுவிட்டார்.


இந்த பாரம் ரஞ்சனை விட்டு வைக்குமா?

உறவுகள் பல நிறங்களை தன்னுள்ளே கொண்டது...சில சமயம் கறுப்பும் வெள்ளையுமான கலவைகள்...நமது துன்ப நேரங்களில் அந்த நிறம் வெளிப்படும்! கடன் சுமை,பெண்பிள்ளை உள்ள வீடு என உறவுகள் மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டன...
கணவன் சரி இல்லை என ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்தது உமாவின் குடும்பம், இப்பொழுது,சண்முகம் குடும்ப நிலையும் அதுவே!


ஆனந்தியின் புற்றுநோய் சிகிச்சை எண்பது சதவிகிதம் குணமான நிலையில், பாதியில் சிகிச்சை நிறுத்தமுடியாது....அதனால்,ரஞ்சன்,அந்த வீட்டை விற்று கடன்களை அடைத்து, மீதி பணத்தை,மருத்துவ செலவிற்க்கு வைத்துக்கொண்டான்...கல்லூரி முடிந்து ,வழி காட்டும் தந்தையை இழந்து, உடன் பிறந்த தங்கையின் பொறுப்புடன்,தன் காதலை இனி எப்பொழுது வெளிபடுத்த முடியும் என்ற கேள்விக்கு விடையே இல்லாமல்,வெறும் கிடைத்துள்ள வேலையை மட்டுமே நம்பி, ரஞ்சன் தனியே நிற்கிறான்.
அவனை, மடியில் சாய்த்துக்கொண்டு,ஆறுதல் சொல்லும் நிலையில் அவன் அம்மா இல்லை..எப்படியாவது அவர்களையாவது தக்க வைத்துக்கொள்ளும் போராட்டம்.


மூன்றாம் ஆண்டு கல்லூரியில்,சஹானா.... முதலாமாண்டு பி.எஸ்சி கணினி துறையில் காலடி வைத்திருந்தாள் சாந்தினி....பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் காயத்ரி.ஒரே ஆண்மகன் ரஞ்சன். கற்பனைக்கும் எட்ட முடியாத நெருக்கடியில், அவனது வயதுக்குரிய ஆசைகளும் ,உணர்ச்சிகளும், எப்படியோ அவனைவிட்டு போய் விட்டிருந்தது..
அவனை உணரும் நிலையில் வீட்டில் யாருமே இல்லாதது ..என்ன சொல்வது? கூட இருப்போரையும் சிரிக்க வைக்கும் ரஞ்சன் சிரிப்பின் சாயலையும் மறந்திருந்தான்...இழந்தவற்றை மீட்டு எடுப்பதில்,அவனுடைய அடிப்படை குணாதிசயங்கள் மறத்து போய்விட்டனவோ?


கல்லூரியில், சஹானா அழகு ,பண்புகளை பார்த்து சக மாணவர்கள் அவளை காதலிப்பதாக அணுக, அவள் முடிவு மன்னிக்கவும் என்பதே!
கல்லூரி சேரும் சமயம் ,அவள் கன்னத்தில்,மென்மையாய் தட்டி கொடுத்த ரஞ்சன் முகம் மட்டும் எப்பொழுதாவது நினைவில் வரும்...அந்த நினைப்பை எடை போடும் அளவிர்க்கு அவளும் யோசிக்கவில்லை!


ரஞ்சன் அத்தானின் நிலை தெரியும்..அவரை கவனிப்பாரில்லை. அம்மாவிடம் சொல்லி அவரை பார்த்துக்கொள்ள சொல்லவேண்டும் என்று மனதினுள் நினைத்துக்கொண்டாள்.
கல்லூரி முடிந்த பின்னர் ,தன் நிலையும் அதுதானே? குடும்பத்தையே மூத்த ஆண்மகனின் பொறுப்பில் கவனித்தாக வேண்டும். அங்கே அத்தான்,இங்கே நான்.
எப்படியாவது கேம்பஸில் தேர்வாகிவிட வேண்டும் என அவள் ஆழ்மனம் போராடியது. ஆனந்தி மாமி,தேறி விட்டால் ரஞ்சன் அத்தான் நிலை சற்று பரவாயில்லாமல் இருக்கும்...அவள் மனம் மீண்டும் மீண்டும் அவர்கள் குடும்பத்தை மீட்டெடு இறைவா என்று பிரார்த்தனை செய்தது! அவளால் அவ்வளவுதான் முடியும்!
அவள் பிரார்த்தனை பலிக்க செய்யுமா தெய்வம்?


சாந்தனி கல்லூரியில் சேர்ந்துவிட, வீட்டில் அம்மாவை பார்த்துக்கொள்ள ஆளில்லாமல், தங்கையை வீட்டில் இருக்கச் செய்தான் ரஞ்சன். பன்னிரண்டாம் வகுப்பு முடிந்து ,நல்ல மதிப்பெண்கள் பெற்றும் கல்லூரி செல்ல முடியா நிலையில்,முதன்முறையாக காயத்ரிக்கு சாந்தினி மீது பொறாமை வந்தது..
அடுத்த வருடம் கல்லூரி போகலாமே என்ற அண்ணன் மீதும் கோபம்..அவள் நினைக்க மறந்தது அவள் அம்மாவின் உடல் நிலை.
ரஞ்சனுக்கு இப்பொழுது ,நாற்பதாயிரம் வருகிறது. அவன் கார் தொழிற்சாலையில் வேலை செய்கிறான். வெளிநாடு செல்ல அவனுக்கு வாய்ப்பு உண்டு..ஆனால், ஜெர்மானிய மொழி பயில சொன்னது நிர்வாகம்...ஆம்,அவன் வேலை செய்வது ஜெர்மானிய கார் தொழிற்சாலையில்.
அவன் வாங்கும் நாற்பதில்,வீட்டு வாடகை, வீட்டு நிர்வாக செலவுகள் போக கையில் இருப்பது சொற்ப பணமே!


தங்கையின் கல்வி,திருமணம்....அவன் தனக்காக செலவு செய்துக் கொள்ளும் நிலையில் இல்லை..சில நவீன தொழிற்நுட்பங்களை மட்டும் அப்பொபொழுது மேம்படுத்தி கொள்ள படிப்பான். அதுவும் ,வேலையை தக்க வைக்கவே..
.அவனுக்கு நேரமும் இல்லை..புது மொழி கற்க.


இப்பொழுது ஆனந்தி பரவாயில்லை..ஆனால்,அவரது பழைய ஆரோக்யம் போய் விட்டது.இந்த வருஷம் நா கண்டிப்பா கல்லூரி போவேன் என்று நின்ற தங்கையை சமாதானம் செய்ய முடியவில்லை. அது சரியும் இல்லையே?


பொறுத்திருந்து பார்ப்போம்!

மீண்டும் சந்திப்போம்!
சுகீ.
 
#4
பயணம் 2:
..


தங்கையின் எதிர்காலம் ,தாயின் உடல்நிலை இரண்டையும் நினைத்து நிரந்தரமாக, இரவு பணி வாங்கிக் கொண்டான். வீட்டில், வேலைகள் செய்து,அம்மாவை கவனித்து, மாலை ஆறு மணிக்கு கிளம்புவான். அதிக பணமும் வந்தது இரவு வேலையில்.
தூக்கமும் குறைந்துவிட, இப்பொழுதெல்லாம்,ரஞ்சனுக்கு கோவம் ,ஆற்றாமை, அதிகமாகிவிட்டது.
முடிந்தபொழுதுஉமாஅத்தைவருகிறார்தான்...ஆனால், சுய பச்சாதாபத்தில் ,அவரால்,ரஞ்சனை வழிநடத்த முடியவில்லை!


கல்லூரி வளாக தெரிவில், சஹானா பிரெஞ்சு கம்பனியில்,கணினி மென்பொருள் துறையில் வேலைக்கு சேர்ந்தாள்....கையோடு,அந்த மொழியையும் கற்றாள்.
மென்பொருள் துறை என்பதாலும்,வீட்டில் ரஞ்சன் வீடு போல் வேறு நெருக்கடிகள் இல்லை என்பதாலும், அவளால்,தன் சுய மேம்பாட்டிற்க்கு வழி செய்துக் கொள்ள முடிந்தது. நிர்வாக துறையில் மேலே படித்து ,பட்டமும் பெற்றாள்.


சாந்தினி மூன்றாம் வருடம் படிக்கும் பொழுதே சொல்லிவிட்டாள்.,மேலே படிக்கும் திட்டம் உள்ளதாக...இப்போதைக்கு, இவ்வளவுதான்! சஹானா,நிம்மதியாக வேலையில் ஈடுபாட்டை செலுத்த, அவளுக்கான வாய்ப்புகள், தன் பூட்டுகளை கழற்றிக்கொண்டது.
அவர்கள் வாழ்வில் சதாசிவம்,மறக்கபட்டார்....அப்படிதான் சஹானா நம்புகிறாள்...
நல்ல சம்பளம் வருவதால், சாந்தினியின் படிப்பு செலவு பெரியதாக அந்த குடும்பத்திற்கு தெரியவில்லை..இங்கு ரஞ்சனோ, காயத்ரி கல்லூரி செலவை சமாளிக்க மிகவும் கஷ்டப்பட்டான். தனியார் கல்லூரியில் நர்சிங் படித்தால் காயு. பிற்காலத்தில் வேலை வாய்புக்கள் குறையாது எனும் அவள் வாதம் சரியானதே..பிறகு எப்படி மறுக்க முடியும்?


காயத்ரி இரண்டாம் ஆண்டு படிக்க, சாந்தினி எம் சி ஏ சேர்ந்து விட்டாள்.
சஹானா வேலை செய்த நிறுவனம் அவளை ஃபிரான்ஸ் அழைத்து சென்றது மூன்றாண்டு காலத்திற்க்கு . ரஞ்சன் சம்பள உயர்வு தவிர வேறேதும் முன்னேற்றம் இல்லாமல் காத்திருக்கிறான்.அவன் சூழ்நிலை அவனுக்கு சாதகமாக இல்லை.

ரஞ்சனின் தங்கை நர்சிங் முடித்து, இந்தியா முழுதும் புகழ் பெற்ற ஒரு மருத்துவ மனையில் வேலையில் அமர்ந்தாள். நல்ல சம்பளம் வர தன் திருமணத்திற்காக சேர்க்கலானாள்.... வீட்டு செலவுகளுக்கு ஒன்றும் கொடுப்பதில்லை. அது ரஞ்சன் பொறுப்பு என்பது அவள் மனதில்...அவன் செய்த நன்மைகள் ஏனோ அவள் மனதில் பதியவில்லை.
மருத்துவ மனையில் மருத்துவராக பணிபுரியும் ராகேஷை காதலிக்க, நிறைய சீர் செய்து திருமணம் செய்விக்க வேண்டிய நிலைக்கு தள்ள பட்டான் ரஞ்சன்.
அம்மாவின் நகைகள், சேமித்த பணம்,தவிர கடன்களை வைத்து அந்த முப்பது வயது இளைஞன் தன் தங்கையை கல்யாணம் செய்து அனுப்பினான்.
தன் சமூக அந்தஸ்த்து உயர்ந்து விட்டதேனும் அகங்காரத்தில் காயத்ரி சென்றுவிட்டாள்.
தன்னை விட சிறியவள் திருமணம் முடிந்து செல்ல, தான் திருமணம் ஆகாமல் இருப்பது தாள முடியவில்லை, இப்பொழுதே ,மாப்பிள்ளை பார்க்கணும் என்று வானம் வரை குதித்தாள் சாந்தனி...அவள் இப்பொழுது ,மென்பொருள் நிறுவனத்தில் மார்க்கெட்டிங்க் துறையில் வேலை...நல்ல சம்பளமும் வருகிறது!


உமாவிர்க்கும் உள்ளூர புகைய, மூத்தவளும் திருமணம் ஆகாமல் இருப்பதை மறந்து விட்டார். பொருளாதார நிலை உயரவும்,மீண்டும் சொந்தங்கள் இணைய, சண்முகம் குடும்பம் மீது காழ்புணர்ச்சி பெருகிவிட்டது.

பிரான்சிலிருந்து இப்பொழுது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வேலை செய்யும், சஹானா தன்னை பற்றி மறந்து பலகாலம் ஆகிறது! நான்கு படுக்கையறைகள் கொண்ட வீடு சென்னையிலும், பங்களூரின் ஜெ‌பி நகரில் மூன்று படுக்கையறைகளுடன் ஒரு வீடும் வாங்கிவிட்டாள். அம்மாவிர்க்கும்,தங்கைக்கும் கூட வருங்கால வைபுநிதிகள் ,நகைகள்...நிறையவே சேர்த்தாயிற்று.

மனதில் எழும் தனிமை உணர்வுகளுக்கு வடிகால்தான் இல்லை. போன முறை விடுப்பிற்க்கு சென்ற பொழுது அம்மா ,சாந்தினி இருவரும் இவளை பார்க்க வந்த ஆனந்தி மாமியையும் ,ரஞ்சன் அத்தானையும் நடத்திய விதம் ..அவர்கள் இருவரும் இவளை வளைத்து போட யோசிப்பதாய்,அவர்கள் இவர்களிடம் எதையோ எதிர்பார்ப்பதாய்.......நிச்சயம் சரி இல்லைதான்!

அவர்கள் இருவரும் புன்னகை மாறாமல் கிளம்பிச் செல்ல,மனம் தாளாமல்,இவள் தனியே ,ரஞ்சன் வீடு சென்று மன்னிப்பு கேட்டு வர வேண்டியதாயிற்று!
இவளிடமும், புன்னகை மாறாமல் இருவரும் வரவேற்றனர்...ரஞ்சன் அலுவலகம் கிளம்ப,பல வருடங்களாய்,புன்னகை மறந்த தன் மகனை பற்றி வருந்தி அழுதார் ஆனந்தி.
தன் அப்பா போல் இல்லாமல்,குடும்ப பாரத்தை,சண்முகம் மாமா போலவே தோள்களில் சுமக்கும் ரஞ்சனிடம்,அந்த பெண் மனம் விரும்பியே சாய்ந்தது.
அவன் மனம் தெரியாது! முப்பத்திரண்டு வயதுக்கும் மேலாக காட்டியது அவன் முகம்,காதோரம், சில நரை முடிகள்,கண்ணோரம் சிறு சுருக்கம்....
பழைய ரஞ்சன் அத்தானின் மெல்லிய,புன்னகையை தன்னுள்ளே அடக்கி கண்களால் சிரிக்கும் பூமுகம் தொலைந்துவிட்டதே?


உள்ளூர அழுத்திய பாரத்துடன் தான் அவள் அமெரிக்கா வந்ததே...இப்பொழுது, தங்கைக்கு நல்ல வரன் தகைவதாய், பண நகை கணக்குகளுடன் மெயில் அனுப்பி இருக்கிறாள் அவளன்னை. எல்லாம் சேர்த்து முப்பது லகரங்களுக்கும் மேல் கணக்கு வந்தது.
ஆடம்பர வாழ்க்கை,அடிப்படை பாசத்தை மறக்கடிக்குமா? தன்னிடம் மீதமிருந்த பத்து பவுன் நகை தவிர வேறொன்றும் இல்லை எனும் நிலையில், தன் பெண்ணுக்காக உருகிய அன்னை,இன்று பணத்திற்காக மட்டுமே தன்னை அணுகுகிறாள் என்று எண்ணியவளாக, தன்னிடமுள்ள இருப்புகளை கணக்கெடுக்க தொடங்கினாள் பெண்!
நானும் அவர்கள் மகள் தானே,என்னை பற்றிய நினைவுகள் அவர்களுக்கு ஏன் வரவில்லை?உள்ளுக்குள் பெரும்வலி....வெளியில் காண்பித்துக்கொள்ளாமல் கல்யாண வேளைகளில் சுழன்றாள் சஹானா...
அவளது வேலை, வரவு பற்றி விசாரித்த ,மணமகன் வீட்டார்,மூத்த மகளுக்கு கல்யாணம் செய்யலயா என்பதை மட்டும் கேட்பதை தவிர்த்தார்கள்....ஒருவேளை ,பணம் காய்ச்சி மரம், காய்ப்பத்தை நிறுத்திவிட்டால் என்று யோசித்திருபார்களோ?
ஆடம்பர கல்யாணம். ரஞ்சன் ரிசப்ஷனுக்கும்,ஆனந்தி திருமணத்திர்க்கும் வந்தனர்..அவர்களை சொந்தம் என காண்பிக்க விரும்பவில்லை உமா...
மணமகன் வீட்டில் ,அப்பாவை கேட்பதாக கூறி, சதாசிவத்தை வரச் செய்திருந்தார் உமா...முதுமையில்,இரண்டாம் மனைவி ,தன் பெண்ணுடன் ஸ்பெயின் சென்று விட்ட நிலையில்,தனியே தவித்திருந்த சதாசிவம் ,வந்து ஒட்டிக்கொண்டார்...உமா அவரை மகிழ்வாகவே ஏற்று கொண்டாள்.


சாந்தனிக்கு,கணவன் வீட்டில் மரியாதை தேவைப்பட அவளும் அமைதியாகவே அப்பாவை ஏற்றுக்கொண்டாள்....நடப்பதை ஜீரணிக்க முடியாமல்,சொந்த குடும்பத்திலேயே அன்னியமாக உணர்ந்தாள் சஹானா!

நீ கிளம்பி யு.எஸ் போய்டுவ, சாந்தினியும் கல்யாணமாகி கெளம்பின பிறகு ,நா தனியா இருக்கணுமா? உமாவின் கேள்வி ,சஹானாவை வாயடைக்க செய்தது!
நிகழ்ந்தவை எதுவும் பிடிக்காதவையாக...அந்த வீட்டில்,மூச்சு மூட்டுவதாக ...ஒரு மாத விடுப்பை முடித்து,மன பாரத்துடன் கிளம்பினால் , ரஞ்சனின் ஞாபகங்கள் அவளை சுழற்றி அடித்தது!
என்றோ, தன் காதலை புதைத்தவனுக்கு, அந்த புதையலை வெளிக்கொணர முடியவில்லை!


சஹானா இப்பொழுது ,மெருகேறி,பணக்காரத்தனமான முகமும்,செழுமையும், அவளிடம் தான் என்றுமே நெருங்க முடியாது,உறவுக்காரனாகக்கூட என்ற உண்மையை பொட்டில் அறைந்தது போல தெரிவிக்க,அவன் ஏன் அந்த காதல் புதயலை தேடுகிறான்?

காதல் கை சேரும் நேரம், அவன் அதை உணர்வானா? கொண்டாடுவானா என்பதுகூட சந்தேகமே! அந்த அளவிர்க்கு,தன்னுள்ளே தன்னை புதைத்துக்கொண்டான்.
ஓரளவிர்க்கு,கல்யாண கடன் அடைய, தொள்ளாயிரம் சதுர அடியில்,இரண்டு படுக்கை அறைகளுடன் வீடு வாங்கினான் ரஞ்சன்! கிருக பிரவேச விழாவிர்க்கு,வந்த உமா தம்பதிகள்,இவனை ஏளனமாக பேச, மற்ற உறவினர்க்கும்,இவர்களுக்கும் வேறுபாடு இல்லை என நகர்ந்தான்! அவன் முகம், ஏளன முறுவலையும்,கடினத்தன்மையும் கொண்டு அவன் மனதை பறை சாற்றுவதாய்!


ஆனந்தி உமாவின் நடவெடிக்கைகளில்,மிகுந்த வருத்தம் கொண்டார்! தன் மகன் படும் பாடு அவளை சோர்வடைய செய்தது!

தங்கையின் குழந்தை பிறந்த பொழுதே பார்க்க சஹானாவாள் வரமுடியவில்லை.ஒருவயது நிறைய, ஆடம்பரமாக செய்ய சஹானா வர வேண்டி இருந்தது...முப்பத்துமூன்று வயதில், அவள் ஏக்கங்கள் புறம் தள்ளப்பட, அந்த ஓவியம்,புன்னகை இழந்து சிரித்தது...
ரஞ்சனோ,ஆனந்தியோ,வராத நிலையில், அவர்கள் நிலை புரிய, ரஞ்சன் வீடு நோக்கி பயணபட்டாள் மங்கை.


வீடு அழகாய் இருந்தது..தேவையற்ற ஆடம்பரங்கள் இல்லை..தான் இதுபோன்ற ஓரிடத்தில் இருந்தால் தேவலை என அவள் ஆழ்மனம் ஏங்கியது!
ரஞ்சன் வீட்டில இல்லை! அவன் சஹானா கண்களில் தென்படுவதே இல்லை...வேண்டுமென்றே அவள் வரும் நேரங்களை தவிர்த்து சென்று விடுவான்!
கிருக பிரவேச சமயம் நடந்தவற்றை, ஆனந்தி சொல்ல, எரிமலை ஆனாள் சஹானா.

ரஞ்சன நினைச்சாலே ரொம்ப கவலையா இருக்கு., கல்யாண கடன் இன்னும் முழுசா அடையல., வாடகை கொடுக்குற செலவுக்கு வீடு வாங்கிடலாம்னு இதை வாங்கி இருக்கான். இளமை முழுசா போற முன்ன கல்யாணம் செஞ்சுக்கிட்டா பரவாயில்லை என தான் போக்கில் பேசி சென்ற ஆனந்தி, நீ எப்ப கல்யாண சாப்பாடு போடப்போற என வினவ,


ஏன் வீட்டில்,எனக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்று சொல்ல முடியாமல் முழுங்கினாள். ரஞ்சனின் நிலை தன்னைவிட குறைவு என்றாலும், அவனுடன் வாழும் வாழ்க்கை சந்தோஷத்தை தரும் என அவள் மனம் அவளிடம் வாதிட்டது.
மனமும்,உடலும் அவனுக்காய் ஏங்க, ஆனந்தியிடம் நேராகவே கேட்டு விட்டாள் சஹானா....


மாமி , ரஞ்சன் அத்தான நா விரும்புறேன்! கல்யாணத்துக்கு,நீங்க ஒப்புக்குவீங்களா என்று....
நா ஒத்துக்கிட்டாலும்,ரஞ்சன் ,உங்க வீட்டு பெரியவங்க ஒத்துக்க மாட்டாங்க சஹானா என்று தான் சம்மதத்தை மறைமுகமாக சொல்லிவிட்டாள் ஆனந்தி!


இனி.... பொறுத்திருந்து பார்ப்போம்!

மீண்டும் சந்திப்போம்.
சுகீ.,
 

sridevi

Well-known member
#5
Superb dear. Santhini &gayu rendum suyanalavathiya irukangale intha uma ranjan ai avamathipathu.. pazhasu ellam maranthituchu
Sahana ku marriage pannanumnu ennam illaye
 
#6
பயணம் 3

நேரமும் காலமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. சாந்தினியும் ,காயத்ரியும் அவரவர் குடும்ப வாழ்வில் சுறுசுறுபாகிவிட, சஹானாவும் ,ரஞ்சனும் திருமணமாகமல் மிச்சமாய்!.. ஆனந்தி தனது உடல் உபாதைகளால் பெரிதும் தளர்ந்து காணப்பட்டார். அவருக்கு தேவையான உணவு முதல் எல்லாவற்றையும் ரஞ்சனே செய்துவிட்டு அலுவலகம் செல்வான். அவனுக்கு
சம்பளம் இப்பொழுது நன்றாகவே வருகிறது!


வீட்டுக் கடன் போகவே அவனால் சமாளிக்க முடியும்.

சஹானா வீட்டில் , சஹானா அமெரிக்காவில் இயந்திரமாய் மாறி இருக்க , இங்கு அவள் அனுப்பும் டாலர் கணக்கிலான ரூபாய்கள், அடிப்படையாக இல்லாமல் ஆடம்பரத்தை பழக்கி விட்டது உமா – சதாசிவம் தம்பதிக்கு. உமா, தான் இழந்த இளமை நாட்களின் சந்தோஷங்களை கணவருடன் சேர்ந்து இப்பொழுது ஈடு செய்ய முனைந்தார்.

சஹானா எப்பொழுதேனும் இந்தியா வரும் சமயம் அவளின் பெற்றோர் வெளிநாடு பயணம் சென்றிருப்பார்கள். திருமனமோ வேறு எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் ,தனியாய் நிற்கும் தனது மூத்த மகள் பற்றிய அக்கறை ஏனோ அவளது பெற்றோரால் மறக்கப் பட்டது!
துன்ப காலத்தில் தன்னை தாங்கிய அம்மா ,பணம் கொட்டும் சமயம் மாறிப் போனது ஏன் என்றுதான் சஹானாவால் புரிந்துகொள்ள முடியவில்லை.


டிசம்பர் மாத விடுமுறையில், விடுப்பு எடுத்துக்கொண்டு சஹானா வர அவளது பெற்றோர் சாந்தனியின் மாமனார் மாமியாருடன் ,துபாய் சென்றுவிட்டார்கள்!
அவர்கள் ஊரில் இல்லை என்பதால் ஆனந்தி தைரியாமாய் இவளை பார்க்க வந்து சென்றார். இவளும் முடிந்தபொழுது அங்கு சென்றுவிடுவாள்.


தனிமை தாங்க முடியாத ஒன்றாய் ஆகி விட்டிருந்தது அவளுக்கு. அங்கும் தனிமை, இங்கும் தனிமை..நான் என்ன பணம் கொட்டும் இயந்திரமா? எனக்கென்று உணர்ச்சிகள் இருக்காதா?

அவளது ஆழ்மனம், குடும்ப வாழ்க்கைக்காக ஏங்கத் தொடங்கி பல மாதங்கள்..இல்லை இல்லை வருஷங்கள் ஆகிறது.
கண்டுகொள்பவர்கள்தான் இல்லை....சாந்தினிக்கு குழந்தையும் பிறந்துவிட்டது....அதற்க்கு சீர் செய்ய இரண்டு லகரங்கள் இவள்தான் கொடுத்தாள். அந்த குழந்தைக்கும் மூன்று வயது ஆகிறது!


வாய் விட்டு இந்த உணர்ச்சியை யாரிடம் சொல்வது? ம்ஹூம்... ஆனால் ,ஆனந்தி மாமி ,சஹானா அவர்கள் வீட்டுக்கு வரும்பொழுது,ரஞ்சன் திருமணம் செய்துகொள்ள மறுப்பது பற்றி சொல்லி ரொம்பவும் வருத்தப் பட்டார்.

அவனோட மனச புரிஞ்சுக்கவே முடியல சஹானா..ஒருவேளை,என்னோட உடம்பு நிலை யோசிச்சு, கல்யாணம் வேணாங்கரானான்னு புரியல....நா ஒருத்தி இருந்து,என்னோட புள்ள சந்தோஷத்தை தடுக்க வேணாம்...சீக்கிரம் போயி சேர்ந்தா பரவா இல்ல...என அழுதார்.
அவராலும், தன் மகளிடம் கூட இதுபற்றி பேச பிடிக்கவில்லை..புதிதாய் அமைந்துள்ள ஆடம்பர வாழ்க்கை, காயத்ரியை நிரம்பவே மாற்றி விட்டிருந்தது. இங்கு வருவதே தனது மாமியார் வீட்டு தகுதிக்கு குறைவு என இங்கு வருவதும் இல்லை.!


இத்தனை நிறைய சம்பாதித்தும், குணம் மாறாமல் இருக்கும் சஹானா அந்த தாயாருக்கு உயர்வாய் தெரிந்ததில் வியப்பில்லை.

நீயும்,நல்ல பைய்யன பாத்து கல்யாணம் செஞ்சுக்கோ சஹானா..இதுக்கும் மேல தள்ளி போடாத ...இப்பவே வயசு முப்பத்தி மூணு... என்று இவளுக்காகவும் வருத்தப் பட்டார்...ஆனால்,ஏனோ சஹானா ரஞ்சனை திருமணம் செய்துகொள்ள கேட்டதற்க்கு பதில் சொல்லவில்லை.

சகானாவை திருமணம் செய்துக் கொள்கிறாயா என ஆனந்தி ரஞ்சனிடமும் கேட்கவில்லை.
மனதை வெளியே சொல்ல முடியாமல்,வீட்டிற்க்கு கிளம்பினாள் சஹானா. அவள் பெற்றோர் பொங்கல் சமயம்தான் வருகிறார்கள். இவளோ, ஜனவரி ஐந்து கிளம்பவேண்டும். சில வருஷங்களாக இதுதான் நிலை..பெற்றவர்களை பார்த்தே வருஷங்கள் ஆகிறது..அவர்களும் அமெரிக்கா சென்று இவளுடன் இருக்க விரும்பவில்லை...ஒருவேளை இவள் அப்பாவை மன்னிக்காத காரணமாய் இருக்கலாம் என இவளே மனதை தேற்றிக் கொண்டாள்.


இவள் ரஞ்சன் வீட்டிர்க்கு செல்லும் சமயங்களில் அவன் வீட்டில் இருப்பதில்லை...ஏன் என்று யோசிக்க இவளுக்கும் பிடிக்கவில்லை. ஆனால் ,இவளை தவிர்க்கிறான் என்பது மட்டும் தெளிவாய் புரிந்தது!

இப்பொழுதெல்லாம், ரஞ்சன் கன்னத்தை தடவிய அந்த சம்பவம் இவள் தனிமையை கெடுக்கிறது!

ரஞ்சனுக்கு தன்னை திருமணம் செய்துக்கொள்வதில் விருப்பமில்லையோ? அதனால்தான் ,மாமியும் இது பற்றி பேசவில்லை போலிருக்கு. ரஞ்சன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயம் அவன் பார்வை சொல்லிய விஷயங்கள் இத்தனை வருஷங்களுக்கு பிறகுதான் அவளுக்கு புரிந்தது. ஆனால்,புரிந்த தருணம் அவன் அவளிடம் நெருங்க முற்படவில்லை.

இந்தியாவிலிருந்து வந்து எட்டு மாதங்கள் முடிந்து விட்டது. முகநூலில் இவள் அனுப்பிய நட்பு விண்ணப்பம் ரஞ்சனால் ஏற்க படவில்லை. நிச்சயம் அவனுள்ளே என் நினைவுகள் உண்டு. அத்தானை தவிர வேறு யாராலும் என்னை புரிந்துகொண்டு, அரவணைக்க முடியாது எனும் எண்ணம் வலுபெற்றவளாக, இந்தியாவில் ஆறுமாதங்களுக்கான ப்ராஜக்ட் வாங்கிக்கொண்டு வந்து விட்டாள்.

சென்னையில் , கேளம்பாக்கத்தில் அலுவலகம்...அண்ணா நகரிலிருந்து சென்று வர முடியாது எனக் கூறி , அங்கே அலுவலகம் அருகிலேயே ஒரு அடுக்ககத்தில் குடியேறினாள். சிவம் இருக்கும் இடத்தில் இருக்க அவளுக்கு கசந்து வழிந்தது.

சிவமோ ,உமாவோ அதை பற்றி கவலைப் படவில்லை....ஆறு மாசம் எங்க இருந்தா என்ன? என்றுவிட்டார்கள். அவர்களது வளமை குறையாதவரை எதற்கும் கவலை இல்லை.

சனி ஞாயிறு கிழமைகளை வீணாக்காமல் ,மாமியை பார்க்க என ரஞ்சனை சென்று பார்த்தாள். முதலில் இவள் வருகையில் திகைத்தவன்,பின்னர் சுதாரித்துக் கொண்டான்.இவளிடம் அதிகம் பேசுவதில்லை. முறுவலுடன் கடந்து விடுவான்.

ஆனந்திக்கும் இவள் முயற்சிகள் புரியாமல் இல்லை, தன் மகன் வாழ்வில் பொறுப்புள்ள பெண் வந்தால் மிகுந்த சந்தோஷமே! ஆனால்,அவன் மனமே புரியாத நிலையில், இந்த பெண் அவனிடம் அசிங்கப் பட்டு விடுவாளோ? இவள் பெற்றோர் செய்கையால் நொந்து போய் இருக்கும் ரஞ்சன் இவளிடம் தன் வெறுப்பை உமிழ்ந்து விட்டால்?

ஏற்கனவே, பெற்றோரால் சுகப் படாத இந்த பெண் எப்படி தாங்குவாள்?

சொல்லவும் முடியாது..விழுங்கவும் முடியாது என தவித்துக் கொண்டிருந்தார் ஆனந்தி.
இந்த நிலையில்,சென்னை வந்து இத்துடன் இரண்டு மாதங்கள் முடிந்துவிட்டது. இனிமேல் தாமதிக்க முடியாது..ரஞ்சன் அத்தானிடம் பேசிவிட வேண்டும் என தீர்மானித்தவள், ஆனத்தி மாமி இருக்கும்பொழுதே, ரஞ்சனிடம் பேச துவங்கினாள். ஆனந்திக்கு இதில் எந்த ஆட்சேபனைகளும் இல்லை என அவர் ஏற்கனவே மறைமுகமாக சொல்லி விட்டார்.
என்னை பெற்றவர்களுக்கு என்னை பற்றிய கவலைகள் இல்லை. இனி ,என் வாழ்க்கையை நான்தான் தீர்மானிக்க வேண்டும் எனும் தெளிவு அவளிடம் இருந்தது.

ஆனந்திக்கு,வயிற்றில் புளி கரைத்தது. சஹானா பேச ஆரம்பித்ததும் ரஞ்சன் முதலில் பார்த்தது தன் அம்மாவின் முக உணர்வுகளைத்தான்.அவன் பார்வை தன்னை ஆழம் பார்ப்பதை ஆனந்தி உணர்ந்திருந்தார். அவர் கலவரம் அதிகமாயிற்று.
அத்தான், நா இந்தியா வந்ததே உங்களை பார்க்கத்தான்.உங்களை கல்யாணம் செஞ்சுக்க ஆசை படுறேன்.இதை போன முறை வந்தப்பவே மாமிக்கிட்ட சொன்னேன். அவங்களுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையாம்.


உங்க இஷ்டம் முக்கியம்னுட்டாங்க...

ரஞ்சனிடம் நீண்ட மௌனம். அவன் இதை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை அவனை பொறுத்தவரை அவன் காதல் முடிந்து போன அத்யாயம்..மீண்டும் உயிர்த்தெழ செய்ய அவன் விரும்பவில்லை...

அவன் காதலுக்குள்,நிறைய விஷயங்கள் நடந்துவிட்டது.ம்ஹூம்..இது சரி வராது.. காரணகள் தெளிவாய் இருந்தாலும்,இவளிடம் எப்படி சொல்வது என அவன் யோசித்துக்கொண்டிருக்க ,அத்தானை சம்மதிக்க வைக்க என்ன பேசவேண்டும் எப்படி பேச வேண்டும் என்று சஹானா ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவர்களுக்குள் என்ன பேசியிருப்பார்கள்?


மீண்டும் சந்திப்போம்!
சுகீ.
 
Last edited:
#7
Superb dear. Santhini &gayu rendum suyanalavathiya irukangale intha uma ranjan ai avamathipathu.. pazhasu ellam maranthituchu
Sahana ku marriage pannanumnu ennam illaye
நன்றி, இந்த எபி படிச்சுட்டு சொல்லுங்க.
 
#8
பயணம் 4
நீண்ட மௌனத்திர்க்கு பிறகு,சிறிது தொண்டையை செருமிக் கொண்டவனாக, சஹானாவை நோக்கி பேச ஆரம்பித்தான் ரஞ்சன். அவனுக்குள் இத்தனை வருஷங்களாய் பூட்டி வைக்கப் பட்ட ஆழ்மன விஷயங்கள் வெளியே வரத் தொடங்கின.
இங்கப் பாரு சஹானா, நமக்குள்ள இந்த கல்யாணம் சரிப்பட்டு வராது...நீ வேற நல்ல பையனா பாக்குறது நல்லது.
இல்லத்தான்...நா பாத்த நல்ல பையன் நீங்கதான்! எனக்கு வேற யாரும்....இல்ல வேற யாரையும் பாக்குற எண்ணமில்ல.
தான் அவளிடம் பேச நிறைய உள்ளது. அம்மா முன்னே பேச முடியாது என்று புரிந்தவனாக,
அம்மா, நா அவள கூட்டிக்கிட்டு கோவளம் பீச் வரைக்கும் போயிட்டு வரேன் ...வர லேட் ஆகும்..நீங்க சாப்பிட்டு தூங்குங்க! என்றுவிட்டு ஆவலுடன் வெளியே வந்தான்.
தனது டி‌வி‌எஸ் அபாச்சே வண்டியை எடுக்க அவன் விரைய, அத்தான் ...நா என்னோட கார்ல வந்திருக்கேன். அதுலேயே போயிடலாம் என்றாள் பெண்.
அவனிடம் பதில் எதுவுமில்லை..உதடு மட்டும் கீற்று போல புன்னகை பூத்தது! அவள் தானே வண்டியை கிளப்ப இவன் அவளருகே அமைதியாய் உட்கார்ந்து வந்தான்.
கோவளம் வந்தவர்கள் சிறிது நேரம் அங்குள்ள பாறையில் அமர்ந்து கடலின் ஆரவாரத்தை ரசித்தனர்.பௌர்ணமி அலைகள் இருவரோடும் பாரபட்சமின்றி விளையாடத் தொடங்கியது!
நேரமாச்சு சஹானா..அலைகள் உயரத் தொடங்கும்...கிளம்பலாம் என்று அவன் சொன்னதை தொடர்ந்து இருவரும் கிளம்பி சிறிது தூரத்தில் வந்து உட்கார்ந்து கொண்டார்கள்..இருவருக்குள்ளும்,கடல் அலைகள் அமைதியை உண்டுபண்ணி இருந்தது.
ரஞ்சன் வார்த்தைகளை பதமாக கோர்த்தான். ஏன் ,சஹானா பைக் எடுத்திருப்பேனே? கார்ல வரலாம்னு எதுக்கு யோசிச்ச...
இல்லத்தான்...டிராபிக் ஜாஸ்தி..டஸ்ட் வரும் .அதனாலதான். அதோட பைக் எடுத்து இவ்வளவு தூரம் வரது அவ்ளோ கம்போர்டா ஃபீல் ஆகாது!
அதனாலதான் நான் வேணாம்னு சொல்றேன் சஹானா! அவன் வார்த்தைகளின் அழுத்தமான உட்பொருளை அதிர்ச்சியுடன் உள்வாங்கினாள் சஹானா!
அத்தான்...நீங்க என்ன சொல்றீங்க? நேராவே பேசுங்க!
அதான் சொல்றேனே சஹானா ,இந்த கல்யாணம் சரிவராது. நாம ரெண்டு பேருமே ரொம்ப தூரம் கடந்து வந்திட்டோம். திரும்ப போக முடியாது!
என்னோட வாழ்க்கைமுறை இதுதான். உன்னோட வசதிக்கு நீ மாப்ள பாரு. என்னய விடு. நா உனக்கான ஆளில்ல. அவன் வார்த்தைகளில் பிசிறில்லை.தடுமாற்றமோ, அவனது புதைந்துபோன காதலின் மிச்சமோ நிச்சயம் இல்லை. சஹானாதான் அயர்ந்து போனாள். அவனிடம் என்ன பேச வேண்டும் என்பது நினைவில் வராமல் சண்டித்தனம் செய்தது. ஒன்று மட்டும் புரிந்தது. அவளுக்கு அவன் வேண்டும்!
உங்களுக்கு என்ன குறைச்சல் அத்தான் ?
உன்னோட ஒப்பிட்டா எல்லாமே குறைச்சல்தான்! நீ வெளிநாட்டு வாசம்,பணம்னு உன்னோட செழுமை...வயசே சொல்ல முடியல. ஆனா ,எனக்கு நாற்பது வயசானா மாதிரி இருக்கு. என்னவிட படிப்பு ,அதுவும் அதிகம்தான்! அந்தஸ்த்துன்னு பாத்தாலும் நமக்கு சரிபடாது.
என்னோட அத்தைபொண்ணு சஹானா இல்லை இப்ப நீ... உன்னோட தங்கச்சி கல்யாணத்துல என்னையும்,என்னோட அம்மாவையும் உறவுன்னு அறிமுகப்படுத்தவே உங்கம்மாவுக்கு கூச்சம்! இதுதான் எங்க நிலை..நீயும் நானும் இப்போ சரின்னு கல்யாணம் செஞ்சாலும் நிறைய பிரச்கனைகள் வரும். என்னவிட ,உனக்கு இழப்புகளும் வலிகளும் அதிகமாகிடும்.உன்னோட நிலை புரிஞ்சதாலதான் இவ்வளவுநேரம் பேசறேன்!
எங்கம்மாவை காரணமா வச்சி என்னய ஒதுக்காறீங்களா அத்தான்?
இல்ல, நிச்சயம் இல்லை சஹானா. நிதர்சனத்த சொல்றேன். உங்க வீட்டுல இந்த கல்யாணத்த ஒத்துக்கவும் மாட்டாங்க. ஏற்கனவே,உன்ன மடக்கிபோட நா முயற்சி செயுறதா அத்தை சொல்லிட்டாங்க!
என்னோட தங்கச்சி, அவளே அவளோட அந்தஸ்த்துக்கு நாங்க இல்லன்னு எங்க வீட்டுக்கு வரத நிப்பாட்டிட்டா... உன்ன எறங்கி வர சொல்றதுல நியாயமில்ல...
சாரி அத்தான்..நா முடிவு பண்ணிட்டேன்...நீங்க எனக்கு புருஷனா வரணும்...வேற காரணங்கள் தேவை இல்லை! என்னோட நிலை தெரியும்னு சொன்னீங்க. இப்போ என்னோட வாயல கேட்டுக்கோங்க .
கல்யாணம்னா உங்களோட மட்டும்தான்! இல்ல என்னய பெத்தவங்க என்னோட உழைப்பை உறிஞ்சு சந்தோஷமா வாழ்க்கைய அனுபவிக்கிறாங்க... எனக்கு கல்யாணம் பண்ணுற யோசனை அவங்களுக்கு இல்லை. அப்படி தனியாவே நின்னுடுவேன். கல்யாண ஆசையில எடுக்குற முடிவுன்னு நினைக்காதீங்க.. மாமா போற வரைக்கும் உங்க கண்ணுல எம்மெல காதல் இருந்ததை இப்போதான் உணறேன்.
ஒருவேளை ,அப்பவே புரிஞ்சிருந்தா, வேற மாதிரி வாழ்க்கைய முடிவு பண்ணி இருப்பேன். இதுக்குமேல...ம்ஹூம்..உங்க காதல நீங்க திரும்பவும் எழுப்பித்தான் ஆகணும்... அதுக்கு என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்!
அவள் முடிவெடுத்துவிட்டாள். அவன் பதில் எதுவும் சொல்ல்வில்லை. இருவர் மனதிலும் நீண்ட போராட்டம். அவனது காதல் அவனை மீண்டும் இருக்கைகள் கொண்டு அழைக்கிறது. ஆனால் அதை தழுவிக்கொள்ள முடியாத நடைமுறை சிக்கல்கள்.அவளது சமூக நிலை அவனை வாழ்நாள் முழுதும் அவளுக்கு கீழேத்தான் நான் என்று இழிந்து உரைக்கும்..

இருவரும் தங்கள் சிந்தனைக்கு தற்காலிகமாக முற்றுப் புள்ளி வைத்துவிட்டு , ஹோட்டலில் இரவு உணவை முடித்துக் கொண்டு வீடு சேரும்பொழுது மணி பதினோன்றை தாண்ட , நீ இங்கேயே தங்கிடு ...ரொம்ப நேரமாகிடுச்சு என்றுவிட்டு தன் அறைக்குள் நுழைந்துகொண்டான். கூடத்தில் இருந்த சோஃபா அவள் உறங்கும் இடமாயிற்று.
அவன் உள்ளே தீவிர சிந்தனை..சாளரத்தின் வழியாக முழு நிலவை வெறித்தவாறே தன் எண்ண ஓட்டங்களில் ஆழ்ந்தான்.
அவள் என்றுமே அந்த நிலவு போலத்தான்..இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். வீட்டுக்கடன் முடியவே இன்னும் இருபது வருஷங்கள் இருக்கிறது. அம்மா ..அவர்களது பொறுப்பு என்னுடையது. அவளை கல்யாணம் செய்து கொண்டால் அவளது வருமானம் பழகிவிடும்..நானும் அவளை அவள் பெற்றோர் போல நடத்த ஆரம்பித்து விடுவேன் என்று அஞ்சுகிறேன்...
அப்படியென்றால் அவளை என்னால் சந்தோஷமாக வைத்துக் கொள்ளவே முடியாதா?
அவளைத் தவிர இன்னொரு பெண்ணிர்க்கு என் வாழ்க்கையில் இடமில்லை என்பதுவும் நிஜமே!
என் மனைவி என்னுடைய சம்பளத்தில் வாழவேண்டும் ..அவளது வருமானத்தில் நான்..சரிபடாது!
அவளால் பைக்கில் வரமுடியாது.. அவளது காருக்கு என்னால் பெட்ரோல் ஊற்ற முடியாது! அவன் மனம் அவனை பலவித கேள்விகளால் கூறு போட்டது. விடியும் சமயம்தான் கண்ணயர்ந்தான்.
சஹானா கோவளம் கடற்கரையில் பேசும்பொழுதே அவனை கண்டுகொண்டாள். அவளுக்கு அவன் நிச்சயம் வேண்டும். இவ்வளவு தூரம் ஆன பிறகு அவனை விட முடியாது. தன் பெற்றோருக்கும் பாடம் தேவை ..எப்படியும் அவளது சொத்துக்கள் அவளுக்கே..ரஞ்சனுடன் திருமணம் ஆனாலும் சொத்துக்களை விட முடியாது. அவை பிறக்கபோகும் குழந்தைகளுக்கு நிச்சயம் வேண்டும். இத்தனை வருஷ உழைப்பு...எதையுமே விட்டுக் கொடுக்க முடியாது என யோசித்திருந்தாள்.
அவள் யோசனைகள் அத்துடன் முடியவில்லை...இதோ..ஆழ்ந்த உறக்கத்திலும் அவள் முகம் புன்னகையில் இரவு நேர மலரைப்போல மலர்ந்திருக்கிறது ..
அடுத்தநாள்,திங்கள் கிழமை...வழக்கம்போல வீட்டு வேலைகளை முடித்துவிட்டு,அம்மா மற்றும் சஹானா இருவருக்கும் உணவு சமைத்து வைத்துவிட்டு அலுவலகம் சென்று விட்டான் ரஞ்சன். தாமதமாக தூங்கினாலும் ரொம்பநேரம் தூங்கமுடியாது..ஏழரை மணிக்கு அலுவலக பேருந்து வரும்.அதில் சென்றாக வேண்டும்...மீதி தூக்கத்தை பேருந்தில் தொடரவேண்டியதுதான்!
அவன் சென்று வெகு நேரம் கழித்தே , ஆனந்தியும் சஹானாவும் எழுந்தனர். இது வழக்கம் என்பதாய் இருந்தது ஆனந்தியின் நடத்தை. ஆனந்தி மருந்துகள் உட்கொள்வதால் அவளது உறக்கம் வேறுபட்டது. கையாலாகாதனத்தால் அவர் அமைதியாகவே ஏற்றுக்கொள்கிறார். ஆனாலும்,பிள்ளையை கவனிக்கமுடியவில்லை என்னும் எண்ணம் அவளை உள்ளூர கிழித்தது என்னவோ நிஜம்!
ஆனால்,சஹானாவிர்க்கு அவன் நிலையும், மறுப்பும் புரிந்தது...அவன் தேவை அவனது உடலைத் தாங்கும் தேகமல்ல...அவனை மடியில் சேயாய் ஏந்தும் பக்குவம்கொண்ட பெண்...அவனை முழுதுமாய் ஆட்கொண்டு அவன் சுமைகளை இறக்கிவைக்க ஏதுவான சுமைக்கல்!
அவள் அடுத்து என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுத்து ,அன்றே அலுவலகத்தில் விடுப்பு எடுத்து, ஆனந்தி சம்மதத்துடன் தன் பொருட்களை இங்கு எடுத்து வந்துவிட்டாள்.
வீடு திரும்பிய மகனிடம்,வெறும் நான்கு மாதங்கள் தானே ! இங்கே இருக்கட்டும் என்றார் ஆனந்தி! அம்மாவை எதிர்த்து பேசி பழக்கமில்லாததாலோ,அன்றி அவளது இருப்பை விரும்பியோ...அதுவுமல்லாது ,நிஜத்தை அவளுக்கு புரியவைக்க விரும்பியோ ..ரஞ்சன் வேறேதும் சொல்லவில்லை!
நடப்பவை எதுவுமே தெரியாமல்,சிவம்-உமா இருவரும் அமர்நாத் யாத்திரை சென்றுள்ளார்கள்.
மீண்டும் சந்திப்போம்!
சுகீ
 
#9
பயணம் 5
நீண்ட மௌனத்தில் சோஃபாவில் சாய்ந்து கொண்டு விட்டத்தை வெறித்தவாறே அமர்ந்திருந்த ரஞ்சனின் தோற்றம் சஹானாவினுள் ஒரு வித தயக்கத்தை உண்டு பண்ணியது !

அவன் ஏதோ சொல்ல தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்கிறான் என்பது அவன் உடல்மொழியில் தெரிந்தது ! ஆனந்தி அருகில் இருக்கும் பூங்காவில் நடை பயிற்சி செய்ய போயிருக்கிறார். சஹானாவிடம் தன் மனதில் உள்ளதை தெளிவாக சொல்லிவிட விரும்பினான் ரஞ்சன் !

பாரு சஹானா, நான் சொல்ல வரது என்னனு புரியாத அளவில் நீ இல்ல, நம்ம கல்யாணம் சாத்திய படாது. எனக்குன்னு எங்கம்மா பொறுப்பு இருக்கு.. அவங்கள ரொம்ப கஷ்ட பட்டு மீட்டிருக்கேன் !
என் தங்கையோட கல்யாண கடன்,, இந்த வீட்டுக்கு வாங்கின கடன்.... எல்லாம் கடன்தான் ! நீ என்னை கல்யாணம் செஞ்சா கடனும் சேர்ந்து தான் வரும்.
எல்லோரும் பணத்துக்கு ஆசை பட்டு உன்னை கல்யாணம் செஞ்சதா பேசுவாங்க ! உங்கம்மா ஏற்கனவே அதை சொல்லிட்டாங்க.
சமூக பார்வை அப்படித்தான் ! யாரையும் குறை சொல்ல முடியாது.... ஏன், கொஞ்சவருஷம் கடந்த பிறகு உனக்கே தோணலாம்.. அப்போ காதல் நினைவில் வராது.

மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான்.. அவன் காதல் கைகூட வழி இல்லை. இனியாவது அவள் வாழ்வில் வசந்தம் வீச வேண்டும். அவன் மனம் ஊமையாய் அவளுக்கான பிரார்த்தனைகளை வைத்தது !
அவன் கண்களின் நீர் அவனை மீறி கன்னத்தில் வழிய, அவன் உணர்வுகளை புரிந்து கொண்டாள் பெண்.
இல்லை, இன்னும் அத்தான் மாறவில்லை. அவன் காதல் எனக்காய், எனக்கு மட்டுமேயான உணர்வு. இது, மட்டுமே நான் எதிர் பார்ப்பது... உன்னிடம் எனக்காக உருவாகிய பிரத்யேக காதல்... கலப்படம் அற்ற அக்மார்க் அன்பு...
அவள் மனம் அவன் காலடியில். அவன் அவனோ உணரும் நிலையில் இல்லை.
நீங்கள் சொல்லும் காரணங்கள் ஒத்துக்குற மாதிரி இல்லை அத்தான் ! ஓரே வார்த்தையில் பதில் சொன்னாள் சஹானா !
நானும் உன்னோட சம்பளத்துல குளிர் காயணும்னு நினைப்பேனோனு பயமா இருக்கு சஹானா.. நான் உன்னை ரொம்ப காதலிக்கிறேன் !அதான் சொல்றேன்,, இந்த கல்யாணம் வேணாம் !
ஒரு கட்டத்தில் அவளிடம் வாதம் செய்ய முடியாமல், உன்னோட அந்தஸ்த்தை காட்டி உன்கிட்ட புருஷனா வேலை செய்ய சொல்லுறியா? என் ஆண்மையை உன்கிட்ட விக்கணும்னு எதிர் பாக்குறியா? என வார்த்தைகளை வீசி எறிந்தான் ரஞ்சன். எப்படியாவது அவளை, அவள் நினைப்பை மாற்ற வேண்டும் என்பதே அவன் நோக்கமாக இருந்தது... பல வருடங்களாக பல முக மனிதர்களோடு பழகிய சஹானாவிற்கு அவன் நோக்கம் புரிந்தது . சரி அத்தான், நீங்க என்கிட்ட என்ன எதிர் பாக்குறீங்க? சாரி, உங்க மனைவிக்கிட்ட என்ன எதிர் பாக்குறீங்க? அவள் தவிப்பு அவனிடம் வலியை வருவித்தது !
என் மனைவி என் சம்பளத்துல வாழனும்... என் வீட்டுல நான்தான் புருஷனா இருக்கணும் ! சொல்லிவிட்டு அவள் முகம் பார்க்க முடியாமல் தன் அறைக்குள் புகுந்து விட்டான் ரஞ்சன். அவன் சொல்லி சென்றதை உள்வாங்கியவளுக்கோ... கலவரமான உணர்ச்சி !
 
#10
நீண்ட மௌனத்தில் சோஃபாவில் சாய்ந்து கொண்டு விட்டத்தை வெறித்தவாறே அமர்ந்திருந்த ரஞ்சனின் தோற்றம் சஹானாவினுள் ஒரு வித தயக்கத்தை உண்டு பண்ணியது !

அவன் ஏதோ சொல்ல தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்கிறான் என்பது அவன் உடல்மொழியில் தெரிந்தது ! ஆனந்தி அருகில் இருக்கும் பூங்காவில் நடை பயிற்சி செய்ய போயிருக்கிறார். சஹானாவிடம் தன் மனதில் உள்ளதை தெளிவாக சொல்லிவிட விரும்பினான் ரஞ்சன் !

பாரு சஹானா, நான் சொல்ல வரது என்னனு புரியாத அளவில் நீ இல்ல, நம்ம கல்யாணம் சாத்திய படாது. எனக்குன்னு எங்கம்மா பொறுப்பு இருக்கு.. அவங்கள ரொம்ப கஷ்ட பட்டு மீட்டிருக்கேன் !
என் தங்கையோட கல்யாண கடன்,, இந்த வீட்டுக்கு வாங்கின கடன்.... எல்லாம் கடன்தான் ! நீ என்னை கல்யாணம் செஞ்சா கடனும் சேர்ந்து தான் வரும்.
எல்லோரும் பணத்துக்கு ஆசை பட்டு உன்னை கல்யாணம் செஞ்சதா பேசுவாங்க ! உங்கம்மா ஏற்கனவே அதை சொல்லிட்டாங்க.
சமூக பார்வை அப்படித்தான் ! யாரையும் குறை சொல்ல முடியாது.... ஏன், கொஞ்சவருஷம் கடந்த பிறகு உனக்கே தோணலாம்.. அப்போ காதல் நினைவில் வராது.

மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான்.. அவன் காதல் கைகூட வழி இல்லை. இனியாவது அவள் வாழ்வில் வசந்தம் வீச வேண்டும். அவன் மனம் ஊமையாய் அவளுக்கான பிரார்த்தனைகளை வைத்தது !
அவன் கண்களின் நீர் அவனை மீறி கன்னத்தில் வழிய, அவன் உணர்வுகளை புரிந்து கொண்டாள் பெண்.
இல்லை இன்னும் அத்தான் மாறவில்லை. அவன் காதல் எனக்காய், எனக்கு மட்டுமேயான உணர்வு. இது. மட்டுமே நான் எதிர் பார்ப்பது... உன்னிடம் எனக்காக உருவாகிய பிரத்யேக காதல்... கலப்படம் அற்ற அக்மார்க் அன்பு...
அவள் மனம் அவன் காலடியில். அவன் அவனோ உணரும் நிலையில் இல்லை.
நீங்கள் சொல்லும் காரணங்கள் ஒத்துக்குற மாதிரி இல்லை அத்தான் ! ஓரே வார்த்தையில் பதில் சொன்னாள் சஹானா !
நானும் உன்னோட சம்பளத்துல குளிர் காயணும்னு நினைப்பேனோனு பயமா இருக்கு சஹானா.. நான் உன்னை ரொம்ப காதலிக்கிறேன் !அதான் சொல்றேன்,, இந்த கல்யாணம் வேணாம் !
ஒரு கட்டத்தில் அவளிடம் வாதம் செய்ய முடியாமல், உன்னோட அந்தஸ்த்தை காட்டி உன்கிட்ட புருஷனா வேலை செய்ய சொல்லுறியா? என் ஆண்மையை உன்கிட்ட விக்கணும்னு எதிர் பாக்குறியா? என வார்த்தைகளை வீசி எறிந்தான் ரஞ்சன். எப்படியாவது அவளை, அவள் நினைப்பை மாற்ற வேண்டும் என்பதே அவன் நோக்கமாக இருந்தது... பல வருடங்களாக பல முக மனிதர்களோடு பழகிய சஹானாவிற்கு அவன் நோக்கம் புரிந்தது .


பயணம் 5.1

இவனை எவ்வாறு ஒப்புக்கொள்ள வைப்பது என்று யோசித்தவளாக, சஹானா உறங்கி போனாள். மறுநாள் காலை ரஞ்சனுக்கும் முன்னரே எழுந்துவிட்டாள். தான் இங்கு தங்கியிருக்கும் வரை ரஞ்சனின் வேலை பளுவை சிறிதாவது குறைக்க முடியுமானால் அதை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பதே தீர்மானம். அவளுக்கு காலையில் தனக்கு தேவையான உணவை சமைத்து ,தன் வீட்டு வேலைகளை முடித்து அலுவலகம் செல்வது வழக்கமான ஒன்று. தீவிர சைவ உணவு பழக்கம் கொண்டவளுக்கு, வெளியே அசைவத்துடன் கூடிய உணவு வகைகள் தோதல்ல. வீடு பெரியதாக இருப்பதை காட்டிலும் சுத்தமாக, நேர்த்தியாக இருக்கவேண்டும் என்பாள். அதனாலேயே ,ரஞ்சனின் வீடு அவளுக்கு பிடித்துவிட்டது!

ஆண்பிள்ளையானாலும்,தன் அம்மாவின் உடல்நிலை கருதி வீட்டை சுத்தமாகவும், எளிமையாகவும் வைத்திருந்தான் ரஞ்சன். பெண்களால்கூட,அவ்வளவு அழகாய் வைத்திருக்க முடியாது!

தன் வழக்கமான ,பணிகளை அடுக்களையில் செய்துகொண்டிருந்தாள் சஹானா. குளித்துவிட்டு,அன்றலர்ந்த மலராய்,அடுக்களையில் பாந்தமாய் வேலை செய்தவளை தடுக்க முடியாமல் தவித்தான் ரஞ்சன். அவன் வரும்பொழுது, டைனிங் டேபிளில் சூடான காஃபி அவனை ஆர்வமாய் வரவேற்றது.

உள்ளிருந்து அவள் குரல் கேட்டது...அத்தான்,நீங்க குளிச்கிட்டு வாங்க, டிஃபன் சாப்பிட .மத்யான சாப்பாடும், மாமிக்காக தயார் பண்ணிடுறேன் என்று. அவள் குரலில் லயித்தவாறே குளிக்கச் சென்றான். குளிர்ந்த நீர் அவனை மேலும் மென்மையாக்கியது.ஒரு பெண் அதுவும் மனதிர்க்கு பிடித்தவள் அருகிலிருந்தாலே சுகம்தான் ..என்று உள்மனம் தாளம் வாசித்தது!
மாலை நேரங்களில் அவள் வர நேரமாகிவிடும்.. அவன் இரவுக்கான உணவை தயார் செய்து,மறு நாளைக்கான காய்கறிகளை நறுக்கி,மிச்சமுள்ள வீட்டு வேலைகளை முடித்து வைப்பான். இரவு ஆனந்தி சீக்கிரம் சாப்பிட்டு விட்டு உறங்க சென்று விடுவார். அவளுக்காக காத்திருந்து,இவனும் அவளுமாக இரவு உணவு சாப்பிடுவார்கள். முதலில் தாமதமாக வந்தவள், பிறகு இவன் காத்திருப்பதை நினைவில் வைத்து சீக்கிரம் வரத்தொடங்கினாள். வீட்டிலிருந்து ,லாகின் செய்து வேலை செய்வதை வழக்கமாக்கிக் கொண்டாள்.
இருவருக்குமே,இதுவரை யாரும் காத்திருந்ததில்லை! இது ஒரு புது உணர்வாக இருவருமே உணர்ந்தனர். அவள் மாறிவிடுவாள் என்று நினைத்தவன்..மெல்ல மெல்ல அவனே மாற ஆரம்பித்தான். இருவருக்குள்ளும், ஒருவருக்கொருவரான எதிர்பார்ப்பு?

அவள் மீண்டும் அவனிடம் திருமணம் பற்றிய பேச்சை எடுத்தாளில்லை. அவன் தானே, இவளின் இருப்பை உணர வேண்டும்...கட்டாயத்தில் எதுவும் நடக்காது. அவளுக்குமே, அவனுடனான வாழ்வு எப்படி இருக்கும்? அவன் சொல்வது போல் வாழ்க்கை நடப்பு காதலை தூக்கி எறிந்துவிடுமா என தெளிவு வேண்டி இருந்தது.

அமர்நாத் யாத்திரை சென்றுவிட்டு,இன்னும் சில கோவில்களை சுற்றிப் பார்த்துவிட்டு,ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்குப் பிறகு வந்த சிவம் தம்பதியினரை அடுத்து வந்த சனி ஞாயிறு விடுமுறையில் காண்பதற்க்கு புறப்பட்டாள் சஹானா. அவளை அனுப்ப மனமில்லாதவனாக, அரைகுறை சிரிப்புடன் வழி அனுப்பியவனை உள்ளுக்குள் ரசித்து, நாளைக்கு சாயங்காலம் வந்திருவேன் அத்தான்...என்றுவிட்டு தன் காரை கிளப்பினாள் பெண்.
அவளின் இரண்டு நாள் பிரிவையும் என்னால் தாங்க இயலாதா? என்று உள்ளுக்குள் அதிர்ந்தான் ரஞ்சன். இன்னும் இருமாதங்களில் அவள் திரும்ப சென்றாகவேண்டும். நான் அவளிடம் மயங்கி , மகுடிக்கு கட்டுப்பட்ட நாகமாய் அவள் சொன்னபடிக்கு ஆடிக்கொண்டிருக்கிறேன்! என்னவாயிற்று எனக்கு. அவள் இருப்பை ஆரம்பத்தில் ஆட்சேபித்தவன்,இன்று அவள் பெற்றோரை காண செல்வதைக்கூட பொறுத்துக்கொள்ள முடியவில்லையே?
அப்படியானால், அவள் யு.எஸ் சென்று விட்டப்பிறகு எனக்கு பைத்தியம் பிடித்துவிடுமா? அவனுக்குள் ஆயிரமாயிரம் கேள்விகள்..சுய பரிசோதனையில் அவன் கண்டுபிடித்தது, அவளின் மீதான அவனது காதலின் ஆழம். நான் எடுத்த முடிவை நானே மாற்றிக்கொள்ள நினைக்கிறேன்.நான் ஒரு சுயநலவாதி என்று தன்னையே சபித்தவன், அவள் மீண்டும் திருமணம் பற்றிய பேச்சை எடுக்கவில்லை.அப்படியென்றால் அவளுக்கு அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டாள் என்றுதானே அர்த்தம்? அவளின்றி இந்த வாழ்வு சாத்தியமா? என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தான். மிகவும் சாதுர்யமாக சஹானா காய்களை நகர்த்துவது அவனுக்கு புரியவில்லை.
அண்ணா நகரில்,அவள் பெற்றோர் அவளை ஆரவாரமாகவே வரவேற்றார்கள். பணத்தின் கர்வம் இருவருக்குமே அப்பட்டமாய் முகத்தில் தெரிந்தது. தன் சுய சம்பாத்தியம் போல சிவம் அலட்டியது சஹானாவிர்க்கு வெறுப்பை அதிகரித்தது. உமாவிர்க்கு அவள் உணர்வு புரிந்தாலும்,அதைப்பற்றி அவள் பெரியதாக காட்டிக்கொள்ளவில்லை.
தன்மகள் தன்னை மீறி எதுவும் செய்யப் போவதில்லை என்று இருந்தார். ஒருவாராக, தான் ஆனத்தி மாமி,ரஞ்சனுடன் தங்கியுள்ளதாக தெரிவித்தவளை வினோதமாக பார்த்தார்கள் சிவம் தம்பதி.
அங்கேயா இருக்க? உன்னால எப்பிடி அந்த புறாக்கூடுல சமாளிக்க முடியுது? என்று நக்கலடித்த உமாவை ,சஹானாவின் ஏளனப் பார்வை மௌனியாக்கியது. இரண்டுநாட்கள் அங்கிருந்து சில வேலைகளை முடித்துக்கொண்டு,திங்களன்று காலையில்தான் கிளம்பினாள் சஹானா. நேரே அலுவலகமே சென்றுவிட்டாள்.
அவளைக் காணாமல்,தன் எண்ணங்களை மறந்துபோனவனாக தவித்திருந்தான் ரஞ்சன். அவளுக்கு போன் செய்து பேசலாம் என்றும் தோன்றாமல்,இயந்திரகதியில் வேலைகளை முடித்துவிட்டு அலுவலகம் கிளம்பியவனை ஆராய்ச்சி பார்வை பார்த்தார் ஆனந்தி! அவர் முதல் நாள் நடை பயிற்ச்சி செல்லும்பொழுதே போன் செய்து தான் திங்களன்று மாலை அலுவலகத்திலிருந்து வருவதாகவும்,ரஞ்சனிடம் சொல்லாமல் அவன் நடவெடிக்கைகளை கண்காணிக்குமாறும் சொல்லி இருந்தாள். அதன் படியே உற்றுநோக்கினால் அவனது தவிப்பு , இயல்புக்கு மாறான அமைதியின்மை புரிந்தது!
அவன் வாழ்வில் சஹானா வந்தால் இருவருமே சந்தோஷமாக வாழ்வார்கள் என்று நம்பியது தாய்மானம்.
தன் ஏமாற்றத்தை வெளியே காட்டாமல் ,அன்றைய நாளை அலுவகத்தில் நெட்டித் தள்ளினான் ரஞ்சன். அவள் சென்றுவிட்டால், இனி எப்படி வாழ்வது எனும் எண்ணம் அவனை வெகுவாகத் தாக்கியது. இத்தனை வருஷ காதல், புதையவில்லை...இன்னும் நீறுபூத்த நெருப்பாக உள்ளேதான் இருந்திருக்கிறது என்ற உண்மையை அவன் ஒப்புக்கொள்ள வேண்டியதுதான்.
இரவு ரஞ்சன் வீட்டிற்கு செல்லும்பொழுது அடுக்கக கார் பார்க்கிங்கில் சஹானாவின் கார் நின்று கொண்டிருந்தது. நீண்ட சந்தோஷ மூச்சை விட்டபடி லிப்டில் ஏறினான்!
அவளை கண்டவுடன் ,வீட்டிர்க்கு தாமதமாய் வந்த அம்மாவிடம் கோவிக்கும் குழந்தைபோல் இருந்தது அவன் நடவெடிக்கை. அவளுடன் பேசாது,இரவு உணவை தவிர்த்து தன் அறைக்குள் புகுந்துகொண்டான்!
சஹானாவும் சாப்பிடாமலே, ஆனந்தியுடன் தூங்க சென்றுவிட்டாள். இந்த நாடகத்தை ,மௌனமாய் கண்டுகொண்டிருந்தார் ஆனந்தி!
மறுநாள் ,வழக்கம்போலவே, சஹானா அடுக்களையில் புக, நீ இனி எதுவும் செய்யவேண்டாம் என மல்லுக்கு நின்றான் ரஞ்சன். நீ போன பிறகு நா திரும்பவெல்லாம் ஆரம்பிக்க முடியாது எனும் அவன் வாதத்தில் வாயடைத்து நின்றாள் சஹானா. உண்மை என நினைத்தவளாக, ரெண்டுபேரும் சேந்து செய்வோம் அத்தான்... என்றாள். அவள் கண்கள் பிரிவை யோசித்து சட்டென கலங்கின.
சஹானா, அமெரிக்கா திரும்பும் நாளும் வந்தது. ரஞ்சன் வீட்டில் தன் காரை அவன் உபயோகத்திர்க்கு வைத்துவிட்டு, சஹானா கிளம்பினாள். ரஞ்சன் ஏர்போர்ட் வரவில்லை என்றுவிட்டான். கீழே இவள் வாடகைக் காரில் ஏறுவதை மாடியிலிருந்து கண்கள் கலங்க பார்த்துக் கொண்டிருந்தான் ரஞ்சன். இருவரும் இப்பொழுதும் திருமணம் பற்றி பேசிக்கொள்ளவில்லை!
ஏர்போர்டில் வழி அனுப்ப உமாமட்டும் வந்திருந்தார். சஹானாவின் கார் எங்கே என்று உமா கேட்க, சஹானாவிடமிருந்து முறைப்பே பதிலாக கிடைத்தது. உள்ளூர உமாவினுள் சந்தேகம் எழத் தொடங்கினாலும், இவள் மீண்டும் செல்கிறாளே, அப்படியானால் விபரீதம் ஒன்றும் இல்லை என தன்னை தானே சமாதானம் செய்துகொண்டார்!
மாதங்கள் கடந்தன. ரஞ்சனுக்கும் அலுவலகத்தில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைத்தது. தன் காதலில் முழு உணர்வையும் வேலையில் செலுத்தினான். முகநூலில் சகனாவின் நட்புக்கரத்தை ஒப்புக்கொண்டான். ஆனால், அவள் உடனிருந்த பொழுது வந்த மலர்ச்சிமட்டும் அவளுடனே சென்றுவிட்டது!
 
#11
பயணம் 6

காயத்ரியின் கல்யாண கடனும் அடைந்துவிட்டது...ரஞ்சன் இப்பொழுது கொஞ்சம் நிமிர்வாய் உணரத்தொடங்கினான்.அவன் அடுக்ககத்திலேயே ஆயிரத்து நூறு சதுர அடியில் விற்பனைக்கு வந்த மூன்று படுக்கை அறைகளுடன் கூடய வீட்டை வாங்கினான். தன் முதலில் வாங்கிய வீட்டை விற்றுவிட்டான்...வாங்கியது சஹானாதான்! ரஞ்சன் இப்படி ஒரு முடிவை எடுக்கும்பொழுது,அவனது முதல் சொத்து...அவன் உழைப்பில்..வேறொருவர் கைக்கு போவதை அவள் விரும்பாததே காரணம்.

முழுதாய் ஒன்பது மாதங்கள் முடிந்துவிட்டது. வாங்கிய புது வீட்டை சிற்சில மாற்றங்கள் செய்து , குடிபுகுந்தாயிற்று! சஹானா வந்தால் அவளுக்கென்று ஒரு அறை கொடுக்க முடியும் என எண்ணினான்... அவன் மனம் அவளை வெகுவாக நாடியது. அவனது முதலும் முடிவானதுமான காதல் அவள் மட்டும்தானே!

அவள் வரப் போவதில்லை..வந்தாலும் அவளது வீடு மாடியில் ஒன்று உள்ளதே! அவள் ஏன் இங்கு வரப் போகிறாள் என்று எண்ணியவாறே தூங்கியும் விட்டான்.
ஆனந்திக்கு தெரியும் சஹானாவின் ஒவ்வொரு விஷயமும்... அவள் தனது மாமியுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள்., தன் மகன் அவளுடன் இணையும் நாளை அந்த தாயாரும் வெகு காலமாய் எதிர்பார்க்கிறாள்!


விடிகாலையில்,வழக்கம்போல் காபி போட்டு , கையில் கோப்பையுடன் ஹாலின் சோஃபாவில் அமர்ந்து செய்தி தாளில் மூழ்கி இருந்தவனை காலிங் பெல் சப்தம் கலைத்தது.
திறந்தவனுக்கோ பேரதிர்ச்சி.!


சஹானா தனது மொத்த உடமைகளுடன் வாசலில் நின்று கொண்டிருந்தாள்!
அவனால் நம்ப முடியவில்லை. கண்களை கசக்கி மீண்டும் பார்த்தான்.. எத்தனை முறை பார்த்தாலும் நீங்க பாக்குறது கனவில்லை அத்தான் என்றாள் சஹானா!
அவளது உடமைகளை அவளுக்கான அறையில் வைத்தவன் தன் காஃபி கோப்பையை அவளிடம் கொடுத்தான். கண்களில் நன்றியுடன் பெற்றுக்கொண்டாள் பெண்.
நீ ரெஸ்ட் எடு, சாயங்காலம் பேசலாம் ,என்றுவிட்டு அலுவலகம் செல்ல ஆயத்தங்கள் செயலானான். அவன் நடத்தை இவளை எதிர்பார்த்தது போலவே இருந்தது!


தன் மன ஏக்கங்கள் பிம்பமாய் தோன்றுகிறதோ என வெகுவாக அஞ்சினான் ரஞ்சன்.
சனிக்கிழமை வரை அவனாகவே எதுவும் கேட்கவில்லை...சஹானா அலுவலகம் சென்றுவந்தாள்... சனிக்கிழமை அன்று , ரஞ்சனிடம், நா வேலையை விட்டுட்டேன்...இனி,உங்க சம்பளத்துல,உங்க மனைவியா வாழ வந்திருக்கேன்! என்றவளை நம்பாத பார்வை பார்த்தான் ரஞ்சன்.


நல்ல சம்பளம், வாழ்க்கை முறை, சமூக அந்தஸ்த்து,அமெரிக்க வாழ்க்கை எல்லாவற்றையும் விட்டுவிட்டு ரஞ்சனின் மனையாளாக வாழ வந்துவிட்டேன் என்பவளை வேறெப்படி பார்க்க முடியும்?

நிஜம்தான் அத்தான்...அம்மா அப்பாவுக்கு ஒரு சிங்கிள் பெட்ரூம் பிளாட் வாங்கி குடுத்திட்டேன்..அவங்க வாழ்க்கைக்கு தேவையான டெபாசிட்ஸ்‌ போட்டாச்சு!
சொத்துக்கள் என்னோட சுய சம்பாத்தியம்...நம்ம பசங்களுக்காக .....வேற யாருக்கும் என்னால குடுக்க முடியாது! என்னோட உழைப்பின் பலன மத்தவங்க அனுபவிச்சது போதும்! முழுக்க முழுக்க எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டேன்... இதை சொல்லும்பொழுது அவள் முகமும் குரலும் கலங்கியது! இனி,நீயே தஞ்சம் என்று சொல்லியது அவள் செய்கைகள்.
பல வருட ஏக்கங்கள், தனிமை,தவிப்பு..இருவருக்குமே பொதுவான உணர்வுகள்.இருவருக்குமே,தேகம் தேடும் காமத்தை விட, உயிர் காக்கும் உறவே பிராதானமாய்.அவனை விட அவளை போற்றக்கூடியவர் இவ்வுலகில் இருக்க முடியாது எனும் நம்பிக்கை!


ஓர் ஆண்மகனாய், தன்னை தேற்றும் தோளுடையவன் எனும் தெளிவு., அவனை என்னைவிட சிறந்து தாங்க முடியாது என்று அவனுக்காய் அனைத்தையும் விட துணியும் காதல்,அதன் மீதான கர்வம்!,

ரொம்ப வருஷமா ஓடிட்டேன் அத்தான்...சாய்ந்து படுக்க உங்க தோள் வளைவு வேணும்...தருவீங்களா ? என்னை இப்பாவாவது கல்யாணம் பண்ணிக்குவீங்களா? நீண்ட தவிப்பு அவளிடம் கதறலாக வெளிப்பட, தன்னை நம்பி வந்த பெண்ணை போற்றுவதை தவிர வேறேதும் செய்யப்போவதில்லை என்று ,அவளை தன் மார்பினில் சார்த்திக்கொண்டான்.

அவனது ஆண் எனும் கர்வம், தாழாமல் அவனிடம் அடைக்கலம் ஆவதுபோல், அவனை தன்னுள் அடைக்கலாமாக்கினாள் பெண். அவன் இனி வலியை சுமக்க வேண்டியதில்லை! தோள் சாய்வதும் அவள்...அவன் தோள் வலிமையும் அவளே”

அவனை முழுதாய் மடியேந்த வந்துவிட்டாள் அவள் , அவன் மனையாள்.!!

அனைத்து அத்யாயங்களையும் பதிவு செய்துவிட்டேன். வாசிக்கும் அன்பர்கள் தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் தோழி,
சுகீ.