இரு மலர்கள் - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

பவதாரணி "இரு மலர்கள்" தலைப்போடு போட்டியில் இணைகிறார்கள்................
 

sudharavi

Administrator
Staff member
#2
அத்தியாயம் - 1

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை. என்றும் போல் இன்றும் சூரிய பகவான் அதிக பாசம் கொண்டு ஆசிர்வாதம் வழங்கும் காலை நேரம்.அந்த பிரதான அமைதியான தெருவில் உள்ள ஒரு வீட்டில் மட்டும் கந்த சஷ்டி கவசம் பாடி கொண்டிருந்தது. அந்த வீடு ஒரு அழகான கூடு. அந்த வீட்டின் குடும்ப தலைவி சாதனா. பொறுப்பான குடும்ப பெண். குடும்ப தலைவர் விஜயராவ். டெபிடி கமிஷனர் ஆப் போலீஸ் - சென்னை. இவர்கள் பெற்ற இரட்டை முத்துக்கள் அதிதி, மஹதி.

அதிதி,மஹதி இரட்டையர்கள்.ஆனால் உருவத்தில் இருவருக்கும் சில வேறுபாடுகள். ஒன்றாய் பிறந்து ஒன்றாய் வளர்ந்து இன்று ஒன்றாய் வேலைக்கு செல்ல தயாராகும் 22 வயது மங்கைகள்.

அதிதி- 5 அடி உயரம், உயரத்திற்கு ஏற்ற உடல், பால் வண்ணம்,வட்ட முகம், இடை வரை கூந்தல்.கடந்து செல்வோரை திரும்பி பார்க்க வைக்கும் அழகி.பார்த்தால் அமைதி. பழகினால் ஆரவாரம்.

மஹதி-5 அடி உயரம், சற்று பூசிய தேகம்,பால் வண்ணம்,வட்ட முகம், கண்களில் கண்ணாடி, சிரித்தால் தெரியும் சிங்க பல். அடாவடியின் மறு பெயர் மஹதி. யாரை பார்த்தாலும் அவர்களுடன் சண்டைக்கு நிற்கும் சண்டைக்காரி.

"ம்மா... ம்மா... " என்று கத்திக் கொண்டு இருந்தால் மஹதி

"என்னடி.. என்ன பிரச்சனை உனக்கு.. ஏன் காலையில இப்படி கத்துற" - சாதனா.

"ஏம்மா.. அவ உன்ன அம்மான்னு தானா கூப்பிட்டா.. நீ ஏன் அவள இப்படி திட்டுற"-விஜயராவ்

"ஆமா உங்க பொண்ணுங்கள ஒன்னும் சொல்லிட கூடாது.. நீங்க அவங்களுக்கு சப்போர்ட் பண்ண வந்துருவீங்க.. "-சாதனா.

விஜயராவ் பேச ஆரம்பிக்கும் முன் அங்கே வந்து நின்றார்கள் அவர்களின் புதல்விகள்.

" ம்மா.. நான் உன்ன கூப்பிட தான செஞ்சேன்.. அதுக்கு நீ என்னையும் அப்பாவையும் திட்டுவியா.. டூ பேட் மா..சென்னை சிட்டியே பார்த்து நடுங்குற ஒரு டெபிடி கமிஷனர்ர மிரட்டுற.."-மஹதி

"அடியே.. அவர் எனக்கு புருசன்.. அப்பறம் தான் கமிஷனர்.. ஆமா நீ எதுக்கு காலையில இருந்து ம்மா.. ம்மானு ஏலம் விடுற"-சாதனா

"ம்மா.. நாங்க இன்னைக்கு முதன்முதலா வேலைக்கு போறோம்.. அதனால நாங்க லேட்டா போக கூடாது.. அதான் உன்ன கூப்பிட்டு எல்லாம் ரெடியான்னு கேட்கலாம்னு நினைச்சேன்"-மஹதி

"அடியே.. அவ உன் அக்கா தான.. அவ அவளாதான ரெடியானா.. நீ ஏன் என் உயிர வாங்குற"-சாதனா

"ம்மா.. அவ எப்பவும் அப்படிதான.. அப்பறம் எதுக்கு உன் எனர்ஜிய வேஸ்ட் பண்ற.. விடு மா.. வந்து டிபன் எடுத்து வை மா"-அதிதி

"ஆமா டி.. நீ இதுவும் சொல்லுவ.. இதுக்கு மேலயும் சொல்லுவ.. "-மஹதி

" இப்ப நீ சாப்பிட்டு கிளம்பு மா தாயே.. முதல் நாளே லேட்டாக்காத.. நம்ம சண்டைய சாயங்காலம் வச்சுக்கலாம்.. இப்ப வா"-அதிதி

"அதிதி நீ பெரிய கடமை, கண்ணியம்,கட்டுப்பாடுனு இருக்க ஆளு பாரு... நீயே 7 மணிக்கு தான் எந்திருச்ச.. இப்ப என்னால தான் வேலைக்கு லேட்டுனு சொல்ற"-மஹதி

"ப்பா... இங்க பாருங்க இவள.. ஆபிஸ்க்கு கிளம்ப சொன்னா உன்னால தான் லேட்டுனு சொல்றா" என அதிதி இவ்வளவு நேரம் இவர்கள் சண்டையை வேடிக்கை பார்த்த தந்தையிடம் புகார் வாசித்தாள்.

"மஹதி செல்லம் அதிதிய ஏன்டா கிண்டல் பண்ற.. ரெண்டு பேரும் கிளம்புங்க டா.. "-விஜயராவ்.
 
Last edited:

sudharavi

Administrator
Staff member
#3
" சரி ப்பா.. நீங்க சொல்றதால நான் கிளம்புறேன்.. இல்லனா வரு பஞ்சாயத்து வைக்கலாம்னு நினைச்சேன்.. சரி ஈவ்னிங் பாத்துக்கலாம் "-மஹதி.ஒருவழியாக அதிதியும் மஹதியும் வேலைக்கு கிளம்பினார்கள். மஹதி ஸ்கூட்டி ஓட்ட பின்னால் அதிதி ஜாலியாக அமர்ந்து சென்றாள்.. செல்லும் வழியில்," ஏன்டி அதிதி நாமா படிச்ச ஸ்கூலயும் ஒரு பையனும் நல்லா இல்ல.. டியூசன்லயும் ஒரு பையனும் நல்லா இல்ல.. சரி காலேஜ்ல எதாச்சும் பச்ச மண்ணு சிக்கும்னு நெனச்சா அதுவும் இல்ல.. இப்ப வேலைக்கு போறோம். இங்கயாச்சும் எதாச்சும் பையன் நல்லா இருப்பானா.. இல்ல நாம கடைசி வரைக்கும் சிங்கிளா இருப்போமா "-மஹதி" மஹதி இன்னைக்கு தாண்டி வேளைக்கு போறோம்.. அதுக்குள்ள நல்ல பையன் கிடைப்பானானு கவலைபடுறியே பக்கி.. நம்மளுக்காக யாராச்சும் பிறந்து இருப்பாங்க டி"-அதிதி"இங்க பாரு.. இதைத்தான் நீ நம்ம ஸ்கூல் படிச்சப்ப இருந்து சொல்ற.. ஒரு வேளை கடவுள் நம்மளுக்கு ஏத்த ஆளா படைக்க கஷ்டப்பட்டு யோசிச்சு டயர்ட் ஆகி ரெஸ்ட் எடுப்பாரு போல... அந்த மனுசன் எப்ப நமக்கு ஒரு பையன படைக்க... எப்ப நாம லவ் பண்ண"-மஹதி"லூசு.. வண்டிய பார்த்து ஓட்டு.. நீ வேற புலம்பாம இரு.. "-அதிதி" நான் பேசுறது உனக்கு புலம்பலா தான் தெரியும்.. என் நேரம் அப்படி இருக்கு.. என்ன பண்ண.. சரி அத விடு.. இப்ப நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு"-மஹதி"என்னடி கேக்க போற.. கேளும்.. கேட்டு தொலையும்.. "-அதிதி" வர வர தலைவர் டயலாக்க யாரு பேசுறதுன்னு விவஸ்தை இல்லாம போச்சு.. பேச தெரியாத நீ எல்லாம் கலாய்க்கிற "-மஹதி" அடியே.. என்ன கோவபடுத்தாத.. என்ன கேக்க வந்தையோ அத கேளு.. "-அதிதி" சரி விஷயத்துக்கு வரேன்.. ஏன் அதிதி உன்னோட ட்ரீம் பாய் பத்தி கொஞ்சம் சொல்லேன் "-மஹதி" எனக்கு ட்ரீம் பாய்லாம் யாரும் இல்லனு உனக்கு தெரியும்.. தெரிஞ்சு கிட்டே கேக்குற எரும"-அதிதி"எனக்கு தெரியும்.. இருந்தாலும் நீ எதையாச்சும் மறைச்சு வச்சிருப்பியோனு ஒரு டவுட்டு.. அதான் கேட்டேன்"-மஹதி"அடி போடி.. சரி நீ சொல்லு மஹதி.. உன் ட்ரீம் பாய் பத்தி" - அதிதி"ஏன்டி நீ வேற என் வயித்தெறிச்சல கிளப்புற.. நான் ஒன்னும் உன்ன மாதிரி அமைதியா எதையும் மறைக்க மாட்டேன்.. எனக்கு என்ன தோனுதோ அத அப்படியே உன்கிட்ட சொல்லிருவேன்.. "-மஹதி" இல்லடி நீ என்கிட்ட சொல்லுவ.. இருந்தாலும் நான் உனக்கு அக்கா.. சில விஷயங்களை நீ என்ன சொல்லாம கூட இருக்கலாம்ல.. அதான் கேட்டேன்"-அதிதி"ஓ மேடம்.. உங்க மனசுல இப்படி ஒரு எண்ணம் வேற இருக்கா.. எப்படி.. எப்படி.. நீங்க அக்கா.. நான் தங்கச்சி... அடிங்க.. என்ன விட 15 நிமிடம் முன்னாடி பிறந்துட்டு அக்காவாம்ல அக்கா.. இந்த எண்ணத்த ஆசிட் ஊத்தி அழிச்சிரு...நீ அக்கா நான் தங்கச்சிலாம் இல்லடி.. நாம ரெண்டு பேரும் ஒண்ணுதான்.. எனக்கு எப்பவும் நீதான்டி பர்ஸ்ட்.. உங்கிட்ட தான் நான் சம்பந்தப்பட்ட எல்லாத்தையும் சொல்லுவேன் "-மஹதி" மஹி.. நான் சும்மா தாண்டி கேட்டேன்.. நீ ஏன் இவ்ளோ எமோசனலா பேசுற.. என் மஹி எப்பவும் சிரிச்சு மத்தவங்களையும் சிரிக்க வைக்கிறவ டி"-அதிதி"அடியே.. என்ன கொஞ்சம் கூட எமோசனலா பேச விட மாட்ட போல.. போடுங்க லூசு"-மஹதி"இருந்தாலும் மஹி நீ என்ன இப்படி டேமேஜ் பண்ண கூடாது டி.. நானே உனக்கு அக்கானு பெருமையா நினைச்சா நீ"-அதிதி"அடியே.. திரும்பவும் அக்காவா.. உனக்கு மரியாதைலாம் கொடுக்க முடியாது போடி"-மஹதி"சரி விடுடி.. ஆபிஸ் வர போகுது.. நாம இனிமே அமைதியா இருக்கனும் சரியா"-அதிதி"ஏன்டி ஆபிஸ்ல அமைதியா இருந்து என்ன பண்றது.. தூங்கவா ஆபிஸ் வந்துருக்கோம்.. பேசாம இருந்தா தூக்கம் வரும் பக்கி"-மஹதி"அம்மா தாயே.. நீ பேசு மா.. நல்லா பேசு.. ஆள விடு"-அதிதி" அது"-மஹதிஒருவழியாக அலுவலக நுழைவு வாயிலை சென்றடைந்தார்கள்.தொடரும்....ReplyForward
 
Last edited:

sudharavi

Administrator
Staff member
#4
அத்தியாயம் 2

"ஆனந்த் க்ரூப் ஆஃப் கம்பெனிஸ்" என்னும் மின்னணு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அலுவலகத்திற்குள் நுழைந்தார்கள் சகோதரிகளான அதிதி மஹதி.


வண்டியை நிறுத்தி விட்டு அலுவலகத்திற்குள் நுழைந்து வரவேற்பில் நின்றிருந்த பெண்ணிடம் தாங்கள் இந்த அலுவலகத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ளோம் என கூறி தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.


வரவேற்பில் நின்ற பெண் தன்னுடைய பெயர் கீதா என்றாள்.


"ஓகே கீதா.. இனிமேல் நாம நண்பர்கள்..ஆமா நீ இங்க எப்ப இருந்து வேலை பார்க்குற"-மஹதி


"நான் ஒரு வருடமா இங்கதான் வேலை பார்க்குறேன்..ஏன் கேக்குற"-கீதா


"இல்ல நாங்க நேர்காணல் வந்தப்போ நீ இங்க இல்ல..ஒரு வேளை நீயும் இந்த அலுவலகத்திற்கு புதுசுன்னு நினைச்சேன்"-மஹதி


"உங்க நேர்காணல் அப்ப எனக்கு உடம்பு சரியில்லை.. அதான் லீவு போட்டு இருந்தேன்"-கீதா

"ஓ..சரி..சரி.."-மஹதி

"ஆமா இந்த அலுவகத்தில் ரெண்டு பதவி காலியா இருந்துச்சு..நீங்க எந்த பதவிக்கு வந்துருக்கீங்க"-கீதா


"நான் எம்டி பி.ஏ..இவ அக்கவுண்ட்ஸ்"-அதிதி


"அட..அட..நீ பேச கூட செய்வீயா..நான் கூட நீ ஊமைனு நினைச்சேன்"-கீதா


"பாரு..நான் சொன்னா நீ எங்க கேக்குற..உன் வாயெல்லாம் எங்கிட்ட மட்டும் தான்..இப்ப பாரு இவ உன்ன ஊமையானு கேக்குறா.."-மஹதி


"போடி லூசு"-அதிதி


"சரி விடு..கீதா இங்க பசங்க எல்லாம் நல்லா இருப்பாங்களா"-மஹதி


"ஏய் மெதுவா பேசுடி..எம்டி காதுல விழுந்துச்சு அவ்ளோதான்"-கீதா


"ஏன்டி எம்டி அவ்ளோ டெரர்ரா"-மஹதி


"என்னது டெரர்ரா வா..அந்த மனுசன் முன்னாடி டெரர்லாம் தூசு டி"-கீதா


"மஹி எனக்கு இவ சொல்றத பார்த்தா பயமா இருக்குடி..நீ வேணா பி.ஏ வா போறியா"-அதிதி


"அடிங்க...ஓடிரு...நான் அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட் போயி ஜாலியா நாலு பேர பாத்துகிட்டு இருப்பேன்..நீ அந்த சிடுமூஞ்சி எம்டி கூடவே இரு"-மஹதி


"ஏய் மஹதி அவரு சிடுமூஞ்சி தான்..ஆனா செம ஹேண்ட்சம் டி.. அவருக்கு நிறைய ரசிகைகள் இருக்காங்க டி"-கீதா


"ஓ..அவ்ளோ பெரிய ஆளா டி அவரு..."-மஹதி


 

sudharavi

Administrator
Staff member
#5
"ஆமாடி..அவரும் அவரோட தம்பியும் செம்ம கெத்து டி இங்க"-கீதா

"ஓ..அவருக்கு தம்பி வேறயா..அந்த ஆளு எப்புடி"-மஹதி


"ஏய் மஹி வா நாம போகலாம் உள்ள.. லஞ்ச் ப்ரேக்ல அவ கிட்ட கேட்டுக்கலாம்"-அதிதி


"சரி ஓகே..கீத் நாம் லஞ்ச் ப்ரேக்ல பார்க்கலாம்..பாய் டி"-மஹதி


"ஏய் அவ பேரே கீதான்னு ரெண்டு எழுத்து..அத போய் கீத்னு கூப்பிடுற"-அதிதி


"அது அப்படித்தான்"-மஹதி


உள்ளே சென்று மேனேஜர் அறையை தட்டி அனுமதி பெற்று சென்றனர்.. 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் அமர்ந்து இருந்தார்..அவர் பெயர் லோகநாதன்.. அலுவலகத்தில் உள்ள அனைவராலும் லோகு என அழைக்கப்படுபவர்..


"நீங்க ரெண்டு பேரும் தானமா நேர்காணல்ல செலக்ட் ஆனாது"-லோகு


"ஆமா சார்" என்றனர் இருவரும்


"ஒரு நிமிஷம் மா" என்ற லோகு தொலைபேசியை எடுத்து ப்யூன்க்கு அழைத்து தனது அறைக்கு வர சொல்லி அழைப்பை துண்டித்தார்..


"சார்" என அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தார் ப்யூன்.


"வாங்க" என அழைத்த லோகு அதிதி மஹதியை பார்த்து இவர் பேரு "கனகு" மா..ப்யூன்..


"உங்க ரெண்டு பேருல யாருமா பிஏ போஸ்ட்க்கு செலக்ட் ஆனது"-லோகு


"நான் தான் சார்"-அதிதி


"பேரு மா?"-லோகு


"அதிதி சார்"-அதிதி


"ஓ சரிம்மா..உன் பேரு மா?" என லோகு மஹதியை பார்த்து வினவினார்.


"மஹதி சார்.. அக்கவுண்ட்ஸ் செக்சன் சார்"-மஹதி


"ஓகே மா..நீ கனகு கூட போ..அவரு உனக்கு அக்கவுண்ட் செக்சன காட்டுவாரு"-லோகு


"ஓகே சார்..தேங்க் யூ" என சொல்லி மஹதி கனகுடன் விடை பெற்றாள்..


"அதிதி நான் உன்ன எம்டிட அறிமுகப்படுத்துறேன் மா..அவருகிட்ட வேலை பத்தி கேட்டுக்கோமா" -லோகு


"ஓகே சார்"-அதிதி


அதிதியை அழைத்துக் கொண்டு லோகு எம்டி அறையை நோக்கி சென்றார்..
* * * *
"சர்வானந்த்- மேனேஜிங் டைரக்டர்"


சர்வானந்த்-6 அடி உயரம்,கோதுமை நிறம், தினமும் உடற்பயிற்சி செய்து தேக்குமரமான தேகம்,கண்களில் தீட்சயம்,இறுகிய முகம்


"சார் இவங்க தான் உங்க பிஏ.. இன்னைக்கு தான் வேலைக்கு சேர்ந்து இருக்காங்க"-லோகு


"ஓகே லோகு.. நீங்க போய் உங்க வேலையை பாருங்க..நான் அவங்களோட வேலையை அவங்க கிட்ட சொல்லிக்கிறேன்"-சர்வா


"ஓகே சார்" என சொல்லி விடை பெற்றார் லோகு..


"உங்க ஃபைல் குடுங்க "-என சர்வா அதிதியிடம் வினவ அதிதி அவளுடைய ஃபைல்லை கொடுத்தாள்..அதை பார்த்த சர்வா

"ஓகே மிஸ்.அதிதி..நீங்க எனக்கு பிஏ.. உங்களுக்கு தனி கேபின்லாம் இல்ல..இங்கதான் நீங்களும் இருக்கணும்.. இங்கே உங்களுக்கு டேபிள் போட சொல்றேன்"-சர்வா

"ஓகே சார்"-அதிதி


"இந்தாங்க ஃபைல்ஸ்..இது எல்லாம் இன்னைக்கு செக் பண்ணிட்டு எதாச்சும் மெயில் வந்துச்சுனா என்கிட்ட கேட்டதுக்கு அப்பறம் ரெஸ்பாண்ட் பண்ணுங்க"-சர்வா


"ஓகே சார்"-அதிதி

* * * *
"அண்ணா உங்கள பத்தி சொல்லுங்க அண்ணா"-மஹதி


"என்ன பத்தி சொல்ல என்ன மேடம் இருக்கு"-கனகு


"அண்ணா...நான் உங்கள அண்ணான்னு கூப்பிட்டா நீங்க என்ன மேடம்னு சொல்றீங்க..என்ன மஹதின்னு கூப்பிடுங்க அண்ணா"-மஹதி


"அது எப்படி மேடம்"-கனகு


"அப்ப நான் உங்கள சார்னு கூப்பிடுறேன்..ஓகே வா சார்"-மஹதி


"என்ன மேடம் நீங்க என்ன போயி சார்னு சொல்றீங்க.."-கனகு


"நீங்க என்ன மேடம்னு சொன்னா நான் உங்கள சார்னு சொல்லுவேன்..எப்படி வசதி"- என அடக்கப்பட்ட புன்னகையுடன் மஹதி வினவ


"ஓகே மா..நான் உன்ன தங்கச்சின்னு கூப்பிடுறேன்..போதுமா"-கனகு


"ம்ம்..சூப்பர் அண்ணா"-மஹதி


"இதுதான் மா அக்கவுண்ட்ஸ் செக்சன்.. இதுதான் உன் கேபின்..உன்னோட வேலையை பற்றி இங்க இருக்கவங்க கிட்ட கேட்டுக்கோமா.. எதாச்சும் உதவினா கூப்பிடு மா"-கனகு


"கண்டிப்பா அண்ணா" என கூறிய மஹதி தனக்கு கொடுக்கப்பட்ட கேபினில் அமர்ந்தாள்.


"ஹாய்..நீங்க மஹதி தான"என நவ நாகரீக மங்கை ஒருத்தி மஹதியிடம் வினவ


"ஆமா..நீங்க" -மஹதி


"நான் தீப்தி..நீங்க எப்ப வருவீங்கனு வெயிட் பண்ணிட்டு இருந்தேன் வந்துட்டீங்க"-தீப்தி

"நான் வர லேட் பண்ணிட்டேனா தீப்தி"-மஹதி

"இல்ல மஹதி சரியான நேரத்துக்கு தான் வந்திருக்க..இப்ப சிடுமூஞ்சி-2 வர நேரம்..அதுக்கிட்ட உன்ன அறிமுக படுத்திட்டு உன் வேலைய ஆரம்பி ..சரியா"-தீப்தி


"யாரு அது சிடுமூஞ்சி-2"-மஹதி


"அது நம்ம எம்டி சிடுமூஞ்சி-1 ஓட தம்பி தான் சிடுமூஞ்சி-2"-தீப்தி


"ஓ..சரி..சிடுமூஞ்சி-2 வரும்போது என்ன கூப்பிடுறையா.. அதுவரைக்கும் நான் இந்த அலுவலகத்தை சுத்தி பார்த்துட்டு வரேன்"-மஹதி


"ஓகே மஹதி..உன் நம்பர் குடு..அது வந்ததும் கால் பண்றேன்"-தீப்தி


"0000000.ஓகே நான் போயிட்டு வரேன்"என கூறிய மஹதி அலுவலகத்தை சுற்றி பார்க்க கிளம்பி விட்டாள்..


"ஏன்டி மஹி ..என்னடி இந்த அலுவலகத்தில் சிடுமூஞ்சியா இருக்கும் போல..ஒரு கேசும் தேராது போலயே.. நமக்கு எப்படி இங்க பொழுது போகும்..இந்த அதிதி இருந்தாலாச்சும் அவள கலாய்ச்சு பொழுது போகும்..இப்ப அவளும் இல்லையே..என்ன பண்றது" என மஹதி தனது மனசாட்சியிடம் புலம்பிக் கொண்டே எதிரில் வந்த நபரை கவனிக்காமல் அந்த நபர் மீது மோதி நின்றாள்.


தொடரும்.....
 

sudharavi

Administrator
Staff member
#6
அத்தியாயம்-3

மஹதி தனது மனசாட்சியுடன் பேசிக்கொண்டே எதிரில் வரும் நபரை கவனிக்காமல் அந்த நபர் மீது மோதி நின்றாள்..

"ஏய்.." என அந்த நபர் கோபத்துடன் அழைக்க

"சாரி சார்.. தெரியாம"-மஹதி

"என்ன தெரியாம..உன் கண் என்ன பின்னாடியா இருக்கு"-அந்த நபர்

"சார் அதான் தெரியாம மோதிட்டேன் என்று சொல்றேன்னே..நீங்க ரொம்ப பேசுறீங்களே"-மஹதி

"ஆமா அப்படித்தான் பேசுவேன்..என்ன பண்ணுவ"என அந்த நபர் கூற மஹதிக்கும் கோபம் எல்லை கடந்தது..அவள் மேல் பிழை உள்ள காரணத்தால் தான் இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தாள்..அந்த நபர் மன்னிப்பு கேட்டும் அதிகம் பேசுவதால் மஹதி தன் பொறுமையை இழந்தாள்.

"உனக்கு மட்டும் தான் பேச தெரியுமா..எனக்கும் பேச தெரியும்..அதான் சாரி சொல்லிட்டேனே"-மஹதி

"ஓ..நீ தெரியாம மோதிட்ட..அதான் சாரி கேட்குற..இதுவே நான் தெரியாம இடிச்சிட்டு சாரி கேட்டா நீ சரின்னு ஏற்று கொள்வியா..மாட்ட..உன்ன மாதிரி பொண்ணுங்க எல்லாம் மனசில் உலக அழகி என்று நினைத்துக் கொண்டு யாராவது தெரியாமல் மோதினால் நீ வேண்டும் என்று தான் என்மேல் மோதினாய் என்று நடித்து அந்த நபரை கம்பி எண்ண விட்டுருவீங்க"-அந்த நபர்

" நீ என்ன பைத்தியமா..நான் தெரியாம இடிச்சேன்..அதுக்கு மொத்த பெண்குலமும் இப்படி தான் என்று சொல்ற"-மஹதி

"நான் பெண்குலம் எல்லாம் இப்படி என்று சொல்லவில்லை..உன்ன மாதிரி பொண்ணுங்களை தான் சொல்றேன்.. முதலில் உன்னை யாரு உள்ளவிட்டது..வர வர இந்த வாட்ச்மென்க்கு அறிவு இல்லாம போய்விட்டது"-அந்த நபர்

"ஏய்...நீ ரொம்ப வரம்பு மீறி பேசுற.. உன்னை எல்லாம் உள்ளவிடுறாங்க..என்னை விடமாட்டார்களா..போடா பைத்தியம்" என கூறிவிட்டு அந்த நபர் சுதாரிக்கும் முன்பே அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் மஹதி..

"இடியட்..என்னை பைத்தியம் என்றாயா..உன்னை அடுத்த முறை பார்த்தால் என்ன செய்கிறேன் என்று பார்" என கூறிவிட்டு அந்த நபர் அவரின் பணிக்கு சென்றார்..

மஹதி நேரே சென்றது உணவகத்திற்கு..அங்கு சென்று 2 சமோசா 1 டீ குடித்த பிறகு தான் அவளுக்கு கோபம் குறைந்தது..அவள் கிளம்பும் நேரம் அவளுக்கு அழைப்பு வந்தது..அது தீப்தியிடமிருந்து வந்த அழைப்பு..அதை உயிர்ப்பித்து காதில் வைக்க

"மஹதி எங்க இருக்க.. சீக்கிரம் வா..சிடுமூஞ்சி-2 வந்துருச்சு.. உன்னை தான் கேட்டுச்சு..நீ வந்ததும் அத பார்க்க வர சொல்லுச்சு"-தீப்தி

"சரி வரேன்" என கூறிய மஹதி அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட் டிற்கு வேக எட்டுக்களுடன் சென்று தீப்தியை நெருங்கினாள்..
 

sudharavi

Administrator
Staff member
#7
"ஏய் எங்கடி போன..அந்த ஆளு வந்ததும் உன்னைத்தான் கேட்டாரு.. இன்னைக்கு வரும் போதே செம கோபத்தில் வந்தார்..ஏதாச்சும் கோபமா திட்டுனார் என்றால் நீ கண்டுக்காத..சரியா"என தீப்தி தன் அறிவுரையை கூறி முடிக்க

"சரிடி..நான் பார்த்து கொள்கிறேன்"என மஹதி சிடுமூஞ்சி-2 இருக்கும் அறை நோக்கி சென்றாள்.

* * * *

அதிதி அமைதியாய் சர்வா கொடுத்த வேலையை செய்து கொண்டிருந்தாள்..ஆனால் சர்வாவின் மனமோ குழப்பத்தில் இருந்தது..

"நான் அதிதியை எங்கோ பார்த்த ம்திரி இருக்கே"என சர்வா மனசாட்சியிடம் கூற

"அப்படி எல்லாம் இருக்க வாய்ப்பில்லை சர்வா..அதிதி இன்னைக்கு தான் இங்க வந்திருக்கா.." என சர்வா மனசாட்சி கூற

"ஆனா என்னோட உள் உணர்வு சொல்லுதே"என சர்வா புலம்ப

"நீ இப்போது எல்லாம் நிறைய வேலை பார்க்குற..உனக்கு ஓய்வு கிடைக்குறது இல்ல.. அதனால்தான் யார பார்த்தாலும் உனக்கு எங்கோ பார்த்த மாதிரி இருக்கு"என சர்வாவின் மனசாட்சி கூற

"ஆனா எனக்கு அதிதியை மட்டும் தானே பார்த்த மாதிரி இருக்கு"என குழம்பியவன்..அதிதியின் "சார்" என்ற அழைப்பில் குழப்பத்தில் இருந்து வெளி வந்தவன்

"என்ன அதிதி..என்னாச்சு"-சர்வா

"சார் ஃபைல் எல்லாம் பார்த்துட்டேன் சார்..மெயில் நீங்க பார்த்துட்டா நான் ரெஸ்பாண்ட் பண்ணிருவேன்"-அதிதி

"ஓகே அதிதி...வாங்க பார்க்கலாம்" என கூறிய சர்வா வேலையில் மூழ்கினான்.

* * * *

சிடுமூஞ்சி-2 அறை கதவை தட்டி அனுமதி பெற்று உள்ளே நுழைந்த மஹதி அதிர்ச்சியில் மூழ்கினாள்..காரணம் மஹதி மோதிய நபர் தான் அமர்ந்து இருந்தது..அந்த நபரின் பெயர் "விஷ்வானந்த்"

விஷ்வானந்த்- 6 அடி உயரம், கோதுமை நிறம்,கட்டுக்கோப்பான உடல், எப்பொழுதும் கோபத்தில் ஜொலிக்கும் முகம்.

"ஏய்..இங்க எதுக்கு வந்த..என்ன தைரியம் இருந்தா என்னை போடா என்று சொல்லுவ...நீ போடி வெளியே"என விஷ்வா மஹதியை பார்த்ததும் பொறிய தொடங்கினான்..

"சார் மரியாதை கொடுத்து பேசுங்க..இந்த டி போடுற வேலை எல்லாம் இங்க வேண்டாம்"-மஹதி

"ஓ..நீ டா போடுவ..நான் டி போட கூடாதா..நீ எதுக்கு இங்கே வந்த..அது சொல்லு"-விஷ்வா

"நான் அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட்க்கு புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கேன்..நீங்க என்னை அழைத்ததா சொன்னாங்க..அதான் வந்தேன்"-மஹதி

"என் அலுவலகத்தில் வேலைக்கு வந்த நீ..என்னை போடா என்று சொல்ற..இதுக்கே நான் உன்ன இந்த வேலையை விட்டு வெளியேற்றம் செய்யலாம்..தெரியுமா உனக்கு"-விஷ்வா
 

sudharavi

Administrator
Staff member
#8
"இங்க பாருங்க..நான் தெரியாமல் மோதிட்டேன்.. அதுக்கு நிறைய மன்னிப்பும் கேட்டேன்..ஆனா நீங்க என்னோட மன்னிப்பை ஏத்துக்கல..அதுவும் இல்லாமல் நீங்க உங்க எல்லையை மீறி பேசுனீங்க..இந்த வேலையில் இருந்து நீக்குனால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை..இந்த அலுவலகம் இல்லை என்றால் இன்னொரு அலுவலகம்"-மஹதி

"ஓ..சரி..இவ்ளோ பேசுற நீ வேலையும் இதே மாதிரி இருப்பியா..இல்ல வாய் மட்டும் தானா" என விஷ்வா ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க

"நான் வேலை செய்கின்றதை பார்த்துட்டு பேசுங்க நீங்க"-மஹதி

"ஆமா இதுவரைக்கும் உன் வாயில் இருந்து 'சார்' என்ற வார்த்தை வரவே இல்லையே.. ஏன்?"-விஷ்வா

"நான் சார் என்று அழைக்க வேண்டும் என்றால் நீங்கள் என்னை பன்மையில் அழைக்க வேண்டும்"என கூறிய மஹதி முகத்தை திருப்ப,அதை கண்ட விஷ்வாவின் முகத்தில் ரகசிய புன்னகை தோன்றி மறைந்தது..

"ஓ...நான் உனக்கு மரியாதை தர வேண்டும் என்று சொல்கிறாய்..அது என்னால் முடியாது.. இப்போது உன்னோட ஃபைல் கொடுத்தால் தன் வேலை பற்றி சொல்வேன்" என கூறிய விஷ்வா கையை நீட்ட,அதிதி முறைத்துக் கொண்டே ஃபைல்லை கொடுத்தாள்..

"உன் பெயர் மஹதியா"-விஷ்வா

"அப்படி தானே பெயர் போட்டிருக்கு..அப்போது அதானே என் பெயர்"-மஹதி

"நேரம்..இந்தா..இந்த ஃபைல்லில் உள்ள அக்கவுண்ட்ஸ் சரியாக இருக்கிறதா என பார்..ஏதாவது சந்தேகம் என்றால்"என விஷ்வா கூறி முடிக்கும் முன்பே

"ஏதாவது சந்தேகம் என்றால் உங்களிடம் வர வேண்டும்..அதானே"என மஹதி கேட்ட முக பாவனையில் வாய்விட்டு சிரித்த விஷ்வா

"இல்லை..என்னிடம் வராதே..தீப்தியிடம் கேட்டுக் கொள்"என விஷ்வா கூறி அவனின் சிரிப்பில் கடுப்பான மஹதி

"நான் போய் என்னுடைய வேலையை பார்க்கிறேன்"என மஹதி அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்..

மஹதி சென்றதும் விஷ்வா சிரித்துக் கொண்டே இருந்தான்..அனைவரும் பார்த்து பேச நடுங்கும் விஷ்வாவிடம் திமிராக பேசிய மஹதியை ஏனோ அவனிற்கு பிடித்தது..

அதன் பிறகு அனைவரும் அவரவர் வேலையில் மூழ்கினர்..மாலை 5 மணிக்கு கிளம்பிய அதிதி மஹதியை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்..

தொடரும்...


ReplyForward
 

Anuya

Well-known member
#9
அத்தியாயம் 4

வீட்டிற்குள் அதிதியும் மஹதியும் செல்ல அப்போது தான் விஜயராவ் தன் காரிலிருந்து இறங்கினார்..

"குட்டிம்மா.. இப்போது தான் வீட்டுக்கு வருகிறீர்களா"-விஜயராவ்

"ஆமாப்பா"என கூறிய சகோதரிகள் சலுகையாய் விஜயராவ்வின் தோளில் சாய்ந்து கொண்டனர்..மகள்களின் தலையை வாஞ்சனையுடன் தடவிய விஜயராவ்

"முதல் நாள் வேலைக்கு போயிட்டு வந்து இருக்கீங்க..வேலை பிடிச்சிருக்கா செல்லங்களா..கஷ்டமா இருந்தா நீங்க வேலைக்கு போக வேணாம் டா"-விஜயராவ்

"இல்லப்பா..வேலை பிடிச்சிருக்கு..கஷ்டம் எல்லாம் இல்லப்பா"என ஒரு சேர கூறினர் அதிதியும் மஹதியும்..

"வீட்டுக்கு வந்ததும் அப்பாகிட்ட செல்லம் கொஞ்ச வேண்டியது..போங்க எல்லாரும்..போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க"-சாதனா

"ஏன்ம்மா... வந்ததும் எங்களை விரட்டுற"-மஹதி

"நீ ஃப்ரெஷ் ஆகிட்டு வந்தா உனக்கு பிடிச்ச வெங்காய பக்கோடாவும் டீயும் தரலாம் என்று பார்த்தேன்..சரி நீ இப்படியே உட்காரு..எனக்கு ஒன்றும் பிரச்சனையில்ல"என சாரதா நமட்டு சிரிப்புடன் கூற

"அம்மா...நீ எனக்கு பாசமா செஞ்சு தர பக்கோடா...அதை வேணாம் என்று நான் சொல்லுவேனா"என கூறியபடியே அதிதியை இழுத்துக் கொண்டு தன் அறைக்கு வந்தாள் மஹதி..

இதை பார்த்த சாதனாவும் விஜயராவ்வும் வெடித்து சிரித்தனர்... அறைக்குள் வந்த அதிதி மஹதியை பார்த்து சிரித்ததை கண்டு

"ஏன்டி..எதுக்கு இப்படி சிரிக்கிற..இப்படி சிரிச்ச உனக்கு பக்கோடா தரமாட்டேன்..உன் பங்கையும் நானே சாப்பிட்டுருவேன்.."என மஹதி கூற அதிதி சிரிப்பை அடக்க..இப்போது சிரிப்பது மஹதியின் முறையானது..

"சோ ஸ்வீட்டு...நாம கீழ போகலை என்றால் நம்ம அம்மா பக்கோடாவை பங்கு போட்ரும்..வேகமா ஃப்ரெஷ் ஆகிட்டு வா"-மஹதி

இருவரும் ஃப்ரெஷ் ஆகி கீழே வந்து பக்கோடாவையும் டீயையும் உண்டு முடித்து சிறிது நேரம் தொலைக்காட்சி மற்றும் கைபேசியில் பொழுதை கழித்தனர்.. பின்னர் இரவு உணவிற்காக சாதனாவிற்கு சில பல உதவிகளை செய்து பரிசும் பெற்றனர்..இரவு உணவு அனைவரும் ஒன்றாய் அமர்ந்து அன்றைய நாளை பற்றி பேசி சிரித்து உண்பது அந்த வீட்டின் எழுதப்படாத சட்டம்..அதே போல் இன்றும் ஒன்றாய் அமர்ந்து சாப்பிட்டனர்..

"சாதனா இன்னைக்கு நம்ம பொண்ணு மஹதி யார்க்கிட்டயாவது சண்டை போட்ருப்பா என்று நினைக்கிறீயா"-விஜயராவ்

"இதுல என்னங்க சந்தேகம்..கண்டிப்பா அவ சண்டை போட்ருப்பா"-சாதனா

இதை கேட்ட மஹதிக்கு விஷ்வாவை பற்றி தன் பெற்றோரிடம் சொல்ல ஏதோ போல் இருந்தது.. அதனால் பொய்க்கோபம் பூசி தன் பெற்றோரை பார்த்து

"நான் யார்க்கிட்டயும் சண்டை பிடிக்கல..நீங்களே போதும் நான் சண்டக்காரின்னு சொல்ல"என முகத்தை திருப்பிக் கொண்டு மஹதி கூற..அதைக்கண்டு சிரித்த விஜயராவ்

"அதிதி உண்மையிலே மஹதி யார்கிட்டேயும் சண்டை போடலயா இன்னைக்கு"என கேட்க

அதிதி மஹதியை பார்த்துக் கொண்டே இருந்தாள்.. எப்போதும் சண்டை பிடித்தால் அதை அப்படுயே சொல்லும் மஹதி இன்று முகத்தை திருப்பிக் கொண்டு பேசுவது ஏன் என்று அதிதிக்கு குழப்பமாக இருந்தது..

"இல்லப்பா..மஹதி யார்க்கிட்டயும் சண்டை பிடிக்கல"-அதிதி

"அட..அட...இதை கேட்கும் போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு"என ஒரு சேர கூறினர் பெற்றோர்..உணவை முடித்துக் கொண்டு அறைக்கு வந்த அதிதி மஹதியை உற்று நோக்கியபடியே

"இன்னைக்கு யாருகிட்ட சண்டை போட்ட மஹதி"-அதிதி

அதிதியை மஹதி அக்காவாகவும் தோழியாகவும் நினைப்பதால் உண்மையை கூற தொடங்கினாள்..

"உங்க எம்டி சர்வா தம்பி விஷ்வாகிட்ட தான் சண்டை போட்டேன்"-மஹதி

இதை கேட்டு அதிர்ந்த அதிதி"என்னடி சொல்ற..அவருகிட்ட நீ ஏன் சண்டை போட்ட"என கேட்க

"எனக்கு பொழுநனது போகல..அதனால தான்"என கடுப்பாய் கூறிய மஹதி காலையில் நடந்த அத்தனையும் ஒன்று விட்டல் கூறி முடித்தாள்..அதை கேட்டு அதிர்ந்த அதிதி

"ஏன்டி தெரியாம மோதினதுக்கா இவ்ளோ..இதுனால எதாச்சும் உனக்கு பிரச்சினை வருமா..நாம் வேணா வேலைக்கு போகாமல் இருப்போம்"என தங்கையின் நலனில் அக்கறையாய் வினவ

"அட லூசு.. இதெல்லாம் ஒன்னும் இல்லை..இனிமேல் நான் அந்த ஆளு பக்கம் கூட தலை வைக்கல..போதுமா..இதுக்கு போய் வேலையை விடலாம்னு சொல்ற..அதனால் தான் யார்கிட்டேயும் சொல்லல..நீயும் அம்மா அப்பாகிட்ட சொல்லாத..எதையும் நினைக்காம தூங்கு"என கூறிய மஹதி போர்வை போர்த்தி தன்னை நித்திரா தேவியிடம் ஒப்படைத்தாள்.நீண்ட நேரம் தங்கை பற்றி யோசித்த அதிதியும் கண் அயர்ந்தாள்.

* * * *

சர்வாவின் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த விஷ்வா சர்வாவின் வரவிற்காக காத்திருந்தான்..8 மணிக்கு மேலே வந்த சர்வா ஹாலில் விஷ்வா அமர்ந்திருப்பதை பார்த்து

"விஷ்வா"என சர்வா அழைக்க திரும்பிய விஷ்வா

"சர்வா வந்துட்டியா..வா சாப்பிடலாம்"என கூறிய விஷ்வாவை அதிர்ச்சியாக பார்த்த சர்வா,உடனே முகத்தில் படர்ந்த அதிர்ச்சியை மறைத்து

"வாஷ்ரூம் போயிட்டு வரேன் டா"-சர்வா

"சரி வா.."-விஷ்வா

சாப்பிட அமர்ந்த சர்வாவின் பார்வை விஷ்வாவை நிலைக்குத்தி நின்றது..

"என்ன சர்வா என் முகத்தையே பார்க்குற..சாப்பிடு"-விஷ்வா

விஷ்வா எப்போதும் சர்வாவை அண்ணா என்று தான் அழைப்பான்..அவன் மகிழ்ச்சியாக இருக்கும் போது மட்டுமே சர்வாவை பெயர் சொல்லி அழைப்பான்..இது சர்வாவிற்கு தெரிந்த ஒன்று.. ஆனால் இத்தனை வருடமாய் அண்ணா என அழைக்கும் விஷ்வா இன்று சர்வா என் அழைத்தது அவனிற்கு மகிழ்ச்சியே..இருந்தாலும் விஷ்வாவின் மகிழ்ச்சிக்கு காரணம் என்ன என அவன் யோசித்தான்..விஷ்வாவின் மகிழ்ச்சி நிரந்தரமாக அவன் வாழ்வில் இருக்க வேண்டும்..அதற்கு அவன் மகிழ்ச்சிக்கான காரணத்தை அறிய வைண்டும் என நினைத்துக் கொண்டே விஷ்வாவிடம் பேச்சுக் கொடுத்தான்.

"விஷ்வா இன்னைக்கு ஆபிஸ் எப்படி இருந்துச்சு"-சர்வா

"என்ன சர்வா தினமும் தானே வரேன்..புதுசா கேட்குற"-விஷ்வா

"இல்லடா சும்மாதான் கேட்டேன்"-சர்வா

"சர்வா இன்னைக்கு புதுசா ஒரு பொண்ணு அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட்க்கு வந்தா அவ பேரு..ம்ம்..மஹதி"-விஷ்வா

"ஓ..என்னவாம் அந்த பொண்ணுக்கு"-சர்வா

"இல்ல சர்வா..எல்லாரும் என்னைய பார்த்தாலே ஓடிருவாங்க..அப்படி இல்லைனா நான் திட்டுறத வாங்கிட்டு வெளிய போய் என்னை திட்டுவாங்க..ஆனா இந்த மஹதி என்ன பண்ணுனா தெரியுமா"என நடந்த அனைத்தையும் கூறினான் விஷ்வா

இதை கேட்ட சர்வாவிற்கு புரிந்தது ஒன்று தான்..அது விஷ்வாவிற்கு மஹதியை பிடித்துள்ளது என்பது தான்.. ஏனெனில் விஷ்வாவின் குறும்புத்தனம் அவனுக்கு பிடித்தவரிடம் மட்டும்தான் காட்டுவான்..பெண்களை மதிக்கும் விஷ்வா தனக்கு உரிமையுள்ள நபரை மட்டும்தான் ஒருமையில் அழைப்பான்..இந்த இரண்டையும் அவன் மஹதியிடம் வெளிப்படுத்தியுள்ளான் என அறிந்த சர்வா அந்த மஹதியே தன் தம்பிக்கு வாழ்க்கை துணையாக வரவேண்டும் என எண்ணிக்கொண்டான்..ஆனால் சர்வாவிற்கு குழப்பமான கேள்வி விஷ்வாவிற்கு எப்படி அந்த மஹதியை பார்த்ததும் பிடித்தது என்பது தான்.

சாப்பிடாமல் யோசித்து கொண்டிருந்த சர்வாவை தலையில் கொட்டிய விஷ்வா

"சாப்பிடாம என்ன யோசனை..சாப்பிட்டு தூங்கு சர்வா..நான் போய் தூங்குறேன்"என கூறிய விஷ்வாவை பார்த்துக் கொண்டே 'கண்டிப்பா பழைய விஷ்வா இன்னும் கொஞ்ச நாள்ல வந்துருவான் ' என நினைத்துக் கொண்டே தூங்க சென்றான் சர்வா.

தொடரும்...
 

sudharavi

Administrator
Staff member
#10
அத்தியாயம் 5

பொழுது அழகாக விடிந்தது.எப்போதும் போல் சண்டையும் கேளியுமாய் அலுவலகத்திற்கு கிளம்பினர் அதிதியும் மஹதியும்.அதிதி மஹதியிடம் பல அறிவுரைகளை வழங்கி விட்டு தன் வேலையை பார்க்க சென்றாள்.சர்வா கணினியில் வேலை பார்த்து கொண்டிருந்தான்.

"சார் இன்னைக்கு விக்னேஷ் நிறுவனத்தோட உங்களுக்கு 11 மணிக்கு மீட்டிங் இருக்கு"-அதிதி

"ஓகே அதிதி..மீட்டிங்க்கு கொண்டு போக வேண்டிய ஃபைல் தயார் பண்ணிட்டாங்களா"-சர்வா

"சார் ஃபைல் தயார் பண்றது கவிதா மேம் தான் சார்"-அதிதி

"ஓகே அதிதி...அவங்கள வர சொல்லுங்க"-சர்வா

"சரிங்க சார்"என சொன்ன அதிதி கவிதாவை அழைக்க சென்றாள்..கவிதா முகத்தில் பயத்துடன் சர்வாவின் முன் நின்றாள்.

"கவிதா நீங்க **** ஃபைல்லை தயார் பண்ணிட்டீங்களா..அத எடுத்துட்டு வாங்க..நான் பார்த்துட்டு கிளம்புறேன்"-சர்வா

"சார்"-கவிதா

"என்னாச்சு கவிதா..வேகமா எடுத்துட்டு வாங்க..போங்க"-சர்வா

"சார் இன்னும் அந்த ஃபைல் முடிக்கல சார்" என கவிதா பயத்துடன் கூறினாள்

"வாட்..திரும்ப சொல்லுங்க"-சர்வா

"இன்னும் முடிக்கலை சார்"-கவிதா

"என்ன சொல்லுறீங்க...நீங்க என்ன பைத்தியமா..எவ்ளோ முக்கியமான ஃபைல் இன்னும் முடிக்கலன்னு சொன்னா என்ன அர்த்தம்.."என கோபத்தில் கத்த ஆரம்பித்தான் சர்வா.

"சாரி சார்"-கவிதா

"உங்க சாரிய தூக்கி குப்பையில போடுங்க..நீங்க எல்லாம் எதுக்கு வேலைக்கு வரீங்க..வேலை செய்ய விருப்பம் இல்லை என்றாள் இங்க எதுக்கு வரணும்..நீங்க வேலை செய்யாம அரட்டை அடிக்க இது ஒன்னும் பார்க் இல்லை"என சர்வா கூறிக் கொண்டே செல்ல கவிதா அழுக தொடங்கி விட்டாள்..கவிதா பேச வாய்ப்பளிக்காமல் சர்வா அவனின் கோபத்தை காட்டினான்..

இதை அனைத்தையும் பார்வையாளராக பார்த்துக் கொண்டிருந்த அதிதி,கவிதாவின் கண்ணீரை கண்டதும் கோபம் கொண்டாள்..

"சார்.. சார்"-அதிதி

"ம்ச்...சொல்லுங்க அதிதி"-சர்வா

"சார் நீங்க கவிதா மேடம்யை பேச கூட விடாம திட்டுறீங்க...அவங்க இந்த வேலையை முடிக்காம இருக்க என்ன காரணம் என்று கேளுங்க சார்"-அதிதி

"மிஸ்.அதிதி..நான் ஒவ்வொரு ஆள்கிட்டயும் நீங்க ஏன் இந்த வேலையை முடிக்கல என்று கேட்டால் ஆயிரத்தெட்டு காரணம் சொல்லுவாங்க..அதை எல்லாம் நான் நம்பனும் என்று நீங்க நினைக்கிறீங்களா"என கொஞ்சமும் கோபம் குறையாமல் அதிதியை பார்த்து கேட்டான் சர்வா.

"இல்ல சார்.. கவிதா மேம் இந்த வேலையை முடிக்காததுக்கு கண்டிப்பான காரணம் இருக்கும் சார்..நீங்க அதை கேட்கலாம் சார்"-சர்வா

"அதிதி எனக்கு யாரோட காரணத்தையும் கேட்க நேரமில்லை..இன்னும் ஒரு மணி நேரத்தில் எனக்கு என்னோட ஃபைல் வந்தாகனும்..அப்படி இல்லை என்றாள் கவிதா இந்த வேலையை விட்டு போகனும்."-சர்வா

"சார் அந்த ஃபைல்லை நான் ரெடி பண்றேன்..இன்னும் அரை மணி நேரத்தில் உங்க ஃபைல் உங்ககிட்ட இருக்கும் சார்"-அதிதி

"வாட்..என்ன சொல்றீங்க..நீங்க அந்த ஃபைல்லை தயார் பண்றீங்களா..அதிதி நீங்க நேற்று தான் வேலைக்கு சேர்ந்து இருக்கீங்க..அதை மறந்துடாதீங்க"என சர்வா நக்கலாக கூற,அதிதி கோபம் அடைந்தாள்

"நான் கண்டிப்பா அந்த ஃபைல்லை நீங்க எதிர்பார்க்கிறதை விட நல்லாவே பண்ணுவேன் சார்"என கூறிய அதிதி கவிதாவை அழைத்துக் கொண்டு அவளுடைய இடத்திற்கு சென்றாள்.

கவிதாவிடம் ஃபைல் பற்றிய தகவலை பெற்றுக் கொண்டு கவிதாவின் உதவியுடன் அவளுடைய திறமையை வெளிப்படுத்தினாள்..அதிதி தயார் செய்த ஃபைல்லை பார்த்த கவிதா ஆச்சரியபட்டாள்..
 

sudharavi

Administrator
Staff member
#11
"அதிதி சூப்பர்..நீ பல ஃபைல் ரெடு பண்ணி அனுபவமான மாதிரி பண்ணிட்ட மா..ரொம்ப நன்றி"-கவிதா"அய்யோ மேம்..என்ன இது..என்கிட்ட போய் நன்றி எல்லாம் சொல்றீங்க..நீங்க உதவி பண்ணதால தான் என்னால இதை பண்ண முடிந்தது மேம்"-அதிதி"நீ என்ன சொன்னாலும் நீ ரொம்ப பெரிய உதவி செஞ்சு இருக்க டா‌‌..அது என்ன மேம்னு கூப்பிடுற..கவிதா என்று கூப்பிடு.‌.அப்படி இல்லைனா அக்கான்னு கூப்பிடு டா"-கவிதா"சரிங்க அக்கா"என புன்னகையுடன் கூறிய அதிதியை ரொம்ப பிடித்தது கவிதாவிற்கு."அதிதி நான் ஏன் இந்த ஃபைல்லை முடிக்கலன்னு நீ கேட்கவே இல்ல..ஆனா எனக்கு உதவி பண்ணிருக்க..ஒரு வேளை நான் பொய் சொல்லி இந்த வேலையை பண்ணாம இருந்தா நீ என்ன பண்ணுவ"-கவிதா"அக்கா நீங்க பொய் சொல்லி இருந்தாலும் நான் இதை பண்ணிருப்பேன்..ஆனா நீங்க பொய் சொன்ன மாதிரி எனக்கு தெரியல கா"-அதிதி"அதிதி எனக்கு ஒரு பொண்ணு டா..6 மாசம் தான் ஆகுது அவ பிறந்து..அவளுக்கு நேற்று ரொம்ப உடம்பு சரியில்லை..அதனால தான் என்னால இந்த வேலையை முடிக்க முடியல டா"-கவிதா"அக்கா பாப்பா இப்ப எப்படி இருக்கா..நீங்க கவலை படாதீங்க.. எல்லாம் சரியாகிரும்"-அதிதி"ஓகே டா..ஃபைல்லை சார்க்கிட்ட கொடுக்கலாம் வா"-கவிதா"ஓகே கா"என கூறிய அதிதியுடன் கவிதா இணைந்து சர்வாவிடம் ஃபைல்லை கொடுத்தனர்..ஃபைல்லை படித்து பார்த்த சர்வா அதிதியை நோக்கி மெச்சுதல் பார்வை வீசி விட்டு கவிதாவின் புறம் திரும்பி"ஓகே கவிதா.. இனிமேல் இது மாதிரி ஆகாமல் பார்த்துக்கோங்க.. இதுதான் உங்களுக்கு ஃபர்ஸ்ட் அன்ட் லாஸ்ட் வார்னிங்..இப்ப நீங்க போய் உங்க வேலையை பாருங்க கவிதா"-சர்வா"ஓகே சார்"என கூறிய கவிதா அறையில் இருந்து வெளியேறினாள்."சார்"-அதிதி"சொல்லுங்க அதிதி"-சர்வா"சார் கோபம் முட்டாள்தனம் சார்.. கோப படலாம் சார் நம்மக்கு எதிர்ல இருக்கவங்க என்ன சொல்றாங்க..அவங்க பக்கம் நியாயம் இருக்கா இல்லையா..அவங்க பண்ணது நியாயம் இல்லைனா அவங்க மேல கோபபட்டா நியாயம்..ஆனா அவங்களை பேசவே விடாம நீங்க கோப படுறது முட்டாள்தனம் சார்"என அதிதி சர்வாவிடம் பொறிந்து விட்டாள்..அதிதி பேசியதை கேட்ட சர்வாவின் கண்கள் கலங்கியது‌."அதிதி நீங்க உங்க எம்டி கிட்ட பேசிட்டு இருக்கீங்க‌‌..அதை தெரிஞ்சு பேசுறீங்களா"-சர்வா"சார் நீங்க எம்டியா இருங்க..எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை..நமக்கு தெரிஞ்சு ஒருதவங்க தப்பு பண்ணா அதை நாம தட்டி கேட்கணும்னு எங்க அப்பா சொல்லி வளர்த்திருக்காரு.. அதனால்தான் நான் உங்களை கேட்குறேன் சார்‌‌..இதுக்காக நீங்க என்னைய வேலையை விட்டு தூக்குனாலும் பிரச்சினை இல்லை சார்"-அதிதி"ஓகே அதிதி..நான் ஒத்துக்கிறேன்.. அன்ட் சாரி அதிதி"-சர்வா"சார் நீங்க சாரி சொல்லணும் எதிர்பார்த்து இதை சொல்ல சார்"என்றாள் அதிதி சங்கடமாக"ஓகே அதிதி..கவிதாவை வர சொல்றீங்களா"-சர்வா"சார் எதுக்கு சார் அவங்க..என்ன தப்பு பண்ணாங்க சார்"என பதட்டமாக அதிதி கேட்க"கூல்..கூல்..நீங்க கூப்பிட்டு வாங்க அதிதி"-சர்வா"ஓகே சார்"என கூறிய அதிதி கவிதாவை அழைக்க சென்றாள்..

அதிதி சென்றதும்"பார்பி உன்ன மாதிரியே இந்த அதிதி இருக்கா.. ஒருவேளை நீதான் அதிதியா பார்பி..உன் பெயர் என்ன பார்பி..சீக்கிரம் நான் உன்னை கண்டுபிடிக்கிறேன் பார்பி"என சர்வா தன் மனதில் பேசிக் கொண்டான்.கவிதா வந்ததும்"சாரி கவிதா.‌.நீங்க சொல்ல வர காரணத்தை நான் கேட்கல.. இனிமேல் நீங்களும் வேலையை சரியா பாருங்க"-சர்வா"ஓகே சார்‌‌.. கண்டிப்பா இனிமேல் இப்படி நடக்காது சார்"என்று கவிதா விடைபெற்றாள்‌.அதிதியை சிரிப்புடன் நோக்கிய சர்வா நன்றி என்று கண்களால் கூறினான்.தொடரும்....ReplyForward
 
#12
அத்தியாயம் 6

அதிதியின் அறிவுரைகளை கேட்டு மஹதி ஒரு முடிவு எடுத்தாள்.அது விஷ்வாவிடம் அதிகமாக பேச கூடாது என்பது தான்.தீப்தியிடம் சிறிது நேரம் பேசிவிட்டு மஹதி தனது இடத்தில் அமர்ந்து வேலை பார்க்க தொடங்கினாள்.விஷ்வாவை பற்றி மறந்து இருந்தாள்.11 மணிக்கு மேல் வந்த விஷ்வா அவன் அறைக்குள் நுழையும் முன் மஹதியை பார்க்க மஹதியும் கணினியில் இருந்து தன் பார்வையை விலக்கி விஷ்வாவை பார்த்தாள்.அந்த பார்வையில் வெறுமை சூழ்ந்து இருப்பதை கண்ட விஷ்வா புருவம் சுருக்கி யோசித்து தன் அறைக்கு சென்றான்.அவன் மனம் நேற்று தன்னிடம் வழக்காடிய மஹதியை எதிர்பார்த்தது.உடனே அலைபேசியை எடுத்து

"தீப்தி.. உங்களுக்கு கொடுத்த வேலையை முடிச்சாச்சா"-விஷ்வா

"சார் முடிச்சிட்டேன் சார்"என உள் வாங்கிய குரலில் பதில் அளித்தாள் தீப்தி.

"ஓகே..ஃபைல் எடுத்துட்டு என் டேபிள்க்கு வாங்க"-விஷ்வா

"ஓகே சார்..வரேன் சார்"என கூறிய தீப்தி அழைப்பை துண்டித்து விஷ்வாவின் அறை நோக்கி சென்றாள்.விஷ்வா தீப்தியிடமிருந்து ஃபைல்லை பெற்று சரி பார்த்த பின்னர்

"ஓகே தீப்தி..குட்..நல்லா பண்ணிருக்கீங்க..நீங்க போகலாம் தீப்தி..நீங்க போய் மஹதியை வர சொல்லுங்க"-விஷ்வா

"ஓகே சார்"என்ற தீப்தி மஹதியிடம் விஷ்வா அழைத்ததை கூறினாள்.மஹதி யோசனையுடன் சென்றாள்.

"வாடி என் டெடி..என்கிட்டயே உன் திமிர காட்டுறீயா"என விஷ்வா மனதுக்குள் நினைத்துக் கொண்டு

"வா மஹதி..என்ன இன்னைக்கு ரொம்ப அமைதியா இருக்க..மௌன விரதமா"என விஷ்வா சீண்டினான்.

பல்லைக் கடித்துக் கொண்டு மஹதி"இல்ல சார்"என்றாள் சாரில் அழுத்தம் கொடுத்து.அவள் சொன்ன சார் விஷ்வாவிற்கு உவப்பானதாக இல்லை.அதை அவனின் இறுகிய முகமே காட்டியது.அவளை வெறுப்பேற்ற எண்ணி

"என்ன மஹதி மரியாதை எல்லாம் பயங்கரமா இருக்கு..என்ன என்னை பார்த்து பயந்துட்டியா..நேற்று வசனம் எல்லாம் பேசுன..இன்னைக்கு இப்படி பதுங்குறீயே "என நக்கலாக கூற,மஹதியின் பொறுமை காற்றாய் பறந்தது.

"ஏய்..ரொம்ப பேசாத..போனா போகுதுன்னு மரியாதை கொடுத்தா ரொம்ப பண்ற..உனக்கு போய் மரியாதை கொடுத்தேன் பாரு..போடா"என கூறிய மஹதி விஷ்வா அறையில் இருந்து வெளியேறினாள்.

"இதை..இதை தாண்டி எதிர்பார்த்தேன் என் செல்லக்குட்டி..இப்படி பட்டாசு மாதிரி பொறியிரது தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..மஹதி உன்மேல எனக்கு ஒரு இது இருக்கு..பார்ப்போம்"என தன் மனதுடன் பேசி சிரித்துக் கொண்டான் விஷ்வா.
மஹதி கோபத்துடன் கணினியை தட்டி கொண்டிருந்தாள்.மதிய உணவு இடைவேளை முடிந்ததும் விஷ்வா மஹதியை அழைத்தாள்.

"என்ன கூப்ட"-மஹதி

"மஹதி டார்லிங் சாப்டியா மா..ஏன் டல்லா இருக்க டார்லிங்"என விஷ்வா வம்பிழுத்தான்.

"ஏய்..என்ன திமிரா..டார்லிங் சொன்ன பல்ல தட்டிருவேன்"-மஹதி

"ஓ..உனக்கு டார்லிங் பிடிக்கலையா..சரி பட்டாசு வேலையை முடிச்சிட்டுயா..நாம அவுட்டிங் போவோமா"சிரித்துக் கொண்டே விஷ்வா கேட்க

"டேய் பச்சை சட்டை போட்ட பைத்தியமே..என்ன திமிரா.."-மஹதி

"ஓ..உனக்கு பட்டாசுன்னு சொல்றதும் பிடிக்கலையா..வேற என்ன சொல்லலாம்..டெடி நல்லா இருக்குல..இனிமேல் நீ எனக்கு டெடி தான்"என விஷ்வா வம்பிழுக்க

"போடா குரங்கே.."என கூறிய மஹதி விஷ்வாவின் தலையில் ஒரு கொட்டை பரிசாய் அளித்துவிட்டு சென்றாள்

"ஏய் பிசாசு..ஏன்டி கொட்டுன.."என கேட்ட விஷ்வாவின் கேள்விக்கு அவள் பதில் சொல்ல அங்கு இல்லை.

"அப்பாடி..எப்படியோ இவனை அடிச்சிட்டோம்.‌.இப்பதான் மனசு நிம்மதியா இருக்கு.இந்த அதிதி பேச்ச கேட்டு அமைதியா இருந்தோம்னா இந்த குரங்கு நம்மள எதாச்சும் பண்ணிருக்கும்"என மஹதி தன் மனதில் புலம்பிக் கொண்டாள்.

மாலை வீடு சென்றதும் அதிதி மஹதியிடம் விஷ்வா பற்றி விசாரிக்க மஹதி அலுவலகத்தில் நடந்ததை கூறினாள்‌.அதை கேட்ட அதிதி

"மஹி அந்த விஷ்வா உன்ன விரும்புறார் என்று நினைக்கிறேன் டி..நீ என்ன நினைக்கிற"என சிக்கன் 65 சாப்பிட்டு கொண்டிருந்த மஹதியிடம் கேட்க

"இந்த அம்மா நமக்கு சிக்கனை கம்மியா வச்சுட்டாங்கனு நினைக்கிறேன் டி.."என மஹதி கூற அதிதி கடுப்பானாள்.

"ஏய்..என்ன லூசு நான் என்ன கேட்டா நீ என்ன பேசுற.‌‌"-அதிதி

"நீ ஏதாச்சும் உருப்படியா பேசுறீயா..ஒன்னும் இல்ல..அந்த விஷ்வா என்னை லவ் பண்ணலாம் இல்ல.‌.நீ தேவையில்லாம எதையாச்சும் கற்பனை பண்ணாத..சரியா"என மஹதி தன் முட்டைக் கண்ணை உருட்டி மிரட்ட அதிதிக்கு சிரிப்பு வந்தது..

"சரிடி.. தூங்கலாம்"என்ற அதிதி தூக்கத்தை குத்தகைக்கு எடுத்தாள்.அதிதி கூறியதை யோசித்த மஹதி

"அடேய் விஷ்வா என்கிட்டயே உன் சேட்டையை காட்டுறீயா..உன்ன என்ன பண்றேன்னு பாரு டா"என சூளுரைத்து மறு நாளின் விடியலுக்காக காத்திருந்தாள்.

* * * *

வீட்டிற்கு வந்த விஷ்வாவோ மஹதியை பற்றியே நினைத்து கொண்டிருந்தான்.மஹதி மேல் ஏற்பட்டுள்ளது காதலா இல்லை ஈர்ப்பா என அவனால் கண்டறிய முடியவில்லை.விஷ்வாவிற்கு மஹதியை சீண்ட பிடித்திருந்தது..அதை விட அவள் கோபத்தை கட்டுப்படுத்துவது,திட்டுவது என எல்லாம் விஷ்வாவை ஈர்த்தது‌..எத்தனையோ பெண்கள் காதல் என கூறினாலும் சிரிக்கும் விஷ்வா மஹதியின் பார்வைக்காக ஏங்கினான்.மஹதியின் திட்டுதல் அவனுக்கு சங்கீதமாக இருந்தது.அவளின் கோபம் சிறு குழந்தையின் கோபமாய் தெரிந்தது..அவள் இருக்கும் இடம் கலகலப்புடன் இருந்தது.‌.இதை எல்லாம் கவனித்த விஷ்வாவிற்கு மஹதியின் மீது ஈர்ப்பு தான் தோன்றியது என நினைத்து இருந்தான்‌‌..காதலாக மாறாது இது என்றும் உறுதியுடன் இருந்தான்‌.

வீட்டில் நுழைந்த சர்வாவின் கண்ணில் பட்டது யோசனையான விஷ்வாவின் முகம்‌.

"என்னாச்சு இவனுக்கு‌...இவ்ளோ யோசனையில் இருக்கான்"என சர்வா தன் மனதில் நினைத்துக் கொண்டு விஷ்வாவின் தோளைத் தொட்டான்‌..அப்போது தான் சிந்தனையிலிருந்து கலைந்த விஷ்வா‌ சர்வாவை நோக்கி புன்னகை சிந்தினான்‌.

"என்ன டா.‌.என்ன யோசனை"-சர்வா

"ஒன்றுமில்லை சர்வா"-விஷ்வா

"சொல்லு விஷ்வா என்ன யோசனை"-சர்வா

"அது சும்மா மஹதியை பற்றி யோசிச்சேன்"-விஷ்வா

"என்ன மஹதியை பற்றியா..நீ எதுக்கு விஷ்வா அந்த பொண்ண பற்றி யோசிக்கிற"-சர்வா

"ஏய் சும்மாதான் சர்வா..ஒன்னும் இல்லைடா"-விஷ்வா

"இல்ல சொல்லு எதுக்கு மஹதியை பற்றி யோசிச்ச"என சர்வா விடாப்பிடியாக கேட்க

"எனக்கு மஹதியை பிடிச்சிருக்கு டா‌.."என்றான் புன்னகையுடன் விஷ்வா

"என்ன சொல்ற விஷ்வா.‌.லவ் பண்றீயா அந்த பொண்ண"-சர்வா

"இல்ல சர்வா..லவ் எல்லாம் இல்ல.. சும்மா ஈர்ப்பு தான்‌.."என விஷ்வா சமாளித்தான்.

"ஓ...அப்படியா"என சர்வா கிண்டலாய் கேட்க

"உண்மையிலே தான்டா..இப்ப இருக்குது ஈர்ப்பு தான்‌‌..மே பீ கொஞ்சநாள்ல காதலா மாறலாம் டா.‌.நீ ஏதாச்சும் நினைக்காத"-விஷ்வா

"சரி..சரி..நான் சும்மாதான் கேட்டேன்..சாப்டியா"-விஷ்வா

"இல்ல..உனக்காக தான் வெயிட் பண்றேன்"-விஷ்வா

"பசிச்சா சாப்பிட வேண்டிய தான..எதுக்கு இப்படி வெயிட் பண்ற"என சர்வா கடிந்து கொள்ள

"நாம பழைய மாதிரி இருக்கலாமா சர்வா"என கேட்ட விஷ்வாவின் கண்களில் கண்ணீர்‌‌

"கண்டிப்பா டா"என கூறி அணைத்த சர்வாவின் கண்களிலும் கண்ணீர்‌.

தொடரும்.
 

Anuya

Well-known member
#13
அத்தியாயம் 7

நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது..இன்றோடு அதிதியும் மஹதியும் வேலைக்கு சேர்ந்து 6 மாதங்கள் கடந்திருந்தது.இந்த 6 மாதங்களில் எப்போதும் விஷ்வா மஹதியிடம் வம்பிழுப்பதும் மஹதி கோப பார்வை பார்த்து திட்டுவதும் அதிதி வேலையை நன்கு கற்று கொள்வதும் சர்வா தன் பார்பியை தேடுவதுமாக கழிந்தது.

விஷ்வாவிற்கு இன்னும் மஹதியின் மேல் இருப்பது காதலா அல்லது ஈர்ப்பா என கண்டறிய முடியவில்லை.விஷ்வாவிற்கு மஹதியின் மேல் இருப்பது ஈர்ப்பு இல்லை காதல் என அறிய கூடிய நாளும் வந்தது.

எப்போதும் போல் வேலைக்கு செல்ல அதிதியும் மஹதியும் கிளம்பி ஸ்கூட்டரில் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.வழியில் பார்த்த தீப்தி

"ஹாய் பேபிஸ்..வேகமா வந்துட்டீங்களே"-தீப்தி

"ஆமாடி..இன்னைக்கு இவ வேகமா கிளம்பிட்டா..அதான் வேகமா வந்தாச்சு"என மஹதியை சுட்டிக்காட்டி அதிதி கூற தீப்தி புன்னகைத்தாள்.

"மஹதி உன்கிட்ட கொடுத்த ஃபைல்லை முடிச்சிட்டீயா.. இன்னைக்கு விஷ்வா சார்க்கிட்ட சமிட் பண்ணனும்"-தீப்தி

"அய்யோ..நான் அதை நேற்று முடிக்கல..வீட்டுக்கு கொண்டு போய் முடிக்கலாம்னு நினைச்சு எடுத்துட்டு போய் முடிச்சிட்டு நைட் டேபிள் மேல வச்சேன்.. காலையில எடுத்து பேக்ல வைக்கனும் நினைச்சு மறந்துட்டேனே"-மஹதி

"என்னடி சொல்ற..இன்னைக்கு அதை கண்டிப்பா சமிட் பண்ணனும் டி"என தீப்தி பதற

"இன்னும் டைம் இருக்கு..வா மஹி வீட்டுக்கு போய் எடுத்துட்டு வரலாம்"-அதிதி

"இல்ல அதிதி..நீ இரு.. நான் மட்டும் போய் எடுத்துட்டு வரேன்"-மஹதி

"ஏய் வேணாம்..நானும் வரேன் டி"-அதிதி

"நீ எதுக்கு.. வேணாம் இரு..பைக் சாவியை குடு..நான் போய் எடுத்துட்டு வர்றேன்"-மஹதி

"பத்திரமா போயிட்டு வா மஹி..ரொம்ப வேகமா வண்டி ஓட்டாத"-அதிதி

"சரிடி"என கூறிய மஹதி பைக் சாவியை பெற்றுக் கொண்டு வீட்டை நோக்கி சென்றாள்.

* * * *

மஹதி வீட்டில் நுழைய சாதனா டிவி பார்த்து கொண்டிருந்தார்.

"மஹதி என்னடி நீ மட்டும் வந்திருக்க..என்ன பிரச்சினை..அதிதி எங்கடி"-சாதனா

"ம்மா..நீ வேற..சும்மா இரும்மா..ஒன்னும் இல்ல..அதிதி ஆபீஸ்ல தான் இருக்கா"-மஹதி

"அப்ப நீ மட்டும் ஏன்டி வந்த..ஓ..நீ ஒழுங்கா வேலை பார்க்கலையா..இல்ல யார்க்கிட்டயாச்சும் வம்பிழுத்தியா..உனக்கு வேலை போயிருச்சா.." என சாதனா நக்கலாக கேட்க

"ம்மா...ஏன் உனக்கு இந்த கொலை வெறி..நான் ஒழுங்கா தான் வேலை பார்க்குறேன்.யார்க்கிட்டயும் வம்பிழுக்கல..வேலை எல்லாம் எனக்கு போகல..போதுமா"என மஹதி பல்லை கடித்துக் கொண்டு கூற

"ச்சே..உனக்கு வேலை போகலயா..நான் கூட உனக்கு வேலை போயிருக்கும்..உன்னைய இனிமேல் வேலைக்கு அனுப்பாம வீட்டு வேலையை பார்க்க வைக்கலாம்னு நினைச்சேன்"என சாதனா கூற மஹதி காளியாய் மாறினாள்.

"போம்மா..உயிர வாங்காத..நான் எதுக்கு வீட்டுக்கு வந்தேன்னு எனக்கே மறந்துருச்சு..எதுக்கு வந்தேன்..ஹான்.. ஃபைல்லை எடுக்க வந்தேன்"என கூறிய மஹதி தனது அறைக்கு சென்று ஃபைல்லை தேடினாள்.

"ம்மா...ம்மா‌..."-மஹதி

"என்னடி..எதுக்கு கத்துற"-சாதனா

"இங்க நான் ஒரு ஃபைல் வச்சிருந்தேனே..அத பார்த்தியா"-மஹதி

"ஆமாடி.. காலையில உங்க ரூம்ல கிளின் பண்றப்ப பார்த்தேன்..அதை எடுத்து கபோர்ட்ல வச்சிருக்கேன் டி"-சாதனா

"ஓ..ஓகே மம்மி.‌.நான் எடுத்துக்கிறேன்"என கூறிய மஹதி ஃபைல்லை எடுத்துக் கொண்டு

"ஓகே சாதனா..நான் வேலைக்கு கிளம்புறேன்..சாயங்காலம் வரும்போது மொறு மொறுன்னு கட்லட் செஞ்சு வைங்க..பாய்"என கூறிய மஹதி ஸ்கூட்டரில் கிளம்பினாள்.

* * * *

அலுவலகத்தில் இருந்த அதிதிக்கு மனதில் ஏதோ மாதிரி தோன்றியது..வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை அதிதியால்.மஹதிக்கு தொலைபேசியில் அழைத்தாள் அதிதி.அலைபேசியை எடுத்தாள் மஹதி.

"சொல்லு அதிதி"-மஹதி

"மஹி எங்க இருக்க..ஃபைல்லை எடுத்திட்டியா"-அதிதி

"எடுத்துட்டேன் டி..வந்திட்டு இருக்கேன்"-மஹதி

"ஏய் வண்டில வரும்போது போன் பேசேறீயா‌‌...லூசு..பத்திரமா வா..நான் வைக்கிறேன்"-அதிதி

"ஓகே டி"என கூறிய மஹதி பாடிக் கொண்டே வந்தாள்‌‌..

அலுவலகத்திற்கு வந்த விஷ்வா தேடியது மஹதியை தான்..மஹதியை காணாதததும் விஷ்வா தீப்தியை அழைத்து விசாரிக்க தீப்தி மஹதி சென்ற காரணத்தை கூறினாள்.

"தீப்தி..நீங்க மஹதிக்கு கால் பண்ணி இன்னும் அரைமணி நேரத்தில் இருக்க சொல்லுங்க"-விஷ்வா

"ஓகே சார்"-தீப்தி

"டெடி..நீ வேகமா வா..உன்னை கொஞ்ச நேரம் பார்க்காம என்னால இருக்க முடியலை..ஏதோ நீ என்னை விட்டு ரொம்ப தூரம் போக போற மாதிரி இருக்கு..அப்படி எல்லாம் நான் உன்னை போக விடமாட்டேன்..நீ எப்பவும் என்கூட இருக்கனும் டெடி..இவ்ளோ நாளா உன்மேல இருக்கது ஈர்ப்புன்னு தான் நினைச்சேன்‌‌.. இப்பதான் புரியுது அது ஈர்ப்பு இல்லை காதல்ன்னு..டெடி உன்னை பார்க்காம இருக்க கொஞ்ச நேரம் கூட நரகமா இருக்கு..ஐ லவ் யூ டெடி..லவ் யூ சோ மச்"என விஷ்வா தன் மனசாட்சியுடன் பேசிக் கொண்டிருந்தான்.

அலுவலகத்தில் இருந்தால் மஹதியின் நினைப்பு அதிகமா வரும் என நினைத்த விஷ்வா அலுவலகத்தை விட்டு வெளியே வந்து இயற்கையை ரசித்தான்‌..

தீப்தி மஹதிக்கு தொலைபேசியில் அழைத்தாள்.

"மஹதி எங்க இருக்க"-தீப்தி

"வந்திட்டு இருக்கேன் டி"-மஹதி

"வேகமா வா மஹதி..விஷ்வா சார் இன்னும் அரை மணிநேரத்தில் அந்த ஃபைல்லை சமிட் பண்ண சொல்லிருக்காரு"-தீப்தி

"ஆபிஸ்கிட்ட வர போறேன் டி..வை போனை"-மஹதி

ஃபோன் பேசிக் கொண்டிருந்த மஹதி எதிரே வந்த லாரியை கவனிக்க தவறினாள்.நிலையில்லாமல் வந்த அந்த லாரி மஹதியை நோக்கி வந்து கொண்டிருந்தது.ஃபோனை வைத்து விட்டு நேரே பார்த்த மஹதி லாரி தன்னை நோக்கி வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்து வண்டியை திருப்ப நினைக்க அந்தோ பரிதாபம் லாரி மஹதியின் வண்டியை இடிக்க மஹதி தூக்கி வீசப்பட்டாள்.

வெளியில் இயற்கையை ரசித்து கொண்டிருந்த விஷ்வா மஹதி அலுவலகத்தை நோக்கி வருவதை கண்டு புன்னகைத்தான்.மஹதி வண்டியை ஓட்டிக் கொண்டு ஃபோன் பேசுவதை கண்டு திட்ட தொடங்கினான்‌.மஹதியை பார்த்துக் கொண்டிருந்த விஷ்வா மஹதியை நோக்கி வந்த லாரியை பார்த்து அதிர்ந்து மஹதியை நோக்கி ஓட தொடங்கினான்.அதற்குள் மஹதியை லாரி இடிக்க

"மஹதிதிதிதிதி......."-விஷ்வா

மஹதி இரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தாள்‌.

அதே நேரம் அதிதியும் மஹதிக்காக வெளியில் காத்திருந்த நேரம் தான் லாரி மஹதியை இடித்தது.அதை பார்த்த அதிதியும்

"மஹிஹிஹிஹி......"-அதிதி

விஷ்வாவும் அதிதியும் மஹதியை அடைந்த நேரம் மஹதி மயக்கத்திற்கு செல்ல துவங்கினாள்.

"மஹதி மஹதி...என்ன பாருமா..இங்க பாருடா"-விஷ்வா

மஹதியை கண்ட அதிதி "மஹிம்மா" என கூறி விஷ்வாவின் அருகில் மயங்கினாள்‌.

மஹதியை தட்டி எழுப்பி கொண்டிருந்த விஷ்வா அதிதி தன் அருகில் மயங்கி விழுந்ததும் அதிர்ந்தான்.‌உடனடியாக சர்வாவிற்கு அழைத்து சொல்ல சர்வா விரைந்தான்..

மஹதி அதிதியை சுற்றி கூட்டம் கூட தொடங்கி இருந்தது..ஆன்ல் யாரும் உதவ முன் வரவில்லை..சர்வா ஆம்புலன்சை அழைக்க ஆம்புலன்ஸ் வந்ததும் மஹதி அதிதியை ஏற்றினர்‌.விஷ்வா மஹதியின் கையை பிடித்துக் கொண்டே இருந்தான்.சர்வா அதிதியின் அருகில் அமர்ந்திருந்தான்.

தொடரும்...