அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

அத்தியாயம் 18

#1
ராம் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த விஷ்ணுவும் ஜீவாவும் அவன் அகன்றவுடன் ஒருவரை ஒருவர் பொருள் பொதிந்த பார்வையை பரிமாறிக்கொண்டனர் .

சாப்பிட்டு முடித்தவுடன் விஷ்ணு அவனது அறைக்குள் சென்றான் . விடையூருக்கு வந்த நாள் முதல் அவனது மனத்தினில் சஞ்சலங்களும் குழப்பங்களும் மட்டுமே வியாபித்திருந்த நிலையில் அந்த மோதிரம் ராமினுடையது என்று தெரிய வந்த வேளையில் இருந்து ஏதோ இனம் புரியாத வேதனை மனதை காயப்படுத்திக்கொண்டிருந்தது .

எள்ளளவும் ராமினை சந்தேகப்பட விஷ்ணுவின் மனமும் சரி அறிவும் சரி தடை சட்டத்தை அமல்படுத்திக்கொண்டிருந்தன.

“ என்ன விஷ்ணு யோசிச்சிட்டிருக்க ????“ என்ற ஜீவாவின் கேள்வியில் சிந்தனை கலைந்து திரும்பிப்பார்த்தான் விஷ்ணு .

“ வேற என்ன ஜீவா யோசிக்க இருக்கு ? அதே கதை அதே பல்லவி …. அந்த மோதிரம் எப்படிடா ராமோடதா இருக்க முடியும் ? அவன் ஏன் மரகதலிங்கத்தை திருடனும் ? சீரியஸ்லி ….. ஐ ஆம் கெட்டிங் டயர்ட்…. “ விஷ்ணுவின் குரலின் தொனியே அவனுடைய வேதனையை பட்டவர்த்தனமாக ஒலிபரப்பியது .

“ விஷ்ணு …. கவலைப்படாதடா…. எல்லா பிரச்சனைக்கும் கண்டிப்பா ஒரு சொல்யூஷன் இருக்கும் .சொல்யூஷன் இல்லாத பிரச்சனை இந்த உலகத்துலயே எதுவும் இல்லை . பூட்டை உருவாக்கியவன் அதுக்கான சாவியை செய்யாமலா போய்டுவான் . இந்த ப்ராப்ளமும் சீக்கிரம் சரியாகிடும் பாரு “ என்று கூறி ஆறுதலாக விஷ்ணுவின் தோளில் கைவைத்தான் ஜீவா.

ஜீவாவின் இந்த ஆறுதல் விஷ்ணுவிற்க்கு கட்டாயம் தேவைப்பட்டது . இதுநாள் வரையில் யாருக்கும் தெரியாமல் தன் மனத்திற்க்குள்ளேயே போட்டு உழன்றுகொண்டிருந்தவனுக்கு இந்த தேற்றுதல் பசியில் இருந்த குழந்தைக்கு வயிறு நிறைய ஆகாரம் கிடைத்த திருப்தியை உண்டுபண்ணியிருந்தது .

“ ரொம்ப தேங்க்ஸ் ஜீவா … இப்போ கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்குடா …. “ என்றவன் சட்டென்று ஏதோ நினைவு வந்தவனாக “மச்சி …. இப்போ ராம் வெளியதானே போய்ருக்கான். வா அவன் ரூம்ல ஏதாவது கிடைக்குதான்னு பார்ப்போம். ஐ ஆம் நாட் ஷ்யூர் அங்க எதுவும் கிடைக்கலாம் மே பீ கிடைக்காமலும் போகலாம் . ஆனா ஏன் சான்ஸ மிஸ் பண்ணணும் . ட்ரை பண்ணி பார்க்கலாமே !” விஷ்ணுவிடம் ஒரு விதமான பரபரப்பு தொற்றிக்கொண்டது .

இருவரும் விஷ்ணுவின் அறையிலிருந்து வெளிவந்தனர் . விஷ்ணுவின் அறை மாடியில் இருப்பதால் அவன் அறை வாசலிலிருந்து பார்த்தால் கூடத்தில் நடப்பவை அனைத்தும் தெரியும் . இருவரும் அப்போது சரியாக கூடத்தைத்தான் பார்த்தனர் . அங்கே ஒருவரும் கண்களுக்கு அகப்படவில்லை . ராம் இன்னும் வரவில்லை என்பது அவனது கார் வீட்டின் முகப்பில் இல்லாததில் இருந்து ஊர்ஜிதமானது.

ராமின் அறையை அடைந்தவுடன் முதல் வேளையாக கதவை தாழிட்டனர் இருவரும் . ஆளாளுக்கு ஒவ்வொரு இடத்தில் ஆராய ஆரம்பித்தனர் . டேபிள் ட்ராயர் , அலமாரி என தேடிக்கொண்டிருந்தனர் . இன்ன பொருளைத்தான் தேடுகிறோம் என்று நினைத்து தேடினாலே அப்பொருள் சற்று நீண்ட இடைவெளிக்கு பிறகுதான் கைக்கு வரும் . இவர்கள் என்ன தேடுகிறார்கள் என்று இவர்களுக்கே தெரியாத பட்ஷத்தில் இவர்களின் தேடுதலின் ஆயுட்காலமும் நீண்டு கொண்டே சென்றது .
க்றீச்ச்ச்ச்…. கதவு திறக்கப்படும் ஒலி திடீரென்று வர இருவரும் சட்டென்று திரும்பி பார்த்தனர் . கண்களில் பல வினாக்களோடு நின்றிருந்தான் இவர்களின் நண்பன் ராம் .

“ என்னடா நடக்குது இங்க ? என்ன தேடிட்டு இருக்கீங்க ? “ ஆச்சரிய கேள்விக்குரல் வந்தது ராமினிடம் இருந்து .

“ இவன் ஒருத்தன் எப்ப பாரு நடுவுல வந்து என்ன பண்றீங்க ? வெண்ண பன்றீங்கனு கேட்டுட்டு … கொஞ்சம் லேட்டா வந்துருக்க கூடாது … பக்கி “ ஜீவாவின் மனம் ராமை அர்ச்சித்துக்கொண்டிருந்தது .

“ என்னடா வாய்ல கொழுக்கட்டை வச்சிருக்கீங்கலா ? என்ன தேடிட்டு இருந்திங்க ? “ மறுபடியும் கேள்வியின் நாயகனான் ராம் .

சட்டென்று சுதாரித்த விஷ்ணு “ அது …. உங்க ஃபேமிலி ஆல்பம் தான்டா தேடிகிட்டு இருக்கோம் . நீ ஒருநாள் ஜீவாவுக்கு காட்டிட்டு இருந்தியாம். என்கிட்ட இப்பதான் சொன்னான் . எனக்கும் பார்க்கனும் போல இருக்குனு சொன்னேன் . உன் ரூம்லதான் அந்த ஆல்பம் இருக்குன்னு சொன்னான் . அதான் அதை தேடிக்கிட்டு இருக்கோம் . “ புதிதாக தயாரித்த உடனடி பதிலை அழகாக அளித்தான் விஷ்ணு .

அவனின் பதிலில் தெளிவடைந்த ராம் புன்னகையினூடே “ ஆல்பமா ???? நான் அதை அம்மாகிட்ட எப்பவோ கொடுத்துட்டேன்டா . அப்புறம் அவங்ககிட்ட இருந்து வாங்கிட்டு வரேன் . நாளைக்குதான் இன்னும் மூனு நாள்ல நம்ம ஊர் திருவிழா ஸ்டார்ட் ஆகிடும் . தொடர்ந்து ஃபைவ் டேஸ் ரொம்ப க்ராண்டா செலிப்ரேட் பண்ணுவாங்க . அதுக்கெல்லாம் நிறைய வேலை இருக்குடா . அப்பா வேற எல்லா மேனேஜ்மென்ட்டும் என்னையே பார்த்துக்க சொல்றாருடா .

நாளைக்கு குலதெய்வ கோவிலுக்கு போகனும்னு அம்மா சொல்லிட்டு இருந்தாங்க … அதுக்கும் போகனும் … பயங்கர பிஸி ஷெட்யூல் மச்சி …. “ என மூச்சு விடாமல் கூறினான் ராம் .

“ என்னடா பண்றது …. பெரிய பொருப்பு வந்துட்டா அதுக்கேத்த மாதிரி வேலையும் செய்யனும் இல்ல …. “ எனக் கூறினான் விஷ்ணு . “ அப்ப்பா…. விஷ்ணு போதும்…. சாக்ரடீஸ் போல பேச ஸ்டார்ட் பண்ணிடாத வா சும்மா வெளிய போய்ட்டு வரலாம் “ எனக் கூறி அவர்களை அழைத்துச் சென்றான் ராம் .
அன்று முழுவதும் அனைவரும் வெளியே சுற்றிப்பார்த்துவிட்டு வீட்டிற்க்கு வந்தனர் . இரவுப் பொழுதும் யாருக்கும் காத்திராமல் தன் வேலையைப்பார்க்க சந்திரனுடன் வந்துவிட்டது .

அன்று முழுவதும் ராமுடனே இருந்தும் அவனது நடவடிக்கையில் சந்தேகப்படும்படி எதையுமே விஷ்ணுவால் கண்டறிய முடியவில்லை . அவனுக்கு உண்மையிலேயே எதுவும் தெரியாதா இல்லை அவனின் தேர்ந்த நடிப்பா என்பதும் தெரியவில்லை இப்படி பல இல்லைகள் விஷ்ணுவின் மூளையை களைப்படையச்செய்து அவனை நித்திராதேவியின் பிடியில் சிக்கவைத்தன.

மறுநாள் பொழுது ….. வழக்கம்போல் ஆதித்யன் தன் ஆயிரக்கணக்கான கரங்களால் பூமாதேவியை ஆரத்தழுவ ஆயத்தமாகிய தருணத்தில் ஆதித்யனின் ஒரு சில கரங்கள் விஷ்ணுவின் அறைக்குள்ளும் பரவி அவனையும் தழுவி விஷ்ணுவை விழிப்படையச் செய்தது .

குளித்து முடித்து தயாராகி அறையிலிருந்து கூடத்திற்க்கு இறங்கி வந்தான் விஷ்ணு. அங்கே அனைவரும் ஒருவித பரபரப்புடன் வேலை செய்து கொண்டிருந்தனர் . அங்கே வந்த வேலையாளிடம் “ என்ன இன்னைக்கு ஏதாவது விஷேஷமா ? ஒரே பரபரப்பா இருக்கு வீடெல்லாம் . “ என விசாரித்தான் .
“ ஆமா தம்பி … இன்னைக்கு அய்யாவோட குலதெய்வம் கோவிலுக்கு எல்லாரும் கிளம்பறாங்க … அதான் “ என அந்த வேலையாள் கூறினான் . “ திருவிழா நடக்குதே அந்த கோவில்தானே ? “ என விஷ்ணு கேட்டான் .

“ இல்ல தம்பி இது அய்யாவோட குலதெய்வ கோவில் பக்கத்துலதான் இருக்கு அந்த கோவிலும் அதுக்குதான் இப்போ எல்லாரும் கிளம்பிட்டு இருக்காங்க “ என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்றான் அவ்வேலையாள்.

விஷ்ணுவும் யோசனையுடனே ராமின் அறைக்குச் சென்றான் . அங்கே ராம் கோவிலுக்கு புறப்படுவதற்காக வேட்டி சட்டையுடன் தயாராகிக்கொண்டிருந்தான் .

“ஹாய் விஷ்ணு குட் மார்னிங் …...கிளம்பி ரெடியாதான் இருக்கியா ? நல்லதாபோச்சு “ என்றவாறே தன் வாட்ரோபிலிருந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்தான் .

“ உனக்கு ரொம்ப நாளா காட்டனும் காட்டனும்னு நினச்சிக்கிட்டு இருந்தேன் . இருக்க வேலைல எல்லாம் மறந்துட்டேன் . இந்த பாக்ஸ கொஞ்சம் திறந்து பாறேன் “ என்றவாறு அந்த பெட்டியை விஷ்ணுவின் கைகளில் திணித்தான் ராம் .


“ அப்படி என்னடா இருக்கு” என்றபடியே அபெட்டியை திறந்தான் ராம் . திறந்தவனோ
அதிர்ச்சியில் சிலையாகிப்போனான். பின்னே பாவம் அவன் என்ன செய்வான் தான் நிலவறையில் கண்டெடுத்த ராமின் மோதிரம் தன்னிடம் உள்ளபோது எப்படி அது ராமிடம் மீண்டும் வந்திருக்க முடியும் .என்ற சிந்தனையில் அமிழ்ந்தான் விஷ்ணு .

“ என்னடா ? அப்படி ஒரு ஆச்சரிய பார்வை பாக்குற … இந்த டிஸைன்ல உள்ள மோதிரத்தைதான் எங்க குடும்பத்துல இருக்க எல்லா ஆண்பிள்ளைகளும் போடுவோம் . இது எங்க கொள்ளுதாத்தா காலத்துல இருந்து வந்த பழக்கமாம் . ஏன்னா இந்த டிஸைன்ல மோதிரம் போட்டா அதுவும் ஆண்பிள்ளைங்க போட்டா அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுமாம் எவனோ ஒரு ஜோஸிியக்காரன் சொல்லிருக்கான் .அதுல இருந்து ஃபாலோவ் பண்ணிட்டு வராங்க … எனக்கும் இந்த டிஸைன் ரொம்ப பிடிச்சிருந்தது….அதான் நான் எப்பவாவது விஷேஷம்னா போட்டுக்குவேன். அந்த பாம்போட கண்ணைப் பாறேன்” என சொல்லிக்கொண்டே சென்றான் ராம் .

அவன் சொல்வதைக் கேட்க கேட்க ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினான் விஷ்ணு. “ விஷ்ணு …. ஹே விஷ்ணு …. என்னடா அடிக்கடி அமைதி ஆகிட்ற …. உன்னோட எல்லா ஆக்டிவிட்டீஸ்சும் ரொம்ப வியர்டா இருக்குடா “ என்றான் ராம் .

“ ச்ச ச்ச …அதெல்லாம் எதுவும் இல்லடா… உங்க குடும்பத்துல இருக்க எல்லாரும் இந்த மோதிரம் போடுவாங்கன்னா உன்கிட்ட ஒன்னு இருக்கு … வேற யார் யார்கிட்ட எல்லாம் இந்த மோதிரம் இருக்கு ? “ கேள்வியில் நிறுத்தினான் விஷ்ணு .

“அதான் ஆண்பிள்ளைகள் மட்டும்தான் போடுவாங்கன்னு சொல்லிட்டேன் இல்லையா …. என்கிட்ட ஒன்னு இருக்கு அப்புறம் என் அப்பா கிட்ட ஒன்னு இருக்கு. “



“ ஹ்ம்ம் அப்போ உன் தாத்தா கொள்ளு தாத்தா யூஸ் பண்ண மோதிரம் எல்லாம் எங்க இருக்கு . “

“ எங்க கொள்ளு தாத்தா யூஸ் பண்ண மோதிரம் எங்க அப்பா போட்டுருக்காரு . எங்க தாத்தா யூஸ் பண்ணது என்னோடது . அதாவது இப்போ உன்கையில இருக்குறது என் தாத்தாவோடது “ .

சிந்தனையில் ஆழ்ந்த நம்மவனுக்கு சிறிது சிறிதாக பொறிதட்ட ஆரம்பித்தது .
 

Latest