Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript சினிமா செய்திகள் | SudhaRaviNovels

சினிமா செய்திகள்

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
விஜய் ஜோடியாக விஜய் தேவரகொண்டாவின் ஹீரோயின்?
விஜய்யின் அடுத்த படத்தில், அவருக்கு ஜோடியாக விஜய் தேவரகொண்டாவின் ஹீரோயின் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு ரிலீஸான படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்தார். வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.
‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் மூன்றாவது படம் இது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.
ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரூபன் எடிட்டராகவு, முத்துராஜ் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். இந்தப் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. அடுத்த வருடம் (2019) தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் ஹீரோயின் யார் என்பதில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நயன்தாரா, சமந்தா ஆகியோரது பெயர்கள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில், ராஷ்மிகா மடன்னாவின் ரசிகர் ஒருவர், ராஷ்மிகா தான் ‘தளபதி 63’ படத்தின் ஹீரோயின் என ட்விட்டரில் பதிவிட்டு, அதில் அட்லீ, விஜய் ஆகியோரையும் டேக் செய்துள்ளார்.
அந்த ட்வீட்டுக்குக் கீழே, ‘டேய்... எனக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடாதேடா...’ என நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார். ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ தெலுங்குப் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1542286195222.png
 
  • Like
Reactions: sudharavi

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
தளபதி 63’ படத்துக்கு ராசியான நம்பர் 3: சுவாரசியத் தகவல்கள்
தளபதி 63’ படத்துக்கு ராசியான நம்பராக 3 அமைந்திருக்கிறது என்று சொல்லலாம்.
‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.
ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரூபன் எடிட்டராகவும், முத்துராஜ் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். இந்தப் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.
இந்தப் படத்துக்கும், 3 என்ற நம்பருக்கும் ராசி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதைப் பற்றிய சுவாரசிய தகவல்களைப் பார்க்கலாம்.
‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்கிறார் விஜய்.
அடுத்த வருடம் (2019) தீபாவளிக்கு ‘தளபதி 63’ படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ 2017-ம் ஆண்டு தீபாவளிக்கும், ‘சர்கார்’ 2018-ம் ஆண்டும் தீபாவளிக்கும் ரிலீஸானது. எனவே, தொடர்ச்சியாக மூன்றாவது முறை தீபாவளிக்கு விஜய் படம் ரிலீஸாக இருக்கிறது.
விஜய் நடித்த ‘உதயா’ மற்றும் ‘அழகிய தமிழ் மகன்’ ஆகிய இரண்டு படங்களுக்கு மட்டுமே இதற்கு முன்பு இசையமைத்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மெர்சல்’ படத்துக்கு இசையமைத்தார். தொடர்ந்து ‘சர்கார்’ படத்துக்கும் இசையமைத்தார். ‘தளபதி 63’ படத்துடன் சேர்ந்து தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக விஜய் படத்துக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
அதேபோல, ‘மெர்சல்’ மற்றும் ‘சர்கார்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ‘தளபதி 63’ படத்துக்கும் அனைத்துப் பாடல்களையும் எழுதுகிறார் விவேக்.
1542286271587.png
 
  • Like
Reactions: sudharavi

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
விளையாட்டை மையப்படுத்தி 'தளபதி 63': அட்லீ திட்டம்
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தின் கதை விளையாட்டை மையப்படுத்தியது என்று தகவல் வெளியாகியுள்ளது.
'சர்கார்' படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று (நவம்பர் 14) வெளியிடப்பட்டது. அட்லீ இயக்கவுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் விஜய் - அட்லீ கூட்டணி இப்படத்தில் இணைந்திருக்கிறது. தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். படத்தின் தலைப்பு மற்றும் விஜய்யுடன் நடிக்கும் நடிகர்கள் உள்ளிட்ட விவரங்களை இன்னும் படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.
ஆனால், இப்படம் முழுக்க விளையாட்டை மையப்படுத்தியே அமைத்திருக்கிறாராம் இயக்குநர் அட்லீ. இதில் விளையாட்டுப் பயிற்சியாளராக விஜய் நடிக்கவுள்ளார்.
இதுவரை விஜய் நடித்திராத கதாபாத்திரம் என்பதால், இதற்காக சில பயிற்சிகளையும் மேற்கொள்ளவுள்ளார் விஜய். விளையாட்டை மையப்படுத்தியது என்றாலும், விஜய் ரசிகர்களுக்கு ஏற்றவகையில் ஜனரஞ்சகமாக திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார் அட்லீ.
‘தளபதி 63’ படப்பிடிப்புக்காக சில கல்லூரிகளுக்குச் சென்று இடங்களைத் தேர்வு செய்து வைத்திருக்கிறார் அட்லீ. 2019-ம் ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். படப்பிடிப்பு தொடங்கப்படும் அன்று, பெரியளவில் பூஜை ஒன்றையும் நடத்தி, அன்றைய தினம் விஜய்யுடன் நடிக்கும் நடிகர்கள் பெயர்களை அறிவிக்கவும் படக்குழு முடிவு செய்திருக்கிறது.
இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, சண்டை வடிவமைப்பாளராக அனல் அரசு, பாடலாசிரியராக விவேக், எடிட்டராக ரூபன், கலை இயக்குநராக முத்துராஜ் ஆகியோரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். 2019 தீபாவளி வெளியீடு என்று இப்போதே படக்குழு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
1542286357352.png
 
  • Like
Reactions: sudharavi

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
மிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு!
விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தீபாவளியன்று வெளியான 'சர்கார் ' திரைப்படம் தேர்தல் மற்றும் வாக்கு அரசியலைப் பேசும் படமாக அமைந்திருந்தது. இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருந்தாலும் ஆளும் கட்சியின் கடும் எதிர்ப்புக்கு ஆளானது. படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவள்ளி என்ற பெயரை படத்தின் வில்லி கதாபாத்திரத்துக்கு வைத்திருந்தது ஆளும் தரப்புக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், இலவசங்கள் குறித்தும் காட்சிகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அதை நீக்கக் கோரியும் அ.தி.மு.க-வினர் போராட்டம் நடத்தி வந்தனர். பேனர்கள் கிழிப்பு, காட்சிகள் ரத்து என அ.தி.மு.க-வினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இதையடுத்து, சர்காருக்கு இரண்டாவது சென்சாரிடப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``சர்கார் திரைப்படம் தொடர்பான பேனர்களை அ.தி.முக-வினர் கிழித்தார்கள் என்பது தவறான தகவல். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பொதுமக்களோடு சேர்ந்து அ.தி.மு.க-வினரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள். ஏ.ஆர்.முருகதாஸின் உறவினர்கள்கூட விலையில்லா பொருள்களை வாங்கியிருக்கின்றனர். அந்தப் பட்டியலை நாங்கள் வைத்திருக்கிறோம். விலையில்லா திட்டங்களால்தான் உயர்கல்வியில் தமிழகம் 46.8 சதவிகிதமாக சிறந்து விளங்குகிறது. படத்தில் கோடிகோடியாக சம்பாதிக்கும் திரையுலகினர் மக்களுக்கு என்ன செய்திருக்கின்றனர். அந்தப்படத்தில் குறிப்பிட்ட காட்சியை நீக்கியிருக்கிறார்கள். சர்கார் பிரச்னை சுமுகமாக முடிந்துவிட்டது. ஊடகங்கள் இனி இதை பெரிதுப்படுத்த வேண்டாம்" என்று தெரிவித்திருந்தார்.



இந்த நிலையில் `சர்கார்' படக்குழுவினர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியர் விவேக், நடிகைகள் கீர்த்தி சுரேஷ் , வரலட்சுமி நேற்று ஒன்றாக சந்தித்துள்ளனர். இந்தப் புகைப்படங்களை ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு கேக்கின் மேலிருக்கும் மெழுகுவத்தியை ஒளியேற்றுவதுபோல் ஒரு புகைப்படத்தை ' Whose hand is this ?' என்ற கேப்ஷனுடன் வெளியிட 'தளபதி' என்று கமென்டுகள் பறந்தன.





அதே நேரத்தில் அந்த கேக்கில் சிறு சிறு மிக்ஸி, கிரைண்டர்களால் அலங்காரப்படுத்தப்பட்டிருந்ததை மீம்ஸுகளாக போட்டு வருகின்றனர் ரசிகர்கள். இலவச பொருள்களை விஜய் ரசிகர்கள் ஒருபுறம் போட்டு உடைப்பதே பெரும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள நிலையில் சர்கார் படக்குழுவின் இந்த கேக் புகைப்படம் என்ன விளைவுகளைத் தரும் என்று பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.
 
  • Like
Reactions: sudharavi

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
`பொங்கலுக்கு பராக்’ - `பேட்ட’ ரஜினியின் புது லுக்
காலா' படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கும் திரைப்படம் `பேட்ட. `கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், பொங்கலுக்கு படம் ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா என இரண்டு ஹீரோயின்கள் நடித்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் ரஜினியுடன் நடிக்கும் முதல் படம் இதுதான்.



மேலும், `பேட்ட' படத்தில் ரஜினியுடன் பாலிவுட் நடிகர் நவாசுதின் சித்திக், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். `பேட்ட' படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் சில போஸ்டர்கள் ரிலீஸான நிலையில், புது போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இதில், `பொங்கலுக்கு பராக்' என்னும் டேக்லைனுடன் டீசர்ட், கையில் பூந்தொட்டி என சிம்ரனுடன் ரொமான்ஸ் கம் யூத் லுக்கில் இருக்கிறார் ரஜினி. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
  • Like
Reactions: sudharavi