Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript திருபட்டூர் பிரம்மபூரீஸ்வரர் | SudhaRaviNovels

திருபட்டூர் பிரம்மபூரீஸ்வரர்

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்கு அப்பாற்பட்டவையாக அறிவுக்கெட்டாத ஏதோ ஒன்று அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்குறது என்பது அடிச்சுக்கமுடியாத உண்மை .. என்னடா தத்துவம் எல்லாம் சொல்லுறான்னு நீங்களாம் யோசிக்குறது கேட்டுடுச்சு ..! நாம கட்டுற வீட்டில சூரிய ஒளி எவ்வளோ தூரம் படும் அதிகபட்சம் ராஜநிலை இல்லை ஹால் அவ்வோளோதான் ..ஆனா ..எத்தனையோ வருடங்களுக்கு முன்னாடி நம்ம முன்னோர் கட்டின கோயில் அதில் 7 நிலை தாண்டி மூலவர் மேல் படும்படி சூரிய ஒளி படுறது அதியசம்...அந்த அதிசயம் எங்க அப்படின்னு பார்ப்போம் ... காவேரி நதி பாய்ந்தோடும்..

(எங்க பாயுது சாக்கடைதான் பாயுதுன்னு சொல்லுறிங்க ..அந்த அரசியல் நமக்கு ஏதுக்குங்க ...வரும்ன்னு நம்புறோம் .). பாய்ந்தோடிய .திருச்சி மாவட்டத்தில் திருபிடவூர் என்னும் திருப்பட்டூர் ஊரில் அமைத்துள்ள பிரம்மபுரிஸ்வரர் ஆலயத்தில் தான் இந்த அதிசயம் ...

ராஜகோபுரத்தில் இருந்து 7 நிலை கடந்து கிட்டத்தட்ட 300 அடி தூரத்தில் லிங்க திருவுருவ மேனியாக இருக்கும் பிரம்மபுரிஷ்வர் மீது வருடத்தில் பங்குனி மாதத்தில் 3 நாள்கள் சூரியகதிர்கள் நேரடியாக படுகின்றன.. இப்படி ஒரு நிகழ்வு நடக்குன்னு செவி வழி கேள்விபட்டாலும் . ஈசனின் அருளால் நேரடியாக தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன் ..



இன்று அதிகாலை பங்குனி பிரமோற்ச்சவம் திருத்தேர் பார்க்கலாம்ன்னு கிளம்பி போனால் ...அம்மாடியோ அவ்ளோ கும்பல் ...அப்படி இப்படி உள்ள புகுந்து கருவறைக்கு மிக அருகில் சென்று அமர்ந்து..கோவிலின் அனைத்து விளக்குகளும் அணைத்து வைக்கப்பட்டு மூலவரையே உற்று அனைத்து விழிகளும் பார்த்து இருக்க சுமார் 10 நிமிடங்கள் மெது மெதுவாக அடி முதல் லிங்கத்தின் மேல் வரை செந்நிற கதிரை பாய்ச்சி அனைவரையும் ஓம் நமச்சிவாய என்ற கரகோசத்துடன் பரவசத்தில் ஆழ்த்தியது அச்சம்பவம் ... இது சாமியின் திருவிளையாடல் என்றால் திருவிளையாடல் ..இல்லையா அறிவியல் அதிசயம் என்றால் அறிவியல் அதிசயம் ஏதோ ஒன்று ..ஆனால் எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் இந்த மாதம் இந்த தேதி இந்தநிமிடம் இப்படி சூரிய ஒளி படும்ன்னு கணிச்சு ..அது படும்படி கட்டின நம்ம முன்னோர்கள் அனைவருக்கும் வணக்கம் ..



இப்படிப்பட்ட பாரம்பரியத்தை நாம பாதுகாப்பாக வைத்து இருக்கோமா அப்படின்னா அது பெரிய கேள்விகுறி தான் ...நம்ம முன்னோர் நமக்காக செய்ததுபோல நாம செய்யாவிட்டாலும் அழிக்காமல் நம்ம வருங்கால சந்ததிக்கு பாதுகாத்து வைப்போம் இப்படியே கருத்து சொல்லுறதை விட்டுட்டு கோவில் எங்க இருக்கு .?எப்படி போகுறதுன்னு சொல்லுன்னு சொல்லுறது கேட்டுடுச்சு .. திங்கள், வியாழன், திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் நமது பிறந்த நட்சத்திரத்தன்று இங்கு வந்து வழிபடுதல் சிறப்பு. தலையெழுத்தையே மாற்றுவார் என்பதால் சகலவிதமான சர்வ தோஷ பரிகாரத் தலமாகும். சகல தோஷங்களும் நீங்கி ‘திருப்பட்டூர் வந்தோம், திருப்பம் நிகழ்ந்தது’ என்ற நல்ல மங்களகரமான நிலை அடையலாம். –






பேருந்து விவரம்------------------------- திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து காலை முதல் இரவு வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. துறையூரிலிருந்தும் அவ்வப்போது பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை மட்டுமின்றி திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூரிலிருந்து கால் டாக்சி தொடர்ந்து திருப்பட்டூருக்கு இயக்கப்படுகிறது......

நமக்காக திருபட்டூர் பிரம்மபூரீஸ்வர் கோவிலைப் பற்றியும், திருவிழா புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்ட வேத கௌரி அவர்களுக்கு நன்றி..............
 
Last edited:
Need a gift idea? How about a funny office flip-over message display?
Buy it!