அன்பின் விழியில்! - ராஜேஸ்வரி சிவக்குமார்

#1
அன்பின் விழியில்!

அக்கா சும்மா சொல்லக்கூடாது உங்களோட வார்த்தை பிரயோகம் அருமை..

ஒவ்வொரு கதாபாத்திரமும் ஆழமா அவங்களோட தனித்தன்மையை மனசில பதிய வைச்சுட்டாங்க..

விதியை மதியால் வெல்லலாம் தான் ஆனாலும் கூட முழுமையா பல நேரத்துல முடியாதுனு அழகா சொல்லியிருக்கீங்க..

நித்யலட்சுமி அழகான பெயர்.. அன்பான பார்வையில் பார்க்கும் போது குற்றங்கள், தவறுகள், உறுத்தல்கள் எல்லாமே பின்னுக்கு தள்ளப்பட்டு சுமூகமான உறவு நிலைக்கும் அப்படின்னு உங்களோட ஸ்டைலில் ரொம்ப அழகா சொல்லிருந்தீங்க..

பல வருடங்கள் கட்டிக்காத்த நட்பும், உறவும் கூட ஒற்றை வரியிலான சொல்லீட்டியால் இரண்டு வருட பிரிவைச் சந்தித்திருப்பது நாவடக்கத்தின் முக்கியத்துவத்தை சொல்லுது..

தனிப்பட்ட முறையில் என்னை நான் மாத்திக்கறதுக்கும் இந்த கதை ரொம்ப ஹெல்ப் பண்ணுச்சு.. ஆங்கிலத்தில் டைம்லி காம்பனென்ட் னு ஒரு சொலவடை இருக்கு.

அன்பின் விழியில் எனக்கான டைம்லி காம்பனென்ட்.

உங்கள் அன்புள்ள....

ஹரிதாரணி சோமசுந்தரம்